நடைமுறையுடன் மார்க்சியத்தை இணைக்காத பிரமுகர்த்தன "மார்க்சியம்" முதல் திண்ணை "மார்க்சியம்" வரை, பாசிசத்துக்கு உதவுவதையே அரசியல் அடிப்படையாகக் கொண்டது. மார்க்சியத்தை சார்ந்த கருத்தை முன்வைக்கும் எவரும் மக்களுடன் தங்களையும் இணைத்துக்கொண்டு அணி திரட்டாத வரை, அவர்கள் மார்க்சியத்தை பிழைப்பாக்குகின்றனர். இப்படி இவர்களே இருக்கும் போது "மார்க்சியம் போதாமை" குறித்தும், "கறுப்பு வெள்ளை" அரசியல் குறித்தும், "சாம்பல் அரசியல்" குறித்தும், "அதிகாரத்துக்கு ஏற்ப தகவமைப்பதே மனிதன்" .. என்று கூறும் பல தத்துவங்கள் கோட்பாடுகள் அனைத்தும் மறைமுகமாகவும் நேரடியாகவும் பாசிசத்துக்கு உதவுவனவாகவே இருக்கின்றது.
தன்னை சமூகத்துடன் இணைத்துக் கொண்டு இயங்க மறுக்கும் இலக்கிய மற்றும் இலக்கிய அரசியல் பிரமுகர்த்தனம், மனிதர்களைச் சுரண்டி வாழும் சுரண்டும் அதே அரசியல் பண்பைக் கொண்டது. சமூகத்தில் இருந்து விலகி வாழும் தங்கள் சொந்த நடத்தைகள் மூலம் இவ் இரண்டும் ஒன்றுபட்டது. சமூகத்தைப் பற்றி இலக்கிய மற்றும் இலக்கிய-அரசியல் மூலம் பேசுகின்ற எவரும், தாம் பேசிய விடையம் சார்ந்து போராடவும், அதற்காக தம்மையும் மக்களையும் அணிதிரட்டவும், அதன் அடிப்படையில் செயல்பூர்வமாக வாழவும் வேண்டும். இதைச் செய்யாதவர்கள், தங்கள் நடத்தைகள் மூலம், தாம் பேசும் விடையம் மூலம் மோசடி செய்பவர்களாக இருக்கின்றனர். சமூகத்துக்கு பதில் தனிமனிதனை (தன்னை) மையப்படுத்தும் வக்கிரங்களையும், எதார்த்தத்துக்குப் பதில் மற்றொன்றை முன்னிறுத்தி சமூகத்தை தங்கள் இருப்புக்கு ஏற்ற ஒன்றாக மாற்றிவிட முனைகின்றனர்.
இலங்கையில் தொடரும் பாசிசத்துக்கு எதிரான போராட்டங்கள், கோட்பாடுகள், தத்துவங்கள் மற்றும் நடைமுறைக்கு பதில், இலக்கிய மற்றும் இலக்கிய-அரசியல் பிரமுகர்கள் வேறு ஒன்றை முன்வைப்பவர்களாக இருக்கின்றனர். இந்த வகையில் பாசிசத்துக்கு உதவும் அடிப்படையில் இருந்து தொடங்குகின்றது இவர்களின் இருப்பு சார்ந்த பிரமுகர்தனம். சமூகத்தில் இருந்து விலகி வாழும் சுய அடையாளம், சமூகத்துக்கு எதிரானது. சமூகத்திற்கு எதிராக இயங்கும் பாசிசம் போல், இது சமூகத்தின் ஒருங்கிணைவைச் சிதைக்கும் செயற்பாட்டை குறிக்கோளாகக் கொண்டதே இதன் செயற்பாட்டுத் தளம். சமூகத்தை ஒன்றிணைப்பதை மறுப்பதே, இதன் அரசியல் அடித்தளம்.
இன்று அரச பாசிசமும், குறுந்தேசியமும் சார்ந்து இயங்கும் அரசியல் செயற்பாடுகள், கோட்பாடுகள், தத்துவங்கள் தொடர்ந்து இலங்கையில் பல்வேறு சமூகங்களாகப் பிளந்து அவர்களை மோதவிடுகின்றது. இதையே அதற்கு ஒத்த தத்துவ அரசியல் அடித்தளத்தில், இலக்கிய மற்றும் இலக்கிய-அரசியல் மூலம் பிரமுகர்கள் செய்கின்றனர்.
சமூகங்களாக பிளக்கும் இந்த தொடர் போக்கை மாற்றி அமைக்கக் கூடிய ஓரே வர்க்கம் பாட்டாளி வர்க்கமும், அதன் தத்தவமும், அதன் கோட்பாடும் அது சார்ந்த நடைமுறையும் தான். பாட்டாளி வர்க்கம் தன்னை அரசியல் ரீதியாக அணிதிரட்டுவதை நோக்கி முன்னேறுவதற்கு பல்வேறு தடைகள் இருந்த போதும், இந்த நோக்கில் தனிநபர்கள் தங்களை இந்த சமூகத்தில் முன்னிறுத்தும் வண்ணம் கோட்பாடுகளையும் தத்துவங்களையும் தொடர்ந்து முன்வைக்கின்றனர்.
அதாவது சமூகத்தையும், சமூகம் சார்ந்த கோட்பாடுகளையும் முன்வைப்பதற்குப் பதில், தன்னையும் தன்னைச் சார்ந்த கோட்பாடுகளையும் முன்வைக்கின்றனர். சமூகத்தில் இருந்தும், அதன் செயல்தளத்திலும் இருந்து பிரிந்து தங்களை முன்னிறுத்தும் வண்ணம், சமூகத்துக்கு எதிராகவே தத்துவங்கள் கோட்பாடுகளை முன்னிறுத்தி செயல்படுகின்றனர். இங்கு இவர்களின் நோக்கம் தனிப்பட்ட புகழ் சார்ந்த பிரமுகர் தனத்தை அடிப்படையாகக் கொண்டு தம்மை முன்னிறுத்தி செயல்படுதல் தான். இங்கு சமூகத்தை உறிஞ்சி வாழும் ஒட்டுண்ணிகளாக இவர்கள் வாழ்கின்றனர்.
30 வருடமாக புரையோடிப் போன புலி - அரச பாசிசத்தின் கீழ், மக்களைச் சார்ந்த அரசியல் செயற்பாடுகள் என்பது அருகிப் போனபோது, எஞ்சிய அனைத்தும் தனிநபர்கள் சார்ந்து தான் காணப்பட்டது. நீண்ட காலமாக எந்த மாற்றமும் இன்றி நீடித்த இந்த அசாதாரணமான அரசியல் சூழலுக்குள், படிப்படியான இப்படி இருத்தலை நோக்கி பண்பு மாற்றம் பொதுவில் நடந்தேறியது. ஆனால் இதை இனம் காண முடியாத வண்ணம், பாசிசத்தின் இருப்பு இவ் அனைத்தையும் மூடிமறைத்தது. இந்த மூடி மறைப்பை தொடர்ந்து தக்கவைக்க முனைவதன் மூலம், தங்கள் இருப்பை தக்க வைக்க முனைகின்றனர். செயல்பூர்வமானது எவை? செயல்பூர்வமற்றது எவை? என்ற இடைவெளியை இனம் காணவிடாத வண்ணம் அனைத்தையும் ஒன்றாக தக்கவைக்க முனைகின்றனர். இலக்கிய மற்றும் இலக்கிய-அரசியல் தளத்தில் எதிரி யார்? நண்பன் யார்? என்ற இடைவெளியை இல்லாததாக்க முனைகின்றனர். அனைத்தையும் செயலற்ற அரசியல் தளத்தில், முடிச்சுப் போட விரும்புகின்றனர். அரச பாசித்தின் பின் உள்ள இலக்கிய மற்றும் இலக்கிய-அரசியல் கூட்டமும், அதற்கு வெளியில் உள்ள பிரமுகர்களும் கூட ஒன்றாகக் கூடிப் பயணிக்கின்றனர்.
பி.இரயாகரன்
27.07.2012
5.இலங்கை அரசுக்கு பின் இயங்கும் இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியலை இனம் காணல் - பகுதி 05
4.இலங்கை அரசுக்கு பின் இயங்கும் இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியலை இனம் காணல் - பகுதி 04
3.இலங்கை அரசுக்கு பின் இயங்கும் இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியலை இனம் காணல் - பகுதி 03
2.இலங்கை அரசுக்கு பின் இயங்கும் இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியலை இனம் காணல் - பகுதி 02
1.இலங்கை அரசுக்கு பின் இயங்கும் இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியலை இனம் காணல் - பகுதி 01
இதனுடன் தொடர்புடைய கட்டுரைகள்
1."கறுப்பு வெள்ளை" குறுகிய அரசியலாம் - முன்னாள் புலிப் பிரமுகர் கருணாகரன் (பகுதி – 01)
2.புலிகளின் "பரப்புரைத் தேவைக்கு அப்பால்" வெளிவந்ததாம் "வெளிச்சம்" இதழ்- முன்னாள் புலிப் பிரமுகர் கருணாகரன் (பகுதி – 02)
3."பல அணிகளில் இருந்தவர்களும், பல முகாம்களைச் சேர்ந்தவர்களும்;" பற்றி - முன்னாள் புலிப் பிரமுகர் கருணாகரன் (பகுதி – 03)
4.யோ.கர்ணனின் "சேகுவேரா இருந்த வீடு" என்ற சிறுகதைத் தொகுப்பின் ஊடான "புனர்வாழ்வு" அரசியலை இனம் காணல்
5.புஸ்பராணியின் முதுகில் எறி சவாரி செய்யும் புத்திஜீவிகள்
6.அ.மார்க்சின் அரசியல் நோக்கம், இலங்கை அரசின் அரசியல் நோக்கத்தில் இருந்து வேறுபட்டதா!?
7.அ.மார்க்ஸ் தன் தத்துவத்தையே மறுக்கும் ஒரு சந்தர்ப்பவாதி என்கின்றார் சோபாசக்தி
9.தங்கள் மனிதவிரோத குற்றங்களை மூடிமறைக்க இலக்கியம், இலக்கியமும் அரசியலும்
10.முன்னாள் புலிப் பாசிட்டான நிலாந்தன் முன்வைக்கும் "சாம்பல்" கோட்பாடு குறித்து
11.அரசியல் - இலக்கிய பிரமுகர்கள்
12.முன்னாள் புலியின் பிரமுகர்களின் மீள அரசியலில் ஈடுபாடு மீதான எமது அணுகுமுறை
13.வர்க்கப் போராட்டத்தை மறுக்கும் "சமாந்தரக்" கோட்பாடு பற்றி - மார்க்சிய விரோத கண்ணோட்டங்கள் மீது - 01
14.வர்க்கக் கண்ணோட்டமற்ற போராட்டம் எதைக் குறிக்கின்றது - மார்க்சிய விரோத கண்ணோட்டங்கள் மீது - 02
15."அடையாள அரசியல்" ஆளும் வர்க்கக் கோட்பாடாகும் - மார்க்சிய விரோத கண்ணோட்டங்கள் மீது - 03
19.வர்க்க விடுதலைக்காக போராடிய ஐயரை திரிக்கும் பின்னணியில் - மார்க்சிய விரோத கண்ணோட்டங்கள் மீது - 07