யூலைப் படுகொலைகள் முடிந்து 30 வருடங்கள் கடந்துவிட்டது. முள்ளிவாய்க்கால் படுகொலை நடத்து 4 வருடங்கள் கடந்துவிட்டது. இதற்குள் இனம் மதம் கடந்த எத்தனையோ படுகொலைகளும், மனித அவலங்களும். நீதி மறுக்கப்பட்ட இனவாத சமூக அமைப்பில், உளவியல் அவலங்களுடன் மனிதன் நடைப்பிணமாகவே வாழ நிர்ப்பந்திக்கப்படுகின்றான். இன்னமும் இன மத மோதல்கள் அரசால் திட்டமிட்டு திணிக்கப்படுகின்றது. இதனால் பேரினவாதத்தால் ஒடுக்கப்படும் இனங்கள் இன ரீதியாக சிந்திப்பதும், செயற்படுவதும் தொடருகின்றது. சிந்தனை செயல் தொடங்கி, வாக்குப் போடுவது வரை, அரசின் இன மத வாதத்திற்கு எதிரான அரசியலாகவே இருக்கின்றது. இதுதான் இன்றைய இலங்கையின் அரசியல் எதார்த்தம்;. புலம்பெயர் சமூகமே, புலிகளின் கனவுலகில் வாழ்ந்தபடி முடிவுகளை இலங்கையில் வாழும் மக்கள் மேல் திணிக்க முனைகின்றது.
இலங்கையில் சிறுபான்மையினர் இன மத ரீதியாக அரசினால் ஒடுக்கப்படுவதாக உணருகின்றனர். இதுதான் இலங்கையின் நிலைமை. அரசு சிங்கள பௌத்த மக்களை சார்ந்து இயங்குவதாக காட்ட முற்படுகின்றது. இதைச் சுற்றி இராணுவமயமாக்கல், பௌத்த மயமாக்கல், சிங்கள மயமாக்கல் என அனைத்தும் இன்று முன்னெடுக்கப்படுகின்றது. சிங்கள பௌத்தம் அல்லாத மக்களின் வாழ்விடங்கள் சூறையாடப்படுகின்றது, மத நிறுவனங்கள் தாக்கப்படுகின்றது. சிங்கள பௌத்தம் அல்லாத பண்பாட்டுக் கூறுகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றது. சிங்கள பௌத்த அல்லாத மக்களை அச்சத்துக்குள்ளும், பீதிக்குள்ளுள், அடங்கியொடுங்கி வாழுமாறு இலங்கை அரசு கோருகின்றது.
இலங்கையில் சிங்கள பௌத்தம் அல்லாத மக்கள் அன்னியராக்கப்படுகின்றனர். சிவில் உரிமைச் சட்டங்கள் மறுக்கப்படுகின்றது. சிறுபான்மை மீதான இன மத வன்முறைகளுக்கு எதிராக, சட்டம் தொடங்கி நீதி விசாரணைகள் கூட நடக்க அனுமதிப்பதில்லை. இதுதான் இலங்கையின் ஆட்சி அமைப்பு முறை.
இலங்கை மக்களை இன மத முரண்பாட்டுக்குள் வாழுமாறும், சிந்திக்குமாறும் இலங்கை அரசு கோருகின்றது. 13வது திருத்தச்சட்டம் முதல் முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா வரை, நாட்டின் முதன்மைப் பிரச்சனையாக காட்டப்படுகின்றது. ஆள்வோர் சிங்கள பௌத்தம் அல்லாத மக்களை குறிவைத்து, தங்கள் அரசியலை முன் நகர்த்துகின்றனர். இதற்காக பினாமி அமைப்புகளை உருவாக்கி இயங்க வைக்கின்றனர். இராணுவத்தின் துணையுடன் இயங்கிய கிறிஸ் மனிதன் தொடங்கி இனவாதம் கக்கும் வீரவன்ச வரை, அரசின் பினாமிகள் தான். இவை அனைத்தும் இனவாதத்தையும், மதவாதத்தையும் முன்தள்ளியே அரங்கில் செயற்படுகின்றது.
இந்தப் பின்புலத்தில் தான் வடகிழக்கில் திடீர் திடீர் என்று முளைக்கும் புத்தர் சிலைகள், பௌத்த ஆலையங்கள், ஆக்கிரமிப்பாளின் அடையாளங்களாகவே பறை சாற்றி நிற்கின்றது. இராணுவ ஆக்கிரமிப்பின் வெற்றிச் சின்னங்கள் நிறுவப்படுவதற்கு நிகராகவே, புத்த சிலைகளும் நிறுவப்படுகின்றது. இராணுவத்துக்கு நில அபகரிப்பு, பௌத்த கோயிலுக்கு நில அபகரிப்பு என்று "புனித" ஆக்கிரமிப்புகள். திட்டமிட்ட இனக் குடியேற்றங்கள் முதல் இன ரீதியான செயற்பாடுகள் அனைத்தும், ஆக்கிரமிப்பாளனின் பொது நோக்கில் இருந்து திணிக்கப்படுகின்றது. அன்னியநாட்டு ஆக்கிரமிப்பாளனின் நோக்கில் இருந்து வேறுபடுத்த முடியாத அளவுக்கு, சொந்த மக்களை சிங்கள பௌத்த மக்களின் பெயரில் ஒடுக்குகின்றது.
இதன் மூலம் பெரும்பான்மை மக்களை இனவாதத்தில் நின்று சிந்திக்குமாறு, பெரும்பான்மை மக்களின் நலனைச் சார்ந்து அரசு இதை முன்னெடுப்பதாக அரசு காட்ட முற்படுகின்றது. இதன் மூலம் சிங்கள பௌத்தம்; அல்லாதவர்கள் தான், இலங்கையின் அனைத்து பிரச்சனையாக சிங்கள பௌத்த மக்களுக்கு காட்ட முற்படுகின்றது. அரசு ஏன் இதைச் செய்கின்றது?
இலங்கை மக்களை இன மதமாக அரசு பிளப்பது ஏன்?
சிங்கள பௌத்தம் அல்லாத இன மதவாதிகள் கூறுவது போல், சிங்கள பௌத்த இன மத வாதிகள் காட்டுவது போல், அரசு இன மத வெறியால் இனவாதத்தை மதவாதத்தை முன்னெடுப்பதில்லை. அரசின் உறுப்பினர்களை இன மதவாதிகளாக காண்பதும், காட்டுவதும் அரசியல் திரிபாகும்;. அரசின் செயற்பாடு இனவாதமாக மதவாதமாக இருக்கின்றது. இனவாதியாக, மதவாதியாக நின்று பார்ப்பவர்கள் தான், தங்களைப் போல் அரசு உறுப்பினர்களையும் பார்க்கின்றனர். தமிழனாக, சிங்களவனாக எதிரியாக இனவாதிகள் பரஸ்பரம் காட்டுவது போல், சைவத்தை, பௌத்தத்தை, இஸ்லாத்தை, கிறிஸ்தவத்தை மதவாதிகள் பரஸ்பரம் வெறுப்பது போல், ஆளும் கூட்டம் (அரசில் உள்ளவர்கள்) எண்ணுவதில்லை. இனவாதத்தை மதவாதத்தை தங்கள் அரசியல் கொள்கையாக கொண்டுள்ள அரசு, அதை தங்கள் தனிப்பட்ட கொள்கையாக கொண்டு இருப்பதில்லை. அரசியலில் இந்த வேறுபாட்டை புரிந்து கொண்டால் தான், அரசு ஏன் இதை முன்னெடுக்கின்றது என்ற கேள்விக்கு மட்டுமின்றி, இதில் இருந்து விடுபடுவதற்கு கூட வழிகாட்டும்.
இலங்கை அரசு இனவாதத்தை மதவாதத்தையும் ஏன் முன்வைக்கின்றது. இதற்கான காரணம் என்ன? ஆளுகின்றவர்கள் தனிப்பட்ட ரீதியில் இன மத வெறியர்களாக இருப்பதில்லை. இன மத வெறுப்புக் கொண்;ட இனவாதிகள்; மதவாதிகள் போல், அரசாங்கத்தின் உறுப்பினர்களை (விதிவிலக்கு இருக்கும்) அணுக முடியாது. ஆளுகின்ற தரப்பில் கூட மத இன சிறுபான்மையினர் இருப்பதும், அவர்களும் இணைந்த அரசு தான் இன மத பிளவுகளை முன்வைக்கின்றது. ஆளும் அரசில் உள்ளவர்களில் பெரும்பான்மையானவர்கள் தனிப்பட்ட ரீதியில் இனமத வெறியர்கள் அல்லாதிருந்தும், ஆனால் இன மத ரீதியாக அவர்கள் சமூகத்தை ஒடுக்குவது ஏன்? இவர்கள் கட்டமைக்கும் இன மத ஒடுக்குமுறை தான், சமூகத்தில் இனவாதிகளையும், மதவெறியர்களையும் அடிப்படையாகக் கொண்ட லும்பன்களை முதன்மையாகக் கொண்ட சமூகமாக உருவாக்கப்படுகின்றது. இதன் பின்னான அரசியலை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
இதன் பின்னால் ஒரு அரசியல் இருக்கின்றது. அந்த அரசியலை இனமத ஒடுக்குமுறை ஊடாக புரிந்துகொள்ள முடியாது. அதாவது இனவாதம், மதவாதம் மூலம் விளங்கிக் கொள்ள முடியாது. இன மத ஒடுக்குமுறை சமூக மேலடுக்குகளில் நடக்கின்றவை மட்டுமின்றி, அவை வெளிப்படையானவை. ஆனால் வெளிப்படையற்ற உள்ளடக்கம் என்ன? இலங்கையில் இனமத ஒடுக்குமுறையை கையாளுவதற்காகவா பாசிசத்தை கொண்டுள்ளது!? இலங்கையில் இன மத பெரும்பான்மை மக்களை இந்த அரசு ஒடுக்கவில்லையா!? இலங்கை அரசியலை மேலடுக்குகளின் ஊடாக மட்டும் புரிந்து கொள்ளக் கூடாது. மாறாக அதன் அடிக்கட்டுமானத்தின் ஊடாக புரிந்து கொள்ள வேண்டும்.
இலங்கை அரசு இனமதவாத அரசல்ல வர்க்க அரசாகும் அரசு ஆளும் வர்க்கமாக இருப்பதால் தான், அது இனமத ஒடுக்குமுறையைக் கையாளுகின்றது. இது சிங்கள மக்களைச் சுரண்டுவதால், அதை மூடிமறைக்கவே இன மத வெறுப்பை திணிக்கின்றது. பெரும்பான்மை (எண்ணிக்கையில்) மக்களை ஏமாற்றவும், மோசடி செய்யவுமே சிறுபான்மை (எண்ணிக்கையில்) மக்கள் மேலான இனமத வன்முறையை திணிக்கின்றது. சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்கவே, தொடரும் இராணுவமயமாக்கலையும் பாசிசமாக்கலையும் முன்னெடுக்கின்றது. இதை மூடிமறைக்கவே, சிறுபான்மைக்கு எதிரானதாக தன்னை வரிந்து காட்ட முனைகின்றது.
இலங்கை அரசு பெரும்பான்மை மக்களைச் சார்ந்ததல்ல. மாறாக நிதி மூலதனத்ததைச் சார்ந்தது. அதன் நலனை முதன்மையாகக் கொண்டது. அதாவது இலங்கை நவகாலனிய நாடு. அதன் நலனைப் பாதுகாக்கும் நாடு. அதன் சூறையாடலுக்குள் மூழ்குகின்றது. நிதி மூலதனம் நாட்டையே திவலாக்குகின்றது. இன்று கடன் மீள் கொடுப்பனவையும், வட்டிக் கொடுப்பனவையும் ஒழுங்காகச் செலுத்தும் ஒரு நாடாக இலங்கை இருக்கின்றது. இதைச் செய்வதற்கே இனவாதமும் மதவாதமும் அரசுக்கு தேவைப்படுகின்றது. இதை சில புள்ளிவிபரங்கள் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடியும்;.
2012 இல் இலங்கையின் மொத்தக் கடன் 6000.1 பில்லியன் ரூபா (அதாவது 600010 கோடி ரூபா)வாகும். இது இலங்கையின் உள்நாட்டு மொத்த வருமானத்தில் 79.14 சதவீதமாகி இருக்கின்றது. இதற்கு வட்டியாகவும் மீள் கொடுப்பனவாகவும் 2012 இல் கொடுத்தது 1017.46 பில்லியன் ரூபா (அதாவது 101746.8 கோடி ரூபா)வாகும். இதில் மீள் கொடுப்பனவு 60897 கோடி ரூபாவும், வட்டிக் கொடுப்பனவு 40898 கோடி ரூபாவுமாகும். 2011 க்கும் 2012 க்கும் இடையில் புதிய கடன் அதிகரிப்பு 866 பில்லியன் ரூபா (86600 கோடி ரூபா)வாகும். அதேபோல் மீள் கொடுப்பனவு அதிகரிப்பு 7028.7 கோடி ரூபாவாகவும், வட்டிக் கொடுப்பனவு அதிகரிப்பு 5179.9 கோடி ரூபாவாகும். நவகாலனிய நாடாக, நிதி மூலதனத்தின் கொள்கையை அமுல்படுத்தும் நாடாக இலங்கை இருக்கின்றதே ஒழிய, பெரும்பான்மை இன மத மக்களின நலனை முன்னெடுக்கும் நாடல்ல. இனவாதம் மதவாதம் இதை மூடிமறைக்கத்தானே ஒழிய, பெரும்பான்மை இன மத மக்கள் நலனை முன்னெடுக்கவல்ல.
ஆச்சரியப்படத்தக்க உண்மை இது தான்;. இலங்கை மக்களின் உழைப்பை உற்பத்தி அல்லாத நிதி மூலதனத்துக்காக கொடுப்பதே அரசின் பொதுக் கொள்கை. இது சிறுபான்மை மக்களிடமிருந்து மட்டுமல்ல, பாரிய அளவில் பெரும்பான்மை மக்களிடமிருந்தும் சூறையாடப்பட்டு கொடுக்கப்படுகின்றது. அரசின் கொள்கை இதன் பாலானது. தமிழ் இனவாதிகள் சொல்வது போல், இது சீன மூலதனம் சார்ந்ததல்ல. இலங்கையில் பல்வேறு சர்வதேச வங்கிகளின் கடனுக்கு வெளியில் வெளிநாட்டுக் கடனை எடுத்தால், 1912 இல் மொத்தமாக நாடுகளின் கடன் இந்தியா 7832.2 கோடி ரூபாவும், சீனா 1187.2 கோடி ரூபாவும்; கொடுத்துள்ளது. அமெரிக்கா 4138.6 ரூபாவும், யாப்பான் 54751.5 கோடி ரூபாவும், பிரான்ஸ் 2727.3 கோடி ரூபாவும், ஜெர்மனி 5116.4 கோடி ரூபாவுமாக ... காணப்படுகின்றது. இதற்கு வட்டி முதல் மீள் அறவீடுகளும் தொடருகின்றது. இலங்கை உள்நாட்டு நலன்களை அனுபவிப்பதில் சீனாவை விடவும் இந்தியாவும், மேற்கும் முதன்மையாக உள்ளது. தமிழ் தேசியவாதிகள் இந்தியா மற்றும் மேற்குச் சார்புடன் கட்டமைக்கும் பொய்மை நிறைந்த இனவாதத்துக்கு அப்பால் உண்மை நேர்மாறானது. இலங்கை நவகாலனிய நிதி மூலதனத்துக்கு தொடர்ந்து சேவை செய்கின்றது. பெரும்பான்மை இனத்துக்கு அல்ல. இந்தியா மற்றும் மேற்கு தாராளமாகவே இலங்கை மக்களின் உழைப்பை பிடுங்கிக் கொழுக்கின்றது.
கடன் மற்றும் வட்டியைக் கொடுக்க, புதிய கடன் தொடர்ந்து வாங்கப்படுகின்றது. வாங்கிய கடனை மீளக் கொடுக்க முடியாத நாடாக இலங்கை மாறிவிட்டது. வட்டியை கொடுக்கவும், முதலைக் கொடுக்கவும் கூட கடன் வாங்குகின்றது. மீள் கொடுப்பனவையும் மற்றும் வட்டியையும், கொடுக்க முடியாத நாடாகவும், தொடர்ந்து கடனைப் பெற முடியாத நாடாகவும் இலங்கை மாறி வருகின்றது. இலங்கை திவாலாகிவிட்டது. இதில் இருந்து மீள ஆளும் வர்க்கத்துக்கு உள்ள வழி
1.மக்களை மேலும்