Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

புலம்பெயர் தமிழ் மக்கள் இடையே ஒரு கூட்டம் ஒன்று இருக்கிறது. அதில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கையில் இருந்த போது தாமும் தம் படிப்பும், தமது வேலைகளும், தமது சுயநலங்களுமாக இருந்தார்கள். இலங்கை அரசின் கொலைகளும், இன ஒடுக்குமுறைகளும் தமிழ்ச் சமுகத்தை மிகக் கொடூரமாக சின்னாபின்னமாக ஆக்கிய போது இளையவர்கள், பொதுமக்கள் என்று பலரும் தம் தனிப்பட்ட வாழ்வு துறந்து மக்களிற்காக இலங்கை அரசை எதிர்த்துப் போராடினார்கள். ஆனால் இந்தக் கூட்டம் ஆமை போல் அவயங்கள் எல்லாம் அடங்க அசைவின்றி இருந்தது. வலி சுமந்த எம்மக்களின் வாழ்வு இவர்களிற்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.

தினப்புயல் என்ற ஊடகத்திற்கு அளித்த நேர்காணல் ஒன்றில் வடமாகாண சபையின் முதல் அமைச்சரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான விக்கினேஸ்வரன் அவர்களிடம் "கொலை மற்றும் பாலியல் வன்முறை செய்ததற்காக நீதிமன்றத்தால் குற்றவாளியாக தண்டனை வழங்கப்பட்ட பிரேமானந்தாவின் சீடராக இருக்கிறீர்களே" என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அய்யா அசராமல் மறுமொழி சொன்னார். "இரண்டாயிரம் வருடங்களிற்கு முன் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட இயேசுநாதரை இப்போது மக்கள் கடவுளாக பார்க்கிறார்கள்". "அவர் ஒரு குற்றவாளி". "அவர் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்". "ஏன் இன்று அவரை கிறீஸ்தவர்கள் இறைவனாகப் பார்க்கிறார்கள்".  "அது மாதிரி பிரேமானந்தா மீதான குற்றச்சாட்டுக்களின் உண்மை தெரிந்த பின்பு பிரேமானந்தாவும் ஒரு ஆன்மீகத் தலைவராக வணங்கப்படுவார்" என்று அய்யா விக்கினேஸ்வரன் அருள்வாக்கு சொல்கிறார்.

இன்று 20-4-2017 வடக்கு கிழக்கில் தமது அபகரிக்கப்பட்ட நிலங்களை மீள வழங்கக்கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும், அனைத்து வலிந்து காணாமலாக்கல்களையும் வெளிப்படுத்தக்கோரியும் போராடும் மக்களிற்கு ஆதரவு தெரிவித்து கண்டி மற்றும் நீர்கொழும்பில் சமவுரிமை இயக்கம் ஒருநாள் அடையாள சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

மீதொட்டமுல்ல மூவின மக்களின் வாழ்விடத்தில் குப்பைமேடு சரியுண்டதனால், மூவின மக்கள் 58 பேர் புதையுண்டுள்ளனர்... 28 சடலங்கள் மீட்பு; 30 பேர் மாயம்! இன்று 16 பேரின் இறுதிக் கிரிகைகள் இடம்பெற்றன. சடலங்கள் அமைதி பேரணியில் எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டன. அமைதிப் பேரணியில் பொது மக்கள், மீதொட்டமுல்ல குடியிருப்பாளர்கள், மதகுருமார்கள், இடதுசாரிய கட்சிகள், பல்கலைக்கழக மாணவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் இந்த அமைதி கண்டன பேரணியில் கலந்து கொண்டிருந்தனர். 

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து வீழ்ந்தமைக்கு ஆட்சியாளர்களின் அலட்சியப்போக்கும், அவர்களது சகாக்களின் லாப நோக்கமுமே  பிரதான காரணங்களாகும். கண்ணெதிரே இருந்த ஆபத்தை தடுக்க முன்வராத ஆட்சியாளர்களை மனித கொலைகாரர்கள் என்றே கூற வேண்டும் என மீதொட்டமுல்ல குப்பை மேட்டுக்கெதிரான மக்கள் இயக்கத்தின் தலைவர் சட்டத்தரணி நுவான் போபகே ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில், அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரிகைள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கு ராணுவம் வழங்கிய நிவாரணங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. 

இந்த அனர்த்தத்தில் இதுவரை எத்தனை பேர் இறந்துள்ளனர் என்பதனை சரியாக கூற முடியாதுள்ளது. வெளியிடங்களில் இருந்து உறவினர் வீடுகளிற்கு வந்தவர்கள் கூட குப்பை மேட்டு சரிவிற்குள் சிக்கியிருக்க கூடும். இவர்கள் 40 அடிகளிற்கு கீழ் புதையுண்டு இருக்கலாம் என ஊகிக்க முடிகின்றது.

போராட்டம் -29வது இதழ் வெளிவந்துள்ளது. இது மக்கள் போராட்ட இயக்கத்தினால் வெளியிடப்படும் மாசி - சித்திரை 2017 இதழாகும். இந்த இதழின் உள்....

1. வடக்கு கிழக்கு மக்கள் போராட்டங்களிற்கு ஆதரவு தெரிவித்து சமவுரிமை இயக்கம் கொழும்பு கோட்டையில் ஒரு வாரகால அடையாள சத்தியாக்கிரக போராட்டம்!

2. அழகிய (அழகற்ற) நுவரெலியா.

3. ஒரு வேலையற்ற பட்டதாரியின் மரணம்

மீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள் வீதியில் இறங்கி இதை அகற்றக்கோரி போராட்டம் நடத்தினர். அமைதியான முறையில் சத்தியாகிரக போராட்டங்கள், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் என ஆரம்பித்த மக்கள் செயற்பாடுகளை உள்ளூர் அரசியல் வாதிகள், அவர்களின் குண்டர்கள், போலீஸ், இராணுவம் என தமது அரசியல் பலத்தை பாவித்து தாக்கினர், அடக்கினர், செயற்பாட்டாளர்களை சிறை வைத்தனர். போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் போது பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் பல்வேறு கதைகளை கூறிச்செல்வர். குப்பையை வெளிநாட்டு கம்பெனிகளுக்கு கொடுக்கப்போகிறோம். ஒப்பந்தம் தயார், குப்பையில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்போகிறோம், எரிபொருள் உற்பத்தி செய்யப்போகிறோம், டிசம்பருடன் முடிவுக்கு வருகிறது என பல்வேறு கதைகள்.

இன்று மாலை 3 மணியளவில் கொலன்னாவை பிரதேசத்தில் அமைந்துள்ள  மீதொட்டமுல்ல மக்கள் குடியிருப்புகளிற்கு அருகே உள்ள குப்பைமேடு சரிந்து வீழ்ந்து, பல வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் பலர் பலத்த காயங்களிற்கும் உள்ளாகி உள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக மீதொட்டமுல்ல வாழ் மக்களும், சமூக அமைப்புகளும் குடியிருப்புகளிற்கு அருகே கொட்டப்பட்டு வந்த குப்பை கழிவுகளை அகற்றிடக்கோரி பல போராட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

இயேசுவின் முதல் பன்னிரண்டு சீடர்களில் ஒருவனான ஜூதாஸ் இஸ்காரியட் முப்பது வெள்ளிக்காசுகளிற்காக யூத தலைமைக்குருக்களிடமும், ரோம அதிகாரிகளிடமும் பஸ்கா பண்டிகை நேரத்தில் இயேசு கிறிஸ்துவை கன்னத்தில் முத்தமிட்டு காட்டிக் கொடுத்தான் என்று மார்க், மத்தியு என்ற சீடர்கள் எழுதிய ஆகமங்கள் (கொஸ்பல்) குறிப்பிடுகின்றன. இயேசு கிறிஸ்து வெள்ளிக்கிழமை சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த ஞாயிறு (ஈஸ்டர்) அன்று கல்லறையில் இருந்து வெளி வருகிற கதையின் நம்பியாராக யூதாஸ் இருக்கிறான்.

யாழ் மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் இன்றைய தினம் 45 ஆவது நாளில் சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்டு விட்டு உணவு தவிர்ப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர். 

யாழ். மாவட்ட பட்டதாரிகளின் போராட்டம் இன்று 45 ஆவது நாளாகவும்,  மட்டக்களப்பு மாவட்டத்தில் 51 ஆவது நாளாகவும், அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் 45 ஆவது நாளாகவும், திருகோணமலை மாவட்ட பட்டதாரிகள் 42 ஆவது நாளாகவும் தமக்கான நியமனங்களைக் கோரி மழை, வெயில் பாராமல்   கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினரின் வேலை கேட்டு போராடும் தொடர் சத்தியகிரகம் இன்று 50வது நாளை எட்டியுள்ளது. கறுப்பு உடை, பட்டி அணிந்து வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு நகரின் மத்தியில் உள்ள மணிக்கூடு கோபுரத்தின் முன்னாள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.  

கடந்த ஞாயிறு (09) இரவு ஐபிவோகோம, பூஞ்சிக்களமவை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான 38 வயதுடைய வர்த்தகரை வெள்ளை வானில் வந்தவர்கள் கடத்தி சென்றுள்ளனர். T-56 மற்றும் பிஸ்டல் ஆயுதங்களுடன் வெள்ளை வானில் சிவில் உடையில் வந்தவர்கள் தம்மை பண்டாரவளை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த  பொலிஸ் உத்தியோகத்தர்கள் என தெரியப்படுத்தி இரவு 7 மணியளவில் வீட்டிற்குள் நுழைந்து தனது கணவன் புஸ்பகுமார பியகமவுடன் அரை மணிநேரத்திற்கு மேலாக கதைத்து கொண்டிருந்து விட்டு, தன்னை தண்ணீர் தரும்படி கேட்டதாகவும், தான் தண்ணீர் கொண்டு வர சென்ற போது தனது கணவனை வெள்ளை வானில் ஏற்றி சென்று விட்டதாகவும் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டு தனது கணவன் எங்கே என அறியத்தரும்படி கேட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் தமிழ் மக்களை கசக்கிப் பிழிந்து சுரண்டிய வரிகளின் மூலம் பெற்ற மூலதனத்தையும், தமிழ் மக்களின் உழைப்பையும் கொண்டு எழுப்பிய கோவில்களில் தமிழ் வழிபாட்டு மொழி அல்ல. தமிழிற்கும், தமிழ் மக்களிற்கும் எந்த வித தொடர்பும் இல்லாத சமஸ்கிருதம் தான் வழிபாட்டு மொழி. கல்லையும், மண்ணையும் கடும் வியர்வை சிந்தி காவிச் சென்று கோவிலைக் கட்டிய உழைப்பாளிகளின் வழி வந்தவர்களில் சிலர் கோயிலிற்குள் போகலாம். ஆனால் அவர்கள் கட்டிய மூலஸ்தானத்திற்குள் அவர்கள் போக முடியாது. போகக் கூடாது. இன்னும் சிலருக்கோ கோயிலிற்குள்ளே கூடப் போக முடியாது. ஒடுக்கப்படும் மக்கள், பகுத்தறிவு அமைப்புக்கள், முற்போக்கு இயக்கங்களின் பெரும் போராட்டங்களின் பின்பு தான் மிக அண்மைக் காலங்களில் தான் கோயில் வழிபாட்டு உரிமை பெறப்பட்டது.

முல்லைத்தீவில் அரசியல் கைதிகள் விடுதலை கோரியும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை கண்டு அடைய கோரியும், அபகரிக்கப்பட்ட நிலங்களை மீள வழங்கக்கோரியும் பல நாட்களாக இடம்பெற்று கொண்டிருக்கும் சத்தியாகிரக போராட்டங்களில் இன்று (07/04/2017) சமவுரிமை இயக்கத்தின் தோழர்கள் பலர் கலந்து கொண்டு தமது ஆதரவினை வழங்கி இருந்தனர்.

1971ம் ஆண்டு ஏப்பிரல் எழுச்சி வீரர்களின் 46வது ஞாபகார்த்த நாள் இன்று முன்னிலை சோசலிச கட்சியால் அனுஸ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வு அவிசாவளை, தங்காலை மற்றம் குருணாகலை நகரத்தில் இடம்பெற்றது.

தங்காலை நகரத்தில் குழுமிய இடதுசாரிகள் செங்கொடி ஏந்தி ஊர்வலமாக சென்று, சணச மண்டபத்தில் ஒன்று கூடி எழுச்சி வீரர்களை நினைவு கூர்ந்தனர். இந்நிகழ்வுகளில் புபுது ஜயகொட, சேனாதீர குணதிலகா உட்பட பலர் உரையாற்றினார்கள். 

கடந்த பெப்ரவரி மாதம் முதல் வடக்கு கிழக்கு வேலையற்ற பட்டதாரிகள் பல கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பு, அம்பாறை, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் இரவு பகலாக தொடர்ச்சியான சத்தியாயககிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்கலைக்கழக பட்டபடிப்பை முடித்தவர்களிற்கு அரசாங்கம் வேலை வழங்குவதனை கைவிட்டுள்ளது. இதனால் பல ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் வேலையின்றி தவிக்கின்றனர். தமக்கு நீதியான தீர்வை அரசாங்கம் முன்வைத்து நடைமுறைப்படுத்தும் வரை தமது போராட்டத்தினை கைவிடப்போவதில்லை என போராட்டத்தில் உறுதியாக இருக்கின்றனர். 

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE