தொடரும் இனவழிப்பு மூலமே, நாட்டை முழுமையாக பாசிசமயமாக்க முனைகின்றது அரசு. இதற்காக தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் மற்றும் சிந்தனை அரங்கை கைப்பற்ற முனைகின்றது. இந்த வகையில் முன்னாள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு எடுபிடிக் கும்பலை பயன்படுத்துகின்றது. சமூகத்தின் அனைத்து துறையையும் தன் மயப்படுத்துகின்றதன் மூலமான பாசிசமயமாக்களை தொடங்கி இருக்கின்றது. புலிகள் கடந்த காலத்தில் எதை எப்படி செய்தனரோ அதை அரசு செய்கின்றது. அதற்கு பழக்கப்பட்ட, அதையே பிழைப்பாக கொண்டு வாழ்ந்த முன்னாள் புலிகளையே இதற்காக அரசு பயன்படுத்துகின்றது. வசதி வாய்புகளுடன் கூடிய சுதந்திரமான செயல்தளத்தை தன் எடுபிடிகளுக்கு வழங்குவதன் மூலம், இதை செயல்படுத்துகின்றது.
இப்படி புலிக்குள் பிழைப்பு நடத்திய கூட்டத்தைத்தான், அரசு தனது பாசிசமயமாக்களுக்கு மீளப் பயன்படுத்துகின்றது. இது இயல்பான அரசியல் கட்சிகளின் கட்சி அரசியலில் இருந்து வேறுபட்டது. புலிகள் தங்கள் பாசிசமாக்களின் போது எதைச் செய்தனரோ, அதையே அரசு அவர்களைக் கொண்டு மிளச் செய்கின்றது.
புலிகளின் மேல்மட்டத்தில் இருந்த இந்த பிழைப்புவாதிகள் தான், அரசின் பின்னான இனவழிப்பை முன்னெடுத்து செல்லும் முன்னணி காதநயகர்கள். புலிகளின் அடிமட்டத்தில் செயல்பட்டவர்கள் சித்திரவதைகளையும், தினம் தினம் அரசு காண்கணிப்புக்கு கீழ் தொடர்ந்து அவதிப்பட்டு வாழ்கின்ற போது, புலியில் பிழைப்பு நடத்திய கூட்டமும் வசதிவாய்புகளுடன் இன்று சுதந்திரமாக அரசின் இனவழிப்பு நிகழ்சியை முன்னெடுத்துச் செல்லுகின்றனர். தங்களை ஜனநாயகத்தின் துண்களாக, கவலராக காட்டிக்கொண்டு பவணி வருகின்றனர்.
இந்த வகையில் நேரடியாகவும், மூடிமறைக்கப்பட்ட இரண்டு பாசிசமாக்கல் நிகழ்ச்சி நிரலை அரசு இன்று முன்னெக்கின்றது. அரசு இன்று இந்த வகையில் செயற்படவில்லை என்ற சொல்ல, எவராலும் முடியாது. இந்த உண்மையை மறுப்பதும், கண்டு கொள்ளமால் இருப்பதும் கடைந்தெடுத்த அரசியல் மோசடியாகும்.
அரச இதை மட்டும் செய்யவில்லை. இன்று இது அனைத்தை உடூருவுகின்றது. அரசு சமூக உறுப்புகளை தன்வசப்பபடுத்துவும் முடியாத போது அதை பயன்படுத்தவும் முனைகின்றது. இந்த வகையில் அதை விலைக்கு வாங்குகின்றது அல்லது சிலரை தன்வசப்படுத்துகின்றது. பதவி, பட்டங்களைக் கொடுப்பதன் மூலம் செயலற்றதாகின்றது. இப்படி எங்கெல்லாம் தனக்கு எதிரான செயல்படுகள் நடக்கின்றதோ, அங்கு அதை சிதைக்கவும் அதை தன் வசப்படுத்தவும் முனைகின்றது. புலம்பெயர் தேசம் வரை அரசு இந்த அடிப்படையில் செயல்படுகின்றது. இதை அரசு வெளிப்படையாக அறிவித்துமுள்ளது. கண்டு கொள்ளாத மோசடியை இனம்காட்ட வேண்டும்.
இதன் மேல் இன்று அரசியல் விழிப்புர்ணவு இல்லாத, இதில் யார் எப்படி எந்த மூகமுடியின் கீழ் செயல்படுகின்றனர் என்ற அரசியல் கண்ணோட்டமின்றிய அரசியல் பிரமுகர்கள் பின்புலத்தில் தான், அரச பாசிசமாக்கல் மெதுவாக எங்கும் எதிலும் புகுந்து வருகின்றது. இதை பற்றி அலட்டிக் கொள்ளாத இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியல் பின்புலத்தை, நாம் இன்று தோல் உரிதாக வேண்டியுள்ளது
இந்த வகையில் அரசின் பாசிசமாக்களை எதிர்கொள்ளும் வண்ணம், செயல்பட்ட மூகமுடி அரசியல் புலி பாசிசமாக்கல் காலத்தில் கூட காணப்பட்டடது. பாசிசமாக்களுக்கு எதிரான இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியல் விழிப்பூட்டும் சிந்தனை தளத்தை, எந்த வகையில் அரசு சிதைக்கவும் கைபற்றவும் முனைகின்ற என்பதை இனம் காண்பது இன்று அவசியமானது. இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியல் துறையில் இயங்குகின்ற அனைவரும், இதை தங்கள் அளவில் இதை தெளிவுபடுத்தி செயல்படவேண்டியவராக உள்ளனர்..
இதில் முக்கியமானது அரசுடன் எதோவொரு வகையில் வெனிப்படையாக சேர்ந்து செயல்படுவர்கள் குறித்தல்ல. மாறாக மூடிமறைத்து செயல்படுவர்கள் யார்? எப்படி? எந்தவகையில் என்பதை அனைவரும் முன்வைக்க வேண்டும்.
இன்று சிந்தனை தளத்தில் செய்யபடுகின்ற அரசியல் விழிப்புணர்ச்சி தான், அரச பாசிசத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டும். இதைச் செய்யாதவை அனைத்தும் அரசின் இனவழிப்பை அடிப்படையாகக் கொண்ட, பாசிசமாக்களுக்கு உதவுவானவாகவே செயல்படுகின்றது.
இதற்கான அரசியல் அடித்தளத்ததை, இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியல் பிரமுகர் அடித் தளத்தில் இருந்துதான் செயல்படுகின்றது. இதற்கு வெளியில் அல்ல. புலத்திலும், நாட்டிலும் விதவிதமான அரசியல் முகமுடிகளுடன் கூடிய பிரமுகர்கள், தமக்குள் உதிரிக் கும்பலாக கூட்டு சேர்ந்தும், முதுகுசொறியும் பிரமுகர் அடித்தளத்திலும் இவை ஒன்று கூடி செயல்படுகின்றனர்.
இவர்கள் தங்கள் பிரமுகர்தனத்தின் இருப்பு சார்ந்த பிழைப்புத்தனத்தை அடிப்படையாகக் கொண்ட தங்கள் சிந்தனை தளத்தை, அரச பாசிசத்தை எதிர்க்காத சிந்தனை தளமாக மாற்றுகின்றனர்.
தமக்கான மேடையும், குறுகிய புகழும், முதுகுசொறியும் அரசியல் அடித்தளத்தில் கூடுடி இயங்கும் இந்த பிரமுகப் பிழைப்புவாதிகள் பின்புலத்தில் தான், அரசு தன் பாசிசத்தை இன்று நிறுவனப்படுத்துகின்றது.
அரச பாசிசத்தை எதிர்க்காத, அதற்காக செயற்படாத பிரமுகர்களின் அரசியல் பின்புலத்தில், பிரமுகர் என்ற இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியல் அடையாளத்தை, அடிப்படையாக கொண்ட கூட்டு தளத்தில் அரச பாசிசம் இயங்குகின்றது. முதுசொறிவதன் மூலம் இவர்களை தன்பின் ஒன்று இனைகின்றது. வலது இடது மற்ற, வர்க்க அடிப்படையற்ற, அரசு மக்கள் என்ற வேறுபட்டயற்ற … இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியல் பிரமுகர் அடையாளத்தின் கீழ், தம்மை மையப்படுத்திய தம்மை முன்னிறுத்தி பிழைப்புவாத பிரமுகராக செயல்படுகின்றனர்.
அரசு பாசிசத்தை எதிர் கொள்ளும் மக்களின் இருந்து விலகிய, இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியல் கோட்பாட்டு சிந்தனைகளை முன்தள்ளியபடி, இவர்கள் தம்மைத்தாம் முன்நிறுத்துகின்றனர். அரசையும் அரச பாசிசத்தையும் எதிர்கொண்டு போராடும் சிந்தனைக்கு புறம்பான சித்தாந்தங்களையும், பிளவுவாதக் கோட்பாடுகளையும் .. முன் வைத்தபடி அரசின் நேரடி மற்றும் மறைமுகத் தயவில் மிக சுதந்திரமாக இயங்குகின்றனர். இதில் சிலர் அரசால் இயக்க வைக்கப்படுகின்றனர்.
இந்த வகையில் கருணாகரனை அரசு இயங்க வைத்திருகின்றது. புலியின் அவர் எதைச் செய்தரோ, அதை அரசுக்கு பின்னால் நின்று செய்கின்றார். புலியில் இருந்த போது அவர் எதைச் செய்தார் என்ற தெளிவை நாம் பெறுதன் மூலம், அரசுக்கு பின் நின்று செய்வதை இன்று நாம் புரிந்து கொள்ள முடியும்.
தொடரும்
பி.இரயாகரன்
17.07.2012
1.
இலங்கை அரசுக்கு பின் இயங்கும் இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியலை இனம் காணல் - பகுதி 01
இதனுடன் தொடர்புடைய கட்டுரைகள்
1."கறுப்பு வெள்ளை" குறுகிய அரசியலாம் - முன்னாள் புலிப் பிரமுகர் கருணாகரன் (பகுதி – 01)
2.புலிகளின் "பரப்புரைத் தேவைக்கு அப்பால்" வெளிவந்ததாம் "வெளிச்சம்" இதழ்- முன்னாள் புலிப் பிரமுகர் கருணாகரன் (பகுதி – 02)
3."பல அணிகளில் இருந்தவர்களும், பல முகாம்களைச் சேர்ந்தவர்களும்;" பற்றி - முன்னாள் புலிப் பிரமுகர் கருணாகரன் (பகுதி – 03)
4.யோ.கர்ணனின் "சேகுவேரா இருந்த வீடு" என்ற சிறுகதைத் தொகுப்பின் ஊடான "புனர்வாழ்வு" அரசியலை இனம் காணல்
5.புஸ்பராணியின் முதுகில் எறி சவாரி செய்யும் புத்திஜீவிகள்
6.அ.மார்க்சின் அரசியல் நோக்கம், இலங்கை அரசின் அரசியல் நோக்கத்தில் இருந்து வேறுபட்டதா!?
7.அ.மார்க்ஸ் தன் தத்துவத்தையே மறுக்கும் ஒரு சந்தர்ப்பவாதி என்கின்றார் சோபாசக்தி