Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

பணம் - பதவி - அதிகாரத்தையே தங்கள் கட்சிக் கொள்கையாகவும், அதையே குறிக்கோளாகவும் கொண்ட தனிநபர்களை அடிப்படையாகக் கொண்டதே, இன்றைய தேர்தல் கட்சிகள். நவதாராளவாதத்தை ஏற்றுக்கொள்ளக் கூடிய கட்சிகள், தனிநபர்களுக்கு இது விதிவிலக்கல்ல. தேர்தல் ஜனநாயகத்தின் உள்ளடக்கமானது, பணம் - பதவி - அதிகாரமாக  சீரழிந்து விட்டது. எந்தப் புதிய கட்சியும், புதிய முகமும், அது பெண்ணாக இருந்தாலும் மக்களை ஏமாற்றும் முகமாற்றத்தை மட்டுமே தர முடியும்.

அரசியல் மாற்றத்தையோ, ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் விடுதலையை முன்னெடுக்கும் மக்கள் திரள் பாதையையோ தரப் போவதில்லை. மக்களை ஏமாற்றும் - ஒடுக்கும் நபர்களை மாற்றுவதன் மூலம், அடுத்த தேர்தல் வரை மக்களைத் தொடர்ந்து ஏமாற்றுவதும், இலங்கையில் முதல் பெண் தலைமைத்துவக் கட்சி என்றும், இந்து சந்நியாசி வேடம் போட்ட வெள்ளாளிய சாமியாரின் தலைமையில் மீண்டும் தமிழ் மக்கள் கூட்டணி என்று எந்த வேசம் போட்டாலும், இவை அனைத்தும் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற -  ஒடுக்குமுறையாளர்களின் தலைமைகள் தான்.

ஆட்சியின் கடைசி நாள் வரை பழைய கட்சியில் இருந்தவர்கள், ஆட்சிக்கு அடுத்த நாள் புதிய கட்சி. எப்படிப்பட்ட ஏமாற்றுப் பேர்வழிகள். மக்களை மொட்டை அடிக்க புதிய வேசங்கள். இப்படி திடீர் திடீரென அரசியலுக்கு கொண்டு வரப்படுவதும், திடீர் திடீரென புதிய கட்சிகள் தோற்றுவிக்கும் பின்னணியில், அந்நிய சக்திகள் இருக்கின்றனர் என்பதே உண்மை. கடந்தகாலம் முழுக்க அந்நிய சக்திகளின் காலில் வீழ்;ந்து கிடந்தார்களே ஒழிய, மக்களைக் கடுகளவு கூட கண்டு கொண்டது கிடையாது. தங்கள் அதிகாரத்தில் செய்யக்கூடிய கடமைகளைக் கூட செய்யாதவர்கள்.

நல்ல நாள் பார்த்து, சுப முகூர்த்தத்தில், முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் புதிய கட்சியை ஆரம்பித்துள்ளார். இக்கட்சியின் ஆரம்ப விழா யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. விக்னேஸ்வரன் அவர்கள் வடமாகாண முதலமைச்சராக பதவியேற்ற போது அவர் ஒரு பொதுவான - ஒரு தமிழ் மக்கள் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துபவராக பிரச்சாரப்படுத்தப்பட்டார். அரசியல் பின்னணி எதுவுமற்ற- அதேவேளை வலதுசாரிய யாழ். சைவ வேளாள சிந்தனையை பின்பற்றுபவராகவும்,   தானுண்டு - தன் குடும்பமுண்டு என சுயநலமாக இருந்தவரை, கூட்டமைப்பு அரசியலுக்கு கொண்டு வந்தது. ஐந்து ஆண்டுகால பதவியின் அதிகாரம் முடிவதற்கு 12 மணிதியாலங்களுக்கு முன்னரே விக்கினேஸ்வரன் ஒரு கட்சியை ஆரம்பித்துள்ளார். அதற்குப் பெயர் தமிழ் மக்கள் கூட்டணி.

தமிழ் மக்கள் கூட்டணியை ஆரம்பிப்பதற்கு அவருக்கு ஏற்பாடு செய்து கொடுத்தது- ஆதரவாக இருப்பது தமிழ் மக்கள் பேரவை என்று கூறப்படும் அமைப்பாகும். இந்த அமைப்பானது, சில வருடங்களுக்கு முன்பு தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக செயற்பட்டு, தமிழ் மக்களின் தேசிய விடுதலையை பெற்றுக் கொள்வதற்கான ஒரு அழுத்தம் கொடுக்கும் முன்னணியாக ஆரம்பிக்கப்பட்டது. இவ் அமைப்பில் இணைந்து கொள்ள நான் அன்று அங்கம் வகித்த இடதுசாரிக் கட்சிகள், மார்க்சிச அடிப்படையிலான முன்னணி அமைப்புகள் கூட சேர்ந்து செயற்பட அழைக்கப்பட்டன. (கோட்பாடுகள், மற்றும் சில கருத்து வித்தியாசங்களால் இடதுசாரிகள் இணையவில்லை)

இதன் பின்னணியில் இலங்கை தமிழ் காங்கிரஸ் - பொன்னம்பலம், குதிரை கஜேந்திரன் போன்றவர்கள்  உழைத்தார்கள். அவர்களுடன் சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்றவர்களும் அவசர அவசரமாக ஓடிப் போய் சேர்ந்தார்கள். புளொட் சித்தார்த்தன் பேரவையில் இணையா விட்டாலும், தானும் அதில் அங்கம் வகிப்பது போல காட்டிக் கொண்டார். ஏன், ஈபிடிபி கூட இணைய முயற்சித்ததாக கதைகள் உண்டு.

ஒரு பெண் மீ.ரூ மூலம் தனக்கு எதிரான பாலியல் வன்முறையை குற்றச்சாட்டாக முன்வைக்கும் போது, அதை எந்த நிபந்தனையின்றியும் ஆதரிக்க வேண்டும். அதற்காக நிபந்தனையின்றி குரல் கொடுக்கவும் வேண்டும். அவளின் பிற கருத்துக்களுக்காக – செயற்பாட்டுக்காக மறுப்பதும், குறித்த பெண்ணின் வர்க்கம், சாதி, நிறம், இனம், மதம் .. போன்ற எந்த குறுகிய அடையாளங்களைக் கொண்டு, ஒடுக்கப்பட்ட பெண்ணுக்கு குரல் கொடுக்க மறுப்பது, ஓடுக்கும் ஆணாதிக்க அதிகாரத்துக்கான குரல்களாகவே இருக்க முடியும். இதன் மூலம் பெண்ணைத் தொடர்ந்து தங்கள் பாலியல் அடிமையாக வைத்திருக்க விரும்பும், தனிப்பட்ட ஆண்களின் வெளிப்படையான பொது ஆணாதிக்க மனப்பாங்காக மட்டுமே இருக்க முடியும்.

குறிப்பாக ஆண்கள் பெண்ணுக்காக குரல் கொடுக்க மறுத்து, பெண்ணை கேள்விக்குள்ளாக்குவதே, காலாகாலமாக இந்திய சமூக அமைப்பில் நடந்து வருகின்றது. பெண் மீதான ஆணின் பாலியல் குற்றங்களுக்கு, குறித்த பெண்ணையும்  - அவளின் "நடத்தையையும்" காரணமாக கற்பிற்கின்ற கருத்தியல் வாதங்கள் தொடக்கம் நீதிமன்றங்கள் வரை, பெண்ணை குற்றவாளியாகக் காட்டுவதையே தொடர்ந்து செய்து வருகின்றன.

பாதிக்கப்பட்ட பெண்கள் மீ.ரூ மூலம் தனக்கு நடந்த பாலியல் கொடுமையை வெளிப்படையாகக் கூறுவதை பொய் என்று நிறுவமுனைவது - குறித்த பெண்ணை குற்றவாளியாக்குவதும் – அவளின் இழி "நடத்தையாக்கி" அதற்கு பட்டத்தை கொடுக்க முனைகின்ற பொதுப் பின்னணிக்கு, ஆணாதிக்க ஊடகங்கள் தலைமை தாங்குவதுடன் - அவள் பற்றி பொது அவதூறுகளைப் பரப்புகின்றன.

பெரியாரின் பெயரில் ஆணாதிக்கம். பெரியார் பெண்ணை சுய உணர்வுள்ள மனிதனாக முன்னிறுத்தியவர். பெண் ஆணின் அடிமையுமல்ல, ஆணின் காமப் பொருளுமல்ல என்றவர் பெரியார். சுயமரியாதையுள்ள, பகுத்தறிவுள்ள பெண்ணாக (மனிதனாக), தமிழகத்துக்கு அறிமுகம் செய்தவர் பெரியார். இதனால் தான் தமிழகம் பெரியாரின் மண்.

இப்படி அறிமுகம் செய்த பெண்ணை உடலாக, பாலியல் பண்டமாக, ஆபாசப் பொருளாக, ஆணிண் பாலியல் தேவைக்கு ஏற்ற சரக்காக முன்னிறுத்திய ஒரு பொறுக்கி தான் வைரமுத்து. தமிழைக் கொண்டு பெண் குறித்த பெரியாரின் கருத்தை தமிழகமெங்கும் குழிதோண்டி புதைத்ததுடன், பெண்களை இழிவுபடுத்தியவன். பார்ப்பனிய சிந்தனையானது ஒரு பெண்ணை எப்படி பார்க்கின்றதோ, அதை தமிழ் மொழியைக் கொண்டு முன்னிறுத்தியவன் வைரமுத்து.

பெரியாரிஸ்ட்டுக்கள் என்று கூறிக் கொள்ளும் பலரும், தமிழை முன்னிறுத்தி பெரியாரை தோற்கடித்த அந்தப் பார்ப்பனிய ஆணாதிக்கத் தமிழை, "தமிழுக்கு செய்த" தொண்டு என்று  போற்றுகின்றனர். தமிழனாக முன்னிறுத்தும் பெரியாரிஸ்டுகளும், இனவெறி பிடித்த தமிழ் பாசிட்டுகளும் கூடி, பெரியாரை அவர் போராடிய மண்ணில் தூக்கி எறிவது நடந்தேறுகின்றது.

எந்தப் பெரியாரை தமிழகத்தில் தோற்கடிக்க பார்ப்பனியம் போராடுகின்றதோ – அதை பெரியாரிஸ்ட்டுகள் என்று கூறிக்கொள்வோர் மூலம் செய்திருக்கின்றது. அதை தமிழ் என்று முழங்கும், இனவெறியர்கள் மூலம் செய்திருக்கின்றது. சின்மயி பெரியார் முன்வைத்த பெண்ணாக மாறி, தமிழகத்தின் போலி ஆணாதிக்க முகத்தை கிழித்தெறியும் பெரியாரியப் பெண்ணாக காட்சியளிக்கின்றார்.

சின்மயியின் தன் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான குரல், போலி பெரியாரிஸ்ட்டுகளுக்கும், தமிழ் இனவாதிகளுக்கும், ஆணாதிக்கவாதிகளும் எதிரானதாக பரிணாமடைந்திருக்கின்றது.

வடக்கில் புரையோடி வரும் இலஞ்சத்தில் பாலியலும் அடங்கும். அதிகாரத்தின் அடையாளமாக பாலியல் மாறி இருக்கின்றது. பெண்கள் கல்வியில் வெற்றி பெற, பாலியலை அனுசரிக்கக் கோருகின்றனர். பெண்ணின் முன்னேற்றம் என்பது ஆணை அனுசரிக்கக் கோருகின்றது. வீட்டுக்கு வெளியில் பெண் வளர்ச்சி என்பது, ஆணின் பாலியல் தேவையை பூர்த்தி செய்தால் சாத்தியம் என்பது அதிகாரத்தின் குரலாக இருக்கின்றது. இதுதான் இன்றைய யாழ்ப்பாணிய ஆணாதிக்க சமூகத்தின் பொது வெட்டு முகம். 

யாழ் மையவாத சமூகத்தை சுற்றி நடக்கும் மீ.ரூக்களை பேசியாக வேண்டும்;. இன்று பேசத் தவறினால், என்றுமே பேச முடியாது. யாழ் மீ.ரூக்கு பின்னணியில் உள்ள ஆணாதிக்கக் போக்கிலிகளைப் பாதுகாக்கவே, பொதுவான கள்ள மௌனம் அரங்கேறுகின்றது. இந்த பின்னணியில், இலக்கியம், ஊடகவியல், அரசியல் .. என்று, அனைத்துத் துறையிலும், மீ.ரூ வுக்கு பஞ்சமில்லை.

இன்று தேசியம், ஊடகவியல், இலக்கியம், அரசியல் .. எங்கும் ஆணாதிக்கமே கொலுவேற்று இருக்கின்றது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு குரல் கொடுக்க, ஆண்கள் சமூகம் மறுக்கின்றது. கலை இலக்கிய எழுத்து உலகில், ஆணாதிக்க அதிகாரமும் - ஆணின் பாலியலுக்கு ஏற்ப பெண்ணை அணுகுவதுமே, கோலோச்சிக் கிடக்கின்றது. பெண்ணியம் பேசும் பெண்கள் இதற்கு அடங்கிக் கிடப்பதைத் தாண்டி, இதை விளங்கிக் கொள்ள முடியாது.

இனவாதத்தை முன்னிறுத்தும் தமிழ் தேசியம் முதல் போலிப் பெரியாரிஸ்ட்டுகள் வரை, சின்மயி, வைரமுத்துவின் சாதி என்ன என்ற அளவுகோலில் இருந்து,  சின்மயி மீ ரூவானது தமிழனுக்கு எதிரான "பார்ப்பனச்" சதி என்று கூறி, "சூத்திரனின்" ஆணாதிக்கத்துக்கு வக்காலத்து வாங்குகின்றனர். மற்றொரு தரப்பு 14 வருடத்துக்கு முந்தையது, இன்று இது எப்படி சாத்தியம் என்று கேட்டு, ஆணாதிக்க வக்கிரங்களுக்கு வாலாட்டுகின்றனர். இன்னொரு தரப்பு மீ ரூவை சொல்லக் கூடிய பெண், சம்பவத்தின் பின்னான காலத்தில் குறித்த நபருடன் கொண்டு இருந்த உறவைக் காட்டி, பெண்ணின் நடத்தையை கேள்விக்குள்ளாக்கிவிட முனைகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் தனிப்பட்ட விடையங்களைக் கொண்டு, "நடத்தை" குறித்த ஆணாதிக்க வக்கிரங்களைக் கொண்டு அளவெடுக்க முனைகின்றனர். தமிழை இழுக்குப்படுத்த "பார்ப்பனச்" சதி என்று கூறி, வைரமுத்துவின் ஆணாதிக்கத் தமிழையே தமிழனின் தமிழாக, ஓட்டுமொத்த பெண்களுக்கு எதிராக நிலைநிறுத்த முனைகின்றனர். கவிஞர்கள் என்று கூறிக்கொள்வோர் – தங்கள் சோரத்தை மூடிமறைக்க வைரமுத்துவுக்கு கவசமிடுகின்றனர்.

இப்படி சமூக  வலைத்தளங்களில் ஆணாதிக்கத்தை முன்வைக்கும் தமிழ் இனவாதிகள், போலிப் பெரியாரிஸ்;ட்டுகள், போலித் தலித்திய வாதிகள், போலிப் பெண்ணியவாதிகள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான கவிஞர்கள் …. ஆணாதிக்கத்துக்கு கும்மி அடிக்க, வைரமுத்து தனது வர்க்க – ஆணாதிக்க நிலையில் இருந்து தன்நிலை விளக்கம் கொடுக்கின்றார்.

"அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று" இப்படி தன்னையும், தன்னைப் போன்ற பாலியல் நடத்தை கொண்ட பலரையும் சேர்த்து காப்பாற்றி விட முனைகின்றார்.

சில வருடங்களுக்கு முன் பிரான்ஸ் நாட்டில் இலங்கை-இந்திய "இலக்கிய -அரசியல்" வெளியில் இரு  மீ ரூ - பிரச்சனைகள் கிளப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரில் ஒருவர் இலங்கையை சேர்ந்தவர் மற்றவர் இந்தியாவை சேர்ந்தவர். பாதிப்பை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட   ஆண்களும் முறையே ஒருவர் இந்தியர் மற்றவர் இலங்கைத் தமிழன். 

இந்த பிரான்ஸ் மீ ரூ-க்கள் சந்திக்கு வந்த வேளையில், இலங்கை-இந்திய "இலக்கிய -அரசியல்" மாற்று சக்திகள் தாங்கள் தான் என மார்தட்டிக் கொண்ட பாரிய குழுவொன்று அந்த இரு ஆண்களுக்காகவும் குரல் கொடுத்தது.

அண்ணாக்களைக் காப்பாற்ற, பெண்கள் இருவர் மீதும் அவதூறுகள் இவர்களால் பரப்பப்பட்டது. குறிப்பாக, இந்தியாவை சேர்ந்த பெரியாரிசம் கதைக்கும் பெண் மீது படுகேவலமாக பாலியல் அவதூறுகள் கொட்டப்பட்டது. அவதூறுகளை, அப் பெண்ணை பாலியல்ரீதியில் சுரண்ட முற்பட்ட ஆண் எழுத்தாளரே, "soft porn" அல்லது ஆபாசக் கதை வகை எழுத்தாக எழுதி வெளியிட்டார். அவர் எழுதியதை "அவர் பக்க கருத்து" எனும் போர்வையில் அவரின் தொண்டரடிப்பொடிகள் பரப்பினார்கள். அக்காலத்தில், புலிகளுக்கு அடுத்ததாக இந்த எழுத்தாளர் சார்ந்த குழுவிடமே இணையங்கள் பல இருந்தன. Facebook அப்போது தான் அறிமுகமான காலம் என நினைக்கிறன். .......

மேற்படி இரு மீ ரூ-க்கள் சார்ந்து பெண்களுக்காக வெகு சிலரே குரல் கொடுத்தார்கள். இந்தியரால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக, அந்தக் காலத்தில் மிகவும் எழுச்சியுடன் இருந்த பெண்கள் சந்திப்பு சார்ந்த பெண்கள், சக்தி சஞ்சிகை, ஊடறு, பெண்கள் சந்திப்பு மலர் வெளியீட்டுக் குழு போன்றவர்கள் குரல்கொடுத்தார்கள். பகிரங்க நோட்டீஸ் இவர்களால் வெளியிடப்பட்டது. இந்தியாவை சேர்ந்த பெரியாரிஸம் கதைக்கும் பெண்மீது நடத்தப்பட்ட வன்முறைக்கு எதிராக தனிநபர்கள் பலர் குரல் கொடுத்தார்கள். பெண்ணியம் பேசும் பெண்கள் குழுக்கள் குரல் கொடுத்ததாக எனக்கு நினைவில் இல்லை.

1980 களில் வெளியான புதுசு சஞ்சிகை - பாரிசில் மகாஜன பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையுடன் வெளியிடப்பட்டது. புதுசு சஞ்சிகை வெளியிட்ட நால்வரில் மூவர் – இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

1980 இல் சமூகத்தின் பொது நோக்கில் ஒன்றுபட்டு பயணித்தவர்கள் - இன்று எதிரெதிர் அரசியல் முனைகளில் பயணிக்கின்ற இன்றைய பொதுப் பின்னணியில் - அன்றைய பொது சமூக அக்கறையில் இருந்து விலகி நின்றபடி - மறு வெளியீட்டில் ஒன்றுபட்டு நிற்பது ஏன் என்ற கேள்வி எழுவது இயல்பாகின்றது.

இந்த அடிப்படைக் கேள்விகளுடனேயே - அதற்கான பதில்களையும் எதிர்பார்த்தபடி, வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டிருந்தேன். 1980 களில் பொது சமூக நோக்குடன் வெளிவந்த புதுசு சஞ்சிகையுடன் எனக்கு இருந்த நெருங்கிய தொடர்பின் அடிப்படையில் - இந்தக் கூட்டம் அதற்கான பதிலை தரவில்லை என்பதே உண்மை.

அதேநேரம் இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள்,  இந்தச் சஞ்சிகை கொண்டிருந்த வீச்சு - அது கொண்டு இருந்த உள்ளடக்கம் - அது வெளிப்படுத்திய சமூகப் பார்வை எப்படி அந்தக் காலத்தில் சாத்தியமானது என்ற கேள்வியை பொதுவில் எழுப்பியும் இருந்தனர். அதற்கு பாடசாலை என்ற குறுகிய வட்டத்தைத் தாண்டி, பொது உலக நோக்கில் அதை முன்வைக்க முடியவில்லை.

பாடசாலையில் இதற்கான பொதுச்சூழல் இருந்தது குறித்து கூற முடிந்த அதேநேரம், பாடசாலையில் இதை ஊக்குவித்தவர்களின் உலகப் பார்வை குறித்து எதையும் கூற முடியவில்லை. சமூகம் குறித்த பொதுப் பார்வை இன்றி, பாடசாலை சூழல் தானாக கனிவதில்லை. ஆதைச் சொல்வது, இன்றைய மாற்றத்துக்கு அவசியமானது.

"சொர்க்கத்தில் பிசாசு" படம் காட்சிப்படுத்தப்படுவது நிறுத்தப்பட்டதற்குப் பின்னால் மக்கள் விரோதமான அதிகாரமானது - ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிரானதே. அதே போன்றதே ஒடுக்கப்பட்ட மக்களைச் சாராது முன்னிறுத்துகின்ற ஜனநாயகத்தின் குரலும். அதிகாரத்தின் குரல் போன்று, ஜனநாயகத்தின் குரலும் ஒடுக்கும் தரப்பு சார்பில் இருந்து எழுகின்றது.

இந்த வகையான ஜனநாயகமானது உலகை ஆக்கிரமிக்க அமெரிக்கா முன்வைக்கும் ஜனநாயகத்திற்கு நிகரானது. இந்திய பாசிச பார்ப்பனியத்தின் ஜனநாயகத்துக்கு ஒத்தது. இதை நாம் புரியும் வகையில் கூறினால் யாழ் வெள்ளாளிய சிந்தனையிலான ஜனநாயகம். அதாவது ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களைச் சாராதா ஜனநாயகம் என்பது, இயல்பில் வெள்ளாளியச் சிந்தனையிலானது.

இது சாராம்சத்தில் புலிகளின் ஜனநாயகத்துக்கு நிகரானது. புலிகள் தங்களுக்கும் - தங்கள் போராட்ட வழிமுறைக்குமான குறுகிய ஜனநாயகத்தை முன்னிறுத்தி – ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயகத்தை மறுத்ததிற்கு எந்தவிதத்திலும் குறைந்ததல்ல. ஒரு ஒடுக்குமுறையைக் காட்டி பிற ஓடுக்குமுறைகளால் ஒடுக்கியது போன்று, இங்கு ஜனநாயகம் குறுக்கப்படுகின்றது.

இன்று ஜனநாயகம் பேசுகின்றவர்களில் பெரும்பான்மையானவர்கள்  - புலிகள் உள்ளிட்ட தமிழ் தேசிய விடுதலை இயக்கங்கள் ஜனநாயகத்தை மறுத்தபோது, மக்களுக்காக போராடுவதற்காக என்று கூறி ஜனநாயகத்தைக் கோரியவர்கள் தான். ஆனால் புலிக்கு பின் தொடர்ந்து இனரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் சார்பாக - அரசு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கும் ஜனநாயகத்தை கோரி செயற்படவில்லை. மாறாக புலிகளையும் - மக்களையும் ஒடுக்கிய, ஒடுக்குகின்ற அரசுக்கு சார்பாக ஜனநாயகத்தைப் பேசுகின்றவர்களாகவே இன்று இருக்கின்றனர்.

"சொர்க்கத்தில் பிசாசு" படம் காட்சிப்படுத்தப்படுவது நிறுத்தப்பட்டதற்குப் பின்னால் மக்கள் விரோதமான அதிகாரமானது - ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிரானதே. அதே போன்றதே ஒடுக்கப்பட்ட மக்களைச் சாராது முன்னிறுத்துகின்ற ஜனநாயகத்தின் குரலும். அதிகாரத்தின் குரல் போன்று, ஜனநாயகத்தின் குரலும் ஓடுக்கும் தரப்புக்கு சார்பில் இருந்து எழுகின்றது.

இந்த வகையான ஜனநாயகமானது உலகை ஆக்கிரமிக்க அமெரிக்கா முன்வைக்கும் ஜனநாயகத்திற்கு நிகரானது. இந்திய பாசிச பார்ப்பனியத்தின் ஜனநாயகத்துக்கு ஒத்தது. இதை நாம் புரியும் வகையில் கூறினால் யாழ் வெள்ளாளிய சிந்தனையிலான ஜனநாயகம். அதாவது ஓடுக்கப்பட்ட தமிழ் மக்களைச் சாராதா ஜனநாயகம் என்பது, இயல்பில் வெள்ளாளியச் சிந்தனையிலானது.

இது சாராம்சத்தில் புலிகளின் ஜனநாயகத்துக்கு நிகரானது. புலிகள் தங்களுக்கும் - தங்கள் போராட்ட வழிமுறைக்குமான குறுகிய ஜனநாயகத்தை முன்னிறுத்தி – ஓடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயகத்தை மறுத்ததிற்கு எந்தவிதத்திலும் குறைந்ததல்ல. ஒரு ஓடுக்குமுறையைக் காட்டி பிற ஓடுக்குமுறைகளால் ஓடுக்கியது போன்று, இங்கு ஜனநாயகம் குறுக்கப்படுகின்றது.

இங்கு யாழ்ப்பாணத்தில, சில வருடங்களாக யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. சில சிங்கள NGO - முதலாளிகள் மேற்குநாடுகளின் நிதியில் இதை நடத்துகிறார்கள். கடந்தவருடம் கூட இதை பற்றி விரிவாக எழுதியிருந்தேன். இப்போ, நான் இங்கு பதியப்போவது இந்த பட விழாவில் திரையிட மறுக்கப்பட்டதாக கூறப்படும் ஒரு படத்தைப்பற்றி. புலம்பெயர் நாடுகள் உட்பட இலங்கையில் தம்மை அதிதீவிர ஜனநாயகவாதிகள், எழுத்தாளர்கள், சமுகப் போராளிகள், மார்க்சிசவாதிகள், இடதுசாரிகள் என கூறிக்கொள்வோர் சிலர் DEMONS IN  PARADISE  என்ற படம், மேற்படி படவிழாவில் திரையிட தடை செய்யப்பட்டுள்ளதாகக்  கூறி - அதற்கு எதிராக குரல்கொடுக்கின்றனர். ஆத்திரப்படுகின்றனர். போராட்டத்துக்கு அறிவித்தல் விடுகின்றனர். டெமோன் இன் பரடைஸ் என்ற படத்தின் இயக்குனர் ஜூட் ரத்தினத்தின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டுள்ளதாக ஆக்ரோஷத்துடன் கூக்குரலிடுகின்றனர்.

ஆனால், இதே நபர்கள் ஆண்டாண்டு காலமாக புலியெதிர்ப்பை முன்னிறுத்தி ஒடுக்கப்பட்ட தமிழ் தேசிய இன மக்களின் ஜனநாயக உரிமைக்கு எதிராகவே செயற்படுபவர்கள். இன்று மேற்படி படத்தை திரையிட வேண்டுமென இவர்கள் கூப்பாடுபோடுவதன் காரணமே, அந்தப் படத்தின் அடித்தளம் - பிரச்சார வீச்சு எல்லாம் தமிழ் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்துக்கான மறுமுனைவுக்கு எதிராக இருப்பதுதான் என்பது எனது கருத்து !

ஆணாதிக்க சமூகமும் - வக்கிரம் பிடித்த ஆணாதிக்கவாதியும் செய்த கொலையை மூடிமறைக்க – "தேசியத்தின்" கொலையாக திரித்துக் காட்டுவது நடக்கின்றது. ஓடுக்கப்பட்ட மக்களை ஒடுக்கிய புலித் தேசியத்தினதும்;, புலிக்குப் பிந்தைய போலித் தேசியத்தினதும் ஒரு பிரதிநிதியாக இருந்த செந்தூரனின் நடத்தையை முன்னிறுத்தி, "தேசியமே" இந்த தற்கொலைக்கு காரணமாகக் காட்டிவிட முனைகின்றனர். இதன் மூலம் இனரீதியாக ஒடுக்கப்படும் மக்களின் போராட்டத்தை மறுப்பதற்கு, போதநாயகியை மறுபடியும் கொன்று விடுகின்றனர். இதன் மூலம் ஆணாதிக்கத்தையும் - இனவொடுக்குமுறையையும் பாதுகாக்க முனைகின்றனர். இதற்கு மாறானதே உண்மை.

ஆணாதிக்க வன்முறையானது போதநாயகியை தற்கொலைக்குத் தூண்டி - கொலை செய்திருக்கின்றது. போராடி வாழ வேண்டிய பெண்ணின் துயரமான வாழ்வுக்கு, ஆணாதிக்க சமூகமே பொறுப்பேற்க வேண்டும்;. சமூகத்தில் உள்ள பிற்போக்கான சமூகக் கூறுகளின் துணையுடன் - குரூரமான ஆணாதிக்க நடத்தைகளைக் கொண்டு பெண்ணை ஒடுக்கும் போது - தனிமைப்படுத்தப்படுகின்ற ஒரு பெண்; தற்கொலையை தேர்ந்தெடுக்கின்ற அளவுக்கு, சமூகம் பொறுப்பற்றதாகி இருக்கின்றது.

இது போன்று இன்னொரு பெண்ணுக்கு நடக்கக் கூடாது என்ற உணர்வுடன் - ஆணாதிக்கத்துக்கு  எதிராக நாம் போராட வேண்டும். இதுதான் போதநாயகிக்கு கொடுக்கும் கவுரவமாகும். இதற்கு மாறாக இதை "தேசியத்தின்" வக்கிரமாக திரித்துக்காட்டி, ஆணாதிக்கத்தை கண்டுகொள்ளாத சமூகமும், மனித அவலத்தை கொசிப்பாக்கி செய்தியாக்கும் வக்கிரங்களே அரங்கேறுகின்றது.

ஆணாதிக்க வக்கிரத்தையும் - வன்முறையையுமே போதநாயகி எதிர்கொண்டாளே ஓழிய அவன் முன்வைத்த "தேசியம்" சார்ந்த ஒடுக்குமுறையையல்ல. இப்படி இருக்க "தேசியமே" காரணம் என்று, போலி இடதுசாரியமும் - போலிப் பெண்ணியமும் ஓப்பாரி வைப்பது நடக்கின்றது. எதிர் எதிரான போலி "தேசியவாதங்கள்" தங்கள் சொந்த ஆணாதிக்கத்தை மூடிமறைக்க, விதவிதமாக கதைகள் மூலம் வக்கிரமடைய வைக்கின்றனர்.

குறிவைத்து புலம்பெயர்ந்த பழைய மாணவர்களிடம் பணம் வாங்குவது பாடசாலைகளின் குறுகிய நோக்கமாகிவிட்டது. பணத்தை திரட்டித்தரவே பழைய மாணவ சங்கங்கள் என்றளவுக்கு, சங்கங்கள் தரம் தாழ்ந்து வருகின்றது.

பணத்தைக் கொணடு எதையும் வாங்கலாம், கல்வியை ஊட்டலாம் என்ற அபத்தமே, கல்வியைச் சுற்றி அரங்கேறுகின்றது. பணம் கொடுத்து கல்வி பெறலாம் என்ற தனியார் கல்வியை முறைக்கு ஏற்ப, பணம் சார்ந்த செயற்பாடுகள் அரங்கேறுகின்றது. இந்த பின்னணியில் பணமே, கல்வி நடவடிக்கையாகி வருகின்றது. பணத்தை கேள்விகளின்றி தரவேண்டும் - அதைக் கொடுக்க வேண்டும் என்பதே, சமூக நடத்தையாக குறுக்கப்பட்டு வருகின்றது.

இப்படி பெறப்படும் - கொடுக்கப்படும் பணத்துக்கு வெளிப்படையான கணக்கு கிடையாது. கணக்கு வெள்ளை அறிக்கை கோருவது – கல்விக்கு எதிரானது என்ற கூறுமளவுக்கு, பணம் அனைத்துமாகி, பாடசாலையை சுற்றி எடுபிடிகள் உருவாகி வருகின்றனர்.

யார் யார் எவ்வளவு  பணம் தந்தார்கள், அது எதற்கு - எப்படி செலவு செய்யப்பட்டது என்று ஒவ்வொரு சதத்துக்கும் வெளிப்படையான கணக்கு கிடையாது. கணக்கை வெளிப்படையாக பொது வெளியில் முன்வைக்க மறுக்கின்றார்கள் என்பதே உண்மை.

இதைவிட பண அறவீடுகள் கல்வி கற்கும் மாணவர்களிடமும் நடக்கின்றது. புதிதாக பாடசாலையில் சேரும் மாணவர்களிடம் பெரிய தொகையாக பணம் கறக்கப்படுகின்றது.

ஆக இப்படி கல்விக்கூடங்கள் பணத்தை கையாளும் ஊழல் நிறுவனங்களாகவும் – மோசடிகள் நிறைந்ததாகவும் மாறி வருகின்றது.

இன்று பாடசாலைகளைப் பொறுத்த வரை, வருடாந்தம் ஒரு சில லட்சங்கள் தொடங்கி கோடிகள் வரை திரட்டப்படுகின்றது.

"அறமும் போராட்டமும்" என்ற நூல், போராட்டம் என்றால் வன்முறையானது என்கின்றது. இதன் பொருள் போராடுவதற்கான ஜனநாயகத்தை வன்முறையாகக் காட்டி மறுப்பதுதான். மக்களின் ஜனநாயகம் வன்முறையானது என்று கூறி, அதை மறைமுகமாக மறுக்கவும் - ஓடுக்கவும் முனைகின்றது.  

இன்றைய நவதாராளவாதப் பொருளாதாரக் கட்டமைப்புக்கு முதலாளித்துவ ஜனநாயகமே முரணாகி வருவதால், ஜனநாயகத்தை ஒடுக்குவது அவசியமாகிவிட்டது. இதனால் நவதாராளவாத மூலதனமானது ஜனநாயகத்தை வன்முறையாகக் காட்டவும் - நிறுவவும் முனைகின்றது. ஜனநாயகத்தை முன்னிறுத்தி போராடுவதை வன்முறையாகத் திரித்து ஓடுக்கமுனையும் இன்றைய நவதாராளவாத கோட்பாட்டைத் தான், கவுரிகாந்தனின் "அறமும் போராட்டமும்" என்ற நூல், இடதுசாரியத்தின் பெயரில் முன்வைக்கின்றது.

இன்னுமொரு பக்கத்தில் தமிழ் இனவாத போலி இடதுசாரியமானது - இனவாத வலதுசாரியத்தை "இடதுசாரியமாக" காட்டவும் - நிறுவவும் இதன் மூலம் முனைகின்றது. அதாவது ஆயுதப் போராட்டமல்லாத எதுவும் போராட்டமல்ல என்று கூறுகின்ற தமிழ் இனவாதச் சிந்தனை முறையை மூடிமறைத்துச் சொல்லவும், வன்முறை இல்லாதவை போராட்டமல்ல அல்லது போராட்டம் என்பதே வன்முறையே என்று நிறுவவும் முனைகின்றது.

நவதாராளவாதத்துக்கு எதிராக வன்முறையின்றிய மக்கள்திரள் போராட்டங்கள் தோன்றிவிடுவதைத் தடுக்க, வன்முறையின்றிய போராட்டங்கள் எதுவும் போராட்டமல்ல, அவை எல்லாம் வெறும் "பாசாங்குத்" தனமானவை என்கின்றது. இதன் மூலம் போராடுபவன் எப்போதும், எங்கும் வன்முறையாளன் என்று காட்டி, அவனைச் சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தி, அன்னியப்படுத்த முனைகின்றது.

இங்கு போராட்டம் என்பதே வன்முறை என்று கூறுவது, தனிநபர்வாத பயங்கரவாதக் கோட்பாடும் – அதன் சித்தாந்த முறையுமாகும். அது ஜனநாயகத்தை தனக்கு எதிரான ஓன்றாகவும், அதை வன்முறையாகவும் காட்டி ஓடுக்கவும் கோருகின்றது. அதற்கு இந்த நூல் உதவ முனைகின்றது.

யுத்தத்துக்கு பிந்தைய புலம்பெயர் உதவி, கல்வியை சீரழிக்கின்றது  

சொந்த உழைப்பை சமூக உழைப்பாக மாற்றாத, தன் உழைப்பில் இருந்து சமூகத்துக்கான பங்களிப்பைச் செய்யாதவர்கள், இலங்கையில் புலம்பெயர் உதவியைக் கையாள்வதும் - கோருவதும் நடந்து வருகின்றது. இதுவே சமூக நோக்குக்கு முரணானதாகவும் - இதனாலேயே இது சமூகம் சார்ந்ததாக இருக்க முடியாததாகி விடுகின்றது.

மறுபக்கத்தில் நடைமுறை வாழ்வில் சமூக சிந்தனையையும் அதற்கான உழைப்பையும் வழங்க முடியாதவர்கள் - பணத்தைக் கொடுப்பதையே சமூக உணர்வாக கருதுகின்றவர்களால் கொடுக்கப்படும் பணம், சமூகச் சீரழிவுக்கு இட்டுச் செல்லுகின்றது.

இரண்டு பக்கத்திலும் சமூகம் சார்ந்த சிந்தனையும் - நடைமுறையும் இன்றிய பணச் செயற்பாடுகள் என்பது, சமூக அழிவுக்கு இட்டுச் செல்லும். உதாரணமாக உங்கள் குழந்தைக்கு வழிகாட்டல் இன்றியும், பணத்துக்கு என்ன நடந்தது என்ற சுயகேள்வியும் இன்றியும், அதனால் அந்தக் குழந்தைக்கு கிடைத்த நன்மை என்ன என்ற கேள்வியும் இன்றி, பணத்தைக் கொடுத்தால் என்ன நடக்குமோ, அதுதான் இங்கும் நடக்கும்.

யுத்தம் கூட கல்வியை இந்தளவுக்கு சீரழித்;தது கிடையாது. யுத்தத்துக்கு பிந்தைய சமூகத்தை, புலம் பெயர் பணம் சீரழிக்கத் தொடங்கி இருக்கின்றது.

பணத்தைக் கொண்டு புலம்பெயர் சமூகத்தை வழிநடத்த முனையும் சுயநலவாதிகளாலும், பிரமுகர்களாலும், பதவி வேட்டை பேர்வழிகளாலும் புலம்பெயர் உதவியை சமூக நோக்கு உள்ளதாக்க முடியாது. ஆனால் அவர்கள் தான் இன்று இதைக் கையாள்வது நடக்கின்றது.

பணத்தைக் கொண்டே கல்வியின் இலக்கை அடைய முடியும் என்று கூறுவதும், பணத்தை பெறுவதையே இலக்காகக் கொண்டுள்ள கல்வி சமூகத்தால், சமூகத்தை அழிவுக்கே வழிநடத்த முடியும்.

இவ்விரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கமாக மாறி, யுத்தத்துக்கு பிந்தைய சமூகத்தின் கல்வியை அழிக்கின்றது.

எந்த அரசியல் பின்புலமுமற்ற மத்தியதர வர்க்கப ; பெண் "பாசிசம் ஒழிக" என்று கோசம் போட்டதைக் கண்டு, பாசிட்டுக்கள் அதிர்ந்து போயுள்ளனர். சுயநலம் பிடித்த மத்தியதர வர்க்க பொது மனநிலைக்கு முரணாக, ஓட்டுமொத்த சமூகமும் அரசியல்மயமாவது கண்டு, ஊடகங்கள் தாங்கள் போட்டிருந்த "நடுநிலைமை" வேசத்தை உதறி, பாசிசத்தை முண்டுகொடுக்கும் விவாதங்களை கட்டவிழ்த்து விடுகின்றனர். "பாசிசம் ஓழிக" என்ற கோசத்தில், பாசிசம் என்று கூறியது ஏன் என்ற விவாதத்தை மறுதளித்து பாசிசத்தை பாதுகாக்க முனைவதே ஊடகவியலாக மாறி வருகின்றது.

விமானத்தில் கோசம் போடலாமா என்று பாஜக பாசிட்டுகள் குற்றஞ்சாட்டும் அதே உள்ளடக்கத்தை கொண்டு, ஊடகங்கள் தங்கள் பங்கை அரங்கேற்றுகின்றது. விமானத்தில் கோசம் போடலாமா என்று விவாதம் நடத்தியதுடன், நடுத்தர வர்க்க பெண்ணின் எதிர்காலம் குறித்து பொதுப் பீதியை ஊட்டி விடுகின்றனர். விமானத்தில் நடத்திய "போராட்டத்தை" தவறான போராட்ட வழிமுறையாக சித்தரித்து வருகின்றனர். இப்படிப் போராடுவது என்பது பின்னணியின்றி இருக்க முடியாது என்று கூறுவதன் மூலம், அதைப் பாசிச பாணியில் உண்மையென்று நம்பவைக்க முனைகின்றனர்.

போராடிய பெண்ணின் பால், சாதி, மத.. அடையாளங்கள் மூலம், பாசிட்டுகள் பாணியில் "பாசிசம் ஓழிக" என்ற கோசத்துக்கு முகத்திரையை போட்டுக் காட்டி, பாசிசத்தின் முகத்திரையை மூடிவைக்க முனைகின்றனர். கைது, விசாரணை, நீதிமன்றம், பாஸ்போட்டை முடக்குவது என்ற தொடர் அச்சுறுத்தல்கள் மூலம், போராட முனையும் ஓவ்வொருவனுக்கும் இதுதான் கதி என்று அச்சுறுத்தும் பாசிச நடைமுறைகளை – முன்னின்று மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து அச்சுறுத்துகின்றனர். அதாவது பாசிட்டுகள் தங்கள் அடக்குமுறைகள் மூலம் எதை மக்களுக்கு உணர்த்த முனைகின்றனரோ – அதை ஊடகங்கள் மக்களுக்கு உணர்த்தும் வண்ணம் பாசிசத்துடன் கைகோர்த்துப் பயணிக்கின்றவர்களாக மாறி நிற்கின்றனர்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE