Language Selection

சமர் - 23 : 07 -1998
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சரிநிகர் 139 இல் (ஐன 29-பெப் 11) "பெண்ணியத்தின் ஒழுக்கம் என்ன?" என கேள்வி எழுபிய சங்கமனின் ஒரு அலசல் வெளியாகியிருந்தது. பெண் விடுதலை தொடர்பாக டிஷ்கோவின் |கட்டற்ற சுதந்தரம்| எதுவோ அதை முன்வைத்து அதை நிறுவ தனது வச்சிரமான மார்க்சிய எதிர்ப்புடன் கூடிய கட்டுகதைகளையும் அவதூறுகளையும் பொழிந்து தன்னியுள்ள சங்கமன் இதை ஒரு அலசல் என போட்ட தன் மூலம் ஊரில் திண்ணையில் கூடி மற்றவர்கள் பற்றி இல்லாத பொல்லாததை இட்டுக் கட்டி அலசும் வம்பைத்தான் மீள ஒரு முறை செய்துள்ளார். இந்த அரசியல் வம்பளப்பு அலசல்களை பார்ப்போம்.

'மார்சீயம் என்ன சொல்லும்? அதுவும் ஆணாதிக்க முனைப்புக் கொண்ட தத்துவம்தான். அது மட்டுமல்ல மார்க்ஸ் மாதிரி தன் மனைவியைச் சுரண்டியவர் வேறுயாரும் இருக்க முடியாது முழுநேரத்தையும் பிரிட்டிஷ் மியுசியத்தில் கழித்த மார்க்ஸ் தன் உடல் இச்சையைத் தீர்ப்பதற்காகத்தான் மனைவியிடம் வந்தார். அவளை தொடர்ந்து கர்ப்பவதியாக்கினார். வறுமையில் வாடவிட்டார். அதுமட்டுமல்ல தன் உடல் இச்சையைத் தீர்த்துக்கொள்ள ஒரு வைப்பாட்டிச்சியை வேறு வைத்துக்கொண்டார். இதையும் விடக்கேவலமான சுரண்டல் தான் தன்மூலம் வைப்பாட்டிச்சிக்குக் கிடைத்த குழந்தைக்கு தான் அப்பனென ஏற்றுக்கொள்ள மறுத்தது. அப்படிப்பட்டவரின் தத்துவத்தில் பெண்களை ஆண்கள் சுரண்டுவது பற்றிய பேச்சை எதிர்பார்க்க முடியாது."

என எழுதும் சங்கமன் இதற்கான ஆதாரத்தை தரமுடியாத அரசியல் பேடித்தனம்தான் விசித்திரமானது. எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு வக்கிரமாக மார்க்சியத்தை சேறடிக்க முனைகிறார். சொந்தப் பெயரில் இவைகளை முன் வைக்க முடியாத ஏகாதிபத்திய சக்திகளை உறுஞ்சி உமிழும் இவர்கள் தான் பெண்ணினத்தின் முதல் எதிரியாகவும் ஆணாதிக்கத்தை பாதுகாக்க முனையும் இன்றைய நுண்ணறிவு கொண்ட பிரதிநிதிகளுமாவர்.

மார்க்ஸ் ஆணாதிக்கவாதி எனக்காட்ட முன் வைக்கும் ஆதாரம் முழு நேரத்தையும் பிரிட்டிஷ் மியூசியத்தில் கழித்தவர். மனைவியுடன் இச்சையைத் தீர்க்க மட்டும் வந்து போனவர். குடும்பத்தை ஏழ்மையில் விட்டு விட்டு ஆணாதிக்க சுகம் கண்டவர். இவைதான் சங்கமனின் முதலாவது மார்க்சியம் ஆணாதிக்க தத்துவம் என நிறுவ முன்வைத்த எடுகோள. அருமையிலும் அருமையான பெண் விடுதலை தத்துவத்தை வம்பளப்பு அலசலுக்கு ஊடாக சொரிந்துள்ளார்.

சங்கமன் மார்க்சை கொச்சப்படுத்தி கூறுவதைப் பார்த்தால் மனைவியை வறுமையில் வாடவிடாது வைத்திருப்பவர்களும்,  உழைத்து நாள் பூராகவும் மனைவியுடன் கொஞ்சிக் குலாவிக் கொண்டு இருப்பவர்கள் ஆணாதிக்கவாதியில்லை பெண்விடுதலைவாதிகள் என்கிறார் சங்கமன்.  எவ்வளவு விசுவாசமாக யாரை பாதுகாக்க முனைகிறார் ஏனின் மார்க்ஸ் யாரை எதிர்த்து தன் வாழ்நாள் எல்லாம் போராடினாரோ அந்த கனவான்கள் தான்  உண்மையான பெண்விடுதலைவாதிகள் எனக் கூறி பாதுகாக்க முனைகிறார்.

இந்த கணவான்கள் மட்டும் தான் உலகில் வறுமையின்றியும், மனைவியுடன் உழையாது மணிக்கணக்காக கொஞ்சிக் குலாவ முடிந்தது முடிகின்றது. இதையிட்டு தான் சங்கமன் மார்க்சுக்கு விமர்சனம் வைத்து கொச்சை படுத்துகிறர்.

உலகில் மிக மோசமான அடுத்தநேர உணவு என்ன எனத் தெரியாது  100 கோடி மக்கள் வறுமையில் வாடுகின்றனர். இந்த பிரிவு முதலாளிக்காக நாள் பூராகவும் நேரக்கணக்கு இன்றி உழைத்து உழைத்து களைத்து போன நிலையில் தன் நிலையிழந்து கணவன் மனைவி கூடி வாழ இடம் கூட இன்றி பட்டினி பட்டாளங்களாக வாழும் இம் மனிதர்கள் சங்கமனின் கோட்பாட்டின் படி ஆணாதிக்கவாதிகள,  வறுமைக்கும் பெண் ஒடுக்குமுறைக்கும் காரணம் என்கிறார் அருமையான எடுகோள் சங்கமனினது.

உலகில் உள்ள வறுமைக்கு காரணம் உழைப்பு போதாது என்பது முதலாளித்துவ மற்றும் இதன் தத்துவ மேதைகளினதும், அதன் எடுபிடி அரசு பிரதிநிதிகளதும் கோட்பாடு. அதையே மார்க்சுக்கு பொருத்த முனையும் சங்கமன் மார்க்ஸ் உழைத்தது போதாது அல்லது தேவையற்ற சம்பளமில்லாத பிராக்கு பார்த்து மனைவியை வறுமையில் வாடவிட்டு ஆணாதிக்க சுகம் கண்டவர் என காழ்ப்புணர்வுடன் சேறுவீசும் அருமைதான் அருமை.

 

கேவலமான கேடுகெட்ட இந்த வாதங்கள் எங்கு இருந்து வெளிவருகிறது. யாழ்பாணத்து சுய நலம் பிடித்த குட்டிபூர்சுவா கண்ணோட்டத்துடன் கூடிய,  சுரண்டும் வர்க்கத்தை பாதுகாக்கும் முனைப்பில் ஊற்று எடுக்கின்றது. தமிழ் ஈழவிடுதலைப் போராட்டம் எழுச்சி பெற்ற காலத்தில் இளைஞர்கள் இயக்கத்திற்கு சென்ற போது பெற்றோர்களும் உறவினர்களும் அறிஞர் பெருமக்களும்  சொன்னார்கள் இதை விட்டு விட்டு குடும்பத்தை பார்க்கும் வழியைப் பார் என்றார்கள்.  குடும்பத்துக்காக உழை என்றார்கள் தங்கை தங்கச்சிக்காக உழை வயது போன பெற்றோரைப் பார் என்ற சுயநலத்துடன் கூடிய பூர்சுவா பார்வையைத்தான் சங்கமன் மார்க்சுக்கு ஒப்பிட்டு முன்வைத்து சேறடிக்கின்றார்.

இதையே புலிகள் இயக்கங்களை தடை செய்து கைது செய்த போதும் அரசியல் வாதிகளை கைதுசெய்த போதும் சங்கமனின் அதே வழியே முன்வைத்தனர். புலிகள் ஒவ்வொரு கைதியிடமும் சொன்னார்கள் திருமணம் செய் வெளிநாடு போய் உழை இப்படி சொன்னதைத்தான் சங்கமன் புலியின் அதே அரசியலில் நின்று மார்க்சுக்கு பிழை கண்டு சேறடிக்கின்றார்.

புலிகள் அரசியலை கைவிட பெண்ணுடன் சுகம் கண்டு கொள், உழைத்து பணத்தாசை பிடித்துத் திரி என்பதையே மார்க்ஸ் செய்து இருக்கவேண்டும் என சங்கமன் கூறுகின்றார். முன்னைய போராளிகள் ஐரோப்பாவில் செயல்படுவதை பார்த்தால் புலிகள் தீர்க்க தரிசனம் மிக்கவர்கள் என்பதைக் காட்டுகின்றது. ஆகவே சங்கமன் விரும்புவது இதைத்தான. மார்க்ஸ்  செய்து இருக்கவேண்டியது எழுதுவதை விட்டு போராடுவதை விட்டு தான் உண்டு என்று தன் பாட்டில் இருந்து இருக்க வேண்டும். மார்க்சின் எழுத்துக்கள் சங்கமன் போன்ற குட்டி பூர்சுவா கோட்பாட்டுக் காவடிகளை அதன் அச்சிலேயே அச்சுறுத்துவதால் மார்க்சுக்கு எப்படியாவது ஆணாதிக்க முத்திரை குத்தி சேறு அடித்து அவதூறு பொழிந்து விட தலைகீழாக முனைந்து நிற்கின்றார்.

இந்த இடத்தில் ஆண்- பெண் அவர் அவர் சுதந்திரத்தில் தலையிடாத நிலை வேண்டும் எனக் கூறும் சங்கமன் மார்க்சுக்கும்-மனைவிக்கும் பொருந்தாது என விளக்கவில்லை. மார்க்சின் சுதந்திரத்தை பறிக்கும் உரிமை மனைவிக்கும் சரி சங்கமனுக்கும் சரி இல்லை என்பதை மறுத்து சுதந்திரம் இல்லை என சங்கமன் கட்டுரையில் முரண்பட்டு தனது மார்க்சிய எதிர்ப்பு நிலையில் நின்று கூறுகின்றார் .இது எதைக் காட்டுகின்றது ?

அடுத்து மார்க்சுக்கு வைப்பாட்டியிருந்தது எனவும் அப்பெண்ணின் குழந்தையை மார்க்ஸ் தன்னுடையது அல்ல என மறுத்தார் என அடுக்கடுக்கான அவதூற்றை முன்வைத்து மார்க்ஸ்ஆணாதிக்கவாதி என அடுத்த ஆதாரத்தை முன்வைக்கிறார். இது எங்கிருந்து யார் மூலம் பெற்றார் என்ற ஆதாரத்தை முன்வைக்க வேண்டும் என்ற எழுத்துப் பண்பைக் கூட இந்த ஏகாதிபத்திய வாரிசு வசதியாக தனது தேவையுடன் மறந்து போகின்றார்.

மார்க்ஸ் மார்க்சியத்தை நிறுவ போராடிய காலத்தில் அவரின் தத்துவத்தை எதிர்த்து எழுதிப்போராடிய எதிரிகள் கூட முன் வைக்கமுடியாத ஒரு அபாண்டமான குற்றச்சாட்டை இன்று சோடித்து தத்துவ விபச்சாரம் செய்ய வேண்டியுள்ளது சங்கமனுக்கு. மார்க்சியத்தை நிறுவி  150 வருடம் கடந்த மார்க்சிய போராட்டமும், அதன் வரலாற்று தலைவர்களும் இது போல் ஆயிரம் அவதூறுகளையும் சேறடிப்பையும் சந்தித்தனர் சந்திக்கின்றனர். ஆனால் மார்க்சியமும் அதன் தலைவர்களும் காலத்தை கடந்து ஒருபுரட்சிகர  தத்துவமாக மீள மீள எல்லாவண்ண எதிரிகளையும் எதிர்த்து நிமிர்ந்து நிற்பதால் எதிரிக்கு எஞ்சிய தாக்குதல் வடிவம் கண்மண் தெரியாத அவதூறுதான்.

இவ் அவதூறு மாக்சுக்கு மட்டும் வரலாற்றில் இட்டுக் கட்டியவையல்ல. லெனினுக்கு ஒரு கள்ளக்காதலி இருந்தாள் என்றும் மாவோ பல பெண்களுடன் உறவு வைத்து இருந்தவர் என்ற கட்டுக்கதை அவதூறுகள் முடிவற்றவைதான். ஸ்டாலின் கஸ்ரோ பெண் கொடுமைக்காரர் எனவும் ஸ்டாலின் தனது மகனை இரண்டாம் உலக யுத்த வீரனாக அனுப்பிய போது கிட்லர் கைது செய்து பேரம் பேசிய போது ஸ்டாலின் மறுத்து போராடியது தனது மகனை கிட்லர் கொல்லவும்,  மாவோ தனது மகனை கொரிய யுத்தத்தில் ஈடுபடுத்தி வீர மரணம் அடையவும் காரணமான இவர்கள் பிள்ளை குடும்பபாசமற்ற அரக்கர்கள் என எல்லையில்லாத அவதூறுகளை  மார்க்சிய தலைவர்களும் மார்க்சியமும் சந்தித்தன சந்திக்கின்றன.

வாழ்வையே போராட்டமாக மகிழ்சியாக கொண்டு போராடிய மார்க்சிய தலைவர்கள் மீது சங்கமன் போன்றோர் ஏகாதிபத்திய சக்தியை அதன் விசுவாச நாயாக வால் ஆட்டி நக்கி மீள காக்கி விடத்தான் முடியும. ஆனால் அது ஏகாதிபத்தியம் போல் நாற்றத்தால் நிறைந்தது.

அடுத்து சங்கமன் முன்வைக்கும் பொன் மொழியை பார்ப்போம் .

' உண்மை மார்க்சீயம் பற்றி எத்தனை எத்தனையோ வியாக்கியானங்களும் வெட்டு ஒட்டுக்களும் நடந்து கொண்டிருக்கும் இக்காலத்தில் பெண்ணியமும் மார்சீயத்துள் சேர்த்துக் கொள்ளப்படுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இதனால் மார்க்சீயமும்  பலமுறும் அத்தோடு பெண்ணியமும் பலமுறும். "

மார்க்சியத்தில் எத்தனையோ வியாக்கியானங்கள் ஒட்டுக்கள் நடக்கின்றது என்று கூறி அதை உயர்த்துவதன் மூலம் ஏகாதிபத்திய கோட்பாடுகளை உயர்த்தி முன் வைக்கின்றார். மார்க்சியம் என்பது என்ன? மார்க்சின் பெயரால் அவர் வைத்த தத்துவம்தான் மார்க்சியம்  மார்க்சை மறுத்த தத்துவம் மார்க்சியம் அல்ல. மார்க்சுக்கு யாரும் திருத்தமோ சேர்ப்போ ஒட்டோ செய்யமுடியாது. அப்படி செய்வது என்பதும் பின் அதை மார்க்சியம் எனவும் அழைக்கவும் முடியாது. அது வேறு ஒரு கோட்பாடுதான்.

மார்க்சியத்தை மார்க்சின்வழியில்  மேலும் வளர்த்து எடுக்க முடியுமே ஒழிய மார்க்சின் அடைப்படைக் கோட்பாட்டை நிராகரித்து அல்ல  அவ் அடிப்படை கோட்பாட்டின் மேல் நின்றுதான் இவை எல்லாவிதமான தத்துவத்திற்கும் செயற்தளத்திற்கும், வடிவங்களுக்கும் உலகளவில் போதுமானது. சரிநிகர்,  சரிநிகர் நிறுவனத்துக்கு தான் சொந்தமானதே ஒழிய விரும்பிய எவரும் அதன் பெயரில் பத்திரிகை விட முடியாது. சங்கமன் அவர்களே உங்கள் பெயரில் யாரும்  கட்டுரை எழுத முடியாது அல்லவா? அல்லது உங்கள் பெயரில் உள்ள கட்டுரைக்கு வெட்டு ஒட்டு வியாக்கியானம் செய்து வெளியிட முடியாது அல்லவா.

இங்கு சங்கமன் முன்வைக்கும் வெட்டு ஒட்டு வியாக்கியானங்கள் மார்க்சியத்திற்குள் அல்ல அதற்கு வெளியில்தான் நடக்கின்றது. இது மார்க்சியத்தின் பெயரில் உள்ள ஏகாதிபத்திய சாக்கடைகள் தான்.

அடுத்து சங்கமன் கூறுவதை பார்ப்போம்.

பெண்ணிநிலை வாதிகள் இன்று ஒரு முக்கிய சக்தியாக திகழத் தொடங்கியுள்ளார்கள் என சங்கமன் அடித்து சத்தியம் செய்கிறார். எங்கே ஐயா? கொஞ்சம் விளாவாரியாக அலசி ஆதாரம் காட்டியிருக்கலாம். கொழும்பிலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் புலிகள் கட்டுப்பாடு இழந்த பிரதேசங்களிலும் உள் 90மூ மான பெண்ணிலைவாதிகள் இன்று தன்னார்வ குழுவின் சம்பளப் பட்டியலில் இயங்கி ஏகாதிபத்திய தலையீட்டுக்கு மறைமுகவும் நேரடியாகவும் காவடி எடுக்கின்றனர். இது பொதுவாக எல்லா மூன்றாம் உலகநாடுகளின் பொதுவான நிலை. பெண்ணிய போராட்டம் என்பது இல்லை என்ற அளவுற்கு சிதைந்து போய் உள்ளது.

இன்று பூர்சுவா பெண்ணிலைவாதமும் ஏகாதிபத்திய  பெண்ணிலைவாதமும் கோட்பாடு அற்ற கலவை புலம்பலும் (இங்கு கோட்பாடு இல்லை என அவர்கள் கூறிக்கொள்வர்  ஆனால் அதன் பின் ஒரு கோட்பாடு உள்ளது) தான் பெண்ணிலைவாதமாக உள்ளது. இதுதான் பெண்ணிலைவாதமாக காட்டப்படுகின்றது. இது உண்மையில் ஆணாதிக்கமாக உள்ளது. ஆணாதிக்கத்தை தக்க வைக்கும் கோட்பாடாகும்.

இங்கு சங்கமன் பெண்ணிலை வாதம் என எதை எடுத்து முன்வைக்கிறார் எனப்பார்ப்போம்.

'கட்டற்ற சுதந்திரம்? ஆண் பெண் இருபாலாரையும் ஒருவரோடு ஒருவர் சேர்த்து வைக்கும் ஒழுக்கக்கோட்பாடும் எதிர்காலத்தில் இதுவாகவே இருக்கும்."

என கட்டற்ற சமூகம் பற்றி பேசிய படி அதற்கு உதாரணமாக  'சோஷலிஷ நாடாக இருந்த பல இடங்களிலேயே மார்க்சீயக் கருத்துக்கள் வலுவிழந்து போயிருந்தாலும் உலகெங்கும் பெண்ணிய நோக்குக்கு" சாதமான நிலைகளே உருவாகிவருகின்றன. இப்போது மேற்கில் குடும்பம் என்ற பெண்களைக் கட்டிவைத்த கட்டுக்கள் அறுபடுகின்றன. அங்கு பெண்களுக்கான தொழில் வசதிகள, விவாகரத்து முறைகள், கல்வி, ஒரு பாலுறவு போன்றவை எல்லாம் அவளை ஆணாதிக்கம் விரித்த தளைகளில்  இருந்தெல்லாம் விடுதலை அளித்துள்ளன."

என சங்கமன் ஐரோப்பியாவில் பெண் விடுதலை கிடைத்து விட்டது என பிரகடனம் செய்கிறார்.  இவை பெண்விடுதலையை வழங்கிவிடுமா? பால் போச்சியில் பால் சூப்பும் குழந்தைக்கும் தெரியும் இவை பெண்விடுதலையல்ல என்பது. ஆணாதிக்கவாதிகள் தமது ஆணாதிக்க செயல்பாட்டை தக்கவைக்க வழங்கிய சில சீர்திருத்த சலுகைகள் தான் இவை.அதாவது வாக்கு அளிக்கும் உரிமை மறுக்கப்பட்டு இருந்த போது  வாக்கு அளிக்கும் உரிமை பெறின் ஒருவன் சுதந்திரமனிதனாக மாறிவிடுவானா ?  இல்லை ஒருக்காலும் இல்லை. பெண்கள் ஆண்களை போல் எல்லாவற்றிலும் ஈடுபட உரிமை வேண்டும் என போராடும் ஐனநாயகக் கோரிக்கை பெண்விடுதலையாகிவிடாது.

இன்று மேற்கு நாடுகளில் என்ன நடக்கின்றது குடும்பம் எப்படி சிதைகின்றது  என்பதை அறிவுபூர்வமாக ஆராய்வோம்.

மேற்கு நாட்டு குடும்பங்களின் சிதைவு ஒற்றை பொருளாதார விகாரத்தில் நடக்கின்றது. சமூகம் எப்படி குலங்களாக பின் கூட்டுக்குடும்பமாக பின் குடும்பமாக சிதைந்ததோ அதே திசையில் தனி நபராக சிதைக்கின்றனர்.  சொத்துரிமை ஆணுக்கு மட்டும் என இருந்து இன்று பெண்ணிடம் பங்கிடும் நிகழ்வின் தொடர்ச்சியில் குடும்பம் சிதைந்து தனிநபர் தத்தம் சொத்துரிமை பத்திரத்தை கோருகின்றனர். அதாவது இது சொத்துரிமை என்ற தளத்தில் நடக்கின்றது.

ஆண்-பெண்-பிள்ளை-பெற்றோர் என அனைத்து தளத்திலும் தனிச் சொத்துரிமையின் விகரத்தில்தான் குடும்பம் சிதைகின்றது.  இது புலம்பெயர் தமிழ் சமூகத்துக்குள்ளும் தொற்றியுள்ளது.

இங்கு இந்த குடும்ப சிதைவு ஆரோக்கியமாக  அல்ல. வரலாற்றின் தனிச் சொத்துரிமையின் விகாரத்தில் அவலட்சணமாக சிதைகின்றது. கூட்டு வாழ்வு கூட்டுசெயல்பாடுகள் என பல தளத்தில் குடும்ப சிதைவு மறுதலிக்கின்றது. இந்தச் சிதைவு என்ன விளைவை கொடுக்கின்றது என ஆராய்வோம்.

இது ஆண் பெண் உறவில் விபச்சார கலாச்சாரத்தை நடை முறையாக்கியுள்ளது. மேற்குநாட்டு சமூகத்தின் உடல் உறவாக்கம் விபச்சார  தன்மைக்குள் மெதுவாக நகர்கின்றது.

ஆண் பெண்ணுக்கு இடையிலான இயல்பான உடல்உறவு உணர்ச்சி,  இன்று  மேற்கு நாடுகளில் இயல்பாக தீர்த்துக் கொள்ளும்   வழி அடைபட்டு தீர்க்கப்பட முடியாத வகையில் பிளந்து  போயுள்ளது.

முன்பு இருந்த இருக்கின்ற  ஆணாதிக்க குடும்பஅமைப்புக்குள் குறைந்தபட்ச பர¨பர ஆணாதிக்க சுரண்டல் உடன் இருந்த ஆண்- பெண் உணர்ச்சியை( இதுமென்மையாகவும் கொடூரமாகவும்   ) தீர்க்கும் வழி, இன்று   அடைபட்டு  இல்லாது போகும் நிலை என்பது, மறுதளத்தில் முன்பை விட மிக மோசமாக ஆணாதிக்க வக்கிர விகாரமாக மாறி உள்ளது.

இன்று சமுகத்தின் பெரும்பகுதி விபச்சாரிகளை நாடிச்செல்வது வாடிக்கையாக உள்ளது. ஒருபுறத்தில் வீதிவிபச்சாரிகளை  நாடிச்செல்லும் அதேநேரம் மறுபுறத்தில் ஒருவரையொருவர் மாற்றிக்கொள்வதுடன் இன்று டிஸ்கோ உடனடியாக போதை விபச்சார இடமாகவும் "கட்டற்ற சுதந்திரத்தின்" மையமாகவும் மாறியுள்ளது. பண்பாட்டை தான் மேற்கு நாடுகளில் சமூகதன்மையாக மாற்றவும் சிதைக்கவும் எல்லா செய்தி ஊடகமும் தீவிரமாக முனைகின்றன. இதுதான் 'கட்டற்ற சுதந்திரத்தின்" மையமாக உள்ளது.

டிஸ்கோவில் என்ன நடக்கிறது மெய்மறந்த போதையில் மெய்மறந்த இசையில் சுதந்திரகாதல், பண்பாடு கலாச்சாரம் என அனைத்தும் விபச்சாரமாக சிதைகின்றது.  அதாவது சிதைந்த குடும்பத்தின் பிரதிநிதிகளின் பாலியல் உணர்ச்சியை தீர்க்கும் மையமாக டி¤கோ உள்ளது. இது நவீன விபச்சாரவிடுதிகளை மெய்மறந்த போதையில் மெய்மறந்த இசையில் அரங்கேற்றுகின்றது.

அதாவது விபச்சாரத்தை விட்டால்,  சிரழிவு டி¤கோ கலாச்சாரத்தை விட்டால் இந்த குடும்ப சிதைவு சமூகத்திற்கு  வேறு தீர்வு 'கட்டற்ற சுதந்திரம்"  கிடையாது.  இது ஆண் பெண் இருபாலாருக்கும் பொதுவானது.

மனித உறவுகள் மலர வேண்டியதுக்கு பதில் தனிச்சொத்துரிமையின்  பிளவுகள் சமூகத்தில் வீங்கிப்போய் வெம்பிப் போய் உள்ளது. அதாவது இந்தியா  அனுசரணையுடன் இயக்கங்கள் வீங்கி வெம்பியது போல் குடும்பச்சிதைவு வெம்பிப் போய் உள்ளது.

சாதாரணமாக ஆண் பெண்-குடும்பத்திற்கு வெளியில் (இது திருமணம் செய்தாலும் சேர்த்து வாழ்ந்தாலும் ) உள்ளவர்கள் தனிமரங்களாக காய்ந்து திசையறியாது தடுமாறுகின்றனர்.  இச் சமூகத்தின் முன் உள்ள ஒரே தீர்வு விபச்சாரமும் போதையேறிய மயக்கமும்தான் ஒரே முடிவாக உள்ளது.  இதைத்தான் பெண்விடுதலை, கட்டற்ற சுதந்திரம் எனப் போற்றுகின்றார் சங்கமன் என்ற ஏகாதிபத்திய கலாச்சார காலடி.

கட்டற்ற சுதந்திரம் இது எப்படி இருக்க முடியும். சமூகத்தில் இருந்தபடி இந்த பூமியில் இருந்தபடி ஒரு மனிதன் தனியான சுதந்திரமான மனிதனாக எப்படி இருக்க முடியும்?

பூமியில் ஒரு மனிதன் இயற்கைக்கு வெளியில் சுதந்திரமாக 'கட்டற்ற சுதந்திரத்துடன்" எப்படி வாழமுடியாதோ இதே போல் மனித சமூகத்துக்குள் இருந்தபடி 'கட்டற்ற சுதந்திரத்துடன்" சமூகத்துக்கு வெளியில் இருக்க முடியாது.

ஒவ்வொரு தனி மனிதனுக்கும் மனித சமுகத்துக்கும் இயற்கைக்கும் உட்பட்ட சுதந்திரம் தான் இருக்க முடியும. அதற்கு உட்பட மனித ஒழுக்கமும் இருக்கும்.  இது ஆண்-பெண் இருவருக்கும் பொதுவானது வேறுபட்டு அல்ல.

உலகில் எல்லாம் ஒழுங்குக்கு உட்பட்டது. வான்வெளி, நட்சத்திரங்கள், சூரியன, பூமி----என அனைத்து பொருளும் ஒழுங்கு விதிக்கு உட்பட்டது. இந்த ஒழுங்கு விதிக்கு வெளியில் சுதந்திரம் என்பது பொய்யானது, கற்பனையானது. ஒழுங்குக்கு உட்பட சுதந்திரம் தான் உண்டு.

சுதந்திரமான மனிதன் சுதந்திரமான காதல்---என அனைத்தும் உண்மையில் பூர்சுவா கண்ணோட்டத்தின் கனவு கோட்பாடுகளே. அத்துடன் இது முதலாளித்துவ பிரிவுகளின் கோட்பாடுமாகும. கட்டற்ற சுதந்திரத்தில் ஆண்-பெண் என்ன நிலையில் உள்ளனர் என்பதற்கு குடும்ப அமைப்புக்கு அன்று எங்கெல்ஸ் கூறிய கூற்று இன்று இரண்டிற்கும் பொதுவானதான உள்ளது அதை பார்ப்போம்.

"இலக்கணத்தில் இரண்டு எதிர் மறைகள் உடன்பாட்டுப்பொருள் ஆவது போல திருமண ஒழுக்கங்களில் இரண்டு விபச்சாரங்கள் ஒரு நன்னெறி ஆகின்றன" என்றார் எங்கல்ஸ்.  இது இன்று கட்டற்ற சுதந்திரமான குடும்ப சிதைவுக்குள்  ஆழமாக விகாரமாக மாறியுள்ளது. சுதந்திரமான கட்டற்ற காதல் இருக்க முடியாது. சமூகபொருளாதார எல்லைக்குள் தான் ஒவ்வொருகாதலும் இருக்கும். இதற்கு வெளியில் இருப்பது இல்லை. மனித வாழ்க்கை  போராட்டம் தான் மனித இருப்பின் இணைப்பின் மையங்களாகும. மனித போராட்டத்திற்கு வெளியில் சுதந்திரமான இயக்கம் என்பது  பூர்சுவா கண்ணோட்டத்தை கோருவதேயாகும்.

உலக பொருளாதார உலகமயமாதலில் தேசிய பொருளாதாரம் கட்டுடைக்கப்பட்டு கட்டற்ற சுதந்திரத்தை  பன்னாட்டு நிறுவனங்கள் பெறுகின்றன கோருகின்றன. இதன் தொடர்ச்சியில் எல்லா சமூக பொருளாதார இயக்கமும் கட்டுடைந்து கட்டற்ற  சுதந்திரம் பன்நாட்டு நிறுவனங்களுக்கும் ஏகாதிபத்தியத்திற்கும் கிடைக்கின்றன, கோருகின்றன.  இதன் தொடர்ச்சி அதன் அங்கத்தின் சிதைவில் குடும்பம் மேற்கு நாடுகளிலும் மூன்றாம் உலகநாடுகளிலும் சிதைகின்றது. இதையே சங்கமன் தனது தலையில் தூக்கி நிறுத்தி ஆட நினைக்கும் ஆட்டம் பெண் விடுதலை அல்ல,  மாறாக ஆணாதிக்கத்தை ஏகாதிபத்திய வழியில் மறுவார்ப்பு செய்வதே.

மார்க்ஸ் ,  மகிழ்ச்சி என்பது போராட்டமே ஒழிய வேறு ஒன்றுமல்ல என்றார் .  மார்க்ஸ் மார்ச்சியத்தை நிறுவும் கடும் போராட்டத்தில் வறுமையையும், பிள்ளை  இழத்தலும் நோய்துன்பத்தால் நீடித்த போராட்டத்தையே தனது  வாழ்க்கையாக்கி அதையே மகிழ்ச்சியாக கொண்டும் உலகின் கோடான கோடி உழைக்கும் மக்களுக்காக வாழ்ந்தார். இதை கொச்சைப்படுத்தி இதை ஆணாதிக்கம் என சேறடிப்பதன் மூலம, இன்று போராடும் மனிதர்களை எல்லாம் கொச்சைப்படுத்தி, ஏகாதிபத்திய உலகமயமாதல் உலக ஒழுங்கை பேண போராடும் தலைவர்களும் மக்களும் தேவையில்லை என மறைமுகமாக கூறுகிறார். அதுதான் மேற்கு நாட்டு கட்டற்ற சுதந்திரத்தை முன்தள்ளுகின்றார்.

மார்க்ஸ் மிக கடினமான முன்னொருபோதும் முன்வைக்காத ஒரு கோட்பாட்டை பல நாடுகடத்தல்கள் ஊடாக மிக மோசமான  வறுமையின் ஊடாக, மிக மோசமான நோயிலும் பசி பட்டினியுடன், சுயநலம் இன்றி போராடித்தான் உலகின் ஒடுக்கப்பட்ட அனைத்துப் பிரிவு மக்களுக்கு மார்க்சியத்தை  முன்வைத்தார்.

எந்த விதமான உப்புச்சப்பு இல்லாத முதலாளித்துவ குப்பைகளை வெளியடுபவர்களுக்கு  அரசே வசதிசெய்து பணம் கொடுத்த நிலையில், மார்க்ஸ் எழுத்தை தடைசெய்தும்  நாடுகடத்தியும் வறுமையிலும  வதைத்து கொன்றனர் இந்த முதலாளித்துவ கனவான்கள்.

மார்க்சின்  வறுமைக்கு காரணம் குழந்தை இறப்புக்கு காரணம்--- என அனைத்துக்கும் இந்த சமூகமைப்பும் இந்த முதலாளித்துவ சமூக அமைப்பும் இந்த முதலாளித்துவ கனவான்களுமே காரணமாகும். ஆனால் சங்கமன் அதே பாணியில் சமூகத்துக்கு வெளியில்  தனிநபர் மார்க்சை குற்றம்சாட்டுவது என்பது மார்க்சுக்கு சேறுவீசுவதன் மூலம், சங்கமனை  அச்சுறுத்தும் மார்ச்சியம் என்ற புரட்சிகரதத்துவத்தை ஆழக் குழியில் தோண்டி புதைக்க முனையும் கனவுகளில் எழுந்ததே.

ஆண் பெண் கட்டற்ற சுதந்திரம,  சுதந்திரகாதல்---என்பன எல்லாம் உண்மையில் விபச்சாரத்தை தங்கு தடையின்றி சுதந்திரமாக கோரும் ஆணாதிக்க பூர்சுவா கனவுகள் ஆகும.

ஆண் பெண் சந்திப்பு இணைவு என்பது மனித போராட்டத்தின் ஊடேயான,  மனித இருப்பின் மீதான சமூக வாழ்வு மீதான இயற்கை மீதான---ஒழுங்குக்கு உட்பட்டதாக கட்டுப்பாடு அற்ற இயல்பான இணைப்பாக இருக்க வேண்டும. இது ஆண் பெண் என்ற இருவருக்கும் உட்பட்ட சேர்வு இணைவு சுயநிர்ணய எல்லைக்குட்பட்டதாக இருக்கவேண்டும் இன்றைய குடும்ப அமைப்புக்கு பதில் புரட்சிகர குடும்ப அமைப்பு, கூட்டு குடும்ப அமைப்பு புரச்சிகர சமூக அமைப்பால் பிரதியிடப்படவேண்டும். உதாரணமாக இன்றைய கல்விக்கொள்ளை பிழை என்பதால் பாடசாலையை இடிப்பது அல்ல. மாறாக புரட்சிகர கல்விக்கொள்கை கோரவேண்டும. அதுபோல் கட்டிட அமைப்பில் புரச்சிகர கல்விக்கொள்கைக்கு ஏற்றதாக மாற்றம் வேண்டும். இதை விட்டு கல்வி அற்ற கட்டிடம் அற்ற நிலையை உருவாக்குவது அல்ல. இதுபோல் தான் குடும்பம்.

இன்று காணப்படும் வாழ்வு மீதான பயங்கள் இணைவு மீதான சிறைகள, சிறை மீதான அவலங்கள்----என எல்லாம் மனித விரோத செயல்களும் குடும்பத்துக்குள்ளும் வெளியிலும் புரையோடிப் போய் உள்ளது. இன்றைய குடும்ப அமைப்பும் குடும்ப சிதைவும் கூட ஒரே பொருளாதார நலன்களை மட்டும் அடிப்படையாக கொண்ட ஆணாதிக்க செயல் தளத்தில் வேறுபட்ட பிரிவுகளை பிரதிநித்துவம் செய்கின்றது அவ்வளவே.

இந்த இடத்தில் பெண் விடுதலையின் அங்கமாக காட்டும் ஒரு பாலுறவு,  எப்படி பெண் விடுதலையாகி விடும். மனிதனின் பரிணாமத்திலும் சரி எல்லா உயிரியல் பரிணாமத்திலும் சரி எதிர் நிலை முரண்பாட்டில் புணர்ச்சி இயல்பான ஆர்வம் ஊட்டும் வகையில் இன்பத்தை கொடுப்பதாக இயல்பான உணர்ச்சியாக இருந்தது. இது இயற்கை விஞ்ஞானத்திலும் பரிணாமத்திலும் எதிர்ப்பால் உட்பட்ட புணர்ச்சியே இயற்கை கோரியது.

ஆனால் மனிதன் வழக்கம் போல் இயற்கையை அழிப்பவன் என்பதால் தனது சொத்துரிமையை பாதுகாக்க சுரண்டல் அமைப்பு உருவாக்கிய ஆண்- பெண் பிளவின் அடிப்படையில் இயற்கையான புணர்ச்சியை சிதைத்தது. ஆண் பெண்ணுக்கு இயல்பான ஆர்வமான உணர்ச்சியை தணித்துக் கொள்ள இருந்த இயற்கையான வழி அடைபட்ட நிலையில் ஆணாதிக்கமே ஒருபால் உறவுக்கு இயற்கைக்கு விரோதமாக வித்திட்டது. ஒருபால் உறவு ஆணாதிக்கத்தின் கொடையே ஒழிய பெண் விடுதலையின் புகழ் பூத்த விடுதலையல்ல. மாறாக  ஆணாதிக்கத்தின் சாக்கடையே. ஆணாதிக்கம் தொடர்ந்து பேண அதன் உடன்  சமரசம் கண்டு கொள்ள இன்று ஒரு இனச்சேர்க்கைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது அவ்வளவே

'தனிச்சொத்து குடும்பம் என்பவையெல்லாம் மான்யகால தந்தை வழிச்சமூகத்தின் உருவாக்கம். உண்மையான பொதுவுடைமை மலர்ச்சியில் அரசு வாடுவது போல் இவையும் அற்றுப்போய் விடும் என்கிறது மார்ச்சீயம. கூடவே இப்பார்வையில் பெண் என்பவள் ஆணொருவனின் சொத்தாகவே போகப்பொருளாகவே கொள்ளப்படுகிறாள. இந்த சொத்தென்ற ஒன்றிலிருந்தே 'கற்பு" போன்ற பல ஆணாதிக்கக் கோட்பாடுகள் பெண் மேல் திணிக்கப்படுகின்றன இல்லையா? இவற்றின் மூலமே பெண்ணின் அடிமைச்சாசனம் எழுதப்பட ஏதுவாகிறது. மார்க்சீயத்தில் இத்தகைய கருத்துக்கள் இருந்தபோதும் பெண்ணிய நோக்கு அதில் பிரக்ஞைப+ர்வமாக இடம் பெறாமையால் அதில் பல முன்னுக்குப்பின் முரண்பட்ட கருத்துக்கள் உள்ளன."

என முன்வைக்கும் சங்கமன் மார்க்சீயம் ஆணாதிக்கம் கொண்டது என்கிறார் மார்க்சீயம் முன்னுக்கு பின் முரண் படுகிறது  என்று கூறும் இந்த கனவான் ஒரு ஆதாரத்தையும் முரண்பாட்டின் மீது முன்வைக்க முடியாமல் போயுள்ளார். வார்த்தை வார்த்தையாடல் ஊடேயான சேறடிப்பு தான் மிஞ்சியது.

மார்க்சீயம் மார்க்சீயம் மட்டுமே பெண் பிரச்சனையை அதன் விடுதலைத் தத்துவத்தை  மிகச் சரியாக துல்லியமாக ஆய்வு செய்தது மட்டும் இன்றி அதற்காக உயிர்தியாகம் செய்து போராடுகின்றது. இது போல் கடந்த கால போராட்டங்கள், வெற்றிகள் அனைத்தின் பின்பும் மிக ஆழமான போராட்டங்கள் தியாகங்கள் வெற்றிகள் உடன் மாhச்சீயம் தன்னைத்தானே புடம் போட்டுள்ளது. வேறு எந்த தத்துவமும் போராட்டமும் கூட உரிமை கோர முடியாத அனவுக்கு இதன் வெற்றி கோட்பாடு தனிச்சிறப்பானவையாக இன்றும் மிளிர்கின்றது. பெண்ணை பெண்ணாக அடையாளப்படுத்தியது மார்க்சியம் தான். அடக்கப்பட்ட அடிமைப்படுத்தப்பட்ட பெண்ணை முதன் முதலில் ஸ்தாபனப்படுத்தி வீதியில் இறக்கியது மார்க்சியம் தான். எதிர் காலத்தில் பெண் விடுதலையை பெற்று தரும் ஒரே ஒரு கோட்பாடு மார்க்சியம் மட்டும் தானே ஒழிய வேறு எந்த கழிசடைவண்ணக்கோட்பாடும் அல்ல. இவை பெண்ணை ஆணாதிக்கம் என்ற அதே இடத்தில் இருத்தி வைக்க சில சலுகைகள் பெற்று சீர்திருத்தம் செய்து ஏமாற்ற மட்டுமே முடியும.

' அதாவது ஆண் பெண் இருபாலரையும் ஒருவர் மற்றவரின் சொத்தாக போகப் பொருளாக நினைக்க வைப்பதும் அதனால் ஏற்படும் நோக்கால் ஒருவரை மற்றவர் விவகாரங்களில் தலையிட வைப்பதும் இக்கட்டற்ற சுதந்திரத்தால் இல்லாமல் போகிறது. எஞ்சியிருப்பது அன்பு மாத்திரமே. கட்டற்ற சுதந்திரம் என்பது கட்டற்ற அன்பாக காதலாக மாறலாம்....

அதுதான் ஏற்கனவே கூறிய கட்டற்ற விடுதலையும் அதன் வழிவரும் கட்டற்ற அன்பும்!. இந்தபார்வையில் பெண்ணின் எந்த அங்கமும் போகப்பொருளாகவும் ஆபாசமாகவும் பார்க்கப்படமாட்டாது. மாறாக எல்லாம் அன்பின் உயிர்ப்பாகப் பார்க்கப்படும்."

மேலும் சங்கமன் கட்டற்ற சுதந்திரத்தில் அன்பு காதல் எப்படி சுதந்திரமாக செயல்படும் என்பதை விளக்கமுடியவில்லை. எப்படி பெண்ணின் அங்கங்களை திடீர் என ஆபாசமாக பார்ப்பது அற்றுவிடும் என விளக்கமுடியவில்லை.  மாய மந்திரம் மட்டும்தான் சினிமா காட்ட உதவும்.

ஐரோப்பிய கட்டற்ற சுதந்திரத்தில் பெண் இன்று எவ்வளவு கேவலமாக மாற்றப்பட்டு உள்ளார் என்பதை நடைமுறையில் சுதந்திரமாக தங்குதடையின்றி காணமுடியும். இங்கு பெண் பெண் உறுப்பு என அனைத்தும் ஏன் அவள் போடும, போட்ட உடுப்பு கூடஆபாசமாக மாற்றப்பட்டு வியாபாரமாக உள்ளது. ஆண்-பெண் உறவு கூட சந்தை பொருளாக பண்டமாக மாற்றப்பட்டு விட்டது.  காதல் அன்பு சந்தை பொருளாகி உள்ளது. இன்று ஒவ்வொரு வீட்டிலும் இந்த வியாபாரம் தான் எஞ்சிப்போய் உள்ளது.

1915 இல் இனெஸ் அர்மாண்ட் முன்வைத்த 'சுதந்தரமான காதல்" என்பதை லெனின் எதிர்த்து இது ஒரு பூர்சுவாக் கோரிக்கையே தவிர பாட்டாளி வர்க்க கோரிக்கையல்ல என்றார்.

கட்டற்ற  சுதந்திரம் , சுதந்திர காதல் , சுதந்திர அன்பு என்ற அனைத்துக் கோட்பாடும் பூர்சுவா கண்ணோட்டத்துடன் கூடிய, இன்றைய திறந்த பொருளாதாரக் கொள்கையின் உலகமயமாதலினை ஊக்குவித்து பாதுகாக்க முனையும் வண்ணக் கலவையாகும்.

இக் கோட்பாட்டை முன் வைப்போர் உண்மையில் மார்க்சியத்தை எதிர்த்து உலக மயமாதலைப் பாதுகாக்க தமது தீவிர, முன் முயற்சியியின் ஒரு அங்கமே  இக்கட்டுரை. இவர்களின் சொந்த முகங்களை இனம் கண்டு கொள்வதும், அவர்களையும், இக் கோட்பாட்டையும் அம்பலப்படுத்து இன்றைய வரலாற்றுக் கடமையாகும்.

ஓரினச் சேர்க்கை விடுதலையின் தத்துவமாகவும், மனிதர்களுக்கு இடையில் ஐனநாயக பூர்வமா நடப்பதால் 'கட்டற்ற சுதந்திரம்" அடிப்படையில் ஏற்றுக் கொள்ள வேண்டும் என சங்கமன் முதல் அ. மார்க்¨ ஈறாக அடித்துப் பிடித்து நியாயப்படுத்துகின்றனர். இது உண்மையா ?

மேற்கு நாடுகளின் கோட்பாட்டு மையமான பிரான்சில் வெளிவந்த ஒரு நூலிலிருந்து  ' டiடிநசயவழைn'   என்ற பத்திரிகை 26-02-98 வெளியிட்டுள்ள கட்டுரையில் இருந்து பார்ப்போம்.

சிறுவர் , சிறுமியர் எப்படி ஓரினச் சேர்க்கைக்கு பல்கலைக்கழக பகிடி வதை போன்று பயன்படுத்தப்படுகின்றனர் எனப் பார்ப்போம்.

 

ஆண்டு   1985    1991    1993

யாருடன்

தகப்பன்      15 %  23 %  27 %

தாய்  27 %  37 % 43 %

சகோதரன்-சகோதரி     32 % 44 %  49 %

பாடசாலை           35 %  43 %  45 %

நண்பர்கள் 41 % 56 %  62 %

இது எதைக் காட்டுகின்றது இங்கு ' கட்டற்ற சுதந்திரம் " என்ற பெயரில் சிறுவர் சிறுமிகள் ஓரினச் சேர்க்கைக்கு குடும்பத்தில் இருந்து நண்பர்களுக்கு இடையில் பந்தாடப்படுகின்றனர். பாலியல் பற்றிய அறிவு பூர்வமான அறிவு புறக்கணிக்கப்பட்ட நிலையில் இங்கு செய்தி ஊடகங்கள் இட்டுக்கட்டும் வீங்கி வெதும்பும் செக்¨ படிமங்களின் மூலம் இச் சமூகம் பந்தாடப்படுகின்றது. இவை பெருமளவில் வெளிவராமைக்கு முக்கிய காரணம் குடும்பத்துக்குள்ளும் நண்பர்களுக்குள்ளும் நடப்பதுடன் இது அடுத்த சந்ததிக்கு கடத்தப்படுகின்றது.

பல்கலைக்கழகங்களில் பகிடி வதை (ராகிங்) எப்படி ஒரு பழைய மாணவன் வக்கிர அதிகாரத்துடன் செய்ய புதிய மாணவன் எதிர்ப்போடு இணங்குகின்றானோ , அதையே பின் அடுத்த தலைமுறைக்கு கடத்துவது போன்று இந்த ஓரினச் சேர்க்கை வேறுபாடு இன்றி அதே அச்சில் கட்டியமைக்கப்பட்டுள்ளது.

1970 களில் பிரான்சில் நடந்த போராட்டமும் , அதை ஒட்டி அதை மழுங்கடிக்க முன் வைக்கப்பட்ட பல எதிர்நிலைக் கோட்பாடுகள் தான் இதன் அச்சாணியாக இருந்தது.

மனிதர்கள் தனிநபராக மாற மாற மேலும் மேலும் இது தீவிரமடைகின்றது. தமது செக்ஸ் தேவையை பூர்த்தி செய்ய முடியாத அவலத்தால் ஓரினச் சேர்க்கையும் டிஸ்கோ கலாச்சாரமும் தேவைக்கு வழிவிடுகிறது.

இந்த இடத்தில் சங்கமன் ' கட்டற்ற சுதந்திரம் நிலவிய காலத்தில் தாய் , தனயன் உடலுறவு , தங்கை சகோதரன் உடலுறவு என்ற கட்டற்ற போக்கு இருந்தது.  இப்போது எச்ச சொச்சங்கள் இருந்து வருகின்றன. இந்நிலையில்  மனித நாகரீகம் எதுவாக இருக்கும்." எனக் கேட்டு இது இனி ஏற்படாது ஏனெனின் அன்று நாகரீகத்தின் குழந்தைப்பருவம் எனக் கூறி நடக்காது என மாரடித்துள்ளார். ஆனால் புள்ளி விபரம் எதைக் காட்டுகின்றது. எதிர்மறையில் தான் இது உள்ளது. ' கட்டற்ற சுதந்திரம்" என்பது  'கட்டற்ற விபச்சாரத்தையும்" கட்டற்ற குடும்பச் சிதைவையும் ' கட்டற்ற குடும்ப உறவையும் " தொடங்க அடிப்படையாக உள்ளது.