Language Selection

பி.இரயாகரன் - சமர்

book _6.jpg'வரலாற்று ரீதியான ஆணாதிக்கத்தையும், அதற்கு எதிரான போராட்டத்தையும், அத்துமீறிய வாழ்க்கையையும் மிக சுயேட்சையாக நாம் கண்டறிய வேண்டுமாயின், கிராமியப் பண்பாடுகள், நடத்தைகள், வழக்குகள் என அனைத்திலும் தேட வேண்டும். இங்குதான் அவை எந்தவிதமான போலித்தனமும் இன்றி எதார்த்தத்தைப் பிரதிபலித்த வண்ணம் சமுதாய இயக்கம் நேர்மையாக இயங்குகின்றது. இந்தவகையில் பெண்ணியத்தை ஆராய்வது என்பது அவசியமானதாகவும், நிபந்தனையானதாகவும் உள்ளது. ''தமிழக நாட்டுப் புறவியலில் பெண்கள்"36 என்ற தலைப்பில் எழுதியுள்ள நூல் அந்த மக்களைப் போல் இயற்கையாக உள்ளது.

book _6.jpgபெண்ணுரிமை, பாலியல் என இலக்கியங்கள் திடீரென புலம்பத் தொடங்கியுள்ளது. தங்கள் சொந்த வக்கிரங்களையும், அரிப்புகளையும் படைப்பாக்கத் தொடங்கியவர்கள் இன்று உலகமயமாதலில் பெண்ணுரிமை, பாலியல் எதுவோ அதையே எடுத்துப் பாதுகாக்கவும், முன்வைக்கவும் தொடங்கியுள்ளனர். ஏகாதிபத்தியக் கலாச்சாரம், பண்பாடு என எதுவும் இல்லை என மார்தட்டுமளவுக்கு இவர்களின் படைப்புகள் புற்றீசல் போல் வெளிக் கிளம்பத் தொடங்கியுள்ளது.

book _6.jpgஆணாதிக்கம் மனித இனத்தைச் சிதைத்த போது பாலியல் பல வக்கிரங்களைக் கண்டது. இயற்கையின் பரிணாமத்தையும், இயற்கையின் அழிவையும் ஏற்படுத்தியே மூலதனத்தின் சுதந்திரம் பூத்துக் குலுங்கியது குலுங்குகின்றது. இந்தச் சிதைவுகளில் இருந்து அலங்கோலமான பாலியல் வடிவங்கள் வெடிக்கின்றன. இந்த எதார்த்தத்தில் இருந்து அங்கீகரிக்கக் கோரும் போராட்டமும், இதை ஜனநாயகத்தின் சுதந்திரமாக, தனிமனித உடல் சார்ந்த கூறாகவும் என பலவித விளக்கத்துடன் இன்று கோட்பாட்டு விளக்கங்கள் வருகின்றன. இதில் ஓரினச் சேர்க்கையும் ஒன்று. அதை ஆராய்வோம்.

book _6.jpgபொழுது போக்கு ஊடாகப் பண்பாட்டுக் கலாச்சாரத் தாக்குதல் சமுதாயத்தின் அனைத்துத் தளத்திலும் இன்று வேகமான தாக்குதலை நடத்துகின்றது. இது உலகளாவிய ஒரு பொழுது போக்கு பண்பாடு, கலாச்சாரம் என்ற எல்லையை நோக்கி நாலுகால் பாய்ச்சலில் எகிறிக் குதித்தோடும் போது, கண்மண் தெரியாத சீரழிவைச் சமுதாயம் முன் எப்போதையும் விட சந்திப்பது எதார்த்தமாகியுள்ளது. இதில் பெண்ணின் நிலை என்பது நுகர்வுப் பண்பாட்டில் கீழ்நிலைக்குத் தரம் தாழ்த்தப்பட்டுச் சீரழிக்கப்படுகின்றாள்.

book _6.jpgஆசியா கண்டத்தில் நடந்த பல்வேறு வர்க்கப் போராட்டங்களில் பெண்களின் பங்களிப்பு பல வீரம் செறிந்த வரலாறுகள் பலவற்றை எமக்கு விட்டுச் சென்றுள்ளது. ஆனால் பலர் விடுதலைப்புலிகளில் உள்ள பெண்களின் பங்களிப்பே ஆசியாவிலேயே முதல் ஆயுதப் போராட்டம் என்று காட்டுவதும், இதை இதன் அடிப்படையில் இருந்து விமர்சிப்பதும் என அண்மைக் காலத்தில் பலர் குறிப்பாகப் பெண்ணியல்வாதிகள் களம் இறங்கியுள்ளனர்.

book _6.jpgகடந்த 30 வருடங்களாக இலங்கைப் பெண்களை உலுக்கிய உலுக்கு, இலங்கை வரலாற்றுக்குப் புதியதாகும். நிலைமைகள் திடீர்திடீரென அதிர்வலைகளை ஏற்படுத்தும் வண்ணம் மாறியது, மாறிய வண்ணம் இருக்கின்றது. இவை பல முரண்பட்ட வௌ;வேறு சூழ்நிலைகளில், வேறுபட்ட பிரதேசம் சார்ந்து தன்னை வெளிப்படுத்திய வண்ணம் இருக்கின்றது.


இந்த வகையில் பெண்களின் நிலைமையை ஆராய உலகளாவிய மாற்றங்கள் பற்றிய பார்வை மிக முக்கியமானதாகும்;. கி.பி.1970-களில் சர்வதேச ரீதியாக ஏகாதிபத்தியங்கள் தமது சுரண்டலைத் தீவிரப்படுத்த, அரைக்காலனிகளை நவகாலனியாக்கி நேரடிக் காலனியாக்கத்தை நடைமுறைப்படுத்தும்; கட்டமைப்புகளைத் தீவிரமாக்கினர். இலங்கை இந்தக் கட்டத்தின் ஊடாகத் தன்னை மாற்றியமைப்பதுக்கு உள்ள+ர் அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பு இசைவாக்கமடைந்தது. சில நாடுகளில் இடைக்கட்டமின்றி நகர்வதும் சாத்தியமாகக் கூடியதாக இருக்கின்றது. அதாவது காலனிகள் முன்பைவிட தெளிவாகப் பண்பு ரீதியாக, அரசியல் பொருளாதாரக் காரணங்களால் வேறுபட்டே இருக்கும் என்பதை உலகமயமாதல் தெளிவாக்குகின்றது.

book _6.jpg'கற்பு" என்ற சொல்லைக் கைவிடாமல் பாவிப்பவர்கள் என ''கேள்வி" கடந்து கோட்பாடு அற்று விவாதிக்கின்றனர். இங்கு ''கேள்வி"யல்ல முடிவாகக் கூறும் போதுதான் இதன் அரசியல் வெட்ட வெளிச்சமாகப் புரிகின்றது. ''கற்பு" என்பதைக் கருத்துமுதல்வாதமாகப் புரிகின்ற போது கருத்தால் மறுப்பது நிகழ்கின்றது. நேரடியாகப் பொருள் அல்லாத விளைவுகளில் கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் தொடர்பான விவாதத்தை இது கோருகின்றது. தேசியம், வர்க்கப்போராட்டம் போன்றன பொருள்முதல்வாதம் சார்ந்ததா? அல்லது கருத்துமுதல்வாதம் சார்ந்ததா? என்ற கேள்வி எழுகின்றது. சமுதாயத்தில் உடன்பாடற்றவைகளைக் கருத்துமுதல்வாதமாகக் காட்டி விளக்குவது பொருள்முதல்வாதத்தை மறுப்பதாகும்.

book _6.jpgஇயற்கையில் மனிதன் தனது வாழ்வுக்கான போராட்டத்தை எதிர் கொண்ட போது அவனுக்கு இயற்கையே புதிராக இருந்தது. இயற்கையின் எழுச்சிகள், அழிவுகள் எல்லாம் மனிதனுக்கு அழிவையும், ஆக்கத்தையும் கொடுத்த போது, அதன் மீதான கட்டுப்பாட்டைச் செலுத்தமுடியாத நிலைக்குள் தள்ளப்பட்டான். இது போல், தனது உடல் சார்ந்த மாற்றங்கள் எப்படி? எதனால? ஏற்படுகின்றன என்பதை அறிய முடியாத மனிதனாகப் புதிர்களின் முன் வெறுமையாக நின்றான்.


எல்லா உயிரினங்களையும் போல் மனிதனும் இயற்கையைச் சார்ந்து இருந்த நிலையில் இருந்து மாறி, உழைப்பை இயற்கையின் மீது பயன்படுத்தத் தொடங்கியவுடன், அது சார்ந்து சிந்தனையும் அதன் மேல் உருவாகத் தொடங்கியது. உழைப்பு மூலம் இயற்கையை மனிதன் தனது தேவைக்கு ஏற்ப மாற்றத் தொடங்கியபோது, இயற்கை மற்றும் மனித உடலியல் புதிர்களைப் பற்றிய தேடுதலும் ஆரம்பமாகியது. இந்தக் கேள்விகளை ஒட்டி இயற்கைச் சீற்றங்களின் போதும், அழிவுகளின் போதும் மனித உழைப்பால் எதையும் செய்ய முடியாத போக்கில், இந்த இயற்கை நெருக்கடி மனித அழிவுகளை ஏற்படுத்தியது. இதை மனிதனால் புரிந்து கொள்ள முடியாத நிலையில், அதை மாற்ற முடியாத நிலையில், அதை அன்னியமான சக்தி ஒன்றின் செயலாக எண்ணத் தொடங்கினான். இதனால் இயற்கை சார்ந்து அழிவுகளை ஏற்படுத்தும் ஊடகங்களை நோக்கி அஞ்சத் தொடங்கினான். இது போல் போராடி வெல்ல முடியாத மிருகங்களையும் கண்டு அஞ்சுவதன் மூலமும், மனித ஆற்றலால் முடியாத விசயங்களை நோக்கி கெஞ்சுவதன் மூலமும் அதைத் தடுக்க முயன்றான். இந்தக் கெஞ்சுவதும், அஞ்சுவதும் மனிதன் இயற்கையில் இருந்து வெளிவந்து, செயற்கையில் இயற்கையை மாற்றத் தொடங்கிய மனித வரலாற்றில் நடந்தது. மனித உழைப்புக்கு அன்னியப்பட்டுக் கட்டுப்பட மறுத்த இயற்கையின் மீதும், அது சார்ந்த விசயங்கள் மீதும் இவை நிகழ்ந்தன. பின்னால் அதைத் தொடர்ந்து விளக்குவதும் மனிதப் போக்காகியது.

book _6.jpgஏகாதிபத்தியப் பொருளாதார அமைப்பு சார்ந்து இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட பசுமைப் புரட்சியானது இங்கு வாழ்ந்து வந்த பெண்ணின் வீட்டு வேலையையும், வறுமையையும், கூலி உழைப்பையும் கடுமையாக்கி உள்ளது. நிலத்தில் ஏகாதிபத்தியத் தேவைக்கான உணவு தயாரிப்பு, மிருகத்தில் ஏகாதிபத்திய நுகர்வு, காட்டில் ஏகாதிபத்தியத் தேவைக்கான காடழிப்பு ஆகியவை பெண்களின் சுமையைப் பல மடங்காக்கியது. ஆனால் இது மறைமுகமான ஏகாதிபத்தியத் தாக்குதல் என்பதால் வெறும் ஆண்களாக அல்லது உள்ள+ர் ஆட்சியாளராகக் காட்டுவது இன்றைய பல பெண்ணியல்வாதிகள் போல் அல்லது பின்நவீனத்துவவாதிகள் போல் காட்டுவதும், திசை திருப்புவதும் நிகழ்கின்றது. இது எல்லா மூன்றாம் உலக நாடுகளின் பொதுப் பண்பாகவும் உள்ளது.

book _6.jpgஇயற்கையை மறுப்பதிலேயே ஆணாதிக்கம் கருக்கொள்கின்றது. இன்று உலக மயமாதல் தனது சந்தைப்படுத்தலைத் தீவிரமாக்க இயற்கை அழிப்பைப் பிரதானப்படுத்துகின்றது. பெண்களை இயற்கைக்கு மாறாக அடிமைப்படுத்திய நிலையில், ஆண்கள் இயற்கையில் இருந்;து அன்னியமயமாதல் அதிகரித்தது. பெண் இயற்கையைச் சார்ந்திருத்தல் நெருக்கமானது. மனிதத் தேவையை மீறி இயற்கையை ஆண், அடிமைப்படுத்தியும், கட்டுப்படுத்தியும், அழித்தும், சூறையாடியும், சொத்துரிமையை, அதிக உபரியை இயற்கைக்கு விரோதமாகச் செயற்கையாகக் கட்டுப்படுத்தினான்.


இந்த நிலையில் பெண் இயற்கை மீது சார்ந்து வாழ்தல் இயல்பானதாக இருந்தது. பெண்ணின் தனிச் சொத்துரிமை மறுக்கப்பட்டு, வீட்டுவேலைகளுடன் கட்டுப்படுத்தி இயற்கையின் மறு உற்பத்தியுடன் அடிமையாக்கிய நிலையில் பெண் இயற்கை மீது வாழ்தல், சார்ந்திருத்தல்தான் அவளின் ஒரே ஆதாரமான வாழ்வாகியது.

book _6.jpgமுதலாளித்துவப் புரட்சி நடைபெறாத இந்நாடுகளில் பெயரளவிலான ஜனநாயகம் கூட கிடையாது. இதன் வெளிப்பாடாகப் பெண்களின் நிலை என்பது ஐயத்துக்கு இடமின்றி நிலப்பிரபுத்துவ ஆணாதிக்கத்துக்குள் சிறை வைக்கப்பட்டுள்ளாள். இருந்த போதும் இப்பெண்கள் இயற்கையையொட்டியும், ஒருதாரமணத்துக்குள் காதலிக்கவும், அன்பு செலுத்தவும் முடிவதால் மேற்கைவிட தன்னளவில் நிம்மதியாகக் கூட்டு வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்கின்றாள்.


நிலப்பிரபுத்துவ ஆணாதிக்கம் பெண்ணின் சுயச்சிந்தனையை விலங்கிடுவதால் பெண்ணின் தெரிவுகள் முதல் அனைத்தும் வளர்ப்பு மிருகத்தின் நிலைக்குத் தாழ்ந்துள்ளது. வளர்ப்புப் பண்ணைகளில் மிருகத்தின் பாலியல் பூர்த்தியை எப்படி வளர்ப்பவன் தீர்மானிக்கின்றானோ, அதேபோல் பெண்ணின் பாலியலை ஆணாதிக்கச் சிந்தனை கட்டுப்படுத்தித் தீர்மானிக்கின்றது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE