யூலை, ஆகஸ்ட் மாதங்களில் பிரஞ்சு மண்ணில் நிற எதிர்ப்புப் போராட்டம் பரிணாமிக்கும் வகையில் கருப்பு இன மக்கள் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தனர். இப்போராட்டத்தை வன்முறை மூலம் நசுக்கிய பிரஞ்சு அரசும், பொலிசும் 50ம் நாள் இப்போராட்ட வீரர்களைக் கைதுசெய்து சிறைகளில் தள்ளினர்.
இந்நாட்டில் வாழ உரிமை மறுக்கப்பட்ட 300க்கு மேற்ப்பட்ட இம் மக்கள் போராட்டத்தின் பின் அனைத்து எதிர்க் கட்சிகளையும் (பாசிச நாசிக்கட்சியைத் தவிர) மற்றும் தொழிற் சங்கங்கள், மக்கள் உரிமைக்கு போராடும் அமைப்புக்களின் ஆதரவுடன் நடந்த இப்போராட்டம், அவர்களுக்கு ஆதரவான சில ஆர்ப்பாட்ட ஊர்வலங்களையும் நடத்தியது.
இன்று பிராஞ்சில் 300பேர் அல்ல ஒருசில இலட்சம் பேர் வாழும் உரிமை மறுக்கப்பட்டு, பொலிசுக்குப் பயந்து ஒளிந்துவாழும் வாழ்வை வாழ்கின்றனர். பொலிசில் பிடிபடின் அவர்களை உடனடியாக நாடுகடத்தும் வகையில் ஜெர்மன், பிரான்ஸ் கூட்டு விமான சேவையை நடத்துவதுடன் பிடிபடும் எண்ணிக்கைக்கு ஏற்ப வாராவாரம் நாடுகடத்தப் படுகின்றனர்.
இன்று ஆட்சியிலுள்ள வலதுசாரி அரசின் முன்னைய பிரதமர் பலதூரின் மந்திரிசபையில் இருந்த பஸ்குவா கொண்டுவந்த வெளிநாட்டவருக்கு எதிரான் ~பஸ்குவா சட்டம்| பல வெளிநாட்டவரை நாடுகடத்த உத்தரவாதம் செய்கிறது. இந்தவகையில் குடம்பத்தில் ஒருவருக்கு விசா இல்லை எனினும், குழந்தைகளுக்கு பிரஞ்சு பிரஜா உரிமை இருந்தாலும் பெற்றோர் நாடுகடத்தப்படுவர் என்ற சட்டம் குறைந்தது பத்துலட்சம் பேருக்கு வாழும் உரிமை மறுக்கின்றது.
இப்போராட்டத்தில் குழந்தைகள் பிரஞ்சு பிரஜா உரிமையுடன் இருக்க இபற்றோர் சாகும்வரை உண்ணாவிரம் இருந்தனர். இந்தவகையில் இச்சட்டம் நாசி பாசிசக் கட்சியில் ஆட்சிக்கு வருவதற்கு முன் முன்வைக்கும் சில படிமுறை வளர்ச்சியில் வெளிநாட்டவர்கு எதிரான தாக்குதலாகும். இன்று ஆட்சியிலுள்ள யூபே அரசிலுள்ள ஒள்துறை அமைச்சு இன்று விசா பெற்றுள்ள வெளிநாட்டவரின் 10 வருட வதிவிட விசாவை 2 வருடமாக மாற்ற சில சட்டதிட்டங்களை முன்னெடுக்க முனைந்துள்ளது. இருந்தபோதும் முன்னைய உள்துறை அமைச்சருக்கும் இன்றைய அமைச்சருக்கும் ஏற்ப்பட்ட முரண்பாட்டால் இது அமுலுக்கு வரமுடியவில்லை.
இதைவிட மருத்துவ உதவி, குடம்ப உதவி, வேலை இல்லாமைக்கு கொடுக்கும் உதவியை ஒரு பிரஞ்சுக்காரன் பெறுவதிலும் பார்க்கக் குறைவாக கொடுக்க வேண்டுமென சில ஆலோசனைகள் முன்தள்ளப்பட்டன. ஒரு பாசிச நாசி ஆட்சியை கட்டமைக்கும் அதன் முதல் படிகளில்இன்றைய வலதுசாரி அமைப்பு தீவிரமாக முனைந்தபோதும், பிரஞ்சு மக்களின் விடாப்பிடியான போராட்டங்கள் அதை தடுத்து நிறுத்துகின்றன. இதற்கு அண்மையில் நடந்த சாகும் வரையிலான கரப்பின மக்களின் போராட்டத்துக்கான ஆதரவு தளத்தைப் பார்ப்பின்:-
இப்போராட்டம் பற்றிய உங்கள் நிலையென்ன? எனது 1005 எல்லாத்தரப்பு பிரஞ்சு மக்களிடம் கேட்டபோது:-
பங்குபற்றுவோர் - 189பேர் - 18வீதம்
ஆதரவு nதிரிவி - 322பேர் - 32வீதம்
நடுநிலை வகிப் - 130பேர் - 13வீதம்
குறைந்த எதிர்ப் - 211பேர் - 21வீதம்
தீவிர எதிர்ப்பு - 90பேர் - 9வீதம்
பதில் தராதோர் - 70பேர் - 7வீதம்
என்ற அளவுக்கு பிரஞ்சு மக்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். அதே நேரம் கருப்பு இன மக்கள் பற்றியும், அவர்களின் இருப்புப் பற்றியும் போதிய அறிவு அற்ற ஒரு சாதாரண நிலைகளில்தான் இது. ஒருபுறம் தொலைக்காட்சி முதல் எல்லாச் செய்தி ஊடகங்களும் இம் மக்கள் பற்றி எதிரான பொய்யான கரத்தைப் பிரச்சாரம் செய்தும் கூட அம்மக்களின் பின் ஒரு பெரும்பான்மை அணி திரண்டுள்ளது. வெளிநாட்டு மக்கள் பற்றி ஒரு சரியான உண்மையான கருத்துச் செல்லும் தளம் இருப்பின் இம்மக்களின் போராட்டத்தின் பின்னுள்ள ஆதரவுத்தளம் விரிந்ததாக இருக்கும்.
இது ஒருபுறம் இருக்க இந்தப் போராட்டத்தையோ, ஒரு தொழில்சங்கத்துப் போராட்டத்தையோ மக்களைப் போராட அணிதிரட்டுவதாகக் கூறிக்கொள்ளும் புலிகள் முதல், புரட்சிக் கம்யூனிஸ்டுக்கட்சி (ரொட்ஸ்ச்) வரை பங்குகொள்ள அழைப்பதும் இல்லை. ஏன் ஒரு தமிழனைக் கூட காணமுடியாது.
மறுபுறம் இங்கு ஏதொ ஒரு விசா பெற்றுவிட்ட எம்மக்கள் கேட்கிறார்கள் பிரஞ்சு எவ்வளவு வெளிநாட்டவரை வரவேற்பது? இதை முடிவுகட்டி இருப்பவர்களை மட்டும் இருக்கவிட்டு மற்றவர்களை வரவிடாது மூடவேண்டும். விசா அற்றவர்களை வெளியேற்ற வேண்டும். எனக் கதைக்குமளவுக்கு சுயநலம் சார்ந்த, அதே நிற, இன பொருயாதார கண்ணோட்டத்தைப் பிரதிபலிக்கின்றனர்.
உலகில் நான்காவது நாடாகவுள்ள பிரஞ்சு பொருளாதாரம் உலகைச் சூறையாடிக் கொண்டுவருவதுடன், அதற்கு இசைவாக உலகிலுள்ள பின்தங்கிய நாடுகள்மீது ஜனநாயக விரோத சட்டங்களைத் திணித்தும், காலனியாகவும், நவ காலனியாகவும் மறுகாலனியாகவும் உருவாக்கி உலகை சூறையாடுகின்றனர்.
இந்நிலை உள்ளவரை அந்நாட்டு மக்கள் பொருளாதார அகதிகளாக உருவாகுவது தவிர்க்க முடியாது. அத்துடன் தனிமனித முன்னேற்றமும், சூறையாடலையும் பிரச்சாரம் செய்யும் இவர்கள் பின்தங்கிய நாட்டு மக்களின் தனிமனித முன்னேற்றத்தை நோக்கிய பொருளாதார புலம்பெயர்ந்த சட்ட விரோதமாக பிரகடனம் செய்கின்றனர்.
உலகம் சமபங்கீட்டை அடையாதவரை இந்தப் புலம்பெயர்வு தடுக்க முடியாது. இதை எதிர்க்கும் வசதியான பாதுகாப்பான எந்தப் பிரிவும் நிற, இன, மொழி, கலாசாரம், பொருளாதாரம் என்ற பெயரால் ஒரு சுரண்டலை, நாசிச, ஏகாதிபத்திய கொள்கையின் சுவடுகளில்தான் உயிர்வாழ்கின்றனர்.
அண்மைய கருப்பு இனமக்களின் போராட்டம் பிரஞ்சு வரலாற்றில் பாசிசத்துக்கு எதிரான போராட்டத்தில் பதியப்படும் வெளிநாட்டு மக்களுக்கு எதிரான சில எதிர்த் தாக்குதலை தற்காலிகமாகத் தடுத்துள்ளது. இந்த நிறவெறியர்கள் எதிர்காலத்தில் வேகமாக ஒருமித்து தாக்குதலை நடத்த பதுங்கியிருக்க நிர்ப்பந்தித்துள்ளது. இந்தவருடம் பிரஞ்சு அரசு நாடுகடத்திய வெளிநாட்டவர் அட்டவணையை மேலும் பார்ப்போம்:- இவ் ஆட்கடத்தலில் முன்பு கைது செய்ய ஒரு யுத்தம் நடக்கும் பிரதேசம் போன்று இராணுவ சோதனையில் ஈடுபடுகின்றனர். இன்று இராணுவம் பரிஸ் எங்கும் எல்லாவிடத்திலும் சோதனை செய்வதும் கைது செய்வதும் சாதாரண சாதாரண நிகழ்வாக மாறியுள்ளது. இது எந்த ஜனநாயக நாட்டிலும் கிடையாது என்பது மிக முக்கியமானதாகும்.
இந்த வருடம் பிரான்சில் இருந்து வெளியேற்றப்பட்ட வெளிநாட்டவர் 7500 + மேலாகும் (29 ஓகஸ்ட் வரை)
வெளியேற்றிய திகதி எண்ணிக்கை நாடு
29 - ஜனவரி 59 துனிஸ்மொ
9 - பெப் 46 ருமேனியா
29 - பெப் 42 சைநல
28 - மார்ச் 52 மாலி
27 - ஏப்பி 68 சைநல,மாலி
15 - மே 33 ருமேனியா
6 - ஜூன் 24 சைநல
26 - ஜூன் 81 மாலி,செனக
3 - ஜூலை 40 சைநல,துனி
10 - ஜூலை 75 மாலி,மொரோ
7 - ஓகஸ் 78 மாலி,மொரோ
24 - ஓகஸ் 57 மா,சென,செந
29 - ஓகஸ் 46 மாலி,செனகல்
29 - ஓகஸ் 32 துனிஸ்,சைந
பிரான்சிலுள்ள வெளிநாட்டவரை ஆராயின்:_
1990 வெளிநாட்டவர் பிரான்சில்.
அமெரிக்கர் - 91,789
Oceanie - 2,704
இப் புள்ளிவிபரத்தின் கீழ் மொத்தமாக 1990ல் 41,95,952 வெளிநாட்டவர் பிரான்சில் இருந்தனர். இதில் 37,5 வீதம் பேரின் பெற்றோருக்கும், பெற்றோரின் பெற்றோரும் பிரான்சில் வசித்து வருபவர்கள். 1990 இன் மொத்த புள்ளிவிபரத்தை மேலும் ஆராயின்:-
நாடு மொத்த விகிதம் இங்குள்ளோர்
போத்துக்கல் 14,4 வீதம் 6,04,217
அல்ஜீரியன் 13,6 வீதம் 5,70,649
இத்தாலி 12,5 வீதம் 5,24,494
மொரோக்கன் 10,6 வீதம் 4,44,770
ஸ்பானியோ 9,8 வீதம் 4,11,203
மற்றும் 65,4 வீதம் பேர் தனியாகவும் வேலைசெய்ய இங்கு வந்தனர். 14,4 வீதம் பேர் குடும்ப இணைவாக வந்தனர். 12 வீதம் பேர் அரசியல் புகலிடம் பெறவந்தனர்.
1993ல் ஐரொப்பிய வெளிநாட்டவரில் 27,2 வீதம் பேர் வேலையின்றி உள்ளதுடன் பிரான்சில் 10,5 வீதம் வேலைவாய்ப்பு முரணானதாகவுள்ளது. 1990ல் 13 லட்சம் பேர் பிரான்ஸ் பிராஜா உரிமையை மொத்த வெளிநாட்டவர் பெற்றுள்ளனர். இதில் 11,542 பேர் தமது பெயர், தகப்பன் பெயர் பிரான்சின் பெயர் வரிசையில் மாற்றியிருந்தனர். 83 வீதமான இளையவர்கள் (1963 - 72 இடையில் பிறந்தோர்) வாக்களிக்கும் பட்டியலில் தமது பெரை உள்ளடக்கியுள்ளனர்.
1992இல் அல்ஜீரியராகவுள்ள இளைஞர்களில் அரைவாசிப்பேரும், நாலில் ஒரு பங்கு அல்ஜீரியப் பெண்களும் தமது தணையை பிரஞ்சு சமூகத்தினுள் கொண்டிருந்தனர்.
பிரஞ் வெளிநாட்டவர் தொகை
ஆண்டு மொத்த மக்கள் தொகை வெளிநாட்டவர் அனைவரும் வெளிநாட்டவர் மொத்த சனத்தொகை(வீதம்)
1911 3,91,92,000 11,10,000 2.8
1921 3,87,98,000 14,29,000 3.7
1926 4,02,28,000 22,88,000 5.6
1931 4,12,28,000 27,29,000 6.6
1936 4,11,83,000 23,26,000 5.6
1946 3,98,48,000 19,86,000 4.9
1954 4,27,81,000 22,93,000 5.3
1962 4,64,58,000 28,61,000 6.1
1968 4,97,58,000 32,81,000 6.6
1975 5,25,99,000 38,87,000 7.4
1982 5,42,96,000 40,37,000 7.4
1990 5,66,52,000 41,95,000 7.4
மொத்தத்தில் இங்கு குடியேறியுள்ள வெளிநாட்டவர்களின் பெரும்பான்மை ஐரோப்பிய சமூகத்தைச் சார்ந்தவர்கள் (உ-ம்) போர்த்துக்கல், ஸ்பானியோர், இத்தாலியைச் சேர்ந்தோர் மொத்த வெளிநாட்டவரில் 15 இலட்சத்து நாற்பதாயிரம் பேர் (36.7 வீதம்) ஆவர். மற்றும் பிரான்சின் முன்னைய கொலனியான அல்ஜீரிய, மொரோக்கியோவில் இருந்து 2ம் உலக யுத்தத்தின் அழிவுகளை கட்டிமுடிக்கக் கொண்டுவந்த இந்தப் பிரிவு பத்து இலட்சத்துப் பதினையாயிரம் பேர் (24.2 வீதம்) மற்றும் முன்னைய பிரான்சு காலனியான ஆபிரிக்கா ஒரு பெரும் பிரிவாக உள்ளது.
இங்குவந்த இச்சமூகம் இந்தச் சமூகத்துடன் ஒன்றுகலக்கும் போக்கு அதிகரித்துள்ளது. 2வது, 3வது தலைமுறை இதை கடைப்படிப்பதில் தீவிரமாவுள்ளது. திவிர மதவாதத்தைக் கொண்டதும், திவிர குடம்ப இறுக்கத்தையும் கோரும் அல்ஜீரியர்களில் குழந்தைகளில் ஆண்களில் அரைவாசிப் பேரும், பெண்களில் நாலில் ஒரு பகுதியினரும் தமது துணைகளை பிராஞ்சுக்காரராகக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில்தான் இனத்தூமை பேசும் பாசிச, வலதுசாரிகள் வெளிநாட்டவர் மீது கண்மூடித்தனமான தாக்குதலைத் தொடுத்து வருவதும், அண்மைய தாக்குதல் இதை மேலும் தெளிவாக்குகின்றது. 1975களின் பின் தீவிரமடைந்த இனவாதப் போக்கு வெளிநாட்டவர் எண்ணிக்கை மாறாதவகையில் உள்ளது. இது 1975 - 1990க்கு இடையில் மொத்த மக்கள் தொகையில் 7.4 வீதமாக தொடராகப் பேணப்படுகின்றது. இந்த எண்ணிக்கை அண்மையில் வலதுசாரிகளின் ஆட்சியில் மேலும் குறைந்திருக்க (அதாவது 1996களில்) வாய்பு உண்டு. இன, நிற, மொழிவாதத்தை கடந்த உழைக்கும் மக்களை அடிப்படையாகக் கொண்ட மக்களின் விழிப்புணர்வே மக்களின் நலன்சார்ந்த ஓரு நிலையை அடையமுடியும்.