Language Selection

புதிய ஜனநாயகம் 2010

அன்றாட அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்குவதற்குச் சந்தைக்கு வரும் ஏழை-எளிய மக்கள் விலைவாசியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தும் கொதித்துப் போயும் கிடக்கிறார்கள். அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், சர்க்கரை, பால், காய்கறிகள் முதலிய இன்றியமையாப் பொருட்களின் விலைகள் செங்குத்தாக எகிறிக் கொண்டே போகிறது. சந்தையில் கிலோ 13 ரூபாயாக இருந்த அரிசி 28 ரூபாயாக, அதாவது இரண்டு மடங்குக்கு மேலாகி விட்டது. 8 ரூபாயாக இருந்த கோதுமை 15 ரூபாயாகி விட்டது. 17 ரூபாயாக இருந்த சர்க்கரை 47 ரூபாயாகிக் கசக்கிறது.

எண்ணெய்க்காக ஈராக் மீது போர்தொடுத்து, ஆக்கிரமித்துள்ள அமெரிக்க பயங்கரவாதிகளின் வழியில், இந்தியத் தரகுப் பெருமுதலாளிகள் மற்றும் பன்னாட்டு ஏகபோக முதலாளிகளின் சூறையாடலுக்காக நாட்டு மக்கள் மீதே காட்டு வேட்டைஎன்ற மிகக் கொடிய போரை நடத்தி வருகிறார், கொலைகார உள்துறை அமைச்ழுஉர் ப.சிதம்பரம்.

சென்ற வருடம் அக்டோபர் மாதம் மத்திய அரசின் மரபணு பொறியியல் ஒப்புதல் குழு, பி.டி. கத்தரிக்காயை வணிக ரீதியில் விளைவிக்கலாம் என ஒப்புதல் கொடுத்துள்ளது. இதற்கு நாடெங்கிலும் அறிவுத்துறையினர், சூழலியவாதிகள், தன்னார்வக் குழுக்கள் முதலானோரிடத்திலிருந்து எதிர்ப்பு கிளம்பியது.

ஈழப்போரில் பேரழிவும் பின்னடைவும் ஏற்பட்ட பின்னர், தமிழ்நாட்டில் புலிகளின் ஆதரவாளர்கள் விடுத்துவரும் அறிக்கைகளும், அவர்கள் எடுத்துவரும் நிலைப்பாடுகளும் தமிழர்களைப் புல்லரிக்க வைக்கின்றன. ஏழு மாதங்களுக்குமுன் நடந்த நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி ஜெயலலிதாவின் "நேர்மையான சந்தர்ப்பவாதமான' ஈழ ஆதரவைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, இரட்டை இலைக்கு தெருவெங்கும் வாக்கு சேகரித்தனர், பெரியார் தி.க.வினர்.

அதிகாலையிலேயே எழுந்து ஓட்டமும் நடையுமாக நடுத்தர மேட்டுக்குடிவர்க்கத்தினர் வீடுகளுக்குப் பாத்திரங்கள் விளக்கி, வீடுபெருக்கக் கிளம்பிச் செல்லும் கண்ணம்மா (பெயர் மாற்றப்பட்டுள்ளது)வின் கதை இது. எட்டுவயதில் வீட்டு வேலைகள் செய்ய ஆரம்பித்த கண்ணம்மா (வயது 43)இப்போது சென்னை ராயப்பேட்டை பகுதியில் நான்கு வீடுகளில் தினமும் வேலை செய்கிறார்.

போலீசுக்காரர்கள், குறிப்பாக உயர் போலீசு அதிகாரிகள் வக்கிரமான, கிரிமினல் குற்றச் செயல்களில் ஈடுபடுவதும், தண்டனை ஏதுமின்றித் தப்பித் திரிவதும் மட்டுமல்ல அவர்களால் பாதிக்கப்பட்டவர்களே துன்புறுத்தப்படுவதும், கிரிமினல் போலீசார் மேலும்மேலும் பதவி உயர்வும் விருதுகளும் பெறுவதும் கூட புதிதில்லை.

கருப்புப் பட்டியலில் உள்ள தமிழகத்தின் 16 தனியார் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்ற மைய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, கல்விக் கொள்ளையர்களுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் மீண்டும் குமுறி எழுந்து அடங்கியிருக்கிறது.

"பழங்குடியினர் மீனவர்கள் விவசாயிகள்மீதான போர்தான், அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்!" என்ற மைய முழக்கத்துடன் பல்லாயிரக்கணக்கில் துண்டுப் பிரசுரங்கள், கொலைகார இந்தியஆட்சியாளர் நடத்தும் காட்டுவேட்டை போரின் உள்நோக்கத்தைத் திரைகிழிக்கும் வெளியீடு,

அரசு பயங்கரவாதம் கொடியது. அதிலும் உலகப்பொது எதிரியான அமெரிக்க அரசு பயங்கரவாதம் மிகக்கொடியது. கியூபா எல்லையை ஒட்டியுள்ள குவாண்டனோமோ சிறை, ஈராக்கின் அபு கிரைப் சிறை, அமெரிக்கப் போர்க் கப்பல்கள் என்ற பெயரில் உள்ள 'மிதக்கும் சிறைச்சாலைகள்' முதலானவற்றில் தொடரும் காட்டுமிராண்டித்தனமான சித்திரவதைகளும் இரத்தத்தை உறைய வைக்கும் கொடுமைகளும் அடுத்தடுத்து அம்பலமாகி அமெரிக்கப் பயங்கரவாதம் உலகெங்கும் காறி உமிழப்படுகிறது.

மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாகவும், இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் "நான்காவதுதூணாக"ச் செயல்படுவதாகவும் செய்தி ஊடகங்களைப் பெருமையாகக் குறிப்பிடுகின்றனர். எனினும், இன்று அவற்றின் நிலைமையோ, அத்தகைய முதலாளித்துவ செய்தி ஊடகங்களில் பணியாற்றி வருபவர்களால் கூட சகிக்க முடியாத அளவிற்கு போய் விட்டது.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் கடந்த 40 ஆண்டுகளாக லியோ பாஸ்ட்னர்ஸ் எனும் போல்ட்நட் தயாரிக்கும் ஆலை இயங்கி வருகிறது. ஐந்தாண்டுகளுக்கொருமுறை அரசின் சலுகைகள் மானியங்களைப் பெறுவதற்காக நிறுவனத்தின் பெயரை வௌவ்வேறு பெயர்களில் மாற்றிக் கொண்டு மக்களின் வரிப்பணத்தை விழுங்கிவரும் இந்நிறுவனம்,

நக்சல் ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் அரசு நடத்திவரும் காட்டுவேட்டை (ஆபரேசன் கிரீன் ஹன்ட்) என்பது, மக்கள் மீது மறுகாலனியாக்கத்தைத் துப்பாக்கி முனையில் திணிக்கும் ஒரு பாசிச போர். இதனைப் பத்திரிகையாளர்கள் உள்ளட்டுப் பலரும் அம்பலப்படுத்தி வருகின்றனர். ஜன4,"டைம்ஸ் ஆஃப் இந்தியா" நாளேட்டில் வெளிவந்துள்ள, பி.யு.சி.எல் அமைப்பைச் சார்ந்தவரும் சட்டிஸ்கர் உயர்நீதிமன்ற வழக்குரைஞருமான சுதா பரத்வாஜின் நேர்காணல் இதனை நிரூபிக்கிறது. அதன் சாரம் வருமாறு:

கேரளாவின் கொல்லம் மாவட்டம் சாஸ்தம்கோட்டா எனுமிடத்தில் உள்ள தர்மசாஸ்தா கோயிலில் ஏராளமான குரங்குகள் கூட்டமாக வசித்து வருகின்றன. கோயிலுக்கு வரும்பக்தர்களையும் அருகிலுள்ள குடியிருப்புகளிலும் இக்குரங்குகள் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தன.

“ஆஸ்திரேலியாவுக்குப் படிக்கச் சென்ற இந்திய மாணவர்கள் மீதான வெள்ளை நிறவெறித் தாக்குதல்” சென்ற மாதம் முழுவதும் இந்திய ஊடகங்களில் முக்கியச் செய்தியாகத் தொடர்ந்து இடம் பெற்றிருந்தது.

இந்தியப் போலி கம்யூனிச இயக்கம் இன்னுமொரு தலைமைப் பூசாரியை இழந்துவிட்டது. "வங்கத்துசிங்கம்' என்று சி.பி.எம். கட்சியினரால் சித்தரிக்கப்பட்ட அக்கட்சியின் மூத்த தலைவரான திருவாளர் ஜோதிபாசு, கடந்த ஜனவரி 17ஆம் நாளன்று தனது 95வது வயதில் மறைந்து விட்டார்.

"ஆபரேசன் கிரீன் ஹண்ட்' (காட்டு வேட்டை) என்ற பெயரில் மாவோயிஸ்டு கட்சியையும், நக்சல்பாரி இயக்கத்தையும் நசுக்கி ஒழிக்கும் நோக்கத்துடன் இந்திய அரசு ஒரு உள்நாட்டுப் போரை அறிவித்திருக்கிறது. சட்டிஸ்கர், ஜார்கண்ட், ஒரிசா மாநிலங்களிலும் மகாராட்டிரம், ம.பி, ஆந்திர மாநிலங்களின் எல்லைப்புறங்களிலும் பரவியிருக்கும் தண்டகாரண்யா காடுகளிலிருந்தும் மாவோயிஸ்டு கொரில்லாக்களை ஒழித்துக்கட்டுவதே இந்தத் தாக்குதலின் நோக்கம் என்று அறிவித்திருக்கிறார், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம்.

இந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது, தெலுங்கானா தனி மாநில விவகாரம். தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவரான சந்திரசேகரராவின் தொடர் உண்ணாவிரதம், உஸ்மானியா பல்கலைக் கழக மாணவர்களின் போராட்டம், உயிர்த் தியாகங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து, காங்கிரசு தலைவி சோனியாவின் பிறந்த நாளான டிசம்பர் 9ஆம் தேதியன்று, தெலுங்கானாவைத் தனி மாநிலமாக்க கொள்கையளவில் ஒப்புக் கொண்டது,

அண்டை நாடான நேபாளம், கடந்த மூன்று மாதங்களாக மக்கள்திரள் போராட்டங்களால் குலுங்குகிறது. ""அந்நிய எஜமானர்களிடம் சரணடையாதே! தேசிய ஜனநாயக நேபாள மக்கள் கூட்டுத்துவ குடியரசு வாழ்க!'' என்ற முழக்கங்களுடன், மாவோயிஸ்டுகள் தலைமையில் வீதியெங்கும் மக்கள் நடத்திவரும் ஆர்ப்பாட்டங்கள், தீவட்டி ஊர்வலங்கள், மறியல் போராட்டங்களால் அந்நாடே அதிர்கிறது. இந்திய மேலாதிக்கமும் அதன் சதிகளும் நேபாளம் எங்கும் காறி உமிழப்படுகிறது.

 

இந்த நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில், முன்னெப்போதும் கண்டிராத ""இயற்கைப் பெரும் பேரழிவுகளை'' உலகம் கண்டது. கொதிக்கும் கோடைக்காலங்கள், அதிபயங்கர சூறாவளிகளும் புயல்களும், மிக மோசமான வறட்சிகளும் கொட்டித் தீர்த்த பேய்மழைகளும் வெள்ளப் பெருக்குகளும், பயபீதியும் நாசமும் விளைவித்த பெருங்கடற் சீற்றங்கள் கடல்மட்ட உயர்வுகள், இவற்றோடு பல நாடுகளின் விவசாயத்தின் தலைகுப்புற வீழ்ச்சிகள். இத்தகைய நிகழ்வுகள் உலகின் ஏதோ சில பகுதிகளில் மட்டும், எப்போதோ ஒரு சிலதடவைகள், தன்னியல்பாக வரக்கூடிய இயற்கைப் பேரழிவுகள் என்று இனியும் கருதிவிட முடியாது.

பிரதமர் மன்மோகன் சிங் கடந்த அக்டோபர் மாதம் மும்பய் நகரில் நடந்த கூட்டமொன்றில், ""நமது கஷ்டகாலம் முடிவுக்கு வந்துவிட்டதாக'' அருள்வாக்கு செõன்னார். அவர் எந்த நேரத்தில் திருவாய் மலர்ந்தாரோ தெரியவில்லை, அடுத்த ஓரிரு வாரங்களுக்குள் நாடெங்கும் உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளியின் விலை தாறுமாறாக உயர்ந்து, பாமர மக்களை மயக்கம் போடவைத்தது.