Language Selection

புதிய ஜனநாயகம் 2011

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகிலுள்ள விக்கிரம சிங்கபுரத்தைச் சேர்ந்த பு.ஜ.தொ.மு.வின் மூத்த தோழரும், மதுரா கோட்ஸ் ஆலையின் முன்னாள் தொழிலாளியும், புதிய ஜனநாயகம் இதழின் நீண்டகால முகவருமான தோழர் ஏ.எஸ். முத்து, திடீர் உடல்நலக் குறைவால் கடந்த நவம்பர் 15ஆம் தேதியன்று மரணமடைந்துவிட்டார்.

தோழர் ஏ.எஸ். முத்துவின் தந்தையாரான திரு. ஆண்டி அவர்கள், சி.பி.எம். கட்சியின் முன்னணி ஊழியராகச் செயல்பட்டவர். தந்தையின் வழியில் தோழர் முத்துவும் சி.பி.எம். கட்சியில் ஊக்கமாகச் செயல்பட்டு வந்தார். பின்னர் 1985இல் நக்சல்பாரி புரட்சிகர அரசியலால் ஈர்க்கப்பட்டு சி.பி.எம். கட்சியிலிருந்து வெளியேறிய அவர், புரட்சிகர இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு உற்சாகமாகச் செயல்பட்டார். அவரது தந்தையார் சி.பி.எம். கட்சிக்காக ஓட்டுக் கேட்டு பிரச்சாரம் செய்தபோது, தோழர் முத்து தேர்தல் புறக்கணிப்புப் பிரச்சாரத்தை வீச்சாக நடத்தினார். இதனால்முரண்பாடு முற்றி, அவரது தந்தையார் அவரை வீட்டைவிட்டு வெளியேற்றிய போதிலும், பல்வேறு இழப்புகளும் இடர்ப்பாடுகளும் ஏற்பட்ட போதிலும், இரத்தப் பாசத்தை விட மார்க்சியலெனினிய புரட்சிகர இலட்சியத்தின் மீதான பற்றும் பாசமும்தான் உயர்வானது என்று தனது இறுதிக்காலம்வரை புரட்சிகர இயக்கத்தில் உணர்வோடும் பற்றுறுதியோடும் அவர் செயல்பட்டார்.

கடந்த 25 ஆண்டுகளாக புதிய ஜனநாயகம் இதழின் முன்னுதாரணமிக்க முகவராகச் செயல்பட்ட தோழரது மரணம் புதிய ஜனநாயகம் இதழுக்கும் புரட்சிகர அமைப்புகளுக்கும் பேரிழப்பாகும்.

தோழர் முத்துவின் நினைவை நெஞ்சில் ஏந்துவோம்! அவரது இலட்சியக் கனவுகளை நிறைவேற்ற உறுதியேற்போம்!

பு.ஜ. ஆசிரியர் குழு

இந்தியாவின் புதுப் பணக்கார கும்பல் உ.பி.யின் நொய்டாவில் நடந்த எஃப்  1 கார் பந்தயப் போட்டியை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த அதே நேரத்தில், முதலாளித்துவப் பத்திரிக்கைகள் அப்பந்தயத்தை இந்தியாவின் பொருளாதார வல்லமையின் அறிகுறியாகப் பறைசாற்றிக் கொண்டிருந்த அதே நேரத்தில், கிழக்கு உ.பி. பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஏழைக் குழந்தைகளும் சிறுவர்களும் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.  இந்த மழைக்காலம் முடிவதற்குள் கிழக்கு உ.பி. பகுதியில் வாழ்ந்துவரும் ஏழை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொரு குழந்தையும்   இந்த வாழ்வா, சாவா போராட்டத்தைச் சந்தித்துத்தான் தீர வேண்டும்.

இந்தியாவில் ஏற்கெனவே இயங்கிவரும் மற்றும் புதிதாக நிறுவப்படும் அணு உலைகளின் பாதுகாப்புத் தன்மையைக் கண்காணிக்கவும் உறுதி செய்யவும் புதிய சட்டத்தையும், அச்சட்டத்தின் கீழ் செயல்படத்தக்க புதிய ஆணையம் ஒன்றையும் உருவாக்கும் நோக்கத்தோடு அணு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணைய மசோதாவைத் தயாரித்து, அதனை நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக முன்வைத்திருக்கிறது, காங்கிரசு கூட்டணி அரசு. இது நாள்வரை இந்தியாவிலுள்ள அணு உலைகளின் பாதுகாப்புத் தன்மையைக் கண்காணித்துவந்த அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தைவிட, புதிதாக உருவாக்கப்படும் ஆணையம் எந்தவொரு அமைச்சகத்துக்கும் கட்டுப்படாமல் சுதந்திரமாகச் செயல்படும் என்றும்; அணுஉலைகளை இயக்குவதற்கு அனுமதி வழங்கவும், கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யவும்; அணு உலைகள் எந்த அளவிற்கு கதிர்வீச்சை வெளியிடலாம் எனத் தீர்மானிக்கவும்; அணு உலைகளை ஆய்வு செய்யவும், அணு உலைகளை இயக்கும் நிர்வாகத்திற்கு வழிகாட்டவும் உள்ளிட்டு இவ்வாணையத்திற்குப் பலவிதமான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மைய அரசு தெரிவித்திருக்கிறது.

சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்றுவது மற்றும் 13,500 மக்கள் நலப் பணியாளர்களைத் தடாலடியாக வேலை நீக்கம் செய்தது என்ற அ.தி.மு.க. அரசின் சமீபத்திய இரண்டு முடிவுகளும் ஜெயாவின் பார்ப்பன பாசிச வக்கிரபுத்தியை மீண்டும் எடுத்துக் காட்டியுள்ளன.  "அவர் திருந்திவிட்டார்; அவரிடம் நிறைய மாற்றங்கள் தென்படுகின்றன' எனப் பார்ப்பன பத்திரிக்கைகளும் அவரின் துதிபாடிகளும் கூறி வந்ததெல்லாம், தமிழக மக்களை ஏய்ப்பதற்காகச் செய்யப்பட்ட மோசடிப் பிரச்சாரம் என்பதையும் இவ்விரு நடவடிக்கைகளும் அம்பலப்படுத்திவிட்டன.

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மதுரைக் கிளையின்  எட்டா ம்  ஆண்டு தெ hடக்  க வி ழ hவை முன்னிட்டு, 4.11.2011 அன்று மதுரையில் "செயலுக்கான கருத்தரங்கம்' நடைபெற்றது. கிளைச் செயலாளர் லயனல் அந்தோணிராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், மதுரைக்கிளை துணைச்செயலரும் உயர்நீதிமன்ற வழக்குரைஞருமான வாஞ்சிநாதன், பரமக்குடி துப்பாக்கிச் சூடு பற்றிய மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் உண்மையறியும் குழுவின் அறிக்கையை நூல்வடிவில் வெளியிட்டு, இந்நூலை அறிமுகம் செய்து உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், பரமக்குடி துப்பாக்கிச் சூட்டின்போது போலீசு தாக்கியதில் படுகாயமடைந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியரான திரு.வெள்ளைச்சாமியின் நேருரை, நேரில் பார்த்த  பரமக்குடி வழக்குரைஞர் திரு.பசுமலை அளித்த சாட்சியம் ஆகியன ம.உ.பா.மையத்தின் உண்மையறியும் குழுவின் அறிக்கையை மெய்ப்பிப்பதாக இருந்தது. "பரமக்குடி துப்பாக்கிச் சூடு படுகொலைகள்: பார்ப்பனிய சாதிவெறி அரசு பயங்கரவாத கூட்டுச் சதி' என்ற தலைப்பில் ம.உ.பா .மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர்  வழக்குரைஞர் ராஜு, துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய போலீசு அதிகாரிகளுக்குத் தண்டனை பெற்றுத்தரும்  வரை ம.உ.பா.மையத்தின் போராட்டம் ஓயாது என்று சூளுரைத்தார்.

"முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் அப்சல் குரு ஆகியோரின் தூக்கு தண்டனை: அரசியல் அநீதி' என்ற தலைப்பில் உரையாற்றிய பெங்களூரு உயர்நீதிமன்ற வழக்குரைஞர்

தோழர் பாலன், இவ்வழக்கின் சட்டப் பின்னணியை விரிவாக விளக்கியதோடு, அரசியல் சார்ந்த பல்வேறு வழக்குகளில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புகளின் அடிப்படையில் நிரபராதிகளான இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதை உணர்த்தினார்.

இக்கருத்தரங்க நிகழ்ச்சிக்குச் சுவரொட்டி அச்சிடக்கூடாது என்று அச்சகங்களை மிரட்டிய போலீசு, விளம்பரப்படுத்தி கட்டப்பட்டிருந்த பேனரையும் கழட்டிச் சென்றது. இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நடந்த எழுச்சிகரமான இக்கருத்தரங்கில், பரமக்குடி துப்பாக்கிச் சூடு கொடூரத்தை நேரடியாகப் பதிவு செய்துள்ள வீடியோ பார்வையாளர்களுக்கு ஒளிபரப்பப்பட்டது. அரசு பயங்கரவாத அட்டூழியங்கள் பெருகிவரும் இன்றைய சூழ லில்,   மனித உரிமை  ஆர்வலர்களையும் உழைக்கும் மக்களையும் செயலுக்கு  அறைகூவியழைப்பதாக இக்கருத்தரங்கம் அமைந்தது.

பு.ஜ. செய்தியாளர், மதுரை

லிபியாவில் நடந்துள்ள ஆட்சிக்கவிழ்ப்பானது,  ஆப்பிரிக்க கண்டத்தில் ஏகாதிபத்தியவாதிகள் புதிய உத்தியுடன் தமது காலனியாதிக்க ஆக்கிரமிப்பைத் தொடர்வதை நிரூபித்துக் காட்டுகிறது. 2001இல் ஆப்கானில் நடந்த ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போருக்கும்  2011இல் லிபியாவில் நடந்துள்ள ஆக்கிரமிப்புப் போருக்கும் உத்திகளிலும் வடிங்களிலும் பெருத்த வேறுபாடு உள்ளது.

பெர்னி எக்லீஸ்டோன்  கடந்த மாதம் வட இந்திய ஊடகங்களில் அதிகமாக அடிபட்ட பெயர்  இதுதான். "பார்முலா1' கார் பந்தைய நிறுவனத்தின் தலைவர் என்ற காரணத்திற்காக,  இங்கிலாந்து நாட்டுத் தொழிலதிபரான எக்லீஸ்டோனை இந்திய ஊடகங்கள் தலையில் வைத்துக்  கொண்டாடின. இவரைத் தாஜா செய்து இந்தியாவில் பார்முலா1 பந்தையங்களை நடத்தியதன் மூலம், அனைத்துலக அரங்கில் இந்தியாவின் புகழ் உயர்ந் தோங்கிவிட்டதாக அவை கூறுகின்றன.

தமிழ்நாட்டில் 1970களிலிருந்து படிப்படியாக அதிகரித்து வந்த நகரமயமாக்கம், கடந்த பத்தாண்டுகளில் அதிக வேகம் பிடித்தது. குறிப்பாக தலைநகர் சென்னைக்கு பிழைப்பு தேடி தினமும் வந்து குவியும் மக்களின் தொகையும், புதிதாக முளைக்கும் குடியிருப்புகளும், இதைச் சார்ந்து எழுப்பப்படும் உயரமான வணிக வளாகங்களும் சேர்ந்து சென்னையைத் திணறடித்து வருகின்றன.

தமிழகத்தில் இயங்கிவரும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மாருதி சுசுகி தொழிலாளர்களின் போராட்ட அனுபவத்தை தமிழகத் தொழிலாளர்களிடையே பதியவைத்து, முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கெதிராக அவர்களைப் போராட அறைகூவித் தமிழகமெங்கும் பிரசசார இயக்கங்களை மேற்கொண்டு வருகிறது.  அதன் ஒரு பகுதியாக, "மாருதி சுசுகி கார்

இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மாவோயிஸ்ட்)இன் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரான கிஷன்ஜி என்றழைக்கப்படும் தோழர் மலோஜுலா கோடேஸ்வர ராவ், மத்திய ரிசர்வ் போலீசு படையினரால், 24.11.2011 வியாழனன்று படுகொலை செய்யப்பட்டு தியாகியானார். மேற்கு வங்க மாநிலம், மேற்கு மித்னாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த புரிசோல் காட்டுப் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் அவர் கொல்லப்பட்டதாக போலீசு தெரிவித்தது. துப்பாக்கிச் சண்டை நடந்ததாகக் கூறப்படும் இடம்,  ஜம்போனி போலீசு நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவிலும், அரசு விவசாயப் பண்ணையிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் உள்ள ஆள் நடமாட்டமும் போலீசு நடமாட்டமும் அதிகமுள்ள இடமென்பதால், அங்கே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாகக் கூறுவதே சந்தேகத்திற்குரியது என்று கூறியிருக்கின்றன, சில பத்திரிகைகள்.

கூடங்குளம் போராட்டத்துக்கு எதிரான அவதூறுகள், டக்குமுறைகளை அரசு முடுக்கி விட்டிருக்கும் சூழலில் "பன்னாட்டு முதலாளிகளின் இலாப வெறிக்கான கூடங்குளம் அணு உலையை மூடுவோம்!' என்ற முழக்கத்தை முன்வைத்து மனித உரிமைப் பாதுகாப்பு மையம் கன்னியாகுமரி மாவட்ட  கிளை சார்பாக 26.11.11 அன்று நாகர்கோயில் ஜெபமாலை திருமண மண்டபத்தில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. கருத்தரங்கிற்கு முன், மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்களும் தோழமை அமைப்புகளின் செயல்வீரர்களும் கடற்கரை கிராமங்களிலும் நாகர்கோயில் நகரிலும் அணுசக்திக்கு எதிராக பிரச்சாரம் செய்தனர். நாகர்கோயில் நகரத்திலும், சுற்றுவட்டார நகரங்களிலும், மீனவ கிராமங்களிலும் சுமார் ஒரு வாரகாலம் மக்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

 

கூடங்குளம் அணு உலை தொடர்பான விவாதம், "அணுசக்தி பாதுகாப்பானதா, இல்லையா?' என்ற சட்டகத்துக்குள்ளேதான் பெரும்பாலும் நடந்து வருகிறது. கூடங்குளம் அணு உலையை நிறுவுவதாக இருக்கட்டும், அணு மின்சாரம்தான் ஒரே மாற்று என்று மன்மோகன் சிங்  தற்போது எழுப்பும் கூக்குரலாக இருக்கட்டும், இவை மறுகாலனியாக்க கொள்கைக்கும், பன்னாட்டு முதலாளிகளின் கொள்ளைக்கும் ஏற்ப நமது நாட்டின் மீதும் மக்களின் மீதும் திணிக்கப்பட்ட முடிவுகள். இந்த உண்மையை மறைத்துவிட்டு, தேசத்தின் மீதும் அறிவியலின் மீதும் உள்ள மாளாக் காதலின் காரணமாகத்தான் இம்முடிவுகள் எடுக்கப்பட்டதைப் போல அரசும் அதிகார வர்க்கமும் நடிக்கின்றன. இதனை அம்பலப்படுத்துவதுதான் இப்பிரச்சினையில் கேந்திரமானது.

"ஏன் கூடாது கூடங்குளம் அணுஉலை' என்ற தலைப்பில் சுவராத் ராஜு, எம்.வி.ரமணா என்ற இரு இயற்பியலாளர்கள் இந்து நாளேட்டில் (12, நவ.) ஒரு கட்டுரை எழுதியிருக்கின்றனர். அறிவியல் தொழில்நுட்ப ரீதியான கேள்விகளுக்குப் பின், அறிவியல் தெரியாத பாமர மக்களின் சார்பில் இறுதியாக அவர்கள் எழுப்பியிருக்கும் ஒரு கேள்வி முக்கியமானது.  "கூடங்குளம் உலை அத்தனை பாதுகாப்பானதென்றால், "கூடங்குளம் அணு உலையில் விபத்து ஏற்பட்டால் அதனைத் தயாரித்த ரசிய நிறுவனம் சல்லிக்காசு கூட இழப்பீடு தரவேண்டாம்' என்று இந்தியரசிய ஒப்பந்தத்தின் 13ஆவது ஷரத்து கூறுகிறதே, அது ஏன்?' என்று அவர்கள் கேட்டிருக்கிறார்கள்.

ரவுடிகளின் அராஜகத்தை எதிர்த்துப் போராடி, கடந்த அக்டோபர் 26ஆம் தேதியன்று ரவுடிகளால் படுகொலை செய்யப்பட்ட பு.ஜ.தொ.மு. தோழர் செந்திலின் தியாகத்தைப் போற்றியும்; அவரது உயரிய இலட்சியங்களை நிறைவேற்ற உறுதியேற்றும் நவம்பர் 6ஆம் தேதியன்று மதுரை  ஒத்தக்கடையில் ம.க.இ.க் பு.ஜ.தொ.மு; ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து நினைவேந்தல் கூட்டத்தை நடத்தின.

ம.க.இ.க. மையக்கலைக்குழுவின் தோழர் கோவன், தியாகத் தோழர் செந்திலின் உருவப்படத்தைத் திறந்து வைத்து அஞ்சலி செலுத்திய இக்கூட்டத்தில், நாம் தமிழர், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், தமிழ்ப்புலிகள், ஆதித்தமிழர் பேரவை, ம.தி.மு.க் இந்தியக் கம்யூனிஸ்டுக்கட்சி, ஆனைமலை பாதுகாப்பு இயக்கம் ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகளும், ம.உ.பா.மையத்தின் மதுரைக்கிளை இணைச் செயலரான வழக்குரைஞர் வாஞ்சிநாதன், ம.க.இ.க. மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கதிரவன் ஆகியோரும் சிறப்புரையாற்றினர். தனியார்மய  தாராளமயத்தால் ரவுடியிசம் வளர்ந்து வருவதை விளக்கியும், பெருகிவரும் இந்த அபாயத்துக்கு எதிராக உழைக்கும் மக்கள் ஓரணியில் திரண்டு போராட அறைகூவியும், தோழர் செந்திலின் தியாகத்தைப் போற்றியும் நடந்த இந்தக் கூட்டம் தோழர் செந்திலின் நினைவை மக்கள் மனங்களில் ஆழமாக விதைப்பதாகவும், ரவுடியிசத்துக்கு எதிராகப் போராட மக்களை  அறைகூவுவதாகவும் அமைந்தது.

பு.ஜ. செய்தியாளர், மதுரை

கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடக் கோரி நடந்து வரும் மக்கள் போராட்டத்தை ஆதரித்தும், பன்னாட்டு முதலாளிகளின் இலாப வெறிக்காக நாட்டு மக்களைப் பலியிடத் துடிக்கும் ஆட்சியாளர்களை எதிர்த்தும், தமிழகமெங்கும் மனித உரிமை பாதுகாப்பு மையம் தொடர்ந்து பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, "3 சதவீத அணு மின்சாரத்திற்காக எதிர்காலச் சந்ததியினரைப் பலியிடாதே! பன்னாட்டுக் கம்பெனிகளின் பகற்கொள்ளைக்காக இந்தியக் கடற்கரை முழுவதும் 36 அணு உலைகளை நிறுவத் துடிக்கும் மன்மோகன் சிங் கும்பல் ஒழிக! வல்லரசுக் கனவுக்கு நாட்டு மக்களைப் பணயம் வைக்காதே! இந்திய அரசு, இந்துவெறி பா.ஜ.க., காங்கிரசு கும்பலின் பொய்ப் பிரச்சாரங்களை முறியடிப்போம்! கூடங்குளம்  இடிந்தகரை மக்கள் போராட்டத்தில் ஒன்றிணைவோம்!' என முழக்கங்கள் எதிரொலிக்க  மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் கூடங்குளம் அணு உலையை மூடக் கோரி 16.11.2011 அன்று காலை 10 மணியளவில் விருத்தாசலம் பாலக்கரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் குணசேகர் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்குரைஞர் புஷ்பதேவன், செல்வகுமார், கதிர்வேல் பாலாஜி, செந்தாமரைக் கந்தன் ஆகியோரும் ம.உ.பா. மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் ராஜுவும் சிறப்புரையாற்றினார்.

திருவண்ணாமலையில் துண்டுப் பிரசுரங்களுடன் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்ட ம.உ.பா.மையம், அதன் தொடர்ச்சியாக 23.11.2011 அன்று மாலை காந்தி சிலை சந்திப்பில் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. வழக்குரைஞர் கண்ணன் தலைமையில், மாவட்டத் தலைவர் தோழர் பொன்.சுப்பிரமணியன், வழக்குரைஞர் சேகர், புவியன், மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜு ஆகியோர் கண்டன உரையாற்றினர். திரளான உழைக்கும் மக்கள் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டங்கள், அப்துல் கலாம் உள்ளிட்ட விஞ்ஞானிகள் ஏகாதிபத்தியங்களின் அடியாட்களாக பொய்ப்பிரச்சாரம் நடத்திவருவதைத் திரைகிழித்துக் காட்டி உழைக்கும் மக்களைப் போராட அறைகூவியழைப்பதாக அமைந்தது.

. பு.ஜ. செய்தியாளர்கள்

பகற்கொள்ளையடிக்கும் பாசிச ஜெயாவின் பேயாட்சிக்கு எதிராகத் தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகள் உழைக்கும் மக்களிடம் விரிவாகப் பிரச்சாரம் செய்து ஆர்ப்பாட்டங்களையும்   மறியல் போராட்டங்களையும்  நடத்தி வருகின்றன.

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்து உழைக்கும் மக்கள் தத்தளிக்கும் நிலையில், பால் விலை மற்றும் அரசுப் பேருந்து, மின்சாரக் கட்டணங்களைக் கிடுகிடுவென உயர்த்தி தமிழகத்தின் ஏழைஎளிய, நடுத்தர வர்க்க மக்கள் மீது பொருளாதார ரீதியிலான அதிரடி பயங்கரவாதத் தாக்குதலை பாசிச ஜெயலலிதா அரசு ஏவிவிட்டுள்ளது. இதுவரை கண்டிராதபடி, ஒரே நேரத்தில் சாதாரணப் பேருந்துக் கட்டணம் கி.மீ.க்கு 28 பைசாவிலிருந்து 42 பைசாவாகவும், ஆவின் பால் விலையை ஒரு லிட்டருக்கு ரூ. 6.25 ஆகவும் உயர்த்தியுள்ள ஜெயா கும்பல், மின் கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது.  இந்தியாவில் எந்தவொரு முதலமைச்சரோ, மாநிலமோ செய்திராத இக்கொடிய தாக்குதலால் சாமானிய மக்கள் நிலைகுலைந்து போயுள்ளனர். ஆட்சிக்கு வந்ததும் வாட் வரி மூலம் ரூ.4000 கோடிக்கு மேலாக வரி விதித்த பாசிச ஜெயலலிதா அரசு, இப்போது விலையேற்றம்  கட்டண உயர்வின் மூலம் ரூ. 11,000 கோடிக்கு மக்கள் மீது பெருஞ் சுமையை ஏற்றியுள்ளது.

ஒரே வணிக முத்திரை கொண்ட பொருளை விற்கும் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை 51 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக அதிகரிப்பதெனவும், பல்வேறு வணிக முத்திரைகள் கொண்ட பொருட்களை விற்கும் சில்லறை வியாபாரத்தில் 51 சதவீத அளவிற்கு அந்நிய முதலீட்டை அனுமதிப்பது எனவும் மைய அமைச்சரவை முடிவெடுத்து அறிவித்திருக்கிறது.  இம்முடிவின் மூலம், இந்தியாவெங்கிலும் சில்லறை வர்த்தகத்தை நம்பி வாழ்ந்துவரும் பல இலட்சக்கணக்கான குடும்பங்களை அழிவின் விளிம்பில் கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது, மையஅரசு.

முதலாளித்துவத்தின் முதுகெலும்பை முறித்து, பஞ்சைப் பராரிகளான பாட்டாளிகளின் முதல் சோசலிச அரசு உதித்த நாள் நவம்பர் 7,1917. கண்ணெக்கெட்டிய தூரம்வரை தீர்வுக்கான சாத்தியமே இல்லாத ஒரு கட்டமைப்பு நெருக்கடிக்குள், அதாவது மீளமுடியாத சமுதாயப் பொருளாதார  நெருக்கடியில் ஏகாதிபத்திய முதலாளித்துவ அமைப்பு இன்று விழுந்து கிடக்கிறது. அதற்கு நிரந்தரமான அமைதியை வழங்க வல்லது பாட்டாளி வர்க்க சோசலிசப் புரட்சிதான்; உலக மக்களைக் காக்க வல்லது கம்யூனிசம் மட்டும்தான் என்பதை உணர்த்தி,  உலகின் ஐந்தில் ஒரு பங்கு நிலப்பரப்பில் பாட்டாளி வர்க்கத்தின் ஆட்சி மலர்ந்த 95ஆம் ஆண்டு சோசலிசப் புரட்சி நாளை தமிழகமெங்கும் ம.க.இ.க் வி.வி.மு; பு.மா.இ.மு; பு.ஜ.தொ.மு; பெ.வி.மு; ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமது தோழமை அமைப்புகளுடன் இணைந்து தாங்கள் செயல்படும் பகுதிகளில் எழுச்சியோடு கொண்டாடின. இப்புரட்சிகர அமைப்புகள் செயல்படும் பகுதிகள் அனைத்தும் அந்நாளில் விழாக்கோலம் பூண்டிருந்தன. நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகள் இங்கேயும் ஒரு பாட்டாளி வர்க்க சோசலிசப் புரட்சியைச் சாதிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துவதாக அமைந்தன.

"வரலாறு  சொல்லித்தர வாரியாரு வருவாரு'  இது, இந்து மதவெறிக் கும்பல் அதிகாரத்தில் இருந்தால் கல்வித்துறையில் என்ன நடக்கும் என்பதை நையாண்டி செய்யும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பாடல் வரி. இந்த நையாண்டி வெறும் கற்பனையல்ல, உண்மை என்பதை அண்மையில் டெல்லியிலுள்ள மத்தியப் பல்கலைக்கழகமான டெல்லிப் பல்கலைக்கழகத்தில் நடந்துவரும் சம்பவங்கள் நிரூபித்து வருகின்றன.

இந்தியாவின் வடமேற்கே பாகிஸ்தானை அடுத்துள்ள நாடான ஆப்கானிஸ்தானின் அதிபர் கர்சாயும் இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங்கும் கடந்த அக்டோபர் 5ஆம் தேதியன்று ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இந்தியாவின் போர்த்தந்திர முக்கியத்துவம் வாய்ந்த கூட்டாளியாக ஆப்கான் திகழும் என்று அந்த ஒப்பந்தத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2014இல் ஆப்கானிலிருந்து நேட்டோ படைகள் முற்றாக விலகிய பிறகு, ஆப்கானின் பாதுகாப்புக்கு உற்ற துணையாக இந்தியா நிற்கும் என்றும், ஆப்கான் படைகளுக்கு இந்திய இராணுவம் முறைப்படி 2014லிருந்து பயிற்சி அளிக்கும் என்றும் இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆப்கான் படைகளுக்கு இராணுவப் பயிற்சி அளிப்பதற்கு ஈடாக, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர இடத்தைப் பெற அந்நாடு வாக்களிக்க ஒப்புக் கொண்டுள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு முன் சேலம் மாவட்டம், வெள்ளையனூர் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்ற விவசாயி, தன் குடும்பத் தேவைக்காக இரண்டரை ஏக்கர் நிலத்தில் இரண்டு ஏக்கரை எட்டு லட்ச ரூபாய்க்கு விற்றார். மகள்களின் திருமணச் செலவும் மகனின் படிப்புச் செலவும் போக கையில் சுமார் 2 லட்ச ரூபாய் இருந்தது. இந்தத் தொகையைக் கொண்டு அரை ஏக்கர் நிலத்தில் ஏதேனும்  தொழில் செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் இருந்தார்.

பொதுத்துறை நிறுவனமான ஏர்இந்தியாவின் செயல்பாடுகள் குறித்து மைய அரசின் தணிக்கைத் துறை நாடாளுமன்றத்திற்கு அளித்துள்ள அறிக்கை, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அந்நிறுவனத்தைத் திட்டமிட்டு படுபாதாளத்திற்குள் தள்ளிவிட்டுள்ள சதித்தனத்தை அம்பலப்படுத்தியிருக்கிறது.  மைய அரசும், ஏர்இந்தியா நிர்வாகமும் அமெரிக்காவைச் சேர்ந்த விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங்கிற்கும், ஐரோப்பாவைச் சேர்ந்த விமானத் தயாரிப்பு நிறுவனமான ஏர் பஸ் நிறுவனத்திற்கும் மற்றும் விமான சேவைகளை நடத்திவரும் எமிரேட்ஸ், கிங் ஃபிஷர், ஜெட் ஏர்வேஸ் உள்ளிட்ட பல தனியார் நிறுவனங்களுக்கும் சாதகமாக எடுத்த முடிவுகளால், ஏர்  இந்தியா இன்று மீள முடியாத நட்டத்திலும் கடனிலும் சிக்கிக் கொண்டுவிட்டதாகத் தனது அறிக்கையில் குற்றஞ்சுமத்தியிருக்கிறது, தணிக்கைத் துறை.

"பொறுக்கித் தின்னப் போட்டிபோடும் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிப்போம்! உள்ளாட்சித் தேர்தலின் நோக்கம் அதிகாரத்தைப் பரவலாக்குவதல்ல! ஊழலைப் பரவலாக்குவதே! கிராம மக்களுக்கு உண்மையான அதிகாரம் என்பது உழுபவருக்கு நிலம் வேண்டும்; விளைவித்த பொருளுக்கு விலை நிர்ணயம் செய்யும் அதிகாரம் வேண்டும்; தேர்ந்தெடுக்கவும் திருப்பி அழைக்கவும் மக்களுக்கு அதிகாரம் வேண்டும். இந்த உரிமைகளை மக்களுக்கு அளிக்காத இப்போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிப்போம்! மக்களே நேரடியாக அதிகாரம் செலுத்தக்கூடிய மக்கள் சர்வாதிகார மன்றங்களைக் கட்டியமைக்கப் போராடுவோம்!' என்ற முழக்கத்துடன் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிக்கக் கோரித் தமிழகமெங்கும் ம.க.இ.க, வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு, ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமிழகமெங்கும் தாங்கள் செயல்படும் பகுதிகளில் துண்டுப் பிரசுரங்கள், தட்டிகள், தெருமுனைக் கூட்டங்கள் மூலம் வீச்சான பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டன.

கடந்த 1.10.2011 அன்று மாலை  6 மணி முதல் 2.10.2011 காலை 6 மணி வரை மதுரை அரசரடியில் தமிழ்நாடு இறையியல் கல்லூரி வளாகத்தில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுதலை செய்யக் கோரி ஹென்றி டிபேனின் மக்கள் கண்காணிப்பகத்தின் ஒருங்கிணைப்பில்,  மரண தண்டனைக்கு எதிரான கூட்டமைப்பின் சார்பில் "தூங்கா நகரில் தூங்காநிலை போராட்டம்' என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மதுரை உயர் நீதிமன்றத்தில் துண்டறிக்கை விநியோகித்து நன்கொடையும் திரட்டியவர், வழக்குரைஞர் வல்லரசு.

அரியானா மாநிலம்  குர்கான் நகருக்கு அருகேயுள்ள மானேசர் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள மாருதி கார் தொழிற்சாலையில், அதன் நிர்வாகம் கடந்த அக்டோபர் 7 அன்று திணித்த சட்டவிரோத கதவடைப்பு, தொழிலாளர்களின் 14 நாள் போராட்டத்தின் பின் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.  மாருதி நிர்வாகத்தின் இச்சட்ட விரோத கடையடைப்புப் போராட்டத்தை எதிர்த்து, அவ்வாலையின் நிரந்தரத் தொழிலாளர்களும், ஒப்பந்தத் தொழிலாளர்களும் மட்டுமின்றி, மாருதியின் டீசல் கார்களுக்கான இஞ்சின்களைத் தயாரித்து வழங்கும் பவர் டிரெய்ன் ஆலைத் தொழிலாளர்களும் மற்றும் மாருதி காஸ்டிங் ஆலையைச்   சேர்ந்த தொழிலாளர்களும் இணைந்து போராடி, குறிப்பிடத்தக்க வெற்றிகளையும் ஈட்டியுள்ளனர்.

 

அடுத்த பிரதமராக வருவதற்குத் தகுதியானவர் என்று அம்பானி போன்ற யோக்கியர்களால் சிபாரிசு செய்யப்பட்டவரும், ஊழலற்ற ஆட்சி நடத்துகிறாரென அன்னா ஹசாரேவால் புகழப்பட்டவரும், திறமையான நிர்வாகி என்று சோ ராமஸ்வாமி அய்யருடைய பாராட்டைப் பெற்றவரும், அனைத்துக்கும் மேலாக ஜெயலலிதாவின் அன்புச் சகோதரருமான நரேந்திர மோடியை, "கிரிமினல்' என்று தொலைக்காட்சி பேட்டிகளில் குற்றம் சாட்டி வருகிறார், மோடியினால் கைது செய்யப்பட்ட குஜராத் போலீசு அதிகாரி சஞ்சீவ் பட்.

 

மதநல்லிணக்கவாதி போலவும், மக்களின் நல்வாழ்வு தவிர, வேறு சிந்தனையே இல்லாத மனிதாபிமானி போலவும், வாடிய பயிரைக் கண்டு வாடும் வள்ளலாராகவும் தன்னைப் பற்றிய ஒரு சித்திரத்தை உருவாக்கி, தனது இனப்படுகொலைக் குற்றத்தை மறைத்து விடலாம் என்று

கனவு கண்டு வரும் மோடிக்கு சஞ்சீவ் பட்டின் இந்தக்கூற்று ஒரு செருப்படி. சொல்லப்போனால், சஞ்சீவ்பட்டைச் சிறை வைத்ததன் விளைவாக மோடியின் குற்றங்கள்தான் புதிய வேகத்துடன் அம்பலமா கத் தொடங்கியிருக்கின்றன.

 

ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட், மோடியின் குற்றத்தை நிரூபிக்க முயன்ற ஒரே காரணத்துக்காக, குஜராத் அரசினால் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டு, பின்னர் பொய்வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையிலும் வைக்கப்பட்டவர். 2002 இனப் படுகொலையின்போது அவர் அகமதாபாத் நகரின் உளவுத்துறை இணை ஆணையர். குஜராத் இனப்படுகொலை தொடங்கிய நாளான பிப்.27, 2002 அன்று மோடி நடத்திய உயர்மட்ட அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டவர். "இந்துக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்துவதைத் தடுக்காதீர்கள்' என்று மோடி அந்தக் கூட்டத்தில் வெளிப்படையாகவே உத்தரவிட்டதை, உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் பட் சாட்சியமளித்தார். அந்தச் சிறப்புப் புலனாய்வுக் குழுவும் மோடிக்கு ஆதரவாகச் செயல்படவே, தனது சாட்சியத்தையே உச்ச நீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலமாக அவர் தாக்கல் செய்தார்.

 

தற்போது உச்ச நீதிமன்றத்தால் அமிகஸ் கியூரேவாக (நீதிமன்றத்தின் நண்பராக) நியமிக்கப்பட்ட ராஜு ராமச்சந்திரன், மோடியைக் குற்றத்திலிருந்து விடுவிக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையை நிராகரித்திருக்கிறார். "சஞ்சீவ் பட்டின் சாட்சியத்தை நிராகரிக்க முடியாது. அவரையும் பிற மூத்த போலீசு அதிகாரிகளையும் விசாரித்த பிறகுதான் மோடி குற்றவாளியா, இல்லையா என்ற முடிவுக்கு வர முடியும். முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடந்த நாட்களில், அகமதாபாத் போலீசு கட்டுப்பாட்டு அறையில் இரண்டு அமைச்சர்கள் இருந்திருக்கிறார்கள் என்ற உண்மை சஞ்சீவ் பட்டின் குற்றச்சாட்டுக்கு வலுச் சேர்க்கிறது' என்று தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

 

"பிப். 27 கூட்டத்தில் சஞ்சீவ் பட் கலந்து கொள்ளவே இல்லை' என்பது மோடியின் வாதம். இக்கூட்டத்திற்கான வருகைப்பதிவேடு அல்லது  கூட்டக் குறிப்புகளைக் காட்டித் தனது கூற்றை மோடி நிரூபிக்க வேண்டும். ஆனால், அத்தகைய ஆவணங்கள் எதுவும் இல்லை. இனப்படுகொலைக் காலத்தின் பல ஆவணங்களைப் போலவே இவையும் மோடி அரசால் அழிக்கப்பட்டிருக்க வேண்டும். எனினும், சஞ்சீவ் பட்டின் கார் ஓட்டுனர் பந்த், மேற்சொன்ன கூட்டத்துக்கு சஞ்சீவ் பட்டை அழைத்துச் சென்றதாக ஏற்கெனவே வாக்குமூலம் அளித்திருந்ததால், அந்த ஓட்டுனரின் மீது தனது கவனத்தைத் திருப்பியது மோடி அரசு.

 

"சஞ்சீவ் பட் தன்னை மிரட்டி மோடிக்கு எதிராகப் பொய் வாக்கு மூலம் வாங்கிவிட்டதாக' அந்த ஓட்டுநரிடம் புகார் எழுதி வாங்கி, அந்தப் புகாரின் அடிப்படையில் சஞ்சீவ்பட்டைச் சிறை வைத்தார், மோடி. இப்படியொரு பொய்ப்புகாரைக் கொடுப்பதற்கு அந்த ஓட்டுனரைத் தூண்டியதாக குஜராத் காங்கிரசு தலைவர் அர்ஜுன் மோத்வாடியா, காங்கிரசின் சட்டத்துறைத் துணைத்தலைவர் விஜய் கினாரா ஆகியோர் மீதும் சதிக்குற்றத்தின் கீழ் வழக்கு தொடுத்திருக்கிறார்.

 

சஞ்சீவ் பட்டின் மாமியார் வீட்டில் மர்மத் திருடர்கள் புகுந்து, பணத்தையோ நகையையோ திருடாமல், ஆவணங்களை மட்டும் அள்ளிச் சென்றிருக்கின்றனர். இதுவரை திருடர்கள் பிடிக்கப்படவில்லை. பட்சிறையில் இருக்கும்போது அவருடைய வீடு சோதனையிடப்பட்டது. அவருடைய லாக்கரை உடைக்கவும் மோடி அரசு முயன்றிருக்கிறது. சஞ்சீவ் பட் பிணையில் வந்த சில நாட்களிலேயே, அவருடைய உறவினர் சிரெனிக் பாய் ஷா என்பவரை மர்ம நபர்கள் கடத்திச் சென்று தாக்கியிருக்கின்றனர். மோடிக்கு எதிரான வாக்குமூலத்தில் கார் ஓட்டுனர் பந்த் கையெழுத்திட்டபோது, உடனிருந்த சாட்சி ஷா என்பது குறிப்பிடத்தக்கது. தனக்கெதிரான சாட்சி குழந்தையானாலும், நாய்க்குட்டியானாலும் அனைத்தையும் கொன்றொழிக்கும் வக்கிரத்தில், தெலுங்கு சினிமா வில்லன்களையும்  விஞ்சிவிட்டார் நரேந்திர மோடி.

"சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டிருப்பது, 2002 முஸ்லிம் இனப்படுகொலை நடவடிக்கையின் கொள்கை ரீதியான தொடர்ச்சி. 2002 இனப்படுகொலை குறித்த திரை மறைவு உண்மைகளை வெளியிட்ட முதல் நேரடி சாட்சி ஹரேன் பாண்டியா. மோடியின் அன்றைய வருவாய்த்துறை இணை அமைச்சரான இவர், 2003இல் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இப்போது மோடிக்கு எதிரான இரண்டாவது நேரடி சாட்சி சஞ்சீவ் பட்' என்று கூறியிருக்கிறார் ஓய்வு பெற்ற குஜராத் டி.ஜி.பி. சிறீகுமார்.

இந்திய விவசாயம் பெரும்பாலும் இரசாயன உரங்களையே நம்பியுள்ளது. போதிய அளவு மழை பெய்திருந்தாலும், தற்போது உரத் தட்டுப்பாடு விலையேற்றத்தால்  இந்திய விவசாயிகள் தத்தளிக்கின்றனர். குறிப்பாக, காவிரி டெல்டா மாவட்டங்களின் தற்போதைய சம்பா நெல் சாகுபடி கடுமையான உரத் தட்டுப்பாட்டில் சிக்கியுள்ளது. பயிருக்கு மணிச்சத்தும் தழைச்சத்தும் கிடைக்க சம்பா நெல்நடவுப் பணியின் போது டி.ஏ.பி. உரம் அடியுரமாக இடப்படும். ஆனால் டி.ஏ.பி. உரம் கிடைக்காமலும், உரத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாலும் பெரும் அவதிக்கு விவசாயிகள் ஆளாகியுள்ளனர். கடந்த ஆண்டு 50 கிலோ   எடை கொண்ட டி.ஏ.பி. உரம் ரூ.585க்கு விற்பனை செய்யப்பட்டது. இது தற்போது ரூ.825 வரை விற்கப்படுகிறது. மேலும் உயரும் என்று கூறப்படுகிறது. டி.ஏ.பி. உரத்தில் ஏற்கெனவே 18:46 என்ற அளவில் இருந்த மணிச்சத்து, தழைச்சத்து விகிதம் தற்போது 16:44 என்ற அளவில் உரக் கம்பெனிகளால் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்கெனவே 100 கிலோ பயன்படுத்தப்பட்ட இடத்தில்,  தற்போது 110 கிலோ உரத்தைப் பயன்படுத்த வேண்டியுள்ளது.

"அவரின் பாதுகாப்புக்காக நீதிமன்றம் தற்காலிகமாக இடம் மாற்றப்படுகிறது. அவருக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்டு, அவருடைய பாதுகாப்பை உறுதி செய்கிறது. அவருடைய பாதுகாப்புக்காக 1,500 முதல் 3,000 போலீசார் வரை குவிக்கப்படுகின்றனர்; சாலையில் தடையரண்கள் ஏற்படுத்தப்பட்டுப் பொதுமக்களின் நடமாட்டம் கண்காணிக்கப்படுவதோடு, 144 தடையுத்தரவும் பிறப்பிக்கப்படுகின்றது.'  இவையெல்லாம் பெங்களூருவில் நடந்துவரும் சொத்துக்குவிப்பு வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதாவைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிக் கேள்விகள் கேட்பதற்காகச் செய்யப்பட்டிருந்த தடபுடல் ஏற்பாடுகள்.  ஜெயா தமிழகத்தின் முதல்வர், இசட் ப்ளஸ் பாதுகாப்பில் இருப்பவர் என்றெல்லாம் கூறி, இப்பாதுகாப்பு ஏற்பாடுகளை நியாயப்படுத்தினாலும், தார்மீகரீதியில் பார்த்தால், பொதுச் சொத்தைக் கொள்ளையடித்துச்  சொத்து சேர்த்துக் கொண்ட குற்றவாளிக்கு இத்துணை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதைக் கேட்கும்பொழுது குமட்டல்தான் வருகிறது.

கடந்த 2008ஆம் ஆண்டில் விருதை மினரல்ஸ் என்ற நிறுவனம், விருத்தாசலம் நகரிலுள்ள ஆலடிரோடு, எம்.ஆர்.கே.நகர் குடியிருப்புப் பகுதியில் ஆழ்குழாய் கிணறு தோண்டி தண்ணீரை வரைமுறையின்றி உறிஞ்சி வியாபாரம் செய்ய முயற்சித்தது. இதனால் ஆலடி ரோடு பகுதியில் உள்ள எம்.ஆர்.கே.நகர், முல்லைநகர், வீ.என்.ஆர்.நகர், ராமதாஸ் நகர் உள்ளிட்ட பல குடியிருப்புப் பகுதிகள் பாலைவனமாகும் அபாயத்தை உணர்ந்த இப்பகுதிவாழ் மக்கள் இத்தண்ணீர்க் கொள்ளையை எதிர்த்து ஊர் வலம்,  ஆர்ப்பாட்டம் எனத் தொடர்ந்து போராடியதையடுத்து இந்நிறுவனம் மூடப்பட்டது. இருப்பினும், இரவில் இரகசியமாகத் தண்ணீரை உறிஞ்சிப் பகலில் குடுவைகளில் தண்ணீரை ஏற்றிச் சென்று வியாபாரம் செய்யும் இத்தண்ணீர்க் கொள்ளை அவ்வப்போது நடந்துவந்தது.

கடந்த செப்டம்பர் மாத இறுதியில் ஒரு திருட்டு வழக்கு சம்பந்தமாக சென்னை  விருகம்பாக்கம் போலீசாரால் பிடித்துச் செல்லப்பட்ட முத்து என்பவர் போலீசாரால் மிருகத்தனமாக அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இக்கொட்டடிக் கொலை தொடர்பாக மூன்று போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளபொழுதிலும், "முத்து நெஞ்சு வலியால்தான் இறந்து போனதாக' உயர் போலீசு அதிகாரிகள் கூறி வருகின்றனர்.

மதுரை மாவட்டம், யா.ஒத்தக்கடையைச் சேர்ந்த சில்வர் பாத்திர வியாபாரியும் புதியஜனநாயகத் தொழிலாளர்  முன்னணியின் செயல்வீரருமான 27 வயதான தோழர் செந்தில், கடந்த அக்டோபர் 26ஆம் தேதியன்று ரவுடிகளால் கொல்லப்பட்டுள்ளார்.

தமக்கு விதிக்கப்பட்டிருந்த மரணதண்டனைக்கு எதிராக முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு அக்டோபர் 28ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் வழக்குரைஞர் மூவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்யவேண்டுமென்றும், தூக்குத் தண்டனையை நிறைவேற்றவேண்டுமென்றும் வாதாடினார். இது அனைவரும் எதிர்பார்த்ததுதான். ஆனால் "தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் மூவரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து அவர்களின் மரணதண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கவேண்டும்' என்று ஒரு தீர்மானத்தை ஆகஸ்டு 30ஆம் தேதியன்று தமிழக சட்டமன்றத்தில் முன் மொழிந்த ஜெயலலிவின் அரசு, தற்போது அதற்கு நேர் எதிராகப் பேசியிருக்கிறது. "கருணையை நியாயப்படுத்தக்கூடிய சூழ்நிலைகள் எதுவும் தோன்றிவிடவில்லை' என்று கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் கருணை மனுவை நிராகரிப்பதற்கு ஆளுநர் கூறிய வார்த்தைகளை அப்படியே வழிமொழிந்திருக்கிறது. எந்தத் தமிழ் மக்களின் பெயரால் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றப்  பட்டதோ, "அந்த மக்களின் உணர்வு குறித்து கருத்து எதுவும் கூற விரும்பவில்லை' என்று அலட்சியமாகச் சொல்லியிருக்கிறது தமிழக அரசின் மனு.

கடும் குளிரையும் பனிப் பொழிவையும் மீறித் தொடர்ந்து கொண்டிருக்கிறது வால் ஸ்டிரீட் போராட்டம். வால் ஸ்டிரீட் போராட்டத்துக்கு ஆதரவாக உலகெங்கும் பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர். இலட்சக்கணக்கான மக்கள் திரளின் கோபத்தில் ரோம் தீப்பிடித்தது. சம்பளவெட்டு, ஆட்குறைப்பு, ஓய்வூதிய வெட்டு, மக்கள் நலத்திட்டங்கள் ரத்து, பொதுத்துறை   விற்பனை ஆகியவற்றுக்கு எதிராக இலட்சக் கணக்கான மக்கள் நடத்திய போராட்டத்தில் கிரீஸ் பற்றி எரிந்தது. எகிப்தின் மக்கள் முபாரக்கின் இராணுவ டாங்குகள், போர் விமானங்களுக்கு  அஞ்சவில்லை.  முபாரக்கின் கூலிப்படைகள் முதல் குதிரைப்படைகள் வரை அனைத்தையும் எதிர்த்து நின்றார்கள். அன்றைய சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியத்தின் தலைநகரம், இளைஞர்களின் கலகத்தால் நாட்கணக்கில் தீப்பிடித்து எரிந்தது.

அலைக்கற்றை ஊழல் வழக்கில் இரண்டுகைகளிலும் வாளேந்திச் சுழற்றிக் கொண்டிருக்கும் மாட்சிமை தாங்கிய உச்ச நீதிமன்றத்தின் முகத்தில் சாணியை வழித்து அடித்தது போன்றதொரு நிகழ்வு சமீபத்தில் நடந்தது. நோவார்ட்டிஸ் என்ற பன்னாட்டு நிறுவனம் தொடுத்திருக்கும் அறிவுச் சொத்துடைமை தொடர்பான வழக்கினை விசாரிக்கும் நீதிபதி தல்வீர்

ரெடிமேட் என அழைக்கப்படும் ஆயத்த ஆடைகளைத்தான் இன்று உலகம் முழுவதும் விரும்பி அணிகின்றனர். பல்வேறு வடிவமைப்புகளில் பல பெயர்களில் இவை விற்கப்பட்டாலும், இவற்றைச் சந்தைப்படுத்துவது விரல்விட்டு எண்ணக்கூடிய சில பன்னாட்டு ஏக போக நிறுவனங்களே. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் சில்லரை விற்பனையில் ஆதிக்கம் செலுத்தும் வால்மார்ட், மெட்ரோ, டெஸ்கோ போன்ற மிகப் பெரிய சங்கிலித் தொடர் நிறுவனங்கள் ஆயத்த ஆடை வர்த்தகத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ளன. இந்த ஆயத்த ஆடைகளின் மீது ஒட்டப்பட்டிருக்கும் பெயர்கள் மட்டுமே பன்னாட்டு நிறுவனங்களுடையவை. ஆனால் அவற்றைத் தயாரித்துத்தரும் உழைப்பு முழுவதும் ஏழை நாடுகளின் தொழிலாளர்களுக்குச் சொந்தமானது.

லிபியா மீதான ஆக்கிரமிப்புப் போர், ஏகாதிபத்திய எண்ணெய் முதலாளிகளின் ஆதாயத்துக்காகவே நடத்தப்பட்ட போர் என்பதையும், ஜனநாயகம் பற்றி வாய் கிழியப் பேசும் ஏகாதிபத்திய நாடுகளின் தலைவர்கள் எண்ணெய் முதலாளிகளின் பாக்கெட்டில் இருக்கிறார்கள் என்பதையும் போருக்கு முன்பாக நடந்துள்ள நிகழ்ச்சிகள் மெய்ப்பித்துக் காட்டுகின்றன.

ஓசூர் சிப்காட்1 பகுதியில் இயங்கி வரும் கனரக வாகனங்களை உற்பத்தி செய்யும் கமாஸ் வெக்ட்ரா லிமிடெட் எனும் நிறுவனத்தில் 13 ஆண்டுகளாக வேலை செய்துவரும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் கடந்த டிசம்பர் 2010 முதலாக பு.ஜ.தொ.மு. சங்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டு கூலி உயர்வு, போனஸ் முதலான உரிமைகளைப் போராடிப் பெற்றனர். கடந்த ஜூன் மாதத்தில் விக்டர் பிரசாத் என்ற மனிதவள அதிகாரி, முந்தைய ஒப்பந்ததாரரை மாற்றிவிட்டு, புதிய ஒப்பந்ததாரரைக் கொண்டு ஆகஸ்டு 2011 முதலாக 5 ஒப்பந்தத் தொழிலாளிகளுக்கு வேலையில்லை என்று அறிவித்தான். இந்த திடீர் ஆட்குறைப்பு நடவடிக்கையை எதிர்த்து 10.8.2011 அன்று பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டத்தை நடத்தியதைத் தொடர்ந்து, தொழிற்சங்கத்துடன் நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு வந்தது. வேலை நீக்கத்துக்குப் பதிலாக, சுழற்சி முறையில் ஒவ்வொரு தொழிலாளியும் 4 நாட்கள் வேலை இழப்பை ஏற்பது, இழப்பை அனைத்து தொழிலாளிகளும் பகிர்ந்து கொள்வதென பேச்சுவார்த்தையில் முடிவாகி, வர்க்க ஒற்றுமையின் மூலம் பு.ஜ.தொ.மு. இச்சதியை முறியடித்தது.  இதனால் அரண்டுபோன மனிதவள அதிகாரி விக்டர் பிரசாத், ஒப்பந்தத் தொழிலாளர் சங்க முன்னணியாளர்கள் 4 பேரை கட்டாயமாக வேலையைவிட்டு நீக்குவதாக கடந்த செப்டம்பர் 12 அன்று ஒப்பந்ததாரரைக் கொண்டு அறிவித்தான். இந்த அநீதிக்கு எதிராகக் கொதித்தெழுந்த நிரந்தரத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களும் ஆலையினுள் உள்ளிருப்புப் போராட்டத்தை அறிவித்து நடத்தினர்.

குஜராத் மாநிலத்தில் 2002  ஆம் ஆண்டு இந்து மதவெறிக் கும்பல் கட்டவிழ்த்துவிட்ட இனப்படுகொலையின் பொழுது கொல்லப்பட்ட காங்கிரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரியும், இவ்வினப்படுகொலைகளுக்கு நீதி வேண்டிப் போராடி வரும் நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் அமைப்பும் இணைந்து, "இவ்வினப்படுகொலை தொடர்பான வழக்கில் மோடியையும் மற்றும் அவரது சக அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட 62 பேரையும் குற்றவாளிகளாகச் சேர்க்க வேண்டும்; இவ்வழக்கை மையப் புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டும்' எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர்.

ஒரு நாளைக்குத் தேவையான உணவு, மருத்துவம், கல்விச் செலவுகளைச் சமாளிக்க, நகர்ப்புறத்தில் வசிக்கும் ஒரு தனிநபரின் ஒருநாள் வருமானம் ரூ.32ஃ ஆகவும், கிராமப்புறத்தில் வசிக்கும் ஒரு தனிநபரின் ஒருநாள் வருமானம் ரூ.25ஃ ஆகவும் இருந்தால் போதும் எனத் திட்ட கமிசன் உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்திருக்கிறது.  திட்ட கமிசனின் இந்தத் தெளிவான வரையறைக்கும் அன்றாட நடப்புக்கும் எந்தவொரு சம்பந்தமும் கிடையாது என்பதை நாம் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

வன உரிமைச் சட்டம், கல்வி உரிமைச் சட்டம் ஆகியவற்றுக்கு அடுத்து தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வரவுள்ளது, மன்மோகன் சிங் சோனியா காந்தி கும்பல்.  சோனியா காந்தியின் தலைமையில் செயல்பட்டு வரும் தேசிய ஆலோசனை கவுன்சில், கடந்த இரண்டு ஆண்டுகளாக விவாதங்களை நடத்தி, உணவுப் பாதுகாப்பு மசோதாவைத் தயாரித்து, அரசிடம் அளித்தது. அதனை, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரங்கராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி, ஆய்வு செய்து, சேர்க்க வேண்டியதைச் சேர்த்து, கழிக்க வேண்டியதைக் கழித்துத் தள்ளிவிட்டு, மைய அரசிடம் அளித்தது.  அதனை மைய அமைச்சரவை ஆய்வு செய்து தனது ஒப்புதலை அளித்து, நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறது.

கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடக் கோரி நடைபெற்ற மக்கள் போராட்டத்தை  அலட்சியப்படுத்திப் பணிய வைத்துவிடவே அரசு முயன்றது. ஆளும் வர்க்க ஊடகங்களும் அதற்கு ஒத்துழைத்தன. அண்ணா ஹசாரே என்ற ஒரு கோமாளி நடத்திய சர்க்கஸ் வித்தையையும், அதை வேடிக்கை பார்க்க வந்த கூட்டத்தையும் நேரலை ஒளிபரப்பில் காட்டி, ஊருக்கு ஊர் நாலு ஊழல் ஒழிப்புக் கோமாளிகளை உருவாக்கிய ஊடகங்கள், கூடங்குளம் போராட்டத்தைப் புறக்கணிக்கவே செய்தன என்பதை  விளக்கத் தேவையில்லை. கூடங்குளம் போராட்டத்தை நாடறியச் செய்தால் அது, நாடு முழு வதும் அணுஉலைகளுக்கு எதிரான போராட்டத்தைப் பற்றவைக்கும்  அத்தகைய சூழ்நிலையை தங்களது எசமானர்கள் விரும்பமாட்டார்கள் என்பதையும் ஊடகங்கள் அறியும்.

உள்ளூராட்சி முறையும் தேர்தல்களும், அவற்றுக்குத் தாழ்த்தப்பட்டபழங்குடி மக்கள் மற்றும் மகளிருக்கான இடஒதுக்கீடுகளும் ஜனநாயகத்தைப் பரவலாக்குவதாகவும் ஆழமாக்குவதாகவும், ஒரு பம்மாத்து தொடர்ந்து நடந்து வருகிறது.

பன்னாட்டு ஏகபோக ஹீண்டாய் நிறுவனத்துக்கு உதிரிப்பாகங்களைத் தயாரித்துக் கொடுக்கும் பல நிறுவனங்களில் ஒன்றான ஹனில் டியூப் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் நிலவும் கொத்தடிமைத்தனம், அடக்குமுறை  அச்சுறுத்தலுக்கு எதிராக நிரந்தரத் தொழிலாளர்களும் தற்காலிகத் தொழிலாளர்களும், ஒப்பந்தத் தொழிலாளர்களுடன் இணைந்து,   பு.ஜ.தொ.மு. தலைமையிலான கிளைச் சங்கத்தைக் கட்டியமைத்ததுள்ளனர்.  இத்தொழிற்சங்கத்தை முடக்கி அழிக்கத் துடித்த நிர்வாகம், கூலிப்படைத் தலைவனான விஜயபிரசாத் என்ற மனிதவள மேம்பாட்டு அதிகாரியை வேலைக்கு அமர்த்தியது. இவனும் அய்யாரப்பன் என்ற அதிகாரியும் கூட்டுச் சேர்ந்து தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கிவிடுவதாக மிரட்டுவது, தொழிலாளர் குடும்பத்தினரை அச்சுறுத்துவது, சங்கத்திலிருந்து விலகுவதாக எழுதித் தருமாறு நிர்பந்திப்பது, மறுத்தால் அத்தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்குவது என அடக்குமுறைகளை ஏவி வருகின்றனர். ஆனால் இந்த அடக்குமுறைகளால் தொழிற் சங்கத்தையோ தொழிலாளர் வர்க்க ஒற்றுமையையோ இந்த கும்பலால் வீழ்த்த முடியவில்லை. அடுத்த கட்டமாக, சங்கத்தின் கிளைத் தலைவர் தோழர் ஞானவேலுவை கூலிப்படையினரை ஏவி  அடையாளம் தெரியாத வகையில் லாரியை ஏற்றிக் கொல்ல இந்த அதிகாரிகள் முயற்சித்துள்ளனர். இந்தவிபத்து குறித்து விஜயபிரசாத் காட்டிய அக்கறையும் துடிதுடிப்பும் அவனது ஏற்பாடாகவே இந்த "விபத்து' நடந்துள்ளது என்பதை நிரூபித்துள்ளது.

முதலாளித்துவ பயங்கரத்தால் ஹனில் டியூப் நிறுவனத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் எதிர்கொண்டுள்ள இந்த அபாயம், தனிப்பட்ட பிரச்சினை அல்ல்  கோடானுகோடி தொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினை என்பதை விளக்கியும், இவ்வட்டாரமெங்கும் தொழிலாளர்கள் இத்தகைய முதலாளித்துவப் பயங்கரத்துக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டிய அவசியத்தை விளக்கியும், கொலை முயற்சியில் ஈடுபட்ட மனிதவள அதிகாரி விஜயபிரசாத்தைக் கைது செய்யக் கோரியும், நிர்வாகத்தின் அடக்குமுறையை எதிர்த்தும் தொழிற்சங்க உரிமைகளை நிலைநாட்ட போராட அறை கூவியும் பூந்தமல்லி முதலாக சுங்குவார் சத்திரம் வரை பரவலாக சுவரொட்டிப் பிரச்சாரம்  ஆலைவாயிற் கூட்டங்கள் மூலம் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்ட காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பு.ஜ.தொ.மு அதன் தொடர்ச்சியாக 23.9.2011 அன்று மாலை திருப்பெரும்புதூரில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் தோழர் ஜெயராமன் தலைமையில்  இணைப்பு சங்கங்கள்  கிளைச் சங்கங்களின் தோழர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு முழக்கமிட்ட  இந்த ஆர்ப்பாட்டம், கொத்தடிமைகளாக உழலும் தொழிலாளர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பு.ஜ. செய்தியாளர்கள், சென்னை.

பரமக்குடியில் தாழ்த்தப்பட்டோர் மீது கொலைவெறியாட்டம் போட்ட போலீசை எதிர்த்தும், பாசிச ஜெயா அரசின் அதிகாரபூர்வ ஆதிக்க சாதிவெறியாட்டத்தை எதிர்த்தும், இப்போலீசு ராஜ்ஜியத்தை முளையிலேயே கிள்ளி எறிய தமிழக மக்களைப் போராட அறைகூவியும் தமிழகமெங்கும் ம.க.இ.க, வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு; பெ.வி.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் தாங்கள் செயல்படும் பகுதிகளில் சுவரொட்டிப் பிரச்சாரத்தை மேற்கொண்டன. மதுரை, தஞ்சை, கடலூர், திருவாரூர் ஆகிய இடங்களில் இப்புரட்சிகர அமைப்புகள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளன. ம.உ.பா.மையத்தின்  உண்மையறியும் குழுபரமக்குடி, மதுரை பகுதிகளில் விரிவாக விசாரணையை மேற்கொண்டு, இது தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமை வெறியாட்டம் என்பதை ஆதாரங்களுடன் விசாரணை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. விருத்தாசலத்தில் இவ்வமைப்பினர் எழுத்தாளர்கள், வழக்குரைஞர்கள் மற்றும் பல்வேறு ஜனநாயக சக்திகளை அணிதிரட்டி ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.

உழைக்கும் மக்களின் இரத்தத்தைக் குடிக்கும், ஆதிக்க சாதிவெறிபிடித்த, அதிகாரத் திமிரெடுத்த  காட்டேரிதான் தமிழக போலீசு என்பதை பரமக்குடியில் நடந்துள்ள கொலைவெறியாட்டம் மீண்டும் நிரூபித்துக் காட்டியிருக்கிறது. பரமக்குடி துப்பாக்கிச் சூடு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானது என்பதுடன், ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள ஓர் அபாய எச்சரிக்கை. தமிழகத்தில் போலீசு ராஜ்ஜியம் தொடங்கிவிட்டது என்பதற்கான அறிவிப்புதான் பரமக்குடியில் நடந்துள்ள கொலைவெறியாட்டம்.

வாச்சாத்தி கிராம மக்கள் சந்தனமரக் கடத்தலில் ஈடுபடுவதாகவும், ஆற்றுப் படுகையில் சந்தனக் கட்டைகளைப் பதுக்கி வைத்திருப்பதாகவும்  கூறிக்கொண்டு, 1992 ஜூன் பத்தாம் நாள் வாச்சாத்தி பழங்குடி கிராமத்திற்கு நூற்றுக்கணக்கில் வந்திறங்கினர், போலீசு, வனத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளும் ஊழியர்களும்.  அதிகார போதையும் காமவெறியும் தலைக்கேற காட்டுமிராண்டித்தனமாகப் பாய்ந்து, பெற்ற தாய்மார்கள் கண்முன்பாகவே 13 வயது பள்ளிச் சிறுமி உட்பட 18 இளம்பெண்களை நிர்வாணப்படுத்திக் கும்பல் பாலியல் வன்முறை செய்தார்கள். ஆண்களில் பலர் உயிருக்கு அஞ்சி காடுகளுக்குள் ஓடி ஒளிந்து கொள்ள, கையில் சிக்கியவர்களையும் பெண்களையும் அடித்து நொறுக்கினார்கள்.  ஆடு, மாடு, கோழிகள் உட்பட அவர்களின் உடமைகளைக் கொள்ளையடித்ததோடு, உணவு தானியங்களைத் தீ வைத்துக் கொளுத்தியும், குடிநீர்க் கிணற்றில் மண்ணெண்ணெயைக் கொட்டியும் போலீசு ரௌடிகள் நாசப்படுத்தினர். இக்கோரச் சம்பவம் பதினைந்து நாட்களுக்குப் பிறகே வெளி உலகுக்குத் தெரியவந்தது.

கடந்த ஆகஸ்டு மாதம் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள மாவல் வட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் மீது மிகவும் கொடூரமான முறையில் துப்பாக்கிச் சூட்டை நடத்தி, ஒரு பெண் உள்ளிட்டு மூன்று விவசாயிகளைத் துடிதுடிக்கப் படுகொலை செய்திருக்கிறது, காங்கிரசு கூட்டணி அரசு. அரசின் நில அபகரிப்புக்கு எதிராக நடந்த விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக நடத்தப்பட்ட இத்துப்பாக்கிச் சூட்டில், 18 விவசாயிகளும் படுகாயமடைந்தனர்.

கிராமப்புறங்களில் வசிக்கும் கூலி  ஏழை விவசாயிகளுக்கு இலவச ஆடுமாடு வழங்கும் திட்டத்தைத் "தாயுள்ளம் கொண்ட அம்மா' அரசு அறிவித்துள்ளது. அண்ணா பிறந்த நாளான பெப். 15 அன்று முதற்கட்டமாக 1,600 கலப்பின ஜெர்சி கறவை மாடுகளையும் அதே எண்ணிக்கையிலான ஆடுகளையும் வழங்கப் போவதாகவும், இத்திட்டத்தின் 30 சதப் பயனாளிகள் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினராக இருப்பர் என்றும் ஜெயா அரசு அறிவித்துள்ளது. 1,157 கோடி ரூபாய் செலவில் எதிர்வரும் ஐந்தாண்டுகளுக்குள் இந்தத் திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படும் என்றும், நடப்பு நிதியாண்டில் இத்திட்டத்திற்காக 191 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழகத்தில் இரண்டாவது வெண்மைப் புரட்சியைக் கொண்டுவரும் திட்டம் என்றும், விவசாயத்துக்கும் விவசாயிகளுக்கும் முன்னுரிமை தரும் திட்டம் என்றும் இதனைப் பார்ப்பன ஊடகங்கள் உச்சி முகர்ந்து பாராட்டுகின்றன.

ஏழைகளின் கோவணத்தைப் பிடுங்காத குறையாக வரிவிதிப்பைத் தீவிரப்படுத்துவது, தமிழனைப் போதையில் தள்ளி சாராயத்தின் மூலம் கிடைக்கும் கொழுத்த வருவாயிலிருந்து எலும்புத்துண்டு போல கவர்ச்சித் திட்டங்களுக்கு வாரியிறைப்பது என்ற உத்தியுடன் கிளம்பியிருக்கிறது, பாசிச ஜெயா அரசு. தமிழச்சிகளின் தாலியறுத்து இலவச கலர் டிவிக்களை கருணாநிதி கொடுத்தார் என்றால், அதே சாராய உத்தியோடு கலர் டிவிக்களுக்குப் பதிலாக மிக்சி, கிரைண்டரைக் கொடுக்கக் கிளம்பியிருக்கிறார், ஜெயலலிதா. மதுபானங்கள் மூலம் கடந்த ஆண்டில் ரூ. 6,246 கோடி கிடைத்த விற்பனை வரி, இந்த ஆண்டு ரூ. 7,755 கோடியாக அதிகரிக்கும் என்றும், கடந்த ஆண்டைவிட கலால் வரி மூலம் ரூ. 2,076 கோடி கூடுதலாகக் கிடைக்கும் என்றும் ஜெயா அரசின் 2011-12ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில்(பட்ஜெட்டில்) தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, முந்தைய கருணாநிதி ஆட்சியைப் போலவே தமிழக மக்களைக் குடிபோதையில் ஆழ்த்தி, சாராய விற்பனை மூலம் கூடுதலாகக் கொள்ளையடிக்க ஜெயா அரசு தீர்மானித்துள்ளது.

வெடிமருந்து நிரம்பிய கப்பல் தீப்பிடித்து எரிவதைப் போன்ற நிலைமையில்தான் இங்கிலாந்து உள்ளது என்பதை அங்கு நடந்த இளைஞர்களின் கலகம் எடுத்துக் காட்டியிருக்கிறது. கடந்த ஆகஸ்டு மாதம் 6 அன்று இலண்டனின் புறநகர்ப் பகுதியான டாட்டன்ஹாம்  என்ற  இடத் தில் தொடங்கிய இக்கலகம், காட்டுத் தீ போல அந்நகரில் அடித்தட்டு மக்கள் வசிக்கும் வடக்கு, கிழக்கு, தென்கிழக்கு பகுதிகளுக்கும், மேட்டுக்குடி கனதனவான்கள் வசிக்கும் மேற்குப் பகுதிகளுக்கும்; பிர்மிங் ஹாம், மான்செஸ்டர், லிவர்பூல், பிரிஸ்டால் எனப் பிற நகரங்களுக்கும் பரவியது.

தீவிரவாத  பிரிவினைவாத எதிர்ப்பு என்ற பெயரில் காஷ்மீரில் நடத்தப்பட்டுவரும் "தேசபக்த' இனப்படுகொலைகள் பற்றிய உண்மைகள், அண்மையில் ஜம்மு காஷ்மீர் மாநில மனித உரிமைகள் கமிசன் வாயிலாக வெளிச்சத்துக்கு வந்து நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காஷ்மீரில் அப்பாவிகளான 2730 பேர் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு, போலி மோதல்களில் சுட்டுக் கொல்லப்பட்டு பாரமுல்லா, பண்டிபோரா, ஹந்த்வாரா, குப்வாரா ஆகிய நான்கு மாவட்டங்களில் 38 இடங்களில் "அடையாளம் தெரியாதவர்கள்' என்ற பெயரில் கல்லறைகளில் புதைக்கப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களின் உடல்கள் இரகசியமாக இடுகாட்டுக்குக் கொண்டுவரப்பட்டு, காஷ்மீர் போலீசாரால் புதைக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் 411 வாகனங்களைப் பல ஊர்களில் நிறுத்தி வைத்து, எதிர்பாராமல் நிகழும் சாலை விபத்துகள், மாரடைப்பு, தீக்காயங்கள் மற்றும் நோய்களுக்கு அவசர உதவிகளைச் செய்து, பாதிக்கப்பட்டோரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசென்று காப்பாற்றும் பணியைச் செய்து வருகிறது, 108 ஆம்புலன்ஸ் சேவை. ஆனால், இதில் பணியாற்றும் ஊழியர்கள் நிர்வாகத்தால் கசக்கிப் பிழியப்படும் கொடுமையும், இச்சேவையைப் பயன்படுத்தி ஜி.வி.கே. இ.எம்.ஆர்.ஐ. (அவசரகால மேலாண்மை மற்றும் ஆராய்ச்சிக்கழகம்  என்ற தனியார் நிறுவனம் அடிக்கும் கொள்ளையும் பலரும் அறியாதது.

நாளொன்றுக்கு 12 மணிநேரம் வீதம் இரண்டு ஷிப்டுகளில் பணிபுரியும் இதன் ஊழியர்கள், வாகனம் நிறுத்தப்பட்டுள்ள இடத்தில் ஓய்வறையோ, கழிவறையோ,குடிநீர் வசதிகூட இல்லாமல் கொத்தடிமைகளைவிடக் கேவலமாக நடத்தப்பட்டு சுரண்டப்படுகின்றனர். இதற்கு வட்டார, மாவட்ட மருத்துவத்துறை அரசு அதிகாரிகள் உடந்தையாக நின்று ஆதாயமடைகின்றனர்.  குறிப்பாக சிவகங்கை,  இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களின் அதிகாரியான (டி.எம்.) பால் ராபின் சன், தொழிலாளர்களைக் கேவலமாக வசைபாடுவதோடு, சட்டவிரோதமாக வேலை வாங்குவதும் மிரட்டுவதும் கேள்விமுறையின்றித் தொடர்கிறது.

இக்கொத்தடிமைத்தனத்துக்கு எதிராகக் குமுறிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் பு.ஜ.தொ.மு.வைத் தொடர்பு கொண்ட பிறகு, தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை விளக்கியும் தனியார்மயக் கொத்தடிமைத்தனத்தை அம்பலப்படுத்தியும் துண்டுப் பிரசுரம், சுவரொட்டிகள் வாயிலாகப் பிரச்சார இயக்கத்தை பு.ஜ.தொ.மு. மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக, 18.8.2011 அன்று மாலை இராமநாதபுரம் அரண்மனை வாயிலருகே சிவகங்கை இராமநாதபுரம் மாவட்டங்களின் பு.ஜ.தொ.மு. அமைப்பாளர் தோழர் நாகராசன் தலைமையில் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. ஆர்ப்பாட்டத்தில் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்று 108இன் நிர்வாகம் மிரட்டியபோதிலும் அதனைத் துச்சமாக மதித்து நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டம், தொழிலாளர்களிடம் புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளதோடு, தமிழகமெங்கும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை அமைப்பாக்கிப் போராடஉந்துவிசையாக அமைந்தது.

பு.ஜ. செய்தியாளர், சிவகங்கை.

உலகின் மிக அமைதியான பகுதி என அறியப்படும் ஸ்கேன்டிநேவியாவில் உள்ளதொரு ஐரோப்பிய நாடு, நார்வே. ஈழம் உள்ளிட்டு உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட பல நாடுகளில், ஏகாதிபத்திய உத்தியின்படி சமரசக் கட்டப்பஞ்சாயத்து செய்வதில் இந்நாடு பிரபலமானது. அகதிகளாகக் குடியேறுபவர்களுக்கு இந்நாட்டில் வழங்கப்படும் சலுகைகள் காரணமாக, "அகதிகளின் சொர்க்கம்' என இது அழைக்கப்படுகிறது. அது மட்டுமன்றி, நிம்மதியாக வாழத் தகுந்த நகரங்கள் உள்ள நாடுகளின் பட்டியலில், இது முதலிடத்தில் உள்ளது. இதனால், நார்வேயில் 1995  க்குப் பின்னர் புதிதாகக் குடியேறுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. நார்வேயில் மட்டும் நான்கரை லட்சம் பேர், புலம்பெயர்ந்தோர் ஆவர். அவர்கள் பெரும்பாலும் ஆப்பிரிக்காவில் இருந்தும் மேற்காசிய நாடுகளிலிருந்தும் வருபவர்கள். ஈழத் தமிழர்களும் 15 ஆயிரம் பேருக்கும் மேலாகஉள்ளனர். நார்வேயின் மக்கள் தொகையில் 11 சதவீதம் பேர் புதிதாகக் குடியேறியோரும், அவர்களின் வாரிசுகளுமே.

கடந்த ஜூலை மாதம் 27ஆம் தேதியன்று, விழுப்புரத்திலுள்ள இ.சாமிக்கண்ணு என்ற கல்வி வியாபாபாரியின் கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஏழுமலை பாலிடெக்னிக்கில் இரண்டாமாண்டு ஆட்டோமொபைல் படித்து வந்த மாணவரான பிரபாகரன், அந்நிறுவனத்தின் ஆசிரியரான குணசேகரன் என்பவரால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இத்தகவல் அறிந்த பு.மா.இ.மு. தோழர்கள் அப்பாலிடெக்னிக் மாணவர்களை ஒருங்கிணைத்து "கொலைகார குணசேகரனுக்குப்பிணை வழங்காதே! உரிய விசாரணை நடத்தி கொல்லப்பட்ட மாணவர் குடும்பத்துக்கு நட்ட ஈடு வழங்கு!' எனும் கோரிக்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராடியவர்கள் மீது தடியடித் தாக்குதல் நடத்திய போலீசு, பு.மா.இ.மு.வினர் 8 பேர் மீது ய்வழக்கு போட்டு சிறையில் அடைத்தது.

கொல்லப்பட்ட மாணவர் பிரபாகரனின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற பு.மா.இ.மு.வினர், தொடரும் இப்படுகொலைக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து இ.எஸ். கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்களைத் திரட்டினர். அதன் தொடர்ச்சியாக, ஆகஸ்ட் 3ஆம் தேதியன்று ஆர்ப்பாட்டம் நடத்த போலீசிடம் அனுமதிக்கு விண்ணப்பித்த போது, கல்வி வியாபாரிக்கு ஆதரவாக நின்ற விழுப்புரம் போலீசு ஆர்ப்பாட்டத்துக்குத் தடை விதித்தது. தடையை மீறி நாங்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம் என்று பு.மா.இ.மு.வினர் எச்சரித்த பின்னர், இறுதியில் போலீசு அனுமதி வழங்கியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பு.மா.இ.மு. மற்றும் தோழமை அமைப்பினர் பெருந்திரளாகப் பங்கேற்ற போதிலும், இ.எஸ். கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் இதில் பங்கேற்கக் கூடாது என்று அந்நிறுவனமும் போலீசும் மிரட்டியதால், அந்நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்க இயலவில்லை.

தனியார் கல்வி நிறுவனங்களின் பகற்கொள்ளையையும் கொலைகளையும் தோலுரித்துக் காட்டி, இ.எஸ். கல்வி நிறுவனத்தை அரசே ஏற்று நடத்தக் கோரி விண்ணதிரும் முழக்கங்களுடனும், பு.மா.இ.மு. மாநில அமைப்பாளர் தோழர் கணேசனின் சிறப்புரையுடனும் நடந்த இந்த ஆர்ப்பாட்டம் பகுதி வாழ் உழைக்கும் மக்களிடம் தனியார் கல்விக் கொள்ளையர்களுக்கு எதிராகப் போராட அறைகூவுவதாக அமைந்தது.

தகவல்:

புரட்சிகர மாணவர்  இளைஞர் முன்னணி,

விழுப்புரம்.

"உலகின் மிகப் பெரிய பணக்கார நாடு' என அமெரிக்காவைப் பற்றி உலகெங்கிலும் திணிக்கப்பட்டிருந்த பிம்பத்தை, அந்நாட்டின் கடன் நெருக்கடி மீண்டுமொரு முறை கலைத்துப் போட்டுவிட்டது. உலகிலேயே மிகப் பெரிய கடனாளி நாடு அமெரிக்காதான் என்பதை மட்டு மின்றி, வல்லரசு அமெரிக்கா மஞ்சக் கடுதாசி கொடுக்க வேண்டிய போண்டி அரசாக இருப்பதையும் இந்தக் கடன் நெருக்கடி அம்பலப்படுத்தியிருக்கிறது.

சென்னை அடையாறு பகுதியில் இருக்கும் எல்.பி. ரோட்டையும் அதில் அண்ணாவின் தமிழக ஆதரவாளர்கள் குழுமியிருக்கும் கட்டிடத்தையும் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏதும் இருக்கவில்லை. முகப்பிலேயே, "குழந்தைக்குத் தேவை தாய்ப்பால். மக்களுக்குத் தேவை ஜன் லோக்பால்' என்கிற அரசியல் முழக்கத்தை ப்ளக்ஸ் பேனரில் பிரம்மாண்டமாகக் கட்டி வைத்துப் பீதியூட்டியிருந்தனர். சாலையோர ப்ளக்ஸ்பேனர் களில் அண்ணா ஹசாரே, "இந்தியனே எழுந்து வா' என்று மிரட்டிக் கொண்டிருந்தார்.

"நூறு கோடிக்கு மேல் மக்கட்தொகை கொண்ட இந்த நாட்டில் ஊடகங்களுக்கு பத்து நாட்கள் வேறு செய்தியே கிடைக்கவில்லை.  எங்கள் சானல் வழியா கத்தான் அண்ணா ஹசாரே மக்களிடம் பேசுகிறார் என்றெல்லாம் கூடத் தொலைக்காட்சிகள் சொல்லிக்கொண்டன.

தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்கெனவே தனியார் பேருந்துகளும் லாரிகளும் ஒரு மாதத்துக்கு ஏறத்தாழ ரூ.3,000 செலுத்தி வந்த டோல் கேட் கட்டணம், இப்போது ரூ.38,000 முதல் ரூ.65,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இப்பகற் கொள்ளையை எதிர்த்தும், டீசல் விலையைக் குறைக்க வேண்டும்,டோல்கேட் அமைந்துள்ள மாவட்டங்களைச் சேர்ந்த லாரிகளுக்கு 50 சதவீத வரியை வசூலிக்க வேண்டும், காலியான வாகனங்களுக்கு 25 சதவீத வரியை வசூலிக்க வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகளுடன் கடந்த ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் தனியார் பேருந்து, லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். லாரிகள் ஓடாததால் அரசுக்கு நட்டம் ஏற்பட்டதோடு, காய்கறிகள்தானியங்களின் விலை உயர்ந்து பொதுமக்கள் பெருத்த பாதிப்புக்கு ஆளாகினர். கிருஷ்ணகிரி வட்டத்தின் அரசு போக்குவரத்துக் கழகம் மாதம் ரூ. 8 லட்சம் அளவுக்கு டோல்கேட் கட்டணம் செலுத்தி தொடர்ந்து நட்டப்பட்டு வருகிறது. இதைக் காரணம் காட்டி தனியார்மயமாக்கும் முயற்சிகள் நடக்கின்றன.

டோல்கேட் பகற்கொள்ளை என்பது பேருந்து  லாரி உரிமையாளர்களின் பிரச்சினை மட்டுமல்ல, நம் அனைவரின் பிரச்சினை என்பதை விளக்கி பிரச்சார இயக்கத்தை மேற்கொண்ட பு.ஜ.தொ.மு., வி.வி.மு. ஆகிய அமைப்புகள், அதன் தொடர்ச்சியாக கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகே 19.8.2011 அன்று மாலை மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தின. பு.ஜ.தொ.மு. மாவட்டச் செயலர் தோழர் சங்கர் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த தொழிலாளி தோழர் செல்வராஜ், பு.ஜ.தொ.மு. பாகலூர் பகுதி அமைப்பாளர் தோழர் இரவிச்சந்திரன், பு.ஜ.தொ.மு. மாவட்டத்தலைவர் தோழர் பரசுராமன் ஆகியோர் உரையாற்றினர். உள்ளூர் பேருந்து மற்றும் லாரி உரிமையாளர்கள் உழைக்கும் மக்களுடன் இணைந்து தனியார்மயக் கொள்ளைக்கு எதிராகப் போராட வேண்டிய அவசியத்தை உணர்த்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டம், இவ்வட்டாரமெங்கும் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

 

பு.ஜ.செய்தியாளர், கிருஷ்ணகிரி.

கோவை மாவட்டம், உடுமலை வட்டாரத்திலுள்ள இலட்சக்கணக்கான ஏக்கர் பாசனத்துக்கும் குடிநீருக்கும் உயிராதாரமாக உள்ள அமராவதி ஆற்றின் பிரதான கிளை வாய்க்காலான ஐயர் வாய்க்காலின் அருகே, அமராவதி அணையை ஒட்டி காக்டஸ் என்ற தனியார் நிறுவனம், உரிய அனுமதியின்றி அரசு அதிகாரிகளின் துணையோடு கடந்த ஆறு மாத காலமாக நாளொன்றுக்குப் பத்து இலட்சம் லிட்டர் அளவுக்குத் தண்ணீரை உறிஞ்சிப் புட்டிகளில் அடைத்து வியாபாரம் செய்து வருகிறது.

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் மரண தண்டனை நிறைவேற்றத்திற்கு 8 வாரங்கள் இடைக்காலத்தடை விதித்திருக்கிறது, சென்னை உயர் நீதிமன்றம். இம்மூவரின் சார்பில் ஆஜரான ராம் ஜெத்மலானி, காலின் கன்சால்வேஸ், வைகை ஆகிய வழக்குரைஞர்கள் கருணை மனுவின் மீது குடியரசுத் தலைவர் முடிவெடுப்பதில் நேர்ந்துள்ள 11 ஆண்டு காலத் தாமதத்தின் விளைவாக கைதிகள் மூவரும் அனுபவித்துவரும் துன்பம் மரண தண்டனையை விடக் கொடியது என்ற வாதத்தை முதன்மைப் படுத்தி, இம்மரணதண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருக்கின்றனர். மனுவை ஏற்றுக்கொண்ட  உயர் நீதிமன்ற பெஞ்சு, 8 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசைக் கோரியுள்ளதுடன், செப்டம்பர் 9 ஆம் தேதியன்று நிறைவேற்றப்படவிருந்த தூக்கு தண்டனையை அதுவரை  நிறுத்தி வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆறு மாதங்களாக லிபியாவில் அதிபர் கடாஃபிக்கு எதிராக நடத்தி வந்த போரில், ஏகாதிபத்திய விசுவாச கலகப்படை தலைநகர் திரிபோலியைக் கைப்பற்றியதும், அப்படையினரது இடைக்கட்ட அரசின் வெற்றியையும் கடாஃபி ஆட்சியின் வீழ்ச்சியையும் அமெரிக்காவும் நேடோ கூட்டணி நாடுகளும் அதிகாரபூர்வமாக அங்கீகரித்துள்ளன. ஜனநாயகம், மனித உரிமை, போரில் சிக்கிய சிவிலியன்களைப் பாதுகாப்பது என்றெல்லாம் கூப்பாடு போடும் அமெரிக்காவின் கபடத்தனத்தை மீண்டுமொருமுறை நிரூபித்துக் காட்டிவிட்டது, லிபியா மீதான ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போர்.

நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, பாசிச பார்ப்பன ஜெயா கும்பலின் ஆணவத்துக்கு ஆப்பு வைத்து தமிழகத்தில் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வெற்றி அவ்வளவு எளிதில் கிடைத்துவிடவில்லை. உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் வழக்குரைஞர்களின் வாதத் திறமையால் மட்டுமின்றி, புரட்சிகர அமைப்புகளின் தலைமையிலான  மாணவர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் போராட்ட அலையின் காரணமாகவே உச்சநீதிமன்றம் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.

ஒரிசாவில் போஸ்கோ நிறுவனத்திற்கு எதிராக நடந்துவரும் போராட்டத்தில் சிறுவர்கள் முன்னணியில் நிற்பதை ஒரிசா மாநில அரசு மட்டுமின்றி, பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் அறிவுஜீவிகளும் கண்டித்து வருகின்றனர். அம்மாநிலத்தில் மதிய உணவுத்  திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ள நவீன் பட்நாயக் அரசு, போராடும் சிறுவர்களின் படிப்பு பாழாவதாகப் புலம்புவது நகைப்புக்குரிய முரண்.

ஓசூர் சிப்காட்2இல் எலக்ட்ரானிக் சர்க்கியூட் போர்டுகளை உற்பத்தி செய்யும் ஆனந்த் எலக்ட்ரானிக்ஸ் எனும் தனியார் நிறுவனத்தில், அற்பக் கூலியையும் காமவெறி பிடித்த உற்பத்திப் பிரிவு மேலாளர் பெரியசாமியின் இழி சொற்களையும் சகித்துக் கொண்டு வேலை செய்யும் பெண் தொழிலாளர்களில் ஒருவர்தான், தேவி. பணிநிரந்தர ஆணை தரப்படாமல், மேலும் பயிற்சிக்காலம் நீட்டிக்கப்பட்டதால், கடந்த 572011 அன்று அதை ஏற்க மறுத்து தேவி வாதிட்டபோது, அவரையும் அவரது கணவரையும் இழிவாகவும் ஆபாசமாகவும் பேசி அவமானப்படுத்தியுள்ளான், பெரியசாமி. தனக்குரிய சேமநலநிதி முதலானவற்றை ஒப்படைத்துவிடுமாறும் வேலையிலிருந்து விலகிக் கொள்வதாகவும் தெரிவித்து, மறுநாள் ஆலைக்குச் சென்ற தேவியிடம் மேலும் ஆபாசமாக அவன் பேசத் தொடங்கியதும், பெரியசாமியின் வாயிலும் மூக்கிலும் மிளகாய்ப் பொடியை வீசிய தேவி, செருப்பைக் கழற்றி விளாசித் தள்ளினார். பின்னர், தனக்கு நேர்ந்த அநீதியை விளக்கி பெரியசாமியின் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீசுக்கு புகார் கடிதம் கொடுத்தார். ஆனால் போலீசோ தேவியைக் கைது செய்ததோடு, அவரது புகாரை வாங்க மறுத்தது.

இத்தகவல் அறிந்ததும், இப்பகுதியில் இயங்கும் பு.ஜ.தொ.மு.வினர் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களைத் திரட்டி, தோழர் பரசுராமன் தலைமையில் ஓசூர் வட்டத் தொழிலாளர் அலுவலகம் முன்பு, "காமவெறியனுக்கு செருப்படி கொடுத்த வீரப் பெண்மணி தேவி வாழ்க! முதலாளித்துவ பயங்கரவாதம் ஒழிக! வீரப்பெண்மணி தேவியை விடுதலை செய்! காமவெறியன் பெரியசாமியைக் கைது செய்!' என்று விண்ணதிரும் முழக்கங்களுடன் எழுச்சிகரமாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். தோழர் பரசுராமன் மற்றும் 20 பேர் அனுமதியின்றி சாலையை மறித்ததாகப் பொய் வழக்கு பதிவு செய்த போலீசு, தோழர் பரசுராமனைக் கைது செய்து சிறையில் அடைத்தது. "ஆனந்த் எலக்ட்ரானிக் பெண் தொழிலாளி மீது பாலியல் துன்புறுத்தல்! காமவெறிபிடித்த அதிகாரி பெரியசாமிக்கு செருப்படி கொடுத்தார் பெண் தொழிலாளி!' என்ற முழக்கங்களுடன் ஓசூர் நகரெங்கும் ஒட்டப்பட்ட பு.ஜ.தொ.மு.வின் சுவரொட்டிகள் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் ஆரவாரத்தையும் போராட்ட உணர்வையும் ஏற்படுத்தியுள்ளன. தோழர் பரசுராமன் பிணையில் விடுவிக்கப்பட்ட போதிலும், வீராங்கனை தேவியை விடுதலை செய்யவும் காமவெறியன் பெரியசாமியைத் தண்டிக்கவும் அடுத்தகட்டப் போராட்டத்துக்கு ஓசூர் தொழிலாளர்கள் தயாராகி வருகின்றனர்.

தகவல்: பு.ஜ.தொ.மு; ஓசூர்.

தேனி மாவட்டம், போடியில் இயங்கிவரும் விவசாயிகள் விடுதலை முன்னணியின் மூத்த தோழர்களில் ஒருவரும், கடந்த 20 ஆண்டுகளாக வி.வி.மு.வின் அடையாளமாகத் திகழ்ந்தவரும், புதிய ஜனநாயம் இதழின் தொடக்க கால முகவருமான தோழர் மாசானம், இதய நோயினால் பாதிக்கப்பட்டு கடந்த 27.7.2011 அன்று  தனது  51வது வயதில் மரண மடைந்து விட்டார்.

அமெரிக்கா, தனது மேலாதிக்க நோக்கங்களுக்குக் கட்டுப்பட்டு, தனக்கு விசுவாசமாக நடந்து கொள்ளும் சர்வாதிகாரிகளை ஜனநாயகவாதிகளாகச் சித்தரித்துப் பாதுகாக்கும் என்பதற்கு இன்னுமொரு உதாரணமாகத் திகழுகிறது, மத்திய கினியா.

அரியானா மாநிலத்தில் இயங்கிவரும் நூற்றுக்கணக்கான பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்குத் தொழிற்சங்க உரிமைகள் கிடையாது. அத்தொழிற்சாலைகளில் அற்ப அளவுக்கு நிரந்தரத் தொழிலாளர்களை மட்டும் வைத்துக் கொண்டு, பெரும்பாலும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமிப்பதுதான் நடக்கின்றது; தொழிற்சங்கம் என்பதைப் பற்றிப் பேசுவதே குற்றமாகக் கருதப்படுகிறது. தொழிற்சங்கங்களுக்குப் பதிலாக நிர்வாகமே வேலை கமிட்டிகள் எனும் எடுபிடி சங்கங்களை உருவாக்கி நடத்தி வருகின்றன. இந்நிலையில் அரியானாவில் அமைந்துள்ள மாருதி சுசுகி தொழிற்சாலையில் தொழிற்சங்க உரிமைக்காக அண்மையில் நடந்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம், தொழிலாளர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையையும், முதலாளிகளிடம் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தில் காந்தி விளையாட்டரங்கம் அருகிலுள்ள நீச்சல்குளத்தில், பயிற்சிக்கு வரும் பள்ளி மாணவிகளிடம் நீச்சல் பயிற்சியாளர் ஞானசேகரன் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், இதனால் இரண்டு மாணவிகள் கர்ப்பமடைந்துவிட்டதாகவும் கோவை மேற்கு மண்டல மேலாளர் மோகன்,சேலம் மாவட்ட விளையாட்டுத் துறை அதிகாரி பிரதாப் உள்ளிட்ட அதிகாரிகள் பயிற்சியாளர் ஞானசேகரன் மீதான தனிப்பட்ட விரோதத்தால் அவதூறு பரப்பி, பெண் குழந்தைகளை அவமானப்படுத்தியுள்ளனர்.

"குஜராத்தைப் பார்! மோடி ஆட்சியின் சாதனையைப் பார்!' என்று மோடி ஆட்சியை உச்சந்தலையில் வைத்துக் கொண்டாடுகிறது, இந்தியா டுடே. "இந்தியாவின் ஆண்டுச் சராசரி விவசாய வளர்ச்சி 2.9 சதவீதம் மட்டுமே; ஆனால், குஜராத்தின் வளர்ச்சியோ 9 சதம்! மத்திய அரசு மோடியைப் பார்த்து பாடம் கற்றுக் கொள்ளவேண்டும்' என்கின்றன, செய்தி ஊடகங்கள். உணவு விவசாயக் கழகத்தின் துணை நிறுவனமான பன்னாட்டு உணவுக் கொள்கை ஆராய்ச்சி மையம் குஜராத்தைப் பின்பற்றுமாறு இந்தியாவின் இதர மாநிலங்களை வலியுறுத்தி வருகிறது. தமிழகத்தில் ஆட்சிக்கு வந்துள்ள பாசிச ஜெயா கும்பலோ, குஜராத்தை முன்மாதிரியாகக் கொண்டு தமிழகத்தின் விவசாயத்தில் மாற்றத்தைக் கொண்டுவர ஒரு நிபுணர் குழுவை குஜராத்துக்கு அனுப்பத் தீர்மானித்துள்ளது.

"சிறப்புப் போலீசு அதிகாரிகள் (ளுPழு)' என்று சட்டிஸ்கர் மாநில அரசாங்கத்தால் அழைக்கப்படும் சல்வா ஜூடும் அமைப்பை கலைத்து விடும்படியும் நிராயுதபாணியாக்கிவிடும்படியும் இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது  அரிதிலும் அரிதான வழக்கு என்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு என்றும் மனித உரிமை மற்றும் ஜனநாயகப் போராளிகளால் போற்றப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் வட்டாரத்தில் விவசாயிகள் நெல், கரும்பு, மணிலா, பயறு வகைகளைப் பயிரிட்டு வந்த போதிலும், முறையான ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் இல்லாததால், அரகண்ட நல்லூருக்கும் விழுப்புரத்துக்கும் உளுந்தூர்பேட்டைக்கும் டிராக்டரில் உற்பத்திப் பொருட்களை எடுத்துக் கொண்டு அலைவது, அல்லது தரகர்களிடம் சிக்கி அற்ப விலைக்கு விற்பது என்கிற அவலம் நீண்ட காலமாக நீடித்து வருகிறது. திருவெண்ணெய் நல்லூரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் என்ற பெயரில் ஒரு மாட்டுத் தொழுவத்தை வைத்துக் கொண்டு அதிகாரிகள் ஒப்பேத்துகின்றனர். 30 கிராம விவசாயிகள் இப்பகுதியில் முறையான கொள்முதல் நிலையம் வேண்டுமென கோரிய போதிலும், அரசு தொடர்ந்து அலட்சியப்படுத்தியே வருகிறது.

தொழில் வளர்ச்சி என்ற பெயரில் தமது நிலங்கள் அபகரிக்கப்படுவதற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகளும், பழங்குடியின மக்களும் போராடிவரும் வேளையில், 1894ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது, மைய அரசு. இச்சட்டத்தில் திருத்தங்கள் செய்வதோடு,  நிலத்தை இழக்கும் விவசாயிகளை மீளக் குடியமர்த்தவும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான சட்டத்தையும் இம்மழைக்கால கூட்டத் தொடரிலேயே நாடாளுமன்றத்தில் கொண்டுவரப் போவதாகவும் மைய அரசு கூறியிருக்கிறது.

மான ஈனமற்ற அமெரிக்க அடிமைத்தனத்திற்குப் புதிய இலக்கணம் படைத்து வருகிறது, மன்மோகன் சிங் அரசு. மறுகாலனியாக்கக் கொள்கைகளை விசுவாசமாகவும் வெறியோடும் நடைமுறைப்படுத்தி வருவதோடு, அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்த்தந்திரத் திட்டத்தில் இந்தியாவை இறுகப் பிணைக்கும் நடவடிக்கைகளில் அப்பட்டமாக ஈடுபட்டு, இந்தியாவை அமெரிக்காவின் விசுவாச அடியாளாக வளர்த்தெடுப்பதிலும் புதிய "சாதனை'யைப் படைத்து வருகிறது.

அலைக்கற்றை ஊழல் என்பது அரசியல்வாதிகள், அதிகாரிகள் சம்மந்தப்பட்ட ஊழல் மட்டுல்ல் இது தனியார்மய தாராளமயக் கொள்கைகளின் கீழ் நடைபெறும் கார்ப்பரேட் பகற்கொள்ளை. தனியார்மய தாராளமயக் கொள்கைகளின் கீழ் இத்தகைய பகற்கொள்ளைகள் சட்டபூர்வமாகவே அனுமதிக்கப்பட்டிருப்பதுதான் இதில் நாம் கவனம் செலுத்த வேண்டிய மையமான பிரச்சினை இலஞ்சஊழல் மோசடிகளைக் காட்டிலும் முதன்மையானதும், அவற்றில் பலவற்றுக்கு அடிப்படையானதும் இதுதான் என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 110 டாலர் விலை இருந்தபோது, அதையொட்டியே விலை நிர்ணயம் செய்யப்படும் என்று கூறிய மைய அரசு, தற்போது ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 93 டாலராகக் குறைந்துள்ள போது விலையைக் குறைக்காமல், ஏற்றிய விலையிலேயே விற்றுக் கொள்ளையடிப்பதை எதிர்த்து கடந்த ஜூன் 29 அன்று தஞ்சை ரயிலடியில் ம.க.இ.க் பு.மா.இ.மு; வி.வி.மு., ஆகிய அமைப்புகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தை நடத்தின.

சமச்சீர் கல்வி பொதுப் பாடத்திட்டத்தை முடக்கும் பாசிச ஜெயா அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கும்போதே, சமச்சீர் கல்வி ஒழிப்பு நடவடிக்கையின் அரசியல் பின்புலத்தை மாணவர் களுக்கும் பெற்றோ ர் களுக்கும் விளக்கிப் புரிய வைக்கும் பிரச்சாரத்தையும் புரட்சிகர மாணவர் இளைஞர் அணி, மக்கள் கலை இலக்கியக் கழகம் ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமிழகமெங்கும் மேற்கொண்டு வருகின்றன.

இராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த மூத்த நக்சல்பாரித் தோழர் கணபதி, கடந்தஜூலை 22ஆம் தேதியன்று தனது 75வது வயதில் மரணமடைந்துவிட்டார்.

"ஜெயாவின் ஆட்சி என்றாலே நிர்வாகத் திறமைமிக்க ஆட்சி; சட்டம்ஒழுங்கைக் கண்டிப்புடன் பேணக்கூடிய ஆட்சி. தி.மு.க.வின் ஆட்சியோ இதற்கு நேர்மாறானது' என்றொரு கருத்தைப் பார்ப்பன ஊடகங்கள் திட்டமிட்டே நீண்டகாலமாகப் பரப்பி வருகின்றன.

தென்னிந்தியாவில் முதன்முறையாக கர்நாடகத்தில் அமைந்த பா.ஜ.க. ஆட்சி, பல்லாயிரம் கோடி சுரங்க ஊழல்  கொள்ளையில் சிக்கி நாடெங்கும் சந்தி சிரிக்கிறது. கட்டுப்பாடுமிக்க கட்சியாகவும் யோக்கிய சிகாமணிகளாகவும் ஊழல் எதிர்ப்பு சவடால் அடித்துவரும் பா.ஜ.க.வின் காவிகோவணமும் கிழிந்து அம்மணமாகி நிற்கிறது. ஊழல் கொள்ளையில் சிக்கிய முதல்வர் எடியூரப்பாவைப் பதவியிலிருந்து விலகச் சொல்லி பா.ஜ.க. தலைமை நிர்ப்பந்திக்க, அவர் ஏற்க மறுத்து கலகம் செய்த பிறகு, ஜெயலலிதாவுக்கு வாய்த்த பன்னீர்செல்வத்தைப் போல, எடியூரப்பாவின் விசுவாசியாக உள்ள ஒருவரை முதலமைச்சராக்க ஒப்புக் கொண்ட பிறகு, எடியூரப்பாவின் பதவி விலகல் நாடகம் நடந்துள்ளது.

சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரியும், தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளைக்கு எதிராகவும் கடந்த மே மாத இறுதியிலிருந்து தாங்கள் செயல்படும் பகுதிகளில் ம.க.இ.க, வி.வி.மு, பு.ம.இ.மு;, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்துடன் இணைந்து தொடர் பிரச்சாரத்தையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றன. கடந்த ஜூன் மாதத்தில் தமிழகமெங்கும் பல பகுதிகளில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்களை நடத்திவந்த இவ்வமைப்புகள், அதன் தொடர்ச்சியாக கடந்த ஜூலை மாதத்தில் துண்டுப்பிரசுரங்களுடன் வீடுகளிலும் பள்ளிகளிலும் பிரச்சாரம், தெருமுனைக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பெற்றோர்கள்  மாணவர்களைத் திரட்டி உண்ணாநிலை போராட்டங்கள், சாலைமறியல்கள்,பாசிச ஜெயாவின் கொடும்பாவி எரிப்புப் போராட்டம், தனியார் மெட்ரிக் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராகப் பெற்றோரைத் திரட்டிப் போராட்டம் என போர்க்குணத்தோடு தொடர்ந்து போராடி வருகின்றன. கடந்த ஜூலை 4ஆம் தேதியன்று காரைக்குடியிலும், 11ஆம் தேதியன்று போடியிலும், 12ஆம் தேதியன்று கரூரிலும், 13 ஆம் தேதியன்று மானாமதுரையிலும், 21ஆம் தேதியன்று சிவகங்கையிலும் ஆர்ப்பாட்டங்களை இவ்வமைப்புகள் நடத்தின.

திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் விளையும் நெல்லை விற்பனை செய்யப் போதுமான அளவிற்கு நேரடி நெல் கொள்முதல் விற்பனை நிலையங்கள் அம்மாவட்டங்களில் திறக்கப்படுவதில்லை.  இதனால், அம்மாவட்டங்களைச்  சேர்ந்த பெரும்பாலான விவசாயிகள் வேறு வழியின்றி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலமாகத்தான் நெல்லை விற்று வருகின்றனர். ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நெல்லுக்குஅரசு நிர்ணயித்திருக்கும் கொள்முதல் விலை கிடைக்காது. வியாபாரிகள் கூட்டணி கட்டிக் கொண்டு தீர்மானித்துச் சொல்லும் விலையில்தான் நெல் மூட்டைகளை விற்க முடியும்.  சட்டபூர்வமாக நடந்துவரும் இந்தக் கொள்ளையை விவசாயிகள் தட்டிக் கேட்க முயன்றால், போலீசின் குண்டாந்தடியும் பொய் வழக்கும்தான் அவர்கள் மீது பாயும்.  இந்த அநியாயம்தான் கடந்த ஜூன் மாதம் 2ஆம் தேதி விழுப்புரத்திலும் நடந்தது.

"நலத்திட்டங்கள்' என்று தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியாலும் தொடர்ந்து இந்நாள் முதன்மந்திரி ஜெயலலிதாவாலும் அழைக்கப்படும் திட்டங்கள், "இலவசங்கள்' என்று மேட்டுக்குடி, ஆதிக்க சாதி அறிவுஜீவிகளாலும் முதலாளிய ஊடகங்களாலும் கொச்சைப்படுத்தப்படுகின்றன.

இந்திய அரசின் தேசியப் பாதுகாப்புச் செயலர் சிவசங்கர் மேனன், வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ், பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார் ஆகியோர் அடங்கிய குழு, கடந்த ஜூன் 11 அன்று இலங்கைக்குச் சென்று, அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவையும் மற்ற பிற முக்கிய அதிகாரிகளையும் சந்தித்துவிட்டுத் திரும்பியது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை செல்வதற்கான முன்தயாரிப்புகளைச் செய்வதற்கும், இலங்கை  இந்திய இராணுவ அதிகாரிகளிடையே நடந்துவரும் வருடாந்திர பேச்சுவார்த்தைகள் தொடர்பான தயாரிப்புகளைச் செய்வதற்கும்தான் இக்குழு இலங்கைக்குச் சென்று திரும்பியிருக்கிறது. இலங்கை சென்றுவிட்டுத் திரும்பிய சிவசங்கர் மேனன் பத்திரிகையாளர்களிடம் நடத்திய உரையாடலே, தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்தோ, ஈழத் தமிழர்களின் மறுவாழ்வு, அதிகாரப் பகிரவு குறித்தோ இக்குழு எவ்வித முக்கிய ஆலோசனையும் நடத்தவில்லை என்பதற்கான சான்றாக உள்ளது.

மத்திய அரசின் திட்டங்கள், ஒப்பந்தங்கள், வருவாய், செலவினம் போன்றவற்றை ஆண்டுதோறும் தணிக்கை செய்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதுதான் இந்திய பொதுத் தணிக்கை அதிகாரியின் பணியாகும். இந்தத் தணிக்கைகளில்தான் 2ஜி அலைக்கற்றை ஊழல் அம்பலமானது. இந்த வரிசையில், இவ்வாண்டின் அறிக்கை வெளிக்கொண்டு வந்திருப்பதோ தில்லி விமான நிலைய ஊழல்.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் பாபா ராம் தேவின் ஊழல் எதிர்ப்பு சர்க்கஸ் தொடங்குவதற்கு ஒருநாள் முன்னதாக, அதாவது ஜூன் 3ஆம் தேதியன்று, பீகாரின் ஆராரியா மாவட்டத்தின் பர்பஸ்கன்ஜ் வட்டத்திலுள்ள ராம்பூர் மற்றும் பஜன்பூர் ஆகிய கிராமங்களில் போலீசு நடத்திய காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கிச் சூட்டில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணும் ஆறுமாதக் கைக்குழந்தையும் உள்ளிட்டு 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ராம்தேவையும் அவரது பரிவாரங்களையும் போலீசு விரட்டியடித்ததை மிகக் கொடிய வன்முறைத் தாக்குதலாகச் சித்தரித்த முதலாளித்துவ ஊடகங்கள், ஏழை முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசு கொலைவெறியாட்டத்தைப் பற்றி எந்த முக்கியத்துவமும் அளிக்கவில்லை.

மும்பையிலிருந்து வெளிவரும் மாலை நாளேடான "மிட்டே' வின் மூத்த புலனாய்வு செய்தியாளரான ஜோதிர்மாய் டே, கடந்த ஜூன் 11ஆம் தேதியன்று பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த அவரை, இரகசிய உலக குற்றக் கும்பல்கள் நடுவீதியில் சரமாரியாகச் சுட்டுக் கொன்ற இக்கொடுஞ் செயல், நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனித உரிமை ஆர்வலரும், போலீசு அட்டூழியங்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருபவரும், சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞருமான சங்கரசுப்புவின் மகன் சதீஷ்குமார் போலீசு வெறியர்களால் கோரமாகக் கொல்லப்பட்டுள்ள சம்பவம், தமிழகத்தையே பதைபதைக்கச் செய்துள்ளது.

2ஜி அலைக்கற்றை ஏல விற்பனையில் நடந்துள்ள கார்ப்பரேட் பகற்கொள்ளையைப் போல, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு வயல்களை ஏல விற்பனை செய்திருப்பதிலும் கார்ப்பரேட் பகற்கொள்ளை நடந்திருப்பது தற்பொழுது அம்பலமாகியிருக்கிறது. இலைமறை காயாக அதிகாரத் தாழ்வாரங்களில் கிசுகிசுக்கப் பட்டுவந்த இந்த ஊழலைப் பற்றிய இந்திய அரசின் தலைமை தணிக்கை அதிகாரியின் அறிக்கையைப் பத்திரிகைகள் வெளியிட்டதன் மூலம் இந்த கார்ப்பரேட் பகற்கொள்ளை அம்பலத்திற்கு வந்துவிட்டது.

கடந்த 2006ஆம் ஆண்டில் சென்னைதிருச்சி தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்த போது, கடலூர் மாவட்டத்திலுள்ள சிறுநெசலூர் கிராமத்தில், சாலையின் கீழ்ப்புறம் கிராமமும் மேற்புறம் தொடக்கப் பள்ளியுமாகத் துண்டாடப்பட்டது. அதிவிரைவாக வாகனங்கள் செல்லும் நெடுஞ்சாலையைக் கடந்து குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல இயலாத நிலையில், தமது குடியிருப்புப் பகுதியிலேயே பள்ளிக்கூடத்தைக் கட்டித்தருமாறு தாழ்த்தப்பட்டோரான இக்கிராம மக்கள் பலமுறை கோரியபோதிலும், அதிகார வர்க்கம் தொடர்ந்து அலட்சியப்படுத்தியது. கடந்த ஆண்டில் அய்யனார் கோயில் தரிசு நிலத்தில் பள்ளிக்கூடம் கட்டித்தரக் கோரி, அதற்கான ஏற்பாடுகளை இக்கிராம மக்கள் செய்து கொடுத்து மாவட்ட ஆட்சியர் மூலம் முயற்சித்த போதிலும், இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் ஆதிக்க சாதி வெறியர்களுக்கு ஆதரவாக நின்று இந்நிலத்தை சந்தை மதிப்புக்குத்தான் தர இயலும் என மறுத்துவிட்டனர்.

பாபா ராம்தேவ் மற்றும் அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டங்கள் ஊடகங்களால் பெரிதுபடுத்தப்பட்ட நிலையில், ஹரித்துவாரில் நிகமானந்தா சரஸ்வதி என்ற சாமியார் நடத்திய உண்ணாவிரதம் பேசப்படவில்லை. தனது நீதியான போராட்டத்துக்காக அவர் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த போதிலும், அவரது தியாகம் போற்றப்படவில்லை.

எண்டோசல்பான் என்ற பூச்சிக் கொல்லி மருந்துக்கு எதிராக கேரளாவில் மக்கள் போராட்டங்கள் வலுப்பெற்றதைத் தொடர்ந்து, இக்கொலைகார பூச்சி மருந்துக்கு எதிராக அண்மைக்காலமாக நாடுமுழுவதும் கடும் எதிர்ப்பும் விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழலாளர்களின் போராட்டங்களும் பெருகி வருகின்றன. அதைத் தொடர்ந்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தலைமையிலான குழுவின் முடிவுக்குப் பின்னரே முழுமையான தடை விதிக்கப்படும் என்று அறிவித்து, எட்டு வாரங்களுக்கு தற்காலிகத் தடை எனும் கண்துடைப்பு நாடகமாடியது, உச்ச நீதிமன்றம்.

தென்கொரியாவைச் சேர்ந்த தேசங்கடந்த தொழிற்கழகமான போஸ்கோ, ஒரிசாவின் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் ஏறத்தாழ 4,000 ஏக்கர் பரப்பளவில், 55,000 கோடி ரூபாய் மூலதனத்தில், இரும்பு உருக்காலை  துறைமுகம்  மின் உற்பத்தி நிலையம் ஆகிய மூன்றையும் ஒருசேர அமைப்பதற்கு, மைய அரசின் சுற்றுப்புறச் சூழல் அமைச்சகம் தனது இறுதிக்கட்ட அனுமதியை வழங்கிவிட்டது.  போஸ்கோவின் திட்டத்தால் ஆயிரக்கணக்கான ஏக்கர் வனப் பகுதி முற்றிலும் அழிந்து போகும், அவ்வனத்தை நம்பி வாழ்ந்துவரும் 20,000க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்களின், இதர விவசாயிகளின் வாழ்க்கை நாசமாகிவிடும் என்பதையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு, வன உரிமைச் சட்டவிதிகளை வளைத்தும், மீறியும் தான் இந்தச் சுற்றுப்புறச்சூழல் அனுமதி  வழங்கப்பட்டுள்ளது.

நாளுக்கு ஒரு ஊழல் அம்பலமாகி நாறிக்கொண்டிருக்கின்ற "நல்லவர்' மன்மோகன் சிங்கின் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, ஊழலை நாட்டை விட்டே விரட்டுவதற்கு லோக்பால் மசோதா தயாரித்துக் கொண்டிருக்கிறது. திருடன் கையில் சாவியை ஒப்படைப்பது என்று கூறக் கேட்டிருக்கிறோம். ஆனால், திருட்டைத் தண்டிப்பதற்கான சட்டங்களை இயற்றும் பொறுப்பை திருடர்கள் தாமே முன்வந்து ஏற்றிருக்கும் கேலிக்கூத்தை இப்போது பார்க்கிறோம்.

போலி கம்யூனிஸ்டுகளின் உறுதியான ஆதரவு இல்லாமல் பாசிஸ்டுகள் அதிகாரத்துக்கு வர இயலாது என்று உணர்த்தினார், பாசிச எதிர்ப்புப் போராளியும் அனைத்துலக கம்யூனிசத் தலைவர்களில் ஒருவருமான தோழர் ஜார்ஜ் டிமிட்ரோவ். அதற்கு இலக்கணப் பொருத்தமாகத் திகழ்கிறார்கள், தமிழகப் போலி கம்யூனிஸ்டுகள்.

கடந்த ஜூன் 24ஆம் தேதி நள்ளிரவிலிருந்து சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 50 ரூபாய், டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாயஇ, மண்ணெண்ணெய் லிட்டருக்கு 2ரூபாய்  என விலையேற்றத்தை அறிவித்து நாட்டு மக்களின் மீது மீண்டும் பொருளாதாரச் சுமையைத் திணித்துள்ளது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சந்தை விலைக்குக் குறைவாக பெட்ரோலியப் பொருட்களை விற்பதால் ஏற்படும் நட்டம், சமையல் எரிவாயு முதலான வற்றுக்கு அரசு அளிக்கும் மானியத்தால் ஏற்படும் நிதிப்பற்றாக்குறை  என்ற வழக்கமான பொய்களைக் கூறி விலையேற்றத்தை நியாயப்படுத்தி வருகிறது.

பார்ப்பன  பாசிச ஜெயா கும்பல் சமச்சீர் கல்வித் திட்டத்தை ஒரேயடியாகக் குழிதோண்டிப் புதைத்துவிடும் நோக்கில், அத்திட்டத்தை அமலாக்குவதைக் காலவரையற்று ஒத்திவைக்கும் மசோதாவை கடந்த ஜூன் 7 அன்று சட்டசபையில் நிறைவேற்றியது. சென்னை உயர் நீதிமன்றம் இம்மசோதாவிற்கு இடைக்காலத் தடை விதித்ததோடு, ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு கடந்த கல்வியாண்டில் சமச்சீர் கல்வித்திட்டத்தின் கீழ் அமலாக்கப்பட்ட பொது பாடத்திட்டம் தொடர வேண்டும் என்றும், சமச்சீர் கல்விச் சட்டத்தில் கூறப்பட்டபடி, இரண்டு முதல் ஐந்தாம் வகுப்பு மற்றும் ஏழாம் முதல் பத்தாம் வகுப்புகளுக்குப் பொது பாடத்திட்டம் இந்தக் கல்வியாண்டு முதல் அமலாக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. அதேசமயம் அத்தீர்ப்பிலேயே, "சமச்சீர் கல்வியையும் அதற்கான பாடப்புத்தகங்களை ஆய்வு செய்வதற்குத் தமிழக அரசிற்கு இத்தீர்ப்பு தடையாக இருக்காது; சமச்சீர் பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள அரசியல் கட்சி, தனிநபர் புகழ் போன்ற சிலவற்றை நீக்கவோ, திருத்தவோ, மாற்றவோ அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது' என்றும் தெளிவுபடுத்தியிருந்தது.

கடந்த ஜூன் 7ஆம் தேதியன்று சென்னையிலிருந்து பொள்ளாச்சிக்குச் சென்று கொண்டிருந்த கே.பி.என். சொகுசுப் பேருந்து, காவேரிப்பாக்கம் அருகில் சரக்கு வாகனத்தை மின்னல் வேகத்தில் முந்திச் செல்ல முயன்றபோது நிலைதடுமாறி கவிழ்ந்து தீப்பிடித்ததில், 22 பயணிகள் தீயில் கருகிப் பரிதாபமாக மாண்டுபோனார்கள்.

ஈராண்டுகளுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் சிங்கள இனவெறி பாசிச அரசு நடத்திய தமிழின அழிப்புப் போரின் கொடூரங்களை ஆவணப் படமாக வெளியிட்டிருக்கிறது, இங்கிலாந்தின் சானல்4 தொலைக்காட்சி. கல்மனம் கொண்டோரையும் கதறச் செய்யும் இக்கொடூரக் காட்சிகளைக் கண்டு வேதனையும் துயரமும் கொள்ளாதோர் இருக்கவே முடியாது. இலங்கை அரசின் இரக்கமற்ற இந்தப் போரை இந்திய அரசுதான் உற்ற துணைவனாகவும் வழிகாட்டியாகவும் இருந்து இயக்கியது.

கல்விக் கொள்ளையர்களுக்கு தமிழகத்தை மொத்தமாகத் திறந்துவிட ஏதுவாக சமச்சீர் கல்வித் திட்டத்தை ரத்து செய்துள்ள பாசிச ஜெயா கும்பலுக்கு எதிராகவும், தனியார்மயத்தினால் கல்வி வியாபாரம் ஆக்கப்பட்டுள்ளதற்கு எதிராகவும் தமிழகமெங்கும்   மனித உரிமை பாதுகாப்பு மையமும், புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணியும்  தோழமை அமைப்புகளுடன் இணைந்து பிரச்சாரத்தையும் ஆர்ப்பாட்டங்களையும் போர்க்குணத்தோடு நடத்தி வருகின்றன.

நரேந்திர மோடியின் ஆட்சியில் குஜராத் அடைந்துவரும் "வளர்ச்சி' பற்றி பார்ப்பன  பாசிஸ்டுகள் மட்டுமல்ல, "மதச்சார்பற்ற' முதலாளித்துவ பத்திரிகைகளும் புகழ்ந்து எழுதி வருகின்றன.  இந்த "வளர்ச்சி' தொழிலாளி வர்க்கத்துக்குத் தந்துள்ள பரிசு என்ன தெரியுமா? அகால மரணம்!

"கார்ப்பரேட் தொழிற்கழகங்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் வழக்குகள்'' என்ற தலைப்பில் பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இணைந்து, கோவாவில் உள்ள பஞ்ஜிம் நகரில் கடந்த பிப்ரவரி மாதம் கருத்தரங்கமொன்றை நடத்தின. கார்ப்பரேட் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே போவது ஒருபுறமிருக்க, இது தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்களின் மனப்பாங்கும் மாறிப் போய்விட்டிருப்பது குறித்தும் இக்கருத்தரங்கில் சுட்டிக் காட்டப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் 25  ஆம் தேதி 72 பேர் கொண்ட அகதிகள் குழு லிபியாவின் தலைநகர் திரிபோலியிலிருந்து "பூலோக சொர்க்கமாம்' ஐரோப்பாவை அடையும் நோக்கத்துடன் தமது கடல் பயணத்தைத் தொடங்கியது. 47 எத்தியோப்பியர்கள், 7 நைஜீரியர்கள், 7 எரிட்ரீயர்கள், 5 ‹டானியர்கள் மற்றும் கானா நாட்டைச் சேர்ந்த 6 பேர் அடங்கிய இக்குழு மத்தியத்தரைக் கடலைக் கடந்து இத்தாலியைச் சேர்ந்த லம் பேடுஸா தீவை அடைந்து ஐரோப்பாவில் காலடி எடுத்துவைக்கத் திட்டமிட்டிருந்தது. எனினும், திரிபோலியை விட்டுக் கிளம்பிய சிறிது நேரத்திலேயே நடுக்கடலில் மாட்டிக் கொண்ட இக்குழுவினர், உடனடியாக செய்மதி தொலைபேசி மூலம் (சேட்டிலைட் போன் மூலம்) இத்தாலி கடற்படையினரிடம் உதவி கேட்டு தொடர்பு கொண்டுள்ளனர். கடலில் தத்தளித்த 16 நாட்களில் ஒருமுறை நேடோ போர்க் கப்பலுடனும், ராணுவ ஹெலிகாப்டருடனும் இவர்கள் தொடர்பு கொண்டு உதவி கேட்டு கூக்குரலிட்டுள்ளனர். ஆயினும், எந்த உதவியுமின்றி தாகத்திலும், பசியிலுமாக சிறுகச் சிறுக ஒவ்வொருவராக  பச்சிளம் குழந்தைகளையும், பெண்களையும் கொண்ட இக்குழுவினரில் 63 பேர் பரிதவித்துச் சாகவிடப்பட்டுள்ளனர்.

வறுமையும், வேலையின்மையும், விலைவாசி உயர்வும் ஏழை நாட்டு மக்களைப் பிடித்தாட்டும் இன்றைய மறுகாலனியாதிக்கச் சூழலில், அரசியல் மாற்றம் கோரும் மக்கள் போராட்டங்கள் பல நாடுகளில் வெடிக்கத் தொடங்கியுள்ளன. ஊழல் கறைபடிந்த ஆட்சியாளர்களுக்கு எதிராகவும், சர்வாதிகாரக் கொடுங்கோலர்களுக்கு எதிராகவும் சாமானிய மக்களின் எழுச்சியானது துனிசியா, எகிப்து என வட ஆப்பிரிக்க நாடுகளைத் தொடர்ந்து, தற்போது மேற்காசிய நாடான சிரியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது.

ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு முன்பு  அதாவது, 1995 டிசம்பர் 17ஆம் நாளன்று மே.வங்கத்தின் புருலியா மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் விமானத்தின் வழியே பாராசூட் மூலம் ஒரு மர்ம கும்பலால் பெட்டி பெட்டியாக நள்ளிரவில் ஆயுதங்கள் போடப்பட்டன. ஏகே47, ஏகே56 ரக அதிநவீன துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், ஏவுகணைத் தாங்கிகள், டாங்கி எதிர்ப்புக்குண்டுகள், கையெறி குண்டுகள் மற்றும் பிற போர்க்கருவிகள் கிராமங்களில் விழுந்து நாடெங்கும் இச்சம்பவம் பரபரப்பானதால், மையப் புலனாய்வுத் துறைமூலம் விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டது. பாக். உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.யின் சதி என்றும், மே.வங்கத்தில் இயங்கிய ஆனந்தமார்கி பயங்கரவாத கும்பலுக்கு வந்த இரகசிய ஆயுதங்கள் என்றும் பலவாறாக கூச்சல் போட்டது, அன்றைய நரசிம்மராவ்அரசு.

போபால் விஷவாயு கொலை வழக்கில் தொடர்புடைய கே{ப் மஹிந்திரா உள்ளிட்ட எட்டு இந்தியக் குற்றவாளிகளின் மீது சுமத்தப்பட்டிருந்த, பத்து ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கக்கூடிய கொலைக் குற்றமாகாத மரணம் விளைவிக்கும் குற்றவழக்கை, வெறும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே தண்டிக்கக்கூடிய குற்றமுறு கவனக்குறைவான வழக்காக மாற்றி, உச்ச நீதிமன்றம் 1996இல் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எந்தவிதத்திலும் மீறாமல் போபால் விஷவாயு கொலை வழக்கை விசாரித்துவந்த போபால் பெருநகர நீதிமன்றம், கே{ப் மஹிந்திரா உள்ளிட்ட ஏழு இந்தியக் குற்றவாளிகளுக்கு (விசாரணையின் பொழுது ஒரு குற்றவாளி இறந்துபோனார்) இரண்டு ஆண்டுகள் தண்டனை அளித்த கையோடு, அவர்களுக்குப் பிணையும் வழங்கி கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது.

"சமூகநீதி காத்த வீராங்கனை'யும், "சமத்துவப் பெரியாரும்' மாறி மாறி ஆண்டு கொண்டிருக்கும் "அமைதிப் பூங்கா'வாகிய தமிழகத்தில், சாதிய அடக்குமுறை பேயாட்டம் போடுவதை அண்மையில் நடந்த சம்பவங்கள் நிரூபித்துள்ளன. படித்து முன்னேறிச் சொந்தக் காலில் நிற்க முயன்றால், தாழ்த்தப்பட்டோரை விட்டுவைக்க மாட்டோம் எனக் கருவிக் கொண்டிருக்கின்றனர், ஆதிக்க சாதிவெறியர்கள்.

அரபு நாடுகளில் ஜனநாயகத்திற்காக நடைபெற்று வரும் போராட்டங்கள், அல்காய்தா போன்ற முசுலீம் தீவிரவாத அமைப்புகள் அம்மக்களிடம் செல்வாக்கு செலுத்தவில்லை என நிரூபித்து வரும் வேளையில், அல்காய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்க ஏகாதிபத்தியம் சுட்டுக் கொன்றுள்ளது. போர்க் குற்றமாகக் கருதத்தக்க இப்படுகொலையை, ஏதோ வரலாற்றுச் சாதனையைப் போலப் பீற்றி வருகிறது, அமெரிக்கா. மேலும்,  அல்காய்தா தலைவர் ஒசாமா பின்லேடனைச் சுட்டுக் கொன்றதன் மூலம், அமெரிக்காவில் செப்.11,2001 அன்று நடந்த தாக்குதல்களுக்கு நீதி கிடைத்துவிட்டதாகக் கூறி வருகிறார், அமெரிக்க அதிபர் ஒபாமா.  பின்லேடன் நிராயுதபாணியாக இருந்த நிலையில், அவரை அமெரிக்கக் கப்பற்படையைச் சேர்ந்த கமாண்டோக்கள் சட்டவிரோதமாகச் சுட்டுக் கொன்றதைப் பற்றியோ, இத்தாக்குதலின் பொழுது பாகிஸ்தானின் இறையாண்மை மீறப்பட்டிருப்பது பற்றியோ கேள்வி எழுப்பாத முதலாளித்துவப் பத்திரிகைகள், அமெரிக்க ஆளும் கும்பலைப் போலவே இப்படுகொலையைக் கொண்டாடி வருகின்றன.

தி.மு.க.வின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி, 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் "கூட்டுச் சதியாளர்' எனத் துணை குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ள அவர் சாட்சியங்களைக் கலைக்க வாய்ப்புள்ளதாகக் கூறி, கனிமொழியின் பிணை மனு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டு, அவர் விசாரணைக் கைதியாக நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

"மே.வங்கத்தைப் பார்!', "வங்கம் வழிகாட்டுகிறது!' என்று 80களில் சிபிஎம் கட்சியினர் பெருமையுடன் பிரச்சாரம் செய்த முழக்கம், இன்று எதிர்கட்சிகள் சி.பி.எம். கட்சியினரைப் பார்த்து கேலி செய்வதற்கானதாகிவிட்டது. 34 ஆண்டுகாலமாக மே.வங்கத்தில் ஆட்சி செய்த போலி கம்யூனிஸ்டு "இடதுசாரி கூட்டணி' நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வரலாறு காணாத படுதோல்வியடைந்துள்ளதோடு, சி.பி.எம். முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா உள்ளிட்டு அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் இத்தேர்தலில் மண்ணைக் கவ்வியுள்ளனர். மே.வங்கத்தில் 2006ஆம் ஆண்டில் நடந்த கடந்த சட்டமன்றத் தேர்தலில் 235 இடங்களை வென்ற "இடதுசாரி' கூட்டணி, இன்று கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிவிட்டது. மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 226ஐ திருணாமுல் காங்கிரசுகைப்பற்றி "இடதுசாரி' கூட்டணியை செல்லாக்காசாக்கியுள்ளது. மே.வங்கம் மட்டுமின்றி, கேரளாவிலும் ஆட்சியை இழந்து, மிகச்சிறிய மாநிலமான திரிபுராவில் மட்டுமே சி.பி.எம். கூட்டணி ஆட்சி நீடிக்கிறது.

சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைத்ததன் மூலம், பெயரளவிலான சீர்திருத்த நடவடிக்கைகளுக்கும்கூட எதிரான கடைந்தெடுத்த பார்ப்பனபாசிஸ்டு என்பதைப் பதவியேற்றவுடனேயே நிரூபித்துக் காட்டி விட்டார், ஜெயலலிதா.

தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராகத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்துள்ள மனித உரிமைப் பாதுகாப்பு மையம் மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்துடன் இணைந்து கடந்த 24.5.2011 அன்று விருத்தாசலத்தில் "இலவசக் கல்வி உரிமை மாநாடு' நடத்தியது.

அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தையும் மறுகாலனியாக்கத்தையும் முறியடிக்கவும், அரசு சொத்துக்களை கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடிக்க வழிவகுக்கும் தனியார்மயம் தாராளமயம் உலகமயத்தை வீழ்த்தவும், கார்ப்பரேட் கொள்ளையர்களையும் ஊழல் அரசியல் வாதிகள் அதிகாரிகளைத் தண்டித்து அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும், நக்சல்பாரி புரட்சியாளர்கள் தலைமையில் புதிய ஜனநாயகப் புரட்சிப் பாதையில் அணிதிரள அறைகூவி ம.க.இ.க் வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிரான அரசியல் ஆர்ப்பாட்ட நாளாக மே நாளைக் கடைபிடித்தன.

தமிழகத்தின் பதினான்காவது சட்டப் பேரவைக்கான பொதுத்தேர்தல்களில், கருணாநிதியின் தி.மு.க.வைத் தோற்கடித்து நிராகரிப்பதற்கு எந்த அளவு தகுதியான காரணங்கள் இருந்தனவோ, அதுபோல ஜெயலலிதாவின் அ.இ.அ.தி.மு.க.வைத் தேர்ந்தெடுத்து ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்கக் கூடாது என்பதற்கும் காரணங்கள் இருந்தன.

ஈராண்டுகளுக்கு முன்பு நடந்த இறுதிக்கட்ட ஈழப் போரில், 2009, மே 18ஆம் நாளில்  பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழ் மக்களைக் கொன்றொழித்ததோடு, இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை இன்னமும் முட்கம்பியிடப்பட்ட  தடுப் பு  முக õம்களில் அடைத்து வதைத்து வரும் இன அழிப்புப் போர்க்குற்றவாளி ராஜபக்சேவைத் தண்டிக்குமாறும், இனப்படுகொலைப் போரை வழிகாட்டி இயக்கிய இந்திய மேலாதிக்க அரசையும் சோனியா  மன்மோகன் கும்பலையும் திரைகிழித்தும், ஈழ மக்களது சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாகவும் மே 18 முள்ளிவாய்க்கால் படுகொலை நாளில் தமிழகமெங்கும் ம.க.இ.க் வி.வி.மு; பு.மா.இ.மு; பு.ஜ.தொ.மு; பெ.வி.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தின.

ஜார்கண்ட் மாநிலம்  ஹஸாரிபாக் மாவட்டத்தில் தற்பொழுது வசித்து வரும் ஜாவிர் குமார் என்ற 14 வயது சிறுவனின் வாழ்க்கைக் கதை நம்மை அதிர்ச்சியில் மட்டுமல்ல, பீதியிலும் உறைய வைத்துவிடும்.  10 ஒ 10 சுற்றளவு கொண்ட, 400 அடி ஆழத்திற்குப் பூமிக்குள் இறங்கிச் செல்லும் சுரங்கத்திற்குள் சென்று, நிலக்கரியை வெட்டியெடுத்து வரும் குழந்தைத் தொழிலாளி ஜாவிர் குமார். எலி வளையைப் போலப் பூமிக்குள் செல்லும் இச்சுரங்கத்தை மரணக் குழி என்றுதான் சொல்ல முடியும்.  அதற்குள் சென்று நிலக்கரியை வெட்டியெடுத்து வருவது உடலை வருத்தக்கூடியது மட்டுமல்ல, உயிருக்கே உலை வைத்துவிடும் அபாயம் நிறைந்ததாகும்.  சுரங்கத்திற்குள் பரவிக் கிடக்கும் இருளை விரட்டுவதற்கு ஒரு மண்ணெண்ணெய் விளக்கையும், நிலக்கரியை வெட்டியெடுப்பதற்கு ஒரு இரும்புக் கம்பியையும், வெட்டிய நிலக்கரியை வெளியே எடுத்துவருவதற்கு ஒரு கூடையையும் எடுத்துக் கொண்டு அதிகாலை ஐந்து மணிக்கு சுரங்கத்திற்குள் இறங்கும் ஜாவிர்குமார், தனது வேலையை முடித்துக்கொண்டு சுரங்கத்தை விட்டு வெளியே வரும்பொழுது, பொழுது சாய்ந்து இருட்டிவிடும்.  ஒருஇரும்புக் கம்பி, ஒரு கூடை, ஒரு விளக்கு ஆகியவற்றைத் தவிர, வேறெந்த பாதுகாப்புச் சாதனமும் இன்றிச் சுரங்கத்திற்குள் இறங்கும் ஜாவிர் குமார், "சுரங்கத்திற்குள் மண் சரிவு ஏற்பட்டால், உயிரோடு புதைந்து இறந்து போவோம்' எனத் தெரிந்தேதான் இந்த வேலையைச் செய்து வருகிறான்.

நீதிபதி கோவிந்தராசன் கமிட்டி நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தைத்தான் தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டும் என்ற நீதிமன்றத் தீர்ப்பைக் குப்பையில் வீசிவிட்டு, பெற்றோர்களையும் மாணவர்களையும் மனரீதியாக வதைத்து மிரட்டி வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது, கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகிலுள்ள பூதங்குடி எஸ்.டி.எஸ். மெட்ரிக் பள்ளி நிர்வாகம். கூடுதல் கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து இப்பகுதிவாழ் மக்கள் ஆறு மாதங்களுக்கு முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்தி வட்டாட்சியர், மாவட்ட போலீசு கண்காணிப்பாளர் முன்னிலையில் அத்தனியார் பள்ளி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, இனி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது எனப்பள்ளி நிர்வாகத்தின் சார்பில் எழுதிக் கொடுக்கப்பட்ட பின்னரும், பள்ளியில் புதிய கட்டிடம் கட்டுவதாகக் கூறி ரூ. 2,500ஃவீதம் ஒவ்வொரு மாணவரிடமும் கட்டாயக் கூடுதல் கட்டணம் கேட்டு தொடர்ந்து துன்புறுத்தி வருகிறது.

தாராளமயத்தால் இந்தியா ஒளிர்வதாக ஆளும் வர்க்கங்களும் ஊடகங்களும் சித்தரித்துவரும் அதேவேளையில், அத்தாராளமயமாக்கம் இந்தியாவின் கிராமப்புறங்களில் அமைதியாக நரவேட்டையை நடத்திக் கொண்டிருக்கிறது. பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கடன் சுமையால் தற்கொலை செய்து கொள்ளும் கொடுமை இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இஸ்லாமிய பயங்கரவாதத்தால் கொல்லப்பட்ட "இந்தியர்'களின் எண்ணிக்கையை விட, சந்தை பயங்கரவாதத்தால் கொல்லப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை மிக அதிகம் என்பதைப் புள்ளிவிவரங்கள் நிரூபித்துக் காட்டுகின்றன.

எகிப்து, துனிசியா, பஹ்ரைன், ஏமன், ஜோர்டான், லிபியா உள்ளிட்ட பல்வேறு அரபு நாடுகளில் நடந்து வரும் போராட்டங்கள் பற்றி வெளிவரும் பெரும்பாலான செய்திகள், விமர்சனக் கட்டுரைகள் அந்நாடுகளில் நடந்துவரும் சர்வாதிகார ஆட்சி, போலீசு ஒடுக்குமுறை, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகிய பிரச்சினைகளை அம்பலப்படுத்துவதற்கு அப்பால் செல்லுவதில்லை. குறிப்பாக, இப்போராட்டங்களுக்கும் அந்நாடுகளில் நிலவிவரும் பொருளாதாரக் கட்டமைப்பிற்கும் இடையேயுள்ள உறவு பற்றியோ, அந்நாடுகளில் நிலவிவரும் சர்வாதிகார அல்லது மன்னராட்சிக்கும் தனியார்மயம்  தாராளமயத்திற்கும் இடையேயான உறவு பற்றியேர் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டுத் தொழிற்கழகங்கள் இச்சர்வாதிகார அல்லது மன்னராட்சியைப் பயன்படுத்திக் கொண்டு அந்நாடுகளின் விவசாயம், தொழில் மற்றும் நிதித் துறைகளையும் கச்சா எண்ணெய் உள்ளிட்ட இயற்கை வளங்களையும் கைப்பற்றிக்கொண்டு கொழுத்த ஆதாயம் அடைந்துவருவது பற்றியேர் அமெரிக்கா இச்சர்வாதிகார அல்லது மன்னராட்சியைப் பாதுகாப்பதற்காகவே எகிப்திற்கும், துனிசியாவிற்கும், ஜோர்டானுக்கும் பொருளாதார, இராணுவ நிதியுதவிகளை அளித்துவருவது பற்றியோ முதலாளித்துவ அரசியல் விமர்சகர்கள் முழுமையாக எழுதுவதில்லை.

ஜப்பானில் கடந்த மார்ச் 11 அன்று ஏற்பட்ட பூகம்பம்  சுனாமியால், ஃபுகுஷிமா டாய்ச்சி அணு மின்நிலைய அணு உலைகள் பகுதியளவிற்கு உருகிப் போனதையடுத்து, உலகெங்குமே அணு உலைகளின் பாதுகாப்பு குறித்தும், அவை ஏற்படுத்தும் கதிர்வீச்சு அபாயம் குறித்தும் அச்சங்கள் எழுப்பப்பட்டு வருவதையும், அணு மின் உலைகளுக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்து வருவதையும் எள்ளளவும் பொருட்படுத்தாது, மராட்டிய மாநிலம் ஜெய்தாப்பூரில் 10 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட 6 அணு உலைகளுடன் கூடிய மிகப் பெரிய அணுமின்நிலைய வளாகத்தை அமைத்திட மையஅரசு தீவிரமாக முயன்று வருகிறது. இந்த அணு மின் நிலையவளாகத் திட்டத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் நடத்தி வரும் போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மாண்டுபோனார்.

காட்டு வேட்டையின் கொடுங்கரங்கள் கடந்த மார்ச் மாதம் சட்டிஸ்கர் மாநிலத்தின் மூன்று கிராமங்களை உருத்தெரியாமல் சிதைத்துவிட்டன. தேடுதல் வேட்டை என்ற பெயரில் துணை இராணுவமும், சட்டிஸ்கர் மாநில போலீசும் இணைந்து ஐந்து நாட்கள் நடத்திய இந்தத் தாக்குதலில் மூன்று அப்பாவிகள் கொல்லப்பட்டனர்; பல பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டனர்; முன்னூறுக்கும் அதிகமான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன் நூற்றுக்கணக்கான அப்பாவிகள் கொடூரமாகத் தாக்கப்பட்டனர்; மேலும், தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிசெய்யச் சென்ற சுவாமி அக்னிவேஷ் உள்ளிட்ட சமூக சேவகர்களையும் மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்த செயல்வீரர்களையும்கூட அரசுப் படைகள் தாக்கி விரட்டியடித்து, பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு எந்தவிதமான நிவாரண உதவியும் கிடைத்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருந்து செயல்பட்டன.

பத்திரிகைகளும், தனியார் தொலைக்காட்சி ஊடகங்களும் கடந்த ஏப்ரல் மாதத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஆகியவற்றுக்கு இணையாக முக்கியத்துவம் அளித்து விளம்பரப்படுத்திய நிகழ்ச்சி அண்ணா ஹஸாரே தனது ஆதரவாளர்களுடன் டெல்லியில் நடத்திய உண்ணா விரதப் போராட்டமாகத்தான் இருக்கும். "ஊழல் தடுப்பு ஆணைய மக்கள் வரைவுச் சட்டத்தை உருவாக்குவதற்கான கமிட்டியை அமைத்து, அதில் குடிமைச் சமூக அமைப்புகளைச் சேர்ந்த ஊழியர்களையும் உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும்; அக்கமிட்டி அரசு உருவாக்கியிருக்கும் ஊழல் தடுப்பு ஆணைய வரைவுச் சட்டத்தை மட்டுமின்றி, இது தொடர்பாக ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் உருவாக்கியிருக்கும் வரைவுச் சட்டத்தையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்' எனக் குடிமைச் சமூக அமைப்புகள் முன்வைத்த கோரிக்கைகளை மைய அரசு ஏற்றுக்கொண்டதையடுத்து, அண்ணா ஹஸாரே தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார்.

விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க இராணுவச் செய்திக் குறிப்புகள், அமெரிக்க இராணுவம் செய்து வரும் அட்டூழியங்களையும், மனித உரிமை மீறல்களையும் அம்பலப்படுத்திக் காட்டியுள்ளது. இவற்றை விக்கிலீக்ஸ{க்குச் சேகரித்துக் கொடுத்த பிராட்லே மேனிங் என்ற அமெரிக்கர், அமெரிக்க அரசால் சிறை வைக்கப்பட்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே சுமத்தப்பட்டுள்ள பல்வேறு குற்றச்சாட்டுகளுடன், கடந்த மார்ச் மாதம் புதிதாக 22 குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளது, அமெரிக்க இராணுவம். அவற்றில் ஒன்று, எதிரிக்கு உதவி செய்வது  என்ற பிரிவின் கீழ் வரும் குற்றச்சாட்டு. இதன்படி, அமெரிக்க இராணுவ இரகசியங்களை  தகவல்களை அமெரிக்காவின் எதிரிக்குக் கொடுத்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார் மேனிங். எதிரி யாரென்று குற்றச்சாட்டில் குறிப்பிடப்படவில்லை.

இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மேனிங்கிற்கு மரண தண்டனை கொடுக்கப்படும் என்பதால், இத்தகைய குற்றச்சாட்டின் ஆபத்து குறித்து அமெரிக்க ஊடகங்கள் விவாதிக்கத் தொடங்கியுள்ளன. மேனிங் தண்டனைக்குரியவர் எனில், விக்கிலீக்ஸ் எதிரி எனில், இவற்றை பிரசுரித்த அமெரிக்க ஊடகங்களும்கூட எதிரிகளாகி விடுவர். அரசின் அயோக்கியத்தனங்களை விக்கி லீக்ஸ் வெளிப்படுத்தினால் மரணதண்டனை என்று சொல்வதன் மூலம், மக்கள் நலன் கருதி ஊடகங்களில் இவற்றை வெளியிடுவதும் மரண தண்டனைக்குரியவைதான் என்று அமெரிக்க இராணுவம் இதன் மூலம் மிரட்டுகிறது. இதுதான் பீற்றிக் கொள்ளப்படும் முதலாளித்துவ ஜனநாயகத்தின் யோக்கியதை!

போபாலில், அமெரிக்க யூனியன் கார்பைடு நிறுவனத்தின் நச்சு வாயுத் தாக்குதலால் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு, ஆயிரக்கணக்கதனோர் இன்றும் நடைபிணமாக வாழ்கிறார்கள். நீர், நிலம் அனைத்தும் நச்சுவாயுக் கழிவால் நஞ்சாக்கப்பட்டு பலரைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்று வருகிறது. 2001இல் யூனியன் கார்பைடை விலைக்கு வாங்கிய டௌகமிக்கல்ஸ் எனும் அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனம், போபால் ஆலையில் 26 ஆண்டுகளாகக் குவிந்து கிடக்கும் நச்சு இரசாயனக்கழிவுகளை அகற்றுவதற்கும், நச்சு வாயுவால் நடைபிணமாகிவிட்ட மக்களுக்குச் சிகிச்சை அளிக்கும் போபால் மருத்துவமனையை நடத்துவதற்கான செலவுகளுக்குப் பொறுப்பேற்பதற்கும் மறுத்து வருகிறது. நட்டஈடு கேட்டும், நச்சுக் கழிவுகளை அகற்றக் கோரியும் பல வழிகளில் போராடி வரும் போபால் மக்களை  போலீசின் லத்தி கம்புகளும், சிறைக் கொட்டடிகளுமே எதிர்கொள்கின்றன.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் கடும் நடவடிக்கைகளால் சுதந்திரமான  நியாயமான தேர்தல் நடந்துள்ளதாகவும், அதனாலேயே தமிழகத்தில் இதுவரை கண்டிராத அளவுக்கு பெருமளவில் வாக்குப்பதிவு நடந்துள்ளதாகவும் பார்ப்பன ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் சித்தரிக்கின்றன.

 

நடந்து முடிந்த தமிழக மற்றும் புதுவை சட்டப்பேரவைகளுக்கான தேர்தல்கள் போலி கம்யூனிசக் கட்சிகள்,   தமிழ்த் தேசிய இனவாதக் குழுக்கள் ஃ கட்சிகள், சாதிய - சமூக நீதிக் குழுக்கள் ஃ கட்சிகள், மற்றும் தலித் குழுக்கள் ஃ கட்சிகள் ஆகியவற்றின் ஓட்டாண்டித்தனத்தையும் பெதருத்தப்பாடின்மையையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கின்றன.

 

இத்தேர்தல்களில் நேரடியாகப் பங்கேற்றவை மட்டுமல்ல் இவற்றில் பங்கேற்காத, ஓரங்கட்டப்பட்டு, ஒதுக்கப்பட்டு, தேர்தல்களைப் புறக்கணிக்கும்படி தள்ளப்பட்ட மேற்படி வகைக் குழுக்கள் ஃ கட்சிகள்கூடத் தமது சுயத்தையும் சுயமரியாதையையும் பறிகொடுத்து மக்கள் முன்பு அம்மணமாக நின்றதைக் கண்டோம்.

அரசியல் என்றாலே முதலாளிய ஓட்டுச்சீட்டு அரசியல் என்ற வரம்புக்குள் தங்களைச் சிறைப்படுத்திக் கொண்டுள்ள இந்தக் குழுக்கள் ஃ கட்சிகள் தங்கள் நீண்டகால அல்லது குறுகியகால அரசியல் நடைமுறையில் செக்குமாடுகளைப் போலகிவிட்டன. அதனதல், இவை சுயசிந்தனை, சுயபரிசீலனையற்றவைகளாகி, மாற்று அரசியல் பாதை பற்றிய எண்ணமே இல்லாத மலடுகளாகிப் போயுள்ளன.

கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி நாடாளுமன்றத்தில் எதிர்பாராதவிதமாகத் திடீர்க் கூட்டணியொன்று உருவானது. அன்று, ஓய்வூதிய நிதி ஒழுங்கு மற்றும் வளர்ச்சி ஆணைய மசோதாவை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெறுவதற்காக அவையின் முன் வைத்தது, காங்கிரசு கூட்டணி அரசு. இம்மசோதா தொழிலாளர்களின் ஓய்வூதிய நிதியைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதையும் அதனை நிர்வகிக்கும் பொறுப்பைத் தனியார்மயமாக்குவதையும் நோக்கமாகக் கொண்டது.

கடந்த மார்ச் மாதம் 4ம் தேதி, விருத்தாசலத்திலுள்ள தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கு துறையின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், ஒரு மூட்டைக்கு 8 கிலோ அளவுக்கு எடை கூடுதலாக வைத்து நெல் கொள்முதல் செய்த மோசடியை அறிந்து, அங்கே குவிந்திருந்த நூற்றுக்கணக்கான விவசாயிகளை அணிதிரட்டி விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்கள் நெல் கொள்முதல் நிலைய ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். 19.1.2011 முதல் 3.3.2011 வரை எத்தனை மூட்டை நெல் கொள்முதல் செய்யப்பட்டனவோ, அவை அனைத்திற்கும் மூட்டைக்கு நான்கு கிலோ வீதம் பணம் தந்துவிடுவதாக நெல் கொள்முதல் நிலையத்தின் பட்டியல் எழுத்தர் உறுதியளித்தார். வாக்குறுதி அளித்த அந்தப் பெருச்சாளி தப்பியோடியதைத் தொடர்ந்து, அந்நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட 4000 நெல் மூட்டைகளையும் அதன் அலுவலக பதிவேடுகள், இரு எடைபோடும் இயந்திரங்கள் ஆகியவற்றையும் விவசாயிகளின் ஒப்புதலோடு பூட்டிவிட்டு,  அலுவலகத்தைத் தனது கட்டுப்பாட்டில்வி.வி.மு. எடுத்துக்கொண்டது.

இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு புலிகளுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட இறுதிக்கட்ட போரின்போது நடந்த படுகொலைகள், அத்துமீறல்கள் குறித்துப் பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்களின்படி எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்துத் தனக்கு ஆலோசனை வழங்குமாறு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் அமைத்த மூன்று பேர் கொண்ட நிபுணர் குழு அளித்துள்ள அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் கொள்ளை வெளியானதிலிருந்து கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கு எதிராக கடந்த ஜனவரியிலிருந்து பிரச்சார இயக்கத்தை நடத்தி வந்த ம.க.இ.க் வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள், "இது கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கான ஜனநாயகம்! கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராகக் கிளர்ந்தெழுவோம்! இக் கொள்ளையர்களின் சொத்துக்களைப் பறித்தெடுப்பதற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம்! ஓட்டுப் போடாதே! புரட்சி செய்!' என்ற முழக்கத்துடன் தேர்தல் புறக்கணிப்புப் பிரச்சாரத்தைத் தமிழகமெங்கும் வீச்சாக நடத்தின. இதையொட்டிப் பொதுக்கூட்டங்கள் நடத்தத் தமிழகமெங்கும் அனுமதி மறுத்து போலீசு அடாவடித்தனம் செய்த நிலையில், துண்டுப்பிரசுரம்  தெருமுனைக் கூட்டங்கள் மூலம் வீச்சானபிரச்சாரத்தை இவ்வமைப்புகள் நடத்தின.

விலை உயர்வு, விவசாயம் மற்றும் தொழில்துறை உற்பத்தி வீழ்ச்சி, 2 ஜி, எஸ்@பண்ட், ஆதர்ஷ் உள்ளிட்ட பல ஊழல்கள், கறுப்புப் பணம், சிறப்புப் பொருளாதார மண்டலம் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நிலப் பறிப்புக்கு எதிரான பழங்குடியின மக்கள்விவசாயிகளின் போராட்டம் எனப் பல்வேறு சமூகபொருளாதார பிரச்சினைகள், நெருக்கடிகள் நாட்டை உலுக்கி வருவதற்கு இடையே 2011 - 12 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் வெளியாகியிருக்கிறது. இந்த நெருக்கடிகளைத் தீர்க்க பட்ஜெட்டில் புதிய திட்டங்களும், வழிமுறைகளும் அறிவிக்கப்பட்டிருக்கிறதா என அலசிப் பார்த்தால், தனியார்மயம்  தாராளமயம் என்ற பழைய செக்குமாட்டுப் பாதையில்தான் பட்ஜெட் பயணம் செய்கிறது. இந்த நெருக்கடிகள் தோன்றவும், முற்றவும் எந்தக் கொள்கைகள் காரணமாக அமைந்தனவோ, அதையே இன்னும் தீவிரமாக நடைமுறைப்படுத்த முனைகிறது, பட்ஜெட்.

கடந்த பிப்ரவரி 23 அன்று சென்னை  பச்சையப்பன் கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்த போலீசு கும்பல், அக்கல்லூரி மாணவர்கள் மீது தடியடி நடத்தியும், கல், செருப்பு, உடைந்த பாட்டில்களை மாணவர்கள் மீது வீசியெறிந்தும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைத் தொடுத்தது. தடியடியில் இருந்து மாணவர்களைக் காப்பாற்ற முயன்ற அக்கல்லூரி ஆசிரியர்களையும் தாக்கிய போலீசு கும்பல், கல்லூரியின் உடைமைகளையும் சேதப்படுத்தியது. இம்மிருகத்தனமான தாக்குதலிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள முயன்றதற்காக, பொலீசுப் பணிசெய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் 300 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செயப்பட்டுள்ளது.

சேலம் மாமாங்கத்திலுள்ள ஜி.டி.பி. கிரானைட்ஸ் நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைத்த ஒரே காரணத்திற்காக, கடந்த அக்டோபர் 2007இல் இந்நிறுவனத்தைச் சேர்ந்த 53 தொழிலாளர்கள் சட்டவிரோதமாக வேலைநீக்கம் செய்யப்பட்டனர். மூன்று ஆண்டுகளாகப் பல போராட்டங்கள் நடத்தியபோதிலும் ஆலை முதலாளி அசைந்து கொடுக்காததால், கடந்த ஜனவரியில் மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு பு.ஜ.தொ.மு. தலைமையில் தொழிலாளர்கள் போராடினர். (பார்க்க: புதிய ஜனநாயகம், பிப்.2011)

இயற்கையின் கொடையான தண்ணீர் அனை வருக்கும் பொதுவானது, அதனை அனைவரும் பகிர்ந்து கொள்ளும் உரிமை உள்ளது என்ற நியதிக்கு, முதலாளித்துவம் என்றுமே கட்டுப்பட்டதில்லை. மற்ற வளங்களைப் போலவே தண்ணீரையும் ஒரு விற்பனைப் பண்டமாக்கிவிடவே, அது துடித்துக் கொண்டிருக்கிறது. நம் நாட்டின் நீர் ஆதாரங்களைக் கைப்பற்ற உலக வங்கியின் துணையுடன் பல வழிகளில் பன்னாட்டு நிறுவனங்கள் முயன்று வருகின்றன. அதன்ஒரு பகுதியாக, "இந்தியாவின் வளர்ந்து வரும் தண்ணீர் வர்த்தகத் துறையின் 50 பில்லியன் டாலர் (2,50,000 கோடி ரூபாய்) மதிப்பிலான சந்தையைக் கைப்பற்றுவோம்'' என்ற முழக்கத்துடன் அமெரிக்க கார்பரேட் கூட்டம் ஒன்று கடந்த பிப்ரவரி மாத இறுதியில் பெங்களூருவிற்கு வந்து சென்றுள்ளது.

கடந்த பிப்ரவரி 28 அன்று ஆந்திராவின் சிறீகாகுளம் மாவட்டம், சாந்த பொம்மலி வட்டத்திலுள்ள காகரப் பள்ளியில் போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் எர்ரய்யா, கிரி ராஜேஸ்வர ராவ் எனுமிரு விவசாயிகள் மாண்டு போயுள்ளனர். படுகாயமடைந்த 5 பேர் மரணப் படுக்கையில் கிடக்க, 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நிலப்பறிப்புக்கு எதிராகவும் தமது வாழ்வுரிமைக்காகவும் போராடியதுதான் காகரப்பள்ளி மக்கள் செய்த குற்றம்!

ஆப்கான், ஈராக்கையடுத்து, அமெரிக்கா தனது ஆக்கிரமிப்புப் போரை லிபியா மீது தொடுத்திருக்கிறது. நேடோ கூட்டணியைச் சேர்ந்த பிரிட்டன், பிரான்சு, இத்தாலி ஆகிய மூன்று ஏகாதிபத்திய நாடுகளும் அமெரிக்காவுக்கு இணையான வெறியோடு இப்போரில் இறங்கியுள்ளன. லிபியாவின் இராணுவ பலத்தை முற்றிலுமாகச் சிதைத்துவிடும் நோக்கில், அதன் இராணுவ, கப்பற்படைத் தளங்கள், போர் விமானங்கள், விமான எதிர்ப்பு பீரங்கிகள் உள்ளிட்ட நவீன ஆயுதங்கள் அனைத்தும் குறிவைத்துத் தாக்கி அழிக்கப்படுகின்றன. இப்போரினூடேயே லிபியாவின் அதிபர் மும்மர் கடாஃபியைக் கொன்றுவிடும் நோக்கமும் மேற்குலக ஏகாதிபத்தியங்களுக்கு இருப்பதை, அவரது மாளிகை மீது நடத்தப்பட்ட தாக்குதல் காட்டிக் கொடுத்துவிட்டது.

"ஸ்பெக்ட்ரம் என்பது வெறும் ஊழல் மட்டுமில்லை, இது கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளை! தனியார்மயமே இதன் ஆணிவேர்! இதனைத் தகர்க்க நக்சல்பாரியாய் ஒன்று சேர்! கார்ப்பரேட் கொள்ளையர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுவோம்! ஊழல் சொத்துக்களைப் பறித்தெடுத்து மக்களுக்குப் பங்கிடுவோம்!', "இது கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கான ஜனநாயகம்! ஓட்டுப்போடாதே! புரட்சி செய்!' என்ற முழக்கத்துடன் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ம.க.இ.க, வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமது தோழமை அமைப்புகளுடன் இணைந்து கடந்த ஜனவரியிலிருந்து கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராகச் சூறாவளிப் பிரச்சாரத்தை நடத்தி வருகின்றன. கடந்த பிப்ரவரி இறுதியிலிருந்து மார்ச் இறுதி வரையிலான ஒரு மாத காலத்தில் நாளொன்றுக்கு ஒரு பொதுக்கூட்டம் என்ற அளவில் தமிழகமெங்கும் 30க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களைத் தொடர்ச்சியாக இவ்வமைப்புகள் நடத்தியுள்ளன.

புழுத்து நாறிக் கிடக்கிறது, ஓட்டுச்சீட்டு ஜனநாயகம். அதன் உண்மையான பொருளை அறிய விரும்பினால், தமிழகச் சட்டமன்றத் தேர்தலையொட்டி ஓட்டுக் கட்சிகள் நடத்திவரும் பிழைப்புவாத பொறுக்கி அரசியல் கூத்துக்களைப் பார்த்தாலே போதும்.

எவ்வாறு ஈராக்கை எண்ணெய்க்காக அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் ஆக்கிரமிப்பு செய்தனவோ, அதேபோன்று தனது கைப்பாவை அரசை நிறுவி எண்ணெய் வளத்தைச் சூறையாடும் நோக்கத்தோடு லிபியாவில் ஏகாதிபத்திய வல்லரசுகள் தாக்குதலை நடத்தி வருகின்றன. லிபியாவில் கடாஃபியின் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து போராட்டங்கள் நடந்துவரும் சூழலில், கடாபியின் இராணுவத் தாக்குதலிலிருந்து மக்களைக் காப்பது, மனித உரிமை  ஜனநாயகத்தைக் காப்பது என்ற பெயரில் ஐ.நா.பாதுகாப்பு சபையின் அனுமதியுடன் இத்தாக்குதல்களை நடத்தி வருவதன் மூலம், ஏகாதிபத்திய வல்லரசுகள் வெளிப்படையாகப் போர்க்குற்றங்களைச் செய்து வருகின்றன. ஆக்கிரமிப்புக்குத் துணைநிற்கும் ஐ.நா. மன்றம் ஏகாதிபத்திய வல்லரசுகளின் கைப்பாவை மன்றம் என்பதும், ஜனநாயக வேடம் போட்டுத் திரியும் அமெரிக்க அதிபர் ஒபாமா, மனிதக்கறி தின்னும் மிருகம் என்பதும் மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள அரசுகளின் திரைமறைவுச் சதிகளையும், இரகசியங்களையும் அம்பலப்படுத்தி வரும் விக்கிலீக்ஸ் என்னும் இணையதளம், ஈராக் மற்றும் ஆப்கான் போர்களில் அமெரிக்கா இழைத்த போர்க்குற்றங்களை அமெரிக்கச் சிப்பாய்கள், தமது இராணுவத் தலைமைக்கு அனுப்பிய குறிப்புகளிலிருந்தே அம்பலப்படுத்தியது. அது மட்டுமன்றி, அமெரிக்காவுக்கும் பல்வேறு நாடுகளின் அரசுத்தலைவர்களுக்கும் இடையிலான கள்ள உறவுகள் மற்றும் சதிகளையும் விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியது.

 

நீதிபதி கோவிந்தராசன் கமிட்டி அறிவித்த கட்டணப்படி மட்டுமே மாணவர்களிடம் பள்ளிக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும், கட்டண விவரத்தைப் பள்ளிகளில் ஒட்ட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ள போதிலும், பல தனியார் பள்ளிகளில் இன்னமும் கூடுதலாகக் கட்டணத்தை வசூலிப்பதும், எதிர்த்துக் கேட்டால் பள்ளியிலிருந்து மாணவரை விலக்கி, நகராட்சிப் பள்ளியில் சேர்த்துக் கொள்ளுமாறு ஏழைப் பெற்றோரை மிரட்டுவதும் தமிழகமெங்கும் கேள்விமுறையின்றித் தொடர்கிறது.

கடலூர் மாவட்டம்  விருத்தாசலத்தில் தனியார் கல்விக் கொள்ளையர்களின் கொட்டம் தலைவிரித்தாடிய நிலையில், பள்ளி நிர்வாகத்தால் துன்புறுத்தப்பட்ட பெற்றோர்கள் கூடுதல் கட்டணம் செலுத்தியதற்கான ரசீதுடன் மாவட்டக் கல்வி அதிகாரிக்குப் புகார் மனு கொடுத்து நியாயம் கேட்ட மனித உரிமைப் பாதுகாப்பு மையம், நீதிபதி கோவிந்தராசன் கமிட்டியால் நிர்ணயிக்கப்பட்ட கட்டண விவரங்களை துண்டுப் பிரசுரமாக அச்சிட்டு அனைத்து பள்ளிக்கூட வாயில்களில் விநியோகித்து, பெற்றோரைக் கூட்டி ஆலோசனைக் கூட்டம் நடத்தி போராட முன்வருமாறு அறைகூவியது. அதன் தொடர்ச்சியாக, தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக நகரெங்கும் தெருமுனைப் பிரச்சாரத்தை மேற்கொண்டு, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்காத மாவட்ட கல்வி அலுவலகத்தை மார்ச் 1 அன்று முற்றுகையிடப் போவதாக அறிவித்து எச்சரிக்கை விடுத்தது.

ஜப்பானில் நிகழ்ந்துள்ள பேரழிவைக் கண்டு மனித இனம் பேரதிர்ச்சி யில் மூழ்கிப் போயுள்ளது. நிலநடுக்கமும் அதைத் தொடர்ந்து உருவான ஆழிப்பேரலையும் ஜப்பானின் வடகிழக்குக் கடற்கரைப் பகுதியில் கோரத்தாண்டவமாடி அந்நாட்டையே நிலைகுலையச் செய்துள்ளன. பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு, இலட்சக் கணக்கானோர் தங்கள் உற்றார் உறவினர், வீடுவாசலை இழந்து அனாதைகளாகிப் பரிதவிக்கின்றனர். இயற்கையின் சீற்றம் தணிந்துவிட்டாலும், இப்போது அணுஉலைகளின் சீற்றத்தால் அந்நாடு தத்தளித்துக் கொண்டிருக்கிறது. கடற்கரையோரமாக அமைந்துள்ள புகுஷிமா அணு மின் நிலையத்தில் ஒன்றன்பின் ஒன்றாக அணு உலைகள் வெடித்துச் சிதறியதால், அணுஆயுதப் போரின் பேரழிவைச் சந்தித்த ஜப்பான் இன்று, அதைவிடக் கொடூரமான தாக்குதலால் அவலத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறது.

 

தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை, திருவண்ணாமலை அருணாச்லேஸ்வரர் கோயிலில் ஜவான், திருமஞ்னேம், நி@வத்தியம், ”யம்பாகி, ஓதுவார், யானைப்பாகன் உள்ளிட்ட 10 பணியிடங்களுக்குப் பணியாளர்களை நியமிப்பதற்கான @வலைவாசூப்பு அறிவிப்பை கடந்த ஜனவரி மாதம் முதல் வாரத்தில் வெளியிட்டது.  அவவேலைவாசூப்பு அறிவிப்பில் திருமஞ்னேம், நிவேத்தியம், சுயம்பாகி ஆகிய பணியிடங்களுக்குப் பார்ப்பனர்கள் மட்டுமே விண்ணப்பிக்கும் தகுதிபடைத்தவர்கள் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.  இந்தப் பணியிடங்கள் சாமி சிலைகளைத்திருமுழுக்கு (அபிஷேகம்) செய்வது மற்றும் கோயில் பிரசாதம் தயாரிப்பதற்கான பணியிடங்களாகும்.  பார்ப்பனர்கள் அல்லாத வேறு சாதியினர் இந்த வேலைகளைச் செய்தால், "புனிதம்' கெட்டுவிடும் என்ற பார்ப்பன சாதித் திமிரையும் இந்துக் கோயில்களில் நிலவிவரும் தீண்டாமையையும் உறுதி செய்வதுதான் இந்தக் குறிப்பின் நோக்கமாகும்.

 

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் தலைவர் திரு.அரங்கநாதன், ""திருமஞ்சனம், நிவேத்தியம், சுயம்பாகி ஆகிய பணியிடங்களுக்குப் பார்ப்பனர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்கிற அறிவிப்பு சாதி வேற்றுமையைத் தூண்டுவதாகவும், ஆலயத் தீண்டாமையைக்கடைப்பிடிப்பதாகவும், அரசியல் சாசனச் சட்டத்தின் 14, 16 மற்றும் 17 ஆகிய பிரிவுகளுக்கு எதிராகவும் இருப்பதால், அந்தப் பணியிடங்களுக்குப் பார்ப்பனர்கள் மட்டுமே தகுதியானவர்கள் என்ற அரசின் அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டும்' என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்தார்.  இந்த வழக்கை ஏற்றுக்கொண்டு விசாரித்த உயர்நீதிமன்றம், "இத்தகைய பணிகளைப் பார்ப்பனர்கள்தான் செய்யவேண்டும் என்ற பழக்கவழக்கத்தை அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 13 அங்கீகரிக்கிறது. இதன் அடிப்படையில்தான் உச்ச நீதிமன்றம் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்திற்குத் தடை விதித்துள்ளது' என்ற காரணங்களைக் கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டது.

இந்தியாவின் புகழ்பெற்ற மனித உரிமைப் போராளியும் சட்டிஸ்கர் மக்களின் அன்புக்குரிய மருத்துவருமான டாக்டர் பிநாயக்சென்னுக்கு அம்மாநில கூடுதல் அமர்வு நீதிமன்றம் விதித்துள்ள ஆயுள் தண்டனையையும் பாசிச அடக்கு முறையையும் எதிர்த்துத் தமிழகமெங்கும் பிரச்சாரம், போராட்டங்களை மனிதஉரிமை பாதுகாப்பு மையம் தொடர்ச்சியாக நடத்தி வருகிறது.

குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நடந்த முசுலீம் படுகொலையின்பொழுது கொல்லப்பட்ட காங்கிரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரியும், அவ்வினப்படுகொலையின்பொழுது தமது உறவினர்களைப் பறிகொடுத்த வேறு சில முசுலீம்களும் இணைந்து, இவ்வினப்படுகொலை தொடர்பாக குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடியையும் அவரது அரசின் சில உயர் அதிகாரிகளையும் விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், இவ்வினப்படுகொலையில் மோடி மற்றும் சில உயர் போலீசு அதிகாரிகள் ஆகியோரின் பங்கு குறித்து விசாரணை நடத்துவதற்கு முன்னாள் சி.பி.ஐ. இயக்குநர் ராகவன் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவொன்றை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமைத்தது. மோடியின் மீது சுமத்தப்பட்ட 32 குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்திய சிறப்புப் புலனாய்வுக் குழு தனது அறிக்கையை கடந்த ஆண்டு மே மாதம் உச்ச நீதிமன்றத்திடம் அளித்தது. உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் இவ்விசாரணை நடந்ததால், மோடி சட்டப்படியே பயங்கரவாதக் குற்றவாளியாக அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையோ "வரும், ஆனா வராது' என்ற வடிவேலுவின் நகைச்சுவையைப் போல அமைந்து விட்டது.

இந்தியக் குடும்பத்தின் வருமானத்தில் மருத்துவச் செலவானது கணிசமான தொகையை விழுங்குகிறது. உழைக்கும் மக்களுக்கோ மருந்துக் கடைகள்தான் மருத்துவமனைகளாக இருக்கின்றன. விலைவாசி விண்ணைத் தொடும் இந்தக் காலத்தில், மக்களால் ஒரு வேளைச் சோற்றைக் தவிர்க்க முடிந்தாலும்கூட மருந்தைத் தவிர்க்க முடிவதில்லை. சமீபத்தில் "லேன்செஸ்ட்'' என்ற மருத்துவ இதழில் வெளியாகியுள்ள ஒரு ஆய்வில், இந்தியாவின் மொத்த மருத்துவச் செலவில் 78 சதவீதத்தை மக்கள் தங்களது சொந்தப் பணத்திலிருந்து செலவிடுகின்றனர் என நிறுவப்பட்டுள்ளது. இதுவே மாலத்தீவில் 14மூ, பூட்டானில் 29மூ, தாய்லாந்தில் 31மூஆக உள்ளதாக அவ்வாய்வு தெரிவிக்கிறது.

தென்னை மரங்கள் அசைந்தாட, பாக்கு மரங்கள் தலையசைக்க, மாமரத் தோப்புகள் நிறைந்த கொங்கண் பிராந்தியத்திலுள்ள மதுபான் கிராம மக்களின் கண்களில் அச்சமும் கவலையும் ஆட்கொண்டுள்ளது. அக்கிராமத்தை அடுத்துள்ள கடலோரப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், அரபிக்கடலை வெறித்துப் பார்த்து விம்முகின்றனர். இந்த நிலமும் நீரும் கடலும் ஆறும் காய்களும் கனிகளும் வாழ்வும் வளமும் இனி அவர்களுக்குச் சொந்தமில்லை. இப்பகுதிவாழ் மக்களின் வாழ்வைப்பறிக்க இடியாய் இறங்கியுள்ளது ஜெய்தாபூர் அணு மின்திட்டம்.

தென்கொரியாவைச் சேர்ந்த தேசங்கடந்த தொழிற்கழகமான போஸ்கோ நிறுவனம், ஒரிசாவின் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் அமைக்கத் திட்டமிட்டுள்ள உருக்காலை மற்றும் அவ்வுருக்காலையோடு சேர்ந்து அமையவுள்ள மின் உற்பத்தி நிலையம், துறைமுகம் ஆகியவற்றுக்காக விவசாய, வன நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மைய அரசின் சுற்றுப்புறச் சூழல் அமைச்சகம் விலக்கிக் கொண்டுவிட்டது. இதனையடுத்து, இக்கையகப்படுத்தலுக்கு எதிராக அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளும், பழங்குடியின மக்களும், மீனவர்களும் நடத்தி வரும் போராட்டமும் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இந்திய அரசை போஸ்கோவின் கூலிப் படையெனச் சாடியுள்ள அம்மக்கள், "தங்கள் பிணங்களின் மீதேறிப் போய்தான் நிலங்களைக் கையகப்படுத்த முடியும்' எனச் சூளுரைத்துள்ளனர்.

கடந்த ஜனவரியில், உலக நாடுகளின் மேற்பார்வையில் நடந்த கருத்துக் கணிப்புத் தேர்தலில் ஏறத்தாழ 99 சதவீத வாக்குகளைப் பெற்று, வடக்கு சூடானிலிருந்து பிரிந்து தெற்கு சூடான் தனி நாடாவதற்கு அங்கீகாரம் பெற்றுள்ளது. வரும் ஜூலை 9ஆம் தேதியன்று ஜூபா நகரைத் தலைநகராகக் கொண்ட தெற்கு சூடான் அதிகாரபூர்வமாகத் தனி நாடாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய நாடான தெற்கு சூடானைத் தமிழின வாதிகள் வாழ்த்தி வரவேற்கின்றனர். ஆப்பிரிக்க கண்டத்தில் மிகப் பெரிய நாடான சூடானிலிருந்து தெற்கு சூடான் தனியாகப் பிரிந்து செல்வதற்கான வாக்கெடுப்பு நடந்துள்ளதையொட்டி, இது போலவே நாளை ஈழம் மலரும் என்று பல தமிழினவாதிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

துனிசியாவிற்கு அடுத்து எகிப்திலும் தன்னெழுச்சியாக நடந்த மக்கள் போராட்டங்களையடுத்து, கடந்த 30 ஆண்டுகளாக அந்நாட்டின் அதிபராக இருந்துவந்த ஹோஸ்னி முபாரக் பதவியிலிருந்து விலகி, தலைநகர் கெய்ரோவிலிருந்து வெளியேறிவிட்டார். எகிப்தையடுத்து, சர்வாதிகார ஆட்சி நடத்திவரும் அதிபர்கள் - மன்னர்களைப் பதவி விலகக் கோரும் போராட்டம் இப்பொழுது அல்ஜீரியா, மொராக்கோ, வடக்கு சூடான், ஏமன், லிபியா, ஜோர்டான், பஹ்ரைன் ஆகிய நாடுகளிலும் பரவியிருக்கிறது.

திருவாரூர் அருகிலுள்ள அம்மையப்பன் அரசினர் மேல்நிலைப் பள்ளி நிர்வாகத்தினர், அரசு பள்ளிக் கல்வித்துறையின் விதிமுறைகளுக்கு மாறாக, மாணவர்களிடம் கூடுதல் கட்டணமும் கட்டாய நன்கொடையும் வசூலித்ததற்கு எதிராக அப்பள்ளி மாணவர்கள் 11.2.2011 அன்று ஆர்ப்பாட்டத்துடன் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தினர்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்திலுள்ள சான்ஃபிரான்ஸிஸ்கோ நகருக்கு அருகே இயங்கி வந்த ட்ரைவேலி பல்கலைக்கழகம், அமெரிக்காவின் குடியுரிமைச் சட்டங்களை மீறியிருப்பதைக் கண்டுபிடித்த அமெரிக்க அரசு, அத்தனியார் பல்கலைக்கழகத்தை இழுத்து மூடிவிட்டது.  அப்பல் கலைக்கழகத்தில் படித்துவந்த 1,000க்கும் மேற்பட்ட இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் மீது அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியிருப்பதாகக் குற்றஞ்சுமத்தி, அமெரிக்கக் குடியேற்ற அதிகாரிகள் அவர்களை விசாரித்து வருகின்றனர்.

தமிழ் விரோத  தமிழின விரோத பார்ப்பன  பாசிச ஜெயலலிதாவுக்கு மக்கள் மத்தியில் அங்கீகாரம் தேடித்தரும் திருப்பணியை மேற்கொண்டு, அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்கக் கோரி கிளம்பியிருக்கிறார்கள், சீமான் முதலான சில ஈழ ஆதரவாளர்கள். அ.தி.மு.க.வுக்கு இளைஞர் அணி, மகளிர் அணி இருப்பதைப்போல, ஈழ ஆதரவு அணியாக சீமானின் நாம் தமிழர் இயக்கம் மாறிவிட்டது. ஓட்டுக்கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட இலட்சிய இயக்கங்களாகத் தம்மைக் காட்டிக் கொள்ளும் இத்தகையோரின் சந்தர்ப்பவாதமும் பிழைப்புவாதமும் சந்தி சிரித்து, இப்போது ஒரு பிரிவு தமிழினவாதிகளாலேயே சீமான் விமர்சிக்கப்படுகிறார்.

மதுரை அவனியாபுரம் மண்டேலா நகர் பகுதியில் கடந்த பிப்ரவரி 20ஆம் தேதியன்று கண்மாயில் தண்ணீர் குடித்த 100க்கும் மேற்பட்ட மாடுகள் வாயில்நுரை தள்ள துடிதுடித்து மாண்டு போயுள்ளன. கிடைபோட்ட இடத்திலிருந்து ஏறத்தாழ 2 கி.மீ. தொலைவுக்கு மாடுகள் இறந்து கிடந்த கோரமான காட்சி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இப்பகுதியிலுள்ள லேன்செஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் பெனார் ஸ்பெஷாலிட்டி புரொடெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் எனுமிரு இரசாயனத் தொழிற்சாலைகளின் நச்சுக் கழிவுகள் இக்கோரக் கொலைகளுக்குக் காரணமாக இருக்கலாம் என்று பிரேதப் பரிசோதனை நடத்திய கால்நடை மருத்துவர்கள் ஊகங்களைத் தெரிவித்துள்ளனர்.

தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்தும், இந்திய மேலாதிக்கம் மற்றும் இந்திய ஓட்டுப் பொறுக்கிகளை அம்பலப்படுத்தியும், மீனவர்களுக்கு ஆயுதம் ஏந்தும் உரிமை கோரியும், ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., ஆகிய அமைப்புகளின் சார்பில் தமிழகம் தழுவிய அளவில் சுவரொட்டி, துண்டறிக்கை, ஆர்ப்பாட்டங்கள் போன்ற வடிவங்களில் பிரச்சாரம் கொண்டு செல்லப்பட்டது. இந்திய அரசிடம் மீனவர்கள் பாதுகாப்புக் கோருவது பயனற்றது. சிங்களக் கடற்படையைத் தமிழக மீனவர்கள் திருப்பிச் சுட்டுக்கொல்லாதவரை நடந்துள்ள கொலைகளுக்கு நீதி கிடைக்காது எனப் பிரச்சாரம் செய்யப்பட்டது.

கடந்த ஜனவரியில் இந்தியக் கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஜெயக்குமார் சிங்களக் கடற்படையினரால் கொடூரமாகக் கொல்லப்பட்டார். அதற்கு முன், எல்லை தாண்டி வந்த சிங்களக் கடற்படை ஜெகதாப்பட்டினம் மீனவர் வீரபாண்டியனைச் சுட்டுக் கொன்றது. சிங்களக் கடற்படையால் இதுவரை 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவற்றுக்கு முதல் தகவல் அறிக்கைகள் பதிவாகியுள்ளன. கொலை (இபிகோ 302), கொலை முயற்சி (இபிகோ 307) உள்ளிட்ட பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் சிங்களக் கடற்படைக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும், ஒரு வழக்கில்கூடத் தமிழக போலீசு இதுவரை மேல்விசாரணை நடத்தவில்லை.

ஆடையின்றி வெற்று உடம்போடு நிற்கும் சிறுவனின் மார்பிலே மூவர்ணக் கொடி குத்தியிருக்கும் காட்சி அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிடக் கூடியதல்ல. அது சுதந்திரத்துக்கும் வறுமைக்கும் இடையே நிலவும் முரண்நிலையை மட்டும் சொல்லவில்லை. பெற்ற குழந்தைக்கு உணவளிக்கவும் இயலாமல் போன மக்கள் ஒருவேளை உணவுக்காக, அங்கன்வாடிகள் அல்லது சத்துணவுக் கூடங்களுக்கு அனுப்பினால் அங்கும் கூடத் தேசிய அடையாளங்கள் திணிக்கப்படுவதையும் குறிக்கிறது.   பால்குடி மறந்தவுடன்  நம் பிள்ளை களுக்குப் போதிக்கப்படும் கருத்து, தேசம், தேசபக்தி அல்லது தேசப்பற்று, தேசிய உணர்வு, தேசியப் பாதுகாப்பு, தேசிய ஒருமைப்பாடு  இவை போன்றவை.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் டாடாவும், அம்பானியும் அடித்த இமாலயக் கொள்ளை அம்பலமாகி, இன்னும் அதன் முதல்நிலை விசாரணைகூட முடியவில்லை, அதற்குள் ஸ்பெக்ட்ரம் ஊழலையே விஞ்சிடும் எஸ்பேண்ட் ஊழல் அம்பலமாகியிருக்கிறது.

இந்தியத் தரகுமுதலாளி வர்க்கத்தின் பிரதிநிதியும், அமெரிக்காவின் வளர்ப்புப் பிராணியுமான திருவாளர் மன்மோகன் சிங், தான் ஒரு கைதேர்ந்த கிரிமினல் என்பதையும், கழுத்தை அறுத்தாலும் உண்மையைக் கசியவிடாத கல்லுளிமங்கன் என்பதையும் அண்மையில் தொலைக்காட்சி சேனல்களின் ஆசிரியர்களுக்கு அளித்தபேட்டியின் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளார். தனியார்மய  தாராளமயக் கொள்கையை ஆதரித்து நிற்கும் தொலைக்காட்சி சேனல்களின் ஆசிரியர்கள் தங்களால் இயன்ற அளவுக்கு மொன்னையான கேள்விகளைக் கேட்க, "2ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரத்தில் தனக்கு எவ்விதத் தொடர்புமில்லை 'என்று கூசாமல் புளுகியிருக்கிறார், மன்மோகன் சிங்.

"ஸ்பெக்ட்ரம் என்பது வெறும் ஊழல் மட்டுமில்லை, இது கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளை! தனியார்மயமே இதன் ஆணிவேர், இதனைத் தகர்க்க நக்சல்பாரியாய் ஒன்றுசேர்! கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராகக் கிளர்ந்தெழுவோம்! ஊழல் சொத்துக்களைப் பறித்தெடுத்து மக்களுக்குப் பங்கிடுவோம்!' என்ற முழக்கத்துடன் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ம.க.இ.க் வி.வி.மு; பு.மா.இ.மு; பு.ஜ.தொ.மு, பெ.வி.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள்  கடந்த ஜனவரியிலிருந்து கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராகச் சூறாவளிப்பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகின்றன.

சென்னையிலுள்ள அரசகல்லூரிகள், அரச உதவி பெறும் கல்லூரிகளில் படித்துவரும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கடந்த டிசம்பர் 21 அன்று சென்னை அண்ணா சாலையில் நடத்திய சாலை மறியல் போராட்டம், அம்மாணவர்கள் தங்கிப் படிப்பதற்காகத் தமிழக அரசால் நடத்தப்படும் நல விடுதிகள் அனைத்தும் மாட்டுக் கொட்டகைகளைவிடக் கேவலமாக இருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.

பிரிட்டிஷ் அரசு உயர்கல்விக் கட்டணத்தை 3 மடங்கு உயர்த்தியுள்ளதையும், கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் 40% அளவுக்குக் குறைத்துள்ளதையும், ஏறத்தாழ 70 சதவீத ஏழை மாணவர்கள் பயனடைந்து வந்த உதவித் தொகை நிறுத்தப்பட்டதையும் எதிர்த்து கடந்த நவம்பர் மாத இறுதியில் பிரிட்டனில் மாணவர்கள் நடத்திய போராட்டம் அந்நாட்டையே உலுக்கியுள்ளது. கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி பள்ளி மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். ""முதலாளிகளின் நெருக்கடிகளுக்கு நாங்கள் பணம் செலுத்த மாட்டோம்'' என்ற முழக்கத்தோடு மாணவர்களால் தொடங்கப்பட்ட இந்தப் போராட்டத்தை தொழிற்சங்கங்களும் கல்லூரிப் பேராசிரியர்களும் விரிவுரையாளர்களும் ஆதரித்ததோடு, அவற்றை முறைப்படுத்தி நடத்தவும் வழிகாட்டினர். லண்டன் மட்டுமின்றி பிரிட்டனின் அனத்து பெருநகரங்களிலும் இப்போராட்டம் தீயாகப் பரவியது. பிரிட்டிஷ் மாணவர் போராட்டத்தை ஆதரித்து பிரெஞ்சு மாணவர்கள் பாரீஸ் நகரிலுள்ள பிரிட்டிஷ் தூதரகத்தை முற்றுகையிட்டுப் போராடினர். கிரேக்க நாட்டின் மாணவர்கள் ஏதென்ஸ் நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஐரோப்பிய கண்டத்தில், நாடுகளின் எல்லைகளைக் கடந்து முதலாளித்துவத் தாக்குதலுக்கு எதிராக போராட்டம் பரவி வருகிறது.

 

 

செஞ்சிலுவைச் சங்கத்தினர் 2002ஆம் ஆண்டிலிருந்து 2004 வரையிலான காலத்தில் காஷ்மீரில் 177 முறை கைதிகள் முகாமுக்குச் சென்று 1491 கைதிகளைச் சந்தித்து, தனிப்பட்ட முறையில் 1296 பேரிடம் பேட்டியெடுத்துள்ளனர். இவற்றில் 852 பேர் தாங்கள் கடுமையாக வதைக்கப்படுவதாகவும் கீழ்த்தரமாக நடத்தப்படுவதாகவும், மொத்தத்தில் 171 பேர் தங்கள் மீது ஒன்று முதல் ஆறு வடிவங்களிலான சித்திரவதைகள் ஏவப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். மின் அதிர்ச்சி கொடுப்பது, உத்தரத்தில் தலைகீழாகத் தொங்கவிட்டு வதைப்பது, கைதிகளின் கால்களின் மீது பலகையை வைத்து அதன் மீது நாற்காலியைப் போட்டு, அதில் சிறை அதிகாரிகள் அமர்ந்துகொண்டு கால்களை நசுக்குவது, கால்களை 180 டிகிரிக்குத் திருப்பி ஒடிப்பது, தண்ணீர் சித்திரவதை, பாலியல் வன்முறை எனப் பல்வேறு கொடிய சித்திரவதைகளை ஏவியதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

பின்லாடன் போலவே, விக்கிலீக்ஸ் எனும் தகவல் ஊடக நிறுவனத்தின் நிறுவனரான ஜூலியன் அசாங்கேவும் அமெரிக்க வல்லரசால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அவர் கைது செய்யப்படவேண்டும், கொல்லப்பட வேண்டும் என்று அமெரிக்கக் குடியரசுக் கட்சியின் பிரமுகரான சாரா பாலின் கொக்கரிக்கிறார். அமெரிக்க உள்துறைச் செயலரான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஹிலாரி கிளிண்டன், அமெரிக்கத் தேச நலனுக்கு எதிராக இராணுவ இரகசியங்களை வெளிப்படுத்திய குற்றத்தை இழைத்துள்ளதாகக் கூறி, அசாங்கேவுக்கு எதிராக அமெரிக்கத் தேசிய வெறியைக் கிளறிவிட முயற்சிக்கிறார்.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம் முத்தூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில், கடந்த ஆண்டு டிசம்பர் 6 ஆம் நாளன்று தாழ்த்தப்பட்ட அருந்ததி பிரிவைச் சேர்ந்த இளம் பொறியாளர் சாமிதுரை மீது உள்ளூர் வேளாளக் கவுண்ட ஆதிக்க சாதிவெறியர்கள் சாதியைச் சொல்லி இழிவுபடுத்திக் கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளனர். இத்தாக்குதலுக்கு மின்வாரிய அதிகாரிகள் ஆதரவாக நின்றுள்ளனர். தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சாமிநாதனின் தூண்டுதலால், போலீசார் சாமிதுரை மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் பொய்வழக்குப் பதிவு செய்துள்ளனர். மின்வாரியமும் சாமிதுரையைத் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்து பழிவாங்கியுள்ளது.

""பயங்கரவாதிகள் அப்பாவி மக்கள் திரளும் இடங்களில் குண்டு வைப்பார்கள்; மக்கள் திரளுக்குள் புகுந்து கண்மூடித்தனமாக அவர்களைச் சுட்டுக் கொல்வார்கள்'' இவை பயங்கரவாதிகள் எனப்படுவோருக்கு முதலாளித்துவ ஊடகங்கள் உருவாக்கியிருக்கும் எளிய இலக்கண வரையறை. இந்த வரையறையின்படி பார்த்தாலும், இன்று உலகின் மிகக் கொடிய பயங்கரவாதி அமெரிக்காவாகத்தான் இருக்கமுடியும்.

""அரசின் உணவு தானியக் கிடங்குகளில் புழுத்துப் போய்க் கிடக்கும் ஒரு தானியத்தைக்கூட ஏழை மக்களுக்கு இலவசமாகத் தர மாட்டேன்'' என அடித்துப் பேசி வருகிறார், மன்மோகன் சிங். இன்னொருபுறமோ, உ.பி. மாநிலத்தில் ரேஷன் கடைகளின் மூலமும் சமூக நலத் திட்டங்களின் மூலமும் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் ஏழைகளுக்கு விநியோகித்திருக்க வேண்டிய இரண்டு இலட்சம் கோடி ரூபாய் பெறுமான உணவு தானியங்களைக் கடத்திக் கொண்டு போய், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விற்றுள்ள ஊழல் நடந்திருப்பது தற்பொழுது அம்பலமாகியுள்ளது. அலைக்கற்றை ஊழல் பிரபலமான அளவிற்கு, உ.பி. மாநிலத்தில் நடந்துள்ள இந்த உணவு ஊழல் ஊடகங்கள் மத்தியில்கூட விரிவாகப் பேசப்படவில்லை.

""கார்கில் போரில் இறந்துபோன இராணுவச் சிப் பாய்களுக்காகக் கட்டப்பட்ட ஆதர்ஷ் கூட்டுறவு சங்க வீடுகளை, அரசியல்வாதிகளும், முன்னாள் இராணுவத் தளபதிகளும், உயர் அதிகாரிகளும் விதிமுறைகளை மீறியும் மாற்றியும் வளைத்துப் போட்டுக் கொண்டார்கள்; அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு சுற்றுப்புறச் சூழல் விதிகள், கடற்கரை ஒழுங்காற்றுச் சட்டம், நகர்ப்புற வளர்ச்சி விதிகளை மீறிக் கட்டப்பட்டுள்ளது'' என்பதைத் தாண்டி, ஆதர்ஷ் கூட்டுறவு சங்க ஊழல் பற்றி ஊடகங்கள் எழுதுவது கிடையாது. ஆனால், ஆதர்ஷ் ஊழல் அரசியல்வாதிகள் அதிகார வர்க்கத்தின் முறைகேடுகள், ஊழலை மட்டும் குறிக்கவில்லை. அதையும் தாண்டி, மும்பய் மாநகரில் நிலவும் குடியிருப்புப் பிரச்சினைகள் பற்றிய உண்மைகளையும்; மும்பய் மாநகரின் பொது இடங்களை ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசியல்வாதிகள் அதிகார வர்க்கத்தின் உதவியோடு தமக்குச் சொந்தமாக்கிக் கொண்டு வருவதையும் உணர்த்துகிறது.

குழந்தைத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்களா, சுற்றுச்சூழல் விதிகள் பின்பற்றப்பட்டுள்ளனவா என்று ஏழை நாடுகளிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் ஏகாதிபத்தியவாதிகள், ஏழை நாடுகளில் இத்தகைய விதிகளை மீறிப் பன்னாட்டு நிறுவனங்கள் தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக்கிக் கொடூரமாகச் சுரண்டுவதைப் பற்றி வாய் திறப்பதில்லை. அழகழகான லிவைஸ் ஜீன்ஸ்களாகட்டும், ஆயத்த ஆடைகளை அள்ளிச் செல்ல அழைக்கும் வால்மார்ட், டெஸ்கோ முதலான பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களாகட்டும், இவற்றின் அழகுக்கும், நேர்த்திக்கும் பின்னே உறைந்திருப்பது, ஏழை நாடான வங்கதேசத் தொழிலாளர்களின் ரத்தம்.

""இரானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இனி பழைய முறையில் பணப் பட்டுவாடா செய்வதற்கு உதவ முடியாது '' என இந்திய ரிசர்வ் வங்கி கடந்த டிசம்பர் மாத இறுதியில் அறிவித்தது. ""இரானுடனான ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிப்பது கச்சா எண்ணெய் இறக்குமதிதான். எனவே, பணப் பட்டுவாடா செய்வதற்கு மாற்று வழியை உடனடியாக ஏற்பாடு செய்யாவிட்டால், அடுத்த ஓரிரு மாதங்களுக்குள்ளாகவே உள்நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும்'' எனக் குறிப்பிட்டு, உள்நாட்டு முதலாளித்துவப் பத்திரிகைகள்கூட ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பை ஏற்றுக் கொள்ள முடியாமல் முணுமுணுத்துக் கொண்டிருக்கும்பொழுது, அமெரிக்கா, ""இது குறிப்பிடத்தக்க நடவடிக்கை'' எனக் கூறி, இந்தியாவைப் பாராட்டியிருக்கிறது.

அடுக்கடுக்கான இலஞ்சஊழல் கதைகளாலும், விலைவாசி உயர்வின் தாக்குதலாலும் நடுத்தர வர்க்கம் பிரமைதட்டிப் போயிருக்கையில், அதன் அறிவுஜீவிப் பிரிவினரை உலுக்கி இருக்கிறது, பிரபல சமூக சேவை மருத்துவரும், மனித உரிமைகள் ஆர்வலருமான பிநாயக் சென் அவர்களுக்கு மாவோயிஸ்ட் ஆதரவாளர் என்ற முத்திரை குத்தி, வாழ்நாள் கடுங்காவல் தண்டனை விதித்து சட்டிஸ்கார் மாநில, ரெய்ப் பூர் நகர விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

அரசின் அடக்குமுறைக்கு எதிராகவும், உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காகவும் கடந்த நான்கு தலைமுறைகளாகப் போராடிவந்த முதுபெரும் மனித உரிமைப் போராளி தோழர் கே.ஜி.கண்ணபிரான், நீரழிவு நோயினால் கடந்த டிசம்பர் 30 அன்று தனது 81வது வயதில் காலமாகிவிட்டார்.

ஒரிசா மாநிலத்தில் கடந்த 1999ஆம் ஆண்டு பஜ்ரங் தள்ளைச் சேர்ந்த தாரா சிங் என்ற இந்து பயங்கரவாதியின் தலைமையில் வந்த கும்பலொன்று, அம்மாநிலத்தில் மதப் பிரச்சாரம் செய்து வந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறித்துவப் பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸையும், சிறுவர்களான பிலிப், திமோதி என்ற அவரது இரு மகன்களையும் அவர்கள் மூவரும் ஒரு ஜீப்பில் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் உயிரோடு எரித்துக் கொன்றனர். இப்பயங்கரவாதப் படுகொலையைச் செய்த தாரா சிங் உள்ளிட்ட 13 பேரையும் குற்றவாளிகள் என அறிவித்த குர்தா குற்றவியல் நீதிமன்றம், தாராசிங்கிற்குத் தூக்கு தண்டனையும், மற்ற 12 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தது.

சேலம் மாமாங்கத்திலுள்ள ஜி.டி.பி. கிரானைட்ஸ் நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைத்த ஒரே காரணத்திற்காக, கடந்த அக்டோபர் 2007இல் இந்நிறுவனத்தைச் சேர்ந்த 53 தொழிலாளர்கள் திடீர் வேலைநீக்கம் செய்யப்பட்டனர். இச்சட்டவிரோத வேலை நீக்கத்துக்கு எதிராகவும், கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக வேலையிழந்த தொழிலாளர் குடும்பங்கள் பட்டினியால் பரிதவிப்பதை உணர்த்தியும் மாவட்ட ஆட்சியரிடமும் தொழிலாளர் துறையிடமும் பலமுறை மனு கொடுத்தும் கூட, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உண்ணாவிரதம், கண்டன ஆர்ப்பாட்டம், மனிதச் சங்கிலி எனத் தொழிலாளர்கள், தமது குடும்பத்தோடு பல போராட்டங்களை நடத்திய போதிலும் ஆலை நிர்வாகமோ, அதிகார வர்க்கமோ அசைந்து கொடுக்கவில்லை.

கடந்த டிசம்பர் 18ஆம் தேதியன்று கோவை என்.டி.சி. மில் தொழிற்சங்க அங்கீகாரத்துக்கான தேர்தலில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியுடன் இணைந்துள்ள கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் பெருவெற்றி பெற்றது (பார்க்க: பு.ஜ. ஜனவரி 2011 இதழ்). இம்மகத்தான வெற்றியைப் பறைசாற்றியும், தொழிலாளர்களுக்கு நம்பிக்கையையும் போராட்ட உணர்வையும் ஊட்டும் வகையிலும் கடந்த ஜனவரி 9ஆம் நாளன்று கோவை பீளமேடு புதூர் சந்தை மைதானத்தில் இத்தொழிற்சங்கத்தின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

""மலேகான் நகரில் முஸ்லிம்கள் 80 சதவீதத்தினராக இருப்பதால், எங்களது முதலாவது குண்டுவெ டிப்பை மலேகானில் நடத்தினோம்... இதற்காக 2006ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பிரக்யா சிங், சுனில் ஜோஷி, பாரத் ரித்தேஷ்வர் ஆகியோருடன் சேர்ந்து நான் திட்டமிட்டேன்... அஜ்மீர் தர்காவுக்கு இந்துக்களும் அதிக அளவில் வழிபாட்டுக்கு வருவதால், அதனைத் தடுக்கவும் இந்துக்களை அச்சுறுத்தவும் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது... சம்ஜவ்தா விரைவு வண்டி குண்டுவெடிப்பை சுனில்ஜோஷி பொறுப்பேற்று நடத்தினான்...'' ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதி அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம். ···

மகாராஷ்டிரா மாநிலத்தில் பருவம் தப்பிப் பெய்த மழைதான் வெங்காய விலையேற்றத்துக்குக் காரணம் என மைய அரசு கூறி வருகிறது. ஆனால், அதனைவிட, மன்மோகன் சிங் அரசின் ஏற்றுமதிக் கொள்கைதான் வெங்காயத்தின் விலையேற்றத்திற்கு முக்கியமான காரணம் என்பது இப்பொழுது தெட்டத்தெளிவாக அம்பலமாகிவிட்டது.

கடந்த ஜனவரியில் நடந்த துனிசிய உழைக்கும் மக்களின் பேரெழுச்சியைக் கண்டு அஞ்சி, அந்நாட்டின் சர்வாதிகார அதிபரான பென் அலி, குடும்பத்தோடு நாட்டை விட்டே தப்பியோடி சவூதி அரேபியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். அடக்குமுறையும் கைதுகளும் துப்பாக்கிகளும் கவச வண்டிகளும் மக்கள் சக்தியின் முன் மண்டியிடும் என்பதை இப்பேரெழுச்சி நிரூபித்துக் காட்டியுள்ளது.

மின்சாரம்:

2003ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்த புதிய மின்சாரச் சட்டத்தின்படி மாநிலங்களின் கட்டுப்பாட்டிலிருந்த மின்சார வாரியங்கள் கலைக்கப்பட்டு, உற்பத்தி, பகிர்மாணம், விநியோகம் என மூன்று தனித்தனி நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டன. ஆகஸ்ட் 2003 இல் தில்லியின் மின் விநியோகம் தனியார்மயமாக்கப்பட்டு டாடா, ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிறுவனங்கள், அரசிடமிருந்து யூனிட் ஒன்றுக்கு ரூ1.32 வீதம் மின்சாரத்தை வாங்கி அரசு நிறுவனமான குடிநீர் வாரியத்துக்கு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த, கால்நடை மருத்துவப் பட்டம் பெற்ற 26 வயதான இளம் தோழர் சதாசிவம், கடந்த டிசம்பர் 6ஆம் தேதியன்று எதிர்பாராத விபத்தில் சிக்கி அகால மரணமடைந்து விட்டார்.

 

கல்லூரிப் பருவத்தில் மார்க்சியலெனினிய அரசியலால் ஈர்க்கப்பட்டு மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் ஆதரவாளராகச் செயல்பட்ட அவர், வேலை கிடைக்காமல் தவித்த போதிலும் புரட்சிகர உணர்வு குன்றாமல் ஊக்கமுடன் செயல்பட்டார்.

 

புதிய ஜனநாயகப் புரட்சியைச் சாதிக்க வேண்டுமென்ற அவரது புரட்சிகர உணர்வை நெஞ்சிலேந்தி, அவரது புரட்சிகர கனவை நனவாக்கத் தொடர்ந்து போராட உறுதியேற்போம். மனித உரிமை பாதுகாப்பு மையம், நாமக்கல்.

ஸ்பெக்ட்ரம் கொள்ளையில் விற்கப்பட்ட பொருள் என்ன, வாங்கப்பட்ட பொருள் என்ன என்பது குறித்துப் புரிந்து கொள்வது பெரும்பான்மை மக்களின் சக்திக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. ஆயிரம் ரூபாய்க் காகிதத்தைக் கண்ணால் பார்த்திராத மக்களைக் கொண்ட நாட்டில், கோடிக்கு எத்தனை பூச்சியங்கள் என்பதைக்கூட நிச்சயமாகச் சொல்லத் தெரியாத மக்களைக் கொண்ட நாட்டில், கொள்ளையடிக்கப்படும் தொகை எத்தனை கோடியாக இருந்தால்தான் என்ன? ஒரு விதத்தில் பார்த்தால், கொள்ளையின் அளவு அதிகரிக்க அதிகரிக்க, அதுவே திருடர்களுக்கு ஒரு பாதுகாப்புக் கவசமாகி விடுகிறது.

தமிழகத்திலுள்ள என்.டி.சி. எனப்படும் தேசியப் பஞ்சாலைக் கழகத்துக்குச் சொந்தமான 7 மில்களிலும் (கோவை5, கமுதி1, காளையார்கோவில்1) டிசம்பர் 18 ஆம் தேதியன்று தொழிற்சங்க அங்கீகாரத்துக்காக நடைபெற்ற தேர்தலில், கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் (புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியுடன் இணைந்தது) பெருவெற்றி பெற்றிருக்கிறது.

தனியார்மயமும் தாராளமயமும் புகுத்தப்பட்டபோது,  இக்கொள்கைகள் ஊழலின் கதவை இறுக்கிச் சாத்தப்போகின்றன என ஆளும் வர்க்க எடுபிடிகள் அனைவரும் தம்பட்டமடித்தனர். ஆனால்  அதற்கு மாறாக, கடந்த 20 ஆண்டுகளில் நடந்துள்ள, பல்லாயிரம் கோடிகளை  விழுங்கிய பிரபலமான ஊழல்களின் சுருக்கமான பட்டியல் இவை.

அலைக்கற்றை ஊழலின் தொகை கற்பனைக்கு எட்டாததாகவும் பிரம்மாண்டமானதாகவும் இருப்பதே, அந்த ஊழல் மக்கள் மத்தியில் பெரும் முக்கியத்துவம் பெறுவதற்கு அடிப்படைக் காரணமாக இருக்கிறது. ஆனால், தொலைபேசித் துறையில் கிடைக்கின்ற வருவாயின் பிரம்மாண்டத்தைக் காட்டிலும், இந்தத் துறையின் போர்த்தந்திர ரீதியான முக்கியத்துவம்தான் ஏகாதிபத்தியங்கள் இதன் மீது தங்கள் கவனத்தைக் குவிப்பதற்குக் காரணமாக இருக்கிறது.

“பாசிசம் என்பதை கார்ப்பரேடிசம் என்ற சொல்லால் அழைப்பதே மிகவும் பொருத்தமானது. ஏனென்றால், பாசிசம் என்பது தனியார் குழும முதலாளித்துவத்தின் அதிகாரம், அரசு அதிகாரம் ஆகியவற்றின் ஒன்றிணைவைக் குறிக்கிறது”

என்று தனது கொள்கையான பாசிசத்துக்கு விளக்கம் அளித்தான் முசோலினி.

"இன்று எங்கும் எதிலும் இலஞ்சஊழல் நிரம்பியுள்ளது. அது அரசியல் அல்லது அதிகார வர்க்க வரம்போடு நின்று விடவில்லை. இலஞ்ச ஊழலுக்கு அப்பாற்பட்டதென்று ஒரே ஒரு நிறுவனத்தைக் கூட என்னால் சொல்ல முடியாது. சில சமீபகாலச் செய்திகளைப் பார்க்கும்போது செய்தி ஊடகமும் கூட இலஞ்சஊழல் சாக்கடையில் இருந்து விடுபட்டதாக இல்லை. எனக்கு எதிராக உட்கார்ந்திருக்கும் செய்தி ஊடகத் துறையைச் சேர்ந்த உங்களில் யாரும், முன்வினைப் பயன் காரணமாக, இலஞ்ச ஊழலை விசாரிக்கும் லோகாயுத அமைப்பின் விசாரணை வரம்புக்குள் வராததால் தப்பிவிட்டீர்கள்'' என்று செய்தி ஊடகத்தாரின் முகத்துக்கு நேராகக் காறி உமிழ்ந்தார், கர்நாடகா லோகயுதா தலைவர் சந்தோஷ் ஹெக்டே.

ஜனநாயகத்தைத் தாங்கி நிற்பதாகக் கூறப்படும் நான்கு தூண்களில் மூன்றை நாடாளுமன்றம், அதிகார வர்க்கம், பத்திரிகை ஆகியவற்றை அலைக்கற்றை ஊழலும், வெளியே கசியவிடப்பட்டுள்ள நீரா ராடியா தொலைபேசி உரையாடல்களும் சந்தி சிரிக்க வைத்துவிட்ட நிலையில், இப் போலி ஜனநாயகத்தை ஊழலில் இருந்து காத்து ரக்ஷிக்கும் கடவுளர்களாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஊடகங்களால் முன்னிறுத்தப்படுகின்றனர். இவ்வூழலை விசாரிக்கும் சாக்கில் நீதிபதிகள் உதிர்த்து வரும் விமர்சனங்களைக் கொட்டை எழுத்துகளில் வெளியிட்டு, அதன் மூலம் நீதிமன்றம் பற்றிய பிரமையை மக்களின் மனதில் திணிக்கின்றன ஊடகங்கள்.

ஓசூர் அருகிலுள்ள பாகலூரில், அண்மைக்காலமாக விவசாய நிலங்களில் மின்சாரக் கம்பிகள் அறுந்து தொங்கி, மின்சாரம் தாக்கிப் பல விவசாயிகள் படுகாயமடைந்துள்ளனர். இது பற்றிப் பலமுறை முறையிட்டும் மின்சார வாரியம் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருவதோடு, மீட்டர் பொருத்த இலஞ்சம் வாங்கி இழுத்தடிப்பது, டிரான்ஸ்பார்மர் பழுதடைந்தால் சீரமைக்காமல் புறக்கணிப்பது, மின்வாரிய ஊழியர்கள் அல்லாமல் புரோக்கர்களை வைத்துச் சீரமைப்பது முதலான முறைகேடுகளிலும் ஈடுபட்டு வருகிறது.

அயோத்தி தீர்ப்பு வெளியானதும், அலகாபாத் நீதிமன்றத்தின் பார்ப்பனப் புரட்டைத் திரைகிழித்தும் இந்துவெறி பாசிசத்துக்கு எதிராகப் போராட அறைகூவியும் துண்டுப்பிரசுரங்கள், சுவரொட்டிகள் மூலம் பிரச்சாரத்தை மேற்கொண்ட  ம.க.இ.க; வி.வி.மு; பு.மா.இ.மு; பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள், தாங்கள் செயல்படும் பகுதிகளில் தொடர்ந்து பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகின்றன. கடந்த 4.12.10 அன்று சிவகங்கை பேருந்து நிலையம் அருகே ஆர்.எம்.ஆர். திருமண மண்டபத்தில் ""அயோத்தி தீர்ப்பு முதல் இராமன் பாலம் வரை'' என்ற தலைப்பில் பார்ப்பன சதிகளை அம்பலப்படுத்தி ம.க.இ.க. சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்திய அரசு நடுநிலையானதாகவும், சுயேச்சையானதாகவும், சமூகத்திலுள்ள அனைத்துப் பிரிவு மக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பாகவும் சித்தரிக்கப்படுகிறது. மேலும், அரசு செல்வாக்கு மிக்க ஒரு பிரிவினரின் நலன்களைச் சார்ந்து இயங்குவதைத் தடுப்பதற்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் நீதிமன்றம் போன்றவை கொண்ட அமைப்பென்றும் கூறிக் கொள்கிறார்கள் இந்தப் போலி ஜனநாயகத்தின் ஆதரவாளர்கள். வெளித்தோற்றத்திற்கு உண்மையைப் போலத் தெரியும் இந்த மோசடியை, அலைக்கற்றை ஊழலும், அதையொட்டி கசியவிடப்பட்டுள்ள நீரா ராடியா ஒலிநாடாக்களும் பாமரன்கூடப் புரிந்துகொள்ளும்படி அம்பலப்படுத்திவிட்டன. இந்திய அரசு, ஆளும் வர்க்கமான தரகு முதலாளிகள், பன்னாட்டு முதலாளிகளின் நலனுக்காக எப்படியெல்லாம் சேவை செய்கிறது என்பதை இவ்விவகாரம் காட்டிவிட்டது.

முத்துக்குமாரின் உடல் தமிழகத்தைத் தட்டியெழுப்பியதைப் போல, தன் உடலும் தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ள மூன்று  தமிழர்களின் உயிரைக் காப்பாற்றப் பயன் படட்ம்   என்ற நம்பிக்கையுடன் கடிதம் எழுதி வைத்து விட்டு, காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தில் இயங்கிவந்த 21 வயதான பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளம் பெண் தோழரான செங்கொடி, கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி ஞாயிறன்று தனது உடலைத் தீக்கிரையாக்கிக் கொண்டு தியாகியாகியுள்ளார்.

அரசியலற்ற அமைதியிலும் விரக்தியிலும் நம்பிக்கையின்மையிலும் மூழ்கடிக்கப்பட்டுள்ள தமிழகத்தைத் தனது தீக்குளிப் பினால் இரு ஆண்டுகளுக்கு முன்னர் தட்டியெழுப்பினார், முத்துக்குமார். இன்றும் அதே நிலைமைதான் தொடர்கிறது. இன்னும் விழித்தெழாத தமிழகத்தின் அரசியலற்ற கோழைத்தனமும், கருணையை எதிர்பார்த்து நிற்கும் அவலமுமே அந்த இளம் பெண்ணின் உள்ளத்தை எரித்திருக்கிறது. மூவர் தூக்கை நிறுத்துமளவுக்கு நம்பிக்கையூட்டும் போராட்டங்களும் அரசியல் முழக்கங்களும் தமிழகத்தைப் பற்றியிருந்தால், செங்கொடி தீக்குளிக்க நேர்ந்திருக்காது.

சென்றுவாருங்கள், தோழர் செங்கொடி! உணர்ச்சி வேகத்தில் நீங்கள் தீக்குளித்திருந்தாலும், சரியான திசையில் போராடாத தமிழகத்தை நீங்கள் சாடியிருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொண்டுள்ள தோழர்கள், நீங்கள் எழுப்பியிருக்கும் கோரிக்கையை நிறைவேற்றப் போராடுவார்கள். உங்களின் தீக்குளிப்பு அந்தப் போராட்டத்தை நெருப்பாய் பற்ற வைக்கும். மூவர் தூக்கிற்குக் காரணமான பாசிச காங்கிரசு அரசு, பாசிச ஜெயா, அநீதியான நீதிமன்றங்கள் மீதான போராட்டத் தீயின் அனலால் தமிழகமே கொதிக்கும்!