சீமான் முதல் அருச்சுனா வரையான அரசியலின் பின்புலம்
பண மோசடிகளில் ஈடுபடும் புலம்பெயர் தரகர்களினால் இயக்கப்படுகின்றவர்கள் தான், சீமான் முதல் அருச்சுனா வரை. புலம்பெயர் மோசடிக்காரத் தரகுப் பணம் இல்லையென்றால், கட்டுப்பணத்தைக் கூட செலுத்தத் தயாரற்றவர்கள் இவர்கள்.
தமிழினவாத பாசிச தலைமைகளால் தவறாக வழிநடத்தப்பட்டுப் பலியிடப்பட்டவர்களின் குடும்பங்கள், அவர்களால் கொல்லப்பட்ட குடும்பங்கள், தவறான போராட்டத்திலிருந்து தப்பி பிழைத்தவர்களின்.. வாழ்க்கைக்கு ஒளியூட்ட முடியாதவர்களே, வாக்கு அரசியலில் தம்மை முன்னிறுத்துகின்றனர். தொடர்ந்து தமிழ் தேசியம் என்று கூறுகின்ற இந்தப் பிழைப்புவாத அரசியலை, சொந்தப் பிழைப்புக்காக முன்வைக்கின்றனர். கடந்தகாலத்தில் அரச சலுகைகளைப் பெறுவதற்குத் தயங்காதவர்கள். அதற்காக குறுக்கு வழிகளில் நக்கிப் பிழைத்தவர்கள்.
அன்றும் இன்றும் தமிழ் தேசிய வாக்கு அரசியலை கடைவிரித்து வியாபாரம் செய்யும் கூட்டத்துக்கு, புலம்பெயர் நிதியே ஆதாரம், அடித்தளம். தற்குறித்தனத்தால் பலர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்தனர். இதன் மூலம் புலம் பெயர் தரகர்களின் நிதிச் சலுகைகளை இழக்க, மறுபுறம் புலம்பெயர் தரகர்களின் வசூல் வேட்டைக்கு பாரிய இழப்பு. அரசியல் வியாபாரம் மண்ணைக் கவ்விய கூட்டுத் துயரம்.
