Language Selection

பாரதிதாசன்

குடியேறும் ஆரியப் பாதகர்கள் சூழ்ச்சியால்
கொலையுண்ட தமிழர் நெஞ்சும்,
குறுநெறிச் சங்கரன் புத்தநெறி மாற்றிடக்
கொல்வித்த தமிழர் நெஞ்சும்,
படியேறு சமண்கொள்கை மாற்றிடச் சம்பந்தப்
பார்ப்பனன் சூழ்ச்சி செய்து
படுகொலை புரிந்திட்ட பல்லாயி ரங்கொண்ட
பண்புசேர் தமிழர் நெஞ்சும்,
கொடிதான தம்வயிற் றுக்குகை நிரப்பிடும்
கொள்கையால் வேத நூலின்
கொடுவலையி லேசிக்கி விடுகின்ற போதெலாம்
கொலையுண்ட தமிழர் நெஞ்சும்,
துடிதுடித் துச்சிந்தும் எண்ணங்கள் யாவுமே
தூயசுய மரியா தையாய்ச்
சுடர்கொண் டெழுந்ததே சமத்துவம் வழங்கிடத்
தூயஎன் அன்னை நிலமே!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt257

நிலம்ஆளும் மனிதரே! நிலமாளு முன்எனது
நேரான சொற்கள் கேட்பீர்!
நீர்மொள் ளவும்,தீ வளர்க்கவும் காற்றுதனை
நெடுவௌியை அடைவ தற்கும்
பலருக்கும் உரிமைஏன்? பறிபோக லாகுமோ
பணக்காரர் நன்மை யெல்லாம்?
பறித்திட்ட நிலம்ஒன்று! பாக்கியோ நான்குண்டு!
பறித்துத் தொலைத்து விட்டால்
நலமுண்டு! பணக்காரர் வயிறுண்டு! தொழிலாளர்
நஞ்சுண்டு சாகட் டுமே!
நற்காற்று, வானம்,நீர், அனல்பொது வடைந்ததால்
நன்செயும் பொதுவே எனத்
தலையற்ற முண்டங்கள் சொன்னாற் பெரும்பெரும்
தலையெலாம் உம்மில் உண்டு!
தாழ்ந்தவர்க் கேதுண்டு; காற்செருப் பேஉண்டு
தகைகொண்ட அன்னை நிலமே!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt256

கப்பல்உடை பட்டதால் நாயகன் இறந்ததாய்க்
கருதியே கைம்மை கொண்ட
கண்ணம்மை எதிரிலே ஓர்நாள்தன் கணவனும்
கணவனின் வைப்பாட் டியும்
ஒப்பியே வந்தார்கள். கண்ணம்மை நோக்கினாள்

`உடன்இப்பெண் யார்?'என் றனள்.
`உன்சக்க ளத்திதான்' என்றனன். கண்ணம்மை
உணவுக்கு வழிகேட் டனள்.
`இப்பத்து மாதமாய்க் கற்புநீ தவறாமல்
இன்னபடி வாழ்ந்து வந்தாய்
என்பதனை எண்பிக்க எங்களிரு வர்க்கும்நீ
ஈந்துவா உணவெ'ன் றனன்.
அப்படியும் ஒப்பினாள் கண்ணம்மை. ஆயினும்
அடிமையாம் பலிபீ டமேல்
அவள்உயிர் நிலைக்குமோ? அறிவியக் கங்கண்ட
அழகுசேர் அன்னை நாடே!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt255

பெரும்பணக் காரனிடம் ஏழையண் ணாசாமி

`பெண்வேண்டும் மகனுக்' கெனப்
`பெற்றபெண் ணைக்கொடேன்; வளர்க்கின்ற பெண்ணுண்டு
பேச்செல்லாம் கீச்'சென் றனன்.
`இருந்தால் அதற்கென்ன' என்னவே, எனதுபெண்

`இரட்டைவால் அல்ல' என்றான்.
ஏழையண் ணாசாமி `மகிழ்ச்சிதான்' என்றனன்.

`என்றன்பெண் கால்வ ரைக்கும்
கருங்கூந்தல் உண்'டென்ன, ஏழையண் ணாசாமி
கடிதுமண நாள்கு றித்தான்.
கண்ணுள்ள மகனுக்குத் தந்தைநிய மித்தபெண்
கழுதையா? அல்ல, அதுதான்
பெரும்பணக் காரன் வளர்த்திட்ட ஒற்றைவால்
பெட்டைக் கருங் குரங்கு!
பீடுசுய மரியாதை கண்டுநல முண்டிடும்
பெரியஎன் அன்னை நாடே!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt254

மாடறுக் கப்போகும் நாட்டுத் துருக்கன்நலம்
மறிக்கின்ற இந்து மதமும்,
மசூதியின் பக்கமாய் மேளம்வா சித்திடினும்
வாள்தூக்கும் மகம்மதி யமும்,
வாடவரு ணாச்சிர மடமைக் கொழுந்தினை

`மகாத்மீயம்' என்னும் நிலையும்,
வழிபறிக் கும்தொல்லை இன்றியே `பொதுமக்கள்
மதிப்பைப் பறித்தெ றிந்து,
பாடின்றி வாழ்ந்திட நினைத்திடும் பாதகப்
பார்ப்பனர், குருக்கள், தரகர்,
பரலோகம் காட்டுவார்' என்கின்ற பேதமையும்
பகைமிஞ்சு கடவுள் வெறியும்,
ஆடாமல் அசையாமல் இருந்திடக் கேட்கின்ற
அவ்வுரிமை நாளும் இங்கே
அமைந்திருக் கின்றதே அறிவியக் கங்கண்ட
அழகுசெந் தமிழ்வை யமே!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt253

சோபன முகூர்த்தத்தின் முன்அந்த மாப்பிள்ளைச்
சுப்பனைக் காண லானேன்.
`தொல்லுலகில் மனிதர்க்கு மதம்தேவை யில்லையே'
என்றுநான் சொன்ன வுடனே
கோபித்த மாப்பிள்ளை `மதம்என்னல் மலையுச்சி
நான்அதில் கொய்யாப் பழம்;
கொய்யாப் பழம்சிறிது மலையுச்சி நழுவினால்
கோட்டமே' என்று சொன்னான்.
தாபித்த அந்நிலையில் அம்மாப்பிள் ளைக்குநான்
தக்கமொழி சொல்லி அவனைத்
தள்ளினேன். மலையுச்சி மீதே யிருந்தவன்
தன்புதுப் பெண்டாட் டியின்
சோபனக் கட்டிலில் தொப்பென்று விழுந்தனன்.
துயரமும் மனம கிழ்வும்
சுப்பனே அறிகுவான் நானென்ன சொல்லுவேன்
தூயஎன் அன்னை நாடே!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt252

காணாத கடவுள்ஒரு கருங்குரங் கென்பதும்,
கருங்குரங் கின்வா லிலே
கட்டிவளை யந்தொங்க, அதிலேயும் மதம்என்ற
கழுதைதான் ஊச லாட
வீணாக அக்கழுதை யின்வால் இடுக்கிலே
வெறிகொண்ட சாதி யென்னும்
வெறும்போக் கிலிப்பையன் வௌவா லெனத்தொங்கி
மேதினி கலங்கும் வண்ணம்
வாணங்கொ ளுத்துகின் றான்என் பதும்வயிறு
வளர்க்கும்ஆத் திகர்க ருத்து.
மாநிலம் பொசுங்குமுன் கடவுளுக் குத்தொங்கும்
வாலையடி யோட றுத்தால்
சேணேறு கடவுளுக் கும்சுமை அகன்றிடும்
தீராத சாதி சமயத்
தீயும்வி ழுந்தொழியும் எனல்என் கருத்தாகும்
திருவார்ந்த என்றன் நாடே.

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt251

கூட்டின் சிட்டுக் குருவிக் குஞ்சு
வீட்டின் கூடத்தில் விழுந்து விட்டது!
யாழ்நரம்பு தெறித்த இன்னிசை போலக்
கீச்சுக் கீச்சென்று கூச்ச லிட்டது.
கடுகு விழியால் தடவிற்றுத் தாயை
தீனிக்குச் சென்றதாய் திரும்ப வில்லையே!

தும்பைப் பூவின் துளிமுனை போன்ற
சிற்றடி தத்தித் திரிந்து, சிறிய
இறக்கையால் அதற்குப் பறக்கவோ முடியும்!

மின் இயக்க விசிறி இறக்கையால்
சரேலென விரைந்து தாய்க்குருவி வந்தது.
கல்வி சிறிதும் இல்லாத் தனது
செல்வத் தின்நிலை தெரிந்து வருந்தி,
"இப்படி வா"என இச்இச் என்றதே!
அப்படிப் போவதை அறிந்து துடித்ததே!

காக்கையும் கழுகும் ஆக்கம் பெற்றன!
தாக்கலும் கொலையும் தலைவிரித் தாடின;
அல்லல் உலகியல் அணுவள வேனும்
கல்லாக் குழந்தையே கடிதுவா இப்புறம்
என்றது! துடித்த தெங்கணும் பார்த்தது!

மேலிருந்து காக்கை விழிசாய்த்து நோக்கிப்
பஞ்சுபோற் குஞ்சைப் பறித்துச் சென்றதே!
எழுந்து லாவும் இளங்குழந் தைகளை
இழந்து போக நேரும்;
குழந்தைப் பள்ளிக் கூடங்கள் தேவையே!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt250

தொழிலே வாழிநீ! தொழிலே வாழிநீ!
எழிலை உலகம் தழுவும் வண்ணம்
ஒழியா வளர்ச்சியில் உயரும் பல்வகைத்
தொழிலே வாழிநீ! தொழிலே வாழிநீ!

இந்தவான், மண்,கனல் எரி,வளி உருப்படா
அந்தநாள் எழுந்தஓர் `அசைவினால்' வானொடு
வெண்ணி லாவும், விரிகதிர் தானும்,
எண்ணிலா தனவும் எழுந்தன வாகும்.
அணுத்தொறும் இயங்கும்அவ் வசைவியக் கத்தைத்
துணிப்பிலா இயற்கையின் தொழிலெனச் சொல்வார்.
அழியா தியங்கும்அவ் வசைவே மக்களின்
தொழிலுக்கு வேரெனச் சொல்லினும் பொருந்தும்.
ஆயினும் உன்னினும் அதுசிறந்த தன்று
தாயினும் வேண்டுவது தந்திடுந் தொழிலே!

மக்களின் தேவை வளர்ந்திடும் அளவுக்குத்
தக்க வாறு தளிர்த்திடு கின்ற
அறிவிலே தோன்றுவை; அறத்தோள் தழுவுவை!
மறுவிலாக் கருவியில் வாய்விட்டுச் சிரிப்பை;
பொருள்பல நல்கிஅப் பொருள்தொறும் கலைத்திறம்
அருள்புரிந்து குறைபா டகற்றுவை தொழிலே!

பசித்தவன் புசித்திடப் பறப்பது போன்றதோர்
அசைப்பிலா ஆவலும், அசைப்பிலா ஊக்கமும்
அடைந்தோர் உனைத்தம் ஆயிரம் ஆயிரம்
தடந்தோள் தழுவியே கடந்தனர் வறுமை!

தொழிலே காதுகொடு! சொல்வேன். எங்கள்
அதிர்தோள் உன்றன் அழகிய மேனி
முழுதும் தழுவ முனைந்தன பார்நீ.
அழகிய நாட்டில் அந்நாள் இல்லாத
சாதியும் மதமும் தடைசெயும் வலிவிலே
மோதுதோள் அனைத்தும் மொய்த்தன ஒன்றாய்!
கெண்டை விழியாற் கண்டுகொள் தொழிலே
வாராய் எம்மிடை வாராய் உயிரே
வாராய் உணர்வே வாராய் திறலே!

அலுப்பிலோம் இருப்புக் கலப்பை துடைத்தோம்;
மலையெனச் செந்நெல் வழங்கஎம் தோளில்வா!
கரும்பா லைக்குக் கண்ணெலாம் நெய்யிட்
டிரும்பா லைக்கு வரும்பழு தகற்றினோம்
பண்டம்இந் நாட்டிற் பல்க மகிழ்ந்துவா!

சூட்டி ரும்பும் துளியும் போலஎம்
தோட்கூட் டத்தில் தொழிலுன் வல்லமை
சேர்வது நாங்கள் விடுதலை சேர்வதாம்!
யாமும் நீயும் இரண்டறக் கலப்பின்
தூய்மை மிக்க தொழிலா ளிகள்யாம்;
சுப்பல் முடைவோம் கப்பல் கட்டுவோம்
பூநாறு தித்திப்புத் தேனாறு சேர்ப்போம்
வானூர்தி யாலிவ் வையம் ஆள்வோம்.
ஐயப் படாதே! அறிவு புகட்டும்
வையநூல் பலஎம் மனத்தில் அடுக்கினோம்;
மாசு தவிர்ந்தோம்; மாசிலா மணியே
பேசு; நெருங்கு; பிணைதோ ளொடுதோள்;
இன்பம்! இன்பம்!! இதோபார் கிடந்த
துன்பம் தொலைந்தது! தொலைந்தது மிடிமை!
வாழிய தொழிலே! செந்தமிழ்
வாழிய! வாழிய வண்டமிழ் நாடே!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt249

மெல்லென அதிர்ந்த மின்னல், அந்தச்
செல்வக் குழந்தையின் சிரிப்பு! நல்ல
இன்பம் வேண்டுவோர் இங்குள்ளார் வாழ
அருஞ்செயல் செய்துதான் அடைய வேண்டுமோ!

குளிர்வா ழைப்பூக் கொப்பூழ் போன்ற
ஒளிஇமை விளக்கி வௌிப்படும் கண்ணால்
முதுவை யத்தின் புதுமை கண்டதோ
என்னவோ அதனை எவர்தாம் அறிவார்?
தங்க மாதுளைச் செங்கனி பிளந்த
மாணிக்கம் அந்த மதலையின் சிரிப்பு!

வாரீர்! அணைத்து மகிழவேண் டாமோ?
பாரீர்! அள்ளிப் பருகமாட் டோமோ?
செம்பவ ழத்துச் சிமிழ்சாய்ந்த அமுதாய்ச்
சிரித்தது. பிள்ளை சிரிக்கையில்
சிரித்தது வையம்! சிரித்தது வானமே!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt248

தெருப்பக்கம் கூண்டறையில் இருந்தேன்; மேசை
சிறியதொரு நாற்காலி தவிர மற்றும்
இருந்தஇடம் நிறையமிகு பழந்தாள், பெட்டி,
எண்ணற்ற சிறுசாமான் கூட்டம்! காற்று
வருவதற்குச் சன்னல்உண்டு சிறிய தாக;
மாலை,மணி ஐந்திருக்கும் தனியாய்க் குந்தி
ஒருதடவை வௌியினிலே பார்த்தேன். அங்கே
ஒருபழைய நினைப்புவந்து சேர்ந்த தென்பால்!

நெஞ்சத்தில் `அவள்'வந்தாள்; கடைக்கண் ணால்என்
நிலைமைதனை மாற்றிவிட்டாள்; சிரித்தாள்; பின்னர்
கஞ்சமலர் முகத்தினையே திருப்பிக் கோபம்
காட்டினாள்! பூமலர்ந்த கூந்தல் தன்னில்
மிஞ்சும்எழில் காட்டினாள்! அவள்தன் கோபம்
மிகலாபம் விளைத்த தன்றோ என்றனுக்கே!
`அஞ்சுகமே வா'என்று கெஞ்சி னேன்நான்
அசைந்தாடிக் கைப்புறத்தில் வந்து சாய்ந்தாள்.

இவ்வுலகம் ஏகாந்தத் தின்வி ரோதி!
இதோபாராய் பிச்சைஎன ஒருத்தி வந்தாள்.
திவ்வியமாம் ஒருசேதி என்று சொல்லித்
தெருநண்பர் வருவார்கள் உயிரை வாங்க!
`வவ்வவ்'வென் றொருகிழவி வருவாள்; உன்றன்
மணநாளில் என்னைஅழை என்று சொல்வாள்!
ஒவ்வொன்றா? என்செயலாம்! நீயும் நானும்
உயர்வானில் ஏறிடுவோம் `பறப்பாய்' என்றேன்.

மல்லிகையின் அரும்புபோல் அலகும், நல்ல
மாணிக்கக் காலும்,மணி விழியும், பால்போல்
துல்லியவெண் சிறகும்உற்ற பெண்பு றாவாய்த்
துலங்கினாள். நானும்ஆண் புறாவாய்ப் போனேன்.
அல்லலற வான்வௌியில் இருவர் நாங்கள்;
அநாயாச முத்தங்கள் கணக்கே யில்லை;
இல்லையென்று சொல்லாமல் இதழ்கள் மாற்றி
அவைசாய்ந்த அமுதுண்போம்; இன்னும் போவோம்.

பொன்னிறத்துக் கதிர்பாயும்முகிலிற் பட்டுப்
புறஞ்சிதறும் கோடிவண்ண மணிக்கு லம்போல்
மின்னும்மணிக் குவியலெல்லாம் மேகம் மாய்த்து
விரிக்கும்இருள்! இருள்வானம் ஒளிவான் ஆகச்
சென்னியைஎன் சென்னியுடன் சேர்த்தாள். ஆங்கே
சிறகினொடு சிறகுதனைப் பின்னிக் கொண்டோம்!
என்னைஅறி யேன்!தன்னை அறியாள்! பின்னர்
இமைதிறந்தோம் ஆகாய வாணி வீட்டில்!

`பாரதநாட் டாரடிநாம் வாவா' என்றேன்.
பழஞ்சாமான் சிறுமேசைக் கூண்ட றைக்குள்,
ஓரண்டை நாற்காலி தன்னில் முன்போல்
உட்கார்ந்த படியிருந்தேன். பின்னும், உள்ளம்
நேர்ஓடிப் பறக்காமல் பெண்டு, பிள்ளை,
நெடியபல தொந்தரைகள், நியதி அற்ற
பாராளும் தலைவர்களின் செய்கை எல்லாம்
பதட்டமுடன் என்மனத்திற் பாய்ந்த தன்றே.

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt247

தொடங்குக பணியைத் தொடங்குக அறத்தை!
கடலிலும், வானிலும், கவினுறு நிலத்திலும்,
வாழ்வுயிர் அனைத்தும், மக்கள் கூட்டமும்,
வாழுமாறு அன்பு மணிக்குடை யின்கீழ்
உலகினை ஆண்டார் உயர்வுற நம்மவர்!

புலவர்கள் "உலகப் பொன்னி லக்கியம்"
ஆக்கினார்! மறவரோ, அறிவு-அறி யாமையைத்
தாக்குமாறு அமைதியைத் தாழாது காக்கக்
கண்கள் மூடாமல் எண்டிசை வைத்தும்
வண்கையை இடப்புறத்து வாளில் வைத்தும்
அறம்புரிந்து இன்ப அருவி ஆடினார்!

தொடங்குக பணியை! அடங்கல் உலகும்
இடும்நம தாணை ஏற்று நடக்கவும்
தடங்கற் சுவரும் சாய்ந்துதூ ளாகவும்
தொடங்குக! செந்தமிழ்ச் சொல்லால் செயலால்
தடம்பெருந் தோளால் தொடங்குக "பணியை!"

இந்த உலகில் எண்ணிலா மதங்கள்
கந்தக வீட்டில் கனலின் கொள்ளிகள்!
சாதிக்குச் சாவுமணி அடிக்க! பழம்நிகர்
தமிழகம் வையத் தலையாய்
அமையத் தொடங்குக "அறம்இன்பம்" என்றே!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt246

மார்புற அணத்து நாதன்
மங்கைக்குத் தந்த இன்பம்
சார்புறத் தேகம் தன்னை
மனத்தினைத் தழுவும் நேரம்
நேரினில் இருந்த நாதன்
மறைந்தனன் என்றால் நேயக்
கார்குழல் மங்கை கொள்ளும்
கடுந்துயர்க் களவு முண்டோ?

இறைந்தநற் றமிழர் தம்மை
இணைத்தசீர் இராம சாமி
அறைந்தநல் வழியே இந்தி
அரவினைக் கொன்றான் செல்வன்
நிறைந்தஅத் தேனை நாட்டார்
நினைந்துண்ணும் போதே அன்னோன்
மறைந்தனன் என்றால் யார்தாம்
மனம்துடி துடிக்க மாட்டார்?

எல்லையில் "தமிழர் நன்மை"
என்னுமோர் முத்துச் சோளக்
கொல்லையில் பார்ப்பா னென்ற
கொடுநரி உலவும் போது,
தொல்லைநீக் கிட எழுந்த
தூயரில் பன்னீர்ச் செல்வன்
இல்லையேல் படைத் தலைவன்
இல்லைஎம் தமிழ்வேந் துக்கே.

ஆங்கில நாட்டில் நல்ல
இந்திய அமைச்ச னுக்குத்
தீங்கிலாத் துணையாய்ச் சென்றான்
சர்.பன்னீர்ச் செல்வன் தான்மேல்
ஓங்கிய விண்வி மானம்
உடைந்ததோ ஒலிநீர் வெள்ளம்
தூங்கிய கடல்வீழ்ந் தானோ
துயர்க்கடல் வீழ்ந்தோம் நாங்கள்.

பண்கெட்டுப் போன தான
பாட்டுப்போல் தமிழர் வாழும்
மண்கெட்டுப் போமே என்னும்
மதிகெட்டு மானம் கெட்டும்
எண்கெட்ட தமிழர் பல்லோர்
பார்ப்பனர்க் கேவ லாகிக்
கண்கெட்டு வீழும் போதோ
கடல்பட்ட தெங்கள் செல்வம்?

சிங்கத்தை நரிய டிக்கும்
திறமில்லை எனினும் சிங்கம்
பொங்குற்றே இறந்த தென்றால்
நரிமனம் பூரிக் காதோ?
எங்குற்றான் செல்வன் என்றே
தமிழர்கள் ஏங்கும் காலை
இங்குற்ற பூணூல் காரர்
எண்ணம்பூ ரிக்கின் றார்கள்.

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt245

நரகனைக் கொன்றநாள் நல்விழா நாளா?
நரகன் இறந்ததால் நன்மை யாருக்கு?
நரகன் என்பவன் நல்லனா? தீயனா?
அசுரன்என் றவனை அறைகின் றாரே?
இராக்கதன் என்றும் இயம்புகின் றாரே?
இப்பெய ரெல்லாம் யாரைக் குறிப்பது?
இன்றும் தமிழரை இராக்கதர் எனச்சிலர்
பன்னு கின்றனர் என்பது பொய்யா?
இவைக ளைநாம் எண்ண வேண்டும்.
எண்ணா தெதையும் நண்ணுவ தென்பது
படித்தவர் செயலும் பண்பும் ஆகுமா?
வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல்
கழுத்துப் போயினும் கைக்கொள வேண்டாம்.
ஆயிரம் கோடி ஆண்டு செல்லினும்
தூயது தூயதாம் துரும்பிரும் பாகாது!
"உனக்கெது தெரியும், உள்ளநா ளெல்லாம்
நினத்து நடத்திய நிகழ்ச்சியை விடுவதா?"
என்று கேட்பவனை "ஏனடா குழந்தாய்!
உனக்கெது தெரியும் உரைப்பாய்" என்று
கேட்கும்நாள், மடமை கிழிக்கும்நாள், அறிவை
ஊட்டும்நாள், மானம் உணருநாள் இந்நாள்.
தீவா வளியும் மானத் துக்குத்
தீ-வாளி ஆயின் சீஎன்று விடுவிரே!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt244

பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு
திறக்கப் பட்டது! சிறுத்தையே வௌியில்வா!
எலிஎன உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலிஎனச் செயல்செய்யப் புறப்படு வௌியில்!
நம்பினை பகலினை நள்ளிருள் என்றே
சிம்புட் பறவையே சிறகைவிரி! எழு!
சிங்க இளைஞனே திருப்புமுகம்! திறவிழி!
இங்குன் நாட்டுக் கிழிகழுதை ஆட்சியா?
கைவிரித் துவந்த கயவர், நம்மிடைப்
பொய்வி ரித்துநம் புலன்கள் மறைத்துத்
தமிழுக்கு விலங்கிட்டுத் தாயகம் பற்றி
நமக்குள உரிமை தமக்கென் பார்எனில்,
வழிவழி வந்தஉன் மறத்தனம் எங்கே?
மொழிப்பற் றெங்கே? விழிப்புற் றெழுக!
இகழ்ச்சி நேர்ந்தால் இறப்போம் என்றும்
புகழ்ச்சி யேஎம் பூணாம் என்றும்
வையம் ஆண்ட வண்டமிழ் மரபே
கையி ருப்பைக் காட்ட எழுந்திரு!
குறிக்கும்உன் இளைஞர் கூட்டம் எங்கே?
மறிக்கொணாக் கடல்போல் மாப்பகை மேல்விடு!
நன்மொழிக்கு விடுதலை நல்கிட எழுந்திரு!
பொன்மொ ழிக்குநீ புதுமை ஏற்றுவாய்!
மக்களை ஒன்றுசேர்! வாழ்வை யுயர்த்துக!
கைக்குள திறமை காட்ட எழுந்திரு!
வாழ்க இளைஞனே, வாழ்க நின்கூட்டம்!
வாழ்க திராவிட நாடு!
வாழ்கநின் வையத்து மாப்புகழ் நன்றே!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt243

மேசை விளக் கேற்றி - நாற்காலி
மீதில் அமர்ந்தே நான்
ஆசைத் தமிழ் படித்தேன் - என்னருமை
அம்மா அருகில் வந்தார்
மீசைத் தமிழ் மன்னர் - தம்பகையை
வென்ற வர லாற்றை
ஓசை யுடன் படித்தேன் - அன்னைமகிழ்
வுற்றதை என்ன சொல்வேன்!

செந்தமிழ் நாட்டி னிலே - வாழ்கின்ற
சேயிழை யார் எவரும்
வந்த விருந் தோம்பும் - வழக்கத்தை
வாய்விட்டுச் சொல்லு கையில்
அந்தத் தமிழன் னையின் - முகத்தினில்
அன்பு பெருகி யதை
எந்த வகை உரைப்பேன்! - கேட்டபின்பும்
இன்னும்சொல் என்றுரைத் தார்!

கிட்டநெருங்கி எனைப் - பிள்ளாய்என்று
கெஞ்சி நறுந் தேனைச்
சொட்டு வதைப் போலே - வாய்திறந்து
சொல்லொரு பாடல் என்றார்
கட்டிக் கரும் பான - இசைத்தமிழ்
காதினிற் கேட்ட வுடன்
எட்டு வகைச் செல்வமும் - தாம்பெற்றார்
என்னைச் சுமந்து பெற்றார்!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt242

கருத்தூற்று மலையூற்றாய்ப் பெருக்கெடுக்க வேண்டும்
கண்டதைமேற் கொண்டெழுதிக் கட்டுரையாக் குங்கால்
தெருத்தூற்றும்; ஊர்தூற்றும்; தம்முளமே தம்மேற்
சிரிப்பள்ளித் தூற்றும்!நலம் செந்தமிழ்க்கும் என்னாம்?
தரத்தம்மால் முடிந்தமட்டும் தரவேண்டும் பின்னால்
சரசரெனக் கருத்தூறும் மனப்பழக்கத் தாலே!
இருக்கும்நிலை மாற்றஒரு புரட்சி மனப்பான்மை
ஏற்படுத்தல்; பிறர்க்குழைக்கும் எழுத்தாளர் கடனாம்.

விருப்பத்தை நிறைவேற்ற முயலுங்கால் வையம்
வெறுந்தோற்றம் என்னும்ஒரு வேதாந்தப் பேச்சேன்?
மரத்தடியில் மறைந்திருந்து வாலியினைக் கொன்ற
மட்டமுறு கருத்துக்கள் இப்போது வேண்டாம்.
உரத்தினிலே குண்டுபுகும் வேளையிலும் மக்கள்
உயிர்காக்கும் மனப்பான்மை உண்டாக்க வேண்டும்!
பெருநிலத்தார் எல்லோரும் ஒருதாயின் மக்கள்
பிறர்தமர்என் றெண்ணுவது பேதமையே அன்றோ?

பொதுமக்கள் நலம்நாடிப் புதுக்கருத்தைச் சொல்க!
புன்கருத்தைச் சொல்லுவதில் ஆயிரம்வந் தாலும்
அதற்கொப்ப வேண்டாமே! அந்தமிழர் மேன்மை
அழிப்பாரைப் போற்றுதற்கும் ஏடுபல வாழ்ந்தால்
எதிர்ப்பதன்றோ தமிழர்களின் எழுதுகோல் வேலை?
ஏற்றசெயல் செய்தற்கும் ஏன்அஞ்ச வேண்டும்?
உதிர்த்திடுக பொன்மலர்கள் உயர்கைகள், நன்றே
உணர்ந்திடுக உளங்கவரும் புதுமணத்தை யாண்டும்.

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt241

எங்கள் திருநாட்டில் எங்கள்நல் ஆட்சியே
பொங்கிடுக வாய்மை பொலிந்திடுக என்றேநீ
செங்கதிர் சீர்க்கையால் பொன்னள்ளிப் பூசிய
கங்குல் நிகர்த்த கருங்குயிலே கூவாயே!

கன்னடம் தெலுங்குமலை யாளம் களிதுளுவம்
முன்னடைந்தும் மூவாது மூள்பகைக்கும் சோராது
மன்னும் தமிழ்தான்இவ் வையத்தை யாள்கஎனக்
கன்னற் குரலெடுத்துக் கூவாய் கருங்குயிலே!

வராதெனச் சொன்னாரும் வருந்தத்தன் ஆட்சி
இராத இடமில்லை என்றநிலை நாட்டத்
திராவிட நாடு சிறைநீங்க என்று
குரலே முரசாகக் கூவாய் கருங்குயிலே!

உண்ணல் உடுத்தல் உயிர்த்தல்எனச் செந்தமிழை
நண்ணலும் ஆம்என்று நாட்டுக; வேறுமொழி
எண்ணல் நிறுவல் இலாதுகல்வி கட்டாயம்
பண்ணல் பயன்என்று கூவாய் கருங்குயிலே!

செந்தமிழைச் செந்தமிழ் நாட்டைச் சிறைமீட்க
நந்தமிழர் உள்ளத்தில், வையம் நடுநடுங்கும்
வெந்தணல் ஒன்று விரைந்து வளர்ந்ததென்று
குந்திக் குரலெடுத்துக் கூவாய் கருங்குயிலே!

இளைஞர் துடிக்கின்றார் தமிழின் நிலைஎண்ணிக்
கிளைஞர் அடைகின்ற கேடுபொறார் இங்கு
விளையாட வேண்டாமே ஆளவந்தார்! வாழ்வின்
களைநீக் குகஎன்று கூவாய் கருங்குயிலே!

பாலோடு நேர்தமிழும் பைந்தமிழ் மக்களும்
ஆலோடு வேர்என் றறிந்திருந்தும் ஆளவந்தார்
மேலோடு பேசி விடுவரேல் அவ்வாட்சி
சாலோடு நீர்என்று சாற்றாய் கருங்குயிலே!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt240

தமிழர் என்று சொல்வோம் - பகைவர்
தமை நடுங்க வைப்போம்
இமய வெற்பின் முடியிற் - கொடியை
ஏற வைத்த நாங்கள்.
தமிழர் என்று...

நமத டாஇந் நாடு - என்றும்
நாமிந் நாட்டின் வேந்தர்
சமம்இந் நாட்டு மக்கள் - என்றே
தாக்கடா வெற்றி முரசை!
தமிழர் என்று...

எந்த நாளும் தமிழர் - தம்கை
ஏந்தி வாழ்ந்த தில்லை.
இந்த நாளில் நம்ஆணை - செல்ல
ஏற்றடா தமிழர் கொடியை.
தமிழர் என்று...

வையம் கண்ட துண்டு - நாட்டு
மறவர் வாழ்வு தன்னைப்
பெய்யும் முகிலின் இடிபோல் - அடடே
பேரி கைமு ழக்கு.
தமிழர் என்று...

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt238

அறியச் செய்தோன் தமிழன்
அறிந்த அனைத்தும் வையத்தார்கள்
அறியச் செய்தோன்...

செறிந்து காணும் கலையின் பொருளும்
சிறந்த செயலும் அறமும் செய்து
நிறைந்த இன்ப வாழ்வைக் காண
நிகழ்த்தி, நிகழ்த்தி, நிகழ்த்தி முன்னாள்
அறியச் செய்தோன்...

காற்றுக் கனல்மண் புனலும் வானும்
தமிழன் கனவும் திறமும் கூட்டி
நாற்றிசை அழகை வாழ்வைச் செய்ய
நவின்று, நவின்று, நவின்று முன்னாள்
அறியச் செய்தோன்...

எங்கும் புலமை எங்கும் விடுதலை
எங்கும் புதுமை கண்டாய் நீதான்!
அங்குத் தமிழன் திறமை கண்டாய்!
அங்குத் தமிழன் தோளே கண்டாய்!
அறியச் செய்தோன்...

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt238

தமிழனுக்கு வீழ்ச்சியில்லை; தமிழன் சீர்த்தி
தாழ்வதில்லை! தமிழ்நாடு, தமிழ மக்கள்,
தமிழ்என்னும் பேருணர்ச்சி இந்நாள் போலே
தமிழ்நாட்டில் எந்நாளும் இருந்த தில்லை!
தமிழர்க்குத் தொண்டுசெய்யும் தமிழ னுக்குத்
தடைசெய்யும் நெடுங்குன்றம் தூளாய்ப் போகும்!
தமிழுக்குத் தொண்டுசெய்வோன் சாவ தில்லை
தமிழ்த்தொண்டன் பாரதிதான் செத்த துண்டோ?

தமிழகத்தில் மலைபோன்ற செல்வத் தாரும்,
தம்ஆணை பிறர்ஏற்க வாழு வாரும்,
தமிழர்க்கோ தமிழுக்கோ இடையூ றொன்று
தாம்செய்து வாழ்ந்தநாள் மலையே றிற்றே!
உமிழ்ந்தசிறு பருக்கையினால் உயிர்வாழ் வாரும்
உரமிழந்து சாக்காட்டை நண்ணு வாரும்
தமிழ்என்று தமிழரென்று சிறிது தொண்டு
தாம்புரிவார் அவர்பெருமை அரசர்க் கில்லை!

ஒருதமிழன் தமிழர்க்கே உயிர்வாழ் கின்றான்;
உயிர்வாழ்வோன் தமிழர்க்கே தனைஈ கின்றான்;
அரியபெருஞ் செயலையெலாம் தமிழ்நாட் டன்பின்
ஆழத்தில் காணுகின்றான்! தமிழன் இந்நாள்
பெரிதான திட்டத்தைத் தொடங்கி விட்டான்;
"பிறந்துளார் தமிழறிஞர் ஆதல் வேண்டும்;
வருந்தமிழர் வையத்தை ஆள வேண்டும்."
வாழ்கதமிழ்! இவ்வையம் வாழ்க நன்றே!

அந்நாளின் இலக்கியத்தை ஆய்தல் ஒன்றே
அரும்புலமை எனும்மடமை அகன்ற திங்கே!
இந்நாளிற் பழந்தமிழிற் புதுமை ஏற்றி
எழுத்தெழுத்துக் கினிப்பேற்றிக் கவிதை தோறும்
தென்நாட்டின் தேவைக்குச் சுடரை யேற்றிக்
காவியத்தில் சிறப்பேற்றி, இந்த நாடு
பொன்னான கலைப்பேழை என்று சொல்லும்
புகழேற்றி வருகின்றார் - அறிஞர் வாழ்க!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt237

தன்னினம் மாய்க்கும் தறுதலை யாட்சி
சற்றும் நிலைக்காது! மாளும்!
தன்னினம் மாய்க்கும்...

இந்நிலம் திராவிடர் ஆண்டார்
இறந்தநாள் வரலாறு காண்க.
தன்னினம் மாய்க்கும்...

மன்னும் இமயத்தில் தன்வெற்றி நாட்டிய
மன்னவன் திராவிட மன்னன் - எதிர்
வந்திட்ட ஆரிய ரைப்புறம் கண்டதோள்
திராவிட மன்னவன் தோளே!
சின்ன நினைப்புகள் தன்மான மற்ற
செயல்களை இனிவிட்டு வையோம்.
தன்னினம் மாய்க்கும்...

திராவிடப் பெருங்குடியில் வந்தவன் திராவிடத்
திருநாடு பெற்ற சேய்தான் - இத்
திராவிடர்க் கின்னல் செய்துதன் நன்மை
தேடினான் எனிலவன் நாய்தான்!
எரிகின்ற எங்களின் நெஞ்சமேல் ஆணை
இனிஎங்கள் ஆட்சிஇந் நாட்டில்.
தன்னினம் மாய்க்கும்...

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt236

ஒருவன் உள்ள வரையில் - குருதி
ஒரு சொட்டுள்ள வரையில்
ஒருவன் உள்ள வரையில்...

திராவிட நாட்டின் உரிமைக்குப் போரிடச்
சிறிதும் பின்னிடல் இல்லை திராவிடன்
ஒருவன் உள்ள வரையில்...

பெரிது மானம்! உயிர்பெரி தில்லை!
பெற்ற தாயைப் பிறராள விடுவோன்
திராவிடன் அல்லன்! திராவிடன் அல்லன்!
தீமை செய்து பார்க்கட்டும் ஆள்வோர்!
ஒருவன் உள்ள வரையில்...

அடித்தோன் அடிபட நேர்ந்ததிவ் வுலகில்
ஆள வந்தார் ஆட்படல் உண்டு
நெடிய திராவிடம் எங்களின் உடைமை
நிறைவுணர் வுண்டெங்கள் பட்டாள முண்டு!
ஒருவன் உள்ள வரையில்...

வஞ்ச நரிகள் புலிக்காட்டை ஆளுமோ?
வடக்கர் எம்மை ஆளவும் மாளுமோ?
அஞ்சும் வழக்கம் திராவிடர்க் கில்லை
ஆள்வலி தோள்வலிக் குப்பஞ்சம் இல்லை!
ஒருவன் உள்ள வரையில்...

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt235

உணரச் செய்தான் உன்னை - அவன்
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும்
உணரச் செய்தான்...

தணலைத் தொழுவோன் உயர்வென் கின்றான் - உனைத்
தணலில் தள்ள வழிபார்க் கின்றான்.
உணரச் செய்தான்...

முணுமுணு வென்றே மறைவிற் சென்றே
முட்டாள் முட்டாள் திராவிடன் என்றே
பணிமனை ஆட்சி பட்டம் யாவும்
பார்ப்பா னுக்கே என்றுபு கன்றே.
உணரச் செய்தான்...

நானிலம் ஆண்டான் திராவிடன் அந்நாள்
நான்மேல் என்றான் பார்ப்பான் இந்நாள்
ஏனவன் காலில் வீழ்தல் வேண்டும்?
எண்ணில் கோடி மக்கட் குறவே.
உணரச் செய்தான்...

அடியை நத்திப் பிழைத்த பார்ப்பான்
ஆளப் பிறந்த தாய்ச்சொல் கின்றான்
துடியாய்த் துடித்தான் உன்றன் ஆட்சி
தூளாய்ச் செய்துனை ஆளாக் கிடவே.
உணரச் செய்தான்...

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt234

கேரளம் என்று பிரிப்பதுவும் - நாம்
கேடுற ஆந்திரம் புய்ப்பதுவும்
சேரும் திராவிடர் சேரா தழித்திடச்
செய்திடும் சூழ்ச்சி அண்ணே - அதைக்
கொய்திட வேண்டும் அண்ணே.

கேரளம் என்னல் திராவிடமே - ஒரு
கேடற்ற ஆந்திரம் அவ்வாறே
கேரளம் ஆந்திரம் சேர்ந்த மொழிகள்
திராவிடம் ஆகும் அண்ணே - வேறு
இராதெனல் உண்மை அண்ணே.

செந்தமிழ் கேரளம் ஆந்திரமும் - அவை
சேர்ந்திடும் கன்னடம் என்பதுவும்
நந்தம் திராவிட நாடெனல் அல்லது
வந்தவர் நாடாமோ? - அவை
வடவர் நாடாமோ?

செந்தமிழ் கேரளம் ஆந்திரமும் - அவை
சேர்ந்திடும் கன்னட நன்மொழிகள்
அந்த மிகுந்த திராவிடம் அல்லது
ஆரியச் சொல்லாமோ? - அவர்
வேர்வந்த சொல்லாமோ?

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt233

கோட்டை நாற்காலி இன்றுண்டு - நாளை
கொண்டுபோய் விடுவான் திராவிடக்காளை.
கோட்டை நாற்காலி...

கேட்டை விளைத்துத் திராவிடர் கொள்கையைக்
கிள்ள நினைப்பது மடமையாம் செய்கை.
கோட்டை நாற்காலி...

காட்டை அழிப்பது கூடும் - அலை
கடலையும் தூர்ப்பது கூடும்
மேட்டை அகழ்வதும் கூடும் - விரி
விண்ணை அளப்பதும் கூடும்
ஏட்டையும் நூலையும் தடுப்பது கூடும் - உரிமை
எண்ணத்தை மாற்றுதல் எப்படிக் கூடும்?
கோட்டை நாற்காலி...

அடக்குமுறை செய்திடல் முடியும் - கொள்கை
அழிக்குமுறை எவ்வாறு முடியும்?
ஒடுக்குசிறை காட்டுதல் முடியும் - உணர்
வொடுக்குதல் எவ்வாறு முடியும்?
திடுக்கிடச் செய்திடும் உன்னை - இத்
திராவிடர் எழுச்சியை மாற்றவா முடியும்?
கோட்டை நாற்காலி...

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt232

மனவீட்டைத் திறப்பாய் - சாதி
மனக்கத வுடைத்து
மனவீட்டைத்...

இனமான திராவிடர் பண்பின்
எழில்காண உணர்வு விளக்கேற்று
மனவீட்டைத்...

புனைசுருட் டுக்குப்பை அன்றோ - பழம்
புராண வழக்கங்கள் யாவும்?
இனிமேலும் விட்டுவைக் காதே
எடுதுடைப் பத்தைஇப் போதே
தனிஉலகை ஆண்டனை முன்னாள்
தன்மானம் இழந்திடாதே இந்நாள்
மனவீட்டைத்...

வடநாடு தென்னாட்டை வீழ்த்தச் - செய்த
வஞ்சங்கள் சிறிதல்ல தம்பி
இடைநாளில் மட்டுமா? சென்ற
இரண்டாயிரத் தாண்டு பார்த்தார்
விடுவாயாடா தன்ன லத்தை - உன்
விடுதலை திராவிடர் விடுதலையி லுண்டு.
மனவீட்டைத்...

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt231

1
"இனப்பெயர் ஏன்"என்று பிறன்எனைக் கேட்டால்
மனத்தில் எனக்குச் சொல்லொணா மகிழ்ச்சியாம்.
"நான்தான் திராவிடன்" என்று நவில்கையில்
தேன்தான் நாவெலாம்! வான்தான் என்புகழ்!
"முன்னாள்" என்னும் பன்னெடுங் காலத்தின்
உச்சியில் "திராவிடன்" ஒளிசெய் கின்றான்.
அன்னோன் கால்வழி யாகிய தொடர்கயிற்று
மறுமுனை நான்!என் வாழ்வின் கால்வழி
யாகிய பொன்னிழை அளக்க ஒண்ணா
எதிர்கா லத்தின் கடைசியோ டியைந்தது.
சீர்த்தியால், அறத்தால், செழுமையால் வையப்
போர்த் திறத்தால் இயற்கை புனைந்த
ஓருயிர் நான்!என் உயிர்இனம் திராவிடம்
ஆரியன் அல்லேன் என்னும் போதில்
எத்தனை மகிழ்ச்சி! எத்தனை மகிழ்ச்சி!
விரிந்த வரலாற்றுப் பெருமரம் கொண்ட
"திராவிடன்" ஆலின் சிறிய வித்தே!
இந்நாள் வாழ்வுக் கினிதினி தாகிய
பொன்னேர் கருத்துக்கள் பொதிந்துள அதனில்!
உன்இனப் பெயர்தான் என்ன என்று
கேட்கக் கேட்க அதனால் எனக்கு
மீட்டும் மீட்டும் இன்பம் விளைவதாம்.

2
கடந்த காலப் படம் இது:
அடடே வடபெருங் குன்றமும் இல்லை!
அவ்விடம் நீர்ப்பரப்பு - ஆழ்கடல் உள்ளதே!
அப்பெருங் கடல்அலை, அழகிய விந்திய
வெற்பின் வடபுறத்து விளையா டினவே!
மேற்கு அரபிக்கடல் கிழக்கு வங்கக்கடல்
இல்லை! என்ன வியப்பு இது!
ஆபி ரிக்கமும், ஆத்திரே லியமும்
குமரி ஆறுபாய் குளிர்தென் மதுரையும்
இடையீ டின்றி நெடிது கிடந்த
"தொடித்தோள் வையம்" தோன்றக் கண்டேன்.
அங்குக் கண்டேன்:
தென்மது ரைத்தமி ழின்முதற் கழகம்!
அதன்பாற் கண்டேன்:
ஆன்ற முத்தமிழ் அறிஞர் பல்லோரை.
நான்ஓர் திராவிடன்; நனிமகிழ் வுடையேன்!

தொடித்தோள் வைய நெடிய வானில்,
உடுக்கள் போற்பல உயர்நா டுகளும்
அவற்றிடைத் திகழும் அழகு முழுமதித்
தென்மா மதுரையும் திகழ்வ தாகப் -
பெருஞா லத்தின் இருள்கெடத் தமிழறிவு -
திராவிடர் கொண்டு சேர்க்கின் றாரே.

3
என்னே! என்னே!
வடக்குக் கடல்நீர் தெற்கிற் பாய்ந்ததே!
தொடித்தோள் வையத் தூயநா டுகளில்
சிற்சில வற்றைச் சீறிவிழுங் கிற்றே!
அத்தென் பாங்கினர் அடைந்தனர் இங்கே
மீண்டும் தெற்கில் ஈண்டிற்று வெள்ளம்!
மற்றும் சிற்சில மண்ணகம் மறைந்தன.
என்னே கொடுமை!
அங்குளார் இங்கு வந்தனர் அலறியே.
`தெய்'என்று செப்பும் தீமுதல் ஐந்தில்
நீர்ஒன்று அடிக்கடி நெடுநிலம் விழுங்கலால்
சிதறி வந்த தென்புலத் தாரை
ஓம்பும்நாள் இடைவிடாது உளவா யிற்றே!

4
கடற்கீழ்க் கிடந்த வடபெரும் பனிமலை
மேற்றோன் றும்படி மிகுபெருங் கடல்நீர்
தென்பால் ஐயகோ சீறி வந்ததால்
தொடித்தோள் வையமே படிமிசை மறைந்ததே.
இன்று தென்கடலில் இலங்கை முதலால்
ஒன்று மில்லை.
மேற்கிடம் அரபிக் கடலும்
கிழக்கிடம் வங்கக் கடலும்
அன்றி வேறில்லை.
வடபெரும் பனிமலை மண்மேற் றோன்ற
அங்கிருந்து விந்தியம்ஆம் குன்ற மட்டும்
நிலப்பரப் பானது!
திகழ்விந் தியத்தின் தென்னாட்டுத் திராவிடர்
அங்கும் குடிபுகுந் தழகு செய்தனர்.
ஆரியர் கால்நடை அமைய வந்தவர்,
பனிவரை யடுத்த நனிபெரு நிலத்தில்
தங்கினர். தங்கித் தங்கள் வாழ்வையும்
மொழியையும் தமிழால் ஒழுங்கு செய்தனர்.
வடபால் இருந்துதென் குடபால் வந்த
ஆரியர் சிற்சிலர்
குடமலைச் சாரல் அடைந்தார் ஆதலின்
குடமலை தன்னைக் குடமுனி என்றனர்.
ஆரியர் இங்குச் சீரிய தமிழில்
அறிவு பெற்றனர் அதிகா ரத்தின்
விருப்பால் நாடொறும் விளைத்தனர் சூழ்ச்சிகள்.
இடைத்தமிழ்க் கழகம் கடைத்தமிழ்க் கழகம்
முதற்பெருங் கழகம் ஆகிய
எவற்றிலும் தம்பெயர் ஏற்றித் தம்மைத்
திராவிட இனத்திற் சேர்ந்தோர் போலக்
காட்ட முயன்றனர் அன்றோ!
திராவிடன் நான்! என் பெருமை
இராவிடம் இல்லை மகிழ்ச்சி பெரிதே!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt230

ஒருநாள்நம் பாரதியார் நண்ப ரோடும்
உட்கார்ந்து நாடகம்பார்த் திருந்தார். அங்கே
ஒருமன்னன் விஷமருந்தி மயக்கத் தாலே
உயிர்வாதை அடைகின்ற சமயம், அன்னோன்
இருந்தஇடந் தனிலிருந்தே எழுந்து லாவி
"என்றனுக்கோ ஒருவித மயக்கந் தானே
வருகுதையோ" எனும்பாட்டைப் பாட லானான்!
வாய்பதைத்துப் பாரதியார் கூவு கின்றார்:

"மயக்கம்வந்தால் படுத்துக்கொள் ளுவது தானே
வசங்கெட்ட மனிதனுக்குப் பாட்டா" என்றார்!
தயங்கிப்பின் சிரித்தார்கள் இருந்தோ ரெல்லாம்;
சரிதானே பாரதியார் சொன்ன வார்த்தை?
மயக்கம்வரும் மதுவருந்தி நடிக்க வந்தான்;
மயக்கவிஷம் உண்டதுபோல் நடிப்புக் காட்டும்
முயற்சியிலும் ஈடுபட்டான். தூங்கி விட்டால்
முடிவுநன்றா யிருந்திருக்கும் சிரம மும்போம்!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt229

(திருப்பள்ளி எழுச்சி என்ற பாடலைப் பாரதி ஏன் பாடினார்?)

நற்பெரு மார்கழி மாதமோர் காலை
நமதுநற் பாரதி யாரோடு நாங்கள்
பொற்பு மிகும்மடு நீரினில் ஆடிடப்
போகும் வழியினில் நண்பர் ஒருவரைப்
பெற்ற முதுவய தன்னையார் ஐயரே,
பீடு தரும்"திருப் பள்ளி யெழுச்சி"தான்
சொற்றிறத் தோடுநீர் பாடித் தருகெனத்
தூய்மைக் கவிஞரும் சென்றனர் ஒப்பியே.

நீல மணியிருட் காலை அமைதியில்
நெஞ்சு குளிரும் நெடுமரச் சாலையின்
கோல நடையிற் குதிக்கும் மகிழ்ச்சியால்
கோரி உடன்வரும் நண்பர்கள் மத்தியில்,
காலை மலரக் கவிதை மலர்ந்தது;
ககன முழுமையும் தேனலை பாய்ந்தது!
ஞானப் "பொழுது புலர்ந்த"தென் றார்ந்த
நல்ல தமிழ்க்கவி நாமடைந் தோமே!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt228

(செந்தமிழ் நாடென்னும் போதினிலே என்ற பாடலைப் பாரதி ஏன் பாடினார்?)

தமிழ்நாட்டைப் பற்றித் தமிழ்ப்பாக்கள் தந்தால்
அமைவான பாட்டுக் களிப்போம் பரிசென்று
சான்ற மதுரைத் தமிழ்ச்சங்கத் தார்உரைத்தார்
தேன்போற் கவிஒன்று செப்புகநீர் என்று
பலநண்பர் வந்து பாரதி யாரை
நலமாகக் கேட்டார்; அதற்கு நம்ஐயர்
என்கவிதான் நன்றா யிருந்திடினும் சங்கத்தார்
புன்கவிஎன் றேசொல்லிப் போட்டிடுவார்; போட்டால்தான்
சங்கத்தில் சர்க்கார் தயவிருக்கும்! ஆதலினால்,
உங்கட்கு வேண்டுமெனில் ஓதுகின்றேன் என்றுரைத்தார்.
"அந்தவிதம் ஆகட்டும்" என்றார்கள் நண்பரெலாம்.
"செந்தமிழ் நாடென்னும் போதினி லேயின்பத்
தேன்வந்து பாயுது காதினிலே" என்
றழகுத் தமிழ்நாட்டை அப்படியே நெஞ்சால்
எழுதி முடித்தார்! இசையோடு பாடினார்!
காதினிக்கும் நல்ல கருத்தினிக்கும் அஃதிந்நாள்
மேதினியிற் சோதி விளக்கு!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt227

பாரதியார் உலககவி! அகத்தில் அன்பும்
பரந்துயர்ந்த அறிவினிலே ஒளியும் வாய்ந்தோர்!
ஓரூருக் கொருநாட்டுக் குரிய தான
ஒட்டைச்சாண் நினைப்புடையர் அல்லர். மற்றும்
வீரர்அவர்! மக்களிலே மேல்கீழ் என்று
விள்ளுவதைக் கிள்ளிவிட வேண்டும் என்பார்!
சீருயர்ந்த கவிஞரிடம் எதிர்பார்க் கின்ற
செம்மைநலம் எல்லாமும் அவர்பாற் கண்டோம்.

அகத்திலுறும் எண்ணங்கள், உலகின் இன்னல்
அறுப்பவைகள்; புதியவைகள்; அவற்றை யெல்லாம்
திகழ்பார்க்குப் பாரதியார் எடுத்துச் சொல்வார்
தௌிவாக, அழகாக, உண்மையாக!
முகத்தினிலே களையிழந்த மக்கள் தம்மை
முனை முகத்தும் சலியாத வீரராகப்
புகுத்துமொழிப் பேச்செல்லாம் பொன்னி யாற்றுப்
புனல்போலத் தொடர்வதுண்டாம் அன்னார் பாட்டில்.

பழையநடை, பழங்கவிதை, பழந் தமிழ்நூல்,
பார்த்தெழுதிப் பாரதியார் உயர்ந்தா ரில்லை;
பொழிந்திடுசெவ் வியஉள்ளம் கவிதை யுள்ளம்
பூண்டிருந்த பாரதியா ராலே இந்நாள்
அழுந்தியிருந் திட்டதமிழ் எழுந்த தென்றே
ஆணையிட்டுச் சொல்லிடுவோம் அன்னை மீதில்.
அழகொளிசேர் பாரதியார் கவிதை தன்னை
அறிந்திலதே புவிஎன்றால் புவிமேற் குற்றம்!

கிராமியம்நன் னாகரிகம் பாடி வைத்தார்
கீர்த்தியுறத் தேசியம் சித்த ரித்தார்
சராசரம்சேர் லௌகிகத்தை நன்றாய்ச் சொன்னார்.
தங்குதடை யற்றஉள்ளம் சமத்வ உள்ளம்;
இராததென ஒன்றில்லாப் பெரிய உள்ளம்!
இன்புள்ளம் அன்புள்ளம் அன்னார் உள்ளம்!
தராதலத்துப் பாஷைகளில் அண்ணல் தந்த
தமிழ்ப் பாட்டை மொழிபெயர்த்தால் தெரியும் சேதி!

ஞானரதம் போலொருநூல் எழுது தற்கு
நானிலத்தில் ஆளில்லை; கண்ணன் பாட்டுப்
போல்நவிலக் கற்பனைக்குப் போவ தெங்கே?
புதியநெறிப் பாஞ்சாலி சபதம் போலே
தேனினிப்பில் தருபவர்யார்? மற்றும் இந்நாள்
ஜெயபே ரிகைகொட் டடாஎன் றோதிக்
கூனர்களும் குவலயத்தை அளாவும் வண்ணம்
கொட்டிவைத்த கவிதைதிசை எட்டும் காணோம்!

"பார்ப்பானை ஐயரென்ற கால மும்போச்
சே"யென்ற பாரதியார் பெற்ற கீர்த்தி
போய்ப்பாழும் கிணற்றினிலே விழாதா என்று
பொழுதெல்லாம் தவங்கிடக்கும் கூட்டத் தார்கள்
வேர்ப்பார்கள்; பாரதியார் வேம்பென் பார்கள்;
வீணாக உலககவி அன்றென் பார்கள்.
ஊர்ப்புறத்தில் தமக்கான ஒருவ னைப்போய்
உயர்கவிஞன் என்பார்கள் வஞ்ச கர்கள்.

"சாதிகளே இல்லையடி பாப்பா" என்றார்
"தாழ்ச்சிஉயர்ச் சிகள்சொல்லல் பாவம்" என்றார்.
சோதிக்கின் "சூத்திரர்க்கோர் நீதி தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறோர் நீதி"
ஓதியதைப் பாரதியார் வெறுத்தார் நாட்டில்
ஒடுக்கப்பட் டார்நிலைக்கு வருந்தி நின்றார்.
பாதிக்கும் படி"பழமை பழமை என்பீர்
பழமைஇருந் திட்டநிலை அறியீர்" என்றார்.

தேசத்தார் நல்லுணர்வு பெரும் பொருட்டுச்
சேரியிலே நாள்முழுதும் தங்கி யுண்டார்.
காசுதந்து கடைத்தெருவில் துலுக்கர் விற்கும்
சிற்றுணவு வாங்கி,அதைக் கனிவாய் உண்டார்.
பேசிவந்த வசைபொறுத்தார். நாட்டிற் பல்லோர்
பிறப்பினிலே தாழ்வுயர்வு பேசு கின்ற
மோசத்தை நடக்கையினால், எழுத்தால், பேச்சால்
முரசறைந்தார்; இங்கிவற்றால் வறுமை ஏற்றார்.

வையத்து மாகவிஞர் மறைந்து போனார்;
வைதிகர்க்குப் பாரதியார் பகைவ ரேனும்
செய்வதென்ன? மேலுக்குப் புகழ்ந்தே வந்தார்;
சில நாட்கள் போகட்டும் எனஇ ருந்தார்.
உய்யும்வழி கெடாதிருக்க மெதுவாய் இந்நாள்
உலககவி அல்லஅவர் எனத் தொடங்கி
ஐயர்கவி தைக்கிழுக்கும் கற்பிக் கின்றார்
அழகாக முடிச்சவிழ்த்தால் விடுவார் உண்டோ?

[ இது அந்நாளில் ஆனந்த விகடனில் "ரா.கி" (கல்கி)யால் பாரதி உலககவி அல்ல
என்றும், அவர் பாடலில் வெறுக்கத் தக்கன உள்ளன என்றும், எழுதியதற்கு மறுப்பாக எழுதப்பட்டது.]

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt226

சாதி ஒழிந்திடல் ஒன்று - நல்ல
தமிழ் வளர்த்தல்மற் றொன்று
பாதியை நாடு மறந்தால் - மற்றப்
பாதி துலங்குவ தில்லை.
சாதி களைந்திட்ட ஏரி - நல்ல
தண்டமிழ் நீரினை ஏற்கும்
சாதிப் பிணிப்பற்ற தோளே - நல்ல
தண்டமிழ் வாளினைத் தூக்கும்!

என்றுரைப் பார்என் னிடத்தில் - அந்த
இன்ப உரைகளென் காதில்
இன்றும் மறைந்திட வில்லை - நான்
இன்றும் இருப்பத னாலே!
பன்னும்நம் பாரதி யாரின் - நல்ல
பச்சைஅன் புள்ளத்தி னின்று
நன்று பிறந்தஇப் பேச்சு - நம்
நற்றமிழர்க் கெழில் மூச்சு!

மேலவர் கீழவர் இல்லை - இதை
மேலுக்குச் சொல்லிட வில்லை
நாலு தெருக்களின் கூட்டில் - மக்கள்
நாலா யிரத்தவர் காணத்
தோலினில் தாழ்ந்தவர் என்று - சொல்லும்
தோழர் சமைத்ததை உண்பார்.
மேலும்அப் பாரதி சொல்வார் - "சாதி
வேரைப் பொசுக்குங்கள் என்றே.

செந்தமிழ் நாட்டினிற் பற்றும் - அதன்
சீருக்கு நல்லதோர் தொண்டும்
நிந்தை இலாதவை அன்றோ! - எந்த
நேரமும் பாரதி நெஞ்சம்
கந்தையை எண்ணுவ தில்லை - கையிற்
காசை நினைப்பதும் இல்லை.
செந்தமிழ் வாழிய! வாழி - நல்ல
செந்தமிழ் நாடென்று வாழ்ந்தார்.

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt225

பொழுது விடியப் புதுவையி லோர்வீட்டில்
விழிமலர்ந்த பாரதியார் காலை வினைமுடித்து
மாடிக்குப் போவார்; கடிதங்கள் வந்திருக்கும்.
வாடிக்கை யாகவரும் அன்பரெல்லாம் வந்திருப்பார்.
சென்னைத் தினசரியின் சேதி சிலபார்ப்பார்.
முன்னால் அனுப்பிய கட்டுரையும் பாட்டும்
சரியாய்ப் படித்ததுண்டா இல்லையா என்று
வரிமேல் விரல்வைத்து வாசிப்பார் ஏட்டை.

அதன்மேல் அடுக்கடுக்காய் ஆரவா ரப்பண்!
நதிப்பெருக்கைப் போற்கவிதை நற்பெருக்கின் இன்பஒலி
கிண்டல்கள்! ஓயாச் சிரிப்பைக் கிளறுகின்ற
துண்டு துணுக்குரைகள்! வீரச் சுடர்க்கதைகள்!
என்னென்ன பாட்டுக்கள்! என்னென்ன பேச்சுக்கள்!
பன்னத் தகுவதுண்டோ நாங்கள்பெரும் பாக்கியத்தை?
வாய்திறப்பார் எங்கள் மாக்கவிஞர் நாங்களெல்லாம்
போய்அச்சப் பேயைப் புதைத்துத் திரும்பிடுவோம்.
தாம்பூலம் தின்பார், தமிழ்ஒன்று சிந்திடுவார்
காம்பிற் கனிச்சாறாய்க் காதலின் சாற்றைப்
பொழிகின்ற தன்மையால் எம்மைப் புதுக்கி
அழிகின்ற நெஞ்சத்தை அன்பில் நனைத்திடுவார்.
மாடியின்மேல் ஓர்நாள் மணிஎட் டரைஇருக்கும்
கூடிக் கவிச்சுவையைக் கொள்ளையிடக் காத்திருந்தோம்.
பாரதியார் வந்த கடிதம் படித்திருந்தார்.
சீரதிகம் கொண்டதொரு சென்னைத் தினசரியின்
ஆசிரியர் போட்ட கடிதம் அதுவாகும்.
வாசித்தார் ஐயர், மலர்முகத்தில் வாட்டமுற்றார்.
"என்னை வசனமட்டும் நித்தம் எழுதென்று
சென்னைத் தினசரியின் ஆசிரியர் செப்புகின்றார்.
பாட்டெழுத வேண்டாமாம்; பார்த்தீரா அன்னவரின்
பாட்டின் பயனறியாப் பான்மையினை" என்றுரைத்தார்.

பாரதியார் உள்ளம் பதைபதைத்துச் `சோர்வெ'ன்னும்
காரிருளில் கால்வைத்தார்; ஊக்கத்தால் மீண்டுவிட்டார்.
"பாட்டின் பயனறிய மாட்டாரோ நம்தமிழர்?
பாட்டின் சுவையறியும் பாக்கியந்தான் என்றடைவார்?"
என்று மொழிந்தார், இரங்கினார், சிந்தித்தார்
"நன்று மிகநன்று, நான்சலிப்ப தில்லை"என்றார்.

நாட்கள் சிலசெல்ல நம்மருமை நாவலரின்
பாட்டின் சுவையறிவோர் பற்பலபே ராகிவிட்டார்.
ஆங்கிலம் வல்ல கசின்ஸ்என்னும் ஆங்கிலவர்
"நீங்கள் எழுதி நிரப்பும் சுவைக்கவியை
ஆங்கிலத்தில் ஆக்கி அகிலஅரங் கேற்றுகின்றேன்
பாங்காய் எனக்குநல்ல பாட்டெழுதித் தாருங்கள்"
என்று வரைந்த கடிதத்தை எங்களிடம்
அன்றளித்தார். எம்மை அபிப்பிரா யம்கேட்டார்.
"வேண்டும் எழுதத்தான் வேண்டும்"என்றோம். பாரதியார்,
"வேண்டும்அடி எப்போதும் விடுதலை" என்
றாரம்பஞ் செய்தார்; அரைநொடியில் பாடிவிட்டார்.
ஈரிரண்டு நாளில் இனிமை குறையாமல்
ஆங்கிலத்தில் அந்தக் கவிதான் வௌியாகித்
தீங்கற்ற சென்னைத் தினசரியின் ஆசானின்
கண்ணைக் கவர்ந்து கருத்தில் தமிழ்விளைத்தே
எண்ணூறாண் டாய்க்கவிஞர் தோன்றவில்லை இங்கென்ற
வீ.வீ.எஸ்.ஐயர் விருப்பத்தைப் பூர்த்தி செய்து
பாவலராம் பாரதிக்கும் ஊக்கத்தைப் பாய்ச்சியதே!
ஆங்கிலவர் பாரதியின் ஆர்ந்த கவித்தேனை
வாங்கியுண்ணக் கண்டபின்னர் வாயூறிச் சென்னைத்
தினசரியின் ஆசிரியர் "தேவையினித் தேவை,
இனியகவி நீங்கள் எழுதுங்கள்" என்றுரைத்தார்;
தேவையில்லை என்றுமுன் செப்பிட்ட அம்மனிதர்
தேவையுண்டு! தேவையுண்டு! தேன்கவிகள் என்றுரைத்தார்!
"தாயாம் தமிழில் தரும்கவியின் நற்பயனைச்
சேயாம் தமிழன் தெரிந்துகொள்ள வில்லை
அயலார் சுவைகண் டறிவித்தார், பின்னர்
பயன்தெரிந்தார் நம்தமிழர்" என்றுரைத்தார் பாரதியார்.
நல்ல கவியினிமை நம்தமிழர் நாடுநாள்
வெல்ல வருந்திரு நாள்.

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt224

தூய்தமிழ் நாட்டுத் தோழியீர், தோழரே!
வாயார்ந் துங்கட்கு வணக்கம் சொன்னேன்!
வண்மைசேர் திருச்சி வானொலி நிலையம்
இந்நாள் ஐந்தாம் எழிற்கவி யரங்கிற்
கென்னைத் தலைமை ஏற்கும் வண்ணம்
செய்தமைக்கு நன்றி செலுத்து கின்றேன்.

உய்வகை காட்டும் உயர்தமி ழுக்குப்
புதுநெறி காட்டிய புலவன் பாரதி
நன்னாள் விழாவினை நானிலம் பரப்பும்
வானொலி நிலையம் வாழ்கென வாழ்த்தினேன்!
இக்கவி யரங்கு மிக்கு யர்ந்ததாம்.
எக்கா ரணத்தால்? என்பீ ராயின்,
ஊர்ஒன் றாகி உணர்வொன் றாகி
நேர்ஒன்று பட்டு நெடுநாள் பழகிய
இருவரிற் சுப்பிர மணிய னென்று
சொற்பா ரதியை சோம சுந்தர
நற்பா ரதிபுகழ்ந்து சொற்பெருக் காற்றுவார்;
அன்றியும் பாரதி அன்பர் பல்லோர்
இன்றவன் கவிதை எழிலினைக் கூறுவார்.

இங்குத் தலைமை ஏற்ற நானும்
திங்களைக் கண்ணிலான் சிறப்புறுத் தல்போல்
பாரதிப் புலவனைப் பற்றிச் சிற்சில
கூறுவேன்; முடிவுரை கூறுவேன் பின்பே.
கொலைமலிந்த நாளில் கொல்லா நோன்பு
நிலைபெற வேண்டி நெடுந்தவம் புரிந்தநம்
தாயகம் சமண்மதம் தனைப்பெற்ற தன்றோ?
முத்தியோ சிலரின் சொத்தென இருக்கையில்
இத்தமிழ் நாடுதன் இருந்தவப் பயனாய்
இராமா னுசனை ஈன்ற தன்றோ?
இந்நாடு வடகலை ஏன்என எண்ணித்
தென்கலை ஈன்று திகழ்ந்த தன்றோ?
துருக்கர் கிருத்துவர் சூழ்இந் துக்களென்
றிருப்பவர் தமிழரே என்ப துணராது
சச்சரவு பட்ட தண்டமிழ் நாடு,
மெச்சவும் காட்டுவோன் வேண்டுமென் றெண்ணி
இராம லிங்கனை ஈன்ற தன்றோ?
மக்கள் தொகுதி எக்குறை யாலே
மிக்க துன்பம் மேவு கின்றதோ
அக்குறை தீர்க்கும் ஆற்றல்வாய்ந் தோனைச்
சிக்கென ஈன்று சீர்பெறல் இயற்கையாம்.
ஜாரின் கொடுமை தாங்கா உருசியம்
ஏருற லெனினை ஈன்றே தீரும்!
செல்வர் சில்லோர் நல்வாழ் வுக்கே
எல்லா மக்களும் என்ற பிரான்சில்
குடிகள் குடிகட் கெனக்கவி குவிக்க
விக்டர் யூகோ மேவினான் அன்றோ?
தமிழரின் உயிர்நிகர் தமிழ்நிலை தாழ்ந்ததால்
இமைதிற வாமல் இருந்த நிலையில்
தமிழகம், தமிழுக்குத் தகும்உயர் வளிக்கும்
தலைவனை எண்ணித் தவங் கிடக்கையில்
இலகு பாரதிப் புலவன் தோன்றினான்.
பைந்த மிழ்த்தேர்ப் பாகன் அவனொரு
செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை!
குவிக்கும் கவிதைக் குயில்!இந் நாட்டினைக்
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு
நீடு துயில்நீக்கப் பாடி வந்தநிலா
காடு கமழும் கற்பூரச் சொற்கோ!
கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்
திறம்பாட வந்த மறவன். புதிய
அறம்பாட வந்த அறிஞன். நாட்டிற்
படரும் சாதிப் படைக்கு மருந்து
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்
அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்
என்னென்று சொல்வேன்! என்னென்று சொல்வேன்!
தமிழால், பாரதி தகுதி பெற்றதும்
தமிழ், பாரதியால் தகுதி பெற்றதும்
எவ்வா றென்பதை எடுத்துரைக் கின்றேன்:
கடவுளைக் குறிப்பதே கவிதை என்றும்
பிறபொருள் குறித்துப் பேசேல் என்றும்
கடவுைளைக் குறிக்குமக் கவிதையும் பொருள்விளங்
கிடஎழு துவதும் ஏற்கா தென்றும்
பொய்ம்மதம் பிறிதெனப் புழுகுவீர் என்றும்
கொந்தும் தன்சாதிக் குண்டு சட்டிதான்
இந்த உலகமென் றெழுதுக என்றும்
பழமை அனைத்தையும் பற்றுக என்றும்
புதுமை அனைத்தையும் புதைப்பீர் என்றும்
கொள்ளுமிவ் வுலகம் கூத்தாடி மீசைபோல்
எள்ளத் தனைநிலை இலாத தென்றும்
எழிலுறு பெண்கள்பால் இன்புறும் போதும்
அழிவுபெண் ணால்என் றறைக என்றும்
கலம்பகம் பார்த்தொரு கலம்ப கத்தையும்
அந்தாதி பார்த்தோர் அந்தாதி தனையும்
மாலை பார்த்தொரு மாலை தன்னையும்
காவியம் பார்த்தொரு காவியந் தன்னையும்
வரைந்து சாற்றுக்கவி திரிந்து பெற்று
விரைந்து தன்பேரை மேலே எழுதி
இருநூறு சுவடி அருமையாய் அச்சிட்
டொருநூற் றாண்டில் ஒன்றிரண்டு பரப்பி
வருவதே புலமை வழக்கா றென்றும்
இன்றைய தேவையை எழுதேல் என்றும்
முன்னால் நிலையிலே முட்டுக என்றும்
வழக்கா றொழிந்ததை வைத்தெழு தித்தான்
பிழைக்கும் நிலைமை பெறலாம் என்றும்
புதுச்சொல் புதுநடை போற்றேல் என்றும்
நந்தமிழ்ப் புலவர் நவின்றனர் நாளும்!
அந்தப் படியே அவரும் ஒழுகினர்.
தமிழனை உன்மொழி சாற்றெனக் கேட்டால்
தமிழ்மொழி என்று சாற்றவும் அறியா
இருள்நிலை யடைந்திருந் திட்டதின் பத்தமிழ்!
செய்யுள் ஏட்டைத் திரும்பியும் பார்த்தல்
செய்யா நிலையைச் சேர்ந்தது தீந்தமிழ்.
விழுந்தார் விழித்தே எழுந்தார் எனஅவன்
மொழிந்த பாங்கு மொழியக் கேளீர்!
"வில்லினை எடடா - கையில்
வில்லினை எடடா - அந்தப்
புல்லியர் கூட்டத்தைப் பூழ்திசெய் திடடா"
என்று கூறி, இருக்கும் பகையைப்
பகைத் தெழும்படி பகர லானான்.
"பாருக்குள்ளே நல்லநாடு - இந்தப் பாரதநாடு"
என்பது போன்ற எழிலும் உணர்வும்
இந்நாட்டில் அன்பும் ஏற்றப் பாடினான்!
இந்நாடு மிகவும் தொன்மை யானது
என்பதைப் பாரதி இயம்புதல் கேட்பீர்:
"தொன்று நிகழ்ந்த தனைத்து முணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும் - இவள் என்று பிறந்தவள்
என்றுணராத இயல்பினளா மெங்கள் தாய்"
மக்கள் கணக்கும் வழங்கும் மொழியும்
மிக்குள பண்பையும் விளக்கு கின்ற
கற்பனைத் திறத்தைக் காணுவீர்:
"முப்பது கோடி முகமுடையாள் உயிர்
மொய்ம்புற வொன்றுடையாள் - அவள்
செப்பும் மொழிபதி னெட்டுடையாள் - எனிற்
சிந்தனை யொன்றுடை யாள்"
இந்நாட் டின்தெற் கெல்லை இயம்புவான்:
"நீலத்திரை கடல் ஓரத்திலே - நின்று
நித்தம் தவம்செய் குமரி யெல்லை"
கற்பனைக் கிலக்கியம் காட்டி விட்டான்!
சுதந்திர ஆர்வம் முதிர்ந்திடு மாறு
மக்க ளுக்கவன் வழங்குதல் கேட்பீர்:
"இதந்தரு மனையி னீங்கி இடர்மிகு சிறைப் பட்டாலும்
பதம்திரு இரண்டுமாறிப் பழிமிகுத் திழிவுற்றாலும்
விதம்தரு கோடிஇன்னல் விளைத்தெனை யழித்திட்டாலும்
சுதந்திர தேவிநின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே."
பாரதி பெரிய உள்ளம் பார்த்திடு வீர்கள்:
"எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம்
எல்லோரும் சமமென்ப துறுதி யாச்சு"
"விடுதலை! விடுதலை! விடுதலை!"
"மனிதர் யாரும் ஒருநிகர்
சமானமாக வாழ்வமே" என்றறைந்தார் அன்றோ?
பன்னீ ராயிரம் பாடிய கம்பனும்
இப்பொது மக்கள்பால் இன்தமிழ் உணர்வை
எழுப்பிய துண்டோ? இல்லவே இல்லை.
செந்தமிழ் நாட்டைத் தேனாக்கிக் காட்டுவான்:
"செந்தமிழ் நாடென்னும் போதினிலே - இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே" - என்றான்.
சினம்பொங்கும் ஆண்டவன் செவ்விழி தன்னை
முனம்எங்கும் இல்லாத மொழியா லுரைத்தான்:
"வில்லினை யொத்த புருவம் வளைத்தனை வேலவா - அங்கு
வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி யானது
வேலவா" என்று கோலம் புதுக்கினான்.
பெண்உதட் டையும் கண்ணையும் அழகுறச்
சொல்லி யுள்ளான் சொல்லு கின்றேன்:
"அமுதூற்றினை யொத்த இதழ்களும் - நில
வூறித் ததும்பும் விழிகளும்"
இந்த நாளில் இந்நாட்டு மக்கட்கு
வேண்டும் பண்பு வேண்டும் செயல்களைக்
கொஞ்சமும் பாரதி அஞ்சாது கூறினான்.
"முனைமுகத்து நில்லேல்" முதியவள் சொல்இது.
"முனையிலே முகத்துநில்" - பாரதி முழக்கிது!
"மீதூண் விரும்பேல்" மாதுரைத் தாள்இது.
"ஊண்மிக விரும்பு" - என உரைத்தான் பாரதி.
மேலும் கேளீர் - "கோல்கைக் கொண்டுவாழ்"
"குன்றென நிமிர்ந்துநில்" "நன்று கருது"
"நினைப்பது முடியும்", நெற்றி சுருக்கிடேல்"
எழுத்தில் சிங்க ஏற்றின் குரலைப்
பாய்ச்சு கின்றான் பாரதிக் கவிஞன்!
அன்னோன் கவிதையின் அழகையும் தௌிவையும்
சொன்னால் மக்கள் சுவைக்கும் நிலையையும்
இங்கு முழுதும் எடுத்துக் கூற
இயலா தென்னுரை இதனோடு நிற்கவே.

( அனைத் திந்திய வானொலித் திருச்சி நிலையத்தில் 5-வது கவியரங்கில்
தலைமையுரையும், முடிவுரையுமாகக் கூறப்பட்டது. 1946 )

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt224

காதல் துரத்தக் கடிதுவந்த வேல்முருகன்
ஏதும் உரையாமல் இருவிரலை வீட்டுத்
தெருக்கதவில் ஊன்றினான். "திறந்தேன்" என்றோர்சொல்
வரக்கேட்டான். ஆஆ! மரக்கதவும் பேசுமோ?
"என்ன புதுமை" எனஏங்க, மறுநொடியில்
சின்னக் கதவு திறந்த ஒலியோடு
தன்னருமைக் காதலியின் தாவுமலர்க் கைநுகர்ந்தான்!
புன்முறுவல் கண்டுள்ளம் பூரித்தான். "என்னேடி
தட்டுமுன்பு தாழ்திறந்து விட்டாயே" என்றுரைத்தான்.
விட்டுப் பிரியாதார் மேவும்ஒரு பெண்நான்
பிரிந்தார் வரும்வரைக்கும் பேதை, தெருவில்
கருமரத்தாற் செய்த கதவு.

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt221

(தலைவன், தலைவியை மணம் புரியாமல் நெடுநாள் பழகி, ஒருநாள் வேலிப்புறத்திலே
வந்து நிற்கிறான்.அவன் காதில் விழும்படி, தலைவியை நோக்கிக் கூறுகிறாள் தோழி:
"தலைவன் நட்பினால் உன்தோள் வாடினாலும் உன் அன்பை அது குறைத்துவிடவில்லை"
என்று.)

மிளகு நீள்கொடி வளர்மலைப் பாங்கில்
இரவில் முழங்கிக் கருமுகில் பொழிய,
ஆண்குரங்கு தாவிய சேண்கிளைப் பலாப்பழம்
அருவியால் ஊர்த்துறை வரும்எழிற் குன்ற-
நாடனது நட்புநின் தோளை
வாடச் செய்யினும் அன்பைமாய்க் காதே!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt221

(தலைவனை நினைத்துத் தான் துயிலாதிருத்தலைத் தோழிக்குத் தலைவி கூறியது.)

ஆர்ப்புறும் இடிசேர் கார்ப்பரு வத்தைக்
கொல்லையின் மணந்த முல்லைக் கொடியின்
சிரிப்பென அரும்பு விரிக்கும் நாடனை
எண்ணித் துயில்நீங் கியஎன்
கண்கள் இரண்டையும் காண்பாய் தோழியே!

(குறுந்தொகை 186--ஆம் பாடல். ஒக்கூர் மாசாத்தி அருளியது.)

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt220

(வேந்தனிட்ட வேலையை மேற்கொண்டு செல்லும் தலவன், தன் தேர்ப்பாகனை
நோக்கி, `இன்று விரைந்து சென்று அரசன் இட்ட வேலையை முடித்து நாளைக்கே
தலைவியின் இல்லத்தை அடைய வேண்டும்; தேரை விரைவாக நடத்து' என்று கூறுவது.)

நாமின்று சென்று நாளையே வருவோம்;
வீழும் அருவிபோல் விரைந்துதேர் நடத்துவாய்;
இளம்பிறை போல்அதன் விளங்கொளி உருளை
விண்வீழ் கொள்ளிபோல் விளைநிலம் படியக்
காற்றைப் போலக் கடிது மீள்வோம்;
வளயல் நிறைந்த கையுடை
இளையளை மாண்புற யான்மணந் துவக்கவே.

(குறுந்தொகை 189--ஆம் பாடல். மதுரை ஈழத்துப் பூதன்றேவன் அருளியது.)

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt219

மாதிவள் இலையெனில் வாழ்தல் இலையெனும்
காதல் நெஞ்சக் காந்தமும், நாணத்
திரைக்குட் கிடந்து துடிக்கும் சேயிழை
நெஞ்ச இரும்பும் நெருங்கும்! மணம்பெறும்!

புணர்ச்சி இன்பம் கருதாப் பூவையின்
துணைப்பாடு கருதும் தூயோன், திருமணச்
சட்டத் தாற்பெறத் தக்க தீநிலை
இருப்பினும் அதனை மேற்கொளல் இல்லை.
அஃது திருமணம் அல்ல ஆதலால்!

என்தின வறிந்து தன்செங் காந்தள்
அரும்பு விரற்கிளி அலகு நகத்தால்
நன்று சொறிவாள் என்று கருதி
மணச்சட் டத்தால் மடக்க நினைப்பது
திருந்திவரும் நாட்டுக்குத் தீயஎடுத் துக்காட்டு!
மங்கையர் உலகின் மதிப்புக்குச் சாவுமணி!

மலம் மூடத்தான் மலர்பறித் தேன்எனில்
குளிர்மலர்ச் சோலை கோவென் றழாதா?

திருமண மின்றிச் செத்தால், அந்தச்
சில்லிட்ட பிணத்துக்குத் திருமணம் செய்ய
மெல்லிய வாழைக் கன்றைவெட் டுவது
புரோகிதன் புரட்டுநூல்! அதனைத்
திராவிடர் உள்ளம் தீண்டவும் நாணுமே!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt218

அத்தைமகன் முத்தனும் ஆளிமகள் தத்தையும்
ஒத்த உளத்தால் ஒருமித்து - நித்தநித்தம்
பேசிப் பிரிவார் பிறரறியா மற்கடி
தாசி எழுதியே தாமகிழ்வார் - நேசம்
வளர்ந்து வருகையிலே, மஞ்சினி தன்மைந்தன்
குளிர்ந்த பெருமாளைக் கூட்டி - உளங்கனிந்தே
ஆளியிடம் வந்தான்; அமர்ந்தான்; பின்பெண்கேட்டான்.
ஆளி சிரித்தே அவனிடத்தில் - "கேளண்ணா
தத்தை விதவைப்பெண் சம்மதமா?" என்றுரைத்தான்.
"மெத்தவிசேட" மெனச்சொல்லி மஞ்சினிதான் - ஒத்துரைத்தான்.
"சாதியிலே நான்மட்டம் சம்மதமா?" என்றே
ஓதினான் ஆளி. "ஒருபோதும் - காதில்நான்
மட்டம் உயர்வென்ற வார்த்தையையும் ஏற்பதில்லை
இட்டந்தான்" என்றுரைத்தான் மஞ்சினி. - "கிட்டியே
ஊர்ப்பானை தன்னை உருட்டி உயிர்வாழும்
பார்ப்பானை நீக்கிப் பழிகாரர் - தீர்ப்பான
நையும் சடங்ககற்றி நற்றமிழர் ஒப்பும்மணம்
செய்வாயா?" என்றாளி செப்பினான். - "ஐயோஎன்
உத்தேசம் பார்ப்பான் உதவா தெனலன்றோ?
செத்தாலும் பார்ப்பானைத் தேடேனே! - சத்தியமாய்ச்
சொன்னேன்" எனஉரைத்தான் மஞ்சினி. சொன்னதும்
பின்ஆளி சம்மதித்தான் பெண்கொடுக்க! - அந்நேரம்
வந்த தொருதந்தி! வாசித்தான் ஆளிஅதை:
கந்தவேள் பாங்கில்நீர் கட்டிய - சொந்தப்
பணம்இல்லை, பாங்கு முறிந்தது, யாதும்
குணமில்லை என்றிருத்தல் கண்டு - திணறியே
"வீடும் எனக்கில்லை வெண்ணிலையும் ஒன்றுமில்லை
ஆடுவிற்றால் ரூபாய்ஓர் ஐந்நூரு - கூடிவரும்
மஞ்சினி யண்ணா மணத்தை நடத்துவோம்
அஞ்சாறு தேதிக் கதிகமாய் - மிஞ்சாமல்
நாளமைப்போம்" என்றந்த ஆளி நவிலவே,
தோளலுத்த மஞ்சினி "ஆளியண்ணா - கேளிதை
இந்த வருடத்தில் நல்லநாள் ஏதுமில்லை
சிந்திப்போம் பின்"என்று செப்பினான். - "எந்த
வருடத்தி லே?எந்த வாரத்தில்? எந்தத்
தெருவில்? திருமணம் என்ற - ஒருசொல்
நிச்சயமாய்ச் சொல்லண்ணா நீ"என்றான் ஆளிதான்.
பச்சோந்தி மஞ்சினி பாடலுற்றான்: - "பச்சையாய்த்
தாலி யறுத்தவளைத் தாலிகட்டி னால்ஊரார்
கேலிபண்ண மாட்டாரா கேளண்ணா? - மேலும்
சாதியிலே மட்டமென்று சாற்றுகின்றாய். அம்மட்டோ
வேதியனை நீக்கிடவும் வேண்டுமென்றாய் - ஏது
முடியாதே" என்று முடித்தெழுந்து சென்றான்.
படியேறி நின்றமெய்க் காதல் - துடிதுடிக்கும்
முத்தன் அங்குவந்தான். "முகூர்த்தநாள் நாளைக்கே,
தத்தையை நீமணக்கச் சம்மதமா? - மெத்த
இருந்தசொத்தும் இல்லையப்பா ஏழைநான் நன்றாய்த்
தெரிந்ததா முத்தா? செலவும் - விரிவாக
இல்லை மணந்துகொள்" என்றுரைத்தான் ஆளி!அந்தச்
சொல்லால் துளிர்த்துப்பூத் துக்காய்த்து - நல்ல
கனியாய்க் கனிந்திட்ட முத்தன் உளந்தான்
தனியாய் இராதே "தடையேன் - இனி"என்றான்.
முந்திமணம் ஆயிற்றாம். "பாங்கு முறியவில்லை"
தந்திவந்து சேர்ந்ததாம் பின்பு!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt217

கூடத்து நடுவில் ஆடும் ஊஞ்சலில்
சோடித்து வைத்த துணைப்பொற் சிலைகள்போல்
துணைவனும் அன்புகொள் துணைவியும் இருந்தனர்!
உணவு முடிந்ததால், உடையவள் கணவனுக்குக்
களிமயில் கழுத்தின் ஒளிநிகர் துளிரும்,
சுண்ணமும் பாக்குத் தூளும், கமழும்
வண்ணம் மடித்து மலர்க்கை ஏந்தினாள்.
துணைவன் அதனை மணிவிளக் கெதிரில்
மாணிக் கத்தை வைத்ததுபோல் உதடு
சிவக்கச் சிவக்கத் தின்றுகொண் டிருந்தான்.
ஆயினும் அவன்உளம் அல்லலிற் கிடந்தது.

"கேட்டான் நண்பன்; சீட்டு நாட்டின்றி
நீட்டினேன் தொகை! நீட்டினான் கம்பி;
எண்ணூற் றைம்பது வெண்பொற் காசுகள்
மண்ணா யினஎன் கண்ணே" என்றான்.
தலைவன் இதனைச் சாற்றி முடிக்குமுன்
ஏகாலி அவர் எதிரில் வந்து
கூகூ என்று குழறினான்; அழுதான்.
உழைத்துச் சிவந்ததன் உள்ளங் கைகள்
முழுக்க அவனது முகத்தை மறைத்தன.
மலைநிகர் மார்பில் அலைநிகர் கண்ணீர்
அருவிபோல் இழிந்தது. "தெரிவி அழாதே
தெரிவி" என்று செப்பினான் தலைவன்.
"நூற்றிரண் டுருப்படி நூல்சிதை யாமல்
ஆற்றில் வெளுத்துக் காற்றில் உலர்த்திப்
பெட்டி போட்டுக் கட்டி வைத்தேன்.
பட்டா ளத்தார் சட்டையும் குட்டையும்
உடன் இருந்தன; விடிந்தது பார்த்தேன்.
உடல் நடுங்கிற்றே! ஒன்றும் இல்லை"
என்று கூறினான் ஏழை ஏகாலி.

அல்லல் மலிந்த அவ்வி டத்தில்,
வீட்டின் உட்புறத்து விளைந்த தான
இனிய யாழிசை கனிச்சாறு போலத்
தலைவன் தலைவியைத் தழுவ லாயிற்று.

"நம்அரும் பெண்ணும் நல்லியும் உள்ளே
கும்மா ளமிடும் கொள்ளையோ" என்று
தலைவன் கேட்டான். தலைவி "ஆம்"என்று
விசையாய் எழுந்து வீட்டினுட் சென்றே
இசையில் மூழ்கிய இருபெண் களையும்
வருந்தப் பேசி வண்தமிழ் இசையை
அருந்தா திருக்க ஆணை போட்டாள்.

தலைவன்பால் வந்து தலைவி குந்தினாள்.
மகளொடு வீணை வாசித் திருந்த
நாலாவது வீட்டு நல்லி எழுந்து
கூடத்துத் தலைவர் கொலுவை அடைந்தாள்.
"என்ன சேதி?" என்றான் தலைவன்.
நல்லி ஓர்புதுமை நவில லுற்றாள்.

"கடலின் அலைகள் தொடர்வது போல
மக்கள் சந்தைக்கு வந்துசேர்ந் தார்கள்.
ஆடவர் பற்பலர் அழகுப் போட்டி
போடுவார் போலப் புகுந்தனர் அங்கே!
என்விழி அங்கொரு பொன்மலர் நோக்கி
விரைந்தது; பின்அது மீள வில்லை.
பின்னர் அவன்விழி என்னைக் கொன்றது;
என்னுளம் அவனுளும் இரண்டும் பின்னின;
நானும் அவனும் தேனும் சுவையும்
ஆனோம். இவைகள் அகத்தில் நேர்ந்தவை.

மறுநாள் நிலவு வந்தது கண்டு
நல்லிக் காக நான்தெருக் குறட்டில்
காத்திருந் தேன்;அக் காளை வந்தான்.
தேனாள் வீட்டின்`எண்' தெரிவி என்றான்.
நான்கு - எனும்மொழியை நான் முடிக்குமுன்
நீயா என்று நெடுந்தோள் தொட்டுப்
பயிலுவ தானான் பதட்டன்; என்றன்
உயிரில் தன்உயிர் உருக்கிச் சேர்த்து
மறைந்தான்" என்று மங்கை என்னிடம்
அறைந்தாள். உம்மிடம் அவள் இதைக்கூற
நாணினாள். ஆதலால் நான்இதைக் கூறினேன்
என்று நல்லி இயம்பும் போதே
இன்னலிற் கிடந்த இருவர் உள்ளமும்
கன்னலின் சாற்றுக் கடலில் மூழ்கின.

"நல்லியே நல்லியே! நம்பெண் உன்னிடம்
சொல்லியது இதுவா? நல்லது நல்லது,
பெண்பெற்ற போது பெருமை பெற்றோம்.
வண்ண மேனி வளர வளர,எம்
வாழ்வுக்கு உரிய வண்மை பெற்றோம்;
ஏழ்ந ரம்புகொள் யாழ்போல் அவள்வாய்
இன்னான் இடத்தில் என்அன் பென்று
சொன்னதால் இன்பம் சூழப் பெற்றோம்.
என்மகள் உள்ளத்தில் இருக்கும் தூயனின்
பொன்னடி தனில்எம் பொருளெல்லாம் வைத்தும்,
இரந்தும் பெண்ணை ஏற்றுக் குடித்தனம்
புரிந்திடச் செய்வோம் போ"என் றுரைத்தான்.

தலைவி சாற்றுவாள் தலைவ னிடத்தில்.
"மலைபோற் சுமந்தஎன் வயிற்றில் பிறந்தபெண்
நல்லி யிடத்திற் சொன்னாள். இதனைச்
சொல்லும் போதில்என் செல்வியின் சொற்கள்
முல்லை வீசினவோ! முத்துப் பற்கள்
நிலா வீசினவோ! நீல விழிகள்
உலவு மீன்போல் ஒளி வீசினவோ!
நான்கேட் கும்பேறு பெற்றிலேன்" என்று
மகள்தன் மணாள னைக்கு றித்ததில்
இவர்கட்கு இத்தனை இன்பம் வந்ததே!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt216

மலடிஎன்றேன், போஎன்றேன், இங்கி ருந்தால்
மாய்த்திடுவேன் என்றுரைத்தேன். மங்கை நல்லாள்
கலகலென நீருகுத்த கண்ணீ ரோடும்,
கணகணெனத் தணல்பொங்கும் நெஞ்சத் தோடும்,
விலகினாள்! விலகினவே சிலம்பின் பாட்டும்!
விண்ணிரங்கும் அழுகுரலோ இருட்டை நீந்தக்
கொலைக் கஞ்சாத் திருடரஞ்சும் காடு சென்றாள்.
கொள்ளாத துன்பத்தால் அங்கோர் பக்கம்,

உட்கார்ந்தாள், இடைஒடிந்தாள், சாய்ந்து விட்டாள்.
உயிருண்டா? இல்லையா? யாரே கண்டார்!
இட்டலிக்கும் சுவைமிளகாய்ப் பொடிக்கும் நல்ல
எண்ணெய்க்கும் நானென்ன செய்வேன் இங்கே?
கட்டவிழ்த்த கொழுந்திலையைக் கழுவிச் சேர்த்துக்
காம்பகற்றி வடித்திடுசுண் ணாம்பு கூட்டி
வெட்டிவைத்த பாக்குத்தூள் இந்தா என்று
வெண்முல்லைச் சிரிப்போடு கண்ணாற் கொல்லும்

தெள்ளமுதம் கடைத்தெருவில் விற்ப துண்டோ?
தேடிச்சென் றேன்வானம் பாடி தன்னைச்
"சொள்ளொழுகிப் போகுதடி என்வாய்; தேனைச்
சொட்டுகின்ற இதழாளே! பிழைபொ றுப்பாய்;
பிள்ளைபெற வேண்டாமே; உனைநான் பெற்றால்
பேறெல்லாம் பெற்றவனே ஆவேன்" என்றே
அள்ளிவிடத் தாவினேன் அவளை! என்னை
அவள் சொன்னாள் "அகல்வாய்நீ அகல்வாய்" என்றே.

"மனைவிக்கும் கணவனுக்கும் இடையில் எதோ
மனக்கசப்பு வரல்இயற்கை. தினையை நீதான்
பனையாக்கி, நம்உயர்ந்த வாழ்வின் பத்தைப்
பாழாக்க எண்ணுவதா? எழுந்தி" ரென்றேன்.
எனைநோக்கிச் சொல்லலுற்றாள்: "நமக்கு மக்கள்
இல்லையெனில் உலகமக்கள் நமக்கு மக்கள்
எனநோக்கும் பேரறிவோ உன்பால் இல்லை;
எனக்கும்இனி உயிரில்லை" என்றாள் செத்தாள்.

திடுக்கென்று கண்விழித்தேன். என்தோள் மீது
செங்காந்தாள் மலர்போலும் அவள்கை கண்டேன்.
அடுத்தடுத்துப் பத்துமுறை தொட்டுப் பார்த்தேன்;
அடிமூக்கில் மூச்சருவி பெருகக் கண்டேன்.
படுக்கையிலே பொற்புதையல் கண்ட தைப்போல்
பாவையினை உயிரோடு கண்ணாற் கண்டேன்.
சடக்கென்று நானென்னைத் தொட்டுப் பார்த்தேன்
சாகாத நிலைகண்டேன் என்னி டத்தே.

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt215

என்னை அத்தான் என்ற ழைத்தாள்.
பொன்நிறை வண்டியொடு போந்து பல்லோர்
பெற்றோர் காலைப் பெரிது வணங்கி
நற்றாலி கட்ட நங்கையைக் கொடீர்என்று
வேண்டிட அவரும் மெல்லிக்குச் சொல்லிடத்
தூண்டிற் புழுப்போல் துடித்து மடக்கொடி
"தன்மா னத்து மாப்பெரும் தகைக்குநான்
என்மா னத்தை ஈவேன்" என்று
மறுத்து, நான்வரும் வரைபொருத் திருந்தே
சிறுத்த இடுப்புத் திடுக்கிட நடந்தே
என்வீடு கண்டு தன்பாடு கூறி
உண்ணாப் போதில் உதவுவெண் சோறுபோல்
வெண்ணகை காட்டிச் செவ்விதழ் விரித்தே
என்னை அத்தான் என்ற ழைத்தாள்.

என்னை அத்தான் என்ற ழைத்தாள்.
"ஏன்"எனில் அதட்டலென் றெண்ணு வாளோ?
"ஏனடி" என்றால் இல்லைஅன் பென்னுமோ?
"ஏனடி என்றன் இன்னுயிரே" எனில்
பொய்யெனக் கருதிப் போய்விடு வாளோ?
என்று கருதி இறுதியில் நானே
"காத்திருக் கின்றேன், கட்டழ கே"என
உண்மை கூறினேன் உவப்ப டைந்தாள்.
ஒருநொடிப் போதில் திருமணம் நடந்ததே.

என்னை அத்தான் என்ற ழைத்தாள்.
காத்தி ருப்பது கழறினேன்; உவந்தாள்.
ஒருநொடிக் கப்புறம் மீண்டும்
திருமணம்! நாடொறும் திருமணம் நடந்ததே!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt214

கட்டுடலிற் சட்டை மாட்டி - விட்டுக்
கத்தரித்த முடி சீவிப்
பட்டுச் சிறாய்இடை அணிந்தே - கையில்
பந்தடி கோலினை ஏந்திச்
சிட்டுப் பறந்தது போலே - எனை
விட்டுப் பிரிந்தனர் தோழி!
ஒட்டுற வற்றிட வில்லை - எனில்
உயிர் துடித்திட லானேன்.

வடக்குத் தெருவௌி தன்னில் - அவர்
மற்றுள தோழர்க ளோடும்
எடுத்ததன் பந்தடி கோலால் - பந்தை
எதிர்த்தடித் தேவிளை யாடிக்
கடத்திடும் ஒவ்வொரு நொடியும் - சாக்
காட்டின் துறைப்படி அன்றோ?
கொடுப்பதைப் பார்மிகத் துன்பம் - இக்
குளிர்நறுந் தென்றலும் என்றாள்.

"வளர்ப்பு மயில்களின் ஆடல் - தோட்ட
மரங்கள், மலர்க்கிளைக் கூட்டம்,
கிளிக்குப் பழந்தரும் கொடிகள் - தென்னங்
கீற்று நடுக்குலைக் காய்கள்
அளித்த எழில்கண் டிருந்தாய் - உன்
அருகினில் இன்பவெள் ளத்தில்
குளிர்ந்த இரண்டு புறாக்கள் - காதல்
கொணர்ந்தன உன்றன் நினைவில்."

தோழிஇவ் வாறுரைக் குங்கால் - அந்தத்
தோகையின் காதலன் வந்தான்.
"நாழிகை ஆவதன் முன்னே - நீவிர்
நண்ணிய தென்இங்கே" என்றாள்.
"தாழ்குழலே! அந்தப் பந்து - கைக்குத்
தப்பிஎன் தோளினைத் தாக்கி
வீழ்ந்தது; வந்ததுன் இன்ப
மேனி நினை"வென்று சொன்னான்.

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt213

எனக்கும் உன்மேல் விருப்பம் - இங்
குனக்கும் என்மேல் விருப்பம் - அத்தான்
எனக்கும் உன்மேல்...

எனக்கு நீதுணை அன்றோ - இங்
குனக்கு நான்துணை அன்றோ? - அத்தான்
எனக்கும் உன்மேல்...

இனிக்கும் என்செயல் உனக்கும் - இங்
கெனக்கும் உன்செயல் இனிக்கும்!
தனித்தல் உனக்கும் எனக்கும் - நொடி
நினைப்பின் வருத்தம் மனத்தில் - அத்தான்
எனக்கும் உன்மேல்...

விழி தனிலுன தழகே - என்
அழ கிலுனது விழியே
தொழுத பிறகுன் தழுவல் - நான்
தழுவிப் பிறகுன் தொழுதல் - அத்தான்
எனக்கும் உன்மேல்...

நீஉடல்! உயிர் நானே - நாம்
நிறை மணமலர் தேனே
ஓய்விலை நம தன்பும் - இங்கு
ஒழிவிலை பே ரின்பம் - அத்தான்
எனக்கும் உன்மேல்...

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt212

சொல்வதென்றால் வெட்கமடி தோழி - சொல்லச்
சொல்லுகின்றாய் என்துணைவன்
சொன்னதையும் செய்ததையும்
சொல்வதென்றால்...

முல்லைவிலை என்ன என்றான்
இல்லைஎன்று நான் சிரித்தேன்
பல்லைஇதோ என்று காட்டிப்
பத்துமுத்தம் வைத்து நின்றான்
சொல்வதென்றால்...

பின்னலைப்பின் னேகரும்பாம் பென்றான் - உடன்
பேதைதுடித் தேன்அணைத்து நின்றான்
கன்னல் என்றான் கனியிதழைக்
காதல்மருந் தென்று தின்றான்.
சொல்வதென்றால்...

நிறையிருட்டில் ஒருபுதிரைப் போட்டான்;
நிலவெறிப்ப தென்னவென்று கேட்டான்.
குறைமதியும் இல்லை என்றேன்.
குளிர்முகத்தில் முகம் அணைத்தான்.
சொல்வதென்றால்...

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt211

உண்டனன் உலவி னன்பின்
உள்ளறை இட்ட கட்டில்
அண்டையில் நின்ற வண்ணம்
என்வர வறிவா னாகி,
மண்டிடும் காதற் கண்ணான்
வாயிலில் நின்றி ருந்தான்!
உண்டேன்என் மாமி என்னை
உறங்கப்போ என்று சொன்னாள்.

அறைவாயி லுட்பு குந்தேன்
அத்தான்தன் கையால் அள்ளி
நிறைவாயின் அமுது கேட்டுக்
கனிஇதழ் நெடிது றிஞ்சி
மறைவாக்கிக் கதவை, என்னை
மணிவிளக் கொளியிற் கண்டு
நறுமலர்ப் பஞ்ச ணைமேல்
நலியா துட்கார வைத்தான்.

கமழ் தேய்வு* பூசி வேண்டிக்
கனியோடு பாலும் ஊட்டி
அமைவுற என்கால் தொட்டே
அவனுடை யால்து டைத்தே
தமிழ்,அன்பு சேர்த்துப் பேசித்
தலையணை சாய்த்துச் சாய்ந்தே
இமையாது நோக்கி நோக்கி
எழில்நுதல் வியர்வை போக்கி,
* தேய்வு -- சந்தனம்

தென்றலும் போதா தென்று
சிவிறி*கைக் கொண்டு வீசி
அன்றிராப் பொழுதை இன்பம்
அறாப் பொழுதாக்கி என்னை
நன்றுறத் துயிலிற் சேர்த்தான்
நவிலுவேன் கேட்பாய் தோழி.
* சிவிறி -- விசிறி

கண்மூக்குக் காது வாய்மெய்
இன்பத்திற் கவிழ்ப்பான். மற்றும்
பெண்பெற்ற தாயும் போல்வான்;
பெரும்பணி எனக்கி ழைப்பான்.
வண்மையால் கால் துடைப்பான்
மறுப்பினும் கேட்பா னில்லை.
உண்மையில் நான்அ வன்பால்
உயர்மதிப் புடையேன் தோழி!

மதிப்பிலாள் என்று நெஞ்சம்
அன்புளான் வருந்து வானேல்
மதிகுன்றும் உயிர்போன் றார்க்கு
மறம்*குன்றும் செங்கோல் ஓச்சும்
அதிராத்தோள் அதிர லாகும்
அன்புறும் குடிகள் வாழ்வின்
நிதிகுன்றும் மன்னன் கையில்
மழைகுன்ற நேரும் அன்றோ?
* மறம் - வீரம்

நிலந்தொழேன் நீர்தொ ழேன்விண்
வளிதொழேன் எரிதொ ழேன்நான்
அலங்கல்சேர் மார்பன் என்றன்
அன்பனைத் தொழுவ தன்றி!
இலங்கிழைத் தோழி கேள்!பின்
இரவுபோ யிற்றே. கோழி
புலர்ந்தது பொழுதென் றோதப்
பூத்ததென் கண்ண ரும்பு.

உயிர்போன்றான் துயில் களைந்தான்
ஒளிமுகம் குறுந கைப்புப்
பயின்றது. பரந்த மார்பில்
பன்மலர்த் தாரும் கண்டேன்.
வெயில்மணித் தோடும் காதும்
புதியதோர் வியப்பைச் செய்ய
இயங்கிடும் உயிரன் னோனை
இருகையால் தொழுதெ ழுந்தேன்.

அழைத்தனர் எதிர்கொண் டெம்மை
அணிஇசை பாடி வாழ்த்தி.
இழைத்திடு மன்று நோக்கி
ஏகினோம். குடிகள் அங்கே
"ஒழித்தது வறுமை அன்னாய்
உதவுக" என்று நைந்தார்.
"பிழைத்தது மழை*என் அத்தான்
பெய்"என்றேன் குடிகட் கெல்லாம்.

மழைத்தது* மழைக்கை** செந்நெல்
வண்டிகள் நடந்த யாண்டும்.

* பிழைத்தது மழை - மழை பெய்யவில்லை.
* மழைத்தது - மழைபோல் செந்நெல் தந்தது.
** மழைக்கை - கொடுக்குமியல்புள்ள மன்னன் கை.

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt210

பொதிகைமலை விட்டெழுந்து சந்த னத்தின்
புதுமணத்தில் தோய்ந்து,பூந் தாது வாரி,
நதிதழுவி அருவியின்தோள் உந்தித் தெற்கு
நன்முத்துக் கடல்அலையின் உச்சி தோறும்
சதிராடி, மூங்கிலிலே பண் எழுப்பித்
தாழையெலாம் மடற்கத்தி சுழற்ற வைத்து,
முதிர்தெங்கின் இளம்பாளை முகம் சுவைத்து,
முத்துதிர்த்துத் தமிழகத்தின் வீதி நோக்கி,

அந்தியிலே இளமுல்லை சிலிர்க்கச் செந்நெல்
அடிதொடரும் மடைப்புனலும் சிலிர்க்க, என்றன்
சிந்தைஉடல் அணுஒவ்வொன் றும்சி லிர்க்கச்
செல்வம்ஒன்று வரும்;அதன்பேர் தென்றற் காற்று!
வெந்தயத்துக் கலயத்தைப் பூனை தள்ளி
விட்டதென என்மனைவி அறைக்குப் போனாள்.
அந்தியிலே கொல்லையில்நான் தனித்தி ருந்தேன்
அங்கிருந்த விசுப்பலகை தனிற் படுத்தேன்.

பக்கத்தில் அமர்ந்திருந்து சிரித்துப் பேசிப்
பழந்தமிழின் சாற்றாலே காதல் சேர்த்து
மிக்கஅவ சரமாகச் சென்ற பெண்ணாள்
விரைவாக என்னிடத்தில் வருதல் வேண்டும்.
அக்காலம் அறைக்குவந்த பூனை யின்மேல்
அடங்காத கோபமுற்றேன் பிறநே ரத்தில்
பக்காப்பூ னைநூறு பொருளை யெல்லாம்
பாழாக்கி னாலும்அதில் கவலை கொள்ளேன்.

வாழ்க்கைமலர் சொரிகின்ற இன்பத் தேனை
மனிதனது தனிமையினால் அடைதல் இல்லை;
சூழ்ந்த துணை பிரிவதெனில் இரண்டு நெஞ்சும்
தொல்லையுறு வகைஇருத்தல் வேண்டும் அங்கே
வீழ்ந்துகிடந் திட்டஎனைத் `தனிமை', `அந்தி'
இவைஇரண்டும் நச்சுலகில் தூக்கித் தள்ளப்
பாழான அவளுடலின் குளிர்ச்சி, மென்மை,
மணம் இவற்றைப் பருகுவதே நினைவாயிற்று.

தெரியாமல் பின்புறமாய் வந்த பெண்ணாள்
சிலிர்த்திடவே எனைநெருங்கிப் படுத்தாள் போலும்;
சரியாத குழல்சரிய லானாள் போலும்;
தடவினாள் போலும்;எனைத் தன்க ரத்தால்!
புரியாத இன்பத்தைப் புரிந்தாள் போலும்!
புரியட்டும் எனஇருந்தேன் எதிரில் ஓர்பெண்
பிரிவுக்கு வருந்தினே னென்றாள் ஓகோ!
பேசுமிவள் மனைவி;மற் றொருத்தி தென்றல்!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt209

காலை
ஒளியைக் கண்டேன் கடல்மேல் - நல்
உணர்வைக் கண்டேன் நெஞ்சில்!
நௌியக் கண்டேன் பொன்னின் - கதிர்
நிறையக் கண்டேன் உவகை!
துளியைக் கண்டேன் முத்தாய்க் - களி
துள்ளக் கண்டேன் விழியில்!
தௌியக் கண்டேன் வையம் - என்
செயலிற் கண்டேன் அறமே!

மாலை
மறையக் கண்டேன் கதிர்தான் - போய்
மாயக் கண்டேன் சோர்வே!
நிறையக் கண்டேன் விண்மீன் - என்
நினைவிற் கண்டேன் புதுமை!
குறையக் கண்டேன் வெப்பம் - எனைக்
கூடக் கண்டேன் அமைதி!
உறையக் கண்டேன் குளிர்தான் - மேல்
ஓங்கக் கண்டேன் வாழ்வே!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt208

(ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் மாலை 4 மணிக்குச் சென்னை பக்கிங்காம்
கால்வாயில் தோணி ஏறி, மறுநாள் காலை 9 மணிக்கு மாவலிபுரம் சேர்ந்தோம்
நானும் என் தோழர் பலரும். வழிப்போக்கின் இடைநேரம் இனிமையாய்க் கழிந்தது.
எனினும் அப்பெருந்தோணியைக் கரையோரமாக ஒரு கயிறுபற்றி ஒருவன் இழுத்துச்
சென்றமையும், மற்றோர் ஆள் பின்புறமாக ஒரு நீளக் கழியால் தள்ளிச் சென்றமையும்
இரங்கத்தக்க காட்சி.அதையும் அங்குக் கண்ணைக் கவர்ந்த மற்றும் சில
காட்சிகளையும் விளக்கி அப்போது எழுதியதாகும் இப்பாட்டு. 1934)

சென்னையிலே ஒரு வாய்க்கால் - புதுச்
சேரி நகர்வரை நீளும்.
அன்னதில் தோணிகள் ஓடும் - எழில்
அன்னம் மிதப்பது போலே.
என்னருந் தோழரும் நானும் - ஒன்றில்
ஏறி யமர்ந்திட்ட பின்பு
சென்னையை விட்டது தோணி - பின்பு
தீவிரப் பட்டது வேகம்.

தெற்குத் திசையினை நோக்கி - நாங்கள்
சென்றிடும் போது விசாலச்
சுற்றுப் புறத்தினில் எங்கும் - வெய்யில்
தூவிடும் பொன்னொளி கண்டோம்.
நெற்றி வளைத்து முகத்தை - நட்டு
நீரினை நோக்கியே நாங்கள்
அற்புதங் கண்டு மகிழ்ந்தோம் - புனல்
அத்தனையும் ஒளி வானம்.

சஞ்சீவி பர்வதச் சாரல் - என்று
சாற்றும் சுவடி திறந்து
சஞ்சார வானிலும் எங்கள் - செவி
தன்னிலும் நற்றமிழ் ஏற்றி
அஞ்சாறு பக்கம் முடித்தார் - மிக்க
ஆசையினால் ஒரு தோழர்.
செஞ்சுடர் அச்சம யத்தில் - எம்மைச்
செய்தது தான்மிக்க மோசம்.

மிக்க முரண்கொண்ட மாடு - தன்
மூக்குக் கயிற்றையும் மீறிப்
பக்கம் இருந்திடும் சேற்றில் - ஓடிப்
பாய்ச்சிடப் பட்டதோர் வண்டிச்
சக்கரம் போலிருள் வானில் - முற்றும்
சாய்ந்தது சூரிய வட்டம்!
புக்க பெருவௌி யெல்லாம் - இருள்
போர்த்தது! போனது தோணி.

வெட்ட வௌியினில் நாங்கள் - எதிர்
வேறொரு காட்சியும் கண்டோம்
குட்டைப் பனைமரம் ஒன்றும் - எழில்
கூந்தல் சரிந்ததோர் ஈந்தும்
மட்டைக் கரங்கள் பிணைத்தே - இன்ப
வார்த்தைகள் பேசிடும் போது
கட்டுக் கடங்கா நகைப்பைப் - பனை
கலகல வென்று கொட்டிற்றே.

எட்டியமட்டும் கிழக்குத் - திசை
ஏற்றிய எங்கள் விழிக்குப்
பட்டது கொஞ்சம் வௌிச்சம் - அன்று
பௌர்ணமி என்பதும் கண்டோம்.
வட்டக் குளிர்மதி எங்கே - என்று
வரவு நோக்கி யிருந்தோம்.
ஒட்டக மேல்அர சன்போல் - மதி
ஓர்மரத் தண்டையில் தோன்றும்.

முத்துச் சுடர்முகம் ஏனோ - இன்று
முற்றும் சிவந்தது சொல்வாய்.
இத்தனை கோபம் நிலாவே - உனக்கு
ஏற்றியதார் என்று கேட்டோம்.
உத்தர மாகஎம் நெஞ்சில் - மதி
ஒன்று புகன்றது கண்டீர்.
சித்தம் துடித்தது நாங்கள் - பின்னால்
திரும்பிப் பார்த்திட்ட போது.

தோணிக் கயிற்றினை ஓர்ஆள் - இரு
தோள்கொண் டிழுப்பது கண்டோம்.
காணச் சகித்திட வில்லை - அவன்
கரையொடு நடந்திடு கின்றான்.
கோணி முதுகினைக் கையால் - ஒரு
கோல்நுனி யால்மலை போன்ற
தோணியை வேறொரு வன்தான் - தள்ளித்
தொல்லை யுற்றான்பின் புறத்தில்.

இந்த உலகினில் யாரும் - நல்
இன்ப மெனும்கரை யேறல்
சந்தத மும்தொழி லாளர் - புயம்
தரும் துணையன்றி வேறே
எந்த விதத்திலும் இல்லை - இதை
இருபது தரம் சொன்னோம்.
சிந்தை களித்த நிலாவும் - முத்துச்
சிந்தொளி சிந்தி உயர்ந்தான்.

நீல உடையினைப் போர்த்தே - அங்கு
நின்றிருந்தாள் உயர் விண்ணாள்.
வாலிப வெண்மதி கண்டான் - முத்து
மாலையைக் கையி லிழுத்து
நாலு புறத்திலும் சிந்தி - ஒளி
நட்சத் திரக்குப்பை யாக்கிப்
பாலுடல் மறையக் காலை - நாங்கள்
பலி புரக்கரை சேர்ந்தோம்.

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt207

வானந்தான் பாடிற்றா? வானிலவு பாடிற்றா?
தேனை அருந்திச் சிறுதும்பி மேலேறி
நல்லிசை நல்கிற்றா? நடுங்கும் இடிக்குரலும்
மெல்லிசை பயின்று மிகஇனிமை தந்ததுவோ?

வானூர்தி மேலிருந்து வல்ல தமிழிசைஞன்
தானூதும் வேய்ங்குழலா? யாழா? தனியொருத்தி
வையத்து மக்கள் மகிழக் குரல்எடுத்துப்
பெய்த அமுதா? எனநானே பேசுகையில்,

நீநம்பாய் என்று நிமிர்ந்தஎன் கண்ணேரில்
வானம்பா டிக்குருவி காட்சி வழங்கியது
ஏந்தும்வான் வெள்ளத்தில் இன்பவெள்ளம் தான்கலக்க
நீந்துகின்ற வானம் பாடிக்கு நிகழ்த்தினேன்.

உன்றன் மணிச்சிறகும் சின்னக் கருவிழியும்
என்றன் விழிகட்கே எட்டா உயர்வானில்
பாடிக்கொண்டே யிருப்பாய்! பச்சைப் பசுந்தமிழர்
தேடிக்கொண் டேயிருப்பார் தென்பாங்கை உன்பால்!

அசையா மகிழ்ச்சி அடைகநீ! உன்றன்
இசைமழையால் இன்புறுவோம் யாம்.

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt206

அமைதியில் ஒளி அரும்பும் அதிகாலை - மிக
அழகான இருட்சோலை தனில்
அமைதியில் ஒளி...

இமை திறந்தே தலைவி கேட்டாள் - சேவல்
எழுந்திருப்பீர் என்று கூவல்
அமைதியில் ஒளி...

தமிழ்த்தேன் எழுந்தது வீட்டினர் மொழியெலாம்
தண்ணீர் இறைந்தது தலைவாயில் வழியெலாம்
அமைத்த கோலம் இனித்தது விழியெலாம் - நீ
ராடி உடுத்தனர் அழகுபொற் கிழியெலாம்
அமைதியில் ஒளி...

பெற்றவர் கூடத்தில் மனைமேற் பொருந்தித் - தம்
பிள்ளைக ளோடு சிற்றுண வருந்தி
உற்ற வேலையில் கைகள் வருந்தி
உழைக்க லாயினர் அன்பு திருந்தி
அமைதியில் ஒளி...

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt205

விரிந்த வானே, வௌியே - எங்கும்
விளைந்த பொருளின் முதலே!
திரிந்த காற்றும், புனலும் - மண்ணும்
செந்தீ யாவும் தந்தோய்.
தெரிந்த கதிரும் நிலவும் - பலவாச்
செறிந்த உலகின் வித்தே!
புரிந்த உன்றன் செயல்கள் - எல்லாம்
புதுமை! புதுமை! புதுமை!

அசைவைச் செய்தாய் ஆங்கே - ஒலியாம்
அலையைச்செய்தாய் நீயே!
நசையால் காணும் வண்ணம் - நிலமே
நான்காய் விரியச் செய்தாய்!
பசையாம் பொருள்கள் செய்தாய் - இயலாம்
பைந்தமிழ் பேசச் செய்தாய்!
இசையாம் தமிழைத் தந்தாய் - பறவை,
ஏந்திழை இனிமைக் குரலால்!

எல்லாம் அசையச் செய்தாய் - உயிர்கள்
எதினும் அசைவைச் சேர்த்தாய்.
சொல்லால் இசையால் இன்பம் - எமையே
துய்க்கச் செய்தாய் அடடா!
கல்லா மயில், வான்கோழி - புறவுகள்
காட்டும் சுவைசேர் அசைவால்
அல்லல் விலக்கும் `ஆடற் - கலை'தான்
அமையச் செய்தாய் வாழி!

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப


2.5. அதிகாலை

அமைதியில் ஒளி அரும்பும் அதிகாலை - மிக
அழகான இருட்சோலை தனில்
அமைதியில் ஒளி...

இமை திறந்தே தலைவி கேட்டாள் - சேவல்
எழுந்திருப்பீர் என்று கூவல்
அமைதியில் ஒளி...

தமிழ்த்தேன் எழுந்தது வீட்டினர் மொழியெலாம்
தண்ணீர் இறைந்தது தலைவாயில் வழியெலாம்
அமைத்த கோலம் இனித்தது விழியெலாம் - நீ
ராடி உடுத்தனர் அழகுபொற் கிழியெலாம்
அமைதியில் ஒளி...

பெற்றவர் கூடத்தில் மனைமேற் பொருந்தித் - தம்
பிள்ளைக ளோடு சிற்றுண வருந்தி
உற்ற வேலையில் கைகள் வருந்தி
உழைக்க லாயினர் அன்பு திருந்தி
அமைதியில் ஒளி...

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt205

ஒன்று
மணம் முடிந்தது.
தனியிடம், விடுதலைபெற்ற இரண்டுள்ளம், அளவு
கடந்த அன்பு - இவை மகிழ்ச்சிக் கொடியேற்றிக்
காதல் முரசு முழக்கின - இன்ப விழா! முடிவில்லை.

இரண்டு
ஒருநாள் அவர்கள் இந்த உலகில் இறங்கி வந்து
பேசலுற்றார்கள்.
"மக்கள் தொடர்பில்லாதது. தென்றலில் சிலிர்க்கும்
தழை மரங்கள் உள்ளது. ஊற்றிற் சிறந்த நீர் நிலையின்
துறையில் அமைந்த நுழைவாயிலுல்லது. அழகிய
சிறுகுடில்! நாம் அங்கே தங்கலாம் - இது என் அவா
அத்தான்."
"ஆம்! குறைவற்ற தனிமை!"
பறந்தார்கள்.
மூன்று
"நாயின் நாக்கைப் போன்ற சிவந்த மெல்லடியைத்
தூக்கிவை குடிசையில்."
"நான் மட்டுமா?"
அதிர்ந்தது அவள் உள்ளம்!
இமைப்போதில் ஒன்றில் ஒன்று புதைந்த இரண்டுடல்
குடிசையில் நுழைந்தன.
"விட்டுப் பிரிவேன் என்று அச்சப் பட்டாயா?"
"மன்னிக்க வேண்டும்!"
குடிசை சாத்தப் பட்டது.
நாவற்பழம் நீர்நிலையில் விழுந்து கொண்டிருக்கும்
இச்சிச் சென்ற ஒலி குடிசைக்குள் சென்றது. அதே
ஒலி குடிசையினின்றும் வௌிவந்தது. இது எதிரொலி
யன்று!

நான்கு
"தேக்கும் அதில் உடல் பின்னிய சீந்தற் கொடியும்
பார், நம்மைப்போல!"
"இல்லை, அரண்மனை கசந்தால் அழகிய குடிலில்
குடியேறத் தேக்கு நடவாது; சீந்தல் நகராது."
வானில் ஓர் ஒலி!
"வைகையின் மங்கிய ஒளியில் மங்காத இன்னிசையை
உதிர்த்தன வானப் புட்கள், ஆணும் பெண்ணுமாக!"
"நாமும் வானில் -- அடடா சிறகில்லையே!"
நீர்நிலை கட்டித் தழுவிக் கொண்டது இருவரையும்.

ஐந்து
"கெண்டைகள் துள்ளி விளையாடி நீரின் அடிமட்டத்தில்
அள்ளி நுகர்வன இன்பத்தை!"
"நாமும் அங்கு இன்பம் நுகர்வோம் -- அடடா, நாம்
மீன்களல்லவே!"
கண்ணிமைப்போது நான் நீருக்குள் ஒளிந்து கொள்கிறேன்!
பிற்பகுதியும் கேள்."
"நிறுத்துங்கள்! முற்பகுதியே என் பாதி உயிரைப் போக்கி
விட்டது!"
மாற்றிச் சுவைக்கும் நான்கு விழிகள் தம்மிற் பிரியாமல்
நீராடின.

ஆறு
"கரையேறுங்கள் என்னோடு."
"மாலையின் குளிரும் நனைந்த சேலையின் குளிரும்
உன் இன்பத்தைப் பெருக்கவில்லையா?"
"தவறு! நம் இருவர்க்கும் நடுவில் முயல் நுழையும் வௌி,
இதற்கு நனைந்த ஆடை காரணம்."
"அதோ நம்மை நோக்கி நம் வீட்டு ஆள்."
குடிசையில் மறைந்தார்கள் ஓடி!

ஏழு
"அழைத்துவரச் சொன்னார்கள் அப்பா."
"ஏன்?"
"கப்பல் வந்திருக்கிறது."
"மெல்லப் பேசு!"
"என்ன ஓசை குடிசையின் உட்கட்டில்? விட்டு
விட்டு இசைக்கும் ஒருவகைச் சிட்டுக் குரல்!"
"என்ன சொன்னார் அப்பா?"
"அனுப்ப வேண்டுமாம் உம்மை."
"சிங்கைக்கா?"
"ஆம். -- என்ன அங்கே திட்டென்று விழுந்த
உடலின் ஓசை!"
"நாலு நாட்கள் நீடிக்கலாமா?"
"இன்றைக்கே! இதென்ன குடிசையில் வெள்ளம்?"
"நீ போ! இதோ வருகின்றேன்."
எட்டு br> "தேம்பி அழுது திட்டென்று வீழ்ந்து கண்ணீரை
ஆறாய்ப் பெருக்கினை அன்புடையாளே!"
"இறக்கமாட்டேன் அத்தான், உனைவிட்டுப்
பிரியவில்லை என்று நீங்கள் உறுதி கூறுமட்டும்."
"கடமை என் வாயை அடைக்கிறது."
"என் மடமை கிடந்து துடிக்கிறது."
"மடமை அல்ல; உயிரின் இயற்கை."
" `தந்தை சொற்படி நடக்கட்டும் என் அத்தான்'
என்று என் நெஞ்சுக்குக் கூற என்னால் முடிகிறது;
உயிருக்குச் சொல்லி நிறுத்த முடியவில்லை."
ஒன்பது
"தோழி, நான் அப்பாவிடம் போகிறேன்."
"நீர் நிலையை அடுத்த குடிசையிலா அப்பா இருக்கிறார்?"
"என் கால்கள் என்னை ஏமாற்றுகின்றன. என் பிரிவால்
அவள் சாகிறாள்! சென்று காப்பாற்று."
"எவ்வளவு நேரம்?"
"நேரமா?"
"எத்தனை நாள்?"
"நாளா? அடுத்த ஆண்டில் வந்துவிடுவேன்."
"கால் நாழிகை சாக்காட்டின் கதவைச் சாத்திப் பிடித்துக்
கொண்டிருக்க முடியும். ஐயா! அடுத்த ஆண்டில் அவள்
உடலின் துகள் கலந்த மண்ணும் மட்கி வௌியுடன்
வௌியாய்க் கலந்ததென்ற கதை பழமையாய்விடும்."
"என் துன்ப உள்ளத்தைத் தந்தையிடம் கூறுகிறேன்."

பத்து
(நூலேணியில் அழுகுரல், கண்ணீர் -- அவன் கப்பலேறுகிறான்.")
கப்பலுக்குள் - "இங்கே உட்கார வேண்டும் நீவிர்."
"கணவனும் மனைவியும் தங்கும் இடமல்லவா இது?"
"இறந்திருப்பாளானால், அது அவள் செய்த முதல்
குற்றம். இறந்தசெய்தி என் காதில் எட்டாதிருக்க
முயன்றிருப்பாளானால் அது இரண்டாவது குற்றம்."
"இரண்டாவது குற்றத்திற்கு அவள் ஆளாகவில்லை.
தன் நிலையை விளக்கும்படி என்னை அனுப்பினாள்."
"பயனற்றது இவ்வுலகம்! ஒரு பற்று என்னை வாட்டு
கின்றது. அவள் இறந்தாள்; ஆதலால் நான் இறந்தேன்.
இதை அவள் அறியாளே! நீவிர் சான்றாகக் கடலில்
கலக்கிறேன்."
சிரிப்பு! - இரண்டு இளைஞர்கள் தோழியும் தலைவியு
மாகிறார்கள்.
"அத்தான்! நாம் இருவரும் சிங்கைக்குப் போகிறோம்."
"தோழி! என் மாமாவிடமும் அத்தையிடமும் உடலும்
உயிருமாக இருவரும் செல்லுகின்றார்கள் என்று கூறு!"
வாழ்க, காதல் வாழ்வு!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt203

1. உவகை
(இரவு! அவள் மாடியில் நின்றபடி தான் வரச்
சொல்லியிருந்த காதலனை எதிர்பார்க்கின்றாள்.
அவன் வருகின்றான்.)

காதலன்
என்மேல் உன்றனுக் கெத்தனை அன்படி!
என்உயிர் நீதான்! என்னுடல் நீதான்!
உன்னை யன்றிஇவ் வுலகின் ஆட்சியும்
பொன்னும் வேண்டேன், புகழும் வேண்டேன்.
காத்திருப் பேன்எனக் கழறினை வந்தேன்.
பூத்திருக் கும்உன் புதுமுகம் காட்டினை.
மாளிகை உச்சியின் சாளரம் நீங்கி
நூலே ணியினைக் கால்விரல் பற்றித்
தொத்தும் கிளிபோல் தொடர்ந்திறங் குவதாய்
முத்தெழுத் தஞ்சல் எழுதினை! உயிரே
இறங்கடி ஏந்தும் என்கை நோக்கி!
(அவள் நூலேணி வழியாக இறங்குகிறாள்.)
காதலன்
வா பறந்து! வாவா மயிலே!
(அவளைத் தோளில் தாங்கி இறங்குகிறான்.)
காதலன்
வளைந்தது கையில் மாம்பழக் குலைக்கிளை!
ஒரேஒரு முத்தம் உதவு. சரி!பற!
(இருவரும் விரைந்து சென்று அங்கிருந்த ஓர்
குதிரைமேல் ஏறி அப்புறப் படுகிறார்கள்.)

2. வியப்பு
(இருவரும் ஒரு சோலையை அடைகிறார்கள்.
குதிரையை ஒரு மரத்தில் கட்டி)
காதலன்
வந்து சேர்ந்தோம் மலர்ச்சோ லைக்கண்!
என்னிரு தோளும் உன்உடல் தாங்கவும்,
உன்னிரு மலர்க்கைகள் என்மெய் தழுவவும்
ஆனது! நகரினை அகன்றோம் எளிதில்!
(இருவரும் உலாவுகின்றனர்.)
காதலன்
சோம்பிக் கிடந்த தோகை மாமயில்
தழைவான் கண்டு மழைவான் என்று
களித்தாடு கின்றது காணடி! வியப்பிது!
(சிறிது தொலைவில் செல்லுகிறார்கள்.)

3. இழிப்பு
காதலன்
குள்ளமும் தடிப்பும் கொண்ட மாமரத்
திருகிளை நடுவில் ஒருமுகம் தெரிந்தது!
சுருங்கிய விழியான்; சுருண்ட மயிரினன்;
இழிந்த தோற்றத்தன் என்னபார்க் கின்றான்?
நமைநோக்கி ஏனவன் நகரு கின்றான்?
உற்றுப்பார்! அவன் ஒருபெருங் கள்வன்.
காலடி ஓசை காட்டாது மெல்லஅக்
கொடியோன் நம்மேற் குறியாய் வருவதை
உணர்க! அன்புக் குரியாய் உணர்க!
(தம்மை நோக்கி வரும் அத்தீயனை
இருவரும் பார்க்கிறார்கள்.)

4. வெகுளி (கோபம்)
காதலன்
வெகுளியை என்உளத்து விளைக்கின் றானவன்!
புலிபாய்ந் திடும்எனில் போய்ஒழிந் திடும்நரி!
(காதலன் கண்ணிற் கனல் எழுகின்றது. தன்
உள்ளங்கை மடங்குகின்றது. அந்தக் கள்வன்
தன்னை நெருங்குவதையும் காதலன் காணு
கின்றான். காதலி காணுகின்றாள்.)

5. நகை
காதலன்
நட்டு வீழ்ந்தான் நடை தடுமாறி!
கள்ளுண் டான்.அவ் வெள்ளத்தி லேதன்
உள்ளம் கரைத்தான். உணர்வி ழந்தான்.
உடைந்தது முன்பல் ஒழுகிற்று குருதி!
(இருவரும் சிரிக்கிறார்கள்.)
காதலன்
ஆந்தைபோல் விழித்தான். அடங்காச் சிரிப்பை
நமக்குப் பெண்ணே நல்விருந் தாக்கினான்.
(இருவரும் மறுபுறம் செல்லுகிறார்கள்.)

6. மறம் (வீரம்)
காதலன்
என்ன முழக்கம்? யார்இங்கு வந்தனர்?
கால்பட்டுச் சருகு கலகல என்றது.
(உறையினின்று வாளை உருவும் ஓசை கேட்கிறது.)
காதலன்
எவனோ உறையினின் றுருவினான் வாளை;
ஒலிஒன்று கிலுக்கென்று கேட்டது பெண்ணே!
ஒருபுறம் சற்றே ஒதுங்கி நிற்பாய்.
நினது தந்தை நீண்முடி மன்னன்
அனுப்பிய மறவன் அவனே போலும்!
(காதலி ஒருபுறம் மறைந்து, நடப்பதை
உற்று நோக்கியிருக்கிறாள்.)
காதலன்
(தன்னெதிர் வந்து நின்ற மறவனை நோக்கி)
அரசன் ஆணையால் அடைந்தவன் நீயோ?
முரசு முழங்கும் முன்றிலுக் கப்பால்
அரண்மனை புனைந்த அழகு மாடியில்
வைத்தபூ மாலையை வாடாது கொணர்ந்தது
இத்தோள்! உனைஇங் கெதிர்ப்பதும் இத்தோள்!
நேரிழை இன்றி நிலைக்காது வாழ்வெனக்
கோரி அவளைக் கொணர்ந்ததும் இத்தோள்!
போர்மற வர்சூழ் பாரே எதிர்ப்பினும்
நேரில் எதிர்க்க நினைத்ததும் இத்தோள்!
உறையி னின்று வாளை உருவினேன்.
தமிழ்நாட்டு மறவன்நீ தமிழ்நாட்டு மறவன்நான்
என்னையும் என்பால் அன்புவைத் தாளையும்
நன்று வாழ்த்தி நட வந்தவழி!
இலைஎனில் சும்மா இராதே; தொடங்குபோர்!
(வாட்போர் நடக்கிறது.)
காதலன்
மாண்டனை! என்வாள் மார்பில் ஏற்றாய்;
வாழி தோழா! நின்பெயர் வாழி!
(வந்தவன் இறந்து படுகிறான்.)

7. அச்சம்
(காதலன் தன் காதலியைத் தேடிச் செல்கிறான்.)
காதலன்
அன்பு மெல்லியல், அழகியோள் எங்கே?
பெருவாய் வாட்பல் அரிமாத் தின்றதோ!
கொஞ்சும் கிள்ளை அஞ்ச அஞ்ச
வஞ்சக் கள்வன் மாய்த்திட் டானோ!
(தேடிச் செல்லுகின்றான். பல புறங்களிலும்
அவன் பார்வை சுழல்கின்றது.)

8. அவலம்
(காதலி ஒருபுறம் இறந்து கிடக்கிறாள். காதலன் காணுகிறான்.)
காதலன்
ஐயகோ அவள்தான்! அவள்தான்! மாண்டாள்.
பொரிவிழிக் கள்வன் புயலெனத் தோன்றி
அழகு விளக்கை அவித்தான்! நல்ல
கவிதையின் சுவையைக் கலைத்தான் ஐயகோ!
என்றன் அன்பே, என்றன் உயிரே!
என்னால் வந்தாய், என்னுடன் வந்தாய்.
பொன்னாம் உன்னுயிர் போனது! குருதியின்
சேற்றில் மிதந்ததுன் சாற்றுச் சுவையுடல்!
கண்கள் பொறுக்குமோ காண உன்நிலை?
எண்ணம் வெடித்ததே! எல்லாம் நீஎன
இருந்தேன்; இவ்வகை இவ்விடம் இறந்தாய்!
தனித்தேன், உய்விலை. தையலே, தையலே!
என்பால் இயற்கை ஈந்த இன்பத்தைச்
சுவைக்குமுன் மண்ணில் சுவர வைத்துக்
கண்ணீர் பெருக்கிநான் கதற வைத்ததே!
ஐயகோ பிரிந்தாய்! ஐயகோ பிரிந்தாய்!

9. அறநிலை
கல்வி இல்லார்க்குக் கல்வி ஈகிலார்
செல்வம் இல்லார்க்குச் செல்வம் ஈகிலார்
பசிப்பிணி, மடமைப் பரிமேல் ஏறி
சாக்காடு நோக்கித் தனிநடை கொண்டது!
அன்போ அருளோ அடக்கமோ பொறுமையோ
இன்சொலோ என்ன இருத்தல் கூடும்?
வாழான் ஒருவன் வாழ்வானைக் காணின்
வீழ இடும்பை விளைக்கின் றானே!
வையம் உய்யு மாறு
செய்வன செய்து கிடப்பேன் இனிதே!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt202

1
(காதலனின் பிரிவுக்கு ஆற்றாதவளாய்த் தலைவி தனியே வருந்துகிறாள்.)
தலைவி
என்றன் மலருடல் இறுக அணைக்கும்அக்
குன்றுநேர் தோளையும், கொடுத்தஇன் பத்தையும்
உளம்மறக் காதே ஒருநொடி யேனும்!
எனைஅவன் பிரிந்ததை எவ்வாறு பொறுப்பேன்!
வான நிலவும், வண்புனல், தென்றலும்
ஊனையும் உயிரையும் உருக்கின! இந்தக்
கிளிப்பேச் சோஎனில் கிழித்தது காதையே!
புளித்தது பாலும்! பூநெடி நாற்றம்!
(காதலன் வரும் காலடி ஓசையிற்
காதைச் செலுத்துகிறாள்.)
காலடி ஓசை காதில் விழுந்தது.
நீளவாள் அரை சுமந்த கண்
ணாளன் வருகின் றான்இல்லை அட்டியே!

2
(தலைவன் வருகை கண்ட தலைவி வணக்கம் புகலுகிறாள்.)
தலைவன்
வாழிஎன் அன்பு மயிலே, எனைப்பார்!
சூழும்நம் நாட்டுத் தோலாப் பெரும்படை
கிளம்பிற்று! முரசொலி கேள்நீ! விடைகொடு!
(தலைவி திடுக்கிடுகிறாள். அவள்
முகம் துன்பத்தில் தோய்கிறது.)
தலைவி
மங்கை என்னுயிர் வாங்க வந்தாய்!
ஒன்றும் என்வாய் உரையாது காண்க!
தலைவன்
பாண்டி நாட்டைப் பகைவன் சூழ்ந்தான்!
ஆண்டகை என்கடன் என்ன அன்னமே?
நாடு தானே நம்மைப் பெற்றது?
நாமே தாமே நாட்டைக் காப்பவர்?
உடலும் பொருளும் உயிரும் ஈன்ற
கடல்நிகர் நாட்டைக் காத்தற் கன்றோ?
பிழைப்புக் கருதி அழைப்பின்றி வந்த
அழுக்குளத் தாரிய அரிவைநீ அன்றே!
ஒல்காப் பெரும்புகழ்த் தொல்பெரும் பழங்குடி
நல்லியல் நங்கை, நடுக்குறல் தகுமோ?
வென்றுவா என்று நன்று வாழ்த்திச்
சென்றுவர விடைகொடு சிரிப்பொடும் களிப்பொடும்!
தலைவி
பிரியா துன்பால் பெற்ற இன்பத்தை
நினைந்துளம், கண்ணில் நீரைச் சேர்த்தது!
வாழையடி வாழைஎன வந்தஎன் மாண்பு
வாழிய சென்று வருக என்றது.
(தலைவன் தலைவியை ஆரத்தழுவிப் பிரியா
உளத்தோடு பிரிந்து செல்கிறான்.)

3
(பகைவன் வாளொடு போர்க்களத்தில் எதிர்ப் படுகின்றான்; வாளை உருவுகின்றான்.
தலைவனும் வாளை உருவுகின்றான்.)
தலைவன்
பகையே கேள்நீ, பாண்டிமா நாட்டின்
மாப்புகழ் மறவரின் வழிவந் தவன்நான்!
என்வாள் உன்உயி ரிருக்கும் உடலைச்
சின்ன பின்னம் செய்ய வல்லது!
வாளை எடுநின் வல்லமை காட்டுக.
(இருவரும் வாட்போர் புரிகிறார்கள்.)

4
(தலைவன் எதிரியின் வாள் புகுந்த தன் மார்பைக் கையால் அழுத்தியபடி சாய்கிறான்.)
தலைவன்
ஆஎன் மார்பில் அவன்வாள் பாய்ந்ததே!
(தரையில் வீழ்ந்து, நாற்றிசையையும் பார்க்கிறான்.)
என்னை நோக்கி என்றன் அருமைக்
கன்னல் மொழியாள், கண்ணீர் உகுத்துச்
சாப்பாடும் இன்றித் தான்நின் றிருப்பாள்.
என்நிலை அவள்பால் யார்போய் உரைப்பார்?
(வானில் பறவை ஒன்று மிதந்து போவதைக்
காணுகின்றான்.)
பறவையே ஒன்றுகேள்! பறவையே ஒன்றுகேள்!
நீபோம் பாங்கில் நேரிழை என்மனை,
மாபெரும் வீட்டு மணிஒளி மாடியில்
உலவாது மேனி, உரையாது செவ்வாய்,
இமையாது வேற்கண், என்மேல் கருத்தாய்
இருப்பாள் அவள்பால் இனிது கூறுக:
பெருமையை உனது அருமை மணாளன்
அடைந்தான். அவன்தன் அன்னை நாட்டுக்
குயிரைப் படைத்தான். உடலைப் படைத்தான்.
என்று கூறி ஏகுக மறந்திடேல்!
(தலைவன் தோள் உயர்த்தி உரத்த குரலில்)
பாண்டி மாநாடே, பாவையே!
வேண்டினேன் உம்பால் மீளா விடையே!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt201

இசை -- மோகனம் தாளம் -- ஆதி

வாழ்க வாழ்கவே
வளமார் எமது திராவிட நாடு
வாழ்க வாழ்கவே!

சூழும் தென்கடல் ஆடும் குமரி
தொடரும் வடபால் அடல்சேர் வங்கம்
ஆழும் கடல்கள் கிழக்கு மேற்காம்
அறிவும் திறலும் செறிந்த நாடு.
வாழ்க வாழ்கவே...

பண்டைத் தமிழும் தமிழில் மலர்ந்த
பண்ணிகர் தெலுங்கு துளுமலை யாளம்
கண்டை நிகர்கன் னடமெனும் மொழிகள்
கமழக் கலைகள் சிறந்த நாடு.
வாழ்க வாழ்கவே...

அள்ளும் சுவைசேர் பாட்டும் கூத்தும்
அறிவின் விளைவும் ஆர்ந்திடு நாடு
வெள்ளப் புனலும் ஊழித் தீயும்
வேகச் சீறும் மறவர்கள் நாடு.
வாழ்க வாழ்கவே...

அகிலும் தேக்கும் அழியாக் குன்றம்
அழகாய் முத்துக் குவியும் கடல்கள்
முகிலும் செந்நெலும் முழங்கு நன்செய்
முல்லைக் காடு மணக்கும் நாடு.
வாழ்க வாழ்கவே...

அமைவாம் உலகின் மக்களை யெல்லாம்
அடிநாள் ஈன்ற அன்னை தந்தை
தமிழர்கள் கண்டாய் அறிவையும் ஊட்டிச்
சாகாத் தலைமுறை ஆக்கிய நாடு.
வாழ்க வாழ்கவே...

ஆற்றில் புனலின் ஊற்றில் கனியின்
சாற்றில் தென்றல் காற்றில் நல்ல
ஆற்றல் மறவர் செயலில் பெண்கள்
அழகில் கற்பில் உயர்ந்த நாடு.
வாழ்க வாழ்கவே...

புனலிடை மூழ்கிப் பொழிலிடை யுலவிப்
பொன்னார் இழையும் துகிலும் பூண்டு
கனிமொழி பேசி இல்லறம் நாடும்
காதல் மாதர் மகிழுறும் நாடு.
வாழ்க வாழ்கவே...

திங்கள் வாழ்க செங்கதிர் வாழ்க
தென்றல் வாழ்க செந்தமிழ் வாழ்க
இங்குத் திராவிடர் வாழ்க மிகவே
இன்பம் சூழ்ந்ததே எங்கள் நாடு.
வாழ்க வாழ்கவே...

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt200

ஆராரோ ஆரரிரோ ஆராரோ ஆரரிரோ!

சீரோடு பூத்திருந்த செந்தாமரை மீது
நேரோடி மொய்த்துலவு நீலமணி வண்டுதனைச்
செவ்விதழால் தான்மூடும் சேதிபோல் உன்விழியை
அவ்விமையால் மூடியே அன்புடையாய் நீயுறங்கு!

கன்னங் கறேலென்று காடுபட்ட மேகத்தில்
மின்னி வெளிப்பட்ட விண்மீன்போல் உன்றன்விழி
சின்ன இமையைத் திறந்ததேன்? நீயுறங்கு!
கன்னலின் சாறே கனிச்சாறே நீயுறங்கு!

குத்துண்ட கண்ணாடி கொண்டபல வீரர்கள்போல்
துத்திக்காய் போலச் சுடர்முகத்தை நீசுருக்கி
ஏனழுதாய் என்றன் இசைப்பாட்டே கண்ணுறங்கு!
வான்நழுவி வந்த வளர்பிறையே கண்ணுறங்கு!

கன்னம்பூ ரித்துக் கனியுதடு மின்உதிர்த்துச்
சின்னவிழி பூத்துச் சிரித்ததென்ன செல்வமே?
அன்னைமுகம் வெண்ணிலவே ஆனாலும் உன்விழியைச்
சின்னதொரு செவ்வல்லி ஆக்காமல் நீயுறங்கு!

நெற்றிக்கு மேலேயுன் நீலவிழியைச் செலுத்திக்
கற்றார்போல் என்ன கருதுகின்றாய்? நீகேட்டால்
ஆனை அடிபோல் அதிரசத்தைச் சுட்டடுக்கித்
தேனில் துவைத்தெடுத்துத் தின்னென்று தாரேனோ?

கொட்டித் தும்பைப்பூக் குவித்ததுபோல் உன்னெதிரில்
பிட்டுநறு நெய்யில் பிசைந்துவைக்க மாட்டேனா?
குப்பைமணக்கக் குடித்தெருவெல் லாம் மணக்க
அப்பம் நிலாப்போல் அடுக்கிவைக்க மாட்டேனா?

மீன்வலைசேந் தும்கயிற்றை வேய்ந்த வளையம்போல்
தேன்குழல்தான் நான்பிழிந்து தின்னத் தாரேனா?
விழுந்துபடும் செங்கதிரை வேல் துளைத்ததைப்போல்
உழுந்துவடை நெய்யழுக உண்ணென்று தாரேனா?

தாழையின் முள்போன்ற தகுசீ ரகச்சம்பா
ஆழ உரலில் இடித்த அவலைக்
கொதிக்குநெய் தன்னில்தான் கொட்டிப் பொறித்துப்
பதக்குக் கொருபதக்காய்ப் பாகும் பருப்புமிட்டே

ஏலத்தைத் தூவி எதிர் வைக்கமாட்டேனா?
ஞாலத்தொளியே நவிலுவதை இன்னும் கேள்:
செம்பொன்னை மேற்பூசித் தேனைச் சுளையாக்கிக்
கொம்பில் பழுத்தநறுங் கொய்யாப் பழமும்

செதில்அறுத்தால் கொப்பரையில் தேன்நிறைந்த தைப்போல்
எதிர்த்தோன்றும் மாம்பழமும் இன்பப் பலாப்பழமும்
வேண்டுமென்றால் உன்னெதிரில் மேன்மேற் குவிந்துவிடும்.
பாண்டியனார் நன்மரபின் பச்சைத் தமிழே!

நெருங்க உறவுனக்கு நீட்டாண்மைக் காரர்
அறஞ்சிறந்த பல்கோடி ஆன தமிழருண்டே!
எட்டும் உறவோர்கள் எண்ணறு திராவிடர்கள்
"வெட்டிவா"வென் றுரைத்தால் கட்டிவரும் வீரர்அவர்

என்ன குறைச்சல் எதனால் மனத்தாங்கல்?
முன்னைத் தமிழர் முடிபுனைந்து ஞாலத்தை
ஓர்குடைக்கீழ் ஆண்ட உவகை உனக்குண்டு!
சேரனார் சோழனார் சேர்ந்தபுகழ் உன்புகழே!

ஓவியக் கரைகண்டார் உண்மைநெறி தாம்வகுத்தார்
காவிய சிற்பத்தில் கவிதையினில் கைகாரர்
உன்னினத்தார் என்றால் உனக்கின்னும் வேண்டுவதென்?
பொன்னில் துலங்குகின்ற புத்தொளியே கண்ணுறங்கு!

கற்சுவரை மோதுகின்ற கட்டித்தயிரா, நற்
பொற்குடத்தில் வெண்ணெய்தரும் புத்துருக்கு நெய்யா,நல்
ஆனைப் பசுக்கள் அழகான வெண்ணிலவைப்
போல்நிறைந்த பாலைப் புளியக்கொட்டை தான்மிதக்கும்

இன்பநறும் பாலா, என்னஇல்லை? கண்ணுறங்காய்!
அன்பில் விளைந்தஎன் ஆறுயிரே கண்ணுறங்கு!
காவிரியின் பாதாளக் காலின் சிலம்பொலியும்
பூவிரியப் பாடும் புதிய திருப்பாட்டும்

கேட்ட உழவர் கிடுகிடென நல்லவிழாக்
கூட்டி மகிழ்ச்சி குதிகொள்ளத் தோளில்
அலுப்பை அகற்றி அழகுவான் வில்போல்
கலப்பை எடுத்துக் கனஎருதை முன்னடத்திப்

பஞ்சம் தலைகாட்டப் பாராப் படைமன்னர்,
நெஞ்சம் அயராமல் நிலத்தை உழுதிடுவார்.
வித்துநெல் வித்தி விரியும் களையெடுத்துக்
கொத்துநெல் முற்றித் தலைசாய்ந்த கோலத்தை

மாற்றி யடித்து மறுகோலம் செய்தநெல்லைத்
தூற்றிக் குவித்துத் துறைதோறும் பொன்மலைகள்
கோலம் புரியும் குளிர்நாடும் உன்னதுவே!
ஞாலம் புகழும் நகைமுத்தோய் கண்ணுறங்கு!

செம்புழுக்கல் பாலோடு பொங்கச் செழுந்தமிழர்
கொம்புத்தேன் பெய்து குளிர்முக் கனிச்சுளையோ
டள்ளூற அள்ளி முழங்கையால் நெய்யழுக
உள்ளநாள் உண்ணும் உயர்நாடும் உன்னதுவே!

கோட்டுப்பூ நல்ல கொடிப்பூ நிலநீர்ப்பூ
நாட்டத்து வண்டெல்லாம் நல்லஇசை பாய்ச்சக்
கொத்தும் மரங்கொத்தி, தாளங் குறித்துவரத்
தத்துபுனல் தாவிக் கரையில் முழாமுழக்க

மின்னும்பசுமை விரிதழைப்பூம் பந்தலிலே
பன்னும் படம்விரித்துப் பச்சை மயிலாடுவதும்,
பிள்ளைக் கருங்குயிலோ பின்பாட்டுப் பாடுவதும்
கொள்ளை மகிழ்ச்சித் தமிழ்நாடு கொண்டாய்நீ

குப்பையெலாம் மாணிக்கக் கோவை, கொடுந்தூம்பிற்
கப்பும் கழுவுடையில் கண்மணியும் பொன்மணியும்!
ஆடும் குளிர்புனலோ அத்தனையும் பன்னீராம்!
சூடாமணி வரிசை தூண்டாச் சரவிளக்காம்!

எப்போதும் தட்டார் இழைக்கும் மணியிழையில்
கொப்பொன்றே கோடிபெறும் கொண்டைப்பூ என்பெறுமோ?
ஐந்தாறு வெண்ணிலவும் ஆறேழு செங்கதிரும்
வந்தாலும் நாணும் வயிரத் திருகாணி

ஒன்றுக்கே வையத்தை ஒப்படைக்க வேண்டுமெனில்
உன்மார்பின் தொங்கலுக்கு மூன்றுலகு போதுமா?
மின்காய்த்த வண்ணம் மிகுமணிக ளோடுபசும்
பொன்காய்த்த பூங்கொடியா ரோடுதம் காதலர்கள்

எண்ண மொன்றாகியே இல்லறத் தேர்தன்னைக்
கண்ணும் கருத்தும் கவருமோர் அன்புநகர்,
ஆரும்நிகர் யார்க்கும் அனைத்தும் சரிபங்கென்
றோரும்நகர், நோக்கி ஓடுந்தமிழ் நாடு

நின்நாடு! செல்வம் நிறைநாடு கண்ணுறங்கு
பொன்னான தொட்டிலில் இப்போது!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093c.htm#dt152

அச்சமும் மடமையும் இல்லாத பெண்கள்
அழகிய தமிழ் நாட்டின் கண்கள்
உச்சி இருட்டினில் பேய்வந்த தாக
உளறினால் அச்சமா? பேய் என்ப துண்டா?
அச்சமும் மடமையும்...

முச்சந்திக் காத்தானும் உண்டா? -- இதை
முணுமுணுப்பது நேரில் கண்டா?
பச்சைப் புளுகெலாம் மெய்யாக நம்பிப்
பல்பொருள் இழப்பார்கள் மடமை விரும்பி!
அச்சமும் மடமையும்...

கள்ளுண்ணும் ஆத்தாளும் ஏது? -- மிகு
கடியசா ராயமுனி ஏது?
விள்ளும்வை சூரிதான் மாரியாத் தாளாம்;
வேளைதோறும் படையல் வேண்டும்என் பாளாம்.
அச்சமும் மடமையும்...

மடமைதான் அச்சத்தின் வேராம் -- அந்த
மடமையால் விளைவதே போராம்!
மடமையும் அறமுநல் லொழுக்கமும் வேண்டும்
கல்விவேண் டும்அறிவு கேள்வியும் வேண்டும்.
அச்சமும் மடமையும்...

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093c.htm#dt151

மேகலையும் நற்சிலம்பும் பூண்டு -- பெண்ணே
வீழ்ச்சியும் சூழ்ச்சியும் தாண்டு!
போகவில்லை அகம்புறமும், நாலிரண்டும் நெஞ்சம்
புகுந்தோறும் புகுந்தோறும் அறம் எதிரிற் கொஞ்சும்
மேகலையும் நற்சிலம்பும்...

தமிழ்காத்து நாட்டினைக் காப்பாய் -- பெண்ணே
தமிழரின் மேன்மையைக் காப்பாய்
தமிழகம் நம்மதென் றார்ப்பாய்
தடையினைக் காலினால் தேய்ப்பாய்!
கமழும் சோலையும், ஆறும் நற்குன்றமும் கொண்டாய்
தமிழர் மரபினை உன்னுயிர் என்பதைக் கண்டாய்.
மேகலையும் நற்சிலம்பும்...

மூவேந்தர் கொடி கண்ட வானம் -- இன்று
முற்றிலும் கான்கிலாய் ஏனும்
ஓஓஎ னப் பகை தானும்
ஓடவே காத் திடுக மானம்
காவெலாம் தென்றலும் பூக்களும் விளையாடும் நாட்டில்
கதலியும் செந்நெலும் பயனைப் புரிந்தமணி வீட்டில்.
மேகலையும் நற்சிலம்பும்...

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093c.htm#dt150

ஆண்உயர் வென்பதும் பெண்உயர் வென்பதும்
நீணிலத் தெங்கணும் இல்லை
வாணிகம் செய்யலாம் பெண்கள்! -- நல்
வானூர்தி ஓட்டலாம் பெண்கள்!
ஆணுயர் வென்பதும்...

ஏணை அசைத்தலும் கூடும் -- அதை
யார் அசைத் தாலுமே ஆடும்!
வீணை மிழற்றலும் கூடும் -- அது
மெல்லியின் விரலுக்கா வாடும்?
நாணமும் அச்சமும் வேண்டும் -- எனில்
ஆணுக்கும் பெண்ணுக்கும் வேண்டும்.
ஆணுயர் வென்பதும்...

சேயிழை மார்நெஞ்ச மீது -- நாம்
சீறுபுலி யைக்காணும் போது
தீயதோர் நிலைமைஇங் கேது? -- நம்
தென்னாட்டின் அடிமைநில் லாது.
தூயராய்த் தொண்டாற்ற வேண்டும் -- பல
தொழிற்கல்வி யுங்கற்க வேண்டும்.
ஆணுயர் வென்பதும்...

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093c.htm#dt149

 ஒருவேளை அல்ல திருவேளை
வெற்றிலை போடு! --போடா
தொதுக்கலும் நல்லஏற் பாடு!
சுரந்திட்ட எச்சிலை
வாயினில் தேக்குதல் போலே -- வேறு
தூய்மையில் லாச்செயல்
கண்டதில் லைவைய மேலே
ஒருவேளை...

கரியாகுமே உதடு! கோவைக்
கனியைநீ காப்பதும் தேவை!
தெரியாத ஆடவர்
வாய்நிறைய எச்சிலின் சேறு
தேக்கியே திரிவார்கள்
அவருக்கும் நீஇதைக் கூறு!
ஒருவேளை...

பூவைமார் 'நல்லிதழை' நல்ல
புன்னகை சிந்திடும் 'பல்லை'
நாவினால் யாம்சொல்வ தில்லை -- அவை
நன்மணத் தாமரை! முல்லை!
பாவைமார் வாயினில்
இயல்பான மணமுண்டு பெண்ணே!
பாக்குவெற் றிலைதனை
நீக்கலே மிகநன்று கண்ணே!
ஒருவேளை...

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093c.htm#dt148

 தலைவாரிப் பூச்சூடி உன்னைப் -- பாட
சாலைக்குப் போஎன்று சொன்னாள் உன் அன்னை!
சிலைபோல ஏனங்கு நின்றாய்? -- நீ
சிந்தாத கண்ணீரை ஏன்சிந்து கின்றாய்?
விலைபோட்டு வாங்கவா முடியும்? -- கல்வி
வேளைதோ றும்கற்று வருவதால் படியும்!
மலைவாழை அல்லவோ கல்வி? -- நீ
வாயார உண்ணுவாய் போஎன் புதல்வி!

படியாத பெண்ணா யிருந்தால் -- கேலி
பண்ணுவார் என்னைஇவ் வூரார் தெரிந்தால்!
கடிகாரம் ஓடுமுன் ஓடு! -- என்
கண்ணல்ல? அண்டைவீட் டுப்பெண்க ளோடு!
கடிதாய் இருக்குமிப் போது -- கல்வி
கற்றிடக் கற்றிடத் தெரியுமப் போது!
கடல்சூழ்ந்த இத்தமிழ் நாடு -- பெண்
கல்விபெண் கல்விஎன் கின்றதன் போடு!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093c.htm#dt147

பெண்களால் முன்னேறக் கூடும் -- நம்
வண் தமிழ் நாடும்எந் நாடும்!
கண்களால் வழிகான முடிவதைப் போலே
கால்களால் முன்னேற முடிவதைப் போலே
பெண்களால் முன்னேறக் கூடும்!

படியாத பெண்ணினால் தீமை! -- என்ன
பயன்விளைப் பாளந்த ஊமை?
நெடுந்தமிழ் நாடெனும் செல்வி -- நல்ல
நிலைகாண வைத்திடும் பெண்களின் கல்வி!
பெண்களால் முன்னேறக் கூடும்!

பெற்றநல் தந்தைதாய் மாரே -- நும்
பெண்களைக் கற்கவைப் பீரே!
இற்றைநாள் பெண்கல்வி யாலே -- முன்
னேறவேண் டும்வைய மேலே!
பெண்களால் முன்னேறக் கூடும்!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093c.htm#dt146

துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்கமாட் டாயா? -- எமக்
கின்பம் சேர்க்கமாட் டாயா? -- நல்
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடிநீ
அல்லல் நீக்கமாட் டாயா? -- கண்ணே
அல்லல் நீக்கமாட் டாயா? துன்பம்...

வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வாழ்வில் உணர்வு சேர்க்க -- எம்
வாழ்வில் உணர்வு சேர்க்க -- நீ
அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்டமாட் டாயா? -- கண்ணே
ஆடிக் காட்டமாட் டாயா? துன்பம்...

அறமி தென்றும்யாம் மறமி தென்றுமே
அறிகி லாத போது -- யாம்
அறிகி லாத போது -- தமிழ்
இறைவ னாரின் திருக்குறளிலே ஒருசொல்
இயம்பிக் காட்டமாட் டாயா? -- நீ
இயம்பிக் காட்டமாட் டாயா? துன்பம்...

புறம் இதென்றும் நல்லகம் இதென்றுமே
புலவர் கண்ட நூலின் -- தமிழ்ப்
புலவர் கண்ட நூலின் -- நல்
திறமை காட்டி உனை ஈன்ற எம் உயிர்ச்
செல்வம் ஆகமாட் டாயா? -- தமிழ்ச்
செல்வம் ஆகமாட் டாயா? துன்பம்...

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093c.htm#dt145

பண்டு தமிழ்ச் சங்கத்தை
உண்டு பண்ணிய மன்னன் சீரெல்லாம்,
விண்டு புகழ்ந்து பாடி
இன்னும் வியக்கின்றார் இப் பாரெல்லாம்.

அண்டும் புலவர்க் கெல்லாம்
அந்நாள் மன்னர் கொடுத்த கொடைதானே,
தண்டமிழ் இந்நாள் மட்டும்
சாகாமைக்கே அடிப்படை மானே!

புலவர் நினைப்பை யெல்லாம்
பொன் னெழுத்தால் பதித்து நூலாக்கி,
நலம் செய்தா ரடிமானே
நம் தமிழ்வேந்தர் நம்மை மேலாக்கி!

இலை என்று புலவர்க்கோ
எடை யின்றிப் பொன்தந்தார் மூவேந்தர்,
கலை தந்தார் நமக் கெல்லாம்
அதனால் இன்றைக்கு நாம்தமிழ் மாந்தர்!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093b.htm#dt144

வெண்ணி லாவும் வானும் போலே
வீரனும்கூர் வாளும் போலே
வெண்ணிலாவும் வானும் போலே!

வண்ணப் பூவும் மணமும் போலே
மகர யாழும் இசையும் போலே
கண்ணும் ஒளியும் போலே எனது
கன்னல் தமிழும் நானும் அல்லவோ?
வெண்ணிலாவும் வானும் போலே!

வையகமே உய்யு மாறு
வாய்த்த தமிழ் என்அரும் பேறு!
துய்யதான சங்க மென்னும்
தொட்டிலில் வளர்ந்த பிள்ளை
(தம்) கையிலே வேலேந்தி இந்தக்
கடல் உலகாள் மூவேந்தர்
கருத் தேந்திக் காத்தார்; அந்தக்
கன்னல் தமிழும் நானும் நல்ல
வெண்ணிலாவும் வானும் போலே!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093b.htm#dt143

சேரன் செங்குட்டு வன்பிறந்த
வீரம் செறிந்த நாடிதன்றோ?
சேரன் செங்குட்டுவன்...

பாரோர் புகழ் தமிழ்ச் சேயே
பகை யஞ்சிடும் தீயே
நேரில் உன்றன் நிலையை நீயே
நினைந்து பார்ப் பாயே.
சேரன் செங்குட்டுவன்...

பண்டி ருந்த தமிழர் மேன்மை
பழுதாக முழு துமே
கண்டி ருந்தும் குகையிற் புலிபோல்
கண்ணு றக்கம் ஏனோ?
சேரன் செங்குட்டுவன்...

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093b.htm#dt142

உவகை உவகை உலகத்தாயின் கூத்து! -- வந்து
குவியுதடா நெஞ்சில்
உவகை உவகை!

எவையும் தன்னுள் ஆக்கிய பெருவெளி
எங்கும் அடடே தாயின் பேரொளி!
உவகை உவகை!

அவிழும் கூந்தல் வானக் கருமுகிலாய் -- இடையினின்
றலையும் பூந்துகில் பெருவெளி எங்கும் போம்
தவழப் புதுநகை மின்னித் துலங்கும்
தாய்நின் றாடிய அடிஇடி முழங்கும்
உவகை உவகை!

தொடுநீள் வானப் பெருவில் ஒருகையில் -- பெரும்புறம்
தூளா கிடவரு கதிர்வேல் ஒருகையில்
அடுநீள் விழியிற் கனலைப் பெருக்கி
ஆடும் திறல்கண் டோடும் பகைதான்
உவகை உவகை!

அகலொளி விளக்கு நிலவினில் அவள்ஆடும் -- ஆடிநின்
றந்தமி ழின்பத் தென்பாங்கிற் பாடும்
துகளறு விண்மீன் துளிகள் பறக்கத்
துடிஇடை நெளியும் துணைவிழி உலவும்
உவகை உவகை!

அறிவே உயிராய் அதுவே அவளாகி -- மற்றுள
அறமென்ப வெலாம் அழியும் எனவோதிக்
குறியும் செயலும் ஒன்றாய் இயலக்
கூத்தாடுந் தாய் பார்த்திடு தோறும்
உவகை உவகை!

மடமைப் பகைமையும் சாகப் பின்வருமோர் --கொடிதாம்
வறுமைத் தீயும் அலறிப் புறமேக
அடிமைத் தனமே துகள் துகளாக
ஆடுந் தாயவள் நாளும் வாழிய!
உவகை உவகை!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093b.htm#dt141

இன்பந் தருந்தமிழில் அன்பு பிறந்ததுண்டு;
துன்பம் இனியு முண்டோ
சொல் சொல் சொல் பகையே!
முன்பு துருப்பிடித்தி ருந்த படைக்கலமாம்
முத்தமிழ் ஒளி அறிந்து
செல் செல் செல் பகையே!
இன்பந் தருந்தமிழில்...

தெள்ளு தமிழில்இசைத் தேனைப் பிழிந்தெடுத்துத்
தின்னும் தமிழ் மறவர்
யாம் யாம் யாம் பகையே!
துள்ளும் பகைமுடித்துக் கூத்திடுவோம் தமிழர்
கொள்கை நிறைவ டைந்து
போம் போம் போம் பகையே!
இன்பந் தருந்தமிழில்...

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093b.htm#dt140

தாயின்மேல் ஆணை! தந்தைமேல் ஆணை!
தமிழகமேல் ஆணை!
தூயஎன் தமிழ்மேல் ஆணையிட்டே நான்
தோழரே உரைக்கின்றேன்:

நாயினும் கீழாய்ச் செந்தமிழ் நாட்டார்
நலிவதை நான் கண்டும்,
ஓயுதல் இன்றி அவர் நலம் எண்ணி
உழைத்திட நான் தவறேன்.

தமிழரின் மேன்மையை இகழ்ந்தவ னைஎன்
தாய்தடுத் தாலும் விடேன்!
எமைநத்து வாயென எதிரிகள் கோடி
இட்டழைத் தாலும் தொடேன்!

"தமக்கொரு தீமை" என்று நற்றமிழர்
எனைஅழைத்திடில் தாவி
இமைப்பினில் ஓடித் தரக்கடவேன் நான்
இனிதாம் என் ஆவி!

மானமொன்றே நல் வாழ்வெனக் கொண்டு
வாழ்ந்தஎன் மற வேந்தர்
பூனைகள் அல்லர்; அவர்வழி வந்தோர்
புலிநிகர் தமிழ் மாந்தர்!

ஆனஎன் தமிழர் ஆட்சியை நிறுவ
அல்லல்கள் வரின் ஏற்பேன்!
ஊனுடல் கேட்பினும் செந்தமிழ் நாட்டுக்
குவப்புடன் நான் சேர்ப்பேன்!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093b.htm#dt139

பாண்டியன் என் சொல்லைத் தாண்டிப் போனாண்டி,
பாண்டியன் என் சொல்லை...

ஈண்டு மயலில்நான் தூண்டிலில் மீனாய்
மாண்டிட விடுத்தே வேண்டிட வேண்டிட,
பாண்டியன் என் சொல்லை...

தமிழிசைப் பேச்சும், செங்கோலோச்சும்;
தடக்கை வீச்சும், காதலைப் பாய்ச்சும்,
இமைப்பினில் ஓடி அவனைத் தேடி
என்னகம் நாடி வாடிபோடி
பாண்டியன் என் சொல்லை...

பிரிந்திடும் போது நெஞ்சு பொறாது;
வரும்போது பேசா திருக்க ஒண்ணாது
எரிந்திடும் சினத்தில் எதிர்வரு வானேல்
என்னுயிர் தாவிடும் அன்னவன் மேல்
பாண்டியன் என் சொல்லை...

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093b.htm#dt138

அந்த வாழ்வுதான் எந்தநாள் வரும்?
அந்த வாழ்வுதான்

இந்த மாநிலம் முழுதாண் டிருந்தார்
இணையின்றி வாழ்ந்தார் தமிழ்நாட்டு வேந்தர்
அந்த வாழ்வுதான் எந்தநாள் வரும்?

ஒலி என்பதெல்லாம் செந்தமிழ் முழக்கம்;
ஒளி என்பதெல்லாம் தமிழ்க் கலைகளாம்!
புலி, வில், கயல் கொடி மூன்றினால்
புது வானமெங்கும் எழில் மேவிடும்
அந்த வாழ்வுதான் எந்தநாள் வரும்?

குறைவற்ற செல்வம், வாழ்வில் இன்பவாழ்வு
கொண்ட தமிழனுள்ளம் கண்ட தமிழிசை.
பிற மாந்தர்க்கும் உயி ரானதே
பெறலான பேறு சிறி தல்லவே!
அந்த வாழ்வுதான் எந்தநாள் வரும்?

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093b.htm#dt137

தமிழனே இது கேளாய் -- உன்பால்
சாற்ற நினைத்தேன் பல நாளாய்!

கமழும் உன் தமிழினை உயிரென ஓம்பு
காணும் பிற மொழிக ளோவெறும் வேம்பு!
நமையெலாம் வடமொழி தூக்கிடும் தாம்பு
நம்உரி மைதனைக் கடித்ததப் பாம்பு!
தமிழனே இது கேளாய்

தனித்தியங் கும்தன்மை தமிழினுக் குண்டு;
தமிழே ஞாலத்தில் தாய்மொழி பண்டு!
கனிச்சாறு போற்பல நூலெலாம் கண்டு
காத்ததும் அளித்ததும் தமிழ்செய்த தொண்டு.
தமிழனே இது கேளாய்

வஞ்சகர் வந்தவர் தமிழாற் செழித்தார்
வாழ்வினில் உயர்ந்தபின் தமிழையே பழித்தார்
நம்செயல் ஒழுக்கங்கள் பற்பல அழித்தார்
நாமுணர்ந்தோம்; இந்நாள் அவரஞ்சி விழித்தார்.
தமிழனே இது கேளாய்

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093b.htm#dt136

உயர்வென்று கொட்டுக முரசே -- நல்ல
உண்மைத் தமிழர்கள் வாழ்வு!
அயர்வில்லை அச்சமிங் கில்லை -- புவி
ஆளப் பிறந்தவன் தமிழன்.
உயர்வென்று கொட்டுக முரசே!

அயல் என்று கொட்டுக முரசே!-- உற
வான திராவிடர் அல்லார்!
துயர் செய்ய எண்ணிடும் பகைவர் -- திறம்
தூள் என்று கொட்டுக முரசே!
உயர்வென்று கொட்டுக முரசே!

அறிவுள்ள திராவிடர் நாட்டில் -- சற்றும்
ஆண்மை யில்லாதவர் வந்து
நமர்பசி கொள்ள நம்சோற்றை -- உண்ண
நாக்கைக் குழைப்ப துணர்ந்தோம்.
உயர்வென்று கொட்டுக முரசே!

தமிழ்நாடு தமிழருக் கென்றே -- இந்தச்
சகத்தில் முழக்கிடு முரசே!
நமைவென்ற நாட்டினர் இல்லை -- இதை
நாற்றிசை முற்றும் முழக்கு!
உயர்வென்று கொட்டுக முரசே!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093b.htm#dt135

சூதும் வாதும் நிறைந்த பூதலமீது நல்லார்
ஓதும்வழி நடந்தால் யாதும் துயரமில்லை
ஏதும் சந்தேகம் உளதோ -- நெஞ்சே இதில்
தீது சிறிதும் உளதோ?

சாதி சமயக்கடை வீதியின் அப்பால்ஒரு
சோதி அறிவிற் சரி நீதி விளங்கும் அதைக்
காதினில் தினம் கேட்பாய் -- நெஞ்சே இந்த
மேதினி தனை மீட்பாய்!

கூழுமில்லாது நாட்கள் ஏழும்பசித் துன்பமே
சூழும்படியே பிறர் தாழும்நிலை தவிர்க்க
வாழும் முறைமை சொல்வார் -- நெஞ்சே நல்லார்
பாழும் இருளைக் கொல்வார்!

மேழி உழவன் பாட்டும், கோழியின் ஆர்ப்பும் கேட்டாய்
ஆழியிற் கதிர்ஏறும் நாழிகை யாயிற்றே
வாழிய மனப்பாவாய் -- அறிஞர் காட்டும்
ஊழியம் செயப் போவாய்!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093b.htm#dt134

ஆடுவமே பள்ளுப் பாடுவமே! -- தமிழ்
ஆட்சியின் மாட்சியில் கூடுவமே -- ஆடுவமே!

கோடுயர் வேங்கடக் குன்றமுதல் -- நல்ல
குமரிமட்டும் தமிழர் கோலங் கண்டே
நாம் -- ஆடுவமே...

மானிடம் என்னுமோர் ஆதிப்பயிர் -- தமிழ்
மக்களென் றேகுதித் தாடுவமே!
கானிடை வாழ்ந்திட்ட மனிதர்க்கெலாம் -- நல்ல
கதியினைக் காட்டினர் தமிழ ரென்றே
நாம் -- ஆடுவமே...

மூலமென்றே சொல்லல் முத் தமிழாம் -- புவி
மூர்க்கம் தவிர்த்ததும் அப் புத்தமுதாம்!
ஞாலமெலாம் தமிழ், தமிழர்களே -- புவி
நாம் எனவே குதித் தாடுவமே!
நாம் -- ஆடுவமே...

வானிடை மிதந்திடும் தென்றலிலே -- மணி
மாடங்கள் கூடங்கள் மீதினிலே,
தேனிடை ஊறிய செம்பவழ -- இதழ்ச்
சேயிழை யாரொடும் ஆடுவமே!
நாம் -- ஆடுவமே...

கவிதைகள், காவியம், உயர்கலைகள் -- உளம்
கவர்ந்திடும் சிற்பமும் சிறந்தனவாம்
குவிகின்ற பொன்பொருள் செந்நெலெலாம் -- இங்குக்
குறையில வாம் என் றாடுவமே!
நாம் -- ஆடுவமே...

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093b.htm#dt133

வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே!
மாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே!
வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே
வீரனின் வீரமும், வெற்றியும் நீயே!

தாழ்ந்திடு நிலையினில் உனை விடுப்பேனோ?
தமிழன்எந் நாளும் தலைகுனி வேனோ?
சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய்
தோன்றுடல் நீஉயிர் நான்மறப் பேனோ?

செந்தமிழே! உயிரே! நறுந்தேனே!
செயலினை மூச்சினை உனக்களித்தேனே!
நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே!

முந்திய நாளினில் அறிவும் இலாது
மொய்த்தநன் மனிதராம் புதுப்புனல் மீது
செந்தாமரைக் காடு பூத்தது போலே
செழித்தஎன் தமிழே ஒளியே வாழி!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093b.htm#dt132

புகைச் சுருட்டால் இளமை பறிபோகும்
பொல்லாங் குண்டாகும்
புகைச் சுருட்டால்!

முகமும் உதடும் கரிந்துபோகும்
முறுக்கு மீசையும் எரிந்து போகும்
புகைச் சுருட்டால்!

மூச்சுக் கருவிகள் முற்றும் நோய்ஏறும் -- பிள்ளை
முத்தம் தருநே ரத்தில் வாய் நாறும்
ஓய்ச்சல் ஒழிவில் லாதிருமல் சீறும் -- நல்
ஊரோ உன்னைச் சீ என்றே கூறும்
பேச்சுக் கிடையில் பிடிக்கச் சொல்லும்
பெரியார் நெஞ்சம் துடிக்கச் சொல்லும்
புகைச் சுருட்டால்!

காசுபணத்தால் தீச்செயலை வாங்கிப் -- பின்
கைவிட எண்ணினும் முடியாமல் ஏங்கி
ஏசிக்கொண்டே விரலிடையில் தாங்கி -- நீ
எரிமலை ஆகா திருதுன்பம் நீங்கி
மாசில்லாத செந்தமிழ் நாடு
வறுமை நோய்பெற ஏன் இக்கேடு?
புகைச் சுருட்டால்!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093.htm#dt131

காப்பி எதற்காக நெஞ்சே?
காப்பி எதற்காக?

கையினில் சுக்குடன் மல்லி இருக்கையில்
காப்பி எதற்காக?

தீப்பட்ட மெய்யும் சிலிர்க்க இளிப்புக்கு
வாய்ப்புற்ற தெங்கு வளர்ந்த தென்னாட்டினில்
காப்பி எதற்காக?

ஆட்பட்டாய் சாதி சமயங்களுக்கே
அடிமை வியந்தாய் ஆள்வோர் களிக்கப்
பூப்போட்ட மேல்நாட்டுச் சிப்பம் வியந்தாய்
போதாக் குறைக்கிங்குத் தீதாய் விளைந்திட்ட
காப்பி எதற்காக?

திரும்பிய பக்கமெல் லாம்மேல் வளர்ந்தும்
சிவந்து தித்திப்பைச் சுமந்து வளைந்தும்
கரும்பு விளைந்திடும் இந்நாட்டு மண்ணும்
கசப்பேறச் செய்திடும் சுவையே இலாத
காப்பி எதற்காக?

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093.htm#dt130

பூனை வந்தது பூனை! -- இனிப்
போனது தயிர்ப் பானை!

தேனின் கிண்ணத்தைத் துடைக்கும் -- நெய்யைத்
திருடி உண்டபின் நக்குந்தன் கையைப்
பூனை வந்தது பூனை!

பட்டப் பகல்தான் இருட்டும் -- அது
பானை சட்டியை உருட்டும்!
சிட்டுக் குருவியும் கோழியும் இன்னும்
சின்ன உயிரையும் வஞ்சித்துத் தின்னும்
பூனை வந்தது பூனை!

எலிகொல்லப் பூனை தோது -- மெய்தான்
எங்கள் வீட்டில் எலி ஏது?
தலை தெரியாத குப்பை இருட்டறை
தன்னிலன்றோ எலிக்குண்டு திருட்டறை!
பூனை வந்தது பூனை!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093.htm#dt129

என்றன் நாயின் பேர் அப்பாய்! அது
முன்றில் காக்கும் சிப்பாய்!

ஒன்றும் செய்யாது விளையாடும்; பெருச்சாளியைக்
கொன்று போடும்; குலைக்கும் எதிராளியை;
என்றன் நாயின் பேர் அப்பாய்...

அதன் இனத்தை அதுவே பகைக்கும்! -- எனில்
அதுதான் மிகவும் கெட்ட வழக்கம்! -- அது
முதல் வளர்த்தவன் போஎன்றாலும் போகாது;
மூன்றாண்டாயினும் செய்தநன்றி மறவாது!
என்றன் நாயின் பேர் அப்பாய்...

நாய் எனக்கு நல்லதோர் நண்பன் -- அது
நான் அளித்ததை அன்புடன் உண்ணும் -- என்
வாய் அசைந்திடில் முன்னின்றே தன் வாலாட்டும்
வருத்தினாலும் முன்செய்த நன்றி பாராட்டும்
என்றன் நாயின் பேர் அப்பாய்...

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093.htm#dt128

காக்கை யிடத்திலுள்ள ஒற்றுமை கண்டு -- நீ
வாழ்க்கை நடத்தினால் நன்மை உண்டு
காக்கை யிடத்திலுள்ள ஒற்றுமை...

ஆக்கிய சோறு கொஞ்சம் சிந்திக் கிடக்கும்! -- காக்கை
அழைத்துத்தன் இனத்தொடு குந்திப் பொறுக்கும்
காக்கை யிடத்திலுள்ள ஒற்றுமை...

காக்கையை ஒருபையன் கொன்று விட்டதால் --அதைக்
காக்கைகள் அத்தனையும் கண்டு விட்டதால்
கூக்குரல் இட்டபடி குந்தி வருந்தும்! -- அதைக்
கொன்றபையன் கண்டுதன் நெஞ்சு வருந்தும்
காக்கை யிடத்திலுள்ள ஒற்றுமை...

வரிசையில் குந்தியந்தக் காக்கைகள் எலாம் -- நல்ல
வரிசை கெட்டமக்களின் வாழ்க்கை நிலையைப்
பெருங்கேலி யாய்மிகவும் பேசியிருக்கும் -- அதன்
பின்பவைகள் தத்தமிடம் நோக்கிப் பறக்கும்
காக்கை யிடத்திலுள்ள ஒற்றுமை...

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093.htm#dt127

இத்தனைச் சிறிய சிட்டு! -- நீபார்!
எத்தனை சுறுசுறுப்பு! -- தம்பி
இத்தனைச் சிறிய சிட்டு!

குத்தின நெல்லைத் தின்றுநம் வீட்டுக்
கூரையில் குந்தி நடத்திடும் பாட்டு
இத்தனைச் சிறிய சிட்டு!

கொத்தும் அதன்மூக்கு முல்லை அரும்பு
கொட்டை பிளந்திடத் தக்க இரும்பு!
தொத்தி இறைப்பினில் கூடொன்று கட்டும்
கூட்டை நீ கலைத் தாலது திட்டும்!
இத்தனைச் சிறிய சிட்டு!

மல்லி பிளந்தது போன்றதன் கண்ணை
வளைத்துப் பார்த்த ளாவிடும் விண்ணை!
கொல்லையில் தன் பெட்டை அண்டையில் செல்லும்
குதித்துக் கொண்டது நன்மொழி சொல்லும்
இத்தனைச் சிறிய சிட்டு!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093.htm#dt126

நிறையப் பால் தரும் கறவை -- நீ
மறவேல் அதன் உறவை!
குறைவிலாது வைத் திடுக தீனியைக்
குளிப் பாட்டிவா நாளும் மேனியை!
நிறையப் பால்தரும் கறவை!

நோய் மிகுத்து மாளும்! -- கொட்டில்
தூய்மை செய்எந் நாளும்!
தோய்வு குப்பை கூளம் -- இன்றித்
துடைக்க என் ஓக்காளம்?
வாய் மணக்கவே, உடல் மணக்கவே
வட்டில் நெய்யோடு கட்டித்தயிர் ஏடு
நிறையப் பால்தரும் கறவை!

ஈக்கள் மொய்த்தல் தீது! -- கூடவே
எருமை கட்டொ ணாது!
மேய்க்கப் போகும் போது -- மேய்ப்போன்
விடுக பசும்புல் மீது!
நோக்கும் கன்றினும், நமது நன்மையைக்
காக்கும் தாயடா! காக்கும் தாயடா!
நிறையப் பால்தரும் கறவை!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093.htm#dt125

முழுமை நிலா! அழகு நிலா!
முளைத்ததுவிண் மேலே --அது
பழைமையிலே புதுநினைவு
பாய்ந்தெழுந்தாற் போலே!
அழுதமுகம் சிரித்ததுபோல்
அல்லி விரித்தாற் போல் -- மேல்
சுழற்றி எறிந்த வெள்ளித்தட்டுத்
தொத்திக்கிடந் தாற்போல்
முழுமை நிலா! அழகு நிலா!

குருட்டு விழியும் திறந்ததுபோல்
இருட்டில் வான விளக்கு! -- நம்
பொருட்டு வந்ததுபாடி ஆடிப்
பொழுது போக்கத் துவக்கு!
மரத்தின் அடியில் நிலவு வெளிச்சம்
மயிலின் தோகை விழிகள்! -- பிற
தெருக்கள் எல்லாம் குளிரும் ஒளியும்
சேர்த்து மெழுகும் வழிகள்!
முழுமை நிலா! அழகு நிலா!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093.htm#dt124

மழையே மழையே வா வா -- நல்ல
வானப்புனலே வா வா! --இவ்
வையத்தமுதே வாவா!

தழையா வாழ்வும் தழைக்கவும் -- மெய்
தாங்கா வெப்பம் நீங்கவும்
உழுவாரெல்லாம் மலைபோல் எருதை
ஓட்டிப் பொன்னேர் பூட்டவும் மழையே...

தகரப்பந்தல் தணதண வென்னத்
தாழும் குடிசை சளசள என்ன
நகரப்பெண்கள் செப்புக் குடங்கள்
நன்றெங் குங்கண கணகண வென்ன மழையே...

ஏரி குளங்கள் வழியும்படி, நா
டெங்கும் இன்பம் பொழியும்படி, பொடி
வாரித்தூவும் பூவும் காயும்
மரமும் தழையும் நனைந்திடும்படி மழையே...

இல்லாருக்கும், செல்வர்கள் தாமே
என்பாருக்கும், தீயவர் மற்றும்
நல்லாருக்கும் முகிலே சமமாய்
நல்கும் செல்வம் நீயேயன்றோ? மழையே...

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093.htm#dt123

சினத்தை யடக்குதல் வேண்டும் -- சினம்
உனக்கே கெடுதியைத் தூண்டும்!

சினத்தினை யடக்கிட முடியுமா என்று
செப்புகின்றாய் எனில்கேள் இதை நன்று

வலிவுள்ளவன் என்று கண்டு -- சினம்
வாராமலே யடக்கல் உண்டு;
வலிவிலான்மேல் அன்பு கொண்டு -- அதை
மாற்றாதான் பெரிய மண்டு!
நலியும் மொழிகளைப் பேசவும் சொல்லும்
நாக்கையும் பல்லால் நறுக்கவும் சொல்லும்
சினத்தை யடக்குதல் வேண்டும்!

அடங்கா வெகுளிமண் மேலே -- காட்
டாறுபோய்ச் சீறுதல் போலே,
தொடர்ந்தின்னல் செய்யுமதனாலே -- அதைத்
தோன்றாமலே செய்உன் பாலே!
கடிதில் சுடுமிரும்பைத் தூக்கவும் வைக்கும்
கண்ணாடி மேசையைத் தூளாய் உடைக்கும்
சினத்தை யடக்குதல் வேண்டும்!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093.htm#dt122

பொறுமைதான் உன்றன் உடைமை! அதைப்
போற்றலே கடமை

பொறுமையாற் கழியும் நாளிலே
புதுவன்மை சேருமுன் தோளிலே!
பொறுமைதான் உன்றன் உடைமை!

பொறுமையுடைய ஏழையே கொடையன்!
பொறுமையிலாதவன் கடையன்!
இறைவனே எனினும் பிழை செய்தோன்
ஏதுமற்றவனாகி நைவான்!
பொறுமைதான் உன்றன் உடைமை!

பலமுறை பொறுப்பாய் வேறு
பழுதும் நேருமெனில் சீறு!
நிலைமை மிஞ்சுகையில் பகைவனை
நீறாக்கலே பொறுமையின் பயன்
பொறுமைதான் உன்றன் உடைமை!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093.htm#dt121

மெய் சொல்லல் நல்லதப்பா! தம்பி
மெய் சொல்லல் நல்லதப்பா!

கண்டதைச் சொல்லென்று சொன்னாலும் -- நீ
உண்டதைச் சொல்லென்று சொன்னாலும்,
மண்டை யுடைத்திட வந்தாலும் -- பொருள்
கொண்டுவந் துன்னிடம் தந்தாலும்
மெய் சொல்லல் நல்லதப்பா!

பின்னவன் கெஞ்சியும் நின்றாலும் --அன்றி
முன்னவன் அஞ்சிட நின்றாலும்
மன்னவரே எதிர் நின்றாலும் -- புலி
தின்னவரே னென்று சொன்னாலும் -- நீ
மெய் சொல்லல் நல்லதப்பா!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093.htm#dt120

அன்பை வளர்த்திடுவாய் -- மெய்
யன்பை வளர்த்திடுவாய்

கூடப் பிறந்த குழந்தை யிடத்தினில்
கொஞ்சுதல் அன்பாலே! உற
வாடி அம்மாவை மகிழ்ந்த மகிழ்ச்சியும்
அன்பின் திறத்தாலே!
தேடிய அப்பத்தில் கொஞ்சத்தை இன்னொரு
சின்னவனுக்குத் தர --நீ
ஓடுவ துண்டெனில் கண்டிருப்பாய் உன்
உள்ளத்திருந்த அன்பை!

கன்றையும் ஆவையும் ஒன்றாய் இணைத்தது
கருதில் அன்பன்றோ?
உன்னையும் உன்னரும் தோழர்கள் தம்மையும்
ஒட்டிய தன்பன்றோ?
சென்னையி னின்றொரு பேர்வழி வந்ததும்
சிட்டுப் பறந்ததுபோல் -- நீ
முன்னுற ஓடஉன் உள்ளம் பறந்ததும்
முற்றிலும் அன்பன்றோ?

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093.htm#dt119

தூய்மை சேரடா தம்பி -- என்
சொல்லை நீபெரிதும் நம்பித்
தூய்மை சேரடா தம்பி!

வாய்மையாலும் ஒழுக்கத்தினாலும் அகத்
தூய்மை உண்டாகும் மேலும்மேலும்
தூய்மை சேரடா தம்பி!

உடையினில் தூய்மை -- உண்ணும்
உணவினில் தூய்மை -- வாழ்வின்
நடையினில் தூய்மை -- உன்றன்
நல்லுடற் றூய்மை -- சேர்ப்பின்
தடையில்லை வாழ்நாள் ஒவ்வொன்றும் இன்பம்
தரும்நாள் ஆகும் நீஎன்றும்
தூய்மை சேரடா தம்பி!

துகளிலா நெஞ்சில் -- சாதி
துளிப்பதும் இல்லை -- சமயப்
புகைச்சலும் இல்லை -- மற்றும்
புன்செயல் இல்லை -- தம்பி
அகத்திலே அன்பின் வெள்ளம் மூளும்; தீய
அச்சம் போகும்! நீ எந்நாளும்
தூய்மை சேரடா தம்பி!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093.htm#dt118

இன்று குழந்தைகள் நீங்கள் -- எனினும்
இனிஇந்த நாட்டினை ஆளப் பிறந்தீர்!
இன்று குழந்தைகள் நீங்கள்!

நன்றாய்ப் படியுங்கள்! நாட்டின் குழந்தைகாள்!
ஒன்றாய் இருங்கள் உயர்வினை எண்ணுங்கள்!
இன்று குழந்தைகள் நீங்கள்!

குன்றினைப்போல் உடல்வன்மை வேண்டும்!
கொடுமை தீர்க்கப்போ ராடுதல் வேண்டும்!
தின்றதையே தின்று தெவிட்டுதல் இல்லாமல்
அன்றன்று வாழ்விற் புதுமை காணவேண்டும்
இன்று குழந்தைகள் நீங்கள்!

பல்கலை ஆய்ந்து தொழில் பலகற்றும்,
பாட்டிற் சுவைகாணும் திறமையும் உற்றும்,
அல்லும் பகலும் இந்நாட்டுக் குழைப்பீர்கள்!
அறிவுடன் ஆண்மையைக் கூவி அழைப்பீர்கள்!
இன்று குழந்தைகள் நீங்கள்!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093.htm#dt117

பசி என்று வந்தால் ஒருபிடி சோறு
புசி என்று தந்துபார் அப்பா
பசி என்று வந்தால்...

பசையற்ற உன் நெஞ்சில் இன்பம் உண்டாகும்
பாருக் குழைப்பதே மேலான போகம்
பசி என்று வந்தால்...

அறத்தால் வருவதே இன்பம் -- அப்பா
அதுவலால் பிறவெலாம் துன்பம்!
திறத்தால் அறிந்திடுக அறம்இன்ன தென்று
செப்புநூல் அந்தந்த நாளுக்கு நன்று!
பசி என்று வந்தால்...

மனுவின்மொழி அறமான தொருநாள் -- அதை
மாற்று நாளே தமிழர் திருநாள்!
சினம்அவா சாதிமதம் புலைநாறும் யாகம்
தீர்ப்பதே இந்நாளில் நல்லறம் ஆகும்!
பசி என்று வந்தால்...

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093.htm#dt116

ஓவியம் வரைந்தான் -- அவன் தன்
உளத்தினை வரைந்தான்!
ஒல்லிஇடை எழில் முல்லை நகை இரு
வில்லைநிகர் நுதல் செல்வியை வைத்தே
ஓவியம் வரைந்தான்!

கூவும் குயில்தனைக் கூவா திருத்திக்
கூந்தல் சரிந்ததென் றேந்தித் திருத்தி
மாவின் வடுப்போன்ற கண்ணை வருத்தி
வஞ்சியின் நெஞ்சத்தைத் தன்பாற் பொருத்தித்
தேவை எழுதுகோல் வண்ணம் நனைத்தே
தீர்ந்தது தீர்ந்தது சாய்ந்திடேல் என்றே
ஓவியம் வரைந்தான்!

காதலைக் கண்ணிலே வை! என்று சொல்வான்
கணவ னாகஎன்னை எண்ணென்று சொல்வான்
ஈதல்ல இவ்வாறு நில்லென்று சொல்வான்
இதழினில் மின்னலை ஏற்றென்று சொல்வான்
கோதை அடியில்தன்கை கூப்புதல் போலவும்
கொள்கை மகிழ்ந்தவள் காப்பது போலவும்
ஓவியம் வரைந்தான்!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093.htm#dt115

மந்தையின் மாடு திரும்பையிலே -- அவள்
மாமன் வரும் அந்தி நேரத்திலே
குந்தி இருந்தவள் வீடு சென்றாள் -- அவள்
கூட இருந்தாரையும் மறந்தாள்!
தொந்தி மறைத்திட வேட்டிகட்டி -- அவன்
தூக்கி வந்தானொரு வெல்லக்கட்டி
இந்தா எனக் கொடுத் திட்டாண்டி -- அவன்
எட்டி ஒரே முத்தம் இட்டாண்டி!

கட்டி வெல்லத்தைக் கசக்கு தென்றாள் -- அவன்
கட்டாணி முத்தம் இனிக்கு தென்றாள்
தொட்டியின் நீரில் குளிக்கச் சொன்னாள் -- அவன்
தோளை அவள் ஓடித் தேய்த்து நின்றாள்
"கொட்டிய நீரில் குளிர்ச்சி உண்டோ -- இந்தக்
கோடை படுத்திடும் நாளில்?" என்றாள்
"தொட்டியின் தண்ணீர் கொதிக்கு" தென்றான் -- "நீ
தொட்ட இடத்தில் சிலிர்க்கு" தென்றான்.

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093.htm#dt114

வருகின்றார் தபால்காரர் -- கடிதம்
தருகின்றாரோ இல்லையோ?
வருகின்றார் தபால்காரர்!

தருகின்றார் கடிதம் எனினும் அதுஎனக்
குரியதோ என் தந்தைக் குரியதோ?
வருகின்றார் தபால்காரர்!

வரும் அக்கடிதம் அவர் வரைந்ததோ
மாமியார் வரைந்ததோ?
திருமணாளர் வரைந்த தாயினும்
வருவதாய் இருக் குமோ இராதோ?
வருகின்றார் தபால்காரர்!

அன்பர் அவர் வருவதாயினும்
ஆடி போக்கியோ விரைவிலோ?
இன்று போதல் நூறாண்டு போதலே
அன்றி நாளைஎன் பதுவென் சாதலே!
வருகின்றார் தபால்காரர்!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093.htm#dt113

காடைக் காரக் குறவன் வந்து
பாடப் பாடக் குறத்தி தான்
கூடக் கூடப் பாடி ஆடிக்
குலுங்கக் குலுங்கச் சிரித்தனள்

சாடச் சாட ஒருபுறப் பறை
தக தக வென் றாடினாள்
போடப் போடப் புதுப் புதுக்கை
புதுப் புதுக்கண் காட்டினாள்

ஓடிச் சென்று மயிலைப் போல
ஒதுங்கி நிலையில் நிமிர்ந்துமே
மூடி மலர்க்கை திறந்து வாங்கி
முறிப்பும் முத்தமும் குறித்தனள்

தேடத் தேடக் கிடைப்ப துண்டோ
சிறுத்த இடுப்பில் நொடிப்பு கள்
ஈடு பட்டது நேரில் முத்தமிழ்
ஏழை மக்களின் வாழ்விலே!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093.htm#dt112

சேர்த்துக் கட்டிய முல்லை வேண்டு மென்றேன் -- நல்ல
சேயிழை அவள் சிரிப்பு முல்லை தந்தாள்!

பார்த்துப் பறித்த தாமரைப்பூத்
தீர்த்து விலைக்குக் கொடடி என்றேன்
பூத்த முகத் தாமரையாள்
புதுமை காட்டி மயங்கி நின்றாள் சேர்த்து...

தேவையடி தாமரை இதழ் என்றேன்
தேனொழுகும் வாயிதழ்மலர் கின்றாள் -- ஒரு
பூவைக் காட்டிப் பேர்சொல் என்றேன்
பூவை "என்பேர் பூவை" என்றாள்
ஆவல் அற்றவன் போல் நடந்தேன்
அவள் விழிதனில் அலரி கண்டேன் சேர்த்து...

காவல் மீறிக் கடைக்கு வந்து விழுந்து -- பலர்
கண்பட வாடிய மருக்கொழுந்து நீ!
மேவா தடி என்று சொன்னேன்
வேங்கையில் ஈ மொய்க்கா தென்றாள்
தேவைக்கு மணம் வேண்டும் என்றேன்
திருமணம் என்று தழுவி நின்றாள். சேர்த்து...

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093.htm#dt111

கசங்கு சீவடி பிரம்பு செற்றடி
கைவேலை முடித் திடலாம் -- நம்
பசங்கள் பசிக்கு விரைவில் சென்றால்
பழயதைக் கொடுத் திடலாம்

பிசைந்து வைத்துள மாவும் தேனும்
பீர்க்கங் கொடியின் ஓரம் -- அந்த
உசந்த பானை திறந்து கரடி
உருட்டிடும் இந்த நேரம்

கூடைமுறங்கள் முடித்து விட்டேன்
காடை இறக்கை போலே -- இனி
மூடுதட்டும் குழந்தை மூச்சிலும்
முடிப் பதுதான் வேலை

காடு வெட்டவும் உதவி யில்லாக்
கழிப்புக் கத்தியைத் தீட்டி -- நீ
ஏடுபத்தாய் மூங்கில் பிளக்க
எழுந்திரு கண் ணாட்டி

சோடியாக நா மிருவர்
கூடி உழைக்கும்போது -- நம்
ஓடும்நரம்பில் உயிர் நடப்பதை
உரைத்திட முடி யாது

பாடி நிறுத்தி நீகொடுத்திடும்
பாக்கு வெற்றிலைச் சருகும் -- அத
னோடு பார்க்கும் பார்வையும் என்
உயிரினை வந்து திருகும்.

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093.htm#dt110

வெய்யில் தாழ வரச் சொல்லடி -- இந்தத்
தையல் சொன்ன தாகச் சொல்லடி
வெய்யில் தாழ வரச் சொல்லடி

கையில் கோடாலி கொண்டு
கட்டை பிளப் பாரைக் கண்டு
கொய்யாக் கனியை இன்று
கொய்து போக லாகும்என்று
வெய்யில் தாழ வரச் சொல்லடி

கூரைக்குப்பின் னால் இருக்கும் தென்னை -- அதன்
கூட இருக்கும் வளர்ந்த புன்னை
நேரினிலே காத்திருப்பேன்! என்னை
நிந்திப்பதில் என்னபயன் பின்னை?
வெய்யில் தாழ வரச் சொல்லடி

தாய் அயலூர் சென்றுவிட்டாள்; நாளை -- சென்று
தான் வருவாள் இன்றுநல்ல வேளை
வாய் மணக்கக் கள்ளழுகும் பாளை -- நாள்
மாறிவிட்டால் ஆசை எல்லாம் தூளே
வெய்யில் தாழ வரச் சொல்லடி.

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093.htm#dt109

அழுக்குத் துணிக்குள்ளே அறத்தோடு பிணைந்துள்ள
அவ்வுயிரே என்றன் ஆருயிராம்!

பழுப்பேறக் காய்ச்சிய இருப்பினைத் தூக்கி
உழைப்பாலும் உணர்வாலும் உலகை உண்டாக்கி -- இவ்
அழுக்குத் துணிக்குள்ளே...

பழக்காடும் கிளியும்போல் நானும் அத்தானும்
பகற்போதைக் கழித்தபின் அவன் கொஞ்சமேனும்
பிழைஇன்றி ஆலைக்குச் சென்றுதன் மானம்
பேண இராவேலையைக் காணாவிடிலோ ஊனம்
தழற் காட்டிலே இரும்புச் சரக்கும் உருகக்கண்டு
விழிப்போடிருந்து வேண்டும் உருப்படி செய்வதுண்டு
அழுக்குத் துணிக்குள்ளே...

அறம்புரிவார் எய்தும் இன்பமே இன்பம்
அயலார்க்கு நலம்செய்யார் எய்துவார் துன்பம்
இறந்து படும்உடலோ ஏகிடும் முன்பும்
எழில் உள்ளம் நன்மைதீமை இனம்கண்ட பின்பும்
"அறஞ்செய் அறஞ்செய் என்றே அறிவேஎனை அழைத்தால்
இறந்தார்போல் இருப்பேனோ" என்பான்என் அத்தான்
அழுக்குத் துணிக்குள்ளே...

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093.htm#dt108

ஆலையின் சங்கேநீ ஊதாயோ? மணி
ஐந்தான பின்னும் பஞ்சாலையின்...

காலைமுதல் அவர் நெஞ்சம் கொதிக்கவே,
வேலை செய்தாரேஎன் வீட்டை மிதிக்கவே

ஆலையின் சங்கே...

மேலைத் திசைதனில் வெய்யிலும் சாய்ந்ததே
வீதி பார்த்திருந்தஎன் கண்ணும் ஓய்ந்ததே
மேலும் அவர்சொல் ஒவ்வொன்றும் இன்பம் வாய்ந்ததே
விண்ணைப் பிளக்கும்உன் தொண்டையேன் காய்ந்ததே
ஆலையின் சங்கே...

குளிக்க ஒருநாழிகை யாகிலும் கழியும்
குந்திப்பேச இரு நாழிகை ஒழியும்
விளைத்த உணவிற்கொஞ்ச நேரமும் அழியும்
வெள்ளி முளைக்குமட்டும் காதல் தேன் பொழியும்
ஆலையின் சங்கே...

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093.htm#dt107

களை யெடுக்கின்றாள் -- அதோ
கட்டழகுடையாள் சிற்றிடையாள் அதோ
களை யெடுக்கின்றாள்!

வளவயல்தனில் மங்கைமாருடன்
இளங் கரும்பிடைச் செங்கரும்பு போல்
களை யெடுக்கின்றாள்!

கவிழ்ந்த தாமரை
முகம் திரும்புமா?--அந்தக்
கவிதை ஓவியம்
எனை விரும்புமா?
அவிழ்ந்து வீழ்ந்த கருங்கூந்தலாம்
அருவிநீரில் எப்போது முழுகலாம்?-- களை

"செந்நெல் காப்பது
பொதுப்பணி செய்யல்!--ஆம்"
என்ற நினைவினால்
என்னருந் தையல்,
மின்னுடல் வளைய வளையல்கள் பாட
விரைவில் செங்காந்தள் விரல்வாட-- களை

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093.htm#dt106

சென்று பொழுதுசாய--வரு
கின்றேனடி விரைவாக!
இன்று தவறினால் ஈரம் போகுமடி
இருட்டிப் போகுமுன் விதைக்கலாகுமடி-- சென்று

வேலி முள்சுமந்த கூலிகொடடி
ஆள் வந்தால்--நீ
வேளை ஆகுமுன் கொண்டுவா
கூழிருந்தால்!

வேலைக்காகப் பகல் போதில்
உன்னைப் பிரிந்தால்
விடியுமட்டும் யார் கேட்பர்
காதல் புரிந்தால்-- சென்று

சேவல் குரல்கிழியக் கூவல்
கேளடி கரும்பு!--நின்
ஆவல் தெரியுமடி போக
விடைகொடு! திரும்பு!

தேவையிருக்கையில் உன்றன்
நெஞ்சோ இரும்பு!
சிவலைப் பசுவுக்கோ தீனி
வைக்க விரும்பு-- சென்று.

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093.htm#dt105

இழை யெலாம் அவள் பூங்
குழலோ! கைத்தறியின்-- இழை

பிழைசெய்தாள் என்றுதாய் துரத்தினாள்--என்
விழியெலாம் அவளையே பொருத்தினாள்

தொழில் முடிந்ததும் உணவுண்டு--நான்
தூங்கு முன்னே எனைக் கண்டு--மங்கை,
"எழுதினீர்களா மேற்கொண்டு-- பதில்
என்தாய்க்" கென்று கேட்டதுண்டு--தேன்
பிழியும் அவளிதழ் தின்றதா பிழை?--அவள்
பின்னும் என்னிடம் நின்றதா பிழை?-- இழை


தார்கொண்ட நாடாவைக் கையினால்--நான்
தறியில் கோப்பதும் தேவை--அன்றோ?
பார்கொண்ட மானத்தை--நான்
பாதுகாப்பதும் தேவை--மிகச்
சீர்கொண்ட என்குளிர்ப் பூங்காவை--நான்
சேரவும் கேட்க வேண்டும் அம்மாவை!-- இழை

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093.htm#dt104

மாடுமேய்ப் பவனிடம் எனக்கென்ன வேலை?
வஞ்சிஎன் றழைத்தான் ஏனென்றேன் மாலை!--
மாடுமேய்ப் பவனிடம் எனக்கென்ன வேலை?

பாடொரு பாட்டென்றேன் பாடி இருந்தான்
பைந்தமிழ் கேட்டுநான் ஆடி யிருந்தேன்--
மாடுமேய்ப் பவனிடம் எனக்கென்ன வேலை?

"ஓடையில் தாமரை வாடிடும்" என்றான்
உள்ளங்கை விரித்தும் கூப்பியும் நின்றேன்
"வாடாத தாமரை உன்முகம்" என்றான்
மலர்காட்டி முகங்காட்டி வாய்பார்த்து நின்றேன்
"கூடியிருக்க" என்றான் கைகோத்து நின்றேன்
காடும் கமழ்ந்தது நான்விட் டகன்றேன்--
மாடுமேய்ப் பவனிடம் எனக்கென்ன வேலை?

காளைசொற் படிமறு நாளைக்குச் சென்றேன்
"கனிபோன்ற தென்பாங்கு பாடாயோ?" என்றான்
வேளை யாகிவிடும் என்று நவின்றேன்
விரும்பிப் பசுக்கறந்து "குடி" என்று நின்றான்
ஆளன் கொடுத்தபா லாழாக்குப் பால் என்றேன்
"அல்லடி காதற் கலப்பால் தான்" என்றான்--
மாடுமேய்ப் பவனிடம் எனக்கென்ன வேலை?

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093.htm#dt102

[திராவிடர் புரட்சித் திருமணம் இந்நாளில் முன்னாளிற்
போலின்றிப் பெருமக்களால் மிகுதியும் மெற்கொள்ளப்
பட்டுவருகிறது. ஆங்காங்கு - அன்றன்று, திராவிடர்
புரட்சித் திருமணங்கள். சில அல்ல, மிகப் பல!
மணம் நடத்துவோர் சிற்றூராயினும் - தம் ஊரில் உள்ள
வர்களைக் கொண்டே நடத்திக் கொள்வதால் செலவு
குறையும். தலைவர்கட்கும் தொல்லை இராது.]

1. அழைப்பிதழால் அல்லது வேண்டுகோளால் மண வீட்டில்
குழுமியோர் அவையத்தார் ஆவார்.

2. இசை: திராவிட நாட்டுப் பண்.**
** திராவிட நாட்டுப் பண் பாரதிதாசன் கவிதைகள் இரண்டாம்
தொகுதியில் உளது

3. மணமக்கள் அவைக்கு வருதல்.

4. முன்மொழிவோர் அவையில் எழுந்து, புஅவைத் தலைமை
தாங்கி, இத்திருமணத்தை முடித்துத்தரும்படி இன்னாரை
வேண்டிக்கொள்கிறேன்மு என்று முன் மொழிதல்.

5. அவையத்தாரின் சார்பில் ஒருவர் அதை, புநாங்கள்
ஆதரிக்கிறோம்மு என்று வழிமொழிதல்.

6. முன் மொழிந்தார், வழி மொழிந்தார் அவைத் தலைவரை
அழைத்துவந்து சிறப்புறுத்தி இருக்கை காட்டுதல்.

7. அவைத் தலைவர் முன்னுரை.

8. திருமணம் நடத்துதல்: மணப்பெண், புஇன்னாரை நான்
என் வாழ்க்கைத் துணைவராகக் கொண்டு வாழ்க்கை
நடத்த ஒப்புகிறேன்மு என்று சொல்லல். மணமகனும்
அவ்வாறு சொல்லல். அதன்மேல் இருவரும் மாலை
மாற்றுதல்; கணையாழி மாற்றுதல். புவாழ்கமு என முழங்குதல்.

9. தலைவர் மற்றும் அறிஞர் மணமக்களை வாழ்த்துதல்.

10.வரிசை: அவையத்தார்க்கு வெற்றிலை, பாக்கு முதலிய வழங்குதல்.
இந்த நடைமுறைக்கு முதல்நாளே நீதிமன்றத்தில்
மணமகன் மணமகள் மணப்பதிவு செய்து கொள்வ
துண்டு. பிறகும் பதிவு அறிவிப்புச் செய்து கொள்ளலாம்.

இக்கருத்தை வைத்தே சுருக்கமாகக் கவிதை நடையில்
ஈண்டு எழுதியுள்ளேன். இங்கு காட்டிய திட்டம் பெரும்
பாலும் நடைபெறுகின்றது என்பது தவிர, இப்படித்தான்
நடத்தப்பட வேண்டும் என்று கட்டுப்படுத்தியதாகாது.
இதனிலும் சுருக்கமான முறையில் நடத்திக் கொள்ளலாம்.
ஆதலினால்தானே இது புரட்சித் திருமணம்?
----- பாரதிதாசன்

1
அவையத்தார்
அகவல்
வருக வருகென மலர்க்கை கூப்பித்
திருமண மக்கட்கு உரியோர் எதிர்கொளத்
திராவிட நாட்டுப் பெருங்குடி மக்கள்
அரிவைய ரோடுவந் தமர்ந்தனர் நிறையவே!
குழலும் முழவும் பொழிந்த இன்னிசை
மழையை நிறுத்திஓர் மறவன் எழுந்து,தேன்
மழைபொழி வான்போல் மாத்தமிழ் சிறக்கத்
திராவிட நாட்டுப்பண் பாடினான்;
ஒருபெரு மகிழ்ச்சி நிலவிற்று அவையத்தே.
மணமக்கள் வருகை
மணமகள் தோழிமார் சூழவும், மணமகன்
தோழர் சூழவும் தோன்றி அவைதொழுது
யுஇருக்கரு என்று தோழர் இயம்ப
இருக்கையில் இருவர் அமர்ந்தி ருந்தனர்.
2
முன் மொழிதல்
மன்னுசீர் மணப்பெண், மணமகன் சார்பில்
முன்மொழிந் தார்ஓர் முத்தமிழ் அறிஞர்:
புதிராவிடநாட்டுப் பெருங்குடி மக்களே,
அருமைத் தோழியீர் தோழரே அறிஞரே,
என்றன் வணக்கம் ஏற்றருள் வீர்கள்.
இன்று நடைபெற இருக்கும்இத் திராவிடர்
புரட்சித் திருமணப் பெருங்கூட் டத்திற்குத்
தலைமை தாங்கவும் நிலைமை உயர
மணமகள் மணமகன் வாழ்க்கை ஒப்பந்தம்
நிறைவேற் றவும்பெரி யாரை
முறையில் வேண்டினேன் முன்னுற வணங்கியே.மு
வழி மொழிதல்
அவையத் தாரின் சார்பிலோர் அறிஞர்,
புமுன்மொழிந் தாரின் பொன்மொழி
நன்றொப்பு கின்றோம்மு என்றார் இனிதே.
வேண்டுகோள்
முன்மொழிந் தாரும், வழிமொழிந் தாரும்
பின்னர்அப் பெரியார் இருப்பிடம் நாடி,
புஎழுந்தருள்மு கென்றே இருகை கூப்பி
மொழிந்து சீர்செய்து முன்னுற அமைந்த
இருக்கை காட்டத் தமிழ்ச்சொற்
பெருக்கைப் பெரியார் தொடங்கினர் நன்றே:
3
அவைத்தலைவர்
சேர சோழ பாண்டியர் வழிவரு
திராவிட நாட்டுப் பெருங்குடி மக்களே,
அருமைத் தோழியீர் தோழரே அறிஞரே,
தாங்கள் இட்ட பணியைத் தலைக்கணிந்து
ஈங்குச் சிலசொல் இயம்பு கின்றேன்.
ஆரியர் மிலேச்சர் ஆதலால், ஆரியத்து
வேரினர் பார்ப்பனர் வேறி னத்தவர்
ஆதலால், அவரின் வேத மந்திரம்
தீது பயப்பன ஆதலால், திராவிடர்
வாழு மாறு மனங்கொளார் என்பதும்,
தாழ இன்னலே சூழுவார் என்பதும்,
அன்றாட வாழ்வில் அறிந்தோம் ஆதலால்,
நம்மொழி, நம்கலை, நம் ஒழுக்கம்
நம்பேர் ஒட்பம் நடைமுறை மாய்க்கவே
தம்மொழி தீயதம் தகையிலா முறைகளை
மணமுதல், திராவிடர்வாழ்க்கை முறைகளில்
இணைக்க அவர்கள் எண்ணினர் ஆதலால்
ஆரியர் பார்ப்பனர் அடாமண முறையை
வேரொடு சாய்க்க வேண்டும் அன்றோ?
அமிழ்தைத் தமிழென்று பேசும் அழகிய
தமிழ்மண வீட்டில் உமிழத் தக்க
வடமொழிக் கூச்சலா? இன்ப வாழ்வு
தொடங்கையில் நடுவிற் சுடு நெருப்பா?
தாய்தந் தைமார் தவஞ்செய்து பெற்றனர்
தூய்பெருங் கிளைஞர் சூழ்ந்திருக் கின்றனர்
ஒருமனப் பட்ட திருமண மக்களைப்
பெரிதின்பம் பெறுக பெறுக என்று
வாய்க்கு மகிழ்வாய் வாழ்த்த இருக்கையில்
ஏய்த்திங்கு வாழுமோர் நாய்க்கென்ன வேலை?
ஊழி தொடங்கையில் ஒளிதொடங்கு மூவேந்து
வாழையடி வாழையாய் வந்த திராவிடர்
சூழ்ந்திங் கிருக்கையில் சூழ்ச்சி யன்றி
ஏதுங்கெட்ட பார்ப்புக் கிங்கென்ன வேலை?
நல்லறம் நாடும் நம்மண மக்கட்குக்
கல்லான் கைப்படும் புல்லென் செய்யும்?
மிஞ்சும் காதலர் மெய்யன் பிருக்கையில்
கெஞ்சிப் பிழைப்போன் பஞ்சாங்க மேனோ?
தீதிலா மிகப்பல திராவிட மறவர்
ஆதர விருக்கையில், அறிவிலான் படைத்த
சாணிமுண் டங்கள் சாய்ப்ப தென்ன?
கீழ்நெறிச் சடங்குகள் கிழிப்ப தென்ன?
மணத்தின் மறுநாள் மணப்பெண் ணாளைத்
தண்கதிர்ச் செல்வன் புணரத் தருவதாம்!
இரண்டாம் நாளில் இன்பச் செல்வியைக்
கந்தரு வர்பால் கலப்புறச் செய்வதாம்!
தீஎனும் தெய்வம் மூன்றாம் நாளில்
தூயள்பால் இன்பம் துய்க்கச் செய்வதாம்!
நாலாம் நாள்தான் மணமகன் புணர்வதாம்!
திராவிட மக்களின் செவிஏற்கு மோஇதை?
வைதிக மணத்தை மெய்என ஒப்பிடில்
தமிழர் பண்பு தலைசா யாதோ?
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழைஎனப் பேசும்
திருவள் ளுவனார் திருநெறி மாய்ப்பதோ?
திராவிடர் புரட்சித் திருமணம்
புரிந்தின் புறுக திருமண மக்களே!
வாழ்க்கை ஒப்பந்தம்
ப·றொடை வெண்பா
திராவிட நாட்டுப் பெருங்குடி மக்கள்
இருவர்தம் வாழ்க்கைஒப் பந்தம் இனிதாக -
நீவிர் சான்றாக - நிகழ்த்துவிக் கின்றேன்நான்.
"பாவையீரே!* உங்கள் பாங்கில் அமர்ந்துள்ள
* பாவையீரே - மணமகளாரே.
ஆடவர் தம்மை அறிவீரோ? அன்னாரைக்
கூடிஉம் வாழ்க்கைத் துணையாகக் கொள்ள
உறுதி உரைப்பீரோ?" என்று வினவ,
உறுதி அவ்வாறே உரைத்தார் மகளாரும்.
"தோழரே!* பாங்கிலுள்ள தோழியரைத் தேர்ந்தீரோ?
* தோழரே - மணமகனாரே
வாழுநாள் வாழ்க்கைத் துணையாகக் கொண்டீரோ?
ஆயின் உறுதி அறிவிக்க!மு என்னவே,
தூயர் அவ்வாறே உறுதியும் சொல்லிட
வாழிய நீவிர்எனப் பெரியார் வாழ்த்தினார்!
வாழிய என்றவையுள் மக்களெலாம் வாழ்த்தினார்!
தாரொன்றைத் தாங்கித்தம் கொழுநர்க்கே சூட்ட
நேரிழை யார்க்கும் நெடுந்தா ரவர்சூட்டக்
கையிற் கணையாழி கட்டழகியார் கழற்றித்
துய்யமண வாளரைத் தொட்டணிய, அன்னவரும்
தம்ஆழி, மங்கையர்க்குத் தந்து மகிழ்ந்தமர்ந்தார்!
செம்மைப் பெரியார் அறமொழிகள் செப்புகின்றார்:

அற மொழிகள்
"அன்பும் அறனும்
உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும்
அது" என்றார் வள்ளுவனார்.
இல்வாழ்வில் அன்பும்
அறமும் இருக்குமெனில்
நல்லதன்மை நல்லபயன்
நாளும் அடையுமன்றோ?
"மனைத்தக்க மாண்புடையாள்
ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத்
துணை" என்றார் வள்ளுவனார்!
வாழ்க்கைத் துணைவி
மனைக்குரிய மாண்புகொண்டு
வாழ்வில் அவனின்
வருவாய் அறிந்து
செலவு செயல்வேண்டும்
என்பது மன்றியும்,
"தற்காத்துத் தற்கொண்டான்
பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள்
பெண்" என்று சொல்கின்றார்.
தன்னையும் தக்கபடி
காத்துக் கொளல்வேண்டும்
தன்கொழுநன் தன்னையும்
காத்திடல் வேண்டும்
சீர்சால் திராவிடர்
பண்பு சிதையாமல்
நிற்பவளே பெண்ணாவாள்.
"மங்கலம் என்ப
மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட்
பேறு" பெறுக.
"வழங்குவ துள்வீழ்ந்தக்
கண்ணும் பழங்குடி
பண்பின் தலைப்பிரிதல்
இல்"மற வாதீர்.
"இளிவரின் வாழாத
மானம் உடையார்
ஒளிதொழு தேத்தும்
உலகு" தெளிக.
மணமகளாரே, மணமகனாரே
இணைந்தின் புற்றுநன்
மக்களை ஈன்று
பெரும்புகழ் பெற்றுநீடூழி
இருநிலத்து வாழ்கஇனிது.

நன்றி கூறல்
அறுசீர் விருத்தம்
மணமக்கட் குரியார் ஆங்கு
வாழ்த்தொலிக் கிடை எழுந்தே,
"மணவிழாச் சிறக்க ஈண்டு
வந்தார்க்கு நன்றி! இந்த
மணஅவைத் தலைமை தாங்கி
மணமுடித் தருள் புரிந்த
உணர்வுடைப் பெரியார்க் கெங்கள்
உளமார்ந்த நன்றி" என்றே
கைகூப்பி, அங்கெ வர்க்கும்
அடைகாயும் கடிது நல்கி
வைகலின் இனிதின் உண்ண
வருகென அழைப்பா ரானார்!
பெய்கெனப் பெய்த இன்பப்
பெருமழை இசையே யாக
உய்கவே மணமக்கள் தாம்
எனஎழும் உள்ளார் வாழ்த்தே.

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166b.htm#8._புரட்சித்_திருமணத்_திட்டம்

(குதம்பைச் சித்தர் பாடலின் மெட்டு)
புவியிற் சமுகம்இன்பம்
பூணல் சமத்துவத்தால்;
கவிழ்தல் பேதத்தாலடி! - சகியே
கவிழ்தல் பேதத்தாலடி! 1
புவிவேகம் கொண்டுசெல்லும்
போதில் உடன்செல்லாதார்
அவிவேகம் கொண்டாரடி! - சகியே
அவிவேகம் கொண்டாரடி! 2
தாழ்வென்றும் உயர்வென்றும்
சமுகத்திற் பேதங்கொண்டால்
வாழ்வின்பம் உண்டாகுமோ? - சகியே
வாழ்வின்பம் உண்டாகுமோ? 3
தாழ்ந்தவர் என்றுநீக்கிச்
சமுதாயச் சீர்தேடி
வாழ்ந்தது காணேனடி! - சகியே
வாழ்ந்தது காணேனடி! 4
பிறப்பி லுயர்வுதாழ்வு
பேசும்ச முகம்மண்ணில்
சிறக்குமோ சொல்வாயடி? - சகியே
சிறக்குமோ சொல்வாயடி? 5
பிறந்தமுப் பதுகோடிப்
பேரில்ஐங் கோடிமக்கள்
இறந்தாரோ சொல்வாயடி? - சகியே
இறந்தாரோ சொல்வாயடி? 6
இதந்தரும் சமநோக்கம்
இல்லா நிலத்தில்நல்ல
சுதந்தரம் உண்டாகுமோ? - சகியே
சுதந்தரம் உண்டாகுமோ? 7
பதம்பெறப் பணிசெய்வோர்
பகைகொண்டார் எனில்எந்த
விதம்அ·து கொள்வாரடி? - சகியே
விதம்அ·து கொள்வாரடி? 8
சோதர பாவம்நம்மில்
தோன்றா விடில்தேசத்தில்
தீதினி நீங்காதடி! - சகியே
தீதினி நீங்காதடி! 9
93
பேதம்பா ராட்டிவந்தோம்
பிழைசெய்தோம் பல்லாண்டாக
மீதம் உயிர்தானுண்டு! - சகியே
மீதம் உயிர்தானுண்டு! 10
அற்பத்தீண் டாதார்எண்ணும்
அவரும் பிறரும்ஓர்தாய்
கர்ப்பத்தில் வந்தாரன்றோ? - சகியே
கர்ப்பத்தில் வந்தோரன்றோ? 11
பொற்புடை முல்லைக்கொத்தில்
புளியம்பூ பூத்ததென்றால்
சொற்படி யார்நம்புவார்? - சகியே
சொற்படி யார்நம்புவார்? 12
தீண்டும் மக்களின்அன்னை
தீண்டாரையும் பெற்றாளோ
ஈண்டிதை யார்நம்புவார்? - சகியே
ஈண்டிதை யார்நம்புவார்? 13
தீண்டாமை ஒப்புகின்றார்
தீண்டா ரிடம்உதவி
வேண்டாமல் இல்லையடி! - சகியே
வேண்டாமல் இல்லையடி! 14
அடிமை கொடியதென்போர்
அவர்சோத ரர்க்கிழைக்கும்
மிடிமையை எண்ணாரடி! - சகியே
மிடிமையை எண்ணாரடி! 15
கொடியோர் பஞ்சமர்என்று
கூடப்பிறந் தோர்க்கிவர்
சுடும்பேர்வைத் திட்டாரடி! - சகியே
சுடும்பேர்வைத் திட்டாரடி! 16
தீண்டாதார் பழங்கீர்த்தி
தெரிந்தால் தீண்டாமைப்பட்டம்
வேண்டாதார் இல்லையடி! - சகியே
வேண்டாதார் இல்லையடி! 17
ஆண்டார் தமிழர்இந்நா
டதன்பின் ஆரியர்என்போர்
ஈண்டுக் குடியேறினார்! - சகியே
ஈண்டுக் குடியேறினார்! 18
வெள்ளை யுடம்புகாட்டி
வெறும்வாக்கு நயம்காட்டிக்
கள்ளங்கள் செய்தாரடி! - சகியே
94
கள்ளங்கள் செய்தாரடி! 19
பிள்ளைக்குக் கனிதந்து
பின்காது குத்தல்போல்தம்
கொள்கை பரவச்செய்தார்! - சகியே
கொள்கை பரவச்செய்தார்! 20
கொல்லா விரதம்கொண்டோர்
கொலைசெய்யும் ஆரியர்தம்
சொல்லுக் கிசைந்தாரடி! - சகியே
சொல்லுக் கிசைந்தாரடி! 21
நல்ல தமிழர்சற்றும்
நலமற்ற ஆரியர்தம்
பொல்லாச்சொல் ஏற்றாரடி! - சகியே
பொல்லாச்சொல் ஏற்றாரடி! 22
ஏச்சும் எண்ணார்,மானம்
இல்லாத ஆரியர்
மிலேச்சர்என் றெண்ணப்பட்டார்! - சகியே
மிலேச்சர்என் றெண்ணப்பட்டார்! 23
வாய்ச்சாலத் தால்கெட்ட
வஞ்சத்தால் கலகத்தால்
ஏய்ச்சாள வந்தாரடி! - சகியே
ஏய்ச்சாள வந்தாரடி! 24
மன்னர்க் கிடையில்சண்டை
வளர்த்தார்தம் வசமானால்
பொன்னாடு சேர்வார்என்றார்! - சகியே
பொன்னாடு சேர்வார்என்றார்! 25
பொன்னாட்டு மாதர்போலும்
பூலோகத் தில்லையென்று
மன்னர்பால் பொய்கூறினார்! - சகியே
மன்னர்பால் பொய்கூறினார்! 26
வான்மறை எனத்தங்கள்
வழக்கம் குறித்தநூலைத்
தேன்மழை என்றாரடி! - சகியே
தேன்மழை என்றாரடி! 27
’ஏன்மறை?’ எங்கட்கென்றே
இசைத்தால் ஆரியர்,நீங்கள்
வான்புகத் தான்என்றனர்! - சகியே
வான்புகத் தான்என்றனர்! 28
மேலேழு லோகம்என்றார்
கீழேழு லோகம்என்றார்
95
நூலெல்லாம் பொய்கூறினார்! - சகியே
நூலெல்லாம் பொய்கூறினார்! 29
மேலும்தமை நிந்திப்போர்
மிகுக‰டம் அடைவார்கள்
தோலோதோல் கூடாதென்றார்! - சகியே
தோலோதோல் கூடாதென்றார்! 30
சுவர்க்கத்தில் தேவர்என்போர்
சுகமாய் இருப்பதுண்டாம்
அவர்க்குத்தாம் சொந்தம்என்றார்! - சகியே
அவர்க்குத்தாம் சொந்தம்என்றார்! 31
துவக்கத்தில் ஆரியரைத்
தொழுதால் இறந்தபின்பு
சுவர்க்கம்செல் வார்என்றனர்! - சகியே
சுவர்க்கம்செல் வார்என்றனர்! 32
தம்சிறு வேதம்ஒப்பாத்
தமிழரை ஆரியர்கள்
நஞ்சென்று கொண்டாரடி! - சகியே
நஞ்சென்று கொண்டாரடி! 33
வெஞ்சிறு வேதம்ஒப்பா
வீரரை ஆரியர்கள்
வஞ்சித்துக் கொன்றாரடி! - சகியே
வஞ்சித்துக் கொன்றாரடி! 34
அழிவேதம் ஒப்பாதாரை
அரக்கரென் றேசொல்லிப்
பழிபோட்டுத் தலைவாங்கினார்! - சகியே
பழிபோட்டுத் தலைவாங்கினார்! 35
பழிவேதம் ஒப்போம்என்ற
பண்டைத் தமிழர்தம்மைக்
கழுவேற்றிக் கொன்றாரடி! - சகியே
கழுவேற்றிக் கொன்றாரடி! 36
ஆரியர் தமைஒப்பா
ஆதித் திராவிடரைச்
சேரியில் வைத்தாரடி! - சகியே
சேரியில் வைத்தாரடி! 37
சேரிப் பறையர்என்றும்
தீண்டாதார் என்றும்சொல்லும்
வீரர்நம் உற்றாரடி! - சகியே
வீரர்நம் உற்றாரடி! 38
வெஞ்சமர் வீரர்தம்மை
96
வெல்லாமற் புறந்தள்ளப்
பஞ்சமர் என்றாரடி! - சகியே
பஞ்சமர் என்றாரடி! 39
தஞ்சம் புகாத்தமிழர்
சண்டாளர் எனில்தாழ்ந்து
கெஞ்சுவோர் பேரென்னடி! - சகியே
கெஞ்சுவோர் பேரென்னடி! 40
மாதர் சகிதம்தங்கள்
மதத்தைத் தமிழ்மன்னர்க்குப்
போதனை செய்தாரடி! - சகியே
போதனை செய்தாரடி! 41
சூதற்ற மன்னர்சில்லோர்
சுவர்க்கக் கதையைநம்பித்
தீதுக் கிசைந்தாரடி! - சகியே
தீதுக் கிசைந்தாரடி! 42
உலகம் நமைப்பழிக்க
உட்புகுந் தாரியர்கள்
கலகங்கள் செய்தாரடி! - சகியே
கலகங்கள் செய்தாரடி! 43
கொலைக்கள மாக்கிவிட்டார்
குளிர்நாட்டைத் தம்வாழ்வின்
நிலைக்களம் என்றாரடி! - சகியே
நிலைக்களம் என்றாரடி! 44
சாதிப் பிரிவுசெய்தார்
தம்மை உயர்த்துதற்கே
நீதிகள் சொன்னாரடி! - சகியே
நீதிகள் சொன்னாரடி! 45
ஓதும் உயர்வுதாழ்வை
ஆரியர் உரைத்திட்டால்
ஏதுக்கு நாம்ஏற்பதோ? - சகியே
ஏதுக்கு நாம்ஏற்பதோ? 46
ஊர்இரண் டுபடுங்கால்
உளவுள்ள கூத்தாடிக்குக்
காரியம் கைகூடுமாம்! - சகியே
காரியம் கைகூடுமாம்! 47
நேர்பகை யாளிஎன்னை
நீசனென் றால்என்சுற்றத்
தார்என்னைத் தள்ளாரடி! - சகியே
சுற்றத் தார்என்னைத் தள்ளாரடி! 48
97
வீரமில் ஆரியரின்
வீண்வாக்கை நம்பினால்நம்
காரியம் கைகூடுமோ? - சகியே
காரியம் கைகூடுமோ? 49
ஆரியர் சொன்னவண்ணம்
ஆண்டு பலகழித்தோம்
காரியம் கைகூடிற்றா? - சகியே
காரியம் கைகூடிற்றா? 50
எத்தால்வாழ் வுண்டாகும்?நாம்
ஒத்தால்வாழ் வுண்டாம்!இ·து
சத்தான பேச்சல்லவோ? - சகியே
சத்தான பேச்சல்லவோ? 51
எத்தர்கள் பேச்சைநம்பி
இரத்தக் கலப்பைநீக்கிச்
சத்தின்றி வாழ்வாருண்டோ? - சகியே
சத்தின்றி வாழ்வாருண்டோ? 52
’ஆரியப்’ பேர்மறைந்தும்
அவர்வைத்த ’தீண்டார்’ என்ற
பேர்நிற்றல் ஏதுக்கடி? - சகியே
பேர்நிற்றல் ஏதுக்கடி? 53
ஆரியர் பார்ப்பாரானால்
அவர்சொன்ன தீண்டாதார்கள்
சேரியில் ஏன்தங்கினார்? - சகியே
சேரியில் ஏன்தங்கினார்? 54
ஊர்தட்டிப் பறித்திட
உயர்சாதி என்பார்இ·தை
மார்தட்டிச் சொல்வேனடி! - சகியே
மார்தட்டிச் சொல்வேனடி! 55
ஓர்தட்டில் உயர்ந்தோர்மற்
றொன்றில்தாழ்ந் தோரைஇட்டுச்
சீர்தூக்கிப் பார்ப்போமடி! - சகியே
சீர்தூக்கிப் பார்ப்போமடி! 56
தீண்டாதார் சுத்தமற்றோர்
என்றாலச் சுத்தத்தன்மை
தாண்டாதார் எங்குண்டடி? - சகியே
தாண்டாதார் எங்குண்டடி? 57
தீண்டாதார் ஊனுண்டால்
தீண்டு மனிதர்வாய்க்குள்
மாண்டன பல்கோடியாம்! - சகியே
மாண்டன பல்கோடியாம்! 58
98
பறவை மிருகமுண்டோர்
பறையர் என்றால்மனுநூல்
முறையென்பார் பேரென்னடி? - சகியே
முறையென்பார் பேரென்னடி? 59
வெறிமது உண்போர்நீசர்
என்றால் பிறர்க்கிருட்டில்
நிறைமுக்கா டேதுக்கடி? - சகியே
நிறைமுக்கா டேதுக்கடி? 60
சீலம் குறைந்தோர்என்றால்
சீலமி லாச்சிலரை
ஞாலத்தில் ஏன்தீண்டினார்? - சகியே
ஞாலத்தில் ஏன்தீண்டினார்? 61
மேலை வழக்கங்கொண்டு
மிகுதாழ்ந்தோர் என்றாலந்தக்
காலத்தில் தாழ்ந்தாருண்டோ? - சகியே
காலத்தில் தாழ்ந்தாருண்டோ? 62
சாத்திரம் தள்ளிற்றென்றால்
சாற்றும் அதுதான்எங்கள்
கோத்திரத் தார்செய்ததோ? - சகியே
கோத்திரத் தார்செய்ததோ? 63
வாய்த்திறம் கொண்டமக்கள்
வஞ்சம் யாவையும்நம்பி
நேத்திரம் கெட்டோமடி! - சகியே
நேத்திரம் கெட்டோமடி! 64
மனிதரிற் றாழ்வுயர்வு
வகுக்கும் மடையர்வார்த்தை
இனிச்செல்ல மாட்டாதடி! - சகியே
இனிச்செல்ல மாட்டாதடி! 65
கனிமா மரம்வாழைக்காய்
காய்க்கா தெனில்இரண்டும்
தனித்தனிச் சாதியடி! - சகியே
தனித்தனிச் சாதியடி! 66
எருமையைப் பசுசேர்தல்
இல்லை; இதனாலிவை
ஒருசாதி இல்லையடி! - சகியே
ஒருசாதி இல்லையடி! 67
ஒருதாழ்ந்தோன் உயர்ந்தாளை
ஒப்பக் கருக்கொள்ளுங்கால்
இருசாதி மாந்தர்க்குண்டோ? - சகியே
99
இருசாதி மாந்தர்க்குண்டோ? 68
உழைப்பால் உயர்ந்தவர்கள்
தாழ்ந்தவர்கள் என்றன்னோர்
பிழைப்பைக் கெடுத்தாரடி! - சகியே
பிழைப்பைக் கெடுத்தாரடி! 69
தொழிலின்றிச் சோறுண்ணாச்
சுத்தர் அசுத்தர்என்ப
தெழிலற்ற வார்த்தையடி! - சகியே
எழிலற்ற வார்த்தையடி! 70
உடல்நோய்கள் அற்றபேரை
ஒழுக்கமில் லார்என்பவர்
கடலை உளுந்தென்பரோ? - சகியே
கடலை உளுந்தென்பரோ? 71
தடையற்ற அன்பினரைச்
சண்டாளர் என்றுசொல்லும்
கடையர்க்கு வாழ்வேதடி? - சகியே
கடையர்க்கு வாழ்வேதடி? 72
பழிப்பவர்க் கும்உதவும்
பாங்கர் பறையர்என்பார்
விழித்துத் துயில்வாரடி! - சகியே
விழித்துத் துயில்வாரடி! 73
தழைக்கப் பிள்ளைபெறுவோர்
தாழ்வாம்; பிள்ளைக்கையரை
அழைப்போர்கள் மேலோர்களாம்! - சகியே
அழைப்போர்கள் மேலோர்களாம்! 74
தோள்தான் பொருள்என்போர்கள்
தாழ்வாம்; துரும்பெடுக்கக்
கூடாதோர் மேலென்பதாம்! - சகியே
கூடாதோர் மேலென்பதாம்! 75
மாடா யுழைப்பவர்கள்
வறியர்;இந் நாட்டுத்தொழில்
நாடாதோர் செல்வர்களோ? - சகியே
நாடாதோர் செல்வர்களோ? 76
ஏரிக் கரையினில்வாழ்ந்
திருந்து பிறரைக்காக்கும்
சேரியர் தாழ்ந்தார்களோ? - சகியே
சேரியர் தாழ்ந்தார்களோ? 77
ஊருக் கிழிந்தோர்காவல்;
உயர்ந்தோர் இவர்கள்வாழ்வின்
100
வேருக்கு வெந்நீரடி! - சகியே
வேருக்கு வெந்நீரடி! 78
அங்கம் குறைச்சலுண்டோ
ஆதித் திராவிடர்க்கே?
எங்கேனும் மாற்றமுண்டோ? - சகியே
எங்கேனும் மாற்றமுண்டோ? 79
புங்கவர் நாங்கள்என்பார்
பூசுரர் என்பார்நாட்டில்
தங்கட்கே எல்லாம்என்பார்! - சகியே
தங்கட்கே எல்லாம்என்பார்! 80
ஆதிசை வர்கள்என்பார்;
யுஆதிக்குப் பின்யார்?ருஎன்றால்
காதினில் வாங்காரடி! - சகியே
காதினில் வாங்காரடி! 81
சாதியில் கங்கைபுத்ரர்
என்பார்கள் சாட்சி,பத்ரம்
நீதியில் காட்டாரடி! - சகியே
நீதியில் காட்டாரடி! 82
வேலன்பங் காளியென்பார்
வெறுஞ்சேவ கனைக்கண்டால்
காலன்தான் என்றஞ்சுவார்! - சகியே
காலன்தான் என்றஞ்சுவார்! 83
மேலும் முதலி,செட்டி,
வேளாளப் பிள்ளைமுதல்
நாலாயிரம் சாதியாம்! - சகியே
நாலாயிரம் சாதியாம்! 84
எஞ்சாதிக் கிவர்சாதி
இழிவென்று சண்டையிட்டுப்
பஞ்சாகிப் போனாரடி! - சகியே
பஞ்சாகிப் போனாரடி! 85
நெஞ்சில் உயர்வாய்த்தன்னை
நினைப்பான் ஒருவேளாளன்
கொஞ்சமும் எண்ணாததால்! - சகியே
கொஞ்சமும் எண்ணாததால்! 86
செட்டி உயர்ந்தோன்என்பான்
செங்குந்தன் உயர்வென்பான்
குட்டுக்கள் எண்ணாததால்! - சகியே
குட்டுக்கள் எண்ணாததால்! 87
செட்டிக்கோ முட்டிநாய்க்கன்
101
சேணியன் உயர்வென்றே
கட்டுக் குலைந்தாரடி! - சகியே
கட்டுக் குலைந்தாரடி! 88
சேர்த்துயர் வென்றிவர்கள்
செப்பினும் பார்ப்பனர்க்குச்
சூத்திரர் ஆனாரடி! - சகியே
சூத்திரர் ஆனாரடி! 89
தூற்றிட இவ்வுயர்ந்தோர்
சூத்திரர் என்றுபார்ப்பான்
காற்றினில் விட்டானடி! - சகியே
காற்றினில் விட்டானடி! 90
தம்மை உயர்த்தப்பார்ப்பார்
சமுகப் பிரிவுசெய்தார்
இம்மாயம் காணாரடி! - சகியே
இம்மாயம் காணாரடி! 91
பொய்மை வருணபேதம்
போனால் புனிதத்தன்மை
நம்மில்நாம் காண்போமடி! - சகியே
நம்மில்நாம் காண்போமடி! 92
நான்கு வருணம்என்று
நவிலும் மனுநூல்விட்டு
ஏனைந்து கொண்டாரடி? - சகியே
ஏனைந்து கொண்டாரடி? 93
நான்கு பிரிவும்பொய்மை;
நான்குள்ளும் பேதம்என்றால்
ஊனத்தில் உள்ளூனமாம்! - சகியே
ஊனத்தில் உள்ளூனமாம்! 94
சதுர்வர்ணம் வேதன்பெற்றான்
சாற்றும்பஞ் சமர்தம்மை
எதுபெற்றுப் போட்டதடி? - சகியே
எதுபெற்றுப் போட்டதடி? 95
சதுர்வர்ணம் சொன்னபோது
தடிதூக்கும் தமிழ்மக்கள்
அதில்ஐந்தாம் நிறமாயினர்! - சகியே
அதில்ஐந்தாம் நிறமாயினர்! 96
மனிதரில் தீட்டுமுண்டோ?
மண்ணிற் சிலர்க்கிழைக்கும்
அநீதத்தை என்சொல்வதோ? - சகியே
அநீதத்தை என்சொல்வதோ? 97
102
’புனிதர்என் றேபிறத்தல்’
’புல்லர்என் றேபிறத்தல்’
எனுமி·து விந்தையடி! - சகியே
எனுமி·து விந்தையடி! 98
ஊரிற் புகாதமக்கள்
உண்டென்னும் மூடரிந்தப்
பாருக்குள் நாமேயடி! - சகியே
பாருக்குள் நாமேயடி! 99
நேரிற்பார்க் கத்தகாதோர்
நிழல்பட்டால் தீட்டுண்டென்போர்
பாருக்குள் நாமேயடி! - சகியே
பாருக்குள் நாமேயடி! 100
மலம்போக்கும் குளம்மூழ்கா
வகைமக்க ளைநசுக்கும்
குலமாக்கள் நாமேயடி! - சகியே
குலமாக்கள் நாமேயடி! 101
மலம்பட்ட இடம்தீட்டாம்
மக்கள் சிலரைத்தொட்டால்
தலைவரைக் கும்தீட்டாம்! - சகியே
தலைவரைக் கும்தீட்டாம்! 102
சோமனைத் தொங்கக்கட்டச்
சுதந்தரம் சிலர்க்கீயாத்
தீமக்கள் நாமேயடி! - சகியே
தீமக்கள் நாமேயடி! 103
தாமூழ்கும் குளம்தன்னில்
தலைமூழ்கத் தகாமக்கள்
போமாறு தானென்னடி? - சகியே
போமாறு தானென்னடி? 104
பாதரட்சை யணிந்தாற்
பழித்துச் சிலரைத்தாழ்த்தும்
காதகர் நாமேயடி! - சகியே
காதகர் நாமேயடி! 105
ஓத வசதியின்றி
உலகிற் சிலரைதாழ்த்தும்
சூதர்க்கு வாழ்வேதடி? - சகியே
சூதர்க்கு வாழ்வேதடி? 106
தீராப் பகையுமுண்டோ
திருநாட்டார்க் குள்ளும்நெஞ்சம்
நேராகிப் போனாலடி? - சகியே
நேராகிப் போனாலடி? 107
103
ஓரைந்து கோடிமக்கள்
ஓல மிடுங்கால்மற்றோர்
சீராதல் இல்லையடி! - சகியே
சீராதல் இல்லையடி! 108
தாழ்வில்லை உயர்வில்லை
சமமென்ற நிலைவந்தால்
வாழ்வெல்லை காண்போமடி! - சகியே
வாழ்வெல்லை காண்போமடி! 109
சூழ்கின்ற பேதமெல்லாம்
துடைத்தே சமத்துவத்தில்
வாழ்கின்றார் வாழ்வின்பமாம்! - சகியே
வாழ்கின்றார் வாழ்வின்பமாம்! 110
ஆலய உரிமை
(’ஆறுமுக வடிவேலனே - கலியாணமும் செய்யவில்லை’
என்ற காவடிச் சிந்தின் மெட்டு)
கண்ணிகள்
எவ்வுயிரும் பரன் சந்நிதி யாமென்
றிசைத்திடும் சாத்திரங்கள் - எனில்
அவ்விதம் நோக்க அவிந்தன வோநம்
அழகிய நேத்திரங்கள்? 1
திவ்விய அன்பிற் செகத்தையெல் லாம்ஒன்று
சேர்த்திட லாகும்அன்றோ? - எனில்
அவ்வகை அன்பினிற் கொஞ்சம் இருந்திடில்
அத்தனை பேரும்ஒன்றே. 2
ஏக பரம்பொருள் என்பதை நோக்கஎல்
லாரும் உடன்பிறப்பே - ஒரு
பாகத்தார் தீண்டப் படாதவர் என்பதி
லேஉள்ள தோசிறப்பே? 3
’தேகம் சுமைநமைச் சேர்ந்ததில் லை’ என்று
செப்பிடும் தேசத்திலே - பெரும்
போகம் சுமந்துடற் பேதம்கொண் டோம்;மதி
போயிற்று நீசத்திலே. 4
என்னை அழைக்கின்ற கோயிலின் சாமி
எனக்கிழி வாய்த்தெரியும் - சாதி
தன்னை விலக்கிடு மோஇதை யோசிப்பீர்
சமுக நிலைபுரியும். 5
என்னை அளித்தவர் ஓர்கடவுள் மற்றும்
104
ஏழையர்க் கோர்கடவுள் - எனில்
முன்னம் இரண்டையும் சேர்த்துருக் குங்கள்
முளைக்கும் பொதுக்கடவுள். 6
உயர்ந்தவர் கோயில் உயர்ந்ததென் பீர்மிகத்
தாழ்ந்தது தாழ்ந்ததென்பீர் - இவை
பெயர்ந்து விழுந்தபின் பேதமிலா ததைப்
பேசிடுவீர் அன்பீர். 7
உயர்ந்தவர் கையில் வரத்தினைச் சாமி
ஒளிமறைவில் தரத்தான் - மிகப்
பயந்திழிந் தோர்களைக் கோயில் வராவண்ணம்
பண்ணின தோஅறியேன். 8
சோதிக் கடவுளும் தொண்டரும் கோயிலிற்
சூழ்வது பூசனையோ - ஒரு
சாதியை நீக்கினர்; தலையையும் வாங்கிடச்
சதியா லோசனையோ? 9
ஆதித் திராவிடர் பாரதர்க் கன்னியர்
என்று மதித்ததுவோ? - சாமி
நீதிசெய் வெள்ளையர் வந்ததும் போய்க்கடல்
நீரிற் குதித்ததுவோ? 10
மாலய மாக வணங்கிடச் சாமி
வந்திடு வார்என்றீரே - அந்த
ஆலயம் செல்ல அநேகரை நீக்கி
வழிமறித் தேநின்றீரே. 11
ஆலயம் செல்ல அருகரென்ற சிலர்
அங்கம் சிறந்தாரோ? - சிலர்
நாலினும் கீழென்று நாரி வயிற்றில்
நலிந்து பிறந்தாரோ? 12
தாழ்ந்தவர் தம்மை உயர்ந்தவ ராக்கிடச்
சாமி மலைப்பதுண்டோ? - இங்கு
வாழ்ந்திட எண்ணிய மக்களைச் சாமி
வருத்தித் தொலைப்பதுண்டோ? 13
தாழ்ந்தவர் வந்திடில் தன்னுயிர் போமெனில்
சாமிக்குச் சத்திலையோ? - எனில்
வீழ்ந்த குலத்தினை மேற்குல மாக்கிட
மேலும் சமர்த்திலையோ? 14
தன்னை வணங்கத் தகாதவரை அந்தச்
சாமி விழுங்கட்டுமே - அன்றி
முன்னை யிருந்த கல்லோடு கல்லாகி
உருவம் மழுங்கட்டுமே. 15
105
இன்னலை நீக்கிடும் கோயிலின் சாமி
இனத்தினில் பல்கோடி - மக்கள்
தன்னை வணங்கத் தகாதென்று சொல்லிடிற்
சாவது வோஓடி? 16
குக்கலும் காகமும் கோயிலிற் போவதிற்
கொஞ்சமும் தீட்டிலையோ? - நாட்டு
மக்களிலே சிலர் மாத்திரம் அந்த
வகையிலும் கூட்டிலையோ? 17
திக்கெட்டு மேஒரு கோயிலன்றோ? அதில்
சேரிஅப்பால் இல்லையே - நாளும்
பொய்க்கட் டுரைப்பவர் புன்மையும் பேசுவர்
நம்புவதோ சொல்லையே? 18
தாழ்ந்தவர் என்பவர் கும்பிடு தற்குத்
தனிக்கோயில் காட்டுவதோ? - அவர்
வாழ்ந்திடு தற்கும் தனித்தேசம் காட்டிப்பின்
வம்பினை மூட்டுவதோ? 19
தாழ்த்தப்பட் டார்க்குத் தனிக்கோயில் நன்றெனச்
சாற்றிடும் தேசமக்கள் - அவர்
வாழ்த்தி அழைக்கும் யுசுதந்தரம்ரு தன்னை
மறித்திடும் நாசமக்கள். 20
தாழ்ந்தவ ருக்கும் உயர்ந்தவ ருக்கும்இத்
தாய்நிலம் சொந்தம்அன்றோ? - இதில்
சூழ்ந்திடும் கோயில் உயர்ந்தவர்க்கே என்று
சொல்லிடும் நீதிநன்றோ? 21
’தாழ்ந்தவர்’ என்றொரு சாதிப் பிரிவினைச்
சாமி வகுத்ததுவோ? - எனில்
வாழ்ந்திடு நாட்டினில் சாமி முனைந்திந்த
வம்பு புகுத்தியதோ? 22
முப்பது கோடியர் பாரதத்தார் இவர்
முற்றும் ஒரேசமுகம் - என
ஒப்புந் தலைவர்கள் கோயிலில் மட்டும்
ஒப்பாவிடில் என்னசுகம்? 23
இப்பெரு நாடும் இதன்பெருங் கூட்டமும்
’யாம்’ என்று தற்புகழ்ச்சி - சொல்வர்
இப்புறம் வந்ததும் கோயிலி லும்நம்
இனத்தைச்செய் வார்இகழ்ச்சி. 24
மாடுண்ப வன்திருக் கோயிலின் வாயிலில்
வருவதற் கில்லைசாத்யம் - எனில்
ஆடுண்ணு வானுக்கு மாடுண்ணுவோன் அண்ணன்
அவனே முதற்பாத்யம். 25
106
நீடிய பத்தியில் லாதவர் கோயில்
நெருங்குவதால் தொல்லையே! - எனில்
கூடிஅக் கோயிலில் வேலைசெய் வோருக்கும்
கூறும்பக்தி இல்லையே. 26
’சுத்த மிலாதவர் பஞ்சமர்; கோயிற்
சுவாமியைப் பூசிப்பரோ?’ - எனில்
நித்த முயர்ந்தவர் நீரிற் குளிப்பது
யாதுக்கு யோசிப்பிரே. 27
நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி
நேரில்அக் கோயிலிலே - கண்டும்
ஒத்த பிறப்பின ரைமறுத் தீருங்கள்
கோயிலின் வாயிலிலே. 28
கூறும் ’உயர்ந்தவர்’ ’தாழ்ந்தவர்’ என்பவர்
கோயிலின் செய்திவிட்டுப் - புவி
காறியு மிழ்ந்தது யார்முகத்தே யில்லை?
காட்டுவீர் ஒன்றுபட்டு. 29
வீறும் உயந்தவர் கோயில் புகுந்ததில்
வெற்றிஇந் நாட்டில்உண்டோ? - இனிக்
கூறும் இழிந்தவர் கோயில் புகுந்திடில்
தீதெனல் யாதுகொண்டோ? 30
ஞாயமற்ற மறியல்
நொண்டிச் சிந்து
என்றுதான் சுகப்படு வதோ! - நம்மில்
யாவரும் யுசமானம்ருஎன்ற பாவனைஇல்லை - அந்தோ
ஒன்றுதான்இம் மானிடச் சாதி - இதில்
உயர்பிறப் பிழிபிறப் பென்பதும்உண்டோ? - நம்மில்
அன்றிருந்த பல தொழிலின் - பெயர்
அத்தனையும் யுசாதிகள்ருஎன் றாக்கிவிட்டனர் - இன்று
கொன்றிடுதே யுபேதம்ருஎனும் பேய்! - மிகக்
கூசும்இக் கதைநினைக்கத் தேசமக்களே! - நாம்
என்றுதான் சுகப்படு...
இத்தனை பெரும் புவியிலே - மிக
எண்ணற்ற தேசங்கள் இருப்பதறிவோம் - எனில்
அத்தனைதே சத்து மக்களும் - தாம்
அனைவரும் யுமாந்தர்ருஎன்று நினைவதல்லால் - மண்ணில்
இத்தகைய நாட்டு மக்கள்போல் - பேதம்
எட்டுல‡ம் சொல்லிமிகக் கெட்டலைவாரோ! - இவர்
பித்துமிகக் கொண்ட வர்கள்போல் - தம்
பிறப்பினில் தாழ்வுயர்வு பேசுதல்நன்றோ? - நாம்
என்றுதான் சுகப்படு...
107
தீண்டாமை என்னுமொரு பேய் - இந்தத்
தேசத்தினில் மாத்திரமே திரியக்கண்டோம் - எனில்
ஈண்டுப்பிற நாட்டில் இருப்போர் - செவிக்
கேறியதும் இச்செயலைக் காறியுமிழ்வார் - பல்
ஆண்டாண்டு தோறு மிதனால் - நாம்
அறிவற்ற மாக்கள்என்று கருதப்பட்டோம் - நாம்
கூண்டோடு மாய்வ தறிந்தும் - இந்தக்
கோணலுற்ற செயலுக்கு நாணுவதில்லை - நாம்
என்றுதான் சுகப்படு...
ஞானிகளின் பேரப் பிள்ளைகள் - இந்த
நாற்றிசைக்கும் ஞானப்புனல் ஊற்றிவந்தவர் - மிகு
மேனிலையில் வாழ்ந்து வந்தவர் - இந்த
மேதினியில் மக்களுக்கு மேலுயர்ந்தவர் - என்று
வானமட்டும் புகழ்ந்து கொள்வார் - எனில்
மக்களிடைத் தீட்டுரைக்கும் காரணத்தினை - இங்கு
யானிவரைக் கேட்கப் புகுந்தால் - இவர்
இஞ்சிதின்ற குரங்கென இளித்திடுவார் - நாம்
என்றுதான் சுகப்படு...
உயர் மக்கள் என்றுரைப்பவர் - தாம்
ஊரைஅடித் துலையிலிட் டுண்ணுவதற்கே - அந்தப்
பெயர் வைத்துக் கொள்ளுவதல்லால் - மக்கள்
பேதமில்லை என்னுமிதில் வாதமுள்ளதோ? - தம்
வயிற்றுக்கு விதவித ஊண் - நல்ல
வாகனங்கள் போகப்பொருள் அநுபவிக்க - மிக
முயல்பவர் தம்மிற் சிலரை - மண்ணில்
முட்டித்தள்ள நினைப்பது மூடத்தனமாம் - நாம்
என்றுதான் சுகப்படு...
உண்டி விற்கும் பார்ப்பனனுக்கே - தான்
உயர்ந்தவன் என்றபட்டம் ஒழிந்துவிட்டால் - தான்
கண்டபடி விலை உயர்த்தி - மக்கள்
காசினைப் பறிப்பதற்குக் காரணமுண்டோ? - சிறு
தொண்டு செய்யும் சாதிஎன்பதும் - நல்ல
துரைத்தனச் சாதியென்று சொல்லிக்கொள்வதும் - இவை
பண்டிருந்த தில்லை எனினும் - இன்று
பகர்வது தாங்கள்நலம் நுகர்வதற்கே - நாம்
என்றுதான் சுகப்படு...
வேதமுணர்ந் தவன் அந்தணன் - இந்த
மேதினியை ஆள்பவன் ‡த்திரியனாம் - மிக
நீதமுடன் வர்த்தகம் செய்வோன் - மறை
நியமித்த வைசியனென் றுயர்வுசெய்தார் - மிக
நாதியற்று வேலைகள் செய்தே - முன்பு
நாத்திறம்அற் றிருந்தவன் சூத்திரன்என்றே - சொல்லி
ஆதியினில் மனு வகுத்தான் - இவை
108
அன்றியுமே பஞ்சமர்கள் என்பதும்ஒன்றாம் - நாம்
என்றுதான் சுகப்படு...
அவனவன் செய்யும் தொழிலைக் - குறித்
தவனவன் சாதியென மனுவகுத்தான் - இன்று
கவிழ்ந்தது மனுவின் எண்ணம் - இந்தக்
காலத்தினில் நடைபெறும் கோலமும்கண்டோம் - மிகக்
குவிந்திடும் நால்வரு ணமும் - கீழ்க்
குப்புறக் கவிழ்ந்ததென்று செப்பிடத்தகும் - இன்று
எவன்தொழில் எவன் செய்யினும் - அதை
ஏனென்பவன் இங்கொருவ னேனுமில்லையே - நாம்
என்றுதான் சுகப்படு...
பஞ்சமர்கள் எனப் படுவோர் - மட்டும்
பாங்கடைவ தால்நமக்குத் தீங்குவருமோ? - இனித்
தஞ்சமர்த்தை வெளிப் படுத்தித் - தம்
தலைநிமிர்ந் தாலது குற்றமென்பதோ? - இது
வஞ்சத்தினும் வஞ்ச மல்லவோ - பொது
வாழ்வினுக்கும் இதுமிகத் தாழ்வேயல்லவோ - நம்
நெஞ்சத்தினுள் ஈர மில்லையோ? - அன்றி
நேர்மையுடன் வாழுமதிக் கூர்மையில்லையோ? - நாம்
என்றுதான் சுகப்படு...
கோரும் யுஇமயாசலரு முதல் - தெற்கில்
கொட்டுபுனல் நற்யுகுமரிரு மட்டும்இருப்போர் - இவர்
யாருமொரு சாதி யெனவும் - இதில்
எள்ளளவும் பேதமெனல் இல்லையெனவும் - நம்
பாரதநற் றேவிதனக்கே - நாம்
படைமக்கள் எனவும்நம் மிடைஇக்கணம் - அந்த
ஓருணர்ச்சி தோன்றிய உடன் - அந்த
ஒற்றுமைஅன்றோ நமக்கு வெற்றியளிக்கும்! - நாம்
என்றுதான் சுகப்படு...

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166b.htm#7._சமத்துவப்_பாட்டு

காலைப் பத்து
வெண்டளையான் வந்த தரவிணைக்
கொச்சகக் கலிப்பா
கிழக்கு மலரணையில் தூங்கிக் கிடந்து
விழித்தான்; எழுந்தான். விரிகதிரோன் வாழி!
அழைத்தார்கள் அன்பால் திராவிடர்கள் உம்மை!
மொழிப்போர் விடுதலைப்போர் மூண்டனவே இங்கே!
விழிப்பெய்த மாட்டீரோ? தூங்குவிரோ மேலும்?
அழிப்பார் தமிழை! அடிமையிற் சேர்ப்பார்!
ஒழிப்பீர் பகையை! நொடியில் மறவர்
வழித்தோன்றும் மங்கையீர், காளையரே வாரீரோ! 1
எழுந்தன புட்கள்; சிறகடித்துப் பண்ணே
முழங்கின! ஏருழவர் முன்செல் எருதை
அழிஞ்சிக்கோல் காட்டி அதட்டலும் கேட்டீர்.
எழுந்திருப்பீர் வீட்டினரே, இன்னும் துயிலோ?
பழந்தமிழர் செல்வம் கலையொழுக்கம் பண்பே
ஒழிந்து படவடக்கர் ஒட்டாரம் செய்தார்
அழிந்தோமா வென்றோமா என்ப துணர்த்த
எழில்மடவீர், காளையரே இன்னேநீர் வாரீரோ! 2
காக்கைக் கழுத்துப்போல் வல்லிருளும் கட்டவிழும்!
தாக்கும் மணிமுரசு தன்முழக்கம் கேட்டீரோ?
தூக்கமோ இன்னும்? திராவிடர்கள் சூழ்ந்துநின்றார்.
தூக்கறியார் வாளொன்றும்! போராடும் துப்பில்லார்.
சாய்க்கின்றார் இன்பத் தமிழைக் குறட்கருத்தை!
போக்கேதும் இல்லா வடக்கர் கொடுஞ்செயலும்
வாய்க்கஅவர் வால்பிடிக்கும் இங்குள்ளார் கீழ்ச்செயலும்
போக்க மடவீரே, காளையரே வாரீரோ! 3
தங்கம் உருக்கிப் பெருவான் தடவுகின்றான்
செங்கதிர்ச் செல்வன்! திராவிடர்கள் பல்லோர்கள்
தங்கள் விடுதலைக்கோர் ஆதரவு தாங்கேட்டே
இங்குப் புடைசூழ்ந்தார் இன்னும் துயில்வீரோ?
பொங்கும் வடநாட்டுப் பொய்யும் புனைசுருட்டும்
எங்கும் தலைவிரித்தே இன்னல் விளைத்தனவே
வங்கத்துக் கிப்பால் குடியரசு வாய்ப்படைய
மங்கையீர், காளையீர் வாரீரோ வாரீரோ! 4
தேர்கலி கொள்ள அமர்ந்து செழும்பரிதி
ஆர்கலிமேற் காட்சி அளிக்கின்றான் கீழ்த்திசையில்
ஊர்மலர்ந்தும் உங்கள் விழிமலர ஒண்ணாதோ?
சீர்மலிந்த அன்பின் திராவிடர்கள் பல்லோர்கள்
நேர்மலிந்தார்! பெற்ற நெருக்கடிக்குத் தீர்ப்பளிப்பார்
86
பார்கலந்த கீர்த்திப் பழய திராவிடத்தை
வேர்கலங்கச் செய்ய வடக்கர் விரைகின்றார்
கார்குழலீர், காளையரே வாரீரோ வாரீரோ! 5
செஞ்சூட்டுச் சேவல்கள் கூவின கேட்டீரோ
மிஞ்சும் இருள்மீது பொன்னொளி வீழ்ந்ததுவே!
பஞ்சணை விட்டெழுந்து பாரீர் திராவிடத்தை
நஞ்சுநிகர் இந்தியினை நாட்டித் தமிழமுதை
வெஞ்சேற்றுப் பாழ்ங்கிணற்றில் வீழ்த்த நினைத்தாரே!
நெஞ்சிளைப் போமோ? நெடுந்தோள் தளர்வோமோ?
அஞ்சுவமோ என்று வடக்கர்க் கறிவிக்கக்
கொஞ்சு குயில்களே, காளையரே வாரீரோ! 6
கோவாழும் இல்லொன்றே கோவிலாம் மற்றவை
நாவாலும் மேல்என்னோம்! நல்லறமே நாடுவோம்
தேவர்யாம் என்பவரைத் தெவ்வ ரெனஎதிர்ப்போம்
சாவு தவிர்ந்த மறுமையினை ஒப்புகிலோம்
வாழ்விலறம் தந்து மறுமைப் பயன்வாங்கோம்
மேவும்இக் கொள்கைத் திராவிடத்தை அவ்வடக்கர்
தாவித் தலைகவிழ்க்க வந்தார் தமைஎதிர்க்க
பாவையரே, காளையரே பல்லோரும் வாரீரோ! 7
மன்னிய கீழ்க்கடல்மேல் பொன்னங் கதிர்ச்செல்வன்
துன்னினான் இன்னும்நீர் தூங்கல் இனிதாமோ?
முன்னால் தமிழ்காத்த மூவேந்தர் தம்உலகில்
"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது" என்னும் நன்னாட்டில்
சின்ன வடக்கரும் வால்பிடிக்கும் தீயர்களும்,
இன்னலே சூழ்கின்றார் இன்பத் திராவிடத்துக்
கன்னல்மொழி மங்கையீர், காளையரே வாரீரோ! 8
நீல உடையூடு பொன்னிழை நேர்ந்ததென
ஞால இருளின் நடுவில் கதிர்பரப்பிக்
கோலஞ்செய் கின்றான் இளம்பரிதி! கொண்டதுயில்
ஏலுமோ? உம்மை எதிர்பார்த் திருக்கின்றார்
தோலிருக்க உள்ளே சுளையைப் பறிப்பவரைப்
போல வடக்கர்தம் பொய்ந்நூல் தனைப்புகுத்தி
மேலும்நமை மாய்க்க விரைகின்றார் வீழ்த்தோமோ?
வாலிழையீர், காளையரே வாரீரோ வாரீரோ! 9
அருவி, மலை,மரங்கள் அத்தனையும் பொன்னின்
மெருகு படுத்தி விரிகதிரோன் வந்தான்.
விரியாவோ உங்கள் விழித்தா மரைகள்?
அருகு திராவிடர்கள் பல்லோர்கள் ஆர்ந்தார்
ஒருமகளை ஐவர் உவக்கும் வடக்கர்
திருநாட்டைத் தம்மடிக்கீழ்ச் சேர்க்க நினைத்தார்.
உருவிய வாளின், முரசின்ஒலி கேட்பீர்
வரைத்தோளீர், காளையரே வாரீரோ வாரீரோ! 10
87
விடுதலைப் பாட்டு
மீள்வது நோக்கம் - இந்த
மேன்மைத் திராவிடர் மீளுவ தின்றேல்
மாள்வது நோக்கம் - இதை
வஞ்ச வடக்கர்க்கெம் வாள்முனை கூறும்!
ஆள்வது நோக்கம் - எங்கள்
அன்னை நிலத்தினில் இன்னொரு வன்கால்
நீள்வது காணோம் - இதை
நீண்டஎம் செந்தூக்கு வாள்முனை கூறும்! 1
மீள்வது நோக்கம்...
கனவொன்று கண்டார் - தங்கள்
கையிருப் பிவ்விடம் செல்லுவ துண்டோ?
இனநலம் காண்பார் - எனில்
இங்கென்ன வேலை அடக்குக வாலை!
தினவுண்டு தோளில் - வரத்
திறல்மிக உண்டெனில் வந்து பார்க்கட்டும்!
மனநோய் அடைந்தார் - அந்த
வடக்கர்க்கு நல்விடை வாள்முனை கூறும்! 2
கனவொன்று கண்டார்...
திராவிடர் நாங்கள் - இத்தி
ராவிட நாடெங்கள் செல்வப் பெருக்கம்!
ஒரே இனத்தார்கள் - எமக்
கொன்றே கலைபண் பொழுக்கமும் ஒன்றே!
சரேலென ஓர்சொல் - இங்குத்
தாவுதல் கேட்டெம் ஆவி துடித்தோம்.
வராதவர் வந்தார் - இங்கு
வந்தவர் எம்மிடம் வாளுண்டு காண்பார்! 3
திராவிடர் நாங்கள்...
இராப் பத்து
வெண்டளையான் வந்த இயற்றரவிணைக்
கொச்சகக் கலிப்பா
திருவிளக் கேற்றி இரவு சிறக்க
வருவிருந் தோடு மகிழ்ந்துண வுண்டீர்!
அருகு மடவார் அடைகாய் தரவும்
பருகுபால் காத்திருக்கப் பஞ்சணை மேவித்
தெருவினில் யாம்பாடும் செந்தமிழும் கேட்பீர்!
பெருவாழ்வு வாழ்ந்த திராவிடநா டிந்நாள்
திருகு வடநாட்டார் கையினிற் சிக்கி
உருவழிந்து போகாமே காப்பாற்றல் உங்கடனே. 1
ஆற்றும் பணிகள் பகலெல்லாம் ஆற்றியபின்
சேற்றில் முளைத்திட்ட செந்தா மரைபோலும்
88
தோற்றும் இரவும் சுடர்விளக்கும்! இல்லத்தில்
காற்று நுகர்ந்திடுவீர்; காது கொடுத்தேயாம்
சாற்றுதல் கேளீர்! தமிழை வடநாட்டார்
மாற்றித் தமிழர் கலையொழுக்கம் பண்பெல்லாம்
மாற்றவே இந்திதனை வைத்தார்கட் டாயமென
வேற்றுவரின் எண்ணத்தை வேரறுத்தல் உங்கடனே. 2
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனுமோர்
சிறப்புடைய நம்கொள்கை நானிலத்தின் செல்வம்!
தறுக்கன் வடநாட்டான் தன்னலத்தான் இந்நாள்
நிறப்பாகு பாட்டை நிலைநிறுத்த எண்ணி
வெறுப்புடைய இந்தி விதைக்கின்றான் இங்கே
அறப்போர் தொடுத்திடுவோம் வெல்வோம்நாம் அன்றி
இறப்போம் உறுதி இதுவாகும் என்பீர்
உறக்கம் தவிர்த்துணர்வே உற்றெழுதல் உங்கடனே. 3
தீயில் நிலநீரில் காற்றில் செழுவானில்
ஆயில் குறியில் அறியாப் பெரும்பொருட்குக்
கோயில் தனைஒப்புக் கொள்ளோம்! சுமந்தீன்ற
தாயில் பிறிதோர் பொருட்குத் தலைவணங்கோம்!
வாயில் பொறாமைச்சொல் வையோம்! அவாவெகுளி
தீயிற் கொடுஞ்சொற்கள் தீர்த்தோம்! அறப்பயனே
வாயிற் பருகுவோம். நம்கொள்கைப் பற்றறுக்க
நோயில் நுழைஇந்தி வேரறுத்தல் உங்கடனே. 4
ஒழுக்கம் கெடுக்கும்! உணர்வை ஒடுக்கும்!
வழக்கும் பெரும்போரும் மாநிலத்தில் சேர்க்கும்!
இழுக்கும் தருமதங்கள் யாவும் விளக்கிக்
கொழுக்கும் குருமாரின் கொட்டம் அறுத்துத்
தழைக்கத் தழைக்க நறுங்கொள்கை நெஞ்சிற்
பழுக்கும் படிவாழ் திராவிடர் பண்பை
அழிக்க நினைத்திங்கே ஆளவந்தார் இந்தி
புழுக்கும் படிசெய்தார் போக்கிடுதல் உங்கடனே. 5
எட்டுத் திசையும் பதினா றிடைப்பாங்கும்
முட்டித் ததும்பி முளைத்தோங்கு பேரொளிக்கே
எட்டுக் குடப்பசுப்பால் இட்டாட்டு வீரென்னும்
பட்டாடை சாத்தென்னும் பல்பணி பூட்டென்னும்
குட்டி வணங்குமுன்பு பார்ப்பனனைக் கும்பிடென்னும்
மட்டக் கருத்துக்கள் மாளா மடமைஎலாம்
கொட்டி அளக்குமோர் இந்தியினை நம்தலையில்
கட்டுவார் தம்மைஒரு கைபார்த்தல் உங்கடனே. 6
தந்தைமார் பற்பலராய்த் தாயொருத்தி யாய்,மாட்டு
மந்தையுடன் இந்நாட்டில் வந்தவர்கள் நாமல்லோம்!
முந்தைக்கு முந்தை அதன்முந்தை நாளாக
இந்தப் பெருநாடாம் யாழின் இசையாவோம்!
வந்தார்க்கோ நாமடிமை? வந்தார் பொருள்விற்கும்
சந்தையா நம்நாடு? தாயாம் தமிழிருக்க
89
இந்தியோ கட்டாயம்? என்ன பெருங்கூத்தோ?
கொந்துமொரு கொத்தடிமை நீக்கிடுதல் உங்கடனே. 7
புலையொழுக்கம் கொண்டவர்கள் பொல்லா வடக்கர்
தலையெடுத்தார் இன்பத் திராவிடதின் தக்க
கலையொழுக்கம் பண்பனைத்தும் கட்டோ டொழித்து
நிலைபுரட்டி நம்நாட்டை நீளடிமை யாக்க
வலைகட்டி நம்மில் வகையறியா மக்கள்
பலரைப் பிடித்துரா மாயணத்தை மற்றும்
மலிபொய் மனுநூலை வாழ்வித்தார் யாவும்
தொலையப் பெரும்போர் தொடுப்பதும் உங்கடனே. 8
தென்றற் குளிரும், செழுங்கா மலர்மணமும்,
நின்று தலைதாழ்த்தும் வாழையும், நீள்கரும்பும்,
என்றும் எவர்க்குமே போதும்எனும் செந்நெல்
நன்று விளையும் வளமார்ந்த நன்செயும்,
அன்றன் றணுகப் புதிய புதியசுவை
குன்றாத செந்தமிழும், குன்றும் மணியாறும்,
தொன்றுதொட்ட சீரும் உடைய திராவிடத்தை
இன்று விடுதலைச்சீர் எய்துவித்தல் உங்கடனே. 9
"வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அ·தொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்" என்ற வள்ளுவர்சொல்
தாழ்வொன் றடையாது தஞ்செயலை நன்றாற்றும்
ஆழ்கடல் முப்பாங் கமைந்த திராவிடத்தில்
வாழ்கின்றார் ஆன வடுத்தீர் திராவிடர்கள்
வாழ்க! நனிவாழ்க! மாற்றார்கள் வீழ்ந்திடுக!
யாழ்கொள் நரம்பும் இசையும்போல் எந்நாளும்
வாழ்க திராவிடமும் வான்புகழும் சேர்ந்தினிதே. 10
திராவிடர் ஒழுக்கம்
சிந்து கண்ணிகள்
தட்டுப் படாதபெரும் - பொருட்கொரு
சாதியும் உண்டோடா? - படுவாய்
சாதியும் உண்டோடா?
மட்டற்ற செம்பொருட்கே - முரண்படும்
மதங்கள் உண்டோடா? 1
எட்டுத் திசைமுழுதும் - விசும்பு,மண்
எங்கும் நிறைபொருட்கே - படுவாய்
எங்கும் நிறைபொருட்கே
கொட்டு முழக்குண்டோ? - அமர்ந்திடக்
கோயில்கள் உண்டோடா? 2
பிட்டுச் சுமந்ததுண்டோ? - நிறைபொருள்
பெண்டாட்டி கேட்டதுண்டோ? - படுவாய்
பெண்டாட்டி கேட்டதுண்டோ?
கட்டைக் குதிரைகட்டும் - பெருந்தேர்
காட்டெனக் கேட்டதுண்டோ? 3
90
பட்டுடை கேட்டதுண்டோ? - பெரும்பொருள்
பண்ணியம் உண்பதுண்டோ? - படுவாய்
பண்ணியம் உண்பதுண்டோ?
அட்டைப் படத்தினிலும் - திரையிலும்
அப்பொருள் காண்பதுண்டோ? 4
பிரமன் என்பதிலும் - மொட்டைத்தலைப்
பிச்சையன் என்பதிலும் - படுவாய்
பிச்சையன் என்பதிலும்
முருகன் என்பதிலும் - திருமால்
முக்கணன் என்பதிலும் 5
வரும் பெருச்சாளி - அதன்மிசை
வருவன் என்பதிலும் - படுவாய்
வருவன் என்பதிலும்
சரிந்த தொந்தியுள்ளார் - பார்ப்பனர்க்குத்
தரகன் என்பதிலும் 6
பெரும் பொருள்உளதோ? - தொழுவதில்
பேறுகள் பெற்றதுண்டோ? - படுவாய்
பேறுகள் பெற்றதுண்டோ?
கரும் பிருக்குதடா - உன்னிடத்தில்
காணும் கருத்திலையோ! 7
இரும்பு நெஞ்சத்திலே - பயன்ஒன்றும்
இல்லை உணர்ந்திடடா - படுவாய்
இல்லை உணர்ந்திடடா!
திரும்பும் பக்கமெலாம் - பெருமக்கள்
தேவை யுணர்ந்திடடா! 8
தீய பொறாமையையும் - உடைமையிற்
செல்லும் அவாவினையும் - படுவாய்
செல்லும் அவாவினையும்
காயும் சினத்தினையும் - பிறர்உளம்
கன்ற உரைப்பதையும் 9
ஆயின் அகற்றிடுவாய் - உளத்தினில்
அறம் பிறக்குமடா! - படுவாய்
அறம் பிறக்குமடா!
தூய அறவுளத்தால் - செயலினில்
தொண்டு பிறக்குமடா! 10
ஏயும்நற் றொண்டாலே - பெரியதோர்
இன்பம் பிறக்குமடா! - படுவாய்
இன்பம் பிறக்குமடா!
தீயும் குளிருமடா - உனையண்டும்
தீயும் பறக்குமடா! 11
வாயில் திறக்குமடா - புதியதோர்
வழி பிறக்குமடா - படுவாய்
வழி பிறக்குமடா!
ஓயுதல் தீருமடா - புதியதோர்
ஒளி பிறக்குமடா! 12
91
தாயொடு மக்களடா - அனைவரும்
சரிநிகர் உடைமை - படுவாய்
சரிநிகர் உடைமை
தேயும் நிலைவிடுப்பாய் - இவையே
திராவிடர் ஒழுக்கம். 13
அன்னை அறிக்கை
(திராவிடம்)
என்னருமை மக்களே இன்பத் திராவிடரே
இன்னல் வடக்கர்களை எள்ளளவும் நாடாதீர்!
உங்கள் கலைஒழுக்கம் மிக்க உயர்ந்தனவாம்
பொங்கிவரும் ஆரியத்தின் பொய்க்கதைகள் ஒப்பாதீர்!
ஏமாற்றி மற்றவரை, ஏட்டால் அதைமறைத்துத்
தாமட்டும் வாழச் சதைநாணா ஆரியத்தை
நம்புவார் நம்பட்டும் நாளைக் குணர்வார்கள்
அம்பலத்தில் வந்ததின்றே ஆரியரின் சூழ்ச்சியெலாம்.
பிச்சை எடுப்பவர்கள் பேரதிகா ரம்பெற்றால்
அச்சத்தால் நாட்டில் அடக்குமுறை செய்யாரோ?
ஆட்சி யறியாத ஆரியர்கள் ஆளவந்தால்
பாட்டாளி மக்களெல்லாம் பாம்பென்றே அஞ்சாரோ?
மிக்க மதவெறியர் மேல்நிலையை எய்திவிட்டால்
தக்க முŠலீமைத் தாக்கா திருப்பாரோ?
உங்கள் கடமை உணர்வீர்கள்; ஒன்றுபட்டால்
இங்கே எவராலும் இன்னல் வருவதில்லை!
ஏசு மதத்தாரும் முŠலீம்கள் எல்லாரும்
பேசில் திராவிடர்;என் பிள்ளைகளே என்றுணர்க!
சாதிமதம் பேசித் தனித்தனியே நீரிருந்தால்
தோதுதெரிந் தாரியர்கள் உம்மைத் தொலைத்திடுவார்!
ஆரியரின் இந்தி அவிநாசி ஏற்பாடு
போரிட்டுப் போக்கப் புறப்படுங்கள் ஒன்றுபட்டே!
ஆண்டேன் உலகுக்கே ஆட்சிமுறை நான்தந்தேன்
பூண்ட விலங்கைப் பொடியாக்க மாட்டீரோ?
மன்னும் குடியரசின் வான்கொடியை என்கையில்
இன்னே கொடுக்க எழுச்சி யடையீரோ!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166b.htm#6._திராவிடர்_திருப்பாடல்

முற்பகல்
ஓங்கு கதிர் வாவா - நீ
[ஒன் றுடனே] வாழி!
மாங் கனியும் நீதான் - அந்த
வானம் என்னும் தோப்பில்!
நீங்கும் பனி என்றே - இங்கு
நீ சிரித்து வந்தாய்!
நாங்கள் மறப் போமோ - நீ
[நாலு டனே] வாழி!
ஐந் துடனே வாழி - நீ
அள்ளி வைத்த தங்கம்! 5
முந்தி யயுக ருக்கல்ரு - எந்த
மூலை யிலும் இல்லை!
சந்து பொந்தில் எங்கும் - உன்
தங்க வெய்யில் கண்டோம்.
இந்த நன்மை செய்தாய் - நீ
[எட்டு டனே] வாழி!
திராவிட நாட்டு வாழ்த்து
இன்பம் உள்ள நாடு - தம்பி
இத்தி ராவிடந் தான்
உன்னி வாழ்த்து வோமே - தம்பி
[ஒருப துடன்] வாழி! 10
திராவிட நாட்டின் சிறப்பு
நன்மை யுள்ள நாடு - தம்பி
நாவலந் தீ வுக்குள்,
தென்னை வளம் சேரும் - நல்ல
தெற்கு வள நாடு.
கன்னி முதல் வங்கம் - இரு
கடல் கிழக்கு மேற்கு,
சின்ன நல்ல தம்பி - நம்
திராவி டநன் னாடு!
முன்ன ரசர் நாடு - நல்ல
மூன்ற ரசர் நாடு! 15
மன்னர் வில்எ டுத்தால் - பனி
வட மலைந டுங்கும்.
பாண்டி யன்பேர் சொன்னால் - இந்தப்
75
பார் நடுங்கும் தம்பி.
ஆண்டி ருந்த சேரன் - அவன்
ஆரி யரை வென்றான்.
மாண்ட துண்டு சோழன் - அவன்
மாநி லத்தைக் காத்தான்.
மாண்டு விட்டால் என்ன? - அவன்
வழி வந்தவர் நாமே! 20
[இருப துடன் ஒன்றே] - வளம்
எக்க ளிக்கும் நாட்டில்
எரு தடிப்ப தாலே - தம்பி
என்ன பயன் என்று
பொருந்த யானை கட்டி - நெல்
போர் அடித்தல் உண்டு.
கரும்பு தரும் சாறோ - தம்பி
காவி ரியின் ஆறு!
முப்ப ழமும் தேனும் - நல்ல
முந்தி ரிப்ப ருப்பும் 25
எப்பொ ழுதும் காணும் - தம்பி
[இருப துடன் ஆறு]
கப்பல் கொண்டு போகும் - இங்கு
காணும் சரக் கெல்லாம்.
சிப்ப மாகச் சாயும் - பல
சீமைச் சரக் கெல்லாம்.
கெட்டி முத்துச் சாயும் - நம்
கீழ்க் கடலில் தம்பி.
முட்டி லாத நாடு - தம்பி
[முப்ப துடன்] வாழி! 30
வெட்டும் இட மெல்லாம் - நாம்
வேண்டிய பொன் கிட்டும்.
எட்டுத் திசை பாடும் - நம்
இன்பத் திரு நாட்டை!
நாக ரிக நாடு - நம்
நல்ல பெரு நாடு!
தோகை மயில் ஆடும் - பூந்
தோட்டங் களில் எல்லாம்.
வேக வைக்கும் கோடை - அதை
விழுந்த விக்கும் தென்றல். 35
வாழ் கறவை மாடு - தம்பி
76
மாம லையின் ஈடு!
சந்த னத்துச் சோலை - அதைச்
சார்ந்து நிற்கும் குன்றம்.
அந்தப் யுபொதி கைருபோல் - தம்பி
ஆருங் கண்ட தில்லை.
சிந் தருவி உண்டு - தம்பி
தெங்கி ளநீர் போலே!
நந்து புனல் ஆறு - தம்பி
[நாற்ப துடன்] வாழி! 40
காவிரி நல் வைகை - பல
கண் கவரும் பொய்கை,
பூ விரியும் சோலை - நல்ல
பொன் கொழிக்கும் நன்செய்,
யாவும் உண்டு கண்டாய் - தம்பி
இத்தி ராவி டத்தில்.
தேவை எல்லாம் சாயும் - நம்
தெற்கு வள நாட்டில்.
திராவிடர் கலை ஒழுக்கம்
குற்ற மற்ற கொள்கை - தம்பி
கொண்ட திந்த நாடு! 45
கற்ற வருக் கெல்லாம் - தம்பி
கல்வி தந்த நாடு.
வெற்றி மற வர்கள் - தம்பி
வேல் மறவர் நாடு.
மற்ற வரும் வாழத் - தம்பி
வழி வகுத்த நாடு.
ஈர டியும் தந்தான் - தம்பி
இங்கு வள்ளு வன்தான்
ஆரும் அறம் கண்டோம் - தம்பி
ஐம்ப துடன் வாழி! 50
சீரு டைய நாடு - தம்பி
திராவி டநன் னாடு.
பேரு டைய நாடு - தம்பி
பெருந் திராவி டந்தான்.
ஓர் கடவுள் உண்டு - தம்பி
உண்மை கண்ட நாட்டில்.
பேரும் அதற் கில்லை - தம்பி
பெண்டும் அதற் கில்லை.
தேரும் அதற் கில்லை - தம்பி
77
சேயும் அதற் கில்லை. 55
ஆரும் அதன் மக்கள் - அது
அத்த னைக்கும் வித்து!
உள்ள தொரு தெய்வம் - அதற்
குருவ மில்லை தம்பி.
அள்ளி வைத்த ஆப்பி* - தம்பி
அதிற் கடவுள் இல்லை.
* ஆப்பி - பசுவின் சாணம்
குள்ள மில்லை தெய்வம் - அது
கோயில் களில் இல்லை.
தெள்ளு பொடி* பூசும் - தம்பி
சிவன் கடவு ளல்ல. 60
*தெள்ளுபொடி - திருநீறு
[அறுப துடன் ஒன்று] - தம்பி
அரி கடவுள் அல்ல.
அறுமு கனும் அல்ல - தம்பி
ஐங்கை யனும் அல்ல.
அறு சமயம் சொல்லும் - தம்பி
அது கடவுள் அல்ல.
பிற மதத்தில் இல்லை - அந்தப்
பெரிய பொருள் தம்பி.
திராவி டர்கள் முன்பே - தம்பி
தெரிந் துணர்ந்த உண்மை. 65
ஒரு மதமும் வேண்டாம் - தம்பி
உண்மை யுடை யார்க்கே.
பெரு மதங்கள் என்னும் - அந்தப்
பேய் பிடிக்க வேண்டாம்.
திருட்டுக் குரு மாரின் - கெட்ட
செயலை ஒப்ப வேண்டாம்.
காணிக் கைகள் கொட்டி - நீ
கண் கலங்க வேண்டாம்!
ஏணி ஏற்ற மாட்டார் - தம்பி
[எழுபதுடன்] வாழி! 70
தோணி யினில் ஏற்றி - நல்ல
சொர்க்கம் சேர்க்க மாட்டார்.
நாண மற்ற பேச்சை - நீ
நம்ப வேண்டாம் தம்பி.
சாதி யில்லை தம்பி - மக்கள்
தாழ் வுயர்வும் இல்லை.
78
தீத கற்ற வந்த - நம்
திருக்கு றளைப் பாராய்.
நீதி பொது தம்பி - இந்த
நீணி லத்தில் யார்க்கும். 75
மாத ருக்கும் நீதி - ஆண்
மக்க ளுக்கும் ஒன்றே.
பச்சை விளக் காகும் - உன்
பகுத் தறிவு தம்பி.
பச்சை விளக் காலே - நல்ல
பாதை பிடி தம்பி!
அச்ச மில்லை தம்பி - நல்ல
அறம் இருக்கும் போது!
எச்ச ரிக்கை கண்டாய் - தம்பி
[எண்ப துடன்] வாழி! 80
வள்ளு வரின் நூலே - நல்ல
வழி யளிக்கும் தம்பி.
குள்ளர் வழிச் சென்று - நீ
குழியில் விழ வேண்டாம்.
உள்ள இனத் தார்கள் - உளம்
ஒன்று பட வேண்டும்.
தள்ளுக யுபொ றாமைரு - ஒரு
தாய் வயிற்று மக்கள்.
நீக்குக பே ராசை - தம்பி
நிகர் எவரும் ஆவார். 85
போக்கு சினம் தீச்சொல் - நீ
பொன் அறத்தை வாழ்த்து.
சேர்க்கும் அறம் உன்னை - ஒரு
தீங்கும் அற்ற வாழ்வில்!
ஊர்க் குழைக்க வேண்டும் - நீ
உண்மை யுடன் தம்பி.
நாட்டுக் குழை தம்பி - இந்த
நானி லத்தை எண்ணி.
வீட்டுக் குழை தம்பி - இங்கு
மீதிப் பெயர் எண்ணி! 90
தோட்டம் பொது தம்பி - இந்தச்
சீமை பொது தம்பி,
தேட்டம் பொது தம்பி - உணர்
[தொண்ணூ றோடி ரண்டே.]
கண் அடித் தழைக்கும் - ஒரு
79
கட் டழகி தன்னை,
எண்ணம் ஒத் திருந்தால் - நீ
ஏற்றுக் கொள்ள வேண்டும்.
பண்ணி வைப்ப தாக - வரும்
பார்ப்பு* மணம் வேண்டாம். 95
* பார்ப்பு - பார்ப்பனன்
கண்ம ணியும் நீயும் - நல்ல
காதல் மணம் கொள்வீர்.
திராவி டத்தை மீட்பீர் - நம்
செந் தமிழை மீட்பீர்.
திராவி டர்கள் ஒன்றாய்த் - தம்பி
சேர்ந் துழைக்க வேண்டும்.
திராவி டத்தில் மாற்றார் - தமைச்
சேர விட வேண்டாம்.
ஒரே உறுதி கொள்வாய் - தம்பி
[ஒருநூ றுடன்] வாழி! 100
பிற்பகல்
மாலை
உச்சிக் குடை சாய்ந்தான் - கதிர்
[ஒன்று டனே] வாழி!
மச்சு வேய்ந்தி ருந்தான் - அந்த
மாற் றுயர்ந்த பொன்னன்,
மெச்சு தடி பெண்ணே - அந்த
வெய்யி லையும் வையம்.
வைச்ச புள்ளி மாறான் - அவன்
மாலை மாற்றப் போவான்.
ஒழுக்கம்
நல்லொ ழுக்கம் ஒன்றே - பெண்ணே
நல்ல நிலை சேர்க்கும். 5
புல் ஒழுக்கம் தீமை - பெண்ணே
பொய் உரைத்தல் தீமை!
இல்ல றமே பெண்ணே - இங்கு
நல்ல றமென் பார்கள்.
கல்வி யுடை யோரே - பெண்ணே
கண்ணு டைய ராவார்.
நன்றி மற வாதே - பெண்ணே
நற் பொறுமை வேண்டும்.
இன்சொல் இனி தாகும் - பெண்ணே
80
இன்னல் செய்ய வேண்டாம். 10
உன்ன ருமை நாட்டின் - பெண்ணே
உண்மை நிலை காண்பாய்.
இந்நி லத்தின் தொண்டில் - நீ
ஈடு பட வேண்டும்.
[பத்து டனே மூன்று] - நீ
பகுத் தறிவைப் போற்று!
நத்தி யிரு பெண்ணே - நீ
நல்ல வரை என்றும்!
சொத்து வரும் என்று - நீ
தோது தவ ராதே. 15
முத்து வரும் என்று - நீ
முறை தவற வேண்டாம்.
கனியத் தமிழ் பாடு - பெண்ணே
கச்சே ரிசெய் யாதே.
சினிமா வினிற் சேர்ந்து - நீ
தீமை யடை யாதே!
தனித்து வரும் போது - கெட்ட
தறுதலை கண் வைத்தால்,
இனிக்க நலம் கூறு - பெண்ணே
இல்லா விடில் தாக்கு. 20
[இருப துடன் ஒன்றே] - பெண்ணே
இத்தி ராவி டத்தில்
அரிசி மட்டும் இல்லை - பெண்ணே
ஆட்சி மட்டும் உண்டு.
இரிசன் மகன் முத்தை - பெண்ணே
யுஇந்தி படிரு யென்றான்.
வரிசை கெட்ட மூளி - அவன்
வைத்த துதான் சட்டம்!
[இருப துடன் ஐந்தே] - நம்
இனிய தமிழ்த் தாயைக் 25
கருவ றுத்துப் போடும் - ஒரு
கத்தி யடி இந்தி.
அரிய செயல் ஒன்று - பெண்ணே
ஆளு பவர் செய்தார்.
ஒருவ ருக்கும் கள்ளைப் - பெண்ணே
ஒழிக்கச் சட்டம் செய்தார்.
கள்ளை விட்ட பேர்க்குப் - பெண்ணே
கைப் பணமும் மீதி.
81
முள் விலக்கி னார்கள் - பெண்ணே
[முப்ப துடன்] வாழி! 30
கள்ளை விட்டுக் கையில் - பெண்ணே
காசு மீத்தச் செய்தார்.
கள்ளக் கடை போட்டார் - அதைக்
கழற்ற வழி செய்தார்.
ஆள வந்தார் உண்டு - பெண்ணே
ஐயோ பெரும் மண்டு.
நாளும் கையில் மட்டும் - பெண்ணே
நல்ல வரு மானம்!
ஆளுக் கென்ன பஞ்சம் - பெண்ணே
அடி மடியில் லஞ்சம்! 35
தோளி லேமி டுக்காம் - அவர்
தொழுவ தோவ டக்காம்!
கெண்டை விழி யாளே - அடி
கிள்ளை மொழி யாளே,
கொண்டை யிலே பூவும் - உன்
கோணை நெடு வாக்கும்,
தண்டை யிலே பாட்டும் - உன்
தாழ் அடியில் கூத்தும்,
கண்ட வுடன் காதல் - நான்
கொண்டே னேஉன் மீதில். 40
[நாற்ப துடன் ஒன்று] - பெண்ணே
நான் உனக்கு மாமன்.
நேற்று வந்து போனாய் - அடி
நீல மயில் போலே.
மாற்று யர்ந்த பொன்னே - அடி
மாணிக் கமே கேளாய்,
சோற்றை மறந் தேனே - அடி
தூக்க மில்லை மானே.
உன் நினைப்புத் தானே - அடி
ஊற்றெ டுத்த தேனே! 45
என்னைக் கொல்லு தேடி - அடி
ஏதுக் கிந்த மோடி?
சின்ன வய தாளே - அடி
சிரித்த முகத் தாளே
அன்ன நடை யாளே நல்ல
அச்ச இடை யாளே
துள்ளு வதென் ஆசை - அடி
82
துடித்த தடி மீசை.
அள்ளு வதென் காதல் - அடி
[ஐம்ப துடன்] வாழி! 50
தள்ளத் தகு மோடி - நான்
தாய்க்குத் தலைப் பிள்ளை.
நொள்ளை யல்ல பெண்ணே - நான்
நொண்டி யல்ல பெண்ணே.
வருத்தம் இல்லை பெண்ணே - என்
மாமிக் கும்என் மேலே
கருத்தும் உண்டு மாமன் - என்னைக்
கட்டிக் கொள்ளச் சொல்வான்.
சிரிப்பு மலர் வாயால் - அடி
தெரிவி ஒரு பேச்சே, 55
கருத்தை உரை கொஞ்சம் - பெண்ணே
கல்லடி உன் நெஞ்சம்.
பார் இரண்டு சிட்டு - பெண்ணே
பழகும் ஒன்று பட்டு
யார் தடுக்கக் கூடும்? - பெண்ணே
[ஐம்ப துடன் எட்டு]
பீர்க்க மலர் பூக்கும் - அடி
பின் பொழுதும் கண்டாய்
ஆர்க்கு தடி வண்டும் - பெண்ணே
[அறுபதுடன்] வாழி! 60
விரிந்த தடி முல்லை - அடி
வீசி யது தென்றல்.
சரிந்த தடி பெண்ணே - மலர்
தங்கப் பொடி எங்கும்.
எரிந்த தடி மேனி - பெண்ணே
இனிப் பொறுக்க மாட்டேன்.
புரிந்த னைஇந் நேரம் - அடி
பொல்லா தஒட் டாரம்.
பூட்டி வைத்த வீட்டின் - அடி
புது விளக்கும் நீயே. 65
மாட்டி வைத்த கூட்டில் - அடி
மணிக் கிளியும் நீயே.
போட்டு வைத்த சம்பா - இனிப்
பொங்கி டும்உன் னாலே.
கூட்டி வைத்த வீட்டின் - நல்ல
குடும்ப விளக் காவாய்.
83
கூண்டு வண்டி கட்டி - நாம்
கூட லூர்அ டைந்தால்
பாண்டி யன்கு டும்பம் - என்று
பார்த்து மகிழ் வார்கள். 70
தாண்டு நடை போட்டு - நாம்
தகத கென்று போனால்
மாண்ட நெடுஞ் சோழன் - அவன்
வளர் குடும்பம் என்பார்.
தையல், என்றன் வீட்டில் - நீ
சமையல் செய்யும் போதுன்
கையழகு பார்த்து - நான்
களித்தி டுவேன் பெண்ணே.
கையில் விளக் கேந்தி - நீ
கடைசி அறை போவாய் 75
பொய்யல் லவே பெண்ணே - மிகப்
பூரிக்கும் என் மேனி.
[எழுப துடன் ஏழு] - பெண்ணே
இளமை மாறிப் போகும்
அழகு மாறிப் போகும் - நீ
அறிந்து நட பெண்ணே.
குழந்தை குட்டி பெற்று - நாம்
குறை தவிர்க்க வேண்டும்.
பிழிந்த பழச் சாறே - அடி
பேச்சும் உண்டோ வேறே. 80
தங்கக் கதிர் மேற்கில் - மெல்லத்
தவழ்ந்த தடி பெண்ணே.
மங்கிற் றடி வெய்யில் - அதோ
மகிழ்ந்த தடி அல்லி.
தங்கும் தாம ரைப்பூ - மானே
தளர்ந்த தடி மேனி.
பொங்கிற் றடி காதல் - அடி
பூவை யேஉன் மீதில்!
[எண்ப துடன் ஐந்தே] - பெண்ணே
எருது களின் கூட்டம் 85
கண் மகிழ்ந்து பெண்ணே - அவை
கழனி விட்டுப் போகும்.
பெண் மயிலே என்னை - நீ
பெருமை படச் செய்வாய்.
உண்மை யிலே நானே - உன்
84
ஊழி யம்செய் வேனே.
பட்ட தடி உன்கை - பெண்ணே
பலித்த தடி வாழ்வு.
தொட்ட துது லங்கும் - இனித்
[தொண்ணூ றுடன்] வாழ்க! 90
இட்டது நீ சட்டம் - என்
இன்பப் பெரு மாட்டி.
விட்டுப் பிரி யாதே - எந்த
வேளை யிலும் மாதே.
ஆறு தலைச் செய்வாய் - என்
அண்டை யிலி ருந்தே.
மாறி டுமோ கண்ணே - நம்
வாழ்க் கையிலே எண்ணம்?
மாறும் படிச் செய்வார் - இவ்
வைய கத்தில் இல்லை. 95
ஊறு தடி அன்பும் - பெண்ணே
ஓங் கிடுதே இன்பம்.
தேக்கி யது நீலம் - அந்தச்
செங்க திரின் மேலே.
பூக்கும் மண முல்லை - இனிப்
போகு மடி மாலை.
வாய்க்க விளக் கேற்றி - நகர்
மாத ரும்ம கிழ்ந்தார்.
நோக்கி யது வையம் - பெண்ணே
[நூறு டனே] வாழி! 100

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166b.htm#5._ஏற்றப்_பாட்டு

காட்சி 1
திருமண முயற்சி
விரசலூர் வெள்ளையப்பன், மனைவியாகிய
மண்ணாங்கட்டியிடம் கூறுகிறான்:
உன்னைத் தானே என்னசெய் கின்றாய்?
இங்குவா! இதைக்கேள்! இப்படி உட்கார்!
பைய னுக்கு மணத்தைப் பண்ணிக்
கண்ணால் பார்க்கக் கருதினேன். உன்றன்
எண்ணம் எப்படி? ஏனெனில் பையனுக்
காண்டோ இருபது ஆகி விட்டது.
பாண்டியன் தானோ பழைய சோழனோ
சேரனே இப்படித் தெருவில் வந்தானோ
என்று பலரும் எண்ணு கின்றனர்.
அத்தனை அழகும் அத்தனை வாட்டமும்
உடையவன், திருமணம் முடிக்கா விட்டால்
நடையோ பிசகி விடவும் கூடும்.
நாட்டின் நிலையோ நன்றா யில்லை.
சாதி என்பதும் சாத்திரம் என்பதும்
தள்ளடா என்று சாற்றவும் தொடங்கினார்.
பார்ப்பனர் நடத்தும் பழமண முறையைப்
பழிக்கவும் தொடங்கினர் பழிகா ரர்கள்.
இளைஞரை அவர்கள் இவ்வாறு கெடுப்பதே
வளமை யாக வைத்திருக் கின்றனர்.
இந்த நிலையில் எவளோ ஒருத்தியைப்
பையன் ஏறிட்டுப் பார்த்தால் போதும்
வெடுக்கென மணத்தை முடித்திடு வார்கள்.
என்ன?நான் சொல்வ தெப்படி? ஏன்?உம்?
மனைவியாகிய மண்ணாங்கட்டி:
இன்றுதான் பிறந்ததோ இந்த உறுதி?
பைய னுக்குப் பத்து வயசு
தொடங்கியதி லிருந்து சொல்லி வந்தேன்
காது கேட்டதா? கருத்தில் பட்டதா?
ஐயரை உடனே அழைக்க வேண்டும்.
பையனின் குறிப்பைப் பார்க்க வேண்டும்.
கிழக்குத் திசையில் கிடைக்குமா பெண்?
எந்தத் திசையில் இருக்கின்றாள் பெண்?
சொத்துள் ளவளா? தோதான இடமா?
மங்கை சிவப்பா? மாஞ் செவலையா?
என்று பெண்பார்க்க இங்கி ருந்துநாம்
புறப்பட வேண்டும்? புரிய வேண்டுமே.
வெள்ளையப்பன்:
59
புரோகிதன் நல்லநாள் பொறுக்குவான், அவனை
இராகுகா லத்திலா இங்க ழைப்பது?
ஆக்கப் பொறுத்தோம் ஆறப் பொறுப்போம்.
நடந்ததை, இனிமேல் நடக்கப் போவதை,
நடந்துகொண் டிருப்பதை நன்றாய்ச் சொல்வான்;
பகைகுறுக் கிடுவதைப் பார்த்துச் சொல்வான்;
இடையில் குறுக்கிடும் தடைகள் சொல்வான்;
எல்லாம் சொல்வான் ஏற்படு கின்ற
பொல்லாங் கெல்லாம் போக்கவும் முடியும்.
ஒருபொழு துக்கான அரிசி வாங்க
அரை ரூபாயையும் அவனுண்டு பண்ண
முடியுமா? நம்மால் முடிந்த வரைக்கும்
ஏற்பாடு செய்துகொண் டிட்டு வருவோம்.
காட்சி 2
மாப்பிள்ளையின் சாதகம் பார்த்தல்
சொறிபிடித்த கொக்குப் புரோகிதனிடம்,
வீட்டுக்கார வெள்ளையப்பன் சொல்லுகிறான்:
இதுதான் ஐயரே என்மகன் சாதகம்;
திருமணம் விரைவில் செய்ய வேண்டும்.
எப்போது முடியும்? எங்கே மணமகள்?
மணமகட் குரிய வாய்ப்பெலாம் எப்படி?
அயலா? உறவா? அணிமையா? சேய்மையா?
பொறுமையாய்ப் பார்த்துப் புகல வேண்டும்.
மண்ணாங்கட்டி புரோகிதனிடம் கூறுகிறாள்:
காலையில் வருவதாய்க் கழறி னீரே,
மாலையில் வந்தீர் என்ன காரணம்?
சொறிபிடித்த கொக்கு சொல்லுகிறான்:
தெரியா மல்என் பெரிய பெண்ணைத்
திருட்டுப் பயலுக்குத் திருமணம் செய்தேன்.
வட்டிக் கடையில் வயிர நகையைப்
பெட்டி யோடு தட்டிக் கொண்டதால்
சிறைக்குப் போனான். செத்தும் தொலைந்தான்.
கட்டிய தாலியைக் கழற்றி எறிந்து
மொட்டைத் தலையுடன் மூதேவி போலப்
பெரியவள் பிறந்தகம் வரநேர்ந்து விட்டது.
சின்னப் பெண்ணைப் பின்னத் தூரில்
கப்பல் கப்பலாய்க் கருவா டேற்றும்
வாச னுக்கு மணம்செய் வித்தேன்.
மணம் முடிந்த மறுநாள் தெரிந்தது
வாசன் கருவாட்டு வாணிகன் அல்லன்
வாணிகன் கூலியாள் வாசன் என்பது!
ஒருநாள் வாசன் பெருங்குடி வெறியால்
நாயைக் கடித்தான்; நாயுங் கடித்தது.
நஞ்சே றியதால் நாய்போல் குரைத்தே
60
அஞ்சாறு நாளாய் அல்லல் பட்டே
இரண்டு நாளின்முன் இறந்து போனான்.
ஓலை வந்தது காலையில்! கையில் --
கேட்டா லுஞ்சரி விட்டா லுஞ்சரி --
இரண்டணாக் காசும் இல்லை மெய்யாய்!
இந்நேர மட்டும் ஏதேதோ நான்
தில்லு மல்லுகள் செய்து பார்த்தேன்
யாரும் சிறிதும் ஏமாற வில்லை;
உங்க ளிடத்தில் ஓடி வந்தேன்.
சாதகம் பார்த்துச் சரியாய்ச் சொல்வேன்
முன்நடந் தவைகளை முதலில் சொல்வேன்:
ஐயா இதுஓர் ஆணின் சாதகம்.
வெள்ளையப்பன்:
ஆமாம் அடடா ஆமாம் மெய்தான்!
புரோகிதன்:
ஆண்டோ இருப தாயிற்றுப் பிள்ளைக்கு.
வெள்ளையப்பன்:
மெய்தான் மெய்தான் மேலும் சொல்வீர்!
புரோகிதன்:
பையனோ நல்ல பையன், அறிஞன்.
ஈன்றதாய் தந்தை இருக்கின் றார்கள்.
உங்களுக் கிவனோ ஒரே பையன்தான்.
பையன் தந்தை பலசரக்கு விற்பவர்
தாய்க்கோ ஒருகால் சரியாய் இராது.
மண்ணாங்கட்டி:
அத்தனையும் சரி அத்தனையும் சரி
எப்போது திருமணம் ஏற்படக் கூடும்?
புரோகிதன்:
இந்தவை காசி எட்டுத் தேதிக்கு
முந்தியே திருமணம் முடிந்திட வேண்டும்.
மண்ணாங்கட்டி:
அத்தனை விரைவிலா? அத்தனை விரைவிலா?
புரோகிதன்:
நடுவில் ஒரேஒரு தடை யிருப்பதால்
ஆடியில் திருமணம் கூடுதல் உறுதி.
வெள்ளையப்பன்:
ஆடியில் திருமணம் கூடுமா ஐயரே?
புரோகிதன்:
ஆடிக் கடைசியில் ஆகும் என்றால்
ஆவணி முதலில் என்றுதான் அர்த்தம்.
61
வெள்ளையப்பன்:
அப்படிச் சொல்லுக அதுதானே சரி.
மண்ணாங்கட்டி:
மணப்பெண் என்ன பணக்காரி தானா?
புரோகிதன்:
மணப்பெண் கொழுத்த பணக்காரன் மகள்
பெற்றவர் கட்கும் உற்றபெண் ஒருத்திதான்!
மண முடிந்தபின் மறு மாதத்தில்
ஈன்றவர் இருவரும் இறந்து போவார்கள்
பெண்ணின் சொத்துப் பிள்ளைக்கு வந்திடும்.
மண்ணாங்கட்டி:
எந்தத் திசையில் இருக்கின்றாள் பெண்?
புரோகிதன்:
வட கிழக்கில் மணப்பெண் கிடைப்பாள்.
தொலைவில் அல்ல தொண்ணூறு கல்லில்.
மண்ணாங்கட்டி:
அப்படி யானால் அரசலூர் தானா?
புரோகிதன்:
இருக்கலாம் இருக்கலாம். ஏன் இருக்காது?
வெள்ளையப்பன்:
எப்போது கிளம்பலாம் இதைவிட்டு நானே?
மண்ணாங்கட்டி:
எப்போது கிளம்பலாம் இதைவிட்டு நாங்கள்?
வெள்ளையப்பன்:
யான்மட்டும் போகவா? இருவரும் போகவா?
புரோகிதன்:
நாளைக் காலையில் நாலு மணிக்கு
நீவிர்மட்டும் போவது நேர்மை.
நாழிகை ஆயிற்று நான்போக வேண்டும்.
மண்ணாங்கட்டி:
இன்னும் ஒன்றே ஒன்று சொல்லுவீர்
என்ன என்றால் -- வேறொன்று மில்லை
எனக்குக் குழந்தை இன்னும் பிறக்குமா?
வெள்ளையப்பன்:
†¤க்கும் இனிமேல் உனக்கா பிள்ளை?
புரோகிதன்:
இனிமேல் பிள்ளை இல்லை இல்லை.
62
மண்ணாங்கட்டி:
இந்தா நாலணா. எழுந்துபோம் ஐயரே!
புரோகிதன்:
ஆயினும் இந்த ஆவணிக்குப் பின்
பெண் குழந்தை பிறக்கும் உறுதி;
போதாது நாலணா, போட்டுக் கொடுங்கள்.
மண்ணாங்கட்டி:
சரிஇந் தாரும் ஒருரூ பாய்தான்!
காட்சி 3
புதிய தொடர்பு
அரசலூர் அம்மாக்கண்ணுவிடம் விரசலூர்
வெள்ளையப்பன் சொல்லுகிறான்:
நிறைய உண்டேன் நீங்கள் இட்டதைக்
கறிவகை மிகவும் கணக்காய் இருந்தன.
அரசலூர் வந்ததை அறிவிக் கின்றேன்:
இரிசன் மகளை என்மக னுக்குக்
கேட்க வந்தேன்; கேட்டேன் ஒப்பினான்.
சாப்பிடச் சொன்னான்; சாப்பாடு முடிந்தது;
மாப்பிள்ளை பார்க்க வருவதாய்ச் சொன்னான்;
சரிதான் என்றேன் வரும்வழி தன்னில்
உன்னைப் பார்க்க உள்ளம் விரும்பவே
வந்தேன் மிகவும் மகிழ்ச்சி கொண்டேன்.
பெண் குழந்தை பெறவில் லைநீ
மருந்துபோல் ஒருமகன் வாய்த்திருக் கின்றான்.
அவனுக்கும் திருமணம் ஆக வேண்டும்
உன்றன் கணவன் உயிருடன் இருந்தால்
திருமணம் மகனுக்குச் செய்தி ருப்பார்.
அரசலூர் அம்மாக்கண்ணு சொல்லுகிறாள்:
அவர்இறந் தின்றைக் கைந்தாண் டாயின.
பதினெட்டு வயது பையனுக் காயின.
எந்தக் குறையும் எங்களுக் கில்லை.
நன்செயில் நறுக்காய் நாற்பது காணியும்
புன்செயில் பொறுக்காய் ஒன்பது காணியும்
இந்த வீடும் இன்னொரு வீடும்
சந்தைத் தோப்பும் தக்க மாந்தோப்பும்
சொத்தா கத்தான் வைத்துப் போனார்.
என்ன குறைஎனில், சின்ன வயதில்
என்னை விட்டுச் சென்றார் அதுதான்!
பார்ப்பவர் எவரும் பழுது சொல்லாது
தனியே காலந் தள்ளி வந்தேன்.
இனிமேல் என்னமோ யாரதை அறிவார்?
விரசலூர் வெள்ளையப்பன் சொல்லுகிறான்:
63
நடந்தது பற்றி நாவருந் தாதே
கடந்தது பற்றிக் கண்கலங் காதே
நான்இன்று மாலை நாலரை மணிக்கெலாம்
விரசலூர் போக வேண்டும்! என்ன?
அரசலூர் அம்மாக்கண்ணு சொல்லுகிறாள்:
†¤†¤ம் நான்அதை ஒப்ப மாட்டேன்.
இன்றிரவு நன்றாய் இங்குத் தங்கிக்
காலையில் அடுப்பில் காய்ந்த வெந்நீரில்
ஆர அமர அழகாய் முழுகி
இட்டலி, மசால்வடை சுட்டதும் சுடச்சுட
வெண்ணெய் உருக்கும் மிளகாய்ப் பொடியும்
தொட்டும் தோய்த்தும் ஒட்ட உண்டு
சற்று நேரம் கட்டிலில் துயின்றால்,
இரவில் கண்விழித்த இளைப்புத் தீரும்.
திருந்த நடுப்பகல் விருந்து முடித்துப்
போக நினைத்தால் போவது தானே?
விரசலூர் வெள்ளையப்பன் சொல்லுகிறான்:
அன்பு மிக்க அம்மாக் கண்ணே!
பின்புநான் என்ன பேச முடியும்?
அப்படியே என் அம்மாக் கண்ணு
சொற்படி நடப்பேன் சொற்படி நடப்பேன்.
காட்சி 4
பெண் எப்படி?
விரசலூர் வெள்ளையப்பன்
மனைவி மண்ணாங்கட்டிக்குக் கூறுகிறான்:
நல்ல உயரம், நல்ல கட்டுடல்,
நல்ல பண்பு, நல்ல சிவப்பே.
எல்லாம் பொருத்தம்! எனக்குப் பிடித்தம்.
செல்லாக் காசும் செலவில்லை நமக்கே!
அனைத்தும் அவர்கள் பொறுப்பே ஆகும்
மணமகள் வீட்டில் மணம்வைத் துள்ளார்.
மண்ணாங்கட்டி:
சாதியில் ஏதும் தாழ்த்தி இல்லை!
சொத்தில் ஏதும் சுருக்கம் இல்லை!
ஏழு பெண்களில் இவள்தான் தலைச்சனோ?
எப்படி யாகிலும் இருந்து போகட்டும்.
பெண்கள் ஏழுபேர் பிறந்தனர். ஆணோ
பிறக்க வில்லை பெரிய குறைதான்.
எப்படி யாகிலும் இருந்து போகட்டும்.
எழுபது காணி நஞ்செய் என்றால்
பைய னுக்குப் பத்துக் காணிதான்!
எழுப தாயிரம் இருப்புப் பணமா?
பையனுக்குப் பதினாயிரம் வரும்.
64
எப்படி யாகிலும் இருந்து போகட்டும்!
மாப்பிள்ளை பார்க்க எப்போது வருவார்?
வெள்ளையப்பன்:
காலையில் வருவார் கட்டாய மாக.
காட்சி 5
மாப்பிள்ளை பார்த்தல்
(விரசலூர் வெள்ளையப்பனும் அரசலூர்
இரிசனும் பேசுகிறார்கள்.)
வெள்ளையப்பன்:
வருக வருக இரிசப்ப னாரே!
அமர்க அமர்க அந்த நாற்காலியில்;
இருக்கிறேன் நானும் இந்த நாற்காலியில்
குடிப்பீர் குடிப்பீர் கொத்தமல்லி நீர்.
வீட்டில் அனைவரும் மிகநலந் தானே?
பிள்ளைகள் எல்லாம் பெருநலந் தானே?
என்மகன் இந்த எதிர்த்த அறையில்
படித்தி ருக்கிறான் பார்க்க லாமே.
இரிசன்:
பையன் முகத்தைப் பார்க்க வேண்டும்
பிள்ளையாண் டானொடு பேச வேண்டும்.
இங்கே இருங்கள் யான்போய்ப் பார்ப்பேன்.
(நல்லமுத்துவும் இரிசனும் பேசுகின்றார்கள்.)
நல்லமுத்து:
யார்நீர் ஐயா? எங்கு வந்தீர்?
ஊர்பேர் அறியேன்! உள்வர லாமா?
அப்பா இல்லையா அவ்வி டத்தில்?
இரிசன்:
அப்பா முந்தாநாள் அரசலூர் வந்தார்.
எதற்கு வந்தார் அதுதெரி யாதா?
நல்லமுத்து:
அரசலூர் சென்றார் அப்பா என்றால்
அறியேன், ஏனதை அறிய வேண்டும்?
இரிசன்:
திருமணம் உனக்குச் செய்ய எண்ணினார்;
அதற்கா கத்தான் அங்கு வந்தார்.
உன்பெயர் என்ன உரைப்பாய் தம்பி?
நல்லமுத்து:
என்பெயர் நல்லமுத் தென்றி சைப்பார்.
65
இரிசன்:
என்ன படிக்கிறாய் இந்நே ரத்தில்?
நல்லமுத்து:
காலே அரைக்கால் கம்பரா மாயணம்.
இரிசன்:
காலே அரைக்கால் கம்பரா மாயண
நூலும் உண்டோ? நுவலுக தம்பி!
நல்லமுத்து:
சிதம்பர நாதர் திருவரு ளாலே
அரையே அரைக்கால் அழிந்தது போக
மேலும் மொழிமாற்று வேலைப் பாட்டுடன்
காலே அரைக்கால் கம்பரா மாயணம்
அச்சிடப் பட்டதை அறியீ ரோநீர்?
இரிசன்:
உனக்குத் திருமணம் உடனே நடத்த
என்மக ளைத்தான் உன்தந்தை கேட்டார்.
பெண்ணை உன்தந்தை பேசினார்; பார்த்தார்.
நீயும் ஒருமுறை நேரில் பார்ப்பாய்.
நல்லமுத்து:
அப்பா பார்த்தால் அதுவே போதும்.
இரிசன்:
மணந்து கொள்வார் இணங்க வேண்டுமே?
நல்லமுத்து:
அப்பா இணங்கினார்; அதுவே போதும்.
இரிசன்:
கட்டிக் கொள்பவர் கண்ணுக்குப் பிடித்தமா
என்பது தானே எனக்கு வேண்டும்.
நல்லமுத்து:
பெற்ற தந்தைக்குப் பிடித்தமா, இல்லையா?
பிடித்தம் என்றால் எனக்கும் பிடித்தமே!
இரிசன்:
என்மகள் ஒருமுறை உன்னைப் பார்க்க
நினைப்ப தாலே நீவர வேண்டும்.
நல்லமுத்து:
அப்பாவைப் பார்த்தாள்; அதுவே போதும்.
அப்பா கருத்துக் கட்டி உண்டா?
இந்தரா மாயணம் இயம்புவ தென்ன?
தந்தை சொல்லைத் தட்ட லாகாதே
என்று தானே இயம்பு கின்றது?
66
இரிசன்:
மகிழ்ச்சி தம்பி. வருகின் றேன்நான்.
இரிசன் வெள்ளையப்பனிடம்:
நல்ல முத்து மிகவும் நல்லவன்,
தகப்ப னாரை மிகவும் மதிப்பவன்.
அடக்க முடையவன் அன்பு மிகுந்தவன்
பொழுது போயிற்றுப் போய் வருகின்றேன்.
வெள்ளையப்பன்:
போகலாம் நாளைக்குப் பொழுது போயிற்றே?
இரிசன்:
பொறுத்துக் கொள்க, போய்வரு கின்றேன்.
காட்சி 6
அம்மாக்கண்ணுக்கு ஆளானான்
(அம்மாக்கண்ணும் வெள்ளையப்பனும்)
வெள்ளையப்பன்:
உன்றன் நினைவால் ஓடி வந்தேன்.
இரண்டு நாள்முன் இரிசன் வந்து
மாப்பிள்ளை பார்த்தான் மகிழ்ச்சி கொண்டான்.
திரும ணத்தின் தேதி குறிக்க
வருவது போல வந்தேன் இங்கே.
மண்ணாங் கட்டியும் வருவேன் என்றாள்;
தட்டிக் கழித்துநான் தனியே வந்தேன்.
அம்மாக்கண்ணு:
இன்று நீங்கள் இங்கு வராவிடில்
என்றன் உயிரே ஏன் இருக்கும்?
பிரிந்து சென்றீர்! பிசைந்த சோற்றைக்
கையால் அள்ளினால் வாயோ கசக்கும்.
பச்சைத் தண்ணீர் பருகி அறியேன்.
ஏக்கம் இருக்கையில் தூக்க மாவரும்?
பூனை உருட்டும் பானையை; அவ்வொலி
நீங்கள் வரும்ஒலி என்று நினைப்பேன்.
தெருநாய் குரைக்கும்; வருகின் றாரோ
என்று நினைப்பேன் ஏமாந்து போவேன்.
கழுதை கத்தும்; கனைத்தீர் என்று
எழுந்து செல்வேன் ஏமாந்து நிற்பேன்.
உம்மை எப்போதும் உள்ளத்தில் வைத்ததால்
அம்மியும் நீங்கள் அடுப்பும் நீங்கள்
சட்டியும் நீங்கள் பானையும் நீங்கள்
வீடும் நீங்கள் மாடும் நீங்கள்.
திகைப் படைந்து தெருவில் போனால்
67
மரமும் நீங்கள் மட்டையும் நீங்கள்
கழுதை நீங்கள் குதிரை நீங்கள்
எல்லாம் நீங்களாய் எனக்குத் தோன்றும்.
இனிமேல் நொடியும் என்னை விட்டுப்
பிரிந்தால் என்னுயிர் பிரிந்து போகும்.
வெள்ளையப்பன்:
அழாதே, தரையில் அம்மாக் கண்ணு
விழாதே; உன்னை விட்டுப் பிரியேன்.
துடை கண்ணீரை; புடவையும் நனைந்ததே!
பயித்தியக் காரி பச்சையாய்ச் சொல்வேன்
என்னுயிர் இந்தா! பிடிஉன் னதுதான்!
அம்மாக் கண்ணு:
இரிசன் மகளையும் என்மக னுக்கே
பேசி முடிப்பீர்; பின்பு நீங்களும்
இங்கே யேதான் தங்கினால் என்ன?
என்மகன் உங்கள் பொன்மகன் அல்லனோ?
இங்குள தெல்லாம் உங்கள் சொத்தே
மண்ணாங் கட்டிதான் மனைவியோ? இங்குள
பொன்னாங் கட்டி போயொழிந் தாளோ?
வெள்ளையப்பன்:
உறுதி உறுதி! உன்மக னுக்கே
இரிசன் மகளை ஏற்பாடு செய்வேன்.
என்மகன் பெரியதோர் இளிச்ச வாயன்;
மண்ணாங் கட்டி மண்ணாங் கட்டிதான்!
பெண்ணா அவள்? ஒருபேய்! மூதேவி!
இரு!போய் அந்த இரிசனைக் கண்டு
பேசி விட்டுப் பின்வரு கின்றேன்.
காட்சி 7
வெள்ளையப்பன் மாறுபாடு
வெள்ளையப்பன்:
இரிசனார் வீட்டில் இருக்கின் றாரா?
இரிசப்பன்:
உள்ளே வருவீர்; வெள்ளையப்பரே!
எப்போது வந்தீர்? இப்போது தானா?
மனைவியார் உம்முடன் வந்திட வில்லையா?
நல்ல முத்து நலமா? அமர்க.
வெள்ளையப்பன்:
மனைவி வயிற்று வலியோ டிருந்தாள்;
பையன் நிலையைப் பகர வந்தேன்.
திருமணம் வேண்டாம் என்று செப்பினான்.
இரிசப்பன்:
68
வெளியிற் சொன்னால் வெட்கக் கேடு.
வெள்ளை யப்பரே வெந்தது நெஞ்சம்
பேச்சை நம்பி ஏச்சுப் பெற்றேன்.
திருமணம் விரைவில் செய்ய எண்ணி
எல்லாம் செய்தேன்; எவர்க்கும் சொன்னேன்.
என்னை ஊரார் என்ன நினைப்பார்?
எப்படி வெளியில் இனிமேற் செல்வேன்?
மணம்வேண் டாமென மறுத்த தெதற்கு?
அடங்கி நடப்பவன் அல்லவா உம்மகன்?
நல்ல முத்தா சொல்லைத் தட்டுவான்?
சொல்வது தானே நல்லமுத் துக்கு?
வெள்ளையப்பன்:
நூறு தடவை கூறிப் பார்த்தேன்
வேண்டாம் மணமென விளம்பி விட்டான்.
மனம்புண் பட்டு வந்தே னிங்கே.
அம்மாக் கண்ணுவின் அழகு மகனுக்குத்
தங்கள் பெண்ணைத் தருவது நல்லது.
வைத்த நாளில் மணத்தை முடிக்கலாம்.
என்னசொல் கின்றீர் இரிசப்ப னாரே?
இரிசப்பன்:
அம்மாக் கண்ணை அறிவேன் நானும்.
வெள்ளை யப்பரே வீண்பேச் செதற்கு?
நீவிர் விரைவாய் நீட்டுவீர் நடையை.
காட்சி 8
வலையில் சிக்கினார் கணவர்
(இரிசப்பன் மண்ணாங்கட்டியிடம்
வந்து கூறுகிறான்)
நல்ல முத்து நல்ல பிள்ளை
நீங்களும் மிகவும் நேர்மை யுடையவர்.
வெள்ளை யப்பர் மிகவும் தீயவர்.
அரச லூரில் அம்மாக் கண்ணின்
வலையிற் சிக்கி வாழு கின்றார்;
அங்கேயே அவர் தங்கி விட்டார்.
இன்னும் இங்கே ஏன்வர வில்லை?
மான மிழந்து வாழு கின்றார்.
அம்மாக் கண்ணின் அழகு மகனுக்கு
நான்என் பெண்ணை நல்க வேண்டுமாம்!
மணம்வேண் டாமென மறுத்தா னாம்மகன்!
நேரில் உம்மிடம் நிகழ்த்தவந் தேன்இதை.
உங்கள் கருத்தை உரைக்க வேண்டும்.
மண்ணாங்கட்டி:
கெடுத்தா ளாஎன் குடித்த னத்தை?
விருந்து வைத்து மருந்தும் வைத்தாள்;
69
சோற்றைப் போட்டு மாற்றினாள் மனத்தை!
ஏமாந் தாரா என்றன் கணவர்?
போய்ப்புகுந் தாரா புலியின் வாயில்?
எங்கள் பிள்ளை உங்கள் பெண்ணை
வேண்டா மென்று விளம்ப வில்லையே!
அவள் மகனுக்கே அவளைக் கட்ட
இப்படி யெல்லாம் இயம்பினார் போலும்!
மாதம் ஒன்றாகியும் வரவில்லை அவர்.
மகனை இங்கே வரவழைக் கின்றேன்
சொல்லிப் பார்ப்போம்; சொன்னாற் கேட்பான்.
(நல்லமுத்துவிடம் மண்ணாங்கட்டியும் இரிசனும்
சொல்லுகிறார்கள்)
மண்ணாங்கட்டி:
ஒருமாத மாக உன்றன் தந்தையார்
அரச லூரில் அம்மாக் கண்ணிடம்
விளையாடு கின்றார் வீட்டை மறந்தார்,
அவர்தாம் அப்படி ஆனார். உன்றன்
திருமணம் பற்றிய சேதி எப்படி?
இரிசனார் பெண்ணை ஏற்பாடு செய்தோம்;
உடனே மணத்தை முடிக்க வேண்டும்.
நல்லமுத்து:
அப்பா இல்லை; அது முடியாது.
விவாக முகூர்த்த விளம்ப ரத்தில்
அப்பா கையெழுத் தமைய வேண்டும்.
பாத பூசை பண்ணிக் கொள்ள
அப்பா இல்லை! எப்படி முடியும்?
திருமண வேளையில் தெருவில் நின்று
வருபவர் தம்மை வரவேற் பதற்கும்
அப்பா இல்லை! எப்படி முடியும்?
புரோகிதர் தம்மைப் போய ழைக்க
அப்பா இல்லை! எப்படி முடியும்?
அரசாணிக் கால்நட அம்மி போட
நலங்கு வைக்க நாலு பேரை
அழைக்க, நல்லநாள் அமைக்க, அம்மன்
பூசை போடப் பொங்கல் வைக்க
அப்பா இல்லை! எப்படி முடியும்?
இரிசப்பன்:
அப்பா இல்லையே அதற்கென்ன செய்வது?
நல்லமுத்து:
சோற்றை உண்டு சும்மா இருப்பது!
மண்ணாங்கட்டி:
அம்மாக் கண்ணின் அழகு மகனுக்கு
மகளைக் கட்டி வைக்கச் சொல்லிக்
கெஞ்சி னாரா மே அவரை!
இரக்கம் இருந்ததா இனிய தந்தைக்கே?
70
நல்லமுத்து:
என்னருந் தந்தை இயம்பிய படியே
இவரின் மகளை அவன்மணக் கட்டும்.
புதெருவில் என்ன பெரிய கூச்சல்?
போய்வரு கின்றேன் பொறுப்பீர் என்னை!மு
(நல்லமுத்து போனபின் இரிசனும்,
மண்ணாங்கட்டியும் பேசுகிறார்கள்.)
மண்ணாங்கட்டி:
தன்மானம் இல்லாத் தடிப்பயல் என்மகன்.
உணர்ச்சி இல்லா ஊமை என்மகன்.
அடிமை எண்ணம் உடையவன் என்மகன்.
தனக்குப் பார்த்த தையலை, அப்பன்
அயலான் மணக்கச் செயலும் செய்தால்
துடிக்க வேண்டுமே தடிக்கழுதை மனம்!
இல்லவே இல்லை! என்ன செய்யலாம்?
சாப்பி டுங்கள்! சற்று நேரத்தில்
வருவான் பையன் ஒருமுறைக் கிருமுறை
சொல்லிப் பார்ப்போம்; துன்பம் வேண்டாம்.
காட்சி 9
தமிழ் உணர்ச்சி
(இரிசப்பனும் மண்ணாங்கட்டியும்
பேசியிருக்கிறார்கள்)
இரிசப்பன்:
எங்கே போனான் உங்கள் பிள்ளை?
மண்ணாங்கட்டி:
கூச்சல் கேட்பதாய்க் கூறிப் போனான்.
இரிசப்பன்:
என்ன கூச்சல்? எங்கே கேட்டது?
மண்ணாங்கட்டி:
கேட்டது மெய்தான், கிழக்குப் பாங்கில்
வாழ்க தமிழே! வீழ்கஇந்தி! என்று.
இரிசப்பன்:
எந்த உணர்ச்சியும் இல்லாப் பிள்ளை
அந்த இடத்தை அடைந்த தென்ன?
மண்ணாங்கட்டி:
என்ன இழவோ யார்கண் டார்கள்?
(தமிழ்ப் புலவர் அமுதனார் வந்து இரிசனிடத்திலும்
மண்ணாங்கட்டியிடத்திலும் சொல்லுகிறார்.)
71
அமுதனார்:
உங்கள் பிள்ளையா நல்லமுத் தென்பவன்?
மண்ணாங்கட்டி:
ஆம்ஆம் ஐயா. அன்னவன் எங்கே?
அமுதனார்:
யானதைச் சொல்லவே இங்கு வந்தேன்.
இந்த அரசினர் செந்தமிழ் ஒழித்துத்
தீய இந்தியைத் திணிக்கின் றார்கள்.
தமிழ்அழிந் திட்டால் தமிழர் அழிவார்.
நம்தமிழ் காப்பது நம்கடன் அன்றோ?
போருக்குத் திராவிடர் புறப்பட் டார்கள்.
திராவிடர் கழகம் சேர்ந்தான் உங்கள்
நல்ல முத்தும்! நல்லது தானே!
இரிசப்பன்:
எந்த உணர்ச்சியும் இல்லாப் பிள்ளை
இந்தக் கிளர்ச்சியில் என்ன செய்வான்?
மண்ணாங்கட்டி:
திருமணம் செய்யச் சேயிழை ஒருத்தியை
அமைத் திருந்தார் அவனின் தந்தையார்!
பாரடா நீபோய்ப் பாவை தன்னை
என்றால் அதையும் ஏற்க வில்லை.
அந்தப் பெண்ணை அயலொரு வனுக்குத்
தரும்படி சொன்னார் தந்தை என்றால்,
அப்பா மனப்படி ஆகுக என்றான்.
இப்படிப் பட்டவன் என்ன செய்வான்?
அப்பா அயலவள் அகத்தில் நுழைந்தார்
இப்பக் கத்தில் இனிவரார். ஆதலால்
திரும ணத்தைநீ செய்துகொள் என்றால்,
ஓலை விடுக்கவும், ஊரைக் கூட்டவும்,
சாலும் கரகம் தனியே வாங்கவும்,
பாத பூசை பண்ணிக் கொள்ளவும்
அப்பா வேண்டும்என் றொப்பனை வைக்கிறான்!
அமுதனார்:
மடமையில் மூழ்கி மடிகின் றான்அவன்;
தன்மா னத்தைச் சாகடிக் கின்றான்.
மரக்கட் டைபோல் வாழ்ந்து வந்தான்;
இந்த நிலைக்கெலாம் ஈன்றவர் காரணர்.
ஆயினும் தமிழ்ப்பற் றவனிடம் இருந்தது.
திராவிடர் கழகம் சேர்ந்து விட்டான்.
இனிமேல் அவனோர் தனியொரு மறவன்!
அரசினர் சிறையில் அடைத்தார் அவனை!
இரிசப்பன்:
என்ன? என்ன? எப்போது விடுவார்?
72
மண்ணாங்கட்டி:
இருந்தும் பயனிலான்; இருக்கட்டும் சிறையில்.
அமுதனார்:
எப்போது வருவான் என்ப தறியோம்
துப்பிலா அரசினர் சொல்வதே தீர்ப்பு!
நான்வரு கின்றேன். நல்ல முத்துவின்
திருமணம் விரைவில் சிறப்ப டைக!
காட்சி 10
திருமணம் என் விருப்பம்
(இரிசப்பன் வீட்டில், வெள்ளையப்பன்
வந்து பேசுகிறான்)
வெள்ளையப்பன்:
அம்மாக் கண்தன் சொத்தெலாம் அளிப்பாள்.
உம்மகள் தன்னை, அம்மாக் கண்ணின்
மகனுக் கே,திரு மணம்செய் விப்பீர்.
என்மகன் பெரியதோர் இளிச்ச வாயன்!
இரிசப்பன்:
அம்மாக் கண்ணின் அடியை நத்தி
வீணில் வாழும் வெள்ளை யப்பரே,
உமது சொல்லில் உயர்வே யில்லை
எமது கொள்கை இப்படி யில்லை.
நல்லமுத் துக்கே நம்பெண் உரியவள்;
பொல்லாப் பேச்சைப் புகல வேண்டாம்.
(அதே சமயத்தில் நல்லமுத்து வந்து
இரிசனிடம் இயம்புகின்றான்.)
நல்லமுத்து:
உம்மகள் எம்மை உயிரென்று மதித்தாள்
திருமணம் எனக்கே செய்துவைத் திடுக!
(வெள்ளையப்பன் தன் மகனான நல்லமுத்தை
நோக்கிக் கூறுகின்றான்)
என்விருப் பத்தை எதிர்க்கவும் துணிந்தாய்.
உன்விருப் பத்தால் என்ன முடியும்?
இன்று தொட்டுநீ என்வீட்டு வாயிலின்
வழியும் காலெடுத்து வைக்க வேண்டாம்.
என்றன் சொத்தில் இம்மியும் அடையாய்.
நான்சொன் னபடி நடந்து கொண்டால்
திருமணம் பிறகு செய்து வைப்பேன்.
அம்மாக் கண்ணின் அழகு மகனே
இந்நாள் இந்த எழில் மடந்தையை
மணந்து கொள்ளட்டும்; மறுக்க வேண்டாம்.
73
நல்லமுத்து:
திருமணம் எனது விருப்ப மாகும்.
ஒருத்தியும் ஒருவனும் உள்ளம் கலத்தல்
திருமணம் என்க. இரிசனார் மகளும்
என்னை உயிரென எண்ணி விட்டாள்.
நானும் என்னை நங்கைக் களித்தேன்.
உம்வீட்டு வாயிலை ஒருநாளும் மிதியேன்.
உம்பொருள் எனக்கேன்? ஒன்றும் வேண்டேன்.
நானும்என் துணைவியும் நான்கு தெருக்கள்
ஏனமும் கையுமாய், எம்நிலை கூறி
ஒருசாண் வயிற்றை ஓம்புதல் அரிதோ!
ஆட்சித் தொட்டியில் அறியாமை நீர்பெய்து
சூழ்ச்சி இந்திஇட்டுத் துடுக்குத் துடுப்பால்
துழவிப் பழந்தமிழ் அன்னாய் முழுகென
அழுக்குறு நெஞ்சத் தமைச்சர் சொன்னார்.
இழுக்குறும் இந்நிலை இடர வேண்டி
நானும்என் துணைவியும் நாளும் முயல்வதில்
சிறைப்படல் காதல் தேனருந் துவதாம்!
இறப்புறல் எங்கள் இன்பத்தி னெல்லையாம்.
(வெள்ளையப்பனை நோக்கி இரிசன் சொல்லுகிறான்)
வெள்ளை யப்பரே வெளியில் போவீர்!
என்மகள் உம்மகன் இருவரும் நாளைக்குக்
காதல் திருமணம் காண்பார். நீவிரோ
அம்மாக் கண்ணொடும் அழகு மகனொடும்
இம்மா நிலத்தில் இன்புற் றிருங்கள்.
(நல்லமுத்து தன் திருமணத்தின்பின் துணைவியுடன்
இந்தி எதிர்ப்பு மறியலுக்குப் புறப்படுகிறான்.)
நல்லமுத்து:
வாழிய செந்தமிழ் வாழ்கநற் றமிழர்
இந்தி ஒழிக! இந்தி ஒழிக!
(சென்று கொண்டிருக்கையில் நல்லமுத்துவின்
தாய் அவர்களைத் தொடர்கிறாள்)
மண்ணாங்கட்டி:
இன்பத் தமிழுக் கின்னல் விளைக்கையில்
கன்னலோ என்னுயிர்? கணவனும் வேண்டேன்!
உற்றார் வேண்டேன்; உடைமை வேண்டேன்.
இந்தி வீழ்க! இந்தி வீழ்க!
திராவிட நாடு வாழிய!
அருமைச் செந்தமிழ் வாழிய நன்றே!
 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166b.htm#4._நல்லமுத்துக்_கதை

அகத்தியக் குள்ளன் ஆரியர் கொள்கையைப்
புகுத்தினான் செந்தமிழ்ப் பொன்னா டதனில்!
ஆதலால் "குள்ளனை அணுவும்நம் பாதே"
என்ற பழமொழி அன்று பிறந்தது!
பழைய திராவிடம் செழுமை மிக்கது;
வழுவா அரசியல் வாய்ப்பும் பெற்றது.
செந்தமிழ், இலக்கணச் சிறப்புற் றிருந்தது.
வையக வாணிகம் மாட்சிபெற் றிருந்தது.
செய்யும் தொழில்கள் சிறப்புற் றிருந்தன.
ஓவியம் தருநரும் பாவியம் புநரும்
ஆடல் பாடல் வல்லுநர் அனைவரும்
திராவிடர் தமக்குப் பெரும்புகழ் சேர்த்தனர்.
இராத தொன்றில்லை திராவிட நாட்டில்.
இந்த நிலையில் வந்தான் அகத்தியன்.
சந்தனப் பொதிகையில் தமிழ்ப்பெரும் புலவரின்
மன்றினில் ஒன்றி ஒன்றி மாத்தமிழ்,
நன்று பயின்றான் குன்றாச் சுவைத்தமிழ்!
இயற்றமிழ், இசைத்தமிழ் இனியஆ டற்றமிழ்
முயற்சியிற் பயின்றபின், முடிபுனை மன்னனின்
நல்லா தரவை நாடுவா னாகிச்
"செல்வம் முற்பிறப்பிற் செய்தநல் வினைப்பயன்"
என்று புதுக்கரடி ஒன்றை ஏவினான்.
மன்றின் புலவர் வாய்விட்டுச் சிரித்தனர்.
ஒருநாள் மன்னனின் திருமணி மன்றில்
அகத்தியன் புதிதாய்ப் புகுத்திய கருத்தை
ஆய்ந்திட, மன்னன் "அகத்தியோய் அகத்தியோய்
பிறந்த உடலும் பிணைந்த உயிரும்
இறந்த பின் இல்லா தொழிந்தன
எதுபின் உயிர்உடல் எய்தும்?" என்றான்.
"ஆன்மா என்றும் அழியா" தென்று
மற்றொரு புதுக்கரடி தெற்றென விட்டான்.
மேலும் அகத்தியன் விளம்பு கின்றான்:
"வேந்த னாக வீற்றிருக் கின்றாய்
ஆய்ந்து பார்ப்பின் அறிகுவை காரணம்
செல்வம்முற் பிறப்பில் செய்தநல் வினைப்பயன்
மணிமுடி பூண்பரோ மக்கள் யாரும்?
பணிவொடு வாழ்வது பார்ப்பின் புரியும்.
சிறுமைமுற் பிறப்பில் செய்ததீ வினைப்பயன்"
என்னலும், மன்னன் புபின்னொரு நாள்இதைப்
"கல்க" என்றனன்; போயினன் அகத்தியன்.
அழல்வெரூஉக் கோட்டத்துக் கப்பால் ஒருநாள்
பழித்துறைக் கள்வன், பாங்கர் சூழ
56
நகர் அலைத்து நற்பொருள் பறித்து
மிகுபுகழ் உடையேன் வேந்தன்நான் என்றான்.
ஊர்க்கா வலர்கள் ஓடி மன்னன்பால்
இன்ன துரைத்தனர். எழுந்தனன் மன்னன்.
பழித்துறைக் கள்வன் படையும், மன்னனின்
அழிப்புறு படையும் அழல்வெரூஉக் கோட்டப்
பாங்கினில் இருநாள் ஓங்குபோர் விளைக்கவே
பழித்துறை பிடிக்கப் பட்டான் அரசனால்!
மறவர்சூழ் அரச மன்றின் நடுவில்
பழித்துறை கட்டப் பட்ட கையுடன்
நின்றான். மன்னன் நிகழ்த்து கின்றான்:
"ஏன்என் ஆட்சியை எதிர்த்தனை? ஏஏ
கோன்என் படைவலி குறைந்ததோ? உன்றன்
தோள்வலி பெரிதோ? சொல்லுக சொல்லுக
ஆள்வலி பெரிதோ? அறைக" என்னலும்,
பழித்துறை மன்னனைப் பார்த்துக் கூறுவான்:
"இந்நாள் உண்டு பின்னால் இலைஎனும்
வறுமை எமக்கு! வளமை உமக்கோ?
ஆள்வலி இல்லை ஆயினும் நாளை
தோள்வலி மறவர் தோன்றுவார்! இந்நாள்
என்னுயிர் போக்கல் எளிதாம்; உனக்கே
இன்னுயிர் போக்குவார் உண்டா கின்றார்."
சினத்தொடு பழித்துறை இவ்வாறு செப்பலும்,
மன்னன் அவனைச் சிறையினில் வைத்தான்.
"செல்வமுற் பிறப்பில் செய்தநல் வினைப்பயன்
சிறுமைமுற் பிறப்பில் செய்ததீ வினைப்பயன்"
இக்கருத்து நாட்டில் எங்கும் பரவினால்
மக்கள் எதிர்ப்பரோ மன்னன் ஆட்சியை?
எதிர்க்க மாட்டார்; தாங்கள் எய்திய
"சிறுமைமுமுற் பிறப்பில் செய்ததீ வினைப்பயன்
என்று சும்மா இருப்பர் அன்றோ?
"அகத்தியோய் அகத்தியோய் அனைவ ரிடத்தும்
புகுத்துக உன்றன் புதிய கொள்கையை"
என்று மன்னன் இயம்பினான். அகத்தியன்
அன்றுதான் ஒருபடி அதிகாரம் ஏறினான்.
இப்பிறப்பு முற்பிறப் பிருவினை ஆன்மா
ஊழ்இவை யனைத்தும் உரைத்த அகத்தியன்
அரசே இன்னும் அறைவேன் கேட்பாய்:
"மண்ணவர் மண்ணில் வாழ்வார்; அதுபோல்
விண்ணவர் விண்ணில் மேவினார் என்றான்.
அன்னவர் நம்மை அணுகுவார் என்றான்.
இன்னல் ஒழிப்பார் என்று புளுகினான்!
57
விண்ணவர் விருப்புற வேண்டு மானால்
மண்ணிடை நான்மறை வளர்ப்பாய் என்றான்.
மந்திரத் தாலே மகிழ்வர் வானவர்"
என்று பலபல இயம்பிச் சென்றான்.
ஒருநாள் குறுங்கா டொன்று தீப்பட்
டெரிந்தது! சிற்றூர் எரிந்தது! மக்கள்
தெய்யோ தெய்யோ தெய்யோ என்றே
அரச னிடத்தில் அலறினார் ஓடி!
அங்கி ருந்த அகத்தியன் புஅரசே
தீஒரு தெய்வம் செம்புனல் தெய்வம்
காற்றொரு தெய்வம் கடுவெளி தெய்வம்
நிலம்ஒரு தெய்வம் நீஇதை உணர்க.
தெய்எனல் அழிவு! தெய்வம் அழிப்பது.
இந்திரன் தெய்வம் எதற்கும் இறைவன்.
மந்திர வேள்வியால் மகிழும் அவ்விந்திரன்.மு
என்று கூறி எகினான் அகத்தியன்.
அரச மன்றின் அருந்தமிழ்ப் புலவர்
அரசன், அகத்தியன் ஆட்டும் பாவையாய்
இருத்தல் கண்டார் இரங்கினார். தீய
கருத்து நாட்டில் பரவுதல் கண்டு
கொதித்தார் உள்ளம். என்செயக் கூடும்?
ஒருநாள் அரசனின் உறவினள் ஒருத்தி
பகைவனை அன்போடு பார்த்தாள். அவனும்
அவள்மேல் மிகுந்த அன்பு கொண்டான்.
இருவரும் உயிர்ஒன் றிரண்டுடல் ஆனார் .
அரசன் எரிச்சல் அடைந்தான். அகத்தியன்
இதனை அறிந்தான் அறைவான் ஆங்கே:
"மணமுறை மிகுதியும் மாறுதல் வேண்டும்.
ஒருத்தியும் ஒருவனும் உள்ளம் ஒப்பினால்
மணம்எனக் கூறுதல் வாய்மை யன்று!
மணம்எனல் பார்ப்பனர் மந்திர வழியே
இயலுதல் வேண்டும்மு என்று கூறினான்.
அரசன் புஆம்ஆம் ஆம்" என் றொப்பினான்.
அகத்தியன் அரசனே ஆகி விட்டான்.
அரசனும் அகத்தியன் அடிமை யானான்.
தமிழர் கலைபண் பொழுக்கம் தகர்ந்தன.
பழந்தமிழ் நூற்கள் பற்றி எரிந்தன.
அகத்தியம் பிறந்ததே அருந்தமி ழகத்தில்.

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166b.htm#3._அகத்தியன்_விட்ட_புதுக்கரடி_

ப·றொடை வெண்பா
தலைவி :
இதுதான் தைத்திங்கள் எனக்கடல் மேல்வந்த
புதியஇளங்கதிர், பொன்அத்தான். பொன்!பொன்! பொன்!
தலைவன் :
ஆம்ஆம்என் அன்பின் உருவே அதுபுசுடர்ப்பொன்மு
நீர்மேல், நிலமேல், நிழல்தரும்பூஞ் சோலைமேல்,
உன்மேல் தனதொளியை வீசி உளத்திலெலாம்
அன்பின் எழுச்சியினை ஆக்கியது. வாழ்ககதிர்!
காலை மலர்ந்ததுவே கண்ணேநான் சென்றுவயல்
வேலை தொடங்கி விளைச்சல் அறுத்துவந்தே
இந்நாளில் இந்தா எனக்கொடுக்கச் செல்கின்றேன்.
பொன்னே புனலாடி இல்லம் புதுக்கிடுநீ!
தலைவி :
செல்வப் பரிதி சிரித்துவந்த தைக்கண்டீர்.
கொல்லைக் கொடிகள் குலுங்கச் சிரித்ததுபோல்
காலை மலர்ந்ததையும் கண்டீர்; விரைந்துவயல்
வேலை தொடங்கி விளைச்சல் அரிந்தஅரிக்
கட்டடித்துத் தூற்றியொரு கட்டைவண்டி மேலேற்றிப்
பட்டபெரும் பாட்டின் பயனிந்தா என்பீர்;பின்
உள்ளம் மகிழ்ந்துங்கள் உழுதோளை நான்தொழுது
வெள்ளத் தெடுத்து விடிவெள்ளி போலரிசி
ஆக்கிநல்ல பானையிலே ஆவின் தனிப்பாலைத்
தேக்கி அதிலிட்டுச் செங்கரும்பின் கட்டியிட்டுத்
புதிங்களோ தைத்திங்கள்!மு புசெந்தமிழே தாய்மொழியாம்!மு
புபொங்கலோ பொங்கல்!முஎனப் பொங்கிவரப் புத்துருக்கு
நெய்யும் பருப்பும் நறும்பொடியும் நேர்கொடுத்து
மெய்யன்பி னோடு தமிழர் விழாவாழ்த்திப்
பானை இறக்கிப் பலபேர்க் கிலையிட்டுத்
தேனைப் பழச்சுளையைச் சேர்த்துப் படைப்பேன்;
எடுத்துண்டு நீவிர்அதை என்னவென்று சொல்வீர்?
தலைவன் :
அடடா!இப் பொங்கல் அமிழ்தமிழ் தென்பேன்நான்.
தலைவி :
அப்பொங்கல் தன்னை அமிழ்தென்று சொல்வதுண்டா?
ஒப்புவரோ பொங்கல் அமிழ்தென் றுரைத்துவிட்டால்?
தலைவன் :
ஆமாம்நான் சொல்வேன் அமிழ்துதான் அப்பொங்கல்
49
தீமைஎன்ன?...
தலைவி :
...தீமைஒன்றும் இல்லைஅத்தான்; நீங்கள்உண்ணும்
பொங்கலா அத்தான் அமிழ்து? புகலுங்கள்.
தலைவன் :
பொங்கல் அமிழ்துதான். பொய்யில்லை; கட்டிக்
கரும்பும் அமிழ்து. கனிஅமிழ்து. முல்லை
யரும்பமிழ்து. தேனமிழ்து. அப்பம் அமிழ்து.
குழந்தை குதலை மொழியமிழ்து. குன்றாப்
பழந்தமிழும், பாட்டும் அமிழ்து.தமிழ்ப் பண்அமிழ்து.
திங்கள் அமிழ்து. திகழ்ஆவின் பாலமிழ்தே.
இங்கெனக்கு நீஅமிழ்து. நானுனக் கெப்படியோ?
வாய்மை அமிழ்து. மடிசுமந்து பெற்றுவக்கும்
தாய்மை அமிழ்து. தனிஇன்ப வீடமிழ்து.
தென்றல் அமிழ்து.நறுஞ் செவ்விள நீரமிழ்து.
ஒன்றல்ல, எல்லாம் அமிழ்தென் றுரைக்கலாம்.
தலைவி :
ஏன்அத்தான்? எல்லாம் அமிழ்தென்றால் அந்தச்சொல்
ஏன்அத்தான்? ஏதோ அமிழ்தொன் றிருக்கும்.
தலைவன் :
உயர்ந்தபொருட் கெல்லாம் உயர்வு குறிக்க
உயர்ந்தோர் அமிழ்தை உரைப்பார்கள் பெண்ணரசி.
தலைவி :
பேர்இருந்தால் பேர்குறிக்கும் அந்தப் பெயர்இருக்கும்
ஆரிடத்தில் இந்த அளப்பை அளக்கின்றீர்?
எதுஅமிழ் தத்தான்? எனக்கதைச் சொன்னால்
புதுநாளில் இன்பநறும் பொங்கலுண்ணு முன்னரே
நல்ல அமிழ்துதனை நான்கண்ட தாகாதா?
சொல்லுவீர் அத்தான் அமிழ்தெது? ...
தலைவன் :
... மானே,
புதுநெல் அறுத்துவரப் போம்போது நீயோ
எதுதான் அமிழ்ததனைச் சொல்வீர் எனக்கேட்டாய்.
அப்படியே உன்றன் அருட்படி ஆகட்டும்நான்
செப்புவதை உற்றுக்கேள் தித்திக்கும் தேனே,
அமிழ்தென்றால் மேல்நின் றமிழும் உணவாம்;
யுஅமிழ்ருஎன்றும் யுதுருவ்வென்றும் சொல்இரண்டுண் டத்தொடரில்.
அவ்வளவுதான் இப்போ தேனும் அறிந்தாயா?
இவ்வளவோ டென்னைநீ விட்டிடுவாய் ஏந்திழையே.
தலைவி :
50
இல்லையத்தான்! மேல்நின் றிரங்கும் உணவென்று
சொல்லிவிட்டால் போதுமா? ஒன்றுமே தோன்றவில்லை.
மேலிருந்து தான்விழும் விளாம்பழமும், அ·தமிழ்தா?
மேலானதாய் இருக்க வேண்டும் அமிழ்து!
தெரிந்து கொள்ளக் கேட்டேன். தெரிவித்தாலென்ன?
தலைவன் :
சரி, என்றன் கேள்விக்குச் சற்றே விடைபுகல்வாய்.
அவ்வானத் தேஇருந்து அமிழ்ந்து வருவதெது?
இவ்வுலகுக் கின்பம் பொதுவாக ஈவதெது?
கண்ணுக் கெதிரில் கடகடென வீழும்,அதை
எண்ணிப்பார் இன்னதென்று தோன்றும் உனக்கதுவே.
தலைவி :
வானத்தி லேயிருந்து வானூர்தி தான்அமிழும்.
வானூர்தி அ·தா? சிரிப்புவரு கின்றதத்தான்.
தலைவன் :
தேனே!என் செல்வமே செப்புகின்றேன் நீகேட்பாய்
ஆனதமிழ்ச் சான்றோர் அருளியஓர் செய்யுளிது:
"மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி உலகுக் கவனளிபோல்
மேல்நின்று தான்சுரத்த லான்" என் றிளங்கோ
தானுரைத்த செய்யுள் தரும்பொருளைக் கண்டுகொள்வாய்.
தலைவி :
அச்சோ! மழைதான் மழையேதான் அத்தான்.
இச்சேதி இப்போது தானத்தான் நானறிந்தேன்.
தலைவன் :
தேனான இன்பச் சிலப்பதிகா ரத்தினிலே
மேல்நின்று தான்சுரத்த லான்என்று விண்டதனால்
வான்நின்றமிழும் மழைதான் அமிழ்தென்று
நீநன் றறிந்தாயா நேரிழையே இப்போது?
தலைவி :
நன்றாய் மழைதான் அமிழ்தென்று நானுணர்ந்தேன்;
ஒன்றிருக்க வேறொன்றில் ஓடிற்றென் நெஞ்சம்.
அருகில் இருக்கும் மழைஅமிழ் தென்று
தெரியவில்லை. சொல்லத் தெரிந்துகொண்டேன். ஆனால்,
மழைதான், அமிழ்தென்றால் மக்கள் அதனைப்
பிழைதான் எனச்சொன்னால் என்னபதில் பேசுவது?
தலைவன் :
"வானின் றுலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்"றென்று சாற்றிய
51
வள்ளுவர் பாட்டை வகையாகச் சொல்லிஅதற்
குள்ள கருத்தைஉரை. அதையும் கேட்பாய்
அமிழ்தென் றுணரும் அருமை மழைக்கே
அமையும் எனஉரைத்தார் வள்ளுவரே அல்லவா!
கண்டவைஎல் லாம்அமிழ்தே என்று கதைபேசிக்
கொண்டிருப்போர் பேதைமையைக் கண்டேஇவ் வாறுரைத்தார்.
தலைவி :
சாவா மருந்தென்று சாற்றுகின்றா ரே,அதென்ன?
தலைவன் :
சாவா மருந்து தனியல்ல இவ்வமிழ்தே!
வான்பெய்து கொண்டிருக்கும் ஆதலினால் மண்ணுலகம்
தான்சிறக்கும் என்றுகுறள் சாற்றியதைக் கேட்டாயே.
தலைவி :
ஐயம்இன்னும் கேட்பேன் அதற்காக நீங்களென்னை
வையக் கூடாது...
தலைவன் :
...மயிலே வைவேனா?
தலைவி :
அமிழ்தா? அமுதா? அமிழ்தமா? இன்னும்
அமுதமா? இங்கிவைகள் அத்தனையும் ஒன்றா?
தலைவன் :
அமிழ்தேயுஅம்ரு சாரியையும் ஆனதிரிபும் பெற்று
அமிழ்தம், அமுதமுதம் என்றாகும் பெண்ணே.
தலைவி :
அமிர்தம் என்றா லென்ன...
தலைவன் :
...அதுவா?
அமிர்தக் கதையை அறிவிக்கின் றேன்கேள்நீ:
தேவர் அசுரரெல்லாம் சண்டையிட்டுச் செத்திடுவார்
சாவைத் தடுக்கஓர் அம்ருதங் கடைவதென்று
திட்டமிட்டார், சேடன் கயிறாக மேருமலை
இட்டமத் தாக்கி இருந்ததிருப் பாற்கடலைச்
சேர்ந்து கடைந்தார்கள் தேவர் அசுரரெலாம்,
ஆர்ந்து வெளிப்பட்ட தேஅம்ருத மென்பார்கள்.
தலைவி :
அமிழ்துதனி, அம்ருதம் அ·தொன்றா அத்தான்?
52
தலைவன் :
அமிழ்துவே றம்ருதம்வே றல்லவா பெண்ணே?
தலைவி :
இரண்டும்சா வைத்தடுப்ப தென்றீர்நீ ரே;பின்
இரண்டும் தனித்தனி என்றுரைத்த தென்ன?
தலைவன் :
இரண்டும்சா வைத்தடுப்ப தென்றாலும் அந்த
இரண்டுக்கும் வேறுபா டில்லாமல் இல்லை.
உணவால் உயிர்நிலைக்கும்; ஆகவே பெண்ணே
உணவுக்கும் எல்லா உயிர்க்கும் ஆதாரம்மழை!
அத்தேவர் இன்னுயிரும் அவ்வமிழ்தா லேஅமையும்,
அத்தேவர் அம்ருதத்தின் முன்பு அமிழ்துண்டு.
பெரிதுல கோடு பிறந்த தமிழ்து.
கிரேதா யுகத்திற் கிடைத்தது தான்அம்ருதம்.
தேவர்க்கு மட்டும் திரட்டியதே அம்ருதம்;
யாவர்க்கும் ஆதிமுதல் எங்கும் அமிழ்துயிர்.
தலைவி :
அத்தானே நான்ஓர் அறிஞர் துணைவியன்றோ!
இத்தனைநாள் நானே இதனை அறியேன்.
மழையே அமிழ்து; மழையே உலகை
அழியாது காப்பாற்றும். அப்படி இருக்கையிலே
ஏனிதனை யாரும் வெளிப்படையாய்ச் சொல்லவில்லை?
தலைவன் :
மானேநம் வள்ளுவர்தாம் வாய்விட்டுச் சொன்னாரே?
தலைவி :
பின்னால் புலவரிதைப் பேசுவதே இல்லைஅத்தான்.
தலைவன் :
பொன்னே புதிய அமிர்தொன்று வந்ததிங்கே!
பூட்டாத வீட்டில் புதிதாய் நுழைந்தவர்க்கே
காட்டாச் சலுகையெலாம் காட்டுவார். வீட்டில்
இருந்தார் இருளில் இருப்பார்கள். வந்த
விருந்துக்குத் தாமே விடிவிளக்கு வைப்பார்கள்.
என்றும் அமிழ்துண்டு; - இதன்பெருமை உண்டு.மற்
றொன்றும் அமிழ்தென்று போட்டியிட் டோடிவந்தால்
நாட்டார் நினைவிலது நாலுநாள் கூத்தாட
மாட்டாதா? ஆனாலும் உண்மை மறையாது.
தலைவி :
ஆமத்தான்! ஆமத்தான்! ஆனால் மழைஎனும்பேர்
நாமும் அறிவோம்.நம் நாட்டாரும் தாமறிவார்.
53
அந்தப் பெயர்தான் இருக்க அமிழ்தென்ற
இந்தப் பெயர்ஒன் றெதற்காக வீணாக?
தலைவன் :
நன்று நகைமுத்தே, காற்றென்ற பேர்இருக்கத்
தென்றலென்ற பேர்ஏன்? சிறப்புநிலை காட்டஅன்றோ?
நீர்,தீ, நிலம்,காற்று, விண்ணென்ற ஐம்பொருளில்
நீரின் நிலைகேள்: முகிலென்றும் கொண்டலென்றும்
விண்ணென்றும் கார்என்றும் மேலும் மழைஎன்றும்
அண்ணாந்து நோக்கும் அமிழ்தமென்றும் மாரியென்றும்
ஆயிரம்உண் டன்றோ? அவற்றில் அமிழ்தென்னும்
தூய நிலைகருதித் தோன்றியதே அப்பெயர்.
முற்றும்கேள்: வெப்பம் முகந்தநீ ரேமுகிலாம்.
குற்றமறக் கொண்டநீர் கொண்டல். அக்கொண்டலோ
மேற்போய் இருந்தநிலை விண்வான் விசும்பென்பார்.
காற்றால் கருமைபெறக் காராகும்; கார்தான்
மழைக்கும் நிலையில் மழையாம்; மழைதான்
தழைய அமிழ்உண வாவது தான்அமிழ்து.
தலைவி :
வாழ்வாருக் காக வழங்கொழிக்க, அந்தநீர்
வீழும் நிலையில்அதை மேலோர் அமிழ்தென்றார்
என்று புகன்றீர், இதிலோர் மனக்குறை:
என்னவெனில் இவ்வமிழ்தை மேலான தென்றிருந்தேன்.
இப்போ தமிழ்து மழைதானே என்றவுடன்
சப்பென்று போயிற்றுத் தையலாள் என்றனுக்கே.
தலைவன் :
செப்பிய உன்பேச்சில் சிறப்பில்லை, என்கண்ணே.
தப்புக் கணக்கிட்டாய் தாங்கும் மழையை.
அமிழ்தின் பெருமை அடுக்கடுக்காய்ச் சொன்னேன்.
அமிழ்தே மழைஎன்றேன்; அப்படியும் நீயோ
மழையின் உயர்வை மதிக்கவில்லை இந்தப்
பிழையை இளையவரும் செய்யாரே பெண்ணரசி!
எங்கும் உளதுமழை; என்றும் உளதுமழை.
தங்கும் உலகுயிரைச் சாவாது காக்கும்மழை.
அந்த மழைதான் அளிக்குமோர் இன்பத்தைச்
செந்தமிழால் வள்ளுவரும் நன்றாய்த் தெரிவித்தார்:
புவாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளிமுஎன்றார்! விள்ளக்கேள்.
சென்று திரும்பிவந்து சேர்ந்துஅவர் எனக்களிக்கும்
இன்பந்தான் எவ்வா றிருக்குமென்றால் இவ்வுலகில்
வாழ்வார்கள் நல்ல மழைபெற்றாற் போலிருக்கும்.
யாழ்மொழியே! அந்தக் குறளின் கருத்திதுவே.
தலைவி :
பாவையரின் உள்ளப் படப்பிடிப்பே தானத்தான்.
ஆவல்இனி ஒன்றே அதையும் அகற்றுங்கள்:
54
இந்த மழைதான் அமிழ்தென்ற எண்ணத்தில்
எந்தப் புலவர் எழுதியுள்ளார் செய்யுள்?
தலைவன் :
சிறந்தஒரு கேள்வியே கேட்டாய், திருவே!
"உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக்
கமிழ்தின் இயன்றன தோள்" என்ற பாட்டில்
கமழும் கருத்தைநீ காண்பாய்; உயிர்தளிர்க்கத்
தீண்டினாள் தன்துணைவி, அன்னதற்குக் காரணம்அம்
மாண்புடையாள் தோளேயாம். அத்தோள் அமிழ்தாம்.
தளிர்க்கவைப்ப தியாது? மழையன்றோ! அந்தக்
குளிர்மழையை அன்னார் அமிழ்தென்றார்! கூறும்
அதனால் அமிழ்தை மழைஎன்றே சொன்ன
மதியுடையார் சொல்லால் மகிழ்ந்து நலமடைவாய்.
தலைவி :
ஐயமே இல்லை. அமிழ்தே மழையத்தான்.
வைய மழையே அமிழ்தமிழ்து மெய்யாலும்!
அத்தான் எனது மகிழ்ச்சிக் களவில்லை.
முத்து மழைபொழிக முத்தமிழர் நாட்டில்!
அமிழ்து பொழிக அழகு தமிழ்நாட்டில்!
தமிழ்தான் தழைகவே! பொங்கலோ பாற்பொங்கல்!
தலைவன் :
இன்றுபோல் என்றும் மகிழ்ச்சி இலகுகவே!
நன்று தமிழர் நலிவின்றி வாழ்க!
அமிழ்தே அனையபாற் பொங்கலோ பொங்கல்!
தமிழ்நாடு வாழ்க தழைத்து.
 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166b.htm#2._அமிழ்து_எது

கதையுறுப்பினர்
திறல் நாடு
புலித்திறல் மன்னன்
புலித்திறல் மன்னி மனைவி
வையத்திறல் மகன்
செம்மறித்திறல் மன்னன் தம்பி
பொன்னி மன்னன் கொழுந்தி
ஆண்டி காவற்காரன்
அழகன் மகன்
ஆண்டாள் பூக்காரி
மின்னொளி மகள்
பெருநாடு
பெருநாட்டான் அரசன்
பெருந்திரு மகள்
பிச்சன் அமைச்சன்
மலைநாடு
வலையன் அரசன்
மலர்க்குழல் மகள்

இடம்: திறல்நாட்டின் அரண்மனைத் தனியிடம்.
நேரம்: பகல் உணவுக்குப் பின்.
உறுப்பினர்: புலித்திறல் மன்னன், அவன் தம்பி செம்மறித்திறல்

அகவல்
புலித்திறல் உண்டபின் பொன்னொளிர் கட்டிலில்
ஒருபுறம் தனிமையில் உட்கார்ந் திருந்தான்.
செம்மறித் திறல் அங்கு வந்தான்
"இம்மொழி கேட்பாய்" என்றான் வணங்கியே.
விருத்தம்
"பொன்னியை மணக்க வேண்டும்
அதைத்தானே புகல வந்தாய்?
பொன்னிஎன் கொழுந்தி, நீயோ
புலைச்சியின் மகனே அன்றோ?
என்னருந் தந்தை, வேட
ரினத்தவள் தன்னைக் கூடி
உன்னைஇங் கீன்றார், என்பால்
உறவுகொண் டாட வந்தாய்."
புலித்திறல் இவ்வா றோதப்
"புலைச்சிஎன் தாய்!என் தந்தை
நிலத்தினை ஆளும் வேந்தன்
நின்தந்தை அன்றோ அண்ணா?
புலப்பட உரைக்கின் றேன்நான்
பொன்னிஉன் கொழுந்தி என்னைக்
கலப்புறு மணத்தாற் கொள்ளக்
கருதினாள்; மறுப்ப தேனோ?"
என்றுசெம் மறிதான் கூற
புலித்திறல் "இராதே" என்றான்.
பொன்னிஅந் நேரம் ஆங்கே
பொதுக்கென எதிரில் வந்து
தன்எழில் மூத்தார் காலைத்
தளிர்க்கையால் பற்றி, புஎன்னை
உன்தம்பி மணக்கும் வண்ணம்
உதவுகமு என்று சொன்னாள்.
"தமக்கையை எனக்க ளித்தாய்
சாதியில் இழிவு பெற்று
நமக்கெலாம் பழிப் பாவானை
நங்கைநீ நாடு கின்றாய்;
இமைக்குமுன் புறஞ்செல். உன்றன்
எண்ணந்தான் மாறு மட்டும்
அமைக்கின்றேன் உன்னை என்றன்
அரண்மனைக் காவல் தன்னில்."

என்றுகா வலரைக் கூவ
இருவர்வந் தழைத்துச் சென்றார்.
நின்றசெம் மறித்தி றற்கு
நிகழ்த்துவான்: புஅரண்ம னைக்குள்
என்றுமே நுழைதல் வேண்டாம்
ஏகுகமு என்று சொல்ல,
நன்றெனக் குன்றத் தோட்செம்
மறித்திறல் நடக்க லானான்.


இடம்: அரண்மனையில் ஒரு காவல் அறை.
நேரம்: மாலை.
உறுப்பினர்: பொன்னி, புலித்திறல் மன்னி, காவலர்.

அகவல்
உலக மக்களில் உயர்வுதாழ் வுரைக்கும்
கலக மக்களைக் கருத்தால் தூற்றிக்
காதற் கண்ணீர் வெளிப்பட
மாறு நின்றனள் வன்காப் பறையிலே.
கண்ணி
"என்ன உனக்கில்லை பொன்னி? - உனக்
கேனிந்த எண்ணம்? புலைச்சி
தன்மகன் மேல்மைய லுற்றாய் - எமைத்
தாழ்வு படுத்த நினைத்தாய்."
என்று புலித்திறல் மன்னி - மிக
ஏசிக்கொண் டேஎதிர் வந்தாள்.
"இந்நில மக்கள்எல் லோரும் - நிகர்"
என்று புகன்றனள் பொன்னி.
"நாலு வகுப்பினர் மக்கள் - எனில்
நானிலம் ஆழ்பவர் நாமே!
மேலொரு பார்ப்பனர் கூட்டம் - உண்டு!
மூன்றாமவர் பொருள் விற்போர்!
காலத னாலிட்ட வேலை - தனைக்
கைகளி னாற்செய்து வாழும்
கூலி வகுப்பினன் அன்னோன்" - என்று
கூறி முடித்தனள் மன்னி.
"ஆளப்பி பிறந்தவர் தாமும் - மே
லானவர் என்பவர் தாமும்
கூளங்கள் அல்லர்; கடல்மேல் - காணும்
குமிழிகள் அன்னர் என்பேன்
மாளாப் பெருங்கடல் மக்கள் - அங்கு
மறைபவர் ஆள்பவர் என்பேன்
வேளைவரும், வரும் அக்கா - தீரும்
வேற்றுமை" என்றனள் பொன்னி.

"உன்னை மணந்திட வேண்டி - இவ்
வுலகிடை எண்ணிக்கை யில்லா
மன்னர்கள் உள்ளனர் பொன்னி - உன்
மனநிலை மாறுதல் வேண்டும்;
அன்னது மட்டும் கிடப்பாய் - பிறர்
அண்டுதல் இல்லா அறைக்குள்!
என்னடி வேண்டும் இப்போது - சொல்"
என்றாள் புலித்திறல் மன்னி.
"கன்னங் கறுப்புடை ஒன்றும் - மாற்றிக்
கட்டிடப் பின்னொன்றும் வேண்டும்"
என்றே உரைத்தனள் பொன்னி - ஒன்
றீந்தாள் புலித்திறல் மன்னி.
"என்னுயிர் போன்றவன் தன்னை - இனி
யானடைந் தின்புறு மட்டும்
என்னுடை நீ" என் றுடுத்தாள் - நகை
யாவும் கழற்றினள் பொன்னி.

இடம்: ஆற்றிடை என்னும் சிற்றூர்.
நேரம்: நிலவெறிக்கும் இரவு.
உறுப்பினர்: செம்மறித்திறல்.


அகவல்
இந்நி லத்தில் இருகுரல்; ஒன்று
"மன்னர் நாங்கள்" என்பது; மற்றொன்று
"பெருநி லத்தில்யாம் பெருமக்கள்" என்பதாம்.
சரிநிகர் மக்கள் என்னும் அரியதோர்
அமைதிக் குரலினை ஆர்தல் எந்நாள்?
சமையம் சாதி தவிர்வ தெந்நாள்?
என்றுசெம் மறித்திறல் கறுப்புடை
ஒன்றினை ஏந்தி உரைப்பான் ஆங்கே.
ப·றொடை வெண்பா
"மன்னர் பலரும் மணக்க இருக்கையிலும்
என்னை மணப்பதென்றே எண்ணினாள். எண்ணியதால்
என்ன இடர்ப்பட்டாள்! ஏச்செல்லாம் ஏற்றாளே!
அன்னவளை நான்மணக்கும் ஆவலினால் வாழ்கின்றேன்!
தன்னன்பு மூத்தாளைத் தானிழக்க வுந்துணிந்தாள்.
இன்னந்தன் மேன்மை எலாமிழக்க வுந்துணிந்தாள்
என்னன்பு நோக்கினிலே யான்நோக்கத் தன்னருமைத்
தென்னம்பா ளைச்சிரிப்பால் தின்னுவளே என்ஆவி!
போகுமட்டும் பூரிப்பாள் போகவிடை பெற்றுப்பின்
ஏகுமட்டும் பின்னழகு பார்த்திருப்பாள் யான்திரும்பித்
தோகையினை மட்டாக நோக்கினால் தான்குனிந்து
சாகுமட்டும் நான்மறவாப் புன்னகையைச் சாய்த்திடுவாள்.
மூத்தாள் மணாளன் முடிவேந்தைக் கேட்டபின்

போய்த்தார் மணமன்றில் பூண்போம், பெருமக்கள்
வாழ்த்திடும் வாழ்த்தால் மகிழ்வோம்பின் பஞ்சணையில்
தீர்த்தோம்நம் ஆவல்எனச் சேர்ந்திருப்போம் என்றுரைப்பாள்.
பொன்னால் மணியால் புனைந்த நகைஇழந்தாள்
தன்னால் முடியாத தொல்லையினால் சாய்ந்தாளோ?
மின்னால் செயப்பட்ட மெல்லிடைக்கு நேர்ந்தவெல்லாம்
என்னால்என் னால்என்னால் காராடை ஏற்கின்றேன்!
தண்ணிலவு கொண்ட மகிழ்ச்சி தனைக்கருதி
வெண்மை உடையணிந்து விண்ணில் துலங்குவதாம்
துன்பம் உடையேன் கரியதுகில் பூண்டேன்
என்னருமைப் பொன்னியைநான் எந்நாள் மணப்பேனோ!
பொன்னியும் நானும்ஒரு காதல் புனல்முழுகா
திந்நாள் தடுப்பதெது? "மண்ணாள ஏற்றவர்கள்"
"இன்னலுற ஏற்றவர்கள்" என்னும் பிளவன்றோ?
இந்நிலையை மாற்றா திரேன்.

இருபது ஆண்டுகளின் பின் ஒருநாள்
இடம்: அரண்மனை
நேரம்: மாலை
உறுப்பினர்: புலித்திறல் மன்னி, அவள் மகன் வையத்திறல்,
ஆண்டாள், அவள் மகள் மின்னொளி,
காவற்காரன் மகன் அழகன்.

அகவல்
மன்னியைச் சுமந்த பொன்னூசல், கூடத்தில்
தென்னாட்டுத் தோழியர் செந்தமிழ்ப் பாட்டில்
மிதந்துகொண் டிருந்தது மென்கை அசைத்ததால்!
எதிரில் ஆண்டாள்; இவள்மகள் மின்னொளி.
மன்னி ஆணைக்கு வாய்பார்த் திருந்தனர்.
மன்னி திருவாய் மலர்ந்தருள் கின்றாள்:
"வையத் திறல்நம் பையன் பிறந்தநாள்
நாளை! அவ்விழா நன்மலர் அனைத்தும்
வேளையோடு நீதரல் வேண்டும். அதன்விலைப்
பொன்னும் பெறுவாய். பரிசிலும் பூணுவாய்!
மின்னொளி யுடன்நீ விருந்தும் அருந்தலாம்"
என்றாள்! ஆண்டாள் இளித்தாள்!
நின்ற மின்னொளி ஆழ்ந்தாள் நினைவிலே.
கண்ணிகள்
"வாழிய வாழிய மன்னீ - ஊசல்
மகிழ்ந்தாடு கின்றனை மன்னீ!
தோழியர் ஆட்டினர் ஊசல் - கை
சோர்ந்திட நின்றனர் மன்னீ!
தோழியரும் சற்று நேரம் - ஆடச்
சொல்லுக என்னருந் தாயே

வாழிய வாழிய மன்னீ - அவர்
மகிழ்ந்தாட வும்செய்க தாயே!"
என்றனள் மின்னொளி தானும் - மன்னி
எள்ளி நகைத்துப் புகல்வாள்:
"மன்னியும் தோழியர் தாமும் - நில
மாந்தரில் ஒப்புடை யாரோ?
என்னடி மின்னொளி இன்னும் - உனக்
கேதும் தெரிந்திட வில்லை?"
என்றுரைத்தாள்! அந்த நேரம் - மகன்
என்னவென் றேஅங்கு வந்தான்.
"தூண்டா விளக்கேஎன் கண்ணே - என்
தூயவை யத்திறல் மைந்தா!
ஆண்டாள் மகள்சொன்ன தைக்கேள் - ஊசல்
ஆட்டிய தோழிகள் ஆட
வேண்டுமென் றேசொல்லி நின்றாள் - இவள்
வேற்றுமை காணாத பேதை;
வேண்டாம்இப் பேச்சுக்கள் என்றேன்" - என்று
விண்டனள் சேயிடம் மன்னி!
"மாவடு வொத்த கண்ணாளை - இள
வஞ்சிக் கொடிக்கிணை யாளைத்
தாவிநல் வாயிதழ் ஓரம் - உயிர்
தாக்கிடும் புன்சிரிப் பாளைத்
புதேவைஉன் எண்ணமும் பெண்ணே - அதில்
தீங்கில்லை வையத்துக்" கென்றான்.
பாவையும் அம்மொழி கேட்டாள் - எனில்
பாங்கியர் ஆடுதல் காணாள்.
அழகனும் அவ்விடம் வந்தான் - தன்
அன்புறு தோழனை நோக்கி
எழுதிய ஓவியந் தன்னை - நீ
ஏன்வந்து பார்த்திட வில்லை?
பிழையிருந் தால்உரைப் பாயே - என்
பின்வரு வாய்என்று சொல்ல
வழியில்லை தப்புதற் கென்றே - அவ்
வையத் திறல்பிரிந் திட்டான்.

இடம்: அரண்மனைக் கூடம்
நேரம்: நடுவேளை
உறுப்பினர்: ஆளவந்தார் கூட்டம், புலித்திறல் மன்னன்,
வையத்திறல், மின்னொளி, ஆண்டாள், தோழியர்.


அகவல்
திறல்நாட்டு மன்னனின் திருமகன் இருபதாண்டு
நிறைவு விழாவில் நிகழ்ந்த விருந்தில்
ஆளப் பிறந்தார் அனைவரும்
வேளையோடு வந்தார் விருப்போ டுண்ணவே.
கண்ணிகள்
பத்தாயிரம் பெயர்கள் - அரண்மனைப்
பாங்கிலோர் கூடத்திலே
ஒத்த தலைவாழை - இலைக்கெதிர்
உண்டிட வந்தமர்ந்தார்.
எத்தாவி லும்கிடையா - தெனும்படி
எண்ணிரண்டு வகையாம்
புத்தம் புதுக்கறிகள் - நறுமணம்
பூரிக்கவே படைத்தார்!
தித்திக்கும் பண்ணியங்கள் - அப்பவகை
தேடரு முக்கனிகள்,
தைத்திடும் கல்லையிலே - நறுநெய்யும்
தயிர் ஒருகுடமும்
அத்தனை பேர்களுக்கும் - எதிரினில்
அமைத்து நெய்ச்சோறு
முத்துக் குவித்தாற்போல் - பருப்பொடு
முயங்கவே படைத்தார்!
முன்உண்ண அள்ளிடுவார் - உயர்த்திய
முழங்கை நெய்வழியும்;
பின்உண்ண ஊன்றியகை - கறிவகை
பெற்றிட ஆவலுறும்!
மன்னவன் உண்டிருந்தான் - அவன்மகன்
வையத் திறலினுடன்!
இன்ன நிலைமைஎல்லாம் - அரண்மனை
ஏழையர் பார்த்திருந்தார்.
ஏழைப் பணியாளர் - ஒருபுறம்
ஏங்கி இருந்தார்கள்.
கூழைக் கரைத்தவுடன் - ஒருபுறம்
கூப்பிடப் பட்டார்கள்.
தோழியர் கூழ்குடித்தார் - ஒருபுறம்
தோகைநல் மின்னொளிதான்
தாழையின் தொன்னையிலே - கூழினைத்
தாங்கிக் குடித்திருந்தாள்.
விழவு தீர்ந்தவுடன் - சிறப்புடன்
விருந்து தீர்ந்தவுடன்
அழகு மின்னொளிபால் - அவள்தாய்
ஆண்டாள் புஎன்மகளே,
விழவு மிக்கநன்றே - அவ்விருந்தும்
மேல்!முஎன்று சொல்ல,அவள்
"இழவு பெற்றார்கள் - என்அன்னாய்
ஏழையர்" என்றுரைத்தாள்.
"ஆளும் இனத்தார்க்கும் - பார்ப்பனர்

அத்தனை பேர்களுக்கும்
தாளா மகிழ்ச்சியன்றோ! - இதுதான்
தனிச் சிறப்பன்றோ!
ஆளாகி வாழும்இடம் - விருந்துண்ண
ஆவலும் கொள்வதுவோ?
நாளும் அவர் மகிழ்ச்சி - நம்மகிழ்ச்சி!"
என்று நவின்றாள்தாய்!

இடம்: அரண்மனையில் தனியறை.
நேரம்: உணவுக்குப்பின், இரவு.
உறுப்பினர்: வையத்திறல், அழகன்.


அகவல்
நிலவு குளிர்வார்க்கக் காற்று நெளிய
அலைகடல் இசைமை அளிக்க, மலர்சேர்
பஞ்சணையில் தனியே படுத்தேன்
நெஞ்சில்அவள் கூத்து நிகழ்த்துகின் றாளே!
கண்ணிகள்
மின்னொளி இன்முக நிலவே - நிலவு!
விண்ணில வேஅக லாயோ!
அன்னவள் இன்சொல் இசையே - இசையாம்!
ஆர்கடல் வாயடக் காயோ!
கன்னங் கருங்குழல் மணமே - மணமாம்!
காட்டில் மலர்காள் அகல்வீர்.
என்ன உரைப்பினும் இனியும் - எனையேன்
இன்னற் படுத்துகின் றீர்கள்?
காவற் பணிசெயும் அழகன் - இன்னும்
காணப் படவில்லை இங்கே!
ஆவலெல் லாம்அவ னிடமே - கூறி
ஆவன செய்திட வேண்டும்.
பாவைஅம் மின்னொளி தன்னை - நானே
பார்க்கவும் பேசவும் வேண்டும்.
தேவைப் படுமிந்த நேரம் - தெரிந்தும்
தீமை புரிந்திடு கின்றான்.
என்று துடிக்கின்ற வேளை - அழகன்
"இளவரசே!" என்று வந்தான்.
"ஓன்றுசெய் ஒன்றுசெய் அழகா! - அழகா
ஒண்டொடி வீட்டுக்குச் செல்வாய்.
நன்று கிழவனை நோக்கிப் - பழங்கள்
நாலைந்து கொண்டு வரச்சொல்.
சென்றிடு வான்பழத் தோட்டம் - நோக்கிச்
செல்லுக" என்றான் இளங்கோ!
(அழகன் போகின்றான்.)

இடம்: சிற்றூர் மின்னொளி வீடு.
நேரம்: நள்ளிரா.
உறுப்பினர்: மின்னொளி, அவள் தந்தையாகிய
கிழவன், அழகன், வையத்திறல்.

அகவல்
அன்னைஇன் றிரவில் அரசர் அரண்மனை
தன்னில் தங்கினாள் போலும்! தந்தையே,
சிறிது நேரம் செந்தமிழ்ப் பாட்டொன்று
பாடுக என்றாள் மின்னொளி
பாடுமுன் வந்தான் அழகன் பரிந்தே!
ப·றொடை வெண்பா
"அன்பு முதிர்ந்தவரே! ஐயா, விரைவில்நீர்
மன்னர் மகன்விரும்பும் மாங்கனிகள் ஐந்தாறு
தூயனவாய்க் கொண்டுவரத் தோப்புக்குப் போய்வாரும்
வாயூறிப் போகின்றான் வையத் திறல்அங்கே"
என்றான் அழகன்;உடன் ஏகினான் அம்முதியோன்!
"மன்றிடை ஆடும் மயிலேநன் மின்னொளியே!
மாவின் கனிமீது மையலுற்ற நம்இளங்கோ,
மாவின்மேல் ஏறியிங்கு வந்திடுவான் இந்நேரம்"
என்றான். இளமங்கை "ஏன்நீ நடந்துவந்தாய்?
மன்னன் மகன்குதிரை ஏறி வருவதென்ன?
உன்னிளங்கால் நோகா திருக்குமா? மன்னர்மகன்
தன்கால்கள் மட்டுமா மென்கால்கள்?" என்றே
அழகன் நிலைமைக் கிரங்கி அவனை
முழுதன்பால் நோக்கி முகநிலவு சாய்த்திருந்தாள்!"
வையத்திறல் வந்தான்; வஞ்சி வரவேற்றாள்.
கையால் தடுக்கிட்டாள் காற்சிலம்பால் பாட்டிசைத்தாள்;
இன்பஉருக் காட்டி எதிரினிலே நின்றிருந்தாள்.
அன்பால் "அமர்க" என வையத் திறல்சொன்னான்.
சற்றே விலகித் தரையினிலே கையூன்றி
மற்றுமிரு வாழைத் துடைகள் ஒருக்கணித்து
மின்னொளியும் உட்கார்ந்தாள் மேலாடைதான் திருத்தி!
"மின்னொளியே வீட்டில் விருந்தும் அருந்தினையோ?"
என்று வினவினான். கேட்ட எழில்வஞ்சி,
"அந்தப் பெரியவிருந் தேழைக் கருந்ருதினைருயோ?
இந்தவகை நீமட்டும் ஏன்தான் அருந்தினையோ?
கூழ்குடித்தார் இவ்வூர்க் குடித்தனத்தார் எல்லாரும்!
வாழ்வுக்கே வந்தவர்கள் வாய்ப்பாய் விழுங்கினரே!"
என்றாள் முகஞ்சுருங்கி. இன்னல் உளங்கவர
"மன்னர் வகுப்பென்றும் மற்றவகுப் பென்றும்
இந்நாட்டில் இல்லா தினிமேற் புரிந்திடுவேன்"
என்றான்!அவ் வேளை முதியோன் எதிர்வந்து
"தித்திக்கும் மாம்பழங்கள் தேடிக் கொணர்ந்தேன்நான்

பத்துக்கும் மேலிருக்கும் பாராய் இளங்கோவே"
என்றான். பழத்தோடு வையத் திறலோ,தன்
குன்றை நிகர்த்த குதிரைஏ றிச்சென்றான்!
"போய்வருவேன்" என்றான் அழகன். இளவஞ்சி,
வாயு மிரங்க, மனமிரங்க "நீநடந்தா
போகின்றாய்?" என்றாள். "புதிதல்ல" என்றழகன்
ஏகலுற்றான் மின்னொளியை ஏய்த்து.

இடம்: அரண்மனை.
நேரம்: காலை.
உறுப்பினர்: பெருநாட்டின் அமைச்சன், புலித்திறல்.


அகவல்
அரியணை அமர்ந்த அரசனின் எதிரில்
பெருநாட் டமைச்சன் பிச்சனும் அமர்ந்தே
"அரசே, உன்னைநான் அணுகிய தேன்எனில்
பெருநாட்டு மன்னனின் ஒருமக ளான
’பெருந்திரு’ என்னும்அப் பேரெழி லாளைஉன்
திருமகன் வையத் திறல் மணப்பது
பெருவான், நிலவைப் பெறுவ தாகும்!
இந்த உறவினால், இவ்வை யத்தில்
எந்தப் பகைவரும் இல்லா தொழிவர்.
அதனால் திறல்நாடும் அப்பெரு நாடும்
எதனாலும் மேன்மை எய்துதல் கூடும்!
திருவுளம் யா" தெனக் கேட்டான்.
அரசன் மகிழ்ச்சியால் அறைவான் ஆங்கே:
கண்ணிகள்
’மிக்க மகிழ்ச்சி அமைச்சே! - மிக
மேன்மை யுடையதிவ் வெண்ணம்.
சிக்கல்கள் பற்பல தீரும் - பல
தீமைமைகள் மாய்வது திண்ணம்;
திக்கை நடுங்கிட வைக்கும் - இத்
திருமண வுறவு!மெய் யன்றோ!
விக்குள் எடுக்கையில் தண்ணீர் - உன்
விண்ணப்பம்’ என்றனன் மன்னன்.
"வையத் திறற்கிதைச் சொல்க! - அவன்
மணந்துகொள் ளத்தக்க வண்ணம்
செய்க எனக்கிதை நாளை - நீ
தெரிவிக்க" என்றனன் பிச்சன்.
"செய்திடுவே னிதை இன்றே - நான்
செப்பிடுவேன் பதிலை நாளை!
துய்யஎன் மன்னி கருத்தும் - கேட்டுச்
சொல்லுவேன்" என்றனன் மன்னன்.

இடம்: அரண்மனை மகளிர் இல்லம்.
நேரம்: முதிர்காலை.
உறுப்பினர்: புலித்திறல், மன்னி.


அகவல்
பாங்கியர் அப்புறப் படுத்தப் பட்டனர்.
ஆங்கொரு கட்டிலில் அரசனும், மன்னியும்
விரைவில்வந் தமர்ந்தனர். வேந்தன் முகத்தில்
புதுமை கண்டாள் மன்னி
அதனை யறிய ஆவல்கொண் டனளே!
கண்ணிகள்
"பெண்ணேஉன் மகனுக்குப் பெருநாட்டான் - தன்
பெண்ணைக் கொடுப்பதெனும் நல்ல செய்தியைக்
கொண்டுவந் தான்அமைச்சன் என்னசொல்கின்றாய் - உன்
கொள்கையும் தெரிந்திட வேண்டு மல்லவோ?
அண்டைநாட் டரசனின் உறவாலே - நமக்
கல்லல் குறையுமெனல் உண்மை யல்லவா?
தொண்டைக் கனிநிகர்த்த இதழாலே - எண்ணம்
சொல்லுக" என்றுமன்னன் சொன்ன அளவில்,
"அண்ணன் எனக்கிருக்க மகளிருக்கப் - பெண்
அயலினிற் கொள்ளுவது தக்க தல்லவே?
வெண்ணையை வைத்துநறு நெய்க்கழுவதா? - என்ன
வேடிக்கை!" என்றுமன்னி துன்ப மடைந்தாள்.
"கண்ணுக்குப் பிடித்தவள் அண்ணன்மகளா - அக்
கட்டழகியா, இதனை மைந்த னிடமே
எண்ணி யுரைக்கும்படி சொல்லிவிடுவோம் - அவன்
எண்ணப்படி நடப்போம்" என்றனன் மன்னன்.
"சேயை அழைத்துவரச் சொல்லுக" வென்றான் - அவன்
"தேரேறி நகர்வலம் சென்றனன்" என்றாள்!
"ஆயினும் காவலரை விரைந்தனுப்பி இங்
கழைப்பிக்க வெண்டுமெனமு மன்னன் உரைத்தான்.
புதூயஎல் லைப்புறத்தின் காட்சிதனையே - அவன்
துய்த்திடச் சென்றதுண்டு வந்த பிறகே
ஆயஇச் செய்திதனை அறிவிக்கலாம்" - என
அரசி அரசனிடம் சொல்லி மறுத்தாள்!
 


இடம்: அரண்மனைத் தனியறை.
நேரம்: காலை.
உறுப்பினர்: மன்னி, வையத்திறல், மன்னன்.


அகவல்
வையத் திறலை மன்னி யழைத்துத்
"துய்ய மகனே, வையத்திறலே,
உன்மணம் பற்றி உன்னிடம் பேச
மன்னர் தேடினார். மகன்இல்லை என்று
சொன்னேன். உன்னை முன்னே நான்கண்
டென்க ருத்தினை இயம்ப எண்ணினேன்!
பெருநாட் டானின் ’பெருந்திரு’ தனைநீ
திருமணம் செய்யத் திட்ட மிட்டனர்.
என்னருந் தமையன் ஈன்ற பெண்ணாள்
உன்னரும் பண்புக் கொத்தவள் அன்றோ?
அழகிற் குறைவா? அன்பிற் குறைவா?
ஒழுக்கம் அனைத்தும் ஓருவானவள்
அவளைநீ மணப்ப தாக
அவரிடம் கூறுவாய்" என்றாள் அரசியே!
கண்ணிகள்
"ஆய கலைகள் அறுபத்து நான்கையும் அம்மா - நான்
ஆய்ந்தபின் பேமணம் ஆர்ந்திட எண்ணினேன் அம்மா.
தீயன நல்லன காணாத இப்பரு வத்தே - ஒரு
சேயிழை யோடறம் செய்வதெவ் வாறுளம் ஒத்தே?
தூயஇந் நாட்டினை ஆளுந் திறம்பெற வேண்டும் - நான்
தொல்லறி வோரிடம் கல்வி பயின்றிட வேண்டும்.
பாயும் பகைவர் தமக்கிடை யேஉல காள - எனைப்
பாரோடு போராடும் வண்ணம் பயிற்றுக" என்றான்.
வையத் திறல் சொன்ன பேச்சினைக் கேட்டனள் மன்னி - தன்
வாயை அடக்கினள் ஏதும்சொல் லாம லிருந்தாள்.
பையவந் தானந்த நேரத்திலே எழில் மன்னன் - "எந்தப்
பாவையை நீமணம் செய்திட எண்ணினை" என்றே
துய்யதன் மைந்தனைக் கேட்டனன். அன்னை யுரைப்பாள் - "அவன்
துய்க்க நினைப்பது பல்கலையே" என்று சொன்னாள்.
வையக மாளும் புலித்திறல் மன்னவன் கேட்டே - தன்
மைந்தன் கருத்தினை நன்றெனச் சொல்லி நடந்தான்.

இடம்: அரண்மனை.
நேரம்: மறுநாட் காலை.
உறுப்பினர்: புலித்திறல், பிச்சன்.


அகவல்
ஏந்தலைப் பிச்சன் எதிர்பார்த் தபடி
அரண்மனைத் தனியிடத் தமர்ந் திருந்தான்.
புலித்திறல் ஏந்தல் புறப்படு கதிர்போல்
வந்தான். பிச்சன் மழைநாட் குருவிபோல்
ஆவலோடு வணங்கி அமர அமர்ந்தான்.
"என்மகன் வேறோர் எழிலுறு பாவைபால்
தன்உளம் போக்கினான்" என்றான் மன்னன்.
"அவள்யார்?" என்றான் கவலையொடு பிச்சன்.
"பல்கலைப் பெண்" என்று மன்னன்
சொல்ல, அமைச்சன் சொல்வான் எழுந்தே!
கண்ணிகள்
"வையத் திறல்மொழி பொய்யே! - அவன்
மணம் வெறுத்திட வில்லை.
தையல் ஒருத்தியை மைந்தன் - உள்ளம்
தாவி யிருப்பது மெய்ம்மை.
துய்யவ னாம்பெரு நாட்டான் - பெற்ற
தோகை மணத்தை விலக்கப்
பொய்யுரைத் தான்!கலை மீது - நெஞ்சு
போனதென் றான்அது பொய்யே!
காளை முகத்தினிற் கண்டேன் - உயிர்க்
காதல் வருத்தத்தின் வீச்சு!
மீளவும் மைந்த னிடத்தே - மண
மேன்மையைச் சொல்லுக" என்றான்.
"காளை யுரைத்தது மெய்யே - அவன்
கருத்தில் ஐயுற வில்லை.
மீளவும் மைந்த னிடத்தே - சொல்லல்
வீணென்று" மன்னவன் சொன்னான்.
"மலையன் எம்பகை மன்னன் - அவன்
மகளைக் கட்டுவ தால்உன்
நிலை யுயர்ந்திடும் என்றே - நீ
நினைத் திருக்கவும் கூடும்.
பலபல நினை யாதே - எம்
பாவையை ஒப்புக" என்றான்.
"கலை பயில்கஎன் மைந்தன்" - என்று
கழறி னன்புலித் திறலே.
(அமைச்சன் சென்றான்.)

இடம்: திறல்நாட்டின் வயல்வெளி.
நேரம்: காலை.
உறுப்பினர்: காருடை பூண்ட செம்மறித்திறல்,
வயலுழுவோர்.


அகவல்
மேழி பிடித்த’கை’ மேலாம் இடது’கை’!
தாழாக் கோல்’கை’ வலது’கை’ யாக,
முழங்கால் சேற்றில் முழுக,வாய் திறந்து
பழந்தமிழ் பாடினர் வயலில் உழுவோர்!
அவ்வழி அணுகிய செம்மறித் திறலின்
விழிகள் தொழிற்படும் உழவர்பால் விரைந்தன!
கருத்தோ கடலுலகு நிலைமையில் ஆழ்ந்தது!
செம்ம றித்திறல் பாடுவான்
அம்முழு துழைப்போர் அகத்தை நோக்கியே:

பாட்டு
எடுப்பு
ஆளுவோர் என்றே சிலரை
அளித்த துண்டோநீ உலகே?
உடனெடுப்பு
மீளுமாறின்றி மிகுபெரு மக்களைக்
கருவினில் விளைத்ததும் உண்டோ?
அடிகள்
வாளொடு பெற்ற துண்டோ சிலரை?
வடுவொடு பெற்றாயோ பலரை?
நாளும் உழைப்பவர் தமைப்பெற்ற தாயே,
நயவஞ்ச ரைப்பெற்று ளாயே?
மேலவர் என்றொரு சாதியையும்,
வீழ்ந்தவர் என்றொரு சாதியையும்
தோலில் குருதியில் அமைந்திடு மாறு
தோற்றுவித் தாயோ கூறு!
அகவல்
உழைப்பவர் என்றே ஓரினம் உண்டோ?
பழிப்பிலா துலகின் பயனை நுகரும்
ஓரினம் உண்டோ பிறவியில்? என்றே
ஏரும் நிறுத்தி எண்ணினர் உழுநரே!
(செம்மறித்திறல் செல்கின்றான்.)

இடம்: மின்னொளி வீட்டின் எதிரில் உள்ள தோட்டம்.
நேரம்: இரவு, உண்டபின்.
உறுப்பினர்: அழகன், மின்னொளி, வையத்திறல், கிழவன்.


அகவல்
பழத்தோட் டத்தைக் கிழவன் நண்ணினான்
அழகன், மின்னொளி அருகரு கமர்ந்தே,
அரசன் மகன்தான் அனுப்பிய பண்ணியம்
அருந்து கின்றனர். அழகன் அருந்த
மின்னொளி விரும்பி வேண்டுவாள் அவனை!
அதனை மின்னொளிக் களிப்பான் அழகன்!
உற்றதந் தைக்கென ஒருபங்கு வைத்து
மற்றவை இருவர் அருந்தினர்.
தெற்றென வந்தான் அரசன் சேயே.
கண்ணிகள்
"பெருநாட்டு மன்னவன் பெண்ணை - நான்
பெற்றிட வேண்டுமென் றார்கள்.
ஒருநாட்டு மன்னவன் பெண்ணும் - எனக்
குண்மையில் வேண்டுவ தில்லை;
திருநாட்டி லேயொரு பாவை - அவள்
செல்வத்தின் நேர்பகை யாவாள்
இருநாட்டம் அன்னவள் மேலே - நான்
இட்டுவிட் டேன்என்று சொன்னேன்.
இவ்வாறு நான்சொன்ன தாலே - எனை
ஈன்றவர் ஒப்பிட லானார்;
அவ்விடத் தேபெரு நாட்டின் - ஓர்
அமைச்ச னிடத்திலும் சொன்னார்.
"வெவ்வுளத் தோடவன் சென்றான் - இந்த
வேடிக்கை எப்படி?" என்றே
மைவிழி மின்னொளி தன்பால் - எழில்
வையத் திறல்வந்து சொன்னான்.
"இத்திரு நாட்டினிற் பாவை - அவள்
யார்?" என்று கேட்டனள் வஞ்சி!
"முத்தமிழ்" என்றனன் செம்மல்! - இதை
மொய்குழல் கேட்டு வியந்தாள்.
"தித்திக்கப் பேசும் திறந்தான் - பெருஞ்
செல்வர்கட் கேவரக் கூடும்!
மெத்த வியப்புறும் பேச்சும் - நல்ல
வேந்தருக் கேவரக் கூடும்!
ஏழையர் கற்றது மில்லை - கல்வி
எய்திட வும்வழி இல்லை.
கூழை அருந்திக் கிடப்பார் - தம்
கூரையில் தூங்கி எழுந்தே
பாழும் உழைப்பினில் ஆள்வார் - நல்ல
பாங்கினில் பேசுதல் எங்கே?
வீழும் நிலைகொண்ட மக்கள் - எந்நாள்
மீளுவர்?" என்றனள் பாவை.
"இன்புறப் பேசி இருப்போம் - என
எண்ணிஇங் கேவரும் போதில்
துன்புறும் பேச்சுக்கள் பேசி - எனைத்
துன்பத்தில் ஆழ்த்திடு கின்றாய்!
தன்னலக் காரரை எண்ணி - மிகத்
தாழ்ந்தவர் தம்நிலை எண்ணி
மின்னொளி யேஎனை நொந்தாய் - இது
வீண்செயல்!" என்றனன் செம்மல்.
மேலும்வை யத்திறல் சொல்வான் - "நீ
வேண்டிய நற்பண்ணி யங்கள்
சால அனுப்பிவைத் தேனே - அவை
தக்கனவோ?" எனக் கேட்டான்.
"ஏலுமட் டும்புசித் தேன்நான் - அவை
ஏழையர் அத்தனை பேர்க்கும்
ஞாலத்தில் எந்நாள் கிடைக்கும்?" - என
நங்கை உரைத்தனள் ஆங்கே!
மாம்பழம் கொண்டுவந் திட்டான் - அம்
மங்கையின் தந்தை; விரைவில்
கூம்பும் முகத்தோடு செம்மல் - பழங்
கொண்டுசென் றான்பரி யேறி.
ஆம்பல் நிகர்த்திடும் வாயாள் - அங்
கழகனை நோக்கிப் புகல்வாள்:
"பாம்பு கிடந்திடும் பாதை - நன்று
பார்த்துச்செல்" என்றனள்; சென்றான்.

இடம்: பெருநாடு, ஆய்வுமன்றம்.
நேரம்: காலை.
உறுப்பினர்: பெருநாட்டு மன்னன், அமைச்சனான
பிச்சன், படைத்தலைவன்.


அகவல்
"வையத் திறல்என் மகளை மறுத்தான்.
பெருநாட்டுப் பெருமையைத் திறல்நாடு மறுத்தது!
இதனை ஆய்க" என்று
பதறினான் மன்னன் பாங்குளார் இடத்தே.
ஆனந்தக் களிப்பு எடுப்பு
"திறல்நாடும் மலைநாடும் சேர்ந்தே - நம்
திருநாட்டை மாய்த்திட ஒருநாட்டம் வைத்தான்.
நறுமலர்க் கூந்தலி னாளை - நல்ல
நம்பெண்ணைப் பின்ஏன் மணக்க மறுத்தான்?
திறலற்ற மலையவன் பெண்ணை - அவன்
திருமணம் செய்திட வேநினைக் கின்றான்.
இறையே, படையெடுப் போம்நாம்" - என்
றியம்பினன் ஆங்கே படைத்தலை வன்தான்.
"அந்தத் திறல்நாட்டு மன்னன் - நம்
ஆயிழை தன்னை மறுத்தது மெய்தான்;
மந்தி மலையவன் பெண்ணை - அந்த
வையத்திறல் மணம் செய்ய நினைத்தல்
எந்தவகை அறிந் தாய்நீ - அதை
எப்படி நம்புவ" தென்றனன் மன்னன்.
குந்தி இருந்த அமைச்சன் - தன்
கோவை வணங்கி யுரைத்திட லானான்:
தேர்ந்தநல் ஒற்றர்கள் வேண்டும் - அத்
திறல்நாட்டி லேஅவர் தங்குதல் வேண்டும்.
நேர்ந்த நிகழ்ச்சிகள் யாவும் - அங்கு
நேரில் உணர்ந்து நிகழ்த்துதல் வேண்டும்.
சேர்ந்து மலையவன் பெண்ணை - அவன்
திருமணம் செய்திடல் மெய்யெனக் கண்டால்,

ஆர்ந்த பெரும்படை கூட்டி - அவன்
ஆட்சியைக் கைப்பற்ற லாம்" என்று சொன்னான்.
’நன்றிது என்றனன் மன்னன் - உடன்
நால்வர்நல் ஒற்றர்கள் தம்மை யழைத்தான்.
"இன்று திறல்நாடு சென்றே - அங்
கியலும் நிலைமைகள் யாவையும் இங்கே
அன்றன் றுரைத்திட வேண்டும். - இடை
அஞ்சற் படுத்திடும் ஆட்களி னோடு
சென்றிடு வீ" ரென்று சொன்னான்; - உடன்
சென்றனர் ஒற்றர்கள் கோவை வணங்கி.

இடம்: திறல்நாட்டின் புறநகரான வெண்ணகர்.
நேரம்: மாலை.
உறுப்பினர்: புலித்திறல் மன்னன், நகர மக்கள்,
செம்மறித்திறல்.


அகவல்
திறல்நாடு சார்ந்த வெண்ணகர் சென்று
அறநிலை யங்களை, பிறநிறு வனங்களை,
வழக்குத் தீர்ப்பார் ஒழுக்க மதனைச்
செழிப்பினை ஆய்ந்து, திருநகர் மக்கள்
விரும்பிய வண்ணம் வீற்றிருக் கின்றான்
பெருமணி மன்றில் அரும்புலித் திறல்தான்!
ஆங்கே ஒருகுரல் எழுந்தது!
மாங்குயில் அன்றது மக்கள் பாட்டே!
கண்ணிகள்
குரல்:
மாந்தரில் நான்கு வகுப்புக்கள் என்பதும் இல்லை - இல்லை
மன்னவ னாகப் பிறந்தவன் யாவனு மில்லை!
புலித்திறல்:
மாந்தரில் நான்கு வகுப்புக்கள் உண்டெனல் மெய்யே - மெய்யே
மன்னவ னாகப் பிறந்தவன் நான்எனல் மெய்யே!
குரல்:
நால்வகுப் பென்பது நூல்வகுப்பா தமிழ் நாட்டில்?
நற்றமிழ் மக்கள் ஒரேவகுப்பே தமிழ் ஏட்டில்.
புலித்திறல்:
நால்வகுப் பென்பது நன்மனுவே சொன்ன தாகும் - அது
நற்றமிழ் மக்கள் எவர்க்கும் பொருந்துவ தாகும்.
குரல்:
மேல்வர எண்ணிய ஆரியர் நூல்கள் நமக்கோ? - மிகு
வீழ்ச்சியும் தாழ்ச்சியும் செந்தமிழ் மக்கள் தமக்கோ?

புலித்திறல்:
கோல்கைக் கொண்டுள மன்னவன்நான் என்றன் ஆணை - இக்
கொள்கையைப் பின்பற்ற ஒப்பா தவர்நிலை கோணை!
குரல்:
கோலை எடுத்தவன் மேலெனக் கூறுதல் குற்றம் - பெருங்
குற்றமன் றோமக்கள் தாழ்வென்று கூறுதல் முற்றும்?
புலித்திறல்:
நூலை மறுத்துநம் கோலை எதிர்ப்பவர் தம்மை - நாம்
நோவ ஒறுத்திடில் யார்தடுப் பார்இங்கு நம்மை?
குரல்:
ஆள்பவர் சிற்சிலர்! ஆட்பட் டிருப்பவர் பல்லோர் - எனில்
அல்லல் அடைபவர் அப்படியே என்றும் நில்லார்.
புலித்திறல்:
வாளுண்டு கையினில் இன்றைக்கும் நாளைக்கும் உண்டு - நிலை
மாற்ற நினைப்பவர் வந்திட லாமே திரண்டு!
அகவல்
செம்ம றித்திறல் அரையடி செப்பவும்
புலித்திறல் அரையடி புகலவும் ஆக
அங்குள குடிகள் அனைத்தும் அறிந்தார்.
இங்கிது கண்ட புலித்திறல்,
எங்கே செம்மறி என்றெழுந் தனனே!
அறுசீர் விருத்தம்
இருக்கைவிட் டெழுந்தான் சீறி
ஏகினான் வெளிப்பு றத்தே!
ஒருத்தனை உணர்ச்சி மிக்க
செம்மறித் திறலை நோக்கிப்
"பிரித்தேன்உன் ஆவி" என்றான்.
மன்னவன் பிடித்த வாளைச்
சிரித்தசெம் மறித்தி றல்வாள்
சிதைத்தது; திகைத்தான் மன்னன்.
செம்மறி செப்பு கின்றான்:
"திறல்நாட்டு மக்கள் தம்பால்
மெய்ம்மையே புகல்வேன்! மக்கள்
மேல்என்றும் மட்ட மென்றும்
பொய்மையால் புகலும் ஏட்டைப்
புகலுவார் தம்ஏற் பாட்டை,
இம்மாநி லத்தில் மாற்ற
ஆவன இயற்றித் தீர்வேன்.
"இதுவேநான் மக்கட் கிந்நாள்
இயற்றிட எண்ணும் தொண்டு!
முதியோன்நீ உடன்பி றந்தாய்

உன்னுயிர் முடிப்ப துன்றன்
அதிகாரம்! அல்லால் என்கை
அவ்வினை செய்வ தில்லை!
பொதுமக்கள் உள்ளம் நோக்கப்
போகின்றேன்" என்று போனான்.

இடம்: திறல்நாட்டின் நகர்ப்புறத்தில் ஒரு குளக்கரை.
நேரம்: காலை.
உறுப்பினர்: அழகன், பெருநாட்டின் ஒற்றனான வேலன்.

அகவல்
குளக்கரை தன்னில் கொம்பு கொண்டு,பல்
விளக்கும் அழகனை வேலன் அணுகி,
"எவ்வூர்" என அவன் இவ்வூர்மு என்றான்.
"என்ன அலுவல்" என்றான். அழகன்
"மன்னன் மகனின் துணையாள்"
என்றான். வேலன் புவணக்கம்மு என்றானே!
அறுசீர் விருத்தம்
"பொன்னாற்றூர் முத்துச் செட்டி
புதல்வன்நான் வாணி கத்தில்
பொன்னெலாம் இழந்தேன் என்றன்
புதுமனை யாளும் செத்தாள்.
என்னைநீ காக்க வேண்டும்
எளியன்நான்" என்றான் வேலன்.
"என்னநான் செய்யக் கூடும்"
என்றந்த அழகன் சொன்னான்.
"அரண்மனை அலுவல் ஒன்று
சின்னதாய் அடைந்தால் போதும்
அரசனின் மகனுக் கோநீ
அன்பான துணைவன் அன்றோ?
உரைத்தால்நீ இளங்கோ கேட்பான்
ஒருக்காலும் மறுக்க மாட்டான்.
அருள்என்மேல் வைக்க வேண்டும்
அன்பனே" என்றான் வேலன்.
"நாளைவா நண்பா!" என்றே
அழகனும் நவின்றான்.வேலன்
"வேளைநான் தவற மாட்டேன்
வருகின்றேன்" என விளம்பிக்
"காளைஅவ் வரசன் மைந்தன்
கடிமணம் எப்போ" தென்றான்.
"கேளாதே அதனை" என்று
கிளத்தினான் அழகன் ஆங்கே!
"கேட்டது குற்ற மானால்

மன்னிப்புக் கேட்கின் றேன்நான்!
நாட்டினில் நானோர் ஏழை
நாளைக்கே அலுவல் ஒன்று
காட்டினால் மிகநன் றாகும்;
கைக்கூலி நூறு பொன்னும்
நீட்டுவேன் உனக்கே" என்று
நிகழ்த்திட லானன் வேலன்.
"ஏழைநீ, நூறு பொன்னை
எனக்கெவ்வா றீதல் கூடும்?
தோழனே, உன்றன் சொல்லில்
ஐயமே தோன்றச் செய்தாய்!
வாழிநீ உண்மை கூறு
மறையேல்" என் றழகன் கூறத்
"தோழனே நாளை வந்து
சொல்லுவேன்" என்று போனான்.

இடம்: படைவீடு.
நேரம்: இரவு, உண்டபின்.
உறுப்பினர்: படைமறவர், செம்மறித்திறல்.

அகவல்
படைமறவர் உண்டார், படுக்கை சார்ந்தார்.
இடைவானம் ஈந்த அமுதுபோல் ஒருகுரல்
காதிற் புகுந்தது. மறவர்
யாதெனக் கருத்தில் ஏற்கலா யினரே.
எண்சீர் விருத்தம்
இந்த நாடு பொதுமக்கள் சிறையே!
எவரும் நிகரென்ற பொதுவுரி மைதனைப்
பொந்தில் ஆந்தைநிகர் மன்னன் பறித்தான்
போரின் மறவரே உங்களின் துணையினால்!
கந்தை யின்றி உணவின்றிப் பொதுவினர்
காலந் தள்ளி வருவது கண்டிரோ!
இந்த நாடு பொதுமக்கள் நாடன்றோ?
நீவிரெல் லீரும் இந்நாட்டு மன்னரே!
மன்ன ராகப் பிறந்திட்டோம் என்கின்றார்!
மக்கள், ஆட்படப் பிறந்தவர் என்கின்றார்!
இன்ன வாக்கு நுந்துணை இல்லையேல்
மன்னர் எங்கே, பெரும்படை மறவரே?
இந்நி லத்துப் பெருமக்கள் ஓர்கடல்!
இடர்செய் மன்னவர் அக்கடற் குமிழிகள்!
இன்று கருதுக குடிகளே, மறவரே!
நாளைக் கேகுடி யரசினை நாட்டலாம்.
தமிழ்மொ ழிக்குள ஆக்கத்தைப் போக்கினார்.

தமிழர் கொள்கையைத் தலைசாய்க்க எண்ணியே
அமுதை நீக்கியோர் நஞ்சைவார்க் கின்றனர்;
அத்த னைக்கும் நும்துணை கேட்கின்றார்.
உமையெ லாம்அந்த மன்னவர் கைகளின்
உளிக ளாக்கி நாட்டைப் பிளப்பதோ?
நமது கொள்கை மக்களெ லாம்நிகர்!
நான்கு சாதிகள் ஆரியர் கொள்கையே!
அகவல்
படைவீட்டுப் படுக்கையில் இக்குரல் புகுந்து
நடைமுறை தன்னில் நாணிட வைத்தது.
மறவர்கள் தூக்கம் மாய்ந்திட
இறவாப் பெருவிழிப் பெய்தினர் ஆங்கே.

இடம்: திறல்நாடு அரண்மனையின் உட்புறம்.
நேரம்: காலை.
உறுப்பினர்: ஆண்டாள், மின்னொளி.


அகவல்
அரண்மனை தன்னில் ஆங்காங்குச் சென்று
மின்னொளி தன்தாய் தன்னைத் தேடினாள்.
காவல் அறையில் பொன்னியொடு
மேவி இருப்பது கண்டுவியந் தாளே!
கண்ணிகள்
"வீட்டை மறந்தாயோ - எனையும்
வேம்பென விட்டாயோ?
நாட்டில் அரண்மனையே - உனக்கு
நன்றெனக் கொண்டாயோ?
போட்டது போட்டபடி - விடுத்தே
போனாள் அரண்மனைக்கே
கேட்டுவா எண்றுரைத்தார் - தந்தைதாம்"
என்றனள் கிள்ளை மின்னாள்.
"மன்னர் கொழுந்தியடி - நிலைமை
மங்கிட லானதடி!
கன்னல் மொழியாளை - மன்னவன்
காவலில் வைத்தானே!
என்னைத் துணையாக - வைத்தனன்
ஏந்தலின் நன்மகன்தான்.
உன்னை மறக்கவில்லை - தந்தையை
உளம் மறந்ததில்லை"
என்றனள் ஆண்டாள்தான் - இந்நிலை
ஏனென்று கேட்டவளாய்
மின்னொளி நின்றிருந்தாள் - அவள்தாய்
மேலும் உரைக்கின்றாள்:

"மன்னவன் தம்பியினை - அச்செம்
மறித்திறல் தனையே
பொன்னியும் காதலித்தாள் - இதனைப்
புலித்திறல் எதிர்த்தான்.
புகலும் செம்மறிதான் - வேடர்தம்
புலைச்சி யின்மகனாம்;
இகழத் தக்கவனாம் - அவனை
இவ்விடம் வைக்காமல்
அகற்றி விட்டார்கள் - இந்தநல்
அரண்மனைக் குடையார்.
மிக இரக்கமடி - நினைத்தால்
வெந்திடும் உள்ள" மென்றாள்.
"வேட்டுவ மங்கையிடம் - மறிதான்
வேந்தனுக் கேபிறந்தான்
நாட்டில் அவன்புலையன் - எனவே
நவிலல் என்னமுறை?
ஏட்டினில் உள்ளதுவோ? - தமிழர்
இனத்தில் வேற்றுமைதான்?
வேட்டுவர் மக்களன்றோ?" எனவே
விண்டனள் மின்னொளிதான்.
"தோட்டத்தில் ஆடியிரு - மகளே
தூயவை யத்திறலைக்
கேட்டு வருகின்றேன் - விரைவில்
கிள்ளையே வீட்டுக்" கென
நாட்டம் உரைத்தாளே - ஆண்டாளும்!
மின்னொளி நன்றென்றே
தோட்டம் புகுந்தாளே - அழகிய
தோகைமயில் கண்டாள்.

இடம்: அரண்மனைத் தோட்டம்.
நேரம்: காலை.
உறுப்பினர்: மின்னொளி, வையத்திறல்,
ஆண்டாள், மன்னி.


அகவல்
பசும்புற் பச்சைப் பட்டு விரித்த
விசும்பு நிகர்த்த விரிதரை தன்னில்
முல்லை படர்ந்துபோய், விளாவை அளாவச்
செல்வச் செழுமலர் கொன்றை திரட்டி
ஆயிரம் கிளைக்கையால் அளித்து நிற்க
வாயடங் காது மணிப்புள் பாடப்
புன்னை மலர்க்கிளை தென்றற் பூரிப்பொடு
மின்னொளி வருகென அழைக்க
அன்ன நடையாள் அணுகினாள் ஆங்கே.

வெண்பா
வளர்ப்பு மயில்தான் மரத்தடியில் ஓடிக்
களித்தாடக் கண்டு களித்தாள் - கிளிப்பேடு
கெஞ்சியது சேவற் கிளிவந் தருள்புரிய
வஞ்சியது கண்டாள் மகிழ்ந்து!
தனியிருக்கும் தாழ்பலவைக் கண்டாள்பின் வேரில்
கனியிருக்கக் கண்டு வியந்தாள் - இனியவாம்
"பூக்முகண்டாள் பூவில் புதியபண் பாடுகின்ற
பூக்கண்டாள் இன்பங்கண் டாள்.
கோணிக்கொம் பாட்டியசெங் கொத்தலரிப் பூக்கண்டாள்
மாணிக்கம் கண்டாள் மகிழ்கொண்டாள் - சேண்நிற்கும்
தென்னையிலே பாளை சிரிக்கச் சிரிக்கின்றாள்
புன்னையிலே போய்க்கண்டாள் முத்து.
மின்னொளி ஆங்கே வெயிலில் உலவுகின்றாள்
மன்னன் மகனோ தொலைவினிலே - நின்றபடி
கண்டு களிக்கின்றான் கட்டழகைத் தன்னுளத்தால்
உண்டு களிக்கின்றான் உற்று!
மான்கண்டு பூரிக்கும் மங்கையினை மன்னன்மகன்
தான்கண்டு பூரிப்பான்! தையல்நல்லால் - வான்கண்ட
செம்மா துளங்கண்டு சேல்விழிபூ ரிக்கஅவன்
அம்மா துளங்காண்பான் ஆங்கு!
கோவைக் கனிகண்டு கோவையிதழ் பூரிக்கும்
பாவைஎழில் கண்டு பதறுகின்றான் - பூவைதான்
மாங்கனிக்குத் தாவுகின்றாள் மன்னன்மகன் உள்ளம்அத்
தீங்கனிக்குத் தாவும் தெரிந்து.
மின்னிடையும் தானசைய மேலாடை யும்பறக்க
அன்னநடை போடும் அழகுகண்டும் - அன்னவளின்
பஞ்சேறு மெல்லடியைப் பாடாமல் தன்காதல்
நெஞ்சேற நின்றான் நிலைத்து.
தேசு வெயிலதுதான் தேக்குநிழற் கீழேபொற்
காசு கிடப்பதுபோல் காட்சிதர - மாசில்லால்
செங்காந்தட் கைமுகவாய் சேர்த்தாள் இளங்கோவாய்
அங்காந்தான் அண்ணாந்த வாறு.
அன்னோன் நிலையனைத்தும் அங்கவனைத் தேடிவந்த
மன்னி மறைந்திருந்து பார்க்கின்றாள் - மின்னொளிமேற்
கண்ணானான் பிள்ளை கருத்தழிந்தா னோஎன்று
புண்ணானாள் நெஞ்சு புகைந்து.
பூவையத் திறலே மகனே! திருவமுது
செய்யவா! செந்தீ விளைக்கின்ற - வெய்யில்
விழிபார்த்தல் தீமை விளைக்கும் அரசர்

வழிபார்த் திருக்கின்றார் வா!பூ
என்றுரைக்க மன்னி எதிரேதும் சொல்லாமல்
சென்றான் திறலோன் அரண்மனைக்கே - பின்னர்அங்கே
ஆண்டாளும் வந்தாள் அழைத்திட்டாள் தன்மகளை
மீண்டாள்தன் வீட்டுக்கு மின்.

இடம்: அரண்மனைத் தனியறை.
நேரம்: காலை.
உறுப்பினர்: புலித்திறல், புலித்திறல் மன்னி.


அகவல்
வேண்டுகோள் விட்டாள்; வேந்தன் வந்தான்.
பூஈண்டமர்க ஈண்டமர்க!பூ என்றாள் மன்னி
மன்னன் முகத்தை மலர்க்கையால் ஈர்த்தே
ஐயம் அடைந்தேன் என்றாள்.
வையத் திறலின் வகையுரைப் பாளே!
கலிவெண்பா
"பூக்காரி யின்மகளைப் பூங்காவில் நம்பிள்ளை
நோக்கிய நோக்கின் நிலையினைநான் - போய்க்கண்டேன்.
கீழ்மகளைப் பிள்ளைமனம் கிட்டிற்றா? அல்லதவள்
தாழ்நிலையி லேயிரக்கம் தட்டிற்றா? - வாழ்வில்
தனக்கு நிகரில்லாத் தையள்பால் பிள்ளை
மனத்தைப் பறிகொடுக்க மாட்டான் - எனினும்,
தடுக்குத் தவறும் குழந்தைபோல் காளை
துடுக்கடைந்தால் என்செய்யக் கூடும்? - வெடுக்கென்று
வையத் திறலுக்கென் அண்ணன் மகளைமணம்
செய்துவைத்தல் நல்லதெனச்" செப்பினாள் - துய்யதென்று
மன்னன் உரைத்தான்; மகனை வரவழைக்கச்
சொன்னான்; தொடர்ந்தாள்அம் மாது.

இடம்: அரண்மனைத் தனியிடம்.
நேரம்: முதிர்காலை.
உறுப்பினர்: புலித்திறல், மன்னி, வையத்திறல்.


அகவல்
மன்னனும் மன்னியும் மைந்தனை "நில்" என்று
கூறித் தமது கொள்கையைக்
கூறு கின்றார் சீறும்உளத் தோடே:
கண்ணிகள்
"மணம்செய்து கொள்ளுதல் வேண்டும் - உன்
மாமனின் பெண்ணை மணந்திட வேண்டும்;
இணங்கிட வேண்டும் இதற்கே - நீ

ஏதும் தடைசொல்ல லாகாது கண்டாய்.
அணுகும்உன் அன்னையின் அண்ணன் - பெற்ற
ஆரெழில் மங்கையை நீமணந் திட்டால்
வணங்குமிந் நானிலம் உன்னை" - என்று
மன்னவன் சொல்ல மறுத்துரைப் பான்சேய்:
"மணம்செய்து கொள்வது நானா? அன்றி
மாநிலம் ஆளும்இம் மன்னவன் தானா?
இணங்கிட வேண்டுமென் கின்றீர் - எனில்
என்மன மோமணம் ஒப்பிட வில்லை.
அணங்கினை மாமனின் பெண்ணை - எனை
அச்சுறுத் திப்பெறு மாறு புகன்றீர்.
வணங்குகின் றேன்தந்தை தாயே - நான்
மணம்புரி யேன்" என்று செம்மல் மறுத்தான்.
காவலர் தம்மை அழைத்தான் - மன்னன்
கட்டுக இங்கிவன் கைகளை என்றான்.
ஆவல் மறுத்ததி னாலே - என்றன்
ஆணைக்குக் கீழ்ப்படி யாததி னாலே
காவற் சிறைக்கிவன் செல்க - என்றன்
கட்டளை தன்னை மறுத்திடு வீரேல்
சாவது மெய்யென்று சொன்னான் - அந்தத்
தறுகண்ணர் செம்மலைச் சிறையினிற் சேர்த்தார்.
வையத் திறல்சிறை சென்றான் - பின்னர்
மன்னவன் தன்மனை யாளிடம் சொல்வான்:
"பையனை விட்டுவைத் திட்டால் - அந்தப்
பாவையைக் கூட்டி நடந்திடல் கூடும்.
வையம் பழித்திடு முன்னே - அவன்
மனது திரும்பிடும் என்று நினைத்தே
வெய்ய சிறைதன்னில் வைத்தேன்" - என்று
வேந்தன் உரைத்தனன். மன்னி மகிழ்ந்தாள்.

இடம்: அரண்மனையில் வையத்திறல் அறை.
நேரம்: முன்மாலை.
உறுப்பினர்: அழகன், மன்னி, மன்னன்.


அகவல்
அழகன், வையத்திறல் அறைக்குச் சென்றான்
முழுதும் ஆய்ந்த விழிகள் ஏமாந்தன;
புலித்திறல் மன்னிபால் போனான்
நலிப்புடன் அவளிடம் நவில லாயினனே.
கண்ணிகள்
"வையத் திறல்வந்த துண்டோ? - அன்னாய்
மற்றெங்குச் சென்றனன் சொல்வாய்?
வெய்யில் கொதிக்கின்ற நேரம் - அவன்

வேறெங்கும் சென்றிட மாட்டான்;
துய்யவன் தன்னறை பார்த்தேன் - அங்கும்
தோன்றலை நான்காண வில்லை
எய்தநல் அம்பினைப் போலே - உடன்
இங்குவந்தேன்" என்று சொன்னான்.
"ஆண்டாள் மகள்மீதில் அன்பால் - என்றன்
அண்ணனின் பெண்ணை மறுத்தான்.
பூண்டான் பெரும்பழி தன்னை! - மனம்
புண்படச் செய்ததி னாலே
ஈண்டு சிறைப்பட லானான் - அவன்
எண்ணம் திருந்திட வேண்டும்.
யாண்டும் இதைச்சொல்ல வேண்டாம் - இது
என்ஆணை" என்றனள் மன்னி.
"இப்பிழை செய்திட வில்லை - நெஞ்சம்
ஏந்திழை மேல்வைத்த தில்லை.
செப்புவ துண்மைஎன் தாயே - அவன்
சிறையிடை வாழ்வது முறையோ?
கற்பது தான்அவன் நோக்கம் - பின்னர்
கடிமணம் செய்வது நோக்கம்;
மெய்ப்பட வேஉரைக் கின்றேன் - அவன்
மீளும்வகை செய்க" என்றான்.
மன்னனும் அவ்விடம் வந்தான் - அந்த
மன்னவன் மைந்தனின் நண்பன்
பின்னும் உரைத்திட லானான்: - புஉன்றன்
பிள்ளையின் மேற்பிழை யில்லை
மின்னொளி மேற்கருத் தில்லை - அவன்
வெஞ்சிறை வாழ்வது நன்றோ?மு
என்றுரைத் தேநின்ற போது - மன்னன்
"என்அழ காஇது கேட்பாய்.
அன்னவன் உள்ளக் கிடக்கை - நானும்
ஆய்ந்திட வேண்டும் அதற்குள்
உன்மொழி நம்பிட மாட்டேன் - அவன்
உற்ற சிறைமீட்க மாட்டேன்.
இன்ன நிகழ்ச்சிகள் யாவும் - நீயே
எங்கும் உரைத்திட வேண்டாம்மு
என்றான் புலித்திறல் மன்னன் - சரி
என்றுரைத் தான்அழ கன்தான்.

இடம்: சிறைக்கூடம்.
காலம்: முன்னிரவு.
உறுப்பினர்: வேல்விழி, சிறைக்காவற்காரன், வையத்திறல்.

அகவல்
சிறையில் வையத் திறலிருக் கின்றான்.

காவற் காரன் கடிது சென்று
"மின்னொளி பார்க்க வேண்டு மென்றாள்"
என்று சொன்னான். "இட்டுவா இட்டுவா"
என்றான் இளங்கோ! ’வேல்விழி’ யாளவள்
முகமலர் மறைய முக்கா டிட்டு
விரைந்தாள்! இரும்பு வேலிப் புறத்தே
இருக்கும் செம்மல் இருவிழி மலர்ந்தே
"மின்னொளி மின்னொளி விளையாடும் மயிலே!
உன்மேல் வைத்த காதல் உளவறிந்து
மன்னவன் என்னைச் சிறையில் வைத்தான்!
என்றன் உயிரே வாவா!" என்றனன்.
"மின்னொளி அன்றுநான்; வேல்விழி அன்றோ
என்னை மணந்துகொள்" என்றாள்.
மன்னவன் மகனின் உள்ளம் எரிந்ததே.
கண்ணிகள்
"என்னெதிர் நிற்கவும் வேண்டாம் - இங்
கேதும் புகன்றிட வேண்டாம்.
உன்னை மணந்திட மாட்டேன் - நீ
ஒட்டாரம் செய்திட வேண்டாம்.
மின்னொளி என்னுயிர்" என்றான் - வந்த
வேல்விழி ஓடி மறைந்தாள்.

இடம்: சிறைக்கூடம்.
நேரம்: இரவு.
உறுப்பினர்: புலித்திறல், வையத்திறல், அழகன்.


அகவல்
வையத் திறலை மன்னன் அணுகினான்.
சிறையின் கதவு திறக்கப் பட்டது.
புலித்திறல் புகுந்தான் புதல்வனைப் பற்றி
வலிதில் இழுத்து மண்ணிற் சாய்த்துச்
சாட்டையாற் கைகள் சலிக்க அடித்தான்.
"ஆட்படும் இனத்தின் அணங்கை மணப்பதா?
வாட்படை மன்னரின் மாண்பைக் குறைப்பதா?
மின்னொளி தன்னை வெறுப்ப தாகவும்
வேல்விழி தன்னை விரும்புவ தாகவும்
விளம்பும் வரைக்கும் மீள மாட்டாய்."
என்று கூறி மன்னன் ஏகினான்.
அழகன் உணவுடன் அங்கு வந்தான்.
குருதிப் பெருக்கில் கொற்ற வன்மகன்
கிடந்தது கண்டு நடுங்கி, புஅன்பனே
எவரால் நேர்ந்த இன்னல் ஐயோ!மு
என்று பதறினான். இளங்கோ, "அழகனே
வேல்விழி தன்னை வெறுத்ததால் என்னைத்
தந்தை சாட்டையால் அடித்தார்" என்றான்.
அழகன் அவ்வுரை கேட்டே
29
அழற்படு நெஞ்சுடன் சென்றான் அயலிலே.
25
இடம்: திறல்நாட்டின் நகர்ப்புறம்.
நேரம்: நள்ளிரவு.
உறுப்பினர்: பெருநாட்டின் ஒற்றர், அழகன்.
அகவல்
அனல்பட்டுத் தாண்டுவான் போலும் அழகன்,
பெருநாட்டின் ஒற்றர் எதிரில்
விரைந்தோடி நின்றான் விளம்புகின் றானே:
ப·றொடை வெண்பா
"பெருநாட்டான் பெற்ற பெருந்திருவை அன்றி
ஒருநாட்டு மங்கையையும் நான்மணக்க ஒப்பேனே
என்றுரைத்தான் மன்னன்மகன் என்ன பிழையிதிலே?
அன்றே சிறைவைத்தான் ஆணழகை அவ்வரசன்
காட்டுமலை யன்மகளைக் கட்டிக்கொள் என்றுசொல்லிச்
சாட்டையினால் சாகப் புடைக்கின்றான் தன்கையால்!
செங்குருதிச் சேற்றில் சிறையில் மடிகின்றான்.
எங்கிதனைச் சொல்வேன் இரக்கம் உமக்கிலையோ?
அஞ்சல் எழுதிவிட்டான் ஆட்களையும் போகவிட்டான்!
வஞ்சியொடும் அந்த மலைவேந்தன் வந்திடுவான்.
ஏழெட்டு நாளிலந்த ஏந்திழையைத் தான்மணந்து
வாழட்டும் அல்லதவன் மாயட்டும் என்கின்றான்.
பெண்ணில் பெருந்திருவை யான்மணப்பேன் அல்லாது
மண்ணில் மறைந்திடுவேன் என்கின்றான் மன்னன்மகன்."
என்றே துடித்தான் அழகன்! இதுகேட்டு
நின்றிருந்த ஒற்றர் நெடுமூச் செறிந்தவராய்,
"இங்கிதனை யாரிடத்தும் சொல்லாதே. நாளைக்கே
அங்குள்ள எங்கள் அரசர் பெரும்படைதான்
பொங்கும் கடல்போற் புறப்பட்டு வந்துவிடும்!
மங்காத நெஞ்சத்து வையத் திறல்மீள்வான்!
அன்றே பெருந்திருவை அன்னோன் மணந்திடலாம்.
இன்றே இதோநாங்கள் செல்கின்றோம்" என்றுரைத்தே
தம்குதிரை மேலேறித் தட்டினார்! நல்லழகன்
அங்கே மகிழ்ந்திருந்தான் அன்று.
26
இடம்: ஏரிக்கரை.
நேரம்: காலை.
உறுப்பினர்: மண்ணெடுப்போர், அழகன்.
அகவல்
ஏரி தூர்க்குமண் எடுப்பார் பல்லோர்
ஆங்கே அழகன் சென்றுதன்
தாங்காத் துயரம் சாற்றினான் மிகவே.
30
எண்சீர் விருத்தம்
"ஏரியிலே மண்ணெடுத்துக் கரைஉ யர்த்தும்
தோழர்களே! இப்பெரிய நாட்டின் ஆணி
வேரினிலே பெருநெற்றி வியர்வை நீரை
விட்டுவளர்த் திடுகின்ற நாட்டு மக்காள்!
ஊரினிலே தெருவினிலே வீட்டில் எங்கும்
உம்உழைப்பைப் பொன்னெழுத்தால் காண்ப தன்றி
ஆரிங்கே உழைத்தார்கள்? அரசன் என்போன்
அரசியொடு பொன்னூசல் ஆடு கின்றான்.
சடுகுடுவென் றேநெய்வீர் கந்தை யில்லை
தார்வேந்தன் கட்டுவது சரிகை வேட்டி!
கடல்நடுவில் முத்தெடுப்பீர்; கஞ்சி யில்லை!
கடனறியா வேந்துக்கு முத்துத் தொங்கல்!
மடுப்புனலும் செங்குருதிப் புனலும் வார்த்து
வளவயலில் களையெடுத்துக் காத்த செந்நெல்
அடுக்களையில் கண்டீரோ! அரசன் வீட்டில்
ஆன்நெய்யில் சீரகச்சம் பாமி தக்கும்!
எவன்படைத்தான் இந்நாட்டை? இந்த நாட்டை
எவன்காத்தான்? காக்கின்றான்? காப்பான்? கேளிர்!
தவழ்ந்தெழுந்து நடந்துவளர் குழந்தை போலும்
தரை,வீடு, தெரு,சிற்றூர், நகரம் ஆக
அவிழ்ந்ததலை முடிவதற்கும் ஓயாக் கையால்
அணிநாட்டைப் பெற்றவர்கள் கண்ணு றங்கிக்
கவிழ்ந்திடஓர் ஈச்சம்பாய் இல்லை. தங்கக்
கட்டிலிலே ஆளவந்தார் நாயு றங்கும்!
சிற்றூரில் ஆயிரம்பேர் செழுந கர்க்குள்
திகழ்பன்னூ றாயிரம்பேர் விழுக்கா டாக
முற்றுமுள நாட்டிலுறு மக்கள், எண்ண
முடியாத தொகையினர்கள்; அவர்கள் எல்லாம்
கொற்றவரின் பார்ப்பனரின் விரல்விட் டெண்ணும்
குடும்பங்கள் இடும்பணிக்குத் தலைவ ணங்கிக்
குற்றேவல் செயப்பிறந்தார் என்றார். மற்றும்
கொழுக்கட்டை யாய்ப்பிறந்தோம் நாங்கள் என்றார்.
மின்னொளிமேல் மன்னன்மகன் எண்ணம் வைத்தான்.
மின்னொளியோ நம்மவரின் பெண்ணே! அந்த
மின்னொளிதான் மிகத்தாழ்ந்த சாதிப் பெண்ணாம்!
மின்னொளியைத் தன்மைந்தன் எண்ணும் போதே
மன்னனென்னும் தன்சாதிக் கிழிவா யிற்றாம்!
மன்னன்மகன் சிறையினிலே வைக்கப் பட்டான்.
தன்சாதிக் குமிழிகளை நிலைஎன் கின்றான்
தடங்கடலின் மக்களினம் தாழ்வென் கின்றான்.
மக்களிலே தாழ்வுயர்வே இல்லை என்று
மன்னன்மகன் எண்ணுவதும் பிழையாம். அன்றோ,
31
கக்குமுடற் குருதியிலே சேய் மிதக்கக்
கைச்சாட்டை ஓயுமட்டும் அடித்தான் மன்னன்.
மிக்குயர்ந்த சாதிகீழ்ச் சாதி என்னும்
வேற்றுமைகள் தமிழ்க்கில்லை, தமிழர்க் கில்லை.
பொய்க்கூற்றே சாதியெனல், ஆரி யச்சொல்
புதுநஞ்சு! பொன்விலங்கு! பகையின் ஈட்டி!
"கடற்குமிழி உடைந்திடுக! சாதி வீழ்க!
கடல்மக்க ளிடைவேந்தர் மறைந்து போக
குடியரசு தழைக!முஎன அழகன் சொல்லிக்
கொடுவழியைத் தாண்டிஅயற் புறத்தே சென்றான்.
நெடிதுழைப்போர் மேடழித்தே உணர்ச்சி என்னும்
நீர்மட்டம் கண்டார்கள். புஉழைத்த நாளுக்
கடைகூலி காற்பொன்னே! மாதந் தோறும்
ஆள்வாருக் கறுபதினா யிரம்பொன்" என்றார்.
27
இடம்: அரண்மனையில் காவலறை.
நேரம்: காலை.
உறுப்பினர்: செம்மறித்திறல், பொன்னி, காவற்காரர்,
படைமறவர், மன்னன்.
அகவல்
உணவு வட்டில் ஒருகையில் மறுகையில்
குடிநீர்ச் செம்பும் கொண்டு, காவல்
அறையில் பொன்னியை அணுகினான் ஒருவன்.
நிறைநி லாமுகம் நிலத்திற் கவிழக்
கருங்குழல் அவிழக் கண்நீர் உகுக்க
இருளிற் கிடந்த பொன்னி எழுந்தாள்.
"செம்மறித் திறல்நான்" என்ற தீங்குரல்
மெல்லெனப் பொன்னி காதில் விழுந்ததே!
அவள்அவன் அணைப்பும் பிணைப்பும் ஆனார்
உள்ளம் இரண்டும் உலகை மறந்தன.
வாயிலோர், "அழகன் வராததேன் வெளியில்?
போயினான் என்ன புரிந்தான் இன்னும்?"
என்றனர்; ஐயம் எய்தினர். ஒருவன்
அறைக்குள், ஒருகண் அரைமுகம் சாய்த்தான்.
இரண்டுடல் ஒன்றிலொன் றிறுகுதல் கண்டான்.
அவன்பதைத் தோடினான் அரச னிடத்தில்!
அரசன் மறவர் ஒருசில ரோடு
விரைவில் வந்தான். "வெளியில் வருவீர்
இருவரும்" என்று பெருங்குரல் பாய்ச்சினான்.
அழகன் உடையில் அங்குச் செம்மறி
மழமழ வென்று வந்து நின்று
கொழகொழ வென்று சிலசொற் கூறினான்.
முக்காடு நீக்கி முடியரசன் கண்டான்
செம்ம றித்திறல் செழுமலர் முகத்தை!
"இவனைக் கட்டி இழுத்துச் செல்க
32
சிறைக்கென்று மன்னன் செப்பினான். மறவர்
அவ்வாறு பிணித்தே அழைத்துச் சென்றனர்.
காவலிற் பொன்னியைக் கண்ணால் வெதுப்பிப்
"புலைச்சி மகனைப் புணர்ந்த புலைச்சி
கொலைக்குக் காத்திரு" என்று
நிலத்திடி எனவேந்து நேர்நடந் தானே.
28
இடம்: அரண்மனைவாயில், தெருக்கள், தொழிற்சாலை.
நேரம்: காலை முதல் இரவு வரைக்கும்.
உறுப்பினர்: அழகன், தோழிமார், தெருவினர், தொழிற்சாலையினர்.
இணைக்குறள் ஆசிரியப்பா
தூய்மொழி என்னும் தோழி, அரண்மனை
வாயிலில் நின்றாள்.அவளை,
அழகன் அணுகிக் கூறு கின்றான்:
"நாமெலாம் தாழ்ந்தவர், தாமெலாம் உயர்ந்தவர்"
என்று மன்னர் இயம்பினார் அன்றோ?
நம்மில் ஒருத்தியை அம்மன்னர் மகன்
மணக்க நினைத்தான் என்று
சிறையில் வைத்ததும் தெரிந்தாய் அன்றோ?
மன்னியின் தங்கையாம் பொன்னிசெம் மறியை
மணக்க நினைத்ததால் மாளப் போவதை
அறிவா யன்றோ?
செம்மறித் திறலும் சிறையில் உள்ளான்
அம்மங் கைதனை அணுகிய தாலே
கண்டாய் அன்றோ?
தன்மா னத்தைத் தமிழர் இழப்பதா?
பொன்னே தரினும் மன்னன் அரண்மனை
வாயிலை மிதிப்பதும் தீயதேமு
என்றான் அழகன்.
புருவம் நெற்றி ஏற இருவிழி
எரியைச் சொரிய "என்போன் றார்க்கும்
இங்கென்ன வேலை?" என்றே
அங்கிருப்போரை அணுகினாள் விரைந்தே!
சிலநா ழிகையில்,
தோழிமார் அரண்மனை துறந்தனர்;
பணிப்பெண் டிர்கள் பறந்தனர்.
காவலர் போயினர்;
பாவலர் எட்டியும் பாரோம் என்றனர்;
மெய்க்காப் பாளரும் வீடு திரும்பினர்.
அடுக்களை ஆக்குநர் இல்லை.
அரண்மனை இவ்வாறாகத் --
தெருவெலாம் தெருவின் வீடெலாம், வீட்டின்
விருந்தினர் பொருந்தினோர் வருந்த லானார்.
பிறப்பில் தாழ்ந்தது பெருமக்கள் கூட்டமா?
33
பிறப்பில் உயர்ந்ததச் சிறிய கூட்டமா?
என்றே ஆர்த் தார்த்து விழுந்தனர் --
ஆலைத் தொழிலினர் அங்கொரு பாங்கில்
"கூலிக் கென்றே ஞாலத்தில் பிறந்தோம்
கோலைத் தாங்கியே பிறந்தனர் கொற்றவர்
என்றனன்; மன்னன் வீழ்க!
என்றனர்; பார்ப்பனர் வீழ்க!"
என்று கூவினர்.
மனத்தாங் கல்கள் வளர்ந்தன!
இனத்தின் எழுச்சி நாடெலாம் எழுந்ததே.

இடம்: அரண்மனைக் கூடம்.
நேரம்: காலை.
உறுப்பினர்: புலித்திறல், மன்னி, பார்ப்பனர், அழகன்.


இணைக்குறள் ஆசிரியப்பா
"யாமிட்ட சோறுகறி எப்படி" என்று
நாட்டு மன்னனைக் கேட்டனர் பார்ப்பனர்.
"நன்று மிகவும்" என்றான் மன்னன்.
மேலும் மன்னன் விளம்புவான்:
"தாழ்ந்தவர் தம்மில் ஒன்று சேர்ந்தனர்.
உயர்ந்தவர் நாமும் ஒன்று சேர்ந்தோம்"
என்றான். பார்ப்பனர்,
"இப்படி விடுவதும் ஏற்ற தல்ல.
தாழ்ந்தவர் போக்கைத் தடுக்க வேண்டும்
அவர்களின் நன்மைக் காகவே!
அவர்மேல் படையை அனுப்ப வேண்டும்
அவர்கள் நன்மை கருதியே!
அரண்மனை வேலையை அவர்கள் மறுத்தது
குற்றமன்றோ?
பொறுக்க லாமோ, ஒறுக்க வேண்டும்
அவர் நன்மைக்கே!
அவர்களில்
ஓரா யிரம்பேர் ஒழிந்துபோ கட்டுமே
மற்றவர் வழிக்கு வருவா ரன்றோ?
திருத்த வேண்டும்; திருந்துவர்.
மக்களைத் திருத்தல் மன்னன் கடமை!
மனுநூல் நாட்டில் வழங்க வேண்டுமே
அதற்குப்
பார்ப்பனர் காப்பாற்றப் படுதல் வேண்டும்
ஆள்வோர் பார்ப்பனர் சொற்படி
ஆள வேண்டும்.
விளை பொருள் விற்பவர் வேண்டும்
வளவயல் உழவும், குளச்சே றெடுக்கவும்
இரும்ப டிக்கவும் கரும்பு நடவும்

உப்புக் காய்ச்சவும் தப்ப டிக்கவும்
சுவர் எழுப்பவும் உவர்மண் எடுக்கவும்,
பருப் புடைக்கவும் செருப்புத் தைக்கவும்
மாடு மேய்க்கவும் ஆடு காக்கவும்,
வழிகள் அமைக்கவும் கழிவடை சுமக்கவும்
திருவடி தொழுதுநம் பெருமை காக்கவும்
வரும்படி நமக்கு வைத்து வணங்கவும்
நாலாம் வகுப்பு நமக்கு வேண்டுமே"
என்றனர்.
"படைத் தலைவரைக் கடிதில் அழைப்பிக்க"
என்றான் மன்னன்.
குதித் தோடினான்ஒரு குள்ளப் பார்ப்பனன்.
பார்ப்ப னர்பால் பகர்வான் மன்னன்:
"அரண்மனை வேலைகள் அனைத்தும் நீவிர்
பார்த்திட வேண்டும். பணியா ளர்கள்
வரும் வரைக்கும்" என்ன,
"அடடா! செருப்புத் துடைப்பது முதல்
அடுப்புத் தொழில்வரை நடத்துவோம்" என்றனர்.
பார்ப்பன ஆடவர் பார்ப்பனப் பெண்டிர்
அனைவரும் பணிசெய அரண்மனை வந்தனர்.
மன்னனும் மன்னியும் மகிழ்ந்தி ருந்தனர்.
அழகன் வந்தான்.
"எங்குவந் தாய்?" என எரிந்தான் மன்னன்
"செம்மறித் திறலும் சேல்விழிப் பொன்னியும்
பொன்னூசல் ஆடிப் பொழுதுபோக்கு கின்றார்.
வையத் திறலோ
மாசுடை நீக்கித் தேசுடை அணிவான்
ஏனெனில்,
ஆண்டா ளானதன் அன்பு மாமி
மாப்பிள்ளை பார்க்க வருகின் றாளாம்"
என்றான்.
மன்னி அழுதாள். மன்னவன் சீறி
"இவர்கள் சிறையினின் றெப்படி வந்தனர்?"
என்று கேட்டான்.
"காவலர் எவரும் காணேன் அங்கே?"
என்றான் அழகன்.
"எப்படி வரலாம் இவர்கள்?" என்று
மன்னன் கேட்டான்.
"அவர்களைக் கேட்க வேண்டும். அவர்கள்
வாளைக் கையில் வைத்திருக் கின்றனர்"
என்றான் அழகன்.
பார்ப்பனர் தம்மைக் கூப்பிட்டு மன்னன்,
"வையத்திறலை, மறியை, வஞ்சியைக்
கடுஞ்சிறை வைத்துக் காவ லிருங்கள்.
என்றன் ஆணை இது" வெனக் கூறினான்.
"புல்லேந்து கையில் வில்லேந்து வோம்யாம்"

என்று பார்ப்பனர் இயம்பினர்.
மகிழ்ச்சி என்றான் மன்னன்.
"ஆயினும்,
மல்லேந்து மன்னர்க்குச் செல்வாக் கில்லையே
எப்படி அதுசெய ஏலும்?" என்றனர்.
அழகன் சிரித்தான்.
நன்றென மன்னன் இஞ்சி
தின்ற குரங்குபோல் திகைத்தான் குந்தியே.

இடம்: அரண்மனை.
நேரம்: காலை.
உறுப்பினர்: படைத்தலைவன், மன்னன்.


அகவல்
தாங்கா ஆவலில் தன்படைத் தலைவனை
ஆங்கெதிர் பார்த்தமர்ந் திருந்தான் அரசன்
அன்னவன் வந்து வணங்கினான்.
தன்ஆணை மன்னன் சாற்றுவான் மிகவே:
அறுசீர் விருத்தம்
"விரைந்துசெல்! மானம் காப்பாய்
அரண்மனை வேலைக் காரர்
புரிந்தனர் தீமை விட்டுப்
போயினர் காவ லர்கள்
பிரிந்தனர் சிறை திறந்து
பெயர்ந்தனர் குற்றம் செய்தோர்!
விரைந்துசெல் பணியா ளர்கள்
வேண்டும்இப் போதே" என்றான்.
மேலுமே உரைப்பான் மன்னன்:
"வெந்திறல் மறவர் தம்மை
வேலொடு தெருவி லெல்லாம்
நிறுத்திவைத் திடுதல் வேண்டும்.
வாலசைத் திடுவார் தம்மை
மண்ணிடைப் புதைக்க வேண்டும்.
தோலினை உரிப்பாய் நம்மைத்
தூற்றுவார் தம்மை" என்றான்.
படைத்தலை வன்பு கல்வான்:
"படைசார்ந்த மறவர் எல்லாம்
கடைச்சாதி என்று நாமே
கழறிய துண்டோ?" என்றான்.
விடுத்தஇவ் வினாவைக் கேட்ட
வேந்தனும், "ஆம்ஆம்!" என்றான்.
"கெடுத்தனிர் அரசே அந்தக்
கீழ்மக்கள் வருந்தி னார்கள்.

ஆயினும் அவர்கட் கான
ஆறுதல் கூறு கின்றேன்
போயினி நீங்கள் சொன்ன
செயலினைப் புரிய வேண்டும்.
நாயினும் தாழ்ந்தா ரேனும்
நாட்டினிற் பெருங் கூட்டத்தார்!
பாயுமேல் மக்கள் வெள்ளம்
நம்மாள்வார் பறக்க வேண்டும்."
உயர்சாதிப் படைத் தலைவன்
இங்ஙனம் உரைத்துச் சென்றான்.
துயர்பாதி அச்சம் பாதி
தொடர்ந்திடத் துக்க மென்னும்
அயலுல கடைந்தான் மன்னன்
உணவுண்ணான் அவன் விருப்பம்!
கயல்மீனும் சோறும் பார்ப்பார்
கட்டாயம் உணவாய்க் கொண்டார்.

இடம்: அரண்மனை.
நேரம்: காலை.
உறுப்பினர்: ஆளும்சாதி, அதிகாரிகள், அரசன்.

அகவல்
ஆளும் சாதியார் அதிகா ரத்தினர்
வாளும் கையுமாய் வந்து மன்னனை,
"நாலாஞ் சாதியும் மேலாஞ் சாதியும்
ஆலும் விழுதும் ஆவார். இதனை
நாமறி வோமே, அறிந்தும்இத்
தீமை புரிந்தது தீமை" என் றாரே!
அறுசீர் விருத்தம்
"நேர்ந்திட்ட நிலைமை தன்னை
நிகழ்த்துவேன் உறவி னோரே,
சார்ந்திட்ட ஆண்டாள் என்னும்
பூக்காரி தன்பெண் ணாளைத்
தேர்ந்திட்டான் மணமே செய்யத்
திருமகன்" என்றான் மன்னன்!
ஆர்ந்தது விழியிற் செந்தீ;
"ஐயையோ!" என்றார் வந்தோர்.
"அன்றியும் என் கொழுந்தி
செம்மறித் திறலை அண்டி
நின்றனள். சிறையில் வைத்தேன்.
நிலைகெட்ட செம்ம றிக்கும்
பன்முறை சொன்னேன் கேளான்;
படுசிறை என்றேன். மேலும்
என்பிள்ளை என்றும் பாரேன்

சிறையினில் இருக்கச் செய்தேன்.
"பணியாளர் தோழி மார்கள்
இதையெல்லாம் பார்த்தி ருந்தார்
அணியணி யாகச் சென்றார்
அரண்மனை வேலை விட்டே!
துணிவுடன் நகரைக் கூட்டித்
தூற்றினார் மேல் வகுப்பை!
பணிவுடன் பணிகள் செய்து
பார்ப்பனர் உதவு கின்றார்.
"அரண்மனைப் பின்பு றத்தே
அம்மறித் திறலும், பொன்னி
ஒருத்தியோ டுள்ளான். என்றன்
உயர்மைந்தன், பணிப் பெண்ணாளைத்
திருமணம் புரிய வேண்டி
ஆவன செய்கின் றானாம்.
அருஞ்சிறைக் காவல் இல்லை
அனைவரும் இவ்வா றானார்."
என்றனன் மன்னன். இந்த
இழிவினைக் கேட்டி ருந்த
மன்னரின் மரபி னோர்கள்
வாளொடு கிளம்பி னார்கள்.
"புன்றொழில் புரிந்து ளாரைப்
புதைக்கின்றோம்" எனக் கொதித்தார்.
சென்றனர், "சாதி வாழ்க
தீயர்கள் வீழ்க!" என்றே.
போயினார் அரண் மனைக்குப்
புறக்கட்டில் அவர்கள் இல்லை.
தீயர்கள் மறைந்தார் என்று
செப்பினார். அரசன் கேட்டு
நாயினை ஒப்பா ரோடு
நகரினிற் கலகம் செய்யப்
போயினார். போவீர் என்றான்
அஞ்சினர் பொய்கை யாள்வார்.

இடம்: திறல்நாட்டு நகர்.
நேரம்: காலை.
உறுப்பினர்: அரசன், படைத்தலைவன், பெருமக்கள்.


அகவல்
"பெருநாட் டுப்படை, திருநாடு தன்னை
முற்றுகை யிட்டதே முற்றுகை யிட்டதே!"
என்று கூவினர் எங்கணும் மக்கள்!
தீமை குறித்தது செழுநகர்ப் பெருமணி!
அரசன் படையை அழைத்தான் விரைவில்!

படையின் தலைவன் பரபரப் புற்றான்
தேர்ப்படை ஒன்று சேர்ப்பீர் என்றான்
பரிப்படை எழுக என்று பகர்ந்தான்
யானைப் படையும் எழுக என்றான்
காலாட் படையும் காண்க என்றான்
நாலாஞ் சாதியார் நாமாட்டோம் என்றனர்
மூன்றாஞ் சாதியார் முணுமு ணுத்தனர்
இரண்டாஞ் சாதியார் இருநூறு பேர்கள்
திரண் டெழுந்தனர் மருண்ட நெஞ்சொடு
முதன்மைச் சாதியார் மூக்கைப் பிடிக்க
அரண்மனைச் சோற்றை அருந்துவ தன்றி
போரே யணுகோமே "நமோ
நாராயணா" என்று நவின்றுசென் றனரே.

இடம்: நகரின் நடுவில் ஓர் பெருவெளி.
நேரம்: இரவு.
உறுப்பினர்: வையத்திறல், செம்மறித்திறல், பெருமக்கள்.

அகவல்
நாட்டு மக்கட்கு நல்வழி காட்டச்
சேய்வை யத்திறல், செம்ம றித்திறல்
சொற்பெருக் காற்றுவர் என்று
நற்பெரு மக்கள் நண்ணினார் ஆங்கே.
எண்சீர் விருத்தம்
மேடையின்மேல் ஏறிநின்றான் மன்னன் மைந்தன்
விருப்பத்தால் நகரமக்கள் வாழ்க என்றார்
வாடாத மலர்முகத்தான் வணக்கம் கூறி
"மாண்புடையீர், திறல்நாட்டு மக்காள், கேளீர்!
பீடுடைய நம்திறல்நா டதனை நோக்கிப்
பெருநாட்டான் பெரும்படையைக் கூட்டி வந்தான்
வாடிடநாம் முற்றுகையும் போட்டு விட்டான்
மன்னவரின் அதிர்வெடியில் மருந்தே யில்லை.
பிரமன்முகம் தனில்நான்கு வகையாம் மக்கள்
பிறந்தாராம். பார்த்தாராம் என்றன் தந்தை.
பிரமன்முகந் தனிற்பார்ப்பார் பிறந்திட் டாராம்
பிரமன்தோள் பெற்றதுவாம் மன்னர் தம்மை;
பிரமனிடை தனிற்பிறந்தார் வாணி கர்கள்;
பிரமனடி யிற்பிறந்தார் உலகி லுள்ள
பெருமக்கள். இதுமனுநூல் ஆரியர் சொல்
பிழைக்கவந்த ஏமாற்றுக் காரர் சூழ்ச்சி.
அரசன்மகன் உங்களினப் பெண்ணை நத்தல்
அடுக்காதாம். அதற்கென்னைச் சிறையில் வைத்தான்.
அரசன்எழிற் கொழுந்தியார் என்சிற் றன்னை
அகம்பறித்தார் செம்மறியார் அதுவும் குற்றம்
39
பெருஞ்சிறையில் மூவருமே அடைக்கப் பட்டோம்
பெருமக்காள் இதையறிந்தீர். தன்மா னத்தால்
வருந்துகின்றீர் ஆள்வோர்பால் ஒத்து ழைக்க
மறுத்துவிட்டீர் வாழ்கநீர்! வாழ்க வாழ்க!
பெருநாட்டான் படையெடுப்பைத் தகர்க்க வேண்டும்
பெருமறவர் கூட்டமே வாரீர் என்று
திருநாடாம் திருநாட்டின் மன்னர் சென்று
திருமுழங்காற் படியிட்டுக் கெஞ்ச லானார்.
வரமாட்டோம் எனமறவர் மறுத்து விட்டார்
வாழ்கநனி வாழ்கஅவர் வாழ்க வாழ்க!
இருசாதி தான்மீதி மன்னர் கையில்
இவர்சாதி ஒன்று!மற்றொன் றினாம்தார் கூட்டம்!
அரண்மனையின் அறைக்குள்ளே வாள்சு ழற்ற
அட்டியில்லை என்றததோ அரசச் சாதி!
பிரமனார் திருமுகத்துப் பெருங்கா யங்கள்
பெண்டாட்டி பிள்ளையுடன் அரண்ம னைக்குள்
பெருநாட்டான்அருள்பெற்று விபீ„ ணன்தான்
பெற்றபயன் பெறுவோமே எனக்க யிற்றை
அருணாச லப்பெரும்பு ராணம் சாத்தி
அவனடியே உய்யும்வழி என்கின் றார்கள்.
மேற்சாதி யார்நிலைமை இவ்வா றாக
மேலும்நாம் செயத்தக்க தின்ன தென்று
சேற்கருங்கண் பொன்னியார்க் கன்ப ரான
செம்மறியார் என்னருமைச் சிறிய தந்தை
சாற்றிடுவார் கருத்தோடு கேட்பீர்மு என்று
தன்னுரையை முடித்தமர்ந்தான் மன்னர் மைந்தன்.
"மாற்றுயர்ந்த பொன்போன்ற திறல்நாட் டாரே
வணங்குகின்றேன்" என்றுரைத்து மறிபு கல்வான்:
"திறல்நாட்டின் மேல்வந்த பெருநாட் டானைச்
சிதறடிக்க வேண்டுமெனச் செப்பு கின்றீர்.
பொறுத்திருங்கள்! பெருநாட்டான் வரட்டும் உள்ளே
போடட்டும் தன்கொடியை! மகிழ்ந்தி டட்டும்
வெறுக்காதீர் படைமறவர் விளையா டட்டும்
வெற்றிவிழாக் கொண்டாட்டம் நடந்தே றட்டும்.
திறல்நாட்டின் நம்மறவர் தமக்கும் இந்தத்
திட்டத்தை நன்றாகச் சொல்லி வைப்பீர்.
தனித்தனியே பகைமறவர் தம்மைக் கண்டு
தாழ்சாதி எனநம்மேல் உயர்ந்தோர் வைத்த
மனப்போக்கை அவர்மனத்தில் ஏற்ற வேண்டும்;
மற்றவற்றை யாமுரைப்போம் அவ்வப் போதில்.
இனத்தோடே இனம்சேரும்! ஆளும் சாதி
இங்குள்ள ஆளுஞ்சா தியையே சேரும்.
அனைத்துள்ள கோல்கொண்டார் நூல்கொண் டாரை
ஆட்கொள்ள வேண்டியவர் நாமே" என்றான்.
40
(கூட்டம் முடிந்தது.)
34
இடம்: திறல்நாடு, நகர்.
நேரம்: காலை.
உறுப்பினர்: பெருநாட்டு மன்னன், பெருநாட்டுப் படைகள்,
திறல்நாட்டு மக்கள்.
அகவல்
கோட்டைமேல் வெள்ளைக் கொடி பறந்தது!
பேட்டையில் பெருநாட்டுப் படைகள் நுழைந்தன.
பெரும்படை பின்வர ஒருமணித் தேரில்
பெருநாட்டு மன்னன் திருநகர் புகுங்கால்,
நேற்றுப் புலித்திறல் சோற்றை உண்ட
சிறுமதிப் பார்ப்பனர் நிறைநீர்க் குடத்தொடும்
நறுமலர்த் தாரொடும் நன்றெதிர் கொண்டு,
"வருக பெருநாட்டு மன்னரே வருக!
திருமாற் பிறப்பெனும் செம்மலே வருக!
புலித்திறல் மன்னனால் பட்டது போதும்
மனுநூல் தன்னை மன்னரே காக்க
இனிமேல் எங்கள் தனிநலந் தன்னை
நாடுக நாடுக நன்றே வாழ்க
சூடுக மாலை!" என்று சூட்டி
நல்வர வேற்பு நடத்திய அளவில்,
அரசனும் வணங்கி, "அறம்பிச காமல்
பெருமை மனுநூல் பிழைப டாமல்
பார்ப்பனர் நன்மை பழுது படாமல்
காப்போம்" என்று கழறி முடித்தான்.
நாற்படை, முழக்கொடு நகர்மேற் சென்றன.
தேன்கூட்டில் ஈக்கள் செறிந்தன போல
வானுயர் வீடுதோறும் வாயிலில் மக்கள்
தலைவைத் திருந்தார் தம்முளம் மறைத்தே
பெருநாட்டுப் பிறைக்கொடி திறல்நாடு பெற்றது.
பெருநாட்டு மன்னனும் பெரும்படை மறவரும்
திறல்நாட் டரண்மனை சேர்ந்தனர் உடனே!
புலித்திறல் சிறையில் புகுத்தப் பட்டான்.
பிரமன் தோளில் பிறந்த பெட்டைகள்
மரியா தையாகப் பெருஞ்சிறை சென்றனர்.
மருமக னாகும் வையத் திறலை
விரைவில் தேட விடுத்தான் ஆட்களை!
பெருநாட் டான்தன் பெரும்படை மறவர்க்கு
விடுமுறை தந்தான். வேண்டிப் பார்ப்பனர்
அரண்மனை அரிசியில் விருந்துண் பித்தார்.
முரசறை வோனை அரசன் அழைத்தே
"அரசியல் திட்டம் அமைப்ப தற்கும்
41
வையத் திறலைஎன் மகளுக் காகத்
திருமண உறுதி செய்வ தற்கும்
நாளைக் காலை நாட்டு மக்கள்
மாளிகை வரும்படி மணிமுர சறைக"
என்றான். யானை வள்ளுவன்
நன்றெனப் பணிந்து நடந்தான் ஆங்கே.
35
இடம்: திறல்நாட்டு மாளிகை.
நேரம்: காலை.
உறுப்பினர்: அனைவரும்.
அகவல்
மென்பட்டு மெத்தை விரித்த பெருந்தரை,
நன்முறை ஓவிய நாற்பு றச்சுவர்,
கற்றச்சர் கைத்திறம் காட்டும் ஆயிரங்கால்,
பொற்கட்டில் பன்மணி புதைத்த மேன்மூட்டு,
வருகெனப் பொற்பாவை வரவேற்கும் முன்வாயில்,
பெருமக்கள் மகிழ்ந்துபோம் பின்புறப் பெருவாயில்,
நறுந்தென்றல் வார்க்கும் நாற்சுவர்ச் சன்னல்கள்,
நிறந்தரு பவழம், நீலம், மாணிக்கம்
சுடர்விடு முத்துத் தொங்கல்கள் இடையிடை,
அடைசுவர் சேர அங்கங்குக் கலைப்பொருள்,
ஆன மாளிகைநடு அடலேறு சுமப்பதோர்
வானில வெறித்த மணிக்குடை இருக்கையில்
வென்றபெரு நாட்டான் வீற்றி ருந்தான்.
அன்னோன் அமைச்சன் அருகினில் இருந்தான்.
படையின் தலைவனும் பாங்கில் அமர்ந்தான்.
முரசு முழங்கும் முன்புற வாயிலால்
வரும்பெரு மக்கள் மலைபுரள் அருவி!
திறல்நாட்டு மறவரும் செம்மறித் திறலும்
வையத் திறலும் தம்முரு மாற்றி
நீறு பூத்த நெருப்பென இருந்தனர்.
ஆண்டாள் ஒருபுறம் அவள்மகள் ஒருபுறம்
ஈண்டிழைப் பொன்னி ஒருபுறம் இருந்தனர்.
தொலைவிலோர் மூலையில் தோன்றா வண்ணம்
அழகன் இருந்தான் அச்சத் தோடே.
பழந்திறல் நாட்டினர் பல்லா யிரவர்,
பெருநாட்டு மறவர் ஒருசில நூற்றவர்
ஆங்கே கலந்தபடி அமர்ந்தி ருந்தனர்.
வையத் திறலோன் வந்துவிட் டானா?
என்றுபன் முறைகேட்டான். இல்லை என்று
சொன்னார். சொற்பொழிவு தொடங்கினான்:
"திறல்நாட்டு மக்களே, செப்புதல் கேட்பீர்!
இத்திறல் நாடோ, என்பகை யான
மலைநாட் டோடு கலந்து கொள்ள
இருப்பதால் நான்படை எடுக்க நேர்ந்தது;
வென்றேன். சிறையில்உம் வேந்தரை அடைத்தேன்.
திறல்நாடு தனில்என் பிறைக்கொடி ஏற்றினேன்.
42
இவ்வா றிருக்க, இனிஇந் நாட்டின்
ஆட்சிமுறை எவ்வா றமைய வெண்டும்?
என்பது பற்றி இயம்பு கின்றேன்;
என்றன் உறவினன், மன்னர் மரபினன்
ஆன ஒருவனே இந்நாட் டரசன்.
வரும்அவ் வரசன் பெருநாட் டுக்குப்
போர்த்துணை நாளும் புரிய வேண்டும்.
மேலும் அந்த வேந்தன் பார்ப்பனர்
மறைநூ லுக்கு மதிப்பீய வேண்டும்.
இத்தனை கருதி இந்நாட்டு மன்னரின்
மகனுக் கேஎன் மகளைத் தரவும்
விரும்பினேன். அவனும் விரும்புவ தாக
அறிந்தேன்; மகிழ்ந்தேன். ஆதலால் இந்தத்
திறல்நாட்டை யாள்பவன் திறல் நாட்டினனே!
வையத் திறல்என் மகளை மணப்பதாய்
இன்றே உறுதி இயம்பினால் நாளையே
மண முடித்து, மணிமுடி பெறலாம்!
வையத் திறலோன் வராமை யாலே
அன்னோன் சார்பில் இந்நாட் டார்கள்
உறுதி கூறினும் ஒப்புக் கொள்வேன்"
என்று மன்னன் இயம்பிய அளவில்,
கூனும் கோலும், குள்ளமும் வெள்ளைத்
தாடியும் மீசையும், தள்ளா உடலுமாய்
எழுந்து நின்றான் ஒரு
கிழவன் அரசனைக் கேட்டான் ஆங்கே.
இணைக்குறள் ஆசிரியப்பா
"உங்கள் உறவுதான் ஊராள வேண்டுமோ?
வேந்தன் சேய்தான் வேந்தாக வேண்டுமோ?"
என்று கிழவன் கேட்டான்.
"கேட்பீர் கேட்பீர்" என்று
முன்னுள்ள மக்கள் முழக்கஞ் செய்தனர்!
"எங்கள் உறவுதான் ஆள ஏற்றவன்
வேந்தன் சேய்தான் வேந்தாக வேண்டும்"
என்றான் வேந்தன்.
"எங்களில் ஒருவன் ஏன்ஆளக் கூடாது?
சொல்கமு என்றான் கிழவன்.
நாடாள்வ தன்று நாலாஞ் சாதி"
என்றான் மன்னன்.
"சாதி ஒழிக! சாதி ஒழிக!"
என்று முழங்கினர் எதிரில் மக்கள்!
"எங்கள் நாட்டுக் கினிவரும் மன்னன்
உங்கட்குப் போரில் உதவ வேண்டுமோ?
பாரோர் நாட்டைநீர் பறிக்க நினைத்தால்
சீராம் திறல்நாடு சேர வேண்டுமோ?"
என்று கேட்டான் முதியோன்.
"நன்று கேட்டீர் நன்று கேட்டீர்"
என்றனர் மக்கள்.
"ஆம்ஆம்" என்றே அதிர்த்தான் மன்னன்.
43
"பார்ப்பனர் மறையைப் பைந்தமிழ் மக்கள்
மாய்ப்பது தீதோ? வளர்ப்பது கடனோ?"
என்றான் முதியோன்.
"ஆம்" என்று மன்னன் தீமுகம் காட்டினான்.
"பார்ப்பனர் பொய்மறை பாழ்பட" என்று
கூப்பாடு போட்டனர் மக்கள்.
"வையத் திறல்உம் மகளை மணக்கும்
எண்ணம் அவனுக் கிருந்த தில்லை;
இருக்கப் போவதும் இல்லை; இதனை
இளங்கோ சார்பில் யானுரைக் கின்றேன்"
என்றான் முதியோன்.
"ஆம்ஆம்" என்றே அனைவரும் கூவினர்!
சின்ன முகத்துடன் மன்னன் "கிழவரே,
வையத் திறலை மன்னன் ஒறுத்தது
பொய்யோ?" என்றான்.
"மன்னன் தன்னன்" மைத்துனர் மகளை
மணக்கச் சொன்னான். மறுத்தான் வையன்
அதனால்
ஒறுத்தான்" என்றான்.
"சிறைமீட்டு வருக புலித்திறலை" என்று
பெருநாட்டு மன்னன் உரைத்தான்.
திறல்நாட்டு மன்னன் அவ்விடம் சேர்ந்தான்.
"வையத் திறலைச் சிறையில் வைத்தனை
மெய்யாக் காரணம் விளம்" பெனக் கேட்க,
புலித்திறல் புகல்வான்:
"உன்மகள் தனையும் என்மகன் மறுத்தான்
என்மைத் துனன்மகள் தன்னையும் மறுத்தான்
வேலைக் காரி மின்னொளி தன்னை
மாலை யிட்டு மன்னர் மரபையே
அழிக்க எண்ணினான்! அடைத்தேன் சிறையில்"
என்ன,
பெருநாட் டான், வாள் உருவி
"புரட்சியோ! புரட்சியோ! கிழவரே,
உரைப்ப தென்ன" என்று
மன்னன் கேட்கக்
கிழவன், "மன்னா கிளத்துதல் கேட்க,
சாதி யில்லை
பார்ப்பன வகுப்பும் பார்ப்பன நூற்களும்
பொய்யே!
மதம்எனல் தமிழ் வையத்தின் பகை!
ஆள்வோர் என்றும் அடங்குவோர் என்றும்
பிறந்தார் என்பது சரடு.
தனிஒரு மனிதன் தன்விருப் பப்படி
இனிநாட்டை ஆள்வ தென்ப தில்லை!
மக்கள் சரிநிகர்!
எல்லாத் துறையிலும், எவரும் நிகரே
நெடுநாட்டு மக்களின் படியினர் (பிரதிநிதிகள்)
குடியரசு நாட்டல்எம் கொள்கை யாகும்"
என்று கிழவன் இளைஞனாய் நின்றான்.
44
மன்னன் வையத் திறலைக் கண்டான்.
கையால் தன் வாள் காட்டி,
"என்மகள் ’பெருந்திரு’ என்னும் மங்கையை
மணந்துகொள்; இன்றேல் மன்னன் மைத்துனன்
மகளை மணந்துகொள்! மக்களில் தாழ்ந்த
மின்னொளி தன்னை விரும்புதல் நீக்குக;
என்னொளி வாளுக் கிரையா காதே"
என்றான்.
"ஏஏ!" என்றனர் இருந்த மக்கள்!
வையத் திறல்தன் வாளை உருவினான்.
"படையின் தலைவனே பற்றுக இவனை"
என்று படைத்தலை வனுக்குக்
கட்டளை யிட்டான் மன்னன்!
எட்டிற்று மறித்திறல் இடிக்குரல் எங்குமே.
பாட்டு
மக்களின் உரிமைக்குத் தூக்குவீர் வாளை
மன்னரின் தனியாட்சி வீழ்க - நாட்டு
மக்களின் உரிமைக்கு...
(திறல்நாட்டு மறவரின் மக்களின் வாள் சுழலுகின்றன.
பெருநாட்டுப் படைத்தலைவனும், அவனைச் சார்ந்த
சில மறவர்களும் எதிர்க்கிறார்கள்.)
மக்கட் கடலில் மறைக் குமிழிகள்
மறுப்பவர் மாள்க மாள்க மாள்கவே - நாட்டு
மக்களின் உரிமைக்கு...
(எதிர்த்தோர் இறந்துபடுகின்றனர். இரு மன்னரும்
படைத்தலைவர்களும், ஆளும் இனத்தோரும்
பிணிக்கப்படுகின்றனர்.)
தக்கதோர் ஆட்சி மக்களின் மன்றம்!
சரிநிகர் எல்லாரும் என்றோம்.
பொய்க்கதை மறையெனல் புரட்டே
புரட்சியில் மலர்க இன்ப வாழ்வே!
(பிணிக்கப் பெற்றவர் சிறை சேர்க்கப் பெற்றனர்.)
36
இடம்: நகர்கள், சிற்றூர்கள்.
நேரம்: மாலை.
உறுப்பினர்: முரசறைவோன்.
அகவல்
யானைமேல் வள்ளுவன் இயம்புவான் முரசறைந்து:
"பூனைக்கண் போலும் பொரிக்கறிக் காக
ஆளுக் கிரண்டுகத் தரிக்காய் அடைக.
45
செங்கை இரண்டளவு சீரகச் சம்பா
அடைக அங்கங்கு மக்கள் அனைவரும்!
பொன்னிறப் பருப்பும் புத்துருக்கு நெய்யும்
ஒருகை யளவு பெருகஒவ் வொருவரும்!
பாகற் புளிக்குழம்பும் பழமிள கின்சாறும்
ஆகத் தக்கன அடைக எவரும்!
ஆழாக்குத் தயிர் அடைகாய் ஒவ்வொரு
வாழை இலைஇவை வழங்குவார் தெருத்தோறும்.
விருந்தே நாளை விடியலில் அனைவரும்
அருந்துக குடியாட்சி அமைக்கும் நினைவிலே!"
இதுகேட்டுத் தெருத் தோறும் பொதுவில்லம்
எதுவெனக் கேட்டே ஏகினர்
அதுவது பெற்றே அடைந்தனர் வீட்டையே.
37
இடம்: மின்னொளி வீட்டு முன்வெளி.
நேரம்: விடியல்.
உறுப்பினர்: மின்னொளி, ஆண்டாள், விருந்தினர்,
வையத்திறல்.
அகவல்
வீட்டெதிர் ஆண்டாள் மின்னொ ளிக்குத்
தலைவாரு கின்றாள். புதையல்மின் னொளியே
மன்னன் மகனைநீ மணந்த பின்னர்
என்னை மறப்பாயோமு என்றாள் அன்னை.
"ஏழைகள் அனைவரும் கூழைக் குடிக்க
வாழை யிலையில் வார்த்தநெய் ஓடையில்,
மிதக்கும் பல்கறிச் சோறு விழுங்கும்
மன்னன் மகனை மணக்கவே மாட்டேன்"
என்றாள் மின்னொளி. அன்னை திடுக்கிட்டு
"முன்னர் உன்காதல் மொய்த்த தெவன்மேல்?"
என்று கேட்டாள். ஏந்திழை "அம்மா
ஏழ்மை கண்ட இடமெல்லாம் காதல்
தாழ்மையேல் என்உளம் தாவுதல் அன்றி
உடல்மிசைக் காதல் உற்றிலேன்" என்றாள்.
"அழகனை உன்உளம் அண்டிற் றோ" என
அன்னை, மின்னொளி தன்னைக் கேட்டாள்.
"அழகன் ஏழ்மையை அணுகிய தென்னுளம்
என்னுடல் அவனுடற் கில்லை" என்றாள்.
"மின்னொளி என்னுடன் விரைவில் வருக
அருந்திட வேண்டும் விருந்" தென் றாள்தாய்.
இருவரும் எழுந்தார்; விருந்துக் கேகினார்.
வாகை நீழலில் மறித்திறல் பொன்னி
ஓகையோடும் உண்டனர் விருந்தே!
அரசின் நீழலில் அழகனும் பிறரும்
அருந்தினர் இனிய விருந்து மகிழ்ந்தே!
வேங்கையின் நீழலில் வேறு பலப்பலர்
46
தாங்கா மகிழ்ச்சியில் தாம்உண் டிருந்தார்.
மாவின் நீழலில் வையத் திறலோன்
பாவை யைஎதிர் பார்த் திருந்தனன்.
வீட்டினர் யாவரும் விருந்துண்ணு நிலை
பார்த்து வந்தாள் பாவை மின்னொளி.
மரத்து நீழலில் வாயார உண்பார்
சரிநிலை கண்டாள் தையல் மின்னொளி.
அரசின் நீழலில் அழகனைக் கண்டாள்;
அழகன் வையனை அணுகுநீ என்றான்.
அழகன்பால் ஏழ்மை அறிகிலாள் மின்னொளி.
மாவின் நீழலில் வையனைக் கண்டாள்.
மன்னன் மகனை வையத் திறலிடம்
காணு கில்லாள்! கண்ட வையத்திறல்
அண்டையில் அமர்கென ஆவலில் அழைத்தான்;
கெண்டை விழியாள் கிட்ட அமர்ந்தாள்.
"கத்தரிப் பொரியலும், கரும்பாகற் குழம்பும்,
புத்துருக்கு நெய்யும், பொன்னிறப் பருப்பும்,
மிளகின் சாறும், புளியாத தயிரும்
அனைவர்க்கும் நிகரே! ஆயினும் மின்னொளி
உனக்கொன் றதிகம்" என் றுரைத்தான் வையன்.
என்ன என்றாள் மின்னொளி;
சின்னதோர் முத்தம் தந்தான்.
அன்னத னோடே அருந்தினாள் விருந்தே.
38
இடம்: திறல்நாட்டு அரண்மனை.
நேரம்: மாலை.
உறுப்பினர்: அனைவரும்.
அகவல்
அனைவரும் திறல்நாட் டரண்மனை நிறைந்தனர்.
செம்மறித் திறல் எழுந்து
கைம்மலர் கூப்பிக் கழறுவான் ஆங்கே.
எண்சீர் விருத்தம்
நாட்டினிலே குடியரசை நாட்டிவிட்டோம் இந்நாள்
நல்லபல சட்டங்கள் அமைத்திடுதல் வேண்டும்
காட்டோமே சாதிமணம்! கலப்புமணம் ஒன்றே
நல்வழிக்குக் கைகாட்டி! கட்டாயக் கல்வி
ஊட்டிடுவோம் முதியோர்க்கும் மாணவர்க்கும் நன்றே
உழையானை நோயாளி ஊர்திருடி என்போம்.
கேட்டைஇனி விலைகொடுத்து வாங்கோமே; சாதி
கீழ்மேல்என் றுரைப்பவர்கள் வாழுவது சிறையே.
ஒருகடவுள் உண்டென்போம்! உருவணக்கம் ஒப்போம்!
உள்ளபல சண்டையெல்லாம் ஒழியும்மதம் ஒழிந்தால்!
47
திருக்கோயில் தொழிற்சாலை! பார்ப்பனரும் கையில்
செங்கோலேந் தும்பிறரும் மக்களைச் சார்ந்தோரே!
பெருவாழ்வுக் கிவையெல்லாம் அடிப்படைத் திட்டங்கள்
பிறிதுள்ள சட்டங்கள் அறிஞர் அமைப்பார்கள்.
வருநாளில் குடிமக்கள் படியினரின் தேர்தல்
வகுப்பதற்கே இன்றுசிறு குழுஅமைப்பீர்" என்றான்.
செம்மறியே முதலாகப் பதின்மர்களைத் தேர்ந்தார்;
திறல்நாட்டின் குடியரசைச் செயற்படுத்தச் சொன்னார்.
செம்மறிக்கும் பொன்னிக்கும் மின்னொளிக்கும் வையத்
திறலுக்கும் நடைபெற்ற திருமணம் பாராட்டி
நம்மருமை நாடன்றிப் பெருநாட்டை இந்த
நன்னிலையில் சேர்ப்பதற்கும் திட்டமிட்டார் மக்கள்.
"செம்மையுறத் திருநாட்டில் மணிக்கொடியும் ஏற்றித்
திகழ்ந்திடுக உலகமெலாம் குடியரசே" என்றார்.

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166b.htm#2._அமிழ்து_எது

மெய் வண்ண வீடுகட்ட உனைத்தொங்க விடுகின் றார்கள்;
செய் வண்ண வேலைசெய்து திருமாடம் முடிக்கின் றாய்நீ!
பொய் வண்ணப் பூசணிக்காய்! கறியுனைச் செய்துண் டேன்;உன்
கைவண்ணம் அங்கு கண்டேன்; கறிவண்ணம் இங்கு கண்டேன்!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165puthiyaulagam.htm#dt175

சீப்புக் கண்ணாடி ஆடை சிறுகத்தி கூந்தல் எண்ணெய்
சோப்புப் பாட்டரி விளக்கு தூக்குக் கூஜாதாள் பென்சில்
தீப்பெட்டி கவிகை சால்வை செருப்புக் கோவணம் படுக்கை
காப்பிட்ட பெட்டி ரூபாய் கைக்கொள்க யாத்தி ரைக்கே!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165puthiyaulagam.htm#dt174

காரிருள் அகத்தில் நல்ல
கதிரொளி நீதான்! இந்தப்
பாரிடைத் துயில்வோர் கண்ணிற்
பாய்ந்திடும் எழுச்சி நீதான்!
ஊரினை நாட்ட இந்த
உலகினை ஒன்று சேர்க்கப்
பேரறி வாளர் நெஞ்சிற்
பிறந்த பத்திரிகைப் பெண்ணே!

அறிஞர்தம் இதய ஓடை
ஆழநீர் தன்னை மொண்டு
செறிதரும் மக்கள் எண்ணம்
செழித்திட ஊற்றி ஊற்றிக்
குறுகிய செயல்கள் தீர்த்துக்
குவலயம் ஓங்கச் செய்வாய்!
நறுமண இதழ்ப் பெண்ணேஉன்
நலம்காணார் ஞாலம் காணார்.

கடும்புதர் விலக்கிச் சென்று
களாப்பழம் சேர்ப்பார் போலே
நெடும்புவி மக்கட் கான
நினைப்பினிற் சென்று நெஞ்சிற்
படும்பல நுணுக்கம் சேர்ப்பார்
படித்தவர். அவற்றை யெல்லாம்
"கொடும்" என அள்ளி உன்தாள்
கொண்டார்க்குக் கொண்டு போவாய்!

வானிடை நிகழும் கோடி
மாயங்கள், மாநி லத்தில்
ஊனிடை உயிரில் வாழ்வின்
உட்புறம் வெளிப் புறத்தே
ஆனநற் கொள்கை, அன்பின்
அற்புதம் இயற்கைக் கூத்து
தேனிதழ் தன்னிற் சேர்த்துத்
தித்திக்கத் தருவாய் நித்தம்!

சிறுகதை ஒன்று சொல்லிப்
பெருமதி யூட்டும் தாளே!
அறைதனில் நடந்த வற்றை
அம்பலத் திழுத்துப் போட்டுக்
கறையுளம் தூய்மை செய்வாய்!
களைப்பிலே ஊக்கம் பெய்வாய்!
நிறைபொருள் ஆவாய் ஏழை
நீட்டிய வெறுங் கரத்தே!

ஓவியம் தருவாய்! சிற்பம்
உணர்விப்பாய்! கவிதை யூட்டக்
காவியம் தருவாய்! மக்கள்
கலகல வெனச் சிரிப்பு
மேவிடும் விகடம் சொல்வாய்!
மின்னிடும் காதல் தந்து
கூவுவாய்! வீரப் பேச்சுக்
கொட்டுவாய் கோலத் தாளே!

தெருப்பெருக் கிடுவோ ருக்கும்
செகம்காக்கும் பெரியோர்க் கும்,கை
இருப்பிற் பத்திரிகை நாளும்
இருந்திடல் வேண்டும்! மண்ணிற்
கருப்பெற் றுருப்பெற் றிளநடை
பெற்றுப்பின் ஐந்தே ஆண்டு
வரப்பெற்றார் பத்திரிகை நாளும்
உண்டென்றால் வாழ்க்கை பெற்றார்!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165puthiyaulagam.htm#dt173

தென்னி லங்கை யிராவணன் தன்னையும்
தீய னென்னும் துரியனையும் பிறர்
என்ன சொல்லி யெவ்வாறு கசப்பினும்
இன்று நானவர் ஏற்றதைப் பாடுவேன்;
இன்னு மிந்தச் செயலற்ற நாட்டினில்
எத்தனை துரியோ தனர் வாழினும்
அன்னவர் தமைக் கொல்ல முயன்றிடும்
அந்த கன்தனை நான்கொல்ல முந்துவேன்.

நெஞ்சி லுற்றது செய்கையில் நாட்டுதல்
நீச மன்று; மறக்குல மாட்சியாம்!
தஞ்ச மென்று பிறன்கையில் தாழ்கிலாத்
தன்மை யாவது வீரன் முதற்குணம்!
நெஞ்சி லூறிக் கிடந்ததம் பூமியை
நேரில் மற்றவர் ஆண்டிடப் பார்த்திடும்
பஞ்சை யன்று. துரியன் இராவணன்
பாரதக் குலம் வேண்டிடும் பண்பிதே!

தன்கு லத்தினைத் தூக்கிடும் தாம்பெனச்
சகம் சிரிக்கப் பிறந்தவி பீஷணன்
நன்ம னத்தவன் ராமனைச் சார்ந்ததை
நல்ல தென்பது ராமன் முகத்துக்காம்!
இன்பம் வேண்டிப் பிறன்வச மாவதை
இந்தத் தேசம் இகழ்ந்திடும் மட்டிலும்
துன்ப மன்றிச் சுகம்கிடை யாதென்றே
துரைகள் சேர்ந்த சபைக்குமுன் கூறுவேன்.

பாரதத் திருத் தாயெனும் பேச்சிலே
பச்சை யன்பு பொழிந்திடு கின்றவர்
வீரத் தால்உள மேசெய லாயினோர்
விழி யிலாதவர் ஊமைய ராயினும்
கோரித் தாவுமென் னுள்ளம் அவர்தம்மை!
கொள்கை மாற்றல் திருட்டுத் தனங்காண்!
ஓரி போலப் பதுங்கும் படித்தவர்
ஊமை நொள்ளை செவிடென்று சொல்லுவேன்!

இன்பம் வந்து நெருங்கிடு நேரத்தில்
ஈனர் அஞ்சிக் கிடக்கின்ற நேரத்தில்
ஒன்றி லாயிரம் தர்க்கம் புரிந்துபின்
உரிமைத் தாய்தனைப் போவென்று சொல்வதால்,
என்னை யீன்ற நறுந்தாய் நாட்டினை
எண்ணுந் தோறும் உளம்பற்றி வேகுதே!
அன்பி ருந்திடில் நாட்டின் சுகத்திலே
ஆயிரம் கதை ஏன்வளர்க் கின்றனர்?

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165puthiyaulagam.htm#dt172

மனைமக்கள் தூங்கினார் நள்ளிரவில் விடைபெற்று
வழிநடைச் சிரமம்இன்றி
மாபெரிய யுசிந்தனா லோகத்தைரு அணுகினேன்.
வந்தனர்என் எதிரில்ஒருவர்.
எனைஅவரும் நோக்கியே நான்கடவுள் நான்கடவுள்
என்றுபல முறைகூறினார்.
இல்லைஎன் பார்கள்சிலர்; உண்டென்று சிலர்சொல்வர்
"எனக்கில்லை கடவுள்கவலை"

எனவுரைத் தேன்.அவர், யுஎழுப்புசுவர் உண்டெனில்
எழுப்பியவன் ஒருவனுண்டே
இவ்வுலகு கண்டுநீ நானும்உண் டெனஅறிகரு
என்றுரைத்தார். அவரைநான்
"கனமான கடவுளே உனைச்செய்த சிற்பிஎவன்?
காட்டுவீர்" என்றவுடனே
கடவுளைக் காண்கிலேன்! அறிவியக்கப் புலமை
கண்ட பாரததேசமே!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165puthiyaulagam.htm#dt171

தலை,காது, மூக்கு, கழுத்து,கை, மார்பு,விரல்,
தாள்என்ற எட்டுறுப்பும்
தங்கநகை, வெள்ளிநகை, ரத்தின மிழைத்தநகை,
தையலர்கள் அணியாமலும்,
விலைகுறையும் ஆடைகள் அணிந்துமே கோயில்வர
வேண்டுமென் றேபாதிரி
விடுத்தஒரு சேதியால் விஷமென்று கோயிலை
வெறுத்தார்கள் பெண்கள்புருஷர்!

நிலைகண்ட பாதிரிபின் எட்டுறுப் பேயன்றி
நீள்இமைகள், உதடு,நாக்கு
நிறையநகை போடலாம், கோயிலில் முகம்பார்க்க
நிலைக்கண்ணா டியும்உண்டென
இலைபோட் டழைத்ததும், நகைபோட்ட பக்தர்கள்
எல்லாரும் வந்துசேர்ந்தார்;
ஏசுநா தர்மட்டும் அங்குவர வில்லையே,
இனியபா ரததேசமே!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165puthiyaulagam.htm#dt170

பழங்கால அறைக்குளே பதினைந்து திருடர்கள்
பதுங்கிடவும் வசதியுண்டு.
பதார்த்தவகை மீதிலே ஒட்டடையும் ஈக்களும்
பதிந்திடவும் வசதியுண்டு.
முழங்கள் பதினெட்டிலே மாற்றமில்லா விடினும்
முன்றானை மாற்றமுண்டு.
முடிகிவரும் நோய்க்கெலாம் கடவுளினை வேண்டியே
முடிவடைய மார்க்கமுண்டு.

தொழுங்கணவன் ஆடையிற் சிறுபொத்தல் தைக்கவும்
தொகைகேட்கும் ஆட்கள்வேண்டும்.
தோசைக் கணக்கென்று கரிக்கோடு போடவோ
சுவருண்டு வீட்டில்.இந்த
ஒழுங்கெலாம் நம்மாதர் வாரத்தின் ஏழுநாள்
உயர்விரதம் அநுஷ்டிப்பதால்
உற்றபலன் அல்லவோ அறிவியக் கங்கண்
டுணர்ந்த பாரததேசமே!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165puthiyaulagam.htm#dt169

தித்திக்கும் பழம் தின்னக் கொடுப்பார்;
மதுரப் பருப்பு வழங்குவார் உனக்கு;
பொன்னே, மணியே, என்றுனைப் புகழ்வார்;
ஆயினும் பச்சைக் கிளியே அதோபார்!
உன்னுடன் பிறந்த சின்ன அக்கா,
வான வீதியில் வந்து திரிந்து
தென்னங் கீற்றுப் பொன்னூசல் ஆடிச்
சோலை பயின்று சாலையில் மேய்ந்து
வானும் மண்ணுந்தன் வசத்திற் கொண்டாள்!
தச்சன் கூடுதான் உனக்குச் சதமோ?
அக்கா அக்கா என்றுநீ அழைத்தாய்.
அக்கா வந்து கொடுக்கச்
சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே?

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165puthiyaulagam.htm#dt168

சர்க்கா ருக்குத் தாசன்நான்! ஓர்நாள்
பக்கத் தூரைப் பார்க்க எண்ணி
விடுமுறை கேட்டேன். விடுமுறை இல்லை!
விடுமுறை பலிக்க நோயை வேண்டினேன்.
மார்புநோய் வந்து மனதில் நுழைந்தது!

மலர்ந்தஎன் முகத்தினில் வந்தது சுருக்கம்!
குண்டு விழிகள் கொஞ்சம் குழிந்தன.
என்பெண் டாட்டி என்னை அணுகினாள்.
எதிரில் பந்து மித்திரர் இருந்தார்.
தூயஓர் பெரியார் என்னுடல் தொட்டுக்
காயம் அநித்தியம் என்று கலங்கினார்.
எதிரில் நிமிர்ந்தேன்; எமன்!எமன்! எமனுரு!

இரு கோரப்பல்! எரியும் கண்கள்!!
சுவாசமும் கொஞ்சம் சுண்டுவ தறிந்தேன்.
சூடு மில்லை உடம்பைத் தொட்டால்!
கடிகா ரத்தின் கருங்கோடு காணேன்;
கண்டது பிழையோ, கருத்தின் பிழையோ
ஒன்றும் சரியாய்ப் புரிய வில்லை
என்ற முடிவை ஏற்பாடு செய்தேன்!
என்கதி என்ன என்று தங்கை
சொன்னதாய் நினைத்தேன். விழிகள் சுழன்றன!
பேசிட நாக்கைப் பெயர்த்தே னில்லை.
பேச்சடங் கிற்றெனப் பெருந்துயர் கொண்டேன்.
இருப்புத் தூண்போல் எமன்கை இருந்ததே!
எட்டின கைகள் என்னுயிர் பிடிக்க!
உலகிடை எனக்குள் ஒட்டுற வென்பதே
ஒழிந்தது! மனைவி ஓயா தழுதாள்!
எமனார் ஏறும் எருமைக் கடாவும்
என்னை நோக்கி எடுத்தடி வைத்தது.
மூக்கிற் சுவாசம் முடியும் தருணம்
நாக்கும் நன்கு நடவாச் சமயம்,
சர்க்கார் வைத்தியர் சடுதியில் வந்து
பக்குவஞ் சொல்லிப் பத்துத் தினங்கள்
விடுமுறை எழுதி மேசைமேல் வைத்து
வெளியிற் சென்றார். விஷய முணர்ந்தேன்.
"அண்டையூர் செல்ல அவசியம் மாட்டு
வண்டி கொண்டுவா" என்றேன்! மனைவி
எமனிழுக் கின்றான் என்றாள். அத்ததி
சுண்டெலி ஒன்று துடுக்காய் அம்மி
யண்டையில் மறைந்ததும் அம்மியை நகர்த்தினேன்!
இங்கு வந்த எமனை அந்த
எலிதான் விழுங்கி யிருக்கும் என்பதை
மனைவிக் குரைத்தேன். வாஸ்தவம் என்றாள்!
மாட்டு வண்டி ஓட்டம் பிடித்தது!
முன்னமே லீவுதந் திருந்தால்,
இந்நேரம் ஊர்போய் இருக்க லாமே!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165puthiyaulagam.htm#dt167

இரும்புப் பெட்டியிலே - இருக்கும்
எண்பது லக்ஷத்தையும்,
கரும்புத் தோட்டத்திலே - வருஷம்
காணும் கணக்கினையும்,
அருந் துணையாக - இருக்கும்
ஆயிரம் வேலியையும்
பெரும் வருமானம் - கொடுக்கும்
பிறசொத் துக்களையும்,

ஆடை வகைகளையும் - பசும்பொன்
ஆபர ணங்களையும்,
மாடு கறந்தவுடன் - குடங்கள்
வந்து நிறைவதையும்,
நீடு களஞ்சியங்கள் - விளைந்த
நெல்லில் நிறைவதையும்,
வாடிக்கைக் காரர்தரும் - கொழுத்த
வட்டித் தொகையினையும்,

எண்ணிஎண்ணி மகிழ்ந்தே - ஒருநாள்
எங்கள் மடாதிபதி
வெண்ணிறப் பட்டுடுத்திச் - சந்தனம்
மேனியெ லாம்பூசிக்
கண்கவர் பூஷணங்கள் - அணிந்து
கட்டில் அறைநோக்கிப்
பெண்கள் பலபேர்கள் - குலவிப்
பின்வர முன்நடந்தார்!

பட்டுமெத் தைதனிலே - மணமே
பரவும் பூக்களின்மேல்
தட்டினிற் பக்ஷணங்கள் - அருந்திச்
சைவத்தை ஆரம்பித்தார்;
கட்டிக் கரும்பினங்கள் - சகிதம்
கண்கள் உறங்கிவிட்டார்.
நட்ட நடுநிசியில் - கனவில்
நடந்தது கேளீர்:

நித்திரைப் பூமியிலே - சிவனார்
நேரில் எழுந்தருளிப்
புத்தம் புதிதாகச் - சிலசொல்
புகல ஆரம்பித்தார்.
"இத்தனை நாளாகப் - புவியில்
எனது சைவமதை
நித்தநித்த முயன்றே - புவியில்
நீளப் பரப்பிவிட்டாய்.

மடத்தின் ஆஸ்தியெல்லாம் - பொதுவில்
மக்களுக் காக்கிவிட்டேன்!
திடத்தில் மிக்கவனே - இனிநீ
சிவபுரி வாழ்க்கை
நடத்துக!" என்றே - சிவனார்
நவின்று பின்மறைந்தார்.
இடி முழக்கமென்றே - தம்பிரான்
எண்ணம் கலங்கிவிட்டார்!

தீப்பொறி பட்டதுபோல் - உடலம்
திடுக்கிட எழுந்தார்!
"கூப்பிடு காவலரை" - எனவே
எமனை எலி விழுங்கிற்று! கூச்சல் கிளப்பிவிட்டார்.
"காப்பளிக்க வேண்டும் - பொருள்கள்
. எமனை எலி விழுங்கிற்று! களவுபோகு" மென்றார்
"மாப்பிள்ளை என்றனுக்கே - இத்ததி
எமனை எலி விழுங்கிற்று! மரணம் ஏதுக்" கென்றார்.

சொப்பனத்தை நினைத்தார் - தம்பிரான்
எமனை எலி விழுங்கிற்று! துள்ளிவிழுந் தழுதார்!
ஒப்பி உழைத்ததில்லை - சிறிதும்
எமனை எலி விழுங்கிற்று! உடல் அசைந்ததில்லை!
எப்படி நான்பிரிவேன் - அடடா!
எமனை எலி விழுங்கிற்று! இன்பப் பொருளையெல்லாம்;
தப்பிப் பிழைப்பதுண்டோ - எனது
எமனை எலி விழுங்கிற்று! சைவம் எனத்துடித்தார்!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165puthiyaulagam.htm#dt166

தென்றிசையைப் பார்க்கின்றேன்; என்சொல்வேன் என்றன்
சிந்தையெலாம் தோள்களெலாம் பூரிக்கு தடடா!
அன்றந்த லங்கையினை ஆண்டமறத் தமிழன்
ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தோன்!
குன்றெடுக்கும் பெருந்தோளான் கொடைகொடுக்கும் கையான்!
குள்ளநரிச் செயல்செய்யும் கூட்டத்தின் கூற்றம்!
என்தமிழர் மூதாதை! என்தமிழர் பெருமான்
இராவணன்காண்! அவன்நாமம் இவ்வுலகம் அறியும்!

வஞ்சக விபூஷணனின் அண்ணனென்று தன்னை
வையத்தார் சொல்லுமொரு மாபழிக்கே அஞ்சும்
நெஞ்சகனை, நல்யாழின் நரம்புதனைத் தடவி
நிறையஇசைச் செவியமுது தரும்புலவன் தன்னை,
வெஞ்சமரில் சாதல்வர நேர்ந்திடினும் சூழ்ச்சி
விரும்பாத பெருந்தகையைத் தமிழ்மறைகள் நான்கும்
சஞ்சரிக்கும் நாவானை வாழ்த்துகின்ற தமிழர்
தமிழரென்பேன், மறந்தவரைச் சழக்கரெனச் சொல்வேன்!

வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும்!
விசைஒடிந்த தேகத்தில் வன்மை வேண்டும்!
சூழ்ச்சிதனை வஞ்சகத்தைப் பொறாமை தன்னைத்
தொகையாக எதிர்நிறுத்தித் தூள் தூளாக்கும்
காழ்ச்சிந்தை, மறச்செயல்கள் மிகவும் வேண்டும்!
கடல்போலச் செந்தமிழைப் பெருக்க வேண்டும்!
கீழ்ச்செயல்கள் விடவேண்டும்! ராவ ணன்தன்
கீர்த்திசொல்லி அவன்நாமம் வாழ்த்த வேண்டும்!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165puthiyaulagam.htm#dt165

வலியோர்சிலர் எளியோர்தமை
வதையேபுரி குவதா?
மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம்எனும் நினைவா?
உலகாளஉ னதுதாய்மிக
உயிர்வாதை யடைகிறாள்;
உதவாதினி ஒருதாமதம்
உடனேவிழி தமிழா!

கலையேவளர்! தொழில்மேவிடு!
கவிதைபுனை தமிழா!
கடலேநிகர் படைசேர்கடு
விடநேர்கரு விகள்சேர்!
நிலமேஉழு! நவதானிய
நிறையூதியம் அடைவாய்;
நிதிநூல்விளை! உயிர்நூல்உரை
நிசநூல்மிக வரைவாய்!

அலைமாகடல் நிலம்வானிலுன்
அணிமாளிகை ரதமே
அவைஏறிடும் விதமேயுன
ததிகாரம் நிறுவுவாய்!
கொலைவாளினை எடடாமிகு
கொடியோர்செயல் அறவே
குகைவாழ்ஒரு புலியே!உயர்
குணமேவிய தமிழா!

தலையாகிய அறமேபுரி
சரிநீதி யுதவுவாய்!
சமமேபொருள் ஜனநாயகம்
எனவேமுர சறைவாய்!
இலையேஉண விலையேகதி
இலையேஎனும் எளிமை
இனிமேலிலை எனவேமுர
சறைவாய் முரசறைவாய்!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165puthiyaulagam.htm#dt164

தனித்தமைந்த வீட்டிற்புத் தகமும் நானும்
சையோகம் புரிந்ததொரு வேளை தன்னில்,
இனித்தபுவி இயற்கையெழில் எல்லாம் கண்டேன்;
இசைகேட்டேன்! மணம்மோந்தேன்! சுவைகள் உண்டேன்!
மனித்தரிலே மிக்குயர்ந்த கவிஞர் நெஞ்சின்
மாகாசோதி யிற்கலந்த தெனது நெஞ்சும்!
சனித்ததங்கே புத்துணர்வு! புத்த கங்கள்
தருமுதவி பெரிது! மிகப்பெரிது கண்டீர்!

மனிதரெலாம் அன்புநெறி காண்ப தற்கும்
மனோபாவம் வானைப்போல் விரிவ டைந்து
தனிமனிதத் தத்துவமாம் இருளைப் போக்கிச்
சகமக்கள் ஒன்றென்ப துணர்வ தற்கும்,
இனிதினிதாய் எழுந்தஉயர் எண்ண மெல்லாம்
இலகுவது புலவர்தரு சுவடிச் சாலை;
புனிதமுற்று மக்கள்புது வாழ்வு வேண்டில்
புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும்.

தமிழர்க்குத் தமிழ்மொழியிற் சுவடிச் சாலை
சர்வகலா சாலையைப்போல் எங்கும் வேண்டும்.
தமிழிலிலாப் பிறமொழிநூல் அனைத்தும் நல்ல
தமிழாக்கி வாசிக்கத் தருதல் வேண்டும்,
அமுதம்போல் செந்தமிழிற் கவிதை நூற்கள்,
அழகியவாம் உரைநடையில் அமைந்த நூற்கள்,
சுமைசுமையாய்ச் சேகரித்துப் பல்கலை சேர்
துறைதுறையாய்ப் பிரித்தடுக்கி வைத்தல் வேண்டும்.

நாலைந்து வீதிகளுக் கொன்று வீதம்
நல்லதுவாய் வசதியதாய் இல்லம் வேண்டும்.
நூலெல்லாம் முறையாக ஆங்க மைத்து
நொடிக்குநொடி ஆசிரியர் உதவு கின்ற
கோலமுறும் செய்தித்தாள் அனைத்தும் ஆங்கே
குவிந்திருக்க வகைசெய்து தருதல் வேண்டும்.
மூலையிலோர் சிறுநூலும் புதுநூ லாயின்
முடிதனிலே சுமந்துவந்து தருதல் வேண்டும்.

வாசிக்க வருபவரின் வருகை ஏற்றும்
மரியாதை காட்டிஅவர்க் கிருக்கை தந்தும்,
ஆசித்த நூல்தந்தும் புதிய நூல்கள்
அழைத்திருந்தால் அதையுரைத்தும், நாளும் நூலை
நேசித்து வருவோர்கள் பெருகும் வண்ணம்
நினைப்பாலும் வாக்காலும் தேகத் தாலும்
மாசற்ற தொண்டிழைப்பீர்! சமுதா யச்சீர்
மறுமலர்ச்சி கண்டதென முழக்கஞ் செய்வீர்!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165puthiyaulagam.htm#dt163

உருவினையும் ஒலியினையும் ஒன்றாகச் சேர்த்தே
ஒளிபெருகத் திரையினிலே படங்காட்டும் கலையைத்
திருவிளைக்கும் நல்லறிஞர், ஐரோப்பி யர்கள்
தெரிந்துவெளி யாக்குகின்றார் எனக்கேட்ட நாளில்,
"இருவிழியால் அதுகாணும் நாள்எந்த நாளோ,
என்நாடும் அக்கலையில் இறங்குநாள் எந்நாள்,
இருள்கிழித்துத் தமிழ்நாடாம் நிலவுதனை, உலகின்
எதிர்வைக்கும் நாள்எந்நாள்" என்றுபல நினைத்தேன்.

ஒலியுருவப் படம்ஊரில் காட்டுவதாய்க் கேட்டேன்;
ஓடினேன்; ஓடியுட்கார்ந் தேன்இரவில் ஒருநாள்.
புலிவாழும் காட்டினிலே ஆங்கிலப்பெண் ஒருத்தி,
புருஷர்சக வாசமிலாப் புதுப்பருவ மங்கை
மலர்க்குலத்தின் அழகினிலே வண்டுவிழி போக்கி
வசமிழந்த படியிருந்தாள்! பின்பக்கம் ஒருவன்
எலிபிடிக்கும் பூனைபோல் வந்தந்த மங்கை
எழில்முதுகிற் கைவைத்தான்! புதுமைஒன்று கண்டேன்.

உளமுற்ற கூச்சந்தான் ஒளிவிழியில் மின்ன,
உயிர்அதிர்ந்த காரணத்தால் உடல்அதிர்ந்து நின்றே,
தெளிபுனலின் தாமரைமேற் காற்றடித்த போது
சிதறுகின்ற இதழ்போலே செவ்விதழ் துடித்துச்
சுளைவாயால் நீயார்என் றனல்விழியாற் கேட்டாள்
சொல்பதில்நீ என்றதவள் சுட்டுவிரல் ஈட்டி!
களங்கமிலாக் காட்சி,அதில் இயற்கையெழில் கண்டேன்!
கதைமுடிவில் யுபடம்ருஎன்ற நினைவுவந்த தன்றே!

என்தமிழர் படமெடுக்க ஆரம்பஞ் செய்தார்;
எடுத்தார்கள் ஒன்றிரண்டு பத்து நூறாக!
ஒன்றேனும் தமிழர்நடை யுடைபாவ னைகள்
உள்ளதுவாய் அமைக்கவில்லை, உயிர்உள்ள தில்லை!
ஒன்றேனும் தமிழருமை உணர்த்துவதா யில்லை!
ஒன்றேனும் உயர்நோக்கம் அமைந்ததுவா யில்லை!
ஒன்றேனும் உயர்நடிகர் வாய்ந்ததுவா யில்லை!
ஒன்றேனும் வீழ்ந்தவரை எழுப்புவதா யில்லை!

வடநாட்டார் போன்றஉடை, வடநாட்டார் மெட்டு!
மாத்தமிழர் நடுவினிலே தெலுங்குகீர்த் தனங்கள்!
வடமொழியில் ஸ்லோகங்கள்! ஆங்கில ப்ரசங்கம்!
வாய்க்குவரா இந்துஸ்தான்! ஆபாச நடனம்!
அடையும்இவை அத்தனையும் கழித்துப்பார்க் குங்கால்,
அத்திம்பேர் அம்மாமி எனுந்தமிழ்தான் மீதம்!
கடவுளர்கள், அட்டைமுடி, காகிதப் பூஞ்சோலை
கண்ணாடி முத்துவடம் கண்கொள்ளாக் காட்சி!

பரமசிவன் அருள்புரிய வந்துவந்து போவார்!
பதிவிரதைக் கின்னல்வரும் பழையபடி தீரும்!
சிரமமொடு தாளமெண்ணிப் போட்டியிலே பாட்டுச்
சிலபாடி மிருதங்கம் ஆவர்த்தம் தந்து
வரும்காதல்! அவ்விதமே துன்பம்வரும், போகும்!
மகரிஷிகள் கோயில்குளம் - இவைகள் கதாசாரம்.
இரக்கமற்ற படமுதலா ளிக்கெல்லாம் இதனால்
ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சியது லாபம்!

படக்கலைதான் வாராதா எனநினைத்த நெஞ்சம்
பாழ்படுத்தும் முதலாளி வர்க்கத்தின் செயலால்,
படக்கலையாம் சனியொழிந்தால் போதுமென எண்ணும்!
பயன்விளைக்கும் விதத்தினிலே பலசெல்வர் கூடி
இடக்ககற்றிச் சுயநலத்தைச் சிறிதேனும் நீக்கி
இதயத்தில் சிறிதேனும் அன்புதனைச் சேர்த்துப்
படமெடுத்தால் செந்தமிழ்நா டென்னும்இள மயிலும்
படமெடுத்தாடும்; தமிழர் பங்கமெலாம் போமே!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165puthiyaulagam.htm#dt162

மேதினிக்குச் சேசு நாதர் எதற்கடி? தோழி - முன்பு
வெம்மைகொள் மக்களைச் செம்மை புரிந்திடத் தோழா - அவர்
காதினிக் கும்படி சொன்னசொல் ஏதடி? தோழி - அந்தக்
கர்த்தர் உரைத்தது புத்தமு தென்றறி தோழா - அந்தப்
பாதையில் நின்று பயனடைந்தார் எவர்? தோழி - இந்தப்
பாரத நாட்டினர் நீங்கிய மற்றவர் தோழா - இவர்
ஏதுக்கு நன்மைகள் ஏற்கவில்லை உரை தோழி - இங்கு
ஏசுவின் கட்டளை நாசம் புரிந்தனர் தோழா.

ஏசு மதத்தினில் இந்துக்கள் ஏனடி? தோழி - அந்த
இந்துக்கள் தீயிட்ட செந்துக்கள் ஆயினர் தோழா - மிக
மோசம் அவர்க்கென்ன வந்தது கூறடி? தோழி - அட
முன்-மனு என்பவன் சொன்னதில் வந்தது தோழா - அவன்
நாசம் விளைக்க நவின்றது யாதடி? தோழி - சட்டம்
நால் வருணத்தினில் நாலாயிரம் சாதி தோழா - ஏசின்
ஆசை மதம்புகப் பேதம் அகன்றதோ? தோழி - அவர்க்
கங்குள்ள மூதேவி இங்கும் முளைத்தனள் தோழா!

சொல்லிய சேசுவின் தொண்டர்கள் எங்கடி? தோழி - அந்தத்
தொண்டர்கள் உள்ளனர், தொண்டு பறந்தது தோழா - அந்தப்
புல்லிய பேதத்தைப் போக்கினரோ அவர்? தோழி - அதைப்
போதாக் குறைக்குமுப் போகம் விளைத்தனர் தோழா - அடி
எல்லையில் பேதம் இழைத்தது தான் எவர்? தோழி - அட
இந்த நெடுஞ்சட்டை அந்தகரே அறி தோழா - முன்பு
வல்லவர் சேசு வகுத்தது தான்என்ன? தோழி - புவி
"மக்கள் எல்லாம்சமம்" என்று முழக்கினர் தோழா!

ஈண்டுள்ள தொண்டர்கள் என்ன செய்கின்றனர்? தோழி - அவர்
ஏழைகள் தாழ்வுறச் செல்வரை வாழ்த்தினர் தோழா - அடி
வேண்ட வரும்திருக் கோயில் வழக்கென்ன? தோழி - அட
மேற்குலம் தாழ்குலம் என்று பிரித்தனர் தோழா - விரல்
தீண்டப் படாதவர் என்பவர் யாரடி? தோழி - இங்குச்
சேசு மதத்தினை தாபித்த பேர்கள்என் தோழா - உளம்
தூண்டும் அருட்சேசு சொல்லிய தென்னடி? தோழி - அவர்
"சோதரர் யாவரும்" என்று முழங்கினர் தோழா!

பஞ்சமர் பார்ப்பனர் என்பதெல் லாம்என்ன? தோழி - இவை
பாரத நாட்டுப் பழிச்சின்னத் தின்பெயர் தோழா - இங்குக்
கொஞ்சமும் இப்பழி கொள்ளுதல் நல்லதோ? தோழி - ஒப்புக்
கொள்ளும் நிலத்தினில் கள்ளி முளைத்திடும் தோழா - இங்கு
நெஞ்சினிற் சேசுவின் தொண்டர் நினைப்பென்ன? தோழி - தினம்
நேர்மையில் கோயில்வி யாபாரம் செய்வது தோழா - இந்த
வஞ்சகர்க் கென்ன வழுத்தினர் சேசுநல் தோழி - இன்ப
வாழ்க்கை யடைந்திட யார்க்கும் சுதந்தரம் என்றார்!

நாலு சுவர்க்கு நடுப்புறம் ஏதுண்டு? தோழி - அங்கு
நல்ல மரத்தினிற் பொம்மை அமைத்தனர் தோழா - அந்த
ஆலயம் சாமி அமைத்தவர் யாரடி? தோழி - மக்கள்
அறிவை இருட்டாக்கி ஆள நினைப்பவர் தோழா - மக்கள்
மாலைத் தவிர்த்து வழிசெய்வ ரோஇனித் தோழி - செக்கு
மாடுக ளாக்கித்தம் காலைச்சுற் றச்செய்வர் தோழா - அந்தக்
கோலநற் சேசு குறித்தது தானென்ன? தோழி - ஆஹா
கோயிலென் றால்அன்பு தோய்மனம் என்றனர் தோழா!

ஆண்மைகொள் சேசு புவிக்குப் புரிந்ததென்? தோழி - அவர்
அன்பெனும் நன்முர செங்கும் முழக்கினர் தோழா - அந்தக்
கேண்மைகொள் சேசுவின் கீர்த்தி யுரைத்திடு தோழி - அவர்
கீர்த்தி யுரைத்திட வார்த்தை கிடைக்கிலை தோழா - நலம்
தாண்டவம் ஆடிடச் செய்தவரோ அவர்? தோழி - அன்று
தன்னைப் புவிக்குத் தரும்பெரு மானவர் தோழா - அந்த
ஆண்டவன் தொண்டர்கள் ஆகிடத் தக்கவர் யாவர்? - எனில்
"அன்னியர்ரு தான்"என்ற பேதமி லாதவர் தோழா.

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165puthiyaulagam.htm#dt161

உறுதி உறுதி உறுதி!
ஒன்றே சமுகம் என்றெண்ணார்க்கே - இறுதி!
உறுதி உறுதி உறுதி ...

உறவினர் ஆவார் ஒரு நாட்டார் - எனல்
உறுதி உறுதி உறுதி ...

பிறவியில் உயர்வும் தாழ்வும் சொல்லல் மடமை - இந்தப்
பிழைநீக் குவதே உயிருள் ளாரின் கடமை - நம்மிற்
குறைசொல வேண்டாம் உறவினர் பகைநீங் குங்கோள் - உங்கள்
குகையினை விட்டே வெளிவரு வீர்சிங் கங்காள்
உறுதி உறுதி உறுதி ...

நாட்டுக் குலையில் தீட்டுச் சொல்வார் மொழியை - நாமே
நம்பித் தேடிக் கொண்டோ ம் மீளாப் பழியை - நாட்டின்
கோட்டைக் கதவைக் காக்கத் தவறும் அந்நாள் - இந்தக்
குற்றம் செய்தோம்; விடுவோம்; வாழ்வோம் இந்நாள்
உறுதி உறுதி உறுதி ...

வாழ்விற் செம்மை அடைதல் வேண்டும் நாமே - நம்மில்
வஞ்சம் காட்டிச் சிலரைத் தாழ்த்தல் தீமை - புவியில்
வாழ்வோ ரெல்லாம் சமதர் மத்தால் வாழ்வோர் - மற்றும்
வரிதிற் றாழ்வோர் பேதத் தாலே தாழ்வோர்
உறுதி உறுதி உறுதி ...

தேசத் தினர்கள் ஓர்தாய் தந்திடு சேய்கள் - இதனைத்
தெளியா மக்கள் பிறரை நத்தும் நாய்கள் - மிகவும்
நேசத் தாலே நாமெல் லாரும் ஒன்றாய் - நின்றால்
நிறைவாழ் வடைவோம் சலியா வயிரக் குன்றாய்.
உறுதி உறுதி உறுதி ...

பத்துங் கூடிப் பயனைத் தேடும் போது - நம்மில்
பகைகொண் டிழிவாய்க் கூறிக் கொள்ளல் தீது - நம்
சித்தத் தினிலே இருளைப் போக்கும் சொல்லைக் - கேளீர்
செனனத் தாலே உயர்வும் தாழ்வும் இல்லை
உறுதி உறுதி உறுதி ...
http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165puthiyaulagam.htm#dt160

மத - ஓடத்திலேறிய மாந்தரே - பலி
பீடத்திலே சாய்ந்தீரே!

பாடுபட் டீர்கள் பருக்கையில் லாதொரு
பட்டியில் மாடென வாழ்கின்றீர் - மதக்
கேடர்கள் காலினில் வீழ்கின்றீர் - ஒண்ட
வீடுமில் லாமலே தாழ்கின்றீர்!
மத - ஓடத்திலேறிய ...

பாதிக்கு தேபசி என்றுரைத் தால்,செய்த
பாபத்தைக் காரணம் காட்டுவார் - மத
வாதத்தை உம்மிடம் நீட்டுவார் - பதில்
ஓதிநின் றால்படை கூட்டுவார்.
மத - ஓடத்திலேறிய ...

வாதனை சொல்லி வணங்கிநின் றால்தெய்வ
சோதனை என்றவர் சொல்லுவார் - பணச்
சாதனையால் உம்மை வெல்லுவார் - கெட்ட
போதனையால் தினம் கொல்லுவார்.
மத - ஓடத்திலேறிய ...

பேதிக்கும் நோய்க்கும் பெரும்பசிக் கும்,பல
பீதிக்கும் வாய்திறப் பீர்களோ! - இழி
சாதியென்றால் எதிர்ப் பீர்களோ? - செல்வர்
வீதியைத் தான் மதிப்பீர்களோ?
மத - ஓடத்திலேறிய ...

கூடித் தவிக்கும் குழந்தை மனைவியர்
கூழை நினைத்திடும் போதிலே - கோயில்
வேடிக்கையாம் தெரு மீதிலே - செல்வர்
வாடிக்கை ஏற்பீரோ காதிலே?
மத - ஓடத்திலேறிய ...

தொட்டிடும் வேலை தொடங்கலு மின்றியே
தொந்தி சுமக்கும்பு ரோகிதர் - இட்ட
சட்டப்படிக்கு நீரோ பதர் - அவர்
அட்டகா சத்தினுக் கேதெதிர்?
மத - ஓடத்திலேறிய ...

மூடத் தனத்தை முடுக்கும் மதத்தைநிர்
மூலப் படுத்தக்கை ஓங்குவீர் - பலி
பீடத்தை விட்டினி நீங்குவீர் - செல்வ
நாடு நமக்கென்று வாங்குவீர்.
மத - ஓடத்திலேறிய ...

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165puthiyaulagam.htm#dt159

புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்.
புதியதோர் உலகம் ...

பொதுஉடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோ டதைஎங்கள் உயிரென்று காப்போம்.
புதியதோர் உலகம் ...

இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம்
யுஇதுஎனதெரு ன்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம்
புதியதோர் உலகம் ...

உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம்
யுஒருபொருள் தனிருஎனும் மனிதரைச் சிரிப்போம்!
புதியதோர் உலகம் ...

இயல்பொருள் பயன்தர மறுத்திடில் பசிப்போம்
ஈவதுண்டாம் எனில் அனைவரும் புசிப்போம்.
புதியதோர் உலகம் ...

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165puthiyaulagam.htm#dt158

சித்திரச் சோலைகளே! உமை நன்கு
திருத்த இப் பாரினிலே - முன்னர்
எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தன
ரோ!உங்கள் வேரினிலே.

நித்தம் திருத்திய நேர்மையி னால்மிகு
நெல்விளை நன்னிலமே! - உனக்
கெத்தனை மாந்தர்கள் நெற்றி வியர்வை
இறைத்தனர் காண்கிலமே.

தாமரை பூத்த தடாகங்களே! உமைத்
தந்தஅக் காலத்திலே - எங்கள்
தூய்மைச் சகோதரர் தூர்ந்து மறைந்ததைச்
சொல்லவோ ஞாலத்திலே.

மாமிகு பாதைகளே! உமை இப்பெரு
வையமெ லாம் வகுத்தார் - அவர்
ஆமை எனப்புலன் ஐந்தும் ஒடுங்கிட
அந்தியெலாம் உழைத்தார்.

ஆர்த்திடும் யந்திரக் கூட்டங்களே! - உங்கள்
ஆதி அந்தம் சொல்லவோ? - நீங்கள்
ஊர்த்தொழி லாளர் உழைத்த உழைப்பில்
உதித்தது மெய்அல்லவோ?

கீர்த்திகொள் போகப் பொருட்புவியே! உன்றன்
கீழிருக்கும் கடைக்கால் - எங்கள்
சீர்த்தொழி லாளர் உழைத்த உடம்பிற்
சிதைந்த நரம்புகள்தோல்!

நீர்கனல் நல்ல நிலம்வெளி காற்றென
நின்ற இயற்கைகளே! - உம்மைச்
சாரும் புவிப்பொருள் தந்ததெவை? தொழி
லாளார் தடக்கைகளே!

தாரணியே! தொழி லாளர் உழைப்புக்குச்
சாட்சியும் நீயன்றோ? - பசி
தீரும் என்றால் உயிர்போகும் எனச்சொல்லும்
செல்வர்கள் நீதிநன்றோ ?

எலிகள் புசிக்க எலாம்கொடுத்தே சிங்க
ஏறுகள் ஏங்கிடுமோ? - இனிப்
புலிகள் நரிக்குப் புசிப்பளித்தே பெரும்
புதரினில் தூங்கிடுமோ?

கிலியை விடுத்துக் கிளர்ந்தெழுவார் இனிக்
கெஞ்சும்உத் தேசமில்லை - சொந்த
வலிவுடையார் இன்ப வாழ்வுடையார் இந்த
வார்த்தைக்கு மோசமில்லை.

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165puthiyaulagam.htm#dt157

அதிகாலை
கிழக்கு வெளுக்கமுன் வெளியிற் கிளம்பினேன்
ஒளிசெயும் மணியிருள், குளிர்ச்சி, நிசப்தம்,
இவற்றிடை என்னுளம் துள்ளும் மான்குட்டி!
உத்ஸாகம் எனைத் தூக்கி ஓடினது!

இயற்கை
குன்றம் இருக்கும்.அக் குன்றத் தின்பால்
குளமும், அழகிய குளிர்பூஞ் சோலையும்
அழகு செய்யும்! அவ்விடத் தில்தான்
என்றன் சொந்த நன்செய் உள்ளது.

பகல்
கடல்மிசை உதித்த பரிதியின் நெடுங்கதிர்
வானெலாம் பாய்ந்தது! பறந்தது வல்லிருள்!
புவியின் சித்திரம் ஒளியிற் பொலிந்தது.
இயற்கை தந்த எழிலிடை நடந்தேன்.

வயல்
வளம்பெற நிறைந்த இளம்பயிர்ப் பசுமை
மரகதம் குவிந்த வண்ணம் ஆயிற்று;
மரகதக் குவியல்மேல் வாய்ந்த பனித்துளி
காணக்கண் கூசும் வயிரக் களஞ்சியம்!
பரந்தஎன் வயலைப் பார்த்துக்கொண் டிருந்தேன்
மகிழ்ச்சி தவிர மற்றொன்று காணேன்!

உழைப்பு
களையினைக் களைவது கருதி, எனது
பண்ணை ஆட்கள் பலபேர் வந்தனர்.
என்னை வணங்கினர்; வயலில் இறங்கினர்.
வில்லாய் வளைந்தது மேனி; அவர்தோள்
விசையாய்க் களைந்தது களையின் விளைவை!
முகவிழி கவிழ்ந்து வயலில் மொய்த்தது.

நடுப்பகல்
காலைப் போதினைக் கனலாற் பொசுக்கிச்
சூரியன் ஏறி உச்சியிற் சூழ்ந்தான்.
சுடுவெயில் உழவர் தோலை உரித்தது;
புதுமலர்ச் சோலையில் போய்விட்டேன் நான்.

வெயில்
குளிர்புனல் தெளிந்து நிறைந்த மணிக்குளம்!
நிழல்சேர் கரையில் நின்றுகொண் டிருந்தேன்
புழுக்கமும் வியர்வையும் எழுப்பி என்னை
நலிவு செய்த நச்சு வெய்யில்,
வானி லிருந்து மண்ணிற் குதித்துத்
தேன்மலர்ச் சோலை செழுமை கடந்தென்
உளத்தையும் உயிரையும் பிளப்பது விந்தை!
குளத்தில் விழுந்து குளிக்கத் தொடங்கினேன்.
வெள்ளப் புனலும் கொள்ளிபோல் சுட்டது.

உழைப்புத் துன்பம்
காலைப் போதினைக் கனலால் பொசுக்கிச்
சோலையும் கடந்து சுடவந்த வெய்யில்
விரிபுனற் குளத்தையும் வெதுப்பிய தெண்ணினேன்.
எண்ணும் போதென் கண்ணின் எதிரில்
வியர்வையும் அயர்வுமாய்ப் பண்ணை யாட்கள்
வந்து நின்று வணக்கம் செய்தனர்.
ஐயகோ நெஞ்சமே, இந்த ஆட்கள்
தாங்கொணாக் கனலை எவ்வாறு தாங்கினர்?

வியர்வைக் கடலின் காட்சி
களைபோக்கும் சிறுபயன் விளைக்க இவர்கள்
உடலைக் கசக்கி உதிர்த்த வியர்வையின்
ஒவ்வொரு துளியிலும் கண்டேன்
இவ்வுல குழைப்பவர்க் குரிய தென்பதையே!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165puthiyaulagam.htm#dt156

வாழ்வதிலும் நலம் சூழ்வதிலும் - புவி
மக்களெல்லாம் ஒப்புடையார்!

ஏழ்மையில் மக்களைத் தள்ளுவதோ? - இதை
இன்பமெனச் சிலர் கொள்ளுவதோ?
வாழ்வதிலும் நலம் ...

கூழுக்குப் பற்பலர் வாடவும் சிற்சிலர்
கொள்ளை யடிப்பதும் நீதியோ - புவி
வாழ்வதுதான் எந்தத் தேதியோ?
வாழ்வதிலும் நலம் ...

சிற்சிலர் வாழ்ந்திடப் பற்பலர் உழைத்துத்
தீர்கஎனும் இந்த லோகமே - உரு
அற்றொழிந் தாலும்நன் றாகுமே!
வாழ்வதிலும் நலம் ...

காண்பதெலாம் தொழிலாளி செய்தான் அவன்
காணத் தகுந்தது வறுமையாம் - அவன்
பூணத் தகுந்ததும் பொறுமையாம்!
வாழ்வதிலும் நலம் ...

அன்பெனச் சொல்லியிங் காதிமுதற் பேத
வன்பை வளர்த்தனர் பாரிலே - அதன்
பின்புகண் டோ ம்இதை நேரிலே!
வாழ்வதிலும் நலம் ...

மக்கள் பசிக்க மடத்தலைவர்க் கெனில்
வாழை யிலைமுற்றும் நறுநெய்யாம் - இது
மிக்குயிர் மேல்வைத்த கருணையாம்!
வாழ்வதிலும் நலம் ...

கோயிலிலே பொருள் கூட்டும் குருக்களும்
கோதையர் தோளினிற் சாய்கின்றார் - இங்கு
நோயினிலே மக்கள் மாய்கின்றார்!
வாழ்வதிலும் நலம் ...

கோரும் துரைத்தனத் தாரும் பெரும்பொருள்
கொண்டவர்க்கே நலம் கூட்டுவார் - உழைப்
போரிடமே கத்தி தீட்டுவார்!
வாழ்வதிலும் நலம் ...

மக்களெல் லாம்சம மாக அடைந்திட
மாநிலம் தந்ததில் வஞ்சமோ? - பசி
மிக்கவரின் தொகை கொஞ்சமோ?
வாழ்வதிலும் நலம் ...

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165puthiyaulagam.htm#dt155

பள்ளம் பறிப்பாய், பாதா ளத்தின்
அடிப்புறம் நோக்கி அழுந்துக! அழுந்துக!
பள்ளந் தனில்விழும் பிள்ளைப் பூச்சியே,
தலையைத் தாழ்த்து! முகத்தைத் தாழ்த்து!
தோளையும் உதட்டையும் தொங்கவை! ஈன
உளத்தை, உடலை, உயிரைச் சுருக்கு!
நக்கிக்குடி! அதை நல்லதென்று சொல்!
தாழ்ந்து தாழ்ந்து தாழ்ந்த நாயினும்
தாழ்ந்துபோ! குனிந்து தரையைக் கெளவி
ஆமையைப் போலே அடங்கி ஒடுங்கு!
பொட்டுப் பூச்சியே, புன்மைத் தேரையே,
அழு!இளி! அஞ்சு! குனி! பிதற்று!
கன்னங் கருத்த இருட்டின் கறையே!
தொங்கும் நரம்பின் தூளே! இதைக்கேள்:
மனிதரில் நீயுமோர் மனிதன்; மண்ணன்று!
இமைதிற! எழுந்து நன்றாய் எண்ணுவாய்!
தோளை உயர்த்து! சுடர்முகம் தூக்கு!
மீசையை முறுக்கி மேலே ஏற்று!
விழித்த விழியில் மேதினிக் கொளிசெய்!
நகைப்பை முழக்கு! நடத்து லோகத்தை!
உன்வீடு - உனது பக்கத்து வீட்டின்
இடையில் வைத்த சுவரை இடித்து
வீதிகள் இடையில் திரையை விலக்கி
நாட்டொடு நாட்டை இணைத்து மேலே
ஏறு! வானை இடிக்கும் மலைமேல்
ஏறு விடாமல்! ஏறு மேன்மேல்!
ஏறி நின்று பாரடா எங்கும்!
எங்கும் பாரடா இப்புவி மக்களை!
பாரடா உனது மானிடப் பரப்பை!
பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்!
யுஎன்குலம்ரு என்றுனைத் தன்னிடம் ஒட்டிய
மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சிகொள்!
அறிவை விரிவுசெய்! அகண்ட மாக்கு!
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!
அணைந்துகொள்! உன்னைச் சங்கம மாக்கு.
மானிட சமுத்திரம் நானென்று கூவு!
பிரிவிலை எங்கும் பேத மில்லை
உலகம் உண்ணஉண்! உடுத்த உடுப்பாய்!
புகல்வேன்: "உடைமை மக்களுக்குப் பொது!"
புவியை நடத்து! பொதுவில் நடத்து!
வானைப் போல மக்களைத் தாவும்
வெள்ள அன்பால் இதனைக்
குள்ள மனிதர்க்கும் கூறடா தோழனே!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165puthiyaulagam.htm#dt154

பகுத்தறிவு மன்றத்தில் உலகம்என்ற
பழயமுத லாளியினை நிற்கவைத்து
மிகுத்திருந்த உன்நன்செய், புன்செய்யாவும்
வெகுகாலத் தின்முன்னே, மக்கள்யாரும்
சுகித்திருக்கக் குத்தகைக்கு விட்டதுண்டோ ?
சொல்!என்றேன்; உலகப்பன் ஆம்ஆம்என்றான்.
வகுத்தஅந்தக் குத்தகைக்குச் சீட்டுமுண்டோ
வாய்ச்சொல்லோ என்றுரைத்தேன். வாய்ச்சொல்என்றான்.

குத்தகைக்கா ரர்தமக்குக் குறித்தஎல்லை
குறித்தபடி உள்ளதுவா என்றுகேட்டேன்.
கைத்திறனும் வாய்த்திறனும் கொண்டபேர்கள்
கண்மூடி மக்களது நிலத்தையெல்லாம்
கொத்திக்கொண் டேப்பமிட்டு வந்ததாலே
கூலிமக்கள் அதிகரித்தார், என்னசெய்வேன்!
பொத்தல்இலைக் கலமானார் ஏழைமக்கள்;
புனல்நிறைந்த தொட்டியைப்போல் ஆனார்செல்வர்.

அதிகரித்த தொகைதொகையாய்ச் செல்வமெல்லாம்
அடுக்கடுகாய்ச் சிலரிடம்போய் ஏறிக்கொண்டு
சதிராடு தேவடியாள் போல்ஆடிற்று!
தரித்திரரோ புழுப்போலே துடிக்கின்றார்கள்;
இதுஇந்நாள் நிலைஎன்றான் உலகப்பன்தான்!
இந்நிலையி லிருப்பதனால் உலகப்பாநீ
புதுக்கணக்குப் போட்டுவிடு; பொருளைஎல்லாம்
பொதுவாக எல்லார்க்கும் குத்தகைசெய்.

ஏழைமுத லாளியென்ப தில்லாமற்செய்
என்றுரைத்தேன். உலகப்பன் எழுந்துதுள்ளி,
ஆழமப்பா உன்வார்த்தை! உண்மையப்பா,
அதற்கென்ன தடையப்பா, இல்லையப்பா;
ஆழமப்பா உன்கருத்து, மெய்தானப்பா,
அழகாயும் இருக்குதப்பா, நல்லதப்பா,
தாழ்வுயர்வு நீங்குமப்பா, என்றுசொல்லித்
தகதகென ஆடினான். நான்சிரித்து,

ஆடுகின்றாய் உலகப்பா! யோசித்துப்பார்!
ஆர்ப்பாட்டக் காரர்இதை ஒப்பாரப்பா!
தேடப்பா ஒருவழியை என்றுசொன்னேன்.
செகத்தப்பன் யோசித்துச் சித்தம்சோர்ந்தான்.
ஓடப்ப ராயிருக்கும் ஏழையப்பர்
உதையயப்ப ராகிவிட்டால், ஓர்நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம்மாறி
ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பாநீ!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165puthiyaulagam.htm#dt153

சாதிமத பேதங்கள் மூடவழக் கங்கள்
தாங்கிநடை பெற்றுவரும் சண்டை யுலகிதனை
ஊதையினில் துரும்புபோல் அலக்கழிப்போம்; பின்னர்
ஒழித்திடுவோம்; புதியதோர் உலகம் செய்வோம்!
பேதமிலா அறிவுடைய அவ்வுலகத் திற்குப்
பேசுசுய மரியாதை உலகெனப் பேர்வைப்போம்!
ஈதேகாண்! சமுகமே, யாம்சொன்ன வழியில்
ஏறுநீ! ஏறுநீ! ஏறுநீ! ஏறே.

அண்டுபவர் அண்டாத வகை செய்கின்ற
அநியாயம் செய்வதெது? மதங்கள் அன்றோ?
கொண்டு விட்டோ ம் பேரறிவு, பெருஞ்செயல்கள்
கொழித்து விட்டோ ம் என்றிங்கே கூறுவார்கள்.
பண்டொழிந்த புத்தன், ராமாநு ஞன்,மு
கம்மது, கிறிஸ்து-எனும் பலபேர் சொல்லிச்
சண்டையிடும் அறியாமை அறிந்தா ரில்லை!
சமூகமே ஏறுநீ, எம்கொள் கைக்கே!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165puthiyaulagam.htm#dt152

மானிடத் தன்மையைக் கொண்டு - பலர்
வையத்தை ஆள்வது நாம்கண்ட துண்டு
மானிடத் தன்மையை நம்பி - அதன்
வன்மையி னாற்புவி வாழ்வுகொள் தம்பி!
"மானிடம்" என்றொரு வாளும் - அதை
வசத்தில் அடைந்திட்ட உன்இரு தோளும்
வானும் வசப்பட வைக்கும் - இதில்
வைத்திடும் நம்பிக்கை, வாழ்வைப் பெருக்கும்
மானிடத் தன்மையைக் ...

மானிடன் வாழ்ந்த வரைக்கும் - இந்த
வையத்திலே அவன் செய்த வரைக்கும்
மானிடத் தன்மைக்கு வேறாய் - ஒரு
வல்லமை கேட்டிருந்தால் அதைக் கூறாய்!
மானிடம் என்பது புல்லோ? - அன்றி
மரக்கட்டை யைக்குறித் திடவந்த சொல்லோ?
கானிடை வாழ்ந்ததும் உண்டு - பின்பு
கடலை வசப்படச் செய்ததும் அதுதான்!
மானிடத் தன்மையைக் ...

மானிடம் போற்ற மறுக்கும் - ஒரு
மானிடன் தன்னைத்தன் உயிரும் வெறுக்கும்;
மானிடம் என்பது குன்று - தனில்
வாய்ந்த சமத்துவ உச்சியில் நின்று
மானிடருக் கினி தாக - இங்கு
வாய்த்த பகுத்தறி வாம்விழி யாலே
வான்திசை எங்கணும் நீபார்! - வாழ்வின்
வல்லமை யுமானிடத் தன்மைருஎன் றதேர்!
மானிடத் தன்மையைக் ...

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165puthiyaulagam.htm#dt151

சாந்தியால் உலகம் தழைப்பது நன்றா?
சமயபே தம்வளர்த்தே தளர்வது நன்றா?
மாந்தரிற் சாதி வகுப்பது சரியா?
மக்கள் ஒரேகுலமாய் வாழ்வது சரியா?

வாய்ந்தபோர்க் குறிபோல் மதக்குறி இனிதா?
மனமொழி மெய்ஒன்றி மகிழுதல் இனிதா?
ஆய்ந்துபார் நெஞ்சமே அமைதிதான் சிறப்பா?
அண்டைவீட் டைப்பறிக்கும் சண்டைதான் சிறப்பா?

காணுமா னிடரைக் கனம்செயல் முறையா?
கடவுள் எனும்மயக்கில் கவிழ்ப்பது முறையா?
மாணுறும் தன்னம்பிக்கை வளர்ப்பது நலமா?
வயப்படும் பக்தியினால் பயப்படல் நலமா?

வீணரைப் பணிவது மக்களின் கடனா?
மேவும் உழைப்பினிலே ஏவுதல் கடனா?
நாணு மூடவழக்கம் நாடுதல் பெரிதா?
நல்லறி வென்னும்வழிச் செல்லுதல் பெரிதா?

கோயிலுக் கொன்று கொடுத்திடல் அறமா?
கோடி கொடுக்கும்கல்வி தேடிடல் அறமா?
வாயிலில் வறியரை வளர்த்திடல் அன்போ?
மடத்தில் வீணிற்பொருளைக் கொடுத்திடல் அன்போ?

நாயிலுங் கடையாய் நலிவது மேலா?
நல்லகூட் டுத்தொழில்கள் நாட்டிடல் மேலா?
ஓய்வறி யார்உறங்க இடந்தரல் உயர்வா?
ஊரை வளைக்கும்குரு மார்செயல் உயர்வா?

மாதர்தம் உரிமை மறுப்பது மாண்பா?
மாதர்முன் னேற்றத்தால் மகிழ்வது மாண்பா?
மேதினி துயர்ப்பட விரும்புதல் இதமா?
விதவைக்கு மறுமணம் உதவுதல் இதமா?

கோதையர் காதல்மணம் கொள்வது சீரோ?
குழந்தைக்கு மணஞ்செய்து கொல்வது சீரோ?
போதனையாற் பெண்கள் பொதுவெனல் கனமோ?
பொட்டுக்கட்டும் வழக்கம் போக்குதல் கனமோ?

பாழ்படும் பழமை சூழ்வது திறமா?
பகுத்தறிவால் நலம் வகுப்பது திறமா?
தாழ்பவர் தம்மைத் தாழ்த்துதல் சால்போ?
தனம்காப் பவர்தங்கள் இனம்காத்தல் சால்போ?

ஆழ்வுறும் ஆத்திகம் வைதிகம் சுகமா?
அகிலமேற் சமதர்மம் அமைப்பது சுகமா?
சூழும் நற்பேதம் தொடர்வது வாழ்வோ?
சுயமரி யாதையால் உயர்வது வாழ்வோ?

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165puthiyaulagam.htm#dt150

ஆற்றோரம் தழைமரங்கள் அடர்ந்தஒரு தோப்பில்
அழகான இளமங்கை ஆடுகின்றாள் ஊஞ்சல்!
சேற்றுமண்ணால் திண்ணையிலே உட்கார்ந்து பொம்மை
செய்துவிளை யாடுகின்றான் மற்றுமொரு பிள்ளை!
ஏற்றிவைத்த மணிவிளக்கின் அண்டையிலே பாயில்
இளஞ்சிசுவும் பெற்றவளும் கொஞ்சுகின்றார் ஓர்பால்!
ஏற்றகடன் தொல்லையினால் நோய்கொண்ட தந்தை
ஏ!என்று கூச்சலிட்டான்; நிலைதவறி வீழ்ந்தான்!

அண்டைஅயல் மனிதரெல்லாம் ஓடிவந்தார். ஆங்கே
அருந்துணைவி நாயகனின் முகத்தில்முகம் வைத்துக்
கெண்டைவிழிப் புனல்சோர அழுதுதுடித் திட்டாள்;
கீழ்க்கிடந்து மெய்சோர்ந்த நோயாளி தானும்
தொண்டையிலே உயிரெழுப்பும் ஒலியின்றிக் கண்ணில்
தோற்றமது குறைவுபடச் சுவாசம்மேல் வாங்க,
மண்டைசுழ லக்கண்ணீர் வடித்துவடித் தழுதான்.
மனமுண்டு வாயில்லை என்செய்வான் பாவம்!

பேசாயோ வாய்திறந்து பெற்றெடுத்த உன்றன்
பிள்ளைகளைக் கண்கொண்டு பாராயோ என்றன்
வீசாத மணிஒளியே! என்றுரைத்தாள் மனைவி.
விருப்பமதை இன்னதென விளம்பிடுக, என்று
நேசரெலாம் கேட்டார்கள். கேட்டநோயாளி
நெஞ்சினையும் விழிகளையும் தன்னிலையில் ஆக்கிப்
பேசமுடி யாநிலையில் ஈனசுரத் தாலே
பெண்டுபிள்ளை! பெண்டுபிள்ளை!! என்றுரைத்தான் சோர்ந்தான்!!!

எதிர்இருந்தோர் இதுகேட்டார்; மிகஇரக்கங் கொண்டார்.
இறப்பவனைத் தேற்றவெண்ணி ஏதேதோ சொன்னார்.
இதுதேதி உன்கடனைத் தீர்க்கின்றோம் என்றார்.
இருந்தநிலை மாறவில்லை மற்றொருவன் வந்து
மதிவந்து விட்டதண்ணே நமதுசர்க்கா ருக்கு!
புமக்களுக்குப் புவிப்பொருள்கள் பொதுமுவென்று சர்க்கார்
பதிந்துவிட்டார் இனிப்பெண்டு பிள்ளைகளைப் பற்றிப்
பயமில்லை! கவலையில்லை! மெய்யண்ணே, மெய்மெய்!!

என்றுசொன்னான் தேற்றுமொழி, இறக்கின்ற மனிதன்
இறக்குங்கால் கவலையின்றி இறக்கட்டும் என்று!
நன்றிந்த வார்த்தைஅவன் காதினிலே பாய்ந்து
நலிவுற்ற உள்ளத்தைப் புலியுளமாய்ச் செய்து
சென்றஉயிர் செல்லாமல் செய்ததனால் அங்குச்
செத்துவிட்ட அம்மனிதன் பொத்தெனவே குந்தி,
இன்றுநான் சாவதற்கே அஞ்சவில்லை என்றான்!
இறப்பதெனில் இனியெனக்குக் கற்கண்டென் றானே!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165puthiyaulagam.htm#dt149

சுயமரி யாதைகொள் தோழா! - நீ
துயர் கெடுப்பாய் வாழ்வில் உயர்வடைவாயே!
சுயமரி யாதைகொள் ...

உயர்வென்று பார்ப்பனன் சொன்னால் - நீ
உலகினில் மக்கள் எல்லாம்சமம் என்பாய்;
துயருறத் தாழ்ந்தவர் உள்ளார் - என்று
சொல்லிடுந் தீயரைத் தூவென் றுமிழ்வாய்!
அயலொரு கூட்டத்தார் ஆள்வோர் - சிலர்
ஆட்பட் டிருப்பவர் என்று சொல்வோரைப்
பயமின்றி நீதிருந் தச்சொல்! - சிலர்
பழமைசொன் னால்புது நிலைநலம் காட்டு!
சுயமரி யாதைகொள் ...

சேசு முகம்மது என்றும் - மற்றும்
சிவனென்றும் அரியென்றும் சித்தார்த்த னென்றும்,
பேசி வளர்க்கின்ற போரில் - உன்
பெயரையும் கூட்டுவார் நீஒப்ப வேண்டாம்!
காசைப் பிடுங்கிடு தற்கே - பலர்
கடவுளென் பார்!இரு காதையும் மூடு!
கூசி நடுங்கிடு தம்பி! - கெட்ட
கோயிலென் றால்ஒரு காதத்தி லோடு!
சுயமரி யாதைகொள் ...

கோயில் திருப்பணி என்பார் - அந்தக்
கோவில் விழாவென்று சொல்லியுன் வீட்டு
வாயிலில் வந்துனைக் காசு - கேட்கும்
வஞ்சக மூடரை மனிதர் என்னாதே!
வாயைத் திறக்கவும் சக்தி - இன்றி
வயிற்றைப் பிசைந்திடும் ஏழைகட் கேநீ
தாயென்ற பாவனை யோடும் - உன்
சதையையும் ஈந்திட ஒப்புதல் வேண்டும்.
சுயமரி யாதைகொள் ...

கடவுள் துவக்கிக் கொடுத்த - பல
கவிதைகள், பதிகங்கள் செப்பிய பேர்கள்,
கடவுள் புவிக்கவ தாரம் - அந்தக்
கடவுளின் தொண்டர்கள், லோக குருக்கள்,
கடவுள் நிகர் தம்பிரான்கள் - ஜீயர்,
கழுகொத்த பூசுரர், பரமாத்து மாக்கள்
கடவுள் அனுப்பிய தூதர் - வேறு
கதைகளி னாலும் சுகங்கண்ட துண்டா?
சுயமரி யாதைகொள் ...

அடிமை தவிர்த்ததும் உண்டோ ? - அன்றி
ஆதிமுதல் இந்தத் தேதி வரைக்கும்,
மிடிமை தவிர்த்ததும் உண்டோ ? - அன்றி
மேல்நிலை என்பதைக் கண்டதும் உண்டோ ?
குடிக்கவும் நீரற் றிருக்கும் - ஏழைக்
கூட்டத்தை எண்ணாமல், கொடுந்தடி யர்க்கு
மடங்கட்டி வைத்ததி னாலே - தம்பி!
வசம்கெட்டுப் போனது நமதுநன் னாடு.
சுயமரி யாதைகொள் ...

உழைக்காத வஞ்சகர் தம்மை - மிக
உயர்வான சாதுக்கள் என்பது நன்றோ?
விழித்திருக் கும்போதி லேயே - நாட்டில்
விளையாடும் திருடரைச் சாமிஎன் கின்றார்!
அழியாத மூடத் தனத்தை - ஏட்டில்
அழகாய் வரைந்திடும் பழிகாரர் தம்மை
முழுதாய்ந்த பாவலர் என்பார் - இவர்
முதலெழுத் தோதினும் மதியிருட் டாகும்!
சுயமரி யாதைகொள் ...

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165puthiyaulagam.htm#dt148

காடு களைந்தோம் - நல்ல
கழனி திருத்தியும் உழவு புரிந்தும்
நாடுகள் செய்தோம் - அங்கு
நாற்றிசை வீதிகள் தோற்றவும் செய்தோம்
வீடுகள் கண்டோ ம் - அங்கு
வேண்டிய பண்டங்கள் ஈண்டிடச் செய்தோம்
பாடுகள் பட்டோ ம் - புவி
பதமுறவே நாங்கள் நிதமும் உழைத்தோம்.

மலையைப் பிளந்தோம் - புவி
வாழவென் றேகடல் ஆழமும் தூர்த்தோம்
அலைகடல் மீதில் - பல்
லாயிரங் கப்பல்கள் போய்வரச் செய்தோம்
பலதொல் லையுற்றோம் - யாம்
பாதாளம் சென்று பசும்பொன் எடுத்தோம்
உலையில் இரும்பை - யாம்
உருக்கிப்பல் யந்திரம் பெருக்கியுந் தந்தோம்.

ஆடைகள் நெய்தோம் - பெரும்
ஆற்றை வளைத்துநெல் நாற்றுக்கள் நட்டோ ம்;
கூடை கலங்கள் - முதல்
கோபுரம் நற்சுதை வேலைகள் செய்தோம்
கோடையைக் காக்க - யாம்
குடையளித் தோம்நல்ல நடையன்கள் செய்தோம்
தேடிய பண்டம் - இந்தச்
செகத்தில் நிறைந்திட முகத்தெதிர் வைத்தோம்.

வாழ்வுக் கொவ்வாத - இந்த
வையத்தில் இந்நிலை எய்தப் புரிந்தோம்
ஆழ்கடல் காடு - மலை
அத்தனை யிற்பல சத்தை யெடுத்தோம்.
ஈழை அசுத்தம் - குப்பை
இலைஎன்ன வேஎங்கள் தலையிற் சுமந்தோம்.
சூழக் கிடந்தோம் - புவித்
தொழிலாள ராம்எங்கள் நிலைமையைக் கேளீர்.

கந்தை யணிந்தோம் - இரு
கையை விரித்தெங்கள் மெய்யினைப் போர்த்தோம்.
மொந்தையிற் கூழைப் - பலர்
மொய்த்துக் குடித்துப் பசித்துக் கிடந்தோம்
சந்தையில் மாடாய் - யாம்
சந்ததம் தங்கிட வீடுமில் லாமல்
சிந்தை மெலிந்தோம் - எங்கள்
சேவைக் கெலாம்இது செய்நன்றி தானோ?

மதத்தவன் தலைவீர்! - இந்த
மண்ணை வளைத்துள்ள அண்ணாத்தை மாரே!
குதர்க்கம் விளைத்தே - பெருங்
கொள்ளை யடித்திட்ட கோடி சுரர்காள்!
வதக்கிப் பிழிந்தே - சொத்தை
வடிகட்டி எம்மைத் துடிக்க விட்டீரே!
நிதியின் பெருக்கம் - விளை
நிலமுற்றும் உங்கள் வசம்பண்ணி விட்டீர்!

செப்புதல் கேட்பீர்! - இந்தச்
செகத்தொழி லாளர்கள் மிகப்பலர் ஆதலின்,
கப்பல் களாக - இனித்
தொழும்பர்க ளாக மதித்திட வேண்டாம்!
இப்பொழு தேநீர் - பொது
இன்பம் விளைந்திட உங்களின் சொத்தை
ஒப்ப டைப்பீரே - எங்கள்
உடலில் இரத்தம் கொதிப்பேறு முன்பே
ஒப்படைப்பீரே!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165puthiyaulagam.htm#dt147

 கூடித் தொழில்செய்தோர் கொள்ளைலா பம்பெற்றார்
வாடிடும் பேதத்தால் வாய்ப்பதுண்டோ தோழர்களே!
நாடிய ஓர்தொழில் நாட்டார் பலர்சேர்ந்தால்
கேடில்லை நன்மை கிடைக்குமன்றோ தோழர்களே!
சிறுமுதலால் லாபம் சிறிதாகும்; ஆயிரம்பேர்
உறுமுதலால் லாபம் உயருமன்றோ தோழர்களே!
அறுபதுபேர் ஆக்கும் அதனை ஒருவன்
பெறுவதுதான் சாத்தியமோ பேசிடுவீர் தோழர்களே!
பற்பலபேர் சேர்க்கை பலம்சேர்க்கும்; செய்தொழிலில்
முற்போக்கும் உண்டாகும் முன்னிடுவீர் தோழர்களே!
ஒற்றைக்கை தட்டினால் ஓசை பெருகிடுமோ
மற்றும் பலரால் வளம்பெறுமோ தோழர்களே!
ஒருவன் அறிதொழிலை ஊரார் தொழிலாக்கிப்
பெரும்பே றடைவதுதான் பெற்றிஎன்க தோழர்களே!
இருவர் ஒருதொழிலில் இரண்டுநாள் ஒத்திருந்த
சரிதம் அரிதுநம் தாய்நாட்டில் தோழர்களே!
நாடெங்கும் வாழ்குவதிற் கேடொன்று மில்லைஎனும்
பாடம் அதைஉணர்ந்தாற் பயன்பெறலாம் தோழர்களே!
பீடுற்றார் மேற்கில் பிறநாட்டார் என்பதெலாம்
கூடித் தொழில்செய்யும் கொள்கையினால் தோழர்களே!
ஐந்துரூபாய்ச் சரக்கை ஐந்துபணத்தால் முடித்தல்
சிந்தை ஒருமித்தால் செய்திடலாம் தோழர்களே!
சந்தைக் கடையோநம் தாய்நாடு? லக்ஷம்பேர்
சிந்தைவைத்தால் நம்தொழிலும் சிறப்படையும் தோழர்களே!
வாடித் தொழிலின்றி வறுமையாற் சாவதெல்லாம்
கூடித் தொழில்செய்யாக் குற்றத்தால் தோழர்களே!
கூடித் தொழில்செய்யாக் குற்றத்தால் இன்றுவரை
மூடிய தொழிற்சாலை முக்கோடி தோழர்களே!
கூடைமுறம் கட்டுநரும் கூடித் தொழில்செய்யின்
தேடிவரும் செல்வம் சிறப்புவரும் தோழர்களே!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165puthiyaulagam.htm#dt146

கடவுள்கடவுள் என்றெதற்கும்
கதறுகின்ற மனிதர்காள்!
கடவுள்என்ற நாமதேயம்
கழறிடாத நாளிலும்
உடைமையாவும் பொதுமையாக
உலகுநன்று வாழ்ந்ததாம்;
"கடையர்ரு"செல்வர்" என்றதொல்லை
கடவுள்பேர் இழைத்ததே!

உடைசுமந்த கழுதைகொண்
டுழைத்ததோர் நிலைமையும்
உடைமைமுற்றும் படையைஏவி
அடையும்மன்னர் நிலைமையும்
கடவுளாணை யாயின்,அந்த
உடைவெளுக்கும் தோழரைக்
கடவுள்தான்முன் னேற்றுமோ?தன்
கழுதைதான் முன்னேற்றுமோ?

ஊரிலேனும் நாட்டிலேனும்
உலகிலேனும் எண்ணினால்
நீர்நிறைந்த கடலையொக்கும்
நேர்உழைப் பவர்தொகை!
நீர்மிதந்த ஓடமொக்கும்
நிறைமுதல்கொள் வோர்தொகை!
நேரிற்சூறை மோதுமாயின்
தோணிஓட்டம் மேவுமோ?

தொழிலறிந்த ஏழைமக்கள்
தொழில்புரிந்து செல்வர்பால்
அழிவிலாமு தல்கொடுக்க
அம்முதற் பணத்தினால்
பழிமிகுந்த அரசமைத்துப்
படைகள்தம்மை ஏவியே
தொழில்புரிந்த ஏழைமக்கள்
சோற்றிலே மண்போடுவார்!

நடவுசெய்த தோழர்கூலி
நாலணாவை ஏற்பதும்
உடலுழைப்பி லாதசெல்வர்
உலகைஆண் டுலாவலும்
கடவுளாணை என்றுரைத்த
கயவர்கூட்ட மீதிலே
கடவுளென்ற கட்டறுத்துத்
தொழிலுளாரை ஏவுவோம்.

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165puthiyaulagam.htm#dt145

 துன்பம் பிறர்க்கு!நல் இன்பம் தமக்கெனும்
துட்ட மனோபாவம்,
அன்பினை மாய்க்கும்; அறங்குலைக் கும்;புவி
ஆக்கந்தனைக் கெடுக்கும்!
வன்புக் கெலாம் அதுவேதுணை யாய்விடும்
வறுமை யெலாம்சேர்க்கும்!
"இன்பம் எல்லார்க்கும்" என்றேசொல்லிப் பேரிகை
எங்கும் முழங்கிடுவாய்!

தாமும் தமர்களும் வாழ்வதற்கே இந்தத்
தாரணி என்றவண்ணம்,
தீமைக்கெல் லாம்துணை யாகும்; இயற்கையின்
செல்வத்தையும் ஒழிக்கும்!
தேமலர்ச் சோலையும் பைம்புனல் ஓடையும்
சித்தத்திலே சேர்ப்போம்!
"க்ஷேமம் எல்லார்க்கும்" என்றேசொல்லிப் பேரிகை
செகம் முழங்கிடுவாய்!

நல்லவர் நாட்டினை வல்லவர் தாழ்த்திடும்
நச்சு மனப்பான்மை,
தொல்புவி மேல்விழும் பேரிடியாம்; அது
தூய்மைதனைப் போக்கும்!
சொல்லிடும் நெஞ்சில் எரிமலை பூகம்பம்
சூழத் தகாதுகண்டாய்!
"செல்வங்கள் யார்க்கும்" என்றே சொல்லிப் பேரிகை
திக்கில் முழங்கிடுவாய்!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165puthiyaulagam.htm#dt144

தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு
சம்பாத்யம் இவையுண்டு தானுண் டென்போன்
சின்னதொரு கடுகுபோல் உள்ளங் கொண்டோ ன்
தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்!
கன்னலடா என்சிற்றூர் என்போ னுள்ளம்
கடுகுக்கு நேர்மூத்த துவரை யுள்ளம்!
தென்னையுள்ளம் ஒன்றுண்டு தனது நாட்டுச்
சுதந்தரத்தால் பிறநாட்டைத் துன்பு றுத்தல்!

ஆயுதங்கள் பரிகரிப்பார், அமைதி காப்பார்,
அவரவர்தம் வீடுநகர் நாடு காக்க
வாயடியும் கையடியும் வளரச் செய்வார்!
மாம்பிஞ்சி யுள்ளத்தின் பயனும் கண்டோ ம்!
தூயஉள்ளம் அன்புள்ளம் பெரிய உள்ளம்
தொல்லுலக மக்களெலாம் யுஒன்றேரு என்னும்
தாயுள்ளம் தனிலன்றோ இன்பம்! ஆங்கே
சண்டையில்லை தன்னலந்தான் தீர்ந்த தாலே.

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165puthiyaulagam.htm#dt143

தமிழ்நா டெங்கும் தடபுடல்! அமளி!!
பணமே எங்கணும் பறக்குது விரைவில்
குவியுது பணங்கள்! மலைபோற் குவியுது!!
தமிழின் தொண்டர் தடுக்கினும் நில்லார்,
ஓடினார், ஓடினார், ஓடினார் நடந்தே!
ஆயிரம் ஆயிரத் தைந்நூறு பெண்கள்
ஒளிகொள் விழியில் உறுதி காட்டி
இறக்கை கட்டிப் பறக்கின் றார்கள்!
ஐயோ, எத்தனை அதிர்ச்சி, உத்ஸாகம்!
சமுத்திரம் போல அமைந்த மைதானம்!
அங்கே கூடினார் அத்தனை பேரும்!
குவித்தனர் அங்கொரு கோடி ரூபாய்!
வீரத் தமிழன் வெறிகொண் டெழுந்தான்!
உரக்கக் கேட்டான்: யுஉயிரோ நம்தமிழ்?ரு
அகிலம் கிழிய யுஆம்!ஆம்!ரு என்றனர்!!
"ஒற்றுமை" என்றான்; "நற்றேன்" என்றனர்.
உள்ளன்பு ஊற்றி ஊற்றி ஊற்றித்
தமிழை வளர்க்கும் சங்கம் ஒன்று
சிங்கப் புலவரைச் சேர்த்தமைத் தார்கள்!
உணர்ச்சியை, எழுச்சியை, ஊக்கத் தையெலாம்
கரைத்துக் குடித்துக் கனிந்த கவிஞர்கள்
சுடர்க்கவி தொடங்கினர்! பறந்தது தொழும்பு!
கற்கண்டு மொழியில் கற்கண்டுக் கவிதைகள்,
வாழ்க்கையை வானில், உயர்த்தும் நூற்கள்,
தொழில்நூல், அழகாய்த் தொகுத்தனர் விரைவில்!
காற்றி லெலாம் கலந்தது கீதம்!
சங்கீத மெலாம் தகத்தகா யத்தமிழ்!
காதலெலாம் தமிழ் கனிந்த சாறு!
கண்ணெதிர் தமிழக் கட்டுடல் வீரர்கள்!
காதல் ததும்பும் கண்ணா ளன்றனைக்
கோதை ஒருத்தி கொச்சைத் தமிழால்
புகழ்ந்தா ளென்று பொறாமல் சோர்ந்து
வீழ்ந்தான்! உடனே திடுக்கென விழித்தேன்.
அந்தோ! அந்தோ! பழய
நைந்த தமிழரொடு நானிருந்தேனே!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165thamizh.htm#dt128

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165thamizh.htm#dt127

என்னருந் தமிழ்நாட் டின்கண்
எல்லோரும் கல்வி கற்றுப்
பன்னருங் கலைஞா னத்தால்,
பராக்கிர மத்தால், அன்பால்
உன்னத இம மலைபோல்
ஓங்கிடும் கீர்த்தி யெய்தி
இன்புற்றார் என்று மற்றோர்
இயம்பக்கேட் டிடல் எந்நாளோ?

கைத்திறச் சித்தி ரங்கள்,
கணிதங்கள், வான நூற்கள்,
மெய்த்திற நூற்கள், சிற்பம்,
விஞ்ஞானம், காவி யங்கள்
வைத்துள தமிழர் நூற்கள்
வையத்தின் புதுமை என்னப்
புத்தக சாலை எங்கும்
புதுக்குநாள் எந்த நாளோ?

தாயெழிற் றமிழை, என்றன்
தமிழரின் கவிதை தன்னை
ஆயிரம் மொழியிற் காண
இப்புவி அவாவிற் றென்ற
தோயுறும் மதுவின் ஆறு
தொடர்ந்தென்றன் செவியில் வந்து
பாயுநாள் எந்த நாளோ,
ஆரிதைப் பகர்வார் இங்கே?

பார்த்தொழில் அனைத்தும் கொண்ட
பயன்தரும் ஆலைக் கூட்டம்
ஆர்த்திடக் கேட்ப தென்றோ?
அணிபெறத் தமிழர் கூட்டம்
போர்த்தொழில் பயில்வ தெண்ணிப்
புவியெலாம் நடுங்கிற் றென்ற
வார்த்தையைக் கேட்டு நெஞ்சு
மகிழ்ந்து கூத்தாடல் என்றோ?

வெள்ளம்போல் தமிழர் கூட்டம்
வீரங்கொள் கூட்டம்; அன்னார்
உள்ளத்தால் ஒருவரே மற்
றுடலினால் பலராய்க் காண்பார்;
கள்ளத்தால் நெருங் கொணாதே
எனவையம் கலங்கக் கண்டு
துள்ளும்நாள் எந்நாள்? உள்ளம்
சொக்கும்நாள் எந்த நாளோ?

தறுக்கினாற் பிறதே சத்தார்
தமிழன்பால் என்நாட் டான்பால்
வெறுப்புறும் குற்றஞ் செய்தா
ராதலால் விரைந் தன்னாரை
நொறுக்கினார் முது கெலும்பைத்
தமிழர்கள் என்ற சேதி
குறித்தசொல் கேட்டின் பத்திற்
குதிக்கும்நாள் எந்த நாளோ?

நாட்டும்சீர்த் தமிழன் இந்த
நானில மாயம் கண்டு
காட்டிய வழியிற் சென்று
கதிபெற வேண்டும் என்றே
ஆட்டும்சுட் டுவிரல் கண்டே
ஆடிற்று வையம் என்று
கேட்டுநான் இன்ப ஊற்றுக்
கேணியிற் குளிப்ப தெந்நாள்?

விண்ணிடை இரதம் ஊர்ந்து
மேதினி கலக்கு தற்கும்
பண்ணிடைத் தமிழைச் சேர்த்துப்
பாரினை மயக்கு தற்கும்
மண்ணிடை வாளை யேந்திப்
பகைப்புலம் மாய்ப்ப தற்கும்
எண்ணிலாத் தமிழர் உள்ளார்
எனும்நிலை காண்ப தென்றோ?

கண்களும் ஒளியும் போலக்
கவின்மலர் வாசம் போலப்
பெண்களும் ஆண்கள் தாமும்
பெருந்தமிழ் நாடு தன்னில்,
தண்கடல் நிகர்த்த அன்பால்
சமானத்தர் ஆனார் என்ற
பண்வந்து காதிற் பாயப்
பருகுநாள் எந்த நாளோ?

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165thamizh.htm#dt126

இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்
கின்பந் தரும்படி வாய்த்தநல் அமுது!
கனியைப் பிழிந்திட்ட சாறு - எங்கள்
கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு!
தனிமைச் சுவையுள்ள சொல்லை - எங்கள்
தமிழினும் வேறெங்கும் யாங்கண்ட தில்லை!
நனியுண்டு நனியுண்டு காதல் - தமிழ்
நாட்டினர் யாவர்க்கு மேதமிழ் மீதில்.
இனிமைத் தமிழ்மொழி...

தமிழ்எங்கள் உயிர்என்ப தாலே - வெல்லுந்
தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே
தமிழ்என்னில் எம்முயிர்ப் பொருளாம் - இன்பத்
தமிழ்குன்று மேல்தமிழ் நாடெங்கும் இருளாம்
தமிழுண்டு தமிழ்மக்க ளுண்டு - இன்பத்
தமிழுக்கு நாளும்செய் வோம்நல்ல தொண்டு!
தமிழ்என்று தோள்தட்டி ஆடு! - நல்ல
தமிழ்வெல்க வெல்கஎன் றேதினம் பாடு!
இனிமைத் தமிழ்மொழி...

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165thamizh.htm#dt123

 ஏடெடுத் தேன்கவி ஒன்று வரைந்திட
"என்னை எழு"தென்று சொன்னதுவான்!
ஓடையுந் தாமரைப் பூக்களும் தங்களின்
ஓவியந் தீட்டுக, என்றுரைக்கும்!
காடும் கழனியும் கார்முகிலும் வந்து
கண்ணைக் கவர்ந்திட எத்தனிக்கும்!
ஆடும் மயில்நிகர்ப் பெண்களெல்லாம் உயிர்
அன்பினைச் சித்திரம் செய்க,என்றார்!

சோலைக் குளிர்தரு தென்றல்வரும், பசுந்
தோகை மயில்வரும் அன்னம்வரும்,
மாலைப் பொழுதினில் மேற்றிசையில் விழும்
மாணிக்கப் பரிதி காட்சிதரும்
யுவேலைச் சுமந்திடும் வீரரின் தோள்உயர்
வெற்பென்று சொல்லி வரைகருஎனும்
கோலங்கள் யாவும் மலைமலையாய் வந்து
கூவின என்னை! - இவற்றிடையே,

இன்னலிலே, தமிழ் நாட்டினி லேயுள்ள
என்தமிழ் மக்கள் துயின்றிருந்தார்.
அன்னதோர் காட்சி இரக்கமுண் டாக்கியென்
ஆவியில் வந்து கலந்ததுவே!
"இன்பத் தமிழ்க்கல்வி யாவரும் கற்றவர்
என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால்
துன்பங்கள் நீங்கும், சுகம்வரும், நெஞ்சினில்
தூய்மை யுண்டாகிடும், வீரம் வரும்."

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165thamizh.htm#dt122

காதலும் கனலாய் என்னையே சுடும்
ஈதென்ன மாயமோ!
நாதர் மாதெனையே சோதித்தாரோ
நஞ்சமோஇவ் வஞ்சிவாழ்வு? ஐயையோ!

நலியுதேஎன் அகமிகுதியு மலருடலே
நனிமெலிதல் அநிதி இதுவலவோ?
வனிதை யாளினெதிர் அழகுதுரை விரைவில்
வருவாரோ அலது வருகிலரோ?
வாரிச விக சித முக தரி சனமுற
வசமதோ கலவி புரிவது நிசமோ
மதுரமான அமுதமு
மலரினொடுமது கனியிரச
மதிவிரச மடைவதென்ன!
காதலும் கனலாய்...

தென்ற லென்றபுலி சீறல் தாளேன்
சீத நிலவே தீதாய் விளைந்திடுதே!
வென்றி யணைந்திடும் அவர்புயம் அணைந்தே
மேவி ஆவி எய்தல் எந்தநாள்?
காதலும் கனலாய்...

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165kaathal.htm#dt118

சோலையிலோர் நாள் எனையே
தொட்டிழுத்து முத்தமிட்டான்
துடுக்குத் தனத்தை என்சொல்வேன்
மாலைப் பொழுதில்இந்த மாயம்புரிந்த செம்மல்
வாய்விட்டுச் சிரித்துப் பின்
போய்விட்டானேடி தோழி!
சோலையிலோர்...

ஓடி விழிக்கு மறைந்தான் - ஆயினும் என்றன்
உள்ளத்தில் வந்து நிறைந்தான்!
வேடிக்கை என்ன சொல்வேன்
மின்னல்போல் எதிர் நின்றான்!
வேண்டித் தழுவச் சென்றேன்
தாண்டி நடந்து விட்டான்!
சோலையிலோர்...

அகம் புகுந்தான் சேயோ - அவனை எட்டி
அணக்க வழிசொல் வாயோ!
சகம் பெறும் அவன்அன்று
தந்த துடுக்கு முத்தம்!
சக்ரவாகம் போல்வந்தான்;
கொத்திப்போக மறந்தான்!
சோலையிலோர்...

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165kaathal.htm#dt117

வேற்றூர்போய் நள்ளிரவில் வீடுவந்த
வேலனிடம் ஆள்ஒருவன் கடிதம்தந்தான்.
ஏற்றதனை வாசிக்க லுற்றான்வேலன்:
"என்னருமைக் காதலரே கடைசிச்சேதி;
நேற்றிரவு நாமிருவர் பூந்தோட்டத்தில்
நெடுநேரம் பேசியதை என்தாய்கண்டாள்!
ஆற்றாத துயரால்என் தந்தை,அண்ணன்
அனைவரிட மும்சொல்லி முடித்துவிட்டாள்.

குடும்பத்தின் பெயர்கெடுக்கத் தோன்றிவிட்டாய்
கொடியவளே! விஷப்பாம்பே! என்றுதந்தை
தடதடவென் றிருகையால் தலையில்மோதித்
தரையினிலே புரண்டழுதார். அண்ணன்அங்கு
மடமடவென் றேகொல்லைக் கிணற்றில்வீழ்ந்தே
மாய்வார்போல் ஓடிப்பின் திரும்பிவந்து
படுபாவி தாலியற்ற பிறகும்இந்தப்
பழுதுநடை கொள்வதுண்டோ என்றுநைந்தார்.

தாயோஎன் எதிர்வந்து தாலியோடு
சகலமும் போயினஏடி இன்னும்என்ன!
தீயாகிக் கொளுத்திவிட்டாய் எம்மையெல்லாம்!
தெருவார்கள் ஊரார்கள் இதையறிந்தால்
ஓயாமல் தூற்றிடுவார்! யாம்இவ்வூரில்
உயர்ந்திருந்தோம்; தாழ்த்திவிட்டாய் அந்தோ!நீதான்
பாயேனும் விரித்ததிலே படுப்பதுண்டா
பதியிழந்தால்? மூதேவி என்றுசொன்னாள்.

தந்தையார்அடி உன்னைக் கொன்றுபோட்டுத்
தலையறுத்துக் கொள்ளுகின்றேன் என்பார்.அண்ணன்
அந்தமதி யற்றவனைக் கொல்வேன்என்றே
அருகிருக்கும் கொடுவாளைப் பாய்ந்தெடுப்பான்!
இந்தவிதம் கொதித்தார்கள் இரவுமட்டும்!
இனிஎன்னால் அவர்கட்குத் தொல்லைவேண்டாம்;
சுந்தரனே, என்காதல் துரையே!உன்னைத்
துறக்கின்றேன் இன்றிரவில் கடலில்வீழ்ந்தே!ரு

காதலியின் கடிதத்தில் இதைவாசித்தான்!
கதறினான்! கடல்நோக்கிப் பறந்தான்வேலன்!
ஈதறிந்தார் ஊரிலுள்ளார்! ஓடினார்கள்!
எழில்வானம், முழுநிலவு, சமுத்திரத்தின்
மீதெல்லாம் மிதக்கும்ஒளி, அகண்டாகாரம்
மேவுபெருங் காட்சியில்ஓர் துன்பப்புள்போல்
மாதுகடற் பாலத்தின் கடைசிநின்று
வாய்விட்டுக் கதறுகின்றாள் வசமிழந்தாள்:

எனைமணந்தார் இறந்தார்;என் குற்றமல்ல;
இறந்தவுடன் மங்கலநாண், நல்லாடைகள்,
புனைமலர்குங் குமம்அணிகள் போனதுண்டு;
பொன்னுடலும் இன்னுயிரும் போனதுண்டோ ?
எனைஆளும் காதலுக்கோர் இலக்கியத்துக்
கிசைந்ததெனில் உயிரியற்கை; நான்என்செய்வேன்?
தனையடக்கிக் காதலினைத் தவிர்த்துவாழும்
சகம்இருந்தால் காட்டாயோ நிலவேநீதான்!

கண்படைத்த குற்றத்தால் அழகியோன்என்
கருத்தேறி உயிர்ஏறிக் கலந்துகொண்டான்!
பெண்படைத்த இவ்வுலகைப் பல்லாண்டாகப்
பெற்றுணர்ந்த நெடுவானே! புனலே!கூறீர்,
மண்படைப்பே காதலெனில் காதலுக்கு
மறுப்பெதற்குக் கட்டுப்பா டெதற்குக்கண்டார்?
புண்படைத்த என்நாடே, கைம்மைக்கூர்வேல்
பொழிகின்றாய் மங்கையர்மேல்! அழிகின்றாயே!

ஆடவரின் காதலுக்கும் பெண்கள்கூட்டம்
அடைகின்ற காதலுக்கும், மாற்றமுண்டோ ?
பேடகன்ற அன்றிலைப்போல், மனைவிசெத்தால்
பெருங்கிழவன் காதல்செயப் பெண்கேட்கின்றான்!
வாடாத பூப்போன்ற மங்கைநல்லாள்
மணவாளன் இறந்தால்பின் மணத்தல்தீதோ?
பாடாத தேனீக்கள், உலவாத்தென்றல்,
பசியாத நல்வயிறு பார்த்ததுண்டோ ?

இளமைதந்தாய், உணர்வுதந்தாய், இன்பங்காணும்
இன்னுயிரும் தந்திட்டாய் இயற்கைத்தேவி,
வளமையற்ற நெஞ்சுடையார் இந்நாட்டார்கள்
மறுக்கின்றார் காதலினைக் கைம்மைகூறி!
தளைமீற வலியில்லேன்! அந்தோ! என்றன்
தண்டமிழின் இனிமைபோல் இனியசொல்லான்
உளமாரக் காதலித்தான் என்னை!அன்னோன்
ஊர்நிந்தை ஏற்பதனைச் சகிப்பேனோநான்!

ஓருயிரும் இரண்டுடலும் நாங்கள்!எம்மை
உளிகொண்டு வெட்டிவிட்ட கட்டுப்பாடே,
தீராத காதலினை நெஞ்சத்தோடு
தீய்த்துவிட்டாய் என்றாள்.பின் ஓடிவந்து
சீராளன் தாவினான்! வீழ்ந்தாள்!வீழ்ந்தான்!
தேம்பிற்றுப் பெண்ணுலகு! இருவர்தீர்ந்தார்!
ஊரார்கள் பார்த்திருந்தார் கரையில்நின்றே
உளம்துடித்தார்; எனினும்அவர் உயிர்வாழ்கின்றார்.

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165kaathal.htm#dt116

நல்ல இளம்பருவம் - மக்கள்
நாடும் குணம்,கீர்த்தி,
கல்வி இவையுடையான் - உயர்
கஜராஜ் என்பவனும்,
முல்லைச் சிரிப்புடையாள் - மலர்
முக ஸரோஜாவும்,
எல்லையிற் காதற்கடல் - தனில்
ஈடுபட்டுக் கிடந்தார்.

திங்கள் ஒருபுறமும் - மற்றைச்
செங்கதிர் ஓர்புறமும்
தங்கி யிருந்திடினும் - ஒளி
தாவுதல் உண்டதுபோல்
அங்கந்த வேலூரில் - இவர்
அங்கம் பிரிந்திருந்தும்
சங்கமம் ஆவதுண்டாம் - காதற்
சமுத்திர விழிகள்!

ஒட்டும் இரண்டுளத்தைத் - தம்மில்
ஓங்கிய காதலினைப்
பிட்டுப்பிட் டுப்புகன்றார் - அதைப்
பெற்றவர் கேட்கவில்லை.
குட்டை மனத்தாலே - அவர்
கோபப் பெருக்காலே
வெட்டிப் பிரிக்கவந்தார் - அந்த
வீணையை நாதத்தினை!

பொன்னவிர் லோகத்திலே - உள்ளம்
பூரிக்கும் காதலிலே
என்னுளம் கன்னியுளம் - இணைந்
திருந்தும் இன்பஉடல்
தன்னைப் பயிலுவதோர் - நல்ல
சந்தர்ப்பம் இல்லையென்றே
தன்னையும் தையலையும் - பெற்ற
சமுகத்தை நொந்தான்.

"அண்டைஇல் லத்தினிலே - என்
அன்பன் இருக்கின்றான்!
உண்ணும் அமுதிருந்தும் - எதிர்
உண்ண முடிந்ததில்லை!
தண்டமிழ்ப் பாட்டிருந்தும் - செவி
சாய்த்திடக் கூடவில்லை!
வண்மலர் சூடலில்லை - அது
வாசலிற் பூத்திருந்தும்."

என்று சரோஜாவும் - பல
எண்ணி எண்ணிஅயர்வாள்.
தன்னிலை கண்டிருந்தும் - அதைச்
சற்றும் கருதாமல்
என்னென்ன மோபுகல்வார் - அந்த
இரும்பு நெஞ்சுடையார்.
அன்னதன் பெற்றோரின் - செயல்
அத்தனையும் கசப்பாள்.

நல்ல ஸரோஜாவின் - மணம்
நாளைய காலைஎன்றார்!
மெல்லியின் பெற்றோர்கள் - வந்து
வேறொரு வாலிபனைச்
சொல்லி உனக்கவன்தான் - மிக்க
தோதென்றும் சொல்லிவிட்டார்.
கொல்லும் மொழிகேட்டாள் - மலர்க்
கொம்பு மனம்ஒடிந்தாள்!

கொழிக்கும் ஆணழகன்! - அவன்
கொஞ்சிவந் தேஎனது
விழிக்குள் போய்ப்புகுந்தான் - நெஞ்ச
வீட்டில் உலாவுகின்றான்!
இழுத் தெறிந்துவிட்டே - மற்
றின்னொரு வாலிபனை
நுழைத்தல் என்பதுதான் - வெகு
நூதனம் என்றழுவாள்!

காத லிருவர்களும் - தம்
கருத் தொருமித்தபின்
வாதுகள் வம்புகள்ஏன்? - இதில்
மற்றவர்க் கென்னஉண்டு?
சூதுநிறை யுளமே - ஏ
துட்ட இருட்டறையே!
நீதிகொள், என்றுலகை - அவள்
நிந்தனை செய்திடுவாள்!

இல்லத்தின் மாடியிலே - பின்னர்
எறிஉரைக்க லுற்றாள்:
"இல்லை உனக்கெனக்கு - மணம்
என்று முடித்துவிட்டார்.
பொல்லாத நாளைக்கொ" - வெறும்
புல்லனை நான்மணக்க
எல்லாம் இயற்றுகின்றார் - பெற்ற
எமன்கள் இவ்விடத்தில்!ரு

அடுத்த மாடியிலே - நின்ற
அன்பனிது கேட்டான்;
துடித்த உள்ளத்திலே - அம்பு
தொடுக்கப் பட்டுநின்றான்!
எடுத்துக் காட்டிநின்றாள் - விஷம்
இட்டதோர் சீசாவை!
அடி எனதுயிரே! - அழை
அழைஎனையும் என்றான்!

தீயும் உளத்தோனும் - விஷம்
தேடி எடுத்துவந்தான்!
"தூயநற் காதலர்க்கே - பெருந்
தொல்லை தரும்புவியில்
மாய்க நமதுடல்கள்! - விஷம்
மாந்துக நம்மலர்வாய்!
போய்நுகர் வோம்சலியா - இன்பம்
பூமியின் கர்ப்பத்திலே!

என்று விஷம்குடித்தார் - அவர்
இறப்பெனும் நிலையில்
ஒன்றுபட்டுச் சிறந்தார் - இணை
ஓதரும் காதலர்கள்.
இன்றுதொட் டுப்புவியே - இரண்
டெண்ணம் ஒருமித்தபின்
நின்று தடைபுரிந்தால் - நீ
நிச்சயம் தோல்விகொள்வாய்!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165kaathal.htm#dt115

 மேற்றிசையிற் சூரியன்போய் விழுந்து மறைந்திட்டான்;
மெல்லஇருட் கருங்கடலில் விழுந்த திந்தஉலகும்!
தோற்றியபூங் காவனமும் துளிரும்மலர்க் குலமும்
தோன்றவில்லை; ஆயினும்நான் ஏதுரைப்பேன் அடடா!
நாற்றிசையின் சித்திரத்தை மறைத்தஇருள், என்றன்
நனவிலுள்ள சுந்தரியை மறைக்க வசமில்லை!
மாற்றுயர்ந்த பொன்னுருக்கி வடிவெடுத்த மங்கை
மனவெளியில் ஒளிசெய்தாள் என்னதகத் தகாயம்!

புன்னையின்கீழ்த் தின்னையிலே எனைஇருக்கச் சொன்னாள்.
புதுமங்கை வரவுபார்த் திருக்கையிலே, அன்னாள்,
வண்ணமலர்க் கூட்டத்தில், புள்ளினத்தில், புனலில்,
வானத்தில்,எங்கெங்கும் தன்னழகைச் சிந்திச்
சின்னவிழி தழுவும்வகை செய்திருந்தாள்! இரவு
சேர்ந்தவுடன் என்னுளத்தைச் சேர்ந்துவிட்டாள்! எனினும்
சன்னத்த மலருடலை என்னிருகை ஆரத்
தழுவுமட்டும் என்னுயிரில் தணிவதுண்டோ காதல்?

என்னுளத்தில் தன்வடிவம் இட்டஎழில் மங்கை
இருப்பிடத்தில் என்னுருவம் தன்னுளத்திற் கொண்டாள்;
மின்னொளியாள் வராததுதான் பாக்கியிந்த நேரம்
வீறிட்ட காதலுக்கும் வேலிகட்டல் உண்டோ ?
கன்னியுளம் இருளென்று கலங்கிற்றோ! கட்டுக்
காவலிலே சிக்கிஅவள் தவித்திடுகின் றாளோ!
என்னென்பேன் அதோபூரிக் கின்றதுவெண் ணிலவும்!
எழில்நீல வான்எங்க ணும்வயிரக் குப்பை!

மாலைப்போ தைத்துரத்தி வந்தஅந்திப் போதை
வழியனுப்பும் முன்னிருளை வழியனுப்பி விட்டுக்
கோலநிலா வந்திங்கே கொஞ்சுகின்ற இரவில்
கொலைபுரியக் காத்திருக்கும் காதலொடு நான்தான்
சோலைநடுவே மிகவும் துடிக்கின்றேன்; இதனைத்
தோகையிடம் போயுரைக்க எவருள்ளார்? அன்னாள்
காலிலணி சிலம்புதான் கலீரெனக் கேளாதோ?
கண்ணெதிரிற் காணேனோ பெண்ணரசை யிங்கே?

தண்ணிலவும் அவள்முகமோ! தாரகைகள் நகையோ!
தளிருடலைத் தொடும்உணர்வோ நன்மணஞ்சேர் குளிரும்!
விண்ணீலம் கார்குழலோ! காணும் எழிலெல்லாம்
மெல்லியின்வாய்க் கள்வெறியோ! அல்லிமலர்த் தேனின்
வண்டின்ஒலி அன்னவளின் தண்டமிழ்த்தாய் மொழியோ!
வாழியஇங் கிவையெல்லாம் எழுதவரும் கவிதை!
கண்டெடுத்தேன் உயிர்ப்புதையல்! அதோ வந்துவிட்டாள்!
கண்டெழுத முடியாத நறுங்கவிதை அவளே!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165kaathal.htm#dt114

தோட்டத்து வாசல் திறக்கும் - தினம்
சொர்ணம் வந்தால் கொஞ்ச நேரம்மட்டும்
வீட்டுக் கதைகளைப் பேசிடுவாள் - பின்பு
வீடுசெல்வாள். இது வாடிக்கையாம்.
சேட்டுக் கடைதனிற் பட்டுத்துணி - வாங்கச்
சென்றனள் சுந்தரன் தாய்ஒருநாள்!
பாட்டுச் சுவைமொழிச் சொர்ணம்வந்தாள் - வீட்டிற்
பாடம் படித்திருந்தான் இளையோன்.

கூடத்திலே மனப் பாடத்திலே - விழி
கூடிக் கிடந்திடும் ஆணழகை,
ஓடைக் குளிர்மலர்ப் பார்வையினால் - அவள்
உண்ணத் தலைப்படும் நேரத்திலே,
பாடம் படித்து நிமிர்ந்தவிழி - தனிற்
பட்டுத் தெரிந்தது மானின்விழி!
ஆடைதிருத்தி நின்றாள் அவள்தான் - இவன்
ஆயிரம் ஏடு திருப்புகின்றான்!

தன்னந் தனிப்பட்ட என்னைவிட்டே - பெற்ற
தாயும் கடைக்கு நடந்துவிட்டாள்.
இன்னுமுண்டோ அங்கு வேலைஎன்றான். - சொர்ணம்
ஏறிட்டுப் பார்த்தனள் கூறுகின்றாள்:
"தன்னந் தனிப்பட நீயிருந்தாய் - எந்தத்
தையல்உன் பொன்னுடல் அள்ளிவிட்டாள்?"
என்றனள். சுந்தரன் "என்னுளத்தைக் - கள்ளி!
எட்டிப் பறித்தவள் நீ"என்றனன்.

உள்ளம் பறித்தது நான்என்பதும் - என்றன்
உயிர் பறித்தது நீஎன்பதும்
கிள்ளி உறிஞ்சிடும் மாமலர்த்தேன் - இன்பக்
கேணியிற் கண்டிட வேணுமென்றாள்.
துள்ளி எழுந்தனன் சுந்தரன்தான்! - பசுந்
தோகை பறந்தனள் காதலன்மேல்!
வெள்ளத்தி னோடொரு வெள்ளமுமாய் - நல்ல
வீணையும் நாதமும் ஆகிவிட்டார்!

சாதலும் வாழ்தலும் அற்றஇடம் - அணுச்
சஞ்சல மேனும்இல் லாதஇடம்,
மோதலும் மேவலும் அற்றஇடம் - உளம்
மொய்த்தலும் நீங்கலும் அற்றஇடம்!
காதல் உணர்வெனும் லோகத்திலே - அவர்
காணல் நினைத்தல் தவிர்ந்திருந்தார்!
சூதற்ற சுந்தரன் தாயும்வந்தாள் - அங்குச்
சொர்ணத்தின் தாயும் புகுந்துவிட்டாள்!

பெற்ற இளந்தலைக் கைம்பெண்ணடீ! - என்ன
பேதமை? என்றனள் மங்கையின்தாய்.
சிற்சில ஆண்டுகள் முற்படவே - ஒரு
சின்னக் குழந்தையை நீமணந்தாய்;
குற்றம் புரிந்தனை இவ்விடத்தே - அலங்
கோலமென்றாள் அந்தச் சுந்தரன்தாய்.
புற்றரவொத்தது தாயர் உள்ளம்! - அங்குப்
புன்னகை கொண்டது மூடத்தனம்!

குற்றம் மறுத்திடக் காரணங்கள் - ஒரு
கோடி இருக்கையில், காதலர்கள்
கற்றவை யாவையும் உள்ளத்திலே - வைத்துக்
கண்ணிற் பெருக்கினர் நீரருவி!
சற்றிது கேளுங்கள் நாட்டினரே! - பரி
தாபச் சரித்திரம் மானிடரே!
ஒற்றைப் பெரும்புகழ்த் தாயகமே! - இந்த
ஊமைகள் செய்ததில் தீமையுண்டோ ?

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165kaathal.htm#dt113

காதலியின் கடிதம்

என் அன்பே,
இங்குள்ளோர் எல்லோரும்
க்ஷேமமாய் இருக்கின் றார்கள்;
என் தோழியர் க்ஷேமம்!
வேலைக்காரர் க்ஷேமம்! இதுவுமன்றி
உன்தயவால் எனக்காக உள்வீட்டுக்
களஞ்சியநெல் மிகவு முண்டே,
உயர்அணிகள் ஆடைவகை ஒவ்வொன்றில்
பத்துவிதம் உண்டு. மற்றும்
கன்னலைப்போற் பழவகை பதார்த்தவகை
பக்ஷணங்கள் மிகவு முண்டு.
கடிமலர்ப்பூஞ் சோலையுண்டு. மான்க்ஷேமம்.
மயில்க்ஷேமம். பசுக்கள் க்ஷேமம்.
இன்னபடி இவ்விடம்யா வரும்எவையும்
க்ஷேமமென்றன் நிலையோ என்றால்
"இருக்கின்றேன்; சாகவில்லை" என்றறிக.
இங்ஙனம் உன்
எட்டிக்காயே.
காதலன் பதில்
செங்கரும்பே,
உன்கடிதம் வரப்பெற்றேன்.
நிலைமைதனைத் தெரிந்து கொண்டேன்.
தேமலர்மெய் வாடாதே! க்ஷேமமில்லை
என்றுநீ தெரிவிக் கின்றாய்.
இங்கென்ன வாழ்கிறதோ? இதயத்தில்
உனைக்காண எழும்ஏக் கத்தால்,
இன்பாலும் சர்க்கரையும் நன்மணத்தால்
பனிக்கட்டி இட்டு றைத்த
திங்கள்நிகர் உளிர்உணவைத் தின்றாலும்
அதுவும்தீ! தீ!தீ! செந்தீ!
திரவியஞ்சம் பாதிக்க இங்குவந்தேன்.
உனை அங்கே விட்டுவந்தேன்!
இங்குனைநான் எட்டிக்காய் எனநினைத்த
தாயுரைத்தாய்; இதுவும் மெய்தான்.
இவ்வுலக இன்பமெலாம் கூட்டிஎடுத்
துத்தெளிவித் திறுத்துக் காய்ச்சி
எங்கும்போல் எடுத்துருட்டும் உருட்சியினை
எட்டிக்காய் என்பா யாயின்
எனக்குநீ எட்டிக்காய் என்றுதான்
சொல்லிடுவேன்.
இங்குன்
அன்பன்.

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165kaathal.htm#dt112

தாமரை பூத்த குளத்தினிலே - முகத்
தாமரை தோன்ற முழுகிடுவாள்! - அந்தக்
கோமள வல்லியைக் கண்டுவிட்டான் - குப்பன்
கொள்ளை கொடுத்தனன் உள்ளத்தினை! - அவள்
தூய்மை படைத்த உடம்பினையும் - பசுந்
தோகை நிகர்த்த நடையினையும் - கண்டு
காமனைக் கொல்லும் நினைப்புடனே - குப்பன்
காத்திருந்தான் அந்தத் தோப்பினிலே.

முகிலைக் கிழித்து வெளிக்கிளம்பும் - ஒரு
முழுமதி போல நனைந்திருக்கும் - தன்
துகிலினைப் பற்றித் துறைக்குவந்தாள்! - குப்பன்
சோர்ந்துவிட் டானந்தக் காமனம்பால்! - நாம்
புகழ்வதுண் டோ குப்பன் உள்ளநிலை! - துகில்
பூண்டு நடந்திட்ட கன்னியெதிர்க் - குப்பன்
"சகலமும் நீயடி மாதரசி - என்
சாக்காட்டை நீக்கிட வேண்டும்" என்றான்.

கன்னி யனுப்பும் புதுப்பார்வை - அவன்
கட்டுடல் மீதிலும் தோளினிலும் - சென்று
மின்னலின் மீண்டது! கட்டழகன் - தந்த
விண்ணப்பம் ஒப்பினள் புன்னகையால்!

சற்றுத் தலைகுனிந் தேநடப்பாள் - அவள்
சங்கீத வாய்மொழி ஒன்றினிலே - எண்ணம்
முற்றும் அறிந்திடக் கூடுமென்றே - அவள்
முன்பு நடந்திடப் பின்தொடர்ந்தான் - பின்பு
சிற்றிடை வாய்திறந் தாள்.அதுதான் - இன்பத்
தேனின் பெருக்கன்று; செந்தமிழே!
"சுற்றத்தார் மற்றவர் பார்த்திடுவார் - என்
தோழிகள் இப்பக்கம் வந்திடுவார்.

காலை மலர்ந்தது! மாந்தரெலாம் - தங்கள்
கண்மலர்ந் தேநட மாடுகின்றார்! - இச்
சோலையி லேஇள மாமரங்கள் - அடர்
தோப்பினை நோக்கி வருக!" என்றாள்.
நாலடி சென்றனர்! மாமரத்தின் - கிளை
நாற்புறம் சூழ்ந்திட்ட நல்விடுதி!
மூலக் கருத்துத் தெரிந்திருந்தும் - அந்த
மொய்குழல் "யாதுன்றன் எண்ண" மென்றாள்.

"உன்னை எனக்குக் கொடுத்துவிடு! - நான்
உனக்கெனைத் தந்திட அட்டியில்லை" - இந்தக்
கன்னல் மொழிக்குக் கனிமொழியாள் - எட்டிக்
காய்மொழி யாற்பதில் கூறுகின்றாள்:
"சின்ன வயதினில் என்றனையோர் - பெருஞ்
சீமான் மணந்தனன் செத்துவிட்டான்! - எனில்
அன்னது நான்செய்த குற்றமன்று! - நான்
அமங்கலை" என்றுகண் ணீர்சொரிந்தாள்!

"மணந்திட நெஞ்சில் வலிவுளதோ?" - என்று
வார்த்தைசொன் னாள்;குப்பன் யோசித்தனன்! - தன்னை
இணங்கென்று சொன்னது காதலுள்ளம் - "தள்"
என்றனமூட வழக்க மெலாம் - தலை
வணங்கிய வண்ணம் தரையினிலே - குப்பன்
மாவிலை மெத்தையில் சாய்ந்துவிட்டான்! - பின்
கணம்ஒன்றி லேகுப்பன் நெஞ்சினிலே - சில
கண்ணற்ற மூட உறவினரும்,

வீதியிற் பற்பல வீணர்களும் - வேறு
விதியற்ற சிற்சில பண்டிதரும் - வந்து
சாதியி லுன்னை விலக்கிடுவோம் - உன்
தந்தையின் சொத்தையும் நீஇழப்பாய்! - நம்
ஆதி வழக்கத்தை மீறுகின்றாய்! - தாலி
அறுத்தவளை மணம் ஒப்புகின்றாய்! - நல்ல
கோதை யொருத்தியை யாம்பார்த்து - மணம்
கூட்டிவைப் போம்என்று சத்தமிட்டார்!

கூடிய மட்டிலும் யோசித்தனன் - குப்பன்
குள்ளச் சமூகத்தின் கட்டுக்களை! - முன்
வாடிக் குனிந்த தலைநிமிர்ந்தான் - அந்த
வஞ்சியைப் பார்த்தனன் மீண்டும்அவன் - ஆ!
ஏடி வடிவத்தின் ஆதிக்கமே! - மூடர்
எதிர்ப்பில் வெளிப்படும் நமதுசக்தி! - மற்றும்
பேடி வழக்கங்கள், மூடத்தனம் - இந்தப்
பீடைகளே இங்குச் சாத்திரங்கள்!

காதல் அடைதல் உயிரியற்கை! - அது
கட்டில் அகப்படும் தன்மையதோ? - அடி
சாதல் அடைவதும் காதலிலே - ஒரு
தடங்கல் அடைவதும் ஒன்றுகண்டாய்! - இனி
நீதடு மாற்றம் அகற்றிவிடு! - கை
நீட்டடி! சத்தியம்! நான்மணப்பேன்! - அடி
கோதை தொடங்கடி! என்றுசொன்னான். - இன்பம்
கொள்ளை!கொள்ளை!! கொள்ளை!!! மாந்தோப்பில்!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165kaathal.htm#dt111

குன்றின்மீது நின்று கண்டேன்
கோலம் என்ன கோலமே!
பொன் ததும்பும் "அந்திவானம்"
போதந் தந்த தே - டி - தோழி!
குன்றின்மீது...

முன்பு கண்ட காட்சி தன்னை
முருகன் என்றும் வேலன் என்றும்
கொன் பயின்றார் சொல்வர்; அஃது
குறுகும் கொள்கை அன் - றோ - தோழி!
குன்றின்மீது...

கண்ணும் நெஞ்சும் கவரு கின்ற
கடலை, வானைக் கவிஞர் அந்நாள்
வண்ண மயில் வேலோன் என்றார்;
வந்ததே போர் இந் - நாள் - தோழி!
குன்றின்மீது...

எண்ண எண்ண இனிக்கும் காட்சிக்
கேது கோயில்? தீபம் ஏனோ?
வண்ணம் வேண்டில் எங்கும் உண்டாம்
மயில வெற்பும் நன் - றே - தோழி!
குன்றின்மீது...

பண்ண வேண்டும் பூசை என்பார்
பாலும் தேனும் வேண்டும் என்பார்
உண்ண வேண்டும் சாமி என்பார்
உளத்தில் அன்பு வேண் - டார் - தோழி!
குன்றின்மீது...

அன்பு வேண்டும்; அஃது யார்க்கும்
ஆக்கம் கூட்டும் ஏக்கம் நீக்கும்!
வன்பு கொண்டோ ர் வடிவு காட்டி
வணங்க என்று சொல் - வார் - தோழி!
குன்றின்மீது...

என்பும் தோலும் வாடு கின்றார்
"ஏழை" என்ப தெண்ணார் அன்றே
துன்பம் நீக்கும் மக்கள் தொண்டு
சூழ்க வையம் தோ - ழி - வாழி!
குன்றின்மீது...

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165iyatkai.htm#1.10._காட்சி_இன்பம்_

சிட்டு

தென்னை மரத்தில் - சிட்டுப்
பின்னும் அழைக்கும் - ஒரு
புன்னை மரத்தினில் ஓடிய காதலி
"போ போ" என்றுரைக்கும்.

வண்ண இறக்கை - தன்னை
அங்கு விரித்தே - தன்
சென்னியை உள்ளுக்கு வாங்கிஅச் சேவலும்
செப்பும் மணிவாயால்:

"என்னடி பெண்ணே - உயிர்
ஏகிடும் முன்னே - நீ
என்னிடம் வாஎனை யாகிலும் கூப்பிடு,
தாமதம் நீக்கிவிடு"

என்றிது சொல்லப் - பெட்டை
எண்ணம் உயர்ந்தே - அத்
தென்னையிற் கூடிப்பின் புன்னையிற் பாய்ந்தது,
பின்னும் அழைக்கும் சிட்டு.

அணில்

கீச்சென் றுகத்தி - அணில்
கிளையொன் றில்ஓடிப் - பின்
வீச்சென்று பாய்ந்துதன் காதலன் வாலை
வெடுக்கென்று தான் கடிக்கும்.

ஆச்சென்று சொல்லி - ஆண்
அணைக்க நெருங்கும் - உடன்
பாய்ச்சிய அம்பெனக் கீழ்த்தரை நோக்கிப்
பறந்திடும் பெட்டை அணில்!

மூச்சுடன் ஆணோ - அதன்
முதுகிற் குதிக்கும் - கொல்லர்
காய்ச்சும் இரும்பிடை நீர்த்துளி ஆகக்
கலந்திடும் இன்பத் திலே.

ஏச்சுக்கள் அச்சம் - தம்மில்
எளிமை வளப்பம் - சதிக்
கூச்சல் குழப்பங்கள் கொத்தடி மைத்தனம்
கொஞ்சமும் இல்லை அங்கே!

வானும் முல்லையும்

எண்ணங் கள்போலே - விரி
வெத்தனை கண்டாய்! - இரு
கண்ணைக் கவர்ந்திடும் ஆயிரம் வண்ணங்கள்
கூடிச் சுடர்தரும் வான்!

வண்ணங் களைப்போய்க் - கரு
மாமுகில் உண்டு - பின்பு
பண்ணும் முழக்கத்தை, மின்னலை, அம்முகில்
பாய்ச்சிய வானவில்லை,

வண்ணக் கலாப - மயில்
பண்ணிய கூத்தை - அங்கு
வெண்முத்து மல்லிகை கண்டு சிரித்தனள்!
மேல்முத்தை வான் சொரிந்தான்!

விண்முத் தணிந்தாள் - அவள்
மேனி சிலிர்த்தாள்! - இதைக்
கண்ணுண்ண உண்ணக் கருத்தினி லின்பக்
கடல்வந்து பாய்ந்திடுதே!

மனிதர்

மஞ்சம் திருத்தி - உடை
மாற்றி யணிந்தே - கொஞ்சம்
கொஞ்சிக் குலாவிட நாதன் வரும்படி
கோதைஅ ழைக்கையிலே,

மிஞ்சிய சோகம் - மித
மிஞ்சிய அச்சம் - "என்
வஞ்சியும் பிள்ளையும் நானிறந்தால் என்ன
வாதனை கொள்வாரோ?"

நெஞ்சிலிவ் வாறு - நினைந்
தங்குரைக் கின்றான்: - "அடி
பஞ்சைப் பரம்பரை நாமடி! பிள்ளைகள்
பற்பலர் ஏதுக்" கென்பான்.

கஞ்சி பறித்தார் - எழுங்
காதல் பறித்தார் - கெட்ட
வஞ்சகம் சேர்சின்ன மானிடச் சாதிக்கு
வாய்த்த நிலை இதுவோ!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165iyatkai.htm#1._9._மக்கள்_நிலை_

உலகமிசை உணர்வெழுப்பிக் கீழ்த்திசையின் மீதில்
உதித்துவிட்டான் செங்கதிரோன்; தகத்தகா யம்பார்!
விலகிற்றுக் காரிருள்தான்; பறந்ததுபார் அயர்வு;
விண்ணிலெலாம் பொன்னொளியை ஏற்றுகின்றான் அடடா!
மிலையும்எழிற் பெருங்கடலின் அமுதப்ர வாகம்!
மேலெல்லாம் விழிஅள்ளும் ஒளியின் ப்ரவாகம்!
நலம்செய்தான்; ஒளிமுகத்தைக் காட்டிவிட்டான், காட்டி
நடத்துகின்றான் தூக்கமதில் ஆழ்ந்திருந்த உலகை!

ஒளிசெய்தான் கதிர்க்கோமான் வானகத்தில் மண்ணில்
உயர்மலைகள், சோலை,நதி இயற்கைஎழில் கள்பார்!
களிசெய்தான் பெருமக்கள் உள்ளத்தில்! அதனால்
கவிதைகள், கைத்தொழில்கள் என்னென்ன ஆக்கம்!
தெளிவளிக்க இருட்கதவை உடைத்தெறிந்தான் பரிதி!
திசைமகளை அறிவுலகில் தழுவுகின்றார் மக்கள்;
ஒளியுலகின் ஆதிக்கம் காட்டுகின்றான்; வானில்
உயர்கின்றான்; உதயசூ ரியன்வாழ்க நன்றே!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165iyatkai.htm#1.6.%20உதய%20சூரியன்

காட்சி 1
[மணிபுரி மாளிகையில் ஓர் தனி இடம். சேனாபதி
காங்கேயனும் மந்திரியும் பேசுகின்றனர்]

சேனாபதி:
மன்னன் மதுவினில் ஆழ்ந்து கிடக்கின்றான்!
மின்னல்நேர் சிற்றிடை ராணி விஜயா
நமக்கும் தெரியாமல் எவ்விடமோ சென்றாள்.
அமைப்புறும் இந்த மணிபுரி ஆட்சி
எனக்கன்றோ! அன்றியும் என்னரும் நண்ப!
உனக்கே அமைச்சுப் பதவி உதவுவேன்!

மந்திரி:
ஒன்றுகேள் சேனைத் தலைவ! பகைப்புலம்
இன்றில்லை; ஆயினும் நாளை முளைக்கும்.
அரசியோ வீரம், உறுதி அமைந்தாள்!
தரையினர் மெச்சும் சர்வ கலையினள்!

சேனாபதி:
அஞ்சுதல் வேண்டாம் அவளொரு பெண்தானே!

மந்திரி:
நெஞ்சில்நான் பெண்ணை எளிதாய் நினைக்கிலேன்.

சேனாபதி:
ஆடை, அணிகலன், ஆசைக்கு வாசமலர்
தேடுவதும், ஆடவர்க்குச் சேவித் திருப்பதுவும்,
அஞ்சுவதும் நாணுவதும் ஆமையைப்போல் வாழுவதும்
கெஞ்சுவது மாகக் கிடக்கும் மகளிர்குலம்,
மானிடர் கூட்டத்தில் வலிவற்ற ஓர்பகுதி!
ஆனமற் றோர்பகுதி ஆண்மை எனப்புகல்வேன்!
எவ்வாறா னாலும்கேள்! சேனையெலாம் என்னிடத்தில்!
செய்வார்யார் நம்மிடத்தில் சேட்டை? இதையோசி!

மந்திரி:
[சிரித்துச் சொல்வான்]
மானுஷிகம் மேல்என்பார், வன்மை உடையதென்பார்
ஆன அதனை அளித்ததெது ? மீனக்
கடைக்கண்ணால் இந்தக் கடலுலகம் தன்னை
நடக்கும்வகை செய்வதெது? நல்லதொரு சக்தி
வடிவமெது? மாமகளிர் கூட்டமன்றோ? உன்சொற்
கொடிது! குறையுடைத்து! மேலும் அதுகிடக்க;
மன்னன் இளமைந்தன் எட்டு வயதுடையான்,
இன்னும் சிலநாளில் ஆட்சி எனக்கென்பான்!

சேனாபதி:
கல்வியின்றி யாதோர் கலையின்றி, வாழ்வளிக்கும்
நல்லொழுக்க மின்றியே நானவனை ஊர்ப்புறத்தில்
வைத்துள்ளேன்; அன்னோன் நடைப்பிணம்போல் வாழ்கின்றான்.
இத்தனைநாள் இந்த இரகசியம் நீயறியாய்!

மந்திரி:
ஆமாமாம் கல்வியிலான் ஆவி யிலாதவனே!
சாமார்த்திய சாலி தந்திரத்தில் தேர்ந்தவன்நீ!
உன்எண்ணம் என்னசொல்? நான்உனக் கொத்திருப்பேன்!
முன்னால் செயப்போவ தென்ன மொழிந்துவிடு!

சேனாபதி:
ராசாங்கப் பொக்கிஷத்தை நாம்திறக்க வேண்டும்;பின்
தேசத்தின் மன்னனெனச் சீர்மகுடம் நான்புனைந்தே
ஆட்சிசெய வேண்டும்என் ஆசையிது! காலத்தை
நீட்சிசெய வேண்டாம்; விரைவில் நிகழ்விப்பாய்!

மந்திரி:
பொக்கிஷத்தை யார்திறப்பார்? பூட்டின் அமைப்பைஅதன்
மிக்க வலிமைதனைக் கண்டோ ர் வியக்கின்றார்.
தண்டோ ராப் போட்டுச் சகலர்க்கும் சொல்லிடுவோம்
அண்டிவந்து தாழ்திறப்பார்க் காயிரரூ பாய்கொடுப்போம்.

சேனாபதி:
தேவிலை!நீ சொன்னதுபோல் செய்துவிடு சீக்கிரத்தில்
ஆவி அடைந்தபயன் ஆட்சிநான் கொள்வதப்பா!

காட்சி 2
[சேனாதிபதி அரச குமாரனாகிய சுதர்மனை மூடனாக்கி
வைக்கக் கருதிக் காடுசேர்ந்த ஓர் சிற்றூரில் கல்வி
யில்லாத காளிமுத்து வசத்தில் விட்டு வைத்திருக்கிறான்.
கிழவர் ஒருவர் காளிமுத்தை நண்பனாக்கிக்கொண்டு
உடன் வசிக்கிறார்.]

காளிமுத்து:
என்னா கெழவா? பொடியனெங்கே? இங்கேவா!
கன்னா பின்னாஇண்ணு கத்துறியே என்னாது?
மாடுவுளை மேய்க்கவுடு! மாந்தோப்பில் ஆடவுடு!
காடுவுளே சுத்தவிடு! கல்விசொல்லித் தாராதே!

கிழவர்:
மாட்டினொடும் ஆட்டினொடும் மன்னன் குமாரனையும்
கூட்டிப்போய் வந்திடுவேன்; குற்றமொன்றும் நான்புரியேன்!
மன்னன் மகனுக்குக் கல்வியோ நல்லறிவோ
ஒன்றும் வராமேஉன் உத்தரவு போல்நடப்பேன்!

காளிமுத்து:
ஆனாநீ போய்வா, அழைச்சிப்போ பையனையும்
ஓநாயில் லாதஇடம் ஓட்டு!

காட்சி 3
[கிழவர் ஓர் தனியிடத்தில் சுதர்மனுக்கு
வில்வித்தை கற்றுக் கொடுக்கிறார்.]

கிழவர்:
விற்கோலை இடக்கரத்தால் தூக்கி, நாணை
விரைந்தேற்றித் தெறித்துப்பார்! தூணீ ரத்தில்,
பற்பலவாம் சரங்களிலே ஒன்றை வாங்கிப்
பழுதின்றிக் குறிபார்த்து, லட்சி யத்தைப்
பற்றிவிடு! மற்றொன்று, மேலும் ஒன்று
படபடெனச் சரமரரி பொழி! சுதர்மா,
நிற்கையில்நீ நிமிர்ந்துநிற்பாய் குன்றத் தைப்போல்!
நெளியாதே! லாவகத்தில் தேர்ச்சி கொள்நீ!

சுதர்மன்:
கற்போர்கள் வியக்கும்வகை இந்நாள் மட்டும்
கதியற்றுக் கிடந்திட்ட அடியே னுக்கு
மற்போரும், விற்போரும், வாளின் போரும்
வளர்கலைகள் பலப்பலவும் சொல்லித் தந்தீர்!
நற்போத காசிரியப் பெரியீர், இங்கு
நானுமக்குச் செயும்கைம்மா றொன்றும் காணேன்!
அற்புதமாம்! தங்களைநான் இன்னா ரென்றே
அறிந்ததில்லை; நீரும்அதை விளக்க வில்லை.

கிழவர்:
இன்னாரென் றென்னைநீ அறிந்து கொள்ள
இச்சையுற வேண்டாங்காண் சுதர்மா. என்னைப்
பின்னாளில் அறிந்திடுவாய்! நீறு பூத்த
பெருங்கனல்போல் பொறுத்திருப்பாய்; உன் பகைவன்
என்பகைவன்; உன்னாசை என்றன் ஆசை!
இஃதொன்றே நானுனக்குச் சொல்லும் வார்த்தை
மின்னாத வானம்இனி மின்னும்! அன்பு
வெறிகாட்டத் தக்கநாள் தூர மில்லை!

காட்சி 4
[சுதர்மனும் கிழவரும் இருக்குமிடத்தில் தண்டோ ராச்
சத்தம் கேட்கிறது.]

தண்டோ ராக்காரன்:
அரசாங்கப் பொக்கிஷத்தைத் திறப்பா ருண்டா?
ஆயிரரூபாய் பரிசாய்ப் பெறலாங் கண்டீர்!
வரவிருப்பம் உடையவர்கள் வருக! தீம்!தீம்!
மன்னர்இடும் ஆணையிது தீம்தீம் தீம்தீம்!

கிழவர்:
சரிஇதுதான் நற்சமயம்! நான்போய் அந்தத்
தறுக்குடைய சேனாதி பதியைக் காண்பேன்
வரும்வரைக்கும் பத்திரமாய் இரு!நான் சென்று
வருகிறேன் வெற்றிநாள் வந்த தப்பா!

காட்சி 5
[மந்திரியின் முன்னிலையில் கிழவர் அரசாங்கப் பொக்கி
ஷத்தைத் திறந்தார். மந்திரி கிழவரைக் கூட்டி கொண்டு
சேனாதிபதியிடம் வந்தான்.]

மந்திரி:
தள்ளாத கிழவரிவர் பொக்கி ஷத்தின்
தாழ்தன்னைச் சிரமமின்றித் திறந்து விட்டார்!

சேனாபதி:
கொள்ளாத ஆச்சரியம்! பரிசு தன்னைக்
கொடுத்துவிடு! கொடுத்துவிடு! சீக்கி ரத்தில்!

மந்திரி:
விள்ளுதல்கேள்! இப்பெரியார் நமக்கு வேண்டும்.
வேலையிலே அமைத்துவிடு ராசாங் கத்தில்!

சேனாபதி:
உள்ளதுநீ சொன்னபடி செய்க, (கிழவரை நோக்கி) ஐயா,
ஊர்தோறும் அலையாதீர்! இங்கி ருப்பீர்!

கிழவர்:
அரண்மனையில் எவ்விடத்தும் சஞ்ச ரிக்க
அனுமதிப்பீர்! என்னால்இவ் வரசாங் கத்தில்
விரைவில்பல ரகசியங்கள் வெளியாம்! என்று
விளங்குகின்ற தென்கருத்தில்! சொல்லி விட்டேன்.

சேனாபதி:
பெரியாரே, ஆவ்வாறே! அட்டி யில்லை.

மந்திரி:
பேதமில்லை, இன்றுமுதல் நீரு மிந்த
அரசபிர தானியரில் ஒருவர் ஆனீர்.
அறிவுபெற்ற படியாலே எல்லாம் பெற்றீர்!

காட்சி 6
[சேனாபதி காங்கேயன், தானே மணிபுரி அரசனென்று
நாளைக்கு மகுடாபிஷேகம் செய்துகொள்ளப் போகிறான்.
வெளிநாட்டரசர்களும் வருகின்ற நேரம். மந்திரி நாட்டின்
நிலைமையைச் சேனாபதிக்குத் தெரிவிக்கிறான்.]

மந்திரி:
மணிபுரி மக்கள்பால் மகிழ்ச்சி யில்லை!
அணிகலன் பூண்கிலர் அரிவை மார்கள்!
பாடகர் பாடிலர்! பதுமம் போன்ற
ஆடவர் முகங்கள் அழகு குன்றின!
வீதியில் தோரணம் விளங்க வில்லை!
சோதி குறைந்தன, தொல்நகர் வீடுகள்!
அரச குலத்தோர் அகம் கொதித்தனர்!
முரசு எங்கும் முழங்குதல் இல்லை!

சேனாபதி:
எனக்குப் பட்டம் என்றதும், மக்கள்
மனத்தில் இந்த வருத்தம் நேர்ந்ததா?
அராஜகம் ஒன்றும் அணுகா வண்ணம்
இராஜ சேவகர் ஏற்றது செய்க!
வெள்ளி நாட்டு வேந்தன் வரவை,
வள்ளி நாட்டு மகிபன் வரவைக்
கொன்றை நாட்டுக் கோமான் வரவைக்
குன்ற நாட்டுக் கொற்றவன் வரவை
ஏற்றுப சரித்தும் இருக்கை தந்தும்
போற்றியும் புகழ்ந்தும் புதுமலர் சூட்டியும்
தீதற நாளைநான் திருமுடி புனைய
ஆதர வளிக்க அனைத்தும் புரிக!

மந்திரி:
ஆர வாரம்! அதுகேட் டாயா?
பாராள் வேந்தர் பலரும் வரும்ஒலி!

சேனபதி:
லிகிதம் கண்ட மன்னர்
சகலரும் வருகிறார் சகலமும் புரிகநீ!

காட்சி 7
[அயல்நாட்டு வேந்தர்கள் வந்தார்கள்; சேனாபதி
அவர்களை வரவேற்றுத் தனது மகுடாபிஷேகத்தை
ஆதரிக்க வேண்டுகிறான்.]

சேனாபதி:
மணிபுரியின் வேந்தனார் மதுவை யுண்டு
மனங்கெட்டுப் போய்விட்டார்; விஜய ராணி
தணியாத காமத்தால் வெளியே சென்றாள்.
தனியிருந்த இளங்கோமான் சுதர்மன் என்பான்,
அணியாத அணியில்லை! அமுதே உண்பான்.
அருமையுடன் வளர்த்துவந்தும் கல்வி யில்லை.
பிணிபோல அன்னவன்பால் தீயொ ழுக்கம்
பெருகினதால் நாட்டினரும் அமைச்சர் யாரும்

என்னைமுடி சூடுகென்றார். உங்கட் கெல்லாம்
ஏடெழுதி னேன்நீரும் விஜயம் செய்தீர்;
சென்னியினால் வணங்குகின்றேன். மகுடம் பூணச்
செய்தென்னை ஆதரிக்க வேண்டு கின்றேன்
மன்னாதி மன்னர்களே, என்விண் ணப்பம்!
மணிமுடியை நான்புனைந்தால் உம்மை மீறேன்!
எந்நாளும் செய்நன்றி மறவேன் கண்டீர்!
என்னாட்சி நல்லாட்சி யாயி ருக்கும்!

வெள்ளிநாட்டு வேந்தன்:
[கோபத்தோடு கூறுகிறான்]
காங்கேய சேனாதி பதியே நீர்ஓர்
கதைசொல்லி முடித்துவிட்டீர்; யாமும் கேட்டோ ம்
தாங்காத வருத்தத்தால் விஜய ராணி
தனியாக எமக்கெல்லாம் எழுதி யுள்ள
தீங்கற்ற சேதியினைச் சொல்வோம், கேளும்!
திருமுடியை நீர்கவர, அரச ருக்குப்
பாங்கனைப்போல் உடனிருந்தே மதுப்ப ழக்கம்
பண்ணி வைத்தீர்! அதிகாரம் அபகரித்தீர்!

மானத்தைக் காப்பதற்கே ராணி யாரும்
மறைவாக வசிக்கின்றார்! அறிந்து கொள்ளும்!
கானகம்நேர் நகர்ப்புறத்தில் ராஜ புத்ரன்
கல்வியின்றி உணவின்றி ஒழுக்க மின்றி
ஊனுருகி ஒழியட்டும் எனவி டுத்தீர்.
உம்எண்ணம் இருந்தபடி என்னே! என்னே!
ஆனாலும் அப்பிள்ளை சுதர்மன் என்போன்
ஆயகலை வல்லவனாய் விளங்கு கின்றான்.

வள்ளிநாட்டு மன்னன்:
[இடை மறுத்து உரைக்கின்றான்.]
சுதர்மனை நாம்கண்ணால் பார்க்க வேண்டும்;
சொந்தநாட் டார்எண்ணம் அறிய வேண்டும்.
இதம்அகிதம் தெரியாமல் உம்மை நாங்கள்
எள்ளளவும் ஆதரிக்க மாட்டோ ம் கண்டீர்!
கொன்றைநாட்டுக் கோமான்:

[கோபத்தோடு கூறுகிறான்]
சதிபுரிந்த துண்மையெனில் நண்பரே, நீர்
சகிக்கமுடி யாததுயர் அடைய நேரும்.

குன்றநாட்டுக் கொற்றவன்:
[இடியென இயம்புவான்]
அதிவிரைவில் நீர்நிரப ராதி என்ப
தத்தனையும் எண்பிக்க வேண்டும் சொன்னோம்!.

சேனாபதி:
[பயந்து ஈனசுரத்தோடு]
அவ்விதமே யாகட்டும் ஐயன்மீர்! போசனத்தைச்
செவ்வையுற நீர்முடிப்பீர் சென்று.

காட்சி 8
[சேனாபதி மந்திரியிடம் தனது ஆசாபங்கத்தைத்
தெரிவித்து வருந்துவான்.]

சேனாபதி:
வரைமட்டும் ஓங்கி வளர்ந்தஎன் ஆசை
தரைமட்டம் ஆயினதா? அந்தோ! தனிமையிலே
ராணி விஜயா நடத்திவைத்த சூழ்ச்சிதனைக்
காண இதயம் கலக்கம் அடைந்திடுதே!
வேந்தன் மகனுக்கு வித்தையெல்லாம் வந்தனவாம்!
ஆந்தை அலறும் அடவிசூழ் சிற்றூரில்
போதித்த தார்?இதனைப் போயறிவோம் வாவாவா!
வாதிக்கு தென்றன் மனம்.

மந்திரி:
பொக்கிஷந் திறந்தஅந்தப் புலனுறு பெரியார்எங்கே?
அக்கிழ வர்பால்இந்த அசந்தர்ப்பம் சொல்லிக்காட்டி
இக்கணம் மகுடம்பூண ஏற்றதோர் சூழ்ச்சிகேட்போம்;
தக்கநல் லறிஞரின்றித் தரணியும் நடவாதன்றோ!
[கிழவர் காணப்படாத தறிந்து மந்திரி வருந்துவான்:]
திருவிலார் இவர்என்றெண்ணித் தீங்கினைஎண்ணி, அந்தப்
பெரியாரும் நம்மைவிட்டுப் பிரிந்தனர் போலும்!நண்பா!
அரிவையர் கூட்ட மெல்லாம் அறிவிலாக் கூட்டம்என்பாய்,
புரிவரோ விஜயராணி புரிந்தஇச் செயல்கள்மற்றோர்!

சேனாபதி:
இன்னலெலாம் நேர்க! இனியஞ்சப் போவதில்லை.
மன்னன்மக னைப்பார்ப்போம் வா!

காட்சி 9
[கிழவர் சுதர்மனுக்கு வாட்போர் கற்பிக்கிறார்.
இதனை ஒரு புறமிருந்து சேனாதிபதியும் மந்திரியும்
கவனிக்கிறார்கள்.]

சேனாபதி:
தாழ்திறந்த அக்கிழவன் ராச தனயனுக்குப்
பாழ்திறந்து நெஞ்சத்தில் பல்கலையும் சேர்க்கின்றான்.
வஞ்சக் கிழவனிவன் என்னருமை வாழ்க்கையிலே
நஞ்சைக் கலப்பதற்கு நம்மைஅன்று நண்ணினான்.
வாளேந்திப் போர்செய்யும் மார்க்கத்தைக் காட்டுகின்றான்.
தோளின் துரிதத்தைக் கண்டாயோ என்நண்பா!
[சேனாபதி கோபத்தோடு சுதர்மனை அணுகிக் கூறுவான்:]
ஏடா சுதர்மா! இவன்யார் நரைக்கிழவன்?
கேடகமும் கத்தியும்ஏன் ? கெட்டொழியத் தக்கவனே!

சுதர்மன்:
என்நாட்டை நான்ஆள ஏற்ற கலையுதவும்
தென்னாட்டுத் தீரர்; செழுந்தமிழர்; ஆசிரியர்!

சேனாபதி:
உன்நாட்டை நீஆள ஒண்ணுமோ சொல்லடா!

சுதர்மன்:
என்நாட்டை நான்ஆள்வேன்! எள்ளளவும் ஐயமில்லை!
[சேனாபதி உடனே தன் வாளையுருவிச் சுதர்மன்மேல்
ஓங்கியபடி கூறுவான்:]
உன்நாடு சாக்கடே! ஓடி மறைவாய்!பார்!
மின்னுகின்ற வாள்இதுதான்! வீச்சும் இதுவே!
[கிழவர் கணத்தில், சேனாபதி ஓங்கிய வாளைத் தமது
வாளினால் துண்டித்துக் கூறுவார்:]
உருவியவாள் எங்கே? உனதுடல்மேல் என்வாள்
வருகுதுபார், மானங்கொள்! இன்றேல் புறங்காட்டு!
[என வாளை லாவகத்தோடு ஓங்கவே, சேனாபதி
தன்னைக் காத்துக்கொள்ள முடியாமலும், சாகத்
துணியாமலும் புறங்காட்டி ஓடுகிறான். கிழவரும்
சுதர்மனும் சபையை நோக்கி ஓடும் சேனாபதியைத்
துரத்திக்கொண்டு ஓடி வருகிறார்கள்.]

காட்சி 10
[கூடியுள்ள அயல்நாட்டு வேந்தர்களிடம் சேனாபதி
ஓடிவந்து சேர்ந்தான். அவனைத் தொடர்ந்து கிழவரும்,
சுதர்மனும் உருவிய கத்தியுடன் வந்து சேர்கிறார்கள்.]

வெள்ளிநாட்டு வேந்தன்:
ஆடுகின்ற நெஞ்சும், அழுங்கண்ணு மாகநீ
ஓடிவரக் காரணமென் உற்ற சபைநடுவில்?
சேனா பதியே, தெரிவிப்பாய் நன்றாக!
[சேனாபதி ஒருபுறம் உட்கார்தல்.]
மானைத் துரத்திவந்த வாளரிபோல் வந்து
குறித்தெடுத்துப் பார்க்கின்றீர்; நீவிர்யார் கூறும்?
[என்று பெரியவரை நோக்கிக் கூறிப் பின்
அயல்நின்ற சுதர்மனை நோக்கிக் கூறுவான்:]
பறித்தெடுத்த தாமரைப்பூம் பார்வையிலே வீரம்
பெருக்கெடுக்க நிற்கின்றாய் பிள்ளையே, நீயார்?

கிழவர்:
இருக்கின்ற வேந்தர்களே, என்வார்த்தை கேட்டிடுவீர்!
மன்னர் குடிக்கும் வழக்கத்தைச் செய்துவைத்தும்,
என்னை வசப்படுத்த ஏற்பாடு செய்வித்தும்,
செல்வனையும் தன்னிடத்தே சேர்த்துப் பழிவாங்கக்
கல்வி தராமல் கடுங்காட்டில் சேர்ப்பித்தும்
பட்டாபி ஷேகமனப் பால்குடித்தான் காங்கேயன்!
தொட்டவாள் துண்டித்தேன். தோள்திருப்பி இங்குவந்தான்!
[தான் கட்டியிருந்த பொய்த்தாடி முதலியவைகளைக்
களைகிறாள், கிழவராய் நடித்த விஜயராணி.]
தாடியும்பொய்! என்றன் தலைப்பாகை யும்பொய்யே!
கூடியுள்ள அங்கியும்பொய்! கொண்ட முதுமையும்பொய்!
நான்விஜய ராணி! நகைக்கப் புவியினிலே
ஊனெடுத்த காங்கேயன் ஒன்றும் உணர்கிலான்!
கோழியும்தன் குஞ்சுதனைக் கொல்லவரும் வான்பருந்தைச்
சூழ்ந்தெதிர்க்க அஞ்சாத தொல்புவியில், ஆடவரைப்
பெற்றெடுத்த தாய்க்குலத்தைப் பெண்குலத்தைத் துஷ்டருக்குப்
புற்றெடுத்த நச்சரவைப் புல்லெனவே எண்ணிவிட்டான்!

வெள்ளி நாட்டரசன்:
[ஆச்சிரியத்தோடு கூறுவான்:]
நீரன்றோ அன்னையார்! நீரன்றோ வீரியார்!
ஆர்எதிர்ப்பார் அன்னையார் அன்பு வெறிதன்னை!

வள்ளிநாட்டு மகிபன்:
ஆவி சுமந்துபெற்ற அன்பன்உயிர் காப்பதற்குக்
கோவித்த தாயினெதிர், கொல்படைதான் என்செய்யும்?

கொன்றைநாட்டுக் கோமான்:
அன்னையும் ஆசானும் ஆருயிரைக் காப்பானும்
என்னும் படிஅமைந்தீர்! இப்படியே பெண்ணுலகம்
ஆகுநாள் எந்நாளோ? அந்நாளே துன்பமெலாம்
போகுநாள், இன்பப் புதியநாள் என்றுரைப்பேன்!
அன்னையெனும் தத்துவத்தை அம்புவிக்குக் காட்டவந்த
மின்னே, விளக்கே, விரிநிலவே வாழ்த்துகின்றேன்!

குன்றநாட்டுக் கொற்றவன்:
உங்கள் விருப்பம் உரைப்பீர்கள்; இவ்விளைய
சிங்கத்திற் கின்றே திருமகுடம் சூட்டிடலாம்!
தீங்கு புரிந்த, சிறுசெயல்கள் மேற்கொண்ட
காங்கேய னுக்கும் கடுந்தண் டனையிடலாம்!

ராணி:
கண்மணியே! உன்றன் கருத்தென்ன நீயேசொல்!

சுதர்மன்:
எண்ணம் உரைக்கின்றேன்! என்உதவி வேந்தர்களே,
இந்த மணிபுரிதான் இங்குள்ள மக்களுக்குச்
சொந்த உடைமை! சுதந்தரர்கள் எல்லாரும்!
ஆதலினால் இந்த அழகு மணிபுரியை
ஓதும் குடியரசுக் குட்படுத்த வேண்டுகின்றேன்!
அக்கிரமம் சூழ்ச்சி அதிகாரப் பேராசை
கொக்கரிக்கக் கண்ட குடிகள் இதயந்தான்
மானம் உணர்ந்து, வளர்ந்து, எழுச்சியுற்றுக்
கானப் புலிபோல் கடும்பகைவர் மேற்பாயும்!
ஆதலினால் காங்கேயன் அக்ரமமும் நன்றென்பேன்;
தீதொன்றும் செய்யாதீர் சேனா பதிதனக்கே!

மன்னர்கள்:
அவ்வாறே ஆகட்டும் அப்பனே ஒப்பில்லாய்!
செவ்வனே அன்புத் திருநாடு வாழியவே!
சேய்த்தன்மை காட்டவந்த செம்மால்! செழியன்புத்
தாய்த்தன்மை தந்த தமிழரசி வாழியவே!

சுதர்மன்:
எல்லார்க்கும் தேசம், எல்லார்க்கும் உடைமைஎலாம்
எல்லார்க்கும் எல்லா உரிமைகளும் ஆகுகவே!
எல்லார்க்கும் கல்வி சுகாதாரம் வாய்ந்திடுக!
எல்லார்க்கும் நல்ல இதயம் பொருந்திடுக!
வல்லார்க்கும் மற்றுள்ள செல்வர்க்கும் நாட்டுடைமை
வாய்க்கரிசி என்னும் மனப்பான்மை போயொழிக!
வில்லார்க்கும் நல்ல நுதல்மாதர் எல்லார்க்கும்
விடுதலையாம் என்றே மணிமுரசம் ஆர்ப்பீரே!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165kaviyam.htm#1.3.%20வீரத்தாய்

அகவல்

அரசன் அமைச்சர்பால் அறிவிக் கின்றான்:
"அமுத வல்லிஎன் ஆசைக் கொருபெண்!
தமிழிலக் கியங்கள் தமிழிலக் கணங்கள்
அமைவுற ஆய்ந்தாள்; அயல்மொழி பயின்றாள்;
ஆர்ந்த ஒழுக்கநூல், நீதிநூல் அறிந்தாள்;
அனைத்தும் உணர்ந்தா ளாயினும், அன்னாள்
கவிதை புனையக் கற்றா ளில்லை.
மலரும், பாடும் வண்டும், தளிரும்,
மலையும், கடலும், வாவியும், ஓடையும்,
விண்ணின் விரிவும், மண்ணின் வனப்பும்,
மேலோர் மேன்மையும், மெலிந்தோர் மெலிவும்
தமிழின் அமுதத் தன்மையும், நன்மையும்,
காலைஅம் பரிதியும், மாலை மதியமும்
கண்ணையும் மனத்தையும் கவர்வன; அதனால்
என்மகள் அகத்தில் எழுந்த கவிதையைப்
புறத்தில் பிறர்க்குப் புலப்படுத் துதற்குச்
செய்யுள் இலக்கணம் தெரிதல் வேண்டுமாம்!
ஏற்றஓர் ஆசான் எங்குளான்?
தோற்றிய வாறு சொல்க அமைச்சரே!"

எண்சீர் விருத்தம்

தலைமைஅமைச் சன்புகல்வான்: 'எனது மன்னா,
சகலகலை வல்லவன்;இவ் வுலகோர் போற்றும்
புலவன்; உயர்கவிஞன்; அவன்பேர் உதாரன்!
புதல்விக்குத் தக்கஉபாத் தியாயன் அன்னோன்.
இலையிந்த நாட்டினிலே அவனை ஒப்பார்!
எனினும்,அவன் இளவயதும் அழகும் வாய்ந்தோன்.
குலமகளை அன்னவன்பால் கற்க விட்டால்
குறைவந்து சேர்ந்தாலும் சேர்தல் கூடும்!

ஆனாலும் நானிதற்கோர் மார்க்கம் சொல்வேன்;
அமுதவல்லி உதாரனிடம் கற்கும் போது
தேனிதழாள் தனைஅவனும், அவனைப் பெண்ணும்
தெரிந்துகொள்ள முடியாமல் திரை விடுக்க!
பானல்விழி மங்கையிடம் "உதார னுக்குப்
பார்வையில்லை குருட" னென்று சொல்லி வைக்க!
ஞானமுறும் உதாரனிடம் "அமுத வல்லி
நலிகுஷ்ட ரோகி" என எச்சரிக்க!"

தார்வேந்தன் இதுகேட்டான்; வியந்தான்! "ஆம்ஆம்
தந்திரத்தால் ஆகாத தொன்று மில்லை;
பேர்வாய்ந்த உதாரனைப்போய் அழைப்பீர்" என்றான்.
பேச்சுவல்ல அமைச்சர்பலர் சென்ற ழைத்தார்.
தேர்வாய்ந்த புவிராஜன் போலே யந்தச்
செந்தமிழ்த்தீங் கவிராஜன் உதாரன் வந்தான்.
பார்வேந்தன் நிகழ்த்தினான்; உதாரன் கேட்டுப்
"பைந்தமிழ்க்குத் தொண்டுசெயக் கடவோம்" என்றான்.

சிந்து கண்ணி

மன்னவன் ஆணைப்படி - கன்னி
மாடத்தைச் சேர்ந்தொரு
பன்னரும் பூஞ்சோலை - நடுப்
பாங்கில்ஓர் பொன்மேடை!
அன்னதோர் மேடையிலே - திரை
ஆர்ந்த மறைவினிலே
மின்னொளி கேட்டிருப்பாள் - கவி
வேந்தன் உரைத்திடுவான்!

யாப்புமுறை உரைப்பான் - அணி
யாவும் உரைத்திடுவான்;
பாப்புனை தற்கான - அநு
பவம்பல புகல்வான்.
தீர்ப்புற அன்னவளும் - ஆசு
சித்திரம் நன்மதுரம்
சேர்ப்புறு வித்தாரம் - எனும்
தீங்கவிதை யனைத்தும்,

கற்றுவர லானாள்! - அது
கால பரியந்தம்
சற்றும் அவன்முகத்தை - அவள்
சந்திக்கவில்லை! விழி
அற்றவனைப் பார்த்தால் - ஓர்
அபசகுன மென்றே!
உற்றதோர் நோயுடையாள் - என்
றுதாரனும் பார்த்தில்லை!

இவ்விதம் நாட்கள்பலப் - பல
ஏகிட ஓர்தினத்தில்
வெவ்விழி வேலுடையாள் - அந்த
மேடையிற் காத்திருந்தாள்.
அவ்வம யந்தனிலே - விண்
அத்தனையும் ஒளியால்
கவ்வி உயர்ந்ததுபார் - இருட்
காட்டை அழித்தநிலா!

எண்சீர் விருத்தம்

அமுதவல்லி காத்திருந்த மேடை யண்டை
அழகியபூஞ் சோலையண்டை உதாரன் நின்றே,
இமையாது நோக்கினான் முழு நிலாவை!
இருவிழியால் தழுவினான்; மனத்தால் உண்டான்!
சுமைசுமையாய் உவப்பெடுக்க, உணர்வு வெள்ளம்
தூண்டிவிட ஆஆஆ என்றான்; வாணி
அமைத்திட்டாள் நற்கவிதை! மழைபோற் பெய்தான்!
அத்தனையும் கேட்டிருந்தாள் அமுத வல்லி!

"நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து
நிலாவென்று காட்டுகின்றாய் ஒளி முகத்தைக்!
கோலமுழு தும்காட்டி விட்டால் காதற்
கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? வானச்
சோலையிலே பூத்ததனிப் பூவோ நீதான்!
சொக்கவெள்ளிப் பாற்குடமோ, அமுத ஊற்றோ!
காலைவந்த செம்பரிதி கடலில் மூழ்கிக்
கனல்மாறிக் குளிரடைந்த ஒளிப் பிழம்போ!

அந்தியிரு ளாற்கருகும் உலகு கண்டேன்;
அவ்வாறே வான்கண்டேன்; திசைகள் கண்டேன்;
பிந்தியந்தக் காரிருள்தான் சிரித்த துண்டோ ?
பெருஞ்சிரிப்பின் ஒளிமுத்தோ நிலவே நீதான்!
சிந்தாமல் சிதறாமல் அழகை யெல்லாம்
சேகரித்துக் குளிரேற்றி ஒளியும் ஊட்டி
இந்தாவென் றேஇயற்கை அன்னை வானில்
எழில்வாழ்வைச் சித்தரித்த வண்ணந் தானோ!

உனைக்காணும் போதினிலே என்னு ளத்தில்
ஊறிவரும் உணர்ச்சியினை எழுது தற்கு
நினைத்தாலும் வார்த்தைகிடைத் திடுவ தில்லை;
நித்திய தரித்திரராய் உழைத் துழைத்துத்
தினைத்துணையும் பயனின்றிப் பசித்த மக்கள்
சிறிதுகூழ் தேடுங்கால், பானை ஆரக்
கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம்
கவின்நிலவே உனைக்காணும் இன்பம் தானோ!

உன்னைஎன திருவிழியாற் காணு கின்றேன்;
ஒளிபெறுகின் றேன்;இருளை ஒதுக்கு கின்றேன்;
இன்னலெலாம் தவிர்கின்றேன்; களிகொள் கின்றேன்;
எரிவில்லை குளிர்கின்றேன் புறமும் உள்ளும்!
அன்புள்ளம் பூணுகின்றேன்; அதுவு முற்றி
ஆகாயம் அளாவுமொரு காதல் கொண்டேன்!
இன்பமெனும் பால்நுரையே! குளிர் விளக்கே!
எனைஇழந்தேன், உன்னெழிலில் கலந்த தாலே!"

வேறு சிந்து கண்ணி

இவ்வித மாக உதாரனும் - தன
தின்குர லால்வெண் ணிலாவையே
திவ்விய வர்ணனை பாடவே - செவி
தேக்கிய கன்னங் கருங்குயில்,
"அவ்வறிஞன் கவி வல்லவன் - விழி
அற்றவ னாயின், நிலாவினை
எவ்விதம் பார்த்தனன், பாடினன்? - இதில்
எத்துக்கள் உண்டெ"ன ஓடியே,

சாதுரியச் சொல் உதாரனை - அவன்
தாமரைக் கண்ணொடும் கண்டனள்!
ஓதுமலைக் குலம் போலவே - அவன்
ஓங்கிய தோள்களைக் கண்டனள்!
"ஏதிது போன்றஓ ராண்எழில் - குறை
இன்றித் திருந்திய சித்திரம்?
சோதி நிலாவுக்கும் மாசுண்டாம் - இச்
சுந்தரனோ கறை ஒன்றிலான்!"

என்று வியப்புடன் நின்றனள்; - அந்த
ஏந்திழை தன்னெதிர் நின்றதைத்
தன்னிக ரற்ற உதாரனும் - கண்டு
தன்னை மறந்தவ னாகியே
"என்ன வியப்பிது? வானிலே - இருந்
திட்டதோர் மாமதி மங்கையாய்
என்னெதிரே வந்து வாய்த்ததோ? - புவிக்
கேதிது போலொரு தண்ஒளி!

மின்னற் குலத்தில் விளைந்ததோ? - வான்
வில்லின் குலத்திற் பிறந்ததோ?
கன்னற் றமிழ்க்கவி வாணரின் - உளக்
கற்பனையே உருப் பெற்றதோ?
பொன்னின் உருக்கிற் பொழிந்ததோ? - ஒரு
பூங்கொடியோ? மலர்க் கூட்டமோ?"
என்று நினைத்த உதாரன்தான் - "நீ
யார்?"என்ற ஓர்உரை போக்கினான்.

"அமுதவல்லி யன்றோ!" என்றாள் - "அந்த
அமைச்சனும் முடி வேந்தனும்
நமைப் பிரித்திடும் எண்ணத்தால் - உனை
நாட்டம் இலாதவன் என்றனர்!
சமுச யப்பட நீஇன்று - மதி
தரிசன மதைப் பாடினை!
கமலங்கள் எனும் கண்ணுடன் - உனைக்
காணப் பெற்றதென் கண்" என்றாள்.

எண்சீர் விருத்தம்

"இன்னொன்று கேளாயோ அமுத வல்லி!
என்னிடத்தில் உன்தந்தை "என்மகட்கு
முன்னொன்று தீவினையால் பெருநோய் வந்து
மூண்டதெருனச் சொல்லிவைத்தான்! அதனா லன்றோ
மின்ஒன்று பெண்ணென்று புவியில் வந்து
விளைந்ததுபோல் விளைந்தஉன தழகு மேனி
இன்றுவரை நான்பார்க்க எண்ண வில்லைமு
என்றுரைத்தான்; வியப்புடையான் இன்னுஞ் சொல்வான்:

புகாரிருளால் சூரியன்தான் மறைவ துண்டோ ?
கறைச்சேற்றால் தாமரையின் வாசம் போமோ?
பேரெதிர்ப்பால் உண்மைதான் இன்மை யாமோ?
பிறர்சூழ்ச்சி செந்தமிழை அழிப்ப துண்டோ ?
நேர்இருத்தித் தீர்ப்புரைத்துச் சிறையிற் போட்டால்
நிறைதொழிலா ளர்களுணர்வு மறைந்து போமோ?
சீரழகே! தீந்தமிழே! உனைஎன் கண்ணைத்
திரையிட்டு மறைத்தார்கள்!மு என்று சொன்னான்.

பஃறொடை வெண்பா

"வானத்தை வெண்ணிலா வந்து தழுவுவதும்
மோனத் திருக்கும் முதிர்சோலை மெய்சிலிர்க்க
ஆனந்தத் தென்றல்வந் தாரத் தழுவுவதும்
நானோக்கி நோக்கி நலிதலினைக் காணாயோ?
சித்தரித்த ஆணழகே, சென்றுபடர் முல்லையினைக்
கத்தரித்தல் இன்றிக் கரந்தழுவும் மாமரமும்,
சத்தமிட்ட வண்டு தடாகத்தின் அல்லியினை
முத்தமிட்டுத் தேன்குடிக்கும் நல்ல முடிவும்,
உணர்வுதனை உண்டாக்க வில்லையோ உன்பால்?
தணலைத்தான் வீசுகின்றான் சந்திரனும் என்மேல்!
குணமுள்ளார், கொஞ்சவரும் கோதையரைக் காதற்
பிணமாக்கித் தாங்கள் பிழைக்க நினைப்பாரோ?"
என்றுதன் காதல் எரிதழலுக் காற்றாமல்
சென்றுதன் னெஞ்சம் தெரிவித்தாள் சேல்விழியாள்!
"நன்று மடமயிலே! நான்பசியால் வாடுகின்றேன்;
குன்றுபோல் அன்னம் குவித்திருக்கு தென்னெதிரில்!
உண்ண முடியாதே ஊராள்வோன் கூர்வாளும்
வண்ணமுடிச் செல்வாக்கும் வந்து மறிக்குதடி!
எண்ணக் கடலில் எழுங்காதல் நீளலைதான்
உண்ணும் மணிக்குளத்தில் ஓடிக் கலக்காமல்
நால்வருணங் கள்விதித்தார் நாட்டார்கள்; அன்னவற்றில்
மேல்வருணம் கோல்கொண்டு மேதினியை ஆள்வருணம்
நீயன்றோ பெண்ணே! நினைப்பை யகற்றிவிடு!
நாயென்றே எண்ணிஎனை நத்தாமல் நின்றுவிடு!
வேல்விழியால் என்றன் விலாப்புறத்தைக் கொத்தாதே!
பால்போல் மொழியால் பதைக்கஉயிர் வாங்காதே!
கண்ணாடிக் கன்னத்தைக் காட்டிஎன் உள்ளத்தைப்
புண்ணாக்கிப் போடாதே; போபோ மறைந்துவிடு!
காதல் நெருப்பால் கடலுன்மேல் தாவிடுவேன்
சாதிஎனும் சங்கிலிஎன் தாளைப் பிணித்ததடீ!
பாளைச் சிரிப்பில்நான் இன்று பதறிவிட்டால்
நாளைக்கு வேந்தனெனும் நச்சரவுக் கென்செய்வேன்?
கொஞ்சு தமிழ்த்தேன் குடித்துவிட அட்டியில்லை
அஞ்சுவ தஞ்சாமை பேதமையன் றோஅணங்கே?
ஆணிப்பொன் மேனி அதில்கிடக்கும் நல்லொளியைக்
காணிக்கை நீவைத்தால் காப்பரசர் வாராரோ?
பட்டாளச் சக்ரவர்த்தி பார்த்தாலும் உன்சிரிப்புக்
கட்டாணி முத்துக்குக் காலில்விழ மாட்டாரோ?"
என்றழுதான் விம்மி இளையான், கவியரசன்.
குன்றும் இரங்கும்! கொடும்பாம்பும் நெஞ்சிளகும்!
ஏழையரைக் கொல்ல எதிரிருந்து பார்த்திருப்போர்
பாழான நெஞ்சும் சிலசமயம் பார்த்திரங்கும்!
சித்தம் துடிக்கின்ற சேயின் நிலைமைக்கு
ரத்தவெறி கொண்டலையும் நால்வருணம் ஏனிரங்கும்?
ரத்தவெறி கொண்டலையும் ராசன்மனம் ஏனிரங்கும்?
அத்தருணம் அந்த அமுதவல்லி ஏதுசொல்வாள்:
"வாளை உருவிவந்து மன்னன் எனதுடலை
நாளையே வெட்டி நடுக்கடலில் போடட்டும்,
காளைஉன் கைகள்எனைக் காவாமல் போகட்டும்,
தாளை அடைந்தஇத் தையல்உள்ளம் மாறாதே!
ஆதரவு காட்டாமல் ஐய!எனை விடுத்தால்
பாதரக்ஷை போலுன்றன் பாதம் தொடர்வதன்றி,
வேறு கதியறியேன்; வேந்தன் சதுர்வருணம்
சீறும்எனில் இந்தஉடல் தீர்ந்தபின்னும் சீறிடுமோ?
ஆரத்தழுவி அடுத்தவினா டிக்குள் உயிர்
தீரவரும் எனிலும் தேன்போல் வரவேற்பேன்!
அன்றியும்என் காதல் அமுதே! நமதுள்ளம்
ஒன்றுபட்ட பின்னர் உயர்வென்ன தாழ்வென்ன?
நாட்டின் இளவரசி நான்ஒருத்தி! ஆதலினால்
கோட்டை அரசன்எனைக் கொல்வதற்குச் சட்டமில்லை!
கோல்வேந்தன் என்காதற் கொற்றவனைக் கொல்லவந்தால்,
சேல்விழியாள் யான்எனது செல்வாக்கால் காத்திடுவேன்!
சாதிஉயர் வென்றும், தனத்தால் உயர்வென்றும்,
போதாக் குறைக்குப் பொதுத்தொழிலா ளர்சமுகம்
மெத்த இழிவென்றும், மிகுபெரும்பா லோரைஎல்லாம்
கத்தி முனைகாட்டிக் காலமெல்லாம் ஏய்த்துவரும்
பாவி களைத்திருத்தப் பாவலனே நம்மிருவர்
ஆவி களையேனும் அர்ப்பணம்செய் வோம்! இதனை
நெஞ்சார உன்மேலே நேரிழையாள் கொண்டுள்ள
மிஞ்சுகின்ற காதலின்மேல் ஆணையிட்டு விள்ளுகின்றேன்!
இன்னும்என்ன?" என்றாள். உதாரன் விரைந்தோடி
அன்னத்தைத் தூக்கியே ஆரத் தழுவினான்.
இன்ப உலகில் இருவர்களும் நாள் கழித்தார்.
பின்பொருநாள் அந்தப் பெருமாட்டி அங்கமெலாம்
மாறுபடக் கண்டு மனம்பதறித் தோழியர்கள்
வேறு வழியின்றி வேந்தனிடம் ஓடியே
"மன்னவனே! உன்அருமை மங்கை அமுதவல்லி
தன்னை உதாரனுக்குத் தத்தம் புரிந்தாளோ?
காதல்எனும் இன்பக் கடலில் குளித்துவிட்ட
மாதிரியாய்த் தோன்றுகிறாள்; மற்றிதனை மேன்மைச்
சமுகத்தில் விண்ணப்பம் சாதித்தோம்" என்றார்.
அமைதி யுடைய அரசன் அதன்உண்மை
கண்டறிய வேண்டுமென்று கன்னிகைமா டத்தருகே
அண்டியிருந் தான்இரவில் ஆரும் அறியாமல்!
வந்த உதாரன்எழில் மங்கைக்குக் கைலாகு
தந்து, தமிழில் தனிக்காதலைக் கலந்து
பேசினதும், காத்திருந்த பெண்ணரசி வேல்விழியை
வீசினதும், முத்தம் விளைத்த நடைமுறையும்
கண்டான் அரசன்! கடுகடுத்தான்! ஆயிரந்தேள்
மண்டையிலே மாட்டியது போல மனமுளைந்து
மாளிகைக்குச் சென்றான். மறுநாள் விடியலிலே
வாளில் விஷம்பூசி வைத்திருக்கச் சொல்லிவிட்டுச்
சேவகரைச் சீக்கிரம் உதாரனை இழுத்துவர
ஏவினான். அவ்வா றிழுத்துவந்தார் வேந்தனிடம்.
இச்சேதி ஊரில் எவரும் அறிந்தார்கள்;
அச்சமயம் எல்லாரும் அங்குவந்து கூடிவிட்டார்.
ஆர்ந்த கவியின் அரசனுயிர் இன்றோடு
தீர்ந்ததோ என்று திடுக்கிட்டார் எல்லாரும்.
ஈடற்ற நற்கவிஞன் இந்நிலைமை, அக்கன்னி
மாடத்தில் உள்ளஎழில் மங்கைக்கும் எட்டியதாம்.
அங்கே உதாரனிடம் மன்னன் உரைக்கின்றான்,
சிங்கா தனத்திலே சேர்ந்து:

"கொற்றவன் பெற்ற குலக்கொடியைக் கவி
கற்க உன்பால் விடுத்தேன் - அட
குற்றம் புரிந்தனையா இல்லையா இதை
மட்டும் உரைத்து விடு!
வெற்றி எட்டுத்திக்கு முற்றிலுமே சென்று
மேவிட ஆள்பவன் நான் - அட
இற்றைக்கு நின்தலை அற்றது! மற்றென்னை
என்னென்று தானினைத்தாய்?

வாள்பிடித் தேபுவி ஆளுமிராசர் என்
தாள்பிடித் தேகிடப்பார்! - அட
ஆள்பிடித் தால்பிடி ஒன்றிருப்பாய் என்ன
ஆணவமோ உனக்கு?
மீள்வதற்கோ இந்தத் தீமை புரிந்தனை
வெல்லத் தகுந்தவனோ? - இல்லை
மாள்வதற்கே இன்று மாள்வதற்கே!" என்று
மன்னன் உரைத்திடவே,

"மாமயில் கண்டு மகிழ்ந்தாடும் முகில்
வார்க்கும் மழைநாடா! - குற்றம்
ஆம்என்று நீயுரைத் தால்குற்றமே! குற்றம்
அன்றெனில் அவ்விதமே!
கோமகள் என்னைக் குறையிரந்தாள் அவள்
கொள்ளை வனப்பினிலே - எனைக்
காமனும் தள்ளிடக் காலிட றிற்றுக்
கவிழ்ந்தவண்ணம் வீழ்ந்தேன்!

பழகும் இருட்டினில் நானிருந்தேன் எதிர்
பால்நில வாயிரம்போல் - அவள்
அழகு வெளிச்சம் அடித்த தென்மேல்
அடியேன்செய்த தொன்றுமில்லை.
பிழைபுரிந் தேனென்று தண்டனை போடுமுன்
பெற்று வளர்த்த உன்றன்
இழைபுரிச் சிற்றிடை அமுதவல்லிக் குள்ள
இன்னல் மறப்ப துண்டோ ?"

நொண்டிச் சிந்து

கவிஞன் இவ்வா றுரைத்தான் - புவி
காப்பவன் இடியெனக் கனன் றுரைப்பான்:
"குவிந்த உன் உடற்சதையைப் - பல
கூறிட்டு நரிதின்னக் கொடுத் திடுவேன்.
தவந்தனில் ஈன்ற என்பெண் - மனம்
தாங்குவ தில்லையெனிற் கவலை யில்லை!
நவிலுமுன் பெரும் பிழைக்கே - தக்க
ராச தண்டனை யுண்டு! மாற்ற முண்டோ ?

அரசனின் புதல்வி அவள் - எனில்
அயலவ னிடம்மனம் அடைத லுண்டோ ?
சரச நிலையி லிருந்தீர் - அந்தத்
தையலும் நீயும், அத் தருணமதில்
இருவிழி யாற் பார்த்தேன்! - அறி
விலி, உனதொரு குடி அடியோடே
விரைவில்என் ஆட்சி யிலே - ஒரு
வேர்இன்றிப் பெயர்த்திட விதித்து விட்டேன்!

கொலைஞர்கள் வருகரு என்றான் - அவன்
கூப்பிடு முன் வந்து கூடிவிட்டார்.
"சிலையிடை இவனை வைத்தே - சிரச்
சேதம் புரிக" எனச் செப்பிடு முனம்
மலையினைப் பிளந்திடும் ஓர் - சத்தம்
வந்தது! வந்தனள் அமுத வல்லி!
"இலை உனக் கதிகாரம் - அந்த
எழிலுடையான் பிழை இழைக்க வில்லை.

ஒருவனும் ஒருத்தியு மாய் - மனம்
உவந்திடில் பிழையென உரைப்ப துண்டோ ?
அரசென ஒரு சாதி - அதற்
கயலென வேறொரு சாதி யுண்டோ ?
கரிசன நால் வருணம் - தனைக்
காத்திடும் கருத்தெனில், இலக்கணந் தான்
தரும்படி அவனை இங்கே - நீ
தருவித்த வகையது சரிதா னோ?

என்மனம் காதல னைச் - சென்
றிழுத்தபின் னேஅவன் இணங்கின தால்
அன்னவன் பிழையில னாம்! - அதற்
கணங்கெனைத் தண்டித்தல் முறை யெனினும்,
மன்ன!நின் ஒருமகள் நான் - எனை
வருத்திட உனக்கதி கார மில்லை!
உன்குடிக் கூறிழைத் தான் - எனில்
ஊர்மக்கள் இடமதை உரைத்தல் கடன்!"

என்றபற் பல வார்த்தை - வான்
இடியென உரைத்துமின் னென நகைத்தே
முன்னின்ற கொலைஞர் வசம் - நின்ற
முழுதுணர் கவிஞனைத் தன துயிரை
மென்மலர்க் கரத்தாலே - சென்று
மீட்டனள் வெடுக்கெனத் தாட்டி கத்தால்.
மன்னவன் இரு விழியும் - பொறி
வழங்கிட எழுந்தனன்; மொழிந்திடு வான்:

கும்மி

"நாயை இழுத்துப் புறம்விடுப்பீர் - கெட்ட
நாவை அறுத்துத் தொலைக்கு முன்னே! - இந்தப்
பேயினை நான்பெற்ற பெண்ணெனவே சொல்லும்
பேச்சை மறந்திடச் சொல்லிடுவீர்! - என்
தூய குடிக்கொரு தோஷத்தையே - தந்த
துட்டச் சிறுக்கியைக் காவற்சிறை - தன்னில்
போய்அடைப் பீர்!அந்தப் பொய்யனை ஊரெதிர்
போட்டுக் கொலைசெய்யக் கூட்டிச் செல்வீர்!"

என்றுரைத் தான். இருசேவகர்கள் - அந்த
ஏந்திழை அண்டை நெருங்கி விட்டார்! - அயல்
நின்ற கொலைஞர், உதாரனை யும் "நட
நீ"என் றதட்டினர்! அச்சமயம் - அந்த
மன்றி லிருந்தஓர் மந்திரிதான் - முடி
மன்னனை நோக்கி யுரைத்திடுவான் - "நீதி
அன்றிது மங்கைக் கிழைத்திருக்கும் தண்டம்;
அன்னது நீக்கி யருள்க" என்றான்.

எண்சீர் விருத்தம்

"காதலனைக் கொலைக்களத்துக் கனுப்பக் கண்டுங்
கன்னியெனை மன்னிக்கக் கேட்டுக் கொண்ட
நீதிநன்று மந்திரியே! அவன் இறந்தால்
நிலைத்திடும்என் உயிரெனவும் நினைத்து விட்டாய்!
சாதல்எனில் இருவருமே சாதல் வேண்டும்,
தவிர்வதெனில் இருவருமே தவிர்தல் வேண்டும்;
ஓதுகஇவ் விரண்டி லொன்று மன்னவன்வாய்!
உயிர்எமக்கு வெல்லமல்ல!" என்றாள் மங்கை.

"என்ஆணை மறுப்பீரோ சபையி லுள்ளீர்!
இசைகிடந்த என்செங்கோல் தன்னை வேற்றார்
பின்நாணும் படிசும்மா இருப்ப துண்டோ ?
பிழைபுரிந்தால் சகியேன்நான்! உறுதி கண்டீர்!
என்ஆணை! என்ஆணை! உதார னோடே
எதிரிலுறும் அமுதவல்லி இருவர் தம்மைக்
கன்மீதி லேகிடத்திக் கொலைசெய் வீர்கள்
கடிதுசெல்வீர்! கடிதுசெல்வீர்!" என்றான் மன்னன்.

அவையினிலே அசைவில்லை பேச்சு மில்லை;
அச்சடித்த பதுமைகள்போல் இருந்தார் யாரும்!
சுவையறிந்த பிறகுணவின் சுகம்சொல் வார்போல்
தோகையவள் "என்காதல் துரையே கேளாய்!
எவையும்நமைப் பிரிக்கவில்லை; இன்பம் கண்டோ ம்;
இறப்பதிலும் ஒன்றானோம்! அநீதி செய்த
நவையுடைய மன்னனுக்கு நாட்டு மக்கள்
நற்பாடம் கற்பியா திருப்ப தில்லை.

இருந்திங்கே அநீதியிடை வாழ வேண்டாம்
இறப்புலகில் இடையறா இன்பங் கொள்வோம்!
பருந்தும், கண்மூடாத நரியும் நாயும்,
பலிபீட வரிசைகளும் கொடுவாள் கட்டும்
பொருந்தட்டும்; கொலைசெய்யும் எதேச்சை மன்னன்
பொருந்தட்டும்; பொதுமக்கள் ரத்தச் சேற்றை
அருந்தட்டும்!" என்றாள். காதலர்கள் சென்றார்!
அதன்பிறகு நடந்தவற்றை அறிவிக் கின்றேன்:

கொலைக்களத்தில் கொலைஞர்களும் அதிகா ரங்கள்
கொண்டவரும் காதலரும் ஓர்பால் நின்றார்;
அலைகடல்போல் நாட்டார்கள் வீடு பூட்டி
அனைவருமே வந்திருந்தார். உதார னுக்கும்
சிலைக்குநிகர் மங்கைக்கும் "கடைசி யாகச்
சிலபேச்சுப் பேசிடுக" என்றுசொல்லித்
தலைப்பாகை அதிகாரி விடைதந் திட்டான்;
தமிழ்க்கவிஞன் சனங்களிடை முழக்கஞ் செய்வான்:

"பேரன்பு கொண்டவரே, பெரியோ ரே,என்
பெற்றதாய் மாரே,நல் இளஞ்சிங் கங்காள்!
நீரோடை நிலங்கிழிக்க, நெடும ரங்கள்
நிறைந்துபெருங் காடாக்கப், பெருவி லங்கு
நேரோடி வாழ்ந்திருக்கப் பருக்கைக் கல்லின்
நெடுங்குன்றில் பிலஞ்சேரப், பாம்புக் கூட்டம்
போராடும் பாழ்நிலத்தை அந்த நாளில்
புதுக்கியவர் யார்?அழகு நகருண் டாக்கிச்

சிற்றூரும், வரப்பெடுத்த வயலும், ஆறு
தேக்கியநல் வாய்க்காலும், வகைப் படுத்தி
நெற்சேர உழுதுழுது பயன்வி ளைக்கும்
நிறையுழைப்புத் தோள்களெலாம் எவரின் தோள்கள்?
கற்பிளந்து மலைபிளந்து கனிகள் வெட்டிக்
கருவியெலாம் செய்துதந்த கைதான் யார்கை?
பொற்றுகளைக் கடல்முத்தை மணிக்கு லத்தைப்
போய்எடுக்க அடக்கியமூச் செவரின் மூச்சு?

அக்கால உலகிருட்டைத் தலைகீ ழாக்கி
அழகியதாய் வசதியதாய்ச் செய்து தந்தார்!
இக்கால நால்வருணம் அன்றி ருந்தால்
இருட்டுக்கு முன்னேற்றம் ஆவ தன்றிப்
புக்கபயன் உண்டாமோ? பொழுது தோறும்
புனலுக்கும் அனலுக்கும் சேற்றி னுக்கும்
கக்கும்விஷப் பாம்பினுக்கும் பிலத்தி னுக்கும்
கடும்பசிக்கும் இடையறா நோய்க ளுக்கும்,

பலியாகிக் கால்கைகள் உடல்கள் சிந்தும்
பச்சைரத்தம் பரிமாறி இந்த நாட்டைச்
சலியாத வருவாயும் உடைய தாகத்
தந்ததெவர்? அவரெல்லாம் இந்த நேரம்
எலியாக முயலாக இருக்கின் றார்கள்!
ஏமாந்த காலத்தில் ஏற்றங் கொண்டோ ன்
புலிவேஷம் போடுகின்றான்! பொதுமக் கட்குப்
புல்லளவு மதிப்பேனும் தருகின் றானா?

அரசனுக்கும் எனக்குமொரு வழக்குண் டாக
அவ்வழக்கைப் பொதுமக்கள் தீர்ப்ப தேதான்
சரியென்றேன்; ஒப்பவில்லை! இவளும் நானும்
சாவதென்ற தீர்ப்பளித்தான்; சாவ வந்தோம்!
ஒருமனிதன் தேவைக்கே இந்தத் தேசம்
உண்டென்றால், அத்தேசம் ஒழிதல் நன்றாம்!
இருவர் இதோ சாகின்றோம்! நாளை நீங்கள்
இருப்பதுமெய் என்றெண்ணி யிருக்கின் றீர்கள்!

தன்மகளுக் கெனைஅழைத்துக் கவிதை சொல்லித்
தரச்சொன்னான், அவ்வாறு தருங்கா லிந்தப்
பொன்மகளும் எனைக்காதல் எந்தி ரத்தால்
புலன்மாற்றிப் போட்டுவிட்டாள்; ஒப்பி விட்டேன்!
என்உயிருக் கழவில்லை! அந்தோ! என்றன்
எழுதாத சித்திரம்போல் இருக்கு மிந்த
மன்னுடல்வெட் டப்படுமோர் மாப ழிக்கு
மனநடுக்கங் கொள்ளுகின்றேன்! இன்னும் கேளீர்;

தமிழறிந்த தால்வேந்தன் எனை அழைத்தான்;
தமிழ்க்கவியென் றெனைஅவளும் காத லித்தாள்!
அமுதென்று சொல்லுமிந்தத் தமிழ்,என் னாவி
அழிவதற்குக் காரணமா யிருந்த தென்று
சமுதாயம் நினைத்திடுமோ? ஐயகோ! என்
தாய்மொழிக்குப் பழிவந்தால் சகிப்ப துண்டோ ?
உமைஒன்று வேண்டுகின்றேன். மாசில் லாத
உயர்தமிழை உயிர்என்று போற்று மின்கள்!

அரசனுக்குப் பின்னிந்தத் தூய நாட்டை
ஆளுதற்குப் பிறந்தஒரு பெண்ணைக் கொல்ல
அரசனுக்கோ அதிகாரம் உங்க ளுக்கோ?
அவ்வரசன் சட்டத்தை அவம தித்தான்!
சிரம்அறுத்தல் வேந்தனுக்குப் பொழுது போக்கும்
சிறியகதை! நமக்கெல்லாம் உயிரின் வாதை!
அரசன்மகள் தன்நாளில் குடிகட் கெல்லாம்
ஆளுரிமை பொதுவாக்க நினைத்தி ருந்தாள்!

ஐயகோ சாகின்றாள்! அவளைக் காப்பீர்!
அழகியஎன் திருநாடே! அன்பு நாடே!
வையகத்தில் உன்பெருமை தன்னை, நல்ல
மணிநதியை, உயர்குன்றைத் தேனை அள்ளிப்
பெய்யுநறுஞ் சோலையினைத் தமிழாற் பாடும்
பேராவல் தீர்ந்ததில்லை! அப்பே ராவல்
மெய்யிதயம் அறுபடவும், அவ்வி ரத்த
வெள்ளந்தான் வெளிப்படவும் தீரு மன்றோ?

வாழியஎன் நன்னாடு பொன்னா டாக!
வாழியநற் பெருமக்கள் உரிமை வாய்ந்தே!
வீழியபோய் மண்ணிடையே விண்வீழ் கொள்ளி
வீழ்வதுபோல் தனித்தாளும் கொடிய ஆட்சி!
ஏழையினேன் கடைசிமுறை வணக்கம் செய்தேன்!
என்பெரியீர், அன்னையீர் ஏகு கின்றேன்!
ஆழ்கஎன்றன் குருதியெலாம் அன்பு நாட்டில்
ஆழ்கமுஎன்றான்! தலைகுனிந்தான் கத்தி யின்கீழ்!

படிகத்தைப் பாலாபி ஷேகம் செய்து
பார்ப்பதுபோல் அமுதவல்லி கண்ணீர் வெள்ளம்
அடிசோர்தல் கண்டார்கள் அங்கி ருந்தோர்!
ஆவென்று கதறினாள்! "அன்பு செய்தோர்
படிமீது வாழாரோ?" என்று சொல்லிப்
பதைபதைத்தாள்! இதுகேட்ட தேச மக்கள்
கொடிதென்றார்! கொடுவாளைப் பறித்தார்; அந்தக்
கொலையாளர் உயிர்த்தப்ப ஓட லானார்!

கவிஞனுக்கும் காதலிக்கும் மீட்சி தந்தார்!
காவலன்பால் தூதொன்று போகச் சொன்னார்;
"புவியாட்சி தனிஉனக்குத் தாரோம் என்று
போயுரைப்பாய்" என்றார்கள்! போகா முன்பே,
செவியினிலே ஏறிற்றுப் போனான் வேந்தன்!
செல்வமெலாம் உரிமையெலாம் நாட்டா ருக்கே
நவையின்றி யெய்துதற்குச் சட்டம் செய்தார்!
நலிவில்லை! நலமெல்லாம் வாய்ந்த தங்கே!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165kaviyam.htm#1.2%20புரட்சிக்%20கவி

குயில்கூவிக் கொண்டிருக்கும்; கோலம் மிகுந்த
மயிலாடிக் கொண்டிருக்கும்; வாசம் உடையநற்
காற்றுக் குளிர்ந்தடிக்கும்; கண்ணாடி போன்றநீர்
ஊற்றுக்கள் உண்டு; கனிமரங்கள் மிக்க உண்டு;
பூக்கள் மணங்கமழும்; பூக்கள்தோறும் சென்றுதே
னீக்கள் இருந்தபடி இன்னிசைபா டிக்களிக்கும்;
வேட்டுவப் பெண்கள் விளையாடப் போவதுண்டு;
காட்டு மறவர்களும் காதல்மணம் செய்வதுண்டு.
நெஞ்சில் நிறுத்துங்கள்; இந்த இடத்தைத்தான்
சஞ்சீவி பர்வதத்தின் சாரல்என்று சொல்லிடுவார்.

சஞ்சீவி பர்வதத்தின் சாரலிலே ஓர்நாளில்
கொஞ்சம் குறையமணி நான்காகும் மாலையிலே
குப்பன்எனும் வேடக் குமரன் தனியிருந்து
செப்புச் சிலைபோலே தென்திசையைப் பார்த்தபடி
ஆடா தசையாமல் வாடிநின்றான். சற்றுப்பின்,
வாடாத பூமுடித்த வஞ்சிவரக் கண்டான்.
வரக்கண்ட தும்குப்பன் வாரி அணைக்கச்
சுரக்கின்ற காதலொடு சென்றான். புதொடாதீர்கள்!மு
என்றுசொன்னாள் வஞ்சி. இளையான் திடுக்கிட்டான்.

குன்றுபோல் நின்றபடி குப்பன் உரைக்கின்றான்:
"கண்ணுக்குள் பாவையே! கட்டமுதை நான்பசியோ
டுண்ணப்போம் போதுநீ ஓர்தட்டுத் தட்டிவிட்டாய்!
தாழச் சுடுவெய்யில் தாளாமல் நான்குளிர்ந்த
நீழலைத்தா வும்போது நில்என்று நீதடுத்தாய்!
தொட்டறிந்த கையைத் தொடாதேஎன் றாய்! நேற்றுப்
பட்டறிந்த தேகசுகம் விட்டிருக்கக் கூடுவதோ?
உன்னோடு பேச ஒருவாரம் காத்திருந்தேன்
என்னோடு முந்தாநாள் பேச இணங்கினாய்!
நேற்றுத்தான் இன்பக் கரைகாட்டினாய்! இன்று
சேற்றிலே தள்ளிவிட்டாய்! காரணமும் செப்பவில்லை"

என்றுரைக்கக் கேட்ட இளவஞ்சி, "காதலரே!
அன்றுநீர் சொன்னபடி அவ்விரண்டு மூலிகையைச்
சஞ்சீவி பர்வதத்தில் தையலெனைக் கூட்டிப்போய்க்
கொஞ்சம் பறித்துக் கொடுத்தால் உயிர்வாழ்வேன்.
இல்லையென்றால் ஆவிஇரா" தென்றாள். வேட்டுவன்:
"கல்லில் நடந்தால்உன் கால்கடுக்கும்" என்றுரைத்தான்.
"கால்இரண்டும் நோவதற்குக் காரணமில்லை. நெஞ்சம்,
மூலிகை இரண்டின்மேல் மொய்த்திருப்ப தால்" என்றாள்.
"பாழ்விலங்கால் அந்தோ! படுமோசம் நேரும்" என்றான்
"வாழ்வில்எங்கும் உள்ளதுதான் வாருங்கள்" என்றுரைத்தாள்.
"அவ்விரண்டு மூலிகையின் அந்தரங்கம் அத்தனையும்
இவ்விடத்திற் கேட்டுக்கொள்" என்றுரைப்பான் குப்பன்:
"ஒன்றைத்தின் றால் இவ் வுலகமக்கள் பேசுவது
நன்றாகக் கேட்கும்;மற் றொன்றைவா யில்போட்டால்
மண்ணுலகக் காட்சிஎலாம் மற்றிங் கிருந்தபடி
கண்ணுக் கெதிரிலே காணலாம். சொல்லிவிட்டேன்;
ஆதலால் மூலிகையின் ஆசை தணிருஎன்றான்.
மோதிடுதே கேட்டபின்பு மூலிகையில் ஆசை" என்றாள்.
"என்னடி! பெண்ணேநான் எவ்வளவு சொன்னாலும்
சொன்னபடி கேட்காமல் தோஷம் விளைக்கின்றாய்.
பெண்ணுக் கிதுதகுமோ? வண்ணமலர்ச் சோலையிலே,
எண்ணம்வே றாகி இருக்கின்றேன் நான்" என்று
கண்ணைஅவள் கண்ணிலிட்டுக் கையேந்தி நின்றிட்டான்.

"பெண்ணுக்குப் பேச்சுரிமை வேண்டாம்என் கின்றீரோ?
மண்ணுக்கும் கேடாய் மதித்தீரோ பெண்ணினத்தை?
பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டு
மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே.
ஊமைஎன்று பெண்ணை உரைக்குமட்டும் உள்ளடங்கும்
ஆமை நிலைமைதான் ஆடவர்க்கும் உண்டு
புலன் அற்றபேதையாய்ப் பெண்ணைச்செய் தால்அந்
நிலம்விளைந்த பைங்கூழ் நிலைமையும் அம்மட்டே.
சித்ரநிகர்ப் பெண்டிர்களைச் சீரழிக்கும் பாரதநற்
புத்ரர்களைப் பற்றியன்றோ பூலோகம் தூற்றுவது?
சற்றுந் தயங்கேன் தனியாய்ச்சஞ் சீவிமலை
உற்றேறி மூலிகையின் உண்மை அறிந்திடுவேன்.
மூலிகையைத் தேட முடியாவிட் டால்மலையின்
மேலிருந்து கீழே விழுந்திறக்க நானறிவேன்.
ஊரிலுள்ள பெண்களெல்லாம் உள்ளத்தைப் பூர்த்திசெயும்
சீரியர்க்கு மாலையிட்டுச் சீரடைந்து வாழ்கின்றார்.
தோகை மயிலே! இதைநீகேள் சொல்லுகின்றேன்.
நாகம்போல் சீறுகின்ற நாதரிடம் சொல்லிவிடு.
பச்சிலைக்குச் சஞ்சீவி பர்வதம்செல் வேன்" என்றாள்.

"அச்சுப் பதுமையே! ஆரணங்கே! நில்லேடி!
நானும் வருகின்றேன் நாயகியே! நாயகியே!
ஏனிந்தக் கோபம்? எழிலான காதலியே!'
என்றுகுப்பன் ஓடி இளவஞ்சி யைத்தழுவி
நின்றான். இளவஞ்சி நின்று மகிழ்வுற்றாள்.
"அவ்விரண்டு மூலிகையில் ஆரணங்கே நீஆசை
இவ்வளவு கொண்டிருத்தல் இப்போது தான்அறிந்தேன்
கூட்டிப்போய்ப் பச்சிலையைக் கொய்து தருகின்றேன்;
நீட்டாண்மைக் காரி! எனக்கென்ன நீதருவாய்?"
என்று மொழிந்தான் எழுங்காத லால்குப்பன்.
"முன்னே இலைகொடுத்தால் முத்தம் பிற" கென்றாள்.
"என்கிளியே நீமுத்தம் எத்தனைஈ வாய்?" என்றான்.
"என்றன் கரத்தால் இறுக உமைத்தழுவி
நோகாமல் முத்தங்கள் நூறுகொடுப் பேன்" என்றாள்.
"ஆசையால் ஓர்முத்தம் அச்சாரம் போ" டென்றான்.

"கேலிக்கு நேரம் இதுவல்ல. கேளுங்கள்
மூலிகைக்குப் பக்கத்தில் முத்தம் கிடைக்கும்" என்றாள்.
குப்பன் தவித்திட்டான், காதற் கொடுமையினால்.
எப்போது நாம்உச்சிக் கேறித் தொலைப்பதென
அண்ணாந்து பார்த்திட்டான் அம்மலையின் உச்சிதனை!
கண்ணாட்டி தன்னையும்ஓர் கண்ணாற் கவனித்தான்.
வஞ்சிஅப் போது மணாளன் மலைப்பதனைக்
கொஞ்சம் அவமதித்திக் கோவை உதடு
திறந்தாள். திறந்து சிரிக்குமுன், குப்பன்
பறந்தான் பருவதமேல் பாங்கியையும் தூக்கியே.
கிட்டரிய காதற் கிழத்தி இடும்வேலை
விட்டெறிந்த கல்லைப்போல் மேலேறிப் பாயாதோ!
கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்
மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர்கடுகாம்.
மாமலைதான் சென்னி வளைந்து கொடுத்ததுவோ?
நாம்மலைக்கக் குப்பன் விரைவாய் நடந்தானோ?
மங்கையினைக் கீழிறக்கி, "மாதே! இவைகளே
அங்குரைத்த மூலிகைகள்; அட்டியின்றிக் கிள்ளிக்கொள்"
என்றுரைத்தான் குப்பன். இளவஞ்சி தான்மகிழ்ந்து
சென்று பறித்தாள். திரும்பிச் சிறிதுவழி
வந்தார்கள். அங்கோர் மரத்து நிழலிலே
சிந்தை மகிழ்ந்து சிறக்க அமர்ந்தார்கள்.

மூலிகையில் ஓர்இனத்தை முன்னே இருவருமாய்
ஞாலத்துப் பேச்சறிய நாக்கிலிட்டுத் தின்றார்கள்.
வஞ்சிக்கும் குப்பனுக்கும் வையத்து மாந்தர்களின்
"நெஞ்சம் வசமாக" நேரில்அவர் பேசுதல்போல்
செந்தமிழில் தங்கள் செவியிற்கேட் கப்பெற்றார்.
அந்த மொழிகள் அடியில் வருமாறு:

"இத்தாலி தேசம் இருந்து நீஇங்கு வந்தாய்.
பத்துத் தினமாகப் பாங்காய் உணவுண்ண
இவ்விடுதி தன்னில் இருந்து வருகின்றாய்!
"எவ்வாறு நான் சகிப்பேன் இந்தக் கறுப்பன்
எனக்கெதிரே உட்கார்ந் திருப்பதனை" என்றாய்;
தனக்கெனவே நல்உணவுச் சாலைஒன் றுண்டாக்கி
அங்கவன் சென்றால் அடுக்கும் எனஉரைத்தாய்;
இத்தாலிச் சோதரனே! என்னமதியுனக்கே?
செத்து மடிவதிலும் சேர்ந்து பிறப்பதிலும்
இவ்வுலக மக்களிலே என்னபே தங்கண்டாய்?
செவ்வைபெறும் அன்பில்லார் தீயபே தம்கொள்வார்.
எங்கள் பிராஞ்சியர்கள் இப்பேதம் பாராட்டித்
தங்கள் பழங்கீர்த்தி தாழ்வடைய ஒப்பார்கள்;
பேதபுத்தி சற்றும் பிடிக்காது போ!போ!போ!
பேதம்கொண் டோ ர்க்குப் பிராஞ்சில் இடமில்லை"
என்ற மொழிகள் இவர்காதில் கேட்டவுடன்
நன்று பிராஞ்சியர்க்கு நாக்குளிர வாழ்த்துரைத்தார்.
பின்னர் அமெரிக்கன் பேசுவதைக் கேட்டார்கள்.
அன்னவன் பேச்சும் அடியில் வருமாறு:

"நல்ல அமெரிக்கன் நானிலத்தில் வாழ்கின்ற
எல்லாரும் நன்றாய் இருக்க நினைத்திடுவான்.
பொல்லா அமெரிக்கன் பொன்னடைந்து தான்மட்டும்
செல்வனாய் வாழத் தினமும் நினைத்திடுவான்.
நல்லவனாய் நானிருக்க நாளும் விரும்புகிறேன்."
சொல்லும் இதுகேட்ட தோகையும் குப்பனும்
"கொத்தடிமை யாகிக் குறைவுபடும் நாட்டுக்கு
மெத்தத்துணை யாகியிவன் மேன்மை அடைக" என்றார்.
இங்கிலந்து தேசம் இருந்தொருவன் பேசினான்;
இங்கிருந்து கேட்டார் இருவரும். என்னவென்றால்:

"ஓ!என் சகோதரரே! ஒன்றுக்கும் அஞ்சாதீர்!
நாவலந் தீவு நமைவிட்டுப் போகாது.
வாழ்கின்றார் முப்பத்து முக்கோடி மக்கள்என்றால்
சூழ்கின்ற பேதமும் அந்தத் தொகையிருக்கும்;
ஆகையால் எல்லாரும் அங்கே தனித்தனிதான்.
ஏகமன தாகிஅவர் நம்மை எதிர்ப்பதெங்கே?
பேதம் வளர்க்கப் பெரும்பெரும்பு ராணங்கள்!
சாதிச்சண் டைவளர்க்கத் தக்கஇதி காசங்கள்!
கட்டிச் சமுகத்தின் கண்ணவித்துத் தாமுண்ணக்
கொட்டி அளக்கும் குருக்கள் கணக்கற்றோர்.
தேன்சுரக்கப் பேசிஇந்த தேசத்தைத் தின்னுதற்கு
வான்சுரரை விட்டுவந்த பூசுரரும் வாழ்கின்றார்.
இந்த உளைச்சேற்றை ஏறாத ஆழத்தை
எந்தவிதம் நீங்கிநம்மை எதிர்ப்பார்? இன்னமும்
சிந்தனா சக்தி சிறிதுமின்றி மக்களுக்குத்
தம்தோள் உழைப்பிலே நம்பிக்கை தானுமின்றி
ஊறும் பகுத்தறிவை இல்லா தொழித்துவிட்டுச்
சாரற்ற சக்கையாய்ச் சத்துடம்பைக் குன்றவைத்துப்
பொற்புள்ள மாந்தர்களைக் கல்லாக்கி யேஅந்தக்
கற்கள் கடவுள்களாய்க் காணப் படும்அங்கே.
இந்த நிலையிற் சுதந்திரப் போரெங்கே?
கொந்தளிப்பில் நல்லதொரு கொள்கை முளைப்பதெங்கே?
"தேகம் அழிந்துவிடும்; சுற்றத்தார் செத்திடுவார்;
போகங்கள் வேண்டாம்; பொருள்வேண்டாம் மற்றுமிந்தப்
பாழுலகம் பொய்யே பரமபதம்போ" என்னும்
தாழ்வகற்ற எண்ணுங்கால் சாக்குருவி வேதாந்தம்.
சாதிப் பிரிவு சமயப் பிரிவுகளும்,
நீதிப் பிழைகள் நியமப் பிழைகளும்,
மூடப் பழக்கங்கள் எல்லாம் முயற்சிசெய்தே
ஓடச்செய்தால் நமையும் ஓடச்செய்வார் என்பேன்"

இந்தப் பிரசங்கம் இவ்விருவர் கேட்டார்கள்;
சொந்த நிலைக்குத் துயருற்றார். வஞ்சி
சிலைபோல் இருந்தாள்; திகைத்தாள்; பின்நாட்டின்
நிலையறிய நேர்ந்தது பற்றி மகிழ்ந்திட்டாள்!
"பச்சிலையால் நல்ல பயன்விளையும்" என்று சொன்னாள்!
பச்சிலையைத் தந்த பருவதத்தைக் கும்பிட்டாள்.
"இந்த இலையால் இனிநன்மை கொள்க" என்று
சொந்தத் தாய்நாட்டுக்குச் சொன்னாள் பெருவாழ்த்து.
"வல்லமைகொள் பச்சிலையின் மர்மத்தைக் கண்டபடி
சொல்லிஎனைத் தூக்கிவந்து சூக்ஷுமத்தைக் காட்டிய,கண்
ணாளர்தாம் வாழ்வடைக" என்றாள்; அவனுடைய
தோளை ஒருதரம் கண்ணாற் சுவைபார்த்தாள்.
அச்சமயம் குப்பன், அழகியதன் தாய்நாட்டார்
பச்சைப் பசுந்தமிழில் பேசுவதைக் கேட்டிருந்தான்.
குப்பனது தோளில் குளிர்ந்தமலர் ஒன்றுவிழ
இப்பக்கம் பார்த்தான்; வஞ்சி இளங்கையால்
தட்டிய தட்டென்று சந்தேகம் தீர்ந்தவனாய்க்
"கட்டிக் கரும்பே! கவனம் எனக்கு
நமது தேசத்தில் நடக்கின்ற பேச்சில்
அமைந்து கிடக்கு' தென்றான். வஞ்சி அதுகேட்டே
"அன்னியர்கள் பேசுவதில் அன்பைச் செலுத்துங்கள்;
கன்னத்தை மாத்திரம்என் கையிற் கொடுங்க" ளென்றாள்.
"அன்பும் உனக்குத்தான்; ஆருயிரும் உன்னதுதான்
இன்பக்கிளியே! எனக்களிப்பாய் முத்த" மென்றான்.

கையோடு கைகலந்தார்; முத்தமிடப் போகையிலே
ஐயையோ! ஐயையோ! என்ற அவலமொழி
காதிலே வீழ்ந்தது! முத்தம் கலைந்ததே!
"ஈதென்ன விந்தை? எழில்வஞ்சி! கேள்" என்றான்.
வஞ்சி கவனித்தாள். சத்தம் வரும்வழியாய்
நெஞ்சைச் செலுத்தினார் நேரிழையும் காதலனும்.

"ஓர்நொடியிற் சஞ்சீவி பர்வதத்தை ஓடிப்போய்
வேரோடு பேர்த்துவர வேண்டுமே ஐயாவே!"
இப்பாழும் வாக்கை இருவரும் கேட்டார்கள்.
குப்பன் மிகப்பயந்து கோதைமுகம் பார்த்திட்டான்
வஞ்சி யவள்நகைத்தே "இன்ப மணாளரே!
சஞ்சீவி பர்வதத்தைத் தாவிப் பெயர்க்கும்
மனிதரும் இல்லை! மலையும் அசையா
தினிஅந்தச் சத்தத்தில் எண்ணம் செலுத்தாதீர்"
என்றுரைத்தாள் வஞ்சி. இதுசொல்லித் தீருமுன்,

"நன்றாக உங்களுக்கு ராமன் அருளுண்டு;
வானம் வரைக்கும் வளரும் உடலுண்டே;
ஏனிங்கு நின்றீர்? எடுத்துவரு வீர்மலையை"

என்றஇச் சத்தம் இவர்செவியில் வீழ்ந்தவுடன்
குன்று பெயர்வது கொஞ்சமும்பொய் யல்லவென்று
குப்பன் நடுநடுங்கிக் கொஞ்சுமிள வஞ்சியிடம்
"மங்கையே, ராமனருள் வாய்ந்தவனாம்; வானமட்டும்
அங்கம் வளர்வானாம்; அப்படிப் பட்டவனை
இந்தச்சஞ் சீவிமலை தன்னை யெடுத்துவர
அந்த மனிதன்அங்கே ஆணை யிடுகின்றான்.
நாலடியில் இங்கு நடந்துவந்து நாம்மலையின்
மேலிருக்கும் போதே வெடுக்கென்று தூக்கிடுவான்.
இங்கு வருமுன் இருவரும் கீழிறங்கி
அங்குள்ள சாரல் அடைந்திடுவோம் வாமுவென்றான்.

'ராமனெங்கே! ராமன் அருளெங்கே! சஞ்சீவி
மாமலையைத் தூக்குமொரு வல்லமைஎங்கே! இவற்றில்
கொஞ்சமும் உண்மை இருந்தால்நாம் கொத்தவரைப்
பிஞ்சுகள்போல் வாடிப் பிழைப்ப தரிதாகி
அடிமையாய் வாழோமே? ஆண்மைதான் இன்றி
மிடிமையில் ஆழ்ந்து விழியோமே?" என்றந்த
வஞ்சி யுரைத்தாள்.பின் மற்றோர் பெருஞ்சத்தம்,
அஞ்சுகின்ற குப்பன் அதிரச்செய் திட்டதே!

"அம்மலையை ஓர்நொடியில் தூக்கிவந் தையாவே
உம்எதிரில் வைக்கின்றேன் ஊஹுஹு உஹுஹு!"

குப்பன் பதைத்தான் குடல்அறுந்து போனதுபோல்.
"எப்படித்தாம் நாம்பிழைப்போம்? ஏதும் அறிகிலேன்
சஞ்சீவி பர்வதத்தைத் தாவித் தரையோடு
பஞ்சிருக்கும் மூட்டைபோல் பாவி அவன்எவனோ
தூக்குகின்றான்! வஞ்சி! சுகித்திருக்க எண்ணினையே!
சாக்காடு வந்ததடி! தக்கவிதம் முன்னமே
நம்பென்று நான்சொன்ன வார்த்தையெல்லாம் நம்பாமல்
வம்பு புரிந்தாய்! மலையும் அதிர்ந்திடுதே!
முத்தம் கொடுத்து முழுநேர மும்தொலைத்தாய்.
செத்துமடி யும்போது முத்தம் ஒருகேடா?
என்றனுயி ருக்கே எமனாக வாய்த்தாயே!
உன்றன் உயிரைத்தான் காப்பாற்றிக் கொண்டாயா?
தூக்கிவிட்டான்! தூக்கிவிட்டான்! தூக்கிப்போய்த் தூளாக
ஆக்கிச் சமுத்திரத்தில் அப்படியே போட்டிடுவான்!
எவ்வாறு நாம்பிழைப்போம்? ஏடி, இதைநீதான்
செவ்வையாய் யோசித்துச் செப்பாயோ ஓர்மார்க்கம்?'

என்று துடிதுடிக்கும் போதில், இளவஞ்சி
நின்று நகைத்துத்தன் நேசனைக்கை யால்அணத்தே
"இப்புவிதான் உண்டாகி எவ்வளவு நாளிருக்கும்?
அப்போது தொட்டிந்த அந்திநே ரம்வரைக்கும்
மாமலையைத் தூக்கும் மனிதன் இருந்ததில்லை.
ஓமண வாளரே! இன்னம் உரைக்கின்றேன்,
மன்னும் உலகம் மறைந்தொழியும் காலமட்டும்
பின்னும் மலைதூக்கும் மனிதன் பிறப்பதில்லை.
அவ்வாறே ஓர்மனிதன் ஆகாயம் பூமிமட்டும்
எவ்வாறு நீண்டு வளருவான்? இல்லைஇல்லை!
காதல் நிசம்இக் கனிமுத்தம் மிக்கஉண்மை!
மாதுதோள் உம்தோள் மருவுவது மெய்யாகும்.
நம்புங்கள் மெய்யாய் நடக்கும்விஷ யங்களிவை.
சம்பவித்த உண்மை அசம்பாவத்தால் தாக்குறுமோ?
வாழ்க்கை நதிக்கு,வீண் வார்த்தைமலை யும்தடையோ?
வாழ்த்தாமல் தூற்றுகின்றீர் வந்துநிற்கும் இன்பத்தை!
பொய்யுரைப்பார் இந்தப் புவியைஒரு சிற்றெறும்பு
கையால் எடுத்ததென்பார் ஐயோஎன் றஞ்சுவதோ?
முத்தத்தைக் கொள்க! முழுப்பயத்தில் ஒப்படைத்த
சித்தத்தை வாங்கிச் செலுத்துங்கள் இன்பத்தில்."
என்றுரைத்தாள் வஞ்சி. இதனாற் பயனில்லை;
குன்று பெயர்ந்ததென்று குப்பன் மனம்அழிந்தான்!

"இந்நேரம் போயிருப்பார்! இந்நேரம் பேர்த்தெடுப்பார்!
இந்நேரம் மேகத்தில் ஏறிப் பறந்திடுவார்!
உஸ்என்று கேட்குதுபார் ஓர்சத்தம் வானத்தில்!
விஸ்வரூ பங்கொண்டு மேலேறிப் பாய்கின்றார்!"

இம்மொழிகேட் டான்குப்பன்; "ஐயோ" எனஉரைத்தான்.
அம்மட்டும் சொல்லத்தான் ஆயிற்றுக் குப்பனுக்கே.
உண்மை யறிந்தும் உரைக்கா திருக்கின்ற
பெண்ணான வஞ்சிதான் பின்னும் சிரித்து
"மனதை விடாதீர் மணாளரே காதில்
இனிவிழப் போவதையும் கேளுங்கள்" என்றுரைத்தாள்.
வஞ்சியும் குப்பனும் சத்தம் வரும்வழியில்
நெஞ்சையும் காதையும் நேராக வைத்திருந்தார்:

"இப்படி யாகஅநுமார் எழும்பிப் போய்
அப்போது ஜாம்பவந்தன் ஆராய்ந்து சொன்னதுபோல்
சஞ்சீவி பர்வதத்தைத் தாவிப் பறந்துமே
கொஞ்ச நேரத்தில் இலங்கையிலே கொண்டுவந்து
வைத்தார். உடனே மலைமருந்தின் சத்தியால்
செத்த இராமனும் லக்ஷ்மணனும் சேர்ந்தெழுந்தார்!"

உற்றிதனைக் கேட்டகுப்பன் "ஓஹோ மலையதுதான்
சற்றும் அசையாமல் தான்தூக்கிப் போனானே!
லங்கையிலே வைத்தானே! லங்கையில்நாம் தப்போமே!"
என்றான். நடுக்கம் இதயத்தில் நீங்கவில்லை.
"இன்னும் பொறுங்கள்" எனஉரைத்தாள் வஞ்சி.

"பெரும்பாரச் சஞ்சீவி பர்வதத்தைப் பின்னர்
இருந்த இடத்தில் அநுமார், எடுத்தேகி
வைத்துவிட்டு வந்தார் மறுநிமிஷம் ஆகாமுன்.
செத்தார்க் குயிர்கொடுத்தார். தெண்டமும் போட்டுநின்றார்!"

குப்பனிது கேட்டுக் குலுக்கென்று தான்நகைத்தான்.
"அப்போதே நான்நினைத்தேன் ஆபத்திரா தென்று.
நான்நினைத்த வண்ணம் நடந்ததுதான் ஆச்சரியம்.
ஏனடி!வஞ்சி! இனியச்சம் இல்லை" யென்றான்.

"ஆனாலும் இன்னும் அரைநிமிஷம் காத்திருங்கள்;
நானும் அதற்குள்ளே நாதரே, உம்மையொரு
சந்தேகம் கேட்கின்றேன். தக்க விடையளிப்பீர்!
இந்த மலையில்நாம் ஏறிய பின்நடந்த
ஆச்சரிய சம்பவந்தான் என்ன? அதையுரைப்பீர்!
பேச்சை வளர்த்தப் பிரியப் படவில்லை"
என்றாள் இளவஞ்சி. குப்பன் இசைக்கிறான்:

"என்னடி வஞ்சி! இதுவும் தெரியாதா?
நாமிங்கு வந்தோம். நமக்கோர் நலிவின்றி
மாமலையை அவ்வநுமார் தூக்கி வழிநடந்து
லங்கையிலே வைத்தது! ராமன் எழுந்ததும்,
இங்கெடுத்து வந்தே இருப்பிடத்தில் வைத்தது!
கண்ணே! மலையைக் கடுகளவும் ஆடாமல்
கண்ணாடிப் பாத்திரத்தைக் கல்தரையில் வைப்பதுபோல்
தந்திரமாய் மண்ணில் தலைகுனிந்து வைத்திட்ட
அந்தப் பகுதிதான் ஆச்சரியம் ஆகுமடி!"

ஆச்சரிய சம்பவத்தைக் குப்பன் அறிவித்தான்.
பேச்செடுத்தாள் வஞ்சி; பிறகும் ஒருசத்தம்:

"இம்மட்டும் இன்று கதையை நிறுத்துகின்றேன்;
செம்மையாய் நாளைக்குச் செப்புகின்றேன் மற்றவற்றை.
சத்தியரா மாயணத்திற் சத்தான இப்பகுதி
உத்தியாய்க் கேட்டோ ர் உரைத்தோர்எல் லாருமே
இங்குள்ள போகங்கள் எல்லாம் அனுபவிப்பர்;
அங்குள்ள வைகுந்தம் அட்டியின்றிச் சேர்வார்கள்;
ஜானகீ காந்தஸ் மரணே! ஜயஜயராம்!"

"மானேஈ தென்னஎன்றான்" வையம்அறி யாக்குப்பன்!
"முன்புநான் உங்களுக்கு முத்தம் கொடுக்கையிலே
சொன்ன "ஐயையோ" தொடங்கி இதுவரைக்கும்
ராமாயணம் சொல்லி நாளைக் கழிக்கின்ற
ஏமாந்தார் காசுக் கெசமானன் என்றுரைக்கும்
பாகவதன் சொன்னான் பலபேரைக் கூட்டியே!
ஆகியதும் இந்த அரிய உழைப்புக்குப்
பத்தோ பதினைந்தோ பாகவதன் பெற்றிடுவான்.
சித்தம் மலைக்கச் சிறிதுமிதில் இல்லை" யென்று
கையி லிருந்தஒரு காட்சிதரும் மூலிகையை
"ஐயா இதைவிழுங்கி அவ்விடத்திற் பாருங்கள்"
என்றந்தக் குப்பனிடம் ஈந்துதா னும்தின்றாள்.
தின்றதும் தங்கள் விழியால் தெருவொன்றில்,
மாளிகையி னுள்ளே மனிதர் கூட்டத்தையும்,
ஆளிவாய்ப் பாகவதன் அங்கு நடுவிலே
உட்கார்ந் திருப்பதையும், ஊர்மக்கள் செல்வதையும்,
பட்டைநா மக்காரப் பாகவதன் ரூபாயைத்
தட்டிப்பார்க் கின்றதையும், சந்தோஷம் கொள்வதையும்
கண்டார்கள்; கண்டு கடகடவென் றேசிரித்தார்.
வண்டு விழியுடைய வஞ்சி யுரைக்கின்றாள்:

"வானளவும் அங்கங்கள், வானரங்கள், ராமர்கள்,
ஆனது செய்யும் அநுமார்கள், சாம்பவந்தர்,
ஒன்றல்ல; ஆயிரம் நூல்கள் உரைக்கட்டும்.
விஸ்வரூ பப்பெருமை, மேலேறும் வன்மைகள்,
உஸ்என்ற சத்தங்கள், அஸ்என்ற சத்தங்கள்,
எவ்வளவோ நூலில் எழுதிக் கிடக்கட்டும்.
செவ்வைக் கிருபை செழுங்கருணை அஞ்சலிக்கை
முத்தி முழுச்சுவர்க்கம் முற்றும் உரைக்கட்டும்.
இத்தனையும் சேரட்டும் என்ன பயனுண்டாம்?
உள்ள பகுத்தறிவுக் கொவ்வாத ஏடுகளால்
எள்ளை அசைக்க இயலாது. மானிடர்கள்
ஆக்குவதை ஆகா தழிக்குமோ? போக்குவதைத்
தேக்குமோ? சித்தம் சலியாத் திறன்வேண்டும்.
மக்கள் உழைப்பில் மலையாத நம்பிக்கை
எக்களிக்க வேண்டும் இதயத்தில்! ஈதன்றி
நல்லறிவை நாளும் உயர்த்தி உயர்த்தியே
புல்லறிவைப் போக்கிப் புதுநிலைதே டல்வேண்டும்.
மக்கள் உழைக்காமுன் மேலிருந்து வந்திடுமோ?
எக்கா ரணத்தாலும் இன்மையிலே உண்மையுண்டோ ?
மீளாத மூடப் பழக்கங்கள் மீண்டும்உமை
நாடா திருப்பதற்கு நானுங் களையின்று
சஞ்சீவி பர்வதத்தில் கூப்பிட்டேன். தற்செயலாய்
அஞ்சும் நிலைமையே அங்கே நிகழ்ந்ததுண்டாம்.
உங்கள் மனத்தில் உறைந்து கிடந்திட்ட
பங்கஞ்செய் மூடப் பழக்க வழக்கங்கள்
இங்கினிமேல் நில்லா எனநான் நினைக்கின்றேன்.
தங்கள்கை நீட்டித் தமியாளை முன்னரே
சாரலிலே முத்தம் தரக்கேட்டீர், சாயவில்லை.
ஈர மலையிலே யான்தந்தேன். ஏற்கவில்லை.
சத்தத்தை எண்ணிச் சலித்தீர்.அச் சத்தத்தால்
முத்தத்தை மாற்ற முடியாமற் போனாலும்
உம்மைப் பயங்காட்டி ஊளையிட்ட சத்தத்தால்
செம்மைமுத்தம் கொள்ளவில்லை. சேர்ந்துமுத்தம் கொள்வீரே!"

"ஏஏஏ நான்இன்றைக் கேளனத்துக் காளானேன்.
நீயேன் இதையெல்லாம் நிச்சயமாய்ச் சொல்லவில்லை?
ராமா யணமென்ற நலிவு தருங்கதை
பூமியிலி ருப்பதைஇப் போதே அறிகின்றேன்.
நம்பத் தகாதவெலாம் நம்பவைத்துத் தாங்கள்நலம்
சம்பா திக்கின்ற சரித்திரக் காரர்களால்
நாடு நலிகுவதை நான்இன்று கண்டுணர்ந்தேன்.
தோடு புனைந்த சுடர்க்கொடியே நன்றுசொன்னாய்!
நல்ல இமயம், நலங்கொழிக்கும் கங்கைநதி,
வெல்லத் தமிழ்நாட்டின் மேன்மைப் பொதியமலை,
செந்நெல் வயல்கள், செழுங்கரும்புத் தோட்டங்கள்,
தின்னக் கனிகள் தெவிட்டாப் பயன்மரங்கள்,
இன்பம் செறிந்திருக்கும் இப்பெரிய தேசத்தில்
முப்பத்து முக்கோடி மாந்தர்கள் மொய்த்தென்ன?
செப்பும் இயற்கை வளங்கள் செறிந்தென்ன?
மூடப் பழக்கம், முடிவற்ற கண்ணுறக்கம்
ஓடுவ தென்றோ? உயர்வதென்றோ? நானறியேன்.
பாரடி மேற்றிசையில் சூரியன் பாய்கின்றான்.
சார்ந்த ஒளிதான் தகத்தகா யக்காட்சி!
மாலைப் பொழுதும் வடிவழகு காட்டுதுபார்!
சாலையிலோர் அன்னத்தைத் தன்பேடு தேடுதுபார்.
என்னடி சொல்கின்றாய் ஏடி இளவஞ்சி?
என்நெஞ்சை உன்நெஞ்சம் ஆக்கிப்பார்" என்றுரைத்தான்.

தென்றலிலே மெல்லச் சிலிர்க்கும் மலர்போலே
கன்னி யுடல்சிலிர்க்கக் "காதலரே நாம்விரைவாய்ச்
சாரல் அடைவோமே, காதலுக்கு தக்கஇடம்.
சாரலும் தண்மாலை நாயகியைச் சாரக்
குயில்கூவிக் கொண்டிருக்கும்; கோல மிகுந்த
மயிலாடிக் கொண்டிருக்கும்; வாச முடையநற்
காற்றுக் குளிர்ந்தடிக்கும்; கண்ணாடி போன்றநீர்
ஊற்றுக்கள் உண்டு; கனிமரங்கள் மிக்கஉண்டு;
பூக்கள் மணங்கமழும்; பூக்கள்தோறும் சென்றுதே
னீக்கள் இருந்தபடி இன்னிசைபா டிக்களிக்கும்.
அன்பு மிகுந்தே அழகிருக்கும் நாயகரே
இன்பமும் நாமும் இனி!"

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165kaviyam.htm#1.1_சஞ்சீவி_பர்வதத்தின்_சாரல்

ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ!
ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ!
சோலை மலரே! சுவர்ணத்தின் வார்ப்படமே!
காலைஇளஞ் சூரியனைக் காட்டும் பளிங்குருவே!
வண்மை உயர்வு மனிதர் நலமெல்லாம்
பெண்மையினால் உண்டென்று பேசவந்த பெண்ணழகே!
நாய்என்று பெண்ணை நவில்வார்க்கும் இப்புவிக்குத்
தாய்என்று காட்டத் தமிழர்க்கு வாய்த்தவளே!
வெண்முகத்தில் நீலம் விளையாடிக் கொண்டிருக்கும்
கண்கள் உறங்கு! கனியே உறங்கிடுவாய்!
அன்னத்தின் தூவி அனிச்ச மலரெடுத்துச்
சின்ன உடலாகச் சித்தரித்த மெல்லியலே!
மின்னல் ஒளியே, விலைமதியா ரத்தினமே!
கன்னல் பிழிந்து கலந்த கனிச்சாறே!
மூடத் தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற
காடு, மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே!
வேண்டாத சாதி இருட்டு வெளுப்பதற்குத்
தூண்டா விளக்காய்த் துலங்கும் பெருமாட்டி!
புண்ணிற் சரம்விடுக்கும் பொய்மதத்தின் கூட்டத்தைக்
கண்ணிற் கனல்சிந்திக் கட்டழிக்க வந்தவளே!
தெய்விகத்தை நம்பும் திருந்தாத பெண்குலத்தை
உய்விக்க வந்த உவப்பே! பகுத்தறிவே!
எல்லாம் கடவுள்செயல் என்று துடைநடுங்கும்
பொல்லாங்கு தீர்த்துப் புதுமைசெய வந்தவளே!
வாயில்இட்டுத் தொப்பை வளர்க்கும் சதிக்கிடங்கை
கோயிலென்று காசுதரும் கொள்கை தவிர்ப்பவளே!
சாணிக்குப் பொட்டிட்டுச் சாமிஎன்பார் செய்கைக்கு
நாணி உறங்கு; நகைத்துநீ கண்ணுறங்கு!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165pennulagam.htm#dt142

ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ!
ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ!
காராரும் வானத்தில் காணும் முழுநிலவே!
நீராரும் தண்கடலில் கண்டெடுத்த நித்திலமே!
ஆசை தவிர்க்கவந்த ஆணழகே சித்திரமே!
ஓசை யளித்துமலர் உண்ணுகின்ற தேன்வண்டே!
உள்ளம் எதிர்பார்த்த ஓவியமே என்மடியில்
பிள்ளையாய் வந்து பிறந்த பெரும்பேறே!
சின்ன மலர்வாய் சிரித்தபடி பால்குடித்தாய்
கன்னலின் சாறே கனிரசமே கண்ணுறங்கு!
நீதிதெரியும் என்பார் நீள்கரத்தில் வாளேந்திச்
சாதியென்று போராடும் தக்கைகளின் நெஞ்சில்
கனலேற்ற வந்த களிறே, எனது
மனமேறு கின்ற மகிழ்ச்சிப் பெருங்கடலே!
தேக்குமரம் கடைந்து செய்ததொரு தொட்டிலிலே
ஈக்கள் நுழையாமல் இட்ட திரைநடுவில்,
பொன்முகத்தி லேயிழைத்த புத்தம் புதுநீலச்
சின்னமணிக் கண்ணை இமைக்கதவால் மூடிவைப்பாய்!
அள்ளும் வறுமை அகற்றாமல் அம்புவிக்குக்
கொள்ளைநோய் போல்மதத்தைக் கூட்டியழும் வைதிகத்தைப்
போராடிப் போராடிப் பூக்காமல் காய்க்காமல்
வேரோடு பேர்க்கவந்த வீரா, இளவீரா!
வாடப்பல புரிந்து வாழ்வை விழலாக்கும்
மூடப் பழக்கத்தைத் தீதென்றால் முட்டவரும்
மாடுகளைச் சீர்திருத்தி வண்டியிலே பூட்டவந்த
ஈடற்ற தோளா, இளந்தோளா, கண்ணுறங்கு!
"எல்லாம் அவன்செயலே" என்று பிறர்பொருளை
வெல்லம்போல் அள்ளி விழுங்கும் மனிதருக்கும்,
காப்பார் கடவுள்உமைக் கட்டையில்நீர் போகுமட்டும்
வேர்ப்பீர், உழைப்பீர் எனஉரைக்கும் வீணருக்கும்,
மானிடரின் தோளின் மகத்துவத்தைக் காட்டவந்த
தேனின் பெருக்கே,என் செந்தமிழே கண்ணுறங்கு!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165pennulagam.htm#dt141

விளக்குவைத்த நேரத்தில் என்வேலைக் காரி
வெளிப்புறத்தில் திண்ணையிலே என்னிடத்தில் வந்து
களிப்புடனே "பிரசவந்தான் ஆய்விட்ட" தென்றாள்!
காதினிலே குழந்தையழும் இன்னொலியும் கேட்டேன்!
உளக்கலசம் வழிந்துவரும் சந்தோஷத் தாலே
உயிரெல்லாம் உடலெல்லாம் நனைந்துவிட்டேன். நன்றாய்
வளர்த்துவரக் குழந்தைக்கு வயதுமூன் றின்பின்
மனைவிதான் மற்றுமொரு கருப்பமுற லானாள்.

பெண்குழந்தை பிறந்ததினி ஆண்குழந்தை ஒன்று
பிறக்குமா என்றிருந்தேன். அவ்வாறே பெற்றாள்!
கண்ணழகும் முகஅழகும் கண்டுபல நாட்கள்
கழிக்கையிலே மற்றொன்றும் பின்னொன்றும் பெற்றாள்!
எண்ணுமொரு நால்வரையும் எண்ணி யுழைத்திட்டேன்.
எழில்மனைவி தன்னுடலில் முக்காலும் தேய்ந்தாள்!
உண்ணுவதை நானுண்ண மனம்வருவ தில்லை;
உண்ணாமலே மனைவி பிள்ளைகளைக் காத்தாள்.

வரும்படியை நினைக்கையிலே உள்ளமெலாம் நோகும்!
வாராத நினைவெல்லாம் வந்துவந்து தோன்றும்!
துரும்பேனும் என்னிடத்தில் சொத்தில்லை! நோயால்
தொடர்பாகப் பத்துநாள் படுத்துவிட்டாள் தொல்லை!
அரும்பாடு மிகப்படவும் ஆக்ஷேப மில்லை;
ஆர்தருவார் இந்நாளில் அத்தனைக்கும் கூலி?
இரும்பாநான்? செத்துவிட்டால் என்பிள்ளை கட்கே
என்னகதி? ஏன்பெற்றேன்? எனநினைக்கு நாளில்,

ஒருதினத்தில் பத்துமணி இரவினிலே வீட்டில்
உணவருந்திப் படுக்கையொடு தலையணையும் தூக்கி
தெருத்திண்ணை மேல்இட்டேன்! நித்திரையும் போனேன்!
சிறுவரெல்லாம் அறைவீட்டில் தூங்கியபின் என்றன்
அருமனைவி என்னிடத்தே மெதுவாக வந்தாள்.
"அயர்ந்தீரோ" என்றுரைத்தாள்! மலர்க்கரத்தாள் தொட்டாள்!
"தெருவினிலேபனி" என்றாள். ஆமென்று சொன்னேன்;
தெரிந்துகொண்டேன் அவள்உள்ளம். வார்த்தையென்ன தேவை!

மனையாளும் நானுமாய் ஒருநிமிஷ நேரம்
மவுனத்தில் ஆழ்ந்திருந்தோம். வாய்த்ததொரு கனவு:
"கனல்புரளும் ஏழ்மையெனும் பெருங்கடலில், அந்தோ!
கதியற்ற குழந்தைகளோர் கோடான கோடி
மனம்பதைக்கச் சாக்காட்டை மருவுகின்ற நேரம்
வந்ததொரு பணம்என்ற கொடிபறக்கும் கப்பல்;
இனத்தவரின் குழந்தைகளோ, ஏ!என்று கெஞ்ச
ஏறிவந்த சீமான்கள் சீ!என்று போனார்."

கனவொழிய நனவுலகில் இறங்கிவந்தோம் நாங்கள்;
காதலெனும் கடல்முழுக்கை வெறுத்துவிட்டோ ம். மெய்யாய்த்
தினம்நாங்கள் படும்பாட்டை யாரறியக் கூடும்?
சீ!சீ!!சீ!!! இங்கினியும் காதல் ஒருகேடா?
எனமுடித்தோம். ஆனாலும் வீட்டுக்குள் சென்றோம்.
இன்பமெனும் காந்தந்தான் எமையிழுத்த துண்டோ !
தனியறையில் கண்ணொடுகண் சந்தித்த ஆங்கே
தடுக்கிவிழுந் தோம்காதல் வெள்ளத்தின் உள்ளே!

பத்துமா தம்செல்லப் பகற்போதில் ஓர்நாள்,
பட்டகடன் காரர்வந்து படுத்துகின்ற நேரம்,
சித்தமெலாம் மூத்தபெண் சுரநோயை எண்ணித்
திடுக்கிடுங்கால், ஒருகிழவி என்னிடத்தில் வந்து
முத்தாலம்மை வைத்த கிருபையினால் நல்ல
முகூர்த்தத்தில் உன்மனைவி பிள்ளைபெற்றாள் என்றாள்.
தொத்துநோய், எழ்மை, பணக்காரர் தொல்லை
தொடர்ந்தடிக்கும் சூறையிலே பிள்ளையோ பிள்ளை!

காதலுக்கு வழிவைத்துக் கருப்பாதை சாத்தக்
கதவொன்று கண்டறிவோம். இதிலென்ன குற்றம்?
சாதலுக்கோ பிள்ளை? தவிப்பதற்கோ பிள்ளை?
சந்தான முறைநன்று; தவிர்க்குமுறை தீதோ?
காதலுத்துக் கண்ணலுத்துக் கைகள் அலுத்துக்
கருத்தலுத்துப் போனோமே! கடைத்தேற மக்கள்
ஓதலுக்கெல் லாம்மறுப்பா? என்னருமை நாடே,
உணர்வுகொள் உள்ளத்தில் உடலுயிரில் நீயே.

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165pennulagam.htm#dt140

நீஎனக்கும், உனக்கு நானும் - இனி
நேருக்குநேர் தித்திக்கும் பாலும், தேனும்
நீ எனக்கும்...

தூய வாழ்வில் இதுமுதல் நமதுளம்
நேய மாக அமைவுற உறுதி சொல்! அடி!
நீ எனக்கும்...

கைம்பெண்என் றெண்ணங் கொண்டே
கலங்கினா யோகற் கண்டே?
காடு வேகுவதை ஒரு மொழியினில்
மூடு போட முடியுமோ உரையடி? ததி
நீ எனக்கும்...

பைந்தமி ழைச்சீ ராக்கக்
கைம்மைஎன் னும்சொல் நீக்கப்
பறந்து வாடி அழகிய மயிலே!
இறந்த கால நடைமுறை தொலையவே.
நீ எனக்கும்...

பகுத்தறி வான மன்று
பாவை நீஏறி நின்று
பாரடீ உன் எதிரினிற் பழஞ்செயல்
கோரமாக அழிந் தொழி குவதையே.
நீ எனக்கும்...

கருத்தொரு மித்த போது
கட்டுக்கள் என்ப தேது?
கைம்மை கூறும் அதிசய மனிதர்கள்
செம்மை யாகும் படிசெய மனதுவை! அடி!
நீ எனக்கும்...

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165pennulagam.htm#dt139

பெண்கள்துயர் காண்பதற்கும் கண்ணிழந்தீரோ!
கண்ணிழந்தீரோ! உங்கள் கருத்திழந்தீரோ!
பெண்கள்துயர்...

பெண்கொடிதன் துணையிழந்தால்
பின்புதுணை கொள்வதிலே
மண்ணில்உமக் காவதென்ன வாழ்வறிந்தோரே?
வாழ்வறிந்தோரே! மங்கை மாரைஈன்றோரே!
பெண்கள்துயர்...

மாலையிட்ட மணவாளன் இறந்துவிட்டால்
மங்கைநல்லாள் என்னசெய்வாள்? அவளைநீங்கள்
ஆலையிட்ட கரும்பாக்கி உலகஇன்பம்
அணுவளவும் அடையாமல் சாகச்செய்தீர்!

பெண்டிழந்த குமரன்மனம்
பெண்டுகொள்ளச் செய்யும்எத்தனம்
கண்டிருந்தும் கைம்பெண்என்ற கதைசொல்லலாமோ?
கதைசொல்லலாமோ? பெண்கள் வதைகொள்ளலாமோ?
பெண்கள்துயர்...

துணையிழந்த பெண்கட்குக் காதல்பொய்யோ?
சுகம்வேண்டா திருப்பதுண்டோ அவர்கள்உள்ளம்?
அணையாத காதலினை அணைக்கச்சொன்னீர்
அணைகடந்தால் உங்கள்தடை எந்தமூலை?

பெண்ணுக்கொரு நீதிகண்டீர்
பேதமெனும் மதுவையுண்டீர்
கண்ணிலொன்றைப் பழுதுசெய்தால் கான்றுமிழாதோ?
கான்றுமிழாதோ? புவிதான் பழியாதோ?
பெண்கள்துயர்...

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165pennulagam.htm#dt138

அந்திய காலம் வந்ததடியே! - பைந்தொடியே!
இளம்பிடியே! - பூங்கொடியே!

சிந்தை ஒன்றாகிநாம் இன்பத்தின் எல்லை
தேடிச் சுகிக்கையில் எனக்கிந்தத் தொல்லை
வந்ததே இனிநான் வாழ்வதற் கில்லை
மனத்தில் எனக்கிருப்ப தொன்றே - அதைஇன்றே
குணக்குன்றே! - கேள்நன்றே!
அந்திய காலம்...

கடும்பிணி யாளன்நான் இறந்தபின், மாதே!
கைம்பெண்ணாய் வருந்தாதே, பழிஎன்றன் மீதே,
அடஞ்செய்யும் வைதிகம் பொருட்படுத் தாதே!
ஆசைக் குரியவனை நாடு - மகிழ்வோடு
தார்சூடு - நலம்தேடு!
அந்திய காலம்...

கற்கண்டு போன்றபெண் கணவனை இழந் தால்
கசந்தபெண் ஆவது விந்தைதான் புவி மேல்!
சொற்கண்டு மலைக்காதே உன்பகுத் தறி வால்
தோஷம், குணம் அறிந்து நடப்பாய் - துயர்கடப்பாய்
துணைபிடிப்பாய் - பயம்விடுப்பாய்.
அந்திய காலம்...

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165pennulagam.htm#dt137

கண்போற் காத்தேனே - என்னருமைப்
பெண்ணை நான்தானே
கண்போற் காத்தேனே...

மண்ணாய்ப் போன மாப் பிள்ளை
வந்ததால் நொந்தாள் கிள்ளை
மணமக னானவன் - பிணமக னாயினன்
குணவதி வாழ்க்கைஎவ் - வணமினி ஆவது?
கண்போற் காத்தேனே...

செம்பொற் சிலை,இக் காலே
கைம்பெண் ணாய்ப்போன தாலே
திலகமோ, குழலில் - மலர்களோ அணியின்
உலகமே வசைகள் - பலவுமே புகலும்
கண்போற் காத்தேனே...

பொன்னுடை பூஷ ணங்கள்
போக்கினா லேஎன் திங்கள்!
புகினும் ஓர்அகம் - சகுனம் தீதென
முகமும் கூசுவார் - மகளை ஏசுவார்!
கண்போற் காத்தேனே...

தரையிற் படுத்தல் வேண்டும்
சாதம் குறைத்தல் வேண்டும்
தாலி யற்றவள் - மேல ழுத்திடும்
வேலின் அக்ரமம் - ஞாலம் ஒப்புமோ?
கண்போற் காத்தேனே...

வருந்தாமற் கைம்பெண் முகம்
திருந்துமோ இச் சமுகம்?
மறுமணம் புரிவது - சிறுமைஎன் றறைவது
குறுகிய மதியென - அறிஞர்கள் மொழிகுவர்.
கண்போற் காத்தேனே...

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165pennulagam.htm#dt136

கல்யாணம் ஆகாத பெண்ணே! - உன்
கதிதன்னை நீநிச் சயம்செய்க கண்ணே!
கல்யாணம் ஆகாத...

வல்லமை பேசியுன் வீட்டில் - பெண்
வாங்கவே வந்திடு வார்கள்சில பேர்கள்;
நல்ல விலை பேசுவார் - உன்னை
நாளும் நலிந்து சுமந்து பெற்றோர்கள்,
கல்லென உன்னை மதிப்பார் - கண்ணில்
கல்யாண மாப்பிள்ளை தன்னையுங் காட்டார்;
வல்லி உனக்கொரு நீதி - "இந்த
வஞ்சகத் தரகற்கு நீஅஞ்ச வேண்டாம்."
கல்யாணம் ஆகாத...

பெற்றவ ருக்கெஜ மானர் - எதிர்
பேசவொண் ணாதவர் ஊரினில் துஷ்டர்,
மற்றும் கடன் கொடுத்தோர்கள் - நல்ல
வழியென்று ஜாதியென் றேயுரைப் பார்கள்;
சுற்றத்தி லேமுதி யோர்கள் - இவர்
சொற்படி உன்னைத் தொலைத்திடப் பார்ப்பார்.
கற்றவளே ஒன்று சொல்வேன் - "உன்
கண்ணைக் கருத்தைக் கவர்ந்தவன் நாதன்!"
கல்யாணம் ஆகாத...

தனித்துக் கிடந்திடும் லாயம் - அதில்
தள்ளி யடைக்கப் படுங்குதி ரைக்கும்
கனைத்திட உத்தர வுண்டு - வீட்டில்
காரிகை நாணவும் அஞ்சவும் வேண்டும்;
கனத்தஉன் பெற்றோரைக் கேளே! - அவர்
கல்லொத்த நெஞ்சையுன் கண்ணீரி னாலே
நனைத்திடு வாய்அதன் மேலும் - அவர்
ஞாயம் தராவிடில் விடுதலை மேற்கொள்!
கல்யாணம் ஆகாத...

மாலைக் கடற்கரை யோரம் - நல்ல
வண்புனல் பாய்ந்திடும் மாநதி தீரம்
காலைக் கதிர்சிந்து சிற்றூர் - கண்
காட்சிகள் கூட்டங்கள் பந்தாடு சாலை
வேலை ஒழிந்துள்ள நேரம் - நீ
விளையாடுவாய் தாவி விளையாடு மான்போல்!
கோலத்தினைக் கொய்வ துண்டோ ? - "பெண்கள்
கொய்யாப் பழக்கூட்டம்" என்றே உரைப்பாய்.
கல்யாணம் ஆகாத...

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165pennulagam.htm#dt135

ஏழு வயதே எழிற்கருங் கண்மலர்!
ஒருதா மரைமுகம்! ஒருசிறு மணியிடை!!
சுவைத் தறியாத சுவைதருங் கனிவாய்!
இவற்றை யுடைய இளம்பெண் அவள்தான்,
கூவத் தெரியாக் குயிலின் குஞ்சு,
தாவாச் சிறுமான், மோவா அரும்பு!
தாலி யறுத்துத் தந்தையின் வீட்டில்
இந்தச் சிறுமி யிருந்திடு கின்றாள்;
இவளது தந்தையும் மனைவியை யிழந்து
மறுதார மாய்ஓர் மங்கையை மணந்தான்.
புதுப்பெண் தானும் புதுமாப் பிளையும்
இரவையே விரும்பி ஏறுவர் கட்டிலில்!
பகலைப் போக்கப் பந்தா டிடுவார்!
இளந்தலைக் கைம்பெண் இவைகளைக் காண்பாள்!
தனியாய் ஒருநாள் தன்பாட் டியிடம்
தேம்பித் தேம்பி அழுத வண்ணம்
ஏழு வயதின் இளம்பெண் சொல்லுவாள்:
"என்னை விலக்கி என்சிறு தாயிடம்
தந்தை கொஞ்சுதல் தகுமோ? தந்தை
அவளை விரும்பி, அவள் தலைமீது
பூச்சூடு கின்றார்; புறக்கணித் தார்எனை!
தாமும் அவளும் தனியறை செல்வார்;
நான்ஏன் வெளியில் நாய்போற் கிடப்பது?
அவருக்கு நான்மகள்! அவர்எதிர் சென்றால்,
நீபோ! என்று புருவம் நெறிப்பதோ?"
பாட்டி மடியிற் படுத்துப் புரண்டே
இவ்வாறு அழுதாள் இளம்பூங் கொடியாள்.
இந்நிலைக்கு இவ்வாறு அழுதாள் - இவளது
பின்நிலை எண்ணிப் பாட்டி பெரிதும்
அழுத கண்ணீர் வெள்ளம், அந்தக்
குழந்தை வாழ்நாட் கொடுமையிற் பெரிதே.

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165pennulagam.htm#dt134

மேற்றிசையில் வானத்தில் பொன்னு ருக்கு
வெள்ளத்தில் செம்பருதி மிதக்கும் நேரம்!
வேற்கண்ணி யாளொருத்தி சோலை தன்னில்
விளையாட நின்றிருந்தாள் மயிலைப் போல!
காற்றடித்த சோலையிலே நேரம் பார்த்துக்
கனியடித்துக் கொண்டுசெலும் செல்வப் பிள்ளை
ஆற்றுவெள்ளம் போலாசை வெள்ளம் தூண்ட
அவளிடத்தே சிலசொன்னான். பின்னுஞ் சொல்வான்:

விரிந்தஒரு வானத்தின் ஒளிவெள் ளத்தை
விரைந்துவந்து கருமேகம் விழுங்கக் கூடும்!
இருந்தவெயில் இருளாகும் ஒருக ணத்தில்!
இதுஅதுவாய் மாறிவிடும் மறுக ணத்தில்.
தெரிந்ததுதான்; ஆனாலும் ஒன்றே யொன்று!
தெளிந்தஓர் உள்ளத்தில் எழுந்த காதல்
பருந்துவந்து கொத்துமென்றும் தணிவ தில்லை;
படைதிரண்டு வந்தாலும் சலிப்ப தில்லை!

கன்னத்தில் ஒருமுத்தம் வைப்பாய் பெண்ணே,
கருதுவதிற் பயனில்லை; தனியாய் நின்று
மின்னிவிட்டாய் என்மனதில்! பொன்னாய்ப் பூவாய்
விளைந்துவிட்டாய் கண்ணெதிரில்! என்று சொன்னான்.
கன்னியொரு வார்த்தையென்றாள். என்ன வென்றான்;
கல்வியற்ற மனிதனைநான் மதியேன் என்றாள்.
பன்னூற்பண் டிதனென்று தன்னைச் சொன்னான்.
பழச்சுளையின் வாய்திறந்து சிரித்துச் சொல்வாள்:

பெருங்கல்விப் பண்டிதனே உனக்கோர் கேள்வி;
பெண்களுக்குச் சுதந்தரந்தான் உண்டோ ? என்றாள்.
தரும்போது கொள்வதுதான் தருமம் என்றான்.
தராவிடில்நான் மேற்கொண்டால் என்ன வென்றாள்.
திருமணமா காதவள்தன் பெற்றோ ரின்றிச்
செயல்ஒன்று தான்செய்தல் அதர்மம் என்றான்.
மருவஅழைக் கின்றாயே, நானும் என்றன்
மாதா பிதாவின்றி விடைசொல் வேனா?

என்றுரைத்தாள். இதுகேட்டுச் செல்வப் பிள்ளை
என்னேடி, இதுஉனக்குத் தெரிய வில்லை;
மன்றல்செயும் விஷயத்தில் ஒன்றில் மட்டும்
மனம்போல நடக்கலாம் பெண்கள் என்றான்.
என்மனது வேறொருவன் இடத்தி லென்றே
இவனிட்ட பீடிகையைப் பறக்கச் செய்தாள்.
உன்நலத்தை இழுக்கின்றாய்; வலிய நானே
உனக்களிப்பேன் இன்பமென நெருங்க லானான்!

அருகவளும் நெருங்கிவந்தாள்; தன்மேல் வைத்த
ஆர்வந்தான் எனநினைத்தான்! இமைக்கு முன்னே
ஒருகையில் உடைவாளும் இடது கையில்
ஓடிப்போ! என்னுமொரு குறிப்பு மாகப்
புருவத்தை மேலேற்றி விழித்துச் சொல்வாள்:
"புனிதத்தால் என்காதல் பிறன் மேலென்று
பரிந்துரைத்தேன்! மேற்சென்றாய்! தெளிந்த காதல்
படைதிரண்டு வந்தாலும் சலியா" தென்றாள்.

ஓடினான் ஓடினான் செல்வப் பிள்ளை
ஓடிவந்து மூச்சு விட்டான் என்னிடத்தில்.
கூடிஇரு நூறுபுலி எதிர்த்த துண்டோ ?
கொலையாளி யிடமிருந்து மீண்ட துண்டோ ?
ஓடிவந்த காரணத்தைக் கேட்டேன். அன்னோன்
உரைத்துவிட்டான்! நானவற்றைக் கேட்டு விட்டேன்.
கோடிஉள்ளம் வேண்டுமிந்த மகிழ்ச்சி தாங்கக்
குலுங்க நகைத் தேயுரைத்தேன் அவனிடத்தில்:

"செல்வப்பிள்ளாய்! இன்று புவியின் பெண்கள்
சிறுநிலையில் இருக்கவில்லை; விழித்துக் கொண்டார்!
கொல்லவந்த வாளைநீ குறைசொல் லாதே!
கொடுவாள்போல் மற்றொருவாள் உன் மனைவி
மெல்லிடையில் நீகாணாக் காரணத் தால்,
விளையாட நினைத்துவிட்டாய் ஊர்ப்பெண் கள்மேல்!
பொல்லாத மானிடனே, மனச்சான் றுக்குள்
புகுந்துகொள்வாய்! நிற்காதே!" என்றேன்; சென்றான்.

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165pennulagam.htm#dt133

"முல்லை சூடி நறுமணம் முழுகிப்
பட்டுடை பூண்டு பாலொடு பழங்கள்
ஏந்திய வண்ணம் என்னருமை மகள்
தனது கணவனும் தானு மாகப்
பஞ்சனை சென்று பதைப்புறு காதலால்
ஒருவரை ஒருவர் இழுத்தும் போர்த்தும்,
முகமல ரோடு முகமலர் ஒற்றியும்,
இதழோடு இதழை இனிது சுவைத்தும்,
நின்றும் இருந்தும் நேயமோடு ஆடியும்,
பிணங்கியும், கூடியும் பெரிது மகிழ்ந்தே
இன்பத்துறையில் இருப்பர்ரு என்று எண்ணினேன்.
இந்த எண்ணத்தால் இருந்தேன் உயிரோடு!
பாழும் கப்பல் பாய்ந்து வந்து
என்மகள் மருகன் இருக்கும் நாட்டில்
என்னை இறக்கவே, இரவில் ஒருநாள்
என்மகள் மருகன் இருவரும் இருந்த
அறையோ சிறிது திறந்து கிடந்ததை
நள்இராப் பொழுதில் நான்கண்ட போதில்
இழுத்துச் சாத்த என்கை சென்றது;
கழுத்தோ கதவுக்கு உட்புறம் நீண்டது!
கண்களோ மருகனும் மகளும் கனிந்து
காதல் விளைப்பதைக் காண ஓடின!
வாயின் கடையில் எச்சில் வழியக்
குறட்டை விட்டுக் கண்கள் குழிந்து
நரைத்தலை சோர்ந்து, நல்லுடல் எலும்பாய்ச்
சொந்த மருகக் கிழவன் தூங்கினான்!
இளமை ததும்ப, எழிலும் ததும்பக்
காதல் ததும்பக் கண்ணீர் ததும்பி
என்மகள் கிழவ னருகில் இருந்தாள்.
சிவந்த கன்னத்தால் விளக்கொளி சிவந்தது!
கண்ணீர்ப் பெருக்கால் கவின்உடை நனைத்தாள்!
தொண்டு கிழவன் விழிப்பான் என்று
கெண்டை விழிகள் மூடாக் கிளிமகள்
காதலும் தானும் கனலும் புழுவுமாய்
ஏங்கினாள்; பின்பு வெடுக்கென்று எழுந்தாள்.
சர்க்கரைச் சிமிழியைப் பாலிற் சாய்த்தாள்.
செம்பை எடுத்து வெம்பி அழுதாள்.
எதையோ நினைத்தாள்! எதற்கோ விழித்தாள்!
உட்கொளும் தருணம் ஓடிநான் பிடுங்கினேன்.
பாழுந் தாயே! பாழுந் தாயே!
என்சாவுக்கே உனை இங்கு அழைத்தேன்!
சாதலைத் தடுக்கவோ தாய்எமன் வந்தாய்?
என்றுஎனைத் தூற்றினாள். இதற்குள் ஓர்பூனை
சாய்ந்த பாலை நக்கித் தன்தலை
சாய்ந்து வீழ்ந்து செத்தது கண்டேன்.
மண்ணாய்ப் போக! மண்ணாய்ப் போக!
மனம்பொருந் தாமணம் மண்ணாய்ப் போக!
சமூகச் சட்டமே! சமூக வழக்கமே!
நீங்கள், மக்கள் அனைவரும்
ஏங்கா திருக்க மண்ணாய்ப் போகவே!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165pennulagam.htm#dt132

கண்கள் நமக்கும் உண்டு - நமக்குக்
கருதும் வன்மை யுண்டு
மண்ணிடைத் தேசமெல்லாம் - தினமும்
வாழ்ந்திடும் வாழ்க்கையிலே
எண்ண இயலாத - புதுமை
எதிரிற் காணுகின்றோம்
கண்ணிருந் தென்னபயன்? - நமக்குக்
காதிருந் தென்னபயன்?

வானிடை ஏறுகின்றார் - கடலை
வசப் படுத்துகின்றார்
ஈனப் பொருள்களிலே - உள்ளுறை
இனிமை காணுகின்றார்
மேனிலை கொள்ளுகின்றார் - நாமதை
வேடிக்கை பார்ப்பதல்லால்
ஊன்பதைத்தே அவைபோல் - இயற்ற
உணர்ச்சி கொள்வதில்லை.

புழுதி, குப்பை,உமி - இவற்றின்
புன்மைதனைக் களைந்தே
பழரசம் போலே - அவற்றைப்
பயன் படுத்துகின்றார்!
எழுதவும் வேண்டா - நம்நிலை
இயம்பவும் வேண்டா!
அழகிய பெண்கள் - நமக்கோ
அழுகிய பழத்தோல்!

கைம்மை எனக்கூறி - அப்பெரும்
கையினிற் கூர்வேலால்
நம்மினப் பெண்குலத்தின் - இதய
நடுவிற் பாய்ச்சுகின்றோம்.
செம்மை நிலையறியோம் - பெண்களின்
சிந்தையை வாட்டுகின்றோம்;
இம்மை இன்பம்வேண்டல் - உயிரின்
இயற்கை என்றறியோம்.

கூண்டிற் கிளிவளர்ப்பார் - இல்லத்தில்
குக்கல் வளர்த்திடுவார்,
வேண்டியது தருவார்; - அவற்றின்
விருப்பத்தை யறிந்தே!
மாண்டவன் மாண்டபின்னர் - அவனின்
மனைவியின் உளத்தை
ஆண்டையர் காண்பதில்லை - ஐயகோ,
அடிமைப் பெண்கதியே!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165pennulagam.htm#dt131

கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே இங்கு
வேரிற் பழுத்த பலா - மிகக்
கொடியதென் றெண்ணிடப் பட்டதண்ணே குளிர்
வடிக்கின்ற வட்ட நிலா!

சீரற் றிருக்குதையோ குளிர் தென்றல்
சிறந்திடும் பூஞ் சோலை - சீ
சீஎன் றிகழ்ந்திடப் பட்டதண்ணே நறுஞ்
சீதளப் பூ மாலை.

நாடப் படாதென்று நீக்கிவைத் தார்கள்
நலஞ்செய் நறுங் கனியைக் - கெட்ட
நஞ்சென்று சொல்லிவைத் தார்எழில் வீணை
நரம்புதரும் தொனியை.

சூடப் படாதென்று சொல்லிவைத் தார்தலை
சூடத்தகும் க்ரீ டத்தை - நாம்
தொடவும் தகாதென்று சொன்னார் நறுந்தேன்
துவைந்திடும் பொற் குடத்தை!

இன்ப வருக்கமெல் லாம்நிறை வாகி
இருக்கின்ற பெண்கள் நிலை - இங்
கிவ்வித மாக இருக்குதண்ணே! இதில்
யாருக்கும் வெட்க மிலை!

தன்கண வன்செத்து விட்டபின் மாது
தலையிற்கைம் மைஎன ஓர் - பெருந்
துன்பச் சுமைதனைத் தூக்கிவைத் தார்;பின்பு
துணைதேட வேண்டாம் என் றார்.

துணைவி இறந்தபின் வேறு துணைவியைத்
தேடுமோர் ஆடவன் போல் - பெண்ணும்
துணைவன் இறந்தபின் வேறு துணைதேடச்
சொல்லிடு வோம்புவி மேல்.

யுகணைவிடு பட்டதும் லட்சியம் தேடும்ரு நம்
காதலும் அவ் வாறே - அந்தக்
காதற்கணை தொடுக்காத உயிர்க்குலம்
எங்குண்டு சொல் வேறே?

காதல் இல்லாவிடம் சூனியமாம் புவி
காதலினால் நடக்கும் - பெண்கள்
காதலு ளத்தைத் தடுப்பது வாழ்வைக்
கவிழ்க்கின் றதை நிகர்க்கும்.

காதல் சுரக்கின்ற நெஞ்சத்திலே கெட்ட
கைம்மையைத் தூர்க்கா தீர்! - ஒரு
கட்டழகன் திருத் தோளினைச் சேர்ந்திடச்
சாத்திரம் பார்க்கா தீர்!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165pennulagam.htm#dt130

புவிப்பெரியான் ஜார்ஜ்பெர்னாட் ஷாவுரைத்த
பொன்மொழியைக் கேளுங்கள் நாட்டில்உள்ளீர்!
புஉவந்தொருவன் வாழ்க்கைசரி யாய்நடத்த
உதவுபவள் பெரும்பாலும் மனைவிஆவாள்!
அவளாலே மணவாளன் ஒழுங்குபெற்றான்!
அவளாலே மணவாளன் சுத்திபெற்றான்!மு
குவியுமெழிற் பெண்களுக்கே ஊறுசெய்யும்
குள்ளர்களே கேட்டீரோ ஷாவின்பேச்சை!

அவனியிலே ஒருவனுக்கு மனைவியின்றேல்
அவனடையும் தீமையையார் அறியக்கூடும்?
கவலையுற ஆடவர்கள் நாளும்செய்யும்
கணக்கற்ற ஊழல்களை யெல்லாம்அந்த
நவையற்ற பெண்களன்றோ விலக்குகின்றார்!
நானிலத்தில் மார்தட்டும் ஆடவர்கள்
சுவைவாழ்விற் கடைத்தேறத் தக்கதான
சூக்ஷுமமும் பெண்களிடம் அமைந்ததன்றோ!

கல்வியில்லை உரிமையில்லை பெண்களுக்குக்
கடைத்தேற வழியின்றி விழிக்கின்றார்கள்!
புல்லென்றே நினைக்கின்றீர் மனைவிமாரைப்
புருஷர்களின் உபயோகம் பெரிதென்கின்றீர்!
வல்லவன்பே ரறிஞன்ஷா வார்த்தைகேட்டீர்
மனோபாவம் இனியேனும் திருந்தவேண்டும்.
இல்லையெனில் எதுசெயலாம்! பெண்ஆண்என்ற
இரண்டுருளை யால்நடக்கும் இன்பவாழ்க்கை!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165pennulagam.htm#dt129

காசுபணம் வேண்டாமடி தோழியே - அவன்
கட்டழகு போதுமடி தோழியே
ஆசை வைத்தேன் அவன்மேலே தோழியே -என்னை
அவனுக்கே அளiத்தேனடி தோழியே

ஓசைபடா தென்வீட்டில் ஓர் இரவிலே - என்பால்
ஒருமுறைவரச் சொல்வாயடி தோழியே
ஏசட்டுமே அவன் வரவால் என்னையே - நான்
இவ்வ
தென்றலுக்குச் சிலிர்க்கும் மலர்ச்சோலையில் - செழுந்
தேனுக்காக வண்டுபாடும் மாலையில்
இன்றெனது மனவீட்டில் வாழ்வதோர் - நல்
எழில்காட்டிச் சென்றானடி தோழியே

ஒன்றெனக்குச் செய்திட்டி இப்போதே - நல்ல
ஒத்தாசை ஆகுமடி தோழியே
அன்றெனக்குக் காட்சி தந்த கண்ணாளன் -கொஞ்சம்
அன்ப
என்பார்வை அவன் பார்வை தோழியே - அங்கே
இடித்ததுவ தன் அழகில் தாக்கடைந்த என் வாழ்வில் - அவன்
தனக்கும் உண்டு பங்கென்று சொல்வாயே

பொன்னான நாளடியே என் தோழி - ஒருவாய்ப்
பொங்கலுண்டு போகும்படி சொல்வாயே
இந்தாளும் வாழுகின்றேன் தோழியே - அவன்
எனை மறுத்தால் உயிர்மறுப்பேன் தோழியே

 

http://www.geocities.com/Athens/5180/bdasan.html

இழுத்திழுத்து மூடு கின்றேன்
எடுத்தெடுத்துப் போடு கின்றாய்
பழிக்க என்றன் மேலாடைத் தென்றலே - உன்னைப்
பார்த்து விட்டேன் இந்தச் சேதி ஒன்றிலே
சிலிர்க்கச் சிலிர்க்க வீசு கின்றாய்
செந்தாழை மணம் பூசு கின்றாய்
குலுக்கி நடக்கும் போதிலே என் பாவாடை - தலைக்
குறுக்கில் நெடுக்கில் பறக்கச் செய்தாய் தென்றலே
வந்து வந்து கன்னந் தொட்டாய்
வள்ளைக் காதில் முத்த மிட்டாய்
செந்தா மரைமுகத்தி ளைஏன் நாடினர் - ஏன்
சீவியதோர் குருங்கழலால் மூடினாய்
மேலுக்குமெல் குளiரைச் செய்தாய்
மிகமிகமிகக் களiயைச் செய்தாய்
உள்ளுக்குள்ளே கையை வைத்தாய் தென்றலே
உயிருக்குள்ளும் மகிழ்ச்சி வைத்தாய் - என் தென்றலே.

 

http://www.geocities.com/Athens/5180/bdasan.html

குட்டி நிலாவ
வட்ட நிலா
குட்டி நிலாவே குட்டி நிலாவே
எங்கே வந்தாய் குட்டி நிலாவே
குட்டி நிலா
வட்ட நிலாவே வட்ட நிலாவே
வந்தேன் உன்னிடம் வட்ட நிலாவே
கெட்ட உலகம் வாழும் வழியைக்
கேட்க வந்தேன் வட்ட நிலாவே
வட்ட நிலா
எட்ட இருக்கும் வட்ட நிலா நான்
எனக்கா தெரிய குட்டி நிலா
வளர்ச்சி பெற்றாய் குளiர்ச்சி பெற்றாய்
வட்ட நிலாவே வாய் திற வாயோ?
வட்ட நிலா
தளர்ச்சி பெற்றது தட்டை ய சண்டை பிடித்தது குட்டி நிலாவே
குட்டி நிலா
களைப்பு நீங்க உலகம் ஒருவன்
கைக்குள் வருமோ வட்ட நிலாவே?
வட்ட நிலா
இருப்பு மிகவ அரிசி உண்டோ குட்டி நிலாவே.
குட்டி நிலா
ஆயிரங் கோடிச் செலவின் வந்தேன்
அறிவைக் கொடுப்பாய் வட்ட நிலாவே
வட்ட நிலா
ஆயிரங் கோடியை அரிசிக்காக
அளiத்ததுண்டா குட்டி நிலாவே
போய்விடு போய்விடு குட்டி நிலாவே
போய்விடு என்றது வட்ட நிலாவே
தீயில் எரிந்தது குட்டி நிலாவே
தீய்ந்து விழுந்தது குட்டி நிலாவே.

 

http://www.geocities.com/Athens/5180/bdasan.html

பாழாப்போன என்மனம் ஒரு நாய்க்குட்டி - அதைப்
பறித்துக் கொண்டாய் அடியே என் சின்னக்குட்டி
உன் மேனி ஒரு பூத்தொட்டி
உதடு தித்திக்கும் வெல்லக்கட்டி
ஏழைக்கு வடித்து வைத்த சோறு - பணம்
இருப்ப வர்க்குச் சாத்துக்குடிச் சாறு
பெருக் கெடுத்த தேனாறு
பெண்ணே உன் எண்ணம் கூறு
காணக்காண ஆசை காட்டும் முத்துநிலா -நீ
கடுகடுப்ப விலக்கிவிட்டால் பழி உன்னைச் சேருமே
பொறுத்தோன் ஒரு வாரமே
பொறுக்க மாட்டார் யாருமே.

 

http://www.geocities.com/Athens/5180/bdasan.html

கண்டவ கண்வைக்க வேணுமடி என்மேலே
அண்டினேன் ஆதரிக்கக் கையோடு - கேள்
அதுதானே தமிழர்கள் பண்பாடு

 

கொண்ட மையல் தீர்ப்பதுன் பாரமே - எaனக்
கூட்டிக்கொள் உன் இடுப்பின் ஓரமே
நொண்டியின் கைம்மேல் வந்தா விழும்? - என்
நோய் தீர்க்கும் சேலத்து மாம்பழம்

 

அழகில் ஆருமில்லை உன்னைப்போல் - உன்மேல்
அன்பு கொண்டவன் ஆருமில்லை என்னைப்போல்
இழைக்க இழைக்க கொடுக்கும் சந்தனம் - மனம்
இனிக்க இனிக்க பூப்பூக்கும் நந்தனம்
பழுக்கப் பழுக்கச் சுவை கொடுக்கும் செவ்வாழை
பறிக்கும்போதே மணம் கொடுக்கும் வெண்தாழை
தழுவு முன்னே இன்பந்தரும் பெண்ணாளே என்
சாவை நீக்க வேண்டுமடி கண்ணாளே.

 

http://www.geocities.com/Athens/5180/bdasan.html

வானுக்கு நிலவு வேண்டும்
வாழ்வ தேனுக்கு பலாச்சுளை வேண்டும் - என்
செங்கரும்பே நீ எனக்கு வேண்டும்

 

மீனுக்கு பொய்கை வேண்டும்
வெற்றிக்கு வீரம் வேண்டும்
கானுக்கு வேங்கைப்ப

 

வாளுக்கு கூர்மை வேண்டும்
வண்டுக்கு தேன் வேண்டும்
தோளுக்கு பூமாலை வேண்டும் அடி
தோகையே நீ எனக்கு வேண்டும்

 

நாளுக்கு ப நாட்டுக்கே உரிமை வேண்டும்
கேளுக்கே ஆதரவு வேண்டும்
கிள்ளையே நீ எனக்கு வேண்டும்.

 

http://www.geocities.com/Athens/5180/bdasan.html

 எதுக்காகப் பாடினவோ முத்துமாமா -நாமும்
அதுக்காகப் பாடுவமோ முத்துமாமா.
ஒதுக்கிடுமா ஆற்று நீரைக் கடல் வெள்ளம் என்னை
ஒதிக்கிவைக்க எண்ணலாமா முத்துமாமா?

 

முதல் மனைவி நானிருந்தும் முத்துமாமா - அந்த
மூளiயை நீ எண்ணலாமா முத்துமாமா?
ஒதிய மரத்தின் கீழே முத்துமாமா - கோழி
ஒன்றை ஒன்று பார்ப்பதென்ன முத்துமாமா?
எது செய்ய நினைத்ததுவோ முத்து மாமா - நாமும்
அது செய்ய அட்டி என்ன முத்து மாமா.
குதி குதியாய்க் குதித்துண்டு முத்துமாமா - எனக்குக்
குழந்தையில்லை ஆனாலும் முத்து - மாமா
எதிலும் எனக்கதிகாரம் முத்துமாமா - நீதான்
எப்போதுமே என் சொத்து முத்துமாமா

 

http://www.geocities.com/Athens/5180/bdasan.html

மெல்லென அதிர்ந்த மின்னல், அந்தச்
செல்வக் குழந்தையின் சிரிப்பு, நல்ல
இன்பம் வேண்டுவோர் இங்குள்ளார் வாழ
அறஞ்செயல் செய்துதான் அடைய வேண்டுமோ
குளiர்வா ழைப்பூக் கொப்பூழ் போன்ற
ஒளiஇமை விலக்கி வெளiப்படும் கண்ணால்
முதுவை யத்தின் ப என்னவோ அதனை எவர்தாம் அறிவார்?
தங்க மாதுளைச் செங்கனி பிளந்த
மாணிக்கம் அந்த மதலையின் சிர்ப்பு.
வாரீர், அணைத்து மகிழவே ண்டாமோ?
பாரீர் அள்ளiப் பருகிடமாட் டோமோ?
செம்பவ ழத்துச் சிமிழ் சாய்ந்த அமுதாய்ச்
சிரித்தது, பிள்ளை சிரிக்கையில்
சிரித்தது வையம், சிரித்தது வானமே.

 

http://www.geocities.com/Athens/5180/bdasan.html


ப போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் (ப பொதுஉடைமைக்கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோ டதைஎங்கள் உயிரென்று காப்போம் (ப இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம்
இது எனதென்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம் (ப உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம்
ஒருபொருள்தனி எனும் மனிதரைச் சிரிப்போம் (ப இயல்பொருள் பயன்தர மறுத்திடில் பசிப்போம்
ஈவதுண்டாம் எனில் அனைவரும் ப ----------------
தமிழன்

 

அறியச் செய்தோன் தமிழன்
அறிந்த அனைத்தும் வையத்தார்கள் அறியச் செய்தோன்.....
செறிந்து காணும் கலையின் பொருளும்
சிறந்த செயலும் அறமும் செய்து
நிறைந்த இன்ப வாழ்வைக் காண
நிகழ்த்தி, நிகழ்த்தி, நிகழ்த்தி முன்னாள் அறியச் செய்தோன்.....
காற்றுக் கனல்மண் புனலும் வானும்
தமிழன் கனவ நாற்றிசை அழகை வாழ்வைச் செய்ய
நவின்று, நவின்று, நவின்று முன்னாள் அறியச் செய்தோன்...
எங்கும் ப அங்குத் தமிழன் திறமை கண்டாய்,
அங்குத் தமிழன் தோளே கண்டாய் அறியச் செய்தோன்.......

கமலம் அடுக்கிய செவ்விதழால் - மலர்க்
காட்டினில் வண்டின் இசைவளர்த்தால்
கமழ்தரு தென்றல் சிலர் சிலிர்ப்பால்- கருங்
கண்மலரால் முல்லை வெண்ணைப்பால்
அமையஞ்சோலை எனைத்
தன் வசம் ஆக்கிவிட்டாள ஒருநாள். 1

 

சோலை அணங்கொடு திண்ணையிலெ - நான்
தோளiயை ஊன்றி இருக்கையிலே
சேலை நிகர்த்த விழிய --------------
சங்க நாaதம்

 

எங்கள் வாழ்வ திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள். ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம் செய் முழங்கு சங்கே. (எங்)
சிங்களஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதிதீரரென் று\ தூது சங்கே
பொங்கும் தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிஜமெனச் சங்கே முழங்கு. (எங்)
வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும்
தோளெங்கள் வெற்றித் தோள்கள்
கங்கையைப் போல் காவிரிபோல் கருத்துக்கள்
ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்
வெங்குறுதி தனிற் கமழ்fந்து வீரஞ்செய் கின்றதமிழ் எங்கள் மூச்சாம். (எங்) 2

 

http://www.geocities.com/Athens/5180/bdasan.html

எளiய நடையில் தமிழ்நூல் எழுதிடவ இலக்கண நூல் ப வெளiய விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்களெல்லாங் கண்டு
தௌiவ செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவ எளiமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை யென்றால்
இங்குள்ள எல்லோரும் நாணிடவ
உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நாற்கள்
ஓருத்தர் தலை இல்லாமல் ஊரறிய சலசலனெ எவ்விடத்தும் பாய்ச்சிவிட வேண்டும்
தமிழொளiயை மதங்களiலேசாய்fக்காமை வேண்டும்
இலவச நூற் கழகங்கள் எவ்விடத்தும் வேண்டும்
எங்கள் தமிழ் உயர்வென்றுநாம் சொல்லிச் சொல்லித்
தலைமுறைகள் பலகழித்தோம், குறைகளைந் தோமில்லை
தகத்தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர்.

 

http://www.geocities.com/Athens/5180/bdasan.html

வானும் கனல் சொரியமண்ணும் கனல் எழுப்பகானவில் நான் நடந்தேன் - நிழல்
கணும் விருப்பத்தினால்
ஊனுடல் அன்றிமற்றோர் - நிழல்
உயிருக் கில்லை அங்கே
ஆன திசைமுழுதும் - தணல்
அள்ளும் பெருவெளiயாம்.

 

ஒட்டும் பொடிதாங்கா - தெடுத்
தூன்றும் அடியவிட்டுப் பசொல்லவகட்டுடல் செந்தணலில் - கட்டிக்
கந்தக மாய் எரிய
முளைத்த கள்ளiயினைக்-கனல்
மொய்த்துக் கரியாக்கி
விளைத்த சாம்பலைப்போய் - இனி
மேலும் உருக்கிடவே
கொளுத்தி டும் கானல் - உயிர்
கொன்று திfன்னும்கானல்
களைத்த மேனிகண்டும் - பகழுத்த றுக்கும்வெளi.

 

திடுக்கென விழித்தேன் - நல்ல
சீதளப் பூஞ்சோலை
நெடும் பகற்கனவில் - கண்ட
நெஞ்சுறுத் தும்கானல்
தொடர்ந்த தென்நினைவில் - குளiர்
சோலையசுடவ ரும்கனலோ - என்று
தோன்றிய துண்மையிலே.

 

http://www.geocities.com/Athens/5180/bdasan.html

முட்பமுட்டுகருங் கற்களும்நெ ருங்கும் - மக்கள்
இட்டடி எடுத்தெடுத்து வைக்கையிலே
கால்களiல்த டுங்கும் - உள் நடுங்கும்

 

கிட்டிமர வேர்கள் பல கூடும் - அதன்
கீழிருந்து பாம்பமட்டையசை வால்பகுட்டிகள் போய்த் தாய்ப்ப தேடும் - பின் வாடும்

 

நீள்கிளைகள் ஆல்விழுதி னோடு - கொடி
நெய்துவைத்த நற்சிலந்திக் கூடி - கூர்
வாளெயிற்று வேங்கையெலாம்
வால் கழற்றிப் பாயவருங்
காடு - பள்ளம் மேடு

 

கோளோடும் கிளம்பிவரும் பன்றி - நிலம்
கீண்டுகிழங் கேஎடுத்த தன்றி - மிகு
தாளiபடத் தாவஊளையிடும் குள்ளநரி
குன்றில்- ப
வானிடைஓர் வானடர்ந்து வாறு - பெரு
வண்கிணை மரங்கள் என்ன வீறு, நல்ல
தேனடை சொரிந்ததுவதென்னைமரம் ஊற்றியதும்
ஆறு - இன்பம் சாறு.

 

கானிடைப் பெரும்பறை நோக்கும் - அது
காலிடையே காலிகளைத் தூக்கும் - மற்றும்
ஆனினம் சுமந்தமடி ஆறெனவே பால்சுரந்து
தீர்க்கும் - அடை ஆக்கும்.

 

http://www.geocities.com/Athens/5180/bdasan.html

அழகிய மயிலே, அழகிய மயிலே
அஞ்சுகம் கொஞ்சி, அமுத கீதம்
கருங்குயி லிருந்து விருந்து செய்யக்
கடிமலர் வண்டுகள் நெடிது பாடத்
தென்றல் உலவச் சிலிர்க்கும் சோலையில்
அடியெடுத் தான்றி அங்கும் பதாடு கின்றாய் அழகிய மயிலே.
உனது தோகைபஒளiசேர் நவமணிக் களஞ்சியம் அதுவாம்.
உள்ளக் களiப்பின் ஒளiயின் கற்றை
உச்சியில் கொண்டையாய் உயர்ந்தோ என்னவோ,
ஆடுகின்றாய், அலகின் நுனியில்
வைத்த உன் பார்வை மறுபசாயல்உன் தனிச்சொத்து, ஸபாஷ், குரகோஷம்.

 

ஆயிரம் ஆயிரம் அம்பொற் காசுகள்
ஆயிரம் ஆயிரம் அம்பிறை நிலவமரகத உருக்கின் வண்ணத் தடாகம்
ஆனஉன் மெல்லுடல் ஆடல் உள்உயிர்
இவைகள் என்aன எடுத்துப் போயின,
இப்போது என் நினைவு என்னும் உலகில்
மீண்டேன், உனக்கோர் விஷயம் சொல்வேன்,
நீயஇயற்கை அன்னை இப்பெண் கட்கெலாம்
குட்டைக் கழுத்தைக் கொடுத்தான், உனக்கோ
கறையொன் றில்லால் கலாப மயிலே
நிமிர்ந்து நிற்க நீள்கழுத் தளiத்தான்,
இங்குவா, உன்னிடம் இன்னதைச் சொன்னேன்,
மனதிற் போட்டுவை, மகளiர் கூட்டம்
என்னை ஏசும் என்பதற் காக.

 

பெண்களை ஆதிப் பெருநாள் தொடங்கி
திருந்தா வகையிற் செலுத்தலால் அவர்கள்
சுருங்கிய உள்ளம் விரிந்தபா டில்லையே.

 

http://www.geocities.com/Athens/5180/bdasan.html

ஆற்றங் கரைதனிலே - இருள்
அந்தியிலே குளiர் தந்த நிலாவினில்
காற்றிலுட் கார்ந்திருந்தேன் - வெய்யிற்
காலத்தின் தீமை இலாததினால் அங்கு
வீற்றிருந்தார் பலபேர் - வந்து
மேல்விழும் தொல்லை மறந்திருந்தார், பழச்
சாற்றுச் சுவைமொழியார் - சிலர்
தங்கள் மணாளரின் அண்டையிருந்தனர் (ஆற்றங் கரைதனிலே)

 

நாட்டின் நிலைபேசிப் - பல
நண்பர்கள் கூடிஇருந்தனர் ஓர் பஒட்டம் பயின்றிடுவார் -நல்ல
ஒன்பது பத்துப் பிராயம் அடைந்தவர்
கோட்டைப் பவுன் உருக்கிச் - செய்த
குத்துவிளக்கைப் போன்ற குழந்தைகள்
ஆட்டநடை நடந்தே - மண்ணை
அள்ளுவர், வீழுவர், அம்ப

புனலும் நிலாவொளiயதனிஒரு வெள்ளiக்கலம் - சிந்தும்
தரளங்கள் போல்வன நிலவு நட்சத்திரம்,


விந்தை உரைத்திடுவேன் - அந்த
வேளையில் அங்கொரு வாள்விழி கொண்டவள்
முந்த ஓர் பாட்டுரைத்தாள் - அது
முற்றுந் தெலுங்கில் முடிந்து தொலைந்தது
பிந்தி வடக்கினிலே - மக்கள்
பேசிடும் பேச்சினில் பாட்டு நடத்தினள்
எந்தவிதம் சகிப்பேன்? - கண்ட
இன்பம் அனைத்திலும் துன்பங்கள் சேர்ந்தன (ஆற்றங் கரைதனிலே)

பொருளற்ற பாட்டுக்களை - அங்குப்

 

இருளுக்குள் சித்திரத்தின் - திறன்
ஏற்படுமோ இன்பம் வாய்த்திடக்கூடுமோ?
உருவற்றுப் போனதுண்டோ - மிக்க
உயர்வகருவகதியற்றுப் போனதுண்டோ அடடா அந்த (ஆற்றங் கரைதனிலே)

 

சங்கீத விற்பனனாம் - ஒரு
சண்டாளன் ஆரம்பித்தான் இந்துஸ்தான் ஒன்றை
அங்கந்தப் பாட்டினிலே - சுவை
அத்தனையநம்குள்ளர் வாய்திறந்தே -நன்று
நன்றென ஆர்ப்பரித்தார் , அந்த நேரத்தில்
எங்கிருந்தோ தமிழில் - ஓர்
இன்பநறுங்கலி கேட்டது காதினில் (ஆற்றங் கரைதனிலே)

 

அஞ்சலை உன் ஆசை - என்னை
அப்பகொஞ்சம் இறங்கிடுவாய் - நல்ல
கோவைப்பழத்தினைப் போன்ற உதட்டினை
வஞ்சி, எனக்களiப்பாய் - என்ற
வண்ணத் தமிழ்ப்பாதம் பண்ணிற் கலந்தென்றன்
நெஞ்சையநீரைய
ஒன்றெனச் செய்ததுவே - நல்
உவகை பெறச் செய்ததே தமிழ்ப் போசனம்
நன்று தமிழ் வாழ்க -தமிழ்
நாட்டினில் எங்கணும் பல்குக, பல்குக
என்றும் தமிழ் வளர்க - கலை
யாவஇன்பம் எனப்படுதல் - தமிழ்
இன்பம் எனத்தமிழ் நாட்டினர் எண்ணுக. (ஆற்றங் கரைதனிலே)

கனியிடை ஏறிய சுளையகழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையநனிபசு பொழியநல்கிய குளiரின் நீரும்
இனியன என்பேன் எனினும் - தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்.

 

பொழிலிடை வண்டின் ஒலியபுனலிடை வாய்க்கும் கலியகுழலிடை வாய்க்கும் இசையகொட்டிடும் அமுதப் பண்ணும்
குழவிகள் மழலைப் பேச்சும் - பெண்கள்
கொஞ்சிடும் இதழின் வாய்ப்பவிழைகுவ னேனும் தமிழும் - நானும்
மெய்யாய் உடலுயிர் கண்டீர்.

 

பயிலுறும் அண்ணன் தம்பி - அக்கம்
பக்கத் துறவின் முறையார்
தயைமிக உடையாள் அன்னை - எனனைச்
சந்ததம் மறவாத் தந்தை
குயில் போற் பேசிடும் மனையாள் = அன்பைக்
கொட்டி வளர்க்கும் பிள்ளை
அயலவ ராகும் வண்ணம் = தமிழ் என்
அறிவினில் உறைதல் கண்டீர்.

 

நீலச் சுடர்மணி வானம் - ஆங்கே
நிறையக் குளiர்வெண் ணிலவாம்
காலைப் பரிதியின் உதயம் - ஆங்கே
கடல்மேல் எல்லாம் ஒளiயாம்
மாலைச் சுடரினில் மூழ்கும் - நல்ல
மலைகளiன் இன்பக் காட்சி
மேலென எழுதும் கவிஞர் - தமிழின்
விந்தையை எழுதத் தரமோ?

 

செந்நெல் மாற்றிய சோறும் - பசுநெய்
தேக்கிய கறியின் வகையதன்னிகர் தானியம் மூதிரை - கட்டித்
தயிரோடு மிளகின் சாறும்
நன்மதுரஞ் செய் கிழங்கு - கானில்
நாவிலினித்திடும் அப்பம்
உன்னை வளர்ப்பன தமிழா, உயிரை
உணர்வை வளர்ப்பது

 

http://www.geocities.com/Athens/5180/bdasan.html

தமிழிக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவ
தமிழுக்கு மணமென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வ
தமிழுக்கு மதுவென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச் செம் பயிருக்கு வேர்

தமிழ் எங்கள் இளமைக்குப் பால் -இன்பத்
தமிழ் நல்ல பதமிழ் எங்கள் உயர்வ
தமிழ் எங்கள் அசதிக்கு சுடர்தந்த தேன்
தமிழ் எங்கள் அறிவ
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் -இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ.

 

http://www.geocities.com/Athens/5180/bdasan.html

நரகனைக் கொன்றநாள் நல்விழா நாளா?

நரகன் இறந்ததால் நன்மை யாருக்கு?

நரகன் என்பவன் நல்லனா? தீயனா?

அசுரன்என் றவனை அறைகின் றாரே?

இராக்கதன் என்றும் இயம்புகின் றாரே?

இப்பெய ரெல்லாம் யாரைக் குறிப்பது?

இன்றும் தமிழரை இராக்கதர் எனச்சிலர்

பன்னு கின்றனர் என்பது பொய்யா?

இவைக ளைநாம் எண்ண வேண்டும்.

எண்ணா தெதையும் நண்ணுவ தென்பது

படித்தவர் செயலும் பண்பும் ஆகுமா?

வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல்

கழுத்துப் போயினும் கைக்கொள வேண்டாம்.

ஆயிரம் கோடி ஆண்டு செல்லினும்

தூயது தூயதாம் துரும்பிரும் பாகாது!

'உனக்கெது தெரியும், உள்ளநா ளெல்லாம்

நினைத்து நடத்திய நிகழ்ச்சியை விடுவதா?

என்றுகேட் பவனை, 'ஏனடா குழந்தாய்!

உனக்கெது தெரியும் உரைப்பாய் என்று

கேட்கும் நாள், மடமை கிழிக்கும் நாள், அறிவை

ஊட்டும் நாள் மானம் உணரு நாள் இந்நாள்.

தீவா வளியும் மானத் துக்குத்

தீபாவாளி ஆயின் சீஎன்று விடுவிரே!



- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்-

 

http://karuppupaiyan.blogspot.com/2007/10/blog-post_225.html