Language Selection

பி.இரயாகரன் -2012
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

புலி பாசிசமாக்களின் பின் கருணாகரன் போன்ற இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியல் பிரமுகர்களின் நடத்தைகளைப் புரிந்துகொள்வதன் மூலம், இன்றைய அரச பாசிசமாக்களின் பின்னான இவர்களின் நடத்தையை இனம் காணமுடியும். அதுபோல் புலி அழிவுக்கு பின் முன்னாள் புலிப் பிரமுகர்களையும், முன்னாள் புலியல்லாத பிரமுகர்களையும் ஒன்றினைக்கும் அரட்டை புள்ளி எது? மார்க்சியம் பேசும் இடது பிரமுகர்களையும், மார்க்சியத்தை மறுக்கும் வலது பிரமுகர்களையும் ஒன்றாக கூடி குலாவ வைப்பது எது? அந்த அரசியல் என்ன? இந்த அரசியல் பின்புலத்தில், அரசு இதற்குள் இயங்க முடிகின்றது.

புலிப் பாசிசமாக்களின் பின்னான பிரமுகர்களின் நடத்தைகள் எதுவாக? எப்படி? இருந்தது. 1980 களில் ஆயுதம் எந்திய இயங்கங்களின் தோற்றத்தையடுத்து, மக்கள் விரோத அரசியல் பண்பு ரீதியான மாற்றத்தைப் பெற்றது. இது படிப்படியாகவே அது தன்னை பாசிசமாக்கியது.

இக்காலத்தில் இதை எதிர்த்து போராட்டங்கள் பலதளத்தில் உருவானது. இந்த போராட்டத்தை முன்னெடுத்தவர்கள், இதற்கு தலைமை தாங்கியவர்கள் இந்த போராட்டத்துக்கு ஊடாக வந்த புதிய தலைமுறையினர்தான். சமூகத்தில் புத்திஐPவிகளாக காட்டிக் கொண்ட பிரமுகர்கள், இடதுசாரியாக தம்மை வெளிப்படுத்தியவர்கள் முதல் எல்லாம் தெரிந்த இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியல்வாதிகள் இந்த பாசிசத்தை எதிர்த்து போராட முன்வரவில்லை. அவர்கள் நடந்த போராட்டத்தை ஆதாரிக்கவுமில்லை. மாறாக இயக்க பாசிசமாக்களுக்கு ஆதரவாகவும் மறுதளத்தில் தங்கள் மௌனம் மூலம் மறைமுகமாக பாசிசத்துக்கு உதவும் வண்ணம் செயல்பட்டனர். இப்படித்தான் வலது - இடது பிரமுகர்கள் பாசிசத்துக்கு பீடில் வாசித்தனர்.

சமூக விடையங்களைப் பேசிய இவர்கள், பாசிசமாக்களை எதிர்க்காது இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியலைப் பேசிக்கொண்டு இருந்தனர். மக்கள் அனுதினம் பாசிசத்தை எதிர்த்துப் போராடி வாழ்ந்த காலத்தில், இவர்கள் அதற்கு சம்மந்தமில்லாது வாழ்ந்த படி பீடில் வாசித்துக் கொண்டு இருந்தனர். இவர்கள் பேசிய இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியலால் இப்படி பாசிசத்தை தொழுதது. இதனால் சமூகத்துக்கு என்ன நன்மை? ஏன் தான், இதை அவர்கள் பேசினார்கள்? சமூகத்தை வழி நடத்த தங்கள் அளவில் தயராற்ற, அதற்கு முன்வராத இவர்கள் யார்? இவர்களின் அறிவு எதற்காக? இவர்கள் தங்கள் கருத்துக்கு தங்களே போராடமாட்டார்கள், அதே நேரம் அதற்காக மற்றவர்கள் போராடுவார்கள் என்ற விம்பம் இங்கு போலியானது. இந்த புரட்டுத்தனம் இவர்களின் கெடுகெட்ட புகழுக்கும், பிழைப்புக்கும் தான். இங்கு போராடமல் இருத்தல், மற்றவர்கள் போராடவிடாமல் தடுத்தல்தான், பிரமுகர்களின் இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியலாகும். இந்தவகையில் இவர்களின் தத்துவங்களும் கோட்பாடுகளும், பாசிசமாக்களுக்கு நேரடியாக மறைமுகமாக  உதவியது, உதவுகின்றது. இன்றும் இது தான் எங்கும் தளுவிய உண்மை.

1980 களில் சமூகம் பாசிசமாக்கப்பட்டு ஒடுக்கப்பட்டுக் கொண்டிருந்த போது, அதற்கு எதிரான சிந்தனைத் தளத்தையும் போராட்ட உணர்வையும் உருவாகவிடாது, கவணத்தை வேறு இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியல் தளத்தில் சிந்திக்குமாறு, செயல்படுமாறு பிரமுகர்கள் கோரினர். இப்படி இவர்கள் தள்ளியதன் மூலம், பாசிசத்திற்கு எதிரான எதிர்ப்பு செயல்பாட்டை இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியலில் இல்லாதாக்கினர். இது பாசிசமாக்களின் வெளிப்பரப்பில் நடந்து கொண்டு இருந்தபோது, பாசிச உள் அரசியல் தளத்தில் இது வேறு அரசியல் பரிணாமத்தை கொண்டு தன்னை வெளிப்பட்டது.

இயங்கங்களின் மக்கள் விரோதத்தன்மை பாசிசமாகிய போது, அதை எதிர்த்துப் போராடுவது முதல் கொண்டு இதனுடன் உடன்படாது தங்களவில் வெளியேறி ஒதுங்குவது வரையான அரசியல் போக்கு காணப்பட்டது. மறுதளத்தில் இதற்கு சமந்தரமான இந்த பாசிசமாக்களை அரசியல் ரீதியாக நியாயப்பபடுத்தும் புத்திஜீவிகளை கொண்ட பிரமுகர் தளம் உருவானது. இந்த வகையில் புலிகளின் பாசிசத்தை நியாயப்படுத்தி கருணாகரன் போன்ற மாமாக்கள் புலிப் பிரமுகராக புலிக்குள் தோற்றுகின்றனர். புலிக்கு வெளியில் உள்ள  பிரமுகர்களும், உள்ளே இருந்த பிரமுகர்களும் ஒரே விதமாக சிந்திதத்ததுடன், ஓரே விடையத்தையும் பேசினர். இந்த வகையில் அண்ணளவாக 100 வெளிச்சம் இதழ்கள் வெளிவந்தன. இன்னும் பல.  இந்த வெளிச்சம் இதழ்களுக்கும், புலி அல்லாத தளத்தில் வெளியான சஞ்சிகைகளும், உள்ளடக்க ரீதியாக வேறுபாடு இருக்கவில்லை. அங்கும் இங்கும் எழுதிய ஒரே எழுத்தளார்கள் இருந்தது மட்டுமின்றி, மறுதளத்தில் இவ் இதழ்கள் பேசிய விடைங்களும் கூட ஒன்றாக இருந்தது.  தலித்தியம், பின்நவீனத்துவம், பெண்ணியம், கட்டுடைப்பு…. மார்க்சியம் என்று அங்கும் இங்கும் ஒன்றைப் பேசினர்.

இப்படித்தான் பாசிசம் கொழுவேற்றது. இந்த இடத்தில் கருணாகரன் போன்றவர்கள் நேர்மையானவராக இருந்து இருந்தால், 1980 களில் தொடங்கி 2009 வரையான இந்தக் காலத்தில், அந்த இயக்கத்தை விட்டு வெளியேறி இருப்பார்கள். அல்லது ஒதுங்கி இருப்பார்கள். அவர்கள் ஏன் ஒதுங்கவில்லை அல்லது வெளியேறவில்லை என்பது, இவர்களின் பிரமுகர்தன பிழைப்புத்தனமேயாகும். 2009 முன் புலிகள் இவர்களுக்கு மட்டும் வழங்கிய சுதந்திரத்தில் நக்கிப் பிழைத்தவர்கள், 2009 பின் இவர்களுக்கு மட்டும் அரசு வழங்கும் சுதந்திரத்தின் கீழ் அரசின் பாசிசமாக்களை முன்னெடுக்கு அரசியல் பின்புலத்தில் ஊம்பிப் பிழைக்கின்றனர்.

புலிக்கு முன் கொண்டு இருந்த அதே தத்துவ கோடபாட்டு அரசியல் அடித்தளத்தில், முன்பு புலியல்லாத அதே அரசியல் அடித்தளத்தில் இயங்கிய கூட்டம் ஒன்று சேர்ந்து நிற்பது  இங்கு வெளிப்படையானது. பிரமுகராக இருக்க மார்க்சியத்தை பேசும் கூட்டமும் கூட, அணி சேர்ந்து இதில் பயணிக்கின்றது. தங்கள் எங்கு, எதற்குள், எப்படி செயல்படுகின்றோம் என்பது கூட தெரியாத பிரமுகர் வெளியில் சுய உணர்வுன்றி ஒன்று கூறுகின்றனர். அ.மார்க்ஸ் இலங்கை வருகையின் பின்னால், வலதுசாரி இடதுசாரி பிரமுகர்களின் ஒருங்கினைவு புள்ளியைக் காணமுடிகின்றது. மார்க்சியத்தை மறுதளித்து பிரமுகராக தன்னை முன்னிறுத்த முனையும் மீரா, தேசிய கலை இலக்கிய பேரவையில் கும்மி அடிக்க முடிகின்றது. அரச பாசிமாக்களின் பின் இயங்கும் கருணாகரன் முதல் அரசுக்கு எதிரான தேசிய கலை இலக்கிய பேரவை வரை, ஒரே அட்டைகள் அங்குமிங்குமாக ஒரே அரட்டைகளை அடிக்க முடிகின்றது. இந்த அரசியல் பின்புலத்தை, செயலற்ற பிரமுகர்தனம் தான் ஒன்று இனைக்கின்றது.

தொடரும்

பி.இரயாகரன்

19.07.2012

2.இலங்கை அரசுக்கு பின் இயங்கும் இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியலை இனம் காணல் - பகுதி 02

1.இலங்கை அரசுக்கு பின் இயங்கும் இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியலை இனம் காணல் - பகுதி 01

இதனுடன் தொடர்புடைய கட்டுரைகள்

1."கறுப்பு வெள்ளை" குறுகிய அரசியலாம் - முன்னாள் புலிப் பிரமுகர் கருணாகரன் (பகுதி – 01)

2.புலிகளின் "பரப்புரைத் தேவைக்கு அப்பால்" வெளிவந்ததாம் "வெளிச்சம்" இதழ்- முன்னாள் புலிப் பிரமுகர் கருணாகரன் (பகுதி – 02)

3."பல அணிகளில் இருந்தவர்களும், பல முகாம்களைச் சேர்ந்தவர்களும்;" பற்றி - முன்னாள் புலிப் பிரமுகர் கருணாகரன் (பகுதி – 03)

4.யோ.கர்ணனின் "சேகுவேரா இருந்த வீடு" என்ற சிறுகதைத் தொகுப்பின் ஊடான "புனர்வாழ்வு" அரசியலை இனம் காணல்

5.புஸ்பராணியின் முதுகில் எறி சவாரி செய்யும் புத்திஜீவிகள்

6.அ.மார்க்சின் அரசியல் நோக்கம், இலங்கை அரசின் அரசியல் நோக்கத்தில் இருந்து வேறுபட்டதா!?

7.அ.மார்க்ஸ் தன் தத்துவத்தையே மறுக்கும் ஒரு சந்தர்ப்பவாதி என்கின்றார் சோபாசக்தி

8.தமிழின அழிப்புக்கு உதவும் அ.மார்க்ஸ்சின் யாழ்பாண வருகையும் , தமிழினியின் புனர்வாழ்வும் - நாகலிங்கம் சற்குணன்

9.தங்கள் மனிதவிரோத குற்றங்களை மூடிமறைக்க இலக்கியம், இலக்கியமும் அரசியலும்