Language Selection

புதிய ஜனநாயகம் 2009

கடந்த செப்டம்பர் 21ஆம் தேதியன்று கோவை பிரிக்கால் ஆலையின் மனிதவள மேம்பாட்டு அதிகாரியான ராய் @ஜ.ஜார்ஜ், தொழிலாளர்களால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் மாண்டு போயுள்ளான். இதைக் கண்டு முதலாளிகள் சங்கம் "வன்முறை' , "பேராபத்து' என்று அலறுகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒரு மாலைப் பொழுது அது. மே.வங்க சி.பி.எம். கட்சியிலிருந்து வெளியேறி, விவசாயிகளின் போராட்டத்தை வழிநடத்திய கமல் பத்ரா என்பவரின் பிணம் மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. இதற்கு முன்பு கொன்று தொங்கவிடப்பட்ட மற்ற பிணங்களைப் போலத்தான் அதுவும் தொங்கவிடப்பட்டிருந்தது.

இந்தியநேபாள மக்கள் ஒற்றுமை அரங்கம், கடந்த 19.09.2009 அன்று சென்னையில் நடத்திய ""நேபாளப் புதிய ஜனநாயகப் புரட்சி எதிர்கொள்ளும் சவால்கள்'' என்ற அரங்குக் கூட்டத்தில் உரையாற்ற வந்திருந்த ஐக்கிய நேபாளப் பொதுவுடமைக் கட்சி (மாவோயிஸ்ட்)யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரான தோழர் பசந்தா, ""புதிய ஜனநாயம்'' இதழுக்கு நேர்காணல் தரவும் இசைவு அளித்திருந்தார். பக்க வரம்பின் காரணமாக, நேர்காணலின் பொழுது கேட்கப்பட்ட கேள்விகளுள் முக்கியமானவை மட்டும் தொகுக்கப்பட்டு, அதற்கு அவர் அளித்திருந்த பதில்கள் சுருக்கப்பட்ட வடிவில், இங்கே வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை-கிண்டி அருகே செயல்பட்டு வருகிறது, செல்லம்மாள் மகளிர் கல்லூரி. பச்சையப்பன் அறக்கட்டளைக்குட்பட்ட இக்கல்லூரியில், சுமார் மூவாயிரம் மாணவிகள் பயின்று வருகின்றனர்.

தோழர் சிவசேகரம், இலங்கையைச் சேர்ந்த மார்க்சிய இலக்கிய விமர்சகர்களுள் குறிப்பிடத்தக்கவர். தற்கால இலக்கிய விமர்சனம் குறித்த அவரது கட்டுரைகள், ""விமர்சனங்கள்'' என்ற பெயரில் நூலாக வெளிவந்திருக்கிறது. தற்பொழுது இலங்கைத் தலைநகர் கொழும்புவில் வசித்து வரும் தோழர் சிவசேகரம், இலங்கையைச் சேர்ந்த மார்க்சியலெனினியக் கட்சியான புதிய ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளராகச் செயல்பட்டு வருகிறார்.

பாழடைந்து சிதலமடைந்த கட்டிடம், சுற்றிலும் முட்புதர்கள், ஆங்காங்கே துருத்திக் கொண்டு நிற்கும் கம்பிகள், உள்ளே நுழையும் முன்பே குடலைப் புரட்டியெடுக்கும் துர்நாற்றம் – இவை ஏதோ பராமரிப்பின்றிக் கிடக்கும் பேருந்து நிலைய இலவசக் கழிப்பிடங்களின் அவலநிலை அல்ல!

பிர்லா மாளிகையில் தங்கிக் கொண்டு காந்தி எளிமையாகக் காட்சியளித்ததும்; ‘மகாத்மா’வை எளிமையானவராகக் காட்டுவதற்கு காங்கிரசுக்கு ஏற்பட்ட செலவு குறித்து காங்கிரசு கட்சித் தலைவர்களுள் ஒருவரான சரோஜினி நாயுடு அங்கலாய்த்துக் கொண்டதும் நாம் மறந்து போன பழைய வரலாறு. 

ஐந்தாம் முறையாக ஆட்சிக் கட்டிலில் ஏறியுள்ள கருணாநிதியின் "பொற்கால' ஆட்சியின் சாதனையாக ""உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம்'' எனும் புதியதொரு திட்டத்தை தற்போது தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. ""நுரையீரல் புற்றுநோயாளிக்கு மதுரை தனியார் மருத்துவமனையில் இலவச சிகிச்சை'' என்றும் ""சென்னை தனியார் மருத்துவமனையில் 15 வயது சிறுமிக்கு மூளைக்கட்டி இலவசமாக அகற்றப்பட்டது'' என்றும் தினசரிகளில் செய்திகள் வந்து குவிகின்றன.

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுக்குத் தெற்கேயுள்ள புறநகரான லலித்பூரின் தேவாலயத்தில் அன்று அமைதியாக வழிபாடு நடந்து கொண்டிருந்தது.

ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனைத் தொடர்ந்து, அந்த அமைப்பின் புதிய தலைவராகவும், தேசங்கடந்த ஈழத்தை நிறுவியுள்ளதாகவும் அறிவித்துக்கொண்ட "கே.பி.'' என்று அறியப்படும் செல்வராசா குமரன் பத்மநாதன் இலங்கை சிங்கள பாசிச பயங்கரவாத அரசின் உளவுப் படையினரால் தென்கிழக்காசிய நாடொன்றிலிருந்து கைது செய்யப்பட்டு, இலங்கைக்குக் கடத்திச் செல்லப்பட்டு,கொழும்பு வதை முகாம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டு, மிகத் தேர்ச்சி பெற்ற இராணுவப் புலனாய்வுத் துறை உயர் அதிகாரிகளால் விசாரணை செய்யப்பட்டு வருகிறார் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அம்பானி சகோதரர்களிடையே மீண்டும் சொத்துத்தகராறு வெடித்து, உலகமே பார்க்க நடந்து வருகிறது. ஆனால்,அந்தச் சொத்தோ அவர்களுக்குச் சொந்தமானது கிடையாது என்பதுதான் இந்த இரண்டாம் கட்டத் தகராறில் சுவராசியமான விசயம். அந்தச் சொத்து — கிருஷ்ணா — கோதாவரி நதிப்படுகையில் கிடைக்கும் இயற்கை எரிவாயு — இந்தியமக்களுக்குச் சொந்தமானது.

அப்துல் கலாம் சென்னை வரும்போதெல்லாம் விரும்பிச்சென்று சாப்பிடும் உணவகம் அன்னலட்சுமி. அங்கு ஒரு சாப்பாட்டின் விலை 750 ருபாய். எளிமையின் சிகரமான கலாம், அன்னலட்சுமியில் உணவருந்திக் கொண்டிருக்க, 2020இல் இந்தியாவை வல்லரசாக்க கனவு காணுங்கள் என அவர் கோருகின்ற இந்தியக் குழந்தைகளோ 2 ருபாய் கொடுத்து ரேசன் அரிசி வாங்க இயலாத வறுமையால் பட்டினியில் செத்துக்கொண்டிருக்கிறார்கள்.

"மக்களைப் பிளக்கும் சாதியை, மாதரை வதைக்கும் தாலியை, சித்தத்தை அழிக்கும் சாத்திரத்தை, ரத்தத்தை உறிஞ்சும் சீதனத்தை மொத்தமாய் புதைப்போம்'' என்ற அறைகூவலோடு, ஓசூர் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பாக தோழர் நாராயணமூர்த்தி தீபா ஆகியோரின் புரட்சிகர திருமணம் மற்றும் தோழர் சரோஜா சின்னசாமி தம்பதியினரின் தாலியறுப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் 23.08.09 அன்று நடந்து கொண்டிருந்த நேரம்.

திருச்சி, புத்தூர் திரு.வி.க.நகர் வண்ணாரப்பேட்டையில் செயல்பட்டு வருகிறது சி.இ. மேல்நிலைப்பள்ளி. கிறிஸ்துவ சிறுபான்மையினருக்கான சலுகையோடு அரசின் நிதியுதவி பெறும் இப்பள்ளியில், தனியாருக்கு நிகராக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இங்கு பயிலும் மாணவர்கள் சாதிரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் வன்கொடுமைகளுக்குள்ளாகிறார்கள்.

விவசாயத்தை ஒழுங்குபடுத்துவது என்ற பெயரில், தமிழக அரசு கடந்த ஜூன் மாத இறுதியில் தமிழ்நாடு வேளாண்மை தொழில் ஆலோசகர் ஒழுங்காற்றுச் சட்டத்தைச் சட்டசபையில் எவ்வித எதிர்ப்புமின்றி ஒருமனதாக நிறைவேற்றியிருக்கிறது.

பஞ்சாப் மாநிலத்தின் மால்வா பகுதியில் அமைந்துள்ள மான்ஸா, சங்க்ருர், பதிந்தா ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 35 கிராமங்களில் "நிலம் கொடு! வேலை கொடு!''என்ற கோரிக்கையை முன்வைத்து, போராட்டங்கள் அடுத்தடுத்து அலைஅலையாக எழுந்து வருகின்றன.

ஆகஸ்ட் மாதம் தனித்தன்மை வாய்ந்தது என்பது உண்மைதான். கடந்த ஜூலை மட்டும் என்னவாம்? உலகிலேயே மிகமலிவான கார் நமக்கு கிடைத்தது, ஜூலை மாதத்தில்தான்.வரலாற்றிலே முன்னெப்போதும் இல்லாத விலைக்கு துவரம்பருப்பு உயர்ந்ததும் அதே ஜூலையில்தான்.

ஆந்திர மாநிலம், நிஜாமாபாத் மாவட்டத்தின் கந்தாரிமண்டல் கிராமத்தின் ஒதுக்குப்புறமாக ஓங்கி நிற்கிறது, அந்தப்புளியமரம். அக்கிராம மக்கள் அந்த மரத்தை வெறுக்கிறார்கள். பலர் அந்த மரத்தின் அருகில் செல்லவே அஞ்சுகிறார்கள்.

ஒழுங்கும் கட்டுப்பாடும் கொள்கைபிடிப்பும் அர்ப்பணிப்பும் நிறைந்த கட்சி என்றெல்லாம் சித்தரிக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சியில், இன்று கோஷ்டிச் சண்டைகள் புழுத்து நாறுகின்றன. நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியைப் பரிசீலிக்கத் தொடங்கியதிலிருந்தே அக்கட்சிக்குள் கோஷ்டிச் சண்டைகளால் அடுத்தடுத்து பூகம்பம் வெடித்துக் கொண்டிருக்கிறது.

மறைந்த தி.மு.க. தலைவர் அண்ணாதுரையின் நூற்றாண்டு தொடக்கவிழாவை தமிழக அரசுகொண்டாடி வருகிறது. தமிழினவாதிகள் முதல் பார்ப்பன பத்திரிகைகள் வரை அனைத்து தரப்பினரும் அண்ணாதுரையை வானளாவப் புகழ்ந்து தள்ளுகின்றனர். 1960களில் தமிழக மக்களின் பேராதரவைப் பெற்ற தலைவராக விளங்கிய அண்ணா, தமிழ் சமூகத்துக்குச் செய்த பங்களிப்பு என்ன?