Language Selection

புதிய ஜனநாயகம் 2009

தீபாவளிக்கு முதல் நாள் அக்டோபர் 16 அன்று கோவா மாநிலத்திலுள்ள முக்கியமான வர்த்தக நகரான மார்காவோவின் மையப் பகுதியில் இரு சக்கர வாகனமொன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இக்குண்டு வெடிப்புக்குக் காரணமான சதிகாரர்கள் யார் என்பது இந்நேரம் தெரியாமல் போயிருந்தால், முசுலீம் தீவிரவாதிகளைக் குற்றஞ்சுமத்தி போலீசும்,தேசியப் பத்திரிகைகளும் "புலனாய்வு' நடத்தியிருப்பார்கள். கோவா சுற்றுலா மையம் என்பதால், இந்தியாவின் வளர்ச்சியை விரும்பாத பாகிஸ்தானின் சதி இது என மைய அரசும் சாமியாடியிருக்கும்.

மே.வங்கத்தில் லால்கார் மக்களின் போராட்டத்தை போலீசு அடக்குமுறைக்கு எதிரான மக்கள் கமிட்டி (கஇஅகஅ) தலைமைதாங்கி வழிநடத்தி வருகிறது. இப்போராட்டக் கமிட்டியின் தலைவரான சத்ரதார் மஹடோ, லால்கார் பகுதியில் மக்கள் மத்தியில் வெளிப்படையாகவும் அரசுக்குத் தலைமறைவாகவும் இருந்துகொண்டு போராட்டத்தை வழிநடத்தி வந்தார்.

மே.வங்கத்தின் லால்கார் வட்டாரத்தின் ஜங்கல் மகால் பகுதியிலிருந்து கைது செய்யப்பட்ட அப்பாவி பழங்குடியினப் பெண்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், மேதினிப்பூர் பகுதியிலுள்ள சங்கராயில் போலீசு நிலையத்தைத் தாக்கி, அதிந்திர நாத் தத்தா என்ற போலீசு அதிகாரியைக் கடந்த அக். 20 அன்று மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றனர். பி.பி.சி. செய்தியாளர்களின் முயற்சியால் அரசுக்கும் மாவோயிஸ்டுகளுக்குமிடையே பேரம் பேச்சு வார்த்தை நடந்து அக்.22ஆம் தேதியன்று போலீசு அதிகாரியான அதிந்திரநாத் தத்தா விடுவிக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாக 14 பழங்குடியினப் பெண்கள் உள்ளிட்ட 23 பேர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சி.பி.எம். கட்சியின் அரசியல் தலைமைக் குழு கூட்டம் கடந்த அக்டோபர் 11ஆம் தேதியன்று நடைபெற்றபோது, மே.வங்கத்தில் பயங்கரவாத ""ஊபா'' () சட்டம் செயல்படுத்தப்படுவதைப் பற்றிய விவாதம் நடக்கும்; மே.வங்க அரசு மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்படும் என்று "இடதுசாரி' கூட்டணிக் கட்சிகள் பெரிதும் எதிர்பார்த்தன. ஆனால், அக்கூட்டத்தில் இது பற்றி எந்த விவாதமும் நடக்கவில்லை

.

நாட்டு மக்கள் மீது ஒரு கொடிய உள்நாட்டுப் போர் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. மாவோயிஸ்டு பயங்கரவாதத்தை ஒழிப்பது என்ற பெயரால் கோடானுகோடி உழைக்கும் மக்கள் மீது அரசு பயங்கரவாதப் போர் ஏவிவிடப்பட்டுள்ளது. மறுகாலனியச் சூறையாடலைத் தீவிரப்படுத்தவும், சொந்த மண்ணிலிருந்து உழைக்கும் மக்களைப் பிய்த்தெறிந்து விரட்டியடிக்கவும், பாசிச அடக்குமுறையைக் கேள்விமுறையின்றி நாட்டின் மீது திணிக்கவும், மாவோயிஸ்டு பூச்சாண்டி காட்டி ஒரு கொடிய போர் காங்கிரசு கூட்டணி ஆட்சியாளர்களால் தொடுக்கப்பட்டுள்ளது.

கிணற்றில் போடப்பட்டக் கல்லைப் போல் கிடந்த அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஊழல் விவகாரம் மீண்டும் சூடுபிடித்திருக்கிறது. இந்தியாவெங்கிலுமான தொலைபேசி சேவை 122 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, 2001ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட உரிமக் கட்டணத்தின்படி, 2008 இல் இந்த 122 மண்டலங்களும் முதலில் வருபவருக்கு முதலில் உரிமம் என்ற அடிப்படையில் 9 தனியார் நிறுவனங்களுக்கு (அந்நிய முதலீடும் இதில் உண்டு) விற்கப்பட்டுள்ளன.

ஈழப் போருக்குப் பின், முகாம்களில் வதைபடும் ஈழத்தமிழ் மக்களின் நிலைமையை அறியும்முகமாக ஐந்து நாட்கள் பயணமாக தமிழக எம்.பி.க்கள் கடந்த மாதத்தில் இலங்கைக்குச் சென்று வந்துள்ளனர். மேளதாள வரவேற்பு, மாலை மரியாதைகள், ஆடல்பாடல்கள் எனத் திருமண விழாவுக்கு வருபவர்களைப் போல, தமிழக தூதுக் குழுவினருக்கு ராஜமரியாதை கொடுத்து அழைத்தது, சிங்கள அரசு. அவலத்தின் நடுவே இத்தகைய ஆடம்பர வரவேற்பு எதற்காக என்று கேட்டு, தமிழக எம்.பி.க்கள் அதனைத் தவிர்க்கவில்லை. மாறாக, புன்முறுவல் பூத்தபடியே சிங்கள அதிகாரிகளின் விரல் பிடித்து நடந்தார்கள்.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ளது சுந்தரவாண்டி கிராமம். இக்கிராமத்தை சேர்ந்த 59 பேருக்கு 2000ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாவிற்கு கடந்த ஒன்பது ஆண்டுகளாக நிலத்தைப் பிரித்துக் கொடுக்காமல், இம்மக்களை அலைக்கழித்து வந்தது, அதிகார வர்க்கக் கும்பல்!

 

அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம்þ அணு ஆயுதச் சோதனை தடை ஒப்பந்தம் ஆகிய இரண்டு சர்வதேச ஒப்பந்தங்களிலும் இந்தியா கையெழுத்திட வேண்டும் என அமெரிக்கா நெருக்குதல் கொடுத்துவரும் இந்த நேரத்தில், 1998 ஆம் ஆண்டு மே மாதம் இந்தியா நடத்திய ஐந்து விதமான அணுகுண்டு சோதனைகளுள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும் ஹைட்ரஜன் குண்டு சோதனை முழுத்தோல்வியடைந்துவிட்ட ஒன்று என சங்கு ஊதியிருக்கிறார், அணுசக்தி அறிவியலாளார் கே.சந்தானம்.

கள்ளச் சாராயத்துக்கு எதிராகப் போராடிய மனித உரிமைப் பாதுகாப்பு மைய (HRPC)த்தின்,  சேலம் மாவட்டப் பொருளாளர் அய்யனார் மீதுþ பொய் வழக்குப் பதிந்து கொலைவெறித் தாக்குதலை தொடுத்திருக்கிறதுþ வீராணம்போலீசு!

வயிற்று பிழைப்புக்காக சவூதி சென்றிருந்த சலீம், தன் குடும்பத்தினருடன் விடுமுறையைக் கழிக்க கடந்த ஆகஸ்ட் மாதம் பெங்களூர் திரும்பினார். வந்திறங்கிய மூன்று நாட்களில் அவர் காய்ச்சல் மற்றும் தலைவலிக்கு ஆளானார். இதேநேரத்தில் பெங்களூரில் பன்றிக் காய்ச்சல் பற்றிய செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டுக் கொண்டிருந்தன. இந்தப் பின்னணியில், சலீம் குடும்பத்தினரும் உறவினர்களும் தொலைக்காட்சியில் சொல்லப்படும் பன்றிக் காய்ச்சலாக இருக்குமா என்று சந்தேகிக்க ஆரம்பித்தனர். இதை கேட்ட சலீமும் சற்றே நிலை குலைந்தார்.

"மாடு வளர்த்தவனுக்கு வயித்துல அடுப்பு! பாலு வாங்குறவனுக்கு வயித்திலே நெருப்பு! சந்தையிலே தனியார் பால் ஏகபோகம் இருக்கு! "ஆவின்' பாலை மலிவா மக்களுக்கு வழங்காம எதுக்குடா அரசாங்கம் கோட்டையிலேகெடக்கு?''

கடந்த ஜூலை மாதத்தில்,  தில்லிமாநகரின் கட்டிடம் ஒன்றில், சரியாகக் கட்டி முடிக்கப்படாத எட்டாம் தளத்தில் வைக்கப்பட்டிருந்த கலவை இயந்திரம் ஒன்று கீழே விழுந்ததில்þ அதே கட்டிடத்தின் அடித்தளத்தில் வேலை செய்துகொண்டிருந்த சுனில் என்ற தொழிலாளி, இயந்திரத்தின் அடியில் சிக்கிப் பரிதாபமாக உயிரிழந்தார்.

புதிய ஜனநாயகம் செப்டம்பர் இதழில் விடுதலைச் சிறுத்தைகளின் பிழைப்புவாத  பொறுக்கி அரசியலை விமர்சித்து ஒரு கட்டுரை வெளியானதையொட்டிþ ஆத்திரமடைந்த சென்னை  குரோம்பேட்டையை அடுத்துள்ள நாகல்கேணி பகுதியைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தலைவர் தோழர் முகுந்தன் மற்றும் பிற தோழர்கள் மீது கடந்த 7.9.09 அன்று நள்ளிரவில் கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

 

மூடநம்பிக்கைக்கு எதிராகவும்þ சுயமரியாதைக்காகவும், மனிதகுல மேன்மைக்காகவும் தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட நாத்திகம் இராமசாமிþ தனது 77வது வயதில் 24.09.2009 அன்று சென்னையில் காலமாகிவிட்டார்.

கடந்த பிப்ரவரி 2þ 2009 அன்று தில்லை நடராசர் கோயில் நிர்வாகத்தைத் தமிழக அரசின் இந்து அறநிலையத்து றையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் உயர்நீதி மன்றத் தீர்ப்பு வெளியானது. இதை எதிர்த்துப் பார்ப்பனத் தீட்சிதர் கும்பல் மேல்முறையீடு செய்ததன் அடிப்படையில் இவ்வழக்கு விசாரணை செய்யப்பட்டு, கடந்த 16.9.09 அன்று "தில்லைக் கோயில் தீட்சிதர் சொத்தல்ல; மக்கள் சொத்து'' என்று சென்னை உயர்நீதி மன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியுள்ளது.

 

இலங்கையைச் சேர்ந்த மார்க்சிய இலக்கிய விமர்சகர் தோழர் சிவசேகரம் பு.ஜ.விற்கு அளித்த நேர்காணலின் இரண்டாம் மற்றும் இறுதிப் பாகம் இங்கு வெளியிடப்பட்டுள்ளது. தமிழீழக் குழுக்களின் சர்வாதிகாரப் போக்கு, அவற்றின் துரோகம் மற்றும் ஈழ சுயநிர்ணயப் போராட்டத்தில் இலங்கையைச் சேர்ந்த மாலெ புரட்சியாளர்கள் செல்வாக்கு செலுத்த முடியாமல் போனதற்கான காரணம் உள்ளிட்ட பல முக்கிய கேள்விகளுக்கு, அவர் அளித்த பதில்கள் சுருக்கித் தரப்பட்டுள்ளன. அவரது நேர்காணல் குறித்து வாகர்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. சீனாவிலும், ஆப்கானிலும் இருந்த யுத்தப் பிரபுக்களைப் போலவே தமிழீழ இயக்கங்களும் செயல்பட்டன.

-ஆசிரியர் குழு

 

இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மாவோயிஸ்ட்)யின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரான தோழர் கோபாட் காந்தி, அண்மையில் தலைநகர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாகப் பதுங்கியிருந்த அவரை உளவுத்துறை போலீசார் 21.9.09 அன்று கைது செய்ததாகவும், மிகக்கொடிய பயங்கரவாத இயக்கத்தின் மூளையாகச் செயல்பட்ட அவரைக் கைது செய்துள்ளதன் மூலம், இவ்வியக்கத்தின் முதுகெலும்பு முறிக்கப்பட்டு விட்டதாகவும் பத்திரிகைகள் பரபரப்பாகச் செய்திகளை வெளியிட்டன.

 

ஐந்து ஆண்டுகளுக்கு முன், ஜூன் 15, 2004 அன்று அதிகாலையில், குஜராத் தலைநகர் அகமதாபாத்திற்கு அருகேமகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹன், ஜாவேத் ஷேக் உள்ளிட்ட நான்கு முசுலீம்கள் போலீசாருடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாக குஜராத் அரசு அறிவித்தது.

பாழடைந்து சிதலமடைந்த கட்டிடம், சுற்றிலும் முட்புதர் கள், ஆங்காங்கே துருத்திக் கொண்டு நிற்கும் கம்பிகள், உள்ளே நுழையும் முன்பே குடலைப் புரட்டியெடுக்கும் துர்நாற்றம்  இவை ஏதோ பராமரிப்பின்றிக் கிடக்கும் பேருந்து
நிலைய இலவசக் கழிப்பிடங்களின் அவலநிலை அல்ல!