தனிமனித தேவைகளில் இருந்து புலம் பெயர், மற்றும் நாட்டில் சிறுசஞ்சைகள், பத்திரிகைகள் உருவான போது (இதற்க்குள் சில விதிவிலக்குகள் இருந்த போதும் பெரும்பாலானவைகள் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதியாக வரவில்லை) சமர் மக்களின் பிரச்சனை, அதற்க்கான தீர்வு, அதற்கான கோட்பாடுகளை விஞ்ஞான பூர்வமாக நிறுவுவது, போராடுவது என 25 இதழ்களை வெளியிட்டுள்ளோம்.
ஆம், மக்களின் அவலங்கள் எல்லையில்லாதவை. இயற்க்கையை அழிப்பவன் தன்னைச் சுற்றி பூங்கா அமைத்தபடி மக்கள் இயற்க்கையுடன் ஒன்றிணைந்த வாழ்க்கையை சிதைத்து மக்களை இயற்க்கையின் சிதைவால் கொல்கின்றான்.
நீரை நஞ்சாக்கியவன் தனக்கு சுத்தமான நீரை உற்பத்தி செய்து குடித்தபடி மக்களை விடாயிலும் நஞ்சிலும் கொல்கின்றான்.
பசியிருக்கே பசி அது எல்லோருக்கும் பொதுவானதுதான். ஆனால் பசி தெரியாது கூத்தும் கும்மளமாகவும் வாழும் ஒரு பகுதியும், பசியே வாழ்க்கையாக அதுவே எல்லாமாக வாழும் சமூகத்தின் ஒரு பெரும்பகுதியின் ஒரே குரலாக நாம் போராடவேண்டியுள்ளது. பசியால் பீடித்துப் போய் அதுவே தொற்று நோய்யாக்கப்பட்டு அடிமையாக சேவகம் செய்யவும், பார்த்தே வீணிர் வடிய சிறுமைப்படுத்திய வாழ்க்கையை பண்பாக சனநாயமாக விளக்கும் நடைமுறையாக மாற்றியுள்ளது.
உழையாது வசதியாக வாழ அவனால் உழைப்பவன் மீது திணிக்கப்பட்ட சாதிய ஒழுங்கும், அதை கடக்கும் போராட்டம் மீது கட்டியமைக்கப்பட்ட பண்பாடுகள், கலாசாராங்கள், ஒடுக்குமுறைகள் உழைக்கும் மக்களின் உழைப்பை சுரண்டி திமிர் எடுத்தவன் தன்னை நக்கி வாழ இந்துமதத்தை உருவாக்கினான். உயர் சாதியின் முன் கூணிக்குறுகி உணவுக்காக கையேந்தியும், குடிக்க நீர் கேட்டு கருணைக்காக ஏங்க வைத்தும், குற்றம் இன்றி வாழ சேவகம் செய்தும் ஒரு நாயாக வாழக் கோரும் பண்பாடுகள் கலாசாரங்கள், ஒடுக்கு முறைகளை மார்க்சியம் மட்டும்தான் புதிய பண்பாட்டால், பொருளாதார அமைப்பால் மாற்றீடு செய்து ஒழிக்கப் போராடுகின்றது. இது நிலவும் பார்ப்பாணிய நிலப்பிரப்புத்துவ, பூர்சுவா ஏகாதிபத்திய பண்பாட்டின் மீது உயரிய பாட்டாளி வர்க்க பண்பாட்டால் கவிழ்ப்பதன் மூலம் சாதிகடந்த ஒன்று இணைவை சாதி கடந்து ஒருங்கிணைத்து போராடுகின்றது. இதற்க்கு வெளியில் எந்தத் தத்துவமும் சாதிகடந்த புதிய பண்பாட்டை, உழைப்போரின் ஆட்சியை, தீண்டத் தகாதோர் பொருளாதார பலத்தை கோரிப் போராடவில்லை. புலம் பெயர் சமுகத்தில் இருக்கு எம்மவர்களின் சாதியங்கள் இப் பிரிவுகளுக்கு பொருளாதார மேம்பாட்டால் இனம் காணமுடியாத வகையில் மாற்றியுள்ளது. இது எமது அடுத்த தலைமுறையில் அறவே அற்று விடும் நிலையை, அப் பிள்ளைகள் இதை மனித உரிiமை மீறலாக காண்பது சாதித்தடிப்புள்ள குடும்பங்களில் உள் போராட்டமாக நிம்மதியற்ற சாதிப் புலம்பலாக மாறியுள்ளது. இது அக் குழந்தைகளின் முன் எப்படி ஏற்பட்டது எனின் உயரிய புதிய பண்பாட்டால், புதிய பொருளாதாரத்தால் என எல்லாவற்றாலும் எல்லாத் துறையிலும் நிகழ்ந்துள்ளது. இதுதான் எம் நாட்டில் சாதி ஒழிப்புக்கான நிபந்தனையாக உள்ளது. ஆனால் இங்கு மேவிய பொளாதார சமூக அமைப்பு எம் நாடுகளில் சாதியமற்ற புதிய உலக ஒழுங்கு இப் பணியை தணித்து பாட்டாளி வர்க்கத்திடம் மட்டும் கழுத்தைப் பிடித்து தள்ளியுள்ளது. ஆம் எல்லாக் கோட்பாடுகளும் சாதி ஒழி;ப்பை வைக்கவில்லை மாறக சலுகை கோருகின்றன. பாட்டாளி வர்க்கம் மட்டும்தான் சாதிஒழிப்பை முரண்பாடின்றி முன்வைனப்பதால் நாம் பாட்டாளி வர்க்கப் போராட்டப் பாதையை முன்னெடுப்பதில் எமது கரங்களை உறுதியுடன் உயர்த்தி முன்னெடுக்கின்றோம்.
பெண் ஆணின் அடிமை என மதங்கள் முதல் ஏகாதிபத்திய பொருளாதார அமைப்பு வரை மீள மீள நிறுவி கோட்பாட்டு உருவக்கத்தை முன்வைக்க, பெண் விடுதலையின் பெயரில் பெண்ணை நிர்வணமாக்கிய வக்கிர உச்சத்தை பெண்ணின் தனிப்பட்ட சனநயாக உரிமையாக்கியது இந்த ஐனநாயக சமூகம். பெண்ணின் உழைப்பைச் சுரண்ட, சுரண்டியதை தனது குழந்தைக்கு வாரிசாக்க, ஆணின் போகத்துக்கும் சுகிப்புக்கும் பெண் மறுப்பின்றி வாழ அவளின் சொத்துரிமையைப் பறித்து அவளை உழைக்கும் வர்க்கமாக மாற்றிய கோட்பாடுகள், நடைமுறைகள், பண்பாடுகள் இச் சமூக சனநயகத்தின் பாதுகப்பில் வாழ்கின்றது. பெண்ணின் விடுதலை என்பது பெண் தனது சுயநிர்ணயத்தை எல்லா வற்றிலும் கையாளும் உரிமையில் தொடங்கி ஒன்று கலத்தல்தான். இது பொருளாதராத்தில் ஆணைச் சாராத மொத்த சமுக வெற்றியில் மட்டும் தான் பெண் தனது விடுதலையை அடைவாள். ஏன்எனின் பெண் அடிமைப்படுத்தப்பட்டது என்பது அவளை சுரண்டிவாழவும் அதன் உடாக அவளை போகித்து சுகிக்கவும்தான். மார்க்சியம் மட்டும்தான் மொத்த சமூகத்தில் அதில் பெண்ணின் விடுதலைக்கான பொருளாதார விடுதலைக்கு அதை மொத்த சமூகத்தின் விடுதலை உடாக சாதிக்க கோருகின்றது. மற்ற எந்தத் தத்துவமும் பெண் சுரண்டப்படுவதை எதிர்க்காத நிலையில் ஆணாதிக்கம் அதன் அச்சாணியில் இருக்க சலுகை கோருவதுதான் நிகழ்கின்றது.
இது போல் சமுகத்தின் அவலங்கள் மீது மார்க்சியம் மட்டும்தான் ஒட்டு மொத்த விடுதலையை, மாற்றை, கட்டுடைப்பை வைப்பதால் மார்க்சியம் மட்டுமே உலக தத்துவத்தில் அதிக எதிர்ப்பை எதிர் கொள்கின்றது. அதே நேரம் இத்தத்துவம்தான் வராலாற்றில் எல்லாவற்றையும் மீறி போராடும் தத்துவமாக மீள மீள உள்ளது.
இந்த நிலையில் இவைக்கு எதிரான இந்த சனநாயக உலகத்தின் சனநாயகத்துக்கும் அதன் பிரதிநிதிகளும், எமது கண் சிவக்கும் எதிரியாக கண்கின்றோம். போராடுகின்றோம். வன்முறையைக் கையாள்கின்றோம். ஆம் எம் மரணம்வரை இப்பிரகடனம், போராட்டமும் ஒய்ந்து விடப் போவதில்லை. அடுத்த தலைமுறைக்கு போராடக் கற்றுக்கொடுப்பதும் ஒடுக்கப்பட்டவன் ஆட்சியை நிறுவுவதும், முடியாதவரை எங்கள் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டவனின் போராட்டத்தின் ஒரே ஆயுதமான மார்க்சியம் எந்த அவதூறுகளையும் கடந்து ஆயுதபாணியாகும். அது அம் மக்களை விடுவிக்கும். அதன் பாதையில் சமர் விட்டுக் கொடுக்காத போராட்டத்தை அதன் வர்க்க எதிரிக்கு எதிராக கடந்த காலத்தை விட மேலும் சிறப்பாக போராட உங்கள் ஆதாரவுக் கரங்களை, நேரடியான பங்களிப்பை, சேர்ந்து வர்க்க எதிரியை நொருக்க ஒரே குரலாக மாறுவது போராடுவது அவசியமாக உள்ளது.
கடந்த எமது போராட்டப் பாதையில் எம்முடன் இருந்த சிலர் தனிப்பட்ட இந்த வர்க்க சமுதாயத்தில் எதிர்த்து நிற்க்க முடியாது தமாகவே ஒதுங்கிக் கொண்டனர். ஒருவரை நாம் வெளியேற்ற கருஅழிப்பு விடயம் இருந்தது. ஒரு பாட்டாளி வர்க்கத்தின் பத்திரிகையில் பூர்சுவா வர்க்கத்தின் அர்ப்பத்தனத்தை நியாப்படுத்த முடியாது என்ற நிலையில் வெளியேற்றிய போதும், பின்னால் நாம் இதன் மீதான பூர்சுவா சனநாயகக் கோரிக்கையை இனங் கண்டு வர்க்கப் போராட்டத்தில் இதை உள்ளடக்கப்பட வேண்டும் என்ற நிலையில் நாம் சுயவிமர்சனம் செய்தோம். இருந்த போதும் முன்பு வெளியேற்றப்பட்ட நபரை உள்வாங்க முடியாத வகையில் மிக மோசமான பூர்சுவாத்தனத்துக்குள் சென்று ஒரு தரகராக பல மோசடிகளில் ஈடுபட்டு பாரிஸ் தமிழ் சமுகத்தில் எவை எல்லாம் சமூகக் கேவலமானதோ அதுவே அவரின் பிழைப்பாக மாறி இன்று அதற்க்குள்ளும் தலை மறைவாக பலர்தேட ஒளித்து திரிகின்றார். பணம் அதன் குணம் அதற்க்கு எதிரான போராட்டம் இல்லை யெனின் எல்லா மனிதப் பண்பாடுகளையும் அழித்துவிடும். இது வராலாற்றில் பலருக்கு நிகழ்துள்ளது.
கடந்த எமது போராட்டத்தில் நாம் சில தவறுகளை இழைத்த போதும் அவைகளை நாம் மக்களின் போராட்ட மார்க்கத்தில் உண்றி நின்றதால் இனம் கண்டு அவைகளைத் திருத்தினோம் திருத்துகின்றோம் திருத்துவோம். இதற்க்கு உங்கள் ஆக்கமான ஒத்துழைப்பு, கருத்துப் பரிமாற்றம், மக்களின் மீதான நேர்மையான போராட்ட குணம்சம் என்பன மேலும் உதவும்.
நாம் எம்மை இன்று நாட்டில் போராட்ட நடைமுறை செயல்தள மாற்றுத் தலைமையாக பிரகடனம் செய்யவில்லை. அதுபோல் மாற்று வேலைத்திட்டம் ஒன்றை அதற்க்காக முன்வைக்க முனைய வில்லை. மாறக வாழும் சமுகத்தில் போராட சில முன்முயற்ச்சிகளை எடுத்தோம். இவை தனிநபர் பூர்சுவா அர்ப்பத்தனங்களால், போராட்டம் மீதான நம்பிக்கையீனங்களால் சிதைந்து போனது. நாம் எழுதுவது போராடுவது அனைத்தும் நாம் ஒரு மாற்றுத் தலைமையாக நடைமுறையில் மண்ணில் போராடத நிலையிலும், அதற்க்காக மட்டுமே நாம் போராடுகின்றோம். மக்களின் நலன், அவர்களின் விடுதலை, மக்களின் துன்பம் என்பதன் மீதான எமது போர்குணாம்சம் அவர்களின் நடை முறைப் போராட்டத்தைக் கட்டியமைக்கப்பட வேண்டிய பணிகளில் சமரின் நோக்கம் என்றும் தீர்க்கமானதும் இறுதியனதுமாகும். இதற்க்காக மட்டுமே எமது எழுத்துக்கள் அனைத்தும் என்பது கேள்விக்கு இடமற்றது.
நாம் படிப்படியாக இந்த இதழில் இருந்து ஒரு முக்கிய மாற்றம் ஒன்றை கையாள்கின்றோம். நாம் எமது பெரும்பாலன கட்டுரைகளில் குறிப்பானவைகளில் இருந்து பொதுவான கோட்பாட்டு உருவாக்கத்தை கட்டியமைத்தோம். இது முழுமையான பலனை கொடுக்கத் தவறியது என்பதை இனம் கண்பதால் கோட்பாட்டு விவதங்களில் பொதுவான தத்துவார்த்த கட்டுரைகளில் குறிப்பானதை விவாதிப்பது என இச் சமர் இதழில் மாற்றத் தொடங்கியுள்ளோம். நடைமுறைச் சம்பவங்கள், அதை ஒட்டிய கோட்பாடுகள் மீது மட்டும் குறிப்பானதில் இருந்து பொதுவானதை வந்தடையும் கட்டுரைகளை சமர் இவ்இதழில் இருந்து மாற்றத் தொடங்கியுள்ளது.
இதற்க்கு உங்கள் ஆக்கமான போராட்ட ஒன்றிணைவை அனைத்து தளத்திலும் கோரி சமர் தொடரும் பாதையில் உங்கள் கரங்களை இறுகப்பற்ற எங்கள் கடமையை எம்முடன் பகிர்ந்து கொள்ளும் மக்கள் போராட்டத்தில் நாம் ஒன்று இணைவோம் என பிரகடணம் செய்ய அழைக்கின்றோம்.
***
புலம்பெயர் சமூக இலக்கிய, அரசியலில் சமூக அக்கறை காட்டுவோர் மேலும் மேலும் மாhக்சியத்தில் இருந்து அன்னியப்படுவது மட்டுமின்றி, மாhக்சியம் மீதும் அதையொட்டிய வர்க்கப் போராட்டம் மீதும் இருட்டடிப்பை மட்டும் நடத்துவதுதன் மூலம் மட்டுமே அரசியலில் உயிர் வாழ முடியும் என்றளவுக்கு மேலும் தம்மை ஐனநயாக விரோதிகளாக அடையாளம் காட்டுகின்றனர். இலக்கியச் சந்திப்புகளில் நடக்கும் விவாதங்கள் மீது மார்க்சிய விவாத்தை தொடங்கினால் அதற்க்கு பல்வேறு காரணம் கூறி தடுத்த போக்கு, இன்று அதற்க்கு வெளியில் மார்க்சிய கருத்துக்கு கருத்துச் சுதந்திரம் எனக் கூறும் சஞ்சிகைகளும் அதன் பாதையில் கால் எடுத்து வைக்க பிரயத்தனம் செய்கின்றன. உயிரோடு வாழ்ந்து கொண்டும், எலும்பும் தசையுமாக வாழ்க்கைப் போராட்டத்தில் மக்கள் நடைமுறையில் தீர்வுகளையும், போராட்டங்களை யும் நடத்திக் கொண்டிருக்க, ஐடமாகிப் போன இலக்கிய அரசியல்வாதிகள் எதிர் திசையில் பயணிக்கின்றனர். இது மட்டும் தான் பிரச்சனையற்ற இலக்கியம் செய்யவும், புகழ்தேடவும், முதுகு சொறியவும் முடியும் என்பதை புரிந்து களத்தில் பாய்விரித்துள்ளனர்.
சமுதாயத்தில் ஒரு பிரச்சனை மீதான கட்டுரை, இலக்கியம் யதார்த்ததில் மக்களால் தீர்வுக்குள்ளாகிறது. இதை முடிமறைத்தபடி படைப்பாளியும் கூட தீர்வை இந்த வர்க்க சமுதயத்தில் வைத்தபடி, பிரச்சரத்தையும் செய்தபடி உள்ளதை வர்க்க கண்ணோட்டத்தில் விமர்சிக்கும் போது ஐயகோ! என ஒப்பாரிவைத்து விமர்சிக்கும் சுதந்திரத்தை மாறுக்கின்றனர். இலக்கியம் விமர்சிக்க முடியாத புனிதமான தாகவும், விமர்சிக்க உரிமை உண்டு என்றபடி, அதை விமர்சிக்கும் போது எதிர்த்த படி இலக்கியத்தை கருத்துமுதல்வாதமாக்கின்றனர். இது இன்றைய பொது இலக்கிய கோட்பாட்டு, நடைமுறை வாதமாகி சீரழிகின்றது.
***
அடுத்து மாhக்சியம் மீது கேள்விகள் என பலவிதமான போக்குகள் இன்று மாக்சியத்துக்கு எதிராக கிளம்பியுள்ளன. இதில் ரொக்சியவாதிகள் முதல் பின்நவீனத்துவாதிகள் ஈறாக பண்பியல் வேறுபாட்டுடன் ஓரே மாதிரியான தாக்குதலை நடாத்துகின்றனர். மார்க்சியம் தோல்வியடைந்து விட்டது எனவே அனைத்துக்கும் கருத்து சுதந்திரம் ஊடாக நாம் ஆராய்வு செய்கின்றோம் என தமது வர்க்க நிலையை தக்கவைக்க விளக்கம் கொடுக்கின்றனர்.
பாட்டாளி வர்க்கம் தனது ஆட்சியை முதலாளிகளிடம் இழந்தது என்பது ஒரு வர்க்கப்போராட்ட நிகழ்வு என்பதை மறுத்தபடி, பாட்டாளி வர்க்க ஆட்சிக்குள்ளும், முன்னைய பிந்திய முதலாளித்துவ கூறுகள் தமது ஆட்சிக்கு போராடும் என்ற இயங்கியலை மறுத்தபடி, எல்லாம் ஆட்சியை பிடித்த உடனேயே எல்லாம் மாறிவிடும், மாறிவிட்டது என்ற இயங்கியல் மறுப்பு வர்க்கபோராட்ட மறுப்புடன், கட்சியில் முரண்பட்ட கருத்துகள்; இயங்கியல் வளர்ச்சியில் பாட்டாளி வர்க்க சரியானதுக்கு எதிரானத்துக்குமாக வளர்ச்சிபெறும் என்ற இயங்கியலை மறுத்தபடி தாக்குதல், ஆய்வு, சுதந்திரவிவாதம் என்று மாhக்சியத்துக்கு எதிராக வேகநடை போடுகின்றனர். மார்க்சியமல்லாத மற்றைய வர்க்க சமூக முன்னணி பிரிவினரை புரட்சியின் தலைவராக காட்டுவது கூட இதற்க்கு கூடாக மார்க்சியத்தின் பெயரில் கடைவிரிக்கின்றனர். இது இன்று ஈழப் போராட்டம் சீராழிந்த போது தேங்கிப் போன சாக்கடையாகும்.
***
அரசியலில் பிழைத்துக் கொள்ள சிலர் காய்கள் நகர்த்துக்கின்றனர். என் மீதான கல்வெட்டில் என்னை மிரட்டியும், நேரடி மரணதண்டனைக்குப் பதில் எழுத்தில் கொன்றதைத் தொடர்ந்து பதிலளித்தேன். இதில் அரசியல் பற்றிய எந்த பிரஞ்சைபூர்வமான அபிப்பிரயமும் இன்றி, இரண்டடையும் ஒன்றாக இட்டுக் காட்டுவதன் ஊடாக தமது அரசியலை பின்பக்கத்தால் புகுத்துகின்றனர். ஏதோ எனக்கும் ஷோபாசக்திக்கும் தனிப்பட்ட பிரச்சனையாக காட்டி, எதிர்த்துப் போராடும் பண்புபற்றி பேசி, வர்க்க அரசியலை குழிதோண்டி புதைக்க கிடங்கு வெட்ட சிலர் அதே பாதையில் களத்தில் பிரச்சரத்தை நகர்த்தி பிழைக்க அரும்பாடுபடுகின்றனர்.
இது போன்ற மற்றுமோர் அரசியல் போக்கு முகம் பார்த்து வர்க்க அரசியல் பேசுகின்றனர். உதராணமாக இ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபாவின் தனிப்பட்ட மனிதப் பண்பை வைத்தக் கொண்டு துரோக அரசியலுக்கு நியாயம் கற்பிப்பது போன்ற போக்குகள்;. ரொக்சியத்தை எற்றுக் கொண்டால் அவர்களின் மீது எந்த விமர்சனத்தையும் வைக்க மறுத்த மற்றைய ரொக்சிகள், படு பிற்போக்கு அரசியல் வழிகளைக் கூட மறைமுகமாக நியாப்படுத்துவதும் அல்லாது அரசியலற்ற அணுகு முறையை கையாள்வது என முகம் பார்த்து அரசியலில் ஈடுபடுவது. இது போல் குடிகாரனாக மாறிவிட்டான் எனக் கூறி அனுதாபம் பேசி அரசியலைப் பாதுகாப்பது. இப்படி பல அரசியல் போக்குகள் அம்பலப்படுத்தப் படவேண்டிய புதிய அரசியல் விபச்சாரங்கள்; முளைத்து எழுகின்றது.
***
செம்மணி மயானத்தில் புதை குழிகளில் இருந்து மீட்க்கப்பட்ட மனிதசடலங்கள் இனவெறி சிங்கள அரசின் பாசிசத்தின் மற்றுமொரு வடிவமாகும். காணமால் போனோர் எலும்புகளாக மீட்க்கப்படும் நிலையில் தமிழ் மக்களும், அவர்களின் குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இப்பிரச்சனை யாழ்பிரதேசம் என்பதால் பகிரங்கமாக சர்வதேசமளவில் பகிரங்கமாகி விசரானைகளை சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தீவிரமாக்கியுள்ளது. இந்த நிலையில்தான் சிங்கள பாசிச இனவெறி அரசு தன்னை ஐனநாயகவாதிகளாக காட்டிக்கொள்ள விசாரனையை சர்வதேச மட்டத்தக்கு எடுத்து சென்று நடாகமாடத் தொடங்கியுள்ளது. இதை பலர் சரியாக புரிந்து கொள்ளத் தவறிவிட்டனர். அரசு தான் ஐனநாயகத்தின் ஒரு சின்னம் எனக் காட்ட இதன்மீதான விசாரனை முடுக்கிவிடுவதன் மூலம் தனது சொந்த பாசிச இனவெறி மூகமுடியை மறைத்த படி தமிழ் மக்களுக்கு எதிராக அரசியல் மூல உபாயத்தை கையாளத் தொடங்கியுள்ளார்.
இந்த மனித புதைகுழி மீட்பு என்பதை வடக்கு கிழக்கு தாண்டி சிங்கள பிரதேசம் அனைத்தும் தழுவிய வகையில் அனைத்து புதைகுழிகளையும் (தமிழ், சிங்கள, முஸ்லிம்), மனித படுகொலைகளையும் விசாரனைக்குள்ளாக்க கோருவதன் மூலம், அரசை அன்னியமாக்கி அம்பலப்படுதுவது அவசியம்;. இதன் மூலம் இராணுவம் என்பது அது எந்த வாக்கத்தின் கருவி என அனைத்தையும் அம்பலப்படுத்தமுடியும்;. இதே நேரம் இயக்கங்கள் செய்தவற்றை புதைகுழிகளில் இருந்து மீட்க்கவேண்டும்;. இதற்க்கான அரசியல் என்ன? அந்த இரணுவக் கண்ணோட்டம் என்ன என்பதை அம்பலப்படுத்தவதன் மூலம் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை உயர்ந்த நிலைக்கு நகர்த்தமுடியும்.
***
துருக்கிய பாசிச இராணுவ அரசு சிறுபான்மை இனமான குருட்டீஸ்தான் மக்களை படுகொலை செய்தும் , கற்பழித்தும், அகதியாக்கியும் நடத்தும் நரவேட்டை உச்சத்தில் அரங்கேறிய வண்ணம் உள்ளது. ஐனநாயக அமெரிக்கா, இஸ்ரேலின் நேரடி சதிகள், மிரட்டல் மூலமும், ஐரோப்பாவின் அங்கீகாரத்துடனும் பி.க.க (P.மு.மு) தலைவர் ஓகலானால் கைது செய்து அவருக்கு ஏகாதிபத்திய ஆசியுடன் மரணதண்டனையை அறிவித்துள்ளனர் துருக்கிய பாசிட்டுகள். அந்த மக்களின் விடுதலை போராட்டத்தில் இது எப்படி நிகழ்ந்தது என்ற அரசியல் கராணத்தை சுய விமர்சனத்துக்குள்ளாக்கவும், அதேநேரம் சொந்த அரசியலின் வர்க்கப் போராட்ட தவறுகள் எப்படி இவைகளுக்கு வித்திட்டன என்பதை இன்று அந்த மக்கள் மீளப்பார்த்து, அரசியல் ரீதியில் சுயவிமர்சனம் செய்யவேண்டிய காலகட்டத்தில் இவ் மரண தண்டனை கோருகின்றது. மறுபுறம் இந்த தண்டனையை எதிர்த்து போராடும் மக்களுடன் எம்கைகளை இறுக பிடித்தபடி இந்த ஐனநாயகம் என்பது சுரண்டும் வர்க்கம் தீர்மானிப்பவைதான் என்பதை புரிந்து எதிர்த்து போராடுவோம். இதுமுடிவுமல்ல இறுதியுமல்ல என்பது நாம் தெரிந்து கொண்டு வர்க்கப் போராட்டம் உள்ளவரை இது தொடரும் என்பதை புரிந்து கொண்டு இதை வேர் அறுக்க வர்க்க மரணம் வரை மனிதகுலம் போராடும். அதில் நாம் இணைந்து கொள்வோம்! வருங்கள் அணிதிரள்வோம்!!