Language Selection

பி.இரயாகரன் - சமர்

"ஒரு நாள்
நீ இந்த வீட்டிற்குள் மெல்ல நடந்து வருவாய்
நான்
ஒரு நீண்ட ஆப்ரிக்க கவுன் அணிந்திருப்பேன்
உட்கார்ந்து நீ பேசத்தொடங்குவாய் "கருப்பு..."
உனது கையை எடுத்து எனதுள் வைத்துக்கொள்வேன்
நீ - என்னைக் கவனிக்காமலேயே, பேசிக்கொண்டிருப்பாய்,
"ஆமாம், இந்தச் சகோதரனை..."

மெல்ல உன் கையை என் தலையில் நழுவவிடுவேன்
சலிக்காமல் நீ உளறிக்கொண்டிருப்பாய் "புரட்சி இருக்கிறதே...?"
உனது கையை என் வயிற்றில் அழுத்திப் பிடித்திருப்பேன்
எப்போதும் போல நீ தொடர்ந்து கொண்டிருப்பாய்
"இது எனக்கு சுத்தமாகப் புரியவில்லை...?"

உனது கையால் எனது உடலை வருடிக்கொண்டிருப்பேன்
பிறகு மெல்ல உனது டாஸ்கியை உருவி எடுப்பேன்
அப்போது நீ சொல்வாய் 
"உண்மையில் நமக்கு இப்போது தேவைப்படுவது என்னவென்றால்..."

இப்போது நாவால் உனது கையை வருடிக் கொண்டிருப்பேன்
நீ "நான் அதை எப்படிப் பார்கிறேன் என்றால், இனி நாம்..."
உனது காற்சட்டைப் பொத்தான்களை அவிழ்த்திருப்பேன்
"சரி அந்த நிலையில் எப்படி..."

உனது உள்ளாடையை உருவி எடுப்பேன்
அப்போது உனது நிர்வாண நிலை
உனக்கு உறைக்கும்
உன்னை உனக்குத் தெரியும்
நீ வெறுமனே இப்படிச் சொல்லுவாய்
"நிக்கி இது எதிர்ப்புரட்சிகரமானதில்லையா ?"  

சோபசக்தி  11.12.1998 எச்சில் 4 பக்கம் 11இல்  "பி.றயாகரன் அவர்களின் பிரிவாற்றாமை குறித்த நினைவுக் கல்வெட்டு" இப்படித்தான் தொடங்குகின்றது. அ.மார்க்ஸ்சை இந்தியாவில் சந்தித்ததன் பின்பாக, ஈழப் போராட்டத்தில் புலிக்கும்  -  அரசுக்கும் எதிரான வர்க்க அரசியல் நிலைப்பாட்டை – செயற்பாட்டை தகர்க்க, பி.றயாகரன் முதலில் இலக்கு வைக்கப்பட்டார். சோபாசக்தியும் வேறு சிலரும் இணைந்து கொண்டு, வர்க்கத்தை – வர்க்க அரசியலை கருவறுக்கும்  எதிர்ப்புரட்சிக் கும்பல், கல்வெட்டுடன்  களமிறங்கியது. இந்தக் கல்வெட்டு பல பக்கங்களைக் கொண்டது. இன்று அவர் தன்னை மூடிமறைத்துப் புலம்பும் சோபாசக்தி, அன்று தன் நோக்கத்தை மூடிமறைக்க உளறியது முதற்கொண்டு, அவரின் கற்பிதக் கோட்பாடுகளையும் இந்தக் கல்வெட்டில் காணமுடியும். இந்தக் கல்வெட்டு வெளிவந்த சஞ்சிகையின் ஆசிரியர் குழு, இதனால் இரண்டாக உடைந்ததுடன், ஒரே பெயரில் - ஒரே இலக்கத்தில் இரண்டு சஞ்சிகைகள் வெளிவந்தது. இதிலொன்று பின்னால் தன்னை உயிர்நிழல் என்று மாற்றிக்கொண்டது.

புஸ்பராணியின் போராட்டமும் - தியாகமும் உணர்வுபூர்வமானவை. போலித்தனமற்ற உன்னதமானது.  தான் நம்பிய சமூகக் கனவுகளுடன் பயணித்தவை. இந்தப் பயணத்தில் சிறைகள், சித்திரவதைகளை மட்டுமல்ல, சமூகரீதியான புறக்கணிப்புகளையும் எதிர்கொண்டவர். 

வரலாற்றில் போராட வந்த ஆயிரக்கணக்கான பெண்களுக்கு முன்னோடியாவார். யாழ்ப்பாண ஆணாதிக்கக் கலாச்சார மரபுகளை மீறியவர். அடங்கியொடுங்கவே பெண் என்ற தமிழ் கலாச்சார அடையாளத்தைத் தகர்த்தவர். யாழ் மையவாத வெள்ளாளியச் சமூகத்தின் ஆணாதிக்க  ஒழுக்க கலாச்சார வேலிகளுக்கும் - அவர்களின் பெண்கள் மேலான கண்ணோட்டதுக்கும் சவால் விடுத்தவர். ஒடுக்கும் சாதிகளின் அதிகாரத்தையும், அதன் திமிரையும் எதிர்த்து நின்றவர்.

ஒடுக்கும் சாதியால் வரையறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சாதியில் அவர் பிறந்ததால், யாழ்ப்பாணத்தின் ஒடுக்கும் சாதிய சமூகத்தை எதிர்கொண்டு வாழ வேண்டுமென்பது சவால் மிக்கது, 1960 - 1970 வரை ஒடுக்கப்பட்ட சாதிகள் கல்வி கற்க அனுமதியில்லை. பொது இடங்களை பயன்படுத்த உரிமையில்லை. இதுதான் அன்றைய தமிழினவாதம் முன்வைத்த தமிழ்தேசியம்.

காதலென்பது என்ன? காதல் தோன்றிய வரலாற்றுச் சூழல் என்ன? 

மனித உழைப்பானது ஆணின் தனியுடைமையாகிய போது, பெண் வரைமுறையின்றிப் பாலியல் சுரண்டலுக்குள்ளாக்கபட்டாள்.  ஆணாதிக்க வரைமுறையற்ற பாலியல் சுரண்டலுக்கு எதிராக, பெண் தேர்ந்தெடுத்த உறவுமுறை தான் காதல். இதன் மூலம் தனியுடைமை ஆணின் பாலியல் சுரண்டலுக்கு எதிராக, பெண் தான் தேர்ந்தெடுக்கும் உரிமையைத் தனதாக்கினாள். இது மனித வரலாறு.

இன்று அந்தக் காதலின் பெயரில், வரைமுறையற்ற பாலியல் சுரண்டலை ஆண்கள் நடத்த முடிகின்றது. காதலின் பெயரில் பெண்ணைப் பாலியல் ரீதியாக சுரண்டுவது, கைவிடுவது ஆணாதிக்க சமூகத்தில் நடப்பதும் - அதற்கு எதிரான பெண்ணின் போராட்டமும் சமூகத்தில் காணமுடியும்.
 
இதிலிருந்து தப்பித்துக் கொள்ள ஆணாதிக்கமானது, பரஸ்பரம் செக்ஸ் தாண்டி எமக்கு இடையில் எதுவும் இருக்காது, இருக்கவும் கூடாது என்ற நிபந்தனையுடன், பாலியல் வேட்டையில் அறிவுத்துறை சேர்ந்த ஆணாதிக்கவாதிகள் தமக்கான சொந்தக் கோட்பாட்டை உருவாக்குகின்றனர். கொடுக்கல் வாங்கலற்ற இந்த பாலியல் வேட்டையை மூடிமறைக்க, அதை காதல் என்கின்றனர். "இரு உயிரிகளுக்கு இடையேயான உறவு" என்கின்றனர். இதைக் கேள்விக்குள்ளாக்க முடியாத "தனிப்பட்ட தேர்வு" என்கின்றனர்.

அமெரிக்காவின் வரிக் கொள்கை என்பது, தனியுடமைவாத முதலாளித்துவம். சுதந்திரமான சந்தை என்ற முதலாளித்துவத்தின் முரணற்ற முதலாளித்துவத்தின் அடிப்படைக் கொள்கையாகும். சந்தை என்பது கட்டுப்பாடற்றதாக, சுதந்திரமானதாக, ஜனநாயகபூர்வமானதாக இருக்கவேண்டும் என்பதே, முதலாளித்துவமாகும். இதைத்தான் டிரம்ப் நேரடியாக – மறைமுகமாக முன்வைத்திருக்கின்றார். இதைப் புரட்சிகரமானது என்கின்றார். இப்படிப்பட்ட முரணற்ற முதலாளித்துவத்தை பிற ஏகாதிபத்தியங்களும், முதலாளித்துவ நாடுகளும், முதலாளித்துவவாதிகளும், தனியுடமைவாதிகளும்.. எதற்காக, ஏன் எதிர்த்துப் புலம்ப வேண்டும்?

தனித்தனி நாடுகளுக்குள் சுதந்திரமான சந்தைக் கோட்பாட்டை முன்வைத்துள்ள முதலாளித்துவவாதிகள், நாடுகளுக்கிடையில் இதை மறுப்பது ஏன்? தங்கள் சொந்த தேசிய – ஏகாதிபத்திய பொருளாதாரம் சிதைந்துவிடும் - மக்களின் வாழ்வாதாரங்கள் அழிந்துவிடும் என்ற ஒப்புக்கு ஒப்பாரி வைக்கும் முதலாளித்துவவாதிகள்,  தங்கள் சொந்த நாடுகளில் சிறுவுடமைகளையும் - அது சார்ந்து வாழ்ந்த மக்கள் கூட்டத்தை தங்கள் நாட்டு பெருவுடைமை சார்ந்து ஒழித்துக் கட்டியவர்களே. இன்று வேசம் போட்டுக்கொண்டு, உலக பெருமூலதனம் சார்ந்த தங்கள் திவாலை மூடிமறைக்க, ஒப்பாரி வைக்கின்றனர்.

ஒரு ஆணுக்குள்ள உரிமையே பெண்ணுக்குமான உரிமையாகும். இந்த உரிமையைப் பெண்ணுக்கு மறுத்து, ஆணுக்கு மட்டும் உரியதென்றால், அதுதான் தமிழ் தாலிபானிசம். இந்த தாலிபானிசமானது, மனிதனின் அடிப்படை ஜனநாயகத்தையே மறுக்கின்றது. ஆண் - பெண் என்ற இயற்கையான வேறுபாட்டைக் கொண்டு, தங்கள் ஆணாதிக்க அதிகாரத்துக்காக பெண் அடிமைகளை உருவாக்குகின்றது. 

இந்த அடிமைத்தனம் என்பது வரலாற்று ரீதியானது. தீட்டு, துடக்கு என்று தொடங்கிய அடக்குமுறையானது, இன்று வரை பூனூல் போட்டு குடும்பத்துப் பெண் பூசாரியாகவே முடியாது. இந்த அடிமைத்தனத்துக்கும், கொடுமைகளுக்கும்.. பல வரலாற்றுப் படிக்கற்கள் உண்டு.      

கலாச்சாரம் தொடங்கி விமர்சனம் வரை, ஆண் - பெண்  என்று இருதரப்புக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். இதைவிடுத்து பெண்ணுக்கு மட்டுமென்றால், ஆணாதிக்க தமிழ் தாலிபானிசமே. கலாச்சாரம் என்பது பொதுவானது, அதை விடுத்து பெண்ணுக்கு மட்டும் தான் கலாச்சாரம் என்றால், இழிவாகத் தரம் தாழ்ந்த சமூகத்தின் சுய நடத்தையாகும். 

இந்தத் தமிழ் தாலிபான் கலாச்சாரமானது பாலியலில் வரைமுறையற்ற கட்டாக்காலி ஆணாதிக்க பாலியல் அத்துமீறலை ஆதரிக்கின்றது. இதற்காக பெண்ணை குற்றம் சாட்டுகின்றது. இந்த ஆணாதிக்க கழிசடைத்தனத்தை புலியிசத்தின் மூலம் கோருகின்றனர்.

தலைவரின் பெயரில் புலிப் பாசிசத்திற்குக் காவடியெடுத்தாடும் கூத்தாடியான கோமாளியான அர்ச்சுனா கூறுகின்றார். இதற்காகவா தமிழ் மக்கள் அர்ச்சுனாவுக்கு வாக்களித்தனர்!?

தமிழர்களின் பெயரில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான தமிழினவாதத்தைப் பாசிட்டால் மட்டுமே  இப்படி கக்க முடியும். 

மனித உயிர்களைக் காக்கும் டொக்டர் என்று கூறிக்கொள்ளும் யாழ்ப்பாணத்துப் பன்னாடை, தனது பாசிசக் கொலை வெறித்தனத்தைத் தனது தந்தையின் அரசியல் - நடைமுறை வழியில் முன்வைத்திருக்கின்றது. 1990 இல் அர்ச்சுனா புலித் தலைவர் இடத்திலிருந்திருந்தால், 1990 இல் ஒரு இலட்சம் முஸ்லீம் மக்களைக் கொன்று புதைத்திருப்பான். இந்த உண்மையைத் தான், இன்று தந்தை வழி கொலைகார அரசியலை தற்பெருமையுடன் கூறுகின்றான்.

1940 களில் ஹிட்லர் 60 இலட்சம் யூதர்களைக் கொன்று - எரித்துச் சாம்பலாக்கியது போன்று, அதே பாசிச வழியில் முஸ்லிம்களைக் கொன்று அழிக்கத் தவறியது, தனது தலைவரின் தவறு என்று கூறுகின்றான். அன்று ஹிட்லருக்குக் கோயம்பல்ஸ் என்ற பிரச்சார மந்திரி இருந்தது போல், இந்தக் கொலைவெறி கக்கும் அர்ச்சுனாவுக்காகப் பிரச்சாரம் செய்யும் தமிழ் அடியான் தொடங்கி வன்னி ஊழல் ஒழிப்பு அணி வரை அணிகட்டி நிற்கின்றது. அன்று தவைருக்குப் பாலசிங்கம் இருந்தது போல், இன்றும் புலிப் பாசிச அடிவருடிகள். இதன் பின்னால் புலத்தில் நிதி திரட்டும் மாபியாக்கள். இந்த மாபியாக்களின் பிழைப்புக்காக, பாசிச கோமாளி கூத்தாட நிதி வழங்குகின்றனர். இந்தக் கூத்தாடிக்கு பணம் பார்க்கும், யூ-ரியூப் வியாபாரிகள்.

பண மோசடிகளில் ஈடுபடும் புலம்பெயர் தரகர்களினால் இயக்கப்படுகின்றவர்கள் தான், சீமான் முதல் அருச்சுனா வரை. புலம்பெயர் மோசடிக்காரத் தரகுப் பணம் இல்லையென்றால், கட்டுப்பணத்தைக்  கூட செலுத்தத் தயாரற்றவர்கள் இவர்கள்.    

தமிழினவாத பாசிச தலைமைகளால் தவறாக வழிநடத்தப்பட்டுப் பலியிடப்பட்டவர்களின் குடும்பங்கள், அவர்களால் கொல்லப்பட்ட குடும்பங்கள், தவறான போராட்டத்திலிருந்து தப்பி பிழைத்தவர்களின்.. வாழ்க்கைக்கு ஒளியூட்ட முடியாதவர்களே, வாக்கு அரசியலில் தம்மை முன்னிறுத்துகின்றனர். தொடர்ந்து தமிழ் தேசியம் என்று கூறுகின்ற இந்தப் பிழைப்புவாத அரசியலை, சொந்தப் பிழைப்புக்காக  முன்வைக்கின்றனர். கடந்தகாலத்தில் அரச சலுகைகளைப் பெறுவதற்குத் தயங்காதவர்கள். அதற்காக குறுக்கு வழிகளில் நக்கிப் பிழைத்தவர்கள்.

அன்றும் இன்றும் தமிழ் தேசிய வாக்கு அரசியலை கடைவிரித்து வியாபாரம் செய்யும் கூட்டத்துக்கு, புலம்பெயர் நிதியே ஆதாரம், அடித்தளம். தற்குறித்தனத்தால் பலர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்தனர். இதன் மூலம் புலம் பெயர் தரகர்களின் நிதிச் சலுகைகளை இழக்க, மறுபுறம் புலம்பெயர் தரகர்களின் வசூல் வேட்டைக்கு பாரிய இழப்பு. அரசியல் வியாபாரம் மண்ணைக் கவ்விய கூட்டுத் துயரம்.      

யாரெல்லாம் தனது உழைப்பிலான பணத்தைக் கொண்டும், தனது நேரத்தையும் கொண்டு மக்களுக்கான சமூக பணியில் ஈடுபடவில்லையோ, அவர்கள் உதவி செய்வதாகக் கூறுவதும் மோசடியானது. பணம் கொடுப்பவனையும் - பணம் வாங்குபவனையும் ஏமாற்றுவதற்கான பொது உள்ளடக்கமாகும். இந்த உதவி இடைத்தரகர்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைக்கும் முன்னுதாரணத்தைக் காணவும் - காட்டவும் முடியாதவர்கள், மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் கூட்டம்.

தங்கள் சமூகப் பொது நடத்தைகள் மூலம் மக்களுடன் வாழாதவர்களின் உதவிக் கோரிக்கை என்பது, வலிந்து உதவியைக் கோருவதற்கான புறச்சூழலை உருவாக்கி, அதைக் காட்சியாக்குவதே.

ஒடுக்கப்பட்ட மக்களை மய்யப்படுத்தி மக்களுக்கான சமூகப் பணியை முன்னெடுக்காத ஒருவன், மக்கள் பற்றியும் - உதவி பற்றியும் பேசுகின்றான் என்றால், அவன் மோசடிக்காரனே. இப்படி உதவி கோருகின்றவர்கள், தங்கள் சொந்த வாழ்வுக்காக உழைத்து வாழ தயாரற்ற தற்குறிகள்.

தங்கள் சுய திறமையை, சமூக அறிவை, ஒடுக்கப்பட்ட சமூக அறத்தை சமூக அக்கறையுடன் முன்வைத்து மக்களுடன் உரையாடாத யூ-ரியூப் சமூக வலைத்தளத்தின் பொது நோக்கம், எந்த வகையிலான குறுக்கு வழியிலும் மக்களை ஏமாற்றிப் பணம் சம்பாதிப்பது தான். பண அதிகாரம் மூலம் பாலியல் துஸ்பிரயோகம் செய்வது, தன்னை கதாநாயகனாகக் காட்டி சமூகத்தை சுரண்டுவது, இது தான் இதன் சாரமும், உண்மையுமாகும்.

சுயதம்பட்டங்களையும், சுயபுராணங்களையும், பெண்கள் மீதான அவதூறுகளையும், பிற இனங்கள் மீதான இனவாதத்தையும்.. முன்வைத்து, சமூக வலைத்தளத்தில் விளம்பரம் செய்வது அர்ச்சுனாவின் பிழைப்புவாத வாக்கு அரசியலாகியது. இதற்காக பாராளுமன்ற சிறப்புரிமையையும், தணிக்கையற்று விளம்பரம் செய்யும் உரிமையையும் பயன்படுத்தி, தனது மக்கள்விரோத அலுக்கோசுத்தனத்தை தனது மனிதவிரோதத்துடன் மேடையேற்றி வருகின்ற அவதாறு மன்னன் அர்ச்சுனா.      

2009 முன் தாக்குதலையும், இராணுவத்தின் இறப்பையும் காட்டி மக்களின் ஜனநாயக உரிமைகளையும், மனித வாழ்வியலையும் புதைகுழியில் புதைத்த "தலைவன்" வழியில், "தலைவனின்" பெயரில் தன்னை மய்யப்படுத்தி மக்களை மீண்டும் புதைக்குழிக்குள் அழைத்துச் செல்ல முற்படுகின்றான்.

இதற்கான சுயதம்பட்ட விளம்பரங்களுடன், தேர்தல் எதிரியை போட்டுத் தள்ள அவதூறு ஊழல் ஒழிப்பு சமூக வலைத்தளங்கள் புடை சூழவே, தேர்தலில் களமிறங்கினான். இந்த கூட்டுக்களவாணிக்  கும்பலின் தேர்தல் மனுவானது, ஒரு இடம் தவிர மிகுதி அனைத்து இடங்களிலும் நிராகரிக்கப்பட்டிருகின்றது.

தலைக்கனம் கொண்ட "தலைவனின்" தலைமையில் வேட்பு மனுக்களைச் சரியாக சமர்ப்பிக்க முடியவில்லை. தேர்தல் மனுவில் கூட ஊழல். மோசடிகள், பொய்கள், பித்தலாட்டங்களை .. தனது "தலைவன்" வழியில் முன்வைத்து அம்பலமாகி நிற்கின்றனர்.

ஆணாதிக்கத்தை தங்கள் சிந்தனைமுறையாகக் கொண்டவர்கள், பெண்களை பாலியல் ரீதியாகவே அணுகுவார்கள். இந்த ஆணாதிக்கவாதிகளின் கலாச்சாரமென்பது பெண்ணின் பாலியல் சுதந்திரத்தை மறுக்கும். குறிப்பாக புலித்தேசியமும் - புலியெதிர்ப்பு அரசியலும், தத்தமது எதிரிகளுடன் உள்ள பெண்களை இலக்கு வைக்கின்றது. இந்த வகையில் அருச்சுனாவின் செயற்பாடானது, மறுபக்கத்தில் அர்ச்சுனாவுடன் சம்மந்தப்பட்ட கவுசல்யாவையும் விட்டுவைக்கவில்லை.

பெண்ணை பாலியல்ரீதியாக அவதூறு செய்வதும், பெண்ணை நிர்வாணமாக்கிக் காட்டுவதும், பாலியல் நடத்தை பற்றி அவதூறு செய்வதும், வன்னி ஊழல் ஒழிப்பு அர்ச்சுனா கும்பலின் அரசியல் மட்டுமல்ல - அர்ச்சுனாவுக்கு எதிரான மற்றொரு தரப்பின் அரசியலும் கூட. இதையே தங்கள் அரசியலாக அர்ச்சுனா தரப்பு மாற்றியதுடன்,  சர்வசாதாரணமாக்கி இருக்கின்றது. 

இதன் மூலம் பெண்கள் அரசியலுக்கு வந்தால், இதுதான் கதி என்று மிரட்டுகின்றது. இதற்கு அர்ச்சுனா கும்பல் "தமிழன் - தலைவரின்" பெயரில் தலைமை தாங்குகின்றது. இந்த வக்கிரத்துக்கு பாராளுமன்றத்தில் தமிழனுக்கு அநீதி என்று, தமிழன் பெயரில் சிறிதரன் வக்காலத்து வாங்குகின்றார். தலைவர், தமிழன் என்ற பெயரில் பெண்களைத் தமது பிழைப்புவாத அரசியலுக்காக விற்றுப் பிழைக்கின்றனர்.

பாலியல் காட்சிகளைப் போடுவது, பாலியல் காட்சிகளையிடும் சமூக வலைத்தளத்தை விளம்பரம் செய்வது என்பவை ஊழல் ஒழிப்பாகியிருக்கின்றது. இதுதான் அர்ச்சுனாவினதும் – தமிழடியானினதும் சமூக அக்கறைக்கான, பொது அளவுகோலாகி இருக்கின்றது. 

பெண்களை ஒடுக்கப் பாலியல் காட்சிகளைப் பதிவிடுவது, தமிழனின் ஒழுக்கத்தையும் - கலாச்சாரத்தையும் பாதுகாப்பதாம். இத்தகைய தமிழ் பாசிச அரசியலை முன்னிறுத்தி, சுயபிழைப்பை தொடருகின்றனர் கூட்டுக் களவாணிகள்.

கோயில் கோபுரங்களில் நிர்வாணக் காட்சிகளையும் - புணருகின்ற காட்சிகளையும் அமைத்து, அதை கைகூப்பிக் கும்பிடுகின்ற ஆணாதிக்கச் சமூகத்தின் கலாச்சாரம் தான், சமூக வலைத்தளத்தில் பாலியல் காட்சிகளைப் போட்டு அதை உணர்ச்சிகரமான தமிழ் தேசியமாக்கி கொண்டாடுவது சமூக செயற்பாடாகி இருக்கின்றது. தங்கள் சுய பாலியல் வக்கிரங்களை, தமிழ் தேசியத்தின் பெயரில் பின்னோட்டமாக்கி அவர்களை தம்மை தொடர்பவர்களாக உருவாக்குகின்றது. வாக்குப் போடக் கோருகின்றது. யாருக்கு வாக்கு போடவேண்டும் என்று நேரடியாகவோ - மறைமுகமாகவோ பிரச்சராம் செய்கின்றது. 

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE