முகமூடி போட்ட சமூகவிரோதிகளும் - அதற்கு உசுப்பேற்றும் தற்குறிகளும்
பாலியல் காட்சிகளைப் போடுவது, பாலியல் காட்சிகளையிடும் சமூக வலைத்தளத்தை விளம்பரம் செய்வது என்பவை ஊழல் ஒழிப்பாகியிருக்கின்றது. இதுதான் அர்ச்சுனாவினதும் – தமிழடியானினதும் சமூக அக்கறைக்கான, பொது அளவுகோலாகி இருக்கின்றது.
பெண்களை ஒடுக்கப் பாலியல் காட்சிகளைப் பதிவிடுவது, தமிழனின் ஒழுக்கத்தையும் - கலாச்சாரத்தையும் பாதுகாப்பதாம். இத்தகைய தமிழ் பாசிச அரசியலை முன்னிறுத்தி, சுயபிழைப்பை தொடருகின்றனர் கூட்டுக் களவாணிகள்.
கோயில் கோபுரங்களில் நிர்வாணக் காட்சிகளையும் - புணருகின்ற காட்சிகளையும் அமைத்து, அதை கைகூப்பிக் கும்பிடுகின்ற ஆணாதிக்கச் சமூகத்தின் கலாச்சாரம் தான், சமூக வலைத்தளத்தில் பாலியல் காட்சிகளைப் போட்டு அதை உணர்ச்சிகரமான தமிழ் தேசியமாக்கி கொண்டாடுவது சமூக செயற்பாடாகி இருக்கின்றது. தங்கள் சுய பாலியல் வக்கிரங்களை, தமிழ் தேசியத்தின் பெயரில் பின்னோட்டமாக்கி அவர்களை தம்மை தொடர்பவர்களாக உருவாக்குகின்றது. வாக்குப் போடக் கோருகின்றது. யாருக்கு வாக்கு போடவேண்டும் என்று நேரடியாகவோ - மறைமுகமாகவோ பிரச்சராம் செய்கின்றது.
