Language Selection

பி.இரயாகரன் -2012
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தன்னை முதன்மைப்படுத்தும் தனிச்சொத்துடமைக் கண்ணோட்டம் சார்ந்ததுதான், சமூகத்துடன் தன்னை இணைத்து போராடாத இலக்கியம் மற்றும் இலக்கிய அரசியலாக வெளிப்படுகின்றது. அதன் தத்துவம், கோட்பாடு, நடைமுறை அனைத்தும் இந்த அடிப்படையிலானது. சமூகத்துக்குள் தனிநபரா அல்லது சமூகத்துக்கு மேல் தனிநபரா என்ற அடிப்படை வேறுபாடு தான், தனிச் சொத்துடமையைப் பாதுகாக்கும் எல்லைவரை அவர்களை இட்டுச்செல்வதுடன் பாசிசத்தை எதிர்க்காத இலக்கிய மற்றும் இலக்கிய அரசியற் செயல்பாடுகளாக பரிணாமம் பெறுகின்றது. இப்படி பிரமுகர்களின் சமூக இருப்பு, தன்னை முதன்மைப்படுத்தும் தனிச்சொத்துடமைக் கண்ணோட்டம் சார்ந்தது. இதுதான் தனிச்சொத்துடமையில் எங்கும் காணப்படுகின்றது.

நடந்து முடிந்த புலிகளின் போராட்டத்தின் பின் இதுதான் விடுதலை என்று நம்பிய அர்ப்பணிப்புள்ள தியாகமும் இருந்தது. மறுதளத்தில் வியாபாரத்துடன் கூடிய மாபியாத் தனமும் இருந்தது. இது போன்றுதான் இன்று சமூகம் சார்ந்த சிந்தனைகள் கோட்பாடுகள் நடைமுறைகள் இருக்க, மறுதளத்தில் தனிமனித நலன் சார்ந்த சிந்தனைகள் கோட்பாடுகள் நடைமுறைகளும் காணப்படுகின்றது.

சமூகத்தைச் சார்ந்து நின்று முன்னின்று செயற்படாத நடைமுறைகள், கோட்பாடுகள் அனைத்தும், தனிமனிதனின் அற்ப நலன் சார்ந்து வக்கிரமாக வெளிப்படுகின்றது. பிரமுகர்களாக, சந்தர்ப்பவாதிகளாக, பிழைப்பு வாதிகளாக தனிச்சொத்துடமைக் கண்ணோட்டம் சார்ந்து இவர்கள் வாழ்வதுடன், தனிப்பட்ட புகழ் முதல் அற்பத்தனமாக சமூகத்தை ஏமாற்றி நுகர்வது வரையான சமூக ஒழுக்கக்கேட்டுடன், இந்தச் சமூக அமைப்பில் வாழும் ஓட்டுண்ணிகளாக இவர்கள் வாழ முனைகின்றனர்.

சினிமாவில் நடிப்பவர்கள், விளையாட்டு வீரர்கள், பாடல்களை பாடுகின்றவர்கள் … எப்படி இந்தத் தனிச் சொத்துடமைச் சமூக அமைப்பில்; தங்கள் ஒரு தனித் திறமை மூலம் வீங்கி வெம்பியபடி சமூகத்தை உறிஞ்சி வக்கிரமாக வாழ்கின்றனரோ, அதனையொத்த கூட்டம் தான் தன்னை மையப்படுத்தி இலக்கியம் இலக்கிய-அரசியல் பேசுகின்ற கூட்டமும் கூட. தனியுடமை அமைப்பில் தனிமனிதனை முதன்மைப்படுத்தும் அதே உள்ளடக்கத்தில் தான் தங்களை முதன்மைப்படுத்துகின்றனர்.

சமூகத்தில் இருந்து விலகி, தன்னைத் தனித்துவமாகக் காட்டி தனித்து வாழ்கின்ற தனிமனித அரசியல் அடிப்படை, சமூகத்துக்குள் தன்னை உறுப்பாக்க மறுக்கின்றது. இலக்கியம், தத்துவம், அரசியல் சமூகம் சார்ந்தது என்பதை மறுத்து, தன்னை மையப்படுத்தி அதை படைத்தல், தனிவுடமை சார்ந்த சிந்தனை மற்றும் கண்ணோட்டமாகும்.

இந்த அடிப்படையில் தான் சமூகத்திற்கு எதிராக அதைப் பிளக்கின்ற கோட்பாடுகளையும், தத்துவங்களையும் முன் தள்ளுகின்றது. இதன் மூலம் சமூகம் ஒருங்கிணைந்து தன் தனிமனித இருப்பை இல்லாதாக்குவதை தடுப்பதை, தன் அரசியல் குறிக்கோளாகவும் நடைமுறையாகவும் கொள்கின்றது.

இலங்கையில் பாசிசத்தை எதிர்த்து மக்கள் திரண்டால், தனிமனிதத்தை முன்னிறுத்துகின்ற இலக்கிய மற்றும் இலக்கிய அரசியல் சார்ந்த முனைப்பான அற்பத்தனங்கள் அனைத்தும் துடைத்தெறியப்படும். இது உருவாகாத வண்ணம் அதைத் தடுத்து நிறுத்துவதே, இந்த அற்பத்தனமான பிரமுகர்களிள் கோட்பாடுகள் மற்றும் தத்துவங்களின் நோக்கமாகும்.

பாசிசத்தை எதிர்கொள்ளவும், மக்களை அணிதிரட்டவும் முனையும் மார்க்சியத்தை, இந்த வகையில் தான் தனிமனித இலக்கியம் மற்றும் இலக்கிய அரசியல் கூட்டம் எதிர்த்து நிற்கின்றது. மார்க்சியத்தை மறுக்கும் புதிய தத்துவங்கள், கோட்பாடுகள் முதல் மார்க்சியத்தை செயலற்ற திண்ணை மார்க்சியமாக கூட இன்று முன்னிறுத்துகின்றனர். இந்த வகையில் மக்களை அணிதிரட்டும் அரசியல் செயற்பாட்டில் ஈடுபடாத, இலக்கியம் மற்றும் இலக்கிய அரசியல் பிரமுகர்கள் காணப்படுகின்றனர். இவர்கள் மக்களுடன் சேர்ந்து செயலுக்கு முன்வரத் தயாரற்ற உதிரியான லும்பன்கள். சமூக அவலத்தை மூலதனமாக்கி பிழைத்துக்கொள்ள முனையும் சந்தர்ப்பவாதிகளாக சமூகத்தில் வீங்கி வெம்பிய தனிமனித வக்கிரங்களுடன் நடமாடுபவர்கள்.

தங்கள் இந்த நோக்கத்தை சார்ந்து பாசிசத்தை தகர்க்கும் கோட்பாட்டை மறுப்பது, இவர்களின் பொது அரசியல் கண்ணோட்டமும் சித்தாந்தமுமாகும். தனிமனித அமைப்பு முறைதான், தங்கள் தனிமனித இருப்பை அங்கீகரிக்கும் என்ற உண்மையும், சமூக அமைப்பு முறையை தனி மனித இருப்பை சமூகத்துக்கு உட்பட்டதாக மட்டும் அங்கீகரிக்கும் என்பதால், தங்கள் இருப்புக்கு ஏற்ற கோட்பாடுகளை முன்வைக்கின்றனர். மார்க்சியத்தை எதிர்ப்பது இந்த அடிப்படையில் தான். இவர்களின் கோட்பாடுகள், தத்துவங்கள், நடைமுறைகள் அனைத்தும் இந்த அடிப்படையிலானது. பாசிசத்தை நேரடியாகவும் சுற்றி வளைத்தும் பாதுகாப்பதும் கூட சமூகத்துக்கு மேலான தங்கள் தனிமனித அங்கீகாரத்தை முன்னிறுத்தும் முயற்சியின் ஒரு அங்கம் தான்.

 

தொடரும்

 

பி.இரயாகரன்

26.07.2012

4.இலங்கை அரசுக்கு பின் இயங்கும் இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியலை இனம் காணல் - பகுதி 04

3.இலங்கை அரசுக்கு பின் இயங்கும் இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியலை இனம் காணல் - பகுதி 03

2.இலங்கை அரசுக்கு பின் இயங்கும் இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியலை இனம் காணல் - பகுதி 02

1.இலங்கை அரசுக்கு பின் இயங்கும் இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியலை இனம் காணல் - பகுதி 01

இதனுடன் தொடர்புடைய கட்டுரைகள்

1."கறுப்பு வெள்ளை" குறுகிய அரசியலாம் - முன்னாள் புலிப் பிரமுகர் கருணாகரன் (பகுதி – 01)

2.புலிகளின் "பரப்புரைத் தேவைக்கு அப்பால்" வெளிவந்ததாம் "வெளிச்சம்" இதழ்- முன்னாள் புலிப் பிரமுகர் கருணாகரன் (பகுதி – 02)

3."பல அணிகளில் இருந்தவர்களும், பல முகாம்களைச் சேர்ந்தவர்களும்;" பற்றி - முன்னாள் புலிப் பிரமுகர் கருணாகரன் (பகுதி – 03)

4.யோ.கர்ணனின் "சேகுவேரா இருந்த வீடு" என்ற சிறுகதைத் தொகுப்பின் ஊடான "புனர்வாழ்வு" அரசியலை இனம் காணல்

5.புஸ்பராணியின் முதுகில் எறி சவாரி செய்யும் புத்திஜீவிகள்

6.அ.மார்க்சின் அரசியல் நோக்கம், இலங்கை அரசின் அரசியல் நோக்கத்தில் இருந்து வேறுபட்டதா!?

7.அ.மார்க்ஸ் தன் தத்துவத்தையே மறுக்கும் ஒரு சந்தர்ப்பவாதி என்கின்றார் சோபாசக்தி

8.தமிழின அழிப்புக்கு உதவும் அ.மார்க்ஸ்சின் யாழ்பாண வருகையும் , தமிழினியின் புனர்வாழ்வும் - நாகலிங்கம் சற்குணன்

9.தங்கள் மனிதவிரோத குற்றங்களை மூடிமறைக்க இலக்கியம், இலக்கியமும் அரசியலும்

10.முன்னாள் புலிப் பாசிட்டான நிலாந்தன் முன்வைக்கும் "சாம்பல்" கோட்பாடு குறித்து

11.அரசியல் - இலக்கிய பிரமுகர்கள்

12.முன்னாள் புலியின் பிரமுகர்களின் மீள அரசியலில் ஈடுபாடு மீதான எமது அணுகுமுறை

13.வர்க்கப் போராட்டத்தை மறுக்கும் "சமாந்தரக்" கோட்பாடு பற்றி - மார்க்சிய விரோத கண்ணோட்டங்கள் மீது - 01

14.வர்க்கக் கண்ணோட்டமற்ற போராட்டம் எதைக் குறிக்கின்றது - மார்க்சிய விரோத கண்ணோட்டங்கள் மீது - 02

15."அடையாள அரசியல்" ஆளும் வர்க்கக் கோட்பாடாகும் - மார்க்சிய விரோத கண்ணோட்டங்கள் மீது - 03

16."இன விடுதலை தொடர்பாகப் பாராமுகத்தைக் கடைப்பிடித்தார்கள்" என்று குற்றஞ்சாட்டும் நீங்கள் யார்? - மார்க்சிய விரோத கண்ணோட்டங்கள் மீது - 04

17.வரலாற்றை சுயமாகக் கற்க மறுக்கும் பிரமுகர்தனம் பாசிச எடுபிடித்தனமாகின்றது - மார்க்சிய விரோதக் கண்ணோட்டங்கள் மீது - 05

18.சுரண்டும் வர்க்கம் சுரண்டலை பாசிசமாக்கும் போது ஜனநாயக மறுப்பாகின்றது - மார்க்சிய விரோத கண்ணோட்டங்கள் மீது - 06

19.வர்க்க விடுதலைக்காக போராடிய ஐயரை திரிக்கும் பின்னணியில் - மார்க்சிய விரோத கண்ணோட்டங்கள் மீது - 07

20.தன்னையும், தனிமனிதனையும் மையப்படுத்துவதே வலதுசாரிய அரசியல் - மார்க்சிய விரோத கண்ணோட்டங்கள் மீது - இறுதிப்பாகம்