சென்ற இதழின் இத் தொடர்ச்சியை நாம் மேலும் விரிவாக ஆராய்வது மேலும் மேலும் பிரஞ்சு சமுதாயத்தை புரிந்து கொள்வதன் மூலம் சர்வதேச சமுகத்தையும் புரிந்துகொள்ள உதவும். சர்வதேச ரீதியாக இவ்விடயத்தை உங்கள் முன் இக்கட்டுரையின் மூலமும் வெளிக்கொண்டு வருகின்றோம். சர்வதேச ரீதியாக உற்பத்தியை வருடம் (Pஐடீ) ஒன்றுக்கு நாம் முன்னணி ஒழுங்கில் ஆய்வு செய்வோமாயின்
நாடுகள் 1950ல் கோடி டாலரில்- 1990 பெறுமதிப்படி நாடுகள் 1994ல் கோடி டாலரில் 1990 பெறுமதிப்படி அதிகரிப்பு
அமெரிக்கா 1,45,700 அமெரிக்கா 5,90,300 405 வீதம்
சோவி.யூனியன் 51,000 சீனா-1992ல் 3,61,500 1079 வீதம்
இங்கிலாந்து 34,000 ஜப்பான் 2,44,100 1564 வீதம்
சீனா 33,000 ஜெர்மனி 1,68,000 788 வீதம்
பிரான்ஸ் 21,800 இந்தியா-1992 1,18,800 555 வீதம்
இந்தியா 21,400 பிரான்ஸ் 1,04,200 477 வீதம்
ஜெர்மனி 21,300 இங்கிலாந்து 96,100 282 வீதம்
இத்தாலி 16,100 இத்தாலி 95,300 598 வீதம்
ஜப்பான் 15,600 ருசியா-1992ல் 80,100 157 வீதம்
கனடா 9,600 பிரேசில் 78,100 -
முதல் பத்து நாடுகளின் வளர்ச்சி விகிதம் 1950களில் இருந்ததை விட 1994ல் பாரிய மாற்றத்துக்கு உள்ளாகியுள்ளது. அத்துடன் மக்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு இவ்வளர்ச்சி விகிதம் அளவிடப்படவில்லை. மொத்த தேசிய வருமானத்தைக் கொண்டு கணிப்பிடப்பட்டது. 1950களில் முன்னணியில் இருந்த சோவியத் பொருளாதாரம் 1994ல் படு பாதாளத்துக்குச் சென்றுள்ளது. கமியூனிசத்தை 1950களின் பின் கைவிட்ட அந்நாடு படிப்படியான முதலாளித்துவ மீட்சியின் தொடர்ச்சியில் 1994ல் 9வது இடத்துக்குச் சென்றதுடன் 157வீத வளர்ச்சியை மட்டுமே 45 ஆண்டுகளின் பின் சாதிக்க முடிந்தது. அதேநேரம் 1950 களில் புரட்சியை நடத்திய சீனா 5வருடத்தில் இருந்து 2வது இடத்துக்கு வந்துள்ளது. இதன் வளர்ச்சி 1079வீதமாக இருந்தது. சீனா 1980களில் கைவிட்ட கமியூனிசத்தைத் தொடர்ந்து முதலாளித்துவ மீட்சி அந்நாட்டுப் பொருளாதாரத்தை எதிர்காலத்தில் பின்தள்ளப் போவதுடன் உலகில் மிகக் குறைந்த மலிவு உழைப்புச் சந்தையாகவும் இன்று மாறியுள்ளது.
2ம் உலக யுத்தத்தில் பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன் யத்த இழப்புக்களை பெற்று தம்மைப் பலப்படுத்திய நேரம் பாரிய மிக மோசமான யுத்த இழப்பைச் சந்தித்த சோவியத் யூனியன் யுத்த இழப்பின்றி தன்னை முன்னணிக்குக் கொண்டுவந்தது மட்டுமன்றி புதிதாக உருவான கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும், சீனாவுக்கும் கூட பாரிய உதவிகளை நல்கவேண்டி இருந்தது. இந்த நிலைகளில் கூட தன்னை மேல்நிலைக்கு உயர்த்தியதுடன் மற்றைய முன்னைய வல்லரசுகளின் பொருள் உற்பத்தியைக் கூட மிஞ்சினர். இன்று அந்நாடு கமியூனிசத்தைக் கைவிட்டு முதலாளித்துவத்தை மீட்டது என்பது அதன் பொருளாதாரத்தை படுமோசமான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. அதேநேரம் இரண்டாம் உலக யுத்தத்தை தொடங்கிய ஜெர்மன், ஜப்பான் போன்ற நாடுகள் 1950களில் இருந்த நிலையை விட 3ம் 4ம் இடங்களுக்கு வந்ததுடன், ஜப்பான் அதிகூடிய வளர்ச்சி வீதத்தை 1564 வீதத்தை அடைந்தனர்.
இன்று முன்னணியில் நிற்கும் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனிய உற்பத்திப் பொருக்கமானது உலகச் சந்தையை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. 1940களில் தோற்கடிக்கப்பட்ட ஜெர்மனி, ஜப்பானின் சந்தையைக் கைப்பற்றிய அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவற்றுக்கு இடையிலிருந்த உலக ஒழுங்கு இன்று ஜப்பான் ஜெர்மனியுடன் பங்கிடவேண்டிய நிலைக்குச் சென்றுள்ளது. அதேநேரம் சோவியத், சீனா உட்பட கிழக்கு ஐரோப்பிய நாட்டுச்சந்தை புதிதாக உருவான போதும் அங்கும் இவை பல நெருக்கடிக்கு முகம் கொடுப்பதுடன், தமது பொருட்களை சந்தைப்படுத்த முடியாத நிலையில் இன்றுள்ளனர். இது மூன்றாவது உலகயுத்தம் ஒன்றின் மூலம் மட்டுமே தீர்க்க முடியுமென்ற போக்கில் தம்மைத் தாம் மறைமுகமாக யுத்த்திற்கு தயார் செய்கின்றனர். இந் நாடுகளில் ஏற்படும் சமுக நெடுக்கடிகள் இந்நாடுகளில் (பு-7 நாடுகள்) 2கோடியே 30 இலட்சம் பேர் வேலைதேடும் அலுவலகத்தில் வேலைகேட்டு நிற்கின்றனர். இப் புள்ளிவிபரம் கூட உண்மையில் இரட்டிப்பானது என்பதுடன், இது வேலை இல்லாமையை குறைத்துக் காட்டும் நடைமுறைகளக்கு ஊடாகவே வெளிவந்தவை.
உலகிலுள்ள பு-7 என்ற பணக்கார நாடுகளில் கட்டுப்படுத்தப்படும் மொத்த செல்வம் (PNடீ) என்னவென ஆராய்வோமாயின்@
நாடுகள் வீதம்
அமெரிக்கா 26.3
ஜப்பான் 15.4
வளர்முக நாடுகள் 16.3
வளர்ச்சி குன்றிய நாடு 16.1
வளர்முக நாடுகள் 16.3
மொத்த விகிதம்
சீனா 2.5
ஸ்பானியா 2.4
பிரேசில் 1.9
ருசியா 1.8
கொலண் 1.4
தென்.கொரியா 1.4
மெக்சிக்கோ 1.3
ஒஸ்திரியா 1.3
இந்தியா 1.2
சுவிஸ் 1.1
ஜெர்மனி 8.1
பிரான்ஸ் 5.6
இத்தாலி 5.1
இங்கிலாந்து 4.5
கனடா 2.6
g-7 என்ற 7 பணக்கார நாடுகளும் உலக செல்வத்தில் 67.6 வீதத்தை கட்டுப்படுத் தும் மொத்த செல்வம் 60,00,000 கோடி பிராங்குகள் ஆகும். இங்கு மெத்த வேலை யின்மை 230 இலட்சம் பேர் ஆவர். உண்மையில் செல்வம் சரியாகப் பங்கிடப்படின் சீனா, இந்தியா சராசரி 20 வீதமளவு செல்வம் பகிரப்படுவதன் மூலம் மட்டுமே உலக செல்வம் சமமாகப் பகிரப்டும். ஆனால் இன்று உலகம் மறுதலையாக போலியான ஜனநாகம் கூறிதனிநபர், பொருளாதார சூறையாடல்தான் ஜனநாயகம் என ஏற்படுத்தி, பின் ஒருசில பணக்கார நாடுகள் உலகசெல்வத்தை கொள்ளை யடித்துச் செல்கின்றன.
இதற்காக ஜனநாயகம், ஜனநாயகம் என அதிகம் கதைப்பதுடன் தமக்கு இசைவாக சர்வதேசிய அரசியல் போக்கை ஏற்படுத்தியும், எல்லா நாட்டு அரசு அமைப்புக்களையும் ஏற்படுத்தி, அது சிதையாத வண்ணம் பாதுகாக்க எல்லாவிதமான முண்டுகொடுப்புகளையும் செய்து நிற்கின்றன. மக்களின் மீது தமது ஆதிக்கத்தைச் செலுத்த 99வீதமான செய்தி ஊடகங்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுடன், அதன் மூலம் ஜனநாயம் பற்றி ஒரு பொய்மை கொண்ட மாயைத் தோற்றத்தை ஏற்படுத்தியும் வருகின்றனர். இதற்கொன ஐக்கிய நாடுகள் சபையை தமது கையக்குள் போட்டு வைத்திருப்பதுடன், நமது செந்த நலன்களுக்ளே பயன்படுத்தியும் வருகின்றனர். ஐக்கிய நாடுகள் சபையும் யார் அதிக பணம் கொடுக்கின்றார்களோ அதற்கு இசைவாக உலக ஒழுங்கை ஜனநாயகத்தின் பெயரால் ஒழுங்குசெய்யும் முயற்சி தீவிரமடைகின்றது. அதை மறுக்கும் போது நெருக்கடி உருவாகிறது. இன்று ஐக்கிய நாடுகள் சபைக்கு தேவையான பணத்தைக் கொடுக்கும் நாடுகளைப் பட்டியலிட்டால்...@
ஐக்கிய நாடுகள் சபைக்கு பணம் கொடுக்கச் சம்மதித்து கொடுக்கப்படவுள்ள தொகையும் நாடுகளும் இவை.
நமடுகள் வீதம்
அமெரிக்கா 25வீதம்
ஜப்பான் 13.9 ,,
ஜெர்மனி 8.9 ,,
ருசியா 7.1 ,,
பிரான்ஸ் 6.3 ,,
இங்கிலாந்து 5.3 ,,
இத்தாலி 4.7 ,,
ஏனையவை 28.7 ,,
நாடுகள் டொலர்
அமெரிக்கா 12,310
ருசியா 4,050
உக்கிரன் 2,280
பெல்ருசியா 590
ஜெர்மனி 280
ஈரான் 210
ஸ்பானிஸ் 190
சீனா 170
பிரான்ஸ் 150
ஐக்கிய நாட்டுச் சபைக்கு கொடுக்காது உள்ள பணம்
உலகில் பணக்காரன் ஏழைகள், தொழிலாளியை எப்படி ஆளுகின்றானோ, அதேபோல பணக்கார நாடுகளின் பொம்மையாக ஐக்கிய நாடுகள் இன்றுள்ளது. இன்று 2, 3 அளவில் பெரும் தொகை பணம் கொடுக்கும் ஜப்பான், ஜெர்மனி தனக்கான உரிமைகோரி தொடர்ச்சியாக குரல் கொடுக்கிறது.