எந்த எதிர்ப்பு அரசியலும் கூட குறைந்தபட்சம் இரண்டாக பிரிகின்றது. 1.செயலுக்குரியதாகவும், 2.இருப்பு சார்ந்த சடங்காகவும் பிரிகின்றது. இங்கு செயலுக்குரியது சமூகம் சார்ந்தாகவும், சடங்கு சார்ந்தது தனிமனிதன் சார்ந்தாகவும் தன்னை நடைமுறையில் வெளிப்படுகின்றது. இந்தவகையில் இரு வேறு தத்துவங்களும் கோட்பாடுகளும் நடைமுறைகளும் கூட உருவாகின்றது. இதுபற்றி பின்னால் விரிவாக பார்க்க உள்ளோம்.
இங்கு எதார்த்த வாழ்வைக் கடந்து தத்துவங்கள், கோட்பாடுகள் மூலமும், தங்கள் சொந்த நடைமுறையை நிராகரிப்பதன் மூலமும், பாசிட்டுகளுக்கு உதவுவது பிரமுகர்களின் பிழைப்புத்தனமாகும். இன்று நேரடியாகவும், மறைமுகமாகவும் அரசுக்கு பின் எப்படி செயல்படுகினரோ அதே போன்றுதான் அன்று புலிக்கு பின்பும் இவர்கள் செயல்பட்டனர். உண்மையில் இவர்கள் பாசிசத்துக்கு எதிரான போராட்டத்தையும், அதை முன்னெடுக்கும் நடைமுறை மார்க்சியத்தை எதிர்ப்பதன் மூலம், பாசிசத்துக்கு எற்ற நல்ல பிள்ளைகள் ஆனார்கள். இந்த வகையில் செயலை மறுக்கும் திண்ணை மார்க்சியம் முதல் பிரமுகர் மார்க்சியம் வரை அடங்கும். இந்த அரசியல் பின்புலத்தில் தான் பாசிட் அமைப்பின் தத்முவ பிரமுகர்கள் தொடங்கி மார்க்சிய பிரமுகர்கள் வரை பரஸ்பரம் உறவு கொண்ட, தம்மை அறிவுஜீவிகளாக முன்னிறுத்திக் கொண்டு அங்கும் இங்கும் கூடிக் கூலாவினர், கூலாவுகின்றனர். அங்குமிங்குமாக பாலம் காட்டுகின்றனர்.
இவர்களின் இந்த அரசியல் அடித்தளத்தின் அடிப்படை என்பது, பாசிசத்துக்கு எதிரான கடந்தகால போராட்டத்தை மறுப்பதன் மூலம் நிகழ்கால போராட்டத்தை தங்களவில் மறுப்பது. இந்த வகையில் 1980 கள் முதல் பாசிசத்தை எதிர்த்து போராடிய வரலாற்றையும், அதன் தொடர்ச்சியை மாறுப்பதில் இருந்து தான், இவர்கள் அனைவரும் ஒன்றுபடத் தொடங்குகின்றனர். இன்று அரச பாசிசத்தின் பின்னான பிரமுகர்களின் அரசியல் அடித்தளம் கூட, இந்த அரசியல் வரைறையை கொண்டுதான் இவர்கள் அனைவரையும் ஒன்றுபடுத்துகின்றனர். அன்று போராடியவர்கள், புலிப் பாசிசத்தை மட்டும் எதிர்த்து போராடவில்லை, அரச பாசிசத்தை எதிர்த்துப் போராடினார்கள். இதை வெறும் சடங்காக கொண்டு, பிரமுகர்தன அடிப்படையில் அவர்கள் செயற்படவில்லை. நடைமுறையையும், அதைக் கோரியும் அவர்கள் செயல்பட்டனர். அரசையும், புலியையும் வெறும் சடங்குக்காக தங்கள் இருப்பு சார்ந்த எதிர்ப்பதல்ல, மாறாக அதை எதிர்த்து போராடுவதன் மூலம் அவர்கள் பிரமுகர்களில் இருந்து வேறுபட்டனர். இந்த அடிப்படையில் மார்க்சியத்தை மறுபவர்களும், மார்க்சியத்தை தங்கள் பிரமுகர்தனத்துக்கு பயன்படுத்தியவர்களும், அரசையும் புலியையும் எதிர்த்து மக்களை சார்ந்து நின்று போராடுவதற்காகல்ல. தங்கள் பிரமுகர் தன இருப்பை தக்க வைப்பதற்கான ஒரு மோசடி. இதுதான் இன்று வரை தொடர்ந்து நடத்தும் அரசியல் பித்தலாட்டங்கள்.
கருணாகரன் போன்ற புலிப் பிரமுகர்கள், இன்று அரச பாசிசத்தை நியாயப்பபடுத்த, அதன் மீதான எதிர்ப்பை இல்லாதக்க கோட்பாடுகளை, தத்துவங்களை முன்வைக்கின்றனர். எதார்த்தில் நிலவும் அரச பாசிசத்தை எதிர்க்காத இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியலில் மூழ்கும் வண்ணம், சிந்தனை தளத்தை பாசிசத்தின் பின்னால் சிதைக்க முனைகின்றனர். இப்படி புலிக்குள் இவர்கள் இயங்கிய அடிப்படையில், தேர்தெடுக்கப்பட்ட பாசிட்டுகள் இவர்கள். இந்த வகையில் தான் இவர்கள், புலிகளின் முன்னணி பிரமுகர்கள் ஆனார்கள். இன்று அரசு இந்த வகையில் இவர்களை இனம் கண்டு, மீண்டும் களத்தில் இறக்கி உள்ளது.
இன்று இலங்கையில் இணையங்கள் முடக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் பத்திரிகையாளர்கள் கண்காணிக்கப்படுகின்றனர். அவர்களை வெள்ளை வானில் கடத்தவும், இணையங்களை பதியவும் கோருவதுடன், இணையத்தை நடத்த முடியாத அளவுக்கு கட்டணங்களை திணிக்கின்றனர். மறுதளத்தில் இத்துறையில் பாசிசத்துக்கு விசுவவமாக உள்ளவர்களை குளிர்மைப்படுத்தவும், விலைக்கு வாங்கவும் இலவச மடிக் கணணி (கம்யூட்டா), வட்டியில்லாத கடன் அல்லது குறைந்த வட்டியில் கடன், இப்படிப் பாசிப் பயங்கரவாதம் தன்னைத் தான் பல வண்ண முகத்தில் இன்று வெளிப்படுத்தி செயல்படுகின்றது. மறுதளத்தில் வடகிழக்கில் குடும்ப நிகழ்வுகள் முதல் இருவர் சந்தித்து பேசிக் கொண்டால் கூட, அனைத்தும் அரசு கண்கணிப்புக்கு கீழ் தான் நடக்கின்றது.
இப்படி இருக்க கருணாகரன் போன்றவர்கள் இந்த அரசின் கீழ் பெற்றுள்ள சுதந்திரம், அரச பாசிசத்தை பாதுகாக்கும் சிந்தனை அடித்தளத்தை கட்டமைப்பதுதான். புலிகளின் பாசிசத்தின் கீழ் இவர்கள் பெற்று இருந்த சுதந்திரத்தை ஓத்ததது தான் இதுவும். புலிகளில் வழங்கிய சுதந்திரத்தின் கீழ் இவர்கள் என்ன செய்தார்கள்?
1.புலியல்லாத தங்களை ஓத்த மாற்று பிரமுகர்களை தங்கள் தளத்தில் (தமக்கு கீழ்) எழுத வைத்தனர்.
2.பாசிசத்தை கேள்விக்குள்ளாக்காத இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியல் சிந்தனை தளத்தை தமக்குள் விரிவாக்கினர்.
3.பாசிசத்தை கேள்விக்குள்ளாகிய மார்க்சியத்தை பற்றிய கேள்விகளையும், அவதூறுகளை, நம்பிக்கையினங்களையும், போதமை குறித்த அவநம்பிகளையும் முன்னெடுத்துச் சென்றனர்.
4.இதை மீறி பாசிசத்தை மார்க்சியத்தை எதிர்த்த போது, அதை நடைமுறையற்ற பிரமுகர் மார்க்சியமாக இருக்குமாறு பார்த்துக் கொண்டனர்.
5.அனைவரையும் தங்கள் பாசிசத்தின் கீழ் உள்ளிக்கவும் முடியாத போது பயன்படுத்தவும் முனைந்த பாசிச பின்புலத்தில், பாசிசத்தை எதிர்காத சுய தணிக்கையும் சுய கட்டுப்பாடையும் உருவாக்கினர்.
இந்த வகையில் பாசிசத்தின் உள்ளிருந்து இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியல் தளத்தில் செயல்பட்ட பாசிட்டுகள் முன்தள்ளிய தத்துவ மற்றும் கோட்பாட்டு விடையங்கள்தான், புலியல்லாத பாசிசத்தை எதிர்த்த நடைமுறையில் போராடாத தளத்திலும் காணப்பட்டது. இவ்விரண்டுக்கும் இடையில் அடிப்படை வேறுபாடு ஒற்றுமையும் கூட காணப்பட்டது.
புலி பாசிட்டுகள் தங்கள் இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியல் தளத்தில் முன்வைத்து எடுத்துச் சென்ற தத்துவ மற்றும் கோட்பாட்டு விடையங்கள் தான், புலியல்லாத தளத்திலும் முன்னெடுத்துச் சென்றனர். புலி பாசிசத்தை கேள்விக்குள்ளாக்காத கோட்பாடுகள் மற்றும் தத்துவத்துக்குள் மூழ்குமாறு, சமூக முன்னோடிகளை வழிகாட்டினர். புலிகளின் நோக்கம் இதுதான். இதற்குள் தான் கருணாகரன் போன்ற புலிப்பிரமுகர்கள் முன்னின்று செயல்பட்டனர். இந்த நோக்கில் வெளியரங்கில் புலிகள் உருவாக்கிய அமைப்பு தான் தமிழீக்கட்சி.
புலியல்லாத தளத்தில் மக்களை சார்ந்து செயலாற்றுவதை கைவிட்டவர்கள், இதே போன்ற கோட்பாடுகள் மற்றும் தத்துவத்துக்குள் தம்மை முன்னிறுத்தி தான் தம்மை பிரமுகராகிக் கொண்டனர். உண்மையில் இந்த கோட்பாடு மற்றும் தத்துவங்களை, மக்களில் இருந்து விலகிச் சென்ற புலியல்லாத பிரமுகரர்களிடமிருந்து தான் புலிகள் பெற்றனர். இந்த வகையில் அ.மார்க்ஸ்-சோபாசக்தி கும்பல் முதல் பாலசிங்கம் வரை பின்நவீனத்தும் முதல் மார்க்சியம் வரை, விதம் விதமாக வண்ணம் வண்ணமாக பேசினர்.
புலிப் பாசிசம் நிறுவனமான அரசியல் பின்னனியில், அடுத்தகட்ட வளர்ச்சிதான் இதுவாகும். புலியல்லாத அரசியல் தளத்தில் எது தனக்கு எதிரான நடைமுறை அரசியல் செயல்தளத்தை இல்லாதாக்கியதோ, அந்தக் கோட்பாட்டையும் தத்துவத்தையும் பாசிசத்தின் கீழ் நிறுவமாக பிரச்சாரமாக கருணாகரன் போன்றவர்களின் மூலம் புலிகளும் எடுத்துச்சென்றனர். இதைத்தான் தமிழீழக் கட்சி வெளியில் இருந்து வெற்றிகரமாக செய்தது.
இந்தவகையில் பாசிசமாக்களை பாதுகாத்து நிறுவனப்படுத்துவதில் முன்னின்று செயல்பட்டவர்களில் இருந்து வேறுபட்ட அரசியல் தளத்தில் செயல்பட்ட, புலியல்லாதவர்கள் கூட இந்த கோட்பாட்டையும் தத்துவத்தையும் கொண்டிருந்தவர்கள். இவர்கள் பாசிசத்தை நடைமுறையில் எதிர்ப்பதை மறுத்து, தங்களை பிரமுகராக தக்க வைக்கவே இதை அவர்கள் முன்வைத்தார்கள்.
இங்கு இவர்களின் ஒற்றுமை என்ப, செயலைக் கோரிய மார்க்சியத்தை மறுத்தல் தான். பாசிசத்தை பாதுகாப்பத்திலும், பிரமுகராக இருதலுக்குமான அடைப்படையில், இவர்களுக்கு ஒரே கோட்பாடு மற்றும் தத்துவங்களே இவர்களுக்கு உதவின. புலிப் பாசிசம் நிலவிய காலத்தில் இவ்விரண்டையும் சமாந்தரமாக நாம் காணமுடியும்.
புலிக்கு பின் இவர்களின் ஒரே கோட்பாடு மற்றும் தத்துவமும், வேறுபாடற்ற தளத்தில் இவர்களை ஒன்றாகின்றது. பிரமுகர்ளை பிரித்த "புலி அடையாள" தடை இன்று இல்லாத அரசியல் தளத்தில், இவர்கள் ஓரே விதமாக ஓரே நோக்கில் பயணிக்கத் தொடங்குகின்றனர். அரச பாசிசத்துக்கு எதிராக செயலைக் கோரும் நடைமுறையை மறுத்தல். இங்கு புலிக்கு பதில் அரசு. இவர்கள் அதே நோக்கத்துடன் அதே வடிவில் ஒன்றுபடும் இவர்கள், தங்களின் இந்த பாசிச கூத்தை மூடிமறைக்கவும் கூட முனைகின்றனர். அதற்கு எம்மை பயன்படுத்த, எமது இணையத்துக்கு இணைப்பு கூட கொடுக்கின்றனர். எம்முடன் நேர் எதிராக பயணிக்கும் இவர்கள், எம்மை எதிர்த்து அரசியல் செய்யும் தங்கள் பிரமுகர் அரசியல் தளத்தில், இந்த கூத்தையும் இதை சார்ந்த தர்க்கங்களையும் கூட நாங்கள் காண்கின்றோம்.
அவர்களின் தத்துவங்கள், கோட்பாடுகள், செயல்பாடுகள் அனைத்தும் பாசிசத்தை பாதுகாக்கும் நோக்கிலானது மட்டுமின்றி, பாசிசத்தை எதிர்த்து நடைமுறையை கோரும் எமது மார்க்சியத்தை எதிர்த்துதான் செயல்படுகின்றது என்பது இங்கு உள்ள அடிப்படை உண்மையாகும். இதற்கு எப்படி வேசம் போட்டும், யாரும் தங்களை மூடிமறைக்க முடியாது.
தொடரும்
பி.இராயகரன்
22.07.2012
3.இலங்கை அரசுக்கு பின் இயங்கும் இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியலை இனம் காணல் - பகுதி 03
2.இலங்கை அரசுக்கு பின் இயங்கும் இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியலை இனம் காணல் - பகுதி 02
1.இலங்கை அரசுக்கு பின் இயங்கும் இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியலை இனம் காணல் - பகுதி 01
இதனுடன் தொடர்புடைய கட்டுரைகள்
1."கறுப்பு வெள்ளை" குறுகிய அரசியலாம் - முன்னாள் புலிப் பிரமுகர் கருணாகரன் (பகுதி – 01)
2.புலிகளின் "பரப்புரைத் தேவைக்கு அப்பால்" வெளிவந்ததாம் "வெளிச்சம்" இதழ்- முன்னாள் புலிப் பிரமுகர் கருணாகரன் (பகுதி – 02)
3."பல அணிகளில் இருந்தவர்களும், பல முகாம்களைச் சேர்ந்தவர்களும்;" பற்றி - முன்னாள் புலிப் பிரமுகர் கருணாகரன் (பகுதி – 03)
4.யோ.கர்ணனின் "சேகுவேரா இருந்த வீடு" என்ற சிறுகதைத் தொகுப்பின் ஊடான "புனர்வாழ்வு" அரசியலை இனம் காணல்
5.புஸ்பராணியின் முதுகில் எறி சவாரி செய்யும் புத்திஜீவிகள்
6.அ.மார்க்சின் அரசியல் நோக்கம், இலங்கை அரசின் அரசியல் நோக்கத்தில் இருந்து வேறுபட்டதா!?
7.அ.மார்க்ஸ் தன் தத்துவத்தையே மறுக்கும் ஒரு சந்தர்ப்பவாதி என்கின்றார் சோபாசக்தி
9.தங்கள் மனிதவிரோத குற்றங்களை மூடிமறைக்க இலக்கியம், இலக்கியமும் அரசியலும்