Language Selection

சம உரிமை இயக்கம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கடந்த சில நாட்களாக காலி மாவட்டத்தில் கிங்தொட்டயை அண்டிய பகுதிகளில் நடந்திருக்கும் அமைதியின்மை மற்றும் இனவாத- மதவாத மோதல்கள் அதிகரித்துள்ளமை சம்பந்தமாக சம உரிமை இயக்கம் என்ற வகையில் நாம் சமூகம் விழிப்புடன் இருக்க வேண்டுமென எதிர்ப்பார்க்கின்றோம். கிடைக்கும் தகவல்களுக்கமைய சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் வீடுகளும் ஏனைய சொத்துக்களும் சேதமாக்கப்பட்டுள்தோடு, உயிரழப்பொன்றும் நடந்திருக்கின்றது.

நவம்பர் 13ம்திகதி காலி மஹஹபுகல பகுதியில் நடந்த வாகன விபத்துதான்  இந்த பரிதாப நிலைக்கு முழுமுதற் காரணமாக இருந்தது. அந்த விபத்தில் சம்பந்தப்பட்ட ஒரு சாரார் சிங்களவர்களாக இருந்ததோடு மற்றவர்கள் முஸ்லிம்களாக இருந்தனனர். வாகன விபத்தினால் ஏற்பட்ட கருத்துவேறுபாடால் இரு சாராருக்கும் மத்தியல் மோதல் உருவாகியிருந்த நிலையில்தான் அது இனவாத மோதலாகப் பரவியது. தனிப்பட்ட பிரச்சினை காரணமாக ஏற்பட்ட மோதலை இனவாத மோதலாக பரவச் செய்வதற்கு பிரதேச அரசியல்வாதிகள் பாரதூரமான முறையில் தலையிட்டிருக்கின்றனர். அது எதிர்வரும் பிரதேச சபை தேர்தலில் அதிகாரப் போட்டி சம்பந்தப்பட்டதாகும்.

மோதலின்போது நேரடியாக தலையிட்டவர்களில் 1997ல் பொதுஜன ஐக்கிய முன்னணியின் சார்ப்பில் பிரதேச சபைக்கு போட்டியிட்ட மற்றும் எதிர்வரும் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையேற்கும் இலங்கை பொதுஜன முன்னணியின் சார்ப்பில் போட்டியிட எதிர்ப்பார்த்திருக்கும் ஒரு பௌத்த பிக்குவும், பிரதேச சபையில் தலைவராகும் கனவுடன் போராடிக் கொண்டிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிங்கள மற்றும் இரண்டு முஸ்லிம் அரசியல்வாதிகளும் இருப்பது இதற்கு சாட்சியாகும்.  கடந்த 16ம் திகதி இரவு நடந்த தீ வைப்பு சம்பவத்துடன் இந்த ஐதேக அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டிருப்பதோடு, 17ம் திகதி நடந்த வன்முறைகளோடு சம்பந்தப்பட்டவர்களை கோபமூட்டியிருப்பது இலங்கை பொதுஜன முன்னணியில் தேர்தல் வேட்பாளராக எதிர்ப்பார்த்திருக்கும் இருவராகும். எவ்வாறாயினும், இந்த வன்முறையை தூண்டியிருப்பது ஒரே ஊரில் வசிக்கும் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களல்ல, வெளியிடங்களிலிருந்து வந்த அரசியல் ஆதரவாளர்கள்தான் என்பதை பொலிஸாரும் ஏற்றுக் கொள்கின்றனர். இச்சம்பவத்தில் அரசாங்கம் மோதலை தவிர்க்கும் திசையில் அல்லாது அதனை தூண்டிவிடும் திசைக்கு திருப்பிவிடுவதற்காக குழப்பநிலை அதிகரித்திருந்த சந்தர்ப்பத்தில் பிரதேச பொலிஸை அகற்றிக் கொண்டது. நல்லிணக்கம் குறித்து அரசாங்கம் வாய்ச்சவாடல் விட்டாலும் பிணைமுறி மோசடி உட்பட தனது நெருக்கடியை மறைத்து சமூக கவனத்தை வேறு பக்கம் திருப்புவதற்காக எந்தவொரு நாசகார நடவடிக்கையையும் எடுக்க பின்வாங்காது என்பதை இச்சம்பவம் நிரூபித்துள்ளது. பிரச்சினை, வாகன விபத்தல்ல. பொதுவாக உலகம் முழுவதும் வாகன விபத்துகளால் 1.24மில்லியன் பேர் மரணிப்பதோடு, அது நாளொன்றிற்கு 3400 என்ற வகையில் கூடிய மதிப்பீடாகும். இலங்கையில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு வாகன விபத்து நடப்பதுடன், நாளொன்றிற்கு 6-7 பேர் மரணிக்கிறார்கள். அதாவது ஒவ்வொரு 4 மணித்தியாலயங்களுக்கும் ஒருவர் வாகன விபத்தினால் மரணிக்கிறார். சர்வசாதாரணமாக நடக்கும் வாகன விபத்து கூட இனவாதத் தீயை மூட்டக் கூடிய நிலைமை நாட்டில் இருப்பதுதான் பிரச்சினை. பிரச்சினை, தமது அதிகார வேட்கைக்காக ஒட்டுமொத்த சமூகத்தையே ஆபத்தில் தள்ளுவதற்கு பின்வாங்காத வலதுசாரிய அரசியல்வாதிகளின் அடாவடித்தனங்களல்ல. அது அவர்களது அரசியல். அவர்களது பாரம்பரியம். அவர்களது பண்பாடும் தொழிலும் அதுதான். நவ தாரளமயமானது இந்த 21ம் நூற்றாண்டில் நிலைக்கக் கூடிய ஒரே வழியும் அதுதான். பிரச்சினை, இந்த அரசியல் குண்டர்கள் தமக்குத்; தேவையாவாறு எந்தவொரு விளையாட்டையும் விளையாடக் கூடிய விதத்தில் சமூகம் கட்டியெழுப்பப்பட்டிருப்பதுதான். எந்தவொரு சிறு சம்பவத்தினாலும் தீப்பற்றி பரவக் கூடியளவிற்கு குழப்ப நிலையொன்று சமூகத்தில் நிலவுகின்றது. சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற பேதமின்றி சகல மக்களும் இந்த நவ தாராளமய முதலாளித்துவ சமூகத்தில் தீர்வு காண முடியாத பிரச்சினைகளில் சிக்கி, வாழ்க்கை நெருக்கடிக்குள் பலியாகி, தமது இன கலாச்சாரங்களின் எதிர்கால நிலைத்தல் சம்பந்தமாக அச்சத்தில் உள்ளனர். வலதுசாரிய அரசியலானது தனது நிலைத்தலை நியாயப்படுத்திக் கொள்வதற்கு இந்த குழப்ப நிலையைத்தான் பயன்படுத்துகின்றது.

 

 

எவ்வாறாயினும், முப்பது வருட யுத்தத்தில் பலிக்கடாக்களாகி துன்பப்படும் இலங்கை சமூகம் அவ்வாறானதொரு தீ பரவுவதை தடுப்பதற்கு முன்வர வேண்டும். அதேபோன்று இந்த சம்பவத்தால் ஏற்பட்ட காயங்களை ஆறவைத்து பிரதேசத்தில் மீண்டும் சகஜ நிலையை கொண்டுவருவதற்கு சகலரும் தியாகம் செய்ய வேண்டும். அது மாத்திரமல்ல, இவ்வாறான தீ பற்றுவதற்கு ஏதுவான காரணங்களுக்கு சிகிச்சையளிக்க வேண்டும். இங்கே முக்கியமான காரியம்  என்னவென்றால் இனவாதிகளினதும், வலதுசாரிய அரசியல்வாதிகளினதும் கோபமூட்டல்களுக்கு எதிராக மக்கள் பங்கேற்பு அமைப்பொன்றை உருவாக்குவதுதான். ஆகவே சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைவரினதும்  பங்கேற்புடன் பிரதேசத்தில் சமாதானக் குழுக்களை உருவாக்குமாறும், சமூகம் என்ற வகையில் இந்த தீயை அணைப்பதற்கு முன்வருமாரும் சகல முற்போக்கான மக்களிடமும் வேண்டிக் கொள்கின்றோம். இப்படியான அறுவறுக்கத்தக்க சம்பவங்கள் மீண்டும் ஏற்படுவதை தடுப்பதற்கு முன்வருமாறும் சம உரிமை இயக்கம் சமூகத்தில் பொறுப்பு வாய்ந்த சகல மக்களிடமும் வேண்டிக் கொள்கின்றது.

 

ரவீந்திர முதலிகே

அழைப்பாளர்

சம உரிமை இயக்கம்

2017. 11. 19

 

 

රවීන්ද්‍ර මුදලිගේ

කැඳවුම්කරු

සම අයිතිය ව්‍යාපාරය

2017.11.19

(සම්බන්ධීකරණ දුරකථන අංකය - 0717414408)