கிழக்கும் மேற்கும் என்ற அனைத்துலகத் தமிழ்படைப்புகளின் தொகுப்பு என்ற பெயரில் ஒன்றை லன்டன் தமழர் நலன் புரிசங்கம் வெளியிட்டுள்ளது.
இவ் வெளியீடு தொடர்பான விமர்சனம் நீண்டது. சுருக்கமான விமர்சனத்தை மட்டும் வெளியிடமுடியும் என்பதால் பலவற்றை விடுத்து சுருக்கமாக விமர்சிக்க முனைகின்றோம்
'கிழக்கும் மேற்கும்" என்ற அனைத்துலகத் தமிழ்ப் படைப்புக்களின் தொகுப்பு என குறிப்பிட்ட இவ் வெளியீடு தான் தமிழ் பேசும் அனைத்துலக மக்களின் வெட்டுமுகத்தோற்றம் எனின் இதையிட்டு நாம் வெட்கி தலைகுனியவேண்டும்.
உலகில் மிக அதிகளவு மக்கள் பேசும் மொழிpயில் தமிழும் ஒன்று. இந்த மொழியின் படைப்புகள் 'கிழக்கும் மேற்கும், கொண்டு உள்ளது போல் தான் இருப்பின் தமிழ் மொழி அழிவதை விட வேறு வழியில்லை.
'கிழக்கும் மேற்கும்" ஒரு அனைத்துலக தமிழ்படைப்புகளின் தொகுப்பு அல்ல. இதை விட மிகச் சிறந்த படைப்புகள் மனிதனின் அடிப்படை பிரச்சினைகள் மீது படைக்கப்பட்டுள்ளன, படைக்கப்படுகின்றன. எனவே அவைகளை இவ் 'கிழக்கும் மேற்கும்" கொண்டிராத வரை இது அனைத்துலக என்பதற்கு பதில் வேறு ஒன்றே என்பது தெளிவான ஒன்று .
அனைத்துலக படைப்பு சரி, புலம் பெயர்ந்த படைப்பு சரி மனிதர்களின் அடிப்படை பிரச்சினைகளை உள்ளடக்கவேண்டும்.
யுத்தம,; அகதி, குடும்பப்பிரிவு, புலம்பெயர்வு இரண்டாவது பிரசையாக வாழும் புலம்பெயர் வாழ்வு, சாதி ஒடுக்கு முறை, பெண் அடக்குமுறை, சுரண்டல், வறுமை சிறுவர்பாலியல் வன்முறை, ஐனநாயக மறுப்பு என பல பலவாக இது நீண்டது நெடியது.
'கிழக்கும் மேற்கும்" எதைக் கொண்டுவந்துள்ளது. ஒரு சில எழுத்தாளரை தவிர மற்றவை பிரச்சனையில் இருந்து விலகிவிடுகின்றது. இது ஏன் இதற்கு தொகுப்புரை வழங்கிய இ.பத்மநாம ஐயரின் கூற்றைப் பார்ப்போம்.
'படைப்பின் உள்ளடக்கம் அரசியல் போன்றன பற்றிய விவாதங்களின்று விலக்கி நிறுத்திக்கொணடோம் " என குறிப்பிடுகின்றார். இது உண்மைதானா எனப் பார்ப்போம் .
சுரண்டலுக்கும் சுரண்டலுக்கு எதிரான அரசியலில் இப்புத்தகம் எதன் பக்கம் நிச்சயமாக சுரண்டலுக்கு எதிராக அல்ல.
ஏகாதிபத்தியத்துக்கும் மூன்றாம் உலகத்திற்கு இடையிலான முரண்பாட்டில் இப்புத்தகம் எதன்பக்கம் நிச்சயமாக மூன்றாம் உலக சார்பாக அல்ல. சிலவேளை அரசியலை புலியின் அரசியலாக நினைத்து கூறின் புலிக்கு சார்பான, எதிரான அரசியலில் எதன்பக்கம். நிச்சயமாக புலிக்கு எதிராக அல்ல ஐனநாயகத்துக்கு சார்பாக அல்ல .
நிச்சயமாக இப்புத்தகம் பொத்தம் பொதுவில் அரசியல் உண்டு. அது நிச்சயமாக நடுநிலையின் பெயரில் ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக அல்ல. புத்தகத்தில் விதிவிலக்குகள் உண்டு. ஆனால் பொதுவில் இது ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலை கொண்டது அல்ல.
இதற்கு ஐயரின் பிறிதோர் கூற்றை பார்ப்போம்.