Language Selection

சமர் - 22 :11 - 1997
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சரிநிகர் 112,113 இல் ராதிகா குமாரசாமி பெண்புலிகளும் பெண்விடு தலைப் பிரச்சனைகளும் என்றதலைப்பி லான தொடர் கட்டுரைகள் வெளிவந்தன.  இந்தகருத்துக்களை மறுதலித்துக் பல கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன.

ராதிகா குமாரசாமியின் அடிப்படை அரசியலைக் கேள்விக்குட்படுத்துவது பல  பதில் பல குறைபாட்டுடன்  தமிழ் மக்களின் போராடும் உண்மையின் பெயரால் எழுப்பப்பட வேண்டிய  விமர் சனக் கட்டுரைகள் வெளிவந்தன.  நாம் இக்கட்டுரை மீது தொடர்ச்சியாக இரு கட்டுரைகள் எழுதிருந்தபோதும் வழமை போல் சரிநிகர் அவற்றை இருட்டடிப்புச் செய்துள்ளது.

ராதிகாகுமாரசாமியின்  கட்டுரைக்குப் பின் சரிநிகர் 118 இல்  "துயரம் மலையளவு தான் ஆனால் மௌனத் தைக்காத்தல் சாத்தியமில்லை'' எனப்பதில் அளித்த கட்டுரை தலையங் கத்திற்கு எதிராக அமைந்திருந்தது.

ராதிகாகுமாரசாமியின் அடிப்படை அரசி யலைக் கேள்விக்குட்படுத்துவதன் மூலம்  நாம் இன்றுள்ள  ப+ர்சுவாப் பெண்ணிலை வாத  பிரமிப்புக்களை உடைத்தெறிய முனைகிறோம்.

''எந்த வடிவத்திலான  முரண்பாட் டையும் தீர்பதற்குப் பதிலாக பலாத்கா ரத்தை  வழி முறையாகப் பயன்ப டுத்துவதற்கு நான் உடன்படில்லை '' என ராதிகா குமாரசாமி திட்டவட்மாக தனது அரசியல் எது என்பதைத் தெளிவாக்குகின்றார்.

ஏனோதெரியாது இவர் ஐக்கியநாடுகள் சபையில் பெண்களுக்கு எதிரான வன் முறை தொடர்பான விசேச அறிக்கையா ளராக இருப்பதோ என்னவோ   அனைத்து வன்முறைக்கு எதிராக குறிப்பாக பெண்களுக்கு எதிராகத் தொடரும்  வனமுறைக்கு உலகளவில்  தலைமை தாங்கும்  ஐக்கியநாடுகள் சபையைப் பாதுகாக்கத்தான்  முதல் வன்முறையை நிராகரிக்கின்றார்.

ஆணாதிக்கம், சாதி ஒடுக்குமுறை, இன ஒடுக்குமுறை , நிற ஒடுக்குமு சுரண்டல் என அனைத்தும் வனமு றைசார்ந்ததே. உலகத்தின் அனைத்த இயக்கமும் வன்முறைக்கு ஊடாக கட்டியமைக்கப்பட்டுள்ளது.  பொதுவில் அமைதி என்பது இருக்கும் வன் முறையைப் பாதுகாக்கும்  நியாயப்படுத்தும் கோட்பாடுகளாகும்.

சமுதாயத்தில் இருக்கும் முரண்பாடு களை  தீர்க்க  வன்முறை அரசியல் இல்லை என அடித்துக் கூறும் ராதிகா   மாற்றுத்திக்கை அப்படியே இருக்க  காலில் விழுந்து கெஞ்சக் கோருகிறார்.

ஒரு முதலாளியிடம் கூலியைக் கெஞ்ச pயும் காலைப்பிடித்துக் கெஞ்கியும் கோருகின்றார்.   சிங்கள இனவாதிக ளிடம் தமிழீழ மக்கள் பணிந்து நின்று  கேட்கக் கோருகின்றார்.ஆண்களிடம் அமைதியாகத் குனிந்தபடி கெஞ்சக் கோருகின்றார். அதாவது ஒரு பெண்ணை ஆண் பாலியல் வன்முறைக்குட்படுத்தும் போது  எதிர்த்துப் போராடாது அமைதி யாக வன்முறையை ஏற்று  பின் பேரம் பேசி  அதே ஆணைத் திருமணம் செய்ய வேண்டும் என்கிறார்.இதுதான்  பலாத்காரத்திற்கு உடன்பாடு இல்லை என்று கூறியபடி செய்ய நினைப்பதாகும்.

இன்று நடைபெறும் உலகமயமாதலை  பார்த்துக் கைகட்டி நினறு மூன்;றாம் உலக நாடுகள் அதிக நிதி உதவி வழங்க  இரங்க வேண்டும். இதுதான் ராதிகாவின் அரசியல் அகராதி. ஏகாதிபத்திய நவகாலனித்துவ ஆக்கி ரமிப்பை எதிhத்து வன்முறை வேண்டாம் என்கிறார். மாறாக மாற்று வழி   பொலிசாக நின்று சேவை செய்ய கோருகின்றார். இவர்களின் நோக்கமும்  ப+ர்சுவாப் பெண்ணிலைவாதம் பற்றி  புதிய உலகமாதலைப்பற்றியும்  புரிந்து அதற்கு இவர்கள் சார்பாகக் கதைக்கப் பழகவேண்டும் என்கிறார். அது சரி பெண்கள் காலம் காலமாக போராடி அது சரி பெண்கள் காலம் காலமாக போராடி வந்தனர் என்பது  ஆணாதிக்கத்திற்கு மட்டுமின்றி  மதக்கோட்பாடுகளின் தொடர்ச்சியும் ஆகும். சமுகம்  காட்டுமிராண்டிச் சமுகமாக இருந்த போது  பெண்கள் தமது உணவுக்கும்    தமது குழுவைப்பபாதுகாப்பதற்கும் ஆயுதம் ஏந்தி ஆண்களைப்போல் போராடினார்கள் என்பது உண்மையானது என எல்லாப் பெண்ணிலைவாதிகளுக்கும் தெரியும். ஆனால் இவர்களுக்கு அவை கசப்பானவை.

சங்க இலக்கியத்தில் ஆதராமாய் கேட்பது பார்ப்பனிய இந்து மதத்த லைவர்களிடம் கேட்பதும் ஒன்றே. ஆணுக்குப் பெண் அடிமையான பின் தான் சங்க இலக்கியம் உருவானது. சங்க இலக்கியத்திற்கு சற்று முன் சென்றால்  பெண் ஆயுதம் ஏந்திப் போராடியதும்  தலைமை தாங்கியதும் ஆவணமாகவுள்ளது. கி.மு மூன்றாம் நூற்றாண்டில்  பெண் யுத்தத்தில் ஈடுபட்டதை உள்ளடக்கிய செங்கலை நூல் திரட்டில் பெண்ணின் நிலையைத் தெளிவாக்கியுள்ளது. இந்தச் செங்கல் வெட்டை இப்படியே தொகுத்த நூல் தான் '' சிந்துமுதல் கங்கைவரை ''  என்ற ராகுல்ஜி  நூலைப்படித்தால் ஓரளவுக்கு உண்மையான விபரங்களைப் பெறலாம்.

பெண்கள் சுதந்திரமாக வாழ்ந்ததும் தனது சமுகத்தை பாதுகாக்கப் போராடிய மனித வரலாற்றை ஆதரங்களின்றி பெண்விடுதலையை நோக்கிச் சிந்திப்பவர்களுக்கு கூட இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும். ஏனெனில் மனித வரலாற்றுத் தொடக்கம்  ஆண் பெண்ணை அடக்கியதல்ல. இருவரும் சமுகமாக பெண் உள்ளிட்ட  வாழ்வுப் போராட்டமாகவே இருந்தது. ஏன் மனித குல வரலாறில் பெண்கள் தான் போராட்டத்திற்கு  தலைமைதாங்கி  போரடிய வரலாறும்  ஒரு சரியான பெண்ணிலைவாதிக்கு தெரிந்துதானன் இருக்கும். ஆனால் ராதிகா போன்றோருக்கு தமது ஆணாதிக்க தலைமையைப் பாதுகாக்க  பெண்ணின் உரிமையை பறித்ததைக் கோட்பாட்டுத தளமாகக் கொச்சைப் படுத்தவது அவசி யமாகவுள்ளது.

''இரண்டாவதாக புலிகளின் ஆண் பெண் ஒருமை நிலைத்தன்தையைக் குறிப்பிடலாம். அதாவது ஆணையும்  பெண்ணையும் ஒரே விதமாக  செயற்றுவித்தல். இது பெண்மைக்கான சாவுமணி என்று கூறலாம்'' என ராதிகா கூறுகிள்றார். ஆண் பெண் சமத்துவத்தை மறுக்கும் போது  புலிகளின் மீதான செயற்தளத்தில் மட்டுமல்ல எல்லாத் தளத்திலும் இது கருக் கொள்கிறது. நாம் புலியின் அரசியல் போராட்டவடிவம், ஒழுங்கு அமைப்பை ஏற்றுக் கொண்டவர்கள் அல்லர். ஆனால் பெண் ஆண் இடையில் உள்ள இடைவெளி குறைக்கப்படும் போது அதை நாம் வரவேற்போம். பெண்கள் இன்று ஆண்களைப்போல் உள்ளனர் எனில்  நாம் பெருமைப்படவேண்டும். அதற்காக ஒப்பாரி வைக்கக் கூடாது. ஒரு பெண்  தலைமயிரை வெட்டி  நகையின்றி உள்ளபோது பெண்மைக்கு சாவுமணி அடிக்கின்றது எனக்கூறுவது நகைப்புக்குரியது. ஏன் ஆண்கள் கூட முன்பு தலைவளர்த்தும் நகையணிந்தும் இருந்தனர். ஆண் பெண்ணுக்கிடையில் இது ஒர் அடிப்படை வேறுபாடாக முன்னைய சமுகத்தில் இருந்தது இல்லை. ஆனால் இன்று பெண்ணைக் கல்லாக்கியபோதும், அழகியல் பதுமையாக்கும் போதும்தான் இதைப் பெண்மை என்ற பெயரில்  தொடரும் உண்மையான பிரிவின் நோக்கம் என்ன என்று பார்ப்போம்.

பெண் முடிவளர்த்து, காதல் உணர்வு ததும்ப ஆண்களுடன் கூடீயுள்ளவரை , இந்த உலக ஒழுங்கு மாறாது எள்பது தான் ராதிகா முதல் ஏகாதிபத்தியதினதும்  கொள்ளை. அதுதான் பெண்களுக்கு அழசகியல் சாதனங்களை ஏற்றுமதி செய்தும், விளம்பரம் செய்தும்  பெண்கள் அதைப்பற்றிச் சிந்திக்கவும்  கோருகின்றனர்.

பெண்மைக்கான ராதிகாவின் இன்னு மொரு விளக்கம் தருவதைப்பார்ப்போம்.

'' இரக்க சுபாவம் , சகிப்புத் தன்மை,  சமூகஉறவு பேணல்,  சாந்தம் இது போன்ற குணங்கள்  எல்லாம் மனிதர்களுடன் இணைந்து செயற்படும் போது   அவர்கள் பாவித்திருக்கிறார்கள். இந்தப் பண்புக்ள் குணங்கள் எல்லாம் நீண்ட காலமாக பெண்களின் நற்பண்புகளாக ஏற்று அங்கீகரிக்ப்பட்டபவை. இவை எல்லா நிலைமைகளிலும் மாறுபடா மையாகத் திகழவேண்டிய முக்கிய பண்புகளாகும்.

இவைக்கு வர்க்கம் கிடையாதா? ஏன் இந்தப் பெண்கள் இரக்கம், சகிப்பு, சமுகஉறவு, சாந்தம் போன்றவற்றை   பொதுவில் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு, உயர்சாதிப் பெண்களுக்கு  வழங்க வில்லை. தமிழ் பெண்களுக்கு  உயர்சாதிப் பெண்களுக்கு வழங்க வில்லை. .தமிழ் பெ;ணகளுக்கு சிங்களப் பெண்கள் வழங்கவில்லை. கறுப்பு பெண்களுக்கு வெள்ளையினப் பெண்கள் வழங்கவில்லை மூன்றாம் உலக நாட்டுப் பெண்களுக்கு மேற்கு நாட்டுப்பெண்கள் வழங்கவில்லை. ஏன்  சொந்த மருமகளுக்கு மாமி வழங்கவில்லை. இப்படி எத்தனையோ உண்டு.

ஏன் இவைகளை வழங்க மறுத்து கோட்பாட்டளவிலும்  நடைமுறையில் வன்முறை எனவும்  இந்தப் பெண்ணின் இந்தப் பண்புகள் மீது கேள்வியே இல்லையா?

இவை ஆண்களால் பெண்க்ள மீது  திணிக்கப்பட்டவை ஆண்தேவையைப் ப+ர்த்தி செய்ய  பெண் அடங்கிப் போகவும்  பெண்கள் மூலம் சமுக ஒழுங்கை ஏற்படுத்த திணிக்கப் பட்டவையே.

இது பெண்ணின் இயல்பான குணமல்ல.  மாறாக வீரம், செயல், ஆற்றல், பரஸ்பர மதிப்பு எனப்பன வற்றை ஆண்பெண் சமத்துவ நிலையில் தேடவேண்டும்.

இவைகளை  எல்லா நிலைமைகளிலும்   மானுட ஆளுமையாகக் காணவேண்டும்  என்பது வர்க்க போர் நடக்கும் போது  ஒரு முதலாளியை இரக்கம் , சகிப்பு,  சமூகஉறவு, சாந்தப்படி பாதுகாத்து , அதற்கு எதிராக இருக்கக் கோரும் ராதிகாவின் அரசியல் இன்றைய உலக ஒழுங்கைத் தொடர்வது எப்படி என்பதை மையமிட்டுள்ளது.

மேலும் அவர் '' பெண்கள் இராணுவ மயப்படுகின்ற நிலைமை முன்பைவிட அதிக அச்சுறுத்தலான ஒன்றாகும்.'' எனக் கூறும் போது சிங்கள இன வாதத்தைப்பாதுகாக் முனைகின்றார். புலிகளின் அரசியல் மக்கள் போராட்டத்திற்குப் பதில்  இனப் பிரிவுகளின் போராட்டமாக சீரழிந்தபோது   அது இனவாத சிங்கள அடிப்படைக்குச் சாதகமாக இருந்தது. இந்நிலையில்  புதிய படைப்பிரிவுகளை உருவாக்க  பெண்களை வெளியல் புலிகள் கொண்டு வந்தபோது  பெண';கள் படைப்பரிவுகள் கிங்கள இனவாதத்திற்கு  சவால் விடுகின்றன. இந்தப் பெண்கள் அணிதி ரள்வது என்பது இந்திய துணைக் கண்டத்தின் சமுகக் கட்டமைப்பின் பெண்ணின் அடங்கிப் போகும் போக்கை அதன் அடிப்படை உரிமையை கேள்வி;க் குள்ளாக்கியுள்ளது.

இது எதிர்காலத்தில் இந்திய சமுகப் பெண்ணின் வழிப்புணர்வுககு ஊன்று கோலாகியுள்ளது. இது எதிர்காலத்தில்  ஏகாதிபத்தியத்திற்கும் உள் சுரண்டல் பரிவுக்கும் விடப்படமு; ஒரு சவாலாக எழுந்துள்ளது. சனத்தொகை பாதிப்பிரிவு அடங்கியுள்ளவரை சுரண்டப்படும் வர்க்கம் தகது நிலையை இட்டு அலட்டிக் கொள்ளாப் போவதில்லை. அதை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் கீழ் அணிதிரண்ட பெண்கள்  (புலிகளின் நடவடிக்கை பிமையாக இருந்த போதிலும்)  இந்திய துணைக் கண்டத்தில் ஒரு தலைமையின் கீழ்  உருவாக்கியுள்ளது. எதிர்காலத்தில்' இதன் விளைவுகள் தெளிவாகப் பிரதிபலிக்கும்.

இதையிட்டு அச்சுறுத்துவதாக கூறும் ராதிகா  சிங்கள இனவாத அரசு சரி  சுரண்டல்பிரிவு சரி சொல்ல வருவது பெண்னே நீ மீளவும் அடுப்படிக்குப் போ. என்றுதான். பெண்வீதிக்கு வந்தால்  பயப்படுகின்றார்கள் என்றால் ஆணாதிக்கவாதிகளும் அதைச் சார்பவர்களுமே.

ஆண் பெண் வேறுபாடு இன்றி பெண் போராடவும் ஆயுதம் ஏந்தி யுத்தம் செய்யவும் கோருவது ஒரு பெண்ணின் அடிப்படை உரிமையாகும். சமுகம் வன்முறையில் உள்ளவரை வன்முறை திணிக்கப்படும் வரை அதற்கு எதிராக வன்முறையைக் கையாளும் உரிமை பெண்களுக்கு அவசியமும் அடிப்படை யுமாகும்.

ஓர் இனம் , ஒருமதம், ஒரு தேசியம் , ஒரு சாதி மீது வன்முறையை ஒரு பிரிவு மக்கள் கூட்டம் கட்டவிழ்தது விடுமாயின் அதை எதிர்த்துப் போராடுவதும்  சொந்த சனநாயகத்தை , மனித உரிமையை மீட்கப்போராடுவதும் பெண்ணின் அடிப்படையுரிமையாகும்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பில் பெண்களின் உரிமை நிலை நாட்டப் படுதல், பெண்விடுதலையை அடிப்படை யாகக் கொள்ளாமை என்பன  அரசியல் ரீதியில் விமர்சனத்திற் குரியவையே தவிர  போராடும் உரிமைமறுத்தலில் மையப்படவில்லை.

ஒரு பெண் ஆணைப்போல் போராடும் சமுக கடமையின் மீது நின்றபடிதான்  தனது விடுதலை நோக்கியும் போராட  வேண்டும். அதற்கு வெளியில்  ஒடுக்கலும் சாத்தியமில்லை. பெண்தனது உரிமையை மீள வென்றெடுக்க போராட சகிப்பு, அமைதி, சாந்தம், கமுகஉறவுகளபை; பின்பற்றுதல்  ஒடுக்கலும் பெறமுடியாது. பெண் தனக்காகப் போராடவும் அது கன்முறையை பரிசாக அளிப்பின் தற்காப்புக்கா வன்முறையை முன்னெடுக் கவும் உரிமையை தனதாக கொண்டுதான் பெண்விடுதலையயடைய முடியும். ஏகாதிபத்திய பெண்கள் அமைப்புக்கள் தமது ப+ர்சுவா கண்டு பிடித்தல்களில் நின்று அமைதி, சாந்தம் பற்றி  கூறும் போது எல்லாவித சொற் பதங்களும் உண்மை யில் பெண்களுக்கு எதிரான ஆணாதிக்க சார்பானவை என நாம் புரிந்துநடந்து கொள்ள வேண்டும்.

ராதிகா மேலும்

''இலங்கையை நோக்கினா லும் சரி . முழு உலகை நோக்கினாலும் சரி  முழு உலகையும் எடுத்துக் கொண்டாலும் சரி இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மனித உரி மைகளை ஈட்டிக் கொள்வதற்கு  எதிராகப் பெருந்தடைக்கற்களாக வுள்ளவை   மத இன மற்றும் தேசி யவாதத் தத்துவார்த்தங்களுமே. இந்த யதார்த்தநிலையை. . . எதிர்நோக்க விரும்பவில்லை'' என ராதிகா தனது அங்கலாப்பை வெளிப்படுத்துகிறார்.

உலக மனித உரிமைகளுக்கு சவால் விடுபவைகள் இல்லையா, அல்லது வேறு ஒன்றா, எனப்பார்ப்போம். இன்று மனித உரிமைக்கு  சவால்விடுபலை ஏகாதிபத்தியமும் சுரண்டல் அமைப்புமே. அப்படியிருக்க மத, இன தேசியவாத் எப்டி சவாலாக இருக்கமுடியும். மத, இன தேசியவாத எழுச்சி என்பது  மனித உரிமைகள் மறுக்கப்படுதல் என்பதிலிருந்தே தோற்றம் பெறுகிறது. வல்லவனின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஒடுக்கப்பட் மக்களின் குரல்கள்தான்  மத தேசிய இனவாதமாக வெளிப்படு கின்றன. ஒடுக்கப்பட்ட மக்களின்  எதிர்வன்முறையை நிராகரிப்பதன் மூலம் அந்த மக்கள் ஒடுக்கப்பட்டபடி  வாழும் அமைதிதான்  மனித உரிமையின் சனநாயகம் என வாதிட முனைகின்றார். அதனது இன்றைய உலகப் பொருளாதார அமைப்பு வடிவை குலைக்க முனையும் போராட்டங்களை தான் மனித உரிமைக்குச் சவால்விடுகின்றது என்கிறார்.

ஒரு முதலாளி சுரண்டும் உரிமையை யும் , ஒரு தொழிலாயி சுரண்டப்படும் உரிமையையும் ஏற்றுக் கொள்ளும்  மனித உரிமைதான் உன்னதமான சனநாயகத்தின் சின்னம் என்கிறார்.

இன்று சிங்கள இனவாதத்தை எதிர்த்துப் போராடுவதுதான் இலங்கையில் மனித உரிமைக்கு சவாலக இருக்கிறது என்கிறார். இப்போது சிங்கள்  இனவாதத்தடன் இணைந்து  சலுகைகோரிப் பெறுவது தான் தமிழ்பிரிவின் கடமையே ஒழிய எதிர்த்தப் போராடுவது அல்ல என்கிறார்.  பெரும்பான்மை இனத்தின்  வன்முறை ஆதிக்கத்தை எதிர்க்காத தமிழின  அமைதிதான் இலங்கையில்  மனித உரிமையைப் பேண அடிப்படையாகும் என்கிறார். அதுதான் தமிழ் மக்களுக்கு 'சமஷ்டித்தீர்வு' தான் சரி எனவும்  கூறுவதன் மூலம்    சிங்கள இனவாதத்தினதும்  ஏகாதிபத்தியத்தின தும் அடக்குமுறையின் கோட்பாட்டை அப்படியே எடுத்து  தமிழ் மக்களுக்கு சனநாயகம் , சமாதானத்திழன் பெயரால் திணிக்க முனைகின்றாh.

தமிழ்மக்களுக்கு உண்மையான சமாதானம், சனநாயகம்  மனித உரிமை என்பது  சுயநிர்ணய உரிமையில் தங்கியுள்ளது.  சுயநிர்ணயத்தை நிராகரித்த சமஷ்டி  என்பது சிங்கள இனவாதத்தற்குட்பட்ட  இனவாதத் தீர்வுகளே எம்மீது திணிக்க முயல்வதாகும்.

''சங்ககால இலக்கியத்தில்  பாண்டித்தியம் பெற்ற இராகவன் (விமர்சகர்) அவர்கள் கன்னிப் பெண்கள் எதிரியுடன் போர் புரிவதற்கென  உண்மையில் ஒருமுறை    நீதியாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஒரு முன் நிகழ்வைக் கூறமுடியுமா? என வினா எழுப்பும்போது இவர் ஒரு பெண்ணிலைவாதியா  என்ற கேள்வியே எஞ்சிநிற்கிறது. தொப்பிக்கு ஏற்ற தலையை செய்ய எண்ணிய  இவர் உலக மற்றும் தமிழ் மரபை விபச்சாரம் செய்து ஆணாதிக்கத்துக்கு முண்டு கொடுக்கின்றனர்.