Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

கிளிநொச்சியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் காணாமலாக்கப்பட்டவர்களுக்கான போராட்டத்தில் இன்று சமவுரிமை இயக்கம் பங்குபற்றி தமது பூரண ஆதரவை தெரிவித்துள்ளது. சமவுரிமை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர்களில் ஒருவரான யூட் சில்வா புள்ளே அவர்களின் தலைமையில் போராட்ட கொட்டிலுக்க வருகை தந்த சமவுரிமை இயக்கத்தினர் தமது ஆதரவினை தெரிவித்ததுடன், போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர். 

இலவச கல்வி மற்றும் இலவச மருத்துவ சேவை ஆகியவற்றை உறுதி செய்வதற்காகவும், மாலபேயில் அமைந்துள்ள சயிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியை உடனடியாக இழுத்து மூடக்கோரியும் மக்கள் - மாணவர்கள் இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டத்தை கொழும்பு வீதிகளில் இன்று நடாத்தினர். விஜயராம, களனி, வத்தளை, தெகிவளை ஆகிய நான்கு பிரதேசங்களில் இருந்து மக்கள் - மாணவர்கள் இணைந்த ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் கொழும்பு நகரத்தின் மையப்பகுதியான கோட்டையினை நோக்கி புறப்பட்டன.

ஐக்கிய நாடுகள் சபை விசாரணை நடத்தி இலங்கை அரசை குற்றவாளிக் கூண்டில் ஏற்றும்: அமெரிக்கா தமிழ் மக்களின் பக்கம் நின்று நியாயம் பெற்றுக் கொடுக்கும் என்று இலங்கையிலும், புலம்பெயர் நாடுகளிலும் உள்ள பிழைப்புவாத தமிழ்த் தலைமைகள் ஒவ்வொரு வருடமும் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை நாடகம் நடக்கும் போது கொஞ்சமும் கூச்சமின்றி பொய் சொல்லுவார்கள். இந்த பொய்யர்களை அம்பலப்படுத்தி எழுதிய கட்டுரையின் மறு பிரசுரம்.

ஈராக் போருக்கு முன்பு அந்த ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதற்காக அமெரிக்க அரசு பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டது. மேற்குநாடுகளின் ஊடகங்களில் அமெரிக்க மந்திரிகள் உலக சமாதானத்திற்கான போர் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான போர் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று ஊளையிட்டார்கள். பிரித்தானியாவின் தொலைக்காட்சியான சனல் 4இல் அப்போது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த கொண்டோலீசா ரைஸ் அப்படியான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். பொதுநலவாய நாடுகளின் மாநாட்டின் போது யாழ்ப்பாணம் சென்று வந்த ஜோன் சிநோ (John Snow) தான் நிகழ்ச்சியை தொகுத்து நடத்தினார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு "சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பு" இன்று காலி நகரத்தில் பெண்கள் மத்தியில் பிரச்சார நடவடிக்கையினை மேற்கொண்டது. சர்வதேச மகளிர் தினத்தை ஒரு நினைவு நாளாக அல்லாது புதிய தொடக்கமாக "எதிர்காலத்திற்காக போராடுவோம்" என்னும் கருப்பொருளில் பாடல்கள், தெருமுனை கூட்டங்கள், துண்டுப்பிரசுர விநியோகம் மற்றும் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தனர்.

கடந்த 15 நாட்களாக அமைதியான முறையில் தமது நியாயமான கோரிக்கையினை வலியுறுத்தி வேலையற்ற பட்டதாரிகள் காந்தி பூங்கா முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தலைவர் ரி.கிஷாந்த்,  அகில இலங்கை ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்க இணைப்பாளர் தென்னே ஞானானந்த தேரர் உட்பட நான்கு பேருக்கு நீதிமன்ற அழைப்பானை வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் யாழ்பாணத்தில் வேலை வாய்ப்பு மற்றும் பட்டதாரிகளிற்கு வேலை வழங்க தேசிய கொள்கை ஒன்றை வகுக்கும் படியும் கேட்டு போராடும் பட்டதரிகளிற்கு ஆதரவாக கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். 

இன்று 07-03-2017 மட்டக்களப்பு பல்கலைக்கழக நுழைவாயிலின் அருகே கூடிய பட்டதாரி மாணவர்கள், வேலையற்ற பட்டதாரிகளின் கோரிக்கைகளை நல்லாட்சி அரசு உடனடியாக நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் பரவலாக காணப்படுகிறது. வன்முறைக்கு உள்ளாவதும் கொலை செய்யப்படுவதும் தொடர்கிறது. இது காலங்காலமாக தொடரும் தொடர்கதையாகும். இது இன்றோ, நேற்றோ தோன்றிய சூழல் அல்ல. சரித்திர காலம் முதற் கொண்டு பெண்களின் நிலை பாதுகாப்பற்றதாகவே பேணப்பட்டு-கடைப்பிடிக்கப்பட்டு-உறுதிப்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஆகவே இன்று காணப்படும் பாதுகாப்பற்ற சூழல் முன்னைய காலங்களை விட விகிதாசாரத்தில் சற்று அதிகமாக காணப்படுகிறதே அன்றி புதிய-வித்தியாசமான ஒரு விடயமல்ல.  

ஆனால் “நடுநிசிலும் அச்சமின்றித் தனியாக பெண்கள் நடமாடிய காலம்” ஒன்று நாட்டில் இருந்ததாக ஒரு ‘கதையாடல்’ எம்மிடையே உலாவ விடப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக எமது பெண் சமூகத்தினராலேயே அது பரவ விடப்பட்டுள்ளது. அதுவும் கல்வியறிவு கொண்ட பெண்களாலேயே அது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இக் ‘கதையாடல்’ உண்மையையோ அல்லது பெண்களின் வருங்கால நல் வாழ்வையோ கருத்தில் கொண்டு வலம் வரவில்லை. மாறாக ஒரு அரசியல் பின்னணியுடனேயே பிரச்சாரப்படுத்தப்படுகிறது. இந்தக் கதையாடலின் வெற்றுத் தன்மையை அதே காலகட்டத்தில் வாழ்ந்து பாதிக்கப்பட்ட பெண்களையும் அக்காலப் பகுதியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு வழங்கப்பட்ட தண்டனைகளையும் வைத்தே புரிந்து கொள்ள முடியும்.

காணாமற் போன மக்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கென பிரதம அமைச்சரினால் பாராளுமன்றத்தில் முன் வைக்கப்பட்ட "காணாமல் போனோர் காரியாலயச் சட்டம"’ கூட்டு எதிர்க் கட்சியினரின் ஆட்சேபனைகளையும் (இனவாத ரீதியான) - ஒரு சில அமைச்சர்களின் ஆலோசனைகளையும் (விவாதம் நடாத்த வேண்டும் என்ற) பொருட்படுத்தாமல் ஐ.தே. கட்சி,  சி.ல.சு.கட்சி, த.தே.கூட்டணி, ம.வி.முன்னணி ஆகியவற்றின் ஆதரவுடன் கடந்த ஆவணி 23ம் திகதி (23/08/2016) முதல் அமுலுக்கு வந்துள்ளது.

மேற்குறிப்பிடப்பட்ட இந்தச் சட்ட மூலம் இலங்கைக் குடிமக்கள் மத்தியில் பரவலான நாடு தழுவிய கலந்துரையாடல்களை ஏற்படுத்தியுள்ளது. காணாமல் போதல் இலங்கையின் ஒட்டு மொத்த சமூகத்தின் முக்கிய பிரச்சனை மட்டுமல்ல அது இலங்கைக் குடிமக்களின் சனநாயக உரிமைகள் சம்பந்தப்பட்டதும் ஆகும். ஆனால் நாட்டில் இடம் பெறுகின்ற கலந்துரையாடல்களில் இவைகள் குறித்துப் பேசுவது மிகவும் அரிதாகவே உள்ளது.

எம் மக்கள் உயிரை இழந்தனர். உயிரின் உயிரானவரை இழந்தனர். வாழ்வை இழந்தனர். எல்லாப் பக்கமும் வன்முறை சூழ்ந்து கொண்டது. வறுமை சூழ்ந்து வற்றிப் போனது வாழ்க்கை. ஒளித்துப் பிடித்து விளையாடிய குழந்தைகள் கண்டுபிடிக்கப்படாமல் காணாமல் போயினர். பாடிய பாடல்கள் பாதியிலேயே நின்றது போல் வண்ணத்துப் பூச்சிகளாக சிறகடிக்கத் தொடங்கிய வாலிபத்திலேயே வாழ்வை இழந்தனர் நம் பிள்ளைகள்.

இந்த வன்முறைகளிற்கு, தமிழ்மக்கள் மீது சிங்கள பேரினவாதிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலைகளிற்கு இலங்கை அரச பேரினவாதிகளிடமிருந்து நீதியோ, நியாயமோ என்றைக்கும் கிடைக்கப் போவதில்லை. தமிழ்மக்களை கொன்று குவித்த மகிந்த ராஜபக்ச கும்பல் ஆணைக்குழு ஒன்றை அமைத்து கொலைகாரர்களை கண்டுபிடிக்க போகிறோம் என்று நாடகம் ஆடியது. மகிந்த ராஜபக்சவுடன் பங்கு போடுவதில் ஏற்பட்ட பகை காரணமாக வெளியேற்றப்பட்ட சரத் பொன்சேகா எதிர்க்கட்சி தொடங்கி மகிந்தாவின் ஊழல்களை மக்கள் முன் வைப்பேன் என்று வீர சபதம் இட்டார். ஆனால் தமிழ்மக்களின் இனப்படுகொலையில் மகிந்தாவிற்கும்,சரத் பொன்சேகாவிற்கும் எதுவித கருத்து வேறுபாடும் இல்லை. ஆம்,தமிழ்மக்கள் சிங்களப் பேரினவாத அரசினால் படுகொலை செய்யப்படவில்லை என்று இரண்டு கொலையாளிகளும் ஒத்த குரலில் சொல்கிறார்கள். 

பல்வேறு மாற்றுக்கருத்துக்களும் போலியான போட்டிப் பரீட்சைகளையும் நம்பி இனிமேலும் நாம் நம்பிக்கை கொள்ள தயாராக இல்லை. நல்லாட்சி அரசாங்கம் எமது கோரிக்கைகளை செவிமடுத்து விரைவில் அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சம் அற்ற விதத்தில் தொழில் வாய்பை வழங்க வேண்டும் எனும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் காலவரையறையற்ற கவன ஈர்ப்பு போராட்டத்தை கடந்த 27 ஆம் திகதி கல்முனை பொத்துவில் பிரதான வீதியின் காரைதீவு சந்தி பிரதேசத்தில் ஆரம்பித்தனர்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற வேலையற்ற பட்டதாரிகளின் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் பொலிஸ் தலையீடு காரணமாக அமைதியின்மை ஏற்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள், மட்டக்களப்பு காந்தி பார்க்கில் கடந்த ஒன்பது நாட்களாக சத்தியாகக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். போராட்டக்காரர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய குறிப்பாணையை மாவட்ட செயலாளருக்கு கையளிக்கும் நோக்கில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை காந்தி பார்க்கில் இருந்து மாவட்ட செயலகம் வரை நடாத்தினர். மாவட்ட செயலாளர் வேலையற்ற பட்டதாரிகளின் குறிப்பாணையினை வாங்க மறுத்தார். 

கடந்த 2012ம் ஆண்டில் இருந்து பட்டதாரிகளிற்கு தொழில் வாய்ப்பை அரசு வழங்கத் தவறி உள்ளது. பல ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் வேலையின்றி எதிர்காலம் குறித்து நம்பிக்கையற்று காணப்படுகின்றனர். அனைத்து மாவட்டங்களிலும் வேலையற்ற பட்டதாரிகள் சங்கங்களை ஸ்த்தாபித்து ஒருங்கிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் மூலம் தமக்கு வேலை வழங்கக்கோரி முன்னர் பல போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். 

கேப்பாப்புலவுவில் தம் வாழ்வின் தடம் பதிந்த தம் மண்ணை விட்டு வெளியேறு என்று மக்கள் போராடுகிறார்கள். மட்டக்களப்பில் "மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளினது கால வரையறை அற்ற சத்தியாக்கிரகம்" தொடர்கிறது. "கல்வியை விற்பனை செய்யாதே"; "மாலபே மருத்துவக் கல்லூரி என்னும் தனியார் கல்விக் கடையை மூடு" என்று இலங்கை முழுவதும் தமிழ், சிங்கள, முஸ்லீம் மாணவர்களும் அவர்களிற்கு ஆதரவாக பொது மக்களும் போராடுகின்றார்கள். இலங்கை அரசு என்னும் மக்கள் விரோதிகளிற்கு எதிராக நடக்கும் இப்போராட்டங்களை அரசு எதிர்க்கும் என்பது இயல்பானது. ஆனால் இப்போராட்டங்களை தாம் முன்னின்று செய்ய வேண்டிய இலங்கையின் எதிர்க்கட்சிகள் என்பவர்கள் தாம் மக்களுடன் நிற்பது போல் நடித்து இலங்கை அரசுக்கு எதிரான போராட்டங்களை கைவிடச் சொல்லும் கொடுமை ஒரு புறம் என்றால் தொண்டு நிறுவனங்கள் என்ற போர்வையில் இருக்கும் ஏகாதிபத்தியங்களின் அடிவருடிகள் மறுபுறத்தில் போராட்டங்களை திசை திருப்பப் பார்க்கிறார்கள்.

கல்வி மற்றும் மருத்துவ சேவையினை தனியார் மயமாக்கும் செயற்பாடு இன்றைய நவதாராளவாத பொருயாதார கொள்கையின் பிரதான செயற்பாடாக உலகெங்கும் மூர்க்கத்தனமாக முன்தள்ளப்படுகின்றது. இதனை பொது மக்கள் உணராத வண்ணம் மெல்ல மெல்ல நடைமுறைப்படுத்தவதும்; தனியார் கல்வி நிலையங்கள், பல்கலைக்கழகங்கள் திறப்பதற்கு ஊக்கம் அளிக்கப்படுவதும்,  சுகாதார சேவையில் தனியார் கம்பனிகளிற்கு செயற்பட அனுமதிஅளித்துள்ளமையும் நல்ல உதாரணங்களாகும். 

அன்புக்குரிய அன்னையே, தந்தையே, தோழரே, தோழியரே…

முழு வாழ்க்கையையும் நாசமாக்கிய யுத்தம் முடிவடைந்து 7 வருடங்கள் கடந்து விட்டன. நீங்களோ நாங்களோ இந்த யுத்தத்தை உருவாக்கவில்லை. இவ்வாறான கொடூர யுத்தத்தை உருவாக்கியதற்கு உங்களில் யாரும் பொறுப்பாளிகளல்ல.

அந்த யுத்தம் உங்களுக்கு உங்கள் பிள்ளைகளை இல்லாமலாக்கியது. வாழ இடமின்றி காணி, வீடு, கால்நடைகள் ஆகியவற்றை பறித்து உங்களை நிர்க்கதியாக்கியது.

யுத்தம் முடிவடைந்து 7 வருடங்களிற்கு பின்பும் இராணுவம் பறித்துக் கொண்ட மக்களின் காணிகளை அந்த மக்களிடம் ஒப்படைக்கவில்லை. நாசமாக்கிய சொத்துக்களுக்கு இன்று வரை 5 சதம் கூட இழப்பீடாக கிடைக்கவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றி எவ்வித நீதி விசாரணைகளும் இல்லை. அரசியல் சிறைக்கைதிகள் விடுவிக்கப்படவுமில்லை.

மாலபேயில் அமைந்துள்ள தனியார் மருத்துவ கல்லூரியை மூடக்கோரியும், ஏனைய சகல தனியார் பட்டக்கடைகளை மூடும்படியும், பாடசாலைகளில் கட்டணம் அறவிடுவதனை தடை செய்யக்கோரியும், கல்விக்கு வரவு செலவு திட்டத்தில் 6% வீதத்தை ஒதுக்கி சகலருக்கும் இலவசக் கல்வியை உறுதி செய்யக்கோரியும் அனைத்து  பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் மருத்துவ மாணவர் நடவடிக்கை குழுவும் இணைந்து கடந்த பல மாதங்களாக பாரிய போராட்டங்களை வடக்கு முதல் தெற்கு வரை நடாத்திய வண்ணம் உள்ளனர்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE