Language Selection

புதிய ஜனநாயகம் 2006

04_2006.gif

ஓட்டுக் கட்சிகளின் அனல் பறக்கும் பிரச்சாரங்களாலும், செய்தி ஊடகங்கள் வதந்திக் காற்றால்  விசிறி விடுவதாலும் தமிழக மக்களுக்கு மண்டைக் காய்ச்சல் ஏற்படுத்தப்படுகிறது. சரியாகச் சொல்வதானால், கடந்த ஆண்டு மத்தியிலேயே வாக்காளர் பட்டியல் திருத்த வேலையின் போதே தேர்தல் பரபரப்புகள் தொடங்கி விட்டன. புதிய வாக்காளர் சேர்க்கைக்கான கடைசி நாளன்று இலட்சக்கணக்கில் போலி வாக்காளர்களை பதிவு செய்வதற்கான விண்ணப்பப் படிவங்கள் கத்தை கத்தையாக கொடுக்கப்பட்டன.

04_2006.gif

இதை அதிர்ச்சி என்று சொல்வதா? அல்லது, நாட்டுக்கே அவமானம் என்று சொல்வதா?

 

            ""எங்கள் கிராமம் விற்பனைக்குத் தயார்!'', ""எங்கள் சிறுநீரகம் விற்பனைக்குத் தயார்!''  என மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிர மாநிலங்களின் பல கிராமங்களில் அறிவிப்புப் பதாகையுடன் விவசாயிகள் தமது அவலத்தை வெளியுலகுக்குத் தெரிவிக்கும் புதுமையான போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். தமது உடல் உறுப்புகளையும் தாம் பிறந்து வளர்ந்த மண்ணையும் மக்களையும் பகிரங்கமாக விற்பனை செய்யத் துணிந்து விட்ட விவசாயிகளின் இச்செயல், வழக்கம் போலவே செய்தி ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டு இப்போது மெதுவாகக் கசியத் தொடங்கியுள்ளது.

03_2006.jpgடேவிட் இர்விங் பிரிட்டனைச் சேர்ந்த நாஜி வரலாற்றாசிரியர். 10 ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்பார்த்து ஆஸ்திரியா நாட்டின் வியன்னா நீதிமன்றத்தின் முன் இவர் நின்று கொண்டிருக்கிறார். ""இலட்சக்கணக்கான யூதர்களை பெருங்களப்பலிக்கு (ஏணிடூணிஞிச்தண்வ) ஆளாக்கியதாக இட்லர் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டு பொய்யானது. உண்மையில் யூதர்களின் முன்னேற்றத்திற்குத்தான் இட்லர் உதவியிருக்கிறார்'' என்று தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறார் இர்விங். நாஜிகளின் போர்

03_2006.jpgஇந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் மும்பை பங்குச் சந்தை புள்ளிகள் 10,000ஐத் தாண்டி புதிய உயரத்துக்கு முன்னேறியது. அது மேலும் உயர்ந்து மேலே போய்க் கொண்டிருக்கிறது. ""பாய்ச்சல்; இதுவரை கண்டிராத வகையில் முரட்டுக் காளையின் மாபெரும் பாய்ச்சல்; பிப்ரவரி 6ஆம் தேதி, மும்பை பங்குச் சந்தையின் அதிருஷ்டநாள்!'' என்று பெரு முதலாளிகளும் பங்குச் சந்தை முதலீட்டாளர்களும் தரகர்களும் செய்தி ஊடகங்களும் குதூகலத்துடன் கொண்டாடினர். கோலாகலம், விருந்துகள், வாழ்த்துச் செய்திகள், பொருளாதார

03_2006.jpgமும்பையில் அடுக்கு மாடிக் குடியிருப்புகள், ஒரு பண்ணை வீடு உள்ளிட்ட ரூ. 45 கோடி மதிப்புடைய சொத்துக்கள்; விஷால் டிராவல்ஸ் என்ற பெயரில் சொகுசுப் பேருந்துகள்; மனைவி பெயரில் சுவிட்சர்லாந்தில் அடுக்குமாடி குடியிருப்பு; துபாயில் நடன விடுதி கொண்ட நட்சத்திர ஓட்டலின் பங்குதாரர்; மனைவி பெயரில் கோடிகளைப் பரிமாற்றம் செய்யும் சீட்டுக் கம்பெனி; 4 வங்கிக் கணக்குகள் அதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 13 கோடிக்கு மேல் ரொக்கப் பரிமாற்றம்; சினிமா தயாரிப்பாளர்களுக்குக் கோடிக் கணக்கில் கடன் கொடுக்கும் பைனான்சியர்....

03_2006.jpgமக்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி நெல்லைகங்கைகொண்டான் கொக்கோ கோலா ஆலைக்கு, இயங்குவதற்கான உரிமத்தை மானூர் ஊராட்சி ஒன்றியம் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதியன்று வழங்கியுள்ளது. இந்தத் துரோகம் எப்படி நிறைவேறியது என்பதை, மறுநாள் (11.2.06) வெளியான நாளிதழ்களின் செய்திகளிலிருந்தே தொகுத்துத் தருகிறோம்.

03_2006.jpgபாயகரமான ஆஸ்பெஸ்டாஸ் கழிவுகள் நிறைந்த பிரெஞ்சு இராணுவக் கப்பல், இந்தியாவில் உடைக்கப்படுவதற்காக அனுப்பப்பட்டதை எதிர்த்துப் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள் சமீபத்தில் போராடின. இந்தப் பிரச்சினையில் தலையிட்ட உச்சநீதி மன்றம், ""இது குறித்து யாரும் எந்தக் கருத்தும் கூறக் கூடாது'' என உத்தரவு போட்டது. நமது நாட்டில் கருத்துரிமை எந்த இலட்சணத்தில் இருக்கிறது என்பதற்கு இச்சம்பவம் ஒரு முத்தாய்ப்பான உதாரணம்.

03_2006.jpg

திருப்பூர் சாயப்பட்டறை முதலாளிகள் அமெரிக்க டாலரைச் சம்பாதிப்பதற்காக நொய்யல் ஆற்றையே சாக்கடையாக மாற்றி, நொய்யல் ஆற்றுப் பாசன விவசாயத்தை அழித்ததை நாம் அறிவோம். நொய்யல் ஆற்றைப் போலவே, பவானி நதியும் துணி ஆலை அதிபர்கள், காகித ஆலை முதலாளிகளின் இலாபத்திற்காகச் சூறையாடப்பட்டு வருகிறது.

03_2006.jpgநார்வே தூதரின் ஏற்பாட்டின்படி, சுவிஸ் நாட்டிலுள்ள ஜெனிவா நகரில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையே மீண்டும் அமைதிப் பேச்சு வார்த்தைகள் கடந்த பிப்ரவரி இறுதியில் நடந்துள்ளது. மூன்று ஆண்டுகளாக எவ்வித முன்னேற்றமுமின்றி முடங்கிக் கிடந்த நிலையில் தற்போது நடக்கும் பேச்சுவார்த்தை பெரிதும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது.

03_2006.jpg

விருத்தாசலம் அருகில் உள்ள ஆலிச்சிக்குடி, க.இளமங்கலம் கிராமங்களின் விவசாயிகளுக்கு ஊருக்குத் தெற்கே, கருங்குழி காட்டோடைக்குத் தென்புறம் சுமார் 1000 ஏக்கர் நிலம் உள்ளது. விவசாயிகள் இந்த நிலங்களில் நெல்லும் கரும்பும் பயிரிட்டிருந்தனர்.

03_2006.jpg

கோக்கின் தலைமையிடமான அமெரிக்காவில் பல்கலைக்கழக மாணவர்கள் கோக்கிற்கு கொடுத்த அடியும், நெல்லையில் கங்கைகொண்டான் கிராமசபைக் கூட்டத்தில் கோக்கின் அதிகாரத் திமிருக்கு விழுந்த செருப்படியும் அமெரிக்க எதிர்ப்புணர்வுக்குப் புதுரத்தம் பாய்ச்சுகின்றன. விவசாயிகளை மேலும் போண்டியாக்கி நடுத்தெருவுக்குத் தள்ளும் ஒப்பந்த விவசாயம் எனும் மறுகாலனியாதிக்கக் கொள்கையின் கோரத்தை பஞ்சாபின் படிப்பினை எடுப்பாக உணர்த்துகிறது.

புரட்சித்தூயன், தருமபுரி.

03_2006.jpg

காங்கிரசு அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை போலி கம்யூனிஸ்டுகள் விலக்கிக் கொள்வார்களா? ""மன்மோகனுக்கு மார்க்சிஸ்டுகள் குடைச்சல்'', ""சிதம்பரத்துக்கு நமைச்சல்'', ""நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்புவார்கள் இடதுசாரிகள்'' என்பன போன்ற தலைப்புச் செய்திகளைப் படித்தால், அப்படி ஏதோ நடக்கப் போவதைப் போன்ற பிரமை ஏற்படத்தான் செய்கிறது. பிரமைகளை விடுத்து நாம் உண்மைகளைப் பரிசீலிப்போம்.

03_2006.jpg

வமானம்! தமிழகம் மிகப்பெரும் அவமானத்தைச் சுமந்து நிற்கிறது. தனது""பணப்புழக்க'' ஆட்சியில், போராடிய விவசாயிகளையும் தொழிலாளர்களையும் அரசு ஊழியர்களையும் மிருகத்தனமாக ஒடுக்கி வந்த பாசிச ஜெயா, தேர்தல் நெருங்கிவிட்டதும் இப்போது சலுகைகளை வாரியிறைக்கிறார். கடன்சுமை தாளமுடியாமல் தஞ்சை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட போது, ""வைப்பாட்டி வைத்திருந்த விசயம் வெளியே தெரிந்து விட்டதால் தற்கொலை செய்து கொண்டதாக''

03_2006.jpg

மறுகாலனியாக்கக் கொள்கைகளின் விளைவாக, இந்தியப் பொருளாதாரமும் எல்லா உற்பத்தி மற்றும் விநியோகத் துறைகளும் பன்னாட்டு நிறுவனங்களின் கோரப் பிடிக்குள் சிக்கி வருவதை நாமறிவோம். இந்தப் பொருளாதார அடிமைத்தனத்தை விஞ்சும் அளவில் அரசியல் மற்றும் இராணுவ அடிமைத்தனத்திற்கான சங்கிலிகள் நம்மீது பூட்டப்படுகின்றன. தனது குறைந்தபட்ச செயல்திட்டத்தில், பாரதிய ஜனதாவைப் போலன்றி தன்னை ஒரு அமெரிக்க எதிர்ப்பாளனாக சித்தரித்துக் கொண்டது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி.

03_2006.jpg

இந்தியாவைப் பொருளாதார வல்லரசாக்கப் போவதாகவும் முன்னேற்றப் போவதாகவும் கூறிக் கொண்டு உலக மேலாதிக்கப் பயங்கரவாதியும் அமெரிக்க அதிபருமான புஷ் நம் நட்டிற்கு வருவதும், இந்தப் போர்க் கிரிமினலுக்கு தேசத்துரோக காங்கிரசு கூட்டணி அரசு தடபுடலான வரவேற்பு அளிப்பதும் நம் அனைவருக்கும் நேர்ந்துள்ள தேசிய அவமானம்.

03_2006.jpg

"அவர்கள் என் அங்கங்களைத்தான் சிதைத்து விட்டார்கள்; என் குரல் இன்னும் என்னிடம் உள்ளது; நான் இன்னமும் பாடுவேன்!''

 

போராட்டம் என்றாலே ஒதுங்கிப் போய்விடும் சமரச மனோபாவம் ஊட்டி வளர்க்கப்படும் இந்தக் காலத்தில், எப்படிபட்ட நிலையிலும் துவண்டு போய்விடாமல் நீதிக்காகப் போராடுவதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளும் மனிதர்களை அபூர்வமாகத்தான் பார்க்க முடியும். அப்படிபட்ட அபூர்வ மனிதர்தான், பாந்த் சிங்.

02_2006.jpgஜனவரி இதழின் அட்டைப்பட விளம்பரமே அரசியல் ஆர்வலர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டும் வகையில் அருமையாக வெளிவந்துள்ளது. இப்""புத்தாண்டு சிறப்புத் தள்ளுபடி'' விளம்பரத்தையும் அட்டைப்படக் கட்டுரையையும் விளக்கிப் பிரச்சாரம் செய்தபோது பேருந்துகளில் பு.ஜ. இதழ் பரபரப்பாக விற்பனையாகியது. ஜெகந்நாபாத் சிறைத் தகர்ப்பு பற்றிய சி.பி.எம். தலைவர் யெச்சூரியின் துரோகத்தனத்தையும் கைக்கூலித்தனத்தையும் அம்பலப்படுத்திக் காட்டிய ""சிவப்பென்றால் சிலருக்கு பயம்! பயம்!!'' எனும் கட்டுரை சிறப்பு.

வாசகர்கள், திருப்பூர்.

02_2006.jpgசில்லறை வணிகத்தில் 51 சதவீதம் அந்நிய முதலீடு அனுமதிக்கப்படும் என்ற அறிவிப்பை ஜனவரி 25ஆம் தேதியன்று காங்கிரசு அரசு வெளியிட்டுள்ளது. மதுபானம், பெட்ரோலிய கட்டுமானம், தானியக் கிட்டங்கிகள், பருத்திரப்பர் வணிகம், வைரம் உள்ளிட்ட கனிமச் சுரங்கங்கள், தொழில்துறைக்கான வெடி மருந்துகள், விமான நிலையங்கள், மின்சாரத்தை வாங்கி விற்கும் வணிகம் போன்றவற்றில் இனி 100 சதவீத அந்நிய முதலீடு அனுமதிக்கப்படுவதாகவும் இந்த அறிவிப்பு கூறுகிறது. பன்னாட்டு

மறுகாலனியத் தாக்குதல் மூர்க்கமாக அரங்கேறி வருகிறது. அரசுத்துறைகளைத் தாரை வார்ப்பதற்கு கூறப்பட்ட பொய்க் காரணங்கள் கூட இல்லாமல், இப்போது லாபமீட்டும் அரசுத்துறை நிறுவனங்களான விமான நிலைய ஆணையகத்தின் கீழுள்ள தில்லி, மும்பை விமான நிலையங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளன. இக்கொடுமைக்கெதிராகப் போராடும் விமானநிலைய ஊழியர்கள் மீது மும்பை போலீசு காட்டுமிராண்டித்தனமான தடியடித் தாக்குதலை நடத்தியுள்ளது. விமான நிலையங்கள் விமானப்படையைக் கொண்டு

02_2006.jpgகடந்த ஜனவரி 2ஆம் தேதியன்று, தமது நிலங்களில் டாடா உருக்கு ஆலைக்கான சுற்றுச்சுவர் கட்டப்படுவதை எதிர்த்து திரண்டமைக்காக, ஒரிசா மாநிலத்தின் ஜஜ்பூர் மாவட்டத்திலுள்ள கலிங்கா நகர் பகுதியின் பழங்குடியினர் 13 வயது சிறுவனும், மூன்று பெண்களும் உட்பட 12 பேர், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ""இரண்டாவது ஜாலியன் வாலாபாக்'' எனத்தக்க வகையில், போராடிய மக்களை அரசு நிர்வாகமும், டாடா நிறுவனமும் திட்டமிட்டு படுகொலை செய்துள்ளன. கொலைவெறியாட்டத்தின் உச்ச கட்டமாய், காயம்பட்ட ஆறு பேரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று, அவர்களுடைய கரங்களை வெட்டிப் பிணங்களாக திருப்பி அளித்திருக்கிறது, போலீசு.