Language Selection

பி.இரயாகரன் -2012
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அரசின் புனர்வாழ்வுக்கு கூட உள்ளாகாத, அரசின் அதே அரசியல் அடித்தளத்தைக் கொண்ட  கருணாகரன் மூலம், அரசு தமிழ் இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியலில் தளத்தை கைப்பற்ற முனைகின்றது. அரச பாசிம் மண்ணிலும் -  புலத்திலும், இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியலில் முயற்சிகளை முடுக்கிவிட்டு இருக்கின்றது.

இந்த அரசியல் பின்புலத்தில் கருணாகரன் புலி "தவறு"கள் பற்றி கூறிக் கொண்டு, இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியலில் இறங்கியுள்ளார். இந்த அரசு சார்பு அரசியல் பின்புலத்தை அரசியல் ரீதியாக இனம் காண்பது இன்று அவசரமானதும் அவசியமானதுமாகி இருக்கின்றது.

இன்று இலங்கையில்

1.அரச பாசிசத்தை விமர்சிக்காத, அதை எதிர்த்து போராடாத இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியல் என்பது அரசுக்கு சார்பாக நின்று செயல்படுவதுதாகும்.

2.ஒடுக்கப்பட்ட மக்களை சார்ந்து நின்று பேசாத, செயற்படாத அரசியல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக, அரசுடன் சேர்ந்து செய்யும் சதியாகும்.

இந்த அடிப்படையில் எதிரிகளை இன்று இனம் காணவேண்டும். அரசு பாசிசத்தின் பின்னால் நின்று இயங்கும், இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியல் புலம்பெயர் நாடுகள் வரை மெதுவாக ஊடுரூவி வருகின்றது. இலங்கையில் இருந்து இயங்கும் கருணாகரன் தலைமையிலான குழுவே, இந்த அரசியல் பின்புலத்தில் முன்னின்று செயல்படுத்தி வருகின்றது.

புலி "தவறு" பற்றி விமர்சனம் மூலமும், மார்க்சிய விரோத தத்துவங்களையும் கண்ணோட்டங்களையும் முன்னிறுத்துவதன் மூலமும், பிரமுகர் கொண்ட அரசியல் அடித்தளத்தை அரச பாசிச பின்புலத்தில் இடுகின்றனர்.

இந்த வகையில் செயல்படும் கருணாகரன் சார்ந்த கூட்டம், புலித் "தவறு" பற்றி பேசுகின்றனர். புலியுடன் இருந்த வரை அரசின் இனவாதம் பற்றி பேசியவர்கள், அரசின் வர்க்க ஒடுக்குமுறையை பேசாதவர்களாகவே இருந்தனர். இன்று புலி "தவறு" பற்றி பேகின்றவர்கள், புலியின் வர்க்க அரசியலை சரி என்று கருதுகின்ற அரசியல் அடிப்படையில் நின்று, அரசின் வர்க்க அரசியலுடன் ஒன்றினைந்து புலித் "தவறு" பற்றி பேசமுற்படுகின்றனர்.

இன்று அரச பாசிசத்தைப் பற்றி பேச  வேண்டிய நிலையில், புலித் "தவறு" பற்றி அரசின் நிகழ்ச்சி நிரலுக்குள் நின்று பேசுகின்றனர். இதன் மூலம் இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியலை அரசின் பின் வழி நடத்த முனைகின்றனர்.

அரச பாசிசம் இன்று இலங்கையில் ஊடாகச் சுதந்திரம், கருத்து சுதந்திரத்தையே இல்லதாக்கும் அரசியல் வெளியில் தான், கருணாகரன் போன்றவர்களின் இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியல்  சுதந்திரமாக வெளிப்படையாக ஆர்ப்பட்டமாக வெளி வருகின்றனர். மக்கள் அன்றாடம் போராடும் மண்ணில், அதற்கு எதிரான அரசியல் தளத்தில் நின்று இவர்களின் எழுத்துகள் வெளிவருகின்றது. அரச பாசிசத்தை கேள்விக்குள்ளாக்காத, அதை எதிர்த்து போராடாத அரசியல் தளத்தில், வெளிவரும்  இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியல், இலங்கை அரச பாசிசத்தை அடிப்படையாக கொண்ட பின்புலத்தில் வெளிவருகின்றது.

அரசு இன்று பல முனைகளில் பாசிசத்தை புகுத்தி வருகின்றது. படசாலைகளை கூட இராணுவ மயமாக்கும் அரசு, இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியலையும் தனக்கு கீழ் வளைச்சுப் போடத் தொடங்கி இருக்கின்றது. யுத்தத்தின் பின்னான அரசின் செயற்பாடு என்பது, இனவழிப்பை மையப்படுத்தி இலங்கை மக்களை ஒடுக்குவது தான்.

இந்த வகையில் தன் பாசிச வடிவத்துக்குள் முன்னாள் புலி முக்கியஸ்தர்களை அரசியலுக்கு கொண்டு வந்து தமிழரை பிளந்து ஒடுக்குது போன்று, இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியலை அரசு தனக்கு கீழ் கொண்டுவரத் தொடங்கி இருக்கின்றது. புலம்பெயர் நாடுகள் வரை இந்த வேர் இன்று மெதுவாக பரவத் தொடங்கி இருக்கின்றது.

இந்த வகையில் கருணாகரன் இதற்கு தலைமை தாங்குகின்றார். அன்று புலியில் இருந்த போது அவர் எதை அங்கு செய்தரோ, அதே உத்தியை அரச பாசிசத்திற்க்கு பின்னால் நின்று இன்று செய்யத் தொடங்கியுள்ளார். தான் அன்று புலிக்கு பின் நின்று செய்ததை பற்றி அவரே கூறுகின்றார் கேளுங்கள் "ஒரு அரசியல் அமைப்பின் வெளியீடானது - ஊடகமானது - அந்த அரசியல் அமைப்பின் எதிர்பார்ப்பு மற்றும் சம்பிரதாயபூர்வமான வரையறைகளுக்கு உட்பட்டிருக்கும் பரப்புரைத் தேவைக்குப் பயன்படுத்தப்படும் என்பதற்கு அப்பால் செயற்பட வேண்டும் என்ற அடிப்படையில் வெளிச்சத்தை வெளிக்கொணர்ந்தோம். இதை நான் ஆரம்பத்திலேயே வலியுறுத்தியிருந்தேன். வெளிச் சூழலிலும் பல அணிகளில் இருந்தவர்களும், பல முகாம்களைச் சேர்ந்தவர்களும் பல அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இதைப் புரிந்து கொண்டு, தங்கள் வரையறைகளைக் கடந்து ஒத்துழைத்தனர்." என்கின்றார். இன்று அரசுக்கு பின்னால் நின்று, அதே உத்தியைத்தான் கையாளுகின்றார். அரச பரப்புரைக்கு வெளியில் அதன் தேவை பூர்த்தி செய்வது. இது தான் அவரின் இலக்கு. அரசை பாதுகாக்க மக்களின் கவணத்தை வேறு திசையில் இட்டுச் செல்வது போல், அரச பாசிசத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டாத இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியலை நோக்கி சமூக முன்னோடிகளை வழிநடத்துவது. புலிகளின் இருந்த போது இதைச் செய்த கருணாகரன், இன்று அரசுக்கு பின்ளால் நின்று அதையே செய்கின்றார்.

அப்படி அன்று தன்னுடன் சேர்ந்த நின்று புலிப்பாசிசத்திற்கு ஓத்துழைத்தவர்கள் யார் என்ற  விபரத்தை அவரே முன்வைகின்றார் கேளுங்கள் "வெளிச்சத்தில் பேராசிரியர் கா. சிவத்தம்பியும் எழுதினார். அ. யேசுராசாவும் எழுதினார். அன்ரன் பாலசிங்கமும் எழுதினார். தேசிய கலை, இலக்கியப் பேரவையைச் சேர்ந்த க. தணிகாசலமும் (தாயகம் ஆசிரியர்) எழுதினார். பேராசிரியர் சோ.கிருஸ்ணராஜா, கலாநிதி சபா ஜெயராசா ஆகியோரும் எழுதினர். செங்கை ஆழியானும் எழுதினார். சட்டநாதனும் எழுதினார். டானியல் அன்ரனியும் எழுதினார். முருகையன், குழந்தை ம. சண்முகலிங்கம், சாந்தன், கோகிலா மகேந்திரன், தாமரைச்செல்வி, சு.வி.நிலாந்தன், மு.திருநாவுக்கரசு, த.கலாமணி, பா.அகிலன் என சகல தரப்பினரும் எழுதினர். மேலும் பலரை எழுதுவதற்கு நாங்கள் தூண்டியிருக்கலாம். ஆனால், அன்றைய நிலையில் ‘வெளிச்சம்’ இதழ் வெளிவந்த களத்துக்கு வெளியே இருந்தவர்களை எழுதக்கோருவதற்குப் பொருத்தமற்ற சூழல் நிலவியது. மற்றும்படி சாத்தியப்பட்ட அளவில் ஈழத்தின் இலக்கிய ஆளுமைகளிற் பெரும்பாலானவர்கள் எழுதுவதற்கான, பங்கேற்பதற்கான களத்தைத் திறந்தோம். மேலும் ஏராளம் புதியவர்கள் வெளிச்சத்தில் தொடர்ந்து அறிமுகமாகியவாறேயிருந்தனர். முஸ்லிம் படைப்பாளிகளை போதிய அளவில் உள்ளடக்க முடியாமற்போனமை பெரும் குறைபாடே. ஒரு சிலர் மட்டும் எழுதியுள்ளனர்." என்கின்றார்.

இன்று இவரின் அரச பாசிசத்தின் பின்னான அரசியல் செயல்பாட்டுக்கு ஒத்துழைப்பவர்கள் யார்?  சோபாசக்தி, அ.மார்க்ஸ், மீரா … தொடங்கி எதுவரை, காலச்சுவடு, கீற்று …. மட்டுமா இல்லை புஸ்பராணி, தேசிய கலை இலக்கிய பேரவை… என்று, பலதளத்தில் இவற்றையும், இவரின் பின்புல முயற்சிகளையும் இன்று அடையாளம் காணமுடிகின்றது. செயலற்ற, செயலை அரசியலாக கோராத பிரமுகளைக் கொண்ட அரசியல் அடித்தளத்தில் தான் அரச பாசிசம் வித்திடப்படுகின்றது.

இன்று அரச பாசிசத்துக்கு பின்னால் இயங்கும் கருணாகரன் அரசுக்கு பின்னால் முதலில் பிரமுகர்களையும் அணிதிரட்டும், இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியலைத் தொடங்கி உள்ளார். இலங்கை பாசிச அரசின் "சம்பிரதாயபூர்வமான வரையறைகளுக்கு உட்பட்டிருக்கும் பரப்புரைத் தேவைக்குப் பயன்படுத்தப்படும் என்பதற்கு அப்பால் செயற்பட வேண்டும்" என்ற அடிப்படையில், இன்று அதை இவர் முன்னெடுத்துச் செல்லுகின்றார்.

தொடரும்

பி.இரயாகரன்

15.07.2012

இதனுடன் தொடர்புடைய கட்டுரைகள்

1."கறுப்பு வெள்ளை" குறுகிய அரசியலாம் - முன்னாள் புலிப் பிரமுகர் கருணாகரன் (பகுதி – 01)

2.புலிகளின் "பரப்புரைத் தேவைக்கு அப்பால்" வெளிவந்ததாம் "வெளிச்சம்" இதழ்- முன்னாள் புலிப் பிரமுகர் கருணாகரன் (பகுதி – 02)

3."பல அணிகளில் இருந்தவர்களும், பல முகாம்களைச் சேர்ந்தவர்களும்;" பற்றி - முன்னாள் புலிப் பிரமுகர் கருணாகரன் (பகுதி – 03)

4.யோ.கர்ணனின் "சேகுவேரா இருந்த வீடு" என்ற சிறுகதைத் தொகுப்பின் ஊடான "புனர்வாழ்வு" அரசியலை இனம் காணல்

5.புஸ்பராணியின் முதுகில் எறி சவாரி செய்யும் புத்திஜீவிகள்

6.அ.மார்க்சின் அரசியல் நோக்கம், இலங்கை அரசின் அரசியல் நோக்கத்தில் இருந்து வேறுபட்டதா!?

7.அ.மார்க்ஸ் தன் தத்துவத்தையே மறுக்கும் ஒரு சந்தர்ப்பவாதி என்கின்றார் சோபாசக்தி

8.தமிழின அழிப்புக்கு உதவும் அ.மார்க்ஸ்சின் யாழ்பாண வருகையும் , தமிழினியின் புனர்வாழ்வும் - நாகலிங்கம் சற்குணன்