Language Selection

சமர் - 23 : 07 -1998
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அம்மா 5இல் வெளியாகிய விமர்சனங்கள், கதை  மற்றும் அம்மா 4 இல் வெளியகிய விமர்சனம்  தொடர்பாக, அதன் உள்ளடக்கத்தை ஒட்டிய அரசியல் வர்க்க நிலைப்பாடுகளை ஆராய்வோம்.

"வளர்மதியும் ஒரு வாசிங்மெசினும்" என்ற இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் எழுதிய சிறு கதையை ஷோபாசக்தி அம்மா 4 இல் விமர்ச்சித்தார். இதைஓட்டி அம்மா 5இல் அழகலிங்கம் மேலும் மார்க்சியத்தின் பெயரால் பூசிமொழுகி உள்ளார். மற்றும் கதை அதற்க்கு வெளியில் இலக்கியம் தொடர்பான பல கருத்துகள் வெளியாகி உள்ளது.

ஷோபாசக்தியும் அழகலிங்கமும், முதலாளித்துவ சீர்திருத்தத்தினூடாக முதலாளித்துவ தூயஜனநாயகத்தை கோரியபடி, மார்க்சியம் என்றால் என்ன என தெரியாத குருட்டு நிலையில் கதைக்கு வெளியில்; கம்யூனிச எதிர்ப்பைக் காக்கும் இராஜேஸ்வரியின் கதையை விமர்சிக்க முற்பட்டு, அதைவிட மிக மோசமான முதலாளித்துவ இருத்தல் உடன்கூடிய சந்தைப் படுத்தலுக்கு நியாயம் கற்பிக்கப்பட்ட வர்க்க அரசியல் விபச்சாரத்தைப் பார்ப்போம். அத்துடன் இராஜேஸ்வரியின் கதையில் உள்ள பல்வேறு ஏற்ற இறக்கங்களையும் முரண்பாடுகளையும் தாண்டியது அல்ல என்ற உண்மையை , ஷோபாசக்தியின் சொந்தக் கதைகளை எடுத்துக் காட்டுவதன் மூலம், உள்ளடக்கம் இரண்டுக்கும் ஒரே வர்க்க தன்மையைக் கொண்டு உள்ளதையும் ஆராய்வோம்.

நாம் இனி ஷோபாசக்தி சுட்டிக்காட்டிய வழியில் இன்றி, இராஜேஸ்;வரியின் கதை எதைச் சொல்கின்றது எனப்பார்ப்போம்.

ஒரு பெண்; லண்டனுக்கு வந்த குறுகிய காலத்தில் சந்திக்கும் பிரச்சனையை கதை பேசுகின்றது. அப் பெண் வந்த ஏஜன்சி பணம், அவளின் கணவன் தனது தம்பியை கூப்பிட்ட பண நெருக்கடி, தனது தம்பியை கூப்பிடும் முயற்ச்சி, இதற்க்குள்  குழந்தை ஒன்றை பெறுவதை தவிர்க்கும் முயற்ச்சி,  கற்பத்தடை மருந்து பாவித்தலும் அதன்விளைவும் அதன் துன்பமும், இதில் ஆணின் மவுனமும் இதன் தொடர்ச்சியில் குழந்தை கிடைக்கின்றது.

குழந்தையும் அதன் பராமரிப்பு ஊடே இருவரும் வேலைக்கு செல்லல், மனிதாபிமான மற்ற ஒரு முதலாளியின் மிக மோசமான சுரண்டல், மேலதிக வேலை செய்ய நிர்ப்பந்தித்தல், மறுத்தால் வேலையை விட்டு நீக்க போவதாக எச்சரித்தல், இதை எதிர்த்து போராடாத பூர்ஷ்சுவா கனவுகள், இதன் தொடர்ச்சியில் மேலதிக வேலை செய்து கிடைக்கும் பணத்தை எண்ணி போராட்டத்தை கைவிட்ட மத்தியதரவர்க்க இயல்புடன், ஒரு வாசிங்மெசின் வாங்கும்; கனவும் அதை வாங்கி விடுவதும்.

இந்த மேலதிக வேலை பிள்ளை மீதான கவனயீனம் ஏற்பட்டதால், முதலாளியின் சுரண்டும் நலனின் பாதுகாப்பற்ற வேலை முறையால், வெங்காயத்தில் இருந்த பக்ரீரியா குழந்தையை நோய்யாக்கியதும், நோய் வந்ததும் முதலாளிக்கு அஞ்சி பிள்ளையை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகாது வேலைக்கு சென்றதால் குழந்தை மூளைபிசகாகிவிட்டது.

இதன் தொடர்ச்சியில் வாசிங் மெசின் வாங்கும் எண்ணத்தை கைவிட்டு, மேலதிக வேலை செய்யாது விட்டு இருப்பின் குழந்தை ஆரோக்கியமாக இருந்து இருக்கும். ஆணால் இன்று மூளை பிசகாகி விட்டதால் வாசிங்மெசின் அவசியமாகி விட்டது. எனக் கதை முடிகின்றது. அதாவது குழந்தையும் வாசிங் மெசினையும் எடுத்து வைத்து இதில் எது அடிப்படையான உடனடி தேவை என்ற கேள்வியில், குழந்தையின் நலனை முதன்மைப்படுத்தி மத்தியதர வர்க்கத் தீர்வை முதலாளித்துவத்தின் முரண்நிலையற்ற ஜனநாயகத்தினுள் படைப்பு கோருகின்றது.

வேறு கதைகளின் முதலாளித்துவ கண்ணோட்டங்களை நியாயங்கங்களை எடுத்து வைத்த தொடர்ச்சியில் தான் வாசிங்மெசின் கதையை விமர்சனம் செய்து இருந்தனர். கதையில் "மாலதி பாவம் அவள் ஒரு சாதாரண பெண் சாதாரண ஆசையால் ஆட்டிப்படைக்கப்படுபவள்"; என இராஜேஸ்வரி எடுத்து வைத்த வாதத்தை எடுத்து வைத்து ஓரு கோட்பாட்டு விவாதமே நடந்தது.

மார்க்ஸ் சொல்வதில் இருந்து தொடங்குவது தான் இவர்களை துல்லியமாக தோல்லுரிக்கும்.

"உற்பத்தித் திறனுள்ள மூலதனத்தின் துரித வளர்ச்சி அதே அளவுக்குத் துரிதமாய்; செல்வத்தையும் ஆடம்பரத்தையும் சமூகத் தேவைகளையும் சமூக நுகர்வின்பத்தையும் அதிகரிக்கச் செய்கிறது. இவ்விதம் தொழிலாளியின் நுகர்வின்பமும் அதிகரித்திருக்கிறது என்றாலுங்கூட அதனால் உண்டாகும் சமூக மனநிறைவு, தொழிலாளிக்கு எட்டாதபடி மிகமிகக் கூடுதலாகிவிட்ட முதலாளியின் நுகர்வின்பத்துடன் ஒப்பிடுகையிலும் குறைந்துவிடுகிறது. நமது விருப்பங்களும் இன்பங்களும் சமுதாயத்திலிருந்தே எழுகின்றன. ஆகவே சமுதாயத்தைக் கொண்டே நாம் அவற்றை அளவிடுகிறோமே அல்லாது, அவற்றைப் பூர்த்தி செய்ய உதவும் பொருள்களைக் கொண்டல்ல. இவை யாவும் சமூகத் தன்மை வாய்ந்தவையாய் இருப்பதால், இவை ஒப்பு இயல்புடையவையாகும்." (அடிக் கோடு நாம்.) - மார்க்ஸ் ("கூலியுழைப்பும் மூலதனமும்"; பக்கம்-49)

ஆசை என்பதெல்லாம்  பொய். முதலாளித்துவம்; தான் ஆசையை மறுக்கும் ஆகவே ஆசைப்படுங்கள் என்கின்றனர். பூர்ஷ்சுவா கனவுகள், ஆசைகள், ஆடம்பரங்கள் இருக்க முடியாது என மார்க்சிய மூலாம் மூலம் சொல்லும், முதலாளித்துவத்தின் சுரண்டும் கொடூரமான ஆசைகளை இவ்விவாதம் மூலம் அழகாக மூடிமறைத்து நிறுவியுள்ளனர். அத்துடன் முதலாளித்துவத்தை விமர்சிக்க வெளிகிட்டு மார்க்சியத்தின் அடிப்படை பொருளாதார விதிகளை கைவிட்டு, முதலாளித்துவ பொருளாதார விதிகளை மார்க்சியத்தின் பெயரில் முன்வைத்ததுமல்லாமல் மறைமுகமாக நியாயப்படுத்தியுள்ளனர்.

முதலாளித்துவ பொருளாதார விதியில் பொருளாதார நுகர்வில், எல்லோரையும் எல்லாவற்றையும் உன்னால் முடியா விட்டாலும் வாங்க கோருகின்றது நிர்ப்பந்திக்கின்றது. இதற்க்கு முடியா விட்டால் உன் பிள்ளையை வித்தோ, உன் மகளை அல்லது உன் மனைவியை விபச்சாரத்துக்கு அனுப்பு, மேலதிகமாக எட்டு மணித்தியாலத்துக்கு மேலாக வேலை செய்து உழை, லஞ்சம்  வாங்கு ............ என எண்ணற்ற வழிகளை மறை முகமாக முன்வைக்கின்றது. இது ஆசையை, ஆடம்பரத்தை, கவர்ச்சியை அடிப்படையாக கொண்டு தான், தன்; சந்தைப் படுத்தலை சார்ந்துள்ளது மட்டும்மின்றி தனது சுரண்டலை தொடர்கின்றது.

பாட்டாளி வர்க்கம் பொருள் பங்கீட்டில் எப்போதும் தேவையை முன்நிறுத்தி எடுக்க கோருகின்றது. இதை பொதுவாக நடைமுறையில் பாட்டாளி வர்க்கம் முன்வைப்பதுடன், இதை அடிப்படையாக கொண்டே பிரச்சனைகளில் முடிவு எடுக்கின்றது. பாட்டாளி வர்க்கம் நீண்ட சோசலிச காலகட்டம் ஊடாக, தொடர்ச்சியான இடை விடாத புரட்சிகளின் ஊடே இதை அமுல் படுத்தப் போராடுகின்றது.

இதில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் முதலாளித்துவம், சமூகத்தின் கடைசிப்படி நிலையில் உள்ள ஏழையிடமும், தமது பொருளை வாங்கக் கோரி விளம்பரம் செய்வதன் மூலம் ஆசையை, ஆடம்பரத்தை, கவர்ச்சியை திணிக்கின்றது. இந்த விளம்பர உலகம் தான் தேவைக்கு அப்பால் ஆசையையின், ஆடம்பரத்தின், கவர்ச்சியின் ஊற்று மூலமாக உள்ளதுடன், முதலாளித்துவத்தின் உயிர் நாடியாகவும் உள்ளது. இதற்க்கு எதிரான போராட்டம் கூட முதலாளித்துவத்தின் உயிர்நாடியில் கை வைப்பதாக உள்ளது.

முதலாளித்துவம் பொருளை வாங்கக் கோருகின்றதே ஒழிய, ஒருக்காலும் ஆசையை மறுத்து தனக்கு சவக்குழியை தோண்டுவதில்லை. இராஜேஸ்வரியின் கதை முதலாளித்துவ சந்தைப்படுத்தலுக்கு எதிராக உள்ளதுடன், முதலாளித்துவத்தின் சூறையாடலுக்குப் பதிலாக முதலாளித்துவத்தின் நேர்மையான ஜனநாயகத்தை மனிதாபிமானத்தின் மீது  முன்வைக்கின்றனர்.

ஷோபாசக்தியும், அழகலிங்கமும் முதலாளியம்; சுரண்டுவதற்;காக பொருளை விற்க்க மறுக்கின்றது, வாங்குவதை விரும்புவதில்லை என்று சோடித்துக் காட்டுவதன் மூலம், மறைமுகமாக பொருட்க்களை வாங்க மார்க்சியம் மூலம் ஊக்குவித்து முதலாளிக்காக விளம்பரம் செய்கின்றனர்.

இதை மேலும் ஊக்கப்படுத்த மார்க்சியத்தின் கோரிக்கையான உலகில் எல்லாப் பொருட்களையும் அவர்களின் தேவையை ஒட்டி எல்லோரும் அடைய உரிமை உண்டு எனச் சொல்வதன் மூலம், முதலாளித்துவத்தின் சூறையாடும் பண்புகளுக்கு மறைமுகமாக ஊக்கமளிக்க கோட்பாட்டு விளக்கம் கொடுத்து சூறையாட கம்பளம் விரிக்கின்றனர்.

முதலாளித்துவம் சந்தைப்படுத்தலை சார்ந்துள்ளதால், எல்லோரையும் பொருக்களை வாங்கக் கோரி நிர்ப்பந்திக்கின்றது. இங்கு வாங்கும் சக்தியை சுரண்டுவதன் மூலம் மனிதர்களுக்கு இல்லாமலாக்கிய பின், இருப்பதையும் புடுங்கிவிடும் உத்தியில் தான் இன்று விளம்பர உலகம் கட்டியமைக்கப்படுகின்றது.

இதன் மூலம் தன் வாழ்வையே முதலாளிக்காக உழைக்கவும், மேலதிக வேலை செய்து பிழைக்கவும், குடும்பத்தை பிரிந்து சென்று உழைக்கவும், பெண்கள் தங்களை பலாக்காரம் செய்ய அனுமதிக்கவும்.............இப்படியாக மனிதர்களை நாயாக இருத்தி வாலாட்டச் செய்வதன் மூலம்;, மனிதர்களின் அவலமான நிலையில் எல்லாவற்றையும் வாங்கக் கோரும் நிலையை ஏற்படுத்தி, பின் அடிப்படை உணவு முதல்கூட தன்னால் அடைய முடியாதநிலையில், ஆடம்பர பொருளை பெறும் போராட்டத்தில் ஈடுபடுவதால்; முதலாளித்துவ சந்தையின் இருத்தல் நீடிக்கின்றது. இன்று உலகமயமாதல் தேசியத்தைக் கடந்த ஏகாதிபத்திய பொருட்களை, மூன்றாம் உலக ஏழைக் குடிசையிலும் விற்க்க முயலும், பலாக்கார ஒப்பந்தங்களும் துரோக ஒப்பந்தங்களும் பொருளை ஏழைக்கு மறுக்கவில்லை. ஆணால் ஷோபாசக்தியும், அழகலிங்கமும் முதலாளித்துவம் பொருட்களை விற்க்க மறுக்கின்றது எனவே ஆசைப்படுங்கள் என்கின்றனர்.  ஆசையாவது ஆடம்பரமாவது என்று கூறுவது முதலாளித்துவத்தின் எச்சம், எனவே ஆசைப்படுவதை உன்னால் முடியாவிட்டாலும்; வாங்கிக் குவியுங்கள், இது பாட்டாளி வர்க்ககண்ணோட்டம் என்று கூறிக் கொண்டு முதலாளிகளுக்காக விளம்பரம் செய்கின்றனர்.

வாசிங்மெசின்  லண்டனில் ஒரு அடிப்படைப் பொருளா? ஆடம்பரப் பொருளா? என்ற கேள்வி எழுகின்றது. இதன் மீதான பதிலை எழுந்தமானமாக கூற முடியாது. ஏன்? லண்டன் சமூகம் ஏற்றத்தாழ்வாக உள்ள போது பதிலும் நிலைமைகள் உடன் மாறுகின்றது. போராட்டமாக சமூகத்தை நோக்கியும், அரசை நோக்கியும் உள்ள போது வாசிங்மெசின் அடிப்படைப் பொருளாக உள்ளது. இது வீட்டுக்கு வீடு வாசிங்மெசினை இவர்களைப் போல் கோருவதில்லை. மாறாக மக்கள் இலகுவாக பயன் பெறும் வகையில் இலவசமாக பொருத்தக் கோரிப் போராடவேண்டும்.

பெண்களை விடுவிக்கவும்;, வேலையை இலகுவாக்கவும்; வசிங்மெசினைக் கோரிய சமூகப் போராட்டமாக இல்லாத நிலையில், ஒரு குடும்பத்துக்குள்ளான பொருளாதார இயலாமைக்குள்; இது எழுப்பப் படின், இங்கு இது ஆடம்பரப் பொருளாகவே இருக்கும். ஏன் இலங்கையில் இது இன்று சமூக அளவிலும் ஆடம்பரப் பொருளாகவே இருக்கின்றது. இலங்கையில் ஒரு கட்டி சவுக்காரம் பெறுவதே போராட்டமாக உள்ள போது, வாசிங் மெசினை பெறப் போராடுவது, இல்லாதவனை மேலும் சூறையாடக் கோருவதுமாகும். போராட்டத்தைத் திசை திருப்பி முதலாளிக்கு சேவை செய்வதாகும். இது அப்பொருளை பெறுவதை மறுப்பதில்லை. ஏன் புரட்சியை நடத்திய பின் சோசலிச அரசில் கூட ஏற்றத் தாழ்வை ஒருஎட்டில் கடந்து விடமுடியாது. அங்கும் பொருள் பயன் பாட்டின் தேவைகூட, வேறுபட்ட பொருளாதார நிலைமைக்கு ஏற்ப கம்யூனிச சமூகம் உருவாகும் வரை மாறுபட்டே நீடிக்கின்றது.

ஒரு பொருளின் தேவை சோசலிச சமூகத்தில்  எப்படி இருக்குமோ, அதுபோல் குடும்பத்துக்குள் ஏற்ற இறக்கமான  பொருளாதார சமூகப் பின்னணியை கவனத்தில் எடுக்காது முன்வைத்துக் கோரமுடியாது. இப்படி முன்வைப்பது வரட்டு வாதமாகும்.

ஒரு பொருள் குடும்பத்தின் வருமானத்துக்குள், குடும்பத்தின் பல்வேறு பிரச்சனைக்குள், இது சிலவேளை அடிப்படை பொருளாகவும், சில வேளை ஆடம்பரப் பொருளாகவும் இருக்கும். கதையில் உள்ள வானதியின் குடும்பப் பிரச்சனைக்குள் குழந்தையின் மூளையா? வாசிங்மெசினா? என்பதில் வாசிங்மெசின் ஆடம்பரப் பொருள்தான். பிள்ளை மூளைப் பிசகாகியபின் மூளை கட்டுப்பாட்டை இழந்து உடுப்பை அடிக்கடி நனைத்த போது வாசிங்மெசின் அடிப்படைப் பொருளாகின்றது. இதை இராஜேஸ்வரி தனது கதையில் கொண்டு வந்துள்ளார்.

ஆசை, தேவை இரண்டையும் கவனிக்க மறுத்து, தாக்குதல் நடத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் விமர்சிக்க முற்பட்டவர்கள், மிக மோசமான முதலாளித்துவ சூறையாடலுக்கு விளம்பரம் செய்து மார்க்சியத்தின் பெயரில் நியாயப்படுத்தியுள்ளனர்.

ஒரு பிரச்சனையில் குழந்தையின் பால்மாவா? கைக்கு கட்டும் மணிக்கூட என்ற பிரச்சனையில்; மணிக்கூடு ஆடம்பரம் தான். இங்கு மணிக்கூடு பயன் படுத்தும் உரிமை தொடர்பான பிரச்சனையல்ல.

ஒரு பொருள் அடிப்படைப் பொருளா? இல்லையா? என்பது அதன் உடன் தொடர்புடைய எல்லாவிடையங்களாலும் தான் தீர்மானிக்கப்படுகின்றது. இதை விடுத்து வரட்டுவாதங்களால் அல்ல. இதை போல் முதலாளித்துவ விளம்பரத்துக்கு போஸ் கொடுத்தும் அல்ல. புரட்சியும் இப்படித்தான். நெளிவு சுழிவான பாதைதான் எங்கும் எதிலும் இருக்கும். நேர் கோட்டுப் பாதை என்பது தற்கொலைக்கு ஒப்பானதும் வரட்டுவாதமுமாகும்.

தமிழர்களின் பூர்ஷ்சுவாகனவுகள் போல், வானதி வந்த குறுகிய காலத்தில் நிறையவே கடன் பிரச்சனைகள் உடன், தனது பூர்ஷ்சுவா கனவுகளால் பிள்ளையின் நோய்யை அலட்சியப்படுத்தியது தனது ஆடம்பரத்தால் தான்.

தமிழர்கள் 4,5 வருடங்களுக்குள் வீடுவாங்குவதும், வீட்டில் ஒரு மொழி அகராதி இருக்குமோ இல்லையோ, உலகில் உள்ள முன்ணனி மார்க்கின்  அதி உயர்தர இலற்ரோனிக் பொருட்களையும், நவீன நகைகளை வாங்கிக் குவிப்பதும் பொதுவாக பூர்ஷ்சுவா கண்ணோட்டம் கொண்ட ஆடம்பரக்கனவுகளே.

மாலை சினிமாவுக்கு போவதா? பிள்ளைக்கு ஒருவாய் பால் வாங்குவதா? என்ற கேள்வியில் ஷோபாசக்தியும், அழகலிங்கமும் ஆசைப்படும் சினிமா தான் முக்கியம் என்கின்றனர். ஆசைப் படாத பால்லும் குழந்தையின் பசியும் முக்கியம் அல்ல என்கின்றனர்.

சினிமா பார்க்கும் உரிமை பற்றியல்ல இங்கு விவாதம். அந்த உரிமையை யாரும் மறுக்க முடியாது. ஆனால் சினிமா அன்று அக்குடும்ப நிலையில் ஆடம்பரம்தான்.

வாசிங்மெசின் கதையில் குழந்தையின் பாதுகாப்புதான் முக்கியமாகும். அதை விடுத்து குழந்தையை கவனியாது வாசிங்மெசின் கனவுடன் மேலதிகமாக உழைப்பதல்ல. இங்கு வானதிக்கு வாசிங்மெசினை வங்குவதை படைப்பு மறுக்கவில்லை. மாறாக குழந்தையின் உளவியலை படைப்பு பூர்ஷ்சுவா கண்ணோட்டத்தில் பேசுகின்றது.

இக் கதை பொதுவாக லண்டன் வாழ்தமிழர்களின் இரண்டு மூண்று வேலை செய்து உழைக்கும் கனவுகள் மீது, மற்றவர்களைப் பார்த்து அது போல் இருக்க முயலும் நிலை மீது தான் இக்கதை, முதலாளித்துவ தூயஜனநாயகத்தை கோருவதை அடிப்படையாக கொண்டுள்ளது.

அழகலிங்கம் வேலை செய்யும் பெண், அதுவும்; ஒரு குழந்தையின் தாய்க்கு கட்டாயம் வாசிங்மெசின் தேவை என்கின்றார். அப்படிப் பார்த்தால் ஜரோப்பாவில் வேலை செய்யும், மற்றும் குழந்தைகளின் தாய்மார் எல்லாம் வாசிங்மெசினை வைத்துள்ளனரா? இல்லையே ஏன்? அடிப்படைச் சம்பளத்தை பெறுபவர்களும் மிக மோசமான வறுமையில் உள்ள ஜரோப்பியரின் குடும்பங்களில் இது வாங்குவது ஆடம்பரப் பொருளாக, அவர்களின் வருமானத்துக்குள் உள்ளது. அதுவும் ஒரு வாசிங்மெசினின் ஆயுள் மூன்று முதல் ஜந்து வயதாக உள்ள போது எப்படி முடியும். ஆனால் ஜரோப்பா வரும் பூர்ஷ்சுவாத் தமிழன் வந்த உடன் வாங்க அலையும் போக்கு அவனின் பொதுவான பூர்ஷ்சுவா இயல்பாக ஜரோப்பிய தொழிலாளியில் இருந்து வேறுபட்டுக் காணப்படுகின்றது.

ஷோபாசக்தியும், அழகலிங்கமும் ஆசை ஆடம்பரமும் என்பது ஜனநாயகமானது எனப் பிரகடனம் செய்கின்றனர். இதில் இருந்து பார்த்தால் தனது சொந்த குடும்பத்தின் இயல்பான பூர்ஷ்சுவா கோரிக்கைகளை விமர்சனம் இன்றி அங்கீகரிக்கின்றனர். எவ்வளவு போலியான நடைமுறை. இதை நடைமுறையில் 99 வீதமான மக்களால் நடைமுறையில் செய்யமுடியாது.

ஏன் ஷோபாசக்தி கூட தன்னுடைய ஆசையை ஏன் தன்னுடைய தேவையை கூட தனது வருமானத்தை மீறி, தனது உடல் பலத்தை மீறிய வரட்டுக் கம்யூனிச கனவுகளால் அடைய முடியாது. அவரும் சாதரான ஆசையுடன் ஆட்டிப்படைக்கப்பட்டும், கைவிட்டும், அதறக்;காக போராடியபடியோ அல்லது கடனாளியாகவோ நடைப்பிணமாகவோ வாழ முடிகின்றது. இதில யாரும் மிஞ்ச முடியாது. ஏன் எனின் நாம்வாழும் சமூகம் சுரண்டல் சமூகம் அல்லவா.

இந்த விவாதத்தைத் தொட்டு அழகலிங்கம் முன் வைத்த வாதத்தைப் பார்ப்போம். "விமர்சனம் என்பது, அவரவர் அறிவுமீது இரசனைமீது கட்டப்படும் ஒன்றாயச் சுருங்கிவிட்டது" எனத் தலைப்பிட்டவர் தலையங்கத்திலேயே தனது வர்க்க அரசியலை கைவிடுகின்றார். அது சரி விமர்சனம் எப்போது ஜயா இதற்கு வெளியில் இருந்து வந்தது. காலம் காலமாக இருக்கும்; வர்க்க சமுதாயத்தில் இதற்க்கு வெளியில் எப்போது எல்லாம் நன்றாக இருந்தது என்பதை எல்லாம் இவர்களின் டிரொக்சி வந்தாலும் நிறுவமுடியாது. விமர்சனம் என்பது வர்க்க எல்லைக்கு வெளியில் இருக்க முடியாது. ஆணால் முதலாளிகள் மட்டும் இப்படி  இருந்தது என நிறுவத் தயாராக உள்ளனர். அது போல் அழகலிங்கத்தின் விமர்சனமும் வர்க்க எல்லையைக் கடந்த அறிவு இரசனையில் நின்று வைக்கும் போது முதலாளிக்;காக பட்டாளி வர்க்கத்தின் பெயரில் இரண்டும் கலந்து முன்வைத்துள்ளார்.

அடுத்த பொன் மொழியைப் பார்ப்போம். "......உலகிலலுள்ள பிரச்சனை ஆசைப்படுவதல்ல ஆசைப்படத்தெரியாமல் இருப்பதுதான் அவள் ஏன் ஒருபென்ஸ் காருக்கு ஆசைபடுவதில்லை அவள் ஏன் ஒரு ஆகாயவிமானக் கொம்பனியின் சொந்தக்காரியாக இருப்பதற்கு ஆசைப்படவில்லை............. ஆசைப்படத் தெரியாத மட்டத்துக்கு அவர்களது கலாச்சாரம் ஒடுக்கப்பட்டுள்ளது..........." எனத் தொடர்கின்றது.

உண்மைதான் உலகில் உள்ள பிரச்சனைகளுக்கு ஆசைப்பட தெரியாதது ஒருகாரணம்தான். ஏன் எனின் ஆசைப்படத் தெரிந்தால் சந்தை நெருக்கடி தானக தீர்ந்து விடும் என்பது முதலாளிகளின் கோட்பாடு. ஆசைப்படுவது தெரிந்து விட்டால் விளம்பரச் செலவும் மிஞ்சும், மேலும் முதலாளியின் பையும் நிரம்பும். ஆசைப்படுபவனின் சொற்ப கையிருப்பை புடுங்கிய திருப்தியும் முதலாளிக்கும் இருக்கும். ஆசைப்பட வைக்க எப்படி நாயாக அழகலிங்கம் மார்க்சிய விளக்கம் கொடுக்கின்றாரோ, அதை விட வேகமாக ஏகாதிபத்தியம், விளம்பர உலகை நம்பியிருப்பதற்க்குப் பதில், டங்கல் ஒப்பந்தம் மூலமும் உலக வங்கி மூலமும் மக்களை ஆசைப்பட வைக்கவும், பொருட்களை அவர்களுக்கு விற்கவும,; அழகலிங்கத்தை விட தீவிரமாக இயங்குகின்றனர். எனவே ஆசையை ஏற்படுத்தும் மிக தீவிர புரட்சியாளர்களான ஏகாதிபத்தியத்துடன் ஏன் உத்தியபூர்வமாக அறிவித்து கூட்டு சேரக் கூடாது.

ஆசைப்பட தெரியாதது மாபெரும் தவறு என்கிறார். ஏன் வட்டிக்கடை நடத்த, முதலாளியாகி சுரண்ட, மற்றவனை அடக்க, மற்றவனை கொள்ளையடிக்க, பெண்ணை கற்பழிக்க, பர்ப்பனராக தொடர, தாழ்த்தப் பட்டவனை நசுக்கி ஒடுக்க, பெண்ணை ஒடுக்கி வைத்திருக்கும் ஆசையைத்தான் அழகலிங்கம்  மற்றவர்களின் சிறு ஆசைகள் மீது கூறுவதன் மூலம் மறைமுகமாக நிறுவிப் பாதுகாக்க முனைகின்றார். அதாவது முதலாளி நடுத்தரவர்க்கத்தை அமைதிப்படுத்த விரும்பும் போது, கூறுவான் முயன்றால் நீயும் முதலாளியாக முடியும் எனவே என்னை எதிர்ப்பதற்குப் பதில், நீ முதலாளியாக வர ஆசைப்படு என்பதைத் தான் கோட்பாட்டு அளவில் அழகலிங்கம் மறுவிளக்கம் கொடுக்கின்றார். ஆசை என்பது எல்லாப் பிரச்சனையைப் போல் வர்க்க சமுதாயத்துக்கு உட்பட்டது. ஏன் ஒரு மத்திய தர வர்க்கத்தின் சிறு ஆசை கூட அடுத்த வர்க்கத்தைப் பாதிப்பதாக, சிறுமைப்படுத்துவதாக இருக்கும். வீதியில் செல்லும் போது கையேந்தும் ஒருபரிதாபத்துக்குரிய பெண்ணின் ஒரு வாய்க்கு தேவையான சோற்றுப் பருக்கையை விட, முன் கடையில் விருந்துண்ணும் ஆசையில் ஒரு மனிதன் எதைக்; கையாள்வது முற்போக்கானது. ஆசை என்பது வர்க்க எல்லைக்கு உட்பட்டது. அது வர்க்க கோட்பாட்டால் கேள்விக்கு உள்ளாக்ககூடியவை. அழகலிங்கம் விளக்கியது போல் வர்க்க எல்லைக்கு அப்பாற்பட்டது அல்ல.

இறுதியாக மார்க்ஸ் பொருள் பங்கீட்டில்; என்ன கூறுகின்றார் எனப் பார்ப்போம்.

"ஒவ்வொருவரிடமிருந்தும் அவருடைய ஆற்றலுக்கு ஏற்ப, ஒவ்வொருவருக்கும் அவருடைய தேவைக்கு ஏற்ப"  என்று தான் பிரகடனம் செய்கின்றார். அதை விடுத்து ஒவ்வொருவரினதும் ஆசைக்கு ஏற்ப என்று பிரகடனம் செய்யவில்லை. ஆசை என்பது சொத்துரிமைக்கான முதல் படியாகும்.

மார்க்சியவாதியாக கூறியபடி டிரொக்சியைப் போற்றும் இவர், போல்ஷெவிப் புரட்சியை ஸ்ராலின் காட்டிக் கொடுத்தார் என சேறடித்த படி, போல்ஷெவிக் கட்சியை எப்படி மார்க்சிய விரோத கண்ணோட்டத்துடன் சேறடிக்கின்றார் என்பதைப் பார்ப்போம். இவர் மொழி பெயர்த்து இந்தியாவில் வெளியாகிய புத்தகத்துக்கு இட்ட தலைப்பில் " போல்ஷெவிக் கட்சியின் இரட்டை நிலைப்பாடு" என சம்பந்தமில்லாத வகையில் போட்டதன் மூலம் தனது மார்க்சிய எதிர்ப்பை வெளிப்படுத்தியவர் இன்று கோட்பாட்டில் அதைச் செய்ய களம் புகுந்துள்ளார் அவ்வளவே.

****

இனி நாம் ஷோபாசக்தியின் கதை ஒன்றை பார்ப்பது அவசியமாக உள்ளது. ஏன்? பாட்டாளி வர்க்க கோசம் போட்டபடி வேறு ஒன்றை விமர்சனம் செய்யும் போது தனது கதையை பாட்டாளி வர்க்க கதையாக மறைமுகமாக பிரகடனம் செய்கின்றார். ஆனால் உண்மையில் பார்த்தால் இவரின் கதை எந்த விதத்திலும் இராஜேஸ்வரியின் கதையின் உள்ளடக்க படிமானங்களைத் தாண்டியது அல்ல. இதை அவர் இவ் விமர்சனத்தின் பின் எழுதி அம்மாவில் வெளியாகிய "க.ட.வு.ளு.ம்;. காஞ்சனாவும்;" என்ற கதையைப் பார்ப்போம்.

கடவுளைத் தொட்டு பெண்ணின் கடந்த காலம் ஊடாக வளர்ந்த கதை கடவுளைச் சரி, பெண்ணின் ஒடுக்கு முறையை கேள்விக்கு உள்ளாக்கிய மார்க்சிய படைப்பாக உருவாக வில்லை. பட்டாளிவர்க்க கண்ணோட்டத்தில் கடவுளுக்கு எதிரான போராட்டப் பாதை கோட்பாட்டு ரீதியில் தெரியா விட்டாலும், பெண் ஒடுக்கு முறைக்கு எதிரான பாதை கோட்பாட்டுரீதியில்; தெரியா விட்டாலும் ஒருக்காலும் யாரலும் பாட்டாளி வர்க்கப் படைப்பை படைக்க முடியாது. இதே நிலையில் தான் ஷோபாசக்தியின் படைப்பை பார்க்க முடியும்.

கலை அம்சத்தினை கையாள்வதில் உள்ள திறமை உள்ளடக்கத்தில் பிரஹை பூர்வமான மர்க்சிய பார்வை இன்மையால் படைப்பு ப+ர்ஷ்சுவா எல்லைக்குள்;  சோடை போய் உள்ளது.

நாம் கதையை சுருக்கமாகப் பார்ப்போம். பாரிசில் ஓரு பெண் கையை உயர்த்திய படி பலமணிநேரம் கண்ணை முடியபடி இருக்க, பாரிஸ் தமிழ்மக்கள் ஏதோ அற்புதம் நடந்து கடவுள் வந்து விட்டார்ரென நம்பி பக்தி மயமாக, அதுவும் சென்ற ஒருவருக்கு அதிஸ்டசீட்டில் பலஆயிரம்; கிடைக்க, பிரான்ஸ் செய்தி அமைப்புகள் செய்தியாக்க கடவுள் திகைத்துப் போகின்றார்.

இதன் தொடர்ச்சியில் அப்பெண் யார் எனக் கடவுள் ஆராய்கின்றார். யாழ்பாணத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட கிராமத்தில் பிறந்த இப் பெண்ணின் அப்பா முதலில் ஒரு உயர்சாதி பெண்ணை விரும்பிய போதும், இறுதியில் அப்பெண் சாதிக் காரணத்தால் மறுக்க அவர் அப்பெண்ணை விட உயர் சாதிப் பெண்ணை திருமணம் செய்து கொள்கின்றார்.

அவர்களுக்குப் பிறந்த இப்பெண் தனது தந்தை தொழிலிற்க்கு செல்லும் போது, பொலிஸ்சின்  இனவெறி தாக்குதலுக்கு பலிகொடுக்கிறாள். இந்நிலையில் தாய் கூலிவேலைக்கு செல்ல இவளின் அப்பம்மாவின் தொழில், இனவெறி பொலிசார்; யாழ்கடைகளை எரித்ததுடன் முடிவுக்கு வருகின்றது. இதன்பின் அவள் கசிப்பு விற்பதில் ஈடுபட, மருமகளுக்கு கூலி கொடுக்கும் சாக்கில் வரும் ஆசிரியர் பலாக்காரம் செய்யமுனைகின்றார்.

இதனால் அவள் கூக்குரல் இட்டு தன்னை பாதுகாக்க, மாமியார் இதன்பின் இவள் உடன் வந்து இருந்த காலத்தில் இறந்து போகின்றாள். முன்பு தப்பிச் சென்ற ஆசிரியர் மொட்டை கடதாசி பொலிஸ்க்கு போட்டதன் மூலம் பொலிஸ் வருகையும், அப்பெண்ணை பலாக்காரமாக வைப்பாட்டியாக பொலிஸ் அதிகாரி வைத்து இருக்கின்றான்.

இக்காலத்தில் தாய்க்கும் மகளுக்கும் இடையில் ஒரு இடைவெளி மௌனமாக ஏற்படுகின்றது. இந்நிலையில் யாழ் நிலைமை மாறி இயக்க ஆதிக்கம் தொடங்குகின்றது. இதில் ஊர்திருத்த புறப்பட்ட உயர்சாதி இளையர்கள் கசிப்பு விற்க்கும் இப்பெண்ணை கடத்திச் சென்றபின் விடுவிக்கின்றனர். இதன் தொடர்ச்சியில்  இயக்கம் வருகையும் பச்சைமட்டை அடி தொடங்குவதும், முன்னால்  பொலிஸ் அதிகாரியை இவள் வீட்டுக்கு முன் வைத்து சுட்டுக்கொல்கின்றனர்.

அதனால்  அவள் உற்சாகமாக திரிந்ததும், அவள் வீட்டுக்கு முன் இராணுவத்தை நோக்கிகாவல் இருந்த இளையர்களுக்கு உதவுவதும், அவ்இளையர்களில் ஒருவன் இவளின் மகளை காதலிக்க தொடங்குகின்றன்;. ஒருநாள் காதலித்தவனை நோக்கி நேற்று இரவு என்னை பலாக்காரம் செய்தனி எனக்கூறித்திட்ட, மகள் அதிர, அடுத்தநாள் தாய் தற்கொலை செய்துகொள்கிறாள்.

இதன்பின் பல்வேறு காரணத்தால் இருவர் சந்திப்பும் நடக்கவில்லை. அவன் காணாமல் போய்விடுகின்றான். பின் இப்பெண் பாரிஸ்வர கொழும்பு வந்தபோது அவனைக் கண்டுகொள்வதும் மீண்டும் காதல் தொடர்கின்றது. பின் பாரிஸ் வந்த இவள் அவன் வருகையை எதிர்பாத்து இருக்க அவன் வருவதாக பல காரணம்கூறி நாட்கள் செல்கின்றது. இந்நிலையில் இவளின் உறவினர்க்கு சந்தேகம் ஏற்பட, வேறு திருமணம் செய்யக் கோர அவள் மறுக்க, வீட்டைவிட்டு வெளியேற வேண்டியதாகிவிட்டது.

இதனால் தனியாக அரசுவிடுதியில் தங்கிய நிலையில், அவனின் வருகையை கேட்டறிய தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டபோது அவன் அங்கு இல்லாமல் இந்தியா சென்றது அறிந்து எப்ப வெளிக்கிடுகிறார் எனக் கேட்க்க, அவர்கள் யாழ் தேர்தலுக்கு போஸ்ட்டர் அடிக்க சென்ற கதையை கூறினர்.

இதைக்கேட்டு அதிர்ந்த நிலையில், அவனின் தொலைபேசி அழைப்பு எதிர்பாராமல் இந்தியாவில் இருந்து வருகின்றது. இங்கு நடந்த வாக்குவாதத்தில் அவன் மிகமோசமான வார்த்தையால் திட்;டிய நிலையில்தான் அவள் பாரிஸ்சில் கையேந்தி நிற்பதை கடவுள் கண்டுபிடித்தார்.

இதன் தொடர்ச்சியில் கடவுள் அவள் முன்வர, இடுப்பில் இருந்த துப்பாக்கியால் நெற்றியில் பொட்டுவைத்தாள். இதன் உடன் கதை முடிந்து போகின்றது.

முதலில் கதையொரு வரலாற்று தவறை குழப்பி மூடிமறைத்துள்ளது. பச்சைமட்டை கொண்டு இயக்கங்கள் அடித்ததாக வரும்பகுதியும், துண்டுப்பிரசுரம் அடிக்க இந்தியா சென்ற பகுதியும் ஒன்றுக்குஒன்று முரணான செய்தியாக உள்ளது. ஏன்எனின் பச்சைமட்டை மூலம் அடித்த இயக்கம் புலி என்பதும், தேர்தல் துண்டுப்பிரசுரம் அடித்த இயக்கம் துரோக இயக்கம் என்பதில் உள்ள வேறுபாடு துரோக இயக்கம்தான் பச்சைமட்டையால் அடித்த மாதிரி கதைமறைமுகமாக கூறிச்செல்கின்றது.

இக்கதை சாதாரனமாக பூர்ஷ்சுவா நிலையில் எதைப்பேசிக் கொள்வார்களோ அதையே படைப்பு மீளக்கொண்டு வந்துள்ளதுடன் அதற்கு தனிநபர் பயங்கரவாதத்தை தீர்வாக முன்வைக்கப்பட்டுள்ளது. ஈழப்போராட்டம் எந்த அரசியல்வழியால் சீரழிகின்றதோ அதை பூர்ஷ்சுவா யதார்த்தத்தின் மூலம் விமர்சனமின்றி நியாப்படுத்தியுள்ளார்.  இதைப் பார்ப்போம்.

முதலில் பொலிஸ் அதிகாரி மீதான மரணதண்டனை பின் அப்பெண்ணின் உற்சாகமான நடவடிக்கை மூலம் மரணதண்டனை நியாயப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு அப்பொலிஸ் அதிகாரி தண்டனைக்குரிய குற்றவாளியே. ஆணால் அதைத் தனிநபர் பயங்கரவாத குட்டிபூர்ஷ்சுவா கொலைகள் மூலம் தீர்வு காணமுடியாது. மாறாக மக்கள் அரசியல்மயப்படுவதன் மூலம் மட்டும்தான் இதற்க்கு தீர்வுகாணமுடியும். ஏன் தண்டனை கொடுத்தவர்களே அதற்க்குள் சென்று விடுவதையும், அப்பெண்ணை பலாக்காரம் செய்யவும் தயங்காததைக் காணமுடியும். அப்பெண் சுயமாக வாழமுடியாத வகையில் இருப்பதற்க்கு சமூகக் காரணமல்லவா எல்லாவற்றிலும் அடிப்படையானது. இதைப் படைப்பு மார்க்சிய வழியில் எங்குமே கேள்விக்குள்ளாக்கவேயில்லை. மாறாக பூர்ஷ்சுவா இயல்பில் அதுவும் ஆண்நோக்கில் பெண்பார்க்கப்படுகின்றாள். பெண்ணின் போராட்டம் பெண்ணின் குமுறலைக் கூட பூர்ஷ்சுவா நோக்கில் கூட படைப்பு கொண்டுவரமுடியவில்லை.

அடுத்து கடவுளை நோக்கி   சுட்டசூடு எந்தவிதத்திலும் மார்க்சிய போராட்டமார்க்கமல்ல. மாறாக மிக மோசமான உணர்ச்சி வசப்பட்ட தனிநபர் பயங்கரவாதமாகும். இந்த சூட்டால் கடவுள் பக்தர்களின் பின் உள்ள நம்பிகைகள் தகர்ந்துவிடுவதில்லை. மாறாக கடவுளுக்கு எதிரான போராட்டம் பொருளுக்கும் கருத்துக்கும் இடையிலானது. இது வெடி குண்டுகளால் அல்ல சீரான கருத்துப் போராட்டத்தால் வெல்லப்படவேண்டியவை. படைப்பில் எந்தஇடத்திலும் கடவுள் கோட்பாடு மீது விமர்சனம் கொண்டிருக்கவில்லை. சாதாரன  சினிமாப் படங்களில் வருவது போல் கடவுளுக்கு எதிரான வடிவங்களில் தான் படைப்பு பிரதிபலித்துள்ளது.

சாதராணமாக கிராமங்களில் ஆண் பேசிக் கொள்ளும் நிலப்பிரபுத்துவ வார்த்தையாடல்களால் படைப்பு வளர்ந்து, பெண்ணின் இயல்பான போராட்ட பண்பு ஆண்நோக்கில் வழமை போல் மூடிமறைத்தபடி ஆண்நோக்கில் தனிநபர்பயங்கரவாதம் நியாயப்படுத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் கடவுளை நோக்கிய மௌன தியானப் புலம்பலாக காட்டிய படிமானம், சாதராண மதவாதிகளின் மதப்போதனையை மறைமுகமாக நியாயப்படுத்தியுள்ளது. இது இன்னுமொரு வகையில் ஆண்டவனிடம்; முறையிடவைக்கும் படிமானமாகவுள்ளது. அப்பெண் தனக்குள்ளும் வெளியிலும் திட்டி தீர்த்துப் போராடும் படிமானம் பேசப்படாது விடுவதன் மூலம், நிலப்பிரபுத்துவ பண்பாடு போற்றப்படுகின்றது. பெண்ணுக்குள் நடக்கும் போராட்டத்தை மறுத்து, அதற்க்குப் பதில் அவர்களுக்கு வெளியில் தனிநபர் பயங்கரவாதத் தீர்வு மூலம் மக்கள் போராட்டம் அடிப்iடையிலேயே நிராகரிக்கப்படுகின்றது.

பெண்ணின் கடவுள் நம்பிக்கையின்மையும், ஆண்பற்றிய அபிப்பிராயமும் கருத்து போராட்டத்தில் சீராக முன்னேறமுடியுமே ஒழிய, அதிரடித் தாக்குதலால் வன்முறைச் சீரழிவைக் கொடுக்கும்.

ஏன் இக்கதையில் ஒரு சின்ன மாற்றம் செய்வோம்.; இப்பெண்ணின் காதலன் துரோக இயக்கத்துக்கு அல்லாது, தொழிலாளர் பாதைக்கு தேர்தல் துண்டுப்பிரசுரம் அடிக்க சென்று இருந்தால் அல்லது அவ்ஆண் மக்களுக்காக போராடியிருந்தால், இதை இப்பெண் ஏற்க்காத நிலையில் இப்பெண்ணின் முடிவும் கதையும் சுக்குநுறாகி விடுகின்றது அல்லவா. இங்கு குறித்த அப்பெண் வார்த்தையாடல் அவ்ஆணின் குறித்த வார்த்தையாடல் அல்ல மாறாக தொடர் செயல்பாடாக உள்ளது.

இங்கு ஆணை நோக்கிய பெண்ணின் கோரிக்கை பூர்ஷ்சுவா கண்ணோட்டம் கொண்டவை. இது மரபாந்த திருமணம் பற்றிய ஆணிய பெண்ணிய நிலப்பிரபுத்துவ ஒழுக்கத்தை அடிப்படையாக கொண்டு கதை தீர்வை நகர்த்துகின்றது.

அடுத்து தாயை கெடுத்த ஆணுடன் எப்படி மகள் காதலைத் தொடர முடிகின்றது. இதன் மீதான மகளின் அபிப்பிராயம், படைப்பாளியின் மௌனம் அரசியல்ரீதியில்; சந்தேகத்துக்குரியது.

பச்சைமட்டையடி, மரணதண்டனை, தாய் தற்கொலை செய்யத்தூண்டும் புறக்கணிப்பு, அவள் மீதான பலாக்காரம், கசிப்பு விற்க்க வேண்டிய சமூகநிலை ............போன்ற எவைபற்றியும் பாட்டாளி வர்க்க நோக்கு நிலையில் இருந்து பார்க்கவில்லை. ஏன் அதைகுறைந்த பட்சம் முரண்நிலையற்ற முதலாளித்துவ ஜனநாயகத்தில் கூட படைப்பு ஆய்வு செய்யப்படவில்லை. படைப்பின் ஒவ்வொரு கருவும் மார்க்சியகோட்பாட்டு  தீர்வுகளால் முரன்நிலையின்றி பார்க்கக் கூடியதாய்யிருக்க வேண்டும். இதைப் பார்க்க வேண்டுமாயின் முதலில் பிரச்சனைகளை ஆராய்யக் கோட்பாட்டுரீதியில் மார்க்சியத்தை புரிந்துகொள்ளவேண்டும். இது இல்லாதபோது ஒருக்காலும் மார்க்சிய இலக்கியத்தைப் படைக்க முடியாது.

15.05.1998