Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

நவீன நவதாராளவாத சாதியத்தை, அதன் சமூகப் பொருளாதார உள்ளடக்கத்தில் இருந்து விளங்கிக் கொண்டு போராடாத வரை, சாதியம் குறித்த சரியான போராட்டத்தை நடத்த முடியாது. குறிப்பாக 1960 களில் நிலவிய சமூகப்பொருளாதார உள்ளடக்கத்திலான அன்றைய சாதிய அடிப்படைகளைக் கொண்டு, இன்றைய சாதியை விளங்கிக் கொள்ள முடியாது. அதாவது கடந்தகாலத்தில் பருப்பொருள் வடிவிலான சாதியத்தையும், அதன் சிந்தனை முறைமையைக் கொண்டு நவீன சாதியத்தை விளக்கவோ போராட்டத்தை நடத்தவோ முடியாது. 

நம் நாட்டில் கடந்த 2015 சனவரி 8ந் திகதி முதல் சனநாயகம் மீட்கப்பட்டு குடிமக்களுக்கு சுதந்திர சுபீட்ச நல்வாழ்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும்,  2015 செப்டம்பர் முதல் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி நாடு முன்னேற்றப் பாதையில் வீறுநடை போடுவதாகவும் இவற்றைச் சர்வதேச சமூகம் பாராட்டியுள்ளதாகவும் ஆட்சியாளர்கள் அண்மையில் அறிக்கை விடுத்துள்ளனர்.  

பண பலம் - அரசியல் செல்வாக்கு – அரச அதிகாரம் உள்ளவர்களுக்கு மட்டுமே மேற்குறிப்பிட்ட அறிவுப்புக்களும் ஆட்சியாளர்களின் உரைகளும் பொருந்துகிறதே ஒழிய குடிமக்களுக்கும் அதற்கும் ஏதும் சம்பந்தம் இருப்பதாக நாட்டின் இன்றைய நடைமுறைகள் சிறிதளவேனும் வெளிப்படுத்தவில்லை.

கடந்த மே 1ம் திகதி கொழும்பு புறக்கோட்டையில் இடம்டபெற்ற சர்வதேச தொழிலானர் தின கூட்டத்தில் முன்னிலை சோசலிச கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரத்தினம் ஆற்றிய உரையின் சாரம்சம் இது.

131 வருடங்களுக்கு முன் உழைக்கும் மக்கள் 8 மணித்தியால வேலை நாள் கேட்டு போராடினார்கள். 131 வருடங்களுக்கு பின் இன்று 10,12 மணித்தியால வேலை செய்ய கேட்கின்றனர். இரண்டு மூன்று தொழில் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. 

ஒப்பந்த, மேன்பவர், சமயாசமய முறைமைகளில் சுரண்டல் அதிகரித்துள்ளது. 8 மணித்தியால வேலையினால் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாதுள்ளது. எடுக்கும் சம்பளம் போதுமானதாக இல்லை. பாடசாலைகளில்  2ம்  3ம் வகுப்புகளில் இருந்தே எதிர்கால உழைப்புக்கு தயாராக வேண்டியுள்ளது.

நம் நாட்டில் உள்ள தமிழ்மொழி மூல பாடசாலைகளில் க.பொ.த. உயர்தரத்தில் கணித, விஞ்ஞான பாடங்களை கற்பிப்பதற்கான ஆசிரியர்களின் பற்றாக்குறை தொடர்ச்சியாக நிலவி வருகிறது. 30 வருட காலம் வடகிழக்கு பிரதேசங்களில் இடம்பெற்ற யுத்தம் இதற்கு முக்கிய காரணம். இப்பிரச்சினைக்கு தீர்வாக ஓய்வு பெற்ற கணித விஞ்ஞான ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டது. எனினும் இதுவரையில் அதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந் நிலையில் குறித்த ஆசிரிய வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்காக இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை வரவழைக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்காது.  பிரச்சினையை மேலும் உக்கிரமடைய செய்யும் நடவடிக்கையாகும். இப் பிரச்சினைக்கு நடைமுறை சாத்தியமான விஞ்ஞானபூர்வமான தீர்வுகளை முன்வைக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்காமை வருந்த தக்கது. இவ்வாறு இந்திய ஆசிரியர்கள் வரவழைக்கப்படுவதாக இராஜாங்க கல்வி அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளமை தொடர்பாக மக்கள் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் இரா. நெல்சன் மோகன்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடுள்ளார். 

மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க அடிமைகளால் மத்திய அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டது. மரக்கட்டைகளால் உருவான இந்த வாத்தியம் தாள ஒலியுடன் இணைந்து காதுக்கு இனிய ஒலியை தரும் இயற்கையான,ஆபிரிக்க நாட்டுப்புற இசைக்கருவியாகும்.

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி நடாத்திய அரசியல் கருத்துரைகள் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வில் சிறிகரன் ஆற்றிய உரை

“தனிநாடு ஒன்றினை தாபித்துக்கொள்வது தான் தமிழ் தேசியத்தினை வெற்றிகொள்ளும் அறுதியும் இறுதியுமான வழி. 

தமிழீழம் பிரிந்து தனிநாடாகும் போது அது ஒரு சோசலிசத் தமிழீழம் ஆகும்.

ஒரு சோசலிசத் தமிழீழம் அமைகிறபோது மட்டும் தான் தென்னிலங்கை மக்கள் இனவாதத்திலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர்கள் இனவாதத்திலிருந்து விடுவிக்கப்படுவதன் ஊடாக மட்டும் தான் சிங்கள மக்கள் தமக்கான வர்க்க விடுதலையை நோக்கி நகர முடியும். அவர்களும் ஒரு சோசலிசக் குடியரசை நிறுவிக்கொள்வதற்கு தமிழீழ சோசலிசத் தனியரசு தான் தவிர்க்கமுடியாதபடி ஒரு முன்நிபந்தனையாக உள்ளது. 

இலங்கைத் தீவில் இரண்டு தேசங்கள் சோசலிசக் குடியரசுகளாக தம்மை நிறுவிக் கொள்வதென்பது ஏகாதிபத்தியங்களுககு தென்னாசியாவில் படுகுழி அமைக்கும் வகையில்  விழுகின்ற பாரிய ஒரு அடியின் ஆரம்பப்பொறியாக இருக்கும். 

1926ல் “இலங்கைக்கு கண்டி சிங்களவர்-கரைநாட்டுச் சிங்களவர்-தமிழர் என்ற அடிப்படையில் அமைந்த மூன்று பிராந்தியங்களை உள்ளடக்கிய கூட்டாட்சி அரசியலமைப்பே அவசியம்” என்பதை எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க வலியுறுத்திய போது அன்றைய மேல்தட்டு தமிழ் அரசியல் பிரதிநிதிகள் அதனை கணக்கில் எடுக்கவில்லை.

1931ல் “இனவாதம்” முளைவிடும் ஆங்கிலேய அரசியல் அமைப்பு வேண்டாம” என்று ‘யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ்’ (1920க்கும் 1940க்கும் இடையேயான காலப் பகுதிகளில் பண்டாரநாயக்கா உட்பட பல வேறுபட்ட சிங்கள அரசியல் தலைவர்களை யாழ்பாணத்திற்கு அழைத்து வந்து மாநாடுகளை நடாத்திய அமைப்பு)  வலியுறுத்திய போது தமிழர் தலைவர்கள் ‘காங்கிரஸையே’ காணாமல் போகும்படி செய்து விட்டார்கள்.

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி தனது 3வது மாநாட்டினை பரிஸின் புறநகர் பகுதியில் கடந்த 29.04.201 சனியன்று வெற்றிகரமாக நடாத்தி முடித்துள்ள செய்தியினை அனைவருடனும் பகிர்ந்து கொள்கின்றோம். மாநாட்டினை அடுத்து 30.04.2017 ஞாயிறு அன்று அரசியல் கருத்துரைகள் மற்றும் கலந்துரையாடல் பரிஸ் கம்பெற்றா (Theatre de Menilmontant, Gambetta) பகுதியில் உள்ள மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பல அரசியல் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

இன்று மே முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினம், முன்னிலை சோசலிக கட்சியால் கொழும்பு புறக்கோட்டையில் மாபெரும் எழுச்சிக் கூட்டமாக நிகழ்த்தப்பட்டது. மேலும் இத்தாலி, பரிஸ் மற்றும் லண்டன் நகரங்களில் சமவுரிமை இயக்கமும் முன்னிலை சோசலிச கட்சியும் இணைந்து மேதின ஊர்வலங்களில் கலந்து கொண்டன. "ஏகாதிபத்திய நவதாராளமய திட்டத்திற்கு எதிராக உழைக்கும் மக்களே எழுவீர்!" என்ற கோசத்தை பிரதான முழக்கமாக இந்த வருட சர்வதேச தொழிலாளர் தினத்தில் முன்வைத்து   முன்னிலை சோசலிச கட்சி இந்த எழுச்சி கூட்டங்களை நடத்தியதுடன், இதே கோசத்துடன் சர்வதேச நாடுகளில் இடம்பெற்ற ஊர்வலங்களிலும் கலந்து கொண்டிருந்தது. 

அது ஒரு வைத்தியக் கலாநிதியின் வீடு. அப்போது எனக்கு பத்து வயதிருக்கும். அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு உள்ளே நுழைகிறேன். ஊதுபத்திகள் வாசத்தைப் பரப்பியபடி புகை விடுகின்றன. சந்தனமும், பன்னீரும் சேர்ந்து நறுமணம் வீசுகின்றன. காவியுடை அணிந்த ஒருவரின் படத்திற்கு முன்னால் விழுந்து கும்பிடுகிறார்கள். அவரின் படத்திலிருந்து குங்குமம் கொட்டுகிறதாம். அவர் கடவுளின் அவதாரம் என்று அம்மா சொன்னா. அவரின் தலை பொப் பாடகர் ஏ.இ.மனோகரனின் தலை போல சுருள், சுருளாக ஸ்பிரிங் தலையாக இருந்தது. குங்குமம் கொட்டுவதற்கு பதிலாக இனிப்பு கொட்டினால் எப்படி இருக்கும் என்று யோசித்தேன். அதுவும் அய்ந்து சதத்திற்கு ஒன்று என்று விற்ற தோடம்பழ இனிப்பு எனப்படும் சிவப்பு நிற இனிப்பாக இருந்தால் இன்னும் நல்லது என்று நினைத்தது இன்றும் ஞாபகம் இருக்கிறது. ஆனால் படத்தில் இருந்து இனிப்பு ஒருநாளும் கொட்டவில்லை. கடவுளின் அவதாரமும் கான்சர் வந்து செத்துப் போய் விட்டார்.

முன்னிலை சோசலிசக் கட்சியின் இரண்டாவது காங்கிரஸ் மாசி மாதம் முதலாந் திகதி கொழும்பு சுகததாச உள்ளரங்கில் நடைபெற்றது. 3500 க்கும் மேற்பட்ட பிரதேசவாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் உலகின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்திருந்த உலக இடதுசாரி இயக்கங்களின் பிரதிநிதிகள், சகோதரக்கட்சிகளின் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் காங்கிரஸ் முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமாகியது.

காணாமலாக்கப்பட்டுள்ள தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துமாறும், பறிக்கப்பட்ட காணிகளை மீண்டும் தம்மிடம் ஒப்படைக்குமாறும் வற்புறுத்தும் தொடர் போராட்டத்தில் வடக்கு கிழக்கு மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மட்டுமல்ல திருகோணமலை முதற்கொண்டு தொடர்ச்சியான சத்தியாக்கிரக வடிவத்தில் நடத்தப்படும் இந்த எதிர்ப்பு நடவடிக்கை இரு மாதங்களை கடந்துள்ளது. ஆனாலும், அரசாங்கத்தின் எந்தவொரு அதிகாரியும் இது விடயத்தில் பொறுப்புடன் தலையீடு செய்யவில்லை என்பதுடன் தீர்க்கப்படாமலிருப்பது காணாமல் போனவர்களின் பிரச்சினை மாத்திரமல்ல. ஆரம்பத்தில் அரசியல் சிறைக்கைதிகளை விடுதலை செய்வதாக தேர்தல் வாக்குறுதியளித்த அரசாங்கம் இலங்கையில் அரசியல் சிறைக்கைதிகள் கிடையாதென இப்போது கூறுகின்றது. பயங்கரவாத தடுப்புச் சட்டம் உட்பட அடக்குமுறை சட்டங்களை ரத்துச் செய்வதாக கூறிய வாக்குறுதியும் மீறப்பட்ட வாக்குறுதிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிட்டது. யுத்த காலத்தில் மக்களிடமிருந்து கையகப்படுத்திய காணிகள் சம்பந்தமான பிரச்சினை கூட இதுவரை தீர்க்கப்படவில்லை.

காங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து RSSன் கருத்தியல் வழிகாட்டின் அடிப்படையில் இந்துத்துவ சக்திகளின் செயல்முறைத் திட்ட வகுப்புவாதமாக தனிப்படுத்தி காட்டும்படி மாறியுள்ளது. தோழர் பன்சாரே அல்லது பேராசிரியர்க ல்பர்கி ஆகிய பகுத்தறிவாளர்களை கொல்வதின் மூலமாகவும், தற்புனைவு பசுப்பாதுகாவலர்கள் மக்கள் முன்னிலையில் தலித்துகளை அடிப்பது, இஸ்லாமியர்களை கொலை தண்டனை விதித்துக் கொல்வது போன்றவற்றின் மூலமாகவும் சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை இலக்காக்கி வகுப்புவாத வெறியைத் தூண்டிவிடுவதற்காக பெரும்பான்மை வகுப்புவாதம் ஒன்றிணைந்த திட்டமிட்ட முயற்சிகளை தொடர்ந்து வருகின்றது. போதிய சான்றில்லாமல் கற்பனையான எதிரிக்கு எதிராக மக்களை தவறாக வழிநடத்தும் இயல்புக்கு மாறான இந்த வெறுப்புப்பாங்கு 1930களின் ஐரோப்பாவின் பண்பிற்கு ஒத்ததாக உள்ளது.

இலவச கல்வி மற்றும் இலவச மருத்துவ சேவைகளை பாதுகாக்க இன்று 26-04-2017 இரவு வேளையில் கொழும்பு நகரில் தீப்பந்தங்கள் ஏந்தி மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் மற்றும் பொதுக் கூட்டம் இடம்பெற்றது. அரசாங்கம் மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பினை மீறி கல்வி மற்றும் மருத்துவ சேவைகளில் தனியாரை ஊக்குவிப்பதன் மூலம் எதிர்காலத்தில் அவற்றை இலவசம் இல்லாது ஆக்கும் நவதாராளவாத பொருளாதார கொள்ளைகையினை முன்னெடுப்பதில்  ஆர்வம் கொண்டு செயற்படுகின்றது. எனவே போராட்டங்களை இல்லாதொழிக்கும் வண்ணம் சட்டங்களை இயற்றுவதிலும், போலியான வாக்குறுதிகளை வழங்குவதிலும் முனைப்பாக உள்ளது.

இன்று 25ம் திகதி கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் தமது 64 நாட்களாக தொடரும் போராட்டத்தினை கிழக்கு மாகாணசபையின் முன்னால் நகர்த்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்குமாறு, திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு பிரதியை வேலையற்ற பட்டதாரிகள் கிழித்தெறிந்தனர்.

எமது கட்சியின் இரண்டாவது தேசிய மாநாட்டின் செயலாளர் சபையும், தலைவர் சபையையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சகோதரர்களே, இங்கு கூடியிருக்கும் அன்பிற்கினிய சகோதரர்களே, சகோதரிகளே வணக்கம்.

ஆரம்பத்திலேயே எமது மாநாட்டில் கலந்து கொள்வதோடு மாநாட்டிற்காக வாழ்த்துக்களை கொண்டு வந்திருக்கும் தேசிய, சர்வதேசிய இடதுசாரிய இயக்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகோதரர்களை ஞாபகப்படுத்திக் கொள்கிறேன்.

இந்த நிகழ்வுக்கு ஜேர்மன் மார்க்சிய லெனினியக் கட்சியின் சர்வதேச விடயங்களுக்கான செயலாளர் ரோஸ் வொலன்டின்ஸ் சகோதரர், அதேபோல் இந்திய மார்க்ஸ் லெனினிய கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் பி.ஜே.ஜேம்ஸ் சகோதரர், அதேபோல் இத்தாலிய ரிபோன்தியோ கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசக் கமிட்டி உறுப்பினர் ஜான் மாகோ பீசா சகோதரரும் இங்கு வருகை தந்துள்ளார்கள். 5 வது சர்வதேச லீக்கின் சார்பில் ஸ்ரீவன் மெகன்சி சகோதரர் வருகை தந்துள்ளார். அதே போல் சர்வதேச தொழிலாளர் சங்கம் சார்பில் சர்வதேச சங்க உறுப்பினர் ஜெகதீஸ் சுந்தர சகோதரர் வருகை தந்துள்ளார். கியூபா நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கியூபா நாட்டுத் தூதுவர் பிரவானா எலேனா ராமோஸ் ரொன்டிகார் சகோதரி இங்கு சமூகம் தந்து உள்ளார்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE