Language Selection

பி.இரயாகரன் -2007

இவை அனைத்தும் மக்கள் விரோதக் கோட்பாடுகள். மனித குலத்துக்கு எதிரான ஒரு வர்க்கம் என்ற வகையில், பார்ப்பனியம் முதல் டாடாயிஸ்ம் வரை இணையத்தில், அறிவு நேர்மையின்றியும் தர்க்க அடிப்படையின்றியும் தெரு நாய்கள் போல் குலைப்பது இயல்பாகிப்போயுள்ளது. அது ஜனநாயகம், தனிமனித சுதந்திரம், மனிதாபிமானம், தனிமனித ஒழுக்கம் என்ற பல வண்ணத்தில்,

கிழக்குவாழ் மக்களின் பிரச்சனைகளை அடிப்படையாக கொண்ட விமர்சனம், காலத்தின் முக்கியத்துவம் கருதி முன்வைக்கப்படுகின்றது. புலிக்கு பதிலாக கருணா என்ற ஒரு பாசிட், பேரினவாதத்தின் கூலிப்படையாக வெளிப்பட்டது முதல் அந்த அரசியல் இழிநிலையை அம்பலப்படுத்துவதை காலம் கோருகின்றது. புலியெதிர்ப்பு மற்றும் புலிக்கு மாற்றாக கருணா என்ற மற்றொரு பாசிட்டை

தங்களைப் போல் எப்படி அரசியல் விபச்சாரத்தை செய்வது என்பதை, எமக்கு விளக்க முனைகின்றனர். தேனீ தனது ஏழாவது வருட நிறைவை ஓட்டிய இணையச் செய்தியில், எமக்கு பதில் சொல்ல முனைவதன் மூலம், தமது சொந்த விபச்சார அரசியல் என்ன என்பதையும் எடுத்துக்காட்ட முனைகின்றனர். மக்களின் முதுகில் எப்படி தாங்களும், தங்கள் வழி வந்தவர்களும் சவாரி செய்கின்றனர் என்பதை சொல்லி,

book _10.jpgசமகாலத்தில் நடைபெற்ற தொடர்ச்சியான பல்வேறு மனிதவிரோதசெயல்கள் மீதான ஒரு தொகுப்பு நூல் இது. மனிதத்தை நோக்கியும், மனிதத்தை நேசித்தலை நோக்கி முன்னேறுதல் என்பது அன்றாடம் அடிசறுக்குகின்றது. அதுவென்னவென்று கேட்கின்ற அளவுக்கு, அது அர்த்தமிழந்த ஒன்றாக பல்லிளித்து நிற்கின்றது. நாள்தோறும் மனிதனுக்கு எதிரான புதிய சதிகள், திட்டங்கள். பாவம் தமிழ்பேசும் மக்கள். மனிதனுக்கு எதிரான நிலைகளில், நிலைமைகளில் அன்றாடம் நடக்கும் அதிரடி மாற்றங்கள், அதிர்வுகள். அவற்றில் சிலவற்றை இந்த நூல் மூலம் உங்களுடன் பேச முனைகின்றேன்.

(இந்த விமர்சனத்தை தீர்வை முன்வைக்கும் அனைத்து தரப்புக்கும், இதன் மீது அக்கறை உள்ள அனைத்து சமூகப் பிரிவுக்கும் முடிந்தளவுக்கு அனுப்பிவைக்கவும்)

 

கொடூரமான புலிப்பாசிசம் ஒருபுறம், பேரினவாத அரசு நடத்தும் சதிகள் சூழ்ச்சிகள் கூடிய பாசிசம் மறுபுறம். இரண்டும் ஒன்றையொன்று சார்ந்து நிற்பதால், அனைத்தையும் மோசடி செய்தல், ஏய்த்து ஏமாற்றுதல், சமூகங்ளை இங்குமங்குமாக நம்பிக்கையூட்டி அலைக்கழித்தல்,

இந்த உண்மை புலியெதிர்ப்பு கும்பலுக்கு கசப்பான ஒன்று. இதனால் மக்கள் புலிகளை தோற்கடிக்கவில்லை என்று காட்டுவதே, புலியெதிர்ப்பு எடுபிடி பேர்வழிகளின் சுத்துமாத்து அரசியலாகும். இந்த மோசடியை உண்மையானதாக காட்ட, மக்களையும் கருணா கும்பலையும் ஒன்றாக காட்டுவதே இவர்களின் அரசியலாகும். அதை அவர்கள் "கருணாவின் அரசியலை நேசிக்கும் கிழக்கின் மக்களும், அந்த மக்களை நேசிக்கும் கருணாவின் அரசியலும்.." என்றவாறாக தமது புலியெதிர்ப்பு அரசியல் நிலைக்கு ஏற்ப, கயிறு திரிப்பதே இவர்களின் அரசியல் சாரமாகும் புலிகள் வேறு மக்கள் வேறு அல்ல என்பதை எப்படி புலிகளும் அதன் பினாமி எழுத்தாளர்களும் மறுக்க முனைகின்றனரோ, அதையே புலியெதிர்ப்புக் கும்பலும் செய்ய முனைகின்றது.

இந்தக் கேள்விகளும், குழப்பங்களும், திரிபுகளும் மலிந்த ஒரு சமூக அமைப்பில் நாங்கள் வாழ்வதால், இதை தெளிவுற வைப்பது அவசியமாகிவிடுகின்றது. இந்த வகையில்

கொலைகள், ஒரு நாளில் எத்தனை கொலைகள். இவை பட்டியலிட முடியாதளவில் நடக்கின்றது. கொல்பவனும் தமிழன், கொல்லப்படுபவனும் தமிழன். ஏன் ஏதற்கு கொல்லப்படுகின்றோம் என்று தெரியாத, ஒரு நிலையில் கொல்லப்படுகின்றோம். இன்று நீ நாளை நான், இப்படி கொல்லப்படுகின்றோம். மரணத்தின் தேசமாக, தேசியமாக பாடை கட்டிச் செல்லுகின்றது எமது தேசம்.

மனிதன் கற்றுக் கொள்வதற்கு வரலாறு தந்துள்ள படிப்பினைகள், மனித அவலங்கள் ஊடாகவே எம்முன் பரந்து விரிந்து வீழ்ந்து கிடக்கின்றது. ஆனால் நாங்கள் அந்த யாழ்ப்பாணிய மேலாதிக்க வழியில் தான், அதுவும் அந்த குண்டுச் சட்டியில் தான் குதிரை ஓட்டுவோம் என்றே கங்கணம் கட்டி ஆடுகின்றனர். இதை அம்பலப்படுத்தும் வரலாற்றுத் தேவை எம் முன் மீண்டும் மீண்டும் எழுகின்றது. கருணாவின் பிளவும், அதன் பின் அண்மையில் கிழக்கில் இராணுவத்தின் மீள் ஆக்கிரமிப்புகளும் வெற்றி பெற்று வருகின்ற இன்றைய நிலையில், புலியெதிர்ப்புக் கும்பல் போடுகின்ற அரசியல் வேஷங்களும், அவர்களின் கூத்துகளும், யாழ் மேலாதிக்கத்தின் ஒரு நாற்றமடிக்கும் கோவணமாகவே, கிழக்கு மேலாதிக்கம் மாறுகின்றது.

பாசிசம் சமூகத்தை அறிவால் வெல்வதில்லை. மனித மனங்களை வெல்வதில்லை. மாறாக அடக்குமுறையால், மோசடித்தனத்தால் வெல்ல முனைகின்றது. அது தனது ஈனத்தனமான கொலைப் பண்பாட்டால், உறையவைக்கும் அச்சத்தை விதைத்து, தன்னைத்தான் பலமானதாக காட்டிக்கொள்ளுகின்றது.

'கிழக்கில் மாற்று தமிழ் ஜனநாயக இயக்கங்கள் இணைந்து" ள்ளது என்ற செய்தி, பல உறுதி செய்யப்படாத சந்தேகங்களை எல்லாம் தெளிவுபடுத்தி விடுகின்றது. கிழக்கில் பிரபாகரனுக்கு ஈடாக ஏகப்பிரதிநிதியாக மாறும் கருணா கும்பல் நடத்தும் பாசிசக் கொலை வெறியாட்டம் தான், கிழக்கில் மட்டும் அந்த இணைவு என்ற அரசியலை அரங்கேற்றுகின்றது. அன்று ஈரோஸ்

மக்களுக்கு எதிரான துரோகத்தை நியாயப்படுத்துவதே மாற்று அரசியல் என்று, புலியெதிர்ப்புக் கும்பல் நிறுவ முனைகின்றது. புலிகளிள் ஒவ்வொரு பல்லும் விழும்போது, துரோகமே மாற்று என்று நிறுவப்படுகின்ற அரசியல் வக்கிரம் ஒருங்கே அரங்கேறுகின்றது. வரலாற்றின் முரண்நிலை, இதுவாக இருப்பதாக காட்டப்படுகின்றது. தமிழ் மக்களின் அரசியல் என்பது, இதுதான் என்று அறைந்து ஒட்டப்படுகின்றது. இது மீறப்பட முடியாத வகையில் ஊடகவியல் மாற்றுகள் அனைத்தையும் முடக்கி மலடாக்குகின்றது. இந்த வகையில் தமிழ் மக்களை கண்னை பிரித்து, சிந்திக்க நிர்ப்பந்திக்கின்றது.

ஜனநாயகத்துக்கும் பேச்சாளர்கள். கேடுகெட்ட ஒரு அரசியல் விபச்சாரம். புலிக்கு மட்டுமா பேச்சாளர்கள், இல்லை, கருணா தரப்புக்கும் தான் பேச்சாளர்கள். ஒரே பாணி அதே குட்டை. இதைச் சுற்றி இரண்டுக்கும் ஒரேவிதமான கோமாளித் தொண்டர்கள். எதையும் எப்படியும் நியாயப்படுத்தும் அரசியல் எடுபிடித்தனம். இவர்களின் திடீர் ஜனநாயகமோ எதையும் எப்படியும் கொத்திக் கிளறும், அமெரிக்க வகைப்பட்ட ஜனநாயகம்.

தமிழ் தேசிய யாழ் மையவாதம் மட்டுமல்ல, கிழக்கு மையவாதமும் பேரினவாதத்தினால் அழிக்கப்படும். பேரினவாதம் மட்டும் தான், மீண்டும் வெற்றி பெறும் எதார்த்தம். இதை நோக்கிய அரசியல் எல்லைக்குள் தான், அனைத்தும் மையப்பட்டு செயல்படுகின்றது. தமிழ் மக்களின் அழிவும் சீரழிவும், புலிகளால் மட்டுமல்ல கருணா தரப்பாலும், அதற்கு அப்பால் புலியெதிர்ப்பு கும்பலாலும், கிழக்கு மையவாதிகளாலும் கூட நடக்கின்றது. கிழக்கு வாழ் தமிழ் மொழி பேசும் மக்களின் தனித்துவமே திட்டமிட்ட வகையில் ஒழித்துக்கட்டப்படும். இதை நோக்கி ஒரு நிழல் யுத்தம் நடக்கின்றது. இதில் தமிழ், முஸ்லீம் என்று வேறுபாடுகள் எதுவும் இருக்கப் போவதில்லை. இந்த நிலைமையை குறைந்தபட்சம் புரிந்துகொள்ளக் கூடிய அரசியல் கூட, எந்த தரப்பிடமும் இன்று கிடையாது.

மனித இனம் மற்றொரு புதிய வருடத்தில் கால் பதிக்கின்றது. சமூக மாற்றங்களை கோருகின்ற வருடம். இது ஒரு புரட்சிகர வருடமாக இருக்க, நாம் உழைக்க வேண்டும். அந்த வகையில் புதிய வருடத்தில் வாழும் உங்களுக்கு, எமது கரம் கொடுக்கும் தோழமையுடன் கூடிய வாழ்த்துகள்.