Language Selection

சமர் - 22 :11 - 1997
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மாவோ சொன்னார் '' பொருட்களின் சாராம்சத்தை உள்ளடக்கத்தில் தேடவேண்டும்  உலுவத்தில் அல்ல'' என்றார். ஆம் போலந்து போலிகள் உருவத்தில் கம்யுனிஸ்ட்டுக்கள்  .உள்ளடக்கத்தில் முதலாளித்துவத்தின் பிரதிநிதிகள். உலக பன்னாட்டு நிறுவனத்தின் எடுபிடிகலாக வலம்வரும் இந்தப்பிரதிநிதிகள்  கம்யுனிசத்தின் பெயரால் மக்களை ஏமாற்றிக் கொள்ளையடிக்க முயலும் கயவாளிக ளே.

ஜனநாயகத்தை மீட்ட அதாவது கொள்ளையடிக்க கதவுகளைத் திறந்த,  வலேசவுக்கு எந்த விதத்திலும் தாம் சளைத்தவர்கள் அல்ல, என்பதைப் போலிகள் உலகளவில் இனம் காட்டத் தீவிரமாக அலைந்தனர். அலைகின்றனர்.

மக்களை விட கொள்ளையடித்தவனைக் திருப்த்ப்படுத்தும் இந்தப் போலிகளையிட்டு,  பிரஞ்சு போலிக் கம்யுனிஸ்ட் டுக்கள்  இவர்களை '' சமூகசனநாயக வாதிகள் '' எனக் குற்றம் சாட்டி தம்மைப் பாதுகாக்க முனைந்தனர்.

அண்மையில் உலகை இரட்சிக்க வந்ததாக கூறிக்கொள்ளும் போhப் பாண்டவர் விஜயம் செய்தபோது போலிகள்; ஓடோடி வந்து கைகோர்த்தனர். எமது குறிக்கோளும் ஆண்டவனின் குறிக்கோளும் ஒன்றுதான் என பிரகடனம் செய்தனர். உலகை எப்படிக் கொள்ளையடிக்கலாம்  மக்க ளை எப்படி எப்படி ஏமாற்றலாம்  என்பதில் கருத்து முரண்பாடு இல்லையென  பிரகடனம் செய்தபடி தமது நோக்கத்தைத் தெளிவுபட விளக் கினர்.

ஆம் கம்யுனிச ஜனநாயக விரோதமா னது எனக் கூறி, மக்களின் அடிப்படை வசதியைக் கோருவது பயங்கரவாதம் என அறிவித்து, சிலர்  வாழும் வாழ்வு இறைவனின் கொடை என்றனர்.

அதை நிறைவு செய்ய முன்பு வலேசா மூலம் போப்பாண்டவர் நேரடியாகப்  போலந்தில்  இரகசியக் குழுக்களை அமைத்தும்,  அச்சகங்களை நிறுவியும்  இரகசிய அரசொன்றை நடாத்திய, இந்தக் கும்பல் தான் உலகை மீட்க வந்த இரட்சகர்களாகப் பிரகடனம் செய்கின்றனர்.

அதேவகையில் போலிக்கம்யுனிசக் கட்சியும்  தனது எல்லாவித புரட்சிகரக் கோசங்களையும் கைவிட்டு  விபச்சாரத் தில் ஈடுபடத் தொடங்கிவிட்டது. இந்தத் துரோகத்தை நாம் பார்த்துக் கொண்டு இருக்கப் போகிறோமா அல்லது எதிர்த்துப் போராடப் போகிறோமா என்பது எம்முன்னுள்ள ஒரேஒரு கேள்வி.