Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

2017ம் வருடத்திற்கான வரவு செலவுத் திட்ட அறிக்கை நவம்பர் 10ம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. அதில் அரசாஙகத்தின் வருமானம் மற்றும் செலவீனங்கள் சம்பந்தமான விபரங்களைத் தவிர வேறொன்றும் இல்லை என்பது அநேகமானோருக்குத் தெரியாது. வருடாந்த வரவு செலவு அறிக்கையானது அடுத்த வருடம்  நாட்டின் பொருளாதாரம் எந்தப் பாதையில் செல்கின்றது என்பதை விளக்குகின்றது. நாட்டின் பொருளாதாரம் செல்லும் பாதைக்கு ஏற்பவே எமது வீடுகளில் பொருளாதாரம், தனியார் பொருளாதாரம் ஆகியன தீர்மானிக்கப்படுகின்றன. இம்முறை வரவு செலவு திட்டம் காட்டியிருக்கும் பாதையில் சென்றால் எமக்கு, அதாவது, உழைக்கும் மக்களின், பணக்காரர்கள் அல்லாத எமது வர்க்கத்தின், எமது மக்களின் தலைவிதி என்னவாகும்? எமது எதிர்கால வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய படு மோசமான ஆலோகனைகள் இந்த வரவுசெலவு திட்டத்தில் அடங்கியுள்ளன. கீழ் வரும் ஆலோசனைகளை பார்த்தாலே அவற்றை விளங்கிக் கொள்ள முடியும்.

மட்டக்களப்பு மங்கலராம விகாரையில் காவி உடைக்குள் ஒளிந்திருக்கும் ஒரு மதவெறி பிடித்த மிருகம்  "தமிழ் நாயே, நான் உன்னைக் கொல்லுவேன்" என்று தன் கடமையைச் செய்த ஒரு தமிழ் அலுவலரை மிரட்டி ஊளையிட்டது. இலங்கையின் வரலாறு முழுக்க நிறைந்திருக்கும் சிங்கள பெளத்த மதவெறியின் வன்முறைக்கு ஒரு உதாரணம் தான் இது.

ஐந்து மாதங்களின் பின் போராட்டம் பத்திரிகை மறுபடியும் வெளிவந்துள்ளது. பொருளாதார நெருக்கடிகள், வேறு பல முக்கிய அரசியல் வேலைகளினால் ஏற்பட்ட நேரமின்மை போன்ற காரணங்களால் இப்பத்திரிகையை கிரமமாக வெளிக்கொணர முடியவில்லை. பத்திரிகை வெளிவராத இந்த ஐந்து மாத காலகட்டத்தில், எமது சகோதர அமைப்புகள் பலதரப்பட்ட ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்தன. அதேவேளை ஜனநாயகத்தையும், பொருளாதார சுபீட்சத்தையும் மக்களுக்கு வழங்கப் போவதாக கூறியபடி பதவிக்கு வந்த ரணில்- மைத்திரி அரசு எந்தவொரு மக்கள் நலக்கோரிக்கைகளையும் நிறைவேற்றவில்லை. மாறாக, பொருளாதார உரிமைகளும், ஜனநாயக உரிமைகளும், குடியியல் உரிமைகளும் ஆட்சியாளர்களால் மக்களுக்கு மறுக்கப்படும் நிலைமையே நிதர்சனமாக உள்ளது.

வழமைக்கு மாறாக அமெரிக்கத் தேர்தலானது, உலக மக்களின் கவனத்தைக் குவிய வைத்தது. அமெரிக்க ஊடகங்கள் முதல் உலக ஊடகங்கள் வரை, "அபாயகரமான மனிதனாக" வருணிக்கப்பட்ட டொனாலட் ட்ரம்ப், அமெரிக்காவின் ஜனாதிபதியாகியுள்ளார். கிளாரி கிளின்ரன் வெல்வார் என்று கூறிய கருத்துக் கணிப்புக்கள் முதல் அரசியல் ஆய்வாளர்களின் எதிர்வுகூறல்கள் வரை சமூக அறிவியல் பினாத்தல்கள் அனைத்தும் புஸ்வாணமாகியுள்ளது. ஊடகங்கள் முதல் முதலாளித்துவ அறிவுத்துறை வரை, மக்களில் இருந்து விலகிச் சென்று இருப்பதையே எடுத்துக் காட்டுகின்றது. இதற்கு பிரிட்டன் ஐரோப்பாவில் இருந்து பிரிந்து சென்றது மற்றொரு எடுத்துக்காட்டு. 

கோட்டை புகையிரத நிலையத்தின் அருகே குமார் குணரத்தினத்தின் அரசியல் மற்றும் குடியியல் உரிமைகளிற்கான தொடர் போராட்டம் இன்று ஒரு வருடத்தினை நிறைவு செய்துள்ளது. இந்த நாளில் (13/11/2016) பிரதான இடதுசாரிய கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் கலைஞர்கள் பிரதிநிதிகள் போராட்டத்தில் கலந்து கொண்டு அரசாங்கத்திற்கு தமது பலத்த கண்டனத்தை தெரிவித்திருந்தனர்.

டொனால்ட் டிரம்ப்பை வில்லன், இனவெறியன், நிதானம் இல்லாதவர் என்றவர்கள் அந்தாளு தேர்தலில் வென்றதும் மேன்மை தங்கிய அடுத்த ஜனாதிபதியே, வணக்கத்திற்குரிய அதிபரே என்கிறார்கள். அதிகாரத்திற்கு யார் வந்தாலும் அடிமைகள் விழுந்து கும்பிடுவது தான் அயோக்கியர்களின் அரசியல். அன்று வீர வசனங்களும், இன்று சமாளிப்புகளும் என்னும் கேலிக்கூத்துக்கள் சிலவற்றை கீழே காண்போம்.

நல்லாட்சி என்னும் பெயரில் பொல்லாத ஆட்சி செய்பவர்களினால் குமாரின் அரசியல் உரிமைகள் மற்றும் குடியுரிமை பறிக்கப்பட்டு, அவர் இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த வருடம் நவம்பர் 13ம் திகதி, குமாரின் அரசியல் உரிமை மற்றும் குடியுரிமையை வலியுறுத்தி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகே உண்ண விரதப் போராட்டத்தை ஆரம்பித்து தொடர்ந்து நடாத்தி வருகின்றது முன்னிலை சோசலிச கட்சி. கடந்த ஒரு வருடமாக பல இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள், சமூக ஜனநாயகவாதிகள், இளம் ஊடகவியராளர்கள், கலைஞர்கள் என பல்பேர் குமாரின் உரிமைகளுக்காகவும் -  உறுதிப்படுத்தப் போவதாக வாக்குறுதி அளித்த ஜனநாயக்தை உறுதிப்படுத்துமாறு கோரியும் இந்த எதிர்ப்பு போராட்டத்தில் கடந்த ஒரு வருடமாக பங்கு பற்றி வருகின்றனர்.

காசு கல்வி கற்பதை பாதிக்குமா?. குறைந்தளவு வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து வரும் குழந்தைகள் பணக்காரக் குடும்பங்களில் இருந்து வரும் குழந்தைகளை விட கல்வியில் பின்தங்கி இருப்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆம், அந்தக் குழந்தைகள் கல்வியில் பின் தங்கி இருக்கிறார்கள் ஏனென்றால் அவர்கள் ஏழைகள். தாய் தந்தையரின் கல்விநிலை அவர்களின் பிள்ளைகளின் கல்வியை பாதிக்கும் மற்றொரு பிரதான காரணியாக அமைகிறது. எனவே கல்விமட்டத்தில் அடிநிலையில் இருக்கும் ஏழைமக்களின் குழந்தைகளிற்கு கல்வி என்பது கடக்கமுடியாத பெருங்கடலாகவே இன்று வரைக்கும் இருந்து வருகிறது. இவை மேலை நாடுகளில் செய்யப்பட்ட ஆய்வுகள். ஒப்பீட்டளவில் வசதி படைத்த நாடுகளான மேலை நாடுகளிலேயே இந்த நிலை என்னும் போது இலங்கை போன்ற நாடுகளின் ஏழைக்குழந்தைகளின் நிலை எண்ணிப் பார்க்க முடியாதது.

கிறிஸ் மனிதன் தொடங்கி "ஆவாக் குழு" வரை, மக்களை அடக்கியாள்வதற்கான ஆளும் வர்க்கத்தின் கருவிகளே. மக்களை பிரித்து வைத்திருக்கவே இனவாதம், மதவாதம் இருப்பது போன்று, மக்களை அச்சுறுத்தவும் அடக்கியாளவும் வன்முறைக் கும்பல்களை அரசுகளே உருவாக்குகின்றன.

உதாரணமாக 1987 ஆண்டில் "அமைதிப்படை" என்ற பெயரில், இலங்கையில் வந்திறங்கியது இந்திய ஆக்கிரமிப்புப் படை. ஆனால் அவர்கள் புலிகளை அழிக்க முனையவில்லை ஏன்? 2009 களின் பின் இலங்கை அரசுக்கு ஆவாக் குழு தேவைப்பட்டது போல், இந்திய அரசுக்கு  புலிகளின் இருப்பு தேவையாக இருந்தது என்பதே உண்மை. 

உண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான ஒரு சூழ்நிலையில் இருக்கின்றோம். அண்மையில் பெண் பிறப்புறுப்பைப் பற்றிய விளக்கப் பதிவொன்றை இட்டேன். உடனே என்னில் அக்கறை கொண்ட நண்பன் ஒருவன் ஓடிவந்து "நீ முதலில் ஒரு பெண் என்பதை நினைவில் கொள்" என்றான். அதற்குப் பிறகுதான் அதை அழித்துவிடக் கூடாது என்பதில் தீவிரமாயிருந்தேன்.

பெண்கள் சிறுகதை எழுதுவதில் ஒரு சிக்கல் இருக்கின்றது. அவர்கள் எழுதுவதையும் வாழ்க்கையையும் தொடர்புபடுத்திப் பார்க்கின்ற தன்மையே அதிகம். அங்கு படைப்பாளி என்று பார்க்கப்படாமல் இது இவளுக்கு நடந்தது போலும் என்ற பார்வையோடு பெண் நெருங்கப்படுகின்றாள். அதோடு படைப்பில் ஆணுக்கு இருக்கும் சுதந்திரம் பெண்ணுக்கு இருப்பதில்லை. அட அவ்வளவு ஏன் வாசிப்பில் கூட அந்தளவு சுதந்திரம் இருப்பதில்லை. ஒரு பாலியல் தொடர்பான படைப்பை படித்தேன் என்பதை ஒரு ஆண் கூறினால் அறிவார்ந்தவனாகவும், பெண் கூறினால் "அயிட்டமாகவும்" பார்க்கப்படுகின்ற ஒரு நிலையில் நம் பெண்கள் சிறுகதைக்குள் (நாம்) வந்து எழுதத் தொடங்கினால் ஒரு ஊரிலே ஒரு என்றுதான் தொடங்குகின்றனர். இதையெல்லாம் தாண்டி எழுதியவர்களும் இருக்கின்றனர். ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்கள் காணாமல் போயுள்ள வரலாறே அதிகம்.

உலக வரலாற்றில் முதன் முதலாக அணுகுண்டு வீசி மக்களைக் கொன்ற கொலைகாரர்கள் அமெரிக்க அரச பயங்கரவாதிகள். ஜப்பான் நாட்டு மக்களின் மீது அணுகுண்டு வீசி இலட்சக்கணக்கான மக்களைக் அமெரிக்க கொலைகாரர்கள் கொன்றார்கள். முதலில் 06.08.1945 அன்று கிரோசிமா நகரின் மீதும் மூன்று நாட்களின் பின்பு நாகசாகி நகரின் மீதும் அணுகுண்டு வீசினார்கள்.

ஜப்பானை அச்சுறுத்தி இரண்டாம் உலகப் போரை முடிவிற்கு கொண்டு வருவதற்காக அணுகுண்டு வீசப்பட்டது என்று கொஞ்சமும் வெட்கமின்றி, மனிதாபிமானம் இன்றி அமெரிக்க அரசுப் பயங்கரவாதிகள் பொய் சொன்னார்கள். ஆனால் ஜப்பான் தோல்வியை ஒத்துக் கொண்டு சரணடையும் முடிவில் இருந்தது. அணுகுண்டு போட உத்தரவிட்ட ஜனாதிபதி ட்ரூமன் அரசின் கடற்படைத் தளபதியாக இரண்டாம் உலக போர்க்காலத்தில் கடமையாற்றிய அட்மிரல்    வில்லியம் லீகி போன்றோரே பின்னர் தமது குறிப்புகளில் ஜப்பான் தோல்வியடையும் நிலையில் சரணடைய இருந்ததையும், வழக்கமான ஆயுதங்களைக் கொண்டே போரை முடிவிற்கு கொண்டு வந்திருக்கலாம் என்பதையும் அணுகுண்டு வீச வேண்டிய தேவை இருக்கவில்லை என்ற விமர்சனங்களையும் வெளியிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின் போராட்டம்” தளர்வை நோக்கிச் சரிந்திருப்பதாகத் தெரிகிறது.  கடந்த வாரம் கொக்குவில், குளப்பிட்டிச் சந்தியில் வைத்துப் பொலிசாரினால் கொல்லப்பட்ட மாணவர்கள் கஜன், சுலக்ஸன் ஆகியோரின் மரணத்துக்கு நீதியான தீர்வு கிட்டும்வரை பல்கலைக்கழக இயக்கத்தை தவிர்ப்பது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் விடுத்திருந்தனர். இந்த அறிவிப்பு பகிரங்க வெளியில் வந்தபோது பல்கலைக்கழக நிர்வாகமோ, மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகளோ மாற்று அபிப்பிராயங்களையும் மறுப்புகளையும் தெரிவித்திருக்கவில்லை. ஆகவே, “நீதி கிடைக்கும்வரை இயங்கா மறுப்பு நடவடிக்கை“ அநேகமாக வெற்றியடையும் என்றே பொதுவாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த எதிர்பார்ப்புக்கேற்ற மாதிரி, பின்னர் நடந்த நிகழ்ச்சிகள் அமையவில்லை.

"இந்த உலகமானது, எப்போதும் போல, எங்கேயும் போல மதத்தாலும், மதவெறியாலும், மதங்கள் பல ஆயிரம் வருடங்களாகச் சேமித்துக் கடத்தித் தொலைத்த காட்டு மிராண்டித்தனத்தின் உச்சமானவர்கள் வாழும் புனித பூமியென மீண்டுமொரு முறை உணர்ந்து கொண்டேன். இந்த முறை புனித பெளத்தக் காவிகள் எனக்கு அறிவுக்கண்னைத் திறந்து விட்டார்கள்".

"நேற்று அருந்தப்பில் உயிர் பிழைத்தோம். இன்றோ நாளையோ, ஏன் நாட்கள் பல கடந்தும் கூட எம் மீதான வன்மம் தொடரலாம். வாள் கொண்டு பல நூறு பேரால் வெட்டி வீழ்த்தப்படலாம். நானோ...எனது வீட்டிலுள்ளவர்களோ...எங்கள் வீட்டிலுள்ள பச்சைக் குழந்தையோ கூட. உங்களுக்கு நினைவிருக்கக் கூடும், எங்கள் வீட்டிற்கு மிக அருகில் பெளத்த விகாரை இருப்பதைப் பற்றியும், மிகச் சத்தமாக பிரித் ஓதுவதைப் பற்றியும், கலை நிகழ்ச்சிகளை ஒலிபெருக்கியில் ஒலிபரப்புவது பற்றியும் சில மாதங்களுக்கு முன்னர் எழுதியிருந்தேன்" என்று தமிழ்ப் பெண்ணாக இருப்பதினால் பெளத்த மதவெறியர்களினால் தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் நடந்த அநியாயங்களை மேலுள்ள வரிகளில் மனம் கசந்து ஒரு பெண் எழுதுகிறார்.

தமிழ் மொழி பேசும் வடகிழக்கு மக்கள் மத்தியிலான இனவாத அரசியலானது இன்று இந்துத்துவமாக சாதியமாக மேலெழுந்;து வருகின்றது. இது வெள்ளாளிய இந்துத்துவ சாதிய சமூகத்தின் தன்னியல்பான சுய எழுச்சியா? சாதியிலான தமிழ் சமூகத்தின் சுய எழுச்சியே ஒழிய, இதற்குப் பின்னால் புறநிலையான சக்திகளின் தலையீடு கிடையாது என்று அரசியல் முன்வைக்கப்படுவது மெதுவாகக் தொடங்கி இருக்கின்றது.

குமார் குணரத்தினத்தை விடுதலை செய்து, அவரின் குடியுரிமையினை உறுதிப்படுத்துமாறு அரசுக்கு அழுத்தத்தை கொடுக்க கோரி துண்டுப்பிரசுர விநியோகம் மற்றும் சுவரொட்டிகள் நாடு முழுவதும் இன்று முன்னிலை சோசலிசக் கட்சியின் உறுப்பினர்களால் பரவலாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறிப்பாக யாழ் குடாநாட்டில் முன்னிலை சோசலிச கட்சியினரால் பல்வேறு பகுதிகளில் துண்டுப்பிரசுர விநியோகம் இடம்பெற்றதுடன், பிரதான நகரங்களில் குமார் குணரத்தினத்தின் குடியுரிமையினை  ஏற்றுக் கொள்ளக் கோரிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

குமார் குணரத்தினம சுகயீனமுற்றிருந்த அவரது தாயாரை வைத்தியரிடம் அழைத்து செல்வதற்காக கடந்த வருடம் நவம்பர் மாதம் 4ம் திகதி அவரது தாயாரது வீட்டிற்கு சென்றிருந்த வேளையில், அவரின் விசாக் காலம் முடிவடைந்த நிலையில் நாட்டில் தங்கியிருந்த விடயத்தை முன்வைத்து அவரை கைது செய்திருந்தது இலங்கை அரசு. அவரை பல மாதங்களாக தடுப்புக்காவலில் வைத்திருந்து இறுதியில் குடிவரவு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து சிறையில் அடைத்தனர். குமார் குணரத்தினம் தனது இலங்கை பிரஜாவுரிமையினை மீளப்பெற விண்ணப்பித்த பத்திரத்தை கிடப்பில் போட்டு விட்டு சிறைத் தண்டனை முடிந்ததும் அவரை நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அவர் கைது செய்யப்பட்ட நாள் முதல் பல்வேறு அரசியல் அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள், தனிநபர்கள் என பல்வேறு தரப்பினர் அவரின் விடுதலையை வலியுறுத்தி தொடர்ச்சியான பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால் அரசாங்கம் இது குறித்து மௌனப்போக்கை கடைப்பிடித்து வருகின்றது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE