Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

"ஒடுக்கப்படுகின்ற மக்களுக்காக பொய்யான சுதந்திரதின நாளில் குரல் கொடுப்போம்!" என்ற முழக்கத்தை முன்வைத்து போலி சுதந்திரத்தை கேள்விக்குள்ளாக்கி ஆர்ப்பாட்டமும் பகிரங்க கூட்டமும் இன்று கொழும்பு விகாரமாதேவி பூங்காவிற்கு அருகே இடம்பெற்றது. இந்நிகழ்வினை தோழிற்சங்கங்களும் னைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் கூட்டாக ஒழுங்கு செய்திருந்தன.

தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள் என்னும் பொறுக்கிகள்  யார்? சாராயம் காய்ச்சுபவர்கள்; கட்டைப் பஞ்சாயத்து செய்பவர்கள்; ஆற்று மணல் அள்ளுபவர்கள்; அடுத்தவர் சொத்தை அடாவடித்தனம் பண்ணிப் பறிப்பவர்கள்; கோடி கோடியாக ஊழல் செய்பவர்கள். பதவிக்காக பல்லிளித்துக் கொண்டு எவர் காலிலும் விழுபவர்கள். அறிவு, பகுத்தறிவு, பொது அறிவு என்பவை அவர் தம் மண்டைக்கு அறவே சம்பந்தம் இல்லாத சமாச்சாரங்கள்.

கேப்பாபுலவு மக்கள் போராடும் காட்சிகளைப் பார்க்கும் போது கண்களில் இரத்தம் வருகிறது. இலங்கை அரசு களவெடுத்த தமது காணிகளைத் திருப்பித் தரச் சொல்லி அந்த ஏழை மக்கள் வயிறு எரிந்து அழுகிறார்கள். அவர்களினுடைய வீடுகளை, வளவுகளை, தோட்டங்களை, வயல்களை இழந்து கேப்பாபுலவு மக்கள் கூலித் தொழிலாளிகளாக வறுமையில் வாழ்கிறார்கள். அவர்களினுடைய பிள்ளைகள் பாடசாலைகளில் இடம் இல்லாது தாழ்வாரங்களில் இருந்து படிக்கிறார்கள்.  "எங்களுடைய குழந்தைகளிற்கு புத்தகங்கள் வாங்கித் தரக் கூட வழியில்லாத ஏழ்மையில் வாழ்கிறோம்"; அப்படிப்பட்ட ஏழைகளின் வீடுகளைக் கூட போர் முடிந்து இவ்வளவு காலமாகியும் திருப்பித் தராமல் ஏமாற்றுகிறார்கள்" என்று கோபமும், கவலையும் சேர கண்ணீர் விடுகிறார்கள்.

மாலபேயில் அமைந்துள்ள சையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியை தடை செய்யக் கோரியும் இலவச கல்வியை உறுதி செய்யவும் பல்கலைக்கழக மாணவர்கள் நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக உக்கிரமான எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு தமது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்த போராட்டங்களிற்கு தலைமை தாங்கிய 12 பல்கலைக்கழக மாணவர்களை கைது செய்து விசாரணைகள் இன்றி தடுத்து வைக்க நீதிமன்றம் பொலிசாருக்கு அனுமதி அளித்துனள்ளதனை கண்டித்து இன்று மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது. 

குமார் குணரத்தினம் தனது குடியுரிமையினை மீளக்கோரி விண்ணப்பித்த விண்ணப்பதை ஏற்று, அவருக்கு இலங்கை பிரஜாவுரிமையினை மீள வழங்கியுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரச்சார செயலாளர் புபுது ஜயாகொட இன்று ஊடகவியலாளரிடம் தெரிவித்துள்ளார். பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்குவரும் வகையில் அவருக்கான பிராஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. நேற்றைய தினம் முன்னிலை சோசலிசக் கட்சியின் 2வது தேசிய மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், அரசாங்கத்தின் இந்த முடிவு குடிவரவு திணைக்களத்தால் குமார் குணரத்தினத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

நேற்று காலை (01) 10.00 மணிக்கு முன்னிலை சோசலிச கட்சியின் 2வது தேசிய மாநாட்டின் கட்சி உறுப்பினர்களிற்க்கான அமர்வு கொழும்பு சுகதாச விளையாட்டரங்கின் உள்ளக அரங்கில் ஆரம்பமாகியது.

2வது மாநாட்டின் மையப்பொருள் "நவ தாராளமய திட்டத்திற்கு எதிரான சோசலிசத்திற்க்காக... வர்க்கத்திற்கொரு கட்சி" ஆக அமைந்திருந்தது. இந்நிகழ்வானது கட்சியின் பொது செயலாளர் சேனாதீர குணதிலக, அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரத்தினம் தலைமையில்; மாநாட்டு செயலாளர்கள் புபுது ஜயகொட, சமீர கொஸ்வத்த மற்றும் ஜூட் சில்வா புள்ளே வழிகாட்டலில் இடம்பெற்றது.

காணாமல் ஆக்கப்பட்ட எம் கண்மணிகளிற்கு நியாயம் வழங்கு!

சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்!

அரச பயங்கரவாதத்திற்கு சட்ட அங்கீகாரம் கொடுக்கும் பயங்கரவாதச்சட்டம் என்னும் கொடிய சட்டத்தை நீக்கம் செய்!

என்று இலங்கை அரசை நோக்கி அறைகூவல் விடுத்து காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் வவுனியாவில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தனர். தம் அன்புக்குரியவர்களை இழந்து தவிக்கும் அவர்களிற்கு ஆதரவாக பொது மக்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். நல்லூர் கந்தசாமி கோவிலடியில் உண்ணாவிரதம் இருப்பவர்களிற்கு ஆதரவாக மக்கள் திரண்டு குரல் கொடுத்தனர்.வவுனியா முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போன்ற அமைப்புக்கள் சேர்ந்தவர்களும் வவுனியாவில் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

எதிர்வரும் பெப்ரவரி 01ம் திகதி காலை 10.00 மணிக்கு கொழும்பு சுகதாச விளையாட்டு மைதான உள்ளக அரங்கில் முன்னிலை சோசலிசக் கட்சியின் 2வது தேசிய மாநாடு இடம்பெற இருப்பதாக கட்சி அறிவித்துள்ளது. "ஏகாதிபத்திய நவ தாராளமய திட்டத்திற்கு எதிரான சோசலிசத்திற்காக உழைக்கும் வர்க்கத்திற்கு ஒரு கட்சி" என்ற கருப்பொருளில் இந்த தேசிய மாநாடு இடம்பெறவுள்ளது. 

நேற்று 27-01-2017 வெள்ளி அன்று யாழில்  மாலாபேயில் அமைந்துள்ள SITAM தனியார் மருத்துக் கல்லூரியை தடை செய்யக்கோரியும், இலவசக் கல்வியை உறுதிப்படுத்தவும் பேரணி ஆர்ப்பாட்ட ஊர்வலம் இடம்பெற்றது. கடந்த 13ம் திகதி முதல் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் தொடர்ச்சியான சத்தியாகக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன், கல்லூரிகள் மற்றும் ரியூசன் நிலையங்களிற்கு சென்று தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் கல்வியில் தனியார் நுழைவதால் எதிர்காலத்தில் இலவசக் கல்விக்கு ஏற்படவிருக்கும் ஆபத்து குறித்து பிரச்சாரங்களையும் மேற்கொண்டிருந்தனர். 

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் லஹிரு வீரசேகர கைது செய்யப்பட்டு எதிர்வரும் மார்ச் 9 வரை விளக்கமறியலில் வைக்கப்ப்டுள்ளார். அவர்  பிணை நிபந்தனைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

"மீண்டும் செங்கொடியை உயர வைப்போம் !" என்ற இங்கு எடுத்துக் கொள்ளப்பட்ட தலைப்பு, சகோதரர் குமார் குணரத்தினத்தின், கேகாலை நீதிமன்ற உரைக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்ட தலைப்பாகும். குடிவரவுச்சட்டத்தை மீறிவிட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டு, அவரது பிறப்பிடமான கேகாலை நீதிமன்றத்தில், பங்குனி 25.2016 அன்று நீதிமன்றில் நிறுத்தப்பட்ட போதே தோழர். குமார் அவ்வுரையை ஆற்றினார். அதில்

"நான் முன்பு கூறியது போல் எனது சொந்தங்கள், எனது தந்தை, எனது சகோதரர்கள் இந்த பூமியில் எங்கோ புதையுண்டு இருப்பது போல் எனது தோழர்கள், எனது அன்புக்குரிய மூத்த சகோதரர் ரஞ்சிதம் உள்ளடங்கலாக அவர்களின் எச்சங்கள் இந்த நாடு பூராவும் சிதறப்பட்டிருக்கின்றது. இந்த ஜனநாயக விரோத அரசானது எனது சொந்த சகோதரனை என்னிடமிருந்து பறித்துக்கொண்டது. எனது குடும்பத்தையும், எனது அரசியலுக்குரிய எனது நாட்டினையும் என்னிடமிருந்து பறித்துக் கொண்டது." எனத் தன் சிந்தனையைப் பதிவு செய்தார்.

வவுனியாவில் காணாமற் போனோரின் உறவுகள் மூன்று கோரிக்கைகளை முன்வைத்துஉண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்

1. காணாமற் போனோருக்கான பதிலை கூறு!

2. சகல அரசியல் கைதிகளையும் நிபந்தனைகள் இன்றி உடனே விடுதலை செய்! 

3.  பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனே இரத்து செய்!

அரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய "தனியார்" என்ற சொல் மட்டுமே பொதுவாக உள்ள ஒரே காரணத்துக்காக தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கும், தனியார் மருத்துவ மனைகளுக்கும் முடிச்சு போடும் ஜீனியஸ்களே!

31.03.2008 அன்று Board of Investment of Sri Lanka இனால் Dr.Neville Fernando Investment Company (pvt) Ltd க்கு SAITM (Managemet) எனும் உயர் கல்வி நிலையத்தை ஆரம்பிக்கவே அனுமதி அளிக்கப்பட்டதேயன்றி SAITM (Medicine) க்கல்ல. இங்கு Health Science கற்பிக்க அனுமதி கோரப்பட அதுவும் Ministry of Health இன் முன் அனுமதியுடனேயே ஆரம்பிக்கப்பட வேண்டும் எனும் நிபந்தனையுடனான அனுமதி அளிக்கப்பட்ட போதும் எதுவித முன் அனுமதியும் பெறப்படாது BOI இன் ஒப்ந்தத்தை மீறி SAITM இனால் ஒரு Medical School ஆரம்பிக்கப்பட்டதே இப்போது முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தின் மூலமாகும்.

அண்ணன் பன்னீர்செல்வம் அவர்கள் ஒரு அ.தி.மு.க கட்சிக்காரர் என்பது தெரிந்தும் அதனால் ல, ள உச்சரிப்புகளை அவரிடம் பேசும் போது மிகக் கவனமாக உபயோகிக்க வேண்டும் என்பது தெரிந்தும் காளை, காலை என்ற சொற்களை வைத்து அண்ணன் பன்னீர்செல்வத்தை ஏமாற்றியதை மிக வன்மையாக கண்டிக்கிறோம்.

அண்ணன் பன்னீர்செல்வம் அம்மா ஜெயலலிதாவின் காலைப் பிடித்தார்.

அண்ணன் பன்னீர்செல்வம் சின்னம்மா சசிகலாவின் காலைப் பிடித்தார்

கொக்கோ கோலா நிறுவனத்தின் குளிர்பானங்களை ஆசிய நாடுகள் முழுவதற்கும் விநியோகம் செய்யக் கூடிய அளவிற்கு உற்பத்தி செய்யக்கூடிய பெரும் தொழிற்சாலை ஒன்றை இலங்கையில் நிறுவதற்கான முயற்சிகளில் கொக்கோ கோலா நிறுவனம் இறங்கியுள்ளது. அது தொடர்பாக கொக்கோ கோலா நிறுவனத்தின் பிரதிநிதிகள் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார்கள் என்று இலங்கை அரசின் நிதி அமைச்சு அறிக்கை வெளியிட்டு உள்ளது.

தெற்கு ஆசியப் பிராந்தியத்தில் உள்ள கொக்கோ கோலா நிறுவனத்தின் மிகப் பெரிய சந்தையான இந்தியாவிற்கு இலங்கையில் இருந்து கொக்கோ கோலாவின் குளிர்பானங்களை ஏற்றுமதி செய்யக் கூடிய அளவிற்கு அமையவிருக்கும் தொழிற்சாலை இருக்கும் எனவும் இலங்கையின் நீர்வளம் அப்பாரிய தொழிற்சாலையின் தேவைக்கேற்ற அளவிற்கு இருக்கிறது என்றும் கொக்கோ கோலா நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

சையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியை மூடக்கோரியும், இலவச கல்வியை உறுதி செய்யவும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்துடன் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 16ம் திகதி முதல் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களால் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு (SAITM) எதிராக ஒரு வாரத்திற்கு  பூரண பகிஷ்கரிப்பு மற்றும் சத்தியாககிரகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. 

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE