Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

நேற்றுக் காலையில் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தொடர்ச்சியாக எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த துறைமுக ஊழியர்கள் கடற்படை தளபதியின் தலையீட்டுடன் தாக்கப்பட்டுள்ளார்கள். இந்த தாக்குதல் சம்பவமானது அரசாங்கத்தின் தேவைக்காக அரசாங்கமும் அறிந்த நிலையில் நடந்துள்ளது தெரிகின்றது. அம்பாந்தோட்டை துறைமுகம் உட்பட 15000 ஏக்கர் காணி விற்கப்படுவதற்கும், துறைமுகத்தை தனியார்மயப்படுத்துவதற்கும் எதிராகவும், தமது தொழில் பாதுகாப்பு ஒழிக்கப்படுவதற்கு எதிராகவும் துறைமுக ஊழியர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 

அரசியல் தரகன், பார்ப்பனப் பயங்கரவாதி சோ. ராமசாமி  மண்டையைப்  போட்டு விட்டான் . ஒரு எண்பது வயது மனிதரை, "துக்ளக்" என்னும் தமிழ் இதழின் ஆசிரியரை, நாடக ஆசிரியரை, திரைப்பட நடிகரை மரியாதையில்லாமல் அவன், இவன் என்று எழுதலாமா என்று சில மரியாதை ராமன்கள் கவலைப்படலாம். தன் வாழ்நாள் முழுவதும் உழைக்கும், ஏழை மக்களிற்கு எதிராக பார்ப்பனிய வெறியைக் கக்கி வந்த இவனிற்கு செருப்பால் அடித்து பாடையிலே ஏற்றுவது தான் சரியான மரியாதை.

மலையக மக்கள் நீண்ட காலமாக போராடி வரும் கோரிக்கைகளான நாளொன்றிற்கு 1000 ரூபா சம்பளம் மற்றும் சொந்த காணி - வீடு ஆகியவற்றிற்க்கான போராட்டம் காலத்திற்கு காலம் ஆட்சியாளர்களுக்கு கூஜா தூக்கும்  மலையக அரசியல்வாதிகளால் மழுங்கடிக்கப்பட்டு, எந்தவித தீர்வுகளையும் வழங்காது இழுத்தடிப்புக்கு உள்ளாகி கொண்டு வருகின்றது. 

குறிப்பாக மலையக பெண்கள் இதனால் மிகப் பல வருடங்களாக பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். பெண்கள் விடுதலை இயக்கத்தை சேர்ந்த தோழியர்கள் மலையக பெண்கள் மத்தியில் அவர்கள் முகம் கொடுக்கும் நாட்கூலி, காணி, வீடு போன்ற பல பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக பிரச்சாரம் ஒன்றினை டிசம்பர் 10ம், 11ம் திகதிகளில் பதுளை மாவட்டத்தில் முன்னெடுத்துள்ளனர். அவை குறித்த படங்கள் இங்கே...

இன்று சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு அரச படைகள், புலனாய்வு பிரிவினர், துணை ராணுவக்குழுக்களால்  கைது செய்யப்பட்டும்- கடத்தப்பட்டும் காணமல் போனோர் தொடர்பான தகல்களை வெளிப்படுத்த கோரியும், பொறுப்புக்கூறலை வலியுறுத்தியும் யாழ்.பிரதான பேரூந்து நிலையம் முன்பாக சமவுரிமை இயக்கத்தினரால் ஆர்ப்பாட்ட போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. >

வாழ்கையை மேம்படுத்த மனிதர்கள் பலவகையான இன்னல்களுக்கும் துயரங்களுக்கும் முகம் கொடுக்கின்றார்கள். சிலர் போராடி வாழ்கிறார்கள். பலரோ சாவை எதிர் கொள்கிறார்கள். மனித குலத்தில் ஒரு சில மனிதர்களே மானுட விடுதலைக்காக போராட முன் வருகிறார்கள். தம் சக மனிதர்களிற்கு உதவ முன் வருகிறார்கள். அவ்வாறு போராடியவர்களே தோழர்கள் லலித்தும் குகனும்.தோழர்கள் லலித் மற்றும் குகன் காணாமல் போனவர்களை தேடிச் சென்றதற்காக அரசியற் கைதிகளின் விடுதலைக்காக முன் நின்று போராடியதற்காக 09.11.2011 அன்று யாழ்பாணத்தில் வைத்து மகிந்த ராஜபக்ச அரசின் கூலிப்படைகளால்  கடத்தப்பட்டார்கள்.

கேரளாவில் கடந்த 24.11.2016 அன்று மாவோயிஸ்ட் தோழர்கள் குப்பு தேவராஜ், வழக்கறிஞர் அஜிதா ஆகியோரை போலி மோதலில் படுகொலை செய்த கேரள பிண ராய் விஜயன் தலைமையிலான சிபிஎம் கட்சியின் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் கொடூர நடவடிக்கையை கண்டித்து தமிழக கர்நாடக கேரள சிறைகளில் வாடும் மாவோயிஸ்டு புரட்சியாளர்கள், ஜனநாயக சக்திகள் மற்றும் அரசியல் சிறைவாசிகள் நாளை (9/12/16) ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.

மாவோயிஸ்ட் தோழர்கள் குப்பு  தேவராஜ்  மூர்த்தி, வழக்கறிஞர் தோழர் அஜிதா மீதான போலி மோதல் படுகொலையை கண்டிப்போம்.

☆ அனைத்து மோதல் சாவுகளும் அரசு படுகொலைகளே !

☆ தியாகிகள் நினைவு நீடுழி வாழ்க!

☆ போலி மோதல் படுகொலைகளை எதிர்த்து போராடுவோம்!

ஜெயலலிதா என்னும் ஊழலில் ஊறிப் போன பார்ப்பன வெறி பிடித்த சர்வாதிகாரி இறந்து போனது ஒரு இலை உதிர்வது போன்றது தான். எடுத்துச் சொல்வதிற்கு எதுவேமே இல்லாத ஒரு மக்கள் விரோதியின் மரணம் இறகை விட இலேசானது. ஆனால் இறந்து போனவர்களைப் பற்றி புறம் பேசுவது தமிழ்ப் பண்பாடு அல்ல என்றும், அலையடிக்கும் அரசியல் கடலில் எதிர் நீச்சல் போட்ட புதுமைப் பெண் என்றும், துணிச்சலான முடிவுகளை எடுத்தவர் என்றும் ஈழத்தின் காவல் மதில் என்றும் கைப்பிள்ளைகள் கதறுவதைப் பார்க்கும் போது ரொம்பவே சின்னப் பிள்ளைத்தனமாக இருக்கிறது.

இறந்து போனதால் ஜெயலலிதாவும், அவரது அ.தி.மு.க என்னும் கள்ளச் சாராய, கட்டைப் பஞ்சாயத்து, ரெளடிக் கூட்டமும் செய்த ஊழல்கள் இல்லை என்று ஆகி விடுமா? தமிழ்நாட்டின் காட்டையும், கடலையும், கனிம வளங்களையும் உருத் தெரியாமல் உடைத்து விற்ற கொள்ளைகள் இல்லை என்று ஆகி விடுமா? ஆனந்த விகடன் போன்ற முதலாளித்துவ பத்திரிகைகளே அமைச்சர்கள் ஒவ்வொரு ஒப்பந்தத்திற்கும் எவ்வளவு கமிசன் அடிக்கிறார்கள் என்றும் அந்த கமிசனில் இருந்து ஊழல் தாய்க்கு எவ்வளவு கப்பம் கட்டுகிறார்கள் என்றும் பட்டியல் போடுகிறார்களே அந்த பட்டியல்கள் இறந்து போனதும் இல்லை என்று ஆகி விட்டதா?

காலனித்துவ காலம் முதற் கொண்டு இலங்கை தனது சுயாதீனத்தை என்றுமே கொண்டிருக்கவில்லை. அதன் பொருளாதாரத் திட்டங்கள் தொடர்ந்து அந்நியர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்புடையதாகவே எமது நாட்டு அரசியல் தரகர்களால் தயாரிக்கப்பட்டு வந்துள்ளன. இன்றும் அதுவே தொடர்கிறது.

இந்த தரகு அரசியலை செயற்படுத்துவதற்காகவே இலங்கையில் "இனப்பிரச்சனை"யை ஊக்குவிக்கும் ஒரு அரசியல் யாப்பை ஆங்கிலேயர்கள் அன்றே எழுதிக் கொடுத்து விட்டுச் சென்றனர். நமது மேட்டுக் குடிக் கூட்டங்களும் தங்கள் தங்கள் சொத்துப் பத்துக்களை-வாழ்க்கை வசதிகளைப் பாதுகாக்கும் ஒரேயொரு இலட்சியத்துடன்  நாட்டு மக்களின் உயிர்களைப் பலி கொடுக்கும் அரசியலை முன்னெடுத்து வருகின்றனர்.

தன்னை நாட்டை விட்டு வெளியேற்றுவதே அரசாங்கத்தின் திட்டமாக இருந்தது என கூறிய முன்னிலை சோஷலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் எனி்னும் தற்போது இந்த விடயம் முடியாமல் போயுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு வருட சிறைத்தண்டனையின் பின்னர் நேற்றைய தினம் விடுதலையான குமார் குணரட்னம் இன்று (03/12/2016) இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் ஜனநாயகத்தை மீள உறுதி செய்வதற்காக கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகே தொடர்ந்து 386 நாட்களாக இடம் பெற்ற சத்தியாககிரக போராட்டம் இன்று (03-12-2016) தற்காலிகமாக நிறைவடைந்தது.  குமார் குணரத்தினத்தின் விடுதலை, பிரஜாவுரிமை மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை என பல ஜனநாயக கோரிக்கைகளை முன்வைத்து இந்த சத்தியாககிரக போராட்டம் தொடங்கப்பட்டது. ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தில் 386 நாட்கள் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் இடம்பெற்ற இந்த போராட்டம், ஒரு புதிய கட்டத்தை தொடங்க உறுதியை அளித்துள்ளது.

இன்று 02-12-2016 பாரிஸ் வாச்சபல் நகரத்தில் ஒன்று கூடிய முன்னிலை சோசலிச கட்சி மற்றும் புதிய ஜனநாயக மக்கள் முன்னணி தோழர்கள் "மக்கள் போராட்ட இயக்கத்தின்" வெளியீடுகளான போராட்டம் மற்றும் வம (சிங்கள மொழி) பத்திரிகைகளை அறிமுகம் செய்து வைத்து மக்கள் மத்தியில் விநியோகம் செய்தனர். இந்த நடவடிக்கை குறித்த படங்களை இங்கு காணலாம்.

கியூபாப் புரட்சியை தங்கள் வாழ்க்கையாகக் கொண்டாடிய பல பத்து லட்சக்கணக்கான மக்கள், தங்களை வழிநடத்திய தலைவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். உலக மக்களோ, உலகெங்கும் புரட்சியை எடுத்து வந்த சர்வதேசியவாதிக்கு புரட்சிகர வணக்கத்தை தெரிவித்து வருகின்றனர். பிடல் காஸ்ரோவின் மரணம் கூட, ஏகாதிபத்தியத்துக்கு சவால் விடுமளவுக்கு வலிமை வாய்ந்ததாக சர்வதேசியத்துக்கான அறைகூவலாக மாறியிருக்கின்றது.

உலகெங்கும் உள்ள கோடானுகோடி மக்கள் கஸ்ரோவை நேசிப்பதென்பது சுரண்டுவதற்கு எதிரான ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையின் மீதான விருப்பமும் தெரிவும் தான். கஸ்ரோவை வெறுப்பவர்களோ செல்வத்தை மக்களுக்கு பகிர்ந்தளிப்பதை விரும்பாதவர்களும், கியூப மக்களை சுரண்ட விரும்புகின்றவர்களும் தான்.

விசா காலாவதியான நிலையில் நாட்டில் தங்கியிருந்தாக கைது செய்யப்பட்ட முன்னிலை சோஷலிஸக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் தோழர் குமார் குணரத்தினம் இன்று விடுதலை செய்யப்பட்டார். 2015 நவம்பர் 4ம் திகதி கைது செய்யப்பட்ட அவருக்கு கேகாலை நீதிமன்றம் ஒரு வருட சிறைத்தண்டனை விதித்திருந்தது. இன்று விடுதலையடைந்த தோழர் குமார்; குணரத்தினத்தை அழைத்து வருவதற்காக பெருந்தொகையான முன்னிலை சோஷலிஸக் கட்சித் தோழர்கள் நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்தனர். 

முன்னிலை சோசலிசக் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் குமார் குணரத்தினம் இன்று பகல் அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். அவரை வரவேற்றக கட்சி உறுப்பினர்கள், ஜனநாயகவாதிகள்,  சிவில் சமூகங்களை சேர்ந்தவர்கள் என ஆயிரத்திற்கும் அதிகமானோர் கூடியிருந்தனர். வெளியில் வந்த அவரை அங்கிருந்தோர் கட்டித் தழுவிக் கொண்டனர். அதனை தொடர்ந்து அங்கு வருகை தந்திருந்த ஊடகவியலாளர் மத்தியில் அவர் உரையாற்றினார்.

கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள, முன்னிலை சோசலிசக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் குமார் குணரத்தினம் நாளை(02) அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னிலை சோஷலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரத்தினம் ஒருபோதும் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட மாட்டார் என்று என்று ஸ்ரீலங்கா அரசாங்கம் இன்று பாராளுமன்றத்தில் உறுதியளித்துள்ளது.

குமார் குணரத்தினம் ஸ்ரீலங்கா பிரஜாவுரிமையைப் பெற வேண்டுமாயின் அவுஸ்திரேலியக் குடியுரிமையை இரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவித்த உள்விவகார அமைச்சர் எஸ்.பி நாவின்ன, அவர் அதற்கான விண்ணப்பத்தை சமர்பித்தால் பரிசீலிக்க முடியும் என்றும் கூறினார்.

நேற்று 29/11/2016 அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் தனியார் பல்கலைக்கழகங்களை மூடக்கோரி ஆர்ப்பாட்ட ஊர்வலம் இடம்பெற்றது. ஊர்வலம் பாராளுமன்றத்தை அண்மித்த போது கண்ணீர்ப்புகை துப்பாக்கி பிரயோகம் மற்றும் தண்ணீர் பீரங்கிகள் பிரயோகம் செய்யப்பட்டது. களனி பல்கலைக்கழகத்திலிருந்து பிற்பகல 1.00 மணிக்கு ஆரம்பித்த ஆர்ப்பாட்ட எதிர்ப்பு ஊர்வலத்தில் பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கு கொண்டிருந்தனர். தனியார் பல்கலைக்கழகங்களை இழுத்து மூடு, இலவசக் கல்வியை உறுதி செய் ,கல்விக்கான மானியத்தை அதிகரி, வெளிவாரி பட்டப்படிப்பை அதிகரி ஆகிய கோசங்களுடன் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிரான கண்டனங்களையும் முழங்கிய படி முன்னேறிய ஆர்ப்பாட்டத்தின் மீது அரச படையினர் மிலேச்சத்தனமான தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE