Language Selection

சமர் - 20 : 01 -1997
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள எம்மவர்கள் தமது பணத்தை இலங்கை, இந்தியா......... போன்ற நாடுகளுக்குள் மாற்றிக்கொடுக்கும் இந்த உண்டியல் தொழில் ஒரு இலாபம் தரும் தொழிலாக இன்று உள்ளதுடன் கருப்புப் பணத்தை மாற்றிக்கொடுக்கும் வகையில் இலங்கை, இந்தியா..... ஊழல் கொள்ளை கரண்சியாகவும் மாற்றி விடுகின்றனர். எந்த சட்டவிரோதப் பணத்தையும் மாற்றிவிடும் இந்தத்தொழிலில் வீரகேசரி  விபச்சாரம் செய்யப்போனது தான் ஆட்ச்சரியமானது.

வெளிநாடு வரும் ஞாயிறு வீரகேரி வாரப் பத்திரிகையின் உள்ளே இன்றைய பணப் பெறுமதி என்னவென்று குறிப்பிட்டு வருவது வழக்கம். எம்மவர்கள் பணம் அனுப்பமுன் இதை ஒப்பிட்ட பின் உண்டியல் ரேற்றைக் கேட்டு அதைச் சரிபார்த்து தமது கடின உழைப்புப் பணத்தைக் கைமாற்றுவர். இந்த வீரகேசரி பணப்பெறமதி செய்தி உண்டியல் காரரக்கு ஒரு பெரிய தலையிடியாக இருந்தது. தமது பெரிய கொள்ளைக்கும் வாராவாராம் இலங்கைப் பணப் பெறுமதிக்கு இசைவாக 0,20,30,40 பிராங் குறையக் கொடுக்க வேண்டி ஒரு நெருக்கடிக்குள் குறைந்த இலாபத்தை வீரகேசரி மூலம் பெறவேண்டி இருந்ததால் இந்த உண்டியல் பேர்வழிகள் வீரகேரியுடன் நடந்த பேரத்தின் பின்  வீரகேரி அப்பகுதியை போடுவதையே திட்டமிட்டு கைவிட்டுள்ளத. இதன் மூலம் இல்கை, இந்தியப் பெறுமதியை திட்டமிட்டு மறைக்க உதவியதன் மூலம் உண்டியல் பேர்வழிகள் பச்சையாகவே கொள்ளையடிக்க வீரகேசரி துணைபோயுள்ளனர். வாழ்க! கொள்ளையடிப்போர் சார்பான உங்கள் பேரங்களும் சம்திங்குகளும்.