Language Selection

பி.இரயாகரன் -2010

மாத்தையா உறுமியபடி தொடர்ந்து தாக்கினான். புலிகள் விடை தேடிய பல தொடர் கேள்விகள் கேட்டனர். கற்றன் நாசனல் வங்கி நடவடிக்கையில் நீ பங்கு பற்றினாயா? யார் இதைச் செய்தனர்? பணம் எங்கே? என்றான். நானோ இதுபற்றிய விபரங்கள் எனக்கு எதுவும் தெரியாது என்றேன்.

புலித் தலைவர்கள் எப்படி, எந்த நிலையில் வைத்து கொல்லப்படுகின்றனர்!?

அனைத்தும், சர்வதேச சதியுடன் கூடிய ஒரு மோசடியின் பின்னணியில் அரங்கேறுகின்றது. துரோகம் மூலம் இவை மூடிமறைக்கப்படுகின்றது. பலருக்கு பல கேள்விகள், பல சந்தேகங்கள். இதை சுயவிசாரணை செய்ய யாரும் தயாராகவில்லை. என்னசெய்வது, ஏது செய்வது என்று தெரியாத, திரிசங்கு நிலை.என்று ஆயுதத்தை கீழே வைத்து, புலிகள் சரணடைந்ததை இது தெளிவாக்குகின்றது. அவரின் மற்றைய பேட்டிகள் இதை உறுதி செய்கின்றது.

7ம் திகதி முதல் 10 திகதி வரை பல்வேறு தளத்தில் பல விடையங்களை பொதுவாக கேட்டார்கள். இடையில் விஐpதரன் தொடர்பாகவும், அப் போராட்டம் தொடர்பாகவும் கேட்டனர். அப்போது பல்கலைக்கழகம் எடுத்த படங்களை கொண்டு வந்து, அதை வைத்து விசாரித்தார்கள். இதை அவர்கள் பல்கலைகழக மாணவர் அமைப்புத் தலைவர் சோதிலிங்கத்தின் வீட்டில் இருந்து கைப்பற்றி இருந்தனர்.

யுத்தத்தின் பின்னான பேரினவாதம், மக்களை பிளக்கும் இனவரசியலை தொடர்ந்து முன்தள்ளுகின்றது. தமிழ்  குறுந்தேசியமோ, தொடர்ந்து தங்கள் இனவாதம் மூலம் இந்த இனப்பிளவை மேலும் ஆழமாக்குகின்றது. இதற்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்களின் ஐக்கியத்தை முன்வைத்து, இடதுசாரியம் செயற்படவில்லை. மாறாக சந்தர்ப்பவாதமாகவே வலதுசாரியத்துடன் கூட்டமைத்து, தானும் இனவாதத்தை முன்தள்ளுகின்றது.

மக்கள் குரல், தீக்கதிர், S.M.G வாங்கியது, 80000 ரூபா இரண்டு ஏகே-47 (AK-47) வாங்கக் கொடுத்தது. ஆயுதப் புத்தகங்கள் சில, றோனியோ 2, மாணவர் அமைப்பு நோட்டிஸ், பயணம், இவைகள் ஏதோ ஒரு விதத்தில் என்னுடன் சம்பந்தப்பட்டதாக இருந்தது. இதை விட 1970 முதல் வெளி வந்த பல தேசிய இயக்கங்களின் துண்டுப்பிரசுரமும் அது சார்ந்த ஆவணங்கள், நூல்கள், யாழ் குடாவில் நடந்த பல்வேறு சம்பவங்கள் சார்ந்த போட்டோக்கள் என்று ஒரு ஆவணத் தொகுப்பையும் கொடுத்த இருந்தேன். இதுவே நான் வசந்தனுடன் பொருட்கள் தொடர்புடைய விடையமாக இருந்தது.

புலிகளின் வதைமுகாமில் 80 நாட்கள் நான் இருக்க நேர்ந்தது. ஒருபுறம் அவர்களின் வதை, மறுபுறம் அவர்களுடன் போராட்டமும் தொடங்கியது. அவை எனது அடிப்படைத் தேவைகள் சார்ந்த போராட்டமாக தொடங்கியது. இவை விவாதம், கருத்துப் பரிமாற்றம் … என்று பல வடிவத்தில் தொடர்ந்தது. 

இரண்டாவது வதைமுகாமுக்கு, வைகாசி மாதம் இரண்டாம் திகதி மதியமளவில் கொண்டு செல்லப்பட்டேன். மதிய உணவு தரப்படவில்லை. அநேகமாக அவர்களைப் பொறுத்தவரையில் நான் புதிய கைதி என்பதால், எனக்கு பார்சல் உணவு அங்கு இருந்திருக்காது. அன்றைய மாலை, மிகமிக மெதுவாக நகர்கின்றது. தண்ணீர் விடாய் மண்டையை வெடிக்க வைக்குமாற் போல் இருந்தது. முதல்நாள் இரவு ஒரு குவளை தண்ணீர் கிடைத்தது. எழு மணியளவில் மூன்று குழல் பிட்டு ஒரு பார்சலில் தரப்பட்டது. அத்துடன் ஒரு குவளை தண்ணீர் தரப்பட்டது. அன்று மலசலகூடம் செல்ல அனுமதிக்கவில்லை. உணவு உண்ட பின், வெறும் நிலத்தில் நிர்வாணமாக அயர்ந்து உறங்கினேன்.

வலதுசாரியம் மக்களைச் சுரண்டவும், மக்கள் மேலான சமூக ஒடுக்குமுறைகளை  பாதுகாக்கவும், இனங்களை ஒடுக்கி அவர்களுக்கு இடையில் முரண்பாட்டை முன்தள்ளுகின்றது. எழும் போராட்டத்தை திசைதிருப்ப, சுயநிர்ணயத்தை தமக்கு ஏற்ப திரித்துப் பயன்படுத்துகின்றனர். இது

கடுமையாக யுத்தம் நடந்த சூனியப் பிரதேசத்தில் தான், எனது முதலாவது சித்திரவதை முகாம் இருந்தது. இதன் மூலம் தங்கள் அநியாயங்களை, வெளி உலகின் கண்ணுக்கு இலகுவாக மறைக்க முடிந்தது. இரண்டாவது வதைமுகாமோ, வெட்ட வெளியை ஒட்டிய ஒரு பிரதேசத்தில் இருந்தது.

இந்த வதைமுகாம் யாழ் கோட்டைக்கு மிக அருகில் இருந்தது. முஸ்லிம் மக்கள் செறிந்து வாழ்ந்த பிரதேசத்துக்கும் அருகில் இருந்தது. 1990 இல் புலிகள் வெளியேற்றியது இந்த மக்களைத்தான். இது என் அனுமானம். கடந்த நான்கு நாட்களாக பிரித்தோதும் சத்தம் அடிக்கடி ஒலித்துக் கொண்டிருப்பதை கேட்க முடிந்தது. அத்துடன் இது கோட்டை முகாமுக்கு மிக நெருக்கமாக இருந்த, ஒரு மாடிக் கட்டிடமாகும். செல் வெளிக்கிடும் சத்தம் முதல் அது விழுந்து வெடிக்கும் சத்தமும், அருகில் துப்பாக்கி சன்னங்கள் வெடிப்பது போன்ற ஒலிகள் எனது வதைமுகாமை அடிக்கடி உலுப்பியது.

அறிவுசார் "மார்க்சிய" விமர்சனங்கள் சமூகத்தை மாற்றுவது கிடையாது. அது மாற்றத்தைக் தன்னளவில் கூட கோருவதில்லை. சமூகமாற்றத்தை முன்வைத்து முன்னெடுக்கும் மார்க்சிய விமர்சனங்கள்; தான், நடைமுறையில் வர்க்கப் போராட்டமாக மாறி கம்யூனிஸமாக மாறுகின்றது. இந்த இடைவெளியை புரிந்து கொள்ளாத நிலையில், புரிந்துகொள்ள முடியாத வண்ணம், அதை அறிவுசார் புலமை மூலம் இலங்கையிலும் புலத்திலும் புரட்டுகின்றனர். இந்த புரட்டுக்கு எதிராக நாங்கள் பாரிய தடையாக இருக்கின்றோம் என்பதை, அவர்களின் எதிர்வினை காட்டுகின்றது.

என்னைக் கடத்திய புலிக்கு, என்.எல்.எப்.ரி. பற்றிய தகவல்கள் எதுவும் தெரிந்திருக்கவில்;லை. அதேநேரம் என்.எல்.எப்.ரி. தலைமையே என்னை விசாரிக்கக் கோரியது என்ற தகவல், அவர்களின் முட்டாள்தனத்தையும் பலவீனத்தையும் நிர்வாணப்படுத்தியது.

என் மீதான சித்திரவதை தொடர்ச்சியாக புலிகளால் நிகழ்ந்தபோது, வெளியில் இரண்டு வெவ்வேறு சம்பவங்கள் நிகழ்ந்தன.

1.என்.எல்.எப்.ரி.யில் இருந்து பிரிந்து சென்ற பில்.எல்.எப்.ரி. அமைப்பில் இருந்த ஒருவர் புலிகளிடம் தானாகவே சென்று, அமைப்பினை முழுமையும் தெரியப்படுத்திய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.

2. இரண்டாவது சம்பவம் என்.எல்.எப்.ரியில் இருந்து பிரிந்த பில்.எல்.எப்.ரி.யின் வடமராச்சி பகுதியை புலிகள் கைது செய்து, வதைமுகாமில் வைத்து சித்திரவதை செய்துவந்தனர்.

என்னை தமது வதை முகாமுக்குள் இட்டுச் சென்றவர்கள், நிர்வாணமாக்கினர். எனது கண் கட்டப்பட்ட நிலை என்பது, தொடர்ந்து அடுத்து நான்கு நாட்களாக நீடித்தது. எந்த உடுப்புகளுமற்ற நிர்வாணமான நிலை என்பது பல நாட்களாக நீடித்த நிலையில், இறுதிக் காலத்தில் ஒரு கிழிந்து போன ரன்னிங் சோட்சைப் போராடிப் பெற்றேன். நான் அவர்களின் வதைமுகாமில் இருந்து தப்பிச் சென்றபோது, அரை நிர்வாணமாகவே பல மைல் தூரம் கடந்து சென்றேன்.   

நான் இனம்தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட நிலையில், என்னை ஏற்றிய வாகனமோ ஒரு மணி நேரமாக ஒடியது. இறுதியில் வாகனம் நிறுத்தப்பட்டதும், என்னை இறக்கியவர்கள் நாயைப் போல் இழுத்துச் சென்றனர். எனது கண் கட்டப்பட்ட நிலையில், கை இரண்டும் பின்புறமாக கட்டப்பட்ட நிலையில், எனது வாயில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட்டது. அதேநேரம் நான் கட்டியிருந்த சாறத்தைக் (லுங்கி) கழற்றி, என்னை முற்றாக நிர்வாணப்படுத்தினர்.

28.04.1987 என் சுதந்திரத்தை இழந்த, மறக்கமுடியாத ஒரு மாலைப் பொழுதாகிவிட்டது. அன்று கொலைகார புலிக் கும்பலின் கண்காணிப்பில் நான் இருந்ததை அறிந்திருக்கவில்லை. அன்று மாலை  எனது ஊரான வறுத்தலைவிளானில் இருந்து தெல்லிப்பழையை நோக்கி இராணுவம் முன்னேற முயன்றதால், புதிய மோதல் புலியுடன் தொடங்கியிருந்தது. துப்பாக்கி வேட்டுகளும், இடை இடையேயான செல்லுமாக சத்தம் இரைந்து கொண்டிருந்தது. நான் நிலைகொண்டிருந்த இடத்துக்கும் (மகாஜனாக் கல்லூரிக்கு அருகில்)  மோதல் நடைபெற்ற இடத்துக்கும் இடையில் ஒரு மைல் தூரமே இருந்தது.

என் மீது மிகத் தீவிரமான கண்காணிப்பு உடைய நாளாக 28.4.1987 அன்று இருந்தது. அன்று அமைப்பு சார்ந்த பல வேலைகளை செய்யவேண்டியிருந்தது. அமைப்பைச் சேர்ந்த பெண் தோழர் ஒருவரின் சில தன்னிச்சையான முடிவு ஒன்றைப் பற்றி அவருடன் கதைக்க வேண்டியிருந்தது. அதனால் காலை ஆறு மணிக்கே, நான் பாதுகாப்புக்காக இரவு தங்கியிருந்த ஒரு ஆதரவாளர் வீட்டில் இருந்து வெளியேறினேன். சைக்கிளில் ஏழு மைல்கள் கடந்து சென்று இருந்தேன். அதிஸ்டவசமாக அது கண்காணிக்கப்பட்டு இருக்கவில்லை. அதிகாலையாக இருந்தமையால், அவர்கள் கண்காணிப்பில் இருந்து தப்பி இருந்தேன். இதை நான் பின்பு அவர்களின் வதைமுகாமில் வைத்து உணரமுடிந்தது. ஏனெனில் என்னை பின் தொடர்ந்து இருந்தால், அந்த சம்பவம் பற்றி எனது விசாரணையில் வந்திருக்கும். அவரும் கைது செய்யப்பட்டு இருப்பார். இந்த தன்னிச்சையான அப் பெண்ணின் முடிவு பற்றியும் சற்று பார்ப்பது நல்லது.

புலி அல்லாத அனைவரும் துரோகிகள், சமூக விரோதிகள். இதைத் தான் மாத்தையா சொன்னான் என்றால், புலிகள் தங்கள் பாசிச வரலாற்றை இப்படித்தான் தேசியமாக்கினர். தாம் அல்லாத மற்றவர்கள் மாற்றுக் கருத்தை வைத்திருப்பது முதல் ஆயுதம் வைத்திருக்கும் உரிமை அனைத்தையும், சமூக விரோத செயலாகவும், சட்டவிரோத செயலாகவும் கூறிய புலிகள், சில ஆயிரம் பேரைக் கொன்று ஒழித்தனர். இப்படி மக்கள் விரோத அரசியலை பாதுகாக்கவும், இதற்கு தலைமை தாங்கிய "மேதகு"வின் சர்வாதிகாரத்தை பாதுகாக்கும் அடிப்படையில், ஆயிரம் ஆயிரம் படுகொலைகளை புலிகள் செய்தனர்.

கொலைகார புலிப் பாசிசம் நிலவிய அன்று, எனது உரையை பத்திரிகைகள் இருட்டடிப்பு செய்து இருந்தன. இந்திய ஆக்கிரமிப்பு நிலவிய அன்று, எந்த மாற்றமும் நிகழவில்லை. மற்றொரு பாசிசம் வந்து குடியேறிய ஆரம்ப காலம். மிக விரைவிலேயே இந்த பத்திரிகைகளை தனக்கு சார்பாக இயங்கக் கோரி,  அச்சிடும் இயந்திரங்களையே இந்திய ஆக்கிரமிப்பாளன் குண்டு வைத்து தகர்த்தான். இப்படி பத்திரிகைகள் உண்மைகளை வெளியிடும் "சுதந்திர" அமைப்பாக இருக்கவில்லை.

எனது மறுப்பு உரையை, புலிப் பாசிசம் விதைத்த அச்சத்தின் கெடுபிடியால் பத்திரிகைகள் வெளியிடவில்லை. ஆனால் அன்று மாத்தையா மற்றும் எனது உரை ஒலிநாடாவில் (கசெட்டில்) பதிவாகியது. அந்த ஒலிநாடா (கசெட்) தற்போது என்னிடம் உள்ளது. இந்த ஒலிநாடாவில் (கசெட்டில்) இருந்து....

பேராசிரியர் வாரார் புரட்சி செய்ய,
வரிசையில் நில்லுங்கள் புரட்சி செய்ய
மார்க்சிய பிரமுகர் வாரார் புரட்சி செய்ய
இனியொருவிலும் வாரார் புரட்சி செய்ய