பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்த யூத இனவெறியர்கள் 2ம் உலகயுத்தின் பின் மிகமோசமான ஒரு காட்டாட்சியை நடத்திவந்தனர். ஜனநாயகம் பற்றி உரத்துக் கத்தும் ஏகாதிபத்தியங்கள் சாமரம் வீச, இஸ்ரேலிய இனவெறியர்கள் இந்த மண்ணின் உரிமையாளர்களை, அவர்களின் ஜனநாயக உரிமைகளை அடக்கியொடுக்கி சுடகாடாக படுகொலைகளின் மூலம் இராணுவ ஆட்சிகளை இந்த ஜனநாயகத்தின் பேரில் நடத்தினர். இதை எதிர்த்துப் போராடிய மண்ணின் மைந்தர்களான பாஸ்தீன வீரர்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி பயங்கரவாத காட்டாச்சி நடத்தினர். கொள்ளை, கொலை, கற்பழிப்பு...ஊடாகவே இஸ்ரேல் என்ற இந்த நாடு உருவானது.
இந்நிலையில் தான் இன்று யுத்தத்தின் அவசியம் அரசியல் இல்லாது போனதால் அமெரிக்கா தலைமையில் ஒரு துரோக ஒப்பந்தம் பாலஸ்தீன மக்கள் மீது திணிக்கப்பட்டது. இத்துரோகத்திற்கு அராபத் தலைமை தாங்க சொந்த மண்ணை அடகு வைத்து விபச்சாரம் செய்வதுடன், கடந்த பல பத்துவருட போராட்டத் தியகங்களையும், உணர்வுகளையும் கொச்சைப்படுத்தி ஏகாதிபத்தியங்களுக்குச் சேவகம் செய்ய பாலஸ்தீன மக்களையும் அழைத்துள்ளது. இந்நிலையில் தான் பாலஸ்தீன மக்கள் அதை எதிர்த்து போராடப் புறப்பட்டுள்ளனர். இந்த வகையில் போராடும் "அமாஸ்" என்ற அமைப்பு சொந்த மக்களைச் சார்ந்து அவர்களை போராட்த்தில் இணைப்பதற்குப் பதில் தனிநபர் பயங்கரவாத வழிமுறைகளைப் பின்பற்றுகின்றனர். இஸ்ரேல் ஆக்கிரமித்த பாலஸ்தீன மண்ணிலுள்ள யூதக் குடியிருப்புக்கள் மீது தொடர்ச்சியான மனித வெடிகுண்டுத் தாக்குதலை நடத்தினர்.
இதன் மூலம் பல அப்பாவிப் பொதுமக்களை கொன்றதன் மூலம் பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தை கறைபடிய வைத்தனர். இஸ்ரேலிய இனவெறி பாசிச அரச பயங்கரவாதத்தை எதிர்கொள்ள "அமாஸ்" தேர்ந்தெடுத்த வழி என்பது, பாலஸ்தீன மண்ணின் மைந்தர்களின் போராட்ட அடிப்படையை, எமதுமண் என்ற உரிமையை சர்வதேச சமூகம் முன் மறுதலிப்பதலிப்பதற்கு இட்டுச் சென்றுள்ளது. தொடர் குண்டு வெடிப்புக்களைத் தொடர்ந்து மேற்கு நாடுகள் எங்கும் ஆர்ப்பாட்டங்களும், மணிக்கணக்கான செய்தி ஊடகங்களின் ஒப்பாரி எனவும் தொடர்ந்தது. பிரான்ஸ் ஆளம் கட்சியும், எதிர்க் கட்சிகளும் கூட்டாகச்சேர்ந்து ஆhப்பாட்டம் நடத்தினர். இதேநேரம் இக்கட்சிகள் உள்நாட்டில் நடந்த தொழிலாளர் போராட்டத்தில் ஈடுபடவில்லை. இது மேற்கு நாடுகள் எங்கும் ஒரெ மாதியாக நடந்தன. ஆம் மேற்கு நாடுகளில் உள்ள ஆட்சியாhhகளினதும், முதலாளிகளினதும் யூத ஆதிக்கத்தை பறைசாற்றியது. ஆளும்பீட யூத விசுவாசத்தை வெளிப்படுத்த மறுபக்கம் யூத எதிர்ப்பு எங்கும் விரிவுபட்டுள்ளது. அது நாசிகட்கு வழங்கப்பட்ட தங்கத்தட்டாக இந்நிகழ்ச்சிகள் உள்ளது.
இத்தொடர் குண்டுவெடிப்புக்களைத் தொடாந்து பயங்கரவாத ஒழிப்பு என்ற கூச்சலின் ஊடாக எகிப்தில் பலநாடுகளின் ஆளும் தலைவர்கள் கூடி, எதிர்காலத்தில் மக்கள் போராட்டத்தையே பயங்கரவாத பூச்சாண்டி காட்டி அடக்க ஒரு பிரச்சார மேடையாகப் பயன்படுத்தினர். ஆம், இதுபோன்ற ஒரு கற்பனையான பயங்கரவாத தோற்றத்தை பரப்ப "அமாஸ்" போன்ற குழக்களின் தனிநபர் பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக அமைகின்றன. எகிப்தில் கூடிய பயங்கரவாதத் தலைவர்களின் ஜனநாயகம் பற்றிய பிதற்றலும், பயங்கரவாத ஒழிப்பையும், எமது துரோகத் தலைவர்களின் ஜனநாயகத்துடனும், துரோகத்துடனும் நாம் ஒப்பிட்டு இனம்கான முடியும்.
எதிர்காலத்தில் மக்களைச் சாராத, தனிநபர் பயங்கரவாதத் தாக்குதல்கள் கடுமையான பின் விளைவுகளை அப்போராட்டத்தில் நியாயங்கள் மீது நிகழவுள்ளது. இந்தவகையில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடாத்தும் "அமாஸ்", புலிகள், அல்ஜீரியாக் குழக்கள்... எனப் பல குழக்களின் நடவடிக்கைகள் அவர்ளின் போராட்ட நடவடிக்கையின் பின்னுள்ள நியாயத்தையே குழிதோண்டி புதைத்துவிடும் அளவிற்கு இட்டுச் செல்லும்.
அப்பாவி மக்களைப் பாதிக்காத வகையில், அரசுயந்திரத்தின் மீதும் தாக்குதலை நடாத்துவதும், அதை மக்களை இணைத்துக்கொள்வதன் மூலம் வெகுஜனப் போராட்டமாக மாற்றுவதும் இதுபொன்ற தனிநபர் நடவடிக்கையில் ஈடுபடுபவர்களின் சுயவிமர்சனத்துடன் கூடிய கடமையாகும்.