Language Selection

புதிய ஜனநாயகம் 2010

நிலத்தடியில் நீர் இல்லாத பூமி. நினைத்த நேரத்தில் கண்ணாமூச்சி காட்டும் மின்சாரம். இவற்றுக்கிடையில் சிக்கித்தவிக்கும் விவசாயிகளுக்கு கருணாநிதி அறிவித்திருக்கும் சுதந்திர தினப் பரிசு – இலவச மின்சார மோட்டர் பம்புசெட்டுகள்!

ஐந்தாண்டுகளுக்கு முன்பு குஜராத் மாநிலத் தலைநகர் அகமதாபாத் புறநகர்ப் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட சோராபுதின் ஷேக் என்ற முசுலீம் ‘தீவிரவாதியின் ஆவி’, அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியை மீண்டும் துரத்தத் தொடங்கியிருக்கிறது. மிரட்டிப் பணம்பறிப்பது, ஆயுதங்களைக் கடத்துவது போன்ற சட்டவிரோதச் செயல்களைச் செய்துவந்து உள்ளூர் தாதாவான சோராபுதின் ஷேக் நவம்பர் 26, 2005 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.  குஜராத் போலீசாரால் சோராபுதினோடு சேர்த்துக் கடத்தப்பட்ட அவரது மனைவி கவுசர் பீ ‘காணாமல்’ போனார்.

 

 

‘இந்திய நாய்களே திரும்பிச் செல்லுங்கள்!”, “இப்பொழுதே வேண்டும் விடுதலை!” என்ற முழக்கங்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கு எங்கும் மீண்டும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன. “இது இந்திய மக்களைப் பற்றியதல்ல; இந்திய இராணுவமும் துணை இராணுவப் படைகளும் காஷ்மீர் போலீசும் சாதாரண காஷ்மீர் மக்களுக்கு இழைத்த அநீதிகளைப் பற்றியது” என காஷ்மீரில் நடந்துவரும் தெருப் போராட்டங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார், இர்ஷத் என்ற இளைஞர்.  பெண்களும் தாய்மார்களும் இளைஞர்களும்தான் தற்பொழுது நடைபெற்றுவரும் போராட்டத்தில் முன்னணியாக நிற்கிறார்கள்.

அணு விபத்துக் கடப்பாடு மசோதாவை, பா.ஜ.க.-வின் ஆதரவோடு நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றியிருக்கிறது, காங்கிரசு கூட்டணி அரசு.  அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே கையெழுத்தாகி, ஏற்கெனவே நாடாளுமன்றத்தின் ஒப்புதலைச் சதித்தனமான முறையில் பெற்றுவிட்ட அணுசக்தி கூட்டுறவு ஒப்பந்தத்தின் (123 ஒப்பந்தம்) இளைய பங்காளிதான் இந்த அணு விபத்துக் கடப்பாடு சட்டம்.

தமிழக சட்டப் பேரவைக்கான 2011 பொதுத் தேர்தல்களுக்கான அரசியல் கூத்துகள் களைகட்டத் தொடங்கி விட்டன. இப்போதே கூத்தாடிகள் மீதான கவர்ச்சியை ரசிகர்களிடையே பரப்பும் முக்கிய ‘ஜனநாயகக் கடமை’யைப் பெருந்திரள் செய்தி ஊடகங்கள் பொறுப்புடன் தொடர்கின்றன. கூத்துக்குத் தேவையான கதை அமைப்புகள் – அரங்கக் காட்சிகள் தயாரிப்பில் ஓட்டுக் கட்சிகள் தீவிரமாகிவிட்டன.

பல தலைமுறைகளாக ஊழலிலே ஊறித்திளைத்த காங்கிரஸ் கொள்ளைக் கூட்டம், அடுத்த மாதம் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகளின் சந்து பொந்துகளில் எல்லாம் புகுந்து கீழ்த்தரமாகப் பொறுக்கித் தின்றிருப்பது இப்போது சந்தி சிரிக்கிறது.

அண்டை நாடான நேபாளத்தில், அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினரான நேபாள  மாவோயிஸ்டு கட்சியைச் சேர்ந்த  ராம் குமார் சர்மாவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதத் தொடக்கத்திலிருந்து தொலைபேசியில் கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருந்தன. தலைநகர் காத்மண்டு-வில்  இந்தியத் தூதரகம் நடத்திவரும் கேந்திரிய வித்யாலயா பள்ளியிலிருந்து அவரது மகள் நீக்கப்படுவார் என்றும், நாங்கள் குறிப்பிடுவது போல் பிரதமர் தேர்தலில் செயல்படாவிட்டால் உங்கள் உயிருக்கு ஆபத்து என்றும் தொலைபேசி வழியாக இந்திய உளவுத்துறை அதிகாரிகள் மிரட்டினர்.

......................................................................................
ஈழத்துரோகிகளையும் எடுபிடிகளையும் கொண்டு, தமிழின அடையாளத்தையே அழித்து ஆதிக்கம் செய்ய முயற்சிக்கிறது ராஜபக்சே கும்பல்
........................................................................................

தூத்துக்குடியையே நஞ்சாக்கிவரும் வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான "ஸ்டெர்லைட் தாமிரா" உருக்காலை நிறுவனம், வரிஏப்பு மூலம் ரூ.750 கோடியைச் சுருட்டியுள்ள விவகாரம் அண்மையில் வெளிவந்துள்ளது.

.................................................................................................
இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலைகளைச் சந்தைச் சூதாட்டம் தீர்மானிப்பதற்கு இருந்து வந்த பெயரளவிலான தடையும் நீக்கப்பட்டு விட்டது.
....................................................................................................

காங்கிரசு கூட்டணி ஆட்சி கடந்த ஆறு மாதங்களுக்குள் மூன்றாம் முறையாக பெட்ரோல்-டீசலின் விலையை உயர்த்தியிருக்கிறது. அதே சமயம், தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள விலையேற்றத்தை வழக்கமான ஒன்றாக எடுத்துக் கொண்டுவிட முடியாது.

..................................................................................................
சௌதி அரேபியாவில் வேலை பார்த்துவரும் ஆசிய நாட்டுத் தொழிலாளர்களின் துயரம் பற்றிய உண்மைச் சித்திரம்.
....................................................................................................

சௌதி அரேபியா-மன்னராட்சியிலேயே இன்னும் நீடித்திருக்கும் மத்திய தரைக்கடல் நாடுகளில் ஒன்று. அதன் பெரும்பகுதி பாலைவனம். இந்தியா அளவுக்கு பரப்பளவைக் கொண்டிருந்தாலும், மக்கள் தொகையோ ஒப்பீட்டளவில் வெகு சோற்பம். எந்தவித வளங்களும் இல்லாதிருந்த இந்நாடு, எண்ணெ வளம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு தலைகீழா மாற்றமடைந்தது.

.............................................................................................
தீட்சிதர்களைப் பார்ப்பனர் என்று சொல்வதையே எதிர்க்கும்மார்க்சிஸ்டுகள்; சொல்லில் தவிர, செயலில் பார்ப்பன எதிர்ப்பைக் காட்டத் துணியாத கருணாநிதி-இருவருக்கும் இடையில் நடப்பது வெறும் நிழற்சண்டைதான்.
...............................................................................................

................................................................................................
ஆப்பிரிக்காவின் கனிம வளங்களைச் சூறையாடிய பன்னாட்டு முதலாளிகள்,
அக்கண்டத்தின் வளமிக்க நிலங்களையும் அபகரிக்கத் தொடங்கிவிட்டனர்.
.................................................................................................

நேர்மையானவர் என்ற அங்கீகாரத்தையும் நன்மதிப்பையும் பெற்றிருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரி உமா சங்கரைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்திருக்கிறது உத்தமர் கருணாநிதி அரசு. வருமானத்துக்கு அதிகமாகச் சோத்து சேர்த்ததாகக் கூறி அவர் மீது ஏவப்பட்ட விசாரணை சட்டவிரோதமானது என்று உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து விட்டதால் ஆத்திரம் தலைக்கேறிப் போ, தலித் கிறித்தவரான உமாசங்கர், தலித் இந்து என்று போலிச் சான்றிதழ் கொடுத்துப் பதவிக்கு வந்துவிட்டாரெனக் கூறி, அவரைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்திருக்கிறார் கருணாநிதி.

...........................................................................................................................
5,6 ஆண்டுகளில் 60,000 கோடி ரூபாய் மதிப்புடைய 71 இலட்சம் டன்கள் இரும்புக் கனிமங்களைக் கடத்திக் கொள்ளையடித்திருக்கிறார்கள் ரெட்டி சகோதரர்கள்.
............................................................................................................................

மாவோயிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் ஆசாத் மற்றும் உத்தராஞ்சல் மாநிலத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஹேம் சந்திர பாண்டே ஆகியோரைச் சித்திரவதை செய்து சுட்டுக் கொன்றுவிட்டு, துப்பாக்கிச் சண்டையில் அவர்கள் கொல்லப்பட்டதாகக் கதையளந்திருக்கிறது ஆந்திர போலீசு. மாவோயிஸ்டு அமைப்பின் முக்கியமான தலைவர் ஒருவரைக் கொன்றுவிட்ட மகிழ்ச்சியில் திளைத்திருக்கின்றது காங்கிரசு அரசு.

..............................................................................................................................
-தி.மு.க., அரசு நோக்கியாவுக்கு கொடுத்துள்ள சலுகைகள் யாவும், தமிழகத் தொழிலாளர்களை ஒடுக்கவும், ஒட்டச்சுரண்டவுமே பயன்படுகின்றன.
................................................................................................................................

மகாராஷ்டிரா மாநிலம் - கயர்லாஞ்சி கிராமத்தைச் சேர்ந்த பையாலால் போட்மாங்கே குடும்பத்தினர் மீது நடத்தப்பட்ட வன்கொடுமைத் தாக்குதல் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த 11 பேரில் 6 பேருக்கு மரண தண்டனை, 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தும் மூன்று பேரை விடுதலை செய்தும் பந்தாரா மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தீர்ப்பளித்திருந்தது.

சாராய உற்பத்தியைப் பெருக்குவதன் மூலம் விவசாயிகளின் வறுமையை ஒழிக்கப் போவதாக அறிவித்திருக்கிறது, மகாராஷ்டிர அரசு. பயிரிடப்பட்டுள்ள சோளம், கம்பு, கேழ்வரகு, காட்டுப் பருப்பு முதலானவை திடீர் மழைகளால் அழுகி விவசாயிகள் பாதிக்கப்படுவதால், சேதமடைந்த அந்த தானியங்களைக் கொள்முதல் செய்து, அதிலிருந்து சாராயம் தயாரிக்கப் போவதாவும், இத்திட்டத்தின் மூலம் வறுமையிலுள்ள சிறு விவசாயிகள் பெரிதும் பலனடைவார்கள் என்றும், விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுக்கப்படும் என்றும் மகாராஷ்டிர அரசு பெருமையுடன் அறிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் மாலேகான், மத்தியப் பிரதேசத்தில் அஜ்மீர், ஆந்திராவில் ஹைதராபாத் மெக்கா மசூதி, கோவாவில் மார்காவோ ஆகிய இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகள் இந்து மதவெறி பயங்கரவாதிகளின் கைங்கர்யம் என்ற உண்மை அம்பலமாகி, இப்பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்திய ‘எழுச்சி கொண்ட இந்துக்கள்’ சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்குண்டு வெடிப்புகளுக்கும் ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார அமைப்புகளுக்கும் தொடர்பில்லை எனக் காட்டிக் கொள்வதற்காக, இக்குற்றவாளிகள் தங்களைத் தனி அமைப்புகளாக - அபிநவ் பாரத், சனாதன் சன்ஸ்தான், இந்து ஜாக்ருதி சமிதி என்ற பெயர்களில் அடையாளப்படுத்திக் கொண்டனர்.