மாற்று இலக்கியம் என்ற பெயரில் ஏகாதிபத்தியசக்திகளை நக்கவிரும்பும் இந்த இலக்கிய ஆர்வலர்கள் புலம்பெயர் சமூகத்தின் எதிரிகளாவர்.
செப்ரெம்பர் 13,14ம் திகதிகளில் பிரான்ஸ் - சார்சேலில் ஐரேப்பாவின் 23வது இலக்கியச்சந்திப்புத் தொடர் நடைபெற்றது.
பல்வேறு விடயங்களைக் கொண்டிருந்த இச்சந்திப்பானது குறைந்தபட்ச முதலாளித்துவ ஜனநாயக எல்லையைக் கூட பேண முடியாது சீரழிந்தது மட்டுமன்றி ஏகாதிபத்தியத்திற்கும், அராஜக வன் முறைக்கும் சார்பான குரலையே வெளிப் படுத்தியது.
புலம்பெயர் சூழலில், மாற்றுகள் தாம் தான் என மார்தட்டிக் கொண்ட முன்னைய பம்மாத்துகள் கூட சிதறி, முன்பு இயக்கங்களை சில புத்திஜீவி கள் எப்படி சிதைத்தனரோ அதையே இங்கும் செய்ய அதற்கு வக்காலத்து வாங்கவும் ஆதரிக்கவும் இச்சந்திப்பு பின்நிற்க வில்லை. மக்கள் மீது நேசம் கொண்ட சில அப்பாவிகள், இதை மாற்றி விடமுடியும் என நம்பி, நாய் வாலை நிமிர்த்த முனைவது போல எவ்வளவு தான் முயன்ற கீச்சிட்ட குரல்களும் கேட்க முடியாதவாறு மக்கள்விரோத ஒட்டுண்ணிகளின் ஏகாதி பத்திய கூச்சல்களுக் கிடையில் அமுங் கிப்போயின.
சொந்தநாட்டில், அடுத்த வேளை உணவின்றி, வீடுவாசல் இன்றி, ஷெல்ம ழைகளுக்கும், பாலியல் வன்முறைக ளுக்கும் சகலதையும் இழந்து எம்மக் கள் வாழும் நிலையில், புலம்பெயர் நாட்டில் நாசி வன்முறை, அரசின்; திட்ட மிட்ட புறக்கணிப்புகள், எம்மவரின் அனாவசியமான ஆடம்பரங்கள், சிறுவர்க ளின் கலாச்சார நெருக்கடி என நீடித்த எமது மக்களின் அவலம், உலகமக்க ளின் வறுமை, அவலவாழ்வு இவற்றை யெல்லாம் கண்டு கொள்ளாது கண்ணை மூடிக்கொண்டு பால்குடிக்கும் பூனை போல் வெறும்முதுகு சொறிதல்களையே இலக்கியச்சந்திப்பு என்றபெயரில் இக் கும்பல் நடத்திச்சென்றது.
சிங்கள மொழிபெயர்பாளர் ஒருவரும் இச்சந்திப்பில் பங்குபற்றி கருத்து வழங்கியமை அடிப்படையில் ஒரு முற் போக்கு அம்சமே. ஆனால், இவர் என்ன செய்தார்? காமினிவியாங்கொட என்ற இந்நபர் தான் மொழிபெயர்த்த நாவலுக் கூடாக ஒர் ஏகாதிபத்திய பிரச்சாரத்தை யே நடாத்த சபை ஆரவாரித்து கைதட்டி தனது வர்க்ககுணாம்சத்தை வெளிக்காட்டியது.
அவர் மேலும் கூறும்போது சோவியத் சிதைவுக்குப் பின் ஏகாதிபத்தியம் மாய மாய் மறைந்துவிட்டதெனவும், ஏகாதிபத் தியம் என்பது இப்போது அறவே இல் லாத நிலையில் ஏகாதிபத்தியம் என்க் கூறுவது மோசடியானது எனவும் கூறுகிறார்.
இதைக்கேட்டு மூன்றாம் உலக மாற்றுத் தள புலம்பெயர்தமிழ் இலக்கிய குஞ்சுகள் தமது ஏகாதிபத்திய சார்பு விசுவாசத்தைக்காட்ட நன்றி தெரிவித்து கைதட்டி ஆர்ப்பரித்தனர்.
ஒரு கட்டத்தில் தான் சிங்களத்திற்கு மொழி பெயர்த்த நாவல்பற்றிய விளக் கத்தில் தேசியக் கொடி என்பது எதுவு மற்ற ஒன்று தான் என உரத்து பிரகடனம் செய்தபோதும் சபை எதுவித எதிர்ப்புமின்றி கைதட்டி வரவேற்றது.
தேசியம் என்ன கற்பிதமானதா?
தேசியக் கொடி ஒன்றுமில்லாததா? இதன் மூலம் தமிழ்மக்களின், உலக மக்களின் ஜனநாயக உரிமையை மறுக் கின்றனர். இது ஒருவகையில் சிங்கள இனவாதத்திற்கும் சார்பானதே.
உலகமயமாதலை முன்னெடுக்கும் ஏகாதிபத்தியங்கள் தேசியம், தேசியக் கொடியை ஒன்றுமில்லாததாக காட்ட, மாற்ற முனைகின்றனர். அதற்கு எதிரான அனைத்து ஜனநாயகப் போராட்டமும் நசுக்கப்படுகிறது. இதுதான் தமீழப் போராட்டமும். இதை ஏகாதிபத்திய பொருளாதார அமைப்பில் ஒன்றுமில்லாத தாககூறுவது அதை பாதுகாக்க செய்யும் முயற்சியே. சிங்களப் பகுதிகளில் சாதி ஒடுக்குமுறை பற்றி எழுப்பப் பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போது அங்குசாதி ஒடுக்குமுறை - சாதிஅமைப்பு முறையே பெருமளவில் இல்லை என தனது மேல்வர்க்க சாதி நிலைப்பாட்டினை வெளிப்படுத்தினார்.
ஏகாதிபத்தியம் முன்வைத்த தலித் அரசியலை முன்னெடுக்கும் தலித்ததுக் கள் என அண்மைக்காலமாக அழுதுபுலம்பித்திரியும் நபர்களோ அவர்களின் ஆதாரபுருஷர்களோ கூட இக்கருத்தினை கைதட்டி ஆதரித்தது நகைப்பிற்கிடமாக இருந்தது.
ஏகாதிபத்திய எலும்பை நக்கித்திரியும் காமினிவியாங்கொட, பாட்டாளி வர்க்கத் தை நாயாக உருவகப்படுத்திய போதும் சபை வாழ்த்தியது. மாற்று இலக்கியம் என்ற பெயரில் ஏகாதிபத்திய சக்திகளை நக்கிப்பிழைக்க விரும்பும் இந்த இலக்கி ய ஆர்வலர்கள் புலம் பெயர்சமூகத்தின் கேடுகெட்ட எதிரிகளாவர்.
இனி, சந்திப்பில் நோர்வேயிலிருந்து வந்து கலந்து கொண்ட பிழைப்புவாதி வ.ஐ.ச. ஜெயபாலன் என்ற கவிஞனின் சந்தர்ப்பவாதத்தைப் பார்ப்போம்.
அண்மையில் நாடுசென்று, புலித்தலை வர்களைச் சந்தித்துத்திரும்பியவன், தள நிலைமைகளைக் கண்ணால் கண்டவன். எனவே என்னை மறுக்கும் தகுதி உங்க ளுக்கு இல்லை என உணர்ச்சிவசப்பட்ட நிலையில் மீளமீள பிரகடனம் செய்து கொண்டார் கவிஞர்.
புலிகள் திருந்திவிட்டனர், புலிகளில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. எனவே நாம் புலிகளிடம் ஜனநாயக அம்சங்களை கோரியபடி புலிகளை ஆதரிக்க முன்வர வேண்டும் என வெண்தாமரை இயக்கத் தினை கடுமையாக விமர்சித்தபடி செந் தாமரை இயக்கமொன்றினையும் புலிக ளுக்காகதொடங்கி வைத்தார்.
தமிழ்பேசும் மக்களின் உரிமைப் போராட்டம், மிக நெருக்கடியான இன அழிவின் விளிம்பில் தத்தளிக்கிறது. இந்த அழிவுக்கான முழுப்பொறுப்பும் புலிகளையே சாரும் என்ற வரலாற்று உண்மையையும் போராட்டத்தில் இறந்து போன ஆயிரக்கணக்கான இளைஞர்க ளின் உண்மையான தியாகங்களும், விடுதலைக் கனவுகளும் சிதைந்து போகுமோ என்ற அளவுக்கு இன்று தமிழ் பேசும் மக்களின் விடுதலைப் போராட்ட மானது இராணுவவாதத்துக்குள் சிக்கித் திணறுகிறது. இதிலிருந்து மீள்வதற்கான பாதை என்னஎன்பதே இன்று எம்முன் உள்ள கேள்வியே தவிர அதை மேலும் சிதைக்கும் பாதையில் ஒட்டிக்கொள்வ தல்ல.
இது புலிகளை நோக்கி கோரும் ஜனந hயக உரிமையிலும், இன வாதிகளுக் கெதிராக போராடும் வழிகளிலும் தான் கட்டி அமைக்கப்படும்.
ஜனநாயகத்தைக்கோரி போராட விரும்பும் உண்மையான சக்திகளின் பல்வேறுகருத்துக்கள் புலிகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்துவது இயங்கியல். ஆனால் அது புலிகளில் மாற்றத்தை ஏற்படுத்தி விடாது. புலிகள் குறைந்த பட்சம் ஜனநாயக இயக்கமாக மாற வேண்டின் அம்மாற்றம் அரசியல்ரீதியாக நடக்கவேண்டும். அது திட்டவட்டமாக ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வேலைத் திட்டத்தைத் தொடங்க வேண்டும். இது தான் புலிகளில்; மாற்றம் என்று காட்ட ஏதாவது ஒரு முன்னெடுப்பாகும்.
இதனை புலிகள் செய்யாதவரை, புலிக ளுக்குள் உள்நடக்கும் சில அசைவு கள், நிகழ்வுகள் அரசபயங்கரவாத நெருக்கடிகளின் பிரதிபலிப்பே தவிர வேறொன்றுமில்லை.
ஒர் இயக்கம் இதிலிருந்து மீளவும் மாறும். இதற்கு சந்திரிக்காவினதும், யு. என்.பி.யினதும் அமைப்புள் மாறி மாறி நடக்கின்ற சம்பவங்கள் புலிக்கும் பொருந்தும்.
சந்திரிகா ஒரு வெண்தாமரை இயக்கத் தை தொடங்கியதுபோல, புலிகளுக்காக ஜெயபாலன் ஒரு செந்தாமரை இயக்கத் தை தோற்றுவிக்க ஆசைப்படுகிறார். அவ்வளவுதான்.
தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக நடந்த விவாதத்ததில், தேசிய இனப் பிரச்சினைக்கும் தேசியவரையறைக்கும் ஸ்ராலின் வரைவைத்தவிர வேறெதுவும், வேறெந்தக் கோட்பாடும் இல்லை என நாவலன் வாதிட்டபோது துடித்தெழுந்த கவிஞர். ஜெயபாலனும், முதலாளித்துவ பெண்ணிலைவாதியுமான ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியமும் கொலைகாரன் ஸ்ராலினை மீளக் கொண்டு வரும் முயற்சி என பலமாகக் கத்தினர்.
தேசிய இனப்பிரச்சினைக்கு ஸ்ராலினை விட மாற்றுக் கோட்பாட்டினை முன்வைக்கக் கோரிய போது தமது இருக்கையில் இருக்க முடியாதவாறு நெளிந்து முறுகி தமது இயலாமையைக் காட்டியபடி அதை எதிர்த்து ஏகாதிபத்திய சத்தியில் மொய்த்த கொசுவாக கீச்சலிட்டனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால், ஏகாதிபத்தியசத்தியில் தோய்ந்தெழுந்து புலம்பிய ஜெயபாலன், ஸ்ராலினை கொலைகாரனாகவும், முஸ்லீம்களை வெளி யேற்றிய படுபாதகனாகவும் சித்தரித்து விட்டு; பிரபாகரனையும், முஸ்லீம்களை வெளியேற்றிய புலிகளையும் ஆதரிக்கக்கோரிய முரண்பாடு அவரது சந்தர்ப்ப வாதத்தினை துல்லியமாக தோலுரித்தது நின்றது.
ஒர் இலக்கியச்சந்திப்பானது மக்களுக்கு எதையாவது செய்ய வேண்டும். நடந்த 23 சந்திப்புக்கள் எதைச் சாதித்திருக் கின்றன எனக் கேட்கும்போது சந்திப்பாளர்களின் விழிபிதுங்குவதைக் காணலாம்.
மாற்றுக்கருத்துக்கு இடம் என்று கூறிக்n காள்ளும் இவர்கள் அடிப்படை யில் செய்வது பாட்டாளிவர்க்கத்திற்கு எதிரான பிரச்சாரக்களத்திற்கு வழி சமைப்பதே.
ஒரு முற்போக்கான இலக்கிச்சந்திப்பு குறைந்த பட்சம் கருத்தடிப்படையில் பாட்டாளிவர்க்க எதிர்ப்பல்லாத முதலாளித்துவ எல்லைக்குள்ளானது. திட்ட வட்டமாக ஏகாதிபத்திய எதிர்ப்பிருக்க வேண்டும். ஏகாதிபத்தியத்திற்கும் பாட்டாளிவர்க்கத்திற்கும் கருத்துச் சுதந்திரம் என்பது உண்மையில் பாட்டாளிவர்க்க எதிர்ப்பும் ஏகாதிபத்திய சார்புப்பிரச்சாரமும் ஒளிய வேறொன்று மல்ல.
தவறிழைக்கிறவர்கள் எல்லா மட்டத்திலும்தான் இருக்கிறார்கள். ஆனால், புத்திஜீவிகள் அல்லது புத்தி ஜீவிகள் என்று சொல்லிக் கொள்கி றவர்கள் தவறிழைப்பது சமூகத்தின் சாபக்கேடாகும்.
பிற்சேர்க்கை :
இலக்கியச்சந்திப்பில் கலந்து கொள்ள கட்டாயமாக இலங்கைப்பணத்திற்கு ஆயிரம் ரூபா வசூலிக்கப்பட்டது.
இலவசமான மண்டபத்தில் சாப்பாடுகிறா ரோ இல்லையோ ஒரு மணிநேரம் தான் பங்குகொள்கிறாரோ இல்லையோ
ஆயிரம் ரூபா கட்டாயமானது. இது பிரமுகர்களுக்கு மட்டும் விதிவிலக்கு.
பணம் வாங்கி நடத்தும் இலக்கியமரபு, புலம்பெயர் திருமண, சாமத்திய சடங்குகளின் தொடர்ச்சியே ஒழிய வேறொன்று மல்ல.