Language Selection

சமர் - 23 : 07 -1998
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சக்தி 4.3 இதழில் வெளியாகியிருந்த சில கருத்துகளை விமர்சனம் செய்ய வேண்டிய அளவிற்கு எதிர்புரட்சியை கோருவதாகும. இதை ஒத்த ஒரு விமர்சனம் சக்திக்கும் எழுதியிருந்தேன்.

'ரங்கூனுக்கு அப்பால்" என்ற யமுனா ராயேந்திரனின் சினிமா விமர்சனத்தை பெண்விடுதலைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் போராடும் சக்தி வெளியிட்டு இருக்கத்தேவையில்லை. சக்தியின் நோக்கத்திற்கு எதிரான அடிப்படையை இக்கட்டுரை உள்ளடக்கியுள்ளதுடன் அதை நியாயப்படுத்தப்பட்டும் உள்ளது.

மேற்கு நாட்டு சினிமாக்கள் பலவற்றில் மூன்றாம் உலக தனநாயகத்தை மீட்க எனகூறி மேற்கு நாட்டு ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த சில கதாநாயகர்களை முன்னிறுத்துவதன் ஊடாக மூன்றாம் உலகம் மீதான ஆக்கிரமிப்பை சொந்த நாட்டிலும் மூன்றாம் உலகநாட்டிலும் நியாயபடுத்துகின்ற நடைமுறை இன்று பரவலாக காணப்படுகின்றது.  இந்த வகையில் ரம்போ முதல் எண்ணற்ற இராணுவ நடவடிக்கை படங்கள் மூன்றாம் உலகில் ஐனநாயகத்தை நிலைநாட்ட போராடிச் செல்வதாக பலநூறுபடம் வெளியாகிவிட்டது.  இது தொடர்ச்சியில் இராணுவகண்ணோட்டம் இளகிய மனங்கள் முன் எடுபடாது எதிரான போராட்டங்கள் எழுந்தன, எழுகின்றன.

இதைத்தணிக்க இன்று மருத்துவ உதவி, ஐனநாயகத்திற்கு போராடுவது, உண்மையைச் சொல்லும் பத்திரிகையாளன் என பலநூறு படங்கள் வெளிவரத் தொடங்கிவிட்டன. இந்த இருவழிப்பாதையும் மூன்றாம் உலகநாடுகளின் ஐனநாயகப் பிரச்சனை மீது மேற்குநாடுகள் கரிசனையிருப்பதாக காட்டவும் அதை செய்யவே தமது தலையீடுகள் அவசியமாக உள்ளது என நிறுவவும் தொடர்சியான ஒருபிரசார வேலையே இப்படங்களின் அடிப்படை நோக்கமாகும்.

'ரங்கூனுக்கு" அப்பால்  என்ற படமும் இதைச் செய்கின்றது அதை நியாயப்படுத்தும் யமுனா 'எமது நாடுகளில் நிலவும் ஒடுக்குமுறையமைப்புக்களின் தன்மையில் இத்தகைய கலைப்பண்புகள்  வருவது சாத்தியமில்லை. இத்தகைய சந்தர்ப்பத்திலேயே 'ரங்கூனுக்கு அப்பால்" மாதிரி படங்கள் தருகின்ற சம்பவங்கள், அனுபவம் போன்றவற்றை அங்கீகரித்துக் கொண்டு, இவைகளை விமர்சனம் பூர்வமாக பார்ப்பதன் மூலம் நமக்கான கலைப்படைப்புக்களை சிறிய அளவிலேனும் உருவாக்கிக் கொள்ள முயலவேண்டும் " என்கிறார்.

இது போன்ற படங்களை நாம் உருவாக்கும் சூழல் இல்லை என்று கூறியபடி விமர்சன ரீதியாக பார்த்தபடி படம் படைக்கவேண்டும் என்கிறார். பர்மீய மக்களின் போராட்டத்தை அதன் இரத்தம் சிந்திய வரலாற்றை  கேவலமாக அமெரிக்காவிற்கு சார்பாக,  அமெரிக்கா தலையிட்டு மீட்கும் உரிமை ஐனநாயகத்தை பறைசாற்ற கோரிய படத்தை நல்லபடம் என்கிறார் சிறு விமர்சனத்தை பெயரளவில் வைத்தபடி.  இதன் பின்னால் உள்ள நோக்கத்தை பார்ப்பின் 'மாணவர்கள் கமியூனிஷ்டுக்கள் என்று இராணுவம் சொன்னதை நான் நம்பினேன் ஆகவேதான் நான் மக்களைக் கொன்றேன்".

என்ற காட்சிப்படிமமான வார்த்தைதான் எவ்வளவு கேவலமானது. அதாவது கம்யூனிசமல்லாத போராட்டத்தை அமெரிக்கா ஆதரிக்கும், அதற்காக அமெரிக்கா போராடும் என்பதைத்தான். இதைத்தான் யமுனா எம்மைப்பார்த்து இதைப்படைக்க கோருகின்றார்.

ஒரு ஐனநாயக இயக்கம் கம்யூனிசத்தை எதிர்க்கக்கூடாது. அது வரைதான் அது முற்போக்காக இருக்கும்.    இந்த ஐனநாயக இயக்கமும் லாராவின்( இங்கு லாரா அமெரிக்கப் பெண்) மனிதநேய உதவியும் கம்யூனிஷ்டுக்கள் இல்லை என்பதால் எழுகின்ற அனுதாபத்துடன் கூடிய ஏகாதிபத்திய சார்பு நிலைதான். அதாவது கம்யூனிஷ்டுக்கள் என்றால் கொல்லமுடியும் என்பதை லாராவின் கேள்வ pபுலப்படுத்துகின்றது. 'அதாவது இப்போது இராணுவம் அப்படிச்சொன்னதை நம்புகிறாயா" என்ற போது 'இல்லை" என்ற பதில் கம்யூனிஷ்ட்டுக்கள் என்றால் கொல்ல உரிமையும,  நான் அதற்காக போராடப்போவது இல்லை என்பதை லாராவின் கேள்வி இராணுவவீரனின் பதில் தெளிவாக்கின்றது.

இதே கருத்தைக் கொண்ட யமுனா இதை நியாயப்படுத்த முன்வைக்கும் பிறிதோர் கருத்தை பார்ப்போம.  'வளைகுடா யுத்தத்தில் பெரும்பாலான இடது சாரிகளால் சார்பான நிலைப்பாடு எடுக்க முடியவில்லை. அமெரிக்க மேற்குலக தலையீட்டை விமர்சிக்க முனைந்து ஆனால் சதாம் குசையினின் குவைத் படையெடுப்பை குர்திஷ் மக்களை சதாம் கொன்று குவித்ததை நியாயப்படுத்த இடது சாரிகளால் முடியவில்லை.

இத்தகைய இடைவெளிகளின் பிரதேசங்களில்தான் மனித உரிமை அரசியலும் அதைபற்றிய கலைபடைப்புகளும் அதன் மேலான விமர்சனங்களையும் மீறி முக்கியத்துவம் பெறுகிறது. நேiவாநச ஆழளஉழற ழெச றுயளாiபெவழn என்று ஒரு இடதுசாரி இயக்கம் கோசமாக வைத்துள்ளதை இப்படி விளங்கிக் கொள்ளமுடியும் " என யமுனா அமெரிக்கசார்பை நியாயப்படுத்த அழகாக விளக்கம் கொடுக்கின்றார்

அதாவது ஒரு பிரச்சனை மீது ஆம் அல்லது இல்லை என்ற முதலாளித்துவ கோட்பாட்டை முன்வைத்து இடது சாரிகளையும் அரசியல் விமர்சகர்களையும் கொச்சைப்படுத்தியபடி மனித உரிமையின் பெயரால் தலையீட்டை ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துகின்றார்

இலங்கை யுத்தத்தில் அரசு அல்லது புலிகள் இரண்டில் ஒன்றை ஆதரிக்கவேண்டும் என்கிறார். இதில் இடதுசாரியின் நிலை என்ன? என்கிறார்.  இடதுசாரிகள் இருவரையும் ஏற்றுக்கொள்வதில்லை ஏன் ஏனில் இடதுசாரிகள் எப்போழுதும் ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பானவர்களே ஒழிய ஆளும் வர்க்க அணியின் யுத்தத்தின் சார்பாக ஒரு நிலையெடுப்பதில்லை. புலிகள் தமிழ் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் அல்ல என்பதால் புலிகளை விமர்சித்தபடி தமிழ் மக்களின் போராட்டத்தை ஆதரிக்கின்றனர். இது புலியின் நலனில்இருந்து வேறுபட்டது.  இது சுயநிர்ணயம் என்ற கோட்பாட்டிற்கு உட்பட்டது.

நாம் மெக்சிக்கோவுக்கோ வாசிங்டனுக்கோ ஆதரவாக இருக்கவேண்டும் என யமுனா கோருவதும் இதில் ஏதாவது ஒன்று ஐனநாயகத்தின் பெயரால்,  தலையிட்டால் ஆதரிக்ககோருவது என்பது கடைந்து எடுத்த ஏகாதிபத்திய சார்பே.

ஏன் எனில் இன்று உலகில் உள்ள அனைத்து மனிதவுரிமை மீறலும் ஏகாதிபத்திய தயவு இன்றி (இது நேரடியாகவோ மறைமுகமாகவோ) நடக்கமுடியாது. குழந்தையை கிள்ளி விட்டுவிட்டு தொட்டிலை ஆட்டுவதற்கு ஆதரிப்பதில் தான் யமுனா தனது இடைவிடாத முயற்சியை இடதுசாரிகள் பெயரில் செய்ய எணணுகிறார். அதாவது ஆணாதிக்கத்தை எதிர்த்து பெண் போராடும் போது பெண்ணுக்கு அமெரிக்கா ஆதரித்தால் நாம் ஏற்கப்போகிறோமா இல்லையா, என்ற கேள்வியை சக்தி முன் வைத்து, பின் அதை ஏற்க வேண்டும் என்கிறார். இது தான் அவரின் அரசியல் விபச்சாரக்கலை.  இதை அவர் ' இப்படம் நமக்குள் ஏற்படுத்துகிற, சில காட்சிகள் தருகிற அரசியல் தத்துவ அநுபவங்கள் நம்மை நெகிழ்த்தி விடுபவை " என்பதன் ஊடாக அமெரிக்க சார்பு தத்துவத்தை தத்துவரீதியில் அழகியல் ஊடாக புகுத்தும் தன்மையைத் தான் மெச்சி அது  நெகிழ வைக்கின்றது என்கிறார். இந்த மாதிரியான மோசடித்தனங்களையும், ஏகாதிபத்திய சார்பை நியாயப்படுத்தும் கருத்துக்கு சக்தி இடம் கொடுப்பது நிறுத்தப்பட வேண்டும் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக கேட்கத் தோணுகின்றது.  இது சக்தி முன்னுள்ள ஒரு கோட்பாட்டு பிரச்சனையாகவும் உள்ளது.

அடுத்து அசோகா பண்டாரகே எழுதிய சுவிஷ் தேவி மொழி பெயர்த்த ' சர்வ தேசப் பெண்ணியத்தை நோக்கி --- " என்ற கட்டுரையைப் பார்ப்போம்.

'சர்வதேசிய  பெண்ணியத்தை நோக்கி -- " எனத் தலைப்பிட்ட கட்டுரை  இறுதியில்  ' பெண்கள் விடுதலைப் போராட்டம் என்பது ஓரிடத்தில் உருவாக்கப்பட்டு மற்றைய நாடுகளுக்கு ஏற்றமதி செய்யக்கூடிய கொள்கையல்ல. அந்தந்த நாட்டுக் கலாச்சாரச் சூழலின் அடிப்படையில் உருவாக்கப்பட வேண்டிய ஒன்று " எனத் தலைப்புடன் முரண்படுகின்றது. அதாவது இக்கோட்பாடு பின்நவீனத்துவத்தின் பின்னால் கட்டியமைக்கப்படுகின்றது.

ஒரு பிரச்சனை உலகளவில் பொதுவாக இருந்தால், அதன் பொது அடிப்படை உலகளாவிய ரீதியில் பொதுவானது. பெண் ஓடுக்குமுறை அதாவது ஆணாதிக்கம் உலகளவில் பொதுவானது. அது அமெரிக்காவில் ஏகாதிபத்திய கலாச்சாரம் முதல் இந்தோனேசியா அடர்காடுகளில் வாழும் மக்கள் எல்லோருக்கும் பொதுவானதாக, ஒரே வகைப்பட்ட ஒடுக்குமுறையாகக் காணப்படுகின்றது. இதன் ஒடுக்குமுறைவடிவம் மட்டும் தான் ஒவ்வொரு நாட்டு சமூக பொருளாதார கலாச்சாரத்துடன் வேறுபடுகின்றது.

எனவே பெண்விடுதலைக்கோட்பாடு உலகளவில் பொதுவாகவும், நாட்டுக்கு நாடு குறிப்பான விசேட விடையங்களையும் உள்ளடக்கியவைதானே ஒழிய, கலாச்சார வேறுபாட்டை அடிப்படையாக கொண்டவை அல்ல.

கலாச்சாரம் என்கின்ற போது மதம் மற்றும் பொருளாதார அடிப்படையாக கொண்ட இது , ஒருக்காலும் ஒரு சரியான பாதையை கலாச்சாரம் ஊடாக அடைந்து விட முடியாது. கலாச்சாரம் என்பது பிற்போக்கின் மீது கட்டப்பட்டவை தான். எனவே பிற்போக்கு கலாச்சாரத்தை கடக்க வேண்டின் முற்போக்கு கலாச்சாரம் உலகளவில் ஒன்றாகவே இருக்கமுடியுமே ஒழிய வேறுபட்டு இருக்க முடியாது. வேறுபட்டு இருக்க முடியும் என வாதிடின் அது இனம், நிறம், பொருளாதார வேறுபாட்டை தொடர்வதாக அர்த்தப்படும்.

அடுத்து வர்க்கம் பற்றி சொற்பதத்தில் பேசியபடி பொதுவான அமைப்பை தேட வேண்டும் எனப் பிரயோகிக்கப்படுகின்றது. அதாவது வர்க்கத்தைக் கடந்த பொதுவான பெண்கள் அமைப்ப என்பது ஆளும் வர்க்க பெண்கள் சார்ந்ததே ஒழிய அடிமட்ட பெண்கள் சார்பானது அல்ல. இதை அவர் 'சமகால பெண்ணியப் போராட்டம் உலகளாவிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டம் . இது மனித உறவுகளை மேம்படுத்த வளப்படுத்தக்கூடிய குணாம்சம் கொண்டவை. பெண்களின் கலாச்சார பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் கணக்கில் கொண்டு நடைமுறைப்படுத்தக்கூடிய ஒரு பெண்ணிய அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் " எனக் குரல் கொடுக்கின்றார்.

பெண்ணின் ஏற்றத்தாழ்வான கலாச்சார பொருளாதார வேறுபாடுகளைக் கடந்த பெண்கள் அமைப்பு வேண்டும் என்பது வர்க்கப்போராட்டம் அல்லாத சமரசப் போராட்டத்தை கோருகின்றார். இதைத்தான் இன்றைய முக்கியத்துவம் வாய்ந்தது என்கின்றார். அதாவது இன்றைய உலகப்பொருளாதார அமைப்பில் ஏற்றத்தாழ்வை எல்லாத்துறையிலும் தகர்க்காத பொதுவான பெண்கள் அமைப்பை கோருவது என்பது மிக கீழ்நிலையில் உள்ள மக்களையும், அடிமட்ட பெண்களையும் ஏமாற்றும் முயற்சியாகும்.

அடுத்து 'அத்துடன் லெப்பினிசம் இச் சூழ்நிலைகளில் நடைமுறையில் இருப்பின் அதற்கான அரசியல் பார்வையும் இங்கு வைக்கப்படவில்லை. " என கட்டுரையாளர் குறிப்பிடுகின்றார். தொடர்ந்து  'கணவன் -மனைவி அடிப்படையிலான வாழ்க்கைத் துணை நல உறவு பல சமூகப்பெண்களுக்கு ஒரு முக்கிய உறவாக அமையாது உணர்வு பூர்வமான பல தேவைகள் மற்றைய பெண்களுடனான இவர்களது உறவில்தான் பெறப்படுகின்றது. " என்கின்றார்.

கட்டுரையாளர் ஆண்களின் ஆணாதிக்கத்தை நியாயப்படுத்த அதை மறைமுகத்தில் பெண்களே நீங்கள் நீங்களாவே முரண்படாது விலகிச் செல்லுங்கள் என்கிறார். பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்பட்டால் தற்கொலை தீர்வு . ஆணின் உறவால் ஏற்படும் கருவை அழிப்பது தீர்வு. பெண்-பெண் உறவு, என முன்வைக்கப்படும் மாற்றுத்தீர்வுகள் ஆணாதிக்கததின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்காத, அதிலிருந்து கண்ணை மூடிப் பால் குடிக்கும் பூனைபோல் கண்ணை மூடி விலகிச் செல்லும் தீர்வுகளை முன்வைப்பதுதான், இன்று இருக்கும் ஆணாதிக்க பொருளாதார அமைப்பை பாதுகாக்கும் அல்லவா?

பெண்-பெண் உறவு, ஆண் - ஆண் உறவு என்பன ஆணாதிக்கமும் சுரண்டல் சமூகமும் கொடுத்த கொடைதானே ஒழிய, அதற்கு வெளியில் கண்டுபிடித்தவை அல்ல. ஆணாதிக்கம் தான் பெண்களை தனியாக்கி சொத்தாக்கிய பொருளாதார சுரண்டலை பாதுகாக்கும் அமைப்புத்தான் ஆண் பெண்ணின் இயல்பான பாலியல் உறவுகளை கண்ணி வைத்தும், நலமடித்தும் பிளவுபடுத்தின.

இந்த முடக்கம் தான் ஆண்-ஆணுக்கு இடையிலும் , பெண்-பெண்ணுக்குமிடையிலும் உறவை முடக்கப்பட நலம் அடித்த செக்¨ வேட்கையை தீர்த்துக் கொள்ள வழி ஒழிய இதற்கு வெளியில் அல்ல.

இந்த மனிதர்களின் இயல்பான உணர்ச்சி மட்டுப்படுத்தப்பட்டதை எதிர்த்து போராட வேண்டிய சமூகம் அதற்கு வெளியே தீர்வைத் தேடி முன்வைத்த போது அதை பெண்விடுதலையின் அங்கமாகவும் அல்லது ஏதோ ஒருவிதத்தில் நியாயப்படுத்துவது என்பது அடிப்படையில் ஆணாதிக்கத்துக்கு சார்பானது. அதைக் கேள்விக்குள்ளாக்காது, அதை நொருக்காது பேண முயலும் வழிகளாகும்.

ஆண்-பெண்ணுக்கு இடையில் ஆணாதிக்க சுரண்டல் அமைப்பு ஏற்படுத்தயி பிளவை, பெண் மீதான ஆணாதிக்க சுரண்டல் சமூக ஒடுக்குமுறை தகர்க்கும் போது, ஆண் பெண்ணுக்கு இயற்கையாகவே உள்ள பரிமானத் தெரிவான உணர்ச்சி தடுக்கப்படாத சமூகத்தில் ஓரினச் சேர்க்கை என்பது இல்லாமல் போய்விடும். அதுவரை இருப்பதை நியாயப்படுத்துவதற்குப்பதில் அதை எதிர்த்து போராடுவதன் மூலம், ஒரு சரியான அரசியல் மார்க்கத்தை முன்வைத்தும் ஆண்-பெண்ணுக்கு இடையில் உள்ள இடைவெளியைத் தகர்க்கவும் பெண் மீதான ஆணாதிக்க ஒடுக்கு முறையை ஒழித்துக்கட்டவும் போராடுவதே எம்முன் உள்ள ஒரே பணியே ஒழிய அதை விடுத்து இருப்பதை அங்கீகரித்து அதை நியாயப்படுத்தி அதற்கு ஊடாக ஆணாதிக்கத்துக்க வக்காலத்து வாங்குவது அல்ல.

சில குறிப்புகள் -

ஒரு பொருளில் இருபோக்குகள் இருக்க முடியும் என்ற பின்நவீனத்துவத நியாயப்படுத்தல் தான், ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தை ஏகாதிபத்தியத்துக்கு சார்பாக மாற்றக் கோருகின்றது. அதாவது யமுனா முன்வைத்த ரங்கூன் சினிமா அமெரிக்காவுக்கு சார்பாகவும் அதே நேரம் அங்குள்ள ஐனநாயகப் போராட்டத்தைச் சித்தரிப்பதால், இரட்டைத்தன்மை கொண்டவை. ஆகவே அதில் நல்ல அம்சம் உள்ளது. எனவே படத்தை ஐனநாயகத்தின் பெயரில் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கின்றார். இது பின் நவீனத்துவத்தின் இழி நிலபரத்தைக் காட்டுகின்றது.

இது இன்று பணம் வாங்கி மூன்றாம் உலக நாடுகளில் இயங்கும் தன்னார்வக்குழுக்கள் செயற்பாடு. அன்னை திரேசாவின் காட்டுமிராண்டித்தனமான திமிர்த்தனமான கத்தோலிக்க செயற்பாடு, டயானாவின் ஆடம்பரத்தில் மக்கள் மீதான செயற்பாடு, எம்.ஐp.ஆர் . இன் சினிமாத்தன செயற்பாடுகள் என அனைத்தையும் அங்கீகரிக்கக் கோருவதுமாகும். அதாவது இரண்டும் உண்டு. நல்லதை உயர்த்தி அவர்களைப் போற்றுவோம் என்கின்றனர். இது பின்நவீனத்துவ கோட்பாட்டின் பின் நின்று ஏகாதிபத்தியத்துக்கு, ஓடுக்கும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் செயலாகும்.

-சக்திக்காக எழுதப்பட்ட கட்டுரை சமரிலும் பிரசுரிக்கின்றோம். -