ம் பக்கத் தொடர்...
நகைச்சுவைக்குரிய ஒரு வரியாகும். இதைத் தொடர்ந்துள்ள அடுத்தவரி "கடந்த காலங்களில் அருந்ததி பதித்த இலக்கியச் சுவடுகள்: கனதியானவை. பிரான்ஸ் புகலிட இலக்கியம் அரந்ததியைக் கடந்து: இதுவரை எதையும் பதிவு செய்ய வில்லை’’
என்ற வரிகள் அபத்தமானவை. சொந்தப் புகழ் தேடி தம்மைத்தாம் எழுதும் கூட்டத்துடன் இதுவும் சேர்ந்ததே. அருந்தி ஒரு போராளியாக, இலக்கியத்தில் சாதனையாளனாக மாறியது மாற்றியது என்ற சோகக் கூற்றை ஆராய்வோமாயின் அருந்ததி யார்?
அருந்ததி ஒரு சில நாடகங்களைப் போட்டதுடன், பிரான்சில் வெளியாகிய தேடல் இதழிலும் (7 இதழ்களே வெளிவந்தன), பின் ஒரு கவிதை புத்தகத்தையும் நாம் அறிய வெளியிட்டவர். இந்த அருந்ததி இந்தியன் ஆமி இலங்கையில் இருந்த காலம் வரை, அதை ஆதரித்தும், நுPசுடுகு ஐ பாராட்டியும் நின்றவர். இக்காலத்தில் இதற்கு முன்னரும் வெளிவந்தவையே இவையெல்லாம். அதுவும் தேடலில் பல்வேறு சக்திகள் ஒன்றிணைந்து இருந்தாலும், ஈப்பி யை ஆதரித்ததால் அதில் பலர் வெளியேறியதும் வரலாறு. அருந்ததியின் இலக்கியம் அவரின் அன்றைய கருத்துப்போக்குடன் துரோகத்துடன் இணைந்திருந்தது.
எம் மண்ணில் வெளியாகிய புலிகளின் சில படங்கள், அருந்ததியின் முகம் என்பன வௌ;வேறு கோணத்தில் மசாலாத் தன்மையை நிராகதித்ததால் மட்டும் இப் படங்களை வரவேற்க முடியும். ஆனால் கருத்துத் தனத்தில் இப்படங்கள் பாரிய விமர்சனத்துக்குரியதே அருந்ததி போராளியானான் என்பது எமது போராட்டத்தில் ஆயிரமாயிரம் போராளிகள் தம்மை விடுதலைக்காக அர்பணிக்கும் தியாகத்தைக் கொச்சைப்படுத்துவதற்குச் சமமாகும். யாரோ ஒருவன் போராடி அழிந்துவிட அவன் பெயரால் போராட்டத்தில் ஈடுபடாத பிரிவுகள் அரசைக் கைப்பற்றுவதைப் போல அதன் வழியில் அருந்ததி போராளியானான் என்பது, அவரின் மறுப்பு எதுவுமில்லாத ஒரு வரலாற்றுப் பொய்யுடன் கூடிய பிழைப்புவாத புகழுரைகளே.
ஒரு படைப்பு மக்களுக்காக, சொந்தப் புகழுக்காக அல்லாததாக இருக்க வேண்டும். வரலாற்றைத் திரிக்காததாக தமது நியாயப்படுத்த முடியாத தொழில்களை (இது ஓர் அகதியின் முக்கிய பிரச்சினை) படங்களில் விளக்குவதன் மூலமோ, அகதி நாட்டின் ஆளும் ஆட்சியின் கொடுமைகளைச் சொல்லாமல் நல்ல பிள்ளையாக நடப்பதன் மூலமோ, படைப்பும் படைப்பாளியும் மக்களுடன் இணைந்துவிட முடியாது
(முகம் சினிமா)
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode