Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

இப்படிக் கூறி "இதுவும் கடந்துபோகும்!" என்று கூறுகின்ற பொழிப்புரையானது, பகவத்கீதையில் காண முடியும்.

"எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது

எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது

எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்"

சிவசேனாவின் வருகை குறித்தும் பகவத்கீதை கூறுவது போன்று, கண்ணை மூடிக்கொள் என்ற உபதேசங்களுக்கு குறைவில்லை. ஆக எது நடந்ததாலும் "இதுவும் கடந்துபோகும்!" என்கின்றனர். இது தான் இந்து வெள்ளாளிய யாழ்ப்பாணியக் குணாம்சம். சிவசேனா குறித்து அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. "சிவசேனா" என்பது சும்மா ஊதிப்பெருப்பிக்கும் "வேலை வெட்டியில்லாத – காரியவாதிகளல்லாத" சமூக ஆர்வலர்களின், அரசியல்வாதிகளின் பித்தலாட்டமாக காட்டுகின்றனர்.

இங்கிலாந்தில் அலிஸ்டயர் பூட், அந்தோனி மரியட் என்பவர்கள் எழுதிய No Sex Please, We Are British என்ற அபத்த, கேலி வகையான நாடகம் எழுபத்தொராம் ஆண்டில் இருந்து அரங்கேறி வருகிறது. யாழ்ப்பாணத்தில் ஒரு பெண் தனது விருப்பத்திற்குரிய விளையாட்டு வீரனைக் கண்டதும் ஆர்வமிகுதியால் கட்டிப் பிடித்து தனது அன்பை வெளிப்படுத்திய நேரம் தமிழ்ப் பண்பாட்டுக் காவலர்கள் கொதித்தெழுந்ததைப் பார்க்கும் போது இந்த அபத்த, கேலிக்கூத்து வகை நாடகம் தான் ஞாபகத்திற்கு வந்து தொலைக்கிறது.

ஈழ ஆதரவு தமிழ் தேசிய காவலராக தன்னை முன்னிறுத்திய மறவன்புலவு சச்சிதானந்தன், இலங்கையில் சிவசேனாவை தோற்றுவித்துள்ளாக அறிவித்துள்ளார்.

இந்தியாவில் நடந்த பல குண்டுவெடிப்புகளுன் தொடர்புடையதே, சிவசேனாவும் அதன் பினாமி அமைப்புகளும். இந்தியாவில் நடந்த முஸ்லிம் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு எதிரான, மத மற்றும் சாதிக் கலவரங்களைத் தலைமை தாங்கிய அமைப்பாக சிவசேனா இருக்கின்றது. அது தனது வரலாறு முழுக்க இலட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்து இருக்கின்றது. இன்று மாடுகளின் பெயரால் ஒடுக்கப்பட்ட சாதிகளையும், முஸ்லீம்களையும், விவசாயிகளையும் சட்டம் போட்டே ஒடுக்குகின்றது. மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே அங்கம் வகித்த இந்துத்துவ பாசிச அமைப்புகளான இந்துமகாசபா மற்றும் RSS (Rashtriya Swayamsevak Sangh) அமைப்புகளின் வழி வந்ததே இந்தச் சிவசேனா. இந்த வகையில் இந்தியாவில் பார்ப்பனிய சாதிய அமைப்பையும், சுரண்டும் வர்க்க நலனையும் உயர்த்தி நிற்கும் சாதிய அமைப்பு தான் சிவசேனா. இன்று இலங்கை மக்களை பிளந்து சதிராட வந்திருப்பது, புதிய சாபக்கேடு.

கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இரண்டு முக்கியமான நிகழ்ச்சிகள் நடந்தன. ஒன்று தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நடந்த “எழுக தமிழ்“ என்ற அரசியல் நிகழ்ச்சி மற்றது சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டிலான கலாசார விழா. இரண்டு நிகழ்ச்சிகளும் இந்த நாட்டிலுள்ள மக்களுக்கான உரிமைகளைப் பற்றிப் பேசுகின்றவை. மக்களுடைய சுதந்திரத்தையும் நல்வாழ்க்கையையும் வலியுறுத்துகின்றவை. குறித்துச் சொல்வதாக இருந்தால், இரண்டுமே ஒடுக்குமுறைக்கு எதிரானவை. இருந்தாலும், இரண்டும் வெவ்வேறான பார்வைகளையும் அணுகுமுறைகளையும் கொண்டவை.

“எழுக தமிழ்“ தமிழ் மக்களுடைய உரிமைகளைப்பற்றியும் அவர்களுடைய பிரச்சினைகளைப்பற்றியுமே கவனம் கொண்டது. சம உரிமை இயக்கத்தின் “கலாசார விழா“ நாடு தழுவிய ரீதியில் அனைத்துச் சமூகங்களையும் உள்ளடக்கிய ஒரு பொதுவேலைத்திட்டத்தின் ஊடாகவே சமாதானத்தை எட்டமுடியும், அனைவருக்குமான உரிமைகளைப் பெற முடியும் என்ற அடிப்படையைக் கொண்டது. இதற்கு ஏற்றவாறு கலாச்சாரத்தளத்திலான வேலைகளை முன்னெடுப்பதற்கும் கலைஞர்களும் எழுத்தாளர்களும் ஒருங்கிணைந்து பங்களிப்பதற்கும் ஒரு முன்னாயத்தத்தையும் அறிமுகத்தையும் உருவாக்க முனைவது.

இந்தியாவில் மதவெறியைத் தூண்டி மக்களை பிளவுபடுத்தும் சிவசேனா என்ற கொலைகாரக் கும்பலை இலங்கைக்கு இறக்குமதி செய்திருக்கிறார்கள். மறவன்புலவு சச்சிதானந்தன், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த யோகேஸ்வரன் போன்றவர்கள் சேர்ந்து வவுனியாவில் வைத்து இந்துமதவெறி என்னும் நச்சுக் கிருமியை பரப்ப வெளிக்கிட்டிருக்கிறார்கள். சிவசேனா, அரைக் காற்சட்டை ஆர்.எஸ்.எஸ், விஸ்வ இந்து பரிசத் போன்றவர்களுடன் கலந்து ஆலோசித்து விட்டுத் தான் தாங்கள் இந்த புண்ணிய காரியத்தை ஆரம்பித்திருப்பதாக மறவன்புலவு சச்சிதானந்தன் பத்திரிகைகளிற்கு தெரிவித்திருக்கிறார்.

 

எப்போது மக்களின் பிரச்சனைகளுக்கு, உண்மையாகப் போராடுகின்ற இடதுசாரிகள் முன்னணிக்கு வரவில்லையோ அப்போது முடிச்சு மாறிகள் சமூகத்தின் தலைவிதியை தீர்மானிக்கின்றனர்.

உதாரணமாக முதல்வராக ஆட்சியில் இருக்கும் விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவை யாழ்ப்பாணத்தில் "எழுக தமிழ்" கோசத்தில் நடத்திய கூத்துக்களை புரிந்து கொள்வது எப்படி? இன்று ஆட்சியில் இருக்கின்ற அவர்கள், இ;ன்று எதையும் செய்ய வக்கற்ற வெகுளிகள் என்பதைத் தாண்டி இதைப் புரிந்துகொள்ள முடியாது. மக்களை ஏமாற்றி தொடர்ந்து தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்த நடத்திய நாடகமாக விளங்கிக் கொள்ள முடியும். எல்லாம் மக்களை ஏமாற்றுகின்ற மோசடிகள் இவை.

எம் முன்னான கேள்வி எரியும் சமூகப் பிரச்சனைகள் மீது இடதுசாரிகள் என்ன செய்கின்றனர் என்பதே. இடதுசாரிய தனிமைவாதமும் குழுவாதமும் இன்று எதையும் செய்ய வக்கற்றுக் கிடக்கின்றது என்பது உண்மை.

பட்டதாரிகளிற்கு தொழில் வழங்குமாறு கோரி வேலையற்ற பட்டதாரிகள் சங்கங்கள் மாகாண ரீதியாக மாநாடு மற்றும் போராட்டங்களை இந்த மாதம் முழுவதும் நடாத்துகின்றனர். இன்று கிழக்கு மாகாணத்து வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு நகரில் மாநாடு ஒன்றினை நடாத்திதுடன், ஊர்வலமாக புறப்பட்டு நகரின் மத்தியில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இந்நிகழ்வில் அனைத்து வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் தமிக்க முனசிங்காவுடன் தென்பகுதி வேயைற்ற பட்டதாரிகள் சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழ் மக்கள் பேரவை, தமிழ் கலாச்சாரம் குறித்து பேசுகின்றது. முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கலாச்சாரம் பற்றி மேடைகளில் முழங்குகின்றார். புற்றுநோய் மருத்துவமனைக்கு நிதி சேகரிக்கும் நடைபவனியில் வந்த விளையாட்டு வீரனை, பெண் ஒருவர் முத்தமிட்ட காட்சிக்குப் பின்னால் - தமிழ் பண்பாடு குறித்து பேசப்படுகின்றது. மு.திருநாவுக்கரசு (முன்னாள் புலி) தமிழ் பண்பாட்டை காப்பாற்றுவது பற்றிப் பேசுகின்றார். சாறி கட்டாத பெண் தமிழ் பண்பாட்டுக்கு "துரோகம்" செய்கின்றவள் மட்டுமல்ல, அது அவளின் "நடத்தை கெட்ட" செயலாக யாழ் பல்கலைக்கழக கலைப்பிரிவு பேராசிரியர்களும் மாணவர்களும் அறிக்கை விடுமளவுக்கு, தமிழ் பண்பாடு குறித்த பொது வரையறைகள் இன்று முன்வைக்கப்படுகின்றது.

தமிழ் கலாச்சாரம் குறித்து பொது வெளியில் இப்படி அடிக்கடி பேசப்படுகின்றது. யாழ் சமூகத்தில் பெண்களின் உடல் மற்றும் உடைகள் மூலமாக தமிழ் பண்பாடு பேசுபொருளாக மாறி வருகின்றது. கோயில்கள் முதல் பொது நிகழ்வுகளில் நடக்கும் உரைகளில் கூட, பெண்களின் உடை சார்ந்த நடத்தை மீது - கலாச்சாரம் குறித்து பேசப்படுகின்றது.

அய்யா விக்கினேஸ்வரன் ஒரு முன்னாள் நீதிபதி. ஐப்பசி 2004 வரை அவர் அப்பதவியில் இருந்தார். இக்கால கட்டங்களில் மக்கள் விரோத இலங்கை அரசுகள் இலங்கை மக்களின் அடிப்படை உரிமைகளை காலில் போட்டு மிதித்தார்கள். தமிழ் மக்களின் வாழும் உரிமையே மறுக்கப்பட்டது. அவர்களின் பேச்சுரிமை மறுக்கப்பட்டு வாய் மூடி வாழ விதிக்கப்பட்டார்கள். தமிழ் மக்கள் தாம் வாழ்ந்த வீட்டில் இருந்து விரட்டப்பட்டார்கள். வயல்களும், கடற்கரைகளும் தொழிலகங்களும் இலங்கையின் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு இராணுவ முகாம்களாக்கப்பட்டன.

இவ்வளவு அநியாயங்கள் தமிழ் மக்களிற்கு எதிராக நடந்த போது அய்யா விக்கினேஸ்வரன் மறந்து கூட வாய் திறந்ததில்லை. தமிழ் மக்களை இனவெறி இலங்கை அரசுகள் இனக்கலவரங்களில் கொன்ற போது, பயங்கரவாதிகள் என்று சிறு குழந்தைகளைக் கூட துடிக்க துடிக்க கொன்ற போது நீதி வழுவா நெறி அய்யா விக்கினேஸ்வரனிற்கு அது அநியாயமாக தெரியவில்லை; அதனால் அவர் வாய் திறக்கவில்லை. கிருசாந்தி, கோணேஸ்வரி என்று எம் சகோதரிகள், எமது தாய்மார்கள் இலங்கை இராணுவக் காடையரின் கொடுமைகளால் தவித்து தம்முயிர் துறந்த போதும் அய்யா விக்கினேஸ்வரன் மெளனமாகவே இருந்தார்.

கொழும்பு கோட்டையில் இன்று (10/10/2016) பிற்பகல் 3 மணியளவில் ஜனநாயகத்திற்கான போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். போராட்டக்காரர்கள் தமது கோரிக்கைகளாக "குணரட்னம் உள்ளிட்ட அனைத்து அரசியல் கைதிகளும் உடனடியாக விடுதலை செய்!", "குமார் குணரத்தினத்தின் குடியுரிமையை ஏற்றுக் கொள்!", "அடக்குமுறை சட்டங்களை ரத்து செய்!" ஆகியவற்றை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிகளவிளான பொது மக்கள் பங்கு பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் 1000 ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி மாத்தளை மாவட்ட தோட்டத்தொழிலாளர்கள் இன்று காலை மாத்தளை மணிக்கூட்டு கோபுரச்சந்தியில் இருந்து பேரணியை தொடங்கி A9 பாதையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டத்தில்  புதிய ஜனநாயகக் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட், கம்யூனிஸ்ட் தொழிலாளர் சங்கம், இலங்கை தொழிலாளர் தொழிற்சங்கம், முன்னிலை சோசலிசக் கட்சி மற்றும் பிற இடதுசாரி கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து முன்னெடுத்திருந்தனர். 

புலிகள் உறுமிய, நரிகள் ஊளையிட்ட காடுகளை அழித்து அங்கு குடில்களைக் கட்டினார்கள். கோப்பியை பயிர் செய்ய மலைச்சாரல்களில் கூனியடித்து, குழி வெட்டி நட்டார்கள். இந்த ஆரம்ப வேலைகளில் எத்தனையோ அபாயங்கள்! எத்தனையோ உயிர் பலிகள் என்று "நாடற்றவர் கதை" என்னும் நூலில் சி.வி வேலுப்பிள்ளை 1824 இல் ஆரம்பமான கோப்பிக் காலத்தில் இந்தியாவில் இருந்து வந்த தொழிலாளர்களின் அவலவாழ்வின் வரலாற்றை பதிவு செய்கிறார். அந்த நிலைமைகள் இன்றும் மாறவில்லை.

இன்றும் சிறுத்தைகள், பன்றிகளின் துரத்தல்கள்; பாம்புக்கடிகள்; இரத்தம் உறிஞ்சிக் குடிக்கும் அட்டைகள் என்பவைகளோடு தான் நரம்புகள் கூதலடிக்க பனி பெய்யும் மலைக் காடுகளில் அவர்கள் தம் உழைப்பை தெயிலைச் செடிக்கு உரமாக வழங்குகிறார்கள். அவர்களிற்கு வழங்கப்படும் ஊதியமும் பிரித்தானியர்களின் காலத்தில் கொடுக்கப்பட்ட சொற்ப பணம் போலவே இன்றைக்கும் உழைத்துக் களைத்த தொழிலாளிக்கு பசியடங்க உண்ணமுடியா அளவு சொற்ப பணமே கொடுக்கப்படுகிறது.

68 வருடங்களாக இலங்கையின் அரசியல் எதுவித மாற்றமுமின்றி “இனவாதம்” என்ற மையப் புள்ளியையே சுற்றிச் சுற்றி சுழன்று கொண்டிருக்கிறது. அதே கட்சிகள். அதே வாரிசுகள். அதே கோரிக்கைகள். அதே சுலோகங்கள். நாடு தனது சுயாதீனத்தை இழந்து விட்டது. கடந்த அரசாங்கங்கள் போல தற்போதை அரசாங்கமும் உலக மயமாக்கல் பொருளாதாரத்தை நமது நாட்டில் நடைமுறைப்படுத்தும் ‘தரகு’ ஏஜன்சியாகவே செயற்படுகிறது.

நாடுபூராவும் குடிமக்கள் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். யுத்த பாதிப்பு தொடருகிறது. களவு-வன்முறை-போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளது. கைது-துன்புறுத்தல்-கொலை குறையவில்லை. நீதிமன்ற ஆணைகளையும் மீறி அடக்குமுறை பாய்கிறது. குடிமக்கள் அச்சத்துடனேயே வாழ்கிறார்கள்.

புலிகளின்  இருபாலை பெண்கள் முகாமின் சிறையில் சிவகாமி இருந்த போது தான் இந்திய இராணுவத்தினரால் உணவுப்பொட்டலங்கள்  வானூர்தி மூலம் போடப்பட்டது. இதை அங்கிருந்த பெண் போராளிகள் சிலர் மிகவும் சந்தோசமாக எடுத்துக் கொண்டார்கள். இனி தமிழர்களுக்கு விடிவு வந்து விடப்போகிறது என்ற பார்வையில். இந்தியாவின் ஆக்கிரமிப்பு அரசியலை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்பதை அவர்களின் பேச்சுக்களிலிருந்து புரிந்து கொள்ளக்கூடியதாகவிருந்தது. அவர்கள் எல்லோருமே ஆயுதப்பயிற்சிக்கு  உட்படுத்தப்பட்டவர்கள் தான். வேறு எந்த விதமான அரசியல் சித்தாந்தமோ தர்மமோ போதிக்கப்படவில்லை என்பது அவர்களின் நடவடிக்கைகளும் பேச்சுக்களுமிருந்தது. ஆமாம்  சில  போராளிகளின் தனிமனித தேடல்களும் தர்ம சிந்தனையும் தான் அங்குள்ளவர்களின் நடவடிக்கைகளில் தெரிந்தது. சரியான போதனையற்ற ஆயுதப்போராட்டமே உயிர்களையும் உடமைகளையும் மதிக்காது கொடிய அழிவுகளை ஏற்படுத்தியிருப்பது என்பது தான்  சிலரால் சீரணிக்க முடியாத உண்மை.

 

ஈழப் போராட்டத்தில் இணைந்து கொண்ட முதல் பெண் போராளிகளில் ஒருவரின் வாக்குமூலம் இது. உண்மைக்கான தேடல் (புளக்ஸ்பொட்) இணையத்தில் பிரசுரமான இந்த வாக்குமூலம், இதனை எழுதிய சிவகாமியின் (புனை பெயர்) அனுமதியுடன் பிரசுரம் செய்யப்படுகின்றது.

சிவகாமிக்கு தான் பிறந்த தன் குக்கிராமத்தைப் பற்றி நிறையவே பெருமை தான். இயற்கையானவளின் அற்புதப் படைத்தலின் கைவண்ணம் அந்தக் கிராமத்தில் நிறையவே உண்டு. அடிப்படை வசதிகள் மிக மிக குறைந்த ஓர் கிராமம் அது. மரங்கள், வயல்கள், காடுகள், தென்னம் தோப்புகள், தோட்டங்கள் ஆறுகள், சிறிய குளங்கள், கடல் என்று அந்தக் கிராமத்தை சுற்றி அண்டையில் காணப்படும் இயற்கை தந்த கொடை.

அதே போல் அங்கு வாழ்ந்த மக்களும் எந்தக் கள்ளம் கபடமுமின்றி தாமும் தம்பாடும் உண்டு என்று வாழ்ந்தார்கள். எந்த நவீன நாகரீக வாழ்க்கையும் தீண்டாத தூய்மையான இயற்கையாகவிருந்தது அக்கிராமம். கிராமத்தில் ஆரம்ப பாடசாலைகள் இரண்டும் உயர் வகுப்புக்குரிய பாடசாலை ஒன்றுமிருந்தது. மிக முக்கியமாக அங்கு ஆங்கில மொழியின் வாசனை சிறிதாக கூட இல்லையெனலாம். அப்படி இருந்த பாடசாலையில் தான் அம்மக்கள் தம் பிள்ளைகளை அனுப்பி வைத்தார்கள். பிள்ளைகளும் கள்ளமில்லா கல்வியையும் தம் மக்களின் வாழ்வாதாரத்தை ஒட்டிய வாழ்க்கையையும் பின்பற்றி வாழ்ந்தார்கள். பாடசாலை செல்வது மாலைநேரங்களில், சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் பெற்றோருக்கு உதவியாக தோட்டங்களிலும் வயல்களிலும் உதவியாக இருப்பது போன்ற வற்றில் ஈடுபட்டதால் வாழ்வின் போக்கையும் அதன் தாற்பரியங்களையும் உணர்ந்தவர்களாயிருந்தார்கள் அந்தப் பிள்ளைகள்.

இன்று 04 புதன், கொழும்பு கோட்டை, அரசமரத்தின் அருகே நல்லாட்சி அரசால் பொது மக்கள் மீது புதிதாக சுமத்தப்பட்டுள்ள வற் வரியை வாபஸ் பெற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. "பொது மக்கள் மீதான வற் வரி விதிப்பதை வாயஸ் பெறு!", "செல்வந்தர்கள் மீது வரியை அறவிடு!" ஆகிய கோசங்களை முன்வைத்து சிவில் அமைப்புகளும், தொழிற்சங்கங்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டன.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE