விடுதலைப் புலிகள் அண்மையில் முல்லைத்தீவு முகாமை முற்றுமுழுதாகவே கைப்பற்றி இருந்தனர். இது விடுதலைப்புலிகளின் போராட்ட வரலாற்றில், தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகும். இத்தாக்குதல் தமிழ் மக்கள் மீதான இலகுவான இன அழிப்பை தற்காலிகமாக பின்தள்ளியதுடன், தென்னிலங்கை இனவாத இராணுவப் பிரச்சாரத்தையும் சிலகாலத்துக்கு பின்தள்ளியுள்ளது.
மறுபுறம் முல்லைத்தீவு முகாம் தகர்ப்பு திருகோணமலை திட்டமிட்ட குடியேற்றங்களை தற்காலிகமாக சிதைத்துடன், கிழக்குக்குச் வெல்லும் பாதைகளை இலகுவாக்கியதுடன், கிழக்கில் மேலும் போரட்டத்தை கூர்மையடைய வைத்ததுடன், வடக்குக் கிழக்குப் பிரிப்பைச் செய்ய முனைந்த அரசின் தொடர்ச்சியான சதிவேலைகளை பகுதியளவு தகர்த்துள்ளது. இது ஒருபுறம் சாதகமாக தமிழ் மக்களுக்கு உள்ள அதேநேரம், விடுதலைப் புலிகளின் மக்கள் விரோதநிலை, மேலும் இத்தாக்குதலை வைத்து குறும்தேசிய இனவாதத்தை உயர்த்தவும், மாற்றுக் கருத்து நபர்கள் மீது தாக்குதலை மேலும் தீவிரமாக நடாத்தவும், எல்லைப்புற சிங்கள, முஸ்லீம் அப்பாவி மக்கள் மீது இலகுவான தொடர்ச்சியான தாக்குதலை நடத்தவும் கதவு திறந்துவிடப்பட்டுள்ளது.
இந்த சாதக பாதக அம்சங்களுடன்தான் இம்முகாம் தகர்ப்புதமிழ் பேசும் மக்களைப் பொறுத்தவரை (புலிகளை அல்ல) தேசிய விடுதலைப் போராட்டத்தில் வரவேற்க்கத்தக்க ஓர் அம்சமாகும். இத்தாக்குதலைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் கொரிலா நிலையிலிருந்து மரபு இராணுவமாக மாறிவிட்டனர் என்ற பிரச்சாரம் எல்லாத் தரப்புப் பிரச்சார அமைப்புக்களும் செய்கின்றன.
உண்மையில் புலிகள் மரபு இராணுவமாக வளர்ந்துள்ளனரா?
1990களில் மாங்குளம் முகாம் தகர்த்தபோதும், பின் பூநகரி, ஆணையிறவு முகாம் தகர்ப்பின் போதும் புலிகளின் பிரச்சார அமைப்புகள் (பார்க்க:- தரிசனம் விடுதலைப் புலிகள்) ஒரு மரபு இராணுவமாக மாறிவிட்டதாக பிரச்சாரம் செய்தனர். இதையொட்டி இராணுவ ஆய்வு செய்யும் சிவராம் (முன்னாள் Pடுழுவு கொலைகளுக்கு அரசியல் சாயம் கொடுத்தவர்) கூட புலிகளுடன் இணைந்து (பார்க்க:- "சரிநிகர்") கூறிவந்தனர்.
நாம் விடுதலைப் புலிகளின் 7-8-96 களத்தில் இணைத்திருந்த ஒரு விசேட இணைப்பில் "முல்லைத்தீவு படைத்தள வரலாறும் பொரும் சமர் "ஓயாத அலைகள்" என்ற கட்டுரையைப் பார்ப்போம்.
"மிகவும் நுட்பமானமுறையில் தமிழ்த் தேசிய தலைவர் திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் திட்டமிட்டு வழிநடத்தப்பட்ட இத்தாக்குதல் அரசின் பல எதிர் நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு புலிகளின் விய+கங்களை அமைத்திருந்தனர்......."
"தொலைத் தொடர்பு கோபுரத்திற்கு அருகிலிந்த ஆயதக் களஞ்சியத்தினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த நேரத்தில் இருந்து இராணுவத் தளபாடங்களை அகற்றும் வேலையை புலிகள் ஆரம்பித்து விட்டனர்......."
"பலகோடி பொறுமதியான இராணுவத் தளபாடங்களை புலிகளுடன் இணைந்து அப்பகுதி மக்களும் மிகுந்த உற்சாகத்துடன் இரவிரவாக முகாமிலிருந்து அப்புறப்படும் பணியில் ஈடுபட்டனர். இதே சமயம் முகாமிலிருந்த கட்டிடங்களும், காவலரண்களும் புலிகளால் தகர்த்து நிர்மூலமாக்கப்பட்டன..." . இது களத்தில் செய்தி. அதேநேரம் எம் மண்ணிலும், இங்கு தொலைபேசி செய்தியிலும், கைப்பற்றிய ஆயதங்களை அகற்றிய நிகழ்வில் மக்கள் ஈடுபட்ட நேரம் முழமையாக ஆயதத்தின் இரு பகுதியை பலிகளிடம் சேர்க்கவில்லை எனவும் ஒரு சில மக்கள் எடுத்து மறைத்த ஆயதங்களை அதை மீளக் கொண்டுவந்து தரும்படி அறிவித்தனர்.
மொத்தத்தில் இந்தச் செய்திகள் ஒன்றுக்கொன்று முரணானவகையில் உள்ளதுடன் முல்லைத்தீவு தாக்குதல் முற்றாக அழித்து ஒழிக்கும் கனவு, தாக்குதலுக்கு முன் புலிகளுக்கு இருந்திருக்கவில்லை. அதன் அடிப்படையில் திட்டமிடப்படவில்லை என்பது, கட்டிடங்களைத் தகர்த்ததன் மூலமும், ஆயதங்களை மக்கள் அகற்றும் வகையில் ஈடுபடுத்தப்பட்டதிலிருந்தும் தெளிவாகுகின்றது. பூநகரிமுகாம் தாக்குதலில் கூட இதே வகையில் ஈடு பட்டதும், பூநகரியில் முக்கியமான முழுமையான கேந்திர ராணுவ நிலைகள் புலிகளின்வசம் பூநகரியில் விழுந்த போதும் முன்கூட்டியே திட்டமிட்ட பின்வாங்கல் நடவடிக்கையே பூநகரியை முழுமையாக கைப்ற்றி கட்டுப்படுத்த முடியாததிற்கு காரணமாகும். முல்லைத்தீவுத்தாக்குதல் ஆயுத்தை குறியாக வைத்து நடத்தப்பட்ட ஒரு தாக்குதல். ஆயுத அகற்றல், கட்டிடங்களை தகர்த்தல் என்ற எல்லைகள் ஒரு கொரிலாத் தாக்குதல் என்ற எல்லைக்குள் நின்ற ஒரு நடவடிக்கையே. மரபு இராணுவமாக புலிகள் வளர்ந்திருப்பின் யாழ் குடாநாட்டைவிட்டு இவ்வளவு வேகமாக பின்வாங்கி இருக்க முடியாது. முல்லைத்தீவு போன்ற ஒரு பெரிய முகாம் தகர்க்கும் வல்லமை கொண்ட புலிகள் யாழ் குடாநாட்டை விட்டு வெளியேறியதை நியாயப்படுத்த முடியாது.
மாறாக ஒரு மரபு இராணுவம் என்பது தனது பலம், பலவீனத்தில் இருந்து முல்லைத்தீவு தாக்குதலை முன்கூட்டியே விட்டுவிட்டு வகையில் திட்டமிடுவது இல்லை. திட்டத்தில் ஏதும் தோல்வி ஏற்படின் இறுதி நேரத்தில் தான் கட்டிடத்தைத் தகர்ப்பார்கள். இங்கு விடுதலைப் புலிகள் மரபு நிலையில் இருந்தல்ல கொரிலா நிலையில் இருந்தே பிடித்த அடுத்த விநாடியே தகர்த்த நிகழ்வும், முன்கூட்டியே முல்லைத்தீவை தாக்கி முற்றாக அழித்துவிடும் அளவிற்கு திட்டத்தைக் கொண்டிருக்கவில்லை. நடத்தப்பட்ட தாக்குதலில் இராணுவத்தின் சொந்த பலவீனங்கள் சாதகமாகக் கண்ட புலி வீரர்களின் தொடர்ச்சியான தாக்குதல் உற்சாகமே முல்லைத்தீவு தாக்குதலின் முற்றாக அழித்தொழிக்கும் மொத்த வெளிப்பாடுமாகும்.
ஒரு மரபு இராணுவம் கட்டியமைக்கும் வகையில் பத்துவருடங்களுக்கு மேலான நிர்வாகத்தையும் பரிவளங்களையும் கொண்ட யாழ் குடாநாட்டிலோ, அல்லது இன்று வன்னியிலோ புலிகள் ஈடுபட முடியாத வகையில் அவர்கள் சொந்த அரசியல் பலவீனங்களில் சிக்கிப் போய் வெளிவரமுடியாமல் உள்ளனர். 1990 மாங்குளம் தாக்குதலை மரபு தாக்குதல் என அன்று வர்ணித்த புலிகள் 1996ல் முல்லைத்தீவு தாக்குதலை மீள இன்றும் மரபுத் தாக்குதல் என வர்ணிக்கும் சொந் அரசியல் சீரழிவின் இயலாமையை நாம் தெளிவாகக் காணமுடியும்.
முகாம் அழிப்புகள் மட்டும் ஒரு மரபு இராணுவாமாக மாறிவிட மாட்டாது. மாறாக மரபு இராணுவமாக மாறும் வகையில் போராட்டம் இயக்கப்பட்டிருக்க வேண்டும். அது புலிகளின் அரசியலில் ஒக்காலும் சாத்தியமில்லை.
ஒரு கொரிலா நடவடிக்கை கூட ஒர முகமை நிர்மூலம் செய்யமுடியும். யாழ் குடாநாட்டிலிருந்த சில ஆயிரம் புலிகள் வன்னியை நோக்கிய நகர்வும், வன்னியில் இராணுவ எண்ணிக்கைக்கு சமமாகவோ, மேலாகவோ, குறைவாகவோ நின்று அதை அழிக்கும் பலம் புலிக்கு இருந்தது. இது புலிகளின் வலுவான ஒரு தொடர்ச்சியான தாக்குதல் வடிவமே ஒழிய, புலிகளின் இராணுவம் பண்புரீதியாக மாறிய நடவடிக்கையல்ல.
மரபு ராணுவம் என நிறுவுவது கற்பனை செய்வது என்பது போலியான விடுவிக்கப்பட்ட யாழ்குடாநாடு போன்றோ, உலகில் 4வது தோற்ற இந்திய ராணுவம் போன்றோ ஒரு போலி மதிப்பீடுகள் இட்டுக்கட்டி எதிர்காலத்தில் முட்டாள்த்தனமான அழிவுடன் கூடிய ராணுவ இழப்புக்களையும், பாரிய மக்கள் அழிவையும், தேசிய விடுதலையின் பின்னடைவையும் பெற்றுத் தரும். அதை வெளியில் இருந்து புலியைப்புகள்வது போல் நடித்து புலிகளின் சொந்த மதிப்பீட்டை காணவிடாது செய்ய சிலர் திட்டமிட்டு இயங்குகின்றனர். இதை நாம் மிகத்தெளிவாக இனம்கண்டு கொள்வதும், போராட்டத்தை சரியாக வழிநடத்தவும் உதவும்.
உண்டியல் செய்வோரும் தேசிய பத்திரிகை வீரகேசரியும்
புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள எம்மவர்கள் தமது பணத்தை இலங்கை, இந்தியா......... போன்ற நாடுகளுக்குள் மாற்றிக்கொடுக்கும் இந்த உண்டியல் தொழில் ஒரு இலாபம் தரும் தொழிலாக இன்று உள்ளதுடன் கருப்புப் பணத்தை மாற்றிக்கொடுக்கும் வகையில் இலங்கை, இந்தியா..... ஊழல் கொள்ளை கரண்சியாகவும் மாற்றி விடுகின்றனர். எந்த சட்டவிரோதப் பணத்தையும் மாற்றிவிடும் இந்தத்தொழிலில் வீரகேசரி விபச்சாரம் செய்யப்போனது தான் ஆட்ச்சரியமானது.
வெளிநாடு வரும் ஞாயிறு வீரகேரி வாரப் பத்திரிகையின் உள்ளே இன்றைய பணப் பெறுமதி என்னவென்று குறிப்பிட்டு வருவது வழக்கம். எம்மவர்கள் பணம் அனுப்பமுன் இதை ஒப்பிட்ட பின் உண்டியல் ரேற்றைக் கேட்டு அதைச் சரிபார்த்து தமது கடின உழைப்புப் பணத்தைக் கைமாற்றுவர். இந்த வீரகேசரி பணப்பெறமதி செய்தி உண்டியல் காரரக்கு ஒரு பெரிய தலையிடியாக இருந்தது. தமது பெரிய கொள்ளைக்கும் வாராவாராம் இலங்கைப் பணப் பெறுமதிக்கு இசைவாக 0,20,30,40 பிராங் குறையக் கொடுக்க வேண்டி ஒரு நெருக்கடிக்குள் குறைந்த இலாபத்தை வீரகேசரி மூலம் பெறவேண்டி இருந்ததால் இந்த உண்டியல் பேர்வழிகள் வீரகேரியுடன் நடந்த பேரத்தின் பின் வீரகேரி அப்பகுதியை போடுவதையே திட்டமிட்டு கைவிட்டுள்ளத. இதன் மூலம் இல்கை, இந்தியப் பெறுமதியை திட்டமிட்டு மறைக்க உதவியதன் மூலம் உண்டியல் பேர்வழிகள் பச்சையாகவே கொள்ளையடிக்க வீரகேசரி துணைபோயுள்ளனர். வாழ்க! கொள்ளையடிப்போர் சார்பான உங்கள் பேரங்களும் சம்திங்குகளும்.