Language Selection

பி.இரயாகரன் - சமர்

சுயநிர்ணயத்தை ஏற்காதவர்களுடன் ஒரேயொரு அடிப்படையான நிபந்தனையுடன் இணைந்து போராட முடியும். இனவொடுக்குமுறைக்கு எதிராக அவர்கள் போராடுபவர்களாக இருந்தால், அவர்கள் அப் போராட்டத்தை நடைமுறையில் முன்னெடுப்பவர்களாக இருந்தால், முதலில் நாம் ஆதரிக்க வேண்டும். வர்க்கக் கண்ணோட்டத்தில் இதை அவர்கள் முன்வைத்து செயல்படுத்துபவர்களாயின், இணைந்து போராடமுடியும். இதை நிராகரிப்பதற்கு என முன்வைக்கப்படும் எந்த அரசியல் தர்க்கமும் அடிப்படையற்றவை.

கொள்கையளவில் "சுயநிர்ணயத்தை" ஏற்றுக்கொள்வதன் மூலம் தாங்கள் சரியான அரசியலைக் கொண்டிருப்பதாகக் காட்டும் சந்தர்ப்பவாதிகளின் கோட்பாட்டு அடித்தளம், அரசியல்ரீதியாக எப்படிப்பட்டது? ஒடுக்குமுறையாளன் முதல் பிரிவினைவாதி வரை "சுயநிர்ணயத்தை" தனக்குச் சார்பாக விளக்கி, செயல்படுவதைக் காண்கின்றோம். "சுயநிர்ணயத்தை" முன்னிறுத்தி அரசியலை குறுக்கிவிடுகின்ற செயல்பாடுகள், அரசியல் அரங்கில் அரங்கேறுகின்றது. "சுயநிர்ணயத்தை" ஏற்றுக்கொள்ளாதவர்களின் அரசியல் செயற்பாடு தவறானது என்று குறுக்கிக் காட்டிக்கொள்வதன் மூலம், தங்களைச் சரியான கோட்பாட்டை கொண்டு செயல்படுபவர்களாக நிறுவ முனையும் அரசியல் போக்கு இன்று முனைப்புப் பெற்றிருக்கின்றது.

ஸ்டாலின் அவதூறுகளை பொழிவோர் அனைவரும், குருச்சேவ் நடத்தியதை முதலாளித்துவ மீட்சியாக‌ ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக குருச்சேவ் சோசலித்தின் பாதையை ஸ்டாலினிடம் இருந்து மீட்டு எடுத்தார் என்பதே, அவர்களின் அடிப்படையான கோட்பாடாகும். இதையே ஏகாதிபத்தியம் முதல் டிராட்ஸ்கியவாதிகள் வரை கைக்கொள்ளும் அடிப்படையான அரசியல் வரையறையாகும். ஆனால் உள்ளிருந்து முதலாளித்துவ மீட்சிகான அபாயத்தை லெனின் தீர்க்க தரிசனமாக விளக்கும் போது, “சிறு உடமையாளர்கள் நமது கட்சிக்குள் மேலாதிக்கம் பெறுவதற்கு, அதுவும் மிக விரைவாகப் பெறுவதற்கு எதிராக நமது கட்சிக்குள்ள பாட்டாளி வர்க்கத்தன்மை என்பது தன்னைச் சிறிதும் பாதுகாத்துக் கொள்ளாது என்று, சாதுர்யமுள்ள வெண்படையினர் அனைவரும் நிச்சயமாக நம்புகின்றனர்” என்றார். மீட்சிக்கான வர்க்க கூறுகள் தொடர்ச்சியாக உருவாவது, வர்க்க அமைப்பில் தவிர்க்க முடியாத அரசியல் நிகழ்ச்சி நிரலாகவே உள்ளது.

13வது திருத்தச்சட்டம் இனப்பிரச்சனைக்குரிய தீர்வல்ல. அதேநேரம் தீர்வல்லாத இந்த சட்டத்தை நீக்குவதையும் நாம் எதிர்க்கின்றோம். இதை நீக்குவதன் மூலம் இனங்களுக்கு இடையிலான இனநல்லுறவை சிதைப்பதுடன், இனவொடுக்குமுறையை தீவிரமாக்கவே அரசு முனைகின்றது. இலங்கையில் இனங்களுக்கிடையிலான நல்லுறவு ஏற்படுவதை தடுப்பதன் மூலம், மக்களை இன முரண்பாட்டுக்குள் தள்ளி அவர்கள் முரண்பட்டுக்கொண்டு வாழ்வதையே அரசு விரும்புகின்றது. அதையே அரசு மக்களுக்கு தொடர்ந்தும் திணிக்க முனைகின்றது. யுத்தத்தின் பின் தொடர்ந்து மக்களை பிரித்தாள்வதை அடிப்படையாகக் கொண்டு, தீர்வு காண மறுக்கின்றது. இந்த அடிப்படையில் இனங்கள் கொண்டிருந்த உரிமைகளையும் பறிக்கின்றது.

எந்த வகையில்? எம்மையும், எம் நடத்தையையும் மாற்றினோமா? எம் எழுத்தை, எம் எழுத்துமுறையை மாற்றினோமா? எந்த வகையில், நாம் எம்மில் மாறி இருக்கின்றோம். மக்கள் போராட்ட அனுபவம் தான் உண்டா? இல்லை. எம்மில் இருந்து நாங்கள் மாற்றத்தை தொடங்காமல், மக்களை அணிதிரட்ட முடியாது. இதைப்பற்றி பேசுவது, எழுதுவது முதல் தங்களை இதற்குள் அடையாளம் காட்டுவது வரையான வரையறைக்குள், இதை முடக்கி பார்க்கின்ற, காட்டுகின்ற எல்லைக்குள் இது பேசப்படும் பொருளாகவே மக்கள் போராட்டம் இருக்கின்றது.

சிங்கள மக்களுடன் இணைந்து போராடுவதையும், அவர்கள் தமிழ் மக்களுக்காக போராட முற்படுவதையும், பலரும் தங்கள் தங்கள் நிலை அவர்களால் அங்கீகரிக்கப்படுதல் என்ற குறுகிய பார்வையூடாக அணுகுகின்றனர். நாங்கள் சரியாக தான் இருந்தோம், இருக்கின்றோம், அவர்கள் தான் தவறாக இருந்ததாக கருதிக்கொண்டு, காட்டிக்கொண்டு அணுக முற்படுகின்றனர்.

டிராட்ஸ்கிகள் தமது சொந்த அரசியலையே, ஸ்டாலினின் அவதூறுகளில் இருந்துதான் கட்டிய‌மைக்கின்றனர். அவர்களுக்கு இதைவிட வேறு வழியிருப்பதில்லை. இதை மூடிமறைக்க சொற்களில் “ஸ்டாலினை வரலாற்றுப் போக்குகள், அதிகார அமைப்பின் இயக்கத்துக்குள் வைத்து புரிந்து கொள்ள வேண்டுமே தவிர, தனித்தனித் சம்பவங்களைப் பிரித்தெடுத்து நோக்குவதும் அதனடிப்படையில் விளக்கவதும் மார்க்சியமல்ல” என்ற கூறியே, அவதூறுகளை தொகுத்து வெளியிடுகின்றனர். இந்த தொகுப்பு என்பது அரசியலற்ற வெற்று வேட்டுகளின், எதிர்புரட்சியில் கொல்லப்பட்டவர்களின் பட்டியலைக் கொண்டு தூற்றப்படுகிறது. இங்கு தனிதனிச் சம்பவங்களை அல்ல என்ற கூறிய போதும், தனி தனி சம்பவங்களையே அவதூறின் தொகுப்பாக முன்வைக்கிறார்கள். அதிகாரம் என்றால் என்ன என்ற அடிப்படை அரசியலைக் கூட விவாதிக்க வக்கற்றவர்கள், அவதூறுகளின் தொகுப்பே மார்க்சியம் என்கின்றனர். எந்தவிதமான அரசியல் அடிப்படையுமற்ற பட்டியலைக் கொண்டு ஏகாதிபத்தியம் எதைச் செய்கின்றதோ, அதை அப்படியே டிராட்ஸ்கிகளும் காவடி எடுக்கின்றனர். இதைத் தான் நாம் மேலே டிட்டோவின் முதலாளித்துவ மீட்சி சார்ந்த போக்குக்கு எதிரான ஸ்டாலின் நிலையையும், முதலாளித்துவ மீட்சிக்கு சார்பான டிராட்ஸ்கிகள் நிலையையும் ஓப்பிட்டு ஆராய்ந்தோம். “ஸ்டாலினை வரலாற்றுப் போக்குகள், அதிகார அமைப்பின் இயக்கத்துக்குள் வைத்து புரிந்து கொள்ளவேண்டுமே தவிர” என்று கூறி, தனிச் தனி சம்பவகளால் தொகுக்கப்பட்டு, அவை அவதூற்றல் நிரப்பபட்டுள்ளது. ஈராக் ஆக்கிரமிப்பை அமெரிக்கா  நியாயப்படுத்த எதை எல்லாம் செய்ததோ, அதுபோன்றே டிராட்ஸ்கிகள் சமகாலம் வரை  செய்கின்றனர்.

தீபச்செல்வன் குளோபல் தமிழ்நியூஸ் இணையத்தில் தமிழ்-சிங்கள மக்கள் இணைந்து போராடுவதை எதிர்த்து "எங்கள் துயரம் தெற்கு மக்களுக்கு தெரியாததா?"  என்று கேட்டு எழுதுகின்றார். இதில் அவர் "நம்மில் சிலர் தெற்கு மக்களையும் இணைத்துக்கொண்டே போராட வேண்டும்" என்று கூறுவதை எதிர்த்து குறுந்தேசிய இனவாத தர்க்கத்தை முன்வைக்கின்றார். இங்கு "நம்மில் சிலர்", என்று கூறுவது, எம்மைக் குறித்தது கூட. அத்துடன் "தெற்கு மக்களையும் இணைத்து" போராடக் கூடாது என்கின்றார். இது வெறும் தீபச்செல்வனின் கருத்துமட்டுமல்ல, சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களுடன் இணைந்து போராட தயாரற்ற அனைவரினதும் நிலையும் இதுதான். இந்தநிலையில் "எங்கள் துயரம் தெற்கு மக்களுக்கு தெரியாததா?" என்று வேறு கேட்கின்றார்! சரி இணைந்து போராடுவது தவறா? இது தமிழ் மக்களின் பிரச்சனை மறுத்து விடுமா? இணைந்து போராடாமல் தீர்வு காணத்தான் முடியுமா? சொல்லுங்கள் எப்படி என்று? "நம்மில் சிலரான" நாங்களும் வருகிறோம். அரசுடன் பேசுவதும், இந்தியாவுடன் சேர்ந்து கூத்தாடுவதும், ஏகாதிபத்தியத்துடன் கூடுவதும் தான் உங்கள் வழி. நாங்கள் இதை மறுத்து, மிகத் தெளிவாக கூறுகின்றோம், தமிழ்-சிங்கள மக்கள் இணைந்து போராடாது, தமிழ்மக்கள் மேலான இனவொடுக்குமுறையை வேறு எந்தவழியிலும் தீர்க்க முடியாது. அவை அனைத்தும் தமிழ் மக்களுக்கு எதிரானது தான். தமிழ் மக்கள் தமக்காக தாம் போராடுவார்களாக இருந்தால், அவர்கள் சிங்கள முஸ்லீம் மலையக மக்களுடன் இணைந்து தான் போராடுவார்கள். இதற்கு வெளியில் வேறு உண்மை மாற்று கிடையாது.

பருவ வயதை அடைந்தவர்கள், தங்கள் சுய முடிவுகளை எடுக்கின்ற பருவம். இதை அனுமதிப்பதா இல்லையா என்பதுதான், பெற்றோரின் சங்கடங்களும், முரண்பாடுகளும். குழந்தை முடிவை எடுப்பதை மறுப்பதும், நாங்கள் எடுத்த முடிவின் அடிப்படையில் தான் குழந்தைகள் செயல்படவேண்டும் என்பது, பெற்றொரின் அதிகாரம் சார்ந்த குரலாக இருக்கின்றது. இப்படி பெற்றோர் முடிவு எடுத்து வந்த போக்கும், குழந்தையானது தான் முடிவு எடுப்பதற்குமான அடிப்படை முரண்பாடு தான் இது. பெற்றோர் தாம் கண்ட அனுபவத்தை, தங்கள் அச்சங்களை, தங்கள் விருப்பங்களை, தங்கள் தெரிவுகளை, தங்கள் அதிகாரம் சார்ந்து இதில் ஒன்றோ அல்லது பலதோ சார்ந்து திணிக்க முனைகின்றனர். குழந்தைகள் தங்கள் அனுபவமின்மை சார்ந்து, அச்சமின்மை சார்ந்து, தங்கள் விருப்பங்கள் சார்ந்து, தங்கள் தெரிவுகள் சார்ந்து, தங்கள் சுதந்திர உணர்வு சார்ந்து, இதில் ஒன்று அல்லது பல சார்ந்து போராட முனைகின்றனர். இதில் உள்ள இணக்கமின்மைதான், பரஸ்பரம் குற்றச்சாட்டுகளுக்கும், விலகிப் பிரிதல் வரை விரிந்து செல்லுகின்றது. இந்தப் போக்கு சமூகத்தில் எங்கும் புரையோடிக் காணப்படுகின்றது.

எரிக் சொல்ஹேம் இன்றைய அருள்வாக்கையும், புலிப் பினாமிகளின் காவடியாட்டத்தையும் மீறிய உண்மைகள் பல உண்டு. இனப்பிரச்சனை தீர்க்கப்பட்டிருந்தால் இந்த யுத்தமே நடந்திருக்காது அல்லவா! எரிக் சொல்ஹேம் தங்கள் முடிவை நடைமுறைப்படுத்த முன்னிறுத்திய "சர்வதேச சமூகம்" இதை செய்யமுடிவில்லையே ஏன்? யுத்தத்தின் பின் இதை ஏன் செய்ய முடியவில்லை? இப்படி இருக்க எரிக் சொல்ஹேம் கண்காணிப்பில் சரணைடைந்து இருந்தால் மட்டும் சரியாக நடந்திருக்கும் என்பது மோசடி. ஏன் புலிகள் சரணடையவில்லை. நீங்கள் சொன்னமாதிரி வெள்ளைக்கொடியுடன் புலிகள் சரணடையவில்லையா? அவர்களுக்கு என்ன நடந்தது? காலம் யுத்தசூழல் சார்ந்த படுகொலைகளை இல்லாதாகி இருக்கலாம். ஆனால் அரசின் திட்டமிட்ட இனவொடுக்குமுறை தொடங்கி இனப்படுகொலை இன்றுவரை தொடருகின்றது. இதுதான் உண்மை எதார்த்தம்.

யூகோஸ்லாவியாவின் முதலாளித்துவ மீட்சியை சோசலிசமாகவும், முதலாளித்துவமல்லாத புரட்சியாகவும் காட்டப்பட்டது. இதனடிப்படையில் ஸ்டாலின் தூற்றப்பட்டார். ஸ்டாலினால் முன்னெடுக்கப்பட்டு உருவாக்கபட்ட  சோசலிச சமூக கட்டுமானங்கள் அனைத்தும் சிதைக்கப்பட்டு நொருக்கப்பட்டன. இந்த முதலாளித்துவ மீட்சியை சர்வதேசிய டிராட்ஸ்கிகள் ஆதாரித்து நின்றனர். குருச்சேவ் பதவிக்கு வந்தவுடன் ஸ்டாலின் மறுக்கப்பட்ட நிலையில், சோவியத்யூனியனும், உலக கம்யூனிச இயக்கமும் படிப்படியாக யூகோஸ்லாவியா நிலைக்கு தம்மை மாற்றிக் கொண்டது. உலகம் எங்கும் புரட்சிகர போக்குகள் சிதைக்கப்பட்டன. எதிரியை நண்பனாக காட்டுவதும், போற்றுவதும் புதிய விடையமாகியது. குருச்சேவ், டிட்டோ இடையில் ஏகாதிபத்தியத்துடன் யார் அதிகம் கூடிக்கூலாவுவது என்பதில் கடுமையான போட்டி நிலவியது. அதேநேரம் தமது முதலாளித்துவ மீட்சிக்கான தங்கள் நோக்கத்தில், தமக்குள் ஒன்றுபட்டு கைகோர்த்துக் கொண்டனர். ஒருவரை ஒருவர் ஆரத் தழுவிக் கொண்டனர். முதலாளித்துவத்தை மீட்பது எப்படி என்பதில், குருச்சேவ் டிட்டோவின் சீடனானான். டிட்டோ கும்பல் உலகம் தழுவிய வகையில், மக்களின் புரட்சிகர போராட்டங்ககளிலும், ஏகாதிபத்திய நாடுகளின் ஒடுக்குமுறைக்கு உள்ளான உலக நிகழ்ச்சிகளிலும், அமெரிக்காவின் சார்பாக அப்பட்டமாக செயல்பட்டது. இதன் போது ஏகாதிபத்திய தலைவர்களுக்கு வெண்சாமரம் வீசி, செங்கம்பளம் விரித்து வரவேற்று அவர்களைப் போற்றினர்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE