Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

கத்தோலிக்க மதப் பின்னணி எனக்கு இருந்ததனால் மரிய மதலேனா பற்றி கொஞ்சம் தெரியும். 8ம் வகுப்பு தொடக்கம் 10ம் வகுப்பு   படிக்கிற காலத்தில வாணி, சரஸ்வதி, மாதவி, பாரதி, வாகதீஸ்வரி, மாலினி எண்டு, கொஞ்ச பொம்பிளைப்பிள்ளையளுக்கு பின்னால  திரியேக்க, அவயட சமய புத்தகத்தில இருந்த தேவாரம், திருவாசகம், திருப்புகழ், நாயன்மார் பற்றிய கதைகளை வாசிக்கும் போது,    மேலோட்டமாக அறிமுகமானவர் தான் ஆண்டாள் என்கின்ற கோதை. கொஞ்சம் வயது வந்த பின்னாடி, மரியா மதலேனாவைப் பற்றியும்  ஆண்டாளைப் பற்றியும் நான் "விபரமாக" தெரிஞ்சு கொண்டது சினிமா திரைப்படங்கள் ஊடாகத் தான்.

எனக்கு இன்றைக்கும் ஆண்டாள் என்றால் நினைவில் வருவது, பாரதியின் "காக்கை சிறகினிலே நந்தலாலா" என்று பாடியபடி திருமால் பெருமை  படத்தில் தோன்றிய கே.ஆர்.விஜயா தான்! சிவாஜி ரசிகனான நான் அநேகமாக எல்லாப் படங்களையும் அவருக்காகவே பார்த்திருக்கிறேன். ஆனால், திருமால் பெருமை  என்ற படத்தை நான் பலதடவைகள் கே.ஆர்.விஜயா நடித்த ஆண்டாளுக்காகவே பார்த்திருக்கிறேன்.

 

இப்படத்தால் ஏற்பட்ட  "பாதிப்பால்" ஆண்டாளை பற்றி தேடியிருக்கிறேன். ஆண்டாள் திருப்பாவையிலும், நாச்சியார் திருமொழியிலும் வரும் பல வரிகளை என்னால் இப்போதும் மனப்பாடமாக கூறமுடியும். எனக்குத் தெரிந்த இலக்கியம் பற்றிய உலகவரலாற்றில், பல நூறாண்டுகளுக்கு முன்பேயே, காதலால்-காமத்தால் கவிதைப் பெருக்கெடுத்து, ஆணை object தன் ஆளுமைக்கு உட்பட்ட  பொருளாக்கி - அல்லது ( கண்ணன்/கிருஸ்ணன் என்ற) கடவுளையே தன் காதல்-காம வெளிப்பாட்டுக்கான object - பொருளாக்கி பாடிய பெண்ணைப் பற்றிய பதிவை நான் வாசிக்கவில்லை.

போராட்டம் இதழ் 32 பின்வரும் கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்துவிட்டது.

 

கட்டுரைகள்

1. ஏமாறாதிருப்போம்! எழுந்து நிற்போம்

2. துன்பமும் போராட்டமும்

3. சாதியமே தேசியத்தின் உயிர் மூச்சு

4. அவர்களின் வருமானமும் எமது செலவீனமும்

5. உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆம் ஆண்டு

6. கட்சிகளுக்கான அரசியலும், மக்கள் அரசியலுக்கான கட்சிகளும்

7. யார் யாருடைய வயிற்றுக்குள்? அமெரிக்காவிற்கும், இலங்கைக்குமிடையிலான ஒப்பந்தத்தின் எதார்த்தம்

8. கலைமதி கிராமத்தின் சுடலைக்கு எதிரான போராட்டமும்-வெற்றியும், இடதுசாரிய இயக்கமும்

9. தேர்தல் வரும் பின்னே! தீர்வு(அரசியல் யாப்பு) வி(இன)வாதம் வருகிறது முன்னே!

10. வேள்வித் தடை மூலம் அரங்கேறும் வெள்ளாளிய மயமாக்கம்

11. யார் விடுதலை பெற்றனர் சிம்பாப்வேயில்? இராணுவமா? மக்களா?

12. 2018 உள்ளுராட்சி சபைத் தேர்தலும் முன்னிலை சோசலிஸக் கட்சியின் நிலைப்பாடும்

13. இனவாதம் பலவிதம் - ஐக்கியப்பட வேண்டிய தருணமிது

சாதிய சமூகத்தில் "தூயது" என்பது, ஒரு பாசிசக் கருத்தியலே. தமிழன் என்ற "தூய" கருத்தியலும் - வாழ்வுமுறையும், பிற இன மற்றும் ஒடுக்கப்பட்ட சாதியச் சமூகத்துக்கு எதிரான மனித விரோதப் பண்பாட்டையும்  - நடைமுறையையுமே  முன்வைக்கின்றது.

"தூய" தமிழர் என்ற ஒடுக்கும் சாதிய கருத்தியலானது, ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் சாதியத்தில் இருந்து சமூகத் தூய்மையைக் கோருகின்றது. இந்த தூய்மைவாதமே பிற பண்பாட்டு கூறுகளுக்கு எதிராக, கோயில்களில் புனிதத்தை முன்வைக்கின்றது. அந்தந்த சாதிக்குள்ளான சாதிய வாழ்க்கை முறைமையையே தூய்மைக் கோட்பாடு முன்வைக்கின்றது. மனிதன் உண்ணும் உணவில், புனிதத்தையும் தூய்மையையும் முன்வைக்கின்றது. எதைக் கடவுளுக்கு படைக்கலாம் என்ற, சாதிய வக்கிரத்தையும் சமூகத்தில் புகுத்துகின்றது.   

கூட்டமைப்பு மூலம் தமிழ் மக்களை அடக்கியாளும் அதிகாரத்தைப் பெறமுடியாத அணியினரின் கோசம் தான் "தூய கரங்கள் - தூய நகரங்கள்" என்பதாகும். யாழ் மாநகரசபையின் முதன்மை வேட்பாளரான மணிவண்ணன் மூலம் முன்வைத்திருக்கும் இக்கோசமானது, அவரினதும் - அவர் கட்சியினதும் கடந்தகால கொள்கையும் நடைமுறையுமாகும். இந்த பின்னணியில் அவர்கள் "மாற்றத்துக்காய் வாக்களியுங்கள்" என்று கோருகின்றார். சரி எந்த மாற்றத்துக்காக?

சுரண்டலற்ற மனித சமுதாயத்துக்காகவா!?, சாதிகளற்ற மனித வாழ்வுக்காகவா!?, நவதாராள பொருளாதாரக் கொள்கைக்கு எதிரான "தமிழ்" தேசிய பொருளாதாரத்தை உருவாக்கவா!?, இனவொடுக்குமுறைக்கு எதிராக ஒடுக்கப்பட்ட சிங்கள மக்களுடன் இணைந்து போராடவா!? மதச்சார்பற்ற ஆட்சியை அமைக்கவா!? யாழ் இந்து வெள்ளாளிய சாதிய சிந்தனையிலான யாழ்மையவாத சமூகத்தை மாற்றி அமைக்கவா!? இல்லவே இல்லை. இருக்கின்ற பிற்போக்கான யாழ் மேலாதிக்க வெள்ளாளிய சாதிய சமூகத்தை தக்க வைக்கவும், அதற்கு தலைமை தாங்கவுமே வாக்கைக் கோருகின்றனர். அவர்கள் போடும் வேசங்களைக் கடந்து, இதுவே தான் உண்மை.

மாநகரசபையின் முதன்மை வேட்பாளரான மணிவண்ணன வெள்ளாளிய இந்து சாதிய சமூக அடிப்படையில் இருந்தே, வேள்வித் தடையைக் கோரி வழக்கு தாக்கல் செய்தது முதல், சாதிய மயானங்களைத் தக்க வைக்கும் வண்ணம், அண்மைய போராட்டங்களுக்கு எதிராக சாதிய அடிப்படைகளை உயர்த்திப் பிடித்தவர். இது தான் அவர் நிற்கும் கட்சியின் வரலாறும் கூட.

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.

பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம்  அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.

சிம்பாப்பேயின் றொபேர்ட் முகாபே, தனது சொந்த இராணுவ உயரதிகாரிகளினால் பிரயோகிக்கப்பட்ட பாரிய அழுத்தத்தின் காரணமாய் மூன்று தசாப்தங்களுக்கு மேலான தனது ஆட்சியதிகாரத்திலிருந்து பதவி விலகிக் கொண்டுள்ளார். இவர் பதவி விலகிக்கொண்டதான அறிவிப்பைத் தொடர்ந்து பாராளுமன்றத்திலும் வீதிகளிலும் மகிழ்ச்சி ஆரவாரங்கள் கிளர்ந்தெழுந்தன.

முகாபேயின் சொந்தக் கட்சிக்குள்ளேயே முகாபே மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கான வாக்கெடுப்பு நடந்துகொண்டிருந்த வேளையின் மத்தியில், முகாபே தனது இந்த பதவிவிலகல் அறிவிப்பினை வெளியிட்டார். பதவிவிலகும் கணத்தில் உலகநாடுகளின் தலைவர்களில் வயதில் எலலோரையும் விட மூத்தவரான முகாபேக்கு வயது 93 ஆகும். கடவுளால் மட்டுமே தன்னை அதிகாரத்திலிருந்து நீக்க முடியும் என்று அவர் ஒரு தடவை குறிப்பிட்டிருந்தார். சிம்பாப்பே நாட்டினுடைய விடுதலை இயக்கத்திற்கு தலைமை வழங்கிய அதிபர் முகாபே அந்நாடு சுதந்திரம் அடைந்த 1980 ம் ஆண்டிலிருந்து பதவியிலிருந்து வருகிறார். 1987 இல் சிம்பாப்வே ஜனாதிபதி முறைமைக்கு மாறியது. ஐனாதிபதி முறைக்கு மாறும் வரைக்கும் முகாபே நாட்டின் பிரதமராக பதவி வகித்தார்.

 

   தேர்தல் முடிவுகள் என்பது மக்கள் கருத்தை வெளிப்படுத்தும் சந்தர்ப்பமாகும் எனவும், தேர்தல் என்பது மக்கள் கருத்தை அளவிடும் கருவியாகுமெனவும் ஒரு கருத்து நிலவுகின்றது. ஆனால் அது உண்மையல்ல என்பது பகுத்தறிந்து பார்க்கும் எந்தவொரு நபரும் புரிந்து கொள்வார். நாம் வாழும் இந்தச் சமூகத்தில் ‘மக்கள் கருத்து’ என்பது மக்கள் மத்தியில் தானாகவே உருவாகிய ஒன்றல்ல. பணபலம், ஊடகபலம், குண்டர்பலம் மற்றும் அரசியற்பலத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாகும். மக்கள் கருத்தை உருவாக்குவதற்காக மக்கள் மனதை சலவை செய்யும் (மூளைச் சலவை) விடயத்தில் ஊடகங்கள் முன்னின்று உழைக்கின்றன.  சாதாரண காலங்களிலும் மக்கள் கருத்தென்பது அப்படியானதாக இருக்கும் பட்சத்தில், தேர்தல் காலங்களில் அது மேலும் தீவிரமடையுமே தவிர வேறொன்றும் நடக்காது. ஆகவேதான் தேர்தல் முடிந்த பின்பு வெளிவரும் தேர்தல் முடிவுகள் செயற்கையாக நிர்மாணிக்கப்பட்ட ‘மக்கள் கருத்தின்’ வெளிப்பாடெனக் கூற முடியும்.

   என்றாலும், தேர்தல் நேரத்திலும் அதற்கு முன்பும் நடக்கும் விசேட பரப்புரைகளின்; ஊடாக இடதுசாரிய கருத்தியலை சமூகமயப்படுத்த முடியாதென்பது இதன் கருத்தாகாது. குறிப்பிட்டளவு முயற்சி செய்தால் தேர்தலில் இடதுசாரிய அமைப்புகளுக்கும் ஓரளவு மக்கள் பிரதிபலிப்பை பெற்றுக்கொள்ள முடியும். என்றாலும், அதற்கு ஒரு வரையறை இருப்பது சம்பந்தமான புரிந்துணர்வும் வேண்டும்.

   அதேபோன்று, இடதுசாரிய கட்சிகள் தேர்தலில் மற்றும் பிரதிநிதிகள் நிறுவனங்களில் பங்கேற்பது (நாடாளுமன்றம், மாகாண சபைகள், உள்ளுராட்சி நிறுவனங்கள்) குறித்து தமது நிலைப்பாட்டை அமைத்துக் கொள்ளும்போது வரலாற்றில் பெற்றிருக்கும் அனுபவங்களை அடிப்படையாகக் கொள்ள வேண்டுமென்பதையும் மறக்கக் கூடாது. இலங்கையிலும், சர்வதேச அரசியலிலும் தேர்தல் மற்றும் பிரதிநிதிகள் நிறுவனங்கள் சம்பந்தமாக தலையீடு செய்வது எப்படி என்பது குறித்து தேவையானளவு உதாரணங்கள் கிடைக்கின்றன. பிரதிநிதிகள் நிறுவனமொன்றிற்காக நடக்கும் இவ்வாறான தேர்தல் களங்களை இடதுசாரிய இயக்கம் தனது அரசியல் போராட்டத்தின் பிரதான அல்லது ஒரே போராட்டக் களமாக ஆக்கிக் கொள்ளல் வேண்டும்.  மக்கள் கருத்தின் மீது தiலையிடுவதற்கான சந்தர்ப்பமாக அதனை பயன்படுத்த வேண்டும் என்பதோடு ஒரு பிரதிநிதித்துவத்தையாவது பெற்றுக்கொள்ள முடியுமாயின் அதற்கும் முயற்சி செய்ய வேண்டும்.

புகையிரத தொழிலாளர்களுக்கு எதிரான அடக்குமுறையை தோற்கடிப்போம்!

தமது  சம்பளமுரண்பாட்டை  உடனடியாக தீர்க்குமாறு  வற்புறுத்தி புகையிரத  சேவைகள் பலவற்றில் உள்ள தொழிலாளர்கள் முன்னெடுக்கும் பணிப்புறக்கணிப்பு செயற்பாட்டுக்கு அரச அடக்குமுறை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

புகையிரத சங்கங்கள் நீண்டநாட்களாக தமது சம்பள உயர்வு தொடர்பாகவும், மற்றும் சம்பள முரண்பாடு தொடர்பாகவும் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தனர். ஆனால்  அது தொடர்பாக அதிகாரிகளின் எவ்வித பதிலும் கிடைக்காதனால் இன்று அது வேலைநிறுத்தம் வரை வளர்ச்சி அடைந்துள்ளது.

தொழிலாளர் பிரச்சினை தொடர்பாக ஆரம்பத்திலேயே தீர்வு பெற்றுக்கொடுக்காது பிரச்சினை  வளர்க்கும் ஆட்சியாளர்கள் இந்த வேலைநிறுத்தம் காரணமாக மக்களுக்கு ஏற்படும் அசௌகரியத்திற்கு வகை கூறவேண்டும்.

அந்த வகைகூறலோடு ஆட்சியாளர்கள் வேலைநிறுத்தத்தின் மூலம் பொதுப் போக்குவரத்து சேவை  பாதிப்படைவதைப் பாவித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் மீது  அடக்குமுறையை பாவித்து வருகின்றனர்.

புகையிரத சேவையையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தல், குறித்த நேரத்திற்குள்   சேவைக்கு திரும்பாத புகையிரத தொழிலாளர்கள் சேவையை விட்டு வெளியேறியவர்களாக கருதப்படுவதாக அறிவித்தல் போன்ற அச்சுறுத்தல் தற்போது அரசாங்கத்தினால் விடப்பட்டுள்ளதோடு எதிர்வரும் நாட்களில் பாரிய அடக்குமுறையாக அது அமையும்.

புகையிரதம்  உட்பட  பொதுப் போக்குவரத்துச்  சேவை அத்தியாவசிய சேவையாக அரசாங்கத்திற்கு தெரிவது தொழிலாளர்கள் வேலைநிறுத்த செயற்பாட்டில் ஈடுபட்ட பின்னரே.

இதற்கு முன்னர் புகையிரத திணைக்களத்தை தனியார் கம்பெனிக்கு விற்கும் தீர்மானம் எடுக்கும்போது  அல்லது அரசாங்க நிதி ஒதுக்கீட்டை வெட்டிவிடும்போது அரசாங்கம் மற்றும் அரச அதிகாரிகள்  செயற்பட்டது அத்தியாவசியதன்மையை கவனத்தில் கொள்ளாது.

தற்போது இந்த சந்தர்ப்பத்தில் புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் அரசாங்கத்தின் தலைவர்களிடம் எமக்கு கேட்க வேண்டியிருப்பது 2015 இல் 78 பில்லியன், 2016 இல்  58 பில்லியன், 2017 இல் 51 பில்லியன் என பொதுப் போக்குவரத்து செலவுகளை குறைத்தபோதும்,  2018 வரவுசெலவு திட்டத்தில் அது 43 பில்லியன் வரை மேலும் வெட்டப்பட்டுள்ளபோதும் அது  அத்தியாவசிய சேவையாக ஏன் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

இவைகளில் உள்ள சமூகமய அத்தியாவசிய பாவனை உள்ளது.  அந்த சேவைகள் தொடர்பாக மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்துவதற்கு அல்ல அந்த சேவைகளில் ஈடுபடும் தொழிலாளர்களின் தொழில் உரிமையை இல்லாதொழிக்கவே என நாங்கள் மக்களுக்கு மீண்டும் ஞாபகமூட்டுகிறோம்.

தனிப்பட்ட சுயநல நோக்கங்களின்றி, தம் வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணித்தவர்களை, அரசியல்ரீதியாக நாம் இன்று இனங்காண வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்கள் தம் மீதான அனைத்து ஒடுக்குமுறைகளிலிருந்தும் விடுபட்டு மக்கள் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதற்காகவே, தங்கள் வாழ்க்கையையும் - உயிர்களையும் அர்ப்பணித்தவர்களே அஞ்சலிக்குரிய தியாகிகள். அவர்கள் ஒரு நாளும் தமிழன், தமிழனை அடக்கி ஆள்வதற்காக தம்மைத் தாம் அர்ப்பணிக்களில்லை. இதைத் தான் உண்மை. இதுதான் இன்று மறுதளிக்கப்படுகின்றது.

மக்களை ஒடுக்குமுறைகளில் இருந்து விடுவிக்க போராடியவர்களைத் தலைமை தாங்கியவர்கள் மக்களை ஒடுக்குவோராக மாறியதே வரலாறு. மக்களுக்;காக மரணித்தவர்களின் முதுகில் குத்தியதும், குத்துவதுமே தொடருகின்றது. மக்களை ஒடுக்கும் தங்கள் தலைமை அதிகாரத்துக்காகவே நிலைநாட்டவே அவர்கள் போராடியதாகவும் - தியாகம் செய்ததாகவும் காட்டிக் கொண்டு, தொடர்ந்து ஓடுக்கும் அரசியலை முன்வைக்கின்றனர்.

போராடி இன்று உயிருடன் இருப்பவனோ, தானும் - தன் சமூகமும் எந்த ஓடுக்குமுறையிலும் இருந்து விடுபடாத அவலத்தையும் - தனக்கு தலைமை தாங்கி நிற்பவன் தன்னை சமூக ரீதியாக – பொருளாதார ரீதியாக ஓடுக்குவதைவும் காண்கின்றான். இது தான் போராடியவன் முன்னுள்ள எதார்த்தம்.

தமிழ் தேர்தல் அரசியல் முதல் இயக்க அஞ்சலிகள் வரை இதைத் தாண்டி, ஓடுக்கப்பட்ட மக்களை இட்டு கடுகளவும் கூட அக்கறைப்படுவதில்லை. இதனால் தான் இன முரண்பாட்டால் கொல்லப்பட்ட மக்களையிட்டும், பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களையும் இட்டு அக்கறைப்படுவதில்லை.

இனவொடுக்குமுறைக்கு பலியானவர்களை மறுப்பது, ஒடுக்குமுறை அரசியலாக மேலெழுந்து இருக்கின்றது. இயக்க அஞ்சலி நிகழ்வுகள் இதைத்தான் இன்று நிறுவ முனைகின்றது. ஆளும் வர்க்க வரலாறுகளே மனித வரலாறாகி இருப்பது போல், இன முரண்பாட்டுக் காலத்தில் ஒடுக்கியோர் போற்றப்படுவதையே வரலாறாக்கி விட முனைகின்றனர். ஒடுக்கியவர்கள் போற்றப்படுவதோடு, ஒடுக்கப்பட்டவர்கள் வரலாற்றில் இருந்து காணாமலாக்கப்படுகின்றனர்.

மக்களை இனரீதியாக பிரித்து ஒடுக்கும் இனவாத அரசு, யுத்தத்தில் மரணித்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதை மறுத்து வந்தது. அதேநேரம் இனவொடுக்குமுறைக்கு எதிராக போராடுவதாக கூறிக்கொள்ளும் ஒடுக்கப்பட்ட தரப்பிலுள்ள இனவாதிகள், இனவொடுக்குமுறைக்கு பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதை மறுப்பதும் நடந்து வருகின்றது. இந்த அரசியல் பின்னணியிலேயே இனவொடுக்குமுறைக்கு பலியானவர்களை நினைவு கொள்ளவதை அரசு அனுமதித்ததன் மூலம், மறுபக்கத்தில் இனவொடுக்குமுறைக்கு பலியானவர்களை மறுக்கும் குறுகிய இனவாத அரசியலுக்குள் தமிழ் மக்களை மூழ்கடித்து இருக்கின்றது. தமிழ் பேசும் மக்களையே மோதவைத்து, பிரித்தாளும் தந்திரத்தை, தமிழ் இனவாதிகளைக் கொண்டே முன்நகர்த்த இருக்கின்றது.

இலங்கையில் கடந்த வரலாறு என்பது இனவொடுக்குமுறையாலானது. இந்த இனவொடுக்குமுறையானது இனக்கலவரங்களுக்கும், இன யுத்தத்துக்கும் வித்திட்;டது. பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும், காணாமலாக்கப்பட்டும் இருக்கின்றனர். இன்று வரை யாரும் இந்த மக்களை நினைவு கொள்வதுமில்லை, அஞ்சலிகள் அவர்களுக்கு செலுத்தப்படுவதுமில்லை. இதுதான் உண்மை. இதை மீறி அஞ்சலி செலுத்துவது என்பது, துரோகத்துக்குரியதாக காட்டப்படுகின்றது.

 ஆளும் வர்க்க வரலாறுகளே மனித வரலாறாகி இருப்பது போல், இன முரண்பாட்டுக் காலத்தில் ஒடுக்கியோர் போற்றப்படுவதே வரலாறாகி வருகின்றது. ஒடுக்கியவர்கள் போற்றப்படுவதோடு, அந்த ஒடுக்கியவர்களால் ஒடுக்கப்பட்டவர்கள் வரலாற்றில் இருந்து காணாமலாக்கப்படுகின்றனர்.

ஆயுதம் தாங்கிப் போராடிய அமைப்புகள், தங்கள் அமைப்பையும் முன்னிறுத்தி நினைவுகளைக் கொண்டாடுவதே நடந்து வருகின்றது. அதேநேரம் தங்கள் அரசியலை முன்னிறுத்தி அனைத்து ஒடுக்கப்பட்டவர்களின் பொதுவான நினைவுகளை மறுப்பதும் நடந்து வருகின்றது. ஒடுக்கப்பட்டவர்களின் நினைவை மறுப்பது என்பது, ஒடுக்கப்பட்ட மக்களின் மனிதவுரிமையை மறுக்கும் அரசியலாக இருக்கின்றது.

ஒடுக்கப்பட்டவர்களின் அரசியல் மூலமே, ஒடுக்கப்பட்டவர்களின் தியாகங்களை முன்னிறுத்த முடியும். இந்த வகையில் சர்வதேச மனிதவுரிமைத் தினத்தை ஒடுக்கப்பட்டவர்களின் தினமாக முன்னிறுத்துமாறு, சமவுரிமை இயக்கம் அழைப்பு விடுக்கின்றது. சர்வதேச மனிதவுரிமைத் தினமான மார்கழி 10 திகதியை முன்வைத்து 10.12.2017 பாரிசில் ஒடுக்கப்பட்டோர் நினைவுநாளை நடத்த சமவுரிமை இயக்கம் அழைப்பை விடுகின்றது.

யார் ஒடுக்கப்பட்டவர்கள்? 

இனமுரண்பாட்டினால் பலியானவர்களில் ஒடுக்கியோரும், ஒடுக்கும் அரசியலைக் கொண்டு இருந்தோரும் அடங்கும். ஒடுக்கியவர்கள் பலியானதால் அவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் அல்ல. இந்த வகையில் அனைத்துவிதமான ஒடுக்குமுறைக்கு பலியானவர்களையும் முன்னிறுத்துவோம்.  உதாரணமாக யார் ஒடுக்கப்பட்டவர்கள்?   

தேர்தல் அரசியலானது "அபிவிருத்தி" பற்றியும், "உரிமைகள் குறித்தும்" பேசுகின்றது. நவதாராளவாத முதலாளித்துவத்தை அரசியலாகக் கொண்ட தேர்தல் கட்சிகள் முன்வைக்கும் அபிவிருத்தி மற்றும் உரிமைகள் குறித்த எந்தக் கொள்கைகளும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கானதாக ஒருநாளும் இருக்க முடியாது. மாறாக ஒடுக்கும் தரப்பாக இருக்கும் நவதாராளவாத முதலாளித்துவத்தையே முன்னெடுக்க முடியும். இதைத் தான் தேர்தல் அரசியலால் செய்ய முடியும். தேர்தல் மூலம் நடக்கும் ஆட்சிமாற்றங்கள் என்பது, வெறும் முகமாற்ற ஆட்சியாக மட்டும் தான் இருக்க முடியும். இது தான் எதார்த்தம். இந்த உண்மையை மூடிமறைக்கின்ற, இதன் அடிப்படையில் தேர்தல் அரசியலை ஆராயாத எல்லா அரசியல் கருத்துகளும், தொடர்ந்தும் மக்களை ஏமாற்றுகின்ற பித்தலாட்டமாகும்.

நவதாராளவாத அபிவிருத்தி அரசியலின் உள்ளடக்கம் என்ன? 

நவதாராளவாத "அபிவிருத்திகள்" மூலம் நாட்டை வளப்படுத்துவதாக கூறுவதே, தேர்தல் அரசியலாகிவிட்டது. இந்த "அபிவிருத்தியைச்" செய்வதன் மூலம் வேலைவாய்ப்புகளை மக்களுக்கு பெற்றுத்தரப்போவதாக கூறுகின்றனர். இதற்காகவே தங்களை தேர்ந்தெடுக்குமாறும், தமக்கான அரசு அதிகாரத்தையும்; கோருகின்றனர். இந்த அரசியல் பின்னணியில் இருந்தே தன் இனத்திற்காக, தன் மதத்திற்காக, தன் பிரதேசத்திற்காக.. உழைக்கப்போவதாகவும், "உரிமைகளைப்" பெற்றுதரப்போவதாகவும் கூறி, மக்களை கூறு போட்டு வாக்குக் கேட்கின்றனர். ஜனாதிபதித் தேர்தல் தொடங்கி உள்ளூராட்ச்சி தேர்தல் வரையான, அனைத்து தேர்தல் கட்சிகளும் முன்வைக்கும் கொள்கைகள் இவைதான்.

இந்த "அபிவிருத்தி" அரசியல் என்பது தனியார் முதலீட்டை கொண்டு வருவதும், வட்டிக் கடன் மூலம் அடிக்கட்டுமானங்களை உருவாக்குவதுமாகும். அதாவது உலகமயமாதல் முன்வைக்கும் இந்த நவதாராளவாதக் கொள்கைகளே, தேர்தல் கட்சிகளின் இன்றைய கொள்கையாகும்.

அரச முதலீட்;டை மறுதளிக்கும் நவதாராளவாத முதலாளித்துவம், தனியார் முதலீட்டை மட்டும் தான் அனுமதிக்கின்றது. அதேநேரம் உலகளாவில் குவிந்துவிட்ட நிதிமூலதனத்தைப் பெருக்க, "அபிவிருத்தி" அரசியலின் பெயரில் நிதிமூலதனத்தை வட்டிக்கு விடுகின்றது. இது தான் உலகளவிலான அரசுகளின் கொள்கையாக, இதுவே தேர்தல் கட்சிகளின் கொள்கையாக மாறி இருக்கின்றது. இதை முன்னெடுக்கின்ற வடிவத்தில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளும், வன்முறைகளும்… முகமாற்ற ஆட்சிகளை உருவாக்குகின்ற தேர்தல் ஜனநாயகமாக மாறி இருக்கின்றது.

கடந்த சில நாட்களாக காலி மாவட்டத்தில் கிங்தொட்டயை அண்டிய பகுதிகளில் நடந்திருக்கும் அமைதியின்மை மற்றும் இனவாத- மதவாத மோதல்கள் அதிகரித்துள்ளமை சம்பந்தமாக சம உரிமை இயக்கம் என்ற வகையில் நாம் சமூகம் விழிப்புடன் இருக்க வேண்டுமென எதிர்ப்பார்க்கின்றோம். கிடைக்கும் தகவல்களுக்கமைய சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் வீடுகளும் ஏனைய சொத்துக்களும் சேதமாக்கப்பட்டுள்தோடு, உயிரழப்பொன்றும் நடந்திருக்கின்றது. 

நவம்பர் 13ம்திகதி காலி மஹஹபுகல பகுதியில் நடந்த வாகன விபத்துதான்  இந்த பரிதாப நிலைக்கு முழுமுதற் காரணமாக இருந்தது. அந்த விபத்தில் சம்பந்தப்பட்ட ஒரு சாரார் சிங்களவர்களாக இருந்ததோடு மற்றவர்கள் முஸ்லிம்களாக இருந்தனனர். வாகன விபத்தினால் ஏற்பட்ட கருத்துவேறுபாடால் இரு சாராருக்கும் மத்தியல் மோதல் உருவாகியிருந்த நிலையில்தான் அது இனவாத மோதலாகப் பரவியது. தனிப்பட்ட பிரச்சினை காரணமாக ஏற்பட்ட மோதலை இனவாத மோதலாக பரவச் செய்வதற்கு பிரதேச அரசியல்வாதிகள் பாரதூரமான முறையில் தலையிட்டிருக்கின்றனர். அது எதிர்வரும் பிரதேச சபை தேர்தலில் அதிகாரப் போட்டி சம்பந்தப்பட்டதாகும். மோதலின்போது நேரடியாக தலையிட்டவர்களில் 1997ல் பொதுஜன ஐக்கிய முன்னணியின் சார்ப்பில் பிரதேச சபைக்கு போட்டியிட்ட மற்றும் எதிர்வரும் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையேற்கும் இலங்கை பொதுஜன முன்னணியின் சார்ப்பில் போட்டியிட எதிர்ப்பார்த்திருக்கும் ஒரு பௌத்த பிக்குவும், பிரதேச சபையில் தலைவராகும் கனவுடன் போராடிக் கொண்டிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிங்கள மற்றும் இரண்டு முஸ்லிம் அரசியல்வாதிகளும் இருப்பது இதற்கு சாட்சியாகும்.  கடந்த 16ம் திகதி இரவு நடந்த தீ வைப்பு சம்பவத்துடன் இந்த ஐதேக அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டிருப்பதோடு, 17ம் திகதி நடந்த வன்முறைகளோடு சம்பந்தப்பட்டவர்களை கோபமூட்டியிருப்பது இலங்கை பொதுஜன முன்னணியில் தேர்தல் வேட்பாளராக எதிர்ப்பார்த்திருக்கும் இருவராகும். எவ்வாறாயினும், இந்த வன்முறையை தூண்டியிருப்பது ஒரே ஊரில் வசிக்கும் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களல்ல, வெளியிடங்களிலிருந்து வந்த அரசியல் ஆதரவாளர்கள்தான் என்பதை பொலிஸாரும் ஏற்றுக் கொள்கின்றனர். இச்சம்பவத்தில் அரசாங்கம் மோதலை தவிர்க்கும் திசையில் அல்லாது அதனை தூண்டிவிடும் திசைக்கு திருப்பிவிடுவதற்காக குழப்பநிலை அதிகரித்திருந்த சந்தர்ப்பத்தில் பிரதேச பொலிஸை அகற்றிக் கொண்டது. நல்லிணக்கம் குறித்து அரசாங்கம் வாய்ச்சவாடல் விட்டாலும் பிணைமுறி மோசடி உட்பட தனது நெருக்கடியை மறைத்து சமூக கவனத்தை வேறு பக்கம் திருப்புவதற்காக எந்தவொரு நாசகார நடவடிக்கையையும் எடுக்க பின்வாங்காது என்பதை இச்சம்பவம் நிரூபித்துள்ளது.

இலங்கையின் தேசிய-இன-மத முரண்பாடுகளுக்கு தீர்வு காணுகின்றோம் என்ற பெயரில் முன்வைக்கப்பட்டிருக்கும் புதிய அரசியல் அமைப்புச் சட்டமூலங்கள், இன-மத அரச ஒடுக்குமுறைகளை சட்ட வடிவமாக்குகின்றது. அதேநேரம் இலங்கை மக்கள் சட்டரீதியாக  நாட்டின் மீது கொண்டிருந்த இறைமையை இல்லாதாக்கி, அதை மூலதனத்திற்கு தாரை வார்க்கின்றது. இதைத்தான் இந்தப் புதிய சட்ட மூலம் பொதுவாக கொண்டிருக்கின்றது. 

புதிய சட்ட மூலம் தொடர்பாக தமிழ் மொழி பேசும் தமிழ் - முஸ்லீம் தரப்புகள், தம்மின மக்களை அடக்கியொடுக்கும் தங்கள் அரசியல் அதிகாரம் என்ன என்ற குறுகிய அர்த்தத்தில், புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தை விவாதப் பொருளாக்குகின்றனர். அதேநேரம் சிங்கள தரப்புகள் தமிழ் மொழி பேசும் மக்களை அடக்கியொடுக்கும் உரிமை தங்களுடைய அதிகாரத்துக்கு உட்பட்டது என்ற அடிப்படையில், அரசியல் அமைப்புச் சட்டத்தை விவாதத்துக்குள்ளாக்குகின்றனர். இந்த இரு எல்லைக்குள் நின்று சட்ட மூலம் குறித்து நடக்கின்ற விவாதங்கள், தேர்தல் வருவதால் இனவாதமாக கூர்மையடைகின்றது. ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களை, பதிய சட்ட மூலத்தைக் கொண்டு ஒடுக்குவது எப்படி என்பதே இன்று அரசியலாகி வருகின்றது. இந்தப் பின்னணியில் இந்த அரசியல் அமைப்பு சட்ட மூலத்தை குறிப்பாகவும், சுருக்கமாகவும் பார்ப்போம்.

 

நாட்டின் மீதான மக்களின் இறைமையை மறுக்கும் புதிய சட்ட மூலம் 

இனப்பிரச்சனையைத் தீர்ப்பதாகக் கூறி, நாட்டின் மீதான மக்கள் இறைமையை மறுப்பது தான் இந்தச் சட்டமூலத்தின் நோக்கமும், உள்ளடக்கமுமாகும். புதிய அரசியல் அமைப்பு முன்மொழிந்துள்ள உறுப்புரிமை மூன்று, இலங்கையின் இறைமை குறித்துப் பேசுகின்றது. அது கூறுகின்றது "இலங்கையின் இறைமை மக்களுக்குரியதல்ல" என்கின்றது. அதாவது இலங்கையின் இறைமை இனி மக்களுக்குரியதல்ல என்கின்றது. அப்படியாயின் நாட்டின் இறைமை யாருக்கு உரியாது!?

மக்களின் இறைமையிலான "ஆட்சித் தத்துவங்களும், அடிப்படை உரிமைகளும், வாக்குரிமைகளும்;" இனி மக்களுக்குரியதல்ல என்கின்றது புதிய சட்ட மூலம். அதாவது இவை எதுவும் மக்களைச் சார்ந்து இருக்காது. மனிதனின் அடிப்படை உரிமைகள் முதல் வாக்கு மூலம் தெரிவும் ஆட்சிக் கோட்பாடுகளும் ஆட்சிமுறையும் மக்களைச் சார்ந்து இருக்காது. அப்படியானால் இது யாருக்;கானது!?

நாட்டின் மீதான இறைமை நவதாராளவாத முதலாளித்துவ நலன்களுக்கு உட்பட்டதாக இருக்குமென புதிய சட்டமூலம் தெளிவாக முன்வைக்கின்றது. மக்களின் இறைமையை மறுப்பதை  பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் - சிங்கள - முஸ்லீம் - மலையக  இனவாதிகள் முரண் இன்றி ஏற்கின்றனர். ஒட்டுமொத்த இலங்கை மக்களின் இறைமையை மறுத்து, ஆளும் வர்க்கத்தின் இறைமையாக்கும் புதிய சட்டமூலத்தை முன்னிறுத்தவே, இனவாதம் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதுதான் இந்த சட்டமூலத்தின் பின்னுள்ள சூக்குமம்.

நாட்டின் மீதான மக்களின் இறைமையை மறுக்கும் உறுப்புரிமை மூன்று, அது யாருக்கானது என்பதை உறுப்புரிமை நாலு மூலம் விளக்குகின்றது. அதாவது "சட்டமாக்கல், ஆட்சித்துறை, நீதி .." அனைத்தும், உறுப்புரிமை மூன்று குறிப்பிடும் அடிப்படையில் இறைமையற்ற மக்களுக்கானதல்ல என்கின்றது. உறுப்புரிமை ஐந்து நாட்டின் இறைமை என்பது "சர்வதேச சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டவாறு இருக்குமாறு" வரையறுக்கின்றது. இந்த வகையில் "மனித வளங்கள், புவியல் வளங்கள், பயன்பாடுகள்" அனைத்தும் சர்வதேச நவதாரளவாத இறைமைக்கு உட்பட்டதாக புதிய சட்ட மூரம் வரையறுக்கின்றது. இதை ஓட்டுமொத்த நாடும், மாகனசபையும் மீற முடியாது என்கிறது. இதையெல்லாம் மக்கள் கண்டு கொள்ளாது திசை திருப்பவே "பிரிவினைவாதம்" என்ற பூச்சாண்டியை இந்த சட்ட மூலம் முன்னிறுத்தி நவதாரளவாத சட்ட மூலத்தை  சட்டமாக்க முனைகின்றது.

சிறிலங்காவில் SAITM எனும் தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்தை மூடக் கோரி நடந்த போராட்டம் வெற்றி அடைந்துள்ளது. இலவசக் கல்வியையும்,இலவச சுகாதார சேவையை பாதுகாக்கும் போராட்டத்தின் ஒரு பகுதியாக இப்போராட்டம் நடைபெற்றது.

 

முன்னிலை சோசலிசக் கட்சியின் வழிகாட்டலில் "அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்" முன்னெடுத்த இப்போராட்டம் இலவசக் கல்வியைப் பாதுகாக்க உலகெங்கும் போராடும் மாணவர்களுக்கு ஒரு முன்மாதிரி ஆகும்.

 

சிறிலங்கா அரசாங்கத்தின் தொடர் அச்சுறுத்தல்,அடக்குமுறை,வெள்ளை வேன் கடத்தல் முயற்சிகள் என இப்போராட்டத்தை ஒடுக்க அரசு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தையும் மாணவர்கள் முறியடித்தனர்.

 

"சயிட்டத்திற்கு எதிரான மாணவர் மக்கள் இயக்கம்" எனும் வெகு மக்கள் அமைப்பின் தோற்றம் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியது. மாணவர்களுக்காக அவர்களின் பெற்றோரையும் போராட்டக்களத்திற்கு கொண்டு வந்தது.சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தில் பெற்றோர்கள் ஈடுபட்டதால் அரசுக்கு அழுத்தம் கூடுதலாகியது.

தற்போது அரசு சயிட்டம் திட்டத்தை கைவிடப்போவதாக அறிவித்துள்ளது.அரசு தனது வாக்குறுதியில் இருந்து தவறினால்,மீண்டும் போராட்டம் தொடங்கும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

முதலாளித்துவ - புதிய தாராளமயக் கொள்கையின் ஒரு பகுதியான இத்திட்டத்தை முறியடித்த மாணவர்களை வாழ்த்துவோம்.

 

மாணவர்களுக்கு அரசியல் வழிகாட்டல் வழங்கி அவர்களுக்கு அரணாக இருக்கும் முன்னிலை சோசலிசக் கட்சிக்கும் எமது வாழ்த்துக்கள்.

 

(மாணவர் இளைஞர் சமூக இயக்கம்)
-SYSM-Students Youth Social Movement

பல ஆண்டுகளாகப் போராடிய மாணவர்கள் இன்று தங்கள் கல்வி உரிமையினை வென்றெடுத்துள்ளார்கள். மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பொது மக்கள், இடதுசாரிய அமைப்புக்கள், முன்னிலை சோசலிசக் கட்சி துணை நின்றார்கள். அதிலும் சில மாணவர்கள் அடக்குமுறைவாதிகளால் ஆதாரம் அற்ற முறையில் கொலை செய்யப்பட்டார்கள். இவர்கள் மிக ஏழ்மைக் கோட்டில் வாழும் குடும்பத்தினை சேர்ந்தவர்கள். ஏழைகளின் உயிர்கள் மற்றும் பொது மக்களின் உயிர்கள், அரசியல்வாதிகளுக்கும், மக்களைச் சுரண்டி வயிறு வளர்க்கும் பண முதலைகளுக்கும் எதுவுமே இல்லாத ஒன்றாகிவிட்டது. மக்களுடைய  இழப்புக்களை, கஸ்ரங்களை, துயரங்களைப் பொருட்படுத்தாத அரசியல்வாதிகள் ஆட்சியில் இருந்து மக்களுக்கு என்ன பயன்? புதவியைப் பயன்படுத்தி மக்களின் உரிமைகளை இல்லாது ஆக்குவதும், முடிந்த வகையில் பொதுமக்கள் உழைப்பினை சுரண்டுவது, உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் மக்களை அடையாளம் இல்லாது ஆக்குவது, நாட்டினை முன்னேற்றுகிறோம் என்ற பெயரில் மக்களை பல வழிகளில் வருத்தி துன்புறுத்தி, கொள்ளை அடித்து உலக முதலாளிகளையும், உலக வங்கியையும் வாழ வைப்பதோடு தாங்களும் கொள்ளை அடிப்பதும் தான் இன்றைய அரசியல்வாதிகளும் அவர்களுடைய அரசியலும் ஆகும். 

எதிர்க்கட்சி என்று வந்த கூட்டமைப்பு தமிழ்ப் பகுதிகளில் ஒரு கிராமத்தினை கூட புனரமைத்தது கிடையாது. இன்று மழையினால் எத்தனை கிராமத்து மக்கள் சேறும் சகதியுமாய் போக்குவரத்து சிரமத்தால் அவதிப்படுகின்றார்கள். இது சம்பந்தன் ஐயாவின் கிழட்டுக் கண்ணுக்கு தெரிவதில்லை. ஆனால் பதவி எதிhக்;கட்சித் தலைவர். ஒரு கிராமத்து மக்களை வாழவைக்க முடியாத தலைவர் தமிழ் மக்களின் உரிமையினை பெற்றுத் தருவாராம்.., தமிழ் மக்களை அமைதியாக வாழ வைப்பாராம். சூடு சுரணை இல்லாத வெட்கம் கெட்ட கேவலமான மனிதர்கள். பார்த்தால் வெள்ளை வேட்டியும் சேட்டும்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE