Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

சுவிட்சர்லாந்தில் உள்ள தமிழர்களால் நடத்தப்படும் ஒரு கிறீஸ்தவ தேவாலயத்திற்கு வரும் தமிழ் மக்களிடம் நன்கொடை கேட்டு அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாக Schweizer Radio und Fernsehen என்னும் ஊடகம் விரிவான செய்திகளையும், பாதிக்கப்பட்டவர்களின் நேர்காணல்களையும் வெளியிட்டிருக்கிறது. பிலடெல்பியா எவஞ்சலிக்கல் மிஷனரி ( Philadelphia Missionary Church) என்னும் சபை குறித்தே இந்த விமர்சனங்கள் வெளியாகி உள்ளன. கிறீஸ்துவத்தின் ஒரு பிரிவான ஆவிக்குரிய சபைகள் (பெந்தகோஸ்து சபைகள்) என்னும் பிரிவைச் சேர்ந்தது இந்த ஆலயம். பெரும்பாலான ஆவிக்குரிய சபைகளைப் போல இந்தப் பிரிவும் அமெரிக்காவிலேயே தோற்றம் பெற்றது என்பதை இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

"சைட்டத்தை தடை செய்” இப்பொழுது நாடு முழுவதும் கேட்கக்கூடியதாகவும், காணக்கூடியதாகவும் உள்ள கதையாகும். மாலம்பே சைட்டம் பட்டக்கடையை தடை செய்யக்கோரி மாணவர்கள் நீண்ட நாட்களாகவே போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

சைட்டம் பட்டக்கடைக்கு ஏன் நீங்களும், நாங்களும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்?

இந்த நிறுவனத்தில் மருத்துவ பட்டம் உட்பட இன்னும் ஏராளமான பட்டங்கள் பணத்துக்கு விற்பனை செய்யப்படுகின்றன. சிறிய தொகைக்கு அல்ல, 120 இலட்சத்திற்கு மருத்துவ பட்டம் விற்பனை செய்யப்படுகிறது. அப்படியானால் மிக தெளிவாக தெரிகிறது இந்த நாட்டின் விவசாயிகளின், ஆடைத்தொழிற்சாலை தொழிலார்களின், அரச சேவையாளர்களின், தனியார்துறை சேவையாளர்களின், தோட்டத்தொழிலார்களின், மீனவர்களின் குறிப்பாக ஒடுக்கப்பட்டவர்களின் பிள்ளைகளுக்கு இதற்கு செல்ல முடியாது என்பதே. மொத்த சனத்தொகையில் ஒன்று அல்லது இரண்டு சதவீதத்தினருக்கே இதற்கு செல்ல முடியும்.

முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்களின் காணி மீட்பு போராட்டத்திற்கு முன்னிலை சோசலிசக் கட்சி முழுமையான ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக முன்னிலை சோசலிசக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் புபுது ஜாகொட தெரிவித்தாவது; யுத்தகாலத்தில் சுவீகரிக்கப்பட்ட மக்களின் காணிகள் மீள அவர்களிடம் கையளிக்கப்பட வேண்டும். ஆனால் யுத்தம் முடிடைந்து பல வருடங்களாகியும் காணி விடுவிப்பானது மந்த கதியிலேயே இடம்பெற்று வருகின்றது. இது தவறான அணுகுமுறையாகும்.

தனக்காகவும், தன் குடும்பத்திற்காகவும் மட்டும் வாழ மனிதர்களை நிர்ப்பந்திக்கும் தனியுடமை உலகில் தன் சக மனிதர்களிற்காக வாழுதல், சமுதாயத்திற்காக போராடுதல் என்ற கல் நிறைந்த பாதையில் கால் வலிக்க நடந்த போதும் களைக்காமல் பொதுவுடமை என்னும் போர்க்கொடியை தூக்கிப் பிடித்தவன் எங்கள் தோழன் எம்.சி.லோகநாதன். அந்த போராட்டக் குணமே அவனை எமது புதிய ஜனநாயக மக்கள் முன்னணியில் இணைய வைத்தது. அந்த போராட்டக் குணமே அவனை எமது தோழன் ஆக்கியது.

அரச நிறுவனங்களை தனியார் மயமாக்கல் 1978 களில் ஆரம்பமானது. அரச நிறுவனங்களை தனியாருக்கு கையளிக்கும் செயல்பாடு 1978இல் ஜே.ஆர் ஜெயவர்த்தனா கொண்டு வந்த நவதாராளவாத பொருளாதாரவாத கொள்கையுடன் ஆரம்பமானதாகும். இலங்கை ரெலிகொம் அரச நிறுவனமும் இந்த திட்டத்திற்கு அமைய தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டது. மிக நீண்ட காலமாக இங்கு வேலைக்கு சேர்த்து கொள்ளப்படும் ஊழியர்கள் மான் பவர் (Man Power) என்னும் அடிமைக் கம்பனி ஊடாகவே வேலைக்கு சேர்த்து கொள்ளப்படுகின்றனர். இதன் காரணமாக பல தொழிலாளர்கள் நிரந்தர நியமனம் இன்றி அடிமைக் கம்பனி ஊடக வேலை செய்து வருவதுடன் தொழிலாளர்கள் உரிமைகள் மறுக்கப்பட்டும், வேலைக்கு உத்தரவாதம் இன்றியும் அல்லல் பட்டு கொண்டு இருக்கின்றனர்.

விடிஞ்சு இப்போ எத்தனையோ மணித்தியாலங்கள் கடந்து விட்டது. ரீவீ என்றும் பேஸ்ப்புக்கென்றும் பொழுது போகாமல், அந்த வேலை இந்த வேலையென்று ஓடியாடிச் திரிஞ்சாலும் நேரம் ஏதோ மெதுவாகவே போவதாகவே ராதிகா உணர்ந்து கொண்டாள்.

இந்த மனுசன் எத்தனை மணிக்குப் போகுதோ எத்தனை மணிக்குத் வருகுதோ கடவுளுக்குத் தான் வெளிச்சம்.

எங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும் எங்களது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என முல்லைத்தீவு கேப்பாப்புலவு புலக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் யுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வுகள் கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்டு மீள்குடியமர்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

மக்கள் மீள்குடியேறி எட்டு வருடங்களை எட்டுகின்ற போதும் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள கேப்பாப்புலவு கிராமத்தில் 524 ஏக்கர் காணிகளையும், புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் 49 குடும்பங்களுக்குச் சொந்தமான 19 ஏக்கர் காணிகளையும் இதுவரை விடுவிக்காது அந்த மக்களை பெரும் நிர்க்கதி நிலைக்குள் அரசு தள்ளியிருக்கின்றது.

யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக இன்று காலை 9 மணிக்கு கேப்பாபுலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கவன ஈர்ப்பு ஒன்று கூடல் இடம்பெற்றது.  இதில்  இடதுசாரிகள் மற்றும் மனித உரிமைகள் ஆதரவாளர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டு;  கேப்பாபுலவு  மற்றும் ஏனைய பிரதேசங்களில் பலவந்தமாக ராணுவத்திற்காகவும், பல்தேசிய நிறுவனங்களிற்காகவும் பறித்து எடுக்கப்பட்ட குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்லங்கள் உட்பட அனைத்து காணிகளையும் மீள கையளிக்குமாறு வற்புறுத்தி பதாகைகளை ஏந்தி  கோசங்களை முழங்கினர்.

தமிழரை தமிழர் ஆண்டால் எல்லாப் பிரச்சனகளும் தீர்ந்து விடும் என்று தமிழின வெறியர்கள் உளறுவார்கள். தமிழரை தமிழர் ஆண்டால் என்ன நடக்குமோ இல்லையோ தமிழரைத் தமிழச்சி ஆண்டால் தமிழ்நாடே இல்லாமல் போய் விடும். மன்னார்குடி கொள்ளைக் கூட்டத்தின் தலைவி சசிகலா மாண்புமிகு மாபியா ஆகினால் மன்னிக்கவும், மாண்புமிகு முதலமைச்சர் ஆகினால் தமிழ்நாடே வரைபடத்தில் இருந்து காணாமல் போய் விடும்.

மாலபேயில் அமைந்துள்ள தனியார் போலி மருத்துவக் கல்லூரியினை உடனடியாக மூடுமாறு கோரியும், இலவசக் கல்வி மற்றும் மருத்துவ சேவையினை உறுதிப்படுத்தவும் மக்கள் - மாணவர்களின் பொதுக்கூட்டமும், ஆர்ப்பாட்ட ஊர்வலமும இன்று நுகேகொடையில் நடைபெற்றது. இந்த நிகழ்வுகளில் மக்கள்- மாணவர்களுடன், இடதுசாரிய கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புக்கள் கலந்து கொண்டன. 

நேற்று முன்தினம் (07-02-2017) கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மாலபேயில் அமைந்துள்ள தனியார் மருத்துவ கல்லூரியை உடனடியாக மூடுமாறு கோரி பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பல்கலைக்கழகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட மாணவர்கள் நகரின் பிரதான வீதிகளின் ஊடாக ஊர்வலமாக சென்று பேருந்து நிலையத்தில் ஒன்று கூடி தமது எதிர்பினை காட்டி இருந்தனர். இந்த போராட்டத்திற்கு பாரிய அளவிலான மக்கள் ஆதரவினை காணக் கூடியதாக இருந்தது.

அவனுக்குப் பெயர் விவேகானந்தன். சில பேர் அவனை விவேக் எண்டு கூப்பிடுவார்கள். சில பேர் ஆனந்தன் எண்டு கூப்பிடுவினம், ஒரு சிலர்   விவேகானந்தன் எண்டு முழுப்பெயரையும் சொல்லிக் கூப்பிடுவார்கள். நாங்க படிக்கிற காலத்திலே எல்லா வாத்தியார்மாரும் உண்மையிலே இவன் ஒரு விவேகானந்தர் தான் என்று அவனைப் பாராட்டுவார்கள். அப்படி ஒரு கெட்டிக்காரன்.

பள்ளிக்கூடம் முடிஞ்சும் எங்களுடைய சினேகம் தொடர்து கொண்டு தான் இருந்தது. விசுவநாதன் தொடக்கம் இளையராஜா வரையான சகல பாட்டுக்கள் பற்றிக் கதைப்பதிலிருந்து ஊரிலே நாடகங்கள் போடுறது விழாக்கள் செய்வது, வாசிகசாலை நடத்துவது, விளையாட்டுப் போட்டிகள் செய்வது  எண்டு எல்லாத்துக்கும் நானும் அவனும் தான் முன்னின்று செய்வோம்.

மாலபேயில் அமைந்துள்ள சயிட்டம் மருத்துவக் கல்லூரியை உடனடியாக மூடக்கோரியும், இலவசக் கல்வியை உறுதி செய்யக் கோரியும், கல்விக்கு பட்ஜட்டில் 6% தத்தை ஒதுக்கும் படி கோரியும் பல்கலைக்கழக மாணவர்கள் நாடு முழுவதும் போராட்டங்களை நடாத்தி வருகின்றனர். இந்தப் போராட்டம் கடந்த ஒருவருடமாக தொடர்ச்சியாக நடைபெற்று வருவதுடன் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து போராடி வருகின்றனர். பல்கலைக்கழக மாணவர்கள், தனியார் பல்கலைக்கழகங்களினால் இலவச கல்விக்கு ஏற்படவுள்ள கழுத்தறுப்பு குறித்து பல பாதயாத்திரைகள், பிரச்சாரங்கள் மூலமாக மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகின்றனர்.

முல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென விமானப்படை முகாமின் முன்பாக தொடர்ந்து ஏழாவது நாளாக இன்றும் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில் பொறுமையை இழந்த மக்கள் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதாவது, “இன்று (07-02-2017) மாலை 6 மணிக்குள் உரிய பதில்கள் கிடைக்காவிட்டால் எமது போராட்ட வடிவம் மாறும், எங்களில் ஒருவர் தற்கொலை செய்து உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்” என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நந்தினி கொலை செய்யப்பட்டிருக்கிறாள். இந்து முன்னணியைச் சேர்ந்த மணிகண்டன் என்னும் ரவுடி அந்த அபலைப் பெண்ணை காதலிப்பது போல் நடித்து கருத் தரிக்க வைத்திருக்கிறான். வீட்டை விட்டு இந்த ரவுடியைத் தேடிப் போன நந்தினியை மணிகண்டனும் அவனது இந்து முன்னணி காடையர் கூட்டமும் சேர்ந்து பாலியல் வன்முறை செய்து விட்டு வயிற்றைக் கிழித்து நந்தினியைக் கொலை செய்து ஆறு மாத கருவை வெளியே எடுத்திருக்கிறார்கள்.

தோழர்கள் அனைவருக்கம் புரட்சிகர வணக்கங்கள்!

இலங்கை நாடு, பிராந்தியத்தில் உள்ள மற்றைய நாடுகளோடு ஒப்பிடுகையில் பெருவாரியான போராட்டங்களை நடாத்திய மக்களின் பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு தேசமாகும்.

சமூக நீதிக்கான, முதலாளித்துவத்திற்கு எதிரான, சாதி மதவாத பாகுபாடுகளுக்கு எதிரான, சமத்துவத்துக்கான, இன ஒடுக்குமுறைகளுக்கு எதிரான பல்வேறு போராட்டங்களை பல்வேறு காலகட்டங்களில் நடாத்திய,  தெற்கிலும் வடகிழக்கிலும் ஆயுதப் போராட்டங்களை நடாத்திய இரத்தம் சிந்திய மக்களை வரலாற்றில் கண்ட ஒரு நாடு.

எத்தனையோ அழிவுகளும் மனித அவலங்களும் நேரிட்டபோதும் தொடர்ந்து முன்னெழுந்து வரும் போராட்டங்களை முன்னின்று நடாத்தும் அரசியல் சூழல் எழுந்த வண்ணமும் போராட்டங்கள் தொடர்ந்த வண்ணமுமே உள்ளது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE