இந்தியாவின் பாரதயிஐனதா என்ற இராமனின் வானரங்கள் ஆட்சியேறி உள்ள நிலையில். தமிழ் ஈழதேசிய வடுதலைபோராட்ட அணிகளின் குழப்பத்துடன் கூடிய அரசியல் எதிர்பார்ப்பு, மேலும் தேசிய விடுதலைப் போராட்டத்தை சிதைக்க முனைகின்றது.
உலகிலேயே மிகவும் மோசமான காட்டுமிராண்டி மதமான இந்துமதம் அதன் பாசிச கொடூரங்கள் மனிதனை பிளந்து தொட்டாலே குற்றம் மட்டும் இன்றி மரணத்தை சிபார்சு செய்கிறது இந்து தத்துவம்.
மிகமோசமான கொடூரங்களின் இருப்பிடமான இந்து பாசிச பார்ப்பனிய சதிராட்டங்களின் பார்ப்பனிய ஆட்சி இன்று இந்தியாவில் அரசை கைபற்றி உள்ள நிலையில் ராஐPவ் கொலையை தொடர்ந்து புலிகள் இந்தியாவில் இழந்துபோன ஆதாயங்களை மீளப்பெறும் கனவுகளில் தித்தித்துப் போய் உள்ளனர்.
புலிகளின் சொந்த அரசியல் தவறுகளில் இந்தியாவை பின்தனமாக பயன்படுத்தும் ஒரு யுத்த தந்திர தளத்தை இழந்துபோன வரலாற்று தவறுகள், சுயவிமர்சனம் இன்றி அதேபோல் மேலும் தவறு இழைக்க பின்நிற்காத வகையில் இன்று புலிகளின் நம்பிக்கைகள் பிரதிபலிக்கின்றன.
பார்பானிய சதிராட்ட கும்பல் இந்தியாவில் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தும் இன ஒடுக்குமுறை பற்றி அக்கறை இன்றியும் தமிழுக்கு பதிலாக சமஷ்கிருதத்தை திணித்து ஆட்சி செய்யவும் இந்தியை திணிக்க முனையும் நிலையில் அதுபற்றி அக்கறை இன்றி தமிழ்நாட்டில் பார்பானியத்துக்கு எதிரான போராட்டவரலாற்றை பற்றிய அக்கறை இன்றி தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு பாரதிய ஐனதாவின் பார்பானியம் உதாரணம் என நம்புகின்றனர்.
இன்று எமது தேசிய விடுதலை போராட்டமும் மக்களும் இந்து சமய போராட்டமாக அல்லது மொழிப்போராட்டமாக முன்னெடுக்க அதை ஒட்டி புலிகள் தமது அரசியல் நிலையில் முன் செல்லும் ஒரு சரியான நிலையை ஒரு மதப் போராட்டமாக சீரழிக்கும் அபாயம் இந்தியாவின் ஆட்சியில் ஏறியுள்ள வானரங்களின் உறவுக்கான முயற்சி சீரழித்துவிடுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதை ஊக்குவிக்கும் வகையில் புலம் பெயர் நாட்டு செய்தி பத்திரிகைகள், வானொலியின் பிரச்சாரம் மற்றும் மதத்திற்கு செய்யும் புதிய பிரச்சார சதிராட்டங்கள் இதை சுட்டி நிற்கின்றது.
புலிகள் அதன் சொந்த அரசியல் நிலைபாடுகளின் ஊசலாட்டத்தை கையகப்படுத்தி கருத்தியல் கலாச்சார தளத்தை சிதைப்பதன மூலம் இது வேகம் பெற வைக்க தீவிர இந்து பார்ப்பனிய வக்கிரங்கள் கொட்டப்படுகின்றன.
அன்று முஸ்லீம் மக்களை வெளியேற்றிய போதும் சரி, தாக்கிய போதும் சரி புலிகள் மத ரீதியாக அதை அணுகவில்லை. மாறாக பிறிதொரு தேசிய இனமாக கருதியே தாக்கினர்.
இதன் சுருதி மாறிவிடுமா? என்பது தான் இன்று உள்ள உடனடியான அரசியல் பிரச்சனையாக உள்ளதுடன், தேசிய விடுதலை மேலும் சிதைந்துவிடுமா என அச்சம் தோன்றுகிறது.
இந்நிலையில் பாரதிய ஐனதா அரசு இலங்கை விடயத்தில் புலிகளை கூடிய நிலை உள்ளதா ? என்பது இலங்கையில் இந்தியாவின் நலன்களுடன் தொடர்புடைய விடையமாகவுள்ளது.
தேசிய விடுதலைச் சக்திகளின் நம்பிக்கைக்கு புறம்பாக, தனது சுரண்டும் நலனைத்தான் பாரதிய ஐனதா அரசு முதன்மையானதாகக் கொள்ளும்.
இந்நிலையில் இன்று இலங்கை அமெரிக்காவின் நலன்களின் ஒட்டுமொத்த சரணாகதி அடைந்துள்ள நிலையில், இரண்டாவது போட்டி நாடு இன்று வெளிப்படையாக போராட முன்வராத நிலையில், இந்தியாவும் கூட அமெரிக்காவின் நலன்களுக்கு முழுமையாக திறந்துவிடும் நிலையில், இந்தியாவின் பிராந்திய வல்லரசு நலன் அமெரிக்க நலனை மீற முடியாத வகையில், இன்றைய உலக ஒழுங்கு உள்ளது.
இன்று பாரதிய ஐனதா அரசு புலிகளை விட அரசை சார்ந்து ஒடுக்கும் நிலை உள்ளதே ஒழிய, புலிகளுக்கு உதவும் நிலையில் இல்லை.
புலிகள் மக்களைச் சார்ந்து மேலும் போராட வேண்டுமே ஒழிய, அன்னிய உதவிகள், சக்திகளை எதிர்பார்ப்பதும் நம்புவதும் மேலும் போராட்டம் பலவீனம் அடைந்து, சிங்கள பேரினவாத சதிராட்டம் தீவிரமடைய வழி திறப்பதாக இருக்கும்.
இந்திய மக்களையும், அதை ஒட்டிய புரட்சிகர சக்திகளினதும் ஆதரவைக் கோரியும், கடந்தகால தவறுகளை சுயவிமர்சனம் செய்வதும் இன்றைய வரலாற்று கடமையாக புலிகள் முன்னுள்ளது.
இது மட்டும் தான் தேசிய விடுதலைப் போராட்டத்தை பலப்படுத்தி மேலும் வீறுடன் முன்னேற வழிகாட்டும்.