Language Selection

புதிய ஜனநாயகம் 2010

* 22,146 - போபால் விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டு இறந்து போனவர்களின் உண்மையான எண்ணிக்கை.

* 5,295 - அரசு கூடுதல் நிவாரண உதவி அளிப்பதற்காக அங்கீகரித்துள்ள புள்ளிவிவரங்களின்படி இறந்து போனவர்களின் எண்ணிக்கை.

* 5,50,095 - நிரந்தரமாக மற்றும் பகுதியளவில் முடமாகிப் போனவர்கள், புற்று நோய், சீறுநீரகக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டோர் ஆகியோரின் மொத்த எண்ணிக்கை.


* 36,913 - அரசு கூடுதல் நிவாரண உதவி அளிப்பதற்காக அங்கீகரித்துள்ள புள்ளிவிவரங்களின்படி முடமாகிப் போனோர், பிற வகைகளில் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை.

* ரூ.1,500 கோடி - அரசு அறிவித்துள்ள கூடுதல் நிவாரணத் தொகை.

* ரூ.1,000 கோடி - யூனியன் கார்பைடு நிறுவனம் இருபது ஆண்டுகளுக்கு முன்பு பாதிக்கப்பட்டோருக்கு நட்ட ஈடாக அளித்த 47 கோடி அமெரிக்க டாலரை வங்கிகளில் சேமிப்பாக வைத்திருந்ததன் மூலம் இந்திய அரசுக்குக் கிடைத்த வட்டிப் பணம், அதாவது இலாபம்.

- அந்த 1,500 கோடி ரூபாய்க்குள் இந்த 1,000 கோடி ரூபாயும் அடங்குமென்றால், பாதிக்கப்பட்டோரில் வெறும் 15 சதவீதப் பேருக்கு மட்டுமே உதவி கிடைக்குமென்றால்,

இதற்குப் பெயர் நிவாரணமா?

இந்திய நாடு மறுகாலனியாவது என்ற போக்கு போபால் படுகொலைகளால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்தப் போக்கை தடுத்து நிறுத்தவில்லையென்றால் நாடும் மக்களும் போபாலைவிடக் கொடிய கார்ப்போரேட் பயங்கரவாதத் தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும்.

அமெரிக்காவில் அணுமின் நிலையங்களில் விபத்து ஏற்பட்டால் தரவேண்டிய இழப்பீடு 50,000 கோடி ரூபாய். இந்தியாவில் 2,300 கோடி ரூபாய் என்று நிர்ணயித்திருக்கிறது இம்மசோதா. போபால் படுகொலையில் ஆண்டர்சன் வகுத்த விதியைச் சட்டமாக்குகிறார் மன்மோகன் சிங்.

ரத்தக் கவிச்சி வீசும் யூனியன் கார்பைடு நிறுவனத்தைக் கையகப்படுத்தியிருக்கும் டௌ கெமிக்கல்ஸ் யார்? வியத்நாமில் வீசப்பட்ட நாபாம் குண்டுகள், இட்லரின் விசவாயு, சதாமின் இரசாயன ஆயுதங்கள் அனைத்தும் இந்த அமெரிக்க நிறுவனத்தின் தயாரிப்புகள்தான்.

மீண்மும் இப்படிப்பட்ட கொடுமை நிகழக்கூடாது என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும் என்கிறார்கள் பாதிக்கப்பட்ட போபால் மக்கள். எனினும், அதற்கு நேர் எதிரானதையே நாம் உறுதிப்படுத்தி வருவதாகத் தோன்றுகிறது.

மெக்சிகோ வளைகுடாவை மாசுபடுத்திய பிரிட்டிஷ் பெட்ரோலியத்தை "குரல்வளையில் மிதிப்பேன்'' என்று சீறினார், ஒபாமா. ஆண்டர்சன் பாதுகாப்பாக இருக்கிறார் - -நியூயார்க்கில்.

மருத்துவக் கழிவுகள், அணுக் கழிவுகள், மின்னணுக் கழிவுகள், வெடிமருந்துக் கழிவுகள், நஞ்சு கக்கும் ஆலைகள் ... அனைத்தும் பாரதத் தாயின் வயிற்றில் ... வந்தே மாதரம்!

போபால் படுகொலை தீர்ப்பைக் காட்டி காங்கிரசைச் சாடி வரும் பா.ஜ.க.வின் மறுபக்கம்.

வாஜ்பாயி பிரதமராக இருந்தபொழுது, அவரது கூட்டணி அரசு இந்தியத் தலைமை வழக்குரைஞராக இருந்த சோலி சோரப்ஜியிடம், "இந்திய-அமெரிக்கக் குற்றவாளிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் வாரன் ஆண்டர்சனை இந்திய அரசிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்க அரசைக் கேட்க முடியுமா?" என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு கோரியது. இதற்கு சோலி சோரப்ஜி, "யூனியன் கார்பைடு கார்ப்பரேஷன் முன்னாள் தலைவர் வாரன் ஆண்டர்சனை இந்தியாவிற்குக் கொண்டுவர எடுக்கப்படும் நடவடிக்கைகள் வெற்றி பெற வாய்ப்பில்லை; எனவே, இந்த நடவடிக்கைகள் தொடருவதைக் கைகழுவி விடலாம்" எனக் கருத்துத் தெரிவித்தார்.

"ஆலைக் கழிவுகளை அகற்ற முடியாது'' என்கிறது டௌ கெமிக்கல்ஸ்.
"நாங்களே செய்கிறோம்'' என்கிறது அமைச்சர் குழு.

"ஆஸ்பத்திரிக்கு செலவு செய்ய முடியாது'' என்கிறது டௌ.
"அரசே ஏற்று நடத்தும்'' என்கிறது அமைச்சர் குழு.

"கூடுதல் நிவாரணம் தர முடியாது'' என்கிறது டௌ.
"அதையும் நாங்களே தருகிறோம்'' என்கிறது அமைச்சர் குழு.

"ஏதோ நடந்தது நடந்து போச்சு. யாரைக் குத்தம் சொல்ல முடியும்? ஏதோ பெரிய மனசு பண்ணி கொடுக்கிறாங்க. கொடுக்கிறத வாங்கிக்கிங்க. மத்ததை அரசாங்கம் பாத்து செய்யும்'' - இது நகைச்சுவையல்ல, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் சாரம்.

யூனியன் கார்பைடைக் கொண்டுவந்தவர் இந்திரா காந்தி ஆண்டர்சனை வழியனுப்பி வைத்தவர் ராஜீவ் காந்தி டௌ கெமிக்கல்ஸுக்கு காவல் நிற்கிறார் சோனியா காந்தி ........................... தயாராகிறார் ராகுல் காந்தி

பிள்ளைகளைப் பறிகொடுத்து, ஊனமுற்ற பேரப்பிள்ளகளைச் சுமந்தபடி, சோற்றுக்கும் மருந்துக்கும் காசில்லாமல், 26 ஆண்டுகளாக இந்த இரக்கமற்ற அரசை எதிர்த்து நிற்கும் பெண்கள் - யாருக்காக இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்? தங்களுக்காகவா?

அந்த நள்ளிரவில் கொல்லப்பட்டவர்களுக்கு அது மரண தண்டனை. ஓடி உயிர் தப்பியவர்களுக்கு உயிர் மட்டுமே மிச்சம். உடல் முழுவதும் ஊனம். அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களது சந்ததிகளுக்கும் இது ஆயுள் தண்டனை.

"போபாலில் நடந்தது திட்டமிட்ட படுகொலை அல்ல, எதிர்பாராமல் நடந்த விபத்து'' என்றுதான் யூனியன் கார்பைடும் அரசும் நீதிமன்றமும் சாதிக்கின்றன. இல்லை, இது கொள்ளை இலாபத்திற்காக அமெரிக்க முதலாளி வர்க்கம் நடத்தியிருக்கும் படுகொலை.

1984 போபால் படுகொலை என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத கொடூரம். மூச்சுக்காற்று முழுவதும் நச்சுக்காற்றாகவும், முழுநகரமும் சவக்கிடங்காகவும் மாறிய அந்த நள்ளிரவு .....
நம் நினைவிலிருந்து அழிக்க முடியாத பயங்கரம்.

டிசம்பர் 2, 1984, நள்ளிரவு: யூனியன் கார்பைடு தொழிற்சாலையிலிருந்து நச்சுவாயு பரவத் தொடங்கியது. உடனடியாக 3,828 பேர் கொல்லப்பட்டனர். பலருக்கு கண்பார்வை பறிபோனது. காற்றின் எதிர்த்திசையில் ஓடிய மக்கள் ஈக்களைப் போலச் சுருண்டு விழுந்து செத்தனர். முதல்வர் அர்ஜுன் சிங் நகரை விட்டுத் தப்பிச் சென்றார்.

டிசம்பர் 3, 1984: நகரெங்கும் பிணக்குவியல். எல்லாம் முடிந்த பிறகு, முதல்வரும் அதிகாரிகளும் திரும்பிவந்தனர். கொலைக் குற்றமாகாத மரணம் விளைவிக்கும் குற்ற வழக்கில் 10-வது குற்றவாளியாக யூனியன் கார்பைடு சேர்க்கப்பட்டது. அடுத்த சில நாட்களில் 20,000 பேர் வரை கொல்லப்பட்டிருந்தனர். 5,00,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

ஆதிக்க சாதிவெறியர்களின் மனம் குளிரும்படி ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது, உச்ச (அ) நீதிமன்றம். சுஷ்மா திவாரி என்ற இளம் பெண்ணின் கணவர், மாமனார் உள்ளிட்ட நான்கு பேர் பார்ப்பன சாதி கௌரவத்திற்காகக் கொல்லப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, அநீதியானது மட்டுமல்ல தீண்டாமைக்கும், ஆதிக்க சாதித் திமிருக்கும் வக்காலத்து வாங்கக் கூடியது. சமத்துவத்திற்கும், பெண்ணுரிமைக்கும் எதிரானது.

 

மேற்கு வங்கத்தில், லால்கார் வட்டாரத்தின் காடுகளையும் கனிம வளங்களையும் சூறையாடக் கிளம்பியுள்ள தரகுப் பெருமுதலாளித்துவ ஜிந்தால் நிறுவனத்தின் தொழிற்சாலை ஒன்றுக்கு அடிக்கல் நாட்ட, கடந்த 2008 நவம்பரில் மத்திய அமைச்சர் பாஸ்வான், மே.வங்க முதல்வர் புத்ததேவ் ஆகியோர் சென்று கொண்டிருந்தபோது, லால்கார் பகுதியில் மாவோயிஸ்டுகள் கண்ணிவெடித் தாக்குதல் ஒன்றை நடத்தினர். இத்தாக்குதலில் யாரும் பாதிக்கப்படவில்லை என்றாலும், உடனடியாக மே.வங்க போலீசின் தேடுதல் வேட்டை ஆரம்பமானது. லால்கார் வட்டாரத்தின் காடுகளில் வசித்து வரும் பழங்குடியினரைப் பிடித்து மாவோயிஸ்டு பயங்கரவாதிகளாக முத்திரை குத்தி, சித்திரவதை செய்யத் தொடங்கியது மே.வங்க போலீசு. போலீசு அடக்குமுறைக்கு எதிராக லால்கார் மக்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு போராடி, ‘இடதுசாரி’ அரசின் யோக்கியதையை நாடறியச் செய்தனர். இப்போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் தலையிட்டு, அதைப் போர்க்குணமிக்கப் போராட்டமாக முன்னெடுத்துச் சென்றனர்.

மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்குப் போதிய அதிகாரம் தனக்குத் தரப்படவில்லை என்று அங்கலாத்துக் கொண்டிருக்கிறார், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். மாவோயிஸ்டுகளை ஒடுக்காததற்கு மைய அரசுதான் பொறுப்பு என்று பாரதிய ஜனதாவும், சட்டம்-ஒழுங்கு என்பது மாநிலப் பட்டியலில் இருப்பதால், சட்டிஸ்கர் மாநில பா.ஜ.க அரசுதான் பொறுப்பு என்று காங்கிரசும் லாவணி பாடிக்கொண்டிருக்கின்றன.

இவர் பெயர் மாத்வி ஹுரே. மூன்று குழந்தைகளுக்குத் தாயான இவர் சட்டிஸ்கர் மாநிலம், தண்டேவாடா மாவட்டம், சிங்கன் மடு கிராமத்தைச் சேர்ந்த இளம் விதவை. சட்டிஸ்கர் அரசுக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் ஒன்பதாவது மனுதாரராகக் கைநாட்டிட்டுள்ளார். "மாத்வி ஹுரே என்றொரு மனுசியே கிடையாது. அவள் வெறும் கற்பனை; ஒருபோதும் இருந்தவள் இல்லை. மனுதாரர் ஒன்பது என்பது இல்லாத ஒருத்தியாகும்" என்று ஏப்ரல் 19-ந் தேதி டெல்லி உச்சநீதி மன்றத்தின் முன்பு இந்தியத் தலைமை வழக்குரைஞர் வாதிட்டிருக்கிறார்.