நேற்றைய தினம் (17/01/2017) கொழும்பு கோட்டையில், சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பினர் பெண்களை வெளிநாடுகளிற்கு அடிமைகளாக அனுப்புவதனை தடை செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இலங்கையிலிருந்து வெளிநாடுகளிற்கு வீட்டு அடிமைகளாக வேலைக்கு அனுப்பப்படும் பெண்கள் துன்புறுத்தல், அடிமைத்தனம், பாரபட்சம் மற்றும் பாலியல் கொடுமைகளிற்கு உள்ளாகின்றனர். அடிமைகளாக கடத்தப்படும் பெண்கள் மீதான கொடுமைகள் குறித்தான ஒரு விழிப்புணர்வை இந்த போராட்டம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில் அமைந்திருந்தது.
உழைப்புக்காக வெளிநாடு சென்ற பெண்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்!
துஸ்பிரயோகம் துன்புறுத்தலுக்கு ஆளானவர்களிற்கு இழப்பீடு வழங்கு!
மரணத்திற்கு பதிலாக வாழ்க்கை - அவமானத்திற்கு பதிலாக கௌரவம்!
உழைப்பு கொள்ளைக்காக பெண்களை வெளிநாடுகளிற்கு கடத்துவதை நிறுத்து!
ஆகிய பதாகைகளை தாங்கி பெண்கள் விடுதலை இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.