முறிந்த பனை நூலின் சட்ட ரீதியான உரிமை, எனது தகவல் (எனக்கு ஆங்கில மொழி பேசவோ - எழுதோவோ தெரியாத குறைபாட்டால் இது ஏற்பட்டது. இந்தத் தவறு தெரிந்து கொள்ளாது மூலப்பிரதியை பிரசுரித்ததும் நானே) தவறானது. இந்த நூல் அமெரிக்க காங்கிரஸ் நூலகத்தில் பதிவு செய்யப்பட்டது என்பதே சரியானது.
எனது இந்தத் தவறு எந்த விதத்திலும், அமெரிக்க அதிகார வர்க்க நலனுக்காகவே, நூல் வெளிவந்தது என்ற உண்மையை மறுதளித்துவிடவில்லை. வர்க்க அடிப்படையில், மத அடிப்படையில், ஏகாதிபத்திய நலன்கள் அடிப்படையில், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியல் அடிப்படையில் ரஜனியை முன்னிறுத்திக் கொண்டாடும் விசுவாசிகளின் புலம்பலுக்கு எதிரானதே, கட்டுரையின் சாரம். சட்டரீதியான தவறுக்கு இலங்கை அமெரிக்கன் மிசனரியின் வழிபாட்டின் அங்கமான பாவமன்னிப்புககுரியதாக இருந்தாலும், இதன்பின் இருக்கின்ற ஏகாதிபத்திய கடவுள் பொய்யாகிவிடுவதில்லை.
முதல் பிரதி 1988 யூலை அமெரிக்காவில் வெளியானது. திருத்தப்பட்ட இரண்டாவது பதிப்பு மார்ச் 1990 இல் அமெரிக்காவில் வெளியானது. முதல் பதிப்பு வெளியானது யாருக்கும் தெரியாது என்பதுடன், யாருக்கு அவை விநியோகிப்பட்டது? இந்த நூலை தயாரிப்பதற்கு நிதி வழங்கியவர்கள் நோக்கம் மூலம் இதன் அரசியல் பின்புலத்தை தெரிந்து கொள்ள முடியும். இதற்கு நிதி வழங்கிய ஆசிய மனித உரிமைகள் ஆணையம், கவுலூன், ஹாங்காங் மற்றும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒன்றுபட்ட நீதிக்கான சேச் (Acknowledgements : Funding for this book was provided in part by The Asian Human Rights commisssion, Kowloon, Hong Kong and the Uniting Church Justice Fund Australia) அமெரிக்க - மேற்கத்தைய ஏகாதிபத்திய நலன்களை முன்னிறுத்தி, ஜனநாயகம் - மனிதவுரிமை பேசுகிறவர்கள் இவர்கள். இதன் மூலம் அமெரிக்காவின் மேலாதிக்க உலக கொள்கை முடிவுகளுக்கு உதவுவதே இவர்களின் பணி.
இன்று ஈழத்து தமிழர்களின் ஜனநாயகம் - மனிதவுரிமை இதைத் தாண்டியதல்ல. ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்தி அரசியல், இலக்கியம் முதல் ஜனநாயகம் - மனிதவுரிமை எதுவும் இவர்கள் பேசுவது கிடையாது. நூலின் சட்டரீதியான எனது தவறை மேய்ந்தவர்களின் நோக்கம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவான குரலை இல்லாதாக்குவதே.தவறைச் சுட்டிகாட்டி ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலை உயர்த்தியவர்களல்ல. இவர்களின் வரலாறு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எப்போதும் எதிரானதே.
1980 - 1990களின் மத்தியில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்களை புலிகள் முதல் பிற இயக்கங்கள் வேட்டையாடிக் கொண்டிருந்த காலத்தில், அதை மக்களுக்கு தெரியாத வண்ணம் அமெரிக்க நலனுக்கு விற்று இருக்கின்றார்கள். இவர்களா தமிழ் மக்களின் மனிதவுரிமைவாதிகள்!?
இவர்களின் இந்த அரசியல் பின்னணியிலிருந்து தான் 11 சர்வதேச அமைப்புகள் இணைந்து கொடுக்கும் மாட்டின் விருதையும், பெருந்தொகை பணத்தையும் (ஒரு இலட்சம் டொலர் - இந்த தொகை நினைவின் அடிப்படையில்), 2007 இல் மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் பெற்றது. இவை அனைத்தும் அமெரிக்கா முன்வைக்கும் ஜனநாயகம் - மனிதவுரிமை அடிப்படையிலேயே இயங்கும் ஏகாதிபத்திய அமைப்புகளே.
இதையெல்லாம் ஈழத்து தமிழ் ஜனநாயகவாதிகள் - மனிதவுரிமைவாதிகள் கண்டு கொள்வதில்லை. மாறாக தூக்கி தலைமேல் வைத்து கொண்டாடுகின்றனர். ஐயோ அவர்களுக்கு களங்கமா என்று கோவணத்தை இழுத்துக் கட்டிக்கொண்டு களமிறங்குவதில் இருந்து, இவர்களின் ஜனநாயகம் - மனிதவுரிமை எப்படிப்பட்டது என்பதை தெரிந்து கொள்ளமுடியும்.
முறிந்த பனை நூல் யாருக்காக எழுதப்பட்டது என்பது குறித்த, எனது அரசியல் மிகச்சரியானதே. அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்ட இலங்கை கற்கை நிலையம், அமெரிக்காவை தலைமையகமாக கொண்டது. அமெரிக்காவில் வெளியிட்டதன் நோக்கமும், அது யாருக்கானது என்பதும் முன்பு கூறியது போல் அமெரிக்காவின் அதிகார வர்க்கத்துக்கே ஒழிய. இலங்கையின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கானதல்ல. இதை களங்கமின்றி பாதுகாக்கவே ஈழத்து தமிழ் ஜனநாயகவாதிகளும் - மனிதவுரிமைவாதிகளும் குத்தி முறிகின்றனர்.
20.10.2023
விசுவாசிகளின் புலம்பல்கள் : முறிந்தபனை நூல் யாருக்காக எழுதப்பட்டது?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode